The Birth of Thirupallandu / திருப்பல்லாண்டு பிறந்த வரலாறு

For English version, please click here, thanks 

பெரியாழ்வாரின் பிறப்பு

பெரியாழ்வார் மதுரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில், ஆனி மாதத்தில், சுவாதி நட்சத்திரத்தில், பெருமாளின் நித்யசூரிகளில் அவருக்கு எப்போதும் வாகனமாக சேவை செய்யும் ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தார்.

முப்புரியுட்டிய நட்சத்திரங்கள்

சில தமிழ் நட்சத்திரங்கள், அவைகளில் யார் யார் பிறந்தார்களோ, அவற்றைப் பொறுத்து சில பெருமைகளை அடைகின்றன.   பரமாத்மாவின் அவதாரங்கள் தோன்றிய நட்சத்திரங்கள் சில, ஆழ்வார்கள் அவதரித்த நட்சத்திரங்கள் சில, அதே போல், ஆச்சாரியார்கள் பிறந்த நட்சத்திரங்கள் சில.   ஆனால் ஒரே நட்சத்திரத்தில் பரமாத்மாவின் அவதாரமும், ஆழ்வார் அவதாரமும், ஆச்சாரியாரின் பிறந்த நாளும் இருந்தால்,  அந்த நட்சத்திரத்தை முப்புரியூட்டிய நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

natchathiram

இப்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் ஆழ்வாரான பெரியாழ்வாரும்,  நரசிம்ஹ அவதாரம் தோன்றிய சுவாதி நட்சத்திரத்தில், தான் அவதரித்தார்.  அதே போல் வடக்குத்திருவீதி பிள்ளை என்கின்ற ஆச்சாரியாரும் சுவாதி நட்சத்திரத்திலே பிறந்தார் .  ஆக சுவாதி ஒரு முப்புரியூட்டிய நட்சத்திரம். அதே போல் ஸ்ரீகிருஷ்ணர், திருப்பாணழ்வார் என்ற ஆழ்வார், பெரியவாச்சான்பிள்ளை என்கின்ற ஆச்சாரியார் அவதரித்த ரோஹிணியும் இந்த வகையே.   ஸ்ரீ ராமர், குலசேகர ஆழ்வார், மற்றும் எம்பார், முதலியாண்டான் என்கின்ற இரு ஆச்சாரியர்களும் தோன்றிய புனர்பூசமும் இந்த வகையே. இறுதியாக, திருப்பதி வெங்கடேச பெருமாள் அவதரித்த ஸ்ரவண (திருவோணம்) நட்சத்திரத்திரமும் இந்த வகையே, ஏன் எனில், பொய்கை ஆழ்வாரும், வேதாந்த தேசிகர், மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் என்கின்ற இரு ஆச்சர்யார்கள் அவதரித்தும்  ஸ்ரவண நட்சத்திரத்திலேயே.

இளமைக் காலம்

பெரியாழ்வாரின் இயற் பெயர் விஷ்ணுசித்தர் என்பதாகும்.  இளவயது முதல் ஆழ்வார் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள விஷ்ணு கோவிலில் உள்ள வடபத்ர சாயிடம் பக்தி கொண்டு இருந்தார்.   அவருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஆழ்வார்க்கு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.    பெருமாளுக்கு புதிய பூக்களைப் எடுத்து மாலை கட்டி சூடி பார்த்து மகிழ்வுற வேண்டும் என்று ஆழ்வார் முடிவு செய்து ஓர் பெரிய இடத்தில நந்தவனம் அமைத்தார்.  அதில் இருந்து பூக்களைப் பறித்து மாலைகளை  கட்டி அவைகளை வடபத்ர சாயிக்கு அர்ப்பணம் செய்து வந்தார்.

அரசரின் சந்தேகங்கள்

அப்போது வல்லபதேவன் என்ற அரசர் தென் மதுரை பகுதியில் நல் ஆட்சி புரிந்து வந்தார். அந்த அரசர் ஒரு சிறந்த நிர்வாகியும், மிகச் சிறந்த விஷ்ணு பக்தரும் ஆவார். அவர் ஒருமுறை இரவு சோதனைக்காக சென்ற போது வடதேசத்தில் இருந்து வந்த ஒரு அறிவாளியை சந்தித்தார்.  அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர் சொன்ன சில வார்த்தைகள், அரசரை சிந்திக்க வைத்தன. அவையாவன,

  • ஒரு மனிதன்  பகல் நேரத்தில் உழைத்தால் தான்,  மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இரவில் வாழ முடியும்.
  • ஒரு மனிதன் வருடத்தில் எட்டு மாதங்கள் உழைத்து சேமித்தால் தான், மழை காலமாகிய நான்கு மாதங்களுக்கு மகிழ்ச்சியாக வாழ முடியும்.
  •  ஒரு மனிதன் தனது இளமைப் பருவத்தில் உழைத்து சேமித்தால் தான், அவன் தன்னுடைய முதுமை காலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
  • அவைகளைப் போல், ஒரு மனிதன் இந்தப் பிறவியில், கடவுளைப் பற்றி அறிந்து கொண்டும், அவரை நினைத்துக்கொண்டும் வாழ்ந்தால் தான், அவனால் இந்தப் பிறவிக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

அடுத்தநாள் காலை, அரசன் தனது குருவான, செல்வநம்பியைக் கூப்பிட்டு மேலே சொன்ன பகுதியில் குறிப்பிட்ட அந்த கடவுள் யார் என்பதைப் பற்றியும், தான் என்ன செய்தால் இந்தப் பிறவிக்குபின் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதைப் பற்றியும், அவை எப்படி எங்கே  வேதங்களில் சொல்லப் பட்டு உள்ளன என்பதைப் பற்றியும் அறிய வேண்டும் என்று கேட்டார்.  செல்வநம்பி, இதை தெரிந்துகொள்ள நாட்டில் உள்ள சிறந்த அறிவாளிகளையும், வேதங்களை கற்று தேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு விவாதம் செய்வதால் நாம் அறிந்து கொள்வதுடன், நாட்டில் உள்ள மக்களுக்கும் பலன் இருக்கும் என்று சொன்னார்.  அரசரும் அதற்கு சந்தோஷமாக சம்மதம் தெரிவித்து, ஒரு பொற்கிழி பரிசும் கொடுப்பதாக அறிவித்தார்.  யார் தன்னுடைய சந்தேகங்களை களைகிறார்களோ அவர்களிடம் மேலே கட்டிய அந்த பொற்கிழி, தானாகவே தாழ்ந்து வரும் என்றும் அறிவித்தார்.   பற்பல வித்தகர்கள் வந்தார்கள், முயற்சி செய்தார்கள், ஆனால் பொற்கிழி மட்டும் கீழே இறங்க வில்லை, மன்னரின் சந்தேகங்களும் தீர வில்லை.

பரமாத்மாவின் ஆசை

பரமாத்மாவான வடபத்ரசாயி, விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி அவரை மறுநாள் அரசசபைக்குச் சென்று, தான் வேதங்களில் சொன்ன பர தத்துவத்தை அரசருக்கு எடுத்துச்சொல்லி, பரிசை பெற்று வரும் படி சொன்னார்.  விஷ்ணு சித்தர், தான் வேதம் எதுவும் கற்கவில்லை என்றும், அரச சபைக்குச் செல்லும் தைரியமும் நம்பிக்கையும் தனக்கு இல்லை என்றும் வடபத்ர சாயியிடம் மன்றாடினார். பெருமாள் சிரித்துக்கொண்டே, ஆழ்வார் ஒரு கருவியே என்றும், தான் அவருக்காக பேசுவோம் என்றும் கூறினார்.   இது பெருமாள் தன் பக்தனின் மேல் காண்பிக்கும்  வாத்சல்யம் ஆகும். தன் பக்தனை முன்னிலைப் படுத்த எந்த ஒரு சந்தர்ப்பதையும் அவன் விடுவதேயில்லை.   இது பசு தன் கன்றுவிடம் காட்டும் அன்பைப் போன்றது. விஷ்ணுசித்தர், இது பெருமாளின் கட்டளை போலும் என்று எண்ணி, மதுரையில் உள்ள அரச சபைக்குப்  புறப்பட்டார்.

ஆழ்வாருக்கு அங்கீகாரம்

அரசரும் செல்வநம்பியும், ஆழ்வாரை வரவேற்றனர்.  ஆனாலும் சபையில் உள்ள மற்றவர்கள், ஆழ்வார் வேதம் கற்காதவர் என்றும், வேதம் பற்றி அதிகம் தெரியாதவர் என்றும் அரசர் தவறான ஒருவரை வரவேற்கிறார் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.  அரசரும் செல்வ நம்பியும் தங்கள் சந்தேகங்களைக் கேட்க, ஆழ்வார், வால்மீகி, துருவன் போன்றவர்கள் போல், பரமாத்மாவின் அருள் பெற்று, வேதம், இதிகாச புராணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மேற்கோட்கள் எடுத்துக் காட்டி மிகத் தெளிவாக பற்பல வகைகளில், ஸ்ரீமன் நாராயணனே  ஒரே தெய்வம் என்றும், அவரே பரதத்துவம் என்றும் நிரூபித்தார்.   பொற்கிழி மெதுவாக ஆழ்வார் பக்கம் சாயத் தொடங்கியது.  சபையில் உள்ள அறிஞர்கள் ஆழ்வாரைப் பார்த்து மகிழ்ச்சியுடன்  ஆராவாரம் செய்தனர்.   அரசரும் செல்வநம்பியும் ஆழ்வார் சொன்னவைகளை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு தங்கள் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கம் கிடைக்கப்பெற்றனர்.

வல்லபதேவனான அரசனும் தனக்கு கிடைத்த விளக்கங்களால் மகிழ்ச்சியடைந்து ஆழ்வாரை தகுந்த முறையில் மரியாதை செய்ய எண்ணினான்.  வல்லபதேவன், தனது பட்டத்து யானையில் ஆழ்வாரை அமரச்செய்து, ஒரு பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்தான்.  அதையும் அவனே முன்னின்று நடத்திச் சென்றான்.  அவனுடன் வேதம் கற்ற பண்டிதர்களும் மற்றவர்களும் மிக கோலாகலமாக, “வேதத்தின் சாரங்களை தெளிவாக எடுத்துச் சொன்ன, எங்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஆழ்வார் வந்து விட்டார், அவருக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்”  என்று சொல்லிக்கொண்டே வந்தனர்.         வல்லபதேவனும் ஆழ்வாருக்கு “பட்டர் பிரான்” என்று ஒரு பட்டம் கொடுத்து சிறப்பித்தான்.  எங்கும் விழாக் காலகொண்டாட்டமும் கோலாகலமும் தான்.

தனது குழந்தையான ஆழ்வாருக்கு சிறப்பு கிடைத்ததை காண எண்ணிய பரமாத்மாவும், தனது தேவிமார்களுடனும், பஞ்சாயுதங்களுடனும், கருடாழ்வாரின் மேல் ஊர்வலம் நடக்கும் இடத்தில வானத்தில் கோடி சூர்ய ஒளியுடன் தோன்றினார் . அதைப் பார்த்த பிரம்மா, சிவன், இந்திரன் போன்ற மற்ற தெய்வங்களும்   வானில் தோன்றி பரமாத்மாவான மகாவிஷ்ணுவிற்கு தங்கள் மரியாதைகளையும் பிரார்த்தனைகளையும் செலுத்தினர்.

(படங்கள் http://www.anudinam.org -கிற்கு நன்றி, திருக்கூடல் பெரியாழ்வார் திருநட்சத்திரம் –  Thanks to http://www.Anudinam.org  for the pictures, Thirukoodal Periyazhwaar Thirunakshathiram)

திருப்பல்லாண்டு

ஆழ்வார் வானில் தோன்றிய ஸ்ரீமன் நாராயணனை நன்றாக தரிசித்தார்.  உடனே அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ, இங்கு யாராவது அசுரர்கள் வந்து தொந்தரவு கொடுப்பார்களோ என்றெல்லாம் பயந்து போனார்.  யானையின் மேல் அழகிற்காக போட்டு இருந்த மணிகளை கைகளில் எடுத்துக்கொண்டு அவைகளால் தாளம் போட்டு, பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பெருமாளை வாழ்த்திப் பாடினார்.   இந்த பாடலை பாடும்போது ஆழ்வார், மிகுந்த ஆனந்தத்தில் மூழ்கி மகிழ்ந்து இருந்தார் போலும்,  எந்த ஒரு வினைச் சொல்லையும் பயன் படுத்தவில்லை, ஆனால் தான் சொல்லவந்த எந்த கருத்தையும் விடாமல், பாசுரத்தின் முழு அர்த்தத்தையும்சொல்லி விட்டார்.   அதேபோல் அவர் தனக்கு சந்தர்ப்பம் கொடுத்த செல்வ நம்பியையும் மறக்காமல், இந்த பல்லாண்டு தொகுப்பில், பதினோராவது பாசுரத்தில், “அபிமான துங்கன் செல்வனைபோலே, நானும் உனக்கு பழவடியேன்” என்று சொல்லி தானும் செல்வ நம்பியை போல உண்மையும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருப்பேன் என்று செல்வ நம்பியை  குறிப்பிடுகிறார்.

ஆழ்வார் பொற்கிழியை பெற்றுக்கொண்டு அதன் உதவியோடு மேலும் பல சேவைகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் வடபத்ரசாயிக்கும் செய்து வந்தார். பெரியாழ்வார் பெற்ற பொற்கிழியைக் கொண்டு தற்போதுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மதுரையில் ஒவ்வொரு ஆண்டும், சுவாமி பெரியாழ்வாரின் திருநட்சத்திரம், திருக்கூடல் அழகர் கோவிலில்  வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை வீதிகளில், காலையில், ஸ்ரீ வியுக சுந்தரராஜ பெருமாள், தங்க கருட வாகனத்தில் புறப்பாடு கண்டு அருளுகிறார்.  பிறகு சுவாமி பெரியாழ்வார் யானை வாகனத்தில் புறப்பாடு காண்கிறார்.  அதன்போது பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பல்லாண்டு சேவித்தபடி  ஆழ்வாருடன் செல்கிறார்கள்.  இந்த விழாவை, பர தத்துவ நிர்ணய உத்சவம் என்று கொண்டாடுகிறார்கள்.

திருப்பல்லாண்டுதனில், ஆழ்வார் இந்த உலகில் உள்ள மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்களையும்  கருத்தில் கொண்டு பாடி உள்ளார்.

  • இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள்,
  • பரமனையே வேண்டும் பகவன்லாபார்திகள்,
  • இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கைவல்யார்திகள் என்று ஜீவாத்மாக்கள் மூன்று வகை படும்.

கைவல்யார்திகள் பற்றி அதிகம் தகவல் கிடையாது.  அது ஒரு விரும்புகிற நிலையும் இல்லை.  நாம் எல்லோரும் பரமனையே வேண்டும் பகவன்லாபார்திகள் ஆகவே ஆசைப் பட வேண்டும்.   திருபல்லாண்டில் ஆழ்வார், இந்த மூன்று வகையான ஜீவாத்மாக்களையும், பரமாத்மாவை வாழ்த்தி பாடி மோக்ஷம் பெற  அழைக்கிறார்.   இந்த விதத்தில், பெரியாழ்வார் மற்ற ஆழ்வார்களில் இருந்து சிறிது வேறு படுகிறார்.   மற்ற ஆழ்வார்கள், பரமாத்மாவின் பெருமைகளில் தங்கள் பக்தியால் மூழ்கி, தங்கள் மோக்ஷதிற்காகவே வேண்டுகோள் விடுத்தனர்.  பக்தர்கள் தங்களைப் பார்த்து தெரிந்து கொள்வார்கள் என்று நம்பி இருக்க வேண்டும்.  நேரடியாக பக்தர்களை மோக்ஷத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றதாகவோ, எல்லோருக்கும் மோக்ஷம் வேண்டும் என்று சொன்னதாகவோ தெரியவில்லை.  அதனால், பெரியாழ்வார், சுவாமி ராமானுஜர் என்னும் மிக முக்கியமான ஆச்சாரியாருக்கு ஒரு முன்மாதிரியாகவும், அகத்தூண்டுதலாகவும் இருந்திருக்கலாம், ஏனெனில் இராமானுஜர், ஆசை உள்ளவர் எல்லோருக்கும் மோக்ஷத்திற்கு வழி சொல்லித் தருகிறேன் என்று திருகோஷ்ட்டியூரில் சொன்னார்.

மணவாள மாமுனிகள் என்ற இன்னொரு ஆசார்யர் தன்னுடைய உபதேசரத்ன மாலை என்ற நூலில் 19 ஸ்லோகத்தில், “வேதத்துக்கு, ஓம் என்னும் அதுபோல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்” என்று திருபல்லாண்டை குறிப்பிடுகிறார்.  அதாவது வேதத்திற்கு ஓம் என்னும் வார்த்தை முதலாவதாகவும், வேதத்தின் அர்த்தங்களை சுருக்கி தன்னுள் கொண்டது போல், திருப்பல்லாண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு முதலாவதாகவும் அதன் அர்த்தங்களை சுருக்கி தன்னுள் கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

பெரியாழ்வார் திருமொழி

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், பெரியாழ்வார் திருமொழி என்பது 461 பாசுரங்களைக் கொண்ட, அவரின் மற்றோரு படைப்பாகும். இதைப் பற்றி நாம் சென்ற வலைபதிப்பில் பார்த்து உள்ளோம். பெரியாழ்வார் திருமொழி பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இங்கே காணலாம். பெரியாழ்வார் திருமொழியில் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் அதிகம் உள்ளது.  இந்த தொகுப்பில் ஆழ்வார் தன்னை ஸ்ரீ கிருஷ்ணனின் தாயான யசோதாவாகவே நினைத்துக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு வயது லீலைகளை பெரிதும் பாடி உள்ளார்.  ஸ்ரீ கிருஷ்ணர், பிருந்தாவன், ஆய்பாடி, மற்றும் கோகுலத்தில் வசித்த நாட்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.   அவரைப் பார்த்து அவனுடைய பக்தர்களும் மகிழ்வுடன் இருந்தனர்.    ஆழ்வார்களும், ஆச்சர்யார்களும் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைகால வாழ்க்கையையே அதிகம் ரசித்துள்ளனர், அதே அதிகம் பாடியும் உள்ளனர்.  ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் ஆட்சி செய்ததைப் பற்றியோ, பண்டவர்களுக்காக தூது சென்றதைப் பற்றியோ, அவருடைய மிகமுக்கியமான படைப்பான பகவத் கீதையைப் பற்றியோ அதிகம் பாடவில்லை. அவரிகளின் முன்னுரிமை இறைவனின் இளமைக் காலமே.

கண்ணனைப் பாடிய ஆழ்வார், ஒரு தொகுப்பில், அனுமான் தன்னை எப்படி, லங்காவில் உள்ள அசோக வனத்தில் இருந்த, சீதாபிராட்டியிடம் அடையாளம் காட்டிக் கொண்டார் (3.10) என்றும், ஸ்ரீ ராமபிரானின் உயர்ந்த குணநலன்களை மற்றொரு தொகுப்பிலும் (3.9) பாடி உள்ளார்.

பெரியாழ்வார், 19 திவ்ய தேசங்களில் உள்ள பெருமான்களுக்கு பாசுரங்கள் அமைத்துள்ளார்.   அவைகளில்,

  • ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, திருப்பேர்நகர் (அப்பக்குடத்தான்), திரு குடந்தை, திருக்கண்ணபுரம் என்ற 5 சோழ நாட்டு திவ்ய தேசங்களும்,
  • ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிருஞ்சோலை, திருக்கோஷிட்டியூர் மற்றும் திருக்குறுங்குடி என்ற 4 பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களுக்கும்,
  • திரு மதுரா (வடஇந்தியா), திருப்பதி, அயோத்யா, முக்திநாத், பத்ரிநாத், தேவப்ப்ரயாகை என்னும் கண்டமென்னும் கடி நகர், துவராகா மற்றும்  திருஆய்பாடி என்கிற 8 வடநாட்டு திவ்ய தேசங்களும்
  • இந்த உலகத்திற்கு அப்பால் பட்ட திருப்பாற்கடல்  மற்றும் திருவைகுந்தம் என்ற இரண்டு திவ்ய தேசங்களும் அடங்கும்.
  • ஆழ்வார் திருவேங்கடமுடையானைப்பற்றி பாடிய பாசுரங்களை இங்கே காணலாம்.

ஆண்டாள் அல்லது கோதை என்ற பெரியாழ்வாரின் மகளை பற்றிய ஒரே ஒரு முக்கிய தலைப்பை தவிர்த்து, அநேகமாக பெரியாழ்வார் பற்றிய நமது குறிப்புகள் இத்துடன் முடிவடைந்தன.   ஆண்டாள் பற்றி அடுத்த வலைப்பதிவில் தொடரலாம்.

===============================================================

Periyazhwaar’s Birth

Periyazhwaar was born in Srivilliputhur near Madurai in Tamil Nadu, in the Tamil month of Aani, usually from June 16th to July 15th, on the Tamil Star Swathi, as a feature of Sri Karuthman or Sri Garuda Azhwaar, the Nithyasoori, who serves as vehicle to Sri Mahavishnu.

Tamil Stars, Taking Glory for Three Reasons

Some of the Tamil Stars take higher level of importance based on who were born on those stars. There are some stars in which Paramathma’s incarnations have happened; there are some stars in which Azhwaars were born and there some stars in which Acharyaars were born.   If the birth star of Paramathma, Azhwaar and Acharya happened to be same, then that star is known as “Taking Glory for Three Reasons” (Mupuri oottiya Nakshathiram).   This star Swathi is one such, as Narasimha Avatharam, Periyaazhwaar, Vadakku Thiruveedhi Pillai, an acharyar, are having Swathi as their Birth Star.   Similarly, Sri Krishna, Thirupaanazhwaar and Periyavaachaan Pillai, an acharyar are having the same birthstar, namely, Rohini.  Another example is the tamil Star Punarpoosam, which is the birth star for Sri Rama, Kulasekara Azhwaar and Embaar and Muthali Aandan (Two Acharyars).   Finally Thiruvonam or Sravana is another significant tamil star, as Sri Venkatachalapathy, Poigai Azhwaar and Sri Vendantha Desikan and Pillai Logachariyar (Two Acharyars) have this as their birth star.

natchathiram

Early Days

Periyazhwaar’s original name was Vishnu Chitthar and right from his early days, he had been a staunch devotee of Vatapathrasayi, the Mahavishnu at Srivilliputhur.   After having decided to serve the God with flowers and garlands everyday, Vishnu Chitthar, raised a large garden with lots of flowers.  He was happy offering fresh flowers from his garden to Sri Mahavishnu on  a daily basis.

King’s Queries

“Vallabhadevan” was the king ruling that area. He was a good administrator (king) and was a great Vishnu bhakta.  In  one of his regular night visits to protect his citizens, he met with a scholar from north India and while they were talking, the King was impressed with a saying from the scholar,

  • one has to work hard during day time to live and sleep happily during the night
  • one has to work hard for eight months to live happily during the rainy season of four months
  • one has to work during his youthful days to live without trouble in old age
  • one has to perceive, know and understand about lord during the life time in this world, to be happy to be with Him after leaving this mortal body

The next day, the King called his Guru, Selvanambi, to know more about the last bullet, namely, who the ultimate god was and what he needed to do to be happy after leaving this mortal body and wished to know how they were substantiated in the Vedas, the book of spiritual knowledge. Selvanambi suggested that he would convene the scholars in the country and asked them to clarify the queries from the King.   King also announced a reward, bag of gold coins, tied and hanged from top, which would automatically fall, if the clarifications offered were genuine  and accepted by Lord.    Many scholars tried, but the hanging bag never came down.

Paramathma’s wishes

Paramathma, Sri Vatapatrasayee appeared in Vishnuchittha’ s dream and asked him to go to the palace the next day to speak on vedic principles and get the reward.  When Vishnuchitthar pleaded that he did not study vedas or did not believe that he would be able to speak in front of the knowledgeable section of people in the palace. The Lord smiled and told Vishnuchittar that he would only be an instrument and He would speak through him. This shows the bhagawan’s vatsalyam, to bring His bhakta to the limelight. Vatsalyam is like what a cow shows her deep love and affection towards its calf; Paramathmaa shows such love and affection towards His devotees.   Vishnu Chitthar took this as an instruction from Vatapatrasayee and he proceeded to the palace.

Recognition to Azhwaar

In the palace, even though the King and Selvanambi, welcomed Azhwaar, all others were unhappy that the King gave reception to a wrong person, who did not study Veda or who did not have enough knowledge in Vedas.  However as per the request of the King and Selvanambi, Azhwaar being blessed with the knowledge, like Vaalmiki and Dhruvan from Sri Mahavishnu, started explaining meticulously and established that Sriman Narayanan to be the Ultimate God with thousands of quotes from Vedas, Ithihaasams and Puraanams. The Gold bag leaned towards Azhwaar to indicate that he had clarified all doubts of the King.   The scholars who did not accept Azhwaar initially, were also pleased and agreed that Azhwaar had explained all their queries and established the para thathuvam in greater details and with distinct explanations.

The King was pleased with the explanations and he wanted to honour the Azhwaar, by arranging a grand procession in which he requested Azhwaar to take the honorable seat on his Royal Ceremonial Elephant.  He himself led the procession accompanied by the vedic Pandits. The scholars in the palace also proclaimed by saying that all appreciation and glories to the most trustworthy person who showed the essence of vedham had arrived. Vallabadevan also honoured Vishnu Chitthar with a special title “Pattar Piran”, meaning the “One who offers help to great scholars”.   There was grand celebration everywhere.

Paramathmaa, also wanted to enjoy the procession , as He would always treat all His devotees as His children and would be extremely pleased whenever His devotees were recognised and glorified.  So He appeared on the sky, where the procession was going, like the light from thousands of Sun,  with all His Five weapons and with Sridevi Thayar and Boomadevi Thayar on the ever-serving bird as His vehicle, Sri Garudan.  All other gods Brahma, Rudhran and  Indhran also appeared and offered their prayers to Sri Mahavishnu.

Thirupallandu

Azhwaar, upon having a dharsan of Sri Narayanan, got worried whether something bad could happen to Him    So Azhwaar took the bells which were hanging as ornaments on the top of the Royal elephant on which he was riding, as the supporting instrument and he started singing his hymns by praising the Lord, to live long, Pallanadu, Pallandu (Many years, Many years), Pallayirathaandu (Many thousand years).   While composing this particular hymn, Azhwaar was so excited and thrilled, he did not use even a single verb, even though he had conveyed the complete meaning without any compromise. Similarly he also did not forget to refer to Selvanambi in his Pallandu, who was responsible to convene the collection of scholars to get the point across that Sriman Narayanan is the ultimate God, in the eleventh hymn of Pallanadu, where he mentioned “abimaana thungan selvanai pol, Thirumaale, naanum unnaku pazavadiyen“, meaning “Paramathma, Like Your faultless, adorable Selvanambi, I am also a faithful servant”.   Azhwaar received the gold bag and he continued his great service to Srivilliputhur temple and to Sri Vadapatrasayi.

It is believed that the current gopuram of Srivilliputhur temple, was built by Periazhwar using the gold that was won from the palace.     Swami Periyazhwar Thirunakshatram Mahotsavam is celebrated every year in a very grand manner at  Thiru Koodal Azhagar Temple, Madurai. In the morning Sri Vyuga Sundararaja Perumal Purappadu takes place on Golden Garuda Vahanam (Bird vehicle) in the streets of Madurai. Later Swami Periyazhwar Purappadu takes place on Gaja Vahanam (elephant as vehicle) with the recital of Pallanadu. Usually lot of bakthas take part in this function to receive the blessings of azhwar and Perumal.  The function is also called as “Para Thathuva Nirnaya Utsavam”, meaning, “the celebration to decide who is the ultimate god”.

In Thirupaallaandu, Azhwaar also takes care of the three types of Jeevathmaas, people who seek this worldly wealth (Aiswaryarthigal), people who seek Paramathmaa (Bhagawanlaabaarthigal) and those who are in between these two categories (kaivalyarathigal). There are not (m)any examples for the Kaivalyarthigal in the history or in any documentation.  Certainly that is not a desired state to reach and hence we all should only seek the third stage, namely, Bhagawanlaabarthi.   In Thirupallanadu, Azhwaar invites and asks all the Jeevathmaas to take part in praising God and in that sense also Azhwaar is believed to be slightly different than all other Azhwaars.  (Other Azhwaars have praised Lord, and repeatedly requested for their individual Moksham and they might not have explicitly told about  the moksham for all other jeevathmas directly, believing that other Jeevathmaas would learn from them).    Again in this way Periyazhwaar might also been an inspiration to Swami Ramanujar, a very important Acharyar for us, who offered to show the ways to  Moksham for all those who are interested, in Thirukoshtiyur.

Sri Manavaala Maamuni, an acharyar, in his Upadesa Rathina Maalai, said that Thirupaalandu takes the first place in Naalaayira Divya Prabandham, because it contains all the meanings in the shortest  form, like the word OM, which is the is the starting word for all vedas and containing all the meaning. (meaning of Upadesa Rathina Mala 19).

Periyazhwaar Thirumozhi

Periyazhwaar Thirumozhi is another set of hymns with 461 verses within Naalaayira Divya Prabandham. As mentioned in our earlier weblog.  Periyazhwaar Thirumozhi is on Sri Krishna and His various activities.  In those hymns, Azhwaar assumed himself as Yasoda, the mother of Lord Krishna, and captured every stage of His early life.  When Sri Krishna lived in Brindavan, Thiruvaipaadi and Gokulam, He was very happy and His devotees were also very happy.  Azhwaars and Acharyars had also enjoyed this part of Sri Krishna’s life much more than His time as King in Dwaraka or when He acted as a messenger on behalf of Pandavaas or even on His great contribution, the Geetha. Azhwaars had always showed a priority and preference for His younger days and composed hymns mostly on this phase of Sri Krishna.

In addition to singing about Sri Krishna, Periyazhwaar also devoted a set of hymns to describe how Hanuman identified himself to Sita in Asoka vanam in Sri Lanka (3.10) and in another set of hymns Azhwaar had also portrayed the extreme high qualities of Rama(3.9).

Azhwaar dedicated his hymns to the presiding deities of the following divya desams (19):

  • 5 in Chola Desam, namely, Srirangam, Thiruvellarai, Thirupernagar (appakkudathaan), Thiru  Kudanthai, Thirukkannapuram
  • 4 in Pandiya Naadu, namely, Srivilliputtur, Thirumaliruncholai, Thirukoshtiyur,  Tirukkurungudi
  • 8 in vadanadu (North of Tamil Nadu) namely, Mathura (North India), Tiruppathi, Ayodhya, Mukthinath(Salagraamam), Badrinath, Kandamennumkadinagar (Devaprayagai), Dwaraka, Thiru Aipaadi
  • 2 in Celestial world, namely, Thiruparkadal and Sri Vaikundham

With this we have more or less completed the discussion on Periyazhwaar,  except for a new and important topic on his daughter, namely,  Aandal or Kothai, which we will try to discuss in the next weblog.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading