006 திருப்பேர்நகர் Thirupernagar

இந்திராதேவி (கமலவல்லி) தாயார் ஸமேத அப்பக்குடத்தான் திருவடிகள் போற்றி போற்றி

, திவ்யதேசம்திருப்பேர்நகர் கோவிலடி, அப்பக்குடத்தான்
மூலவர்அப்பக்குடத்தான் , அப்பால ரங்கன்
உத்ஸவர்அப்பக்குடத்தான்
தாயார்இந்திராதேவி கமலவல்லி
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைமேற்கு
பாசுரங்கள்33
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 19
நம்மாழ்வார் 11
பெரியாழ்வார் 2
திருமழிசையாழ்வார் 1
தொலைபேசி+91 4362 281 488; +91 4362 281 460; +91 4362 281 304; +91 99524 68956

கோவில் பற்றி

பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் ஐந்து. அவை,

  • ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதன்,
  • மத்திய ரங்கம் – திருவரங்கம் ரங்கநாதன்,
  • அப்பாலரங்கம் கோவிலடி அல்லது திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் ,
  • சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி,
  • பஞ்ச ரங்கம் – திரு இந்தளூர் பரிமளரங்கன்

எம்பெருமானுக்கு தினமும் இரவு, அப்பம் பிரசாதம் கண்டருள செய்யப்படுகிறது. எம்பெருமான் மேற்கு பார்த்தும், தாயார் கிழக்கு பார்த்தும் காட்சி அளிக்கிறார்கள்.

ஸ்தல வரலாறு

துர்வாச முனிவரால் தனக்கு ஏற்பட்ட ஒரு சாபம் தீர உபமன்யு மன்னன் தினமும் அன்னதானம் செய்து வந்தான். ஒருநாள் மஹாவிஷ்ணு அந்தணர் வேடம் தாங்கி வந்து அனைத்து உணவையும் தானே உண்டார். மன்னன் வியந்து, மேலும் என்ன வேண்டும் என்று கேட்க, ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று பெருமாள் கேட்டார். உபமன்யுவும் அப்பக்குடத்தைக் கொண்டு வந்துக் கொடுக்க, திருமாலும் காட்சி தந்து மன்னன் சாபம் தீர்த்தார்.

அருகில் அமர்ந்திருக்கும் உபமன்யு முனிவருக்கு ஆசி கூறும் பெருமாளின் வலது திருக்கரம் ஒர் அப்பக் குடத்தையும் வைத்துஇருப்பதாக உள்ளது.

ஆழ்வார்கள்

நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது தான். அப்பக்குடத்தான் ஆழ்வாரின் கையைப் பிடித்து அவரை மோட்சத்திற்குச் அழைத்துச் சென்றார்

நம்மாழ்வார் “பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (10-8-2)  என்றும், தன்னை திருநாடு கொண்டு செல்வதில்  “கருத்தின் கண் பெரியன்”,  (10-8-8) என்றும், சொல்லி  “உற்றேன் உகந்து பணிசெய,  உன பாதம்  பெற்றேன்” (10.8.10) என்று முடிக்கிறார். இதற்கு அடுத்த பதிகம் “சூழ்விசும்பு அணி முகில்” என்று பரமபதத்தில் தனக்கு கிடைத்த நல்வரவேற்பை அனுபவித்து பாட ஆரம்பித்து விடுகிறார்.

திருமங்கையாழ்வாரும் இந்த பெருமாளை பாடிவிட்டு, திருக்குறுங்குடி சென்று அங்கிருந்து பரமபதம் அடைந்தார் என்று சொல்வதுண்டு.

Google Map

அப்பக்குடத்தான் பற்றி வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருப்பேர்நகர் பற்றி சொல்வது

நம் பதிப்புகளில் திருப்பேர்நகர் பற்றி

005 திருஅன்பில் / Thiruanbil

அழகியவல்லித்தாயார் ஸமேத வடிவழகியநம்பி பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்அன்பில் / பிரம்மபுரி
மூலவர்வடிவழகியநம்பி
உத்ஸவர்சுந்தரராஜ பெருமாள்
தாயார்அழகியவல்லி தாயார்
திருக்கோலம்கிடந்த
திசைகிழக்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமழிசையாழ்வார்
தொலைபேசி+91 431 6590 672

கோவில் பற்றி

மூலவர் திருவடிவழகிய நம்பி பெருமான் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கிறார். நாபிக்கமலத்தில் ப்ரஹ்மா காட்சி அளிக்கிறார்.

திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்

ஆண்டாளுக்கு தனி சன்னதி. உற்சவ ஆண்டாள், அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது சிறப்பு.

ஸ்தலபுராணம்

வடிவழகியநம்பி, பிரம்மாவின் மேல் அன்பு கொண்டு, அவரின் கர்வத்தை அடக்கி, அவர்க்கு காட்சி அளித்ததால், இந்த ஊர் அன்பில் என பெயர் பெற்றது. திருமலையான் துறை மண்டகபுரி, பிரம்மபுரி  என்ற இந்த கோயிலுக்கு வேறு பெயர்களும் உண்டு.

பிரபல மண்டுக முனிவர் ஒரு சமயம் தண்ணீருக்குள் மூழ்கி நீண்ட கால தவம் செய்து கொண்டிருந்தார்.  அப்பொழுது அவரை தேடி துர்வாச முனிவர் வந்தார்.  தவத்தில் மூழ்கியிருந்த  மண்டுக முனிவர்,  துர்வாச முனிவர் வந்ததை கவனிக்கவில்லை.  வெகு நேரம் காத்திருந்தும் மண்டுக முனிவர் தன்னை காண வரவில்லை என்ற கோபத்தால் துர்வாசர், மண்டுக முனிவரை தவளையாக  மாறும்படி சாபமிட்டு விட்டார்.  இதற்கு பிறகு மண்டுக முனிவர்,  தன் தவற்றை உணர்ந்து துர்வாச முனிவரிடம் சாபவிமோசனம் கேட்க துர்வாச முனிவர் ” இந்த திருத்தலத்தில் உள்ள பெருமாளை நோக்கி பிரார்த்தனை செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்.  மறுபடியும் மனிதனாக மாறலாம் என்று வழிகாட்டினார்.  அதன்படியே மண்டுக முனிவர் அன்பில் உள்ள திரு வடிவழகிய நம்பி பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.

சிறப்பு

This divya desam is also known as Triveni, as the three rivers Kaveri, Savitri and Phalguni rivers are said to have merged into one and flowing near this divya desam. Savitri and Phalguni are said to be flowing underground. Hence this place is also known as Dakshina gaya. Those who cannot go to Gaya, can perform the sradha for their forefathers here with an equal holy effect.

Google Map

திருஅன்பில் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருஅன்பில் பற்றி சொல்வது

Thanks to friends from whatsapp group.

004 திருவெள்ளறை thiruvellarai

பங்கயச் செல்வித்தாயார் ஸமேத புண்டரீகாக்ஷப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவெள்ளறை, வேதகிரி க்ஷேத்திரம் உத்தம ஷேத்ரம், ஹித ஷேத்ரம்
மூலவர்புண்டரீகாக்ஷன்
உத்ஸவர்செந்தாமரை கண்ணன்
தாயார்பங்கஜவல்லி, செண்பகவல்லி, பங்கயச்செல்வி
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்24
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 13 ;
பெரியாழ்வார் – 11
தொலைபேசி எண்+91 431 256 2243; +91 93451 18817

கோவில் பற்றி

பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில். இக்கோயிலில் நந்தவனங்கள்,கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும்.  அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையான பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது சேர்த்து ‘திருவெள்ளறை ’ எனப்படுகிறது. வரை என்பதற்கு குன்று என்ற அர்த்தம் உள்ளதால், மலைமேல் உள்ள கோவிலான இதனை, திருவெள்ளரை என்று சொன்னாலும் தகும்.

வராஹ அவதாரத்தை நினைவுப் படுத்தும் ஷேத்திரம்.

இக்கோயிலில் உத்தராயண வாசல், மற்றும் தட்சிணாயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் எம்பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

கோவில் மதில்களுக்குள்ளே ஏழு தீர்த்தங்கள் உள்ளன. ஸ்வஸ்திக் வடிவில் உள்ள புஷ்கரணி தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்த ஸ்வஸ்திக்குளம் ஒரு துறையில் குளிப்பவர்களை இன்னொரு துறையில் குளிப்பவர்கள் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்தம் மணிகர்ணிகா தீர்த்தம் என்ற சிறப்புடன் விளங்கிறது.

ஸ்தல புராணம்

சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) எம்பெருமான் காட்சி தந்ததால் எம்பெருமானுக்கு ச்வேதபுரிநாதன் என்றும் இந்த ஊருக்கு ஸ்வேதபுரி என்றும் பெயர் சொல்வார்கள்.

தாயார் ஸ்தலம்

எம்பெருமானுக்கு மூன்று தேவிமார்கள்.  ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளா தேவி. இவர்கள் முறையே, திருவெள்ளறை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நாச்சியார்கோவில்  ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் பிரதானமாக இருக்கிறார்கள். இவ்விடத்தில் தாயாரை வணங்கிய பின்னே எம்பெருமான் சந்நதிக்கு செல்ல இயலும். புறப்பாடு ஆகும்பொழுதும் தாயார் பல்லக்கு முன்செல்ல, எம்பெருமான் பல்லக்கு அதை தொடர்ந்து செல்லும். செண்பகவல்லி என்கின்ற பங்கயச் செல்வி தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

பெரியாழ்வார் கண்ணனின் மேல் கொண்ட பரிவால், குழந்தைக்கு கண் திருஷ்டி வராமல் இருக்க அவனுக்கு காப்பு கட்ட அழைக்கும் பாடல் தொகுப்பு, “இந்திரனோடு பிரமன், ஈசன் இமையவர் எல்லாம்“. (பெரியாழ்வார் திருமொழி, 2.8).  ஆழ்வார் திருவெள்ளறை பெருமாளையே இந்த பத்து பாடல்களிலும் ஸ்ரீ கிருஷ்ணராக கொண்டு உள்ளார்.  பகவானை நோக்கி தவம் செய்த பிராட்டிக்கு (பங்கயச் செல்வி) பெருமாள் செந்தாமரைக் கண்ணனாய் காட்சியளித்தார். 

ஸ்ரீதேவி தாயாரின் பிரதான தேசமான திருவெள்ளறையை ஆழ்வார் குழந்தைக்கு கண் திருஷ்டிப்  படாமல் இருக்க எடுத்துக்கொண்டது மிக உகந்ததுவே.

ஓராண்வழி வந்த வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரான உய்யக்கொண்டார் என்ற ஆச்சாரியார் தோன்றிய ஸ்தலம். உடையவர் (இராமானுஜர்) வைணவத்தை வளர்ப்பதற்கு வாசம் செய்த ஸ்தலம்.

Google Map

திருவெள்ளறை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவெள்ளறை பற்றி சொல்வது

003 திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில்)

பூர்ணவல்லித்தாயார் ஸமேத புருஷோத்தமப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கரம்பனூர் / உத்தமர்கோவில் / பிச்சாண்டார்கோவில் / கதம்ப க்ஷேத்திரம்
மூலவர்புருஷோத்தமன்
உத்ஸவர்புருஷோத்தமன்
தாயார்பூரணவல்லித்தாயார், பூர்வாதேவி
திருக்கோலம்கிடந்த
திசைகிழக்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1

பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே கோவிலில் இருந்து அருளும் ஸ்தலம்.

ஜனக மன்னன் இங்கு யாகம் செய்தாதாகவும் எம்பெருமான், பிரஹ்மாவுடனும் சிவனுடன் அவருக்கு காட்சி கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

சிவன் பிச்சாடனராக வந்து தன் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என்பதால் பிச்சாண்டார்கோவில் என்றும், மஹாவிஷ்ணு கதம்ப மரமாக நின்றதால், கதம்பனூர் என்றும் அழைக்கப்படுகின்றன. சப்த குரு ஸ்தலம் என்ற பெயரும் உண்டு.

கரம்பனூர் உத்தமனை” என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கம் அளித்த பெரியவாச்சான் பிள்ளை “வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்து கிடக்கிறவனை.”  என்று சொன்னார். அது அன்று அவ்விடத்துக் கோபுர வாசலுக்குக் கதவு இல்லாமல் இருந்ததை சொன்னது. அது திருமாலின் திவ்யகுணங்களில் ஒன்றான ஸௌலப்யம் என்பதை பிரதிபலிக்கும். ஸௌலப்யம் என்பது பெரியவர், தாழ்ந்தவர்களிடம் அன்புடன் பேதமில்லாமல் கலப்பது. இப்படிப்பட்ட சௌலப்யத்தைக் கொண்டே உத்தமன் என்று திருநாமமிடப் பெற்றான். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாரும், ஆண்டாளும் தான் எம்பெருமானை உத்தமன் என்று பெயரிட்டுள்ளனர். (ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி)

Google Map Location

பிரம்மாவிற்கு கோவில் உள்ள ஒரே ஸ்தலம் இது மட்டும் தான். சரஸ்வதியுடன் இங்கு இவர் அருள் பாலிக்கின்றார். கார்த்திகை தினத்தில், சிவனும், விஷ்ணுவும் திருவீதி உலா வருவது ஒரு சிறப்பு. பிரம்மாவிற்கு இடப்புறத்தில், ஞான சரஸ்வதி தனி சன்னதியில் தெற்கு நோக்கி சேவை புரிகிறார். இவர் கைகளில் வீணை இல்லாமல், ஓலைச்சுவடி மற்றும் ஜெபிக்கின்ற மாலைகளுடன் காட்சி அளிக்கிறார்.

விஷ்ணு உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்று சேவை சாதிக்கின்றார். மூலவர் கிழக்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். பூர்ணவல்லி தாயார் தனி சந்நிதியில் அருளுகிறார். உணவு பஞ்சமில்லால் இருக்க இவர் அருளுகிறார். அருகே மஹாலக்ஷ்மி தாயாருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. சிவன் மேற்கு நோக்கி, பெருமாளுக்கு பின் புறத்தில் லிங்க ரூபத்தில் காட்சி அளிக்கிறார். உத்சவர் பிச்சாண்டாராக காட்சி தருகிறார்.

பிரம்மாவின் ஒரு தலையை கொய்த சிவபெருமான், அந்த பாவம் தீர, பிச்சாண்டாராக இந்த ஸ்தலத்திற்கு வந்தபோது மஹாலக்ஷ்மி அவருக்கு உணவு அளித்து, அவரின் பசியைத் தீர்த்ததால் மகாலட்சுமிக்கு பூர்ணவல்லி என்ற திருநாமம் உண்டானது.

திருமங்கையாழ்வார் இங்கு இருந்தபடிதான், திருவரங்கத்திற்கு மதில் மண்டபம் போன்ற திருப்பணிகள் செய்தார் என்றும் அதனாலேயே இங்கு ஆழ்வார் பட்டவர்த்தி என்று ஒரு இன்றும் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

புகைப்படம் கொடுத்து உதவிய whatsapp group நண்பர்களுக்கு நன்றி. உத்தமர்கோயில் ஸ்ரீ புருஷோத்தபெருமாள் காவேரி வடகரையில்

திருக்கரம்பனூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருகரம்பனூர் பற்றி சொல்வது

002 உறையூர் / URAIYUR

வாசலட்சுமி தாயார் ஸமேத அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கோழி / உறையூர் / உறந்தை / நிசுளாபுரி
மூலவர்அழகியமணவாளன்
உத்ஸவர்
தாயார்கமலவல்லி நாச்சியார், வாஸலக்ஷ்மி, உறையூரவல்லி
திருக்கோலம்நின்ற
திசைவடக்கு
பாசுரங்கள்2
மங்களாசாசனம்திருமங்கை ஆழ்வார் 1
குலசேகர ஆழ்வார் 1

பங்குனி உத்திரம்

திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் உறையூரும் பங்கு பெற்றுஉள்ளது. உறையூர் தாயார் பங்குனி ஆயில்ய நக்ஷத்திரத்தில் உதித்தவர் ஆகையால், திருவரங்க பெருமாள் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திர பெருவிழாவில், 6ம் நாள், ஆயில்ய நக்ஷ்த்திரத்தன்று காவிரி, குடமுருட்டி ஆறுகளை கடந்து உறையூர் எழுந்தருளி, கமலவல்லி நாச்சியாருடன் உறையூர் சேர்த்தி மணடபத்தில் மணக்கோலத்தில் இரவு வரை காட்சி தருகிறார்.

எம்பெருமான், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுப்பார். அப்பொழுது, நம்மாழ்வார் தான் வந்து சமரசம் செய்து வைப்பார். பிராட்டியாரும் நம் பெரியன் சொல்படி கேட்டோம் என்று ஆழ்வாருக்கு உயர்ந்த மரியாதையை தருவார்.   ‘நம் பெரியன்’ என்று சொன்னதால் நம்மாழ்வார் என்ற பெயர் தாயார் கொடுத்ததாக கொள்ளலாம்.

கோவில் பற்றி

தாயார் திருநாமம், கமலவல்லி தாயார். தாயார் பெருமாள் சந்நிதியில் பெருமாளுக்கு பக்கத்திலேயே வீற்றிந்த திருக்கோலம். தாயாருக்கு தனி சந்நிதி கிடையாது.

கார்த்திகை மாதத்தில், திருப்பாணாழ்வார் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. திருப்பாணாழ்வார் இந்த தலத்தில் அவதரித்தவர். இவருக்கு இங்கு தனி சன்னதி உண்டு.

கோவில் கோபுரம் 5 நிலை உடையது. பொதுவாக வைகுண்ட ஏகாதசி நாளன்று பெருமாள் சொர்க்கவாசல் கடந்து செல்லும் வைபவம் வைஷ்ணகோவில்களில் நடக்கும். ஆனால் உறையூரில் தாயார் சொர்க்கவாசல் கடந்து செல்லும் நிகழ்ச்சி தை அல்லது மாசி மாத தேய்பிறை ஏகாதசி அன்று நடக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பதில்லை. (please reconfirm with the temple authorities, thanks)

அரங்கநாதரே கமலவல்லி நாச்சியாரை மணந்து கொண்டதால், இங்குள்ள பெருமாளும், தாயாரும், அவரை நோக்கி வடக்கு திசையை பார்த்து தரிசனம் செய்கிறார்கள். மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறார்.

ஸ்தலபுராணம்

சோழ மன்னனின் மகளாக அவதரித்த கமலவல்லி நாச்சியார், திருவரங்கநாதன் மேல் காதல் கொண்டு, விரதம் இருக்க, அழகியமணவாளன் இங்கு வந்து நாச்சியாரை மணம் புரிந்து கொண்டதாக ஸ்தலபுராணம்.

Google Map Location

உறையூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருக்கோழி அல்லது உறையூர் பற்றி சொல்வது

2021ம் வருட சேர்த்தி உத்சவம் – நன்றி Srirengavilasam Srirangam

012 திருக்குடந்தை / Thirukudanthai

கோமளவல்லித்தாயார் ஸமேத ஆராவமுதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்குடந்தை / பாஸ்கர க்ஷேத்திரம்
மூலவர்சாரங்கபாணி / ஆராவமுதன் / அபர்யாப்தாம்ருதன் / உத்தானஸாயி / ஆராவமுதாழ்வான்
உத்ஸவர் ஆராவமுதன்
தாயார்கோமளவல்லி / படிதாண்டாப்பத்தினி
திருக்கோலம்கிடந்த
திசைகிழக்கு
பாசுரங்கள்51
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 25
நம்மாழ்வார் 11
திருமழிசையாழ்வார் 7
பெரியாழ்வார் 3
பூதத்தாழ்வார் 2
பேய் ஆழ்வார் 2
ஆண்டாள் 1

ஸ்தல புராணம்

ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்க சென்றார். இதை திருமால் தடுக்க வில்லை. “உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்கள் என கோபப்பட்ட லட்சுமி கணவரைப் பிரிந்தார். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ‘அம்மா, கோபிக்க வேண்டாம், ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்விகமானவர் யார் என்று அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர், அந்த சோதனையின் விளைவே உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும் என்றார். லட்சுமி தாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசீர்வதித்தார். தன் சபதப்படி திருமாலை மணம் புரிவதாகவும், பூலோகத்தில், பிருகுவின் மகளாக பிறக்க போவதாகவுஜம், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேம புஷ்கரணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்டு, வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்து கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்ற வில்லை ஏந்தி வந்ததால், ‘சாரங்கபாணி எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் .என்கிறார்கள்.

உத்தான சயன பெருமாள் :

திருஆராவமுதன்

பெருமாள் பள்ளி கொண்டுஇருக்கும் ஸ்தலங்களில் பலவித சயனங்களில் காட்சி தருவார். இங்கு, ‘உத்தான சயன ‘ பள்ளி கொண்டு இருக்கிறார். இத்தலத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார், ஸ்வாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர் ‘நடந்த கால்கள் நொந்தவோ, ‘ என்றா பள்ளி கொண்டு இருக்கிறாய் என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளை கண்டு மகிழ்ந்த திருமழிசை ஆழ்வார், ‘அப்படியே காட்சி கொடு’ என்றார். ஸ்வாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டு இராமல், சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.

ஆசார்யன் மங்களாசாசனம் thanks to friends from whatsapp group for sharing this image

அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம்

திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் இவை இரண்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அத (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாசன் செய்யப்பட்டு இருக்கிறது. பேய் ஆழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள ஸ்ரீனிவாசன் மேட்டு ஸ்ரீனிவாசன்

திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கீழ் ஒளிந்து கொண்டார். திருமாலை காணாத தாயார் கலக்கம் அடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், பாதாள சீனிவாசன் சன்னதி என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்கு பிறகு இவர் மேடான இடத்தில, மெட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

Google Map

திருக்குடந்தை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருக்குடந்தை பற்றி சொல்வது

நம் வலைப்பதிவில் குடந்தை பற்றி

Thanks to friends from whatsapp group for sharing these images

திவ்யப்ரபந்தம் தந்த திருமால்

புகைப்படம் அனுப்பி உதவிய whatsapp குரூப் நண்பர்களுக்கு நன்றி

பெருமாளை குறித்து பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாடல்கள் நாலாயிர திவ்யப்ரபந்தமாக தொகுக்க பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவர். ஆம், நாதமுனி என்பவர் சார்ங்கபாணியை வணங்க வந்தார். அப்பொழுது சில பக்தர்கள் ஸ்வாமியின் பெருமையை ‘ஓராயிரத்தில் இப்பத்தும் ‘ என்று சொல்லி பாடினார். இன்னும் ஆயிரம் உள்ளதா’ என்று வியந்து மீதி பாடல்களையும் பாடும் படி கேட்டார். ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை.

அப்பொழுது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி, தூத்துக்குடி மாவட்டம்) சென்று நம்மாழ்வாரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்கும் என்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்கும் என்று வந்த இடத்தில, நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யபிரபந்தம் ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சார்ங்கபாணிக்கு “திராவிட ஸ்ருதி தர்சகாய நம” என்று ஒரு நாமாவளி. அதாவது “திராவிட வேதம் காட்டிய பெருமாளே போற்றி” என்பதாகும்.

சொர்க்கவாசல் இல்லாது ஏன் ?

திவ்யதேசங்களில், பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இததலத்து சுவாமி நேரே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும் இங்குள்ள உத்தராயண, தெட்சிணாயன வாசல்களை கடந்து சென்றாலே பரமபதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்தராயண வாசல் தாய் முதல் ஆனி வரையும் தெட்சிணாயன வாசல் ஆடி முதல் மார்கழி வரையும் ஸ்வாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் திறந்து இருக்கும்.

உபய பிரதான திவ்யதேசம்

திவ்யதேசம் தெரியும், அதென்ன, உபயப்ரதான திவ்யதேசம் என்கிறீர்களா? இதற்கான விளக்கம் இது தான். திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றுஇருப்பார். அவருக்கே பூஜையின் போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும், ஆனால், இந்த கோவில் உத்சவர்க்கு மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகின்றன. அதாவது உத்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார், எனவே, இத்தலம், உபய பிரதான திவ்யதேசம் எனப்படுகிறது.

வில்லுடன் பெருமாள்

பெருமாள் சங்கு சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்து இருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உத்சவர் இருவருமே சார்ங்கம் வைத்து இருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர் சாரங்கபாணி என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சாரங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால் மஹாமகத்திற்கு வாரும் நதி தேவதைகளும் தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதை காணலாம்.

மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை

இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால் அவளை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே இங்கே தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமாக இருந்தாலும், இத்தலத்தை பொறுத்தவரை தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்ய பட்டு இருக்கிறது. நடை திறக்கும் போது சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சந்நதியில் நடத்தப்பட்ட பிறகே சுவாமி சன்னதியில் நடக்கிறது.

பக்தனுக்கு ஸ்ரார்த்தம் செய்யும் பரந்தாமன்

லட்சுமி நாராயணஸ்வாமி என்னும் பக்தர் சார்ங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டுஇருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தை இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். ஸ்ரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால் நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால் தனக்கு சேவை செய்த தன பக்தருக்கு தானே மகனாக இருந்து இறுதி சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோவிலை திறந்து பார்த்த போது பெருமாள் ஈரவேட்டியுடன் மாற்றிய பூணூலுடன் தர்ப்பைகளுடன் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சி அளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்காக ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால் பக்தர்கள் பார்க்க முடியாது.

கோவில் பற்றி

மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி, மற்றும் மஹாலக்ஷ்மியுடன் பெருமாள், அருள் பாலிக்கிறார். நாபியில் ப்ரஹ்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். ஸ்வாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டு உள்ளன.

சிருஷ்டிக்கு வேண்டிய மூலப்பொருள்கள் உள்ள (அமிர்த கும்பம்) இந்த ஊரில் தங்கி விட்டதால் திருக்குடந்தை என்ற பெயர் என்று சொல்வதுண்டு.

தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 236 அடியும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் 165 அடியும், கொண்டவை. மூன்றாவது உயரமான கோபுரம் கும்பகோணம், சாரங்கபாணி கோவில் கோபுரம் ஆகும். 11 நிலைகளை உடைய இது 150 அடி உயரம் கொண்டது.

பெருமாள் சன்னதியே கருங்கல்லான தேர் சக்கரங்களுடன் காட்சி அளிக்கின்றது. ராமஸ்வாமி கோவிலும், சக்ரபாணி கோவில்களும் அருகே உள்ளன. சக்ரபாணியின் தமயனாராக கருதப்படும் சார்ங்கபாணியுடன் சேர்ந்து பல உற்சவங்கள் நடைபெறுகின்றன.

ராமஸ்வாமி கோவிலில், பரத, சத்ருக்குன, லக்ஷ்மணன் சீதையுடன் என்று சக்ரவர்த்தி திருமகனை பட்டாபிஷேக கோலத்தில் காணலாம். (இராமர் சீதை ஒரே சிம்மாசனத்தில் காட்சி). ஆஞ்சநேயர் வீணா வாசித்துக்கொண்டு இராமாயண புத்தகத்துடன் பாராயணம் செய்யும் காட்சியாக சேவை சாதிக்கிறார். இந்த கோவிலின் சுவர்களில், ராமாயணம் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளது. பட்டாபிஷேக இராமர் ஆனதால், லக்ஷ்மணன், இராமரின் வில்லுடன் சேர்ந்து இரண்டு வில் கொண்டு சித்திரத்தில் காணலாம்.

திருத்தேர் பற்றி

குடந்தை திருத்தேர்

தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு தேரில் சார்ங்கபாணி வந்தார். சுவாமி சன்னதி, தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இரு புறங்களிலும் உத்தராயண தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும் சுற்று புற சுவர்களில், அழகிய சிலைகளும் வடிக்க பட்டு உள்ளன. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கை ஆழ்வார் பாடி உள்ளார். இந்த பாடல் ரதபந்தம் என்று அழைக்கப்படுகிறது

இங்கு சித்திரை தேர் விசேஷமானது. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும். இத்தேரை திருமங்கையாழ்வாரே இப்பெருமானுக்கு அர்ப்பணித்தார். இத்தேரினையே மங்களாசாசனம் செய்வது போல் திருவெழு கூற்றிருக்கை
என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார்.

ஆழ்வார்கள்

108 திவ்யதேசங்களில், திருஅரங்கம், திருவேங்கடம் திவ்யதேசங்களுக்கு அடுத்தபடியாக அதிகமான ஆழ்வார்களால் பாடப்பட்ட ஸ்தலம்.

திருமழிசையாழ்வார்

ஆழ்வார் குடந்தை ஆராவமுதனுக்கு மங்களாசாசனம் செய்ய ஆரம்பித்தார்.

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே

குடந்தை கிடந்த பெருமாளையே, ஆழ்வார், தான் பெரியவன், உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன், நீ படுத்துக்கொண்டு உள்ளாயே, ”எழுந்திருந்து பேசு வாழி கேசனே ” என்று கூறுகிறார்.   திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், பக்திஸாரர் என்றும் போற்றப்படும் திருமழிசை ஆழ்வாரின், “எழுந்திருந்து பேசு ” என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க, பாதி எழ தொடங்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று வாழ்த்தி, இனி எழுந்திருக்கவேண்டாம் என்ற அர்த்தத்தில் பாடினார். அந்தத் திருக்கோலத்திலேயே (தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத்தில்) (உத்தான சயனம்) இங்கு எம்பெருமான் அருள் பாலிக்கிறான்.

ஆழ்வாரும் ஆராவமுதனும் பரஸ்பரம் அன்பு பாராட்டி தங்கள் பெயரின் கடைசி பகுதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.   அதாவது ஆராவமுத பிரான், திருமழிசையாழ்வார் என்று இருந்த தங்கள் பெயர்களை ஆராவமுத ஆழ்வார் என்றும் திருமழிசை பிரான் என்றும் மாற்றிக்கொண்டனர்.   பிரான் என்றால் அளப்பரிய உதவி செய்பவன் என்று பொருள்.

திருமங்கையாழ்வார்

இந்த ஆழ்வார் ஆறு பிரபந்தங்கள் பாடி உள்ளார். எல்லா ப்ரபந்தங்களிலும் இந்த ஒரு திவ்யதேசம் மட்டுமே இடம் பெற்று, தனிச்சிறப்பு பெற்றது. வேறு ஒரு திவ்ய தேசத்திருக்கும் இப்படி ஒரு பெருமை கிடைக்கவில்லை.

ஆழ்வார் பாடிய முதல் திவ்யதேசம், திருக்குடந்தை ஆகும். பெரிய திருமொழி என்ற அவருடைய முதல் பிரபந்தத்தில் இரண்டாவது பாசுரத்திலேயே சூழ்புனல் குடந்தையை தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயண என்னும் நாமம் என்று பாடினார். இவர் கடைசியாக பாடிய திவ்யதேசமும், திருகுடந்தையே. தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே என்று (29) திருநெடுந்தாண்டகம் என்ற இறுதி பிரபந்தத்தில் இறுதி திவ்யதேசமாக குடந்தையை குறிப்பிட்டு உள்ளார்.

திருகுறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறியதிருமடல், திருவெழுகூற்றுஇருக்கை என்ற மற்ற நான்கு ப்ரபந்தங்களிலும் திருக்குடந்தை இடம் பெற்று உள்ளது. இதில் திருவெழுகூற்றுஇருக்கை திருக்குடந்தை திவ்யதேசத்திருக்காக மட்டுமே ஆகும்.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் திருவாய்மொழியில, ஐந்து முறை மோட்ஷம்,  வேண்டி கேட்டு உள்ளார். அதில் திருகுடந்தையும் ஒன்று. திருக்குடந்தையில் ஆராவமுதப் பெருமாளிடம்  உன் சரணம் தந்து என் சன்மம் களைவாயே  (5-8-7) என்ற பாசுரத்தின் மூலம் இரண்டாவது  முறை சரணாகதி வேண்டுகிறார்.

மேல் உலகத்தில் உள்ள எல்லோரும், “திருக்குடந்தை எம்பெருமானிடத்திலே   பல குலங்களாக அடிமைப்பட்டவர்கள்” (குடந்தை என் கோவலன் குடி குடியார்க்கே)(திருவாய்மொழி 10.9.7) என்று சொல்லி ஆழ்வாரை வரவேற்றார்கள்.  இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட  (பரமபதத்திலும்)  குடந்தை பெருமாளின் நினைவும் அனுபவமும் மறக்க முடியாதபடி இருந்தது என்று தெரிய வரும். நம்மாழ்வாரும் இறுதியாக பாடிய திவ்யதேசம் திருகுடந்தையே ஆகும்.

திவ்யதேசம் 12 திருக்குடந்தை (பாஸ்கர க்ஷேத்திரம் – கும்பகோணம்)
பெரியாழ்வார் 173, 177, 188
ஆண்டாள் 628
திருமழிசையாழ்வார் 807-812, 2417
திருமங்கையாழ்வார் 949, 954, 991, 1078, 1202, 1205, 1394, 1526, 1538,
1570, 1606, 1732, 1759, 1853, 1949, 2010, 2037,
2045, 2068, 2070, 2080, 2672, 2673(73) 2674 (114)
பூதத்தாழ்வார் 2251, 2278
பேய் ஆழ்வார் 2311, 2343
நம்மாழ்வார் 3194-3204
மொத்த பாசுரங்கள் 51

பெரியாழ்வார்

173.

கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்கநில் அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா

177.

ஆலத் திலையான் அரவி னணைமேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா

188.

குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய் குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.

ஆண்டாள்

628.

பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை, வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே, கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே

திருமழிசையாழ்வார்

807.

இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக, கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே, விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார், வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

808

சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன், அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான். கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர். பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே.

809

மரங்கெட நடந்தடர்த்து மத்தயானை மத்தகத்து, உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ சித்துகந்த வுத்தமா, துரங்கம்வாய்பி ளந்துமண்ண ளந்தபாதவேதியர், வரங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

810

சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில், கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா, காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை, காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே.

811

செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய், விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று, எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ், செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

812

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய், இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம், கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள், கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.

2417

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத், தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத் தனா வான்.

திருமங்கையாழ்வார்

949

ஆவியே அமுதே எனநினைந்துருகி அவரவர்ப்பணைமுலைதுணையா, பாவியேனுணரா தெத்தனைபகலும் பழுதுபோயொழிந்தனநாள்கள், தூவிசேரன்னம் துணையொடும்புணரும் சூழ்புனற்குடந்தையேதொழுது, என், நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.

954

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்இன்னதோர்த்தன்மையென்றுணரீர், கற்பகம்புலவர்களைகணென்றூலகில் கண்டவாதொண்டரைப்பாடும், சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையேதொழுமின், நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும்நாமம்.

991

ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய, தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற, தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே.

1078

அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க், கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ், நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர், நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

1202

வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப, நாணாளும் நின்னினைந்து நைவேற்கு,ஓமண்ணளந்த, தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த. தோளாளா, என்றனக்கோர் துணையாள னாகாயே.

1205

குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி! துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ!, முயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு, இதுநடுவே. வயலாலி மணவாளா. கொள்வாயோ மணிநிறமே.

1394

வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள்,எண்ணில், பேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான், தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே.

1526

பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும், சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை, கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை, நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே.

1538

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை, இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரணழிய, கடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால். நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே!

1570

வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான் மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச், சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச் சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன், கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் கோவி னைக்குட மாடிய கூத்தனை, எந்தை யையெந்தை தந்தைதம் மானை எம்பி ரானையெத் தால்மறக் கேனே?

1606

பேரா னைக்குடந்தைப் பெருமானை,இலங்கொளிசேர், வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை, ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற, காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.

1732

வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை, எந்தாய் போயறியாய் இதுவே யமையாதோ, கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த, மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே.

1759

தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த, சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட ராழியும் சங்குமேந்தி, பாடக மெல்லடி யார்வ ணங்கப் பன்மணி முத்தொடி லங்குசோதி, ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா.

1853

வானை ஆரமு தம்தந்த வள்ளலை, தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய், ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம், கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே

1949

இங்கே போதுங்கொலோ, இனவேல்நெடுங் கண்களிப்ப, கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால், இங்கே போதுங்கொலோ.

2010

அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த் திரைததும்ப ஆவவென்று, தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தானருளி, உலகமேழும், உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட, கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை நகர்ப்பாடி யாடீர்களே.

2037

மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட, கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப், பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப், பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?

2045

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி, நாளும், பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன், தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை, பாவியென் பாவி யாது பாவியே னாயி னேனே.

2068

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று, செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே, தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு, நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.

2070

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும், அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும், பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி, பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.

2080

அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை, குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து, வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும், நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே.

2672

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபெ ¡தி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.

2673

காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர், காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை, சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர்

2674

மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை, பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை, தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை, மன்னிய தண்சேறை வள்ளலை, – மாமலர்மேல்   (114)

பூதத்தாழ்வார்

2251

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால், தமருள்ளும் தண்பொருப்பு வேலை, – தமருள்ளும், மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே, ஏவல்ல எந்தைக் கிடம்.

2278

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ, செங்க ணெடுமால் திருமார்பா, – பொங்கு, படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய், குடமூக்கில் கோயிலாக் கொண்டு.

பேய் ஆழ்வார்

2311

சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம், நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த, மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி, இறைபாடி யாய இவை.

2343

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த, தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

நம்மாழ்வார்

3418

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே, நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே, சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை, ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!

(3419)

எம்மா னே!என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே, எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே, செம்மா கமலம்  செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை, அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே.

(3420)

என்நான் செய்கேன்? யாரே களைகண்? என்னையென் செய்கின்றாய்? உன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன், கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்ணாள், சென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே.

(3421)

செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!, உலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!, நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான், அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே.

(3422)

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன், தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன், செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!, தொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

(3423)

சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடி சேரும், ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன்?, வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே! யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரியேறே!

(3424)

அரியே றே!என் அம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே, எரியேபவளக் குன்றே! நாற்றோள் எந்தாய்! உனதருளே, பிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே, தரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே.

(3425)

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன், வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா! தளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது, இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே.

(3426)

இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே! அசைவில் அமரர் தலைவர்! தலைவா ஆதி பெருமூர்த்தி! திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை, அசைவில் உலகம் பரவக் கிடந்தாய். காண வாராயே.

(3427)

வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்! ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

(3428)

உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான், கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன், குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும், மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.

RAMASWAMY TEMPLE: SRI RAMAN posing in Pattabishega Thirukkolam. Aanjaneyar in sitting posture with veena in one hand and Rama Nama Parayana Book on the other. Ramayana Pictorial story is painted in Pragaram

In this Divya Desam Thayaar is also known as Padi Thanda Pathini. Thiruveedhi ula is only
for Perumal. Thayar will not come out of the Temple.

CHAKRAPANI TEMPLE: CHAKRATHAZHVAR posing with Ashta Bujangal. Perumal is elder

001 திருவரங்கம் / 001 Thiruvarangam

ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருஅரங்கம் / பூலோக வைகுந்தம்
மூலவர் ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன்
உத்சவர் நம்பெருமாள்
தாயார் ரங்கநாயகி / ரங்கநாச்சியார்
திருக்கோலம் கிடந்த
திசை தெற்கு
பாசுரங்கள் 247
மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் -73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55
பெரியாழ்வார் – 35
குலசேகர ஆழ்வார் – 31
திருமழிசையாழ்வார் – 14
நம்மாழ்வார் – 12
ஆண்டாள் -10
திருப்பாணாழ்வார் – 10
பூதத்தாழ்வார் -4
பேய் ஆழ்வார் – 2
பொய்கையாழ்வார் – 1

கோவில் பற்றி

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களில் முதன்மை ஆனதாகவும், ‘கோவில்’ என்றாலே அது திருவரங்கம் என்று பெயர் பெற்றதும், பூலோக வைகுந்தம் என்று பெயர் பெற்றதும் போக மண்டபம் என்றும் சில சிறப்புகள் ஆகும்.

21 கோபுரங்கள், 7 சுற்று பிரகாரங்கள், சுமார் 54 சன்னதிகள், 156 ஏக்கர் நிலப்பரப்பில், என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவிலேயே மிக பெரிய ராஜகோபுரம் (சுமார் 236 அடி உயரமும், 13 நிலைகளும்) ஆகும். அஹோபில ஜீயர் அவர்களின் கடும் முயற்சியால் இந்த ராஜகோபுரம் கட்டப்பட்டது.

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

திருவரங்கம், ஸ்ரீவைகுந்ததில் இருந்து விழுந்த ஒரு துளி என்று சொல்வதுண்டு. இந்த கோவிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.

மூலவர் ரங்கநாதர் கர்பகிரகத்தின் மேல் உள்ள தங்க கோபுரத்தின் தெற்கு பக்கம் பரவாசுதேவர் தங்க விக்ரஹம் உள்ளது.

மூலவர் உத்சவர் இருவருக்கும் ரேவதி நக்ஷத்திரம். தாயாருக்கு உத்திரநக்ஷத்திரம்.

இங்கு தாயார் சன்னதியில் உற்சவர் தவிர இரண்டு மஹாலக்ஷ்மி தாயார்கள் ஒருவர் பின் ஒருவராக காட்சி அளிப்பர். இவர்களில் ஒருவர், முஸ்லீம் மன்னர்கள் படையெடுப்பின் போது மறைத்து வைக்கப்பட்டு, பின் ஒருநாள் காணப்பெற்று மீண்டும் சன்னதியில் காட்சி அளிக்கிறார்.

மேட்டு அழகிய சிங்கர் சன்னதி, தாயார் சன்னதி அருகில் உள்ளது, இங்கே தான் கம்ப ராமாயணம் அரங்கேற்ற மண்டபமும் உள்ளது. மருத்துவக் கடவுளான தன்வந்த்ரிக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. சக்ரத்தாழ்வார், கருடாழ்வார், ராமானுஜர், தேசிகன், கருடமண்டபம் என்று சேவிக்க வேண்டிய பல சந்நதிகள் உள்ளன.

ஸ்ரீரங்கவிமானம், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என்று யார் தன்னை பிரதக்ஷிணம் செய்தாலும், அவர்களுக்கு மிக உயர்ந்த பலனைக் கொடுப்பதாக, பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இந்த விமானத்தை 24 முறை சுற்றி வந்தவன் ஒரு கோடி காயத்திரி மந்திரம் சொன்ன பலனை அடைகிறான் என்றும் அதே புராணம் கூறுகிறது. இரண்டு முறை சுற்றி வந்தால், எல்லா லோகங்களையும் சுற்றிவந்த பலன் கிடைக்கும். இந்த ரங்க விமானத்தை தரிசிப்பது, நமஸ்கரிப்பது மற்றும் சுற்றி வருவது என்பவைகளை பக்தியுடன் செய்தால், இந்த உலகவாழ்க்கையில் இருந்து விடுதலை அழித்து மோக்ஷம் தருவதாக, எம்பெருமான் தாயாரிடம் சொல்லிக்கொண்டு இருந்ததை தான் கேட்டதாக, ப்ரஹ்மா சொல்வது இந்த புராணத்தில் வருகிறது.

ராமன் ஆராதித்த பெருமாள்

சத்யலோகத்தில் பிரம்மாவால் ஆராதிக்கப்பட்டு வந்தவர் இந்த ரங்கநாதர். சூரிய வம்ஸ மன்னர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்களால் ஆராதிக்கப்பட்டு வந்தவர். சக்ரவர்த்தி திருமகனான இராமன், ரங்கநாதரை தன் ஆராதனை பெருமாளாக கொண்டதாக வால்மீகி ராமாயணமும் கூறுகிறது. பட்டாபிஷேகத்திற்கு முதல்நாள் கைகேயியை சந்திப்பதற்கு முன்னால் ரங்கநாதரை ஆராதனை செய்யும் காட்சி உள்ளது. இந்த கோவில் இராமாயண காலம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோவில்.

ஸ்தல புராணம்

இராமன் இராவணனோடு யுத்தம் செய்ததில் தனக்கு உதவிய விபீஷணனுக்கு இவரை பரிசாக வழங்கினார். விபீஷணன் இலங்கை நோக்கி செல்லும் வழியில் இவரை திருவரங்கத்தில் சிறிது நேரம் கீழே இறக்கி வைத்தார். பின் அவரால் திரும்பி எடுத்து செல்ல இயலவில்லை. பெருமாளின் திருவுள்ளப்படி அங்கேயே அவரை எழுந்தருளச் செய்தார்.

தெற்கு நோக்கி

தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும் (பெருமாள் திருமொழி 1.10) என்று குலசேகர ஆழ்வார் சொல்வது போல், எம்பெருமான் தனக்குப் பிரியமான விபீஷ்ணன் வாழும் தெற்கு திசையை நோக்கி கண்வளர்ந்து அருள்கிறார்.

மணவாளனான திருவரங்கன் பள்ளிகொண்டு இருக்கையில் தெற்கு திசையை நோக்கி கடாக்ஷித்து கொண்டு இருப்பது மணமகளான ஆண்டாளுக்காகவே மட்டும் என்றும் சொல்வதுண்டு. வேதாந்த தேசிகன் என்னும் ஆச்சார்யர் தன்னுடைய கோதா ஸ்துதி (11) என்ற நூலில், தெற்கு திசை பெருமை பெற்றதே ஆண்டாள் திருவரங்கதிற்கு தெற்கு திசையில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததால் தான் என்கிறார்.

நம்பெருமாள் திவ்யதரிசனம் – நன்றி whatsapp குரூப் நண்பர்கள்

Google Map

திருவரங்கம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீ வேளுக்குடி சுவாமி

தினம் ஒரு திவ்யதேசம் திருவரங்கம் பற்றி சொல்வது

திருவரங்கம் பற்றி நம் வலைப்பதிவுகளில்

Thanks to friends from Whatsapp group

நம்பெருமாள் பெயர் காரணம்

ஸ்ரீரங்கத்தில் எழுத்தருளியிருக்கும் ரங்கநாதரின் மூலவரின் திருப்பெயர் “பெரிய பெருமாள்” என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் உற்சவரான அழகிய மணவாளனுக்கோ “நம்பெருமாள்” என திருப்பெயர். கலாப காலத்தில், திருவரங்கத்தில் உற்சவரை போலவே ஒரு திருமேனியை செய்து, அந்த மூர்த்திக்கு திருவாராதனம் செய்து வந்தனர். கலாப காலம் முடிந்த பின்னர், அழகிய மணவாளனையும் திருவரங்கம் எழுந்தருள, எவர் உண்மையான உற்சவ மூர்த்தி என்று கண்டுபிடிக்க அரும்பாடு பட்டனர்.

அச்சமயத்தில்,வயது முதிர்ந்த, கண் பார்வை இல்லாத ஸ்ரீ வைஷ்ணவ வண்ணான் தான் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன தீர்த்தம் மூலமாக கண்டுபிடித்தார் எனவும், அவர் தான் “நம்பெருமாள்” என் உற்சவ மூர்த்திக்கு பெயர் சூடியதாக என்பதை பல்வேறு சரிதம் மூலம் அறிகிறோம்.

ஒரு சலவை தொழிலாளி இது தான் “நம் பெருமாள்”என சொன்னதை, அரங்கன் அடியார்கள் ஒப்புக்கொண்ட நாள் வைகாசி 17. ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றான். ஆனால் திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் சென்றான்.

1310 ஆம் ஆண்டு மாலிக் கபூர் படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர்…

ஆனால், 1323 ஆம் ஆண்டு முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது.

1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர். ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப் பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.

தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது.

இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள்… எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு , பயன்படுத்தப்பட்டு இருக்கும். அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார்.

அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.

இந்து கோவில்கள் சிதைப்பு மற்றும் திரு அரங்கன் உலா வந்த இந்த 48 ஆண்டுகள் பற்றிய முழு வரலாற்று தகவல் ஶ்ரீவேணுகோபாலன் அவர்கள் எழுதிய ” திருவரங்கன் உலா” என்ற புத்தகமாக வந்துள்ளது…

அழகியமணவாளன்

இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம். அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகிய மணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில் ஏற்றுக் கொண்டார்.  திருவரங்கனுக்கு ஏழு நாச்சிமார். அவர்கள்,

  • ஸ்ரீ தேவி
  • பூமாதேவி
  • ரங்கநாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்)
  • கோதை என்னும் ஆண்டாள் (இவர் பெரியாழ்வாரின் திருமகள்)
  • கமலவல்லி நாச்சியார் (உறையூர் நாச்சியார், பங்குனி உத்திரதிருவிழா 6ம் நாள் உறையூரில் சேர்த்தி )
  • சேரகுலவல்லி நாச்சியார் (இவர் குலசேகர ஆழ்வாரின் திருமகள், ஸ்ரீராமநவமி அன்று சேர்த்தி)
  • துலுக்கநாச்சியார் (டெல்லி பாதுஷாவின் மகள், எம்பெருமான் மீது தீராத அன்பு, அதனாலேயே இங்கு பெருமாளுக்கு ரொட்டி நிவேத்யம் )

திருவரங்கம் திருச்சுற்றுகள் (பிரகாரங்கள்)

திருவரங்கம் சப்த பிரகாரங்கள் என்று ஏழு திருச்சுற்றுக்கள் ஏழு மதில்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருப்பதாக பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.  ஏழு உலகங்கட்கு உண்டான பெயர்களையே இந்த ஏழு மதில்கட்கு வைத்திருப்பதும், பூலோகத்திலிருந்து ஒவ்வொரு உலகமாக கடந்து சென்றால் ஏழாவது உலகமாக சத்திய லோகம் என்றும் சொல்வது போல் சத்யலோகத்தில் இருந்த வந்த எம்பெருமான் ஏழாவது திருச்சுற்றில் எழுந்தியருளி உள்ளான்.

இன்று பெரிய ராஜகோபுர வாசலைக்கொண்டு ஏழு திருசுற்றுக்களை உள்ளடக்கிய எட்டாவது சுற்றினையும் சேர்த்து கீழே ஒரு சிறு அட்டவணையின் மூலம் அவை என்ன என்றும், அங்கு என்ன உள்ளன என்றும் ஒரு பார்ப்போம். இதற்கு மிகவும் உதவியாக இருந்த 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு என்ற நூலை எழுதிய ஆசிரியர் டாக்டர்.வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

எண்ஏழு லோக பெயர்கள்திருச்சுற்று மற்றும் வாசல்உள்ளவை முக்கிய சன்னதிகள்முக்கிய மண்டபங்கள்முக்கிய நிகழ்வுகள்
8அடைய வளஞ்சான் திருச்சுற்றுமொட்டை கோபுரம், முனியப்பன் கோட்டை வாசல்மிக உயர்ந்த ராஜகோபுரம் ராயர்கோபுரம் தெற்கு கோபுரம்முனிக்கு அப்பனான ஸ்ரீநிவாசன்
7பூலோகம்ராஜ வீதி, சித்திரை வீதிகடைகள் வீடுகள்கண்ணன் சந்நிதி, ஆஞ்சநேயர் கோவில்வானமாமலை மண்டபம்
6புவர் லோகம்திருவிக்ரமன் திருவீதி, உள்திருவீதி / உள்வீதி / உத்திர வீதிஸ்ரீரங்க நாராயண
ஜீயர் மடம், அஹோபில மடம், மணவாள
மாமுனிகள் மடம்
யானை கட்டும் மண்டபம்இராமானுஜர் தங்கி இருந்து திருவரங்கம் கோவில் நிர்வாகம் செய்த மடம்
5சுவர் லோகம்நான்முகன் கோட்டை வாசல், அகளங்கன் திருச்சுற்றுசோழமன்னன் அகளங்கன் கட்டிய மதில்தாயார் சன்னதி, ஆண்டாள்,
சக்கரத்தாழ்வார், வேணுகோபால கிருஷ்ணர், மேட்டழகிய
சிங்கர் (நரசிங்கப் பெருமாள்), தொண்டரடிப் பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், கூரத்தாழ்வார், இராமானுஜர், பிள்ளை
லோகாச்சார்யார்,
தேசிகன்
எம்பெருமான் திருஷ்டி கழிக்கும் (திருவந்திக் காப்பு) நாலுகால் மண்டபம், ஸ்ரீரங்க விலாச
மண்டபம், வஸந்த
மண்டபம், கம்பர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபமும் அதன் நடுவே உள்ள திருமாமணி மண்டபமும்
வைகாசி திருவிழா வசந்த மண்டபத்தில் நடக்கும் ; திருமாமணி மண்டபத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று
தொடங்கும் திருவாய்மொழித் திருநாள் உற்சவம் நடக்கும்
4மஹர் லோகம்திருமங்கை மன்னன்
சுற்று, ஆலிநாடான் வீதி கார்த்திகை கோபுர வாசல்
திருமங்கை ஆழ்வார் கட்டிய மதில், சொர்க்க வாசல் , சந்திர புஷக்ரணி, பிரசாதம் விற்கும் இடம்தன்வந்திரி, கருடாழ்வார், முதலாழ்வார்கள் மூவர், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள் சன்னதிகள்பரமன் மண்டபம்
3ஜநோ லோகம்ஆர்யபட்டர் வாசல், குலசேகரன் திருச்சுற்று102 தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்ட
துவஜஸ்தம்பம் (கொடிமரம்)
உள்கோடை மண்டபம், பரமபதவாசல்,
டோலோத்ஸ்வ (ஊஞ்சல் உற்சவம்) மண்டபம்
2தபோ லோகம்ராஜ மகேந்திரன்
திருச்சுற்று, நாழிகேட்டான் வாசல்
ராஜமகேந்திர சோழனால் கட்டப்பட்டது. யாகசாலை, கண்ணாடி அறை, திருப்பரி வட்டாரங்கள் வைக்குமிடம்சேனை முதலியார் சன்னிதி, துலுக்க நாச்சியார் சன்னிதிகிளி மண்டபம்
குடும்பத்துடன் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காட்சி; மணவாள மாமுனிகள் ஸ்ரீசைலேச தனியனை பெற்றது; கற்பூரப் படியேத்தம்,
கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று நடைபெறும்.
1சத்திய லோகம்திருஅணுக்கன் திருவாசல்சோழமன்னன் தர்மவர்மன் கட்டியதுதிருவரங்கன் கருவறை (மூலஸ்தானம்)ரங்கமண்டபம் /
காயத்ரி மண்டபம்
இதில் உள்ள 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாக
கூறுவர்.

திருவரங்கம் வரைபடம்

திருவிழாக்கள்

திருவரங்கத்தில் எல்லா நாட்களும் திருநாட்களே. வருடத்தில் 300 நாட்களுக்கு மேலாக இங்கு ஏதாவது உற்சவம் நடந்து கொண்டே இருக்கும். தை, மாசி, மற்றும் சித்திரை என்ற 3 பிரம்மோத்ஸவங்கள், வைகுண்ட ஏகாதசி, மாசி மாத தெப்ப திருவிழா என்று பல விழாக்கள் இருந்தாலும், சிலவற்றை இங்கே காண்போம்.

வைகுண்ட ஏகாதசி

இந்த வருட வைகுந்த ஏகாதசியின் முக்கிய திருநாட்கள் உங்கள் பார்வைக்கு :

பகல் பத்து மற்றும் இராப்பத்து என்று இரண்டு பத்து நாட்களில் எம்பெருமான் முன்னிலையில் திவ்யப்ரபந்த பாசுரங்களை சேவிப்பார்கள். இது பற்றி மேலும் இங்கே காணலாம். திருவரங்க திருநாள் என்று ஆசையுடன் அழைக்கப்படும் இந்த வைகுந்த ஏகாதசி விழா முடிந்தவுடன், மீண்டும் அடுத்த ஆண்டும் இந்த விழாவை சேவிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் முடிப்பார்கள்.

திருவரங்க திருநாளும் நிறைந்தது. அரங்கன் சேவையில் திரண்ட மக்கள் மனமும் கரைந்தது. அழகாய் ஆபரணங்கள், மிடுக்காய் நடை, அசைந்து ஏறிய படியேத்தம், இனிய வீணை ஏகாந்தம், கானம் குளிர்ந்த அரை சேவை, பரவசமான பரமபதவாசல் திறப்பு, காண கண் கோடி வேண்டிய முத்தங்கி, ரத்தினங்கி சேவைகள், நளினமான நாச்சியார் திருக்கோலம், மின்னலென வந்த கைத்தல சேவை, துல்லியமான வையாளி – வேடுபறி, பொங்குபுனல் தீர்த்தவாரி, அவபிரத ஸ்நானமாய் கண்டருளிய திருமஞ்சனம், ஆசை ஆசையாக ஆழ்வாருக்கு தன்னுடைசோதியை காட்டிக் கொடுத்த மோக்ஷானுபவம், ஆழ்வார்- ஆச்சார்ய புருஷர்களின் குழாமும் அவர்களுக்கு அளித்த மரியாதையும், கொட்டும்- தட்டும்-முட்டும்-மங்களவாத்ய முழக்கமும், அலங்கார அன்னமும், திருப்பாவாடை பிரசாதமும், வெள்ளிச் சம்பா அமுதுபடியும், செல்வர் அப்பமும், உருப்படி வடையும் இனிதாக கண்டருளி, பகலில் சாதராவும், இரவில் பனி சல்லாவும், குளிர் தெரியாத வெட்டிவேர் சப்பரமும், கண் திருஷ்டி படுமோ என்று எடுத்த திருவந்தி காப்பும், சிம்ம, ஸர்ப கதி நடையும், நாலாயிரமும் சேவி மடுத்த நம்பெருமாளின் சேவை இதே போல் இனி அடுத்த வருடமும் நமக்கு கிடைக்க அவரை ப்ரார்த்திப்போம்.

(மேலே கொடுத்துள்ள இந்த பிரார்த்தனை பகுதியை எழுதிய whatsapp நண்பருக்கு நன்றி.)

அரையர் சேவை
திருமங்கையாழ்வார் காலத்திலும் சரி, நாதமுனிகள் காலத்திலும் சரி, திருவரங்கத்தின் பெருவிழாவாக, மார்கழித் திருவிழா முத்தமிழ் விழாவாகவே மலர்ந்திருந்தது. இந்த மூன்று தமிழையும் உள்ளடக்கிய ஒரு தொண்டு “அரையர் சேவை” என்று அழைக்கப்படுகிறது. அரையன் என்றால் அரசன் என்று பொருள். (புள் அரையன் – கருடன்). இப்பொழுது தமிழகத்தில் திருவரங்கம் திருவில்லிபுத்தூர்,ஆழ்வார் திருநகரி ஆகிய திருத்தலங்களில் இக்கலை வடிவம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகவும் பின்பாகவும் இந்த அரையர் சேவை நடக்கும். நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பரப்புவதற்காக தமது மருமக்களாகிய மேலை அகத்து ஆழ்வான், கீழை அகத்து ஆழ்வான் ஆகிய இருவருக்கும் இசையுடன் பாசுரங்களைக் கற்றுக் கொடுத்தார். அவர் வழியினர்களே, இசை நாடக அபிநயத்தோடு பாசுரங்களைப் பாடும் அரையனக்கியமான விஷயம் மேடை இருக்காது. இறைவன் முன்னால் பிரபந்தப் பாடல்களைப் இசையோடு பாடுவார்கள். அவர்கள் கையில் உள்ள ஒரு தாளத்திற்கு நாதமுனிகள் என்று பெயர். ஒரு தாளத்திற்கு நம்மாழ்வார் என்ற பெயர். தலையில் வெல்வெட்டால் செய்யப்பட்ட குல்லாய் அணிந்திருப்பார்கள்.

நாதமுனிகள் பேரரான ஆளவந்தார் தம்முடைய குமாரனுக்கு திருவரங்கப் பெருமாள் அரையர் என்று பெயர் சூட்டி னார். திருவரங்கப் பெருமாள் அரையர் ராமானுஜரின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவர் .இந்த அரையர்கள் திருவரங்கத்தில் முத்தமிழ் கைங்கரியத்தைச் செய்வதற்காகவே இருந்தனர். ‘‘வரம் தரும் பெருமாள் அரையர்” ‘‘நாத வினோத அரையர்” என்ற அருளப் பாடுகள் உண்டு.

ராமானுஜர் காலத்தில் இப்பெருவிழாவில் பல மாற்றங்கள் நடந்தன. இராமானுஜர் காலத்தில் திருவரங்கத்து அமுதனார் என்கின்ற ஆசாரியர் பிரபன்ன காயத்ரி என்று சொல்லப்படுகின்ற 108 கட்டளைக் கலித்துறை பாசுரங்களால் ஆன அந்தாதி நூலை இயற்றினார். அந்த நூலுக்கு ராமானுஜ நூற்றந்தாதி என்று பெயர். அதில் ஆழ்வார்களின் பெருமையும், ராமானுஜரின் பெருமையும், வைணவத் தத்துவங்களும் பொதிந்திருக்கும்.

அரங்கனின் திருவுள்ளப்படி, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் நிறைவு நாளில், இயற்பா சேவிக்கும் நாளில், ராமானுஜ நூற்றந்தாதியையும் சேர்ந்து சேவிக்கும் வழக்கம் ராமானுஜர் காலத்தில் வந்தது. அதுமட்டுமின்றி எல்லா ஆழ்வார்களின் திருவுருவங்களும் உருவாக்கப்பட்டன. இனி வருடாவருடம் நம்மாழ்வார் விக்கிரகத்தை திருநகரியில் இருந்து எழுந்தருளச் செய்வது சிரமம் எனக் கருதி எல்லா ஆழ்வார்க ளையும் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். இது உடையவர் செய்த ஏற்பாடு.

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் வெளியில் வரும் பொழுது நான்கு நடையில் வருவதை நம்மால் தரிசிக்க முடியும். திருவரங்கப் பெருமானுக்கு “சதுர்கதிப் பெருமாள்’ என்று பெயர்.

  1. அவர் கருவறையிலிருந்து வெளியே வரும்பொழுது குகையில் இருந்து வெளிப் படும் சிங்கம் போல, சிம்ம கதியில் வருவார்.
  2. உள்ளே திரும்பப் போகும் பொழுது புற்றில் நுழையும் பாம்பு போல சர்ப்ப கதியில் வளைந்து நெளிந்து புகுவார்.
  3. படி ஏறும் பொழுது யானை ஏறுவது போல ஆடி ஆடி, மெதுவாக கஜ கதியில் ஏறுவர்.
  4. ஒய்யார நடை(வையாளி) போடும் பொழுது விருஷப கதியில் நடை போடுவர்.

நம்பெருமாளை தோளில் சுமக்கும் கைங்கர்ய பரர்கள் நமக்கு இந்த நான்கு நடையையும் காட்டுவார்கள். இதற்கென்று அவர்களுக்கு தனி பயிற்சி உண்டு. இந்த வையாளி சேவையை துரகதி என்பார்கள்.

இந்த வைபவத்தை “பத்தி உலாத்துதல்” என்று சொல்லுகின்றார்கள். பகல் பத்து முழுவதும் பெருமாள் புறப்பாடு நடந்து, திரும்ப தன்னுடைய ஆஸ்தானத்திற்கு செல்லும்போது, இந்த நான்கு நடைகளும் பார்க்கலாம்.

பகவான் மோகினி அவதாரம் செய்வதற்கு ஒரு சரித்திரம் உண்டு. மார்கழி சுக்ல தசமி அன்று திருப்பாற்கடல் கடையப்பட்டது என்கிறார்கள். அன்று தேவர்களுக்கு அமுதம் தர பகவான் மோகனா (மோஹினி) அவதாரம் எடுத்தார். அதற்காகவே மோஹினி அலங்காரம் செய்யப்படுகிறது. இன்னொரு விதத்தில் திருமங்கை ஆழ்வார் தன்னை நாயகியாக பாவித்து கொண்டு “கள்வன் கொல்” என்ற பதிகத்தை அருளிச் செய்தார்.

இப்பொழுதும் திருநகரியில் திருக்கார்த்திகை உற்சவத்தில், ஆழ்வார் நாயகி பாவத்தில் பெண்வேடம் போட்டுக்கொண்டு, பெருமாளுடன் ஏக ஆசனத்தில் இருப்பார். திருமங்கை யாழ்வாரின் இந்த நாயகி பாவத்தை பார்த்த பெருமாள், தனக்கும் இந்த கோலத்தை ஆதரித்து அலங்காரம் செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

பகல் பத்து பத்தாம் திருநாள் அன்று பகவானுக்கு இந்த அவதார அலங்காரத்தைச் செய்வார்கள். இதற்கு “நாச்சியார் திருக்கோலம்” என்றும் பெயர். பெருமாள் நாச்சியாராக அலங்கரித்துக்கொண்டு கருட மண்டபம் வந்து காட்சி தருவார்.

பெருமாளுக்கு வீணை ஏகாந்தம் என்ற ஒரு இசை சமர்ப்பணம் உண்டு. பெருமாள் வெளியே மண்டபத்திலிருந்து தன்னுடைய ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது ஏகாந்த வீணை வாசிக்கப்படும். இதற்கென்றே வீணை வாசிக்கக் கூடிய பரம்பரை பெரியவர்கள் உண்டு.

அவர்களுக்கு வீணை மிராசுகாரர்கள் என்று பெயர். பெரிய திருநாளில் தினம்தோறும்ராத்திரி உள்ளே சங்கீதம் கேட்பதற்காக மௌனமாய், அழகாய், அசைந்து, நம்பெருமாள் படி ஏறுவார் என்று வியாக்கியானத்தில் வருகின்றது.

வைகுண்ட ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பரமபத ஏகாதசி, அத்யயன உற்சவம் என்று பல பெயர்களால் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி அன்று மது கைடபர்களை, நம்பெருமாள், உத்தர துவார மார்க்கமாக (பரமபத வாசல், வடக்கு வாசல்) வழியாக மோட்சம் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று பெருமாள் ரத்னாங்கி சாத்திக்கொண்டு தம்முடைய திவ்யமான வடி வழகை காட்டி அருளுவார். இதைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திருவரங்கத்தில் திரள்வார்கள்.

விலை உயர்ந்த துப்பட்டாவை சமர்ப்பித்து அரங்கனின் திருவருளைப் பெறுவார்கள். பெருமாள் பகிரங்கமாக துப் பட்டா சாத்தி கொள்ளும் சந்தர்ப்பம் இது. ஏகாதசி தினமும், அதை அடுத்த சில தினங்களும் முத்தினால் செய்த அங்கியை மூலவர் அணிந்து கர்ப்பக் கிரகத்தில் காட்சி தருவார்.இந்த சேவைக்கு “முத்தங்கி சேவை” என்று சொல்கிறார்கள்.

இராப்பத்து உற்சவம், ஏழாம் நாள், கைத்தல சேவை என்று ஒரு சேவை உண்டு. அன்றைய தினம் பெருமாள் அதிகமான திருவாபரணங்கள் சாத்திக் கொள்ள மாட்டார். திருவாய்மொழி ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி, ‘‘கங்குலும் பகலும்” சேவிக்கப்படும். நாச்சியார் விஷயமாக ஸ்ரீஸ்தவம், ஸ்ரீகுண ரத்னகோஸம் சேவிக்கப்படும்.

பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளி திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, ஆழ்வாருக்கு சேவை சாதிப்பார். இப்படி அர்ச்சகர்களின் கையில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி “கைத்தல சேவை” எனப்படும். கைத்தல சேவைக்காக உத்தம நம்பி சமர்ப்பிக்கும் சர்க்கரைப் பொங்கல், பெருமாளுக்கு அமுது செய்விக்கப்படும்.

இராப்பத்து, எட்டாம் திருநாள் “வேடுபறி உற்சவம்” நடைபெறும். வேடர் பறி உற்சவம் என்றும் சொல்வார்கள். திருமங்கை ஆழ்வார் ஒரு காலத்தில், பெருமாளை வழி மறித்து, நகை பறித்த நிகழ்ச்சி நடத்திக் காட்டப்படும்.

மாலைத் தனியே வழி பறிக்க வேணும் என்று கோலிப் பதிவிருந்த கொற்றவனே- வேலைஅணைத்து அருளும் கையால் அடியேன் வினையைத் துணித்து அருள வேணும் துணிந்து என்பது இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் ஸ்ரீசோமாசி ஆண்டான் அருளிச் செய்த தனியன்.

வேடு பறி உற்சவம் வெகு கோலாகலமாக இருக்கும்.பெருமாளை தூக்கிக் கொண்டு முன்னும் பின்னும் ஓடுவதும் திரும்புவதும் என அற்புதமாக இருக்கும்.
அன்று சந்நதி வாசலில் பெருமாள் குதிரை வாகனத்தில் கிழக்குமுகமாக எழுந்தருளி இருப்பார். அன்று பரமபதவாசல் வழியாகப் பெருமாள் செல்லமாட்டார். பெருமாள் புறப்பாடாகி கோயிலின் கிழக்குப் பக்கமுள்ள மணல் வெளிக்குச் செல்வார்.

அங்கே நீண்ட நடை கொட்டகை போடப்பட்டிருக்கும். பெருமாளுடைய குதிரைக்கு கடலை சுண்டலும், பெருமாளுக்கு பாசிப்பருப்பு , பானகமும் திருவமுது (நிவேதனம்) ஆகும். அப்போது திருமங்கையாழ்வார் வந்து பெருமானைச் சுற்றிக் கொண்டு போவார். வழிப்பறி நாடகம் கோலாகலமாக நடக்கும். பிறகு திருமங்கை ஆழ்வாருக்கு திருஎட்டெழுத்து மந்திர உபதேசம் ஆகி, பெரிய திருமொழி முதல் பதிகம் சேவிக்கப்படும்.

திருவாய்மொழியின் கடைசி பதிகத்தில், நம்மாழ்வார் மோட்சத்துக்கு செல்லும் வழியையும், அங்கே தமக்குக் கிடைத்த வரவேற்பையும் பாடியிருக்கிறார். இந்த உற்சவத்தை நம்மாழ்வார் மோட்ச உற்சவம் என்பார்கள். அன்று பெருமாள் வழக்கம்போல் புறப்பட்டு வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தம் சாதித்து, தீர்த்தவாரி நடத்தி, திருமாமணி மண்டபம் சேர்வார். பிறகு திருமஞ்சனம் கண்டருள்வார்.

அன்று அவருக்கு பன்னீராயிரம் திருப்பணியாரங்கள் சமர்ப்பிக்கப்படும். நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல், வெள்ளை உடுத்தி , பன்னிரு திருநாமம் சாற்றி, துளசி மாலையும் தரித்து, சேவை சாதிப்பார். இரண்டு அர்ச்சகர்கள், தங்கள் சரீரத்தைப் போர்வையால் போர்த்திக் கொண்டு ஆழ்வாரை திருக்கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொள்வார்கள். சத்ர சாமரங்கள் அவருக்குப் பிடிக்கப்படும்.

மோட்சத்துக்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தை (ஒளி வழியை) விவரிக்கும், ‘‘சூழ் விசும்பு” என்ற ஒன்பதாம் திருவாய்மொழி சேவிக்கப்படும். நம்மாழ்வார் திருமேனியை எடுத்துச் சென்று பெருமாளின் திருவடியில் வைப்பார்கள்.

அங்கே, திருவாய் மொழியின் கடைசி பதிகமான ‘‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்ற பதிகம் பாடப்படும். ஆழ்வாரின் மீது திருத்துழாய் (துளசி) வைத்துக்கொண்டே இருப்பார்கள்.

ஆழ்வாரை துளசியால் மூடிவிடுவார்கள். இந்தப் பதிகம் பூர்த்தியானவுடன், பெருமாள் ஆழ்வாருக்கு தம்முடைய கஸ் தூரி திருமண் காப்பையும் மாலையையும் அருளுவார். அதற்கு பிறகு, ‘‘எங்களுக்கு ஆழ்வாரை கொடுத்தருள வேண்டும்” என்று பிரார்த் தனை செய்ய, மூடியிருந்த துளசியை நீக்கிவிட்டு, மறுபடியும் ஆழ்வாரை யதாஸ்தானம் செய்ய, கைகளில் ஏந்திக் கொள்வார்கள். மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்கின்ற பாசுரம் சேவையாகும்.

பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து சந்நதிக்கு புறப்படும்போது பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விலாமிச்சை வேர் சப்பரத்தில் எழுந்தருளுவார். மல்லாரி என்கின்ற ராகம் வாசிக்கப்படும். ஒய்யார நடை போடுவார். அப்பொழுது பலவிதமான வாத்தியங்கள் இசைக்கப்படும். கடைசியாக வாசிக்கப்படுவது வீணை. இந்த வாத்தியத்துடன் நாழி கேட்டான் வாசலில் இருந்து படியேற்றம் ஆகி சந்நதிக்குச் செல்வார்.

திருவரங்கத்தில் பெருமாளுக்கு எப்படி உற்சவம் இருக்கிறதோ, அப்படி நாச்சி யாருக்கும் இந்த அத்யயன உற்சவம் உண்டு. நாச்சியாருக்கும் திருநெடுந் தாண்டகம் தொடங்கப்படும். ஆனால் நாச்சியார் புறப்பாடு கிடையாது. மாலை ஷீரான்னம் சமர்ப்பணம் ஆகும். ஆங்காங்கு அரையர் தொடங்கி, அத்யாபகர்கள் சேவிக்க திருமொழி இரண்டாயிரமும் ஐந்து நாளில் பூர்த்தி செய் வார்கள்.

ஆயினும் இங்கும் அரையர் சேவை, அபிநயம், கானம் உண்டு. 5ம் நாள் முத்துக்குறி, அரையர் தீர்த்தம், சடகோபம் போன்ற நிகழ்வுகள் உண்டு.இதில் சொல்லியது சில மட்டுமே.இன்னும் பல சுவையான செய்திகள் உண்டு.

இநத பகுதியை எழுத்தில் கொடுத்த WhatsApp நண்பருக்கு மிக்க நன்றி

பங்குனி உத்திரம்

சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு ப்ரஹ்மா நடத்திய பிரம்மோத்ஸவம் பங்குனி மாதத்தில் நடப்பதாக ஐதீகம். திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவத்தை ஆதிபிரம்மோத்ஸவம் என்று அழைக்கிறார்கள். இதன் இடையில் வரும் உத்திர நட்சத்திர நாள் அன்று தாயாருடன் பெருமாள் சேர்த்தி காண்கிறார்.

திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் நம்மாழ்வாரின் பங்கு மிகப் பெரியது. பெருமாள், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுக்கும் போது, நம்மாழ்வார் தான் வந்து சமரசம் செய்து வைப்பார். பிராட்டியாரும் நம் பெரியன் சொல்படி கேட்டோம் என்று ஆழ்வாருக்கு உயர்ந்த மரியாதையை தருவார்.   ‘நம் பெரியன்’ என்று சொன்னதால் நம்மாழ்வார் என்ற பெயர் தாயார் கொடுத்ததாக கொள்ளலாம். இந்த திருவிழாவின் ஒவ்வொரு நாள் சிறப்புகளை, ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி சுருக்கமாக சொல்லும் பதிவுகளை இங்கே காணலாம்,

முகவுரை : (381) PROMO PANGUNI THIRUNAL Srirangam 2023 – YouTube

முதல் நாள் : (381) பங்குனி திருநாள் ஸ்ரீரங்கம் முதல் நாள் – YouTube

இரண்டாம் நாள் : (381) பங்குனிர்த்திருநாள் ஸ்ரீரங்கம் 2023 இரண்டாம் நாள் – YouTube

மூன்றாம் நாள் : (389) பங்குனி உத்திர திருநாள். மூன்றாம் நாள் – YouTube

நான்காம் நாள் : (394) பங்குனி உத்திர திருநாள் கருட வாகனம் நான்காம் நாள் – YouTube

ஐந்தாம் நாள் ; (401) பங்குனி உத்திர திருநாள் – சேஷ வாகனம் & கற்பக விருக்ஷம் வாகனம் – ஐந்தாம் நாள் – YouTube

ஆறாம் நாள் : (408) பங்குனித் திருநாள் ஆறாம் நாள் – YouTube

ஏழாம் நாள் : (416) நம்பெருமாள் நெல் அளவை. பூந்தேர் உற்சவம் – பங்குனித் திருநாள் – ஏழாம் நாள் – YouTube

எட்டாம் நாள் : (421) குதிரை வாகனத்தில் ஒய்யாளி சேவை – பங்குனித் திருநாள் – எட்டாம் நாள் – YouTube

ஒன்பதாம் திருநாள்; (426) சேர்த்தி சேவை – பங்குனித் திருநாள் – ஒன்பதாம் நாள் – YouTube

பத்தாம் நாள் : (430) பங்குனித் திருநாள் – பத்தாம் நாள் – YouTube

கைசிக ஏகாதசி

கைசிக ஏகாதசி (கார்த்திகை, வளர்பிறை) அன்று இரவு, பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள், விடிய விடிய சாற்றப்படுகின்றன. இதை பற்றி மேலும் இங்கே காணலாம். கைசிக ஏகாதசி அன்று கற்பூர படியேற்றம்.

ஸ்ரீரங்கத்தில் ஒரு மாதம் முன்னதாகவே கைசிக ஏகாதசியும்/ஸ்ரீவைகுண்ட ஏகாதசியும்,
19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே, ஸ்ரீரங்கம் திவ்ய தேசத்தில், மட்டும் நடைபெறும். விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்டபோது, மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதலில் தை திருநாளும் வந்தால்,எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடுவது என கேள்வி வந்தபோது, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி,19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி வைகுண்ட ஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

அதன்படி இந்த ஆண்டு,வைகுண்ட ஏகாதசி கார்த்திகை மாதத்தில்–14/12/2021–அநுஷ்டிக்கப் படுவதால், அதற்கேற்ப, கைசிக ஏகாதசியும் ஒரு மாதம் முன்னரே–ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி–15/11/2021–அனுஷ்டிக்கப் படுகிறது. ஸ்ரீபெரும்புதூரிலும் தை மாதம் குரு புஷ்யம் நடப்பதால், இவ்வாறாக ஒரு மாதம் முன்னரே கொண்டாடுகிறார்கள்.
மற்ற எல்லா திவ்ய தேசங்களிலும் எப்போதும் போல கைசிக ஏகாதசி கார்த்திகையிலும் (14/12) ,ஸ்ரீவைகுண்ட ஏகாதசி மார்கழியிலும்(13/01/2022) அனுஷ்டிக்கப் படுகிறது.

ஆடிப்பெருக்கு

ஆனி கேட்டை நக்ஷத்திரத்திற்கு 45 நாட்கள் கழித்து ஆடிப்பெருக்கு கொண்டப்படும். அப்பொழுது எம்பெருமான், அம்மா மண்டபம் எழுந்தருளி காவேரி தாயாருக்கு பட்டு புடவை, வளையல்கள், குங்குமம் மற்றும் வெற்றிலை பாக்கு அவற்றை சீதனமாய் அளிப்பார்.

கஜேந்திர மோக்ஷம்

சித்ரா பௌர்ணமி அன்று அம்மாமண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி கஜேந்திர மோக்ஷம் திருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீநம்பெருமாளின் கிளிக்கூண்டு சேவை!

திருப்பள்ளி ஓடம் உற்சவம் முதல் நாள் (நேற்று), நம்பெருமாள் ரங்கவிலாச மண்டபத்தில் கிளிக்கூண்டிற்குள் சேவை! இந்த கிளிக்கூண்டில் மொத்தம் 84 துவாரங்கள் இருக்கும்! சாஸ்திரங்கள் சொல்லும் 84 லக்ஷம் பிறவிகளை இது குறிக்கிறது!

நம் பூர்வர்கள் இரண்டு கிளிகளை அடையாளம் காட்டுவர்..

ஒரு கிளி கனிக்கு அருகில் இருந்து கனியை புசித்து புசித்து வாடி போயிருக்குமாம். மற்றோர் கிளி கனிகளை புசிக்காமல் தேஜசாய் பருத்து இருக்குமாம். கனி புசிக்கும் கிளி ஜீவாத்மா, கனி என்னும் கர்மாவை புசித்து அதிலேயே நாட்டம் கொண்டு இளைத்து வாடும்! கனி உண்ணாத கிளி, பரமாத்மா அது என்றும் தேஜசாய் இருக்கும்!

இந்த ஜீவாத்மாக்களை காக்க, அவர்களை கர்மவசத்தில் இருந்து விடுவிக்க, நம்பெருமாளும் தனது சௌந்தர்யத்தைக் காட்டி, நம்மை திருத்தி பணிகொள்ள கிளிக்கூண்டிற்குள் இருந்தபடி அருள்பாலிக்கிறார்!!

“ரங்கேஷமாம் பாஹி” “ரங்கேஷமாம் பாஹி” “ரங்கேஷமாம் பாஹி ரங்கப் ப்ரபோ!”

இந்த பகுதியை நமக்கு whatsapp ல் அளித்த நண்பருக்கு நன்றி.

  1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.
  2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
  3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.
  4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.
  5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.
  6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.
  7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
  8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
  9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
  10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
  11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.
  12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்
  13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
  14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.
  15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.
  16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

கொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

ஆழ்வார்கள்

திருவரங்கம் பற்றி ஆழ்வார்களின் பாடல்களையும், அவர்கள் அனுபவங்களையும் கொடுக்க, தனித்தனியே, பல பாகங்களாக எழுத வேண்டும். அதற்குரிய ஞானமோ, அனுபவமோ, முதிர்ச்சியோ அடியேனிடம் இல்லை. இருந்தாலும், ஒரு சில விஷயங்களை மட்டும், கோடி காட்டி, இதன் முழு விவரமும் வேண்டுவோர் சரியான தகவல்களை பெற்று பயனடைய வேண்டுகிறேன்.

இது அதிகமான ஆழ்வார்களாலும், அதிகமான பாசுரங்களாலும் (247) பாடப்பட்ட திவ்யதேசம்.மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற எல்லா ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்கள், இந்த திவ்யதேச எம்பெருமானான திருவரங்கநாதனையே தன் பாசுரங்களில் பிரதான நாயகனாக வைத்து இயற்றி உள்ளார்கள்.

எம்பெருமானின் அடியார்கள் எக்குலத்தவராயினும் சமமே என்று பறைசாற்றும், சாதி சமய பேதமற்ற வைணவம் திருவரங்கத்திலே காலூன்றி எத்திக்கும் பரவ இவ்வரங்கனே வித்திட்டார்.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் என்று பெயர் கொடுத்ததே திருவரங்க நாச்சியாரும்,திருவரங்க நாதனுமும் தான்.

  • நம் பெரியவன் சொல் கேட்டு என்று பங்குனி உத்திர திருவிழாவில் தாயார் சொன்னது,
  • வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு, திருவாய்மொழி கேட்க நம் ஆழ்வானை ஆழ்வார்திருநகரியில் இருந்து எழுந்தருள எம்பெருமான் சொன்னது,
  • கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடிய நம் ஆழ்வாரை பாடினீரோ என்று மேட்டு அழகியசிங்கர் சன்னதி அர்ச்சகர் மூலம் கேட்டது.

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி 1102 பாடல்களும் திருவரங்கனுக்கே என்பதை வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் பாடி உள்ளார்.

கங்குலும் பகலும் என்ற திருவாய்மொழி, 7ம் பத்து 2ம் பதிகம் பத்து பாசுரங்களும் திருவரங்கநாதனுக்கு நம்மாழ்வார் பாடியது. இந்த பத்து பாசுரங்களில் திருவாய்மொழியில் சொன்ன பத்து பத்துக்களில் சொன்ன அத்தனை கருத்துக்களையும் சுருக்கமாக சொல்லி இருப்பதால் திருவாய்மொழி முழுவதும் அரங்கனுக்கே என்று சொல்வார்கள்.

பெரியாழ்வார்

பெரியாழ்வார், திருவரங்கநாதனின் மாமனார் ஆவார். ஆண்டாள் இவரது மகள். திருவரங்கனின் மேல் பக்தி கொண்டு அவரையே மணவாளனாக பற்றிக்கொண்டாள்.

ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான் ” என்ற பாடல், திருவரங்கநாதனுக்காக பாடியது. அதையே சுவாமி ராமானுஜர், கூரத்தாழ்வான் பரமபதித்த போது, மிக பொருத்தமாக நினைவு கூர்ந்தார் என்பதும் வரலாறு.

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் என்ற பெரியாழ்வார் திருமொழி, (4.9.2), பாசுரம், அச்சுதன் (நழுவுதல் இல்லாதவன்) என்ற திருநாம விளக்கத்திற்கு பொருத்தமான திருவரங்கன் பாசுரம்.

ஆண்டாள்

திருவரங்கத்து செல்வனை நினைத்து ஆண்டாள் உருகும் பாசுரங்களில், அவனையே விரும்பும் தனக்கு அவன் நடையழகைக் காட்ட வேண்டுகிறார்.   பெண்ணின் வருத்தம் அறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்ட பெருமாள் தன் விஷயத்தில் வேறுபடுகிறாரே என்றும், தம்மை விரும்புவரை தான் விரும்புவேன் என்று வராக அவதாரத்தில் சரமச்லோகத்தில் சொன்ன வார்த்தைகள் பொய்யாகாமல் இருக்க வேண்டுமே என்றும் ஆண்டாள் கவலைப்படுகிறார். புவனியும், விண்ணுலகும் ஆள்கின்ற எம்பெருமான், செங்கோலுடைய திருவரங்க செல்வனார் என்றும், திருவரங்க செல்வனார் பேசிஇருப்பனகள் பேர்க்கவும் பேராவே என்றும், தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்னும் சொல் என்ற ஆண்டாளின் வார்த்தைகள் நயமானவை.

குலசேகர ஆழ்வார்

திருவரங்கத்திற்காக மூன்று பதிகங்கள் பாடிய குலசேகராழ்வார் தன்னுடைய பெருமாள் திருமொழி என்ற பிரபந்தத்தின் முதல் பதிகத்தில், திருவரங்கம்  பெரியகோயிலில்  திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டுள்ள அழகிய மணவாளனை  கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார். பெரியபெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூடி, கலந்து, வாயாரப் பாடி, அதனால் ஆனந்தக்கண்ணீர் பெருகி,  தலைகால் தெரியாமல் துள்ளிக் கூத்தாடி, நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ என்கிறார்.

முதல் பதிகத்தில், எம்பெருமானை எப்போது காண்போமோ (பகவத் பக்தி)  என்று  சொன்ன ஆழ்வார், இரண்டாம் பதிகத்தில் எம்பெருமானை நேசிக்கும் பக்தர்களை (பாகவத பக்தி) பற்றி சொன்ன ஆழ்வார், மூன்றாம் பதிகத்தில் இவ்வுலக இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தும், மனிதர்களுடன் தான் சேர்வதில்லை என்றும், எம்பெருமானுக்குப் பிடிக்காதவற்றை செய்யும் சாமானிய மக்களின் சகவாசத்தை,  விலக்கி விடவும் சொல்கிறார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இவர் அருளிய திவ்யப்ரபந்தங்கள் இரண்டிற்கும் திருவரங்கனே பிரதானம். முதலில், நாற்பது ஐந்து பாசுரங்கள் கொண்ட திருமாலை. திருமாலை அறியாதார், திருமாலயே (எம்பெருமானையே) அறியாதவர் என்று பழமொழி கூறும் அளவுக்கு பிரசித்தி பெற்றது. அடுத்தது, அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக இயற்றப்பட்ட திருப்பள்ளியெழுச்சி. பொதுவாக, ஒவ்வொரு நாளும், காலையில் எம்பெருமானை எழுப்புவதற்கு எல்லா வைணவக் கோவில்களிலும் பாடப்பாடுவது.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த திவ்யதேசத்தில், நந்தவன கைங்கர்யங்கள் செய்து உள்ளார். திருமங்கையாழ்வார் திருமதிள் கைங்கர்யங்கள் செய்து உள்ளார். அந்த மதில் வரும் வழியில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் நந்தவனம் இருந்ததால் அதற்கு ஒரு தடங்கலும் வராமல் மதிலை வளைத்து கட்டினார். அதனை அறிந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார், தான் மலர் பறிக்கும் ஒரு கருவிக்கு ‘அருள்மாரி’ என்று திருமங்கையாழ்வாரின் பட்ட பெயரை சூட்டி மகிழ்ந்தார்.

திருப்பாணாழ்வார்

பாணர் குலத்தை சேர்ந்த இந்த ஆழ்வார் பத்தே பத்து பாசுரங்களில், திருவரங்கனின் முழு அழகினை, அவன் காட்டவே தான் கண்டு, பாதம் முதல் கேசம் வரை வர்ணித்த ஆழ்வார், அரங்கனின் சந்நிதியில் என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று அவன் திருவடிகளில் சேர்ந்து விட்டார்.

இராமானுஜர்

ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கநாதர் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி என்று அடைமொழி சொல்லும்படி கோவில் நிர்வாகத்தை சீர்திருத்தி இன்று வரை பெரிதும் போற்றி பாதுகாக்க படுகின்றன.

பங்குனி உத்திர திருநாள் அன்று இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பிராட்டியை முன்னிட்டு நம் பெருமாள் முன்னே சரணாகதி கேட்டு அதனை பெற்றார். இவருக்கு இங்கு தனியாக சன்னதி உள்ளது. இங்குள்ள ஸ்ரீராமாநுஜரின் திருமேனி `தானேயான திருமேனி‘ ஆகும்.

ஆச்சார்யர்கள்

வைணவத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் திருஅரங்கம் ஓர் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. இராமானுஜரை வைணவத்திற்கு அடையாளம் காட்டிய ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் இங்கு இருந்து தான் தொண்டு புரிந்தார்.

பராசரபட்டர், வடக்கு திருவீதி பிள்ளை, பிள்ளைலோகாச்சார்யார், பெரியநம்பி என்ற ஆச்சார்யர்கள் அவதரித்த ஸ்தலம். ஸ்ரீமந் நாதமுனிகள் என்ற ஆச்சார்யாரால் திவ்யப்ரபந்த பாசுரங்களை ராக தளங்களுடன் பாடி அபிநயம் பிடித்து அரையர் சேவை என்ற பெயரில் இங்கு ஆரம்பித்து, இன்றும் நடந்து வருகிறது.

சுவாமி தேசிகன் என்ற ஆச்சார்யாருக்கு பெரியபெருமாள் ‘கவிதார்க்கிக ஸிம்ஹம்‘ என்றும் தாயார் ‘ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரர் ‘ என்றும் பட்டங்கள் வழங்கி கெளரவம் செய்து உள்ளனர். இந்த எம்பெருமானின் பாதுகைகள் மீது தான் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற ஆயிரம் பாசுரங்கள் கொண்ட உயர்ந்த நூலை சுவாமி தேசிகன் ஒரே இரவில் இயற்றி உள்ளார்.

மணவாளமாமுனிகள் என்ற ஆச்சாரியர், இந்த எம்பெருமானின் கட்டளையை ஏற்று, திருவாய்மொழி என்ற திவ்யப்ரபந்தத்திற்கு ஒரு வருட காலம் காலக்ஷேபம் செய்தார். அதன்போது கோவிலின் எல்லா திருவிழாக்களையும் நிறுத்தி வைக்கவும் எம்பெருமான் ஆணை இட்டதாக சொல்வதுண்டு. இந்த காலஷேபம் நிறைவு அடையும் போது, எம்பெருமானே ஒரு சிறுவனாக வந்து ‘ஸ்ரீசைலேச தயா பாத்திர‘ தனியனை அருளி செய்து அவருக்கு கெளரவம் செய்தார்.

சடகோபன் அந்தாதி

வால்மீகி ராமாயணத்தில், நரசிம்ம அவதாரம் பற்றி கிடையாது. ஆனால் கம்ப ராமாயணத்தில் நரசிம்ம அவதாரம் பற்றி ஒரு படலம் உண்டு. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட இராமாயணத்தை, கம்பர் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது,‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடின நம் ஆழ்வானை பாடினாயோ?‘ என்று மேட்டு அழகிய சிங்கர் (நரசிம்ம பெருமாள்) கோவில் அர்ச்சகர் மூலம் கேட்டாராம்.  இப்படி கேட்டதால்,  நம் ஆழ்வார்  என்ற பெயர் கொடுத்தது  திருவரங்கன் என்றும்  கொள்ளலாம்.   கம்பர் சடகோபர் அந்தாதி என்ற நூறு பாடல்கள் உள்ள தொகுப்பையும் பிறகு எழுதி திருவரங்கன் முன் சமர்ப்பித்தார்.

வரலாற்று குறிப்புகள்

திருவரங்கம் கோவிலைப் பற்றி சில முக்கியமான வரலாற்றுக்குறிப்புகள் கொடுக்காமல், இந்த கோவிலை பற்றிய தகவல்கள் முழுமையாகாது. ஏன்எனில்,

  • திருவரங்கனையும், திருவரங்கம் கோவிலையும்,
    • அந்த பகுதியில் வசித்துவந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள்,
      • பல நூறு ஆண்டுகளாக,
        • அரங்கன் மீது கொண்ட அளவிடமுடியாத
          • பக்தியாலும்,
          • ஈடுபாட்டினாலும்,
          • அன்பாலும்,
          • மோஹத்தினாலும்,
          • காதலாலும்,
          • பரிவினாலும்,
          • பாசத்தினாலும்,
          • உணர்வுகளாலும்,
          • கடமையாலும்
          • மரியாதையாலும்,
          • ஏக்கத்தாலும்,
            • தங்கள் உயிர் முதற்கொண்டு பலவித தியாகங்களால்,
              • காத்தும், வளர்த்தும் வந்து உள்ளனர்.

அவற்றை ஒரு சிறு அட்டவணையாக கீழே கொடுக்க முயன்றுளேன். இதற்கு மிகவும் உதவியாக இருந்த 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு என்ற நூலை எழுதிய ஆசிரியர் டாக்டர்.வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. நம்பெருமாள் திருவரங்கத்தில் இருந்து கிளம்பி மீண்டும் திருவரங்கம் வரும் வரையில் சுமார் 47 ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து ஸ்ரீ வேணுகோபாலன் எழுதியுள்ள “திருவரங்கன் உலா” என்னும் நூல் விளக்கமாக சொல்கிறது.

காலம்நிகழ்வுஆட்சியாளர்
திரேதா யுகம்எம்பெருமான் திரேதா யுகத்து பெருமாள்
இராமாயண காலத்திற்கு பிறகுதர்மவர்மா விமானத்தை சுற்றி கோவில் அமைத்தான்சோழ
காலம் தெரியவில்லைகிள்ளிவளவன் கோவிலை புதுப்பித்து, மதிலும் கோபுரமும் கட்டினான்சோழ
கிபி 10 நூற்றாண்டுசோழ மன்னர்கள் ஆதரவு. முதல் பராந்தக சோழன்,சோழ
கி.பி. 1060-1063இராச மகேந்திர சோழன் இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் திருமதிலை கட்டினான்சோழ
கி.பி.1020-1137இது இராமானுஜரின் காலமாகும். திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி, நிர்வாகம் முழுதும் சீர் திருத்தினார்.சோழ
கி.பி. 1120-1170முதலாம் குலோத்துங்க சோழன். இவன் இராமானுஜருக்கும் வைணவத்திற்கும் பல கொடுமைகள் விளைவித்தான்சோழ
கி.பி.1178-1218மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவன் சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்தான்.சோழ
கி.பி.1223-1225திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.கங்கர்கள்
கி.பி.1216-1238மாறவர்மன் சுந்தரபாண்டியன் கர்நாடகத்தைக் கைப்பற்றினான். கங்கர்களை விரட்டினான். கோவில் நிர்வாகம் சீர்பெற்றது.பாண்டியன்
கி.பி.1234-1262ஒய்சாள மன்னன் சோமேசுவரன் இங்கு நந்தவனம் உண்டாக்கி மூன்றாம் பிரகாரத்தில் யாகசாலை நிறுவினான்.ஒய்சாளம்
கி.பி.1251-1268பாண்டிய மன்னன் சடாவர்ம சுந்தர பாண்டியன் ஏராளமான பொன்வழங்கி, மூன்று விமானங்கள் கட்டினான். திருமடைப்பள்ளி கட்டினான். இராண்டாம் பிரகாரத்தில் பொன் வேய்ந்தான்.பொற்கருட வாகனம் வழங்கினான். திருவரங்கனுக்கு மரகதமாலை, பொற்கிரீடம், முத்தாரம், முத்துவிதானம், பொற் பட்டாடை போன்றன வழங்கினான். ஏராளமான அணிகலன்களையும், பொற் காசுகள் நிரம்பிய குடங்களையும், கோவிலுக்கு வேண்டிய பிற முக்கிய பொருட்களையும் இத்திருக் கோவிலுக்கு தானம் வழங்கினான்.பாண்டியன்
கி.பி.1263-1297ஒய்சாள மன்னன் இராமதேவன் இக்கோவிலுக்கு எண்ணற்ற தானம் வழங்கி புனருத்தாரப் பணிகளை மேற்கொண்டார். இத்திருக்கோவிலில் உள்ள வேணு கோபால கிருஷ்ணரின் சன்னிதி இவர் காலத்தில் ஏற்பட்டதாகும்.ஒய்சாளம்
கி.பி.1268-1308மாறவர்மன் குலசேகரபாண்டியன். போர்ச்சுக்கீசிய மாலுமி மார்க்கோபோலோ இத்தலம்பற்றியும், செழிப்பைப் பற்றியும் வியந்து போற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளார்.பாண்டியன்
கி.பி. 1311முஸ்லீம் தளபதி மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். இக்கோவிலில் கொள்ளையிட்டான்.முகலாய
கி.பி.1325-1351முகம்மதுபின் துக்ளக் இக்கோவிலை கொள்ளையிட எத்தனித்தான். அரங்கன்பால் பற்றுக் கொண்ட அடியார்களும், ஆச்சார்யார்களும் திருவரங்க நகர்வாசிகளும் தேவதாசிகளும் அவனை முன்னேற விடாமல் தடுத்தனர். எண்ணற்ற வீரர்கள் இருதரப்பிலும் மாண்டனர். வைணவ அடியார்கள் தம் இன்னுயிர் நீத்து இத்திருக்கோவிலைக் காத்தனர். இத்திருக்கோவிலின் விலை உயர்ந்த அணிகலன்களையும், வழிபாட்டிற்குரிய முக்கிய பொருட்களையும் உற்சவப் பெருமாளையும் திருவரங்கத் தினின்றும் கடத்தி பல ஊர்களில் மறைத்து வைத்து திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை எனப் பலவிடங்களிலும் மறைத்து இறுதியில் திருப்பதியில் கொண்டுபோய் பாதுகாத்து வைத்தனர்.முகலாய
கி.பி. 1371திருப்பதியிலேயே இருந்த உற்சவ பெருமாளான நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் வந்து சேர்ந்தான்.விஜயநகரப் பேரரசு
கி.பி. 1371 முதல் கி.பி.1565 வரைவிஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து இத்திருக்கோவிலை மீட்டு திருப்பதியிலிருந்து உற்சவப் பெருமாளையும், பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றதுவிஜயநகரப் பேரரசு
கி.பி.1538-1732நாயக்க மன்னர்கள், இவர்களும் இத்திருக்கோவிலுக்கு எண்ணற்ற
திருப்பணிகள் செய்து வந்தனர்.
நாயக்க மரபினர்
கி.பி. 1659-1682சொக்க நாத நாயக்க மன்னர் இத்திருக்கோவிலுக்கு பலதிசை களினின்றும் சாலைகள் அமைத்து எதிரிகளால் தாக்க முடியாத அரண்போன்ற கதவுகளை நுழைவாயிலில் பொருத்தினார்.நாயக்க மரபினர்
கி.பி. 1016-1732விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும் கண்ணாடி அறையினையும் கட்டுவித்தார்.நாயக்க மரபினர்
கி.பி.1732-1800நாயக்க மன்னர்களுக்குப் பிறகு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயர்களின் உதவியால் ஆற்காடு நவாபுகளிடம் சென்றதுஆற்காட்டு நவாப்
கி.பி.1809-1947தொண்மை முறைப்படியான கோவில் நிர்வாகத்தில் தலையிடாது மேற்பார்வை கண்காணிப்பாளர்களாக ஆங்கிலக் கலெக்டர்கள் இருந்து வந்தனர்.ஆங்கிலேய ஆட்சி
Pictures courtesy : family and friends through whatsapp
Thanks to friends from whatsapp group for the video
நன்றி இந்த videoவை அனுப்பிய Whatsapp குரூப் நண்பர்களுக்கு

மேலும்

திருவரங்கம் பற்றி தொடர்ந்து மேலும் சில தகவல்களை வரும் நாட்களில் சேர்க்க முயற்சிக்கிறோம். நன்றி

வெள்ளநீர் பரந்து பாயும்

To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.

அடுத்து, ஆழ்வார், தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.

அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று பெருமாளை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்று பாடினார்.

தன்னை பெரியபெருமாள் திருத்தியதால் தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.

கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். பெருமாள் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.

உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.

அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சொன்ன ஆழ்வாரிடம் அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்றும், அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் ஆழ்வார் தவிக்கிறார், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று “பணிவினால் மனம் அது ஒன்றி” என்ற அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.

சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல, மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்துவிடமுடியாது என்றும், வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர, குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது, என்றும் கூறுகிறார். அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை புதியதாக பேச முடியுமா” என்று பேசிற்றே பேசல் அல்லால் என்று இருபத்தி இரண்டாம் பாசுரத்தில் கேட்கிறார்.

நினைக்கவும் பேசவும் முடியாதென்றால், மறந்து போவதுதானே என்று ஆழ்வாரிடம் மற்றவர்கள் சொன்னபோது, அரங்கனின் சயனத் திருக்கோலத்தை திருஅரங்கத்தில் கண்டு ரசித்தபின் அதனை மறந்து எப்படி வாழ்வேன் என்று சொல்வது கங்கையில் புனிதமாய என்ற இருபத்திமூன்றாம் பாசுரம்.

இனி அடுத்த பாசுரம்.

திருமாலை இருபத்தி நான்காம் பாசுரம்

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள், கள்ளனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும், உள்ளமே வலியைப் போலும் ஒருவன் என்று உணர மாட்டாய், கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே. (திருமாலை 24)

ஆழ்வார், முந்திய பாசுரங்களில், மனத்தினால் நினைக்கலாமே என்றும், ‘பேசித்தான் ஆவதுண்டோ என்றும் எங்கனம் மறந்து வாழ்கேன் என்றும் தன்னுடைய அன்பினை காட்டியதற்கு பதிலுக்கு பெரியபெருமாள், ஆழ்வார் மேல் தமக்குள்ள உள்ள அன்பினைக் காட்ட, அதனை பார்க்கும் போது தனது அன்பு மிகவும் தாழ்ந்தது என்று ஆழ்வார் உணர்ந்து, பைத்தியம் பிடித்தவனுக்கு ஒரு சமயம் வரும் தெளிவு போல் உள்ள தன்னுடைய பக்தியை கள்ளத்தனம் என்று பாடும் பாடல்.

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம்

பொங்குநீர் பரந்து பாயும் என்று சென்ற பாசுரத்தில் பாடியது இன்னும் ஆழ்வார் நினைவில் இருக்க, இங்கே தொடர்ந்து “வெள்ளநீர் பரந்து பாயும்” என்று காவிரியின் பெருமையில் இந்த பாசுரத்தையும் தொடர்கிறார்.

காவிரி, தன் உற்பத்தி ஸ்தானத்தில் இருந்தே திருவரங்கம் வர வேண்டும் என்று நோக்கோடு வருவதால், ஆர்வம் வெளியே தெரியும்படி, பெருவெள்ளமாக நீரை கொண்டு எவராலும் அணைகட்டி தடுக்க முடியாதபடி எல்லா பக்கங்களிலும் பாய்ந்து செல்லும். ஆற்றின் ஆர்வத்திற்கு முடிவு இல்லாததால், ஆழ்வார் பாய்ந்தது என்று இறந்த காலத்தில் சொல்லாமல், பாயும் என்று நிகழ் காலத்தில் கூறி உள்ளார். காவிரியின் வெள்ளநீர் எங்கும் பாய்வதால், சோலைகளும் எல்லா இடங்களிலும் பரவுகிறது.

அரங்கம் தன்னுள், கள்ளனார்

கள்ளமில்லாத நித்யஸூரிகளுடன் பரமபதத்தில் நேர்மையோடு இருப்பதைவிட்டு, திருவ ரங்கத்தில் கண் வளர்ந்து இருப்பது, இங்குள்ள கள்ளத்தனம் உள்ள சம்சாரிகளைத் தன் கள்ளத்தனம் கொண்டு, வலைவீசி, கவர்ந்து கொள்வதற்காக என்பதால் ஆழ்வார் ‘கள்ளனார்’ அல்லது ‘கள்வனார்‘ என்று கூறுகிறார். பலவகை துர் எண்ணங்களுடன் கோவிலுக்குள் செல்லும் மக்களை தன் வடிவழகு போன்றவற்றை கொண்டு திருத்தி, அவர்களை அடியவர்கள் என்று மாற்றும் எம்பெருமானை கள்வனார் என்று ஆழ்வார் சொல்வது பொருத்தமே. மிகப் பெரிய தீவட்டித் திருடன் என்பதால் ‘கள்வன்’ என்று சொல்லாமல் ‘கள்வனார்’ என்று சொன்னதற்கு காரணம் என்று உரையாசிரியர் கூறுகிறார். எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவைத் தன்னது என்று உரிமை கொண்டாடும் ஜீவாத்மாக்களைக் கவரும் போது, அதை சொல்லிக்கொண்டு வந்தால் யாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதால், கள்வனாக கிடக்கிறார்.

மேலே சொன்ன நீர்வளத்தையும் சோலைகளின் வனப்பையும் கொண்டு எம்பெருமான் இங்கு வந்து பள்ளிகொண்டு உள்ளான் என்று நினைக்க தோன்றினாலும் உண்மையில் ஜீவாத்மாக்களை கவரவே என்பதால் கள்வன் என்று சொல்லலாம்.

நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை திவ்யதேச எம்பெருமானை பாடும்போது, “செஞ்சொற் கவி காள், உயிர் காத்து ஆட் செய்மின்” என்று பாடுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

திருப்பாணாழ்வார், பெரியபெருமாளை அருகில் சேவித்தபோது அவரது திருமுக மண்டலத்தில் ஒரு கள்ளத்தனம் தோன்றி இருப்பதால் தானோ, அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில் (7), ‘செய்ய வாய் ஐயோ ! என் சிந்தை கவர்ந்ததுவே‘ என்று சொல்கிறார். அதாவது எதோ ஒரு காரணத்தினால் தன்னை அணுகுகிறவர்களின் ஆத்மாவை திருடி தன் சட்டைப்பைக்குள் வைத்து கொள்வார் அல்லது அவர்களை தன்னுடைய அந்தரங்கர்கள் ஆக்கி கொள்வார். எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவை தன்னது என்று பலகாலமாக நினைத்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாவிடம் இருந்து அது அறியாதவண்ணம், எம்பெருமான் சேர்த்துக்கொள்வதால் கள்வனார் என்கிறார்.

இதை ஜிதந்தே ஸ்தோத்திரம் முதல் ஸ்லோகத்திலேயே ‘செந்தாமரை கண்ணா, உன்னால் இந்த ஆத்மா ஜெயிக்கப்பட்டது, இந்த ஆத்மா என்னுடையது அல்ல, உன்னுடையது, உலகையெல்லாம் உண்டாக்கினவனே, இந்திரியங்களை நியமிப்பவனே, கொடுப்பதில் சிறந்தவனே, முற்பாடானாக பிறப்பவனே, இந்த ஆத்மா எனக்காக இல்லாமல் உனக்காகவே ஆகவேண்டும்” என்றபடி எம்பெருமான் தன்னுடைய வடிவழகை காட்டி இந்த ஆத்மாவை எடுத்துக்கொள்கிறார்.

பற்பலகாலமாக ஜீவாத்மா, இந்த ஆத்மாவை தன்னதாகவே நினைத்துக்கொண்டு இருப்பதால், இப்பொழுது பரமாத்மா தனக்கு சொந்தமான ஆத்மாவை எடுத்துக் கொண்டாலும் அது, ஆயர்பாடியில் கண்ணன் வெண்ணையை திருடியது போல், கள்ளத்தனமாகவே தெரிகிறது, என்று உரையாசிரியர் சொல்கிறார்.

எம்பெருமானுடைய உலகங்களையெல்லாம் அவனுக்கே மாவலி தானம் கொடுத்தது போல், நாமே இந்த ஆத்மாவை அவனுக்கு சமர்ப்பித்தாலும் அதுவும் ஒரு கள்ளத்தனமே.

கிடந்தவாறும்

ஆழ்வார் தன்னை வசப்படுத்தியது, எம்பெருமானின் எளிமை மற்றும் பற்பல திருக் குணங்கள் அல்ல என்றும், கண் முதலிய அவயங்களின் தனிப்பட்ட அழகு இல்லை என்றும், “கிடந்ததோர் கிடக்கை” (திருமாலை 23) என்ற பெரியபெருமாள் திருமேனியின் முழுவதுமான அழகே (சமுதாய சோபை) என்றும் கூறுகிறார்.

கமல நன்முகமும்

தாமரை, எம்பெருமானின் திருமுகத்துடன் ஒப்பிடப்படுகிறது. மலர்ச்சி, நறுமணம், குளிர்ச்சி, புதுமை என்ற குணங்களால் ஓரளவு ஒன்றாக இருந்தாலும், நன்முகம் என்று சொன்னதால், முற்றிலும் சமமானது என்று சொல்லமுடியாது. சுத்த சத்வ மயமானதாலும் ஜோதிமயம் ஆனதாலும் தாமரை போன்ற ஒரு ஜட பொருளுக்கு எம்பெருமானின் திருமுக மண்டலத்தை ஒப்பிட முடியாது. ஆதித்தனை கண்டு மலரும் தாமரைக்கு அடியார்களை கண்டு மலரும் எம்பெருமானின் திருமுகத்திற்கு ஒப்பு ஆகாது என்பது ஆழ்வாரின் கருத்து. எல்லா உலகங்களிலும், எம்பெருமானின் திருமுகம் மட்டுமே மிக குளிர்ச்சியான முகம் என்றும் மற்றவை கடுமையானவை என்பதை ‘நன்முகம் ‘ என்ற சொல்லால் உணர்த்துகிறார்.

இதே உரையாசிரியர், வங்கக்கடல் கடைந்த பாசுர விளக்கத்தில் ஆண்டாள், பெரியாழ்வாரை புகழும் போது, ‘தண்தெரியல் பட்டர்பிரான்‘ என்று சொன்னது, பெரியாழ்வார் குளிர்ச்சியான மாலையை அணிந்து கொண்டு உள்ளார், எம்பெருமான் உட்பட மற்றவர்கள் சூடானவற்றை அணிந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது, ஆழ்வார்கள் எம்பெருமானையும் விட இன்னும் சாத்விகர்களாக இருப்பார்கள் என்பதால் உரையாசிரியர், ஆழ்வார்கள் தவிர மற்றவர்களை பார்க்கும் போது எம்பெருமான் குளிர்ச்சியாகவும், ஆழ்வார்களை பார்க்கும் போது ஆழ்வார்கள் எம்பெருமானை விடவும் குளிர்ச்சியாகவும் இருப்பர் என்று சொல்வது போல் தெரிகிறது.

கண்டும், உள்ளமே வலியைப் போலும்

எம்பெருமான் கண்வளர்ந்து அருளும் அழகினை சேவித்த பிறகும், ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனதை பார்த்து ஆழ்வார் அதன் வலிமையை கண்டு வியக்கிறார். இதற்கு முந்தைய பாசுரங்களில் கண்ணினை களிக்குமாறே (17), பனிஅரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று மனது கேட்ட போது, ஆழ்வார், எம்பெருமான் பெருமைகளைப் பார்க்கும்போது, ஆழ்வார் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களாக மேலே சொன்னவை, மிக சிறியவையே என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஒருவன் என்று உணர மாட்டாய்

ஆழ்வார் மேலும், எம்பெருமான் தன்னிகர் இல்லாதவன் அல்லது ஒப்பற்றவன் என்று உணராத நெஞ்சம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். அப்படி உணர்ந்தால், எம்பெருமானின் பெருமைகளும், குணங்களையும் உள்ளபடி உணரவேண்டும். அதற்கு ஏற்ப ஈடுபாடும் பிறக்க வேண்டும். அது பிறக்காததால், நெஞ்சை வன்மை உள்ளது என்று கூறுகிறார்.

கள்ளமே காதல் செய்து

கண்ணினை களிக்குமாறே (17), பனிஅரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னது மற்ற உலக விஷயங்களில் எப்படி கள்ளத்தனமாக நடக்கிறோமோ அதேபோல் பகவத் விஷயத்திலும் கள்ளத்தனமாக நடந்து கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.

உன் கள்ளத்தே கழிக்கின்றாயே

ஆழ்வார், மேலும் நெஞ்சத்திடம் உலக விஷயத்தில் செய்த கள்ளத்தனம், பற்பல காலங்களாக, பற்பல பிறவிகளாக செய்து வருவதால், இந்த பகவத் விஷயத்திலும் பொய்யான அன்பை நன்றாக காட்டிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார். மெய்யான அன்பு செலுத்தவில்லை என்றும் இந்த விஷயத்திற்கு ஏற்ற உண்மை அன்பை, பக்தியை செலுத்தவில்லை என்று தன் மனத்திடம் சொல்லி, இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

எம்பெருமானின் திருமுகத்தை தரிசித்த பின்னும் ஆழ்வாரின் வலிமையான நெஞ்சம், அவரிடம் பொய்யான பக்தியை காண்பித்ததாகவும், அதனால் தன்னிடம் சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் இல்லை என்று தன்னை எம்பெருமான் சரணாகதிக்கு தயார் செய்ததை, ஆழ்வார்க்கு செய்த உபகாரமாக இந்த பாசுரம் சொல்கிறது.

இதேபோல், பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில், (5.2.8), “ஏதங்களாயின எல்லாம் இறங்க லிடுவித்து என்னுள்ளே, பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து, போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில், பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே”, என்று சொல்லி எம்பெருமான் தன்னுடைய வலிமையான நெஞ்சத்தில் உள்ள பாவங்களை விலக்கிவிட்டு, அதனுள் புகுந்து அவனுடைய திருவடிகளை ஆழ்வாரின் தலையில் வைத்து உபகாரம் செய்ததை சொல்லி உள்ளார்.

இத்துடன் ஆழ்வார், எம்பெருமான் தனக்கு செய்த உதவிகள் என்ற தலைப்பில் சொன்ன தொகுப்பு முடிகின்றது. அடுத்து ஆழ்வார், நிரந்தர இன்பம் அளிக்கும் பரமபத்திற்கான உபாயங்களை கடைபிடிக்க தமக்கு ஒரு தகுதியும் இல்லை என்ற தொகுப்பில் 25 முதல் 34 வரை சொன்ன பத்து பாசுரங்களை காண்போம்.

மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம் நன்றி.

Gangaiyil Punidhamaaya

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி

As the saying goes ” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Emperumanai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Emperuman. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperuman on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Paramathma. When many objections were raised, Azhwaar advised to follow Sri Rama, when he mentioned silaiyinaal ilangai setra devane devan aavaan”; and advised to follow Sri Krishna, who is simple and easy to approach, by stating ‘katrinam meitha kazhalinai panimin; and finally advised to follow Aranagan, by mentioning ‘uybavarku uyyum vannam Thiruvarangam kaatinaan“. Azhwaar continued his preaching by mentioning the glories of Thiruvarangam in the next three hymns.

In spite of above, people did not follow Azhwaar’s preaching, he started to sing about the great help graced by Periyaperumaal to him in the next ten hymns. We discussed the first of these hymns, which is the fifteenth paasuram, ‘Meiyerke Meiyanaagum‘. In that hymn, Azhwaar stated that Emperumaan does all the things for those who show truthful devotion to him; He also protects those who do things related to devotion which are not really truthful, but could be classified as truthful; He lets down those who are not even doing such false devotion as mentioned above. Azhwaar concluded that hymn by stating that Emperuman uses His beauty to clarify all the doubts.

In the next hymn, “soodhanaai kalvanaai“, Azhwaar mentioned that Azhwaar himself was a thief and a fraud, who got entangled with the beauty of the eyes of the other women and fell in deep pits. Azhwaar confirmed that Periyaperumal used His beauty to correct him and diverted all his love and affection towards Him.

In the next hymn, “Virumbi ninru“, Azhwaar stated that previously he did not use his hands to offer Him, the mouth to say prayers or the heart to devote himself to Emperuman. Emperuman used His soft and sweet beauty to fix the hardened heart of Azhwaar and Azhwaar was so elated that his eyes were filled tears. Initially, Azhwaar was happy about the opportunity he got to have the dharsan of Thiruvarangan, who is alone and without any peer, ruling the entire kingdom and that happiness caused continuous tears from his eyes. With tears, he could not enjoy the dharsan continuously. So Azhwaar was worried and frustrated at himself in not making use of the opportunity offered to him and hence he called himself as a sinner in the eighteenth hymn,ini thirai thivalai“.

In the nineteenth hymn, Kuda thisai mudiyai vaithuAzhwaar sang that Emperuman created the four directions and kept the holy parts of His form (thirumeni) in each direction, so that we can get abode by having dharsan of those holy form. Azhwaar continued to state that his mind and body started to melt after having the splendid dharsan of Periyaperumal and wondered how others were unaffected; if they were using any potion to sustain such a strong state, Azhwaar asked them to give him a small portion of that.

To that, people responded by asking Azhwaar to come out of the devotion to Emperumaan. Those who know the glories of Emperumaan, would understand that Emperumaan is in Thiruvarangam for only themselves. Only those who are selfish and proud of themselves would move away from Periyaperumal and Azhwaar said that he would not do that. This is what he conveyed in the twentieth hymn, Paayum Neer Arangam Thannul.

Azhwaar said that he could not leave Arangan after having His dharsan. Azhwaar was given suggestions, that instead of seeing Arangan, he could try limiting his time to enjoy the beauty of Arangan or he could sit in a corner and think of Arangan through his heart, so that he would not suffer. For these, Azhwaar advised his mind/heart that limiting the experience of enjoying the beauty of Arangan, would be like what he lost in the past in the Bhagawath experience, because of the lack of his faith. This was the summary of the hymnPanivinaal manam adhu onri.

When he mentioned “manathinaal ninaikalaame ?“, he confirmed that enjoying the beauty of Periyaperumal could not be contained within a time frame or with a restricted frame of mind by the heart. Then people started advising Azhwaar that he could keep speaking about the beauty of Periyaperumal. Azhwaar questioned back as how to talk about something which could not be conceived by the heart fully. This is the gist of this hymn “pesitre pesal allaal’. Azhwaar told his heart that we could talk only what vedas and our acharyars had spoken and we would not be able to speak the glories of the Emperumaan, who lives in the hearts of those who are faultless, using any new or different words. Emperumaan would also not be understood or visible to others. There is nothing else to do than offering our prayers to Him.

Now let us go into the next hymn.

Thirumaalai Twenty Third Hymn

Gangaiyil punidhamaaya Kaaviri naduvu paatu, pongu neer parandhu paayum, poom pozhil Arangam thannul, engal Maal, Iraivan, Easan kidandhadhor, kidakai kandum, enganam marandhu vaazhgen ezhaiyen ezhaiyene (Thirumaalai 23)

When Azhwaar said that he could not think or speak anything new about Periyaperumal, people suggested that he could forget Him. Azhwaar responded how he could forget and live in this world, after having had the great dharsan of Periyaperumal in the reclining position. This is the summary of this hymn, Gangaiyil punidhamaaya.

Gangaiyil Punidhamaaya Kaaviri

Azhwaar starts this hymn that Kaveri is more beautiful and sweeter than the river Ganges, and superior in the sanctification of others, than the Ganges. The river Kaveri had attained the same status of Ganges after performing many penances to Brahma and became superior to Ganges after the Srirangam Vimaanam (the structure over the sanctum) was established in Thiruvarangam, according to the book ‘Sriranga Mahathmiyam’.

Brahma says in the book Easwara Samhithai, that all rightful things known as Dharma, turned into water, due to their devotion to Vishnu, and that water was used by Brahma paying his obeisance and to wash Thrivikraman’s Holy feet, when it crossed and measured all the worlds.

Lord Siva, declared that he was ready to get purified with the same water and agreed to hold that water on his head and later discharged it slowly to this world and that became the Ganges.

Ganges has a shortcoming, as it has a connection with Lord Siva, associated with Rajo and Thamas types of Gunas. Thaamasa Guna is known as traits of inaction, inertia and dullness. Rajo Guna is being very aggressive and anger. For this reason, even his own devotees would not accept the prasadams from the Siva temples, and called them as “nirmalyam” which means “Remains”.

Thirumangai Azhwaar in the Prabandham, Thiruvezhu kootru irukkaiMukkan Naatroll, Aivaai aravodu, Aarupodhi sadaiyon arivu arunthanmai perumaiyul ninraanai”, sang that Vishnu has the glory that He is not visible to even the great Lord Siva, who is with three eyes, four shoulders, wearing a snake with five mouths and six streams of Ganga on his mat-hair. So the Ganges has the connection and smell of Lord Siva’s mat-hair. Even with those shortcomings, Ganges is still with holiness at the end as it has the association of the holy feet of Vishnu once.

Poigai Azhwaar in his Prabandham, Mudhal Thiruvandhaadhi, (97) “unthan adi serndhu arul petraal andre, podi ser anarku am kai yetraan avir sadai mel paayndha, punal Gangai ennum per pon” meaning that Ganges got her blessings after touching the holy feet of Vishnu, a long ago. That holiness of Ganges helped to purify Siva, as he held the Ganges in his head.

Acharyar, Parasara Bhattar, in his Rangarajasthavam, (22), said that Ganges was very proud that she got the connection with Vishnu’s holy feet for just a moment. He continued that Kaveri is flowing on the streets, preparing for the visit of Namperumal, offering the sacred water for the holy bath (Thirumanjanam) and gently strikes the holy feet of Emperumaan to give Him the comfort. Thus Kaveri has been serving Thiruvarangam Emperuman continuously as against the Ganges’ short period of association, and that too only once, with Emperumaan. For these reasons, Kaveri is superior to Ganges, according to Parasara Bhattar.

All the holy rivers visit Kaveri and get themselves purified in the Tamil month of Aipasi (Thula) as many sinners would have visited those rivers to wash off their sins. This is stated in a book called Thula Kaveri Mahathmiyam.

So, Ganges has the connection with Siva and had touched the Holy feet of Vishnu only once. But Kaveri does not have any such shortcomings. Moreover, Lord Ranganatha, having those Holy feet, Himself, wanted to be in the shores of Kaveri and that made Kaveri to get associated with Thiruvarangan for ever. So it is very apt for Thondaradipodi Azhwaar to sing “Gangaiyil punidhamaaya Kaaviri”.

Naduvu Pattu

Naduvu means that it is in the middle and Azhwaar mentioned this as Thiruvarangam is in between the two Kaveris, one, the river Kaveri, flowing on the south of Srirangam and second, the river Kollidam, flowing on the north of Srirangam, which is also known as North Kaveri. The commentator explains that Arangan is in the middle of two Kaveris, as Sri Krishna lying on the lap of Yasoda.

There are four objectives, dharma, artha, kaama and moksham, collectively known as ‘Purushaarthams”. Dharma is all right things; artha denotes material richness; kaama means worldly desires and moksham means abode. From these we can understand that Kaama and artha are temporary whereas Dharma and Moksha are permanent and are always close to Paramathma.

Since Thiruvarangam has two Kaveris (South Kaveri and North Kaveri or Kollidam), it has four banks. The banks which are closer to Srirangam or Periyaperumal are associated with Dharma and Moksham. The other two banks, namely the outer ones to Srirangam are associated as Artham and Kaamam.

The commentator assigned every bank of the Kaveri to Dharma, Artha, Kama and Moksham. The northern bank of the North Kaveri is assigned as “kaamam” and the south bank of North Kaveri as Dharma. The northern side bank of the South Kaveri is assigned as Moksham and the southern side bank of South Kaveri as Artham. In other words, the banks closer to Thiruvarangan are denoted as Moksham and Dharmam.

Pongu Neer Paranhu Paayum Poompozhil

River Kaveri does not flow as a gentle river but flows with much force that batters both the banks. Parasara Bhattar in his Rangarajasthavam, mentioned that Kaveri flows with abundant water and was anxious about meeting Arangan, that made Kaveri to become muddled and throw the waves everywhere. Before reaching Thiruvarangam, she is anxious, since Periyaperumal is her son in law. Bhattar says that when she leaves Thiruvarangam, she feels sad, as she may not see Arangan again and that resulted her always to become unclear and anxious.

Because of Kaveri’s plentiful water, the gardens of Thiruvarangam were always filled with blossoming flowers, all the times, representing spring season throughout the year. So Thiruvarangam always would remove the fatigue of all people.

The purity and cleanliness of Kaveri is covered by the term “Gangaiyil punidhamaaya” and the sweetness is referred to by “Pongu neer parandhu paayum poompozhil

Engal Maal Iraivan Easan

All the three words, Maal, Iraivan, Easan mean the same, Arangan.

One of the meanings for the word Maal, is crazy. Arangan is crazy about His devotees. In other words, His affection and love towards His devotees is boundless! Here Thondaradipodi Azhwaar included other Azhwaars with him, as they had also entrusted the responsibility of protecting them to Periyaperumal and that is why Azhwaar said “engal Maal”, meaning our Thirumal. From the above context, it might look as though Periyaperumal had chosen Thiruvarangam due to its sweetness and holiness, but the underlying meaning denotes that He chose this place only due to His love and affection towards His devotees, as the commentator says.

The word Iraivan means, He is the Leader, or entitled to all and everything. Paramathma, being Iraivan, is affectionate with His devotees.

The word Easan means that He has the capability to guide according to His leadership or He is the one, who controls and guides all the actions or He is the one, who is capable of controlling and guiding all.

With these three words, Maal, Iraivan and Easan, Azhwaar states that He loves His devotees and guides them in the right direction as a Leader. In our tradition, His love and affection is referred as Vathsalyam (kindness), Sowlabhyam (simplicity) and Sowseelyam (humble). The way He guides us in the direction is referred as “Niyanthruthvam”. His leadership is conveyed as “Swamithvam”.

The explanation given by the commentator can be summarised as follows.

  • Jeevathmaas are attracted towards the three types of characters (gunas), Satva, Rajo and Thamas.
  • Paramathmaa prevents them from getting attracted towards the three characters and intends to guide them to Paramapadham, where the Jeevathmaas can experience a state of continued happiness.
  • So Paramathmaa, due to His love towards Jeevathmaas, came to Thiruvarangam and has been waiting there, to take back His own asset, the jeevathmaas, according to His own wishes.

Kidandhadhu Or Kidakai

Azhwaar for a moment, set aside all the glories of Periyaperumal on one side, and started to think about how he got captivated by the beauty of the Periyaperumal. The word “Or” meaning one in Tamil and is used by Azhwaar as ‘unparalleled’. The reclining posture is an unique and special posture of Perumal. Azhwaar felt that he might have forgotten if Perumal is in standing or sitting position, but could not forget this beautiful reclining posture that he highlighted in the word “Or‘. He added that when others were reclining or lying down, they appear unaesthetic, but when it comes to Periyaperumal, it is completely aesthetic according to the commentator.

In the hymn “Payum Neer Arangan thannul“, it was explained how Sita enjoyed the beauty of the reclining Rama in Ramayanam, Yudha Kaantam (38.25) (Sa Mayaa Bodithah Sreemaan Sukha Suptah Parantapah), even when she was hurt by an asuran, Kakasuran. The meaning of the sloka is that Rama, very handsome and capable of hurting His enemies, was woken up from His sleep.

Generally, Azhwaars glorify Paramathma, whether He is sitting, standing or reclining. For example, in Periya Thirumozhi, (6.9.5) by Thirumangai Azhwaar, “Nilayaara ninraan than neezh kazhle adai nenje“, meaning that the standing posture is perfect for the deity of Thirunaraiyur and Azhwaar asked his heart to go and reach Him there. This is to highlight the beauty of His standing posture. In the same way, Nammazhwaar in Thiruvaaimozhi (6.5.5), sang “Piraan irundhamai kaatineer”, to appreciate the beauty of the sitting posture of the main deity of Thirutholaivillimangalam.

In this hymn, Azhwaar sings about “Gangaiyil punithamaaya Kaveri” first and then brings the words “kidanthathor kidakai“. But the logical sequence is, only after touching the holy feet of Thiruvarangan, the river Kaveri gets all the holiness that is more than the Ganges, as we saw earlier. So the sequence should be as, “kidandhadhor kidakai” first and later “Gangaiyil punidhamaaya Kaviri”. The commentator justified that Azhwaars would always give more importance to Divyadesams, (the place), as those are the places which identified the Divyadhampathis (Emperumaan and Thaayar) to them and hence Azhwaar sang in the above sequence here.

Kandum, enganam marandhu vaazhgen

Azhwaar states that he could forget Periyaperumal, had he not seen the reclining posture of Him. But how could he forget after enjoying the beauty of the reclining posture of Periyaperumal? Swami Nammazhwaar’s Thiruvaaimozhi (5.5.1), “enganeyo annai meergaal, ennai munivadhu neer ? nangal kola Thirukurunkudi nambiyai naan kandapin“, is highlighted here by the commentator, as how could Nammazhwaar forget and live after the seeing the beauty of the Thirukurunkudi Nambi. Once this Bhagawadh matter is experienced, it can not be forgotten. When forgotten, life can not be continued with other worldly things.

Ezhaiyen Ezhaiyene

Here Thondaradipodi Azhwaar considered himself as poor, on bhagwadh matters. Azhwaar could not fully enjoy the Bhagwadh matters, as sung by him in the previous hymns, he called himself poor, (Ezhaiyen), even though Azhwaar was greedy to experience the Bhagawadh matters, Similarly Azhwaar sang that he would not survive, if he moved away from this (bhagawadh matter). So in that context, he called himself poor. The other meaning of the word “ezhmai” is, fatigue. Azhwaar was worn out and weakened by the karmas he accumulated over many years and many births. He became poorer, when he wanted to enjoy the Bhagawadh matters, which are unmeasurable. So the poor became poorer. Azhwaar sang this as “ezhaiyen ezhaiyene”.

With that, we will conclude this hymn and catch up again in the next hymn, “vella neer paranthu paayum“, which is the last one in this subsection, where Azhwaar was appreciating the favours graced by Emperuman to him.

கங்கையில் புனிதமாய – திருமாலை

To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை / எம்பெருமானை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான எம்பெருமான், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.

அடுத்து, ஆழ்வார், தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.

அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று எம்பெருமானை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்றும் பாடினார்.

தன்னை பெரியபெருமாள் திருத்தியதால், தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.

கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். எம்பெருமான் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.

உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் எம்பெருமானை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.

அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சொன்ன ஆழ்வாரிடம் அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்றும், அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் ஆழ்வார் தவிக்கிறார், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அது இயலாது என்பதை, அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று “பணிவினால் மனம் அது ஒன்றி” என்ற அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.

சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல, மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்துவிடமுடியாது என்றும், வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர, குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது, என்றும் கூறுகிறார். அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை புதியதாக பேச முடியுமா” என்று பேசிற்றே பேசல் அல்லால் என்று இருபத்தி இரண்டாம் பாசுரத்தில் கேட்கிறார்.

இனி அடுத்த பாசுரம்.

திருமாலை இருபத்தி மூன்றாம் பாசுரம்

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு, பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள், எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே. (திருமாலை 23)

நினைக்கவும் பேசவும் முடியாதென்றால், மறந்து போவதுதானே என்று ஆழ்வாரிடம் மற்றவர்கள் சொன்னபோது, அரங்கனின் சயனத் திருக்கோலத்தின் அழகை திருவரங்கத்தில் கண்டு ரசித்தபின் அதனை மறந்து எப்படி வாழ்வேன் என்று சொல்லும் பாசுரம்.

கங்கையில் புனிதமாய காவிரி

அழகாலும், நீரின் இனிமையாலும் கங்கையை காட்டிலும் சிறந்த காவிரி, பிறரை புனிதப்படுத்துவதிலும் கங்கையை விடச் சிறப்பான காவிரி ஆறு என்று இந்த பாசுரத்தை ஆழ்வார் தொடங்குகிறார். ஸ்ரீரங்க மஹாத்மியம் என்ற நூலில், ப்ரஹ்மாவிடம் கடும் தவம் புரிந்து கங்கையுடன் சமம் என்ற நிலையை அடைந்தபின், காவிரி, ஸ்ரீரங்கவிமானம் திருவரங்கத்தில் நிறுவப்பட்ட பின், கங்கையை விட உயர்ந்தவள் என்ற பெருமையை அடைந்ததாகக் கூறுகிறது.

ஈஸ்வர சம்ஹிதை என்ற நூலில், விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது, தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார். அந்த தண்ணீரைத் , தான், பரிசுத்தப்படுத்தபடத் தயாராக உள்ளதாகக் கூறி, சிவபெருமான் தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக பூமிக்கு விடுகிறார். அதுவே கங்கை என்று ஆனது.

அதனால் கங்கைக்கு சிவன் (ருத்ர) சம்பந்தம் கொண்டது என்ற ஒரு குற்றமும் உண்டு. ருத்ர சம்பந்தம் கொண்டதால், அவனுடைய மாலை மற்றும் பிரசாதங்களை, ‘நிர்மால்யம்’ என்று அவனுடைய பக்தர்களும் தொடத்தக்கதாக கொள்ளவில்லை. ருத்ர சம்பந்தம் என்பது, ரஜோ தமோ குணங்களுடன் தொடர்பு உள்ளது.

திருவெழு கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தில் திருமங்கைஆழ்வார், “முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவு அருந் தன்மைப் பெருமையுள் நின்றனை” என்று கூறியபடி, கங்கைக்கு சிவனின் சடையின், சிடுக்கு நாற்றமும், மயிர் தொடர்பும் உள்ளது. இருந்தாலும், இப்படிபட்ட கங்கைக்கு, விஷ்ணுவின் ஸ்ரீபாத சம்பந்தம் ஒரே ஒரு முறை ஏற்பட்டு இருந்ததால், கங்கைக்கு புனித தன்மையே இறுதியில் இருக்கும்.

இதே போல், பொய்கை ஆழ்வாரும், முதல் திருவந்தாதியில்(97), “உன்றன் அடிசேர்ந்து அருள் பெற்றாள் அன்றே, பொடிசேர் அனற்கு அம் கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்” சொல்லியது, சிவபெருமானின் சடைமேல் பாய்ந்த நீரை புனிதமாக அருள் செய்தது விஷ்ணுவின் திருவடி சேர்ந்ததாலே என்று கூறுவது.

இதையே பராசர பட்டர் எனும் ஆச்சார்யர், ரங்கராஜஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தில் (22), ஒரு க்ஷண ஸ்ரீ பாத சம்பந்தத்தால் பெருமை வாய்ந்தது என்று அஹங்கரித்து இருக்கும் கங்கை என்கிறார். திருவரங்கன் புறப்பாடு முன் திருவரங்கத் தெருக்களைச் சுத்தம் செய்வது, திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் தருவது, எப்போதும் பெரியபெருமாளின் திருவடிகளைத் தடவிக் கொடுத்து சேவை செய்வது போன்ற செய்கைகளால் கங்கையை விடச் சிறந்தவள் அன்றோ காவிரி என்று கூறுகிறார்.

தீர்த்தம் என்று பெயர் பெற்ற எல்லா புண்ணிய நதிகளும், ஐப்பசி மாதத்தில் காவிரிக்கு வந்து, பாவிகளான மக்களைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்வதாக துலா காவிரி மஹாத்மியத்தில் காவிரியின் பெருமை கூறப்பட்டு உள்ளது.

ஆக கங்கைக்கு ருத்ர சம்பந்தம் என்ற குறை உண்டு. மேலும் விஷ்ணுவின் சம்பந்தம் ஒரே ஒரு முறை மட்டுமே. ஆனால், காவிரிக்குக் குறை எதுவும் இல்லை, மேலும் அப்படிப்பட்ட திருவடிகளைக் கொண்ட திருவரங்கன் இந்த காவிரி கரையில் இருக்க வேண்டும் என்று இங்கு வந்து இருப்பதால், திருவரங்கனின் திருவடித் தொடர்பு காவிரிக்கு எப்போதும் உண்டு. அதனால் தொண்டரடிப்பொடியாழ்வார் கங்கையில் புனிதமாய காவிரி என்று பாடி உள்ளார்.

நடுவு பாட்டு

வட திருக்காவிரி மற்றும் தென் திருக்காவிரி இரண்டுக்கும் நடுவே திருவரங்கம் இருப்பதை இப்படி ஆழ்வார் குறிப்பிடுகிறார். கண்ணன் எம்பெருமான் யசோதை பிராட்டியின் மடியினில் சாய்ந்து இருப்பது போல், காவிரியின் நடுவில் பள்ளிகொண்டு திருவரங்கன் அருள்கிறான் என்கிறார்.

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்கும் புருஷார்த்தம் என்று கூறப்படும். இவைகளில் தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை நிரந்தரமானவை என்றும், காமம் மற்றும் அர்த்தம், தற்காலிகமானவை என்றும் சொல்வதுண்டு. தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை எப்பொழுதும் பரமாத்மாவிற்கு நெருங்கியவை.

திருவரங்கத்தில் வடக்கு பக்கம் கொள்ளிடம் என்ற வட திருக்காவிரி மற்றும் காவேரி என்ற தென் திருக்காவிரியும் ஓடுகின்றன. ஆக, திருஅரங்கம் நான்கு காவிரிக்கரைகளை கொண்டது. பெரியபெருமாளுக்கு அருகில் உள்ள காவிரிகரைகள் மோக்ஷமாகவும், தர்மமாகவும் உள்ளன என்று சொல்வதுண்டு. திருஅரங்கத்திற்கு வெளிப்பக்கம் உள்ள மற்ற இரண்டு காவிரிக்கரைகள், அர்த்தம் மற்றும் காமம் என்றும் சொல்லப்படும்.

வட திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை “காமம்” என்றும், தெற்கு பக்கக் கரையை ‘தர்மம்’ என்றும், தென் திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை ‘மோக்ஷம்’ என்றும், தெற்குக் பக்க கரையை ‘அர்த்தம்’ என்று சொல்லப் படுகின்றன.

பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில்

காவிரி ஒரு அமைதியான நதியை போல் இல்லாமல், இருகரைகளையும் அடித்துக் கொண்டு செல்கிறது. அதிகமான நீர் வருவதாலும், பெரிய பெருமாளை காண வருகிறோம் என்ற மகிழ்ச்சியினாலும் அலைகளை எறிந்து கொண்டு கலங்கி கொண்டு வருகிறது என்று பராசரபட்டர் ரங்கராஜஸ்த்வத்தில் (22) குறிப்பிடுகிறார். காவிரிக்கு, பெரியபெருமாள், மாப்பிளை ஆனபடியால், திருவரங்கம் வருவதற்கு முன்பு, ஒருவித கவலையோடு வருமாம், திருவரங்கத்தைக் கடந்தபின், இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஏக்கத்துடன் விலகுமாம், அதனால் எப்போதும் அது கலக்கத்துடன் உள்ளது என்று குறிப்பிடுகிறார். காவிரியின் நீர் பெருக்கால், திருவரங்கத்துச் சோலைகள் எப்போதும் பூத்து குலுங்கிக் கொண்டு என்றும் வசந்த காலமாகவே இருக்கும். அதனால் எல்லோருக்கும் களைப்பினை போக்கும் தேசமாக திருவரங்கம் உள்ளது என்கிறார்.

கங்கையில் புனிதமாய என்பதால், புனிதம் மற்றும் தூய்மையும், பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் என்பதால், இனிமையும் காவிரிக்குச் சொல்லப் படுகின்றன.

எங்கள் மால் இறைவன் ஈசன்

மால், இறைவன், ஈசன் என்ற மூன்று சொற்களுமே அரங்கனையே குறிக்கின்றன. மால் என்பதற்கு பித்துபிடித்து என்று ஒரு அர்த்தம் உண்டு.

மால் என்றால் அரங்கன் அடியார்கள் மேல் பித்து பிடித்து இருக்கிறான் என்று கொள்ளலாம். அடியார்களிடம் அளவுக்கு அதிகமான அன்பு உடையவன் என்றும் கூறலாம். பெரியபெருமாளிடம் தங்களை காக்கும் பொறுப்பை விட்டிருக்கும் மற்ற ஆழ்வார்களையும் இவர் சேர்த்துக்கொண்டதால், ‘எங்கள்’ மால் என்று அழைக்கிறார். மேலே சொன்ன புனிதத்தன்மையாலும், இனிமையினாலும் பெரியபெருமாள், திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ளார் என்பது போல் தோன்றும், ஆனால், ஆழ்ந்து பார்த்தால், அடியவர்களிடம் கொண்ட அன்பினால் தான் இங்கு எழுந்தருளி உள்ளான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.

இறைவன் என்பதற்கு எல்லாவற்றிற்கும் தலைவன், மற்றும் உரிமை உள்ளவன் என்பது பொருள். இறைவனாக இருப்பதால் அடியார்கள் மேல் அன்பு கொண்டு உள்ளான்.

ஈசன் என்பதற்கு தலைமைக்கு தகுந்தபடி ஆளத் திறமை உள்ளவன் அல்லது எல்லாவற்றையும் நடத்தி செல்பவன் அல்லது நடத்தி செல்ல வல்லவன் என்று பொருள்.

இப்படி இந்த மூன்று பதங்களால் அன்பு உடையவன், நல்வழி காட்டி, நடத்தி செல்ல வல்ல, தலைவன் என்று கூறுகிறார். நம் சம்ப்ரதாயம், அன்பு உடையவன் என்பதற்கு வாத்ஸல்யம்(பரிவு) , சௌலப்யம்(எளிமை) மற்றும் சௌசீல்யம் (நீர்மை)  என்ற பதங்களால் சொல்லும்; நியந்த்ருத்வம் என்பது நல்வழிகாட்டி நடத்தி செல்லவல்லவன் என்பதை சொல்லும்; ஸ்வாமித்துவம் என்பது தலைமையும் உணர்த்தும்.

அடியவர்கள், உலகில் உள்ள பொருட்களின் மேல், தங்களுடைய சத்வ, ரஜோ, மற்றும் தமோ என்ற முக்குணங்களால் கவரப்படுவதைத் தடுத்து, அவர்களை எப்போதும் அனுபவிக்கவல்ல பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல எண்ணி, அவர்கள்மேல் உள்ள பாசத்தால் தூண்டப்பட்டு, தன் உடைமையை, தன் இஷ்டத்திற்கு, தனதாக்கி கொள்வதற்காக, இங்கு வந்து காத்து கிடக்கிறான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.

கிடந்தது ஓர் கிடக்கை

ஆழ்வார் பெரியபெருமாளின் திவ்யகுணங்களை ஒரு கணம் தள்ளி வைத்துவிட்டு, அவன் கிடந்த திருக்கோலத்தில் தான் அகப்பட்டுக்கொண்டதை சொல்கிறார். ஒப்பற்ற என்ற பொருளில், கிடந்த திருக்கோலத்தின் சிறப்பை ஓர் என்று சொல்கிறார். நின்ற அல்லது அமர்ந்த திருக்கோலமாக இருந்தால் ஒருவேளை மறந்து இருக்கலாம், கிடந்த திருக்கோலத்தை மறக்க முடியாது என்பதை ஓர் என்ற வார்த்தையால் சொல்கிறார். மற்றவர்கள் படுத்துக்கொண்டு இருந்தால், அழகின்மையே மிகுந்து இருக்கும், ஆனால் பெரியபெருமாள் சயனித்து இருக்கும், அழகு மிகுந்து இருக்கிறது என்று உரையாசிரியர் கூறுகிறார்.

பாயும் நீர் அரங்கம் தன்னில் என்ற பாசுரத்தின் விளக்கத்தில், “பள்ளி கொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை யுத்த காண்டத்தில் (38.25) (ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ ) காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும், எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார்” என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.

ஆழ்வார்களை பொறுத்தவரையில் எம்பெருமான் நின்ற நிலையாய் இருந்தாலும், அமர்ந்த நிலையாய் இருந்தாலும் சயனித்து இருந்தாலும், அவற்றை உயர்வாகவே சொல்வார்கள். உதாரணமாக, பெரிய திருமொழியில், (6.9.5) “நிலையார நின்றான் தன் நீள்கழலே அடை நெஞ்சே”, திருமங்கை ஆழ்வார் எம்பெருமான், திருநறையூரில், மிகவும் பொருந்தி, நிலையாக நின்றான், என்று நின்ற நிலையின் பெருமையை கூறுகிறார். அதேபோல், திருவாய்மொழியில் (6.5.5), “பிரான் இருந்தமை காட்டினீர்” என்று திருத்தொலைவில்லிமங்கலத்தில் எம்பெருமான் அமர்ந்த திருக்கோல பெருமையை நம்மாழ்வார் கூறுகிறார்.

இந்த பாசுரத்தில், ஆழ்வார் முதலில் கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி, பிறகு கிடந்ததோர் கிடக்கை என்று சொல்கிறார். ஆனால் அரங்கனின் திருவடிகளை வருடிச்சொல்வதாலேயே கங்கையை விட புனிதமான நிலையை காவிரி அடைவதாக மேலே பார்த்தோம். ஆக, கிடந்ததோர் கிடக்கையை முதலில் சொல்லிவிட்டு, பிறகு கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால், ஆழ்வார்களுக்கு திவ்யதம்பதிகளை காட்டிக்கொடுத்த திவ்யதேசத்தின்மேல் கொஞ்சம் அதிக ஈடுபாடு ஆனதால், இந்த வரிசையில் சொல்கிறார்.

கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன்

காணாமல் இருந்தால், மறந்து வாழலாம், பெரியபெருமாளின் சயன திருக்கோலத்தைக் கண்டு அனுபவித்தபின் எப்படி மறந்து வாழ்வேன் என்று ஆழ்வார் கூறுகிறார். சுவாமி நம்மாழ்வாரின் “எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?, நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின், (திருவாய்மொழி, 5.5.1) என்ற வார்த்தைகள், இதனையே பிரதிபலிக்கின்றன. இந்த விஷயத்தை அனுபவித்தபின் மறக்க முடியாது, அப்படியே மறந்தாலும், மற்ற விஷயங்களைக்கொண்டு வாழ முடியாது என்று பொருள்.

ஏழையேன் ஏழையேனே

ஆழ்வார் பகவத் விஷயத்தில் தான் ஏழை அல்லது வறுமை உள்ளவன் என்கிறார். தான் இந்த விஷயத்தை அனுபவிக்க பேராசையுடன் இருந்தாலும், முன்னே சொன்னது போல், முழுவதும் அனுபவித்து முடிக்க முடியாத விஷயம் ஆகையால், ஏழையேன் என்று சொல்கிறார். அதைப் பிரிந்தால், வாழ முடியாதவன் ஆவதால், ஏழையேன் என்கிறார். ஏழைமை என்பதற்கு தளர்ச்சி என்று ஒரு பொருள் உள்ளது. பலகாலமாக கர்மா வினை பயன்களால் தளர்ச்சியடைந்த ஆழ்வார், இப்போது அளவிட்டு முடிக்கமுடியாத பகவத் விஷயத்தை கண்டு தளர்ச்சி அடைந்தவராக உள்ளார் என்பதால், ஏழையான தான் மீண்டும் ஏழையாகிவிட்டேன் என்பதை ஏழையேன் ஏழையேனே என்றும் கொள்ளலாம்.

இத்துடன் இந்த பாசுரத்தை முடித்துக்கொண்டு, எம்பெருமான் தனக்கு செய்த உதவிகளை பேசுதல் என்ற இந்த உபபகுதியின் இறுதி பாடலான “வெள்ளநீர் பரந்து பாயும்” என்ற அடுத்த பாசுரத்தை தொடரும் வலைப்பதிவில் சந்திக்கலாம், நன்றி.

கீழ்கண்ட வலைப்பதிவுக்கு எங்களின் நன்றி

RSS
Follow by Email