ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருஅரங்கம் / பூலோக வைகுந்தம் | |||
| மூலவர் | ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன் | |||
| உத்சவர் | நம்பெருமாள் | |||
| தாயார் | ரங்கநாயகி / ரங்கநாச்சியார் | |||
| திருக்கோலம் | கிடந்த | |||
| திசை | தெற்கு | |||
| பாசுரங்கள் | 247 | |||
| மங்களாசாசனம் | திருமங்கை ஆழ்வார் -73 தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55 பெரியாழ்வார் – 35 குலசேகர ஆழ்வார் – 31 திருமழிசையாழ்வார் – 14 நம்மாழ்வார் – 12 ஆண்டாள் -10 திருப்பாணாழ்வார் – 10 பூதத்தாழ்வார் -4 பேய் ஆழ்வார் – 2 பொய்கையாழ்வார் – 1 |
கோவில் பற்றி
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களில் முதன்மை ஆனதாகவும், ‘கோவில்’ என்றாலே அது திருவரங்கம் என்று பெயர் பெற்றதும், பூலோக வைகுந்தம் என்று பெயர் பெற்றதும் போக மண்டபம் என்றும் சில சிறப்புகள் ஆகும்.
21 கோபுரங்கள், 7 சுற்று பிரகாரங்கள், சுமார் 54 சன்னதிகள், 156 ஏக்கர் நிலப்பரப்பில், என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவிலேயே மிக பெரிய ராஜகோபுரம் (சுமார் 236 அடி உயரமும், 13 நிலைகளும்) ஆகும். அஹோபில ஜீயர் அவர்களின் கடும் முயற்சியால் இந்த ராஜகோபுரம் கட்டப்பட்டது.
ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).
திருவரங்கம், ஸ்ரீவைகுந்ததில் இருந்து விழுந்த ஒரு துளி என்று சொல்வதுண்டு. இந்த கோவிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.
மூலவர் ரங்கநாதர் கர்பகிரகத்தின் மேல் உள்ள தங்க கோபுரத்தின் தெற்கு பக்கம் பரவாசுதேவர் தங்க விக்ரஹம் உள்ளது.
மூலவர் உத்சவர் இருவருக்கும் ரேவதி நக்ஷத்திரம். தாயாருக்கு உத்திரநக்ஷத்திரம்.
இங்கு தாயார் சன்னதியில் உற்சவர் தவிர இரண்டு மஹாலக்ஷ்மி தாயார்கள் ஒருவர் பின் ஒருவராக காட்சி அளிப்பர். இவர்களில் ஒருவர், முஸ்லீம் மன்னர்கள் படையெடுப்பின் போது மறைத்து வைக்கப்பட்டு, பின் ஒருநாள் காணப்பெற்று மீண்டும் சன்னதியில் காட்சி அளிக்கிறார்.
மேட்டு அழகிய சிங்கர் சன்னதி, தாயார் சன்னதி அருகில் உள்ளது, இங்கே தான் கம்ப ராமாயணம் அரங்கேற்ற மண்டபமும் உள்ளது. மருத்துவக் கடவுளான தன்வந்த்ரிக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. சக்ரத்தாழ்வார், கருடாழ்வார், ராமானுஜர், தேசிகன், கருடமண்டபம் என்று சேவிக்க வேண்டிய பல சந்நதிகள் உள்ளன.
ஸ்ரீரங்கவிமானம், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என்று யார் தன்னை பிரதக்ஷிணம் செய்தாலும், அவர்களுக்கு மிக உயர்ந்த பலனைக் கொடுப்பதாக, பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இந்த விமானத்தை 24 முறை சுற்றி வந்தவன் ஒரு கோடி காயத்திரி மந்திரம் சொன்ன பலனை அடைகிறான் என்றும் அதே புராணம் கூறுகிறது. இரண்டு முறை சுற்றி வந்தால், எல்லா லோகங்களையும் சுற்றிவந்த பலன் கிடைக்கும். இந்த ரங்க விமானத்தை தரிசிப்பது, நமஸ்கரிப்பது மற்றும் சுற்றி வருவது என்பவைகளை பக்தியுடன் செய்தால், இந்த உலகவாழ்க்கையில் இருந்து விடுதலை அழித்து மோக்ஷம் தருவதாக, எம்பெருமான் தாயாரிடம் சொல்லிக்கொண்டு இருந்ததை தான் கேட்டதாக, ப்ரஹ்மா சொல்வது இந்த புராணத்தில் வருகிறது.
ராமன் ஆராதித்த பெருமாள்
சத்யலோகத்தில் பிரம்மாவால் ஆராதிக்கப்பட்டு வந்தவர் இந்த ரங்கநாதர். சூரிய வம்ஸ மன்னர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்களால் ஆராதிக்கப்பட்டு வந்தவர். சக்ரவர்த்தி திருமகனான இராமன், ரங்கநாதரை தன் ஆராதனை பெருமாளாக கொண்டதாக வால்மீகி ராமாயணமும் கூறுகிறது. பட்டாபிஷேகத்திற்கு முதல்நாள் கைகேயியை சந்திப்பதற்கு முன்னால் ரங்கநாதரை ஆராதனை செய்யும் காட்சி உள்ளது. இந்த கோவில் இராமாயண காலம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோவில்.
ஸ்தல புராணம்
இராமன் இராவணனோடு யுத்தம் செய்ததில் தனக்கு உதவிய விபீஷணனுக்கு இவரை பரிசாக வழங்கினார். விபீஷணன் இலங்கை நோக்கி செல்லும் வழியில் இவரை திருவரங்கத்தில் சிறிது நேரம் கீழே இறக்கி வைத்தார். பின் அவரால் திரும்பி எடுத்து செல்ல இயலவில்லை. பெருமாளின் திருவுள்ளப்படி அங்கேயே அவரை எழுந்தருளச் செய்தார்.
தெற்கு நோக்கி
தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும் (பெருமாள் திருமொழி 1.10) என்று குலசேகர ஆழ்வார் சொல்வது போல், எம்பெருமான் தனக்குப் பிரியமான விபீஷ்ணன் வாழும் தெற்கு திசையை நோக்கி கண்வளர்ந்து அருள்கிறார்.
மணவாளனான திருவரங்கன் பள்ளிகொண்டு இருக்கையில் தெற்கு திசையை நோக்கி கடாக்ஷித்து கொண்டு இருப்பது மணமகளான ஆண்டாளுக்காகவே மட்டும் என்றும் சொல்வதுண்டு. வேதாந்த தேசிகன் என்னும் ஆச்சார்யர் தன்னுடைய கோதா ஸ்துதி (11) என்ற நூலில், தெற்கு திசை பெருமை பெற்றதே ஆண்டாள் திருவரங்கதிற்கு தெற்கு திசையில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததால் தான் என்கிறார்.





நம்பெருமாள் பெயர் காரணம்
ஸ்ரீரங்கத்தில் எழுத்தருளியிருக்கும் ரங்கநாதரின் மூலவரின் திருப்பெயர் “பெரிய பெருமாள்” என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் உற்சவரான அழகிய மணவாளனுக்கோ “நம்பெருமாள்” என திருப்பெயர். கலாப காலத்தில், திருவரங்கத்தில் உற்சவரை போலவே ஒரு திருமேனியை செய்து, அந்த மூர்த்திக்கு திருவாராதனம் செய்து வந்தனர். கலாப காலம் முடிந்த பின்னர், அழகிய மணவாளனையும் திருவரங்கம் எழுந்தருள, எவர் உண்மையான உற்சவ மூர்த்தி என்று கண்டுபிடிக்க அரும்பாடு பட்டனர்.
அச்சமயத்தில்,வயது முதிர்ந்த, கண் பார்வை இல்லாத ஸ்ரீ வைஷ்ணவ வண்ணான் தான் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன தீர்த்தம் மூலமாக கண்டுபிடித்தார் எனவும், அவர் தான் “நம்பெருமாள்” என் உற்சவ மூர்த்திக்கு பெயர் சூடியதாக என்பதை பல்வேறு சரிதம் மூலம் அறிகிறோம்.
ஒரு சலவை தொழிலாளி இது தான் “நம் பெருமாள்”என சொன்னதை, அரங்கன் அடியார்கள் ஒப்புக்கொண்ட நாள் வைகாசி 17. ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றான். ஆனால் திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் சென்றான்.
1310 ஆம் ஆண்டு மாலிக் கபூர் படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர்…
ஆனால், 1323 ஆம் ஆண்டு முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது.
1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர். ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப் பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.
தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது.
இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள்… எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு , பயன்படுத்தப்பட்டு இருக்கும். அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார்.
அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.
இந்து கோவில்கள் சிதைப்பு மற்றும் திரு அரங்கன் உலா வந்த இந்த 48 ஆண்டுகள் பற்றிய முழு வரலாற்று தகவல் ஶ்ரீவேணுகோபாலன் அவர்கள் எழுதிய ” திருவரங்கன் உலா” என்ற புத்தகமாக வந்துள்ளது…
அழகியமணவாளன்
இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம். அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகிய மணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில் ஏற்றுக் கொண்டார். திருவரங்கனுக்கு ஏழு நாச்சிமார். அவர்கள்,
திருவரங்கம் திருச்சுற்றுகள் (பிரகாரங்கள்)
திருவரங்கம் சப்த பிரகாரங்கள் என்று ஏழு திருச்சுற்றுக்கள் ஏழு மதில்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருப்பதாக பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏழு உலகங்கட்கு உண்டான பெயர்களையே இந்த ஏழு மதில்கட்கு வைத்திருப்பதும், பூலோகத்திலிருந்து ஒவ்வொரு உலகமாக கடந்து சென்றால் ஏழாவது உலகமாக சத்திய லோகம் என்றும் சொல்வது போல் சத்யலோகத்தில் இருந்த வந்த எம்பெருமான் ஏழாவது திருச்சுற்றில் எழுந்தியருளி உள்ளான்.
இன்று பெரிய ராஜகோபுர வாசலைக்கொண்டு ஏழு திருசுற்றுக்களை உள்ளடக்கிய எட்டாவது சுற்றினையும் சேர்த்து கீழே ஒரு சிறு அட்டவணையின் மூலம் அவை என்ன என்றும், அங்கு என்ன உள்ளன என்றும் ஒரு பார்ப்போம். இதற்கு மிகவும் உதவியாக இருந்த 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு என்ற நூலை எழுதிய ஆசிரியர் டாக்டர்.வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

| எண் | ஏழு லோக பெயர்கள் | திருச்சுற்று மற்றும் வாசல் | உள்ளவை | முக்கிய சன்னதிகள் | முக்கிய மண்டபங்கள் | முக்கிய நிகழ்வுகள் |
| 8 | அடைய வளஞ்சான் திருச்சுற்று | மொட்டை கோபுரம், முனியப்பன் கோட்டை வாசல் | மிக உயர்ந்த ராஜகோபுரம் ராயர்கோபுரம் தெற்கு கோபுரம் | முனிக்கு அப்பனான ஸ்ரீநிவாசன் | ||
| 7 | பூலோகம் | ராஜ வீதி, சித்திரை வீதி | கடைகள் வீடுகள் | கண்ணன் சந்நிதி, ஆஞ்சநேயர் கோவில் | வானமாமலை மண்டபம் | |
| 6 | புவர் லோகம் | திருவிக்ரமன் திருவீதி, உள்திருவீதி / உள்வீதி / உத்திர வீதி | ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடம், அஹோபில மடம், மணவாள மாமுனிகள் மடம் | யானை கட்டும் மண்டபம் | இராமானுஜர் தங்கி இருந்து திருவரங்கம் கோவில் நிர்வாகம் செய்த மடம் | |
| 5 | சுவர் லோகம் | நான்முகன் கோட்டை வாசல், அகளங்கன் திருச்சுற்று | சோழமன்னன் அகளங்கன் கட்டிய மதில் | தாயார் சன்னதி, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், வேணுகோபால கிருஷ்ணர், மேட்டழகிய சிங்கர் (நரசிங்கப் பெருமாள்), தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், கூரத்தாழ்வார், இராமானுஜர், பிள்ளை லோகாச்சார்யார், தேசிகன் | எம்பெருமான் திருஷ்டி கழிக்கும் (திருவந்திக் காப்பு) நாலுகால் மண்டபம், ஸ்ரீரங்க விலாச மண்டபம், வஸந்த மண்டபம், கம்பர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபமும் அதன் நடுவே உள்ள திருமாமணி மண்டபமும் | வைகாசி திருவிழா வசந்த மண்டபத்தில் நடக்கும் ; திருமாமணி மண்டபத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று தொடங்கும் திருவாய்மொழித் திருநாள் உற்சவம் நடக்கும் |
| 4 | மஹர் லோகம் | திருமங்கை மன்னன் சுற்று, ஆலிநாடான் வீதி கார்த்திகை கோபுர வாசல் | திருமங்கை ஆழ்வார் கட்டிய மதில், சொர்க்க வாசல் , சந்திர புஷக்ரணி, பிரசாதம் விற்கும் இடம் | தன்வந்திரி, கருடாழ்வார், முதலாழ்வார்கள் மூவர், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள் சன்னதிகள் | பரமன் மண்டபம் | |
| 3 | ஜநோ லோகம் | ஆர்யபட்டர் வாசல், குலசேகரன் திருச்சுற்று | 102 தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்ட துவஜஸ்தம்பம் (கொடிமரம்) | உள்கோடை மண்டபம், பரமபதவாசல், டோலோத்ஸ்வ (ஊஞ்சல் உற்சவம்) மண்டபம் | ||
| 2 | தபோ லோகம் | ராஜ மகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாசல் | ராஜமகேந்திர சோழனால் கட்டப்பட்டது. யாகசாலை, கண்ணாடி அறை, திருப்பரி வட்டாரங்கள் வைக்குமிடம் | சேனை முதலியார் சன்னிதி, துலுக்க நாச்சியார் சன்னிதி | கிளி மண்டபம் | குடும்பத்துடன் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காட்சி; மணவாள மாமுனிகள் ஸ்ரீசைலேச தனியனை பெற்றது; கற்பூரப் படியேத்தம், கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று நடைபெறும். |
| 1 | சத்திய லோகம் | திருஅணுக்கன் திருவாசல் | சோழமன்னன் தர்மவர்மன் கட்டியது | திருவரங்கன் கருவறை (மூலஸ்தானம்) | ரங்கமண்டபம் / காயத்ரி மண்டபம் | இதில் உள்ள 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாக கூறுவர். |
திருவிழாக்கள்
திருவரங்கத்தில் எல்லா நாட்களும் திருநாட்களே. வருடத்தில் 300 நாட்களுக்கு மேலாக இங்கு ஏதாவது உற்சவம் நடந்து கொண்டே இருக்கும். தை, மாசி, மற்றும் சித்திரை என்ற 3 பிரம்மோத்ஸவங்கள், வைகுண்ட ஏகாதசி, மாசி மாத தெப்ப திருவிழா என்று பல விழாக்கள் இருந்தாலும், சிலவற்றை இங்கே காண்போம்.
வைகுண்ட ஏகாதசி
இந்த வருட வைகுந்த ஏகாதசியின் முக்கிய திருநாட்கள் உங்கள் பார்வைக்கு :

பகல் பத்து மற்றும் இராப்பத்து என்று இரண்டு பத்து நாட்களில் எம்பெருமான் முன்னிலையில் திவ்யப்ரபந்த பாசுரங்களை சேவிப்பார்கள். இது பற்றி மேலும் இங்கே காணலாம். திருவரங்க திருநாள் என்று ஆசையுடன் அழைக்கப்படும் இந்த வைகுந்த ஏகாதசி விழா முடிந்தவுடன், மீண்டும் அடுத்த ஆண்டும் இந்த விழாவை சேவிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் முடிப்பார்கள்.
திருவரங்க திருநாளும் நிறைந்தது. அரங்கன் சேவையில் திரண்ட மக்கள் மனமும் கரைந்தது. அழகாய் ஆபரணங்கள், மிடுக்காய் நடை, அசைந்து ஏறிய படியேத்தம், இனிய வீணை ஏகாந்தம், கானம் குளிர்ந்த அரை சேவை, பரவசமான பரமபதவாசல் திறப்பு, காண கண் கோடி வேண்டிய முத்தங்கி, ரத்தினங்கி சேவைகள், நளினமான நாச்சியார் திருக்கோலம், மின்னலென வந்த கைத்தல சேவை, துல்லியமான வையாளி – வேடுபறி, பொங்குபுனல் தீர்த்தவாரி, அவபிரத ஸ்நானமாய் கண்டருளிய திருமஞ்சனம், ஆசை ஆசையாக ஆழ்வாருக்கு தன்னுடைசோதியை காட்டிக் கொடுத்த மோக்ஷானுபவம், ஆழ்வார்- ஆச்சார்ய புருஷர்களின் குழாமும் அவர்களுக்கு அளித்த மரியாதையும், கொட்டும்- தட்டும்-முட்டும்-மங்களவாத்ய முழக்கமும், அலங்கார அன்னமும், திருப்பாவாடை பிரசாதமும், வெள்ளிச் சம்பா அமுதுபடியும், செல்வர் அப்பமும், உருப்படி வடையும் இனிதாக கண்டருளி, பகலில் சாதராவும், இரவில் பனி சல்லாவும், குளிர் தெரியாத வெட்டிவேர் சப்பரமும், கண் திருஷ்டி படுமோ என்று எடுத்த திருவந்தி காப்பும், சிம்ம, ஸர்ப கதி நடையும், நாலாயிரமும் சேவி மடுத்த நம்பெருமாளின் சேவை இதே போல் இனி அடுத்த வருடமும் நமக்கு கிடைக்க அவரை ப்ரார்த்திப்போம்.
(மேலே கொடுத்துள்ள இந்த பிரார்த்தனை பகுதியை எழுதிய whatsapp நண்பருக்கு நன்றி.)
அரையர் சேவை
திருமங்கையாழ்வார் காலத்திலும் சரி, நாதமுனிகள் காலத்திலும் சரி, திருவரங்கத்தின் பெருவிழாவாக, மார்கழித் திருவிழா முத்தமிழ் விழாவாகவே மலர்ந்திருந்தது. இந்த மூன்று தமிழையும் உள்ளடக்கிய ஒரு தொண்டு “அரையர் சேவை” என்று அழைக்கப்படுகிறது. அரையன் என்றால் அரசன் என்று பொருள். (புள் அரையன் – கருடன்). இப்பொழுது தமிழகத்தில் திருவரங்கம் திருவில்லிபுத்தூர்,ஆழ்வார் திருநகரி ஆகிய திருத்தலங்களில் இக்கலை வடிவம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகவும் பின்பாகவும் இந்த அரையர் சேவை நடக்கும். நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பரப்புவதற்காக தமது மருமக்களாகிய மேலை அகத்து ஆழ்வான், கீழை அகத்து ஆழ்வான் ஆகிய இருவருக்கும் இசையுடன் பாசுரங்களைக் கற்றுக் கொடுத்தார். அவர் வழியினர்களே, இசை நாடக அபிநயத்தோடு பாசுரங்களைப் பாடும் அரையனக்கியமான விஷயம் மேடை இருக்காது. இறைவன் முன்னால் பிரபந்தப் பாடல்களைப் இசையோடு பாடுவார்கள். அவர்கள் கையில் உள்ள ஒரு தாளத்திற்கு நாதமுனிகள் என்று பெயர். ஒரு தாளத்திற்கு நம்மாழ்வார் என்ற பெயர். தலையில் வெல்வெட்டால் செய்யப்பட்ட குல்லாய் அணிந்திருப்பார்கள்.
நாதமுனிகள் பேரரான ஆளவந்தார் தம்முடைய குமாரனுக்கு திருவரங்கப் பெருமாள் அரையர் என்று பெயர் சூட்டி னார். திருவரங்கப் பெருமாள் அரையர் ராமானுஜரின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவர் .இந்த அரையர்கள் திருவரங்கத்தில் முத்தமிழ் கைங்கரியத்தைச் செய்வதற்காகவே இருந்தனர். ‘‘வரம் தரும் பெருமாள் அரையர்” ‘‘நாத வினோத அரையர்” என்ற அருளப் பாடுகள் உண்டு.
ராமானுஜர் காலத்தில் இப்பெருவிழாவில் பல மாற்றங்கள் நடந்தன. இராமானுஜர் காலத்தில் திருவரங்கத்து அமுதனார் என்கின்ற ஆசாரியர் பிரபன்ன காயத்ரி என்று சொல்லப்படுகின்ற 108 கட்டளைக் கலித்துறை பாசுரங்களால் ஆன அந்தாதி நூலை இயற்றினார். அந்த நூலுக்கு ராமானுஜ நூற்றந்தாதி என்று பெயர். அதில் ஆழ்வார்களின் பெருமையும், ராமானுஜரின் பெருமையும், வைணவத் தத்துவங்களும் பொதிந்திருக்கும்.
அரங்கனின் திருவுள்ளப்படி, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் நிறைவு நாளில், இயற்பா சேவிக்கும் நாளில், ராமானுஜ நூற்றந்தாதியையும் சேர்ந்து சேவிக்கும் வழக்கம் ராமானுஜர் காலத்தில் வந்தது. அதுமட்டுமின்றி எல்லா ஆழ்வார்களின் திருவுருவங்களும் உருவாக்கப்பட்டன. இனி வருடாவருடம் நம்மாழ்வார் விக்கிரகத்தை திருநகரியில் இருந்து எழுந்தருளச் செய்வது சிரமம் எனக் கருதி எல்லா ஆழ்வார்க ளையும் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். இது உடையவர் செய்த ஏற்பாடு.
திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் வெளியில் வரும் பொழுது நான்கு நடையில் வருவதை நம்மால் தரிசிக்க முடியும். திருவரங்கப் பெருமானுக்கு “சதுர்கதிப் பெருமாள்’ என்று பெயர்.
நம்பெருமாளை தோளில் சுமக்கும் கைங்கர்ய பரர்கள் நமக்கு இந்த நான்கு நடையையும் காட்டுவார்கள். இதற்கென்று அவர்களுக்கு தனி பயிற்சி உண்டு. இந்த வையாளி சேவையை துரகதி என்பார்கள்.
இந்த வைபவத்தை “பத்தி உலாத்துதல்” என்று சொல்லுகின்றார்கள். பகல் பத்து முழுவதும் பெருமாள் புறப்பாடு நடந்து, திரும்ப தன்னுடைய ஆஸ்தானத்திற்கு செல்லும்போது, இந்த நான்கு நடைகளும் பார்க்கலாம்.
பகவான் மோகினி அவதாரம் செய்வதற்கு ஒரு சரித்திரம் உண்டு. மார்கழி சுக்ல தசமி அன்று திருப்பாற்கடல் கடையப்பட்டது என்கிறார்கள். அன்று தேவர்களுக்கு அமுதம் தர பகவான் மோகனா (மோஹினி) அவதாரம் எடுத்தார். அதற்காகவே மோஹினி அலங்காரம் செய்யப்படுகிறது. இன்னொரு விதத்தில் திருமங்கை ஆழ்வார் தன்னை நாயகியாக பாவித்து கொண்டு “கள்வன் கொல்” என்ற பதிகத்தை அருளிச் செய்தார்.
இப்பொழுதும் திருநகரியில் திருக்கார்த்திகை உற்சவத்தில், ஆழ்வார் நாயகி பாவத்தில் பெண்வேடம் போட்டுக்கொண்டு, பெருமாளுடன் ஏக ஆசனத்தில் இருப்பார். திருமங்கை யாழ்வாரின் இந்த நாயகி பாவத்தை பார்த்த பெருமாள், தனக்கும் இந்த கோலத்தை ஆதரித்து அலங்காரம் செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.
பகல் பத்து பத்தாம் திருநாள் அன்று பகவானுக்கு இந்த அவதார அலங்காரத்தைச் செய்வார்கள். இதற்கு “நாச்சியார் திருக்கோலம்” என்றும் பெயர். பெருமாள் நாச்சியாராக அலங்கரித்துக்கொண்டு கருட மண்டபம் வந்து காட்சி தருவார்.
பெருமாளுக்கு வீணை ஏகாந்தம் என்ற ஒரு இசை சமர்ப்பணம் உண்டு. பெருமாள் வெளியே மண்டபத்திலிருந்து தன்னுடைய ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது ஏகாந்த வீணை வாசிக்கப்படும். இதற்கென்றே வீணை வாசிக்கக் கூடிய பரம்பரை பெரியவர்கள் உண்டு.
அவர்களுக்கு வீணை மிராசுகாரர்கள் என்று பெயர். பெரிய திருநாளில் தினம்தோறும்ராத்திரி உள்ளே சங்கீதம் கேட்பதற்காக மௌனமாய், அழகாய், அசைந்து, நம்பெருமாள் படி ஏறுவார் என்று வியாக்கியானத்தில் வருகின்றது.
வைகுண்ட ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பரமபத ஏகாதசி, அத்யயன உற்சவம் என்று பல பெயர்களால் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி அன்று மது கைடபர்களை, நம்பெருமாள், உத்தர துவார மார்க்கமாக (பரமபத வாசல், வடக்கு வாசல்) வழியாக மோட்சம் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று பெருமாள் ரத்னாங்கி சாத்திக்கொண்டு தம்முடைய திவ்யமான வடி வழகை காட்டி அருளுவார். இதைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திருவரங்கத்தில் திரள்வார்கள்.
விலை உயர்ந்த துப்பட்டாவை சமர்ப்பித்து அரங்கனின் திருவருளைப் பெறுவார்கள். பெருமாள் பகிரங்கமாக துப் பட்டா சாத்தி கொள்ளும் சந்தர்ப்பம் இது. ஏகாதசி தினமும், அதை அடுத்த சில தினங்களும் முத்தினால் செய்த அங்கியை மூலவர் அணிந்து கர்ப்பக் கிரகத்தில் காட்சி தருவார்.இந்த சேவைக்கு “முத்தங்கி சேவை” என்று சொல்கிறார்கள்.
இராப்பத்து உற்சவம், ஏழாம் நாள், கைத்தல சேவை என்று ஒரு சேவை உண்டு. அன்றைய தினம் பெருமாள் அதிகமான திருவாபரணங்கள் சாத்திக் கொள்ள மாட்டார். திருவாய்மொழி ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி, ‘‘கங்குலும் பகலும்” சேவிக்கப்படும். நாச்சியார் விஷயமாக ஸ்ரீஸ்தவம், ஸ்ரீகுண ரத்னகோஸம் சேவிக்கப்படும்.
பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளி திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, ஆழ்வாருக்கு சேவை சாதிப்பார். இப்படி அர்ச்சகர்களின் கையில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி “கைத்தல சேவை” எனப்படும். கைத்தல சேவைக்காக உத்தம நம்பி சமர்ப்பிக்கும் சர்க்கரைப் பொங்கல், பெருமாளுக்கு அமுது செய்விக்கப்படும்.
இராப்பத்து, எட்டாம் திருநாள் “வேடுபறி உற்சவம்” நடைபெறும். வேடர் பறி உற்சவம் என்றும் சொல்வார்கள். திருமங்கை ஆழ்வார் ஒரு காலத்தில், பெருமாளை வழி மறித்து, நகை பறித்த நிகழ்ச்சி நடத்திக் காட்டப்படும்.
மாலைத் தனியே வழி பறிக்க வேணும் என்று கோலிப் பதிவிருந்த கொற்றவனே- வேலைஅணைத்து அருளும் கையால் அடியேன் வினையைத் துணித்து அருள வேணும் துணிந்து என்பது இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் ஸ்ரீசோமாசி ஆண்டான் அருளிச் செய்த தனியன்.
வேடு பறி உற்சவம் வெகு கோலாகலமாக இருக்கும்.பெருமாளை தூக்கிக் கொண்டு முன்னும் பின்னும் ஓடுவதும் திரும்புவதும் என அற்புதமாக இருக்கும்.
அன்று சந்நதி வாசலில் பெருமாள் குதிரை வாகனத்தில் கிழக்குமுகமாக எழுந்தருளி இருப்பார். அன்று பரமபதவாசல் வழியாகப் பெருமாள் செல்லமாட்டார். பெருமாள் புறப்பாடாகி கோயிலின் கிழக்குப் பக்கமுள்ள மணல் வெளிக்குச் செல்வார்.
அங்கே நீண்ட நடை கொட்டகை போடப்பட்டிருக்கும். பெருமாளுடைய குதிரைக்கு கடலை சுண்டலும், பெருமாளுக்கு பாசிப்பருப்பு , பானகமும் திருவமுது (நிவேதனம்) ஆகும். அப்போது திருமங்கையாழ்வார் வந்து பெருமானைச் சுற்றிக் கொண்டு போவார். வழிப்பறி நாடகம் கோலாகலமாக நடக்கும். பிறகு திருமங்கை ஆழ்வாருக்கு திருஎட்டெழுத்து மந்திர உபதேசம் ஆகி, பெரிய திருமொழி முதல் பதிகம் சேவிக்கப்படும்.
திருவாய்மொழியின் கடைசி பதிகத்தில், நம்மாழ்வார் மோட்சத்துக்கு செல்லும் வழியையும், அங்கே தமக்குக் கிடைத்த வரவேற்பையும் பாடியிருக்கிறார். இந்த உற்சவத்தை நம்மாழ்வார் மோட்ச உற்சவம் என்பார்கள். அன்று பெருமாள் வழக்கம்போல் புறப்பட்டு வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தம் சாதித்து, தீர்த்தவாரி நடத்தி, திருமாமணி மண்டபம் சேர்வார். பிறகு திருமஞ்சனம் கண்டருள்வார்.
அன்று அவருக்கு பன்னீராயிரம் திருப்பணியாரங்கள் சமர்ப்பிக்கப்படும். நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல், வெள்ளை உடுத்தி , பன்னிரு திருநாமம் சாற்றி, துளசி மாலையும் தரித்து, சேவை சாதிப்பார். இரண்டு அர்ச்சகர்கள், தங்கள் சரீரத்தைப் போர்வையால் போர்த்திக் கொண்டு ஆழ்வாரை திருக்கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொள்வார்கள். சத்ர சாமரங்கள் அவருக்குப் பிடிக்கப்படும்.
மோட்சத்துக்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தை (ஒளி வழியை) விவரிக்கும், ‘‘சூழ் விசும்பு” என்ற ஒன்பதாம் திருவாய்மொழி சேவிக்கப்படும். நம்மாழ்வார் திருமேனியை எடுத்துச் சென்று பெருமாளின் திருவடியில் வைப்பார்கள்.
அங்கே, திருவாய் மொழியின் கடைசி பதிகமான ‘‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்ற பதிகம் பாடப்படும். ஆழ்வாரின் மீது திருத்துழாய் (துளசி) வைத்துக்கொண்டே இருப்பார்கள்.
ஆழ்வாரை துளசியால் மூடிவிடுவார்கள். இந்தப் பதிகம் பூர்த்தியானவுடன், பெருமாள் ஆழ்வாருக்கு தம்முடைய கஸ் தூரி திருமண் காப்பையும் மாலையையும் அருளுவார். அதற்கு பிறகு, ‘‘எங்களுக்கு ஆழ்வாரை கொடுத்தருள வேண்டும்” என்று பிரார்த் தனை செய்ய, மூடியிருந்த துளசியை நீக்கிவிட்டு, மறுபடியும் ஆழ்வாரை யதாஸ்தானம் செய்ய, கைகளில் ஏந்திக் கொள்வார்கள். மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்கின்ற பாசுரம் சேவையாகும்.
பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து சந்நதிக்கு புறப்படும்போது பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விலாமிச்சை வேர் சப்பரத்தில் எழுந்தருளுவார். மல்லாரி என்கின்ற ராகம் வாசிக்கப்படும். ஒய்யார நடை போடுவார். அப்பொழுது பலவிதமான வாத்தியங்கள் இசைக்கப்படும். கடைசியாக வாசிக்கப்படுவது வீணை. இந்த வாத்தியத்துடன் நாழி கேட்டான் வாசலில் இருந்து படியேற்றம் ஆகி சந்நதிக்குச் செல்வார்.
திருவரங்கத்தில் பெருமாளுக்கு எப்படி உற்சவம் இருக்கிறதோ, அப்படி நாச்சி யாருக்கும் இந்த அத்யயன உற்சவம் உண்டு. நாச்சியாருக்கும் திருநெடுந் தாண்டகம் தொடங்கப்படும். ஆனால் நாச்சியார் புறப்பாடு கிடையாது. மாலை ஷீரான்னம் சமர்ப்பணம் ஆகும். ஆங்காங்கு அரையர் தொடங்கி, அத்யாபகர்கள் சேவிக்க திருமொழி இரண்டாயிரமும் ஐந்து நாளில் பூர்த்தி செய் வார்கள்.
ஆயினும் இங்கும் அரையர் சேவை, அபிநயம், கானம் உண்டு. 5ம் நாள் முத்துக்குறி, அரையர் தீர்த்தம், சடகோபம் போன்ற நிகழ்வுகள் உண்டு.இதில் சொல்லியது சில மட்டுமே.இன்னும் பல சுவையான செய்திகள் உண்டு.
இநத பகுதியை எழுத்தில் கொடுத்த WhatsApp நண்பருக்கு மிக்க நன்றி
பங்குனி உத்திரம்
சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு ப்ரஹ்மா நடத்திய பிரம்மோத்ஸவம் பங்குனி மாதத்தில் நடப்பதாக ஐதீகம். திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவத்தை ஆதிபிரம்மோத்ஸவம் என்று அழைக்கிறார்கள். இதன் இடையில் வரும் உத்திர நட்சத்திர நாள் அன்று தாயாருடன் பெருமாள் சேர்த்தி காண்கிறார்.
திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் நம்மாழ்வாரின் பங்கு மிகப் பெரியது. பெருமாள், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுக்கும் போது, நம்மாழ்வார் தான் வந்து சமரசம் செய்து வைப்பார். பிராட்டியாரும் நம் பெரியன் சொல்படி கேட்டோம் என்று ஆழ்வாருக்கு உயர்ந்த மரியாதையை தருவார். ‘நம் பெரியன்’ என்று சொன்னதால் நம்மாழ்வார் என்ற பெயர் தாயார் கொடுத்ததாக கொள்ளலாம். இந்த திருவிழாவின் ஒவ்வொரு நாள் சிறப்புகளை, ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி சுருக்கமாக சொல்லும் பதிவுகளை இங்கே காணலாம்,
முகவுரை : (381) PROMO PANGUNI THIRUNAL Srirangam 2023 – YouTube
முதல் நாள் : (381) பங்குனி திருநாள் ஸ்ரீரங்கம் முதல் நாள் – YouTube
இரண்டாம் நாள் : (381) பங்குனிர்த்திருநாள் ஸ்ரீரங்கம் 2023 இரண்டாம் நாள் – YouTube
மூன்றாம் நாள் : (389) பங்குனி உத்திர திருநாள். மூன்றாம் நாள் – YouTube
நான்காம் நாள் : (394) பங்குனி உத்திர திருநாள் கருட வாகனம் நான்காம் நாள் – YouTube
ஐந்தாம் நாள் ; (401) பங்குனி உத்திர திருநாள் – சேஷ வாகனம் & கற்பக விருக்ஷம் வாகனம் – ஐந்தாம் நாள் – YouTube
ஆறாம் நாள் : (408) பங்குனித் திருநாள் ஆறாம் நாள் – YouTube
ஏழாம் நாள் : (416) நம்பெருமாள் நெல் அளவை. பூந்தேர் உற்சவம் – பங்குனித் திருநாள் – ஏழாம் நாள் – YouTube
எட்டாம் நாள் : (421) குதிரை வாகனத்தில் ஒய்யாளி சேவை – பங்குனித் திருநாள் – எட்டாம் நாள் – YouTube
ஒன்பதாம் திருநாள்; (426) சேர்த்தி சேவை – பங்குனித் திருநாள் – ஒன்பதாம் நாள் – YouTube
பத்தாம் நாள் : (430) பங்குனித் திருநாள் – பத்தாம் நாள் – YouTube
கைசிக ஏகாதசி
கைசிக ஏகாதசி (கார்த்திகை, வளர்பிறை) அன்று இரவு, பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள், விடிய விடிய சாற்றப்படுகின்றன. இதை பற்றி மேலும் இங்கே காணலாம். கைசிக ஏகாதசி அன்று கற்பூர படியேற்றம்.
ஸ்ரீரங்கத்தில் ஒரு மாதம் முன்னதாகவே கைசிக ஏகாதசியும்/ஸ்ரீவைகுண்ட ஏகாதசியும்,
19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே, ஸ்ரீரங்கம் திவ்ய தேசத்தில், மட்டும் நடைபெறும். விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்டபோது, மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதலில் தை திருநாளும் வந்தால்,எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடுவது என கேள்வி வந்தபோது, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி,19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி வைகுண்ட ஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.
அதன்படி இந்த ஆண்டு,வைகுண்ட ஏகாதசி கார்த்திகை மாதத்தில்–14/12/2021–அநுஷ்டிக்கப் படுவதால், அதற்கேற்ப, கைசிக ஏகாதசியும் ஒரு மாதம் முன்னரே–ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி–15/11/2021–அனுஷ்டிக்கப் படுகிறது. ஸ்ரீபெரும்புதூரிலும் தை மாதம் குரு புஷ்யம் நடப்பதால், இவ்வாறாக ஒரு மாதம் முன்னரே கொண்டாடுகிறார்கள்.
மற்ற எல்லா திவ்ய தேசங்களிலும் எப்போதும் போல கைசிக ஏகாதசி கார்த்திகையிலும் (14/12) ,ஸ்ரீவைகுண்ட ஏகாதசி மார்கழியிலும்(13/01/2022) அனுஷ்டிக்கப் படுகிறது.
ஆடிப்பெருக்கு
ஆனி கேட்டை நக்ஷத்திரத்திற்கு 45 நாட்கள் கழித்து ஆடிப்பெருக்கு கொண்டப்படும். அப்பொழுது எம்பெருமான், அம்மா மண்டபம் எழுந்தருளி காவேரி தாயாருக்கு பட்டு புடவை, வளையல்கள், குங்குமம் மற்றும் வெற்றிலை பாக்கு அவற்றை சீதனமாய் அளிப்பார்.
கஜேந்திர மோக்ஷம்
சித்ரா பௌர்ணமி அன்று அம்மாமண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி கஜேந்திர மோக்ஷம் திருவிழா நடைபெறுகிறது.
ஸ்ரீநம்பெருமாளின் கிளிக்கூண்டு சேவை!
திருப்பள்ளி ஓடம் உற்சவம் முதல் நாள் (நேற்று), நம்பெருமாள் ரங்கவிலாச மண்டபத்தில் கிளிக்கூண்டிற்குள் சேவை! இந்த கிளிக்கூண்டில் மொத்தம் 84 துவாரங்கள் இருக்கும்! சாஸ்திரங்கள் சொல்லும் 84 லக்ஷம் பிறவிகளை இது குறிக்கிறது!
நம் பூர்வர்கள் இரண்டு கிளிகளை அடையாளம் காட்டுவர்..
ஒரு கிளி கனிக்கு அருகில் இருந்து கனியை புசித்து புசித்து வாடி போயிருக்குமாம். மற்றோர் கிளி கனிகளை புசிக்காமல் தேஜசாய் பருத்து இருக்குமாம். கனி புசிக்கும் கிளி ஜீவாத்மா, கனி என்னும் கர்மாவை புசித்து அதிலேயே நாட்டம் கொண்டு இளைத்து வாடும்! கனி உண்ணாத கிளி, பரமாத்மா அது என்றும் தேஜசாய் இருக்கும்!
இந்த ஜீவாத்மாக்களை காக்க, அவர்களை கர்மவசத்தில் இருந்து விடுவிக்க, நம்பெருமாளும் தனது சௌந்தர்யத்தைக் காட்டி, நம்மை திருத்தி பணிகொள்ள கிளிக்கூண்டிற்குள் இருந்தபடி அருள்பாலிக்கிறார்!!
“ரங்கேஷமாம் பாஹி” “ரங்கேஷமாம் பாஹி” “ரங்கேஷமாம் பாஹி ரங்கப் ப்ரபோ!”
ஸ்ரீரங்கம் நம்பர் 7 ன் சிறப்பு
இந்த பகுதியை நமக்கு whatsapp ல் அளித்த நண்பருக்கு நன்றி.
கொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.
ஆழ்வார்கள்
திருவரங்கம் பற்றி ஆழ்வார்களின் பாடல்களையும், அவர்கள் அனுபவங்களையும் கொடுக்க, தனித்தனியே, பல பாகங்களாக எழுத வேண்டும். அதற்குரிய ஞானமோ, அனுபவமோ, முதிர்ச்சியோ அடியேனிடம் இல்லை. இருந்தாலும், ஒரு சில விஷயங்களை மட்டும், கோடி காட்டி, இதன் முழு விவரமும் வேண்டுவோர் சரியான தகவல்களை பெற்று பயனடைய வேண்டுகிறேன்.
இது அதிகமான ஆழ்வார்களாலும், அதிகமான பாசுரங்களாலும் (247) பாடப்பட்ட திவ்யதேசம்.மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற எல்லா ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்கள், இந்த திவ்யதேச எம்பெருமானான திருவரங்கநாதனையே தன் பாசுரங்களில் பிரதான நாயகனாக வைத்து இயற்றி உள்ளார்கள்.
எம்பெருமானின் அடியார்கள் எக்குலத்தவராயினும் சமமே என்று பறைசாற்றும், சாதி சமய பேதமற்ற வைணவம் திருவரங்கத்திலே காலூன்றி எத்திக்கும் பரவ இவ்வரங்கனே வித்திட்டார்.
நம்மாழ்வார்
நம்மாழ்வார் என்று பெயர் கொடுத்ததே திருவரங்க நாச்சியாரும்,திருவரங்க நாதனுமும் தான்.
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி 1102 பாடல்களும் திருவரங்கனுக்கே என்பதை வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் பாடி உள்ளார்.
கங்குலும் பகலும் என்ற திருவாய்மொழி, 7ம் பத்து 2ம் பதிகம் பத்து பாசுரங்களும் திருவரங்கநாதனுக்கு நம்மாழ்வார் பாடியது. இந்த பத்து பாசுரங்களில் திருவாய்மொழியில் சொன்ன பத்து பத்துக்களில் சொன்ன அத்தனை கருத்துக்களையும் சுருக்கமாக சொல்லி இருப்பதால் திருவாய்மொழி முழுவதும் அரங்கனுக்கே என்று சொல்வார்கள்.
பெரியாழ்வார்
பெரியாழ்வார், திருவரங்கநாதனின் மாமனார் ஆவார். ஆண்டாள் இவரது மகள். திருவரங்கனின் மேல் பக்தி கொண்டு அவரையே மணவாளனாக பற்றிக்கொண்டாள்.
“ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான் ” என்ற பாடல், திருவரங்கநாதனுக்காக பாடியது. அதையே சுவாமி ராமானுஜர், கூரத்தாழ்வான் பரமபதித்த போது, மிக பொருத்தமாக நினைவு கூர்ந்தார் என்பதும் வரலாறு.
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் என்ற பெரியாழ்வார் திருமொழி, (4.9.2), பாசுரம், அச்சுதன் (நழுவுதல் இல்லாதவன்) என்ற திருநாம விளக்கத்திற்கு பொருத்தமான திருவரங்கன் பாசுரம்.
ஆண்டாள்
திருவரங்கத்து செல்வனை நினைத்து ஆண்டாள் உருகும் பாசுரங்களில், அவனையே விரும்பும் தனக்கு அவன் நடையழகைக் காட்ட வேண்டுகிறார். பெண்ணின் வருத்தம் அறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்ட பெருமாள் தன் விஷயத்தில் வேறுபடுகிறாரே என்றும், தம்மை விரும்புவரை தான் விரும்புவேன் என்று வராக அவதாரத்தில் சரமச்லோகத்தில் சொன்ன வார்த்தைகள் பொய்யாகாமல் இருக்க வேண்டுமே என்றும் ஆண்டாள் கவலைப்படுகிறார். புவனியும், விண்ணுலகும் ஆள்கின்ற எம்பெருமான், செங்கோலுடைய திருவரங்க செல்வனார் என்றும், திருவரங்க செல்வனார் பேசிஇருப்பனகள் பேர்க்கவும் பேராவே என்றும், தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்னும் சொல் என்ற ஆண்டாளின் வார்த்தைகள் நயமானவை.
குலசேகர ஆழ்வார்
திருவரங்கத்திற்காக மூன்று பதிகங்கள் பாடிய குலசேகராழ்வார் தன்னுடைய பெருமாள் திருமொழி என்ற பிரபந்தத்தின் முதல் பதிகத்தில், திருவரங்கம் பெரியகோயிலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டுள்ள அழகிய மணவாளனை கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார். பெரியபெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூடி, கலந்து, வாயாரப் பாடி, அதனால் ஆனந்தக்கண்ணீர் பெருகி, தலைகால் தெரியாமல் துள்ளிக் கூத்தாடி, நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ என்கிறார்.
முதல் பதிகத்தில், எம்பெருமானை எப்போது காண்போமோ (பகவத் பக்தி) என்று சொன்ன ஆழ்வார், இரண்டாம் பதிகத்தில் எம்பெருமானை நேசிக்கும் பக்தர்களை (பாகவத பக்தி) பற்றி சொன்ன ஆழ்வார், மூன்றாம் பதிகத்தில் இவ்வுலக இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தும், மனிதர்களுடன் தான் சேர்வதில்லை என்றும், எம்பெருமானுக்குப் பிடிக்காதவற்றை செய்யும் சாமானிய மக்களின் சகவாசத்தை, விலக்கி விடவும் சொல்கிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
இவர் அருளிய திவ்யப்ரபந்தங்கள் இரண்டிற்கும் திருவரங்கனே பிரதானம். முதலில், நாற்பது ஐந்து பாசுரங்கள் கொண்ட திருமாலை. திருமாலை அறியாதார், திருமாலயே (எம்பெருமானையே) அறியாதவர் என்று பழமொழி கூறும் அளவுக்கு பிரசித்தி பெற்றது. அடுத்தது, அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக இயற்றப்பட்ட திருப்பள்ளியெழுச்சி. பொதுவாக, ஒவ்வொரு நாளும், காலையில் எம்பெருமானை எழுப்புவதற்கு எல்லா வைணவக் கோவில்களிலும் பாடப்பாடுவது.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த திவ்யதேசத்தில், நந்தவன கைங்கர்யங்கள் செய்து உள்ளார். திருமங்கையாழ்வார் திருமதிள் கைங்கர்யங்கள் செய்து உள்ளார். அந்த மதில் வரும் வழியில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் நந்தவனம் இருந்ததால் அதற்கு ஒரு தடங்கலும் வராமல் மதிலை வளைத்து கட்டினார். அதனை அறிந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார், தான் மலர் பறிக்கும் ஒரு கருவிக்கு ‘அருள்மாரி’ என்று திருமங்கையாழ்வாரின் பட்ட பெயரை சூட்டி மகிழ்ந்தார்.
திருப்பாணாழ்வார்
பாணர் குலத்தை சேர்ந்த இந்த ஆழ்வார் பத்தே பத்து பாசுரங்களில், திருவரங்கனின் முழு அழகினை, அவன் காட்டவே தான் கண்டு, பாதம் முதல் கேசம் வரை வர்ணித்த ஆழ்வார், அரங்கனின் சந்நிதியில் என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று அவன் திருவடிகளில் சேர்ந்து விட்டார்.
இராமானுஜர்
ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கநாதர் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி என்று அடைமொழி சொல்லும்படி கோவில் நிர்வாகத்தை சீர்திருத்தி இன்று வரை பெரிதும் போற்றி பாதுகாக்க படுகின்றன.
பங்குனி உத்திர திருநாள் அன்று இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பிராட்டியை முன்னிட்டு நம் பெருமாள் முன்னே சரணாகதி கேட்டு அதனை பெற்றார். இவருக்கு இங்கு தனியாக சன்னதி உள்ளது. இங்குள்ள ஸ்ரீராமாநுஜரின் திருமேனி `தானேயான திருமேனி‘ ஆகும்.
ஆச்சார்யர்கள்
வைணவத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் திருஅரங்கம் ஓர் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. இராமானுஜரை வைணவத்திற்கு அடையாளம் காட்டிய ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் இங்கு இருந்து தான் தொண்டு புரிந்தார்.
பராசரபட்டர், வடக்கு திருவீதி பிள்ளை, பிள்ளைலோகாச்சார்யார், பெரியநம்பி என்ற ஆச்சார்யர்கள் அவதரித்த ஸ்தலம். ஸ்ரீமந் நாதமுனிகள் என்ற ஆச்சார்யாரால் திவ்யப்ரபந்த பாசுரங்களை ராக தளங்களுடன் பாடி அபிநயம் பிடித்து அரையர் சேவை என்ற பெயரில் இங்கு ஆரம்பித்து, இன்றும் நடந்து வருகிறது.
சுவாமி தேசிகன் என்ற ஆச்சார்யாருக்கு பெரியபெருமாள் ‘கவிதார்க்கிக ஸிம்ஹம்‘ என்றும் தாயார் ‘ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரர் ‘ என்றும் பட்டங்கள் வழங்கி கெளரவம் செய்து உள்ளனர். இந்த எம்பெருமானின் பாதுகைகள் மீது தான் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற ஆயிரம் பாசுரங்கள் கொண்ட உயர்ந்த நூலை சுவாமி தேசிகன் ஒரே இரவில் இயற்றி உள்ளார்.
மணவாளமாமுனிகள் என்ற ஆச்சாரியர், இந்த எம்பெருமானின் கட்டளையை ஏற்று, திருவாய்மொழி என்ற திவ்யப்ரபந்தத்திற்கு ஒரு வருட காலம் காலக்ஷேபம் செய்தார். அதன்போது கோவிலின் எல்லா திருவிழாக்களையும் நிறுத்தி வைக்கவும் எம்பெருமான் ஆணை இட்டதாக சொல்வதுண்டு. இந்த காலஷேபம் நிறைவு அடையும் போது, எம்பெருமானே ஒரு சிறுவனாக வந்து ‘ஸ்ரீசைலேச தயா பாத்திர‘ தனியனை அருளி செய்து அவருக்கு கெளரவம் செய்தார்.
சடகோபன் அந்தாதி
வால்மீகி ராமாயணத்தில், நரசிம்ம அவதாரம் பற்றி கிடையாது. ஆனால் கம்ப ராமாயணத்தில் நரசிம்ம அவதாரம் பற்றி ஒரு படலம் உண்டு. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட இராமாயணத்தை, கம்பர் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது,‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடின நம் ஆழ்வானை பாடினாயோ?‘ என்று மேட்டு அழகிய சிங்கர் (நரசிம்ம பெருமாள்) கோவில் அர்ச்சகர் மூலம் கேட்டாராம். இப்படி கேட்டதால், நம் ஆழ்வார் என்ற பெயர் கொடுத்தது திருவரங்கன் என்றும் கொள்ளலாம். கம்பர் சடகோபர் அந்தாதி என்ற நூறு பாடல்கள் உள்ள தொகுப்பையும் பிறகு எழுதி திருவரங்கன் முன் சமர்ப்பித்தார்.
வரலாற்று குறிப்புகள்
திருவரங்கம் கோவிலைப் பற்றி சில முக்கியமான வரலாற்றுக்குறிப்புகள் கொடுக்காமல், இந்த கோவிலை பற்றிய தகவல்கள் முழுமையாகாது. ஏன்எனில்,
அவற்றை ஒரு சிறு அட்டவணையாக கீழே கொடுக்க முயன்றுளேன். இதற்கு மிகவும் உதவியாக இருந்த 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு என்ற நூலை எழுதிய ஆசிரியர் டாக்டர்.வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. நம்பெருமாள் திருவரங்கத்தில் இருந்து கிளம்பி மீண்டும் திருவரங்கம் வரும் வரையில் சுமார் 47 ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து ஸ்ரீ வேணுகோபாலன் எழுதியுள்ள “திருவரங்கன் உலா” என்னும் நூல் விளக்கமாக சொல்கிறது.
| காலம் | நிகழ்வு | ஆட்சியாளர் |
| திரேதா யுகம் | எம்பெருமான் திரேதா யுகத்து பெருமாள் | |
| இராமாயண காலத்திற்கு பிறகு | தர்மவர்மா விமானத்தை சுற்றி கோவில் அமைத்தான் | சோழ |
| காலம் தெரியவில்லை | கிள்ளிவளவன் கோவிலை புதுப்பித்து, மதிலும் கோபுரமும் கட்டினான் | சோழ |
| கிபி 10 நூற்றாண்டு | சோழ மன்னர்கள் ஆதரவு. முதல் பராந்தக சோழன், | சோழ |
| கி.பி. 1060-1063 | இராச மகேந்திர சோழன் இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் திருமதிலை கட்டினான் | சோழ |
| கி.பி.1020-1137 | இது இராமானுஜரின் காலமாகும். திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி, நிர்வாகம் முழுதும் சீர் திருத்தினார். | சோழ |
| கி.பி. 1120-1170 | முதலாம் குலோத்துங்க சோழன். இவன் இராமானுஜருக்கும் வைணவத்திற்கும் பல கொடுமைகள் விளைவித்தான் | சோழ |
| கி.பி.1178-1218 | மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவன் சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்தான். | சோழ |
| கி.பி.1223-1225 | திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது. | கங்கர்கள் |
| கி.பி.1216-1238 | மாறவர்மன் சுந்தரபாண்டியன் கர்நாடகத்தைக் கைப்பற்றினான். கங்கர்களை விரட்டினான். கோவில் நிர்வாகம் சீர்பெற்றது. | பாண்டியன் |
| கி.பி.1234-1262 | ஒய்சாள மன்னன் சோமேசுவரன் இங்கு நந்தவனம் உண்டாக்கி மூன்றாம் பிரகாரத்தில் யாகசாலை நிறுவினான். | ஒய்சாளம் |
| கி.பி.1251-1268 | பாண்டிய மன்னன் சடாவர்ம சுந்தர பாண்டியன் ஏராளமான பொன்வழங்கி, மூன்று விமானங்கள் கட்டினான். திருமடைப்பள்ளி கட்டினான். இராண்டாம் பிரகாரத்தில் பொன் வேய்ந்தான்.பொற்கருட வாகனம் வழங்கினான். திருவரங்கனுக்கு மரகதமாலை, பொற்கிரீடம், முத்தாரம், முத்துவிதானம், பொற் பட்டாடை போன்றன வழங்கினான். ஏராளமான அணிகலன்களையும், பொற் காசுகள் நிரம்பிய குடங்களையும், கோவிலுக்கு வேண்டிய பிற முக்கிய பொருட்களையும் இத்திருக் கோவிலுக்கு தானம் வழங்கினான். | பாண்டியன் |
| கி.பி.1263-1297 | ஒய்சாள மன்னன் இராமதேவன் இக்கோவிலுக்கு எண்ணற்ற தானம் வழங்கி புனருத்தாரப் பணிகளை மேற்கொண்டார். இத்திருக்கோவிலில் உள்ள வேணு கோபால கிருஷ்ணரின் சன்னிதி இவர் காலத்தில் ஏற்பட்டதாகும். | ஒய்சாளம் |
| கி.பி.1268-1308 | மாறவர்மன் குலசேகரபாண்டியன். போர்ச்சுக்கீசிய மாலுமி மார்க்கோபோலோ இத்தலம்பற்றியும், செழிப்பைப் பற்றியும் வியந்து போற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளார். | பாண்டியன் |
| கி.பி. 1311 | முஸ்லீம் தளபதி மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். இக்கோவிலில் கொள்ளையிட்டான். | முகலாய |
| கி.பி.1325-1351 | முகம்மதுபின் துக்ளக் இக்கோவிலை கொள்ளையிட எத்தனித்தான். அரங்கன்பால் பற்றுக் கொண்ட அடியார்களும், ஆச்சார்யார்களும் திருவரங்க நகர்வாசிகளும் தேவதாசிகளும் அவனை முன்னேற விடாமல் தடுத்தனர். எண்ணற்ற வீரர்கள் இருதரப்பிலும் மாண்டனர். வைணவ அடியார்கள் தம் இன்னுயிர் நீத்து இத்திருக்கோவிலைக் காத்தனர். இத்திருக்கோவிலின் விலை உயர்ந்த அணிகலன்களையும், வழிபாட்டிற்குரிய முக்கிய பொருட்களையும் உற்சவப் பெருமாளையும் திருவரங்கத் தினின்றும் கடத்தி பல ஊர்களில் மறைத்து வைத்து திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை எனப் பலவிடங்களிலும் மறைத்து இறுதியில் திருப்பதியில் கொண்டுபோய் பாதுகாத்து வைத்தனர். | முகலாய |
| கி.பி. 1371 | திருப்பதியிலேயே இருந்த உற்சவ பெருமாளான நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் வந்து சேர்ந்தான். | விஜயநகரப் பேரரசு |
| கி.பி. 1371 முதல் கி.பி.1565 வரை | விஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து இத்திருக்கோவிலை மீட்டு திருப்பதியிலிருந்து உற்சவப் பெருமாளையும், பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றது | விஜயநகரப் பேரரசு |
| கி.பி.1538-1732 | நாயக்க மன்னர்கள், இவர்களும் இத்திருக்கோவிலுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்து வந்தனர். | நாயக்க மரபினர் |
| கி.பி. 1659-1682 | சொக்க நாத நாயக்க மன்னர் இத்திருக்கோவிலுக்கு பலதிசை களினின்றும் சாலைகள் அமைத்து எதிரிகளால் தாக்க முடியாத அரண்போன்ற கதவுகளை நுழைவாயிலில் பொருத்தினார். | நாயக்க மரபினர் |
| கி.பி. 1016-1732 | விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும் கண்ணாடி அறையினையும் கட்டுவித்தார். | நாயக்க மரபினர் |
| கி.பி.1732-1800 | நாயக்க மன்னர்களுக்குப் பிறகு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயர்களின் உதவியால் ஆற்காடு நவாபுகளிடம் சென்றது | ஆற்காட்டு நவாப் |
| கி.பி.1809-1947 | தொண்மை முறைப்படியான கோவில் நிர்வாகத்தில் தலையிடாது மேற்பார்வை கண்காணிப்பாளர்களாக ஆங்கிலக் கலெக்டர்கள் இருந்து வந்தனர். | ஆங்கிலேய ஆட்சி |






























திருவரங்கம் பற்றி தொடர்ந்து மேலும் சில தகவல்களை வரும் நாட்களில் சேர்க்க முயற்சிக்கிறோம். நன்றி
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.
அடுத்து, ஆழ்வார், தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.
அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று பெருமாளை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்று பாடினார்.
தன்னை பெரியபெருமாள் திருத்தியதால் தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.
கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். பெருமாள் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.
உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.
அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சொன்ன ஆழ்வாரிடம் அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்றும், அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் ஆழ்வார் தவிக்கிறார், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று “பணிவினால் மனம் அது ஒன்றி” என்ற அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.
சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல, மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்துவிடமுடியாது என்றும், வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர, குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது, என்றும் கூறுகிறார். அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை புதியதாக பேச முடியுமா” என்று பேசிற்றே பேசல் அல்லால் என்று இருபத்தி இரண்டாம் பாசுரத்தில் கேட்கிறார்.
நினைக்கவும் பேசவும் முடியாதென்றால், மறந்து போவதுதானே என்று ஆழ்வாரிடம் மற்றவர்கள் சொன்னபோது, அரங்கனின் சயனத் திருக்கோலத்தை திருஅரங்கத்தில் கண்டு ரசித்தபின் அதனை மறந்து எப்படி வாழ்வேன் என்று சொல்வது கங்கையில் புனிதமாய என்ற இருபத்திமூன்றாம் பாசுரம்.
இனி அடுத்த பாசுரம்.
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள், கள்ளனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும், உள்ளமே வலியைப் போலும் ஒருவன் என்று உணர மாட்டாய், கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே. (திருமாலை 24)
ஆழ்வார், முந்திய பாசுரங்களில், மனத்தினால் நினைக்கலாமே என்றும், ‘பேசித்தான் ஆவதுண்டோ என்றும் எங்கனம் மறந்து வாழ்கேன் என்றும் தன்னுடைய அன்பினை காட்டியதற்கு பதிலுக்கு பெரியபெருமாள், ஆழ்வார் மேல் தமக்குள்ள உள்ள அன்பினைக் காட்ட, அதனை பார்க்கும் போது தனது அன்பு மிகவும் தாழ்ந்தது என்று ஆழ்வார் உணர்ந்து, பைத்தியம் பிடித்தவனுக்கு ஒரு சமயம் வரும் தெளிவு போல் உள்ள தன்னுடைய பக்தியை கள்ளத்தனம் என்று பாடும் பாடல்.
பொங்குநீர் பரந்து பாயும் என்று சென்ற பாசுரத்தில் பாடியது இன்னும் ஆழ்வார் நினைவில் இருக்க, இங்கே தொடர்ந்து “வெள்ளநீர் பரந்து பாயும்” என்று காவிரியின் பெருமையில் இந்த பாசுரத்தையும் தொடர்கிறார்.
காவிரி, தன் உற்பத்தி ஸ்தானத்தில் இருந்தே திருவரங்கம் வர வேண்டும் என்று நோக்கோடு வருவதால், ஆர்வம் வெளியே தெரியும்படி, பெருவெள்ளமாக நீரை கொண்டு எவராலும் அணைகட்டி தடுக்க முடியாதபடி எல்லா பக்கங்களிலும் பாய்ந்து செல்லும். ஆற்றின் ஆர்வத்திற்கு முடிவு இல்லாததால், ஆழ்வார் பாய்ந்தது என்று இறந்த காலத்தில் சொல்லாமல், பாயும் என்று நிகழ் காலத்தில் கூறி உள்ளார். காவிரியின் வெள்ளநீர் எங்கும் பாய்வதால், சோலைகளும் எல்லா இடங்களிலும் பரவுகிறது.
கள்ளமில்லாத நித்யஸூரிகளுடன் பரமபதத்தில் நேர்மையோடு இருப்பதைவிட்டு, திருவ ரங்கத்தில் கண் வளர்ந்து இருப்பது, இங்குள்ள கள்ளத்தனம் உள்ள சம்சாரிகளைத் தன் கள்ளத்தனம் கொண்டு, வலைவீசி, கவர்ந்து கொள்வதற்காக என்பதால் ஆழ்வார் ‘கள்ளனார்’ அல்லது ‘கள்வனார்‘ என்று கூறுகிறார். பலவகை துர் எண்ணங்களுடன் கோவிலுக்குள் செல்லும் மக்களை தன் வடிவழகு போன்றவற்றை கொண்டு திருத்தி, அவர்களை அடியவர்கள் என்று மாற்றும் எம்பெருமானை கள்வனார் என்று ஆழ்வார் சொல்வது பொருத்தமே. மிகப் பெரிய தீவட்டித் திருடன் என்பதால் ‘கள்வன்’ என்று சொல்லாமல் ‘கள்வனார்’ என்று சொன்னதற்கு காரணம் என்று உரையாசிரியர் கூறுகிறார். எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவைத் தன்னது என்று உரிமை கொண்டாடும் ஜீவாத்மாக்களைக் கவரும் போது, அதை சொல்லிக்கொண்டு வந்தால் யாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதால், கள்வனாக கிடக்கிறார்.
மேலே சொன்ன நீர்வளத்தையும் சோலைகளின் வனப்பையும் கொண்டு எம்பெருமான் இங்கு வந்து பள்ளிகொண்டு உள்ளான் என்று நினைக்க தோன்றினாலும் உண்மையில் ஜீவாத்மாக்களை கவரவே என்பதால் கள்வன் என்று சொல்லலாம்.
நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை திவ்யதேச எம்பெருமானை பாடும்போது, “செஞ்சொற் கவி காள், உயிர் காத்து ஆட் செய்மின்” என்று பாடுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
திருப்பாணாழ்வார், பெரியபெருமாளை அருகில் சேவித்தபோது அவரது திருமுக மண்டலத்தில் ஒரு கள்ளத்தனம் தோன்றி இருப்பதால் தானோ, அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில் (7), ‘செய்ய வாய் ஐயோ ! என் சிந்தை கவர்ந்ததுவே‘ என்று சொல்கிறார். அதாவது எதோ ஒரு காரணத்தினால் தன்னை அணுகுகிறவர்களின் ஆத்மாவை திருடி தன் சட்டைப்பைக்குள் வைத்து கொள்வார் அல்லது அவர்களை தன்னுடைய அந்தரங்கர்கள் ஆக்கி கொள்வார். எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவை தன்னது என்று பலகாலமாக நினைத்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாவிடம் இருந்து அது அறியாதவண்ணம், எம்பெருமான் சேர்த்துக்கொள்வதால் கள்வனார் என்கிறார்.
இதை ஜிதந்தே ஸ்தோத்திரம் முதல் ஸ்லோகத்திலேயே ‘செந்தாமரை கண்ணா, உன்னால் இந்த ஆத்மா ஜெயிக்கப்பட்டது, இந்த ஆத்மா என்னுடையது அல்ல, உன்னுடையது, உலகையெல்லாம் உண்டாக்கினவனே, இந்திரியங்களை நியமிப்பவனே, கொடுப்பதில் சிறந்தவனே, முற்பாடானாக பிறப்பவனே, இந்த ஆத்மா எனக்காக இல்லாமல் உனக்காகவே ஆகவேண்டும்” என்றபடி எம்பெருமான் தன்னுடைய வடிவழகை காட்டி இந்த ஆத்மாவை எடுத்துக்கொள்கிறார்.
பற்பலகாலமாக ஜீவாத்மா, இந்த ஆத்மாவை தன்னதாகவே நினைத்துக்கொண்டு இருப்பதால், இப்பொழுது பரமாத்மா தனக்கு சொந்தமான ஆத்மாவை எடுத்துக் கொண்டாலும் அது, ஆயர்பாடியில் கண்ணன் வெண்ணையை திருடியது போல், கள்ளத்தனமாகவே தெரிகிறது, என்று உரையாசிரியர் சொல்கிறார்.
எம்பெருமானுடைய உலகங்களையெல்லாம் அவனுக்கே மாவலி தானம் கொடுத்தது போல், நாமே இந்த ஆத்மாவை அவனுக்கு சமர்ப்பித்தாலும் அதுவும் ஒரு கள்ளத்தனமே.
ஆழ்வார் தன்னை வசப்படுத்தியது, எம்பெருமானின் எளிமை மற்றும் பற்பல திருக் குணங்கள் அல்ல என்றும், கண் முதலிய அவயங்களின் தனிப்பட்ட அழகு இல்லை என்றும், “கிடந்ததோர் கிடக்கை” (திருமாலை 23) என்ற பெரியபெருமாள் திருமேனியின் முழுவதுமான அழகே (சமுதாய சோபை) என்றும் கூறுகிறார்.
தாமரை, எம்பெருமானின் திருமுகத்துடன் ஒப்பிடப்படுகிறது. மலர்ச்சி, நறுமணம், குளிர்ச்சி, புதுமை என்ற குணங்களால் ஓரளவு ஒன்றாக இருந்தாலும், நன்முகம் என்று சொன்னதால், முற்றிலும் சமமானது என்று சொல்லமுடியாது. சுத்த சத்வ மயமானதாலும் ஜோதிமயம் ஆனதாலும் தாமரை போன்ற ஒரு ஜட பொருளுக்கு எம்பெருமானின் திருமுக மண்டலத்தை ஒப்பிட முடியாது. ஆதித்தனை கண்டு மலரும் தாமரைக்கு அடியார்களை கண்டு மலரும் எம்பெருமானின் திருமுகத்திற்கு ஒப்பு ஆகாது என்பது ஆழ்வாரின் கருத்து. எல்லா உலகங்களிலும், எம்பெருமானின் திருமுகம் மட்டுமே மிக குளிர்ச்சியான முகம் என்றும் மற்றவை கடுமையானவை என்பதை ‘நன்முகம் ‘ என்ற சொல்லால் உணர்த்துகிறார்.
இதே உரையாசிரியர், வங்கக்கடல் கடைந்த பாசுர விளக்கத்தில் ஆண்டாள், பெரியாழ்வாரை புகழும் போது, ‘தண்தெரியல் பட்டர்பிரான்‘ என்று சொன்னது, பெரியாழ்வார் குளிர்ச்சியான மாலையை அணிந்து கொண்டு உள்ளார், எம்பெருமான் உட்பட மற்றவர்கள் சூடானவற்றை அணிந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது, ஆழ்வார்கள் எம்பெருமானையும் விட இன்னும் சாத்விகர்களாக இருப்பார்கள் என்பதால் உரையாசிரியர், ஆழ்வார்கள் தவிர மற்றவர்களை பார்க்கும் போது எம்பெருமான் குளிர்ச்சியாகவும், ஆழ்வார்களை பார்க்கும் போது ஆழ்வார்கள் எம்பெருமானை விடவும் குளிர்ச்சியாகவும் இருப்பர் என்று சொல்வது போல் தெரிகிறது.
எம்பெருமான் கண்வளர்ந்து அருளும் அழகினை சேவித்த பிறகும், ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனதை பார்த்து ஆழ்வார் அதன் வலிமையை கண்டு வியக்கிறார். இதற்கு முந்தைய பாசுரங்களில் கண்ணினை களிக்குமாறே (17), பனிஅரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று மனது கேட்ட போது, ஆழ்வார், எம்பெருமான் பெருமைகளைப் பார்க்கும்போது, ஆழ்வார் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களாக மேலே சொன்னவை, மிக சிறியவையே என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார் மேலும், எம்பெருமான் தன்னிகர் இல்லாதவன் அல்லது ஒப்பற்றவன் என்று உணராத நெஞ்சம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். அப்படி உணர்ந்தால், எம்பெருமானின் பெருமைகளும், குணங்களையும் உள்ளபடி உணரவேண்டும். அதற்கு ஏற்ப ஈடுபாடும் பிறக்க வேண்டும். அது பிறக்காததால், நெஞ்சை வன்மை உள்ளது என்று கூறுகிறார்.
கண்ணினை களிக்குமாறே (17), பனிஅரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னது மற்ற உலக விஷயங்களில் எப்படி கள்ளத்தனமாக நடக்கிறோமோ அதேபோல் பகவத் விஷயத்திலும் கள்ளத்தனமாக நடந்து கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.
ஆழ்வார், மேலும் நெஞ்சத்திடம் உலக விஷயத்தில் செய்த கள்ளத்தனம், பற்பல காலங்களாக, பற்பல பிறவிகளாக செய்து வருவதால், இந்த பகவத் விஷயத்திலும் பொய்யான அன்பை நன்றாக காட்டிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார். மெய்யான அன்பு செலுத்தவில்லை என்றும் இந்த விஷயத்திற்கு ஏற்ற உண்மை அன்பை, பக்தியை செலுத்தவில்லை என்று தன் மனத்திடம் சொல்லி, இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
எம்பெருமானின் திருமுகத்தை தரிசித்த பின்னும் ஆழ்வாரின் வலிமையான நெஞ்சம், அவரிடம் பொய்யான பக்தியை காண்பித்ததாகவும், அதனால் தன்னிடம் சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் இல்லை என்று தன்னை எம்பெருமான் சரணாகதிக்கு தயார் செய்ததை, ஆழ்வார்க்கு செய்த உபகாரமாக இந்த பாசுரம் சொல்கிறது.
இதேபோல், பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில், (5.2.8), “ஏதங்களாயின எல்லாம் இறங்க லிடுவித்து என்னுள்ளே, பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து, போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில், பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே”, என்று சொல்லி எம்பெருமான் தன்னுடைய வலிமையான நெஞ்சத்தில் உள்ள பாவங்களை விலக்கிவிட்டு, அதனுள் புகுந்து அவனுடைய திருவடிகளை ஆழ்வாரின் தலையில் வைத்து உபகாரம் செய்ததை சொல்லி உள்ளார்.
இத்துடன் ஆழ்வார், எம்பெருமான் தனக்கு செய்த உதவிகள் என்ற தலைப்பில் சொன்ன தொகுப்பு முடிகின்றது. அடுத்து ஆழ்வார், நிரந்தர இன்பம் அளிக்கும் பரமபத்திற்கான உபாயங்களை கடைபிடிக்க தமக்கு ஒரு தகுதியும் இல்லை என்ற தொகுப்பில் 25 முதல் 34 வரை சொன்ன பத்து பாசுரங்களை காண்போம்.
மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம் நன்றி.
இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி
As the saying goes ” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Emperumanai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Emperuman. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperuman on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Paramathma. When many objections were raised, Azhwaar advised to follow Sri Rama, when he mentioned “silaiyinaal ilangai setra devane devan aavaan”; and advised to follow Sri Krishna, who is simple and easy to approach, by stating ‘katrinam meitha kazhalinai panimin‘; and finally advised to follow Aranagan, by mentioning ‘uybavarku uyyum vannam Thiruvarangam kaatinaan“. Azhwaar continued his preaching by mentioning the glories of Thiruvarangam in the next three hymns.
In spite of above, people did not follow Azhwaar’s preaching, he started to sing about the great help graced by Periyaperumaal to him in the next ten hymns. We discussed the first of these hymns, which is the fifteenth paasuram, ‘Meiyerke Meiyanaagum‘. In that hymn, Azhwaar stated that Emperumaan does all the things for those who show truthful devotion to him; He also protects those who do things related to devotion which are not really truthful, but could be classified as truthful; He lets down those who are not even doing such false devotion as mentioned above. Azhwaar concluded that hymn by stating that Emperuman uses His beauty to clarify all the doubts.
In the next hymn, “soodhanaai kalvanaai“, Azhwaar mentioned that Azhwaar himself was a thief and a fraud, who got entangled with the beauty of the eyes of the other women and fell in deep pits. Azhwaar confirmed that Periyaperumal used His beauty to correct him and diverted all his love and affection towards Him.
In the next hymn, “Virumbi ninru“, Azhwaar stated that previously he did not use his hands to offer Him, the mouth to say prayers or the heart to devote himself to Emperuman. Emperuman used His soft and sweet beauty to fix the hardened heart of Azhwaar and Azhwaar was so elated that his eyes were filled tears. Initially, Azhwaar was happy about the opportunity he got to have the dharsan of Thiruvarangan, who is alone and without any peer, ruling the entire kingdom and that happiness caused continuous tears from his eyes. With tears, he could not enjoy the dharsan continuously. So Azhwaar was worried and frustrated at himself in not making use of the opportunity offered to him and hence he called himself as a sinner in the eighteenth hymn, “ini thirai thivalai“.
In the nineteenth hymn, “Kuda thisai mudiyai vaithu” Azhwaar sang that Emperuman created the four directions and kept the holy parts of His form (thirumeni) in each direction, so that we can get abode by having dharsan of those holy form. Azhwaar continued to state that his mind and body started to melt after having the splendid dharsan of Periyaperumal and wondered how others were unaffected; if they were using any potion to sustain such a strong state, Azhwaar asked them to give him a small portion of that.
To that, people responded by asking Azhwaar to come out of the devotion to Emperumaan. Those who know the glories of Emperumaan, would understand that Emperumaan is in Thiruvarangam for only themselves. Only those who are selfish and proud of themselves would move away from Periyaperumal and Azhwaar said that he would not do that. This is what he conveyed in the twentieth hymn, Paayum Neer Arangam Thannul.
Azhwaar said that he could not leave Arangan after having His dharsan. Azhwaar was given suggestions, that instead of seeing Arangan, he could try limiting his time to enjoy the beauty of Arangan or he could sit in a corner and think of Arangan through his heart, so that he would not suffer. For these, Azhwaar advised his mind/heart that limiting the experience of enjoying the beauty of Arangan, would be like what he lost in the past in the Bhagawath experience, because of the lack of his faith. This was the summary of the hymn “Panivinaal manam adhu onri“.
When he mentioned “manathinaal ninaikalaame ?“, he confirmed that enjoying the beauty of Periyaperumal could not be contained within a time frame or with a restricted frame of mind by the heart. Then people started advising Azhwaar that he could keep speaking about the beauty of Periyaperumal. Azhwaar questioned back as how to talk about something which could not be conceived by the heart fully. This is the gist of this hymn “pesitre pesal allaal’. Azhwaar told his heart that we could talk only what vedas and our acharyars had spoken and we would not be able to speak the glories of the Emperumaan, who lives in the hearts of those who are faultless, using any new or different words. Emperumaan would also not be understood or visible to others. There is nothing else to do than offering our prayers to Him.
Now let us go into the next hymn.
Gangaiyil punidhamaaya Kaaviri naduvu paatu, pongu neer parandhu paayum, poom pozhil Arangam thannul, engal Maal, Iraivan, Easan kidandhadhor, kidakai kandum, enganam marandhu vaazhgen ezhaiyen ezhaiyene (Thirumaalai 23)
When Azhwaar said that he could not think or speak anything new about Periyaperumal, people suggested that he could forget Him. Azhwaar responded how he could forget and live in this world, after having had the great dharsan of Periyaperumal in the reclining position. This is the summary of this hymn, Gangaiyil punidhamaaya.
Azhwaar starts this hymn that Kaveri is more beautiful and sweeter than the river Ganges, and superior in the sanctification of others, than the Ganges. The river Kaveri had attained the same status of Ganges after performing many penances to Brahma and became superior to Ganges after the Srirangam Vimaanam (the structure over the sanctum) was established in Thiruvarangam, according to the book ‘Sriranga Mahathmiyam’.
Brahma says in the book Easwara Samhithai, that all rightful things known as Dharma, turned into water, due to their devotion to Vishnu, and that water was used by Brahma paying his obeisance and to wash Thrivikraman’s Holy feet, when it crossed and measured all the worlds.
Lord Siva, declared that he was ready to get purified with the same water and agreed to hold that water on his head and later discharged it slowly to this world and that became the Ganges.
Ganges has a shortcoming, as it has a connection with Lord Siva, associated with Rajo and Thamas types of Gunas. Thaamasa Guna is known as traits of inaction, inertia and dullness. Rajo Guna is being very aggressive and anger. For this reason, even his own devotees would not accept the prasadams from the Siva temples, and called them as “nirmalyam” which means “Remains”.
Thirumangai Azhwaar in the Prabandham, Thiruvezhu kootru irukkai “Mukkan Naatroll, Aivaai aravodu, Aarupodhi sadaiyon arivu arunthanmai perumaiyul ninraanai”, sang that Vishnu has the glory that He is not visible to even the great Lord Siva, who is with three eyes, four shoulders, wearing a snake with five mouths and six streams of Ganga on his mat-hair. So the Ganges has the connection and smell of Lord Siva’s mat-hair. Even with those shortcomings, Ganges is still with holiness at the end as it has the association of the holy feet of Vishnu once.
Poigai Azhwaar in his Prabandham, Mudhal Thiruvandhaadhi, (97) “unthan adi serndhu arul petraal andre, podi ser anarku am kai yetraan avir sadai mel paayndha, punal Gangai ennum per pon” meaning that Ganges got her blessings after touching the holy feet of Vishnu, a long ago. That holiness of Ganges helped to purify Siva, as he held the Ganges in his head.
Acharyar, Parasara Bhattar, in his Rangarajasthavam, (22), said that Ganges was very proud that she got the connection with Vishnu’s holy feet for just a moment. He continued that Kaveri is flowing on the streets, preparing for the visit of Namperumal, offering the sacred water for the holy bath (Thirumanjanam) and gently strikes the holy feet of Emperumaan to give Him the comfort. Thus Kaveri has been serving Thiruvarangam Emperuman continuously as against the Ganges’ short period of association, and that too only once, with Emperumaan. For these reasons, Kaveri is superior to Ganges, according to Parasara Bhattar.
All the holy rivers visit Kaveri and get themselves purified in the Tamil month of Aipasi (Thula) as many sinners would have visited those rivers to wash off their sins. This is stated in a book called Thula Kaveri Mahathmiyam.
So, Ganges has the connection with Siva and had touched the Holy feet of Vishnu only once. But Kaveri does not have any such shortcomings. Moreover, Lord Ranganatha, having those Holy feet, Himself, wanted to be in the shores of Kaveri and that made Kaveri to get associated with Thiruvarangan for ever. So it is very apt for Thondaradipodi Azhwaar to sing “Gangaiyil punidhamaaya Kaaviri”.
Naduvu means that it is in the middle and Azhwaar mentioned this as Thiruvarangam is in between the two Kaveris, one, the river Kaveri, flowing on the south of Srirangam and second, the river Kollidam, flowing on the north of Srirangam, which is also known as North Kaveri. The commentator explains that Arangan is in the middle of two Kaveris, as Sri Krishna lying on the lap of Yasoda.
There are four objectives, dharma, artha, kaama and moksham, collectively known as ‘Purushaarthams”. Dharma is all right things; artha denotes material richness; kaama means worldly desires and moksham means abode. From these we can understand that Kaama and artha are temporary whereas Dharma and Moksha are permanent and are always close to Paramathma.
Since Thiruvarangam has two Kaveris (South Kaveri and North Kaveri or Kollidam), it has four banks. The banks which are closer to Srirangam or Periyaperumal are associated with Dharma and Moksham. The other two banks, namely the outer ones to Srirangam are associated as Artham and Kaamam.
The commentator assigned every bank of the Kaveri to Dharma, Artha, Kama and Moksham. The northern bank of the North Kaveri is assigned as “kaamam” and the south bank of North Kaveri as Dharma. The northern side bank of the South Kaveri is assigned as Moksham and the southern side bank of South Kaveri as Artham. In other words, the banks closer to Thiruvarangan are denoted as Moksham and Dharmam.
River Kaveri does not flow as a gentle river but flows with much force that batters both the banks. Parasara Bhattar in his Rangarajasthavam, mentioned that Kaveri flows with abundant water and was anxious about meeting Arangan, that made Kaveri to become muddled and throw the waves everywhere. Before reaching Thiruvarangam, she is anxious, since Periyaperumal is her son in law. Bhattar says that when she leaves Thiruvarangam, she feels sad, as she may not see Arangan again and that resulted her always to become unclear and anxious.
Because of Kaveri’s plentiful water, the gardens of Thiruvarangam were always filled with blossoming flowers, all the times, representing spring season throughout the year. So Thiruvarangam always would remove the fatigue of all people.
The purity and cleanliness of Kaveri is covered by the term “Gangaiyil punidhamaaya” and the sweetness is referred to by “Pongu neer parandhu paayum poompozhil”
All the three words, Maal, Iraivan, Easan mean the same, Arangan.
One of the meanings for the word Maal, is crazy. Arangan is crazy about His devotees. In other words, His affection and love towards His devotees is boundless! Here Thondaradipodi Azhwaar included other Azhwaars with him, as they had also entrusted the responsibility of protecting them to Periyaperumal and that is why Azhwaar said “engal Maal”, meaning our Thirumal. From the above context, it might look as though Periyaperumal had chosen Thiruvarangam due to its sweetness and holiness, but the underlying meaning denotes that He chose this place only due to His love and affection towards His devotees, as the commentator says.
The word Iraivan means, He is the Leader, or entitled to all and everything. Paramathma, being Iraivan, is affectionate with His devotees.
The word Easan means that He has the capability to guide according to His leadership or He is the one, who controls and guides all the actions or He is the one, who is capable of controlling and guiding all.
With these three words, Maal, Iraivan and Easan, Azhwaar states that He loves His devotees and guides them in the right direction as a Leader. In our tradition, His love and affection is referred as Vathsalyam (kindness), Sowlabhyam (simplicity) and Sowseelyam (humble). The way He guides us in the direction is referred as “Niyanthruthvam”. His leadership is conveyed as “Swamithvam”.
The explanation given by the commentator can be summarised as follows.
Azhwaar for a moment, set aside all the glories of Periyaperumal on one side, and started to think about how he got captivated by the beauty of the Periyaperumal. The word “Or” meaning one in Tamil and is used by Azhwaar as ‘unparalleled’. The reclining posture is an unique and special posture of Perumal. Azhwaar felt that he might have forgotten if Perumal is in standing or sitting position, but could not forget this beautiful reclining posture that he highlighted in the word “Or‘. He added that when others were reclining or lying down, they appear unaesthetic, but when it comes to Periyaperumal, it is completely aesthetic according to the commentator.
In the hymn “Payum Neer Arangan thannul“, it was explained how Sita enjoyed the beauty of the reclining Rama in Ramayanam, Yudha Kaantam (38.25) (Sa Mayaa Bodithah Sreemaan Sukha Suptah Parantapah), even when she was hurt by an asuran, Kakasuran. The meaning of the sloka is that Rama, very handsome and capable of hurting His enemies, was woken up from His sleep.
Generally, Azhwaars glorify Paramathma, whether He is sitting, standing or reclining. For example, in Periya Thirumozhi, (6.9.5) by Thirumangai Azhwaar, “Nilayaara ninraan than neezh kazhle adai nenje“, meaning that the standing posture is perfect for the deity of Thirunaraiyur and Azhwaar asked his heart to go and reach Him there. This is to highlight the beauty of His standing posture. In the same way, Nammazhwaar in Thiruvaaimozhi (6.5.5), sang “Piraan irundhamai kaatineer”, to appreciate the beauty of the sitting posture of the main deity of Thirutholaivillimangalam.
In this hymn, Azhwaar sings about “Gangaiyil punithamaaya Kaveri” first and then brings the words “kidanthathor kidakai“. But the logical sequence is, only after touching the holy feet of Thiruvarangan, the river Kaveri gets all the holiness that is more than the Ganges, as we saw earlier. So the sequence should be as, “kidandhadhor kidakai” first and later “Gangaiyil punidhamaaya Kaviri”. The commentator justified that Azhwaars would always give more importance to Divyadesams, (the place), as those are the places which identified the Divyadhampathis (Emperumaan and Thaayar) to them and hence Azhwaar sang in the above sequence here.
Azhwaar states that he could forget Periyaperumal, had he not seen the reclining posture of Him. But how could he forget after enjoying the beauty of the reclining posture of Periyaperumal? Swami Nammazhwaar’s Thiruvaaimozhi (5.5.1), “enganeyo annai meergaal, ennai munivadhu neer ? nangal kola Thirukurunkudi nambiyai naan kandapin“, is highlighted here by the commentator, as how could Nammazhwaar forget and live after the seeing the beauty of the Thirukurunkudi Nambi. Once this Bhagawadh matter is experienced, it can not be forgotten. When forgotten, life can not be continued with other worldly things.
Here Thondaradipodi Azhwaar considered himself as poor, on bhagwadh matters. Azhwaar could not fully enjoy the Bhagwadh matters, as sung by him in the previous hymns, he called himself poor, (Ezhaiyen), even though Azhwaar was greedy to experience the Bhagawadh matters, Similarly Azhwaar sang that he would not survive, if he moved away from this (bhagawadh matter). So in that context, he called himself poor. The other meaning of the word “ezhmai” is, fatigue. Azhwaar was worn out and weakened by the karmas he accumulated over many years and many births. He became poorer, when he wanted to enjoy the Bhagawadh matters, which are unmeasurable. So the poor became poorer. Azhwaar sang this as “ezhaiyen ezhaiyene”.
With that, we will conclude this hymn and catch up again in the next hymn, “vella neer paranthu paayum“, which is the last one in this subsection, where Azhwaar was appreciating the favours graced by Emperuman to him.
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை / எம்பெருமானை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான எம்பெருமான், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.
அடுத்து, ஆழ்வார், தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.
அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று எம்பெருமானை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்றும் பாடினார்.
தன்னை பெரியபெருமாள் திருத்தியதால், தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.
கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். எம்பெருமான் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.
உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் எம்பெருமானை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.
அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சொன்ன ஆழ்வாரிடம் அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்றும், அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் ஆழ்வார் தவிக்கிறார், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அது இயலாது என்பதை, அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று “பணிவினால் மனம் அது ஒன்றி” என்ற அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.
சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல, மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்துவிடமுடியாது என்றும், வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர, குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது, என்றும் கூறுகிறார். அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை புதியதாக பேச முடியுமா” என்று பேசிற்றே பேசல் அல்லால் என்று இருபத்தி இரண்டாம் பாசுரத்தில் கேட்கிறார்.
இனி அடுத்த பாசுரம்.
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு, பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள், எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே. (திருமாலை 23)
நினைக்கவும் பேசவும் முடியாதென்றால், மறந்து போவதுதானே என்று ஆழ்வாரிடம் மற்றவர்கள் சொன்னபோது, அரங்கனின் சயனத் திருக்கோலத்தின் அழகை திருவரங்கத்தில் கண்டு ரசித்தபின் அதனை மறந்து எப்படி வாழ்வேன் என்று சொல்லும் பாசுரம்.
அழகாலும், நீரின் இனிமையாலும் கங்கையை காட்டிலும் சிறந்த காவிரி, பிறரை புனிதப்படுத்துவதிலும் கங்கையை விடச் சிறப்பான காவிரி ஆறு என்று இந்த பாசுரத்தை ஆழ்வார் தொடங்குகிறார். ஸ்ரீரங்க மஹாத்மியம் என்ற நூலில், ப்ரஹ்மாவிடம் கடும் தவம் புரிந்து கங்கையுடன் சமம் என்ற நிலையை அடைந்தபின், காவிரி, ஸ்ரீரங்கவிமானம் திருவரங்கத்தில் நிறுவப்பட்ட பின், கங்கையை விட உயர்ந்தவள் என்ற பெருமையை அடைந்ததாகக் கூறுகிறது.
ஈஸ்வர சம்ஹிதை என்ற நூலில், விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது, தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார். அந்த தண்ணீரைத் , தான், பரிசுத்தப்படுத்தபடத் தயாராக உள்ளதாகக் கூறி, சிவபெருமான் தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக பூமிக்கு விடுகிறார். அதுவே கங்கை என்று ஆனது.
அதனால் கங்கைக்கு சிவன் (ருத்ர) சம்பந்தம் கொண்டது என்ற ஒரு குற்றமும் உண்டு. ருத்ர சம்பந்தம் கொண்டதால், அவனுடைய மாலை மற்றும் பிரசாதங்களை, ‘நிர்மால்யம்’ என்று அவனுடைய பக்தர்களும் தொடத்தக்கதாக கொள்ளவில்லை. ருத்ர சம்பந்தம் என்பது, ரஜோ தமோ குணங்களுடன் தொடர்பு உள்ளது.
திருவெழு கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தில் திருமங்கைஆழ்வார், “முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவு அருந் தன்மைப் பெருமையுள் நின்றனை” என்று கூறியபடி, கங்கைக்கு சிவனின் சடையின், சிடுக்கு நாற்றமும், மயிர் தொடர்பும் உள்ளது. இருந்தாலும், இப்படிபட்ட கங்கைக்கு, விஷ்ணுவின் ஸ்ரீபாத சம்பந்தம் ஒரே ஒரு முறை ஏற்பட்டு இருந்ததால், கங்கைக்கு புனித தன்மையே இறுதியில் இருக்கும்.
இதே போல், பொய்கை ஆழ்வாரும், முதல் திருவந்தாதியில்(97), “உன்றன் அடிசேர்ந்து அருள் பெற்றாள் அன்றே, பொடிசேர் அனற்கு அம் கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்” சொல்லியது, சிவபெருமானின் சடைமேல் பாய்ந்த நீரை புனிதமாக அருள் செய்தது விஷ்ணுவின் திருவடி சேர்ந்ததாலே என்று கூறுவது.
இதையே பராசர பட்டர் எனும் ஆச்சார்யர், ரங்கராஜஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தில் (22), ஒரு க்ஷண ஸ்ரீ பாத சம்பந்தத்தால் பெருமை வாய்ந்தது என்று அஹங்கரித்து இருக்கும் கங்கை என்கிறார். திருவரங்கன் புறப்பாடு முன் திருவரங்கத் தெருக்களைச் சுத்தம் செய்வது, திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் தருவது, எப்போதும் பெரியபெருமாளின் திருவடிகளைத் தடவிக் கொடுத்து சேவை செய்வது போன்ற செய்கைகளால் கங்கையை விடச் சிறந்தவள் அன்றோ காவிரி என்று கூறுகிறார்.
தீர்த்தம் என்று பெயர் பெற்ற எல்லா புண்ணிய நதிகளும், ஐப்பசி மாதத்தில் காவிரிக்கு வந்து, பாவிகளான மக்களைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்வதாக துலா காவிரி மஹாத்மியத்தில் காவிரியின் பெருமை கூறப்பட்டு உள்ளது.
ஆக கங்கைக்கு ருத்ர சம்பந்தம் என்ற குறை உண்டு. மேலும் விஷ்ணுவின் சம்பந்தம் ஒரே ஒரு முறை மட்டுமே. ஆனால், காவிரிக்குக் குறை எதுவும் இல்லை, மேலும் அப்படிப்பட்ட திருவடிகளைக் கொண்ட திருவரங்கன் இந்த காவிரி கரையில் இருக்க வேண்டும் என்று இங்கு வந்து இருப்பதால், திருவரங்கனின் திருவடித் தொடர்பு காவிரிக்கு எப்போதும் உண்டு. அதனால் தொண்டரடிப்பொடியாழ்வார் கங்கையில் புனிதமாய காவிரி என்று பாடி உள்ளார்.
வட திருக்காவிரி மற்றும் தென் திருக்காவிரி இரண்டுக்கும் நடுவே திருவரங்கம் இருப்பதை இப்படி ஆழ்வார் குறிப்பிடுகிறார். கண்ணன் எம்பெருமான் யசோதை பிராட்டியின் மடியினில் சாய்ந்து இருப்பது போல், காவிரியின் நடுவில் பள்ளிகொண்டு திருவரங்கன் அருள்கிறான் என்கிறார்.
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்கும் புருஷார்த்தம் என்று கூறப்படும். இவைகளில் தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை நிரந்தரமானவை என்றும், காமம் மற்றும் அர்த்தம், தற்காலிகமானவை என்றும் சொல்வதுண்டு. தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை எப்பொழுதும் பரமாத்மாவிற்கு நெருங்கியவை.
திருவரங்கத்தில் வடக்கு பக்கம் கொள்ளிடம் என்ற வட திருக்காவிரி மற்றும் காவேரி என்ற தென் திருக்காவிரியும் ஓடுகின்றன. ஆக, திருஅரங்கம் நான்கு காவிரிக்கரைகளை கொண்டது. பெரியபெருமாளுக்கு அருகில் உள்ள காவிரிகரைகள் மோக்ஷமாகவும், தர்மமாகவும் உள்ளன என்று சொல்வதுண்டு. திருஅரங்கத்திற்கு வெளிப்பக்கம் உள்ள மற்ற இரண்டு காவிரிக்கரைகள், அர்த்தம் மற்றும் காமம் என்றும் சொல்லப்படும்.
வட திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை “காமம்” என்றும், தெற்கு பக்கக் கரையை ‘தர்மம்’ என்றும், தென் திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை ‘மோக்ஷம்’ என்றும், தெற்குக் பக்க கரையை ‘அர்த்தம்’ என்று சொல்லப் படுகின்றன.
காவிரி ஒரு அமைதியான நதியை போல் இல்லாமல், இருகரைகளையும் அடித்துக் கொண்டு செல்கிறது. அதிகமான நீர் வருவதாலும், பெரிய பெருமாளை காண வருகிறோம் என்ற மகிழ்ச்சியினாலும் அலைகளை எறிந்து கொண்டு கலங்கி கொண்டு வருகிறது என்று பராசரபட்டர் ரங்கராஜஸ்த்வத்தில் (22) குறிப்பிடுகிறார். காவிரிக்கு, பெரியபெருமாள், மாப்பிளை ஆனபடியால், திருவரங்கம் வருவதற்கு முன்பு, ஒருவித கவலையோடு வருமாம், திருவரங்கத்தைக் கடந்தபின், இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஏக்கத்துடன் விலகுமாம், அதனால் எப்போதும் அது கலக்கத்துடன் உள்ளது என்று குறிப்பிடுகிறார். காவிரியின் நீர் பெருக்கால், திருவரங்கத்துச் சோலைகள் எப்போதும் பூத்து குலுங்கிக் கொண்டு என்றும் வசந்த காலமாகவே இருக்கும். அதனால் எல்லோருக்கும் களைப்பினை போக்கும் தேசமாக திருவரங்கம் உள்ளது என்கிறார்.
கங்கையில் புனிதமாய என்பதால், புனிதம் மற்றும் தூய்மையும், பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் என்பதால், இனிமையும் காவிரிக்குச் சொல்லப் படுகின்றன.
மால், இறைவன், ஈசன் என்ற மூன்று சொற்களுமே அரங்கனையே குறிக்கின்றன. மால் என்பதற்கு பித்துபிடித்து என்று ஒரு அர்த்தம் உண்டு.
மால் என்றால் அரங்கன் அடியார்கள் மேல் பித்து பிடித்து இருக்கிறான் என்று கொள்ளலாம். அடியார்களிடம் அளவுக்கு அதிகமான அன்பு உடையவன் என்றும் கூறலாம். பெரியபெருமாளிடம் தங்களை காக்கும் பொறுப்பை விட்டிருக்கும் மற்ற ஆழ்வார்களையும் இவர் சேர்த்துக்கொண்டதால், ‘எங்கள்’ மால் என்று அழைக்கிறார். மேலே சொன்ன புனிதத்தன்மையாலும், இனிமையினாலும் பெரியபெருமாள், திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ளார் என்பது போல் தோன்றும், ஆனால், ஆழ்ந்து பார்த்தால், அடியவர்களிடம் கொண்ட அன்பினால் தான் இங்கு எழுந்தருளி உள்ளான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.
இறைவன் என்பதற்கு எல்லாவற்றிற்கும் தலைவன், மற்றும் உரிமை உள்ளவன் என்பது பொருள். இறைவனாக இருப்பதால் அடியார்கள் மேல் அன்பு கொண்டு உள்ளான்.
ஈசன் என்பதற்கு தலைமைக்கு தகுந்தபடி ஆளத் திறமை உள்ளவன் அல்லது எல்லாவற்றையும் நடத்தி செல்பவன் அல்லது நடத்தி செல்ல வல்லவன் என்று பொருள்.
இப்படி இந்த மூன்று பதங்களால் அன்பு உடையவன், நல்வழி காட்டி, நடத்தி செல்ல வல்ல, தலைவன் என்று கூறுகிறார். நம் சம்ப்ரதாயம், அன்பு உடையவன் என்பதற்கு வாத்ஸல்யம்(பரிவு) , சௌலப்யம்(எளிமை) மற்றும் சௌசீல்யம் (நீர்மை) என்ற பதங்களால் சொல்லும்; நியந்த்ருத்வம் என்பது நல்வழிகாட்டி நடத்தி செல்லவல்லவன் என்பதை சொல்லும்; ஸ்வாமித்துவம் என்பது தலைமையும் உணர்த்தும்.
அடியவர்கள், உலகில் உள்ள பொருட்களின் மேல், தங்களுடைய சத்வ, ரஜோ, மற்றும் தமோ என்ற முக்குணங்களால் கவரப்படுவதைத் தடுத்து, அவர்களை எப்போதும் அனுபவிக்கவல்ல பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல எண்ணி, அவர்கள்மேல் உள்ள பாசத்தால் தூண்டப்பட்டு, தன் உடைமையை, தன் இஷ்டத்திற்கு, தனதாக்கி கொள்வதற்காக, இங்கு வந்து காத்து கிடக்கிறான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.
ஆழ்வார் பெரியபெருமாளின் திவ்யகுணங்களை ஒரு கணம் தள்ளி வைத்துவிட்டு, அவன் கிடந்த திருக்கோலத்தில் தான் அகப்பட்டுக்கொண்டதை சொல்கிறார். ஒப்பற்ற என்ற பொருளில், கிடந்த திருக்கோலத்தின் சிறப்பை ஓர் என்று சொல்கிறார். நின்ற அல்லது அமர்ந்த திருக்கோலமாக இருந்தால் ஒருவேளை மறந்து இருக்கலாம், கிடந்த திருக்கோலத்தை மறக்க முடியாது என்பதை ஓர் என்ற வார்த்தையால் சொல்கிறார். மற்றவர்கள் படுத்துக்கொண்டு இருந்தால், அழகின்மையே மிகுந்து இருக்கும், ஆனால் பெரியபெருமாள் சயனித்து இருக்கும், அழகு மிகுந்து இருக்கிறது என்று உரையாசிரியர் கூறுகிறார்.
பாயும் நீர் அரங்கம் தன்னில் என்ற பாசுரத்தின் விளக்கத்தில், “பள்ளி கொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை யுத்த காண்டத்தில் (38.25) (ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ ) காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும், எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார்” என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
ஆழ்வார்களை பொறுத்தவரையில் எம்பெருமான் நின்ற நிலையாய் இருந்தாலும், அமர்ந்த நிலையாய் இருந்தாலும் சயனித்து இருந்தாலும், அவற்றை உயர்வாகவே சொல்வார்கள். உதாரணமாக, பெரிய திருமொழியில், (6.9.5) “நிலையார நின்றான் தன் நீள்கழலே அடை நெஞ்சே”, திருமங்கை ஆழ்வார் எம்பெருமான், திருநறையூரில், மிகவும் பொருந்தி, நிலையாக நின்றான், என்று நின்ற நிலையின் பெருமையை கூறுகிறார். அதேபோல், திருவாய்மொழியில் (6.5.5), “பிரான் இருந்தமை காட்டினீர்” என்று திருத்தொலைவில்லிமங்கலத்தில் எம்பெருமான் அமர்ந்த திருக்கோல பெருமையை நம்மாழ்வார் கூறுகிறார்.
இந்த பாசுரத்தில், ஆழ்வார் முதலில் கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி, பிறகு கிடந்ததோர் கிடக்கை என்று சொல்கிறார். ஆனால் அரங்கனின் திருவடிகளை வருடிச்சொல்வதாலேயே கங்கையை விட புனிதமான நிலையை காவிரி அடைவதாக மேலே பார்த்தோம். ஆக, கிடந்ததோர் கிடக்கையை முதலில் சொல்லிவிட்டு, பிறகு கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால், ஆழ்வார்களுக்கு திவ்யதம்பதிகளை காட்டிக்கொடுத்த திவ்யதேசத்தின்மேல் கொஞ்சம் அதிக ஈடுபாடு ஆனதால், இந்த வரிசையில் சொல்கிறார்.
காணாமல் இருந்தால், மறந்து வாழலாம், பெரியபெருமாளின் சயன திருக்கோலத்தைக் கண்டு அனுபவித்தபின் எப்படி மறந்து வாழ்வேன் என்று ஆழ்வார் கூறுகிறார். சுவாமி நம்மாழ்வாரின் “எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?, நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின், (திருவாய்மொழி, 5.5.1) என்ற வார்த்தைகள், இதனையே பிரதிபலிக்கின்றன. இந்த விஷயத்தை அனுபவித்தபின் மறக்க முடியாது, அப்படியே மறந்தாலும், மற்ற விஷயங்களைக்கொண்டு வாழ முடியாது என்று பொருள்.
ஆழ்வார் பகவத் விஷயத்தில் தான் ஏழை அல்லது வறுமை உள்ளவன் என்கிறார். தான் இந்த விஷயத்தை அனுபவிக்க பேராசையுடன் இருந்தாலும், முன்னே சொன்னது போல், முழுவதும் அனுபவித்து முடிக்க முடியாத விஷயம் ஆகையால், ஏழையேன் என்று சொல்கிறார். அதைப் பிரிந்தால், வாழ முடியாதவன் ஆவதால், ஏழையேன் என்கிறார். ஏழைமை என்பதற்கு தளர்ச்சி என்று ஒரு பொருள் உள்ளது. பலகாலமாக கர்மா வினை பயன்களால் தளர்ச்சியடைந்த ஆழ்வார், இப்போது அளவிட்டு முடிக்கமுடியாத பகவத் விஷயத்தை கண்டு தளர்ச்சி அடைந்தவராக உள்ளார் என்பதால், ஏழையான தான் மீண்டும் ஏழையாகிவிட்டேன் என்பதை ஏழையேன் ஏழையேனே என்றும் கொள்ளலாம்.
இத்துடன் இந்த பாசுரத்தை முடித்துக்கொண்டு, எம்பெருமான் தனக்கு செய்த உதவிகளை பேசுதல் என்ற இந்த உபபகுதியின் இறுதி பாடலான “வெள்ளநீர் பரந்து பாயும்” என்ற அடுத்த பாசுரத்தை தொடரும் வலைப்பதிவில் சந்திக்கலாம், நன்றி.
கீழ்கண்ட வலைப்பதிவுக்கு எங்களின் நன்றி
இதனை தமிழில் படிக்க, இங்கே சொடுக்கவும், நன்றி
As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, when he mentioned “silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin‘; and finally to Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. Azhwaar continued his preaching by mentioning the glories of Thiruvarangam in the next three hymns.
Since, people did not follow Azhwaar’s above preachings, he decided to leave them and started to sing about the great help graced by Periyaperumaal to him in the next ten hymns. We discussed the first of these hymns, the fifteenth paasuram, ‘Meyyerke Meyyanaagum‘. In that hymn, Azhwaar sang that Emperumaan does all the things for those who show truthful devotion to him; He also protects those who do things related to devotion which are not really truthful, but could be classified as truthful; He lets down those who are not even doing such false devotion as mentioned above. Azhwaar concluded that hymn by stating that Perumal uses His beauty to clarify all the doubts. In the next hymn, “soodhanaai kalvanaai“, Azhwaar mentioned that Azhwaar himself was a thief and a fraud, who got entangled with the beauty of the eyes of the other women and fell in deep pits. Azhwaar confirmed that Periyaperumal used His beauty to correct him and diverted all his love and affection towards Him.
In the next hymn, “Virumbi ninru“, Azhwaar stated that previously he did not use his hands to pray, mouth to say prayers or heart to devote himself to Emperumaan. Emperumaan showed His soft and sweet beauty to melt the hardened heart of Azhwaar and Azhwaar was so happy that his eyes were filled tears. Initially, Azhwaar was happy about the opportunity he got to have the dharsan of Thiruvarangan, who is alone and without any peer, ruling the entire kingdom and that happiness caused continuous tears from his eyes. With tears, he could not enjoy the dharsan continuously. So Azhwaar was worried and frustrated at himself in not making use of the opportunity offered to him and hence he called himself as a sinner in the eighteenth hymn, “ini thirai thivalai“.
In the nineteenth hymn, “Kuda thisai mudiyai vaithu” Azhwaar sang that Perumal created the four directions and kept the holy parts of His form (Thirumeni) in each direction, so that we can get abode by having dharsan of those holy form. Azhwaar continued that his mind and body started to melt after having the splendid dharsan of Periyaperumal and wondered how others were not affected; if they were using any medicine to sustain such a strong state, azhwaar asked them to give a small portion of that medicine to him.
For that, people responded to Azhwaar by asking him to come out of the devotion to Emperumaan. According to Azhwaar, those who know the glories of Emperumaan, would understand that Emperumaan is in Thiruvarangam only for themselves. Only those who are selfish and proud of themselves alone would get away from Periyaperumal and Azhwaar said that he would not do that. This is what he conveyed in the twentieth hymn, Paayuram Neer Arangam Thannul.
In the previous hymn, Azhwaar said that he could not leave Arangan after having His dharsan. Suggestions were made to Azhwaar that he could try limiting his time to enjoy the experience of the beauty of Arangan or he could stay at a corner and think about or offer prayers to Arangan, in stead of seeing or having a dharsan of Arangan so that he would not suffer. For these, Azhwaar advised his mind/heart that limiting the experience of enjoying the beauty of Arangan, would be like what he lost in the past in terms of having the Bhagawadh experience, due to his own level of confidence or faith. This was the summary of the previous hymn “Panivinaal manam athu ondri“.
Now let us go into the next hymn.
Pesitre pesal allaal perumai onru unaral aagaathu, aasatraar thangat allaal ariyal aavaanum allan, maasatraar manathu ulaanai vanangi naam iruppadhu allaal, pesathaan aavadhu undo, pedhai nenje nee solaai (Thirumaalai 22)
In the last hymn, Azhwaar when he mentioned “manathinaal ninaikalaame ?“, to mean that he confirmed that enjoying Periya Perumal’s beauty could not be contained within a time frame by the heart. When people suggested Azhwaar that he could keep speaking about the beauty of Periyaperumal using his mouth, rather than watching or seeing Him. Azhwaar questioned them back, as how to talk about something which could not be conceived by the heart fully. This is the gist of this hymn “pesitre pesal allaal’. According to Thaithriya Samhithai 7.5.3, first comes the heart (or mind) and then only the speech, as the mouth could only speak what the heart or mind thinks. In other words, what could not be conceived fully by the heart, could not be spoken by the mouth.
Azhwaar said to his heart that we could talk only what vedas and our acharyars had spoken and would not be able to speak anything new about the glories of the Emperumaan, who lives in the hearts of those who are faultless. For others, Emperumaan would not be visible or understood. There is no other go other than offering our prayers to Him according to what is told in Vedas and what is practised by our acharyaars. Azhwaar completed this hymn, by asking the heart whether we would be able to write a new hymn to speak His glories.
If Azhwaar’s heart could not fully conceive the matter related to Paramathmaa, there was a suggestion to him that he could speak it out like any other worldly matter. Azhwaar’s response was that all other worldly matter were limited and hence our mouth could speak it out completely, whereas the matter relating to Emperumaan was unlimited and hence our mouth could not finish talking about Him. Then people asked Azhwaar to stop talking. As mentioned earlier, Vishnu Dharmam says that those hearts which think about Vishnu alone are hearts and the mouths which speak about Vishnu alone are mouths. So Azhwaar said that we have to continue talking only what was told in Vedas and what others had spoken on Paramathma, keeping the Vedas as the guidance and he could not speak anything different or new. Manavaala Maa Munigal referred to such people who speak differently as fools in his Upadesa Rathna Maalai (71) like “munnor mozhindha murai thappaamal kettu, pinnornthu thaam adhanai pesaamal tham nenjil thonrinadhe“.
Following are some examples, on what Vedas told on Paramathmaa and what others told keeping Vedas as guidance.
It is a general practice to explain things which are not conceivable by the heart in this world, by using things that are visible and physcially present in this world. Since we have used some lowly examples to explain the supreme Paramathma, we can not conclude that we have understood the Paramathma fully.
Thythriya Upanishad – Anantha Valli (9.1) – says that those whose hearts come back with a message that it is impossible to understand, measure and express about the happiness of Paramathmaa, are actually the ones, who had understood the happiness of Paramathmaa and would not be afraid of anything. So we have to accept that we can not express completely about Paramathmaa, as the above are the words from those who knew Brahmam or Paramathmaa. Generally whatever that could not be explained by words, could be felt by heart. But here it is told that it is not even measurable by heart.
In Ramayana, Thara, wife of Vaali, said that even after seeing Sri Rama directly in front of her, He was beyond what she could think of. “thvam aprameyascha, thurasathascha, jeethendhriyascha, uthama dhaarmikascha, akshayya keerthischa, vichakshanascha, kshithikshamaavaan kshathajopamaaksha (4.24.31) glorifiying Rama as “‘You are immeasurable, unassailable, self- controlled, and best among the righteous. Your fame never diminishes. You have great sense of discrimination. You are known to possess forbearance like the mother earth. Your eyes are red-cornered (which is a sign of valour).”
Why we need to accept the words of a person, who knew Brahmam and when he said that it could not be expressed’? Whenever we use examples to express certain things, the example would be generally superior to the parable. But when we want to explain Emperumaan using examples, all such examples would be always lesser and lowly compared to Emperumaan. We have to keep it mind that we would not be able to express any one of His glories, or His beauty, or His wealth or His holy form. This can be understood from the word “onru” in the hymn, means one.
Based on the previous arguments, people asked Azhwaar, was it impossible for anyone to understand Paramathmaa. Azhwaar responded that those who take only Him as the route to reach Him would alone be able to understand Him fully and all others would not understand Him. This is what is being told in Bhagawadh Geetha (7.3), by Lord Krishna, that only one in many many thousands would understand Him fully.
The word “aasu” in this sentence and the word “maasu” in the next sentence mean the the same, namely, fault; however, Azhwaar had used them to convey two different types of faults. The first one, ‘aasu‘, is the pride, in the people’s mind, who would try to reach Emperumaan using all other means, like Activities, Knowledge and Devotion (Karma, Gnanam and Bakthi) other than using Him as the route. The second type of fault, “Maasu” is the one where people, after reaching or getting Him, asking for other things, such as worldly wealth etc., other than He Himself.
We would have heard about three types of Jeevathmaas, based on what they want from Emperumaan.
We should ask for and achieve only Him, which is the second in the above list. If we think that we should look for material wealth or the stage in between, like Kaivalyam, Azhwaar highlighted that as the other fault of our heart, namely, Maasu, in this hymn. So Azhwaar stated that those who reach Him, using Him as the route and after reaching Him, asking Him as their only desire, by rejecting Kaivalyam and material wealth (Aiswaryam), were called as “maasu atraar” ( devoid of maasu) here.
Azhwaar stresses clearly that it is in the hearts of His devotees, where Emperumaan or Paramathmaa would reside by calling Him as “Manathu Ullaanai’. Azhwaar also defined these devotees as those who gave up the two types of prides, who left all other types of routes other than Him, as the means to attain Him and also who did not ask for anything else other than He Himself, after attaining Him. By doing these, they surrendered all the responsibility to Him so that their worldly life could be ended to enjoy Him fully in Paramapadham. These people are called as Maasu Atraar and Aasu Atraar by Azhwaar. The commentator also continued that Emperumaan would feel uncomfortable and feel as though He would be in the mid of a wild forest fire or like a fish that was taken out of water, if He is to be away from the hearts of such devotees or if He has to stay in the hearts of other jeevathmaas.
So Emperumaan is in all the divyadesams in order identify those devotees without these two prides (aasu atraar and maasu atraar) and to reside eternally in their hearts.
We have seen earlier that every Azhwaar has their own specialty and Thirumazhisai Azhwaar is known for his attachment towards Antharyaami, one of the five states of Paramathmaa. What he sang in his Thiruchandhavirutham hymns 64 and 65 are reffered by the commentator as reference to Mananth ullaanai.
There are many other places where almost all Azhwaars’ have mentioned that He is in the heart of Azhwaars or such devotees. We could not get all the hymns list, but We can see some of the hymns on Mannathu Ullaanai here.
Thondaradipodi Azhwaar says that after we understand that He would not leave the minds/hearts of His devotees, the objective of the devotees became much simpler, that is to enjoy Him. The word “vanangi” means offering prayers and that includes
Azhwaar confirms that when we think of His glories we can never speak or sing about His glories completely.
Azhwaar was telling his heart that it would be foolish on its part to assume that it would be able to speak the glories of Emperumaan fully or limit the discussions on those, which are of supreme most value and content. Azhwaar confirmed that the heart or mind would be able to complete the discussions only if it was thinking or talking about lowly worldly things. With these, Azhwaar completed this hymn.
Let us meet again on the next hymn, thanks
| Hymn Number | Azhwaar / Prabandham / Hymn | Remarks |
|---|---|---|
| Swami Namazhwaar – Thiruvaaimozhi | ||
| (10.8.2) | Pere uraigindra piraan inru vanthu, peren enru en nenju niraya pugunthaan | The deity who resides in Thirupernagar, came to Azhwaar that day and entered his heart and He said that He would not move out of Azhwaar |
| (10.8.6) | “Thiruper nagaraan Thirumaaliruncholai poruppe uraigindra piraan indru vanthu iruppen enru en nenju niraya pugunthaan” | The deities of those temples at Thiruper Nagar, Thirumaliruncholai, came that day and filled Azhwaar’s heart completely, without giving space for anything else |
| (10-8-9) | ““Inru ennai porulaakki thannai ennul vaithaan“ | Thiruper Nagar Emperumaan made Azhwaar into an object on that day and He moved Himself inside Azhwaar |
| (1.7.6) | “Ennul iraan enil pinnai yaan ottuveno“ | Would Azhwaar ever survive if He is not inside him” |
| (1.8.5) | “Vaigalum vennai kai kalandhu undaan, poi kalavaadhu en mei kalandhaane” | The Lord came inside Azhwaar and enjoyed him as much as He enjoyed the butter by reaching inside the pot with His outstretched hands |
| (1.9.5) | “Eesan Maayan en nenjil ullaane” | The Lord is in Azhwaar’s heart. |
| (2.6.7) | Muzhu Ezh ulagu undaan, Ugandhu vandhu adiyenul pugundhaan agalvaanum allan ini, | The Lord, who swallowed all the seven worlds, happily came inside Azhwaar’s heart, and He would never ever leave. |
| (2.9.4) | “En mannake vandhu idai veedu inri manni | The Lord came inside my heart and took His residence there forever saying that He should alone be served, all the times by Azhwaar”. |
| (2.9.8) | “Ekkaalathu endhaiyaai ennul mannil | If He would only be Azhwaar’s master and be with him inside at all times, Azhwaar would not seek anything else from Him. |
| (5.5.9) | Kannal Paal amudhaagi vandhu en nenjam kazhiyaane | Once Azhwaar saw the Lord of Thirukkurungudi, as sweet as milk and sugar, His tall crown and His countless jewels never left Azhwaar’s heart |
| (8.4.7) | “Enrum en sindhai ulaan” | Thiruchenkundroor Emperumaan always residing in Azhwaar’s heart. |
| (8.6.2) | “Thirukadithaanamum ennudaiya sindhaiyum orukaduthu ulle uraiyum piraan kandeer” | Emperumaan resides in Thirukadithaanam, one of the divyadesams in Kerala and in Azhwaar’s heart simultaneously. |
| (8.6.4) | “Neyathinaal nenjam naadu kudi kondaan” | Thirukadithaana Emperumaan occupied Azhwaar’s heart as His permanent country of residence. |
| (8.6.8) | “en nenjum Thirukadithaana nagarum, thanadhaaya pathiye” | Even though the Lord has many divya desams, in the sky, on Earth, in Azhwaar’s heart and ocean, yet He has chosen Azhwaar’s lowly heart and Tirukkadithanam, as His abodes. “thana thaaya pathiye” means, anything that has come in a right way and that is a must to enjoy. |
| (10.4.4) | “en manathul irundhaanai nilai perkkal aagaamai nichithu irundhene” | The Lord had come inside the heart of Azhwaar with enthusiasm and Azhwaar would make sure that He stayed there for ever |
| 8.7.1 | Irunthum Viyanthu (8.7) is a subsection of 10 hymns and this particular concept comes in all the hymns of this subsection. In the first hymn “poruthamudai Vaamanan thaan pugundhu“, | The apt Vamanan got inside Azhwaar |
| 8.7.2 | In the second hymn “enadhu ezhai nenju aalum” | Emperumaan is ruling the lowly Azhwaar. |
| 8.7.3 | In the third hymn, “Avan en ul irul thaan ara veetru irunthaan“ | Emperumaan was sitting in Azhwaar’s heart to clear all the internal darkness of Azhwaar. |
| 8.7.4 | In the fourth hymn, “enadhu ammaan, thooya sudar sodhi thanadhu ennul vaithaan”, | Emperumaan kept His tejas (spotless, bright, clean and shining light) inside Azhwaar’s heart. |
| 8.7.5 | In the fifth hymn, “ennul thigazhum mani kunram“, | Emperumaan, a radiant gem hill, is inside Azhwaar. |
| 8.7.6 | In all other hymns, azhwaar mentioned this concept directly, whereas in the sixth hymn, he mentioned “karu maanika kunrathu thaamarai pol, thirumaarbu, kaal kann kai sevvai undhiyaane” | He resides inside Azhwaar like a gem hill, with coral lips, lotus chest; limbs and eyes, and lotus navel. But the commentator explains that Azhwaar was not mentioning the natural beauty of Emperumaan, but how the various holy parts of His form were with the fresh enhanced beauty ,after He came inside Azhwaar. So in the sixth hymn, Azhwaar talked about the beauty of the Emperumaan after He entered into the heart of Azhwaar. |
| 8.7.7 | In the seventh hymn, “sevvaai muruvalodu enadhu ullathirundha“ | He is inside the heart of Azhwaar with a smile from His coral lips. |
| 8.7.8 | In the eighth hymn, “siriyenudai chindhaiyul moovulgum tham neriyaa vayitril kondu ninru ozhindhaare | Emperumaan, who swallowed all the three worlds rightfully in His stomach, came inside the mind/heart of the lowly Azhwaar. |
| 8.7.9 | In the ninth hymn, ” tham vayitril kondu ninra vannam ninra maalai, vayitril kondu manna vaithen mathiyaal“ | The kings who protect their citizen like a mother who takes care of their children from the days of their pregnancy; Emperumaan is most superior than the kings, and even the celestial gods like brahma and others of all the three worlds, who were all protected in His stomach. Such Emperuman has given permission to Azhwaar to swallow Him and keep Him in his heart. Here the word ‘mathiyaal’ means ‘anumathiyaal or with His permission”. |
| 8.7.10 | In the tenth hymn, “vaithen madhiyaal en ullathu agathe” | Azhwaar preserved Emperumaan in his inside part of the heart, with His permission. |
| Swami Namazhwaar – Periya Thiruvanthaadhi | ||
| 22 | “Maalaar kudi pugundhaar en manathe’, | Thirumal has entered Azhwaar’s heart. |
| 35 | “ninrum irundhum kidandhum, thirithandhum, onrumo aatraan en nenju agalaan” | The Lord in standing, sitting, reclining and striding postures never cares rest, never leaves the heart of Azhwaar. |
| 75 | ‘Nee en seviyin vazhi pugundhu en ullaai” | the Lord had entered into Azhwaar through his ears, quietly without himself knowing. |
| Poigai Azhwaar – Muthal Thiruvandhaadhi | ||
| 99 | “vellathil ullaanum, Venkadathu meyaanum ullathil ullaan enror‘ | The supreme Lord exists, always He exists, In the hearts of devotees, In the ocean of milk, in Thiruvenkadam, and in Azhwaar. |
| Boothathazhwaar – Irandaam Thiruvandhadhi | ||
| 54 | Verpu enru Thiruncholai Venkadam enru ivvirandum, nirpu enru Nee madhikkum neermai pol, nirpu enru vellathu ilankoyil ullam vaithu ullinen vellathu ilam koyil kaividel enru, | The hill resorts of Thiruvenkatam and Thirumaliruncholai are the two favoured abodes of the Lord, and Azhwaar’s heart too has become His abode equally. Azhwaar is praying that He does not leave the ocean of Milk. |
| 95 | En Nenjam meyaan en chenniyaan ….. ulagamethum aazhiyaan athiyooraan | The permanent resident of Azhwaar’s heart has His feet on Azhwaar’s head. |
| Peiyazhwaar Moondraam Thiruvandhaadhi | ||
| 26 | “sirandha en sindhaiyum senkan aravum, niraindha seer neel kachi ullum urainthadhuvum “ | The Lord never leaves Azhwaar’s heart and His red eyed serpent bed, wears a Tulasi garland and resides in the auspicious Kanchinagar, Thiruvenkatam, Vekkha and Velukkai. |
| 81 | Nenjaal ninaippu ariyan elum nilai petren, nenjame pesaai ninaikungaal nenjathu peraadhu nirkum Perumaanai enkolo, oraadhu nirpadhu unarvu | Even if it is difficult to contemplate about the Lord, by the mind, Azhwaar asked his heart to keep on talking about His glories. The Lord appears instantly in the heart of the devotees and remains there. Azhwaar questioned on how the heart is not thinking about Him after this. |
| 82 | Unaril unarvu ariyan ullam pugundhu punarilum kaanbu ariyan unmai | He cannot be described using usual texts, though He is in our hearts, it is difficult to feel His presence there. If we can not see Him there, where else could we see Him. |
| 83 | vinn kadantha payinkazhalaan, ullathin ulle ulan | He measured this world and the sky with His holy feet He remains in our hearts for sure. |
| 84 | Ullanaaya naanmaraiyin utporulai, ullathu ullanaaga therndhu unarvar aelum, ullanaaya vann thaamarai nedunkann maayavanai yaavare, kandaar ugappar kavi, | the Vedas explains the experience of the Lord. Even if He resides in the hearts of all, those who have realised Him are only a few. Even though many may say that they have seen the Lord, but they can only write poems, but they would not be able to see Him in reality. |
| Thirumazhisai Azhwaar, Thiruchandha virutham | ||
| 65 | Nirpadhuvum or verpu agathu, iruppum vinn, kidapaadhum nar perum thirai kadalul, naanilaadha munnellaam, arpudhan anantha sayana aadhi bhoothan Maadhavan, nirpadhum, iruppadhum, kidapaadhum en nenjule | The Lord is standing on the hill (Thiruvenkadam), He is sitting in the sky above (Paramapadham or Srivaikuntham), He is sleeping in the ocean (Thirupaarkadal). These were all before the Azhwaar got the divine knowledge. Now the Lord, His sleeping His standing, sitting, reclining — all the acts are in Azhwaar’s heart. |
| 64 | Ninradhu endhai Ooragathu, irundhadhu endhai Paadagathu, anru Vehkhanai kidandhadhu en ilaatha munn elaam, anru naan pirandhilen, pirandha pin marandhilen, ninradhum, irundhadhum, kidandhadhum en nenjule. | When Azhwaar was not knowledgeable of Him, the Lord reclined in Vehkhanai, stood in Padagam, sat in Ooragam. But once Azhwaar got the bhagwadh knowledge, the Lord’s standing, sitting, reclining — all are in the heart of the Azhwaar. |
| Thirmazhisai Azhwaar Naanmugan Thiruvandhaadhi | ||
| 30 | “ Avan ennadhu ullathu ninraan irundhaan” | He stands in Azhwaar’s heart and He sits in Azhwaar’s heart. |
| 86 | ” Ulan kandaai nan nenje, uthaman enrum ulan kandaai, ulluvaar ullathu ullan kandaai than oppaan thaana ullan kaan thamiyerkum, ennoppaarrku eeasan imai” | Azhwaar is telling his heart that the supreme Lord exists; always He exists in the hearts of His devotees, The Lord who does not have any peer appears before devotees like how He appeared in front of Azhwaar on His own. |
| Periyazhwaar – Periyazhwaar Thirumozhi | ||
| 2.3.2 | Nanni thozhumavar sindhai piryaatdha Narayaana | Narayana! you remain in the thoughts of all those who worship you |
| 5.2.5 | ” Maanick Kurall uruvaaya Maayanai en manathulle peni konarndhu pugutha vaithu konden pirithinri | Maayan took a dwarf and bachelor role, as Vamanan, and Azhwaar brought Him inside his heart and kept Him safely without any separation from Azhwaar. |
| 5.2.10 | Aravathu amaliyinodum, azhagiya paarkadalodum, aravindha paavaiyum thaanum agampadi vandhu pugundhu | The Lord who sleeps on the serpent-bed, in the beautiful milky ocean, and along with Thaayaar, the Periya Piraatti on lotus, all have entered inside Azhwaar. |
| 5.4.8 | “Ananthan paalum, Garudan paalum aidhu noidhaaga vaithu en mananthanulle vandhu vaigi vaazha cheidhaai empiraan | Azhwaar said that Emperumaan was showing lesser love towards Ananthan and Garuda, the Nithyasoories, and entered into Azhwaar’s heart and blessed him a new life |
| 5.4.9 | Panikkadalil pallikollai pazhagavittu, odi vandhu en manakadalil vaazha valla maaya manaala nambi | Emperumaan did a great favour to Azhwaar. He gave up the ocean of Milk, His reclining posture there, and came running to take abode in the ocean of Azhwaar’s heart. |
| 5.4.10 | Vada thadamum, Vaikunthamum, Madhil Thuvaraapathiyum, ida vagaigal igazhnthittu en paal ida vagai kondanaiye | Lord, appeared as a flame brightly in Azhwaar’s heart, casting away the northern milky Ocean, Paramapadham or Vaikunta, the walled city of Dwaraka and many such places and had come to live in Azhwaar’s heart. At least in the previous hymn, Azhwaar said Emperumaan considered his heart to be equivalent to milky ocean, whereas in this hymn, Azhhwaar said that He moved into Azhwaar’s heart after leaving all these holy places, which are liked by Him. |
| 5.4.11 | Veyar thangal kulathu udhitha Vittu Chithan manathe, koil konda Kovalanai | Emperumaan took residence in the heart of Vishnuchithar, a descendant of the Veyar clan |
| Aaandaal – Thirupaavaai | ||
| 5 | Vellatharavil thuyil amarndha vitthinai, ullathu kondu munivargalum yogigalum | The Sages and Yogis hold the Lord, who reclines on the snake-bed on Thirupaarkadal, in their hearts |
| Thirupaanazhwaar – Amalanaadhi Piraan | ||
| 5 | ennai than vaaramaaki vaithaan, ennul pugundhaan | Relieving Azhwaar of all his load of sins, Arangan of Thiruvarangam made Azhwaar His devotee; and what is more, He entered into Azhwaar. |
| 9 | ” Mudivu illadhu or ezhil neelameni aiyo nirai kondathu en nenjinaiye” | Alas! Emperumaan’s matchless beauty of His total form has stolen Azhwaar’s heart! |
| Thirumangai Azhwaar – Periya Thirumozhi | ||
| 1.1.3 | Tham Adaindhaar manathu iruppaar, naamam naan uyya, naan kandu konden Narayana ennum Naamam | Thirumangai Azhwaar in his first Prabandham, first Section (muthal pathu), in the first subsection (mudhal padhigam), third hymn, sang that Emperumaan resides in the hearts of His devotees. The Lord lives in the heart of His devotees and Azhwaar found His holy name Narayana, the Mantra for him to attain abode. |
| 1.10.6 | Minnar Mughil ser Thiruvenkadam meya, ennaani, ennappan en nenjil ulaane. | In the same first prabantham, first section (Muthal Pathu), in the tenth subsection (tenth pathigam), sixth hymn, he reconfirms that He is his master, He is like an elephant, but He, a Resident of Thiruvenkadam hills lit by the lightning of dark clouds, is in Azhwaar’s heart. |
| 1.10.7 | Thiruvenkata maa Malai meya, Kone, en manam kudi kondu irundhaaye | The Lord, the Resident of the mighty Thiruvenkatam hills, now resides in Azhwaar’s heart. |
| 11.5.10 | Vellathaan, Venkadathaan aelum, Kalikanri ullathin ulle ullan kandaai saazhaley | Though the Paramathmaa is residing in the ocean of Milk and in Thiruvenkatam, He resides permanently in the heart of Thirumangai Azhwaar. |
| Thondaradipodi Azhwaar – Thirumaalai | ||
| 16 | Maatharaar Kayarkann ennum valaiyiul pattu azhundhuvenai, podhare enru solli pundhiyil pugundhu | On those earlier dark days Azhwaar was in the company of wicked ones and was trapped in the net of fishlike eyed beautiful girls. The beautiful Lord of Thiruvarangam entered into his heart and advised Azhwaar not to go anywhere but made Azhwaar’s heart surge with love for Him. |
| 34 | Ullathey uraiyum Maalai | Lord, who resides in every heart and He who is the witness to every thought that passes in every mind |
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (எம்பெருமானை/பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் மக்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யெற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான எம்பெருமான், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.
அடுத்து, ஆழ்வார், தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.
அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று எம்பெருமானை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார்.
தன்னை பெரியபெருமாள் திருத்தியதால் தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, எம்பெருமானை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.
கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். எம்பெருமான் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.
உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் எம்பெருமானை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.
அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சொன்ன ஆழ்வாரிடம் அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்றும், அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் ஆழ்வார் தவிக்கிறார், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று “பணிவினால் மனம் அது ஒன்றி” என்ற அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.
இனி அடுத்த பாசுரம்.
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரலாகாது, ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலாவானும் அல்லன், மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பதல்லால், பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் (திருமாலை 22)
சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல, மனதினால் முழுமையாக உட்கொள்ளமுடியாத விஷயத்தை எப்படி பேசி தீர்ப்பது என்று ஆழ்வார் கேட்கும் பாடல். தைத்ரீய ஸ்ம்ஹிதை 7.5.3 ன் படி, முதலில் மனது, பிறகுதான் பேச்சு என்பது வரிசை. அதாவது மனது நினைப்பதைத்தான் வாய் பேசமுடியும். மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்துவிடமுடியாது என்பது கருத்து.
ஆழ்வார் தன் மனத்திடம், “அறிவில்லாத மனமே, வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர, குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது, அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவன் அறியமுடியாதவனாக இருப்பவன். அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை பாசுரம் எழுதி பேச முடியுமா” என்று கேட்கிறார்.
மனத்தால் நினைக்க முடியாவிட்டால், மற்ற விஷயங்களை வாய் பேசுவது போல், பகவத் விஷயத்தையும் வாயால் பேசலாமே என்றதற்கு, மற்ற விஷயங்கள் அளவிற்கு உட்பட்டவை, அதனால் வாய் பேசமுடியும், ஆனால் இதுவோ, அளவிடமுடியாதது, அதனால் வாய் பேசி முடிக்க முடியாது என்று ஆழ்வார் சொல்கிறார். விஷ்ணு தர்மத்தில் சொன்னபடி, எது விஷ்ணுவை பற்றி பேசுகிறதோ அது நாக்கு, எது விஷ்ணுவை நினைக்கிறதோ அது நெஞ்சு என்பது போல், பகவத் விஷயங்களை மட்டும் பேசி மற்ற விஷயங்களைப் பேசாமல் இருந்து விடவேண்டியது தானோ என்று ஆழ்வாரிடம் சொன்னதற்கு, ஆழ்வார், முன்பு வேதங்களுக்கும், அவற்றை சாட்சியாக கொண்டவர்களும் பேசிய பரமாத்மாவின் பெருமைகளையும் விஷயங்களையும் பேச முடியுமே தவிர, வேறு ஒன்றும் நாம் பேசமுடியாது என்கிறார். மணவாள மாமுனிகள், இதனை “முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு, பின்னோர்ந்து தாம் அதனை பேசாமல் தம் நெஞ்சில் தோன்றினதே” பேசுபவர் மூர்க்கர் என்று உபதேச ரத்னமாலை (71) என்ற நூலில் கூறுகிறார்.
வேதங்களுக்கும், அவற்றை சாட்சியாக கொண்டவர்களும் பேசிய விஷயங்களுக்கு சில உதாரணங்கள் :
கண் முதலிய உறுப்புகளுக்கு புலப்படாதவற்றை விளக்க, இந்த உலகத்தில் உள்ள, கண்களுக்கு தெரியக்கூடிய சில உதாரணங்களை கொண்டு வெளிப்படுத்து உலக வழக்கம். அதனால், விவரிக்கமுடியாத உயர்ந்த பகவத் விஷயமான திரு உருவத்திற்கு, தாழ்வான சிலவற்றை உதாரணமாக கூறியதால். எம்பெருமானை பற்றி முழுவதும் தெரிவித்து விட்டோம் என்று சொல்ல முடியாது.
தைத்ரிய உபநிஷத் – ஆனந்தவல்லி 9.1 – எவன் ஒருவனின் மனம், ப்ரம்மத்திடம் சென்று அதனை வாக்கினால் (வார்த்தைகளால்) அளவிடமுடியாது என்று திரும்புகிறதோ, அவன் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் என்றும் அவன் எதற்கும் பயப்படமாட்டான் என்றும் கூறுகிறது. இதனால் பிரம்மத்தை அறிந்தவன், அதனை பேசி முடிக்க முடியாத விஷயம் என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக வாக்கினால் சொல்லமுடையாததை கூட மனம் உணரமுடியும். ஆனால் இங்கே மனதினால் கூட அளவிடமுடியாது என்று திரும்புவதை கவனிக்க வேண்டும்.
இராமாயணத்தில், வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும், மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம். த்வமப்ரமேயஷ்ச துராஸதஷ்ச, ஜிதேந்த்ரியஷ்சோத்தமதார்மிகஷ்ச. அக்ஷய்யகீர்திஷ்ச விசக்ஷணஷ்ச, க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) – “நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர், உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள். இதில் நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.
பிரம்மத்தை அறிந்தவன், அதனை பேச முடியாத விஷயம் என்று சொல்வதை ஏன் ஏற்க வேண்டும் என்றால், ஒரு உதாரணம் சொல்லும்போது உபமானம் எப்போதும் உபமேயத்தை விட உயர்ந்ததாகவே இருக்கும். ஆனால் எம்பெருமானுக்கு உபமானமாக எதைச் சொன்னாலும் அவை தாழ்ந்தவையாகவே இருக்கின்றன. இங்கு எம்பெருமானுடைய ஸ்வரூபம், குணம், செல்வம், திவ்யமங்கள விக்கிரகம் என்று எதையும் அளவிடமுடியாது என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது மேலே சொன்ன ஸ்வரூபம் முதலிய எந்த ஒன்றினுடைய பெருமையையும் முழுவதாக சொல்ல முடியாது என்பதையே “ஒன்று” குறிப்பிடுகிறது.
அப்படி என்றால் யாராலும் அறிந்துகொள்ளவே முடியாததா என்று கேட்டு அதற்கு ஆழ்வார் சொல்வது, மற்ற உபாயங்களை விட்டு, எம்பெருமானையே உபாயமாக கொண்டவர்களால் மட்டுமே அறியப்படுபவன், மற்றவர்களால் அறியமுடியாது என்பதே ஆகும். இதையே கீதையில் (7.3), கிருஷ்ணன், “பல்லாயிரமானவர்களில் ஒருவரே என்னை உள்ளபடி புரிந்து கொள்கிறார் என்று சொல்கிறார்.
இந்த வரியில் உள்ள “ஆசு” என்ற சொல்லும், அடுத்த வரியில் வரும் “மாசு” என்பதும் குற்றம் என்ற ஒரே அர்த்தத்தை சொன்னாலும், ஆழ்வார் இரண்டு விதமான குற்றங்களை சொல்கிறார். மேலே சொன்ன எம்பெருமான் தவிர, மற்ற உபாயங்களை (கர்ம, பக்தி, ஞானம்), கொண்டு தங்களுடைய முயற்சியால் அவனை அடைய நினைப்பவர்களின் மனதில் உள்ள அகங்காரத்தை ஆசு என்று குறிப்பிடுகிறார். அப்படி அவனை அடைந்தபின், அவனிடம் அவனை கேட்காமல் மற்றவற்றை கேட்பதை மற்றொரு குற்றமான மாசு என்கிறார்.
மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.
இதில் நாம் அடையவேண்டியது பரமனையே; ஐஸ்வர்யமும் கைவல்யமும் நாம் அடையவேண்டியவே என்று ஜீவாத்மா நினைத்தால் அது மனதின் இன்னொரு குற்றம் ஆகும். இதே ஆழ்வார் மாசு என்று இந்த பாசுரத்தில் கூறுகிறார். அவனை உபாயமாக கொண்டு, அவனிடம் கைவல்யம், மற்றும் ஐஸ்வரியம் வேண்டாம் என்று நிராகரித்து, அவனையே வேண்டுபவர்களை ஆழ்வார் மாசு அற்றார் என்று இங்கு கூறுகிறார்.
இப்படி உபாயங்களையும், மற்ற அடையத்தக்கவைகளையும் விலக்கி, இந்த சம்சார வாழ்க்கையை விட்டு, பரமபதத்தில் எப்பொழுதும் எம்பெருமானையே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு, எல்லா பொறுப்புகளையும் அவனிடத்தில் விட்டு, அதாவது மாசு அற்றவர் ஆகவும், ஆசு அற்றவர் ஆகவும் உள்ள அடியவர்களின் இதய கமலத்தில், என்றும் வாழ்பவன் என்பதை மனத்து உள்ளானை என்று ஆழ்வார் கூறுகிறார். எப்படி காட்டு தீயை எந்த ஜீவராசியும் தாங்கிக் கொள்ள முடியாதோ, எப்படி மீன் முதலிய ஜீவராசிகள் தண்ணீரை விட்டு வெளிய வந்தால் தாங்கிக்கொள்ள முடியாதோ அது போல் எம்பெருமானாலும் மாசு, ஆசு உள்ள நெஞ்சகளில் இருப்பது என்பது தரிக்க முடியாதது என்றும் ஆழ்வார் கூறுவது போல் ஆயிற்று.
ஆசு, மாசு அற்றவர்களை கண்டுகொண்டு அவர்களின் நெஞ்சத்தில் நித்யவாஸம் செய்ய வேண்டியே, எம்பெருமான் திவ்யதேசங்களில் கண்வளர்ந்து அருளுகிறார்.
ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு சிறப்பு இருப்பது என்பதும் திருமழிசைஆழ்வார் எம்பெருமானின் ஐந்து நிலைகளில் ஒன்றான, அந்தர்யாமியில் மிகவும் ஆழ்ந்து இருப்பார் என்பதும் நாம் முன் பார்த்து உள்ளோம். அவருடைய திருச்சந்தவிருத்த பாடல்கள் 64 மற்றும் 65, உரையாசிரியரின் உரையில் மனத்து உள்ளானை என்பதற்கு இடம் பெற்று உள்ளன.
மனத்து உள்ளானை என்பதற்கு மேலும் ஒரு சில பாசுரங்களை இங்கே காணலாம்.
அவன் அடியார்களின் நெஞ்சத்தைவிட்டு அகலாதவனான பின், நாம் செய்ய வேண்டியது அவனை அனுபவிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார். இங்கு வணங்கி என்று சொல்வது, மனம், உடல், மொழி ஆகிய முக்கரணங்களாலும், எல்லா காலங்களிலும், எல்லா தேசங்களிலும், எல்லாவிதமான பகவத் அனுபவங்களையும் உள்ளடக்கியது.
அவனுடைய பெருமைகளை நினைத்து பார்க்கையில், அவற்றை பாசுரமிட்டு பேச முடியுமோ என்று கேட்டுக்கொண்டு, முடியாது என்று அர்த்தத்தில் ஆழ்வார் முடிக்கிறார்.
பல காலங்களாக தாழ்ந்த விஷயங்களையே பேசி வந்த நெஞ்சே, இவ்வளவு பெருமைகள் பெற்ற விஷயத்தை பேசி விடலாம் என்று உன்னுடைய அறிவின்மையாலே நினைக்கிறாயோ, அளவிட்டு விடலாம் என்று பேச ஆசைப்படும் நீ சொல்வாயாக என்று ஆழ்வார் தன் நெஞ்சத்திடம் கேட்பதுடன் இந்த பாசுரம் நிறைவடைகிறது.
மீண்டும் சந்திப்போம், நன்றி.
| ஸ்வாமி நம்மாழ்வார் – திருவாய்மொழி | |
| (10.8.2) | பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து, பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் , |
| (10.8.6) | திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் |
| (10-8-9) | “இன்று என்னை பொருளாக்கி, தன்னை என்னுள் வைத்தான் ” |
| (1.7.6) | “என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ ” |
| (1.8.5) | “வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான், பொய் கலவாது, என் – மெய்கலந்தானே” |
| (1.9.5) | “ஈசன் மாயன் என் நெஞ்சில் உளானே” |
| (2.6.7) | “உகந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி” |
| (2.9.4) | என் மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி“ |
| (2.9.8) | “எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில்” |
| (5.5.9) | “கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே” |
| (8.4.7) | திருச்செங்குன்றூர் எம்பெருமான் “என்றும் என் சிந்தை உளான்” |
| (8.6.2) | “திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான் கண்டீர்” |
| (8.6.4) | “நேயத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்“ |
| (8.6.8) | “என் நெஞ்சும் திருக்கடித்தான நகரும், தனதாயப் பதியே” |
| (10.4.4) | “என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே” |
| 8.7 (எல்லா பாடல்களிலும் வருவது ஒரு சிறப்பு) | ‘இருந்தும் வியந்து” என்ற பதிகத்தில், (8.7) – (எல்லா பாசுரங்களிலும் இது பற்றி வருவது ஒரு சிறப்பு) முதல் பாடலில், “பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து” என்றும், இரண்டாம் பாடலில், ‘எனது ஏழை நெஞ்சு ஆளும்: என்றும், மூன்றாம் பாடலில் ‘அவன் என் உள் இருள் தான் அற வீற்று இருந்தான்‘ என்றும், நான்காம் பாடலில் “எனது அம்மான், தூய சுடர்ச்சோதி தனது என்னுள் வைத்தான்,’ என்றும் ஐந்தாம் பாடலில் “என்னுள் திகழும் மணி குன்றம்” என்றும், ஏழாம் பாடலில் ‘செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்திருந்த‘, எட்டாம் பாடலில் ” சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும்,தம் நெறியா வயிற்றிற் கொண்டு நின்று ஒழிந்தாரே‘ என்றும் ஒன்பதாம் பாடலில் “வயிற்றிற்கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே” என்றும் பத்தாம் பாடலில் “வைத்தேன் மதியால் என் உள்ளத்து அகத்தே‘ என்றும் கூறுகிறார். மற்ற எல்லா பாசுரங்களில் நேரடியாக சொன்ன ஆழ்வார், ஆறாவது பாசுரத்தில், கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல், திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே (8.7.6) என்று சொல்வது, எம்பெருமானுடைய இயற்கையான அழகை கூறுவன அல்ல, தம்மோடு சேர்ந்த பின், அதாவது, எம்பெருமான் நம்மாழ்வாருடன் கலந்த பின், அவனுடைய திவ்ய அவயங்களில் பிறந்த புது அழகாகும். ஆக ஆறாவது பாசுரத்தில் நெஞ்சுள் புகுந்த பெருமானின் பெருமையை ஆழ்வார் கூறுகிறார் |
| ஸ்வாமி நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி | |
| 22 | “மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே“, |
| 35 | “நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், ஒன்றுமோ ஆற்றான் என் நெஞ்சு அகலான்,, |
| 75 | “நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய்” |
| பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி | |
| 99 | வெள்ளத்திலுள்ளானும் வேங்கடத்து மேயானும்உள்ளத்திலுள்ளான் என்றோர்’ |
| பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி | |
| 54 | வெற்பு என்று திருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும், நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல், நிற்பு என்று இளங்கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன், வெள்ளத் திளங்கோயில் கைவிடேல் என்று. |
| 95 | என் நெஞ்சம் மேயான் என் சென்னியான், …….. உலகேத்தும் ஆழியான் அத்தியூரான். |
| பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி | |
| 26 | “சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும், – உறைந்ததுவும்” |
| 81 | நெஞ்சால் நினைப்பு அரியன் எலும் நிலைபெற்றேன், நெஞ்சமே பேசாய், நினைக்குங்கால், நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ, ஓராது நிற்பது உணர்வு. |
| 82 | உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பு அரியன் உண்மை, |
| 83 | விண்கடந்த பைங்கழலான், உள்ளத்தின் உள்ளே யுளன் |
| 84 | உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வர் ஏலும், உளனாய வண் தாமரை நெடுங்கண் மாயவனை யாவரே, கண்டார் உகப்பர் கவி. |
| திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம் | |
| 65 | நிற்பதும் ஓர் வெற்பு அகத்து, இருப்பும் விண், கிடப்பதும் நற்பெருந்திரைக் கடலுள், நானிலாத முன்னெலாம், அற்புதன் அனந்த சயன ஆதி பூதன் மாதவன், நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே |
| 64 | நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம், அன்று நான் பிறந்திலேன், பிறந்த பின் மறந்திலேன், நின்றதும், இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே. |
| திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி | |
| 30 | “அவன் என்னது உள்ளத்து நின்றான் இருந்தான் “ |
| 86 | உளன் கண்டாய் நன் நெஞ்சே. உத்தமன் என்றும் உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து, உளன்கண்டாய் தன் ஓப்பான் தானா உளன் காண் தமியேற்கும், என்னொப்பார்க்கு ஈசன் இமை” |
| பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி | |
| 2.3.2 | நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா, |
| 5.2.5 | “மாணிக் குறள் உருவாய மாயனை என் மனத்துள்ளே, பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண்டேன்பிறிதின்றி” |
| 5.2.10 | அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து |
| 5.4.8 | “அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்‘ |
| 5.4.9 | பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ |
| 5.4.10 | வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே |
| 5.4.11 | வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே, கோயில்கொண்ட கோவலனைக் |
| ஆண்டாள் – திருப்பாவை | |
| 5 | வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் (5) – மற்ற ஆழ்வார்கள் தங்கள் மனதில் உள்ள பரமாத்மாவை கூறினார்கள். ஆண்டாள், முனிவர்கள் யோகிகள் உள்ளத்தில் உள்ள பரமாத்மாவை குறிப்பிடும் சிறப்பினை இங்கு காணாலாம். |
| திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் | |
| 5 | “என்னை தன் வாரமாக்கி வைத்தான், என்னுள் புகுந்தான்” |
| 9 | “முடிவு இல்லது ஓர் எழில் நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே” |
| திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி | |
| 1.1.3 | திருமங்கையாழ்வார் தன்னுடைய முதல் ப்ரபந்தத்தின் முதல் பத்தின் முதல் பதிகத்திலேயே மூன்றாவது பாசுரத்தில், எம்பெருமான் தன் பக்தர்களின் மனதினில் இருப்பார் என்பதை, “தம் அடைந்தார் மனத்திருப்பார், நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்கிறார் |
| 1.10.6 | அதே முதல் பிரபந்தத்தில் முதல் பத்தின் இறுதியில் பத்தாவது பதிகத்தில் ஆறாவது பாசுரத்தில், “மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய, என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே!” என்று மீண்டும் உறுதிசெய்கிறார். |
| 1.10.7 | திருவேங்கடமாமலைமேய, கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே |
| 11.5.10 | வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே |
| தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை | |
| 16 | “மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை, போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து” |
| 34 | உள்ளத்தே உறையும் மாலை |
இந்த பதிவினை தமிழில் படிக்க, இங்கே சொடுக்கவும், நன்றி
As the saying goes ”Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Emperumaanai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching his experiences with Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, when he mentioned “silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, by ‘katrinam meytha kazhalinai panimin‘; and finally to Aranganathan, by ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. Azhwaar continued his preaching by mentioning the glories of Thiruvarangam.
In spite of above, people did not follow Azhwaar’s preaching, he decided to leave them and started to sing about the great help graced by Periyaperumal to him in the next ten hymns (15-24). We discussed the first of these hymns, the fifteenth paasuram, ‘Meyyerke Meyyanaagum‘ where Azhwaar sang that Emperumaan does all the things for those who show truthful devotion to him; He also protects those who do things related to devotion which are not wholly truthful, but could be classified as truthful; He lets down those who are not even doing such false devotion as mentioned above. Azhwaar concluded that hymn that Emperumaan uses His beauty to clarify all the doubts. In the next hymn, “soodhanaai kalvanaai“, Azhwaar mentioned that he himself was a thief and a fraud, who got entangled with the beauty of the eyes of the other women and fell in deep pits. Azhwaar asserted that Periyaperumal used His beauty to correct him and diverted all his love and affection towards Him.
In the next hymn, “Virumbi ninru“, Azhwaar sang that previously he did not use his hands to pray, mouth to say prayers or heart to devote himself to Emperumaan. Emperumaan used His tender and sweet beauty to melt the hardened heart of Azhwaar and Azhwaar was so happy that his eyes were filled with tears. Initially, Azhwaar was happy about the opportunity of having the dharsan of Thiruvarangan, who is all alone, without any peer and ruling the entire kingdom but that happiness caused continuous tears from his eyes. With tears, he could not enjoy the dharsan continuously. So Azhwaar was worried and frustrated at himself in not making use of the opportunity, hence called himself a sinner in the eighteenth hymn, “ini thirai thivalai“.
In the nineteenth hymn, “Kuda thisai mudiyai vaithu“ Azhwaar sang that Emperumaan created the four directions and kept the holy parts of His form (thirumeni) in each direction, so that we can get abode by having dharsan of those holy form. Azhwaar continued that his mind and body started to melt after the splendid dharsan of Periyaperumal and wondered how others were not affected; if they were taking any potion to sustain such a strong state, Azhwaar asked them to give him a small portion of that medicine.
For that, people asked Azhwaar to come out of the devotion to Emperumaan. People who know the glories of Emperumaan, would understand that Emperumaan is in Thiruvarangam only for themselves. But people who are selfish and proud of themselves would move away from Periyaperumal and Azhwaar said that he would be one among them. This is what he conveyed in the twentieth hymn, Paayuram Neer Arangam Thannul.
Now let us go into the next hymn.
Panivinaal manam adhu onri, pavala vaai Aranganaarku, thunivinaal vaazha maataa, thollai nenje nee sollaai, aniyinaar semponaayaa aruvarai anaiya koyil, maniyanaar kidandhavaatrai, manathinaal ninaikalaame (Thirumaalai 21)
In the last hymn, Azhwaar said that he could not move away, after having the dharsan of Arangan. Two things happened. One is that his heart told Azhwaar that he should create a boundary and and set a limit to himself for the enjoyment of the beauty of Arangan. Secondly, the people who heard Azhwaar’s words, “karumbinai kandu kondu” (17), “aravanai thuyiluma kandu” (19), concluded that Azhwaar was distressed and did not know what to do (en seygen (18) and (19)), because he looked at Arangan with his eyes. They suggested that Azhwaar could sit in a corner and meditate about Arangan, through his heart, rather than looking through his eyes. Both these made Azhwaar to come to a conclusion that limiting the dharsan of Arangan was like the experience that he missed for a long time in the past, because of not having the courage; here Azhwaar referred, the complete trust (maha visvaasam) as courage.
Azhwaar in this hymn, was questioning his heart, how it would be possible to limit the enjoyment of Arangan who with coral like lips, reclining like a blue gemstone, in the temple that was like mountain Meru, made out of reddish gold. Azhwaar told his heart that it missed the opportunity to have the knowledge on Paramathma for a long time, because it did not have the humility, focus and courage. Azhwaar’s conclusion was that the experience of limiting the enjoyment of Arangan would end up like the knowledge that was missed in the past.
Azhwaar mentioning that his heart should commit and have the courage to worship Thiruvarangan (Periyaperumal) and move away from all other worldly matters, and the start of that commitment was stressed here by Azhwaar. Azhwar said ‘adhu‘ in “manam adhu onri” instead of “manam onri”, to refer to the thinking, the function of mind, rather than the mind itself. In Thiruvaaimozhi (4.3.1), Swami Nammazhwaar meant similar thing, when he used the word “nenjame” to refer the mind rather than the heart, in the phrase “poosum saandhu en nenjame“.
Nammazhwaar stressed the importance of that thought process, as “Thozha karudhuvadhe thunivadhu soodhe” in Thiruvaaimozhi (2.10.9) as the determination in our mind to reach Thirumaliruncholai as the first thing, to offer our prayers and getting abode successfully.
If we submit ourselves to anyone other than Paramaathmaa, there is no assurance that they would show any mercy. Even if they show mercy, we do not know whether it would result in any benefit. But if we show our humbleness to Periyaperumal, the amount of kindness and compassion shown by Him is boundless. To get such kindness, anjali to Emperumaan is enough, as seen from what is said below.
Azhwaar states that if Emperumaan finds someone who has started this involvement, His coral like reddish holy lips, utters consoling words so that the person would not feel that he lost this opportunity for such a long time. Emperumaan does not want to be too far away and wants to be nearer to the person who started this involvement and started thinking about Emperumaan and hence He is in Srirangam.
According to Azhwar, what is said earlier as humility and what is being said now as courage, are not initiated by the Jeevathmaas. Only Arangan’s beauty has initiated such courage and humility through which the Jeevathmas experience an excellent life.
According to Azhwaar, as we did not have the courage, we did not try the experience. So Azhwaar was asking for such courage in this hymn. Lord Krishna in Shanthi Parvam, Mahabharatham (334.47), said that those who were not sure in their mind would never reach Paramathmaa. In Ramayanam, Janaka Maharaja, father of Sita, was very clear than his achaaryar Veda Vyasa, that determination or courage was the only unfailing method to reach Paramapadham.
For our better understanding, we can take the words like courage and determination, that are mentioned here are equivalent to undaunted loyalty to Him. (Maha Visvassam)
Azhwaar was mentioning to his heart that, since there was no determination or maha visvasam it missed all these wonderful experiences with Emperumaan in the past.
Here Azhwaar was again mentioning to his heart which had mindlessly lost the experience of enjoying Emperumaan, that it was stupid if his mind to think that it could measure the experience of Emperuman so that it could completely finish that experience at some time. (and such an act would be equivalent to the losses he had suffered due to the missing His experiences in the past.)
Azhwaar stated that the huge Thiruvarangam temple was very beautiful that looked like the Mountain Meru made up of red hued gold. So this temple was like an ornament to this world and hence called it Aniyinaar. Similarly as a mountain is stable and a strong base to the whole world, so is Thiruvarangam temple. Hence Azhwaar suitably mentioned ‘aruvarai anaiya’.
Periyaperumal, in the reclining posture in the centre of Srirangam temple, is like a precious blue gemstone pressed on such a Meru Mountain according to Azhwaar.
Azhwaar is asking his heart, whether it would be possible to limit the experience of enjoyment of the beauty of Periyaperumal. He further told his heart that it might be possible to measure the experience of his glories and His playful activities too. But, to Azhwaar, it is impossible to measure or limit the experience of His beauty. The function of the mind or heart is to think and the thinking can not be carried out by any other part of our body. In the same way it is impossible for the mind or heart to measure or limit the experience of His beauty.
Let us catch up again on the next hymn. Thanks
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (எம்பெருமானை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து மக்கள், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.
அப்படியும் மக்கள் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான எம்பெருமான், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.
அடுத்து, தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.
அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று எம்பெருமானை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார்.
தன்னை பெரியபெருமாள் திருத்தியதால் தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.
கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். பெருமாள் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.
உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.
இனி அடுத்த பாசுரம்.
பணிவினால் மனம் அது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்கு, துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய், அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில், மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே (திருமாலை 21)
அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வாரிடம் அவரது நெஞ்சம், அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்று சொன்னதும், “கரும்பினைக் கண்டுகொண்டு” (17) என்றும், “அரவணைத் துயிலுமா கண்டு” (19) என்றும் சொன்ன ஆழ்வாருக்கு, அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் “என்செய்கேன்!(18)என் செய்கேன்!!(19)” என்று ஆழ்வார் தவிக்கிறார் என்றும், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது, இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.
வெகு காலமாக பகவான் பற்றிய ஞானத்தை இழந்து, துணிவுடன் வாழ மாட்டாத நெஞ்சே, பவளம் போன்ற திரு அதரங்களை உடைய திருஅரங்கன் விஷயத்தில், பணிவாக இருந்து, மனதை அந்த விஷயத்தில் பொருத்தி, முழுமையான அழகுடன், சிவந்த பொன்னால் செய்யப்பட்ட, சிறந்த மேரு மலையை போன்ற, கோயிலிலே, நீல ரத்னம் போன்ற எம்பெருமான், கண் வளர்ந்து அருளுகிற அழகை நெஞ்சினால் நினைக்க முடியுமோ என்று நீயே சொல் என்று தன நெஞ்சத்தைப் பார்த்து கேட்கிறார். இங்கு துணிவு என்று சொல்லப்படுவது எம்பெருமானிடத்தில் “மஹா விஸ்வாசம் “ கொள்ளுதல் ஆகும்.
பெரியபெருமாளைப் பணிவோம் என்று உறுதி பூண்டு, மற்ற விஷயங்களில் இருந்து விலகி, இவ்விஷயத்தில் ஊன்றி ஈடுபடுவது என்ற கருத்து. இந்த உறுதியின் தொடக்கமே இங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. மனம் ஒன்றி என்று சொல்லாமல், மனம் அது ஒன்றி என்று சொல்வது, மனதைச் சொல்லாமல், மனதின் செயல்பாடான சிந்தனையைச் சொல்வது. நம்மாழ்வார் திருவாய்மொழியில் (4.3.1) “பூசும் சாந்து என் நெஞ்சமே” என்று சொல்லும் போதும், நெஞ்சத்தின் செயல்பாடான சிந்தனையை சொல்வதே ஆகும்.
திருவாய்மொழி (2.10.9) “தொழ கருதுவதே துணிவது சூதே” என்ற பாசுரத்திலும் சொல்லும் விஷயம் அதுவே. திருமாலிருஞ்சோலையை அடைந்து தொழ வேண்டும் என்ற சிந்தனையை எப்போதும் மனதில் நிறுத்துவதே இந்த உலக வாழ்க்கையை வெல்வதற்கு வழி என்று நம்மாழ்வார் சொல்வதை நினைவில் கொள்வோம்.
எம்பெருமானை தவிர, மற்றவர்களிடம், முழுவதுமாக பணிந்து இருந்தாலும் அவர்கள் மனம் இரங்குவார்களா என்பது நிச்சயம் இல்லை. மனம் இரங்கினாலும் அதனால் நல்ல பலன் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் எம்பெருமானிடம் பிறக்கும் கருணையும் இரக்கமும் சொல்லி அளவிடமுடியாது.
இப்படி ஈடுபாட்டின் தொடக்கத்தை உடைய ஒருவன் கிடைத்து விட்டால், அவன் இத்தனை காலமாக இழந்த இழப்பை நினைத்து வருந்தாமல் இருக்க ஆறுதல் கூறும், பவளத் திருவாய் உடையவர், திருவரங்கன் என்று ஆழ்வார் சொல்கிறார். ஈடுபாடு ஏற்பட்டு, அவன் நம்மை நினைக்கும் போது ரொம்ப தொலைவில் இருக்க கூடாது என்று திருவரங்கத்தில், அருகிலேயே இருப்பவர்.
முன்பு சொன்ன பணிவும், இப்போது சொல்லப்படும் துணிவும் கூட ஜீவாத்மாவால் ஆரம்பிக்க பட்டது இல்லை, அரங்கனின் அழகே பணிவையும், துணிவையும் உண்டாக்கி, அனுபவம் என்ற உன்னத வாழ்க்கையும் அடையச் செய்கிறது என்பது அர்த்தம்.
துணிவு இல்லாததால் அனுபவத்திற்கு முயற்சி செய்தது இல்லை; அதற்கான துணிவுதனை இப்போது வேண்டுவது ஆழ்வாரின் வார்த்தைகள். மஹாபாரதம் சாந்தி பர்வத்தில், (334.47), கிருஷ்ணர், மனதில் நிச்சயம் இல்லாதவன் பரமாத்மாவை அடைய மாட்டான் என்று கூறுகிறார். ஜனகன், பரமபதம் அடைவதற்கான வழிக்கு துணிவு ஒன்றே பழுதுபடாத சாதனம் என்பதில், தன்னுடைய ஆச்சார்யரான வேதவ்யாஸரை விட, தெளிவாக இருந்தான்.
இப்படி எல்லா இடத்திலும் துணிவு என்று சொல்லப்படுவது எம்பெருமானிடத்தில் “மஹா விஸ்வாசம் “ கொள்ளுதலே ஆகும்.
இந்த துணிவு இல்லாததால் இத்தனை காலமாக எம்பெருமானின் அனுபவத்தை இழந்து விட்டதாக தன் நெஞ்சத்திடம் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்.
இப்படி அனுபவிக்காமல், இத்தனை காலம் அறிவுகெட்டு கிடந்த நெஞ்சைப்பார்த்து, இந்த அனுபவத்தை அளவிடமுடியும் என்று நெஞ்சு சொல்வதும் அறிவுஇல்லாத கூற்றே என்று ஆழ்வார் சொல்கிறார்.
அழகு மிகுந்து இருப்பதும், செம் பொன்னில் செய்யப்பட்டதும் மேரு மலையை ஒத்து இருப்பதாகவும் உள்ள திருவரங்கம் பெரிய கோவில், இந்த பூமண்டலத்திற்கு ஆபரணம் போல் விளங்குவதால் ‘அணியினார் ‘ என்பது மிக பொருத்தம். அதேபோல், மலை போல் நிலையாய் உலகுக்கு எல்லாம் ஆதாரமாய் இருப்பதால், திருவரங்கம் பெரிய கோவிலை ‘அருவரை அனைய ‘ என்று சொல்வதும் பொருத்தமே.
அப்படி மேரு மலையை ஒத்து இருக்கும் மலையின் நடுவில் ஒரு உயர்ந்த நீல ரத்தினத்தை வைத்து அழுத்தியத்தைப் போல் பெரியபெருமாள், ஸ்ரீரங்கவிமானத்தின் நடுவே பள்ளிகொண்டு இருப்பது என்கிறார் ஆழ்வார்.
இப்படி கண்வளர்ந்து அருளுகின்ற பெரியபெருமாளின் அழகை அளவிட்டு அனுபவிக்க முடியுமோ என்று தன் நெஞ்சிடம் ஆழ்வார் கேட்கிறார். அவருடைய கல்யாண குண நலன்களையும், திருவிளையாடல்களையும் அளவிட்டு விடலாம், ஆனால், திருமேனியின் அழகை அளவிட்டுவிட முடியாது என்று ஆழ்வார் சொல்கிறார். மனதின் செயல்பாடு, நினைப்பது; வேறு ஒரு அவயம் எப்படி நினைக்க முடியாதோ அதேபோல், மனத்தினாலும் திருமேனியின் அழகை அளவிட்டுவிடமுடியாது என்பது கருத்து.
மீண்டும் அடுத்த பாசுரத்தில் சந்திக்கலாம். நன்றி.
இந்த பதிப்பினை தமிழில் படிக்க, இங்கே சொடுக்கவும், நன்றி.
As the saying goes ” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Emperumaanai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, when he mentioned “silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them follow Sri Krishna, who is simple and easy to approach, by ‘katrinam meytha kazhalinai panimin‘; and finally to Aranganathan, by ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. Azhwaar continued his preaching by mentioning the glories of Thiruvarangam in the next three hymns.
As people did not follow Azhwaar’s preaching, he decided to leave them and started to sing about the great help graced by Periyaperumal to him in the next ten hymns. We discussed the first of these hymns, in the fifteenth paasuram, ‘Meyyarke Meyyanaagum‘, where Azhwaar stated that Emperumaan does everything for those who show truthful devotion to him; He also protects those who do things related to devotion which are not really truthful, but could be named truthful; He lets down those who are not even showing such false devotion as mentioned above. Azhwaar concluded that Perumal uses His beauty to clarify all the doubts.
In the next hymn, “soodhanaai kalvanaai“, Azhwaar mentioned that he himself was a thief and a fraud, who got entangled with the beauty of the eyes of the other women and fell in deep pits. Azhwaar confirmed that Periyaperumal used His beauty to correct him and diverted all his love and affection towards Him.
In the next hymn, “Virumbi ninru“, Azhwaar sang that previously he did not use his hands to pray, mouth to say the prayers or heart to devote himself to Emperumaan. Em[erumaan used His soft and sweet beauty to mend the iron like heart of Azhwaar and Azhwaar was very happy that his eyes were filled with happiness. Initially, Azhwaar was happy about the opportunity he got to have the dharsan of Thiruvarangan, Who is all alone and without any peer, ruling the entire kingdom and that happiness caused him to melt and continuous tears from his eyes started to pour. With tears, he could not enjoy the dharsan continuously. So Azhwaar was worried and frustrated at himself in not making use of the opportunity offered to him and hence he called himself as a sinner in the eighteenth hymn, “ini thirai thivalai“.
As Azhwaar felt that his body also started to melt after having the splendid dharsan of Periyaperumal, he wondered how others were unaffected; Azhwaar asked them to give a small portion of the medicine, if they were taking any medicine to sustain such a strong state. In this nineteenth hymn, “Kuda thisai mudiyai vaithu“, Azhwaar sang that Emperumaan created the four directions and kept the holy parts of His form (thirumeni) in each direction, so that we can get abode by having dharsan of those holy form. .
Now let us go into the next hymn.
Payum neer Arangam thannul paambanai palli konda, Maayanaar Thirunanmaarvum, maragadha uruvum thollum, thooya thaamarai kanngallum, thuvaridhazh Pavala vaayum, aayaseer mudiyum, thesum, adiyarorku agalalaame. (Thirumaalai 20)
In the last hymn, Azhwaar asked for the medicine that kept others from not getting melted unlike Azhwaar. Others responded that Azhwaar should not get involved in Bhagawath matters and come out of it like themselves. Azhwaar said that people who have the knowledge that Periyaperumal in Srirangam is only for those people, like azhwaar himself, who would not come out of Bhagawath activities; and only people who were proud and selfish could ignore bhagawath activities and would move out of Periyaperumal and Azhwaar would not be like them. This is the summary of twentieth hymn.
In this hymn, Azhwaar is trying to describe the beauty of Periyaperumal. Srirangam is surrounded by the river Cauvery and Arangan, who does amazing things, takes a reclining position on the five-headed snake, Anathazhwaan. In this hymn, Azhwaar explains the beauty of Lord Aranganathan, individually and collectively as His chest adorned always ever by Sridevi Naachiyar, His glistening form in the colour of emerald ; His shoulders; His eyes, compared to pure lotus flowers; reddish lips; superior locks of hair; and overall brightness of His form. Azhwaar concludes this hymn, that all these beauties are all for the devotees and would they miss such a divine dharsan.
From this hymn, we can understand the beauty of Periyaperumal and also the Azhwaar’s attachment on His form.
The first version is, that Srirangam is a place, that is conducive to water flowing in naturally, unlike in a dam where we need to pump/store in the water . This also represents all other materials which are as clear as water, that purify or cleanse. All such materials confluence at Thiruvarangam. The other explanation for ‘Payum Neer Arangam‘ is, that Srirangam, the temple town was the place where all the eleven Azhwaars and all Achaaryars came to. Another place where water is compared to a virtuous person is from Valmiki Ramayanam. “O Bharadhwaja, behold the beautiful and pleasant waters of this river, that is as clear and pure as the mind of a virtuous man. (Valmiki Ramayanam, Balakaantam, 1.2.5).
Azhwaar is talking about the wonders of Periyaperumal and in that context, he brings out the fact that the wonders of Periyaperumal are not only in the books, but also it is on display, through His individual and overall Beauty of His form (Thirumeni), and the splendor all around. Here the commentator is recollecting “than thaalum tholum mudigalum samanilladha pala parappi” (Thiruvaaimozhi 8.10.8) to highlight the beauty of each and every part of His Holy Body (Thirumeni) in the reclining position. Some more hymns from Azhwaars, where Periyaperumal’s reclining position is explained using “than thaalum tholum mudigalum samanilladha pala parappi” (Thiruvaaimozhi 8.10.8) is given here for your reading pleasure.
Since Emperumaan is having a form that is more delicate than a flower, He is reclining on Ananthaazhwaan the multi headed serpant, so that the milky ocean water does not abrase Him. Here the commentator is quoting Periyazhwaar’s Thirumozhi (5.1.7) as “vellai vellathin mel oru paambai methaiyaaga virithu adhan mele kalla nithirai kolkinra“, meaning that the Lord is reclining and in pretented sleep on a serpent-bed in the milky ocean.
The words “palli konda” can be combined as “paambanai palli konda” and also “pallikonda maayanaar”, as both convey beautiful meaning. The word “Maayam” is used as “wonder”. Periyaperumal even when He is in reclining posture, does wonders. An example being, when Periyaperumal wishing to witness and hear the discourse of Nampillai (one of our Achaaryars) got up and talked to Thiruvilakkupichan.
Another explanation given is that His astonishing beauty, even in reclining position. Sita happily recollected the beauty of Rama in the reclining position in Yudha Kaantam of Ramayanam (38.25). (sa mayaa bhoditah sukha suptah parantapah) When Sita Piraati was disturbed by Kakasuran, Rama, handsome and capable of tormenting His enemies on a reclining position on Sita had to be woken up. Periyaperumal now in Srirangam was worshipped by Sri Rama, when He was in Ayodhya. No wonder, why Thondaradipodi Azhwaar was very fascinated by the reclining Aranaganathan. In the same way Aandal, woke up Sri Krishna, as the thaniyan says “Neela thunga sthana giri thadi supthamuthbodhya Krishnam“.
Thondaradipodi Azhwaar continued to state that people might leave Emperumaan in standing or sitting postures; but it is not possible to leave Him, when He is in reclining posture. Namazhwaar’s Thiruvaaimozhi (5.8.1) said “Yeraar kolam thigazha kidandhaai kanden emaane” and Kulasekara Azhwaar’s Perumal Thirumozhi (7.2), said “aanaiyil kidantha kidakai kandida pertrillen“, meaning that the beauty of His reclining posture is like a an elephant sleeping.
Thondaradipodi azhwaar wondered that he was running away from Paramathmaa’s extended hands, into the worldly life and Periyaperumal brought him back and this act of Periyaperumal is making him say Periyaperumal as “the Maayanaar“( who does wonders) according to Azhwaar.
We may also recollect “aravu in anai misai meya maayanaar” by Thirupaanazhwaar in his Amalanathipiraan (7).
The Holy chest of Emperuman is unique, and special because, that it is the place where Piraati ever resides and would not want to leave. Namazhwaar’s Thiruvaaimozhi (6.10.10), ‘agalagillen iraiyum enru” glorifies the above. Our achaaryar, Parasara Bhattar in his Sri Guna Ratna Kosam (4) established that Upanishads identify and claim that Emperuman is Paramathmaa, as there are marks of sempanjukuzhambu (soft reddish paste, which ladies use to enhance their beauty, in olden days) and the garlands of Piratti on the holy chest of Emperuman.
The holy radiant chest of Emperuman, Emperuman Himself and Piratti are combined together in Namazhwaar’s Thiruvaaimozhi (10.6.9), “Thigazhginra Thiru Maarbil Thirumangai thannodum thigazhginra Thirumaalaar”, that all of them together add beauty to each other and it is impossible to explain which is adding beauty to which.
Here Periyaperumal’s glowing emerald like form is compared to the released gushing water, by the commentator and it is stated that both, give pleasure and cooling effect to the eyes that see such a treat. We also recall “pachai maa malai pol meni“, Thirumaalai 2, by same Azhwaar. The prefixes Thiru (Mahalakshmi) and Nan (good) were added to the holy chest and maragadha (glowing emerald) was added to His holy form to enhance the specilaity of His form and Chest. But Azhwaar says that there is no such need to add any prefix to His shoulders, as they are naturally beautiful and strong. Also the commentator adds that these shoulders are like a float in a flood.
The direct meaning is that His holy eyes are like a pure lotus flower. The prefix ‘thooya’, meaning ‘pure’ is added as these eyes purify those who are all blessed by Them (His eyes). His holy eyes are impartial, whether it is His Piratti (Mahalakshmi) or the asuras like Hiranyan and bless them uniformly. His vision is pure as He views all without attaching any specific reason . His desire is to bless all through His holy eyes, without any bias.
Bhagawadh Geetha (5.29) says that, Emperumaan (Paramathma) is a friend to everyone, without any difference between enemies and friends. Another reference used here is Jithanthe Sthothram (1.2), where the holy feet of Mahavishnu is quoted as the source for surrender, equally for those who are devotees of Vishnu as well as those are atheists. In other words His relationship is same for all. The commentator queried why someone like asuras get unfavourable results when His vision is same for both good and bad. The commentator confirmed that it is not because of His vision, but because of the shortcomings or dhoshams of the Asuras. This is similar to, how a cool breeze, which gives pleasure to all, makes the lotus dry up.
When Azhwaar compared the flawless lotus flower to the holy eyes of Emperuman (Periyaperumal), it is only for the coolness, aroma and superior status; the flower can never be compared to compassion and mercy flowing from Emperuman’s eyes,
Azhwaar stated that Emperumaan has reddish holy lips and whitish dental array. But later changed his mind and called the dental array is reddish like coral and it is because of the reflection of the holy lips. We can also recall that we should retain satva habits (the colour of satvam is white) within ourselves like dental array and push out rajo habits (the colour of rajo is red) like the lips. Paramathma is all alone, without the support of anything, speaking to none, in a superior most level. From such a sublime state, He comes down and speaks kind words to those who approach Him. This is another explanation for His holy reddish mouth. Similarly, many are scared to approach Him, due to their own shortcomings. He gives such devotees a pleasing smile and assures them that they do no need to be scared. This is another explanation given for the reddish holy mouth, when Azhwaar called it as pavala vaai.
The word Aaya represents that it is always beautiful and ready that informs us that His hair style is beautiful and always in readiness to reach the devotees. Aayam means gold in Tamil the last character is reduced and combined with the next word, namely, Aaya seer, meaning that His locks of hair is like made up of gold. The word Seer reflects the wealthiness.
Thesu is supposed to be Thejas, meaning brightness, brilliance or illumination. Emperuman’s total form is illuminating with brightness and brilliance from each and every part mentioned earlier. Thirunanmaarbu, Maragadha Uru, Thooya Thaamarai Kanngal, Thurvar Idhazh, Pavala Vaai, and Aaya Seer Mudi are all expressions related to the beauty of the individual parts of His Form, whereas this word “Thejas” refers to the whole form, called as ‘samudhaaya sobhai”, and the other one is called ” Avayava sobhai”.
Some might question why Maragatha Uru is not classified under samuthaaya sovai, as uruvu may refer to the whole body. The commentator explained this as only avayava sovai, as not all parts of Emperumaan are green in colour like His teeth, His inside palm.
Avayava sobhai is referred to as Soundharyam and samudhaya sobhai is referred to Lavanyam. Among the divyadesams, Nagaipattinam Soundararaja Perumal is admired for Soundharyam and Thirukurungudi Nambi is admired for Lavanyam.
Azhwaar explained the individual and total beauty of Periyaperumal. He continued that for those who have the knowledge of Paramathmaa would not be able to stop enjoying the beauty of Periyaperumal and would not leave the place. Only those who are selfish and proud about themselves (Ahankaaram and Mamakaaram) would be able to leave the place. The last word ‘aame‘ seemed to be an acceptance from those around Azhwaar and with that Azhwaar concludes this hymn. Who would not like to enjoy the beauty of Periyaperumal or Emperumaan.
Let us catch up again on the next hymn.
When Namazhwaar referred to Emperumaan reclining on a tiny banyan leaf, he said “aalam perilai annavam seyyum ammaane” (Thiruvaaimozhi 8.3.4). The commentator asked should Emperumaan lie in a small place like the leaf, wherein He could have moved to a more spacious place as “than thaalum tholum mudigalum samaniladha pala parappi“.
Namazhwaar in Thiruvaaimozhi (4.1.6) advised people who desired to have a sustained superior life, to reach out to Emperumaan, reclining on the milky ocean (Thirupaarkadal), “nirkuril aazhndhaar kadal palli annal adiyavar aamin“. Here the commentator uses “than thaalum tholum mudigalum samanilladha pala parappi” to explain his reclining state on Thiruparkadal.
In Thiruvaaimozhi (3.10.2), Namazhwaar said “kuraivil thadankadal kol aravu yeri than kolachenthaamaraikan, uraibavan pol oru yogu punarntha oli mani vannan kannan”. The commentator uses ‘than thaalum tholum mudigalum samanilladha pala parappi” to explain that Emperuman is on Thiruvananthazhwaan in Thirupaarkadal with ample space, without any restriction.
Thirumazhisaiazhwaar in the 3rd hymn of Naanmugan Thiruvandhaadhi, sang, “Paalil kidandhadhuvum, Pandaragam meyadhuvum, aalil thuyindradhuvum, aararivaar “, meaning that He is in reclining state in Thirupaarkadal, is in Thiruvarangam and is on the banyan leaf and graces from all these places. Here also, the commentator uses than thaalum tholum mudigalum samanilladha pala parappi” to highlight that Emperuman capable of having enough space in each of the above settings.
Poigai Azhwaar in his second hymn of Mudhal Thiruvandhaadhi, sang “anru udaithu adaithu kann padutha aazhi” to express all the glorious and astonishing activities of Emperuman like building the Sethu across the ocean as Rama, wrecking the same when returning and reclining on the same ocean. Here the commentator uses than thaalum tholum mudigalum samanilladha pala parappi to indicate that His snake bed is spacious. Also Periyazhwaar’s “vella vellathin mel oru paambai methaiyaaga virithu adhan mel kalla nithirai kolkinra” (Periyazhwaar Thirumozhi 5.1.7) is quoted here.
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.
அப்படியும் நாம் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார். அடுத்து, தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.
அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று பெருமாளை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாள் தன் அழகை கொண்டு திருத்தினார் என்றும், தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார். அதனால் வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக ரசிக்கமுடியவில்லையே என்றும், ஐயோ! இக்கண்ணீர் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது தரிசிக்க முடியாமல் செய்கின்றதே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே வெறுத்துக் கொண்டது அடுத்த பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” என்ற பதினெட்டாவது பாசுரம் ஆகும்.
பெருமாள் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்ததை ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற பதினொன்பதாம் பாசுரத்தில் சொன்னார். பெருமாளின் தரிசனத்தால், அவரது உடலும் உள்ளமும் உருகுவதைக் கண்டு, அவருடன் வந்த நம் போன்றவரைகளுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு ஆழ்வார் கேட்கிறார்.
இனி அடுத்த பாசுரம்.
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட, மாயனார் திருநன் மார்வும் மரகத உருவும் தோளும், தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும், ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே. (திருமாலை 20)
சென்ற பாசுரத்தில், ஆழ்வார், தான் பெரியபெருமாளை தரிசித்தவுடன் தனக்கு உள்ளத்துடன் சேர்ந்து உடலும் உருகுகிறதே, ஆனால் அப்படி உருகாத சம்சாரிகளைப் பார்த்து தனக்கு அவர்கள் உபயோகிக்கும் மருந்தினை கொடுக்குமாறு கேட்டார். அதற்கு சம்சாரிகள், தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு ஆழ்வாரைச் சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று ஆழ்வார் பதில் உரைக்கும் பாசுரம் ஆகும்.
இந்த பாசுரத்தில் பெரியபெருமாளின் அழகினை ஆழ்வார் விவரிக்க முயற்சிக்கிறார். காவேரியால் சூழப்பட்ட திருவரங்கத்திலே திருஅனந்தாழ்வானாகிய படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்யமான செயல்களை உடைய எம்பெருமானுடைய, பிராட்டி வாழ்கின்ற மிக சிறந்த திருமார்பும், மரகதமணி போன்ற திருமேனி நிறமும், திருத்தோள்களும், பரிசுத்தமான தாமரை மலரைப் போன்ற திருக்கண்களும், சிவந்த திருஅதரங்களும், பவளம் போன்ற திருவாயும், வெகுகாலமாக மேன்மையுடைய திருமுடியும், இவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே ஆகும். இவற்றை அடியவர்கள் இழக்கலாமோ என்று ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
இந்த பாசுரத்தினால் எம்பெருமானின் வடிவழகும் அதில் ஆழ்வாருக்கு இருக்கும் ஈடுபாடும் நன்றாக தெரியவரும்.
அணைகட்டி நீர் ஏற்றும்படி இல்லாமல், பாய்கின்ற நீருக்கு ஏற்ற பள்ளமாக இருக்கும் திருவரங்கம் என்பது ஒரு பொருள். நீரைப்போல், சுத்தப்படுத்துவதும் தெளிவாகவுள்ளதும் ஆன மற்ற பொருள்களையும் குறிக்கும். அத்தகைய பொருள்கள் வந்து சேரும் இடம் திருவரங்கம் ஆகும் என்பது இன்னொரு பொருள். ஆழ்வார்கள் பதின்மரும் ஆச்சார்யர்கள் அனைவரும் வந்து சேர்ந்த இடம் அன்றோ இந்த பெரியகோயில். வால்மீகி ராமாயண ஸ்லோகம் (1.2.5) இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. “பரத்வாஜனே, சேறு அற்றதாகவும், அழகியதாகவும், நல்லவர்களின் மனதைப்போல் தெளிந்த நீரை உடையதாகவும் விளங்கும் இந்த நீரினை காண்பாயாக” என்று சொல்லும் போது, இங்கு சொல்வதைப் போலவே, நீர், நல்லவர்களுக்கு உபமானமாக சொல்வதை காணலாம்.
எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏடுகளில் உள்ளது என்று எண்ணிவிடாமல், திருவரங்கத்தில், திருவனந்தாழ்வான்மீது “தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” (திருவாய்மொழி 8.10.8) என்றபடி எல்லா அவயங்களின் அழகும் நன்கு விளங்கும்படி சாய்ந்து அருள்கின்ற தேஜஸை கண்டவர்களின் கால்கள் அங்கிருந்து விலகுமோ என்று ஆழ்வார் வினவுகிறார். எம்பெருமானின் சயனத் திருக்கோலத்தை “தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” என்று விளக்கம் சொல்லியிருப்பதை மேலும் சில பாடல்களில் இங்கு காணலாம்.
பூவிலும் மென்மையான தன் திருமேனியை கடல் நீர் உறுத்தாமல் இருக்க வேண்டும் என்று அனந்தாழ்வான் மீது சயனித்து இருக்கும் எம்பெருமான் என்று சொல்வதை, பெரியாழ்வாரின், “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற’ (பெரியாழ்வார் திருமொழி 5.1.7) பாடல் மேற்கோளாக காட்டப்படுகிறது.
பள்ளிகொண்ட என்ற பதம், பாம்பணை பள்ளி கொண்ட என்றும் ‘பள்ளிகொண்ட மாயனார்” என்றும் சேர்க்கப்பட்டு அர்த்தம் சொல்லப்படுகிறது. மாயம் என்பது ஆச்சர்யம் என்ற அர்த்தத்தில் உபயோகபடுத்த பட்டு உள்ளது. பள்ளிகொண்டு இருக்கும் போதே மாயங்கள் அல்லது ஆச்சர்யங்கள் நடத்தும் பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். திருவிளக்குப்பிச்சனுடன் பெரியபெருமாள், நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை கேட்க விழைந்த போது பேசியது அப்படி ஒரு ஆச்சர்யமே.
பள்ளிகொண்டு இருக்கும் அழகு ஆச்சர்யப்பட வைக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். பள்ளிகொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை யுத்த காண்டத்தில் (38.25) காணலாம். ( ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ ) காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும், எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார். அப்படிப்பட்ட அழகிய ராமன், ஆராதித்த பெருமாள் திருவரங்கன்; அதனால் அந்த அரங்கநாதனின் சயன திருக்கோல அழகை கண்டு மகிழ்ந்து தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் கூறுவது ஆச்சர்யமில்லை. அதே போல் கண்ணனை துயில் எழுப்பியவர் ஆண்டாள் ஆவார். (நீளாதுங்க ஸ்தனகிரிதடி ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் ).
நின்ற திருக்கோலத்தில் இருந்தாலும், அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தாலும் அகலலாம், அனால் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அகல இயலாது என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார். நம்மாழ்வாரின் திருவாய்மொழி (5.8.1) “ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!” என்ற பாடலும், குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி (7.2), “ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் ” (ஆனை கிடப்பதை போல் பள்ளி கொண்டு அருளும் அழகை சொல்கிறார்) என்ற பாடலும் இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது.
எம்பெருமானுடைய நீண்ட கைகளுக்கும் எட்டாமல் ஓடினேன் ஓடி என்று சம்சாரத்தினுள் வெகு தூரம் ஓடிகொண்டுஇருந்த தன்னை பிடித்து இழுத்துக்கொண்ட ஆச்சர்யத்தால் மாயனார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுவதுவதாக உரையாசிரியர் தெரிவிக்கிறார்.
திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் (7) என்ற பிரபந்தத்தில், “அரவு இன் அணை மிசை மேய மாயனார் ” என்று சொல்வதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.
பிராட்டி எப்போதும் அகலமாட்டேன் என்று வாழ்கின்ற மார்பு என்பதால், எம்பெருமானின் திருமார்பிற்கு சிறப்பு என்பது ஒரு அர்த்தம். அதாவது பிராட்டி வாழ்வதால் சிறப்பு பெரும் மார்பு என்று பொருள். நம்மாழ்வாரின் அகலகில்லேன் இறையும் என்ற திருவாய்மொழி (6.10.10) அந்த சிறப்புக்கு அர்த்தம் கூறும். பிராட்டி அணிந்த செம்பஞ்சுக்குழம்பும் (மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக்கலவை), பிராட்டி அணிந்த மாலைகளும் எம்பெருமானின் திருமார்பில் இருப்பதைக்கண்டு உபநிஷத்துக்கள் இவனே பரம்பொருள் என்று முடிவு செய்கின்றன என்று பராசர பட்டர் சொல்கிறார். (ஸ்ரீ குணரத்ன கோஸம் 4).
நம்மாழ்வார், “திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும், திகழ்கின்ற திருமாலார்” (திருவாய்மொழி, 10.6.9 ) என்று திருமாலுக்கும், அவரின் திருமார்பிற்கும், பெரிய பிராட்டியாருக்கும் உள்ள சிறப்புகளை சேர்த்து ஒன்றோடு ஒன்று மேலும் மேலும் அழகு சேர்த்துக்கொள்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.
நீர் வெள்ளத்தை திறந்து விட்டால், அது எப்படி காண்பவர்கள் கண்கள் குளிரும்படி உள்ளதோ, அதேபோல் எம்பெருமான், ஒளிரும் மரகத பச்சை நிற வடிவு கொண்டவர். இதே ஆழ்வார் பாடிய பச்சை மாமலை போல் மேனி என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம். மார்பிற்கு சிறப்பு சேர்க்க திரு, நன் என்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டன; உருவிற்கு சிறப்பு சேர்க்க மரகத ஒளி சேர்க்கப்பட்டது. அப்படி எந்த சிறப்பும் சேர வேண்டிய அவசியம் இல்லாத இயற்கையிலேயே சிறப்பு உள்ள தோள்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். இந்த நீரோட்டத்தில் நீந்த விழைபவர்களுக்கு தெப்பம் போல் உள்ள தோள்கள் என்று உரையாசிரியர் கூறுகிறார்.
பரிசுத்தமான தாமரை மலர்போன்ற திருக்கண்கள் என்பது நேரிடையான பொருள். இந்த திருக்கண்களால் கடாக்ஷிக்க பெற்றவர்கள் பரிசுத்தம் அடைவதால், அதற்கு காரண உறுப்பான திருக்கண்களுக்கு ‘தூய‘ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. பிராட்டியாக இருந்தாலும் சரி, ஹிரண்யன் போன்ற அசுரர்கள் ஆனாலும் சரி, எல்லோரையும், குளிர நோக்குகின்ற கண்கள்; நோக்கு ஏன் தூய்மை என்றால், எம்பெருமான் எந்த ஒரு காரணமும் இல்லாமல், தன்னுடைய விருப்பத்தினால் மட்டுமே பார்ப்பதால், அதில் பாரபட்சம் இருப்பதில்லை.
நண்பன், பகைவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பன் அன்றோ எம்பெருமான். (பகவத் கீதை 5.29). ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் (1.2), விஷ்ணு பக்தி உடையவர்களுக்கும், பகவத் பக்தி அற்றவர்களுக்கும் எப்போதும் சமானமாக பற்றலாம்படி இருக்கும் அவனுடைய திருவடிகளை உபாயமாக நிச்சயிக்கிறேன் என்று சொன்னது இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது. அதாவது எல்லோருக்கும் சமமாக இருப்பது அவனது உறவு. பார்வை ஒன்றாக இருக்கும்போது, அசுரர்களுக்கு மட்டும் ஏன் கெடுதல் விளைகின்றது என்று கேட்டுக்கொண்டு, அவை அசுரர்களின் தோஷத்தினால் வந்தது என்று பதில் உரைக்கிறார். எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் தென்றல், தாமரையை மட்டும் உலர்த்திவிடுவதைபோல் இதுவும் என்கிறார்.
தூயதாமரை என்று சொல்லும்போது, குளிர்ச்சிக்கும், நறுமணதிற்கும், மேன்மைக்கும் மட்டுமே எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு தாமரை ஒப்பிடப்படுகிறது; திருக்கண்களில் வழியும் கருணைக்குத் தாமரையை ஒப்பிடமுடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
சிவந்த திருவதரங்களையும் (உதடுகளையும்), பவளம் போல் இருக்கும் பல்வரிசை உடைய வாயும் என்று சொல்லிவிட்டு, உதடுகளின் சிவப்பு பிரதிபலிப்பதால் பல்வரிசையும் பவளம் போல் சிவப்பாக இருக்கிறது என்று சொல்கிறார். ஒருவரிடமும் பேசாமல், ஒரு வஸ்துவினுடனும் ஆதரம் இல்லாமல், மிக உயரிய நிலையில், இருக்கும் பரமாத்மா, அத்தகைய காம்பீர்யத்தை குலைத்துக்கொண்டு தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை கூறுகிறார் என்றபடி இருக்கும் பவள வாய் என்பது இன்னொரு விளக்கம். அதேபோல், தங்களுடைய குறைகளை நினைத்து, அவனை அணுகுவதற்கு அஞ்சும் அடியவர்களை பார்த்து அஞ்சேல் என்று சொல்வது போல் புன்சிரிப்போடு இருக்கும் பவள வாய் என்பது இன்னொரு விளக்கம்.
ஆய என்பது, எப்பொழுதும் அழகாகவும், சித்தமாகவும் இருக்கும் என்பதை சொல்கிறது. ஆயம் என்பது தங்கத்தைக் குறிக்கும் என்பதால் ஆயம் என்பதில் உள்ள கடைசி எழுத்து குறைந்து ஆய சீர் முடி என்று எடுத்துக்கொண்டால், தங்கத்தாலே செய்தாற்போல் உள்ள திருமுடி என்றும் கொள்ளலாம். சீர் என்பது செல்வ சிறப்பை காட்டுகிறது.
தேசும் என்பது தேஜஸ் என்பதின் மருவு. திருமேனி முழுவதும் தேஜஸ் மிளிர்கிறது. மேலே சொன்ன ஒவ்வொரு அவயத்தில் இருந்தும் தேஜஸ் ஜொலிக்கிறது. திருநன்மார்பு, மரகத உரு, தோள், தூய தாமரை கண்கள், துவர் இதழ், பவளவாய், ஆயசீர்முடி என்று ஒவ்வொரு அவயங்களையும் சொல்லிய, ஆழ்வார் இந்த ஒரு வார்த்தையினால், எம்பெருமானின் திருமேனியின் முழு உருவத்தின் அழகையும் உணர்த்துகிறார். மரகத உரு என்பது, அவயவ விளக்கமே தவிர அது முழு வடிவம் ஆகாது, ஏன் எனில், எம்பெருமானின் திருமேனியில், எல்லா அவயங்களும் மரகத பச்சை நிறமாக இருப்பது இல்லை.
ஒவ்வொரு அவயவமாக சொல்வது சௌந்தர்யம் என்றும் முழுவதுமாக சொல்வது லாவண்யம் என்று சொல்வதுண்டு. திவ்யதேசங்களில் சௌந்தர்யத்திற்கு நாகை சௌந்தர்ராஜ பெருமாளும், லாவண்யத்திற்கு திருக்குறுங்குடி நம்பியும் சொல்வது இங்கே குறிப்பிடலாம்.
பெரியபெருமாளின் இத்தகைய வடிவழகின் பெருமையை கண்டால், ஸ்வரூப ஞானம் உள்ள எங்களால் அகல முடியாது, அதை அனுபவிக்க தெரியாத, நான், என்னது என்று அகங்காரம் மற்றும் மமகாராம் உள்ளவர்களால் மட்டுமே அகல முடியும் என்று ஆழ்வார் கேட்டுக்கொண்டு அதற்கு சம்சாரிகள் சம்மதம் தெரிவிப்பது போல், ‘ஆமே‘ என்று இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம்.
“ஆலம் பேரிலை அன்னவம் செய்யும் அம்மானே” (திருவாய்மொழி 8.3.4) என்று மிகச் சிறிய ஆலினிலையில் சயனித்து இருக்கும்போதும், இப்படி சிறிய இடத்தில இருக்கலாமோ ‘தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” விசாலமான இடத்தில இருக்கலாமே என்று உரையாசிரியர் கேட்கிறார்..
நிலைநின்ற வாழ்ச்சியை விரும்புவர், திருப்பாற்கடலில் துயில்கின்ற எம்பெருமானை அடையுங்கள் என்று சொல்லும்போது, ‘நிற்குறில், ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமின்‘ (திருவாய்மொழி 4.1.6) என்ற பாசுரத்தின் விளக்கத்தின் போதும், ‘தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” என்று உரையாசிரியர் சொல்கிறார்.
திருவாய்மொழியில் “குறைவில் தடங்கடல் கோள் அரவு ஏறி தன் கோலச்செந் தாமரைக்கண், உறைபவன் போல் ஓர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன்” (3.10.2) என்பதற்கு விளக்கம் கொடுக்கும்போது, ‘தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” என்று உரையாசிரியர் சொல்கிறார். குறையற்ற, விசாலமான, திருப்பாற்கடலில், திருஅனந்தாழ்வான் மேல் உறைகிறான் என்பதே இங்கு பொருள்.
நான்முகன் திருவந்தாதி, 3ம் பாடலில், “பாலிற் கிடந்ததுவும், பண்டரகம் மேயதுவும், ஆலில் துயின்றதுவும் ஆரறிவார்” என்றதை, திருப்பாற்கடலில் சயனித்து அருளுவதையும், திருஅரங்கத்தில் பொருந்தி இருந்து அருளுவதையும், ஆலிலையில் பள்ளியெழுந்து அருளுவதையும் சொல்லி, ‘தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” என்று மேற்கோள் காட்டுவது தனிச்சிறப்பு.
முதல் திருவந்தாதியில் இரண்டாவது பாசுரத்தில், பொய்கையாழ்வார், “அன்று உடைத்து அடைத்துக் கண்படுத்த ஆழி” என்று சொல்லும்போதும், இதுவும் மேற்கோள் காட்டப்படுகிறது. “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தயாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” (பெரியாழ்வார் திருமொழி 5.1.7) என்ற பாடலும் இங்கு கூறப்படுகிறது.