இந்த பகுதியின் தமிழ் ஆக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்.
Now we are going through some of the details given in Thiruvaaimozhi on selected Divya Desams. First we have seen about Thiruvenkadam; followed by some details on Sri Rangam and Thirukudanthai (Kumbakonam) Aaraavamudan. After that we started the details on Thirumaaliruncholai, (Madurai Azhagar Kovil), which is also called as Southern Home in our tradition or practice. Azhwaar had compiled four pathigams on Thirumaaliruncholai, namely, Kilaroli ilamai (2.10), Mudi chothiyaai (3.1), Muneer Gnalam (3.2) and Senchor Kavikaal (10.7) and in our previous weblogs we had seen the first three and in this weblog, let us try to go through the Senchor Kavikaal pathigam .
Swami Namazhwaar started his request (“en vinnappame“) with “Poi Nindra Gnanamum, polla ozhukkum, azhuku udambum” in his Thiruvirutham and started following Perumal from then onwards. This continued on Thiruvasiriyam and in Periya Thiruvandhaadhi. Azhwaar contiuned to follow Perumal in Thiruvaimozhi, till Nine decads and 5 pathigams in Ten (pathaam pathu) . Thereafter, from the 6th pathigam of tenth ten and till Azhwaar completed Thiruvaimozhi, Perumal started to go with Azhwaar or followed him. The sixth pathigam of tenth ten is about the divya desam Thiruvattaaru, where Perumal appreciated the devotion of Azhwaar and wanted him to come to Thirumaaliruncholai, where He would be more relaxed and enchanted .
In this pathigam, Senchor Kavikaal, (10.7), Perumal or Paramathma, the chief deity in Thirumaaliruncholai , Azhagar, wanted to take Azhwaar along with his body, to Sri Vaikuntham or abode. But Azhwaar told Azhagar that the Vedas insisted that the body should be left here in this world and only the soul or Jeevaathma should alone be taken. On that premise, Azhwaar insisted that Azhagar only take the soul or the Jeevathmaa of the Azhwaar and leave the body in this world. Azhagar accepted the words of Azhwaar and blessed him accordingly.
In this subsection, Azhwaar praises the simplicity of Perumal. Among all the glories of Perumal, Azhwaar says that His simplicity is the best. Azhwaar warns us that His simplicity, is very powerful and it is extremely difficult to survive the same. So he cautions us to keep our life to serve Him in the first hymn 10.7.1 when he mentions “uyir kaathu aat seymin”.
“Seelam”, or “Simplicity” is one of the glories of Paramathma, which can be defined as a relationship in which both His superiority and our inferiority are not felt and in addition, an equal state is established during the interaction. The phrase “uyril kaathu aat sey min” (10.7.1) used by Azhwaar has a direct meaning of advising us to serve Him, after protecting our lives. But Ramanjuar, our acharyar, provided another explanation by advising us to serve Him as per His wish in order to protect His Life. According to Swami Ramanujar, our soul might melt, as sung by Thirumangai Azhwaar in Thirunedunthandagam, “neeraai urugum en aavi” when we experience His simplicity and He might go away without accepting our service. In case He goes away, we do not have anyone to whom we can submit our hymns. So Swami Ramanuja’s suggestion is that we do our service, as per His wish and protect Him.
In this Hymn, Azhwaar has coined a phase in Tamil called, “sen chor kavi” which can be expanded as
Azhwaar said in the next hymn(10.7.2) that Perumal was a magician (Maayan) who had come inside him and mixed with him in his heart and in the whole body, without the knowledge of the Nithyasoories who were nearby Him and in that process He wrote the whole Thiruvaaimozhi using Azhwaar as a tool. Azhwaar was very happy that he could appreciate the happiness, pride and completeness that Perumal got after such interaction. Azhwaar also concluded by saying that the hymns composed by him on Perumal were also very sweet.
In the next hymn (10.7.3) Azhwaar used the words “ennai, mutrum uyir undu” meaning that his soul was completely eaten, for the second time in this pathigam or subsection. This was explained as the amount of respect, happiness and attachment that Perumal had towards Azhwaar is as much as what He had towards Thayaar or Sri Mahalakshmi. In this hymn, Azhwaar revealed that Perumal had come inside his body and soul. Since Perumal had chosen Thirumaaliruncholai, as the place for their meeting, Azhwaar started liking Thirumaaliruncholai, the path towards Thirumaaliruncholai , the direction leading to Thirumaaliruncholai,and in short Azhwaar liked anything associated with Thirumaaliruncholai.
Perumal knew about the beauty and greatness of Thirumaaliruncholai right from the time He measured the whole world with one of His holy feet, when He took Thrivikrama incarnation. So He decided to choose Thirumaaliruncholai as the place to be with Azhwaar. In the next hymn (10.7.4), even though Azhwaar said “gnalathode nadandthu uzhakki” (meaning, walked across the world), we should remember Thrivikrama, who took the one long, big step to measure the whole world. In the same hymn, when Azhwaar said “nangal kundram kai vidaan, nangu en udalam kai vidaan” meaning that He would not let go The Hill, Thirumaaliruncholai or Azhwaar’s soul and body (Thirumeni). This is also interpreted as He enjoyed Azhwaar as much as He liked Thirumaaliruncholai.
In the next hymn(10.7.5), Azhwaar highlighted that Perumal occupied his soul and body and compiled Thiruvaaimozhi by Himself. This was very much similar to the many of His incarnations or avatars, where He protected the good and destroyed the bad, as given in “aathiyaam sothi uruvai angu vaithu ingu pirantha” (3.5.5). In the same way Thiruvaaimozhi was also compiled to protect the Vishnu devotees and to punish the atheists. The example given below was used to substantiate what Azhwaar highlighted in this hymn. Kirumi Kanda Chozhan was a king, who was against Vaishnavites and his young son, told him that Vaishnavism would survive as long as the epic Ramayana and Azhwaar’s Thiruvaimozhi exist in this world.
Before Thiruvaaimozhi was sung, no one had ever praised all the glories of Paramathma or Perumal in one place. But after Thiruvaaimozhi was sung, all the saints requested Paramathma to exhibit more of His glories, as Thiruvaaimozhi had already compiled and consolidated all His glories into it. This came out in the next hymn, (10.7.5) when Azhwaar mentioned “ennaathana ennum nan munivargal inbam thalai sirappa”. Azhwaar also confirmed that Perumal had sung about Himself in Thiruvaaimozhi, as He had filled into Azhwaar fully and sang about Himself by Himself as in “yaanaai thannai thaan paadi“. Azhwaar completed the hymn by saying that the bees in Thirumaaliruncholai sang the glories of Thiruvaimozhi and danced ecstatically.
In the next hymn (10.7.6), Azhwaar highlighted three important points. The first one is that Perumal had taken all the living and non-living things of this universe into His stomach and protected them for years during Pralayam. The point to be noted here is that Azhwaar said he was also one among them. The second point was that Perumal had given dharsan of His holy feet alone to Siva and Brahma and He did not show His holy face to them. The third point is that Perumal had given His dharsan, including His holy face to Azhwaar, as Thirumaaliruncholai Azhagar, where He enslaved Azhwaar.
In the next hymn, 10.7.7, Azhwaar appreciated the greatness of Thirumaaliruncholai, where he felt that he was accepted by Perumal. Azhwaar continued to say that it was the same place where Siva asked Perumal for His grace and it was the same place where Brahmaa, Indra and many other saints offered their prayers to Azhagar, in Thirumaaliruncholai.
Next hymn (10.7.8) is an important and interesting hymn, where Azhwaar compared himself with many divyadesams in multiple ways.
In the next hymn(10.7.9), Azhwaar did one advisory note to his mind and one request to Perumal. The advisory note to his mind was not to ever forget Thirumaaliruncholai, the place where he got His complete grace and he offered his prayers for Thirumaaliruncholai to be there for ever. Perumal after listening to this, got ready to take the enlightened Azhwaar, to Sri Vaikuntham, which means that Perumal wanted to carry Azhwaar along with his body and soul. Azhwaar, based on what is told in Veda, that no one should go with this body to Srivaikuntham and hence he made a request to Perumal to let his body and soul fade away, so that he could go with Perumal to Srivaikuntham.
As Vedas say, everyone should leave their body in this world and go to sri vaikuntham. This is also told by Sri Krishna in Bhagawad Gita, “Dhaivee heshyaa gunamayee, mama maayaa turathyayaa. The same thing is told in the next hymn, 10.7.10, where Azhwaar tried to refresh or remind Perumal, about the glories of Jeevaathma, which was originally told to Azhwaar by Perumal in the subsection “Kangal Sivanthu Periya Vaai Vaayum sivanthu”(8.8) and also as given below.
Last hymn in this subsection talks about the benefits of reciting this subsection.
Azhwaar had mentioned Thirumaaliruncholai in each and every hymn of this subsection (pathigam) and also he mentioned about the state of his body in every hymn. Finally he also requested the chief deity of Thirumaaliruncholai to fade his soul and body. Since this request was accepted by Perumal, Thirumaalirincholai is considered as one of the important deities who helped Azhwaar to get his moksham . With this we offer our prayers to the chief deity of Thirumaaliruncholai, which is also the South Home of our tradition and we conclude this subject here and proceed to the next subject in our next weblog.
To read this in English, please click here, thanks
நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி ஆழ்வார் பாடிய பதிகங்களான “கிளரொளி இளமை ” (2.10), “முடிச் சோதியாய் ” (3.1) மற்றும் “முந்நீர் ஞாலம்” (3.2) ஆகியவற்றில் ஒரு சில விவரங்களை பார்த்தோம். மூன்றாம் பத்தில் அழகரைப் பற்றி பாடிய ஆழ்வார் மீண்டும் இறுதியில் பத்தாம் பத்தில் “செஞ்சொற்கவிகாள்” (10.7) என்ற பதிகத்தில் திருமாலிருஞ்சோலை அழகரைப் பற்றி கூறிய ஒரு சில விவரங்களை இந்த வலைப்பதிவினில் பார்ப்போம் .
“அடியேன் செய்யும் விண்ணப்பம்” என்று திருவிருத்தத்தில் “பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்” என்ற முதல் பாசுரத்தில் இருந்து ஆழ்வார் பெருமாளை தொடர்கிறார். இப்படி ஆழ்வார், பெருமாள் பின் செல்வது, திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழியில் முதல் ஒன்பது பத்துக்களிலும், பத்தாம் பத்தில் ஐந்தாம் பதிகம் வரையிலும் தொடர்கிறது. ஆறாம் பத்து முதல் பத்தாம் பத்து முடிய பெருமாள், ஆழ்வாரை பின் தொடர்ந்து செல்வது போல் அமைந்து உள்ளது. ஆறாம் பத்து, திருவட்டாறு திவ்யதேசத்தைப் பற்றியது. ஆழ்வாரின் பக்தியை மெச்சி பெருமாள், அவருக்கு அருளநினைத்து, (ஏகாந்தமாக) தனியாக இருக்கும் திருமாலிருஞ்சோலைக்கு ஆழ்வாரை அழைக்கிறார்.
இந்த பதிகத்தில்(10.7), ஆழ்வாரை அவரது இவ்வுலகத்து
திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துசெல்ல ஆசை கொண்டான். ஆழ்வார், அழகரிடம், வேதமானது இந்த பூ உடலை இந்த உலகத்திலேயே விட்டு விட்டு ஜீவாத்மாவை மட்டுமே செல்லும்படி சொல்லி இருக்கிறது என்று சொல்லி அழகருடன் செல்ல மறுத்தார். அழகரும் ஆழ்வாரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு ஆழ்வாரை வேதத்தின் படியே நடக்க ஆசீர்வதித்தார்.
இந்த பதிகத்தில் ஆழ்வார், பெருமாளின் சௌசீல்யத்தின் பெருமையை சொல்கிறார். எம்பெருமானுடைய எல்லா குணங்களைக் காட்டிலும் சீல குண மிகவும் சிறப்பானது, அதில் இருந்து தப்பிப் பிழைப்பது அரிது என்றும், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டு அவனுக்கு சேவை செய்யுங்கள் என்றும் சொல்வதை ஆழ்வார் “உயிர் காத்து ஆட்செய்மின்” (10.7.1) என்கிறார்.
சீல குணம் என்பது பெரியவன் சிறியவனோடு, அவன் பெருமையும், இவன் சிறுமையும் தோன்றாதபடி, சரி சமமாக இருப்பது. நம் உயிரை காத்துகொண்டு அவனுக்கு சேவை செய்யுங்கள் என்று ஒரு அர்த்தம் இருந்தாலும், ராமானுஜர் இதையே, பரமாத்மாவின் உயிரைக் காத்து அவனுக்கு சேவை செய்யுங்கள் என்பாராம். பரமாத்மா பெரியவன் என்பதால், அவன் சீல குணத்தைக் காட்டும் போது, “நீராய் உருகும் என்னாவி“(சிறிய திருமடல், திருமங்கை ஆழ்வார்) என்பது போல், நாம் உருகி அவனை தடுக்க, அவன் விட்டு விலகி செல்லும் அபாயம் உள்ளது. அவன் சென்று விட்டால் யாரைக் குறித்து கவி பாடுவது, ஆகவே அவன் உயிரை காத்து, அவன் சொன்னபடி செய்து அவனை அனுபவிக்கப் பாருங்கள் என்று ஆழ்வார் சொல்வதாக ராமானுஜர் சொல்கிறார். கவி என்றால், அர்த்தத்தை பெரிதாக கொள்ளாமல், எதுகை மோனையுடன் எழுதுவது. சொற்கவி என்றால், அர்த்தத்தையும் முக்கியமாக கொண்டு தன்னுடைய சுய லாபத்திற்காக / பயனுக்காக எழுதுவது. செஞ்சொற்கவி என்றால், பயனை எதிர்பாராமல், பகவத் விஷயத்தை மட்டுமே எழுதுவது.
ஆழ்வாரை உபகரணமாகக்கொண்டு, திருவாய்மொழி எழுத அவனே காரணமாக இருந்து, அருகில் இருக்கும் நித்யஸூரிகளும் அறியா வண்ணம், ஆழ்வாரிடம் புகுந்து, அவரது நெஞ்சையும் உடலையும், உயிரையும் ஆட்கொண்டு முழுவதுமாக ஆகி நின்ற மாயன் என்கிறார். அப்படி கலந்த பின் பெருமானுக்கு உண்டான முழுமையும், பெருமையும் மகிழ்ச்சியையும் கண்டு ஆழ்வார் மகிழ்கிறார். பெருமானின் குணநலன்களை ஆழ்வார் உணருகிறார். பெருமானுக்காக தான் பாடிய கவி இனிக்கின்றதையும் ஆழ்வார் கூறுகிறார்.
“என்னை முற்றும் உயிர் உண்டு“(10.7.3) என்று இரண்டாவது முறையாக கூறியதை, எம்பெருமானுக்கு லஷ்மீ ஸம்பந்தத்தினால் எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு ஏற்றம் ஆழ்வாரை அனுபவிப்பதால் உண்டு என்று நம் உரையாசிரியர்கள் கூறுவார்கள். இந்த பாடலில், ஆழ்வார், எம்பெருமான் தனது உயிராகவும், உடலாகவும் ஆனார் என்கிறார். இந்த இடத்தில் ஆழ்வாரிடம் சேர விரும்பியதால், அவன் விரும்பும் இடமான மாலிருஞ்சோலையை விரும்பி, அதற்கு செல்லும் வழியை விரும்பி, அந்த திசையையும் ஆழ்வார் விரும்புகிறார்.
த்ரிவிக்ரமனாக எல்லா உலகங்களையும் அளந்த காலத்தில் இருந்தே திருமாலிருஞ்சோலையின் சிறப்பு பெருமாளுக்கு தெரியும். ஆகவே ஆழ்வாருடன் அனுபவிக்க சிறந்த இடமாக பெருமாள் திருமாலிருஞ்சோலையை தேர்ந்து எடுத்தார். இந்த பாசுரத்தில், ஆழ்வார், “ஞாலத்தூடே நடந்துழக்கி” (10.7.4) என்று சொல்வது, பூமியெங்கும் உலாவித் திரிந்து என்று அர்த்தம் இருந்தாலும், தாவி அன்று உலகு அளந்த த்ரிவிக்ரமனையே நாம் நினைவில் கொள்ள வேண்டும். “நங்கள் குன்றம் கை விடான், நன்கு என் உடலம் கை விடான்” (10.7.4), என்று சொன்னது, இங்கே நின்று அருளி, ஆழ்வாரின் உடலிலும் அதே அளவு ஆசையுடன் உறைந்தான் என்பதாகும்.
பெருமாளே, ஆழ்வாராக இருந்து திருவாய்மொழி இயற்றியதை, பெருமாள் அவதாரமும் திருவாய்மொழி அவதாரமும் ஒரே மாதிரி உள்ளது என்கிறார். “ஆதியஞ் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த (3.5.5)” என்பது அசுரர்களை அழிக்கவும், நல்லவர்களை காப்பதற்கும் அவ்வப்போது பெருமாள் அவதரிப்பதை ஆழ்வார் சொல்வது. திருவாய்மொழியும் விஷ்ணுபக்தர்களை காப்பதற்காகவும், அப்படி கடவுள் பக்தி இல்லாவதவர்களை தண்டிப்பதற்கு தோன்றியதாகும். இதை திருவாய்மொழியும் இராமாயணமும் இரண்டு கண்களாக இருந்து வைஷ்ணவத்தை காலம் காலமாக காக்கும் என்று கிருமிகண்டசோழனின் மகன் சிறு வயதிலேயே சொன்னதை உரை ஆசிரியர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.
திருவாய்மொழி பெருமாளின் எல்லா குணநலன்களையும் கூறிவிட்டது என்றும் பெருமாள் இன்னும் சில குணநலன்களை அருள வேண்டும் என்பதை “எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப” (10.7.5) என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். திருவாய்மொழிக்கு முன் பெருமாளின் எல்லா குண நலன்களையும் சொல்லும் பிரபந்தம் ஒன்றும் இல்லை என்பது கருத்து. இப்படி “யானாய் தன்னை தான் பாடி“, என்பது பெருமாளே ஆழ்வாரின் உடலில் புகுந்து, திருவாய்மொழியை இயற்றியத்தை சொல்கிறார். அதன் பெருமையை திருமாலிருஞ்சோலையில் உள்ள வண்டுகள் பேசி மிக உற்சாகமாக பறந்தன என்று ஆழ்வார் இந்த பாசுரத்தில் (10.7.5) கூறுகிறார்.
அடுத்த பாசுரத்தில், (10.7.6) மூன்று முக்கிய பொருள்களை ஆழ்வார் அருளுகிறார். ஒன்று, பெருமான் மூவுலகங்களையும் காலம் காலமாய் தன் திருவயிற்றில் வைத்து காத்தது, அதில் ஆழ்வாரும் அடக்கம் ; அடுத்ததாக, சிவனுக்கும், பிரமனுக்கும் தன் திருவடிகளை மட்டுமே கொண்டு அருள் தந்தது; ஆனால் அவர்களுக்கு தன் திருமுக மண்டலத்தைக் காட்சி கொடுக்கவில்லை. மூன்றாவதாக தனக்கு திருமாலிருஞ்சோலை அழகனாக இருந்து காட்சி தந்து, தன்னை அடிமை கொண்டது.
அடுத்த பாசுரத்தில், (10.7.7) தன்னை ஆட்கொண்ட தேசமான திருமாலிருஞ்சோலை மலையின் பெருமையைக் கொண்டாடுகிறார். பெருமானிடம், சிவன் அருள் வேண்டிய இடம் என்றும், பிரம்மன், இந்திரன், மற்றும் தேவர்களும் முனிவர்களும், துதிக்கும்படியான பெருமான் திருமாலிருஞ்சோலையில் எழுந்து அருளியுள்ளான் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
அடுத்த பாசுரத்தில், (10.7.9) தன் மனதிற்கு ஒரு உபதேசமும், பெருமானிடத்தில் ஒரு விண்ணப்பமும் செய்கிறார். மனதிற்கு செய்யும் உபதேசம், திருமாலிருஞ்சோலையை வாழி என்று வாழ்த்தி அதனை என்றும் கைவிடாமல் இருக்க சொல்வது, ஏனெனில் அந்த தேசம் தான் பெருமாளுடன் ஆன தன்னுடைய காரியத்தை முடித்துக்கொடுத்த இடம். இதனைக்கேட்ட பெருமாள், ஆழ்வாரைக் கொடுத்தது அவர் சரீரமானபடியாலேயம் அதனையும் கைவிடாமல், ஞானம் சுடர்விடும் அவர் மேனியுடன் ஆழ்வாரை வைகுந்தத்திற்கு அழைத்து செல்ல தயார் ஆனார். இந்த உடலுடன் வைகுந்தத்திற்கு செல்வது உகந்தது ஆகாது என்று அவருடைய உயிரையும் உடலையும் மங்கும்படி செய்ய பிரார்த்திக்கிறார்.
எல்லோரும் தங்கள் உடலை இந்த உலகினில் விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது நியதி. அதை “தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா” என்று, பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணனே சொல்கிறார். அதையே அடுத்த பாசுரத்தில், (10.7.10) பெருமாள், ஆழ்வாரை இந்த உடலோடு வைகுந்தத்திற்கு அழைத்து செல்ல விரும்பும் போது, பெருமாள் அவருக்கு உபதேசித்த, ஜீவாத்மாவின் பெருமைகளை நினைவு படுத்துகிறார். இதனை பெருமாள் ஆழ்வாருக்கு “கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து ” (8.8) என்ற பதிகத்தில் சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளலாம்.
இறுதி பாசுரம், இந்த பதிகத்தைப் படிப்பதால் உண்டாகும் பலனை சொல்கிறது. மகான், அகங்காரம் என்பவைகள் கூட்டாக உள்ள தேகத்தை மங்க செய்ய வந்த பதிகம் என்றும் ஆழ்வார் மிக செருக்கோடு எழுதிய பதிகம் என்றும் கொள்ளலாம். ஒவ்வொரு பாசுரத்தில் திருமாலிருஞ்சோலை என்று சொல்லிவிட்டு, மீண்டும் கடைசி பாசுரத்தில் மீண்டும் இந்த பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே என்று சொன்னது, இந்த மலையின் மேல் ஆழ்வாருக்கு உண்டான ஆசைக்கும் மதிப்பிற்கும் சேர்த்து சொன்னது.
மயல் மிகு பொழில்சூழ் மாலிருஞ்சோலை என்று 2.10ல் சொன்னதால், அது அஞ்ஞானத்தை அதிகரிக்கும் மலை ஆனது. அது மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வாருக்கே என்பது “முடிச் சோதியாய் உன் முகச் சோதி மலர் ந்ததுவோ” என்ற 3.1ல், கேள்வி எழுப்பியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர, எல்லாவற்றையும் அறிந்த பெருமாளுக்கே, இந்த மலையின் மேல் உள்ள மையல் காரணமாக, ஆழ்வாரை இந்த உடலுடன் ஸ்ரீவைகுந்தத்திற்கு அழைத்து செல்லலாம் என்று ஒரு கருத்தும் உள்ளது. அடியவர்கள் சொற்படி மட்டுமே தன்னை மாற்றிக்கொள்ளும் அவதாரம் அர்ச்சை (அர்ச்சக பராதினகா) ஆகையால், ஆழ்வார் சொன்னபடி அவனை மாற்றிக்கொண்டு ஆழ்வாரின் உடலை தவிர்த்ததுவும் இந்த திருமலையிலே தான் என்பதாலும் ஆழ்வார் இநத பத்தும் திருமாலிருஞ்சோலைக்கே என்று இந்த பாடலில் கூறுகிறார்.
இப்படி ஒவ்வொரு பாசுரத்திலும் திருமாலிருஞ்சோலை மலையை சொல்லி, ஒவ்வொரு பாசுரத்திலும் உடலின் சம்பந்தத்தையம் சொல்லி அதனையும் மங்கச்செய் என்று வேண்டிய பதிகம் என்பதாலும் ஆழ்வார் மோக்ஷம் பெறுவதற்கு உதவிய பெருமாள்களில் முக்கியமான ஒருவருமானதாலும் இந்த தெற்கு வீடான திருமாலிருஞ்சோலை திருமலையை வணங்கி நாம் இந்த திவ்யதேசம் பற்றிய விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்வோம்.
இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும்.
We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. We also discussed briefly about what Namazhwaar says on Thirumaaliruncholai, which is traditionally called as The Southern Home of Vaishnava Sampradhayam. Let us try to discuss some more about the same divyadesam in this weblog.
After enjoying the beauty and glories of Thirumaaliruncholai mountain, Azhwaar proceeded to explain the beauty and glories of Azhagar, the Divyadesa perumal in Thirumaaliruncholai, and he decided that it is not only him, but also all others like Brahma and scriptures like Vedas would not be able to describe Him completely. In this subsection or pathigam, Azhwaar expressed his concerns on how and when he would have the dharsan of Azhagar. For this Perumaal responded to him, by asking Azhwaar to come and have the dharsan of Him in Thiruvenkadam, which is in the north of Tamil Nadu.
Let us now see a few details on the some of the hymns to understand the dexterity of Azhwaar in this pathigam.
In the first hymn (3.2.1), Azhwaar regretted that he spent his life without using his limbs and body that were gifted to him by His kindness, in a right way. In other words, he should have used the limbs to pray Him and get abode, but instead he went ahead with the ways in which his limbs had forced to him to travel.
In the first hymn (3.2.1), Azhwaar called “muneer gnalam“, meaning that this world is surrounded by the sea, which has a combination of three types of water, namely, river water, spring water and rain water. In Tamil ‘mun’ also means ‘before’, which is interpreted as the sequence of creation of the whole Universe, namely, the water came ahead of the earth. The sequence of creation of this Universe is sky, air, fire, water and then earth.
Azhwaar uses the name “Mugilvannan” for Perumal, even though He has hundreds of names. The reason for this is, Mugil in Tamil means Cloud, which gives water without expecting anything. In the same way, Perumal, with His kindness, created the whole earth and gave us the body. Azhwaar also called Him as “Em Mugilvannan”, which means that Perumal created the whole world for Azhwaar and in spite of that he spent the life without offering his prayers to Him in the past.
In the next hymn (3.2.2), Azhwaar talks about Vamana Incarnation, where He offered His holy feet to all without anyone asking for abode and his misfortune of missing that opportunity. In this hymn, Azhwaar calls the earth as “vanmaa vaiyam” meaning that this is tough world. The toughness is due to
Like the previous hymn, Azhwaar used “em Vamana” to indicate that the Vamana incarnation was for himself and still he missed.
In the next hymn, (3.2.3), Azhwaar talks about the kindness of Perumal, when He took the Krishna incarnation to provide abode for those, who missed His blessings during the Vamana incarnation. In this hymn Azhwaar says that Krishna incarnation was also for him, when he mentioned “iru nila thavitha enthaai“.
Another interesting point in this hymn is the usage of the words “Kollaamaakol, kolai seitha Bharatha por” (3.2.3). The word Kollaamaakol in Tamil means that this stick will not be used for killing. Krishna used a whip to direct the horses that drove the chariot of Krishna and Arjuna. With the whip in His hand, He almost killed everyone in the great war, called in the epic Mahabharatham. At the end of the war, only Aswaththaama and Krubhacharyar alone survived in the opposition and Dharama and his brothers alone survived in the other side. This is mentioned in the twelve thousand Ettu SriSukthi as “only four or five people on one side and one or two in the other side survived at the end of the war”
In the next hymn, “soozhchi gnana sudar oli aaki” (3.2.4), the word Soozhchi means that He is spread all over. Azhwaar uses the word “Enthaai” meaning that Perumaal spread Himself everywhere only for Azhwaar. Azhwaar continued to say that Paramathmaa show His kindness to even those who disliked Him, by keeping Himself within them as Antharyaami. Still Azhwaar regretted that he missed opportunity to get His blessings during both Vamana and Krishna incarnations and requests Paramathma to do an incarnation for Azhwaar.
In continuation to this hymn, Paramathma responded to Azhwaar by saying that he would not have time, as Krishna incarnation took one hundred years and Rama incarnation took Eleven Thousand years. Azhwaar understood and requested Paramathma to do a short appearance like He showed to Prahalatha (in Narasimha incarnation) or to Gajendran, the elephant, when He saved its life. With that Azhwaar wondered how he could come and have the dharsan of Paramathma with his own efforts, if He did not appear, by saying “yaan unnai engu vanthu anukirpen” (3.2.5).
In the next hymn Azhwaar highlights the glories of perumaal by saying “Par Pallaayiram uyir seitha Parama” (3.2.6), meaning that He created the whole with so many thousand lives. Along with that Azhwaar also mentioned his lowly worthiness by saying “arpa saarangal avai suvaithu agandru ozhinthen” meaning that Azhwaar was tasting the worldly pleasures and moved away from Him. By this Azhwaar says that it is not at all difficult for Perumal, who has so much greatness, to change his worthiness. At the same time, it will be impossible for Azhwaar to get abode only based on his merits. Azhwaar was trying to get a response on when he would get abode. In this hymn, Azhwaar has used the name “Parama” which could be referring to “Paramaswami“, which is one of the names of Azhagar in Thirumaaliruncholai.
In this hymn (3.2.6), Azhwaar highlighted the glories of His holy feet, by saying “Nin Nan Pon Sothi Thaal”. As a continuation in the next hymn, Azhwaar highlighted the glory of Krishna, by saying that He as spread Himself everywhere, He knows everything, He has the brightness, sheen and splendor of the light which is the representation of Wisdom. Azhwaar’s concern was that when we do not have the real knowledge, how could we approach Paramathma, who is a form of complete knowledge. In Vishnu Puranam, (one of the eighteen important essays), the true knowledge is defined as the knowledge on Paramathma and all other knowledge is classified as Ignorance.
In the next hymn, Azhwaar says that he did not practice Karma yogam or bakthi yogam, the two out of three ways in which one could reach Him, when he mentioned “mevu thunba vinaigalai viduthumilen“(3.2.8) and “ovuthal indri un gazhal vanangitrilen” (3.2.8). Since azhwaar had mentioned about Karma yogam and bakthi yogam, it is understood “the gnana yogam” the third way was also included in this hymn.
In this pathigam (3.2) also, there is no direct mention about Thirumaaliruncholai. Our acharyaars have classified this pathigam to Thirumaaliruncholai Azhagar. So, Azhwaar, in Thiruvaaimozhi, had started talking about Azhagar in 2.10 (kilaroli ilamai), continued in 3.1 (mudi sothi) and 3.2 (muneer gnalam) subsections, which we have seen so for. Azhwaar recalled Thirumaaliruncholai Azhagar again in subsection 10.7, Senchorkavikaal which we will try to see in our next weblog.
For English version, please click here, thanks
நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவினிலும் அழகர் அவர்களேயே தொடர்வோம்.
திருமாலிருஞ்சோலை மலையின் பெருமையும், அழகையும் அனுபவித்த ஆழ்வார் அழகரின் அழகை வர்ணிக்க முற்பட்டபோது, தன்னாலும் மற்றும் எவராலும், பிரம்மன் போன்றவர்களாலும் வேதத்தினாலும், அதை சொல்லி முடிக்க முடியாது என்று சோகத்தில் மூழ்கினார். இந்த பதிகத்தில், அழகருடைய தரிசனத்தை முழுவதுமாக காண்பது எப்போது என்று கவலைப்பட்டபோது, பெருமாள் ஆழ்வாரை வடக்கு திருமலைக்கு அழைக்கிறார்.
இந்த பதிகத்தில் சில பாசுரங்களின் அழகை கீழே காண்போம்.
ஆழ்வார், முதல் பாசுரத்தில் (3.2.1), தனக்கு உபகாரமாக பெருமாள், கருணையுடன், இந்த உலகினைப் படைத்து, அதற்கு மேல், அவன் தந்த உடலினைக் கொண்டு அவனை அடிபணிந்து மோட்ஷம் பெற வேண்டிய தான், அவனை பணியாமல், அந்த சரீரம் / புலன்கள் அழைத்த வழி சென்று காலத்தினை கழித்தேனே என்று கவலைப்படுகிறார்.
“முந்நீர் ஞாலம்” (3.2.1) என்று, ஆற்று நீர், ஊற்றுநீர், வேற்றுநீர் (மழை) என்று மூன்று நீர்களால் ஆன கடல்கள் சூழ்ந்த உலகினைப் படைத்தவன் என்று கூறுவது சிறப்பு. முந்நீர் என்பதற்கு முன்னால் வந்த நீர் என்றும் பொருள் உண்டு. ஆகாயம், வாயு, அக்னி, தண்ணீர், பூமி என்பதே உலகம் படைக்கப்பட்ட வரிசை. உலகம் படைப்பதற்கு முன்பு நீரை படைத்ததால் அது முந்நீர் ஆயிற்று.
பெருமாளுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருந்தாலும், இங்கே “முகில் வண்ணன் ” என்று சொல்வது எதையும் எதிர்பார்க்காது நீரை மேகம் கொடுப்பது போல், பெருமாள் இந்த உலகத்தைப் படைத்து, நமக்கு இந்த உடலினைப் படைத்த கருணையை சொல்வது. ” எம் முகில் வண்ணன் ” என்று சொல்வதால், ஆழ்வார் இந்த உலகத்தினை அவருக்காகவே படைத்ததாகவும் அப்படி இருந்தும் தான் அவனை பணியாமல் காலத்தைக் கழித்தேனே என்று வருந்துகிறார்.
அடுத்த பாசுரத்தில் (3.2.2), வாமனனாக வந்து அவதரித்து யாரும் கேட்காமலே அவர்கள் இருந்த இடத்திற்கு சென்று, எல்லோருக்கும் தன் திருவடிகளை (சரணாகதி) அருளிய காலத்தை தவறவிட்ட தான், எப்போது அவன் திருவடிகளை அடைவது என்று கேட்கிறார். “வன்மா வையம் அளந்த” என்பது
முன் பாசுரம் போல், இங்கும் “எம் வாமனா” என்பது, தனக்காகவே வாமனனாக அவதரித்ததாக ஆழ்வார் சொல்கிறார்.
அடுத்த பாசுரத்தில், (3.2.3), வாமனனாக அவதரித்த காலத்தில் அவனை அடையமுடியாதவர்களுக்கு உபகாரம் செய்யும் வகையில் கிருஷ்ணனாக அவதரித்த போதும், அந்த வாய்ப்பையும் தான் நழுவ விட்டதாக ஆழ்வார் சொல்கிறார். கிருஷ்ணனாக அவதரித்து பாண்டவர்களுக்கு உதவியதும் தமக்காகவே என்பதை “இருநிலத் தவித்த எந்தாய்” என்பதில் சொல்லி உள்ளார்.
“கொல்லாமாக்கோல் கொலை செய்து பாரத போர் ” (3.2.3) என்று ஆழ்வார் சொல்வது, கொலை செய்யும் ஆயுதமாக பயன் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படாத, குதிரைகளை ஓட்ட உதவும் சாட்டையைக் கொண்டு, கிருஷ்ண பரமாத்மா, இரண்டு பக்க சேனைகளையும் கொலை செய்துவித்தவன் என்கிறார். கௌரவர்கள் பக்கத்தில் அஸ்வத்தாமா மற்றும் க்ருபாச்சாரியார், பாண்டவர்கள் பக்கத்தில் தர்மன் மற்றும் சகோதர்கள் மட்டுமே பாரதப்போர் முடிவில் உயிருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கே நாலைந்துபேரும் அங்கே ஒன்றிரண்டுபேரும் தவிர மற்ற எல்லோரையும் முடித்து விட்டான் என்று பன்னீராயிரப்படி ஈட்டு ஸ்ரீஸூக்தியில் சொல்லப்படுகிறது.
அடுத்த பாசுரத்தில் “சூழ்ச்சி ஞான சுடரொளி ஆகி” (3.2.4) என்பதில், ‘சூழ்ச்சி’ என்பதற்கு எங்கும் பரந்து நிறைந்து இருப்பதை சொல்கிறார். இப்படி எங்கும் பரந்து இருப்பதும் தமக்காக என்பதை, ‘எந்தாய்’ என்பதில் குறிப்பிடுகிறார். இப்படி எங்கும் பரந்து இருந்தும், எல்லாவற்றையும் சூழ்ந்து இருந்தும், வேண்டாதவர்களிடத்திலும் பரமாத்மா அந்தர்யாமியாய் இருந்தும், தான் மட்டும் விடுபட்டதாகவும், இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் போன்று, தனக்காக ஓர் அவதாரத்தைச் செய்து தன் கண்களுக்கு தோன்றும்படி ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.
அதற்கு பெருமாள், இராமாவதாரம் செய்வதானால் பதினோரு ஆயிரம் ஆண்டுகளும், கிருஷ்ணாவதாரம் செய்வதானால் நூறு ஆண்டுகளும் வேண்டும் என்றும் அதற்கு தற்போது நேரம் இல்லை என்று சொல்கிறார். ஆழ்வார் பெருமாளின் திருஉள்ளதை அறிந்து, அவரிடம், கஜேந்திரன் என்ற யானைக்கோ, அல்லது பிரகலாதனுக்கோ சிறிது நேரம் காட்சி அளித்தது போல் தனக்கு ஒரு தோற்றம் அளிக்காவிட்டால், தன்னுடைய முயற்சியால் எங்கு வந்தது, எப்படி அவனது அழகை ரசிப்பது என்று அடுத்த பாசுரத்தில் (3.2.5), “யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பேன்” என்று கெஞ்சுகிறார்.
அடுத்த பாசுரத்தில், (3.2.6), “பற் பல்லாயிரம் உயிர்செய்த பரமா” என்று பரமாத்மாவின் பெருமையை சொல்லி, “அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்” என்று அவனை விட்டு நீங்கிய தன்னுடைய தாழ்ச்சியையும் சேர்த்து சொல்கிறார். அவ்வளவு பெருமைகள் உடையவனுக்கு, தன்னுடைய தாழ்ச்சிகளை மாற்றுவது ஒன்றும் கடினம் இல்லை என்பது கருத்து. இதையே, தன்னுடைய தகுதியை வைத்து கொடுப்பது என்றால், ஒன்றும் கிடைக்காது என்றும், அவனுடைய பெருமைகளை வைத்து கொடுப்பது என்றால் எவருமே தப்ப முடியாது என்பதே உண்மை. இப்படி இருக்கும் போது, அவனது திருவடிகளை என்று அடைவது எனக் கேட்டு பாடலை முடிக்கிறார். இந்த பாசுரத்தில் வரும் “பரமா” என்பது பரமஸ்வாமி என்று பெயர் கொண்டு இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகரையும் குறிப்பிடும் என்று சொல்லலாமோ?
“நின் நன் பொன் சோதித் தாள்” (3.2.6) என்று பெருமாளின் பாதங்களின் பெருமைகளை பாடிய ஆழ்வார் அதன் தொடர்ச்சியாக அடுத்த பாடலில் (3.2.7), உண்மையான ஞானமில்லாதவர்களாகிய நாம், எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து உண்மை ஞானத்தின் உருவமான ஒளியையுடைய கண்ணபிரானை அடைவதற்கு முடியுமோ?’ என்று வருந்துகிறார். பரம்பொருளை அறியும் ஞானமே உண்மையான ஞானம் என்றும் மற்றவை அஞ்ஞானம் என்றும் விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த பாசுரத்தில், “மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ (3.2.8) என்றதனால் கர்மயோகமும், ‘ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்’ என்றதனால் பக்தி யோகமும், தனக்கு இல்லை என்று கூறுகிறார். இந்த இரண்டையும் சொன்னதால், மூன்றாவதான ஞானயோகமும் சொன்னதாயிற்று.
இந்த பதிகத்திலும் திருமாலிருஞ்சோலை பற்றிய நேரடிக்குறிப்புகள் இல்லாவிடினும் நம் ஆச்சார்யர்கள் இந்த பதிகத்தை அழகர்க்கே என்று கூறுகிறார்கள். இப்படி 2.10ல் தொடங்கி, 3.1 மற்றும் 3.2 பதிகங்களில் திருமாலிருஞ்சோலை அழகரை பாடிய ஆழ்வார் மீண்டும் திருவாய்மொழியின் இறுதியில் 10.7 செஞ்சொற்கவிகாள் என்ற பதிகத்தில், மீண்டும் அழகரை நினைவு கூறுகிறார். அவைபற்றி அடுத்த வலைப்பதிவில் பார்க்கலாம்.
For English version, please click here, thanks
நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில், நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை அல்லது தற்போது அழகர்மலை என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டு திவ்யதேசத்தை பற்றி நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறுவதை சிறிது காண்போம்.
திருமாலிருஞ்சோலை, பாண்டியநாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும், ‘இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை யென்னும் பொறுப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்” என்றபடி ஆன்றோர் கொண்டாடப்படும் ஒரு திவ்ய தேசம். “உலக மேத்தும், தென்னானாய் வடவானாய் குடபாலானாய், குணபாலதாயினாய்” என்று திருநெடுந்தாண்டகம் (10) என்ற பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் சொன்னபடி, வடக்கு வீடு எனப்படும் திருவேங்கடத்தையும், கிழக்கு வீடு எனப்படும் திருக்கண்ணபுரம் என்ற திவ்ய தேசத்தையும், மேற்கு வீடு எனப்படும் ஸ்ரீரங்கத்தையும் போல் திருமாலிருஞ்சோலை, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
மால் என்றாலும் இருமை என்றாலும் பெருமை என்ற ஒரே பொருள். திருமாலிருஞ்சோலையில் இவ்விரண்டும் சேர்ந்து ஒரு பொருட்பன்மொழியாய் நின்றன. மால் என்பதற்கு உயரம் என்றும், இருமை என்பதற்கு பரப்பும் என்று கொண்டால், உயர்ந்து பரந்த சோலைகளையுடைய மலை என்று திருமாலிருஞ்சோலைக்கு அர்த்தம் கொள்ளலாம்.
சுவாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையானுக்குத்தான் அதிக பாசுரங்கள் (52) கொடுத்துள்ளார். அதற்கு அடுத்து அதிக பாசுரங்கள் (46 பாசுரங்கள்) கொடுத்தது, திருமாலிருஞ்சோலை அழகருக்குத்தான். அதேபோல், திருமாலிருஞ்சோலை அழகருக்கு உள்ள 128 பாசுரங்களில், அதிக பாசுரங்கள் பாடியதும் சுவாமி நம்மாழ்வாரே ஆவார்.
தனி பாசுரங்களாக, திருவேங்கடமுடையானை, “கண்ணாவான் என்றும் மண்ணோர், விண்ணோருக்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” (1.8.3) என்றும், திருக்குறுங்குடி நம்பியை, “நம்பியை தென் குறுங்குடி நின்ற அச்செம்பொன்னே திகழும் திருமூர்த்தியை,”(1.10.9) என்றும் முதல் பத்திலேயே சொல்லியிருந்தாலும், “கிளரொளி இளமை” (2.10) எனத்தொடங்கும் திருமாலிருஞ்சோலை பற்றிய பதிகமே, திருவாய்மொழியில் முழுப்பதிகமாக சொல்லப்பட்ட முதல் திவ்யதேசம் ஆகும்.
“தனக்கேயாக என்னை கொள்ளும் இதே” (2.9.4) என்று முந்தைய பதிகத்தில் தான் அடைய விரும்பும் இலக்கான சர்வேஸ்வரனுக்கு மட்டுமே அடிமை செய்ய வேண்டும் என்றும், அதனையும் அவனே அளிக்க வேண்டும் என்றும் ஆழ்வார் வேண்டுகிறார். அதே போல் அந்த பதிகத்தில் ஒல்லை (2.9.1), ஒல்லை (2.9.10), மற்றும் காலக்கழிவு செய்யேல், (2.9.2) என்று ஆழ்வார் தாம் பகவத் கைங்கர்யத்தை பெறுவதில் உள்ள கால தாமதத்தை பொறுத்துக் கொள்ளாத நிலையை வெளியிட்டார். இதனைக் கண்ட சர்வேஸ்வரன், ஆழ்வாருக்கு அவர் விரும்பும் பேற்றினை கொடுப்பதாக தீர்மானித்து விட்டதாகவும், ஆனால் அதனை அவர் இந்த தேகத்தோடு அடையமுடியாதே என்றும், ஆழ்வார் காட்டும் வேகத்தைப் பார்த்தால், இந்த தேகத்தோடே சேவை செய்ய விரும்புகிறார் போலும் என்றும், தாம், தனியாக உள்ள இடமான திருமாலிருஞ்சோலை என்ற திருப்பதியில் வந்து இருப்பதாகவும் ஆழ்வாருக்கு உணர்த்தினார்.
அதனால், அவன் மகிழ்ந்து நிற்கும் இடமும், தான் அடைய வேண்டிய இடமும் ஒன்றே என்று ஆழ்வார், திருமாலிருஞ்சோலை, அதற்கு அருகில் உள்ள மலை, அதை அடைய வேண்டிய பாதை, அதில் உள்ள ஆர்வம் என்று அனைத்தையும் ஒரு வேறுபாடின்றி தன்னுடைய இலக்காக கொள்கிறார். அதனால், இந்த பதிகத்தில், திவ்யதேச பெருமாளான அழகர் பற்றி ஒன்றும் சொல்லாமல், திவ்யதேசத்தை மட்டுமே ஆழ்வார் முக்கிய விஷயமாக எடுத்துக்கொள்கிறார்.
கிளரொளி இளமை (2.10.1) என்பதற்கு இளமை கெடுவதன் முன்னம், திருமாலிருஞ்சோலை என்ற திவ்யதேசத்தை அடையுங்கள் என்று ஆழ்வார் உபதேசிக்கிறார். அதே போல், திருமழிசையாழ்வார் தனது திருச்சந்தவிருத்தத்தில் (112), “வாள்களாகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி, மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே” என்று கூறுகிறார்.
ஒளி என்பதற்கு ஞானம் என்று பொருள் கொண்டால், பகவத் ஞானம் மறைந்து இந்த உலகியல் பொருள்கள் மேல் ஆசை வருவதற்கு முன்பு என்றும் அர்த்தம் கொள்ளலாம். வளரொளி (2.10.1) என்பதற்கு கைங்கர்யம் செய்பவன், கைங்கர்யம் பெறுபவன் மற்றும் கைங்கர்யம் நடக்கும் இடம் என்று எல்லாம் ஒரே வயதோடும் இளமையோடும் உள்ளது என்பதாகும்.
“மதி தவழ் குடுமி” (2.10.2) என்றது, கர்ப்பிணிபெண்கள் மெல்ல மலையில் ஏறுவதுபோல், சந்திரன் மெல்ல தவழ்ந்து ஏறும் மலை, திருமாலிருஞ்சோலை ஆகும்.
தான் அடையவேண்டியது திருமாலிருஞ்சோலை என்று உறுதிசெய்யப்பட்டபின், அதன் சம்பந்தமுள்ள அருகில் உள்ள மலையை அடைந்தாலும் போதும் என்று அடுத்த பாசுரத்தில் சொல்கிறார். (2.10.3)
“வரு மழை தவழும் ” (2.10.4) என்றதில் இந்த ஊருக்கு இரண்டு மழை, ஒன்று நின்றவிடத்திலேயே இருக்கும் மேகத்தாலும், மற்றொன்று வருவதும் போவதுமான மேகங்களாலும் என்று சுவாரஸ்யமாக நம் ஆச்சார்யர்கள் சொல்வார்கள். நின்ற இடத்தில உள்ள மேகமானது, எப்போதும் கருணையை பொழியும் சர்வேஸ்வரன் ஆவான். இரண்டாவது வரியில், மற்ற விஷயங்களில் மனதினை செலுத்தாமல், திரு(மாலிருஞ்சோலை) மலைக்கு போகிற வழியை நினைப்பது போதும் என்கிறார்.
“புறமலை சாரப் போவதுகிறியே” (2.10.5) என்று சொன்னதால், பகவானை அடையவேண்டும் என்று இருப்பவர்களுக்கு ஆழ்வார்கள் திருவுள்ளம் போன்று தெளிவாக உள்ளதும், இனியதாய், எப்போதும் நீர் சுரந்த வண்ணம் உள்ளதாய் இருக்கும் திருமாலிருஞ்சோலை மலைக்கு பக்கத்தில் உள்ள மலையை அடைந்தாலும் போதும் என்று கூறுகிறார்.
“பிணைசேர் மாலிருஞ்சோலை ” (2.10.6) என்றது, காப்பாற்றப்படும் பொருள் ஆகிய நாமும், காப்பாற்றும் பொருளாகிய சர்வேஸ்வரனும் பிரியாது வாழும் மலை என்பதாகும். அதே பாசுரத்தில், நினைவது நலமே என்றது, அந்த மலைக்குப் போகும் வழியை சிந்திப்பதே நம்மைப் போன்ற ஜீவாத்மாக்களுக்கு நல்லது என்கிறார்.
“நரகழுந்தாயே ” (2.10.7) என்றது, அவனை பிரிந்தால், நரகத்தில் இருப்பது போன்றும், அவனுடன் சேர்ந்து இருந்தால் ஸ்வர்கத்தில் இருப்பது போன்றும் குறிப்பதாகும். லக்ஷ்மணன் ராமரிடத்தில் அவனை பிரிந்து அயோத்தியில் வாழ்வது நரகத்திற்கு சமம் என்றும் அவனுடன் காட்டிற்கு செல்வதே சொர்க்கம் என்று அயோத்யா காண்டத்தில் சொல்வது உவமையாகும். அது போல், சேஷ சேஷி என்ற தெளிவான சிந்தனையுடன் மாலிரிஞ்சோலை செல்வது நலம் என்று இந்த பாசுரத்தில் உரைக்கிறார்.
நம்மாழ்வார் “விண்ணோர் வெற்பன்” (1.8.3) என்று சொன்னது போலவும், “அமர்ந்து வானவர் வானவர் கோனொடும், நமன்று எழும் திரு வேங்கடம்” (3.3.7) என்று சொன்னது போலவும், வடக்கே திருவேங்கடமலையும், தெற்கே திருமாலிருஞ்சோலை சோலை மலையும் நித்யஸூரிகள் கூட அன்றாடம் வலம் வரும் இடங்களாகும் என்பதை “வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை” (2.10.8) என்றும், தினமும் திருமாலிருஞ்சோலையில் இருந்து அவனை வணங்குவதே சிறப்பு என்றும் இந்த பதிகத்தில் சொல்கிறார்.
“மாலிருஞ்சோலை, தொழக் கருதுவதே” (2.10.9) என்று சொன்னதன்மூலம், பெருமாளைக் கூட சொல்லாமல், திருமாலிருஞ்சோலை மலையை தொழ நினைப்பதே கூட சிறந்தது என்கிறார்.
“சூதென்று களவும் சூதும் செய்யாதே” (2.10.10) என்றதில் களவு என்பது பிறர் பார்க்காத போது செய்வது, சூது என்பது ஒருவர் பார்க்கும் போது அவர் கண் எதிரிலேயே செய்வது. “சூதனாய், கள்வனாய் ” (திருமாலை, 16) என்று நாம் பின்பு பார்க்கப்போகும் ஆழ்வாராகிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்பவரும் சொல்கிறார். இவற்றை விலக்கி, திருமாலிருஞ்சோலை செல்வதே ஆத்மாவிற்கு உரிய செயல் ஆகும் என்று இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார்.
“அருளுடையவன் தாழ்” (2.10.11) என்றதில் இருந்து, திருமாலிருஞ் சோலை பெருமாளாகிய கள்ளழகர்க்கு “அருளுடைய பெருமாள்” என்ற திருநாமமும் உண்டு என்பது விளங்கும். இந்த பாசுரங்களை சொல்பவர்களை, அவனுடைய திருவடிகளில் சேர்த்துவிடும் என்று சொல்லி ஆழ்வார் முடிக்கிறார்.
திருமாலிருஞ்சோலை மலையை அனுபவித்த ஆழ்வார், இந்த பதிகத்தில் (3.1), அழகரின் அழகினை அனுபவிக்கிறார். அழகரின் அவயங்களின் பிரகாசத்தினாலும் அழகினாலும் ஆடையும் ஆபரணங்களும் சேர்ந்து ஜொலிப்பதை கண்ட ஆழ்வார், அவனது அழகை சொல்லி முடிக்கமுடியாது என்பதை இந்த பதிகத்தில் உள்ள பாசுரங்களால் சொல்கிறார். இந்த உலகத்தில் உள்ள மக்களாலும், மயர்வற மதிநலம் பெற்ற தன்னாலும், வேதங்களாலும், பிரம்மா, சிவன் போன்ற மற்ற தேவதைகளாலும் பெருமாளின் பெருமையும், குண நலங்களையும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இந்த பதிகத்தின் சுருக்கம்.
முதற்பாட்டில், (3.1.1) அழகருடைய திவ்ய அவயங்களுக்கும் திருஅணிகலன்களுக்கும் உண்டான பொருத்தத்தின் மிகுதியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். திருமுகத்தின் ஒளிமிகுதியால், கிரீடம் பிரகாசிக்கிறதா அல்லது திருஅபிஷேகமாகிய கிரீடத்தின் ஒளி மிகுதியால், அவருடைய திருமுகம் பிரகாசிக்கிறதா என்று ஆழ்வார் வியக்கிறார். திருமுகத்தின் ஒளி ஜொலிக்கின்றதை அனுபவித்த ஆழ்வார், அவயங்களின் அழகால் ஆபரணங்கள் மற்றும் ஆடையும் பிரகாசிப்பதை சொல்கிறார்.
திருஅபிஷேகத்தின் கம்பீரமும் அழகும், அவனே எல்லோருக்கும் சேஷி என்பதை அறிவிப்பதால், ஆழ்வார் முதலில் திருஅபிஷேகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். சேஷி என்று உணர்ந்த உடனே அதற்கு துணைபோகும், திருவடிகளில் பயணிக்கிறார். திருவடிகளின் அழகும் பிரகாசமும், ஆழ்வாரின் கவனத்தை மேல்பக்கம் செலுத்த, பெருமாளின் திரு அரை (இடை), ஆடை, ஆபரணங்கள் மற்றும் திரு மேனி அழகு என்று இவைகளின் பிரகாசத்தில் தனது சந்தேகத்தை தொடர்கிறார்.
அழகரின், அழகை நெஞ்சினாலும் கண்களாலும் முழுவதுமாக அநுபவிக்க வேண்டுமேயொழிய, அதற்கு உபமானம் சொல்லி விளக்க முடியாது என்று அடுத்த பாசுரத்தில் (3.1.2) சொல்கிறார். திருக்கண், திருவடி, மற்றும் திருக்கை முதலிய அவயவங்களுக்குத் தாமரையை உவமையாக மக்கள் பேசுகின்றார்கள் என்றாலும், அவை சரியான உதாரணங்கள் ஆகமாட்டா என்பது பாடலின் முதல் இரண்டு வரிகளின் கருத்து. பொன், நன்பொன், சுட்டுரைத்த நன்பொன் என்று அடுக்கிக்கொண்டே போனாலும், அவைகளை திருமேனியின் பிரகாசத்திற்கு உவமை ஆகாது என்கிறார். முன் பாடல் போலவே இந்த பாசுரத்தில், (3.1.2) பெருமாளின், கண், பாதம், கை என்ற தொடர்ச்சியில் சொல்கிறார்.
அடுத்த பாசுரத்தில், (3.1.3) ஆழ்வார்,
சுருக்கமாக சொல்லும் ஈட்டு ஸ்ரீஸுக்தி, நெஞ்சால் நினைக்க முடியாததை, வாயினால் சொல்ல முடியாது என்று அழகாக விளக்கும்.
அடுத்த பாசுரத்தில் (3.1.4), ஆழ்வார் இந்த உலகத்தில் உள்ள மக்கள் இவ்வளவு அழகாக உள்ள பரமாத்மாவின் அழகிலும், குணங்களிலும் ஈடுபடாமல், வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் போது, பெருமாள் அவர்களை திருத்துவதில் கவனம் காட்டாமல், துளசி மற்றும் மலர்களில் மகிழ்வதால், இத்தகைய மக்கள் இழக்கும் இழப்பைப் பற்றி சொல்கிறார்.
அடுத்த பாசுரத்தில் (3.1.5), ஆழ்வார், இயற்கையிலேயே மிகப்பேரொளியாய், நல்ல ஞானமுள்ளவனாக, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து இருப்பவனான பெருமானின் நல்ல குணங்களை எப்படி சொல்லி முடிப்பேன் என்று கூறுகிறார். பெருமாள் விண்ணுலார்களாலும் சொல்லி முடிக்க முடியாதவன் என்பதே முந்தைய பாசுரத்திற்கும் இந்த பாட்டுக்கும் உள்ள வேறுபாடு ஆகும். பெருமாளின் பிரகாசம், பெருமாளுக்காக இல்லை, அடியவர்கள் அனுபவிப்பதற்கே என்று சொல்வது போல் அவருடைய திவ்யமங்கள விக்கிரகம் அமைந்துள்ளது என்று சொல்லலாம்.
ஒவ்வொரு உலகத்திலும் அங்குள்ளவர்களின் ஞானத்தின் அளவை வைத்து ஸ்லோகங்கள் / க்ரந்தங்களின் எண்ணிக்கை இருந்தாலும், நான்கு வேதங்களிலும், யாரால் சொல்லப்படுகின்ற வேதமும், அவன் பெருமைகளையும், குணங்களையும் சொல்லி முடிக்க முடியாது என்பது போல், தான் சொல்வதும் கடலில் விழுந்த ஒரு நீர்த்துளி போல் ஆகுமே தவிர, தானும் முழுதாக சொல்லி முடிக்க முடியாது என்று அடுத்த பாசுரத்தில் (3.1.6) ஆழ்வார் கூறுகிறார்.
அவனால் படைக்கப்பட்ட சிவன், பிரம்மா போன்ற சிறந்த அறிவுள்ளவர்களாலும், அவனுடைய குணங்களை கூறி முடிக்க முடியாது என்று ஆழ்வார் அடுத்த பாசுரத்தில் (3.1.7) சொல்கிறார்.
ஞான குறைவே இல்லாத பிரமனின் ஞானமும் அவரது பதவிக்காலம் முடிந்தவுடன் குறையும். அப்படிப்பட்ட பிரம்மனே பெருமாளின் குணங்களை கூற ஆரம்பித்தாலும், கூடாது, குறையாது இருக்கும் பெருமாளின் திருமேனியின் (அவிகாராய சுக்தாயா நித்யாய பரமாத்மனே – விஷ்ணு சஹஸ்ரநாமம்) ஒரு பகுதியான திருவடிகளின் தேஜஸ் குறையாது என்று சொல்லிய போதும், இது போன்றவர்கள் உயர்த்தி சொல்லும் அளவிற்குத் தானோ, பரமாத்மாவோ அல்லது அவனது இந்த திருவடிகளோ என்று ஒரு சந்தேகம் வரக்கூடும் என்பதால், ப்ரம்மா போன்றவர்களாலும் பெருமாளின் குணநலன்களை சொல்லி முடிக்க முடியாது என்று அடுத்த பாசுரத்தில் (3.1.8) ஆழ்வார் சொல்கிறார்.
பெருமாளின் மேன்மை நிலை என்பது மட்டுமல்ல, எளிமையையும் சொல்லி முடிக்க முடியாது என்பதை நமக்கு விளக்கவே, அடுத்த பாசுரம் (3.1.9). பெருமாளின் மேல் பெரும் பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானை, பல ஆண்டுகள் முதலையுடன் போரிட்டுக்கொண்டு இருந்தபோதும், தான் கொண்டு வந்த மலரினை அவன் திருவடிகளில் சமர்ப்பித்து, அவனை தரிசிக்க வேண்டும் என்பதையே தன்னுடைய விருப்பமாக கொண்டு இருந்ததால், அதனை நிறைவேற்ற, அவன் தன்னுடைய வாஹனமாகிய கருடனின் மேல் ஏறி நேரில் வந்ததாகிய அவனுடைய எளிமை இந்த பாசுரத்தில், சொல்லப்பட்டது.
வேதங்களினாலும், பரமாத்மாவினால் படைக்கப்பட்டு, அறிவு கொடுக்கப்பட்டவர்களாலும் பெருமாளின் குணநலன்களை சொல்லி முடிக்க முடியாது என்று அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார்.
வேதம் என்றால் விளக்கமாக சொல்வது, மறை என்றால் மறைத்து விடுவது. இந்த இரண்டுமே வேத சாஸ்திரத்தையே குறிக்கின்றன. வேதம் என்பது பரமாத்மாவின்மேல் பக்தி கொண்ட ஆஸ்திகர்களுக்கும், மறை என்பது நாஸ்திகர்களுக்கும் என்று நம் ஆச்சார்யர்கள் சொல்வர். வேதங்கள் பரமாத்மாவை, வேறு ஒரு மேற்கோளை எதிர்பார்க்காமல் தானாகவே நேரடியாக சொல்கின்றன. திகாச புராணம் போன்றவைகளை மேற்கோள் காட்டி நிலை நிறுத்துபவை. எல்லா வேதங்களாலும் அறியப்படுபவன்அவனே என்று சொல்லும் மேற்கோள்களும் உண்டு. அதுவே அடுத்த பாசுரத்தின் (3.1.10) முதல் அடியாக உள்ளது, இரண்டாவது அடி அவனை சர்வேஸ்வரன் என்றும், மூன்றாவது அடியால், அவனால் படைக்கப்பட்டவர்களுக்கு அவனே ஞானத்தை அளித்தான் என்றும், இறுதி வரியினால் அவர்கள் அவனை ஈஸ்வரன் என்று அறிந்தவர்கள் என்றும், அப்படிப்பட்டவர்கள் அவனை புகழுந்து உரைப்பதால் அவன் இறுமாந்து இருந்தால் அவனுக்கு ஏற்றமோ என்று நகைச்சுவையோடு ஆழ்வார் முடிக்கிறார்.
இந்த பதிகத்தில் உள்ள பாடல்களில் ஆழ்வார் அழகரின் அழகை சொல்லிக்கொண்டு வருகிறார் என்பதை நினைவில் கொள்ளலாம். ஆனால் ஒரு பாசுரத்தில் கூட நேரடியாக திருமாலிருஞ்சோலை அழகர் பற்றிய குறிப்பு இல்லை என்பதனையும் குறிப்பிடலாம்.
இந்த பாசுரங்களைத் தொடர்ந்து, முந்நீர் ஞாலம் படைத்த (3.2) என்று ஒரு பதிகமும், இறுதியில் செஞ்சொற் கவிகாள் என்று (10.7) என்று ஒரு பதிகமும் திருவாய்மொழியில், திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்திற்கு உண்டு, அவைகளை பற்றி அடுத்த வலைப்பதிவில் பார்க்கலாம்.
இந்த பகுதியில் சில கருத்துக்களை உறுதி செய்ய உதவிய எங்கள் அண்ணா ஸ்ரீ ரங்கநாதன் அவர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பகுதியில் உள்ள பாசுரங்களை கீழ்கண்ட வலைத்தளங்களில் காணாலாம். அவர்களுக்கும் எங்கள் நன்றி.
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1428
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1417
Click to access mudichchodiyaay.pdf
இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும்.
We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. In this weblog, let us try to discuss briefly about what Namazhwaar says on Thirumaaliruncholai, which is traditionally called as The Southern Home of Vaishnava Sampradhayam, and currently known as Azhagarkovil near Madurai.
Thirumaaliruncholai is one among the eighteen divyadesams in Paandiya nadu, which are in and around Madurai. This divyadesam is glorified by our acharyars as “Iruppidam Vaikuntham, Venkadam, Maaliruncholai ennum porupidam Maayanuku enbar nallor“, where Thirumaaliruncholai is put on parallel to Srivaikuntham or paramapadham or abode and Thiruvenkadam, where Vishnu resides. As we said earlier, Thirumaaliruncholai is called the Southern Home in Srivaishnavam and the other homes are Thiruvenkadam as North, Thirukannapuram as East and Thiruvarangam as West. This is appreciated by Thirumangai Azhwaar in his Thirunedunthandagam (10), “ulagamethum thenaanaai, vadavaanaai, kudapaal aanaai, kunapaaladhaayinaai” .
In Tamil, the words, “maal’ and ‘irumai’ mean the same thing, namely, “glory”. Both the words are used in the divyadesam’s name, Thirumaaliruncholai. The word ‘maal’ in Tamil also means, height and the word “irumai” also means vastness in area. By taking these meanings, the word Thirumaaliruncholai, will mean that it is a hill with many gardens, on a large area with many peaks.
Swami Namazhwaar had sung the largest number of hymns (52) for Thiruvenkadamudaiyaan than any other divyadesams. The second most number of hymns sung by Namazhwaar are for Thirumaaliruncholai Azhagar. In the same way, the total number of hymns on Thirumaaliruncholai Azhagar by all azhwaars is 128 and Swami Namazhwaar had sung the maximum for Azhagar.
The first full pathigam in Thiruvaaimozhi, for a divyadesam by Namazhwaar is only for Thirumaaliruncholai. “kannaavaan endrum, mannor, vinnoruku thannaar venkada vinnor verpane” (1.8.3), a single hymn for Thiruvenkadamudaiyaan and “nambiyai then kurunkudi nindra acchem ponne thigazhum thirumoorthiyai” (1.10.9), another hymn on Thirukurunkudi Nambi are the only two references to divyadesa perumaals by Namazhwaar in Thiruvaaimozhi, before starting the full pathigam, “kiloroli ilamai” (2.10) on this divyadesam.
In the previous pathigam (2.9), Azhwaar had longed that he wanted to do service only to Paramathma and granting that should also come from Paramathma, based on “thanakeyaaga enai kollum eethey” (2.9.4), meaning that He should take Azhwaar exclusively for Him. In the same way, Azhwaar had also expressed his inability to accept the delay in offering his services to Paramathma, like ollai (2.9.1), ollai (2.9.10) and “Kaalakazhivu seiyel” (2.9.2).
On seeing these, Paramathma wanted to indicate that He was ready to grant Azhwaar whatever he had asked for, and ready to accept Azhwaar’s services. Paramathma also felt that Azhwaar could not give his services with his physical body, in other words, when Azhwaar was alive. But the urgency shown by Azhwaar indicated that he wanted to do the same with his then existing physical form. So Paramathma decided and informed him that He was alone in Thirumaaliruncholai and Azhwaar could come there to get whatever he wanted.
Azhwaar understood that Thirumaaliruncholai, would be the place where he needed to go as it was where Paramathma was living happily. In this pathigam, Azhwaar explains that reaching Thirumaaliruncholai or any nearby hills, or the path towards Thirumaaliruncholai, or even having interest to visit Thirumaaliruncholai are all equal and beneficial to us. One more point to note is that in this pathigam, Azhwaar had taken more importance and focus only about the divyadesam and he had not mentioned anything specific about Azhagar, the divya desa perumal.
Azhwaar is advising us to reach Thirumaaliruncholai before our youth disappears in the first hymn of this section, “Kiloroli illamai keduvathan munnam” (2.10.1). Similarly Thirumazhisai Azhwaar, in his Thiruchandavirutham, (112) says that “Vaalgalaagi naatkal sella noimai kundri moopu yeithi, maalum naal athu aathalaal vanangi vaazhthu en nenjame” meaning that our days were passing with illness and aging, and we would die, so let us offer our prayers and bow to Him, as He would grant abode, a life without return to this world”.
If we take the meaning of the word “oli” as “wisdom”, then it can also be seen as Azhwaar advising us to reach Thirumaaliruncholai, before our wisdom towards Paramathma disappears and before we start taking interests in worldly things. Similarly the word “valaroli” (2.10.1) means that the person who is accepting the services, the person who is offering the services and the place where the service is offered are all young and at the same age.
In the next hymn, Azhwaar says “mathi thavazh kudumi“, meaning that Thirumaaliruncholai is very high that the moon is crawling over the hills slowly, like pregnant ladies climbing up the hill.
After confirming that the place he wanted to visit was Thirumaaliruncholai, Azhwaar was convinced that even reaching any hill nearby Thirumaaliruncholai would be sufficient, in the next hymn (2.10.3).
In the next hymn (2.10.4), Azhwaar discussed about the rain, “varu mazhai thavazhum maaliruncholai“, meaning that Thirumaaliruncholai was getting rains through the clouds that were coming in. Our acharyaars comment that Thirumaaliruncholai gets the benefits of two types of clouds, one, the rainy clouds, as mentioned by Azhwaar, and the other, the shower of kindness of Thirumaaliruncholai Azhagar. In the second line of the hymn Azhwaar mentioned that it would be enough, if we could concentrate on getting our way or thinking about the path to Thiru(maaliruncholai) malai(hill) without diverting our mind on other things.
In the next hymn, by quoting “Pura malai saara povathu kiriye“, (2.10.6) Azhwaar confirms that the heart of those who want to reach Paramathma would be as clear as Azhwaar’s mind and it would be sufficient to reach any of the hills nearby Thirumaaliruncholai, which is constantly wet and sweet.
In the next hymn 2.10.6, Azhwaar says “pinai ser Maaliruncholai“, meaning that we, the objects that are protected by Him, and the Protector are inseparable in Thirumaaliruncholai. In the same hymn, Azhwaar mentioned “ninavadhu nalame” meaning that thinking about the way to Thirumaaliruncholai is good for all Jeevaathmas like us.
In the next hymn, when Azhwaar says “Naragazhunthadhe” (2.10.7) meaning that “Being with Him is happiness and being in heaven but without Him is like spending time in hell”. This is much similar to what Lakshman said to Sri Rama, in Ayodhya Kandam, before leaving for the forest, that it would be like living in hell, if he had to stay back in Ayodhya and it would be like living in heaven, if he could go and stay with Sri Rama in the forest. In this hymn, Azhwaar says that we should reach Thirumaaliruncholai with a clear thinking as He is the Master and we are the slaves to Him.
Thirumaaliruncholai in the south and Thiruvenkadam in the north are the places where the Nithyasoories (the jeevathmas who serve Paramathma all the times) visit in this world on a daily basis. The following hymns about Thirumaaliruncholai by Namazhwaar on the above.
In addition, Azhwaar recommends to us that we stay in Thirumaaliruncholai and offer prayers to Him daily without wasting our time.
In the next hymn, 2.10.9, Azhwaar says “Maaliruncholai, Thozha karuthuvathey“, meaning that it is good enough, even if we pray to Thirumaaliruncholai, the hill or the divyadesam without even mentioning the deity.
In the next hymn, Azhwaar recommends that we do not do soodhu (fraudulent activities) and kalavu (stealing), we should avoid both and march towards Thirumaaliruncholai by saying “soodhu endru kalavum soodhum seiyaathey” (2.10.10). Fraud is an act which is generally done in the presence of the other party, while stealing is an act which is done in the absence of the other party. Thondaradipodi azhwaar, about whom, we are yet to discuss, had also mentioned ” Soodhanaai, Kalavannai” (Thirumaalai, 16) in the prabhandham, Thirumaalai.
The deity in Thirumaaliruncholai is also called Aruludaiya Perumaal and this is also referred by Namazhwaar in 2.10.11 “Aruludaiyavan Thaall“. Azhwaar concludes this pathigam by saying that reciting these hymns would take those to His Holy Feet.
After having enjoyed the glory of Thirumaaliruncholai, the divyadesam, Azhwaar decided to enjoy the beauty of the deity of Thirumaaliruncholai, namely, Azhagar in the next subsection, namely 3.1. On observing the beauty of the various segments of Azhagar’s Thirumeni (body) and the glowing effect on the clothes and ornaments of Azhagar, Azhwaar came to the conclusion that the beauty of the Azhagar could not be described completely through the hymns in this pathigam or subsection. Azhwaar confirms that the glory and beauty of Him can not be completely articulated by any human being or anyone, even auspicious people like himself, who were given superior knowledge by Him, the vedas, those in the celestial world, Indran, Brahma or Siva and that is the summary for this subsection.
It is the perfect fit between the segments of His body and the ornaments that gave an exceptional happiness and made Azhwaar wonder in the first hymn (3.1.1) of this subsection. Azhwaar wondered whether the glow from His face increased the glow on the crown or the glow from the crown increased the glow on His face. After having enjoyed the beautiful glow from His face, Azhwaar started looking at the other parts of His body, which enhance the beauty of the ornaments and the dress on them.
Azhwaar says that His crown was so majestic and beautiful, that it proclaimed that He is The Swami or the Master, the only one who could grant abode for everyone and hence Azhwaar started with the beauty of His crown. Azhwaar then moved to His holy feet, which are the logical sequence to the total surrender to attain abode. The beauty and glow from His holy feet directed Azhwaar to move upwards to His hip, the attire and the ornaments around His body. Azhwaar continued to wonder which caused the enhancement of the glow. This is for understanding the sequence in which Azhwaar had described in this Hymn, first His crown, then His feet and later His hip.
In the next hymn, (3.1.2) Azhwaar commented that we could only enjoy the beauty of Him with our eyes and heart, but we could not explain further with any examples or equivalent objects. Even though people generally take the lotus as an example for His eyes, Holy feet and His arms, Azhwaar says that it is inappropriate to use those examples in the first two lines of this hymn. Azhwaar starts building the example, like the gold, pure gold and then still a higher level gold which is in the boiling state as liquid, when he was trying to give example for the glow from His body, but finally admitted that it was impossible to give parallels or examples. Like the previous hymn, Azhwaar has sung in the sequence of His eyes, Feet and Hands.
In the next hymn(3.1.3), Azhwaar says, that
What can not be thought through by the heart can never be explained in words, is the best possible summary of the above, as given in one of the Srisukthis of Eedu (Eettu Sri Sukthi).
In the next hymn (3.1.4), Azhwaar is worried about the loss the people suffer due to their disinterest and non-involvement in the glories and beauty of Paramathma and He continued to enjoy the fragrance of Thulasi and other flowers without paying attention to such people.
In the next hymn (3.1.5) Azhwaar states how he could explain the glories of Paramathma who is naturally beautiful and glowing with complete knowledge and omnipresent in all objects. The major difference between this hymn and the previous one is that here Azhwaar stresses that His glories can not be explained by those in celestial world too. Our acharyars say that the glowing nature of His body is not for Himself, but for the enjoyment and experience of His devotees.
The number of slokas or holy scriptures in every world would differ according to the knowledge level of those living in those parts of the Universe. Any of those in every such Universe or even those scholars who are experts in the four vedas (Rig, Yajur, Saama, Atharvana) could not completely describe His glories. Azhwaar continues to say in the next hymn (3.1.6) that whatever he was saying was also a like a drop of water in the ocean and he also would not be able to describe Him fully.
In the next hymn (3.1.7), Azhwaar says that those who are created by Him and those who are greatly knowledgeable, like Siva, Brahma also would not be able to totally explain the glories of Paramathma.
It is understood that Brahma has complete knowledge of everything, but only when in power as Brahma. His knowledge level would reduce once he move out of his position. Azhwaar says in his next hymn, 3.1.8, that such Brahma, even when he is in power could not describe the glories of Paramathma. Paramathma’s thirumeni (body), His glories and His beauty are always constant. (avikaaraya sudhaaya nithyaaya paramaathmane – vishnu sahasranaamam). Azhwaar, says that even when such Brahma tries to explain the glories of Paramathma, it would not affect the glow of Paramathma or even the glow of His feet.
We should also keep in mind that the knowledge for all in every part of the Universe, is also given by Him. And the knowledge level of Brahma and others are also not constant or permanent. If Paramathama is praised by such people, Azhwaar doubts whether such praise is going to add anything further to Him or it is going to diminish the glow at His feet or body.
The purpose of the next hymn 3.1.9, is for Azhwaar to explain to us that no one can completely describe the glories about His supremacy and also His simplicity. Here Azhwaar takes the example of Gajendra elephant and how He rushed to protect him, even though He could have done everything , without Him rushing, just through His Thoughts or Sankalpam and with the Sudharsan Chakra or the Discus.
Azhwaar takes the case of Gajendran, the elephant, a staunch devotee of Paramathma to explain the above in this hymn. Gajendran was fighting with a crocodile for many years, while carrying flowers to offer on the holy feet of Paramathma and to have a dharsan of Paramathma. Since having the dharsan of Paramathma was the desire of His devotee, namely, Gajendran, Vishnu rushed to the spot on His vehicle, Garuda to give dharsan to the elephant. This example is taken by Azhwaar in this hymn to describe the simplicity of Paramathma.
In the next hymn, Azhwaar explains that His glories can not be completely told by Vedas or by those who are created and given knowledge by Him.
In Tamil, the words Vedham and Marai mean the same and represents the rule book, Veda Sastras. The word Vedham means detailed explanation. The word Marai, in Tamil, also means Hide. So our acharyars say that the word Vedham is used for His devotees and the word Marai is used for those who do not have respect or admire Paramathma. The vedas directly explain the Paramthama without expecting any supporting material, whereas the others like Ithihasam or Puranams use supporting material or quotes to explain Paramathma.
There are also many quotes that say that all vedhas explain Him. This is the first sentence of the next hymn (3.1.10). The second line states that He is all powerful and He is the reason for all activities. In the third sentence Azhwaar states that He gave knowledge to all whom He created. If He takes pride when He is praised as the mighty and powerful by those, who are created by Him , then it would be a surprise to Azhwaar.
We should remember that Azhwaar is trying to explain the beauty and glory of Azhagar, the deity of Thirumaaliruncholai, in all the hymns in this subsection (pathigam). But we can also take note that there is no explicit mention of Azhagar in any of the hymns.
There are two more subsections or pathigams in Thiruvaaimozhi on Thirumaaliruncholai and they are “mun neer gnalam padaitha” (3.2) and
“sen chor kavi kaal” in the end (10.7). Let us see about them in our next weblog.
Adiyenin sincere thanks to Sri R Ranganathan, my elder brother for helping me in confirming certain points while writing this weblog.
The hymns are available at the following websites for your information. Our sincere thanks to them.
For English, kindly click here , thanks
நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருவாய்மொழியில் குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களைப் பார்ப்போம்.
திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பதினொன்று ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
குடந்தையில் பெருமாள் நம்மாழ்வாருக்குக் காட்டிய குணம் மாதுர்யம், மாதுர்யம் என்றால் அன்பு, கருணை, இனிமை. மாதுர்யம் என்றால் எல்லோருக்கும் இனியவனாக இருக்கின்ற குணம். தன்மீது அன்பு செலுத்துபவர்களுக்கு, இனியவனாக இருப்பது, மனிதனுக்கே இயல்பு. பரமாத்மா, தன்னுடன் அன்பு செலுத்துபவர்களுக்கும், தன்னை எதிர்க்கும் பீஷ்மர் போன்ற நல்லவர்களிடமும் கூட அன்பாக இருப்பான். தன்னை கொல்லவரும் சிசுபாலன் போன்ற பகைவர்களுக்கும் இனியனாக இருப்பவன். பகைவர்களையும் வசீகரிக்க வல்லது பெருமாளின் மாதுர்யம். இதனை நமக்கு புரியவைக்கும் ஆழ்வார் பாசுரம்,
“கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ, கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே?” (7.5.2)
“திராவிட ஸ்ருதி தர்சகாய நம” என்பது திருக்குடந்தை ஆராவமுதன் நாமாவளிகளில் ஒன்று, அதாவது “திராவிட வேதம் காட்டிய பெருமாளே போற்றி” என்பதாகும். நாலாயிர திவ்யப்ரபந்தமே திராவிட வேதம் ஆகும். நம்மாழ்வார், திருக்குடந்தை ஆராவமுதன் மேல் இயற்றிய திருவாய்மொழி பாசுரங்களே, நாதமுனிகள் மூலம் நாம் திவ்ய ப்ரபந்தங்கள் பெறுவதற்கு காரணமாக அமைந்ததால், மேலே சொன்ன நாமாவளி மிகப்பொருத்தமே. பன்னிரு ஆழ்வார்கள் பெருமாளையும், வேதங்களையும் போற்றி பாடிய பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இக்கோயில் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது.
மதுரகவி ஆழ்வார், தன்னுடைய குருவான நம்மாழ்வாரை பெருமைப்படுத்தும் வகையிலும், இந்த உலக மக்கள் எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த காரணத்தாலும், அவர் நம்மாழ்வாரின் பாடல்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று ஒரு பெரிய தொண்டு செய்தார். இருந்தாலும், ஆழ்வார்கள் காலத்தில் இயற்றப்பட்ட இந்த ப்ரபந்தங்கள், மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்கு பிறகு, நாளடைவில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மறையத்தொடங்கின. இந்த பாடல்கள் மீண்டும் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் இத்தலத்து பெருமாளும், நம்மாழ்வார் இந்தப்பெருமாளுக்குப் பாடிய “ஆராவமுதே” (5.8) என்ற பதிகமும், மதுரகவி ஆழ்வாரின் “கண்ணி நுண் சிறுதாம்பு” என்ற ப்ரபந்தமும் அடக்கம் ஆகும்.
வீரநாராயணபுரம் என்று அந்நாளிலும், இப்போது காட்டுமன்னார்குடி என்று கூறப்படும் ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற ஆசார்யன், ஒரு நாள் அந்த ஊரின் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு இருந்த போது, சில பக்தர்கள் பெருமாளின் பெருமையை நம்மாழ்வார் திருக்குடந்தை பெருமாளுக்குப் பாடிய பதிகமான “ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே” (5.8.1) என்று தொடங்கி, “ஓராயிரத்துள் இப்பத்தும்‘ (5.8.11) என்று சொல்லி பாடி “காமர் மானேய் நோக்கியர்க்கே” (5.8.11) என்று முடித்தனர். இந்த பாடல்களின் இனிமையை கேட்ட, நாதமுனிகள், வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு அவை தெரியவில்லை.
அந்த பாடலின் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்ட நாதமுனிகள், அதில் இருந்த “குருகூர்ச் சடகோபன்” (5.8.11) என்பதிலிருந்து ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி – தூத்துக்குடி மாவட்டம்) சென்று, மதுரகவி ஆழ்வாரின் சீடர்கள் மூலம் அவர் இயற்றிய “கண்ணிநுண் சிறுதாம்பு” என்ற பிரபந்தத்தை பல ஆயிரம் முறை சொல்லி, மதுரகவி ஆழ்வார் மற்றும் நம்மாழ்வாரின் ஆசீர்வாதங்களால் அந்த திவ்யப்ரபந்த பாடல்களை பெற்றார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. இவற்றை நாதமுனிகள் நாலாயிர திவ்யப்ரபந்தம் என்று தொகுத்தார். ஆக, வடமொழியின் வேதங்களுக்கு இணையான திராவிட வேதமான திவ்யப்ரபந்தம் பாடல்கள் நமக்கு மீண்டும் கிடைக்க காரணமாக இருந்தவர்களில் சிலர்,
ஆழ்வார்கள் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட காரணம், வடமொழி வேதங்களை திராவிட மொழியில் ஏற்படுத்தி அவற்றைக் கொண்டு, ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைந்து தங்களுது பிறவி பலனை எய்துவது என்று இங்குள்ள ஜீவாத்மாக்களுக்கு உபதேசம் செய்வது ஆகும். ஆனால் எல்லா ஆழ்வார்களுமே பரமாத்மாவிடம் பக்தியில் மூழ்கி மோக்ஷம் பெறுவதையே பெருமாளிடம் வேண்டினர். அவை, அவர்கள் பாடிய பாசுரங்களில், பெருமாளிடம் பிரார்த்தனைகளாக வெளிப்பட்டன. நம்மாழ்வார் மோக்ஷம் வேண்டி வழிபட்ட தலங்களில் திருகுடந்தையும் ஒன்று.
இன்று வானமாமலை என்று அழைக்கப்படுகின்ற, திருநெல்வேலி அருகில் உள்ள, திருசீரீவரமங்கை, திருகுடந்தை, கேரளாவில் உள்ள திருவல்லவாழ், நாம் முன்பு பார்த்த திருவேங்கடம் என்ற நான்கு திவ்யதேசங்களிலும் விபாவாவதார கண்ணனிடமும் சேர்த்து, நம்மாழ்வார் ஐந்து முறை சரணாகதி வேண்டியுள்ளார்.
“அரியேறே! என் அம்பொற் சுடரே!” (6.8.7) என்ற இந்த பாசுரத்தில், “தரியேன், இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே” என்று சரணாகதி கேட்டு இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
இதற்கு முந்தைய பதிகத்தில், ஆழ்வார் வானமாமலை பெருமாளிடம் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவு இலேன்” (5.7.1) என்றும் “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” (5.7.10) என்றும் சரணாகதி வேண்டினார். அப்படி இருந்தும் பெருமாள் முகம் காட்டாமல் இருந்ததைக் கண்டு, ஆழ்வார், திருக்குடந்தை ஆராவமுதனை சேவிக்க சென்றார் ஏன் என்றால்,
இந்த பதிகத்தின் பாசுரங்களை கீழ்கண்ட வலைத்தளங்களில் காணலாம். அவர்களுக்கு எங்கள் நன்றி.
Click to access aaraavamude.pdf
உடலானது அன்பினால், நீராகி கரைந்து உருக்குகின்ற அழகுடன் விளங்கும்படியாக திருக்குடந்தை என்னும் திவ்ய தேசத்தில் சயனித்திருக்கின்ற பெருமாளை, “ஆராவமுதே”, “ஏரார்கோலம்” (5.8.1) என்பவைகளால் இனிமையும், “செந்தாமரைக்கண்ணா” (5.8.1) என்பதால் அழகையும், சேர்த்து வர்ணிக்கிறார்.
ஆராவமுதே என்பதன் மூலம் உண்ண உண்ணத் தெவிட்டாத திருப்தியும், பிறவாத வரம் தருவதுமான அமுதத்தைப் போன்றவனே என்று ஆராதிக்கிறார். இத்திருப்பெயரின் இனிமையின் மிகுதி அவனாலேயே தனியே அநுபவிக்கப் முடியாது என்பதை, இராமாயண காட்சியில் ராமன், சீதையோடு, பெரிய பெருமாளை ஆராதிக்கச் சென்றதை சொல்லி தன ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். மால் என்றால் பெரியோன் என்றும், நெடுமால் (5.8.1) என்றால், “மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ!” (8.4.5) என்பதுபோல் சொல்கிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஆத்மா இந்தச் சரீரத்தோடு சேர்ந்து வாழ்ந்திருக்கும் நாட்கள் எவ்வளவு உண்டோ, அவ்வளவு நாட்களும் அவனுடைய திருவடிகளைப் பிடித்துக்கொண்டே நடக்கும்படி திருவருள் புரிய வேண்டும் என்று மூன்றாவது பாசுரத்தில் (5.8.3) வேண்டுகிறார்.
ஆழ்வார், திருக்குடந்தை பெருமாளை நோக்கி, “எல்லா உலகங்களையும் உடைய ஒப்பற்ற மூர்த்தியே! உன்னைக் காணும்பொருட்டு நான், மனம் தடுமாறாமல் ஆகாசத்தை நோக்கி அழுவேன், தொழுவேன்” என்று நான்காவது (5.8.4) பாசுரத்தில் சொல்கிறார். ஆகாசத்தை நோக்கி அழுவதற்கான காரணங்கள் கீழ்கண்டவைகளாக இருக்குமோ?
ஆழ்வார், பெருமாளுடைய இனிமையை அநுபவிக்கிற தனக்கு, ஒரு பிரிவு வாராதபடி அவனை அடைவதற்குத் தடையாகவுள்ள விரோதிகளையும் போக்கி, அவனது திருவடிகளைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும் என்று ஆறாவது பாசுரத்தில் (5.8.6), அவனிடம் வேண்டிக்கொள்ளுகிறார். “வாழ் தொல் புகழார் குடந்தை” (5.8.6) என்பதன் மூலம், அவனை விட்டு “பிரிந்திருக்கும் நாள் எத்துணை” என்று கேட்க வேண்டாதவர்கள் வாழும் இடம் திருக்குடந்தை என்று இந்த தலத்தின் பெருமையை கூறுகிறார். ஏன் என்றால், அவர்களுக்கு சேவை சாதிக்க ஆராவமுதன் இங்கேயே இருக்கிறான்.
மேலே பார்த்து போல் ஏழாவது பாசுரத்தில் (5.8.7), ஆழ்வார் திருக்குடந்தை ஆராவமுதனிடம், சரணாகதி வேண்டுகிறார்.
சரீரம் தளர்ந்து தன் உயிரும் உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாகிறது என்றும், மனம் தளராமல் ‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் மாறாமல் அவன் திருவடிகளை பிடித்துக்கொண்டு போவதற்கு அவன் சம்மதம் வேண்டும் என்றும் எட்டாவது (5.8.8) பாசுரத்தில் வேண்டுகிறார்.
தன்னை உடன்படச் செய்து அவனது திருவடிகளிலே சேரச்செய்த ஆராவமுதனை, தான் காணும்படி வர வேண்டும் என்று ஒன்பதாவது (5.8.9) பாசுரத்தில் வேண்டுகிறார். செழு மாமணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, ‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷ ரத்தினங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நம் ஆச்சார்யர்கள் திருகுடந்தையின் பெருமையை கூறுவார்கள்.
ஆழ்வார், பெருமாள் இன்னும் தரிசனம் தராததால், பெருமாளிடம் அவருக்கு அடிமைப்பட்டும் இன்னமும் எத்தனை திருப்பதிகள் பலம் இல்லாதவனாக இந்த உலகத்தில், அலைந்து திரிவேன் என்று தன்னுடைய ஆற்றாமையை பத்தாவது (5.8.10) பாசுரத்தில் தெரிவிக்கிறார்.
திருக்குடந்தையிலே சென்று தம் எண்ணம் நிறைவேறாமையாலே, அங்கிருந்து, திருவல்லவாழ் என்ற திவ்யதேசத்திற்கு ஆழ்வார் புறப்பட்டார்.
நம்மாழ்வார் திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் என்ற பெருமாளைத்தான் கடைசியாகப் பாடிவிட்டு மோக்ஷத்திற்குச்(ஸ்ரீவைகுந்தம்) சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் திருப்பேர்நகர் தான். என்றாலும், நம்மாழ்வார் வைகுண்டம் செல்லும் பொழுது திருக்குடந்தை சாரங்கபாணி பெருமான் கோபாலனாக காட்சி தந்து அருளியதை கடைசி பத்தில் (பத்தாம் பத்து) ஒன்பதாவது பதிகத்தில் பாடி உள்ளார்.
வைகுண்டம் செல்லும் வழியில் ஒரு ஜீவாத்மாவின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை ஸ்வாமி நம்மாழ்வார் “சூழ்விசும்பு அணி முகில்“ (10.9) என்ற பதிகத்தில் நன்கு விளக்கி உள்ளார். வைகுண்டத்தை அடையும் புதிய ஜீவாத்மாவை மேகக்கூட்டங்களும், கடல் அலைகளும் ஆர்ப்பரித்து, சந்திர சூரியர்கள் ஒளி வெள்ளம் கொடுத்து, தேவலோக பெண்களும், தேவர்களும், முனிவர்களும், நித்யர்களும், முக்த ஆத்மாக்களும், பெருமாளின் வாயிற்காப்பாளர்களும், வரவேற்பதை சொல்லும் ஆழ்வார், ஸ்ரீ வைகுண்டம் செல்லும் வழியில் ராஜகோபாலனாக காட்சி தந்த ஸ்ரீ ஸாரங்கப்பாணி பற்றியும் சொல்கிறார்.
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும், தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல், கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி, குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே (10.9.7)
“வைகுந்தத்திற்கு வரும் இந்த ஜீவாத்மா, குடந்தையில் ஒளி வீசும் கிரீடத்துடன் காட்சி தரும் கோபாலனும், பார்கடலுள் ஆதி சேஷன் படுக்கையில் பள்ளிக் கொண்டு இருப்பவனும் ஆகிய நமது கேசவனின் மற்றொரு உன்னதமான தொண்டன்” என இனிமையாக பாடி வரவேற்பார்கள் என்பது மேலே சொன்ன பாசுரத்தின் பொருள்.
இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட (ஸ்ரீவைகுந்தம்) திருக்குடந்தை ஆராவமுதன் மறக்கமுடியாதபடி அநுபவம் கொடுத்தது தெரியவரும்.
“மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்த”வர் என்று சொல்லப்படுபவர் நாம் பின்னால் பார்க்கப்போகும் ஒரு ஆழ்வார் ஆன திருமங்கை ஆழ்வார் என்பவர் ஆவார். திருமங்கை ஆழ்வாரும், நம்மாழ்வாரைப் போல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திவ்யப்ரபந்த பாசுரங்கள் பாடி உள்ளார். நம்மாழ்வார், பெருமாள் மேல் நான்கு பிரபந்தங்கள் பாடியபடி, திருமங்கையாழ்வார் ஆறு பிரபந்தங்கள் பாடி உள்ளார்.
திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவுள்ளத்தையே பின்பற்றிப் பேசுகிறவராதலால், நம்மாழ்வார்க்குத் திருக்குடந்தையில் அளவுகடந்த அபிமானம் உண்டு என்பதை அறிந்தே தன்னுடைய எல்லா (ஆறு) பிரபந்தங்களிலும் திருகுடந்தையைச் சொல்லி உள்ளார். அவற்றைப் பற்றி திருமங்கை ஆழ்வாரைப் பற்றி சொல்லும்போது பார்க்கலாம். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் எண்பதற்கும் மேற்பட்ட திவ்யதேச பெருமாள்களைப் பாடிய திருமங்கையாழ்வார், தனது இறுதி பிரபந்தத்தில், இறுதியாக சொல்லி முடித்த பெருமாள், திருக்குடந்தை ஆராவமுதனே ஆவார்.
திருகுடந்தை ஆராவமுதனின் பெருமைகளை ஒருவாறு இங்கே நிறுத்திக் கொண்டு, மேலும் சில திவ்யதேசங்களைப் பற்றி நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொல்வதை தொடர்ந்து வரும் வலைப்பதிவுகளில் காண்போம்.
————————————————————
Now, we are trying to understand the experiences of Namazhwaar with some of the divya desams in his Thiruvaaimozhi. First we talked about Thiruvenkadam, followed by Srirangam. In this weblog, let us try to look into the experiences of Swami Namazhwaar with Thiru Aaravamudhan in Thiru Kudanthai, or now known as Kumbakonam.
Eleven out of twelve Azhwaars compiled hymns on Srirangam Ranganathar and ten Azhwaars compiled hymns on Thiruvenkadam Venkatachalapathi. Next comes Thirukudanthani (Kumbakonam) Saarangapani temple, on which seven Azhwaars compiled hymns on. Peyazhwaar, Boothathazhwaar, Thirumazhisai Azhwaar, Namazhwaar, Periyazhwaar, Aandaal and Thirumangai Azhwaar are the seven Azhwaars who compiled hymns on this divya desam.
The glory that was demonstrated to Namazhwaar by Perumal in Thirukudanthai is called Maadhuryam, which means, love, affection and sweetness. Maadhuryam means that He has qualities which make Him lovable and likable by each and everyone. It is natural for anyone to reciprocate the love and affection, shown on him/her. Perumal is affectionate to those who show affection towards Him, and also who are good but fight against Him, like Beeshmar in Mahabharatham. He is also good to even people like Sisupalan, in Mahabharatham, who was not only bad but also fought against Him with an intention to kill Him. So His Maadhuryam, will attract even His enemies, towards Him. This can be seen from the hymn by Namazhwaar (7.5.2)
“Ketpaar Kesavan keerthi allaal, matrum ketparo, ketpaar sevi sudu keezhmai vasuvagale vaiyum, setpaal pazham pagaivan Sisupalan, thiruvadi thaatpaal adaintha thanmai arivaarai arithinthume ? (7.5.2)
The meaning of the above hymn is “Sisupalan, the arch-enemy of Krishna would utter lowly words of abuse, which would blister the ears, yet he attained the Lord’s feet. Knowing these, would anyone listen to anyone other than Kesava’s glories?”
“Dravida Sruthi Dharsakaya namah” is one of the prayer lines for Thirukudanthai Aaaravamudha Perumal. The meaning of the above line is that it is He who showed us the Dravida Vedham. Sri Nathamunigal was able to retrieve Divya Prabantham, because, Swami Namazhwaar’s “aaravamude” (5.8) pathigam on Sri Aaravamudhan. Divya Prabhandham is a compilation of about 4000 hymns compiled on Vishnu by the twelve Azhwaars. So this temple, Thirukudanthai is often referred to as the rebirth place of Divya Prabhandham in our tradition.
Madhurakavi Azhwaar, wanted to spread the glories of his guru, Namazhwaar, and also wanted the whole world to get the benefits from the hymns sung by Swami Namazhwaar. He did a great service by travelling from one town to another and tried to make Thiruvaaimozhi and Namazhawaar, known to more people. In spite of his great efforts, over a period of time and after Madurakavi Azhwaar’s period, the hymns were slowly disappearing from usage, except in a few places. Thirukudanthai Aaravamudhan, the hymns compiled by Namazhwaar on this Perumal, namely, Aaravamudhe pathigam or subsection (5.8) and Kanni Nunn Siru Thambu pathigam by Madhurakavi Azhwaar are the important reasons for us to get the Divyaprabandham back in usage.
Centuries later, from the period of Nammazhwar, one day , one of our acharyaans, Sri Nathamuni, was in Veeranarayana Perumal temple, in Kattumannaarkudi, formerly known as Veeranarayanapuram. At that time, a few devotees, offered prayers to Perumal, by singing the hymns sung by Swami Namazhwaar on Thirukudanthai Aaravamudha Perumal. These eleven hymns started as “Aaravamudhe adiyen udalam ninbal anbaaye” (5.8.1) and completed with “Oraayirathul ippathum, mazhalai theera vallaar kaamar maaney nokkiyarke” (5.8.11). Nathamunigal was attracted by the sweetness of these hymns, requested them to sing the remaining songs, as they mentioned that these were ten out of the one thousand hymns. But they did not know any other hymns.
Nathamuni requested them to sing the same hymns again and got the clue from the words “Kurugoor Sadagopan” (5.8.11) in the last hymn. Kurugoor is now known as Azhwaarthirunagari (Navathirupaathi – Thoothukudi district in Tamilnadu). Nathamunigal went to Kurugoor and got the blessings of Madhurakavi Azhwaar through some of his disciples, by reciting “kannni nun siru thaambu” prabhandham, sung by Madurakavi Azhwaar, several thousand times and got the prabandhams through the blessings of Swami Namazhwaar. Nathamunigal was expecting to get one thousand hymns, but ended up with getting all the hymns by all Azhwaars, totaling close to four thousand hymns. Nadhamunigal then compiled them together and made it as “Nalaayira Divya Prabandham” , meaning Four Thousand hymns on Perumal and Thayaar. So we got back the hymns in Tamil, the dravida language, carrying the meaning equivalent to the vedas, which are in Sanskrit and for that we have to thank the following :
The primary purpose of birth of Azhwaars when they were born in this word, was to translate the Vedas, that were created by Him in Sanskrit, into Tamil, the Dravidan language, so that many more people could understand and follow the Vedas, and by doing so, help them to attain Moksham. Divya Prabhandams were the result of the Azhwaars enjoying the God, His Beauty, Actions and also brought the contents of Vedas in Tamil. Azhwaars enjoyed Him so much, they requested Paramathmaa for abode (Moksham). Namazhwaar’s request for moksham or abode, was on five different occasions and one such was through a set of hymns sung on Aaravamudha Perumal of Thirukudanthai.
Thiruseereevaramangai, known today as Vaanamaamalai in Thirunelveli district, Thirukudanthai, known today as Kumbakonam, Thiruvallavaazh in Kerala and Thiruvenkadam, which we have seen earlier, are the four divya desa Perumals on whom Namazhwaar compiled hymns on and requested for Moksham/Saranakathi. Similarly Namazhwaar had compiled one more set of hymns, the fifth one, on Sri Krishna, in Vibhavaavathaaram, to request for Moksham or abode.
In his request for abode, Namazhwaar started the hymn with “ariyere! en am por sudare! “ (6.8.7) and completed with “thariyen, ini, un saranam thanthu en sanmam kalaiyaaye“, meaning that he could not bear the mortal life anymore, and requested Him to shower His blessings and get Azhwaar rid of his birth.
In the previous subsection, (Pathigam), Azhwaar had made total surrender to Vaanamaamalai Perumal, by compiling the hymns starting with “Notra Nonbu illen, nun arivu illen“(5.7.1) and continued as “aarenaku nin paathame saranaagath thanthozhinthaai” (5.7.10). The meaning for the above is that Azhwaar did not do any special service to reach Him, and he neither had any special knowledge in the hymn 5.7.1. In the hymn 5.7.10, Azhwaar says that He had given His feet to him as his sole refuge and path and he did not have anything to give in return”. Inspite of all these, Perumal did not show His face or agree to the request of Azhwaar. Still Azhwaar proceeded to Thirukudanthai. The following could be the reasons for the same, as Azhwaar understood :
The complete listing of the hymns can be seen from any of the following websites and our thanks to them.
Click to access aaraavamude.pdf
In the first hymn, Azhwaar said that the divyadesa Perumal of Thirukudanthai, namely, Aaravamudan, in reclining position, was so handsome that He could melt his body through His love and affection. He coined the phrases like “Aaraavmudhe” and “Yeraar Kolam” (5.8.1) to represent sweetness and “senthaamarai kanna” 5.8.1 to represent His beauty.
Azhwaar adored Him as Aaravamudhe, meaning He being a heavenly immortal delicacy, He would be still so sweet, in spite of consuming more and more of Him. The sweetness of this name, Aaraavamudhe is so powerful that He Himself could not take it all alone. This can be seen from Ramayana situation, when He went along with Seetha to offer His prayers to Sri Ranganatha Perumal. Azhwaar used the word Nedumaal, (5.8.1), where maal would mean that He being supreme and Nedumal could mean that He being supreme to even those in celestial world. This can be seen from “Manisarku thevar pola, thevarkum thevavo” (8.4.5).
In the third hymn (5.8.3) of this subsection, Azhwaar requested Paramathmaa to bless him and allow Azhwaar to hold His feet and spend the entire time all along with Him, as long as He needed to stay in this world.
In the fourth hymn, (5.8.4), Azhwaar addressed Thirukudanthai Aaraavamudhan, as an unparalleled Lord of all the worlds and expressed his extreme desire to see Him by looking at the sky, got disturbed, then wept and continued to offer his prayers. The reasons for Azhwaar to look up at the sky may be one or combination of the following :
In the sixth hymn (5.8.6), Azhwaar requested Perumal that He should give directions for Azhwaar to attain His holy feet, by removing the hurdles so that he could continue to enjoy the experience of having continuous dharsan of Paramathmaa. In this hymn, Azhwaar showered a great deal of praise to the citizens of Thirukudanthai, by addressing them as “vaazh thol pugazhaar kudanthai“, (5.8.6), meaning “men of everlasting glories live in Kudanthai”. Since Aaravamudan is in Thirukudanthai, the people there do not need to keep asking Him, as how long would it take for them to get abode or moksham.
As we saw earlier, in the seventh hymn (5.8.7), Azhwaar requested Aaraavamudha Perumal to accept his total surrender.
In the eighth hymn (5.8.8), Azhwaar requested Perumal for his concurrence to hold on to His holy feet relentlessly so that he would be able to stick to his loyalty that His holy feet would provide shelter, as he was getting old and about to leave this world.
In the ninth hymn (5.8.9), Azhwaar requested Perumal to come and appear before him so that he could see Aaravamudhan, who made Azhwaar to hold on to His holy feet. In this hymn, Azhwaar had used a phrase “Sezhu Maa manigal serum Thirukudanthai” to give credit to Kumbakonam, for which our acharyaars used to give the explanation that Thirukudanthai was a place where gems like Aaravamudan and Thirumazhisai Piran would meet.
In the tenth hymn (5.8.10), Azhwaar expressed his inability, that he could not get the dharsan of Perumal in spite of surrendering totally to Him. He had concerns on the number of divya desams that he needed to go before he could get abode from Him.
Since he could not get what he wanted in Thirukudanthai, Azhwaar started off to a place called Thiruvallavaazh in Kerala.
The last divya desam perumal on whom, Namazhwaar had compiled hymns on, in this world and went abode is Thirupernagar Appakudathaan, now known as Koviladi near Tiruchirappalli, Tamil Nadu. Even though this was the last divya desam perumal on whom Namazhwaar compiled hymns on, he had mentioned about Thirukudanthai Sarangapani perumal, who appeared as Gopalan on his way abode or Moksham. Azhwaar mentioned this in the final pathu (Tenth ten), ninth subsection (pathigam).
Swami Namazhwaar explained the experience of the jeevathma’s travel from this world to Vaikuntham (abode or moksham) in a subsection (Pathigam) called “soozh vismbu ani mugil“(10.9). The jeevathma, before reaching Vaikuntham, would be welcomed by bunch of clouds, the waves from the sea, the bright light from the Sun and the Moon, the celestial women, men, sages, nithyasoories, (those who render service to Perumal all times), the other jeevathmas that reached abode and the guards at the gates. With all that swami Namazhwaar also mentioned about the appearance of Sri Sarangapani/Sri Aaravamudan, as Sri Rajagopalan.
madanthaiyar vaazhuthalum, marutharum vasukkalum, thodarnthu engum thothiram sollinar thodu kadal kidantha kesavan kilaroli manimudi, kundanthai en kovalan kudi adiyaarke (10.9.7)
The meaning of the above hymn is “the jeevathma that is coming to Srivaikuntham, is another excellent servant of our perumal, Sri Kesavan, who is reclining on Adiseshan,(the multi headed snake) as His bed in the milky ocean and who is in Thirukudanthai with a shining crown”.
From this we can understand that Thirukudanthai Aaravamudan had given an unforgettable experience to Swami Namazhwaar, even after he reached Srivaikuntham or abode.
Thirumangai Azhwaar, the last in the list of Azhwaars, about whom we will discuss in one of our future weblogs, is known for following the footsteps of Swami Namazhwaar, as the saying goes “Maaran panitha tamil maraiku Mangaiyar kon aaru angam koora avatharithavar“, meaning that Thirumangai Azhwaar (Mangaiyar kon) was born to further describe the tamil vedas, given by Maaran, (Swami Namazhwaar), through his six prabandhams. Like Swami Namazhwaar, Thirumangai Azhwaar also compiled more than one thousand hymns in Divya Prabantham. While Namazhwaar has compiled four prabandhams, Thirumangai Azhwaar has compiled six prabandhams.
Since Thirumangai Azhwaar followed the concepts of Swami Namazhwaar very closely, he could understand and appreciate the love and affection Namazhwaar towards Thirukudanthai Aaravamudan. So Thirumangai Azhwaar had mentioned about Thirukudanthai in all his six prabandhams. As we said earlier, we will cover them in our future weblogs when we talk about Thirumangai Azhwaar. Thirumangai Azhwaar had compiled hymns on more than eighty divyadesa perumals out of the total of one hundred eight divya desams. The last divya desam perumal mentioned by Thirumangai Azhwaar in his last prabantham is Thirukudanthai Aaraavamudan.
With this, let us try to put a hold on to the glories of Thirukudanthai Aaravamudan and move on to the other divyadesa perumals on whom Namazhwaar had compiled hymns in Thriuvaaimozhi in our coming weblogs.
For English version, please click here, thanks
திருவாய்மொழியில் ஆழ்வார் பாடிய திருத்தலங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில் திருவேங்கடமுடையானைப் பற்றி பார்த்தோம். அங்கு ஆழ்வாருக்கு பெருமாள் காட்டிய குணம், வாத்ஸல்யம், அதாவது, தாயை போல் அன்பு காட்டும் தன்மை.
முன்பு நம்மாழ்வாரும் திருஅரங்கனும் என்று ஒரு வலைப்பதிவு பார்த்தோம். அங்கே விக்கிரக வடிவில் நம்மாழ்வாருக்கும் திருஅரங்கனுக்கும் இடையே நடந்த சில நிகழ்வுகளைப் பார்த்தோம். இந்த பகுதியில் திருவாய்மொழியில் திருவரங்கன் என்பதை பற்றி பார்ப்போம். திருவரங்கத்தில் ஆழ்வாருக்கு பெருமாள் கட்டிய குணம், வியூஹ சௌஹார்த்தம், அதாவது, கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரம். இதில் சௌஹார்த்தம் என்றால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தல்.
பராசர பட்டர் என்னும் ஆச்சார்யர், நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆயிரம் பாடல்கள் அனைத்துமே திருஅரங்கனுக்காகவே அருளிச் செய்தவை என்றும், அவற்றை அரங்கனுக்கு முன் சமர்பித்துவிட்டு அவற்றில் இருந்து இந்த பத்து திருவேங்கடமுடையானுக்கு, ஈந்த பத்து திருமோகூருக்கு என்று ஆயிரம் பாசுரங்களையும் பல திவ்யதேச பெருமான்களுக்கும் பிரித்து கொடுப்பதாக சொல்லுவார்கள்.
“வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் ”
திருவாய்மொழியின் ஒரு தனியன். தனியன் என்பது ஒரு நூல் மற்றும் நூல் ஆசிரியரின் பெருமைகளை கூறும் ஒரு தனிப்பாடல். இவை நம் ஆச்சார்யர்களால் ஒவ்வொரு திவ்யப்ரபந்தத்திற்கும் பாடப்பட்டவைகள் ஆகும்.
தனது யுவராஜா பட்டாபிஷேக விழாவிற்கு முதல் நாள் ராமன், சீதையுடன் இஷ்வாகு குல ஆராதனப் பெருமாளான நாராயணனின் சன்னதிக்கு சென்றதை வால்மீகி ராமாயணத்தில் உள்ள சுலோகம்,
“கதே புரோஹிதே ராமஃ ஸ்நாதோ நியதமாநஸஃ. –
ஸஹ பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத்৷৷ 2.6.1৷৷”
மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த நாராயண பெருமாளே விபீஷ்ணன் மூலமாக திருஅரங்கம் வந்து சேர்ந்ததும் ஸ்ரீரங்க கோவிலின் சரித்திரத்தில் இருந்து (கோவிலொழுகு) தெரிந்து கொள்ளலாம். நம்முடைய முந்தைய வலைப்பதிவில் பார்த்தது போல், திருவாய்மொழி முதலில், இடையில், இறுதியில் நாரணன் சொல்லப்பட்டதால், திருவாய்மொழி முழுவதுமே நாரணனுக்கு என்று உறுதிசெய்யப்பட்டது. எனவே, திருவாய்மொழி ஆயிரமும் அரங்கனுக்கே என்று கூறுவது மிகவும் பொருத்தமே.
மிக அதிகமான பத்துக்களில், (ஐந்து, ஏழாம் பத்துக்கள் தவிர மற்ற எல்லா பத்துகளிலும்), ஆழ்வார் ஒருதடவையாவது திருவேங்கடமுடையானை நேரிடையாகக் குறிப்பிட்டு உள்ளார் என்று முன்பு பார்த்து உள்ளோம். ஏழாம் பத்தில் வேங்கடமுடையான் பிரஸ்தாபம் கிடையாது, ஆனால் ஏழாம் பத்தில் தான் திருவரங்கனை பாடிய கங்குலும் பகலும் பதிகம் உள்ளது. ஸ்ரீ ரங்கநாதன், “மந்தி பாய் வடவேங்கடமாமலை சந்தி செய்ய நின்றான் அவனே அரங்கத்து அரவின் அணையான்” என்று நாம் இன்னும் பார்க்க வேண்டிய ஒரு ஆழ்வார், திருப்பாணாழ்வார், அமலனாதிபிரான் என்னும் திவ்யப்ரபந்தத்தில் சொல்லுகிறார். எனவே அவனே இவன், அதாவது திருவேங்கடமுடையானே திருவரங்கன். ஆக, ஏழாம் பத்திலும் திருவேங்கடமுடையான் சொல்லப்பட்டார்.
ஆழ்வார் எந்த திவ்யதேசத்திற்கும் போகாமல், தான் இருந்த இடமான ஆழ்வார்திருநகரியில் இருந்து கொண்டே தான் பல திவ்யதேச பெருமான்களைப் பாடினார் என்று பார்த்து உள்ளோம். திருஅரங்கம், ஆழ்வார்திருநகரிக்கு வடக்கே உள்ளது. ஆனால், ஆழ்வார் தென்திருவரங்கம் கோவில் கொண்டானே (7.2.9) என்று திருஅரங்கனைப் பாடுகிறார். வடதிருவரங்கம் என்று பாடாமல், தென்திருவரங்கம் என்று பாடுவதற்கு காரணம், முந்தைய பதிகமான (6.10) உலகமுண்ட பெருவாயா என்ற பதிகத்தில் திருவேங்கடமுடையானை பாடும் போது, உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (6.10.10) என்று பாடியதால், ஆறாம் பத்து முடிந்தபொழுதும் இந்த ஏழாம் பத்து இரண்டாம் பதிகம் பாடும் பொழுதும் திருவேங்கடமுடையானின் அடிக்கீழ் இருந்து நகராமல் பாடுகிறார் போலும்.
சுவாமி நம்மாழ்வார், ‘கங்குலும் பகலும்’ (7.2) என்கிற திருப்பதிகத்தில், திருவாய்மொழியின் பத்து பத்துக்களின் அர்த்தங்களையும் அருளிச் செய்தார். இந்த பதிகம், திரு அரங்கனுக்காகப் பாடப்பட்டதால், முன்பு சொன்னது போல், ‘மதிள் அரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்’ என்கிறார்கள். அந்த பத்து பத்துகளின் அர்த்தங்களை சிறிது விரிவாக கீழே காண்போம்.
ஒவ்வொரு பத்திலும் பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய குணநலன்கள், என்று முன்பே பார்த்து உள்ளோம்.
பரத்வம் என்பது, தான் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த நிலையில் இருப்பது. முதலில் இந்த பதிகத்தின் ஆறாவது பாசுரத்தில் “விண்ணோர் முதல் என்னும் (7.2.6)” என்று சொல்லி பரத்துவத்தின் பெருமையை சொல்லத் தொடங்குகிறார். பின்னர், இந்த பதிகத்தின் பத்தாவது பாசுரத்தில், “மூவுலகு ஆளியே என்னும், கடிகமழ் கொன்றைச் சடையனே என்னும், நான்முகக் கடவுளே என்னும்” (7.2.10) என்று தொடங்கி, “வடிவுடை வானவர் தலைவனே” என்று நிலைநிறுத்தி, “வண் திருவரங்கனே!” என்று முடிக்கிறார். மூவுலகு ஆளியே என்கின்ற இந்திரனுக்கும், கொன்றைப்பூவினை தலையில் வைத்துக் கொண்ட சிவனுக்கும், நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனுக்கும் அந்தர்யாமியாக இருந்து அவர்களின் நிர்வாகங்களையும் செலுத்துபவனே என்றும், எப்போதும் பெருமாளுக்கு சேவை செய்வதால் உண்டான மகிழ்ச்சியே அழகாக தோன்றும்படி இருக்கிற நித்தியசூரிகளான வானவர்களுக்கும் தலைவனே என்று கூறியதன் மூலம் பெருமாளின் உயர்ந்த நிலையினை நமக்கு தெரிவிக்கிறார். “வண் திருவரங்கனே!” என்று கூறியதன் மூலம், இவ்வுலகில் வாழும் நமக்கும் காட்சி அளிக்கிறார். ஆக, பக்த, முக்த, நித்யசூரிகளுடன், தேவர்களுக்கும், இந்திரனுக்கும், சிவனுக்கும், பிரம்மனுக்கும் தலைவன் என்று இந்த பாசுரத்தில் சொல்லி முதல் பத்துக்கு உரிய செய்தியான பரத்வம் சொல்லப்படுகிறது.
காரணத்வம் என்பது, தானே எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது. இந்த உலகத்தைப் படைத்து அதில் உள்ள ஜீவராசிகளையும் படைத்து, மஹாபிரளயம் மற்றும் பிரளயம் வரும் போது அவற்றை உண்டு, தன் வயிற்றிலே வைத்து காத்து, பின் மீண்டும் அங்கங்கே கொண்டுவரச் செய்வதை, இந்த பதிகத்தின் இரண்டாவது பாசுரத்தில் “முன் செய்து, இவ்வுலகம் உண்டு, உமிழ்ந்து” (7.2.2) என்று சொல்லியதால் இரண்டாவது பத்துக்கு உரிய பொருளான “காரணத்வம்” சொல்லியதாயிற்று.
வியாபகத்வம் என்பது, பரமாத்மா எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பதை சொல்வது. பரமாத்மா அளவிடமுடியாமல் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று சொல்வது அவருடைய உருவத்தின் (ரூபத்தின்) அளவினை மனதில் கொண்டா, அல்லது பரமாத்மாவின் மேன்மையான குணங்களைக் (ஸ்வரூபத்தின்) மனதில்கொண்டா என்று திருக்குருகைப்பிரான் என்னும் ஆச்சர்யனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, அவரின் பதில், சாதாரண மனிதர்களுக்கு பரமாத்மாவின் மேன்மையான குணங்களைக் கொண்டே அவர் எங்கும் நிறைந்து இருப்பதை சொல்ல முடியம். ஆனால் பெருமாள், அவரின் ரூபத்தின் அழகினால், ஆழ்வார்களின் இதயத்தில் ஒருதுளி இடம் விடாமல் எங்கும் வியாபிக்கிறார் என்று சொல்கிறார். இந்த பதிகத்தில் நம்மாழ்வார், ‘கட்கிலீ’ உன்னை காணுமாறு அருளாய்” (7.2.3) என்று அந்தர்யாமியை சொல்வதாலும் மற்றும் “என்னுடைய ஆவியே என்னும்” (7.2.9) என்று சொல்வதாலும், பெருமாள் தனது உள்ளத்தில் எங்கும் நிறைந்து உள்ளதை சொல்லி மூன்றாவது பத்துக்கு விஷயமான “வியாபகத்துவதை” சொல்கிறார்.
நியந்த்ருத்வம் என்பது பரமாத்மா தானே எல்லாற்றையும் நடத்திக் கொடுப்பது என்பதை சொல்வது. இந்த பதிகத்தில், “பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்” (7.2.7) என்பதின் மூலம், அந்தந்த இடங்களுக்கு தகுந்தவாறு சுக துக்கங்களை படைக்கின்றாய் என்றும், “கால சக்கரத்தாய்” (7.2.7) என்பதின் மூலம் கால தத்துவதை இயக்குபவனே என்று சொல்வதாலும் பரமாத்மா, தானே முன்னின்று இருந்து இயக்கும் தன்மை சொல்லப்படுவதால், நான்காம் பத்தின் உள்ளுறைபொருளான நியந்த்ருத்வம் இந்த பதிகத்தில் சொல்லப்பட்டது.
காருணிகத்வம் என்பது அவனுடைய எல்லையற்ற கருணையை காண்பிப்பது. நம் ஸம்ப்ரதாயத்தில் சொல்லப்படும் மிக முக்கியமான காருணிகத்வம், பரமாத்மா மஹாபிரளயத்தின் போது எல்லா உயிர்களையும் தன்னுடைய வயிற்றில் வைத்து காப்பது ஆகும். வேறு எத்தனையோ இடங்களில் பெருமாளின் அதீத கருணை வெளிப்பட்டாலும், கீழ்கண்ட மூன்று இடங்களை நம் ஆச்சார்யர்கள் விடாமல் எப்போதும் சொல்லி வருவார்கள். இந்த ஒவ்வொரு உதாரணமும் எல்லா உயிர்களுக்கும், அவை ஒன்றும் கேட்காமலேயே, பெருமாள் தன்னுடைய அளவிட முடியாத கருணையை காண்பித்த செயல்கள் ஆகும்.
மேலே சொன்ன பாசுரங்கள் ஒரு சில உதாரணங்களே. சொல்லப் போனால், எல்லா ஆழ்வார்களுமே இந்த சரித்திரங்களை பாடி இருப்பார்கள். இப்படி பெருமாளின் அருளை, கருணையை திருவாய்மொழியில் ஐந்தாம் பத்தில் ஆழ்வார் சொல்வதை முன்பு பார்த்தோம். இந்த கங்குலும் பகலும் (7.2) பதிகத்தில், “முன் செய்து, இவ்வுலகம் உண்டு, உமிழ்ந்து” (7.2.2) என்றும், இவள் திறத்து அருளாய் (7.2.6) என்றும் குன்று ஏந்தி கோ நிறை காத்தவன் (7.2.8) என்றும் சொன்னதால், இந்த பதிகத்தில், ஐந்தாம் பத்தின் பொருளான காருணிகத்வம் வெளிப்படுகிறது.
சரண்யத்வம் என்பது தன்னால் எல்லோருக்கும் சரணாகதி அளிக்கக் கூடிய வல்லமை உண்டு என்பதை சொல்வதாகும். “பற்றிலார் பற்ற நின்றானே” (7.2.7) என்று அவன் மேல் பற்று இல்லாதவர்களுக்கும் சரணாகதி அளித்து வருபவனே என்று ஆழ்வார் இந்த பதிகத்தில் பாடுவதால், பெருமாள் சரண்யம் அளிக்க கூடியவன் என்று சொல்லி ஆறாம் பத்தின் பொருளான சரண்யத்வம் இங்கே சொல்லப்பட்டது.
சக்தத்வம் என்பது பெருமாள் தான் எல்லாவித வேண்டுகோள்களையும் நிறைவேற்றும் சக்தி உள்ளவன் என்பதை எல்லோரும் உணரும்படி செய்வது. இந்த பதிகத்தில் “அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே” (7.2.5) என்று (நரசிம்மாவதாரத்தின்) பரமாத்மாவின் பெருமை சொல்லியும், “அலைகடல் கடைந்த ஆரமுதே” (7.2.5) என்று பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து (கூர்மாவதாரத்தின்) பரமாத்மாவின் பெருமையைச் சொல்லியும், “உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட ஒருவனே” (7.2.3) என்று வலிமையான அசுரர்களின் உயிரை எடுத்தவனே என்று சொல்லியும், அவனுடைய சக்திக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளை கூறி இந்த பதிகத்தில் ஏழாம் பத்தின் கருத்தான சக்தத்வம் சொல்லப்பட்டது.
சத்யகாமத்வம் என்பது, விரும்பத்தக்க குணங்கள் எல்லாம் உடையவன் அவன்; அவன் ஆசைப்பட்டு அடையவேண்டியது எதுவும் இல்லை; எல்லாவற்றையும் அடைந்தவன் அவன் என்பது. இது எட்டாவது பத்தில் ஆழ்வாருக்கு பகவான் காட்டிய அவனது குணம் அல்லது பெருமை ஆகும்.
எட்டாம் பத்தின் முதல் பதிகத்தின், முதல் பாசுரத்தில், முதல் வார்த்தைகளாக ஆழ்வார் சொல்வது, பெருமாளின் அழகுக்கும் பெருமைக்கும் திறமைக்கும் தகுதியான தேவிமார்கள் ஸ்ரீதேவியும், பூமாதேவியும் ஆவார்கள் என்பதை “தேவிமாராவார் திருமகள் பூமி” (8.1.1) என்று சொல்வதை, இந்த கங்குலும் பகலும் பதிகத்தில், “என் திருமகள் சேர் மார்வனே“(7.2.9) என்றும், “நிலமகள் கேள்வனே” (7.2.9) என்று சொல்லி, “ஆய்மகள் அன்பனே“(7.2.9) என்று நீளாதேவியையும் சேர்த்துள்ளார். நாம் முன்பே பார்த்தது போல், தேவிமார்களோடு அவன் இருக்கின்றபடியாலும், தேவிமார்கள் அனைத்து ஜீவாத்மாக்களையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து நமக்காக அவனிடம் சிபாரிசு செய்வதாலும், அவன் நமக்கு வேண்டிய கருணையை காட்டி நாம் விரும்பியதை அடைய செய்பவன். இப்படி எட்டாம் பத்தின் பொருளான சத்யகாமத்வம் இந்த கங்குலும் பகலும் பதிகத்தில் சொல்லப்பட்டது.
ஆபத்சகத்வம் என்பது நம் இடர்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும் சக்தி. நாம் முன்பே பார்த்து போல், பிரளய காலத்தில் நம்மை அவன் வயிற்றில் வைத்து காத்தது “முன் செய்து இவ்வுலகம் உண்டு” (7.2.2) என்று சொன்னதும், கண்ணபிரானாக கோவர்த்தன மலையைத் தூக்கி அங்குஇருந்த எல்லா உயிர்களையும் காப்பாற்றியதை “குன்றமேந்தி கோ நிறை காத்தவன்” (7.2.8) என்று சொன்னதும், இந்த கங்குலும் பகலும் பதிகத்தில் உள்ளதால், ஒன்பதாம் பத்தின் கருத்தான ஆபத்சகத்வமும் இங்கே உள்ளது.
ஆர்த்திஹரத்வம் என்பது நம்முடைய கவலைகளை எதிர்பார்ப்புகளை, துடிப்புகளை, தீர்க்கவல்லவன் எனபது ஆகும். மோக்ஷம் கிடைக்க வில்லையே என்ற நம் துடிப்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த குணமும் பெருமையும், அவனிடம் இருப்பதை ஆழ்வாருக்கு உணர்த்தியது திருவாய்மொழியில் பத்தாம் பத்தில் ஆகும். இதனை, கங்குலும் பகலும் பதிகத்தில், ஆழ்வார் “அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே” (7.2.10) என்றும், “முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்” (7.2.11) என்றும் சொல்வதானால் பத்தாம் பத்தின் பொருளான ஆர்த்திஹரத்வமும் கங்குலும் பகலும் பதிகத்தில் உள்ளது.
இப்படி, பத்து பத்துகளின் பொருளும் இந்த பதிகத்தில் உள்ளதால், திருவாய்மொழி முழுவதுமே அரங்கனுக்கு என்று பட்டர் சொன்னது நமக்கு விளங்கும்.
இப்படி திருவாய்மொழி முழுவதும் அரங்கனுக்கு சமர்ப்பித்த சடகோபனுக்கு ‘நம் ஆழ்வார்’ என்று அரங்கன் பெயர் கொடுத்தது மிகவும் பொருத்தமே. அதேபோல் இந்த பதிகத்தின் பல பாசுரங்களில் ‘திருவரங்கத்தாய்’ என்று அழைப்பது திருவரங்கத்தில் உள்ளான் என்பதை குறிப்பதற்கே. இருப்பினும், “தாய்” என்ற ஆழ்வாரின் வார்த்தைக்கு ஏற்ப, உலகுக்கெல்லாம் தாயாகவும் இருக்கிறான் என்பதை உலகுக்கு உணர்த்த, மாயாவதாரமான மோஹினி அலங்காரத்தில், ஒவ்வொரு ஆண்டும் அரங்கன் காட்சி அளிப்பதையும் நாம் இந்த சமயத்தில் நினைவில் கொள்ளலாம்.
இந்த பகுதியில் சில கருத்துக்களை உறுதி செய்ய உதவிய எங்கள் அண்ணா ஸ்ரீ ரங்கநாதனுக்கும், Dr. R.V. கமலக்கண்ணன் அவர்களின் புத்தக மேற்கோளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
முன்பு சொன்னது போல், திருவாய்மொழி ஒரு மிகப் பெரிய கடல். மேலும் திருவாய்மொழியைப் பற்றியே இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
=======================================================
Here we are discussing about the divya desams on which Swami Nammazhwaar had compiled hymns on. We went through some interesting aspects of Thiruvenkatamudaiyaan in our previous weblog. The glory that was demonstrated or shown to Azhwaar by Perumal in Thiruvengadam is Vaathsalyam, a virtue or glory that can be best described as the love , affection or care shown by a mother to her children.
Earlier, we have seen one weblog titled “Namazhwaar and Thiruvarangan” where the interactions between Swami Namazhwaar in vigraham (idol) Archai State and Thiruvarangan. In this weblog, the objective is to discuss about Thiruvarangan and Thiruvaaimozhi in particular. The glory or virtue that was demonstrated to Azhwaar in this divya desam is called “Viyuha Sowhartham” which means, His desire in seeing all the beings in good welfare.
Our Achaaryar Parasara Bhattar, used to state that all the thousand hymns of Thiruvaaimozhi are dedicated to Thiruvarangan and then they were distributed like, this ten for Thiruvenkadamudiyaan and this ten for Thirumoghur and so on for other Divyadesa Emperumaans. This can be seen from one of the Thaniyans of Thiruvaaimozhi,
“Vaan thigazhum solai mathilarangar vanpugazh mel aandra tamil maraigal aayiramum eendra muthal thaai Sadagopan, moimpaal valartha ithathaai Iraamanusan”.
Thaniyan is a separate hymn sung on the individual prabantham and/or on the author of the prabantham.
Valmiki, the author of Ramayana, wrote a sloka, when Sri Rama with Sita went to the sanctum sanctorum of Sriman Narayana, the daily worshipped deity (Aaradhana Perumal)of His Dynasty (Ikshvaaku) on the eve of His Yuvaraja Pattabishegam (coronating Rama as heir-apparent),
” gatē purōhitē rāmaḥ snātō niyatamānasaḥ – saha patnyā viśālākṣyā nārāyaṇamupāgamat 2.6.1″
The meaning of the above is “After the family priest (Vasishta) left, Rama had his bath, and with his mind under control came to Lord Narayana along with his large-eyed consort, Sita. (with an intention to worship him)”. The same deity, Sriman Narayanan was given as a gift to Sri Vibishnan, the brother of Ravana, as a token of appreciation for his (Vibishnan) devotion towards Sri Rama, by Sri Rama after His Pattabhishegam and Vibishnan had agreed to leave the same at Srirangam, on his way to Srilanka, as per the temple history of Sri Rangam (Kovilozhgu). We have seen in our earlier weblog that Azhwaar has made reference to Sriman Narayanan in the beginning, middle and at the end of Thiruvaaimozhi and hence all the thousand hymns of Thiruvaaimozhi is for Sriman Narayanan. Since Srirangam perumal is Sriman Narayanan, as per above, the thousand hymns of Thiruvaaimozhi can be attributed to Thiruvarangan.
We have seen earlier that Azhwaar has made reference to Thiruvenkadamudaiyaan, at least once, in all the pathus (Tens), except 5th and 7th Pathus. There is no reference about Thiruvenkadamudiyaan in 7th Pathu, where Azhwaar has compiled hymns on Thiruvarangan, in Kangulum Pagalum Pathigam (7.2). We are yet to discuss about the Azhwaar, by name, Thirupaanazhwaar, who has compiled a prabandham, known as Amalanaathipiraan, where he described Thiruvarangan and Thiruvenkadamudaiyaan are one and the same. “Mandhi paai, vadavenkada maamalai vaanavar santhi seiya nindraan, avane Arangathu aravin annaiyaan“, meaning that the deity who is in standing posture in Thiruvenkadam, is the same deity, who is reclined on the snake in Thiruvarangam. That is Thiruvenkadamudiayaan and Thiruvarangan are same, and azhwaar had compiled hymns on Thiruvarangan in the seventh pathu (Seventh Ten), we can conclude that Thiruvenkadamudaiyaan is referred in the seventh pathu also.
As seen by us in one of the earlier weblogs, Namazhwaar did not visit any of the divyadesams, but compiled hymns on the perumals of respective divya desams, by remaining only in Alwarthirunagari, his birthplace. Azwaar says ” Thenthiruvarangam kovil kondane”. Srirangam is situated north of Alwarthirunagari and Azhwaar should have compiled the hymn as Thiruarangam, which is in North (from Alwarthirunagari), as against Thiruarangam, which is in South, in the hymn “Thenthiruvarangam kovil kondaane” (7.2.9). This could be because of the previous hymn that he sung on Thiruvenkadamudaiyaan, (“un adi keezh amarnthu pugunthene – 6.10.10)” – which means that Azhwaar literally went, sat at the Holy feet of Thiruvenkadamudaiyaan , and he remained there, even when he was compiling the hymns on Thiruvarangam. And Thiruarangam is situated south of Thiruvenkadam and hence it is acceptable to Azhwaar to call Thiruvarangan, as the deity who has the temple in South.
Kangulum Pagalum (7.2) is a very special pathigam, in the sense that Swami Namazhwaar had given the meaning of each and every Pathu (Ten), in these eleven hymns of this pathigam. Since this pathigam is for Thiruvarangan, it is very apt to call “mathil arangar vann pughazh mel aandra thamizh maraigal aayiramum“, meaning that all the one thousand tamil vedas (ThiruvaaimozhI in total) are for Thiruvarangan. Let us see in little bit more details on the above in the following paragaraphs.
We have seen earlier about the glories which were shown by Perumal in each of the Pathu (Ten) of Thiruvaaimozhi to Azhwaar.
“Parathvam” means that He is the Greatest, He is the Suprememost, there is no other person or thing in this Universe or anywhere, who or which is superior to Him. First Namazhwaar said in the sixth hymn of this pathigam, “Vinnor Muthal Ennum” (7.2.6) meaning that He is the Leader of the Nithyasooris and all others in the celestial world. And then in the tenth hymn of this pathigam, Azhwaar said
to indicate that He is the one who is the leader and the one who supervises the activities of these important persons of the celestial worlds, Indran, Siva and Brahma. Azhwaar continued by saying “vadivudai vaanavar thalaivane” and completed by saying “van thiruvarangane”. Vadivudai here means, beautiful glow . This glow comes from serving Perumal and hence is reflected on the faces of Nithyasooris. The leader of those Nithyasooris is Perumal Himself. The last part, namely, “vann Thiruavarangane”, states that He is here in this world to give His blessings to all of us. And thus azhwaar established Parathvam, which is the core for the first pathu, by stating that He is the leader for everyone like us, those in the celestial worlds, Indran, Siva, Brhmma and Nithyasooris.
Kaaranathvam means that He is the reason for the existence of all living and non-living elements / things (Jeevathmaas, please note that all non-living things are also classified as Jeevathmaas in Vaishnavism). He has created this world and all the living and non-living things in this world and during Pralayam and Mahapralayam ,He protects all the Jeevathmaas by taking them inside His stomach and after the Pralayam and Mahapralayam, He brings them back to existence. This is brought out by Azhwaar in the second hymn of this pathigam, “mun seithu ivvulagam undu, umizhnthu” (7.2.2) and with that Kaaranathvam, the meaning of the second Pathu (Ten) is covered in this pathigam.
“Vyapakathvam” means that He is everywhere. Paramathmaa spreads Himself in every part of this universe, not thinly, but densely occupying every bit completely with ease and comfort. Once there was a question posed to an Acharyar by name, Thirukurugaipiraan. The question was about the Vyapakathvam of Paramathmaa, whether the spreading is because of the physical shape and size or due to His glories. Thirukurugaipiraan responded by saying that Paramathmaa’s Vyapakathvam can be understood by normal people only from His glories, but for Azhwaars, He demonstrates Vyapakathvam by shape and size. By this he means that Perumal occupied the heart of azhwaars completely and without leaving any blank space. In this pathigam, Namazhwaar highlighted “Katkili unnai kaanumaaru arulaai” (7.2.3) by referring to the Antharyami state of Paramathmaa and “ennudaiya Aaviye ennum” (7.2.9). By this Azhwaar explained that Paramathmaa is occupying his heart fully and thereby explained the meaning of the third pathu (Ten), ie Vyapakathvam.
Niyanthruthvam means that everything will happen only as per His desire. He is the one who makes things happen in this universe. In this pathigam, Namazhwaar has told “paala thunbangal inbangal padaithaai” (7.2.7) which means that He is the one who creates or gives sorrow and happiness depending on the places and “Kaala Chakarathaai” (7.2.7). which means that He is the one who controls and administers the Time element in this universe. From the above, we can understand that He is the one who leads in every action and thereby the meaning of the fourth pathu (Ten), namely Niyanthruthvam, is covered in this Kangulum Pagalum pathigam.
Kaarunikathvam means that He is very simple, very easy to approach and He shows extreme kindness to all. The most significant event that is described as the best Kaarunikathvam by Paramathmaa in our tradition is when He protects all the Jeevathmaas by consuming them and keeping them in his stomach during mahapralayam and returning them back after the mahapralayam. There are many other places where He has shown and demonstrated His Kaarunikathvam, the following three other events are described as examples of His kindness. Each of these following events are examples, where He has shown his extreme kindness to one and all and also He has done that without anyone asking for His help.
Whatever pasurams we mentioned above are all only examples, almost all azhwaars would have compiled hymns on the above historical events. In the same way, Azhwaar had compiled Perumaal’s kindness (karunai) and His blessings in the fifth pathu (Ainthaam pathu). Azhwaar mentioned
So in this pathigam, Azhwaar had covered the meaning of fifth pathu (Fifth ten), which is Kaarunigathvam.
Saranyathvam means that He is the most eligible person to whom we can surrender ourselves fully, as He is both great as well as simple. So He is capable of giving abode to all. Azhwaar had mentioned “patrilaar patra nindraane” (7.2.7) meaning that He is there for all including those who are not devoted to Him. In fact azhwaar mentioned that He had given abode to those who are not devoted Him. Since azhwaar had mentioned about the total surrender in this Kangulum Pagalum pathigam, he has covered the meaning to sixth pathu (ten), which is Total Surrender (Saranyathvam).
Sakthathvam (Has Power) means that He has the power and ability to fulfill all our desires and give shelter to each and everyone of us to take us abode. In this Kangulum Pagalum pathigam, Azhwaar, gave the following examples to show us the power He has.
With these examples in the Kangulum Pagalum pathigam, Sakthathvam, the power of Paramathmaa to grant anything and everything is established to cover the meaning of the seventh pathu (ten).
Satya Kaamathvam means that He has all the desirable glories and there is nothing which He has not achieved or attained. In short, He has everything. This is the glory that Paramathma had shown to Azhwaar and he had sung on this Satyakamathvam in the eighth pathu (ten).
As the first few words of the first hymn of the first pathigam of the eighth pathu (ten), “Devimaar aavaar Thirumagal Boomi” (8.1.1), Azhwaar paid his respects to Perumal, by saying that Sridevi Thaayar and Boomaadevi Thaayaar are the most appropriate consorts for the handsomeness and glory of Perumaal.
In this Kangulum Pagalum pathigam, Azhwaar included Neelaa devi Thayaar also, by saying “Aaimagal Anbane” (7.2.9) in addition to referring Sridevi thayaar as “en Thirumagal ser maarbane“(7.2.9) and Boomadevi thaayar as “Nilamagal kelvane” (7.2.9). As we said earlier, that He is with His Devimaars and Devimaars look after all the Jeevathmaas as their children and the Devimaars make recommendations for us to Paramathmaa, He gives His blessings by fulfilling our wishes. Thus the primary objective of the eighth pathu (ten), namely, Satya Kaamathvam, is covered in this pathigam.
Aabathsahathvam means that He can protect all of us from all difficulties. As we had seen earlier, He protects us by keeping all Jeevathmaas in His stomach during the Mahapralayam period and this is mentioned in this pathigam as “mun seithu ivvulagam undu” (7.2.2). Similarly during the incarnation of Sri Krishna, He had protected all by holding Govardhana mountain and this was mentioned in this pathigam, as “Kundram aaenthi, ko nirai kaathaavan” (7.2.8). These lines in kangulum pagalum denote the meaning of ninth pathu, Aabathsahathvam.
Arthiharathvam means that He fulfills all our expectation and desires. He eliminates all our difficulties, which might include our desire of not getting the mukthi yet. Perumaal had shown the above glory and capability, namely the ability to cure our difficulties, to Azhwaar and this becomes the theme for the tenth pathu (Ten). In this Kangulum pagalum pathigam, Azhwaar covered the meaning of the tenth pathu (Ten), namely, Arthi harathvam, by
Thus, meanings of all the ten pathus (Tens) are covered in this Kangulum Pagalum pathigam, it is very appropriate for Parasara Bhattar, one of the acharyaas, to state that the whole Thiruvaaimozhi is for Thiruvarangan.
Similarly it is very appropriate for Thiruvarangan to give the name of “nam azhwaar” (our azhwaar), to Sadagopan, as the full Thiruvaaimozhi can be attributed to Him. Azhwaar had mentioned “Thiruvarangthaai” in some of the hymns of this pathigam, meaning that He is in Thiruvarangam. However it can also mean that He is, as the mother in Thiruvarangam. At this time, we can refresh our minds with the procession that Thiru Arangan undertakes once every year, where He comes out in a beautiful woman’s attire, called Mohini Alankaram, to illustrate that He is the Mother of all in this universe.
We would like to express our sincere thanks to Mr R Ranganathan, our elder brother and Dr R V Kamalakannan, whose books were referred while writing this weblog.
As we said earlier, there are lot more interesting aspects of Thiruvaaimozhi, as it is a big ocean. We hope to do some more on Thiruvaaimozhi in our future weblogs.
==========================================================
For English, kindly please click here, thanks
நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம்.
ஸ்ரீவைஷ்ணவத்தில், சரணாகதி தத்துவத்தை மூன்று விதிமுறைகள் மூலம் விளக்கி சொல்லலாம். அவற்றை ரஹஸ்ய த்ரயம் என்றும் கூறுவோம். ஸ்ரீவைஷ்ணவ கருத்துக்களில் முக்கியமானவைகளை சுருக்கமாக சொல்லும் அந்த ரஹஸ்ய த்ரயம், திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகம் என்பன ஆகும். இவை அனைத்தையும் சுவாமி நம்மாழ்வார் தன்னுடைய ப்ரபந்தங்களில் நமக்கு அருளி உள்ளார்.
இறைவனது நாராயணன் என்னும் பெயரைக்கொண்ட எட்டெழுத்து மந்திரத்தைத் திருமந்திரம் எனச் சிறப்பாக கூறுவர். திருவாய்மொழியின் ஆறாம் பத்து (6.10) ஓம் என்ற பதத்தையும் மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் (7.1) நம என்ற பதத்தையும் மற்றும் 7.2, நாராயண என்ற பதத்தையும் சொல்லி, திருமந்திரத்தின் அர்த்தத்தை நமக்கு புரிய வைப்பதற்காக என்று நம் ஆச்சார்யர்கள் சொல்வார்கள்.
‘அ’, ‘உ’ மற்றும் ‘ம’ என்ற எழுத்துக்களை சேர்க்கும் போது ‘ஓம்’ என்ற வார்த்தை உருவாகும். ‘அ’ என்ற ப்ரம்மத்திற்கு, ‘ம’ என்ற ஜீவாத்மாக்கள், ‘உ’ என்பதான அடிமை அல்லது தொண்டு செய்ய வேண்டும் என்ற உறவினை ‘ஓம்’ என்ற வார்த்தை விளக்குவதாக நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள். ஜீவாத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் உள்ள ஒன்பது விதமான உறவுகளை நம் ஆச்சார்யர்கள், ‘நவவிதசம்பந்தம்’ என்று கூறுவார்கள், அதில் இதுவும் ஒன்று. இதனையே நம்மாழ்வார் ‘உலகமுண்ட பெருவாயா!’ (6.10) என்ற பதிகத்தில் ‘புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் ’ (6.10.10) என்று கூறுவதால், திருமந்திரத்தில் பிரணவத்தின் பொருள் (ஓம்) சொல்லப் பட்டதாக நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.
அடுத்த பதமான ‘நம‘ என்ற சொல்லுக்கு ‘உனக்கே நான் உரியவன்’ என்பது அர்த்தம். ஆழ்வார் ‘உண்ணிலாவிய’ (7.1)’ என்ற பதிகத்தில், “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்”(7.1.11) என்பதால் அடுத்த பதமான ‘நம’ என்றதன் பொருள் சொல்லப் பட்டதாக நம் ஆச்சார்யர்கள் பொருள் உரைப்பார்கள்.
அடுத்த பதிகமான ‘கங்குலும் பகலும்‘ (7.2) என்னும் பதிகத்தில் அடுத்த பதமான ‘நாராயணாய’ என்றதன் பொருள் விளக்கப்படுகிறது. இது எப்படி எனில், இதில் உள்ள ‘ஆய’ என்னும் வடமொழி விகுதிச் சொல்லின் பொருள், கைங்கர்யம் ஆகும். அந்த கைங்கர்யம் செய்வதற்கு தேவை, இறைவன் மீது ஆசை. அந்த ஆசை, ‘எல்லையற்ற ஆசை’ ஆவதற்கு, பகவானின் மேல் உள்ள ஆசையே, மற்ற எல்லாவிதமான ஆசைகளை விட, மிக முக்கியமானதாக வேண்டும். அத்தகைய மிகப் பெரிய ஆசையின் வெளிப்பாடே இந்த பதிகம் என்பதால், இந்த பதிகத்தை ‘நாராயணாய’ என்ற இறுதி பதத்திற்கு உரியதாக சொல்லப்பட்டது.
சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள். சரம ஸ்லோகங்கள் மூன்று முக்கியமானவை என்றும், அவை வராக, இராம மற்றும் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் என்றும் முன்பு பார்த்து உள்ளோம். வராக மற்றும் கிருஷ்ண சரம ஸ்லோகங்களை முன்பு பார்த்து விட்டதால், இராம சரம ஸ்லோகம் என்ன என்பதை கீழே பார்ப்போம்.
இராமாயணத்தில் வருவது விபீஷண சரணாகதி. ஸ்ரீராமபிரான், பகைவனுக்கும் அருளும் பண்பாளன். அந்த சரணாகதியின் உச்சத்தை கீழே உள்ள இந்த ஸ்லோகத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம்.
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம,
ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா, விபிஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்
விபீஷணனை ஏற்றுக்கொள்ள அனுமனைத் தவிர, சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ஸ்ரீராமபிரான், “என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கு, தான் அபயம் அளிப்பதாகவும், அதுவே தன்னுடைய விரதம் என்றும் திருவாய் மலர்ந்து அருளுகிறார். சுக்ரீவனிடம், ஸ்ரீ ராமபிரான், அபயம் கேட்பவர் விபீஷணனாக இருந்தாலும், இராவணனாகவே இருந்தாலும் அழைத்து வர சொல்லி அவர்களுக்கு அபயம் கொடுப்பதாக உறுதி அளிப்பது ஸ்ரீ ராம சரணாகதியை குறிக்கும் சரம ஸ்லோகம் ஆகும்.
சுவாமி நம்மாழ்வாரின் சரணாகதி பற்றி நாம் முன்பே பார்த்து உள்ளோம். அவை யாவும் திருவாய்மொழியில் உள்ள ஐந்து சரணாகதிகள் ஆகும்.
திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே த்வயத்தின் பொருளை நம்மாழ்வார் விவரிக்கிறார் என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவதை முன்பு பார்த்தோம். அதாவது திருவாய்மொழியின் ‘ஒழிவில் காலமெல்லாம்‘ என்ற 3.3 பதிகத்தின் மூலம், த்வயத்தின் முதல் வாக்கியத்தின் பொருளையும், “உலகமுண்ட பெருவாயா” என்ற 6.10 பதிகத்தின் மூலம் த்வயத்தின் இரண்டாவது வாக்கியத்தின் பொருளையும் விளக்குவதாக சொல்லப் படுகிறது.
இன்னொரு விதமாகவும் திருவாய்மொழி, த்வயத்தின் பொருளை சொல்வதை சற்று விரிவாக கீழே காண்போம்.
சுவாமி நம்மாழ்வார், முதல் மூன்று பத்துகளாலே த்வய மஹா மந்திரத்தின் இரண்டாம் வாக்கியமான “ஸ்ரீமதே நாராயணாய நம” என்பதின் அர்த்தத்தையும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துகளாலே முதல் வாக்கியமான “ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே” என்பதின் அர்த்தத்தையும் விவரிக்கிறார்.
நாம் ஒரு பொருளை கற்றுக்கொள்ளும் போது, அதனை பற்றிய ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை கற்றுக் கொண்டு அதற்கு பின் பழகினால் நமக்கு அதன் மேல் ஒரு பற்று ஏற்பட்டு அதனை கடைபிடிப்பதற்கு சுலபமாகவும் நம்மை ஊக்கிவிப்பதாகவும் இருக்கும் என்பதால், ஆழ்வார் முதலில் இரண்டாவது வாக்கியத்தின் பொருளையும், பிறகு முதல் வாக்கியத்தின் பொருளையும் நமக்கு சொல்கிறார்.
முதல் பத்தாலே, நாராயணனே இந்த ப்ரபந்தத்தின் தலைவன் என்றும் இந்த பத்தால் சொல்லிய பாடல்களின் பொருளுக்கும், இனிக்கூறப் புகும் பாடல்களின் பொருளுக்கும் அந்த பகவானே நாயகன் என்றும் ஆழ்வார் சொல்வதை கீழே குறிப்பிட்ட சில பாசுரங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆழ்வார் வேதங்களும் அதையே சொல்வதாகவும் அந்த பகவானுக்கு மட்டுமே நாம் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
இரண்டாம் பத்தால், இந்தக் கைங்கரியத்துக்கு எதிரிகளான இவ்வுலக பந்தங்களை முற்றுமாக தொலைத்து, பெருமாளின் அடியவர்கள் கூட்டத்தில் கூடி, எப்போதும் பரமபதத்திலே குறிக்கோளாய் இருந்து, அதுவும் அவனுக்காக மட்டுமே இருப்பதுதான், தான் வேண்டுவது என்று கூறி கீழே குறிப்பிட்ட சில பாசுரங்கள் மூலம் உறுதி செய்கிறார்.
மூன்றாம் பத்தால், ஆழ்வாருக்கு கைங்கரியத்தில் உண்டான விருப்பதைக் கண்ட பெருமாள், கைங்கரியத்துக்கு உகந்த திருவேங்கட மலையை காட்டிக் கொடுக்க, ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று ஆழ்வார் கூறி த்வயத்தின் பொருளை சொல்லி முடிப்பதை கீழே குறிப்பிட்ட சில பாசுரங்களில் நமக்கு தெரிவிக்கிறார்.
ஆக, முதல் மூன்று பத்துகளால் த்வயத்தின் இரண்டாம் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது. “ஸ்ரீமதே நாராயணாய நம” என்னும் அந்த வாக்கியத்தின் முதல் இரண்டு பதங்களின் பொருளை முதல் பத்தாலும், ‘நம’ என்னும் மூன்றாம் பதத்தின் பொருளை, இறைவனுக்குச் செய்யும் கைங்கரியம், அவனுடைய ‘அடியார்கட்கு அடிமை’ செய்தல் என்பவைகளை மூன்றாம் பத்தாலும் அருளிச்செய்தார்.
பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து நாம் பாக்கியம் பெற, பெருமாளின் திருவடிகளே உதவி செய்யும் என்றும், இவ்வுலக பற்றுகளே (ஐஸ்வர்யம், கைவல்யம்) விரோதிகள் என்றும் உபதேசிப்பதே நான்காம் பத்தில் ஆழ்வார் சொல்வது. நம் ஸம்பிரதாயத்தின் படி பரமாத்மாவிடம், ஜீவாத்மாக்கள் வேண்டுவதை மூன்றாகப் பிரிக்கலாம். ஒன்று இவ்வுலக செல்வங்கள், இவை ஐஸ்வர்யங்கள் எனப்படும். இரண்டாவது பகவானிடம் அவனையே வேண்டி மோக்ஷம் பெறுவது. இவர்கள் பகவல்லாபார்த்திகள் எனப்படுவார்கள். இந்த இரண்டு பலன்களின் மேல் ஆசை வைக்காமல், தன்னுடைய ஆத்மாவையே கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்பும் கைவல்யார்த்திகள், மூன்றாவது வகை. இந்த மூன்றாவது வகைக்கு சிறந்த உதாரணம் எதுவும் இல்லை, இது விரும்பத்தக்க பலனாக யாரும் சொல்லவில்லை. எல்லோரும், ஐஸ்வர்யத்தையும், கைவல்யத்தையும் விட்டுவிட்டு பகவல்லாபார்த்திகள் ஆகவேண்டும் என்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் குறிக்கோள் ஆகும்.
கீழே சில உதாரணங்கள்.
ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை விட்டு விலகுவதற்கும் பெருமாள் திருவடிகளே உபாயம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆறாம் பத்தால், அவன் தந்த உபாயத்தைக் கொண்டு, பெரிய பிராட்டியாரை முன்னிட்டு அவன் திருவடிகளுக்கு கீழ் அமர்ந்து புகுந்தார். நாம் நம் ஆச்சார்யர்களை முன்னிட்டு சரணாகதி அனுஷ்டிக்க வேண்டும்.
ஆக, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களால் த்வயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
‘ஸ்ரீமந் ‘, ‘நாராயணசரணௌ’ என்னும் முதல் இரண்டு பதங்களின் பொருளை நாலாம் பத்தாலும், ‘சரணம்ப்ரபத்யே’ என்னும் மூன்றாம் பதத்தின் பொருளை ஐந்தாம் மற்றும் ஆறாம் பத்துக்களால் அருளிச் செய்தார். ஆசாரியனை, பெரிய பிராட்டியாரை முன்னிட்டு பெருமாளிடம் சரணாகதி அருளிச் செய்ததை ஆறாம் பத்தால் சொல்கிறார்.
முன்பு சொன்னது போல், திருவாய்மொழி ஒரு மிகப் பெரிய கடல். மேலும் திருவாய்மொழியைப் பற்றியே இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
நன்றி : ஈட்டின் தமிழாக்கம், சென்னைப் பல்கலைக் கழகத்து ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் வித்துவான் பு.ரா.புருஷோத்தம நாயுடு உருவாக்கியது.
We are learning or discussing about Nammazhwaar’s Thiruvaaimozhi. As we have seen earlier, among the many explanations available for Thiruvaaimozhi, Eedu Mupathaaraayirapadi, (Unparalleled Thirty Six thousands words) has three introductions to the prabhandham, namely, Thiruvaaimozhi. We did see some of them in our earlier weblogs, 1, 2 and 3. Let us try to discuss some more points from the introductory notes in this weblog.
In Sri Vaishnavam, the total surrender (Saranagathi) is explained by three important rules, collectively known as as Rahasya Thrayam. (Three Secrets). They are Thirumanthiram, Dhwayam and Charama Slokam and they explain the concepts of Srivaishnavam in a nutshell. Swami Nammazhvaar had compiled hymns about all these three concepts, in his prabhandhams. They are covered in Thiruvaaimozhi itself and let us try to appreciate them in the following sections.
The manthra with eight letters and three words, containing the name Narayana, is called the Ashtaakshara Manthram or Thirumanthiram. Thiruvaaimozhi covers all the three words through three consecutive pathigams, 6.10, 7.1 and 7.2. The first word OM, of Thiru Manthiram is explained through the pathigam 6.10, the second word NAMA through pathigam 7.1 and the third word, NARAYANA through pathigam 7.2, according to our Achaaryas. We have seen this in the last weblog as well.
The word OM consists of three syllables , ‘Aa”, “Vu” and “Ma”. “Aa” represents or means Paramathma. “Ma” represents us or Jeevathmaas and “Vu” represents or means the relationship between Aa and Ma, ie between Paramathma and Jeevathmas or between Perumal and us. There are nine different relationships explained in Vaishnavism, (Nava vitha sambantham), of which, the relationship explained here is the one by which we do service to Him. The same is explained by Namazhwaar as “pugal onru illaa adiyen, un adi keezh amarndhu pugundhene” (6.10.10), meaning that he surrendered and remained on to His holy feet, as he had no other go, in 6.10 pathigam, Ulagamunda Peruvaaya. Hence this pathigam 6.10 explains the meaning of Om, as per our Acharyaas.
Similarly Azhwaar explained the meaning of the second word of Thirumanthiram, “Nama”, in the next pathigam, “Ullnilaaviya 7.1, when he coined the word “Thondar, Thondar, Thondar, Thondan Thondan Sadagopan” (7.1.11), meaning that he was the servant’s servant’s servant’s servant’s servant.
In the next pathigam, “Kangulum Pagalum” (7.2), Azhwaar explained the next word “Narayanaaya“. The Sanskrit word “Aaya” here means and denotes Service . The basic need for doing a service, is to have a desire towards that element. More importantly such desire should take priority over all other desires. The whole pathigam of 7.2 was a reflection of Azhwaar’s such extreme desire towards Perumal and hence this pathigam is a representation of the final word “Narayana” of Thirumanthiram, according to our acharyaas.
The verse that explains total surrender (Saranagathi) is Charama Slokam. There are three important Charama slokams and they are Varaha, Rama and Krishna charama slokams. We have seen Sri Varaha and Sri Krishna Charama slokams elsewhere in this weblog series and now let us look at Rama Charama Slokam.
Vibhishnan, brother of Ravana asked for surrender to Sri Rama in Sriramayanam. Sri Rama’s glories can be seen from the following slokam that He was always ready to pardon even His enemies.
Sakrud eva prapannaaya thavaasmeeti cha yaachathe abhayam sarva boothepyo; dadaami yethath vratham mama, aanaaya enam harisreshta thatham asya abhayam mayaa, Vibhishno va Sukreeva yathi vaa Raavanaa swayam. — Valmiki Ramayanam 6.18.33 and 34
Except Sri Hanuman, all including King Sukreevan showed resistance and recommended to Sri Rama that He should not accept the surrender of Vibishna, the brother of Ravana, the king who abducted Rama’s wife. At that time, Sri Rama overruled their objections and said that whoever surrendered totally (prapannas) to Him, would never be abandoned for any reason and He had taken that as a vow to protect those prapannas or those who surrendered to Him. Then He asked Sukreevan to bring Vibishna or even Ravana, had he come there. The above sloka is called Sri Rama Charama Slokam.
We had already seen about Swami Namazhwaar’s saranagathi and the related hymns. They are the five saranagathi pathigams in Thiruvaaimozhi.
We have seen earlier that Swami Namazhwaar had explained the meaning of Dhwayam in Thiruvaaimozhi. He explained the meaning of the first sentence of Dhwayam, “Sriman Narayana Sarnau Saranam Prapathye“, in “Ozhivil Kaalamellam” pathigam (3.3) and the second sentence, “Sreemathe Narayanaya nama” in, “Ulagamunda Peruvaaya” pathigam (6.10).
The meaning of Dhwayam is also explained in another way in Thiruvaaimozhi, as below in more details.
Swami Namazhwaar explained the second sentence of Dhwaya Mahamanthram, “Sreemathe Narayanaya Nama” in his first three pathigams, (Muthal, irandaam and moondraam pathukkal) and explained the first sentence of Dhwaya Mahamanthram, “Sreeman Narayana Saranow Saranam Prabhathye” in his next three pathigams, namely, fourth, fifth and sixth. (Nangaam, Ainthaam and Aaraam pathukkal).
The reason why Namazhwaar explained the second sentence of Dhwayam initially and then the first sentence, is because it is important to know and understand the concepts and the associated benefits first so that we develop an interest towards it and that will motivate us.
Azhwaar established that the main addressee of his Prabhandham is Sriman Narayanan in his first pathu itself (First Ten, containing 110 hymns) and he had also made sure that He be the addressee for the remaining nine pathus (From Second Ten till 10th Ten). He also confirmed that all had to do service to Paramathma or Sriman Narayanan, as what Vedas say. Let us try to highlight some examples that are in line with the above.
In the second ten, (Irandaam pathu), Azhwaar established that we need to identify and eliminate the enemies for doing kainkaryam to Perumal, keep our focus on Paramapadham, join hands with other srivaishnava devotees in this process and keep ourselves only for Him. The following are some of the hymns to highlight the above.
In the third ten (Moonraam Pathu), Azhwaar showed his desire to do service to Perumal and Perumaal showed him, Thiruvengadam as the place for Azhwaar to do the service. Azhwaar gladly accepted the advice from Perumal and explained the meaning of Dhwayam to us by compiling the hymn “Vazhuvila Adimai Seiya Vendum Naam“. We can see the above in the following hymns of Azhwaar.
Azhwaar explained the meaning of the second sentence, namely, “Sreemathe Narayanaaya Nama” of the Dhwaya Maha Manthram, in the first three pathigams, (Muthal Moonru Pathukkal). In extending the meaning of kainkaryam or service, Azhwaar highlighted the service to the devotees in the third pathigam.
Azhwaar advised in the fourth pathigam that our attachment towards the material wealth in this world (Aiswaryam) and serving our own selves (kaivalyam) were the major impediments to attain Paramapadham and Azhwaar continued to say that His holy feet would help us to overcome the above and support us to do bhagawath kainkaryam or service to Him, which would get us the desired moksham or Srivaikuntham.
In our sampradhaayam or tradition, the requests made by Jeevaathmas to Paramathma are grouped into three categories. The first category is the one who request for all the material interests of this world. They are called Aiswaryaarthigal. The second group of people are called Bhagaval Laabharthigal, meaning, these jeevaathmas request for Moksham through Him. The third category of jeevaathmas are called Kaivalyaarthigal. They do not opt for moksham or any of the worldly material wealth. These jeevaathmas develop interest in their own selves, and never show interest in Moksham or in the material world. There is no good example for this category of jeevathmaa, Kaivalyaarthigal. No one has ever told that this category, Kaivalyaarthigal, is a better option compared to the other two categories of jeevathmaas. The primary objective of our sampradhaayam or tradition is for all jeevathmaas to leave both aiswaryam and kaivalyam and move towards Bhagaval Laabhaarthigal.
Given below are some of the examples from his hymns :
The fifth pathigam (Ainthaam pathu) explains that His Holy feet are the tools of support for us to achieve what we want to attain and They will help us to get rid off whatever we want to discontinue.
In the sixth subsection or pathu (aaram pathu), Azhwaar demonstrated that he listened to His advice and held His Holy Feet, as the guiding principle and he literally sat on His feet. Azhwaar sought help from Periya Pirattiyaar to get his Moksham, and we should seek similar help from our Acharyaas to get moksham.
So, fourth, fifth and the sixth subsections or pathus explain the meaning of the first sentence of Dhwayam.
He brought out the importance of Acharyan and Periyapirattiyar in the sixth subsection or pathu , as our surrender to Perumal is fruitful only through them.
As we said earlier, there are lot more interesting aspects of Thiruvaaimozhi, as it is a big ocean. We hope to do some more on Thiruvaaimozhi in our future weblogs.
Thanks to Mr P R Purshothama Naidu, Retired Tamil Professor, Madras University, as we have used some of the references from his work on Eetin Thamizh Aakam.
=======================================================
For English version, kindly click here, thanks
நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம்.
முன்பு பார்த்த முன்னுரைகளில், பெருமாள் ஒவ்வொரு பத்திலும் ஆழ்வாருக்குக் காட்டிய குணநலன்களையும், அதேபோல் ஒவ்வொரு பத்து அருளியபோது ஆழ்வாருக்கு இருந்த மனநிலையும் பார்த்து உள்ளோம். திருவாய்மொழி அருளியபோது ஆழ்வாருக்கு இருந்த மனநிலையை, நம் ஆச்சார்யார்கள், இராமாயணத்தில் வரும் பரதனின் மனநிலையோடு ஒப்பிட்டு பார்ப்பதைக் இங்கே காண்போம். இதற்கு நாம் ஸ்வாமி நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்கள் பற்றியும், அவைகளை அருளியபோது அவரின் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் பார்க்கவேண்டும். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்பதை நினைவில் கொள்ளவும்.
இராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கு முதல் நாள், அவனது தந்தையாகிய தசரத சக்ரவர்த்தி, கைகேயிடம் தான் முன்பு கொடுத்த வரங்களை நிறைவேற்றுவதற்காக இராமபிரானின் தம்பியாகிய பரதனுக்கு பட்டாபிஷேகம் என்றும் இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டு மயங்கி கிடக்க, பரதன் அயோத்திக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த நேரம். இராமன் அயோத்தியின் அரசனான பின் அவனுக்கு இன்னும் நிறைய கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று நெஞ்சில் ஆசைகளை சுமந்துகொண்டு தனது மாளிகைக்குள் சென்றான். அப்போது அவனது தாயாகிய கைகேயி, அவனை “ராஜாவே” என்று அழைத்த போது அவன் மிகவும் வருந்தி, மனம் பட்டபாடு எப்படி இருந்ததோ அப்படிதான் திருவிருத்தம் என்ற பிரபந்தத்தை அருளிய போது நம்மாழ்வாரின் மனநிலை இருந்திருக்கும் என்று நம் ஆச்சார்யர் கூறுகிறார்கள்.
அதே பரதன், திருச்சித்திரகூட மலையிலே ஸ்ரீ ராமர் இருக்கிறார் என்று அறிந்து, அவரை நேரிடையாக பார்க்க தானும், தன்னைப் போல் ஸ்ரீ ராமபிரான் ஊரில் இல்லாததால் அவனை நினைந்து தவிப்பவர்களையும் கூட்டிக்கொண்டு போகும் போது, பரதனின் மனம், தன்னுடைய வருத்தத்தை பார்க்க மாட்டாத ஸ்ரீ ராமன், அயோத்திக்கு திரும்பி வந்து விடுவார் என்ற ஒரு நம்பிக்கையுடனும் ஒரு கணமும், அப்படி இல்லாமல், தன்னுடைய விருப்பத்தை மறுத்துவிடுவார் என்ற சந்தேகத்துடன் மற்றொரு கணமும், அப்படியும் இப்படியும் அலைபாய்ந்து கொண்டு இருக்கும் தவிப்பைப் போல் திருவாசிரியத்தை அருளிச் செய்யும் போது சுவாமி நம்மாழ்வாரின் மன நிலை இருந்திருக்கும் என்று நம் ஆச்சார்யர் கூறுகிறார்கள்.
பரதன், நந்திக்கிராமத்தில் ‘ஸ்ரீ ராமபிரான் வருவார்’ என்ற மிகப் பெரிய ஆவலோடு, அரசையும் நடத்திக்கொண்டு, பதினான்கு ஆண்டுகள் ஆசையையும் வளர்த்துக் கொண்டு இருந்தார் போலே பெரிய திருவந்தாதி அருளிச் செய்யும் போது நம்மாழ்வாரின் மனநிலை இருந்திருக்கலாம் என்று நம் ஆச்சார்யர் கூறுகிறார்கள்.
இறுதியாக ஸ்ரீராமன் மீண்டும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது, தன்னுடைய விருப்பத்தை ஸ்ரீ ராமன் நிறைவேற்றியதை உணர்ந்த பரதனின் மனம் மிக்க சந்தோசம் அடைந்ததைப் போல், திருவாய்மொழி அருளிச்செய்த காலத்தே நம்மாழ்வாரின் மனநிலை இருந்திருக்கலாம் என்று நம் ஆச்சார்யர்கள் சொல்வார்கள்.
இப்படியாக இந்த பிரபந்தங்களை அருளிச் செய்த காலத்தில் ஆழ்வாரின் மனநிலைகளை ஸ்ரீ பரதாழ்வானுக்குத் இருந்த மனநிலைகளோடு ஒப்பிட்டு சொல்வது சுவாரஸ்யமான ஒன்று.
பரமாத்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருப்பினும், (விஷ்ணு சஹஸ்ரநாமம்), துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு நாமங்கள் இருப்பினும், (கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப மற்றும் தாமோதர), வியாபக நாமங்களாக (வியாபகம் என்றால், விரிந்து பரந்து எங்கும் இருப்பது). மூன்று (விஷ்ணு, வாசுதேவ, நாராயண) சொல்லப்பட்டாலும், ஆழ்வார் நாராயணன் என்ற நாமத்தையே திருவாய்மொழியில் அறுதி இட்டு சொல்லி உள்ளார்.
“வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.” என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம் இங்கே குறிப்பிடலாம். இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும் வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார். ‘வனமாலி என்ற மாலையை அணிந்து கௌமோதகி என்னும் கதை, பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதர்சன என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள் ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.
கண்ணன், இராமன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் மற்றும் வராகன் போன்ற அவதார நாமங்களை ஆழ்வார் திருவாய்மொழியின் பல இடங்களில் உபயோகித்து இருந்தாலும், ‘நாராயணன்’ என்ற நாமமே பரமாத்மாவின் முக்கியமான விஷேச குணநலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நாமம் ஆகும். அதனால்தான், நாராயண நாம அர்த்தத்தை, நாம், நம் ஆச்சார்யனிடம் கேட்டு தெரிந்து .கொள்ள வேண்டும்.
திருவாய்மொழியின், முதல், இடை, முடிவு எல்லாம் பரமாத்மாவான நாராயணனையே சொல்லும்.
முதல் திருவாய்மொழியிலே ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று தொடங்கி, நாராயணனே பரம்பொருள் என்பதற்காக ‘நாராயண‘ சப்தத்தின் பொருளை முதல் பதிகத்திலேயே அருளிச் செய்தார். ‘நாராயணன்’ என்பதின் பொருள், தனக்கு நிகரோ, மேம்பட்டவர்களோ இல்லாதவன், எல்லா நல்ல குணங்களும் கொண்டவன், எல்லா உலகங்களுக்கும் தன்னிகரில்லாத தலைவன் என்பதாகும். ‘வண்புகழ் நாரணன்’ (1.2.10) என்று இரண்டாம் பதிகத்தில் தொடங்கி, பின் ‘செல்வ நாரணன்’(1.10.8), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(2.7.2), ‘திருநாரணன்’ தாள் காலம் (4.1.1) என்று ஆழ்வார் திருவாய்மொழி முதல் சில பத்துகளில் நாராயணன் பெயரைக் கூறி உள்ளார்.
திருவாய்மொழி திருமந்திரத்தின் அர்த்தத்தை சொல்கின்றன என்று நம் ஆச்சார்யர்கள் சொல்வார்கள். திருவாய்மொழியின் இடையில் வருகின்ற ஆறாம் பத்து (6.10) திருமந்திரத்தின் முதல் பதமான “ஓம்” என்பதனையும், மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் 7.1 இரண்டாம் பதமான “நம” என்பதனையும் மற்றும் 7.2 மூன்றாம் பதமான நாராயணாய என்பதனையும் குறிக்கும்.
கங்குலும் பகலும் (7.2) என்ற பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் மூலம், ஆழ்வார் தான் திருவாய்மொழியில், பத்து பத்துக்களால் என்ன சொல்லவந்தோம் என்பதை தேறிய பொருளாக தெரிவிப்பதாலும், முன்பு சொன்னதுபோல், திருவாய்மொழி நாரயணனுக்கே என்பதாலும், திருவாய்மொழி இடையிலும் நாராயணனே உள்ளதாக கூறப்படுகிறது.
‘காராயின காள நன்மேனியன் நாராயணன்’ (9.3.1), ‘திண்ணம் நாரணம்,’ (10.5.1) ‘வாழ் புகழ் நாரணம் (10.9.1) என்று திருவாய்மொழி இறுதியிலும் நாரணனையே கூறி ஆழ்வார் முடிக்கிறார்.
மேலே சொல்லியவை ஒரு சில உதாரணங்களே, இருப்பினும், ஆழ்வார் திருவாய்மொழி முழுவதும் நாராயணனைக் கொண்டே சுவாசித்து உள்ளார்.
முன்பு சொன்னது போல், திருவாய்மொழி ஒரு மிகப் பெரிய கடல். இன்னும் சிறிது காலம் அதன் சிறப்புகளிலேயே தொடரலாம் போலும்.
நன்றி : ஈட்டின் தமிழாக்கம், சென்னைப் பல்கலைக் கழகத்து ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் வித்துவான் பு.ரா.புருஷோத்தம நாயடு ஆக்கியது
We are learning or discussing about Namazhwaar’s Thiruvaaimozhi. As we saw earlier, among the many explanations available for Thiruvaaimozhi, Eedu Mupathaaraayirapadi, (Unparalleled Thirty Six thousand words) has three introductions to this prabantham, namely, Thiruvaaimozhi. We did see some of them in our earlier weblogs, 1 and 2. Let us try to discuss some more points from the introductory notes in this weblog.
We have seen in the previous introduction about the ten different characteristics or glories that were displayed by Paramathma to Azhwaar for each pathu or subsection. Similarly we have also seen the status of Azhwaar’s mind, when he compiled each subsection or pathu. Our acharayaars have also compared the state of mind of Swami Namazhwaar, when he compiled Thiruvaaimozhi with that of Sri Bharathan of Ramayanam. For that we need to take note of all the prabanthams that were compiled by Namazhwaar and what was the state of his mind when he delivered each prabantham. As we have seen earlier, Swami Namazhwaar has compiled four prabhandhams and they are Thiruvirutham, Thiruvaasiriyam, Periya Thiruvanthaadhi and Thiruvaaimozhi.
The day before the coronation of Sri Rama as the Crown Prince of Ayodhya, His brother Bharathan was coming towards Ayodhya and was thinking about doing more services to Sri Rama after He is crowned. Meanwhile, the king Dasaratha, had to fulfill two vows, which he had promised to Kaikeyi, Bharathan’s mother, earlier in their life. Kaikeyi used this opportunity and asked Dasaratha her wishes. One of which was to make Bharathan as the king of Ayodhya and the second one was to force Rama to go out of the country and live in the forest for 14 years. Dasaratha had to agree to these wishes and Kaikeyi on seeing Bharathan entering the palace, addressed him as the King. Bharathan was shocked and heart broken when he heard those words. Our acharyaars say that Swami Namazhwaar’s mind might also be in a similar state when he compiled the prabantham Thiruvirutham, to that of Bharathan when he was addressed as King by his mother.
When Sri Raman was stationing Himself in Chithrakoot, Bharathan took a trip to Chitrakoot along with those who could not tolerate the state of Ayodhya without Raman. Bharathan’s mind was thinking about couple of things. One Sri Rama would never allow anyone to suffer and if He came to know that Bharathan was suffering because of he was not with Sri Rama, He could change His mind and come back to Ayodhya. And at the same time, Bharathan was also thinking that Sri Rama would convince him that He should stay back in the forest and reject Bharathan’s request Thus Bharathan was in two extremes and was not sure at what Sri Raman would do. Our acharyaars say that Swami Namazhwaar might also be in a similar state, when he compiled Thiruvaasiryam.
Again we take Bharathan’s example. After agreeing with Sri Rama that he should return to Nandhigramam and rule Ayodhya from there, Bharathan for those fourteen years started nurturing his wishes to serve Sri Rama and hoping that day would come soon. Our acharyaars compare Bharthan’s mind at that time with that of Swami Namazhwaar, when he compiled the Periya Thiruvanthaadhi.
Finally, when Sri Rama returned to Ayodhya and crowned as the king and fulfilled the wishes of Bharatha, he was extremely happy and satisfied. Namazhwaar might be in a similar mindset, when he compiled Thiruvaaimozhi, as per our acharyaars.
Thus, Swami Namazhwaar’s state of mind is compared with that of Sri Bharatha at various stages of his life and this is a very interesting comparison.
There are thousands of names for the Paramathma (Vishnu Sahasara Naamam). Of which there are twelve names of Vishnu, which are called Dwadasa Namangal. (Kesava, Narayana, Madhava, Govinda, Vishnu, Madhusudhana, Thrivikrama, Vaamana, Sreedhara, Rishikesa, Padmanabha and Damodhara). Within those, there are three names, called Vyabaga Naamangal (Vyabagam means that He is present every where), and those names are Vishnu, Narayana and Vasudeva. Among all these, Azhwaar has chosen the name NARAYANA in his prabandham in most of the places.
“Vanamaali gathi saarngi sanki chakree cha nanthagi, Sreemaan Naarayano Vishnur Vasudevo abi rakshathu”, is a sloga by Sri Adhi Sankarar. Here Sri Adhi Sankarar uses all the vyabaga names of Vishnu. The meaning of the above sloka is that I request Paramathma
to protect me.
Namazhwaar had the used the names of the Avatars or incarnations like Rama, Krishna, Trivikrama, Narasimha and Varaha in many places of Thiruvaaimozhi, the name Narayana alone contains the meaning that reflects the important qualities or glories of Paramathma in the word itself. This is one of the reasons why we should learn the meaning of Narayana from our acharyan.
Swami Namazhwaar says the name Narayana to represent Paramathma in the beginning, middle and the ending parts of Thiruvaaimozhi and in that way communicates to the world that Thiruvaaimozhi is for and about Sriman Narayana.
In the first subsection or pathigam itself, he explains the meaning of Narayana to highlight that He is Paramathma, by saying that He has all extremely good qualities. (Uyarvara Uyarnalam Udaiyavan). The meaning of Narayana is that there is nothing or none equal or superior to Narayana; He is the leader for all. He continues in the second pathigam, by calling Him as “vannpugazh Naranan” (1.2.10), “Selva Naranan” in 1.10.8, “Naranan is the Leader for all the seven worlds” (Naranan muzhu ezh ulagukkum naathan) 2.7.2 and Thirunaranan in 4.1.1. These are some of the examples of using the name Narayanan within the first few pathus or subsections of his Thiruvaaimozhi.
Our Achaayaars say that Namazhwaar explains the meaning of Thirumanthiram in Thiruvaaimozhi. The first word of Thirumanthiram, OM is explained in the Sixth subsection or pathu (aaraampathu), 6.10, the second word “Nama” is explained in the Seventh subsection or Pathu 7.1 and the third word “Narayanaya” in 7.2. Since 7.2 explains Narayana, it can be concluded that Narayanan in the middle of Thiruvaaimozhi.
In the same way, our achaaryaars mention that the pathigam “Kangulum Pagalum” (7.2) is a summarised version of Thiruvaaimozhi itself, as each and every hymn of 7.2 summarises each pathu (subsection) in a nutshell. Since Thiruvaaimozhi itself is for Narayanan, and 7.2 summarises Thiruvaaimozhi, it can be comfortably concluded that Narayanan is present in the middle of Thiruvaaimozhi.
Even at the end of Thiruvaaimozhi, Azhwaar continues to specify the name Narayana. In 9.3.1 “Kaaraayina Kala nanmeniyan Naaranan“, in 10.5.1 “thinnam Naranam” and 10.9.1 “Vaazh Pugazh Naranam“, Azhwaar uses the name Narayanan to conclude Thiruvaaimozhi. Whatever we said earlier are all only examples, and there could be many more within Thiruvaaimozhi.
As we said earlier, there are lot more interesting aspects of Thiruvaaimozhi, as it is a big ocean. We hope to do some more around the introduction of Thiruvaaimozhi.
We would like to express our thanks to Mr Pu.Ra. Purushothama Naidu, for his work on Eetin Tamizhaakaam, Retired Professor and Consultant, Madras University, which helped me to understand some of these concepts.