Subsection 8 – Thirukannapuram / எட்டாம் பதிகம்-திருக்கண்ணபுரம்

For English version, please click here, Thanks 

இதுவரை

இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள்  திருமொழியில், முதல் ஏழு பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.

முதல் மூன்றுபதிகங்களில், திருஅரங்கனைப் பற்றியும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று மகிழ்ச்சி அடைவது, என்பதை பற்றியும், அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது என்பதனையும் பாடினார் என்று பார்த்தோம். நான்காம் பதிகத்தில் திருவேங்கடமுடையானை அடைந்ததும், அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் செய்யவும்  திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும்  ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் அந்த பதிகத்தில் ஏங்குகிறார்.

ஐந்தாவது பதிகத்தில், “நீயே எனக்கு உபாயம், நான் வேறு யாரிடமும் செல்ல மாட்டேன்” என்பதை நமக்கு புரியும் வண்ணம் பற்பல உதாரணங்களால் விளக்கும் ஆழ்வார், “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்று திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்லும்  சொற்தொடர்களால் நம் மனதினில் பதிய வைக்கிறார்.

முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில்  மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த  கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம்.    ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன் தொகுத்து வழங்கினார்.

திருக்கண்ணபுரம்

அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார். கர்நாடக இசை பிரியர்கள் இந்த பாடல்களை நீலாம்பரி இராகத்தில் பாடி, கேட்டு மகிழலாம். இந்த பதினோரு பாடல்களும்  சோழ நாட்டில் உள்ள திவ்ய  தேசமான,  திருக்கண்ணபுரம் என்னும் ஸ்தலத்தில் உள்ள  சௌரிராஜ பெருமாளை  போற்றி பாடுவது.  எட்டாம் பதிகம் பார்ப்பதற்கு முன்னால், “சரணமானால், தன் தாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (9.10.5) என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட  திருக்கண்ணபுரம் பெருமாள் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்.

இந்த திவ்யதேச பெருமாள் கிருத, திரேத, துவாபர, கலியுகம் என்று நான்கு யுகங்களிலும் அருள் பாலிக்கும் பல சதுர்யுகங்கள், (64 சதுர் யுகங்கள் என்று சொல்வதும் உண்டு) கண்ட பெருமாள்.

திருக்கண்ணபுரம், பஞ்ச (ஐந்து) கிருஷ்ண க்ஷேத்ரங்களில், ஒன்றாகும். (மற்றவை, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம், திருக்கோவிலூர்). கண்ணன் க்ஷேத்ரமாக இருந்தாலும், ஆழ்வாருக்கு சிறுவயது ராமராகவே காட்சி அளித்துள்ளார் போலும். ஆகையினால் அவருக்கே இங்கு தாலாட்டு பாடுகிறார். அதே போல் ராவணனின் தம்பியாகிய விபீஷணனுக்கு இங்கு ஸ்ரீ ராமராக நடந்து காட்டியது விசேஷமாகும்.  இன்றும் ஒவ்வொரு அமாவாசையும் பெருமாள் விபிஷ்ணனுக்கு நடை அழகு காட்டுகிறார்.

பெரியாழ்வார் பாடிய “மாணிக்கம் கட்டி, வயிரம் இடை கட்டி” என்ற பாசுரங்கங்கள் குட்டிக் கண்ணனை (ஸ்ரீ கிருஷ்ணர்) உறங்கவைக்கும் பாடல்கள்.  பெருமாள் திருமொழியின் எட்டாம் பதிகம்,  குலசேகர ஆழ்வார், குட்டி ராமருக்கு சமர்ப்பித்த தாலாட்டு அல்லது உறங்க வைக்கும் பாடல்கள். தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழில் ஆழ்வார் இந்த பாடல்களை பாடி உள்ளார்.

வைஷ்ணவர்கள் திருக்கண்ணபுரத்தை கீழை (கிழக்கு) வீடு என்றே குறிப்பிடுகிறார்கள். மேலை வீடு (மேற்கு) திருஅரங்கம், தெற்கு வீடு திருமாலிரும் சோலை, மற்றும் வடக்கு வீடு, திருவேங்கடம் ஆகும்.

நாம் இனிமேல் பார்க்க வேண்டிய ஆழ்வார்களில் ஒருவரானவரும் ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆனவருமான திருமங்கை ஆழ்வாருக்கு, திருமந்திர அர்த்தத்தை விளக்கமாக உபதேசித்த பெருமாள், இந்த ஊரின் நீலமேக பெருமாள் ஆவார். இதற்காக, திருமங்கை ஆழ்வார் ஒரு திவ்யதேச பெருமாளுக்காக அதிகபட்சமாக 100 பாசுரங்கள் பாடிய  திவ்யதேசங்களுள், திருக்கண்ணபுரமும் ஒன்று ஆகும்.

திருமங்கை ஆழ்வார் 100 பாசுரங்கள் பாடிய இன்னொரு பெருமாள், அவருக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்துவித்த அவரது ஆச்சார்யனான, திருநறையூர் பெருமாள் ஆவார்.    

ஸ்ரீவைஷ்ணவத்தில், பஞ்ச சம்ஸ்காரம் என்பது, ஐந்து புனிதமாக்கும் வழிகள் பற்றிய  முக்கிய சடங்கு.  ஸ்ரீ வைஷ்ணவத்தை பின்பற்றி, திருமால் திருவடியை அடையவிரும்புவர்கள்,  ஆண், பெண், சாதி வேறுபாடு இன்றி, ஒவ்வொருவரும் நடைமுறை படுத்த வேண்டிய ஒன்று. அவைகளை அவரவர்களின் ஆச்சார்யர்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி சொல்லிக் கொடுப்பார்கள்.   அவையாவன 

  1. சங்கு சக்கர முத்திரை பதித்தல் – பக்தர்களின் பக்தர்களின் வலது மற்றும் இடது தோள்பட்டையின் மேல் புறத்தில் பெருமாளின் சங்கு சக்கர முத்திரைகள் பதிக்கப்படுத்தல் 
  2. திருமண் காப்பிடுதல் – சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, தோள் பட்டை, வயிறு, முதுகு, ஆகிய ஆறு இடங்களில் விஷணுவின் 12 சிறப்பு நாமங்களை (பெயர்களை) சொல்லிக்கொடுத்து காப்பிடக் கற்றுக் கொடுத்தல்.
  3. தாஸ்ய நாமம் சூட்டுதல் – ஸ்ரீவைஷ்ண ஆச்சார்யார்களில் மிகவும் முக்கியமான ஆச்சார்யார்களில் ஒருவரான ஸ்ரீ ராமானுஜரின் சம்பந்தத்தை ஏற்படுத்தி, சீடர்களுக்கு, ராமானுஜதாசன் என்று பெயரிடுதல். 
  4. மந்திர தீட்சை அளித்தல் – ஸ்ரீவைஷ்ணவத்தின் மூன்று முக்கியமான மந்திரங்களான, துவயம், (இரண்டு வரி மந்திரம்), சரமஸ்லோகம், மற்றும் திருமந்திரம் (8 எழுத்து மந்திரம்) இவற்றை சொல்லிக்கொடுத்து அதன் அர்த்தங்களையும் தெரியப்படுத்துதல்.
  5. யக்ஞம்  – விஷ்ணுவை வழிபடும் திருஆராதனம் செய்யும் முறைகள், சீடர்கள் பின்பற்றவேண்டிய உணவு முறைகள் மற்றும் பிற பக்தர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி விளக்குதல் 

இப்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் போது திருமந்திரத்தை உபதேசித்த திருநறையூர் நம்பிக்கு 100 பாடல்களும், அந்த திருமந்திர அர்த்தத்தை விளக்கிய திருக்கண்ணபுரம் நீலமேக பெருமாளுக்கு 100 பாடல்களும்  பாடிய திருமங்கை ஆழ்வார் பற்றி பின்னர் பார்க்கலாம்.  குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் தவிர ஆண்டாள், பெரியாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என்று ஐந்து ஆழ்வார்கள் இந்த திருக்கண்ணபுர திருத்தலத்திற்கு 128 பாடல்கள் சமர்பித்து உள்ளார்கள்.     இன்னும் பல பெருமைகள் திருக்கண்ணபுரத்திற்கு இருந்தாலும், நாம் இந்த வலைப்பதிவின் தலைப்பிற்கு திரும்புவோம்.

இராமாயணம்

இராமாயணத்தில் மொத்தம் ஏழு காண்டங்கள் உள்ளன.  அவையாவன :

  • பாலகாண்டம்,  இராம, பரத, லக்ஷ்மண மற்றும் சத்ருக்கனன் இவர்களின் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய பகுதி.
  • அயோத்திய காண்டம், இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துப்  பகுதி.
  • ஆரண்ய காண்டம்,  இராமன் காட்டுக்குச் சென்றதும், அங்கு வாழ்ந்ததும்.
  • கிஷ்கிந்தா காண்டம், கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வாலி சுக்ரீவன் நாடான கிஷ்கிந்தையில் இராமனது வாழ்க்கை.
  • சுந்தர காண்டம்,  சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய  பகுதி.
  • யுத்த காண்டம், இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய பகுதி.
  • மற்றும் உத்தர காண்டம், இராமன் நாட்டுக்கு திரும்பியதும்,  அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய பகுதி.

எட்டாம் பதிகத்தில் வரும் பாசுரங்களை ஆழ்வார் இந்த வரிசையிலேயே அமைத்து பாடியுள்ளார்.

எட்டாம் பதிகம்

மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே”, என்றுமுதல் பாடல் முதல் வரியில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்ததை சொன்ன ஆழ்வார் இரண்டாம் வரியினில் “தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்” என்று இராவணணின்  பத்து தலைகள் சிதறியதை, ஸ்ரீ ராமர் பிறப்பினால் ஏற்பட்ட நன்மை என்று விவரித்தார்.  

இரண்டாம் பாடலில், ராட்சசியாகிய தாடகையின் மார்பினை துளைக்கும்படியாக  அம்புகள் எய்தவன் என்று சொன்ன ஆழ்வார், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே” என்று ராமனின் அழகினை தரிசித்தவர்கள் தாங்களாகவே தங்கள் இதயங்களை ராமனின் திருவடிகளில் சமர்பித்து விடுவார்கள் என்று சொல்கிறார்.

மூன்றாம் பாசுரத்தில், கௌசல்யாவின் சிறந்த மகனே என்றும், ஜனக மஹாராஜாவின் மாப்பிள்ளை என்றும் பாடியவர் “எங்கள் குலத்தின் இன்னமுதே” என்று சொல்லும் போது ஸ்ரீ ராமரும், குலசேகர ஆழ்வாரும் ராஜ வம்சம் என்பதையும் ஸ்ரீவைஷ்ணவ குலம் என்பதையும் சேர்த்து குறிப்பிடுகின்றார்.

நான்காம் பாசுரத்தில், ” தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே, தசரதன் தன் மாமதலாய்” என்றும் சொல்லும் போது ஆழ்வார் தன்னுடைய நாபிக்கமலத்தில், படைக்கும் கடவுளாகிய பிரமனை படைத்தவனே என்று முதல் வரியில் சொல்லி, இருந்தாலும் நீ தசரதனுக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்து அவருக்கு தந்தை என்ற பெருமையைக் கொடுத்தாயே என்று இரண்டாவது வரியில் சொல்லி வியக்கிறார்.   இதே பாசுரத்தில் “ஏ மருவு சிலை வலவா ” என்று சொல்லும் போது பெரியாழ்வார் சொன்ன “சார்ங்கம் என்னும் வில் ஆண்டான்” என்ற பொருளிலேயே வில்லை அடக்கி ஆளுகின்றவன் என்றார்.

அடுத்த பாசுரத்தில் “ஆரா அன்பு இளையவனோடு அரு கானம் அடைந்தவனே ”  என்று சொல்லும் போது  ஆரா அன்பு என்பது கைங்கர்யம் செய்ய கூட வருவேன் என்று பிடிவாதமாக வந்த இலக்குவனைக் குறிக்கும். இங்கு நாம் நம்மாழ்வார் கைங்கர்யம் வேண்டும் என்ற “ஓழிவில் காலமெல்லாம்” (திருவாய்மொழி 3.3.1) என்ற பாசுரத்தை நினைவில் கொள்ளலாம்.   இதில் நம்மாழ்வார், பரதன் நாட்டிற்கு சென்று ராமனுக்காக செய்த கைங்கர்யங்களையும், இலக்குவன் ராமனுடன் காட்டிற்கு சென்று செய்த கைங்கர்யங்களையும் சேர்த்து, தான் ஒருவராக இனி வரும் காலங்களில் ஒரு நொடிகூட விடாமல் கைங்கர்யம் செய்ய வேண்டுகிறார்.

ஆறாம் பாசுரத்தில் “சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே” என்று ஆழ்வார் சொல்வதும் வால்மீகி இராமாயணத்தில் நாட்டின் குடிமக்கள் எல்லோரும் சென்றதாக சொல்வதும், சிறிது வேறுபட்டு இருப்பதை, நம் ஆச்சார்யர்கள், “எல்லோரும் செய்யும் தொண்டுகளை இலக்குவன் ஒருவனே செய்ததால் அதுவே சுற்றம் எல்லாம் சென்றார்கள் என்பதுபோல் ஆயிற்று என்பார்கள்.    அதே பாசுரத்தில் “அற்றவர்கட்கு அருமருந்தே! ” என்று சொன்னது, காட்டில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத இருந்த முனிவர்களை, இராமன் அரக்கர்களிடம் இருந்தும் விலங்குகளிடம் இருந்தும் காத்து அருளியதைக் குறிக்கும்.  அயோத்தி நகர்க்கதிபதியே என்றது அயோத்திக்கு மட்டும் மன்னராக இருந்ததை குறிப்பிடுவது அல்ல, அயோத்தி என்னும் பகுதியை வைகுந்தத்திலிருந்து கொடுத்தருளிய அதிபதி என்பது பொருளாகும்.

ஏழாம் பாசுரத்தில், இராமனுக்கு தாலாட்டு பாடும்,  குலசேகரப் பெருமாள், ஆல் இலையில் குழந்தையாய், உலகங்களை எல்லாம் வயிற்றில் அடக்கியவனே, வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை அரசைக் கொடுத்தவனே என்று பாடுகிறார். “ஆலிநகர்க் கதிபதியே” என்று சொல்லும்போது, ஒரு வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அரசை கொடுத்து சுக்ரீவனை,  தனக்கு  துணையாகக் கொண்டவனே என்று கூறுகிறார்.

எட்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும், யுத்த காண்டத்தை தொடுகின்றன. ஒன்பதாம் பாசுரத்தில், “இளையவர்க்கு அருள் உடையாய்” என்ற சொற்தொடர் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இராமன் இளையவர்களுக்கு கருணையுடன் இருந்ததை, இளையவனான சுக்ரீவனுக்கு, வாலியை கொன்று, அரசாட்சி கொடுத்து அருள் புரிந்ததையும், மூத்தவனான இராவணனைக் கொன்று, இளையவனான வீபீஷணருக்கு ஆட்சி கொடுத்தையும் ஆழ்வார் குறிப்பிடுகின்றார். 

பத்தாம் பாசுரத்தில் உள்ள,  “அரங்க நகர் துயின்றவனே”  என்பது அரங்கநாதனை குறிக்கும்.  “யாவரும் வந்து அடி வணங்க“, என்பது மீண்டும் அயோத்தி வந்து முடிசூட்டிக் கொண்ட  பட்டாபிஷேக இராமரைக் குறிப்பிட்டது போல் உள்ளது.   ஸ்ரீரங்கத்தில் உள்ள காவேரி நினைவிற்கு வர,  “காவேரி நல் நதி பாயும் கண்ணபுரத்து என் கண்மணியே” என்று காவேரி நதியை, ஆழ்வார் திருக்கண்ணபுரத்திற்கே கொண்டு வந்து விட்டார்.  

இந்த பதிகத்தின் இறுதி பாடல், இந்த பதிகத்தைப் படிப்பவர்களுக்கு வரும் பயன்களை கூறுகின்றது.  இராமனின் திருத்தாயாரான கௌஸல்யா, இராமருடைய சிறு வயது அனுபவங்களை அனுபவித்து மகிழ்ந்ததை போல், குலசேகர ஆழ்வார் பக்தராய் இருந்து அனுபவித்தாற்போல், இந்த பதிகத்தைப் படிப்பவர்களும், கேட்பவர்களும், சிறந்த பக்திமான்களாக இருப்பார்கள் என்று கூறி ஆழ்வார் நிறைவு செய்கிறார்.

அடுத்தது

குட்டி ராமரை பற்றிய ஒரு சிறு குறிப்போடு இந்த வலைப்பதிவினை முடித்து பிறகு குலசேகர ஆழ்வாரின் ஒன்பதாம் பதிகத்தைப் பார்ப்போம்.

தசரதருக்கு  ஸ்ரீ ராமன், பரதன், லஷ்மணன் மற்றும் சத்ருக்னன் என்ற நான்கு மகன்கள் பிறந்தனர்.   அந்த குழந்தைகளை தனித்தனி தொட்டில்களில் போட்டு தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.   அந்த குழந்தைகள் நன்றாக சப்தம் போட்டு அழுது கொண்டனவே தவிர தூங்கவோ விளையாடவோ இல்லை.   அப்போது குல குருவான வசிட்டர் வந்து பார்த்து, சிறுது நேரம் யோசித்து, பின்னர், அந்த தொட்டில்களின் வரிசையை மற்றச் சொன்னார். முதலில் ஸ்ரீ ராமன், அடுத்தது லக்ஷ்மணன், மூன்றாவதாக பரதன், அதன் பிறகு கடைசியாக சத்ருக்னன் என்று தொட்டில்களை மாற்றிய பின் பாதி அழுகை சப்தம் குறைந்தது; ஆனால் குழந்தைகள் அழுவதை முழுவதுமாக நிறுத்தவில்லை.   மீண்டும் வசிட்டர் யோசித்தார்.  பிறகு இரண்டு தொட்டில்களை எடுக்கச் சொன்னார்.  ராமனையும் லக்ஷ்மணனையும் ஒரு தொட்டிலிலும், பரத  சத்ருகுணர்களை  இன்னொரு தொட்டிலிலும் விடச் சொன்னார்.   அழுகை முற்றிலும் நின்றது.

அன்று முதல் ராமனுக்கு கைங்கர்யம் செய்ய லக்ஷ்மணன் என்றும், ராமனே எல்லாம் என்று இருந்த பரதனுக்கு கைங்கர்யம் செய்ய, சத்ருக்னன் என்றும் ஆயிற்று.

இராமனுக்கு இலட்சுமணன் செய்த கைங்கர்யம், இராமனுக்கு இதெல்லாம் தேவை, அவற்றை நாம் செய்வோம் என்று தானே முடிவு செய்து, இராமன் அந்த கைங்கர்யங்கள் வேண்டும் என்றாலும், வேண்டாம் என்றாலும் அவற்றை செய்து முடிப்பது ஒரு வகையான பகவத் பக்தி.

இராமனுக்கு, பரதன் செய்த கைங்கர்யம், இராமன் முடிவு செய்து பரதனிடம் செய் என்று சொன்னதை, பரதன் மிக சிரத்தையுடன் செய்வது.   இது இன்னொரு வகையான பகவத் பக்தி.  பரதன் சொன்னதை, மிக சிரத்தையுடன் செய்வது சத்ருக்னனின் கைங்கர்யம். அது பாகவத பக்திக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஒன்பதாவது பதிகம், ஆழ்வார், இராமபிரானின்,  தந்தையான தசரத மஹாசக்ரவர்த்தியாக, பாவித்து பாடிய அற்புத பாசுரங்கள்.   கௌசல்யாவின் மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களை முடித்தபிறகு, ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை கொடுக்கப் போகிறார்.   அதை நாம் அடுத்த பதிவினில் காணலாம்.

எட்டாம் பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம்.  அவர்களுக்கு எங்கள் நன்றி.

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=131

Click to access mannupugaz.pdf

============================================================

Till Now

In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections.  Azhwaar,  whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees,   sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.

in his first three subsections, Kulasekara Azhwar sings about  Thiru Arangan,  how Azhwaar yearned to have dharsan of Thiru Arangan, along with His thronging devotees and   enjoy the glimpse of Thiru Arangan. Azhwaar also cautions us on how to face and avoid those people who are not devotees of Thiru Arangan. The fourth subsection is for Thiruvenkadamudaiyaan and Azhwaar narrates his wish on what he wants to be, like a foot step in front of the deity or in any form, but to be in Thiruvengadam, as his main objective and he explains the same in a logical sequence, so that we can understand the concept easily.

In his next subsection, Azhwaar explains two of the important concepts in Vaishnavism, namely,  Ananya gathithvam and Aakinchanyam, which are closely related to Total Surrender or Saranagathi.    Azhwaar has taken these topics with various examples, in this subsection, with a special request “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”, to the chief deity of Thiruvithuvakode.

In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of  Archai    In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram.   In the sixth subsection, Azhwaar takes the roles  of the Gopikas, the women folk of Brindavan,  who lived at the same time of Sri Krishna  and loved Sri Krishna.   In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar,  (Holy Devaki),  the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age.

Thirukannapuram

In the next subsection, Azhwaar, enjoys  the  happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age.   Those who are familiar with the Indian classical music, may sing these hymns in the raag Neelambari.     All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram.   Before we go into the details of 8th Subsection, let us see a few interesting points about Thirukannapuram, who is regarded as the God who  gives  Sri Vaikuntham, the abode for all people who have surrendered to Him, by Swami Namazhwaar in his Thiruvaimozhi.  (“Saranamaagum thana thaal adainthaarkellaam Maranamaanal vaikuntham kodukkum perumaal“) (9.10.5).   

The Perumal in this Thirukannapuram Divya Desam, has been blessing devotees in all the four Yugams, namely, Krutha, Thretha, Dwapara and Kali. Hence He  is aptly called as The Deity who has seen many Chathur Yugams. (people say  64 Chathur Yugams).

Thirukannapuram is also one of the five Krishna Holy Places or Pancha Krishana Kshetrams.  The others are Thirukanna Mangai, Thirukannan Kudi, Thiru Kabithsthalam and Thiru Kovilur.   Even though Thirukannapuram is one of the Krishna Kshetrams, the Chief Deity might have given His Dharsan to Kula Sekara Azhwaar as Rama and that could be the reason why Azhwaar sings the lullaby to Rama here. The deity here in Thirukannapuram had also performed a Walk  for Sri Vibhishnan, the brother of Ravana. This nadai (walk) sevai is done in Thirukannapuram every New Moon day of the month even now.

Periyazhwaar has sung lullaby to the baby Krishna in his hymn “Maanikam Katti, Vaiyiram Idai Katti“.   This  8th subsection of Perumal Thirumozhi,  is the lullaby for the young Sri Rama.   In Tamil there are 96 different types of poetry and Azhwaar has used Pillai Tamil as the base for the hymns in this subsection.

Sri Vaishnavaas call Thirukannapuram as the Eastern House of Perumaal.   Similarly the western house is Sri Rangam, the Northern House is Thiruvenkadam and the Southern house is Thiru Maalirumcholai (Madurai).

Thirumangai  Azhwaar, whom we have to see in our  future weblogs, and who is the last in the list of Azhwaars,   got the  meaning of Thiru Manthiram, one of the key concepts of Sri Vaishnavam, from this Deity of Thirukannapuram, Sri Neela Megha Perumaal. Hence, as a mark of respect,  Thirumangai Azhwaar compiled 100 hymns on this Perumaal, which is the maximum number of hymns  Thirumangai Azhwaar has compiled for any divya desam deity.

The only other deity to whom 100 hymns were compiled by  Thirumangai  Azhwaar is for the  perumaal in Thirunaraiyur, who did the Pancha Samskaram, a purification process for all Sri Vaishnavaas, to Thirumangai Azhwaar

Pancha Samskara (meaning Five Purifications) is a ritual practiced by all sri vaishnavaas, during  Samasrayana.  Samasrayana means ‘to approach with all sincerity and truthfulness to Acharya’.  During this rite, the acharya initiates a person, irrespective of sex, caste, social status etc., as his Sishya.  It is a commitment from the disciple that he or she will live as per the wishes of the acharya. Thus, the person gets the link to the Vaishnava tradition.

Samasrayana consists of the guru initiating or coaching the disciple through a five step process:

(1) For body purification, embossing the impression of Vishnu’s Sudharsana discus (chakra) on the right shoulder of the disciple and of Vishnu’s  paanchasanyam or the conch (sanghu) on the left shoulder of the disciple.

(2) Teaching the disciple,  the twelve places in the body where Vishnu resides and making them wear the Thiruman Kappu (Tilak) with appropriate Vishnu name for each location.

(3) Adding the suffix  dasan to the name of the disciple (one is forever the slave of Sriman Narayana and Swami Ramanjua, one of the most important acharyas for srivaishnavaas).

(4) Teaching the most important manthirams for srivaishnavas, namely, (Rahasya traya mantras – 1.Ashatksharam, (8 syllable manthra), 2. Dwayam (Two lines manthra) &            3. Charama slokam) 

(5) Teaching the disciple the proper way of Vishnu worship, including Bhagvath Thiru Aaraadhanam.

Let us see more about  Thirumangai Azhwaar in our future weblogs, who has compiled 100 hymns on Thirunaraiyur Nambi for performing the panchasamskaram for him and 100 hymns on Thirukannapuram Neelamegha Perumaal, who has taught him the meaning of the Thirumanthiram.     In addition to Thirumangai Azhwaar, Aandal, Periazhwaar and Namazhwaar have compiled 128 hymns on Thirukannapuram divya desam.   We can keep on adding more and more glories on Thirukannapuram, but let us return to the topic of this weblog, namely, Perumaal Thirumozhi, 8th Subsection.

Ramayanam

Ramayanam, one of the two important epics of Hinduism, has seven major sections and they are :

  • Bala Kaandam – describing the birth, education and marriage of the four brothers, namely, Sri Raman, Bharathan, Lakshmanan and Chathrugnan
  • Ayodhya Kaandam – describing the  life of Sri Raman, after His marriage with Sita and as a Prince of Ayodhya.
  • Aaranya Kaandam – describing the life of Sri Raman, after He leaves Ayodhya and His life in the forest with Sita
  • Kishkintha Kaandam – describing the life of Sri Raman, after Sita is taken by the evil Ravana and when He starts searching for Sita through the Kingdom of Vaali and Sugreeva.
  • Sundara Kaandam – describing the most beautiful part of Ramayana, in which Sri Hanuman goes to Sri Lanka in search of Sita and meets Her there.
  • Yudha Kaandam – describing the war between Sri Raman and Ravana and Sri Raman returnes to Ayodhya and being throned as the King of Ayodhya
  • Uthara Kaandam – describing the life of Sri Raman after  He becomes the King of Ayodhya.  This Kaandam also describes the part when Sita was sent back to the forest

Kulasekara Azhwaar has compiled the 8th Subsection of Perumaal Thirumozhi in this sequence.

Eighth Sub Section

Azhwaar describes the birth of Sri Raman in the first sentence of the first hymn of this subsection by “Mannu Pughazh Kowsalai than mani vayiru vaaythavane” and in the second sentence, azhwaar tells the purpose of His birth, by “then ilangai kon mudigal sindhu vithaai“, meaning that the ten heads of Ravana were shattered.

In the second hymn, Azhwaar talks about Sri Raman, who pierced the chest of Thadagai, the woman demon, through His arrows and azhwaar also says that people would voluntarily surrender their hearts to the lotus feet of Sri Raman, once they see the beauty of Sri Raman by “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.

In the third hymn, Kulasekara Azhwaar mentions that Sri Raman was a good son of Kowsalya and a good son-in-law of Sri Janaka Maha Chakravarthy.    Azhwaar also joins Sri Raman by calling Him as “Engal Kulathin Innamuthe”, meaning, the sweetest person in our tribe.   Here azhwaar, refers to the tribe as Sri Vaishnava group as well as the group of Kings, as Kulasekara Azhwaar is also a king.

In the fourth hymn, Kulasekara Azhwaar brings out an interesting aspect, highlighting the contrasting glories of Paramathma.   On one hand, He created Brahma, who is given the responsibility to create all the human beings and other living things in this universe and on the other hand, He became a child and made Dasarathan a proud father of Him, when Azhwaar mentioned, “Thamarai mel Ayanai padaithavane, Dasarathan than maamathalaai, Mythili than manavaala“.   In the same hymn, Azhwaar also brings out a point that He can make the Bow and Arrow listen to Him and act according to His wishes, when he mentioned, “Ae maruvu silai valavaa“, which is much similar to what Periazhwaar said in his Palllanaadu “Saarngam ennum vil aandaan“.

In the next hymn, Azhwaar talks about the wishes of Lakshman, the younger brother of Sri Rama, when he mentioned “Aaraa Anbu Ilayavanodu arum kaanam adainthavane“.   Lakshman insisted and forced his way to come along with Sri Rama to the forest to do all the services to Sri Rama and Sita.  This is comparable to the request by Swami Nammazhwaar in his Thirvaimozhi (3.3.1), “Ozhivil Kaalamellam“, where he wants to do all the services in every second to Him, like what Bharathan, the other younger brother of Sri Rama did when he went back to Ayodhya to carry out the instructions of Sri Rama, as well as the services done by Lakshman in the forest, by staying with Sri Rama.

In the sixth hymn, Azhwaar mentions “Sutram elllam pin thodara thol kaanam adainthavane“, meaning that Sri Rama went to the forest along with all his relatives. But in Valmiki Ramayanam, it is mentioned that only the citizens of Ayodhya followed Sri Rama, Sita and Lakshman and not the relatives of Sri Rama.  Our acharyaars explained this contradiction, beautifully, by saying that Lakshman who went along with Sri Rama represented all the relatives, as he did all the services, what could have been done by them and hence what Azhwaar said was true.     In the same hymn, Azhwaar also mentioned about “Attravarku aru marunthey“, meaning He will be the source of strength for those who do not have any support.   This is in line with the support which Sri Rama extended to the sages in the forest, who were facing challenges from both the wild animals and also from the demons. When Azhwaar mentioned “Ayothi nagarukku athipathiye” it just did not mean that He was the king of Ayodhya, but it was He who sent a part of Srivaikuntham to create this Aydodhya.

The seventh hymn, the lullaby to Sri Rama talks about Paramathma, who takes the form of a Child on a leaf of a banyan tree, after a Maha Pralayam during which He takes the entire universe into his stomach.    Azhwaar also  mentiones  about Sri Rama killing Vaali, the king of Kishkinta and giving   Kishkinta to Sukreevan, the brother of Vaali.  Azhwaar mentions this as “Aalee nagarkku athipathiye” meaning that He killed Valli and He gave the Kingdom to his brother Sukreevan and made him His friend.

The eighth and ninth hymns of this subsection talks about the Yutha Kaandam, the part that explains the war between Sri Rama and Ravana.  In the ninth hymn, there is a term, “illayavarkku arul udaiyaai“,  mentioned, meaning, “helpful to the younger ones”,  which is of special interest, as Sri Rama helped the younger brother Sukreevan to get the kingdom after Sri Rama killed Vallli, his elder brother.  Similarly Sri Rama also killed Ravana and gave the kingdom to Ravana’s younger brother Vibishanan.

In the tenth hymn, Azhwaar mentions a term “Yaavarum vanthu adi vananga” referring to Sri Ranganathar.   This reminds us about Chakravarthy Thirumagan, Sri Rama, after he was crowned as the King of Ayodhya, where everyone came to prostrate at His holy feet.   Azhwaar also recollects  about Srirangam and Cauvery, so he brought the river Cauvery to Thirukannapuram, when he mentioned “Kaveri nal nathi paayum kannapurathu en karumaniye“.

In the last hymn of this subsection, Azhwaar indicates the benefits to the people who sing or read or listen to this set of hymns.    Azhwaar concludes by saying that the people who read or sing or listen to this set of hymns would be happy and would continue to be a very staunch devotees of Vishnu, like the happiness that Kausalya had, with the child Rama and the like the happiness that Azhwaar had, when he enjoyed listening to the details of Ramayana.

What is next

Let us conclude this weblog with a short incident about Sri Rama, when He was a child and then we go to the next weblog on Kula Sekara Azhwaar’s ninth Subsection. The king Dasarathan had four children, Sri Rama, Bharathan, Lakshmanan and Chathrugnan, born to him at the same time.   The maids were trying to make the babies sleep by keeping them in four different cradles.   The babies kept crying and they did not sleep.   No one knew the reason.   The Guru Vasishtar came to look at the children.   After a brief thought, he asked the maids to change the order of the cradles, first is for Sri Rama, second is for Lakshmanan, the third one is for Bharathan and the fourth is for Chathrugnan.   Now it was found that the noise level of the babies came down, but they did not stop crying or sleep.  Again, the guru Vasishtar thought for a while and asked the maids to remove two cradles and asked them to place Sri Rama and Lakshman in one cradle and Bharathan and Chathrugnan in the other cradle.  The babies stopped crying totally and they started playing.

From that day onwards, Lakshmanan dedicated himself to serve Sri Rama.  Chathrugnan dedicated himself to serve Bharathan, to whom Sri Rama was everything.

The dedication of Lakshmanan was such that he served Sri Rama as per his own perception of whatever were needed for Him, whether the services were actually wanted by Sri Rama or not. It is one type of total dedication to Paramathma.

But Bharathan had also served Sri Rama in an utmost sincere manner, by carrying out all the services that were asked by Sri Rama and were delivered as per the wishes of Sri Rama.  This is another type of dedication towards Paramathma. The services that were done by Chathrugnan for Bharathan were good examples of dedication towards devotees .

The total lyrics of the eighth subsection hymns are given under the following websites and we express our thanks to them.

Click to access mannupugaz.pdf

In the eighth subsection Azhwaar elaborates the happiness of Kowsalya, the mother of Sri Rama, but in the ninth subsection, Azhwaar would bring out the sadness of Dasarathan, the father of Sri Rama,  after he was separated from  Sri Rama, who went to the forest, which we would cover in our next weblog.  Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, in the ninth subsection.

————————————————————-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading