For English Version, kindly click here, thanks
திருவாய்மொழி பற்றி ஒரு சிறிய முன்னுரையை நாம் முன்பு பார்த்தோம். அதனைத்தொடர்ந்து, பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டிய குணநலன்களையும், ஆழ்வாருக்கு தன்னுடைய நிலையில் ஏற்பட்ட மாற்றகளையும், திருவாய்மொழியில் அமைந்துள்ள பத்து பத்துக்களை கொண்டு விளக்க முயற்சித்தோம்.
பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய குணநலன்கள்,
அதேபோல், ஆழ்வாரின் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களாவன,
மேலும், அர்த்தபஞ்சகம் என்பதில் உள்ள ஐந்து தலைப்புகள்,
என்றும், திருவாய்மொழி, அர்த்த பஞ்சகத்தில் உள்ள இந்த ஐந்து தலைப்புகளையும் சொல்கின்றன என்றும் பார்த்தோம். எல்லா புராணங்களும், இதிகாசங்களும் மற்றும் ஸ்லோகங்களும் இந்த ஐந்தினில், ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டவைகளையோ தான் சொல்லுகின்றன என்பதால், இந்த ஐந்திணையும் சொல்லும் திருவாய்மொழி மிக முக்கியமான ஒன்று என்பது விளங்கும்.
அதேபோல், திருவாய்மொழி, மந்திரங்களில் முக்கியமான “த்வய மஹா மந்திரத்தையும்” எடுத்து சொல்கிறது என்பதனையும் பார்த்தோம்.
அடுத்தாக, சில திவ்யதேசங்களைப்பற்றியும், அந்தந்த திவ்யதேசப் பெருமாள்களைப் பற்றியும், ஆழ்வார் பாடிய பாசுரங்களைக் கொண்டு பார்ப்போம்.
சுவாமி நம்மாழ்வார் மொத்தம் 37 திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு.
ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும். அவர், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி எனும் நான்கு பிரபந்தங்களை வழங்கினார் என்று முன்பு பார்த்துள்ளோம். அதில் திருவேங்கடத்தையே, திருவிருத்தம் என்ற முதல் பிரபந்தத்தில், முதல் பதிகத்தில், எட்டாவது பாசுரத்தில் “மாண் குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடம்” என்று ஆழ்வார் பாடியுள்ளார். திருவிருத்தத்தில் ஆழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாடல்களின் சிறு விளக்கத்தை இங்கே காணலாம்.
“பொய் நின்ற ஞானமும்” என்று தொடங்கும் திருவிருத்த முதல் பாசுரத்தில் “இமையோர் தலைவா” என்று ஆழ்வார் குறிப்பிட்டது காஞ்சி தேவப்பெருமாளையே என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள். இருந்தாலும் பாசுரத்தில் திவ்யதேச நாமம் வருவது திருமலையை பற்றிய எட்டாவது பாசுரத்திலேயே ஆகும்.
மிக அதிகமான பதிகங்களில், (ஐந்து, ஏழாம் பத்துக்கள் தவிர மற்ற எல்லா பத்துக்களிலும்), ஆழ்வார் ஒருதடவையாவது திருவேங்கடமுடையானை நேரிடையாகக் குறிப்பிட்டு உள்ளதை கீழே கொடுத்து உள்ளோம்.
முதல் பத்தில் “கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்கு, தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” (1.8.3), என்ற பாசுரத்தில், விண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கும், மண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கும் திருவேங்கடமுடையான் என்றும் கண் போல் இருப்பான், என்றும் நித்யஸூரிகள் வந்து சேவை செய்யும் இடம் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
இரண்டாம் பத்தில், “எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய்!” (2.6.9) என்ற பாசுரத்தில் ‘குளிர்ந்த திருவேங்கடத்தில் நின்று உள்ளவனே, என்னோடு ஒன்றாக கலந்தவனே இனி வேறு எங்கு போகப் போகிறாய்’ என்று ஆழ்வார் வினவுகிறார்.
“தண்வேங்கடமே என்கிறாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே” (2.6.10) என்ற பாசுரத்தில் ‘குளிர்ச்சியான திருவேங்கடமலையில் விரும்பி, கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களில் இருப்பவனே, நறுமணம் வீசும் துளசி மாலை அணிந்தவனே, இப்போது நான் உன்னை கண்டு கொண்ட பின், விட்டுவிடுவேனோ’ என்று திருவேங்கடமுடையானிடம் முறையிடுகிறார்.
மூன்றாம் பத்து மிக விசேஷமானது. இந்த பத்தில் 3.3.1 முதல் 3.3.10 வரை ஒவ்வொரு பாசுரத்திலும் திருவேங்கடமுடையான் நாமம் உள்ளது. உதாரணமாக, “ஒழிவில் காலமெல்லாம்” (3.3.1) என்று தொடங்கும் பதிகம், முதல் “வைத்த நாள்வரை” (3.3.10) என்பது வரை தொடர்கிறது. உதாரணமாக, “தெழி குரல் அருவி திருவேங்கடத்து” (3.3.1), “பைத்த பாம்பணையான் திருவேங்கடம்” (3.3.10). முன்பு கூறியதைப்போல் இந்த பதிகத்தில் ஆழ்வார், துவய மந்திரத்தின் இறுதிப் பகுதியாகிய “ஸ்ரீமதே நாராயணாய நமஹ ” என்பதின் அர்த்தத்தை, நாம் தொடர்ந்து பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இந்த பத்து பாசுரங்களின் மூலம் விளக்குகிறார்.
இவைகளைத்தவிர, “வார்ப்புனல் அந்தண் அருவி வட திருவேங்கடத் தெந்தை” (3.5.8) என்று ஐந்தாவது பதிகத்திலும் “தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து” (3.9.1) என்று ஒன்பதாவது பதிகத்திலும் ‘திருவேங்கடம்’ இடம் பெறுகின்றது.
நான்காம் பத்தில், ஐந்தாம் பதிகத்தைப் படிப்பதனால் கிடைக்கும் பலன் சொல்லும் இறுதி பாடலில் “மாரி மாறாத தண் அம்மலை, வேங்கடத் தண்ணலை” (4.5.11) என்று ஆழ்வார் திருவேங்கடமுடையானை துணைக்கு அழைத்து, இறுதியில் இந்த பதிகத்தை படிப்பவர்களுக்கு, மஹாலக்ஷ்மி தாயார் அருள்பாலித்து அவர்களுடைய பாவங்களை தீர்ப்பார் என்று கூறி இந்த பதிகத்தை முடிக்கிறார். இந்த பதிகத்தில் உள்ள வேறு எந்த பாசுரத்திலும் திருவேங்கடமுடையானைப் பற்றி விஷயம் எதுவும் இல்லை, இருந்தாலும் இந்த இறுதி பாசுரத்தில் ஆழ்வார் திருவேங்கடமுடையானை கூறுவதற்கு காரணம், பெருமாளின் உயர்ந்த குணங்களில் ஒன்றான, சீலகுணத்தை நமக்கு விளக்குவதற்கே என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.
ஆறாம் பத்தில், ஆறாவது பதிகத்தில், இந்த பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பலன் பற்றி சொல்லும் இறுதி பாசுரத்தில், “கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை” (6.6.11) என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். முன்பு சொன்ன நான்காம் பத்தினைப் போலவே, இந்த பதிகத்திலும் மற்ற எந்த பாசுரத்திலும் திருவேங்கடவனை நேரிடையாக குறிப்பிடவில்லை. கீழே மூன்றாம் பத்தில் ஒன்பதாவது பதிகத்தில் முதல் பாசுரத்தில் (3.9.1), தான் பாடும் பாடல் வேறு யாருக்கும் கிடையாது, திருவேங்கடத்தானுக்காகவே என்று பாடியவர் ஆழ்வார் ஆதலால், இங்கு (6.6ல்) வேங்கடவனை சொல்வதில் குற்றம் ஒன்றும் இல்லை என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.
“சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ, என் நாவில் இன்கவி யான் ஓருவர்க்கும் கொடுக்கிலேன், தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து, என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே” (3.9.1)
ஆறாவது பத்தில், திருவேங்கடம் என்பது நேரிடையான வார்த்தையாக இல்லாவிட்டாலும், “மலைமேல் நிற்பாய்” (6.9.5), என்று சொன்னது, நாம் பின்னால் பார்க்கப்போகும் திருமங்கை ஆழ்வார் என்பவர் தனது திருநெடுந்தாண்டகம் என்ற திவ்யப்ரபந்தத்தில், “பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்” என்று திருமூழிக்களம் என்ற திவ்யதேசத்தை அர்ச்சாவதாரத்திற்கு உதாரணமாக சொல்வது போல், இங்கு நம்மாழ்வார் திருவேங்கட மலையை அர்ச்சாவதாரத்திற்கு உதாரணமாக எடுத்துக்கொண்டு உள்ளார்.
இந்த பாசுரத்தின் சிறப்பு, ஆழ்வார் பரமாத்மாவின் ஐந்து நிலைகளையும், “விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய். கடல் சேர்ப்பாய்!, மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்து உறைவாய்” என்று ஒரே பாடலில் சொல்வது ஆகும். மண் மீது உழல்வாய் என்றது, இந்த மண்ணில் வந்து பிறந்து உலாவிய ஸ்ரீ ராம, கிருஷ்ண விபவ அவதாரங்களைச் சொல்வது.
மூன்றாம் பத்தின் மூன்றாவது பதிகத்தில், துவய மஹாமந்திரத்தின் இறுதிப் பகுதியை நமக்கு சொன்ன ஆழ்வார், அதன் முதல் பகுதியான, ‘ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே‘ என்பதை இங்கு “உலகம் உண்ட பெரு வாயா” (6.10) பதிகத்தில் விளக்குகிறார்.
ஆறாம் பத்தில் “உலகமுண்ட பெருவாயா” என்ற பத்தாவது பதிகத்தில் (6.10), ஸ்ரீ மஹாலக்ஷ்மியை முன்னிட்டு, திருவேங்கடமுடையானிடம், ஆழ்வார், சரணாகதி அனுஷ்டிக்கிறார். சரணாகதி என்பது எப்போதும் அவன் திருவடிகளிலேயே என்பதால், இந்த பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாசுரத்திலும், திருவேங்கடத்தையும், அவனது திருவடிகளையும் நேரிடையாகவே ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார். திருமலையில், திருவேங்கடமுடையானும் தனது வலது திருக்கரத்தால், நாம் எல்லோரும் அவனிடம் சரண் அடைய, தன் பாதங்களையே நமக்கு காண்பிக்கின்றார்.
தலைவியின் உடல் ஏன் மெலிந்து இருக்கிறது என்று தோழிகள் கேட்க, திருவேங்கடமுடையானை காணச்செல்ல வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலே, இப்படி ஆகிவிட்டது என்பதை, எட்டாம் பத்தில் (8.2.1), ஆழ்வார், “எம் கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே” (8.2.1) என்று கூறுகிறார்.
ஒன்பதாம் பத்தில், மூன்றாவது பதிகத்தில் மீண்டும் திருவேங்கடம் வருவது ஒரு சுவாரஸ்யமான பகுதி. பெருமாள் ஆழ்வாரிடம், பரமபதம் வந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் என்றால், இந்த உடலை விட்டுவிட்டு மேலுலகம் செல்ல வேண்டும். அதற்கு இந்த உடலுடன், திருவேங்கடம் சென்று கைங்கர்யம் செய்யலாமே என்று வினவ, ஆழ்வார் அதற்கு திருவேங்கடம், தேவர்கள் தொழும் இடம் அல்லவோ என்று திருவேங்கடத்தின் பெருமையை குறிப்பிடுகிறார். “நின்றவேங்கடம் நீணிலத்துள்ளது, சென்று தேவர்கள் கைதொழுவார்களே” (9.3.8).
“மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன், பேயார் முலையுண்ட வாயான் மாதவனே” (10.5.6) என்று பத்தாம் பத்தில் ஆழ்வார் திருவேங்கடமுடையானை குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் பாசுரத்தில், “நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம், வீடே பெறலாமே“(10.5.5), அவனை தேடி, மலர் சூடி, அவன் நாமம் நாள்தோறும் பாடினால், வீடு பெறலாம் என்று சொல்லிவிட்டு, தேடும் இடத்தை இந்த பாசுரத்தில் (10.5.6)ல் சொல்கிறார். சாஸ்திரங்கள், அவன் கண்ணுக்குப் புலப்படாதவன் என்றும், பற்பல உருவங்கள் உடையவன் என்றும் சொல்கின்றன. இருந்தாலும், ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சி போன்ற திவ்யதேசங்களிலும் மேல்கோட்டை போன்ற அபிமான ஸ்தலங்களிலும் அர்ச்சாவதார பெருமாள் பேசியதாக சரித்திரம் உண்டு. அவனுடைய திருவடிகளை பற்றுவதற்காகவே திருமலையில் நித்யவாஸம் செய்பவனான திருவேங்கடமுடையானின் திருமேனியை நாம் இப்போது சேவித்து மகிழலாமே என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார் திருவாய்மொழியில் 10.7.8ல் இறுதியாக, திருவேங்கடமுடையானை அழைப்பது ஒரு சிறந்த அனுபவம். திருமாலிருஞ்சோலை பெருமாள், ஆழ்வாரை, அவருடைய திருமேனியுடன், ஸ்ரீவைகுந்தம் அழைத்துச் செல்ல விரும்புவதாக அமையும் பதிகம்.
“திருமாலிருஞ்சோலைமலையே, திருப்பாற் கடலே, என்தலையே, திருமால் வைகுந்தமே, தண் திருவேங்கடமே, எனதுடலே, அருமா மாயத்து எனது உயிரே, மனமே வாக்கே கருமமே, ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே” (10.7.8).
ஆழ்வார், தன்னுடைய தலையையும், திருமாலிருஞ்சோலையையும், திருபாற்கடலையும் சமமாக பாவிக்கிறார். அதேபோல் தன்னுடைய உடலையும், திருவேங்கடத்தையும், வைகுந்ததையும், ஒன்றாக பாவிக்கிறார். திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுந்தமும், வானுலகத்தில் உள்ள திவ்யதேசங்கள். அவற்றை இந்த உலகத்தில் உள்ள திவ்யதேசங்களுடன் சேர்த்து சொல்வது ஒரு பக்கம் இருந்தாலும், அவைகள் எல்லாவற்றையும் சேர்த்து தன்னுடைய மேனியோடும், தலையோடும் சேர்த்து சொல்வது அதி அற்புதமான இன்னொரு பகுதி.
பெருமாள் உறையும் இடங்களை நம் பெரியோர், உகந்து அருளிய நிலங்கள் என்பார்கள். அப்படி பார்க்கும் போது, ஆழ்வாரின் திருமேனியும் தலையும் பெருமாள் உகந்து அருளின நிலங்களாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆழ்வார் இந்த பாசுரத்தில், திருமாலிருஞ்சோலையையும், திருப்பாற்கடலையும், தன் தலையையும், திருவைகுந்ததையும், திருவேங்கடத்தையும், உடலையும், என்று எல்லாவற்றிலும் ‘உம்’ என்ற விகுதியை சேர்த்து இருக்கலாம்; ஆனால் அவர் திருமாலிருஞ்சோலை மலையே, திருப்பாற்கடலே, என்தலையே, ஸ்ரீவைகுந்தமே, திருவேங்கடமே, உடலே, என்று ஒவ்வொன்றிலும் ஏகாரம் சேர்த்து இருப்பதன் காரணம், பரமாத்மா, தான் உகந்து அருளிய நிலங்கள் எல்லா இடத்திலும், ஒரே சமயத்தில் தன்னுடைய பெருமைகள் சிறிதும் குறையாமல் இருக்க கூடியவன் என்பதையும், ஒரு இடத்தில உள்ளவர்களுக்கு அங்கேயே முழுமையாக இருப்பது போலும், மற்று எங்கும் இல்லாதது போலும் தோன்றுவதையும் நமக்கு புரிய வைக்கவே.
பரமாத்மா, வானுலகத்தில் உள்ள தேவர்களும், நித்யஸூரி முதலானவர்களும் வந்து தொழும் வண்ணமும், இந்த உலகத்தில் உள்ளவர்கள் வந்து தரிசனம் செய்யும் வண்ணமும் திருவேங்கடமலையில், திருவேங்கடமுடையனாக காட்சி அளிக்கிறான் என்று பல ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் கூறி உள்ளார்கள். அவற்றில் சில உதாரணங்களை கீழே கொடுத்து உள்ளோம். இவற்றில் நம்மாழ்வார் பாடிய சில பாசுரங்களும் அடக்கம்.
இதேபோல், ஐந்தாம் பத்தில் நம்மாழ்வார் ஒரு இடத்தில், திருவேங்கமுடையானை குறிப்பிடாமல், “மேலாத்தேவர்களும், நிலத்தேவர்களும், மேவித் தொழும்” என்று சொல்வதை மேல உள்ள அட்டவணையில் சேர்க்கவில்லை, ஏனென்றால், திருவேங்கடமுடையானைப் பற்றி இந்த பாசுரத்திலும் அதன் விளக்கங்களிலும் அடியேனால் இது வரை காண இயலவில்லை.
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும், மாலார் வந்து நினநாள் அடியேன் மனத்தே மன்னினார், சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரே இனி யாவாரே. (5.1.8)
முன்பே சொன்னது போல், ஐந்தாம் பத்திலும், ஏழாம் பத்திலும் திருவேங்கடமுடையானை பற்றி விவரம் எதுவும் நேரிடையாக இல்லை. ஏழாம் பத்தில் திருஅரங்கனைப் பற்றிய பதிகம் வருவதால், அதை பற்றி அடுத்த வலைப்பதிவில் பார்க்கலாம்.
இது தவிர, ‘வேங்கடம்’ என்று நேரிடையாக சொல்லாத சில பாசுரங்களும், நம் பெரியோர்கள், திருவேங்கடவனுக்காக என்று கூறியுள்ளார்கள். உதாரணமாக, 6.6ல் உள்ள எல்லா பாசுரங்களும், 3.3.11, 2.7.12. இவைகளை பற்றியும் அடியேனுக்கு இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது அதிகம் உள்ளது.
ஆழ்வார் பிரபந்தம் முழுவதும் ஆங்காங்கே வேங்கடமுடையானை விடாது சொல்லிவரும் போது, ஐந்தாம் பத்திலும் எங்காவது சொல்லி இருக்க கூடும். அது அடியேனுக்கு தெரியாததே இங்கு அதைப்பற்றி எழுத முடியாத காரணம். பின்பு ஒரு வேளை ஆழ்வார் அனுக்கிரகம் கிடைக்கப் பெற்று அடியேனுக்கு தெரிய வந்தால், மீண்டும் இங்கு வந்து அதனைப் பதிவு செய்வோம். நன்றி.
ஆழ்வார் கருணைக்கு மிக்க நன்றி, ஐந்தாம் பத்து பற்றி ஒரு சிறு குறிப்பு (14 2 2022)
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன ஒன்றலா வுருவாய் அருவாய நின் மாயங்கள், நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு ஒன்று நன் குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே. 5.10.6
இந்த பாசுரத்தில் திருவேங்கடம் என்ற சொல் எங்கும் வரவில்லை. ஆனால் நம் பெரியவர்கள், இந்த பாசுரமும் திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்வார்கள், ஏனென்றால், பெரியவாச்சான்பிள்ளை மற்றும் நம்பிள்ளை வியாக்யானங்களில் நின்றாவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் என்பதற்கு இராம, கிருஷ்ண அவதாரங்களில் இருந்து மேற்கோள் காட்டி, பின்னர், தொண்டைநாட்டு பாண்டியநாட்டு அர்ச்சாவதாரங்களில் மேற்கோள்காட்டி, திருவரங்கத்தில் எம்பெருமானிடத்திலும் மேற்கோள் காட்டி , இறுதியாக, ஆழ்வார் திருவுள்ளக் கருத்தாக நின்றது, திருவேங்கடம் என்றும், இருந்தது பரமபதம் என்றும், கிடந்தது திருப்பாற்கடல் என்றும் நிறைவு செய்கின்றனர். இப்படியாக ஆழ்வார் திருவுள்ளத்தில் ஐந்தாம் பத்திலும் திருவேங்கடமுடையானை குறிப்பிட்டு உள்ளார்.
=======================================================
We have seen an introduction about Thiruvaaimozhi previously. Followed up by that, we have also tried to explain the glories of Paramathma, which were demonstrated to Azhwaar and also the changes that had happened to Azhwaar subsequently, by highlighting the features of each Pathu in Thiruvaaimozhi.
The glories of Paramathma, which were demonstrated to Namazhwaar.
The changes that happened to Azhwaar subsequently :
Furthermore, we talked about, the five topics in Artha Panchagam and they are
We also explained that Thiruvaaimozhi covers all these five topics. All Puraanams, Ithihaasams (Ramayana and Mahabharatha), and other slokas, talk about either one or more from the above five topics. So when Thiruvaaimozhi talks about all these five topics, we should understand the importance and significance of Thiruvaaimozhi.
We also saw that Thiruvaaimozhi explains the most important mantra, namely, “Dhwaya Maha Mantra”. Let us now go through some divya desams on which Azhwaar has composed his pasuraams / hymns in Thiruvaaimozhi.
Swami Nammazhwaar has compiled hymns on 37 divyadesams. Of these, Azhwaar has shown more involvement with Thiruvenkadamudaiyaan.
Thiruvenkadam is the first Divyadesam, among the many divyadesams on which Azhwaar has compiled hymns on. As we have seen earlier, Nammazhwaar has compiled four prabandhams. They are Thiruvirutham, Thiruvasiriyam, Periya Thiruvandadhi and Thiruvaaimozhi. He refers to Thiruvenkadam in the first Prabandham, Thiruvirtutham, on the 8th Hymn, “maan kundram yaenthi thann maamalai Venkadam“. A short description of the pasurams on Thiruvenkadamudaiyaan from Thiruviruttham is given here in Tamil.
Even though our acharyaars comment that the first hymn of Thiruvirutham, in which, Azhwaar says “Imayor Thalaivaa“, (meaning that He is the leader of the devas living in the celestial world), is for Devaraja perumal of Kancheepuram, Thiruvenkadam is the name of the Divyadesam, first coined by Swami Nammazhwaar in the eighth hymn.
Azhwaar has referred to Thiruvenkadam in Thiruvaaimozhi, in most of the Pathus or subsections. Except for the fifth and seventh Pathus or Subsections, Azhwaar has called Thiruvenkadamudaiyaan in all other Pathus or subsections and let us discuss the same in the following paragraphs.
Thiruvenkadamudaiyaan is always dear-as-eyes for all, who live in this world as well as those who live in the celestial world, for ever, and it is where the people of celestial world vie to serve Him, as per Azhwaar’s hymn in Thiruvaaimozhi, (1.8.3). The referenced hymn starts with “Kannaavaan endrum, mannor vinnorku, thannaar Venkada vinnor verpane” (1.8.3).
In the second, there are two places, where Azhwaar refers Thiruvenkadamudaiyaan. The first one is on 2.6.9, where he says “endhaai, Thiruvenkadathul Nindraai“, the meaning of the whole hymn is that “He stands in the cool Thiruvenkadam and He has merged inside me and there is no other place He can go other than myself”. The second one is on 2.6.10, “Thann Venkadame enkinraai thann thuzhaai virai naaru kanniyane”, the meaning of the whole hymn is that “Perumal likes and lives in the cool Thiruvenkadam through past, present and future, He wears the fragrant Tulasi leaves, He is the Lord for the Universe, now that Azhhwaar had found Him, he would not leave Him”.
The third Pathu or subsection in Thiruvaaimozhi is very special. In this pathu, ten hymns, starting from “ozhivil kaalam ellaam” (3.3.1) to “vaitha naal varai” (3.3.10) have references to Thiruvenkadamudaiyaan. As we said earlier, Azhwaar explains the meaning of the final part of the Dhwaya Maha Manthiram, namely “Sreemathe Narayanaaya Namaha” in this pathigam, 3.3. Basically we should continue to do service to Paramathma and this is what is reiterated in the ten hymns of this pathigam, 3.3. Examples are “thezhi kural aruvi Thiruvenkadathu” in 3.3.1 or “Paitha Paambanaaiyaan Thiruvenkadam” (3.3.10).
In addition to this pathigam, namely, 3.3, there are two other hymns in which Thiruvenkadam is referred to by Azhwaar in Moondraam Pathu (Third Subsection). “vaarpunal anthann aruvi vada Thiruvenkadathu enthai” (3.5.8) and “thennaa thenaa endru vandu mural Thiruvenkadathu” (3.9.1) are the other two places, where Thiruvenkadam is referred to by Azhwaar in Moondram Pathu, ie Third Subsection.
In this subsection, in the last hymn, where Azhwaar explains the benefits for the people who recite / read or hear this Pathigam, refers to Thiruvenkadamudaiyaan, as “Maari Maaratha thann ammalai Venkadathu Annalai“, meaning “The rain never fails in Thiruvenkadam and hence it is very cool”. The hymn continues to say that Mahalakshmi, would grace those who read these ten hymns of this pathigam and would cure all their sins. Interestingly, there is no reference to Thiruvenkadamudaiyaan in all the other 10 hymns of this pathigam. However, Azhwaar has referred to Thiruvenkadamudaiyaan in the last hymn of this pathigam, mainly because, he wanted to highlight one of the important glories of Paramathma, Sowseelyam, which can be explained as the way in which a superior person would interact kindly and passionately and move freely with the lowliest without any inhibition or complex.
In the sixth subsection, Azhwaar mentions Thiruvenkadamudaiyaan in the last hymn of the sixth pathigam, which talks about the benefits to those, who read/recite the pathigam. Here Azhwaar says “Suttu ezhil solai nal Venkatavaananai” meaning “Thiruvenkadanathan, who is in Thiruvenkadam, a place with lots of garden with aroma or fragrance “. Similar to 4.5, all other hymns in this pathigam, 6.6 also do not have any reference to Thiruvenkadam or Thiruvenkadamudaiyaan. The reason for mentioning Thiruvenkadamudaiyaan in the last hymn of this pathigam, is that Azhwaar had mentioned in one of the previous hymns (3.9.1) that he would compile his songs only for Thiruvenkadamudiyaan and not for anyone else. So our Acharyaars says that there is nothing wrong in Azhwaar mentioning Thiruvenkadamudaiyaan in this pathigam. For your reference, 3.9.1 is given below :
“sonnaal virodham idhu, aagilum soluvan kenmino, en naavil inkavi yaan orvarukum kodukkilen, thennaa, thenaa endru vandu mural Thiruvenkadathu, ennaanai ennappan emperumaan ulanaagave”
(This is hard to say and you may not like it; but I will still say, so listen. Since Thiruvenkadamudaiyaan is my Lord, my father and my mother, I will not compile any hymns for anyone else. )
In the hymn “vinnmeethu iruppaai“, (6.9.5), the name of Thiruvenkadamudaiyaan does not appear directly. However our acharyaars say that the phrase “Malai Mel Nirpaai” (6.9.5) refers to Thiruvenkadamudaiyaan” as the representative deity of all Archavathaara perumals. Thirumangai Azhwaar, about whom, we have not yet discussed, has mentioned a similar phrase “pin aanaar vanangum sothi Thirumoozhi kalathaanaai“, for the deity at Thirumoozhikalam to represent all archavathara perumals, in one of his Prabandhams, namely, Thiru Nedunthaandagam.
The beauty of this hymn is that Azhwaar had covered all the five states of Paramathma in one hymn of four lines. “vinn meethu iruppaai, malai mel nirpaai kadal serppaai, mann meethu uzhalvaai, iavtrul engum marainthu uraivaai” meaning,
As mentioned earlier, Swami Nammazhwaar, described the meaning of the final part of Dhwaya Maha Mantra in 3.3 and now he explains the meaning of the first part of Dhwaya Maha Mantra, Sreeman Narayana charanau saranam prapatye in “Ulagam Unda Peruvaayaa” pathigam (6.10).
In this sixth subsection (Aaraam pathu), Swami Nammazhwaar surrenders himself totally to Thiruvenkadamudaiyaan, by aligning himself with Piratti (Sri Mahalakshmi), which became fruitful. Since the total surrender is always explained everywhere with His holy feet, Azhwaar mentions His holy feet and “Thiruvenkadam” explicitly in each and every pasuram of this pathigam, namely 6.10.
Also in Thirvenkadam, Perumal shows us His holy feet with His right hand to remind us about Total Surrender.
In the second pathigam of the eighth subsection, Azhwaar takes the role of a female longing for Perumal and the hymn is structured as a clarification by the lady to her friends, who ask her on why she looked so thin and sad. Azhwaar says that she became like that, as soon as she thought of visiting Thiruvenkadam. “Em kon Venkadavaanaanai vendi sendre” (8.2.1).
It is an interesting part in the ninth subsection, where Azhwaar has referred Thiruvenkadam. When Azhwaar requested Perumal to take him to Paramapadham so that he can do service to Perumal there, Perumal responded by saying that Azhwaar should give up his body, if he had to go to Paramapadham, instead Azhwaar could do the service at Thiruvenkadam, with this body. By this Perumal meant that Azhwaar could feel and enjoy the service with his body, which would not be there in Paramapatham and hence he may not be able to feel the performed services. For that Azhwaar highlights the glory of Thiruvenkadam, as the place where celestial people would go and do the prayers. “Nindra Venkadam Neenilathil ullathu; sendru devargal kai thozhuvaargale” (9.3.8).
Azhwaar refers to Thiruvenkadamudaiyaan as “Meyaan Venkadam Kaayaa malarvannan, peyaar mulaiunda vaayaan Madavane” (10.5.6) in the tenth subsection. Previously in 10.5.5, he said “Naadeer, Naal thorum vaadaa malar kondu paadeer avan naamam, veeday peralaame” meaning “We can seek for Him, the Paramathma, garland Him with flowers, recite His names everyday and get the ultimate reward, namely, Srivaikuntham, The abode. So Azhwaar informs us the benefit of praising Him after looking for Him in 10.5.5 and he says where to look for Him, in 10.5.6.
Vedas, say that Paramathma is beyond our physical vision as well as He has many shapes, sizes and structures. In spite of the above, there were occasions, where the chief deity in divyadesams, like Srirangam, Thiruvenkadam and Kanchi and the chief deity in Abimaanasthalams like Melkote had spoken to human beings.
Azhwaar says in 10.6.6, Thiruvenkadamudaiyaan stays in Thiruvenkadam, mainly for us to have the dharsan of His holy feet and obtain Moksham by surrendering ourselves to His holy feet; so, now when He is there in Thiruvenkadam, we can have the dharsan of His entire body and benefit / enjoy ourselves with His grace.
The final time, in which Azhwaar refers to Thiruvenkadamudaiyaan in Thiruvaaimozhi is in 10.7.8 and in that pathigam, the chief deity of Thirumalrincholai, wants to take Azhwaar with his physical state to Srivaikuntham, which was against what is stated in Vedas.
“Thirumalrincholai malaye, Thirupaarkadale, en thalaiye, Thirumaal Vaikunthame, thann Thiruvenkadame, enadhu udale, arumaa maayathu enadhu uyrie, maname, vaake karumame, oru maa nodiyum, piriyaan en oozhi muthalvan oruvane” (10.7.8)
Azhwaar equates his head along with Thirumalrincholai and Thirupaarkadal. Similarly he equates his body to Thiruvenkadam and Sri Vaikuntham. While Thiruparkadal and Srivaikuntham are not in this world and the divyadesams like Thirumalrincholai and Thiruvenkadam are here. It is really interesting to see how Azhwaar equates his body and head along with these divyadesams which are here in this world as well as in the celestial world.
Our acharyaars call the places where Perumal is present for us to have a dharsan, as “uganthu aruliya nilangal“, meaning that these places are gifted with His grace and joy. If we take this along with the hymn of Azhwaar, then we should understand that Azhwaar’s head and body are Perumal’s “uganthu aruliya nilangal“.
Azhwaar could have used the conjunction “and” when he referred Thirumalrincholai, Thirupaarkadal, his head, Srivaikuntham, Thiruvenkadam and his body. (in Tamil it is called ‘um’ viguthi). But in stead, Azhwaar preferred to use the words to address them directly as in first person. (in Tamil it is called “aekaaram”). Our acharyaars explain this as follows, so that we can understand Him or His Maayai.
Many azhwaars have highlighted in their hymns that Paramathma has come down to Thiruvenkadam and give dharsan as Thiruvenkadamudaiyaan to both people of this world as well as to those in the celestial world, like Nithyasooris and other devas. Given below are some of the examples, including those from Swami Namazhwaar.
Similarly in the fifth subsection (Ainthaam pathu), Swami Namazhwaar has coined the words “melaa thevargalum, nilathevargalum mevi thozhum“, without referencing Thiruvenkadamudaiyaan. This hymn is not added to the above table, as we could not find any reference about Thiruvenkadamudaiyaan either in the hymn or in the notes so for. The hymn is in Ainthaam pathu (Fifth subsection) and given below for your reference. Melaa thevargal means the people who are living in the celestial world and nila thevargal means the srivaishnavaas living in this world.
Melaa thevargalum, nilathevarum mevi thozhum, maalaar vanthu ninna naal adiyen manathey manninaar, selai kanniyarum, perum selvamum, nan makkalum, melaath thaai thanthaiyum averey ini aavaare (5.1.8)
As we said earlier, we could not locate any direct reference on Thiruvenkadamudaiyaan or Thiruvenkadam in the fifth and the seventh subsections (Ainthaam pathu and Ezhaam pathu). Since the pathigam on Thiruarangan is coming in the Seventh subsection, let us try to take that as our next weblog.
In addition, we should also learn more on hymns where there is no direct reference on Thiruvenkadamudaiyaan or Thiruvenkadam, but they are dedicated to Thiruvenkadamudaiyaan, as per our Achayaars. For example, all the hymns in 6.6, 3.3.11 and 2.7.12. Personally, I also would like to know more about these.
Since Azhwaar has referred to Thiruvenkadamudaiyaan every now and then and in almost all the subsections, (except for fifth and seventh), he might have told or referred to Thiruvenkadamudaiyaan in the fifth subsection. I could not write about that here, mainly because of my ignorance on Azhwaar and Azhwaar’s Thiruvaaimozhi. In case, on a later date, Azhwaar gives his blessings to me and shows me the details, I will happily share it here. Thanks.
We are very thankful to the extreme kindness of Azhwaar. Here is a small note on the fifth subsection. (14/2/2022)
Nindravaarum, Irunthavaarum, Kidanthavaarum, Ninaipuariyana ondralaa uruvaai, aruvaaya nin maayangal, nindru nindru ninaikindren unnai engnam ninaikirpan, paaviyerku ondru nankuraiyaai, ulagam unda onn sudare 5.10.6
The word Thiruvenkadam does not appear anywhere in this verse. But our acharyaars will take this hymn for Thiruvenkadamudaiyan, because Periyavachanpillai and Nampillai had given explanations for this hymn, from the incarnations of Rama and Krishna for sitting, standing and reclining postures of emperumaan, and then they had taken examples from the archavathaaram (temples) of Thondai Naadu (Pallava Nadu) and Pandiya Naadu. They had also given explanation of these postures for the emperumaan in Thiruvarangam. Finally they had expressed that standing posture is for Thiruvengadam, sitting posture is for Paramapatham and reclining posture is for Tiruparakkadal according to Azhwaar. In this way, this hymn is for Thiruvengadam and there is a mention about Thiruvenkadamudaiyaan by Azhwaar in fifth subsection .
For English version, kindly click here, Thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.
முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் பரமாத்மாவின், மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம். ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன் தொகுத்து வழங்கினார்.
அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌசல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார். அப்பதிகம், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே“, என்ற திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளை போற்றி பாடுவதாக அமைந்து உள்ளது. ஒன்பதாவது பதிகத்தில் ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை, தசரதச் சக்கரவர்த்தியாகவே தன்னை ஆக்கிக் கொண்டு, இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கி, தசரதன் புலம்பல்களாக அருளிச் செய்கிறார். கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரகூடம் என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப் படுகிறது. அதன் முதல் ஐந்து பாசுரங்களை தொடர்ந்து கடைசி ஆறு பாசுரங்களை இங்கே காண்போம்.
இராமனின் வீர தீர பராக்கிரமங்களை ஐந்தாம் பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், ஆறாம் பாசுரத்தில், தன்னுடைய ஒரே ஐஸ்வர்யமான சீதா பிராட்டியை பிரிந்ததையும், தம்மளவில் வாடிய நிலையில், ஜடாயு என்ற பறவையை வைகுந்தத்திற்கு அனுப்பி வைத்ததையும் சொல்கிறார். அந்த இராமன், தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் சீதா தேவியுடன், மிக இனிமையாக அமர்ந்துள்ளான் என்றும், அவரை வணங்கும் தொண்டர்களின் பாதங்களை தான் வணங்குவதாகவும் ஆழ்வார் அமைத்துள்ளார். இந்த பாடலில் ஆழ்வார் உபயோகித்துள்ள ஒரு சில சொற்தொடர்களை கீழே காண்போம்.
“தனமருவு வைதேஹி” – உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களுக்கு எல்லாம் தலைவி, வைதேஹி எனும் சீதாபிராட்டி. அந்த பிராட்டியே பெருமாளுக்கு தனம் ஆனவர் என்கிறார்.
“சடாயுவை வைகுந்தத் தேற்றி” – இராமாவதாரத்தில் பரமாத்மா, மானுடனாகவே பிறந்து, சாதாரண மனிதனாகவே வாழ்ந்து வரும் காலத்தில், ஒரு பறவைக்கு எப்படி வைகுந்தப் பிராப்தி அளிக்கமுடியும் என்ற கேள்வி எழும்படி, இந்த சொற்றொடர் அமைந்து உள்ளது. ஐந்து நிலைகளில் எந்த நிலையிலும் அவனுக்கு பரத்துவ தன்மை மாறுவது இல்லை என்பதை நமக்கு தெரிவிக்கவே ஆழ்வார் இப்படி ஒரு சொற்றொடரை உபயோகித்து இருக்கலாம்.
“ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே” – பாகவத பக்தியின் மேன்மையை எந்த ஒரு சமயத்திலும் விடாத ஆழ்வார் இங்கும் அதனையே சொல்கிறார்.
இந்த பாசுரத்தில், இலங்கை வேந்தனான இராவணன் என்ற ராக்ஷசனை கொன்று, அவனது தம்பியான விபீஷணனுக்கு அந்த அரசையும் கொடுத்து, பிராட்டியோடு பிரிந்த பிரிவு எல்லாம் மறக்கும்படி, இனிதாக தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் சீதா தேவியுடன் வாசம் செய்கின்ற இராமனின் திருவடிகளை சூடும் அரசைத் தவிர, மற்ற எந்த அரசும் வேண்டாம் என்கிறார் சேரகுல அரசரான குலசேகர ஆழ்வார்.
இந்த பாசுரத்தில், ஆழ்வார், பெருமாள் தீயவர்களை வீழ்த்தியதையும், நல்லவர்களை பாதுகாப்பதையும், “இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு, அவன் தம்பிக்கு அரசும் ஈந்து“, என்று ஒருங்கே சொல்கிறார். அப்படிப்பட்ட ஸ்ரீ ராமனின் திருவடிகளை வணங்குவதே நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய சாம்ராஜ்யம் என்கிறார்.
அயோத்தி நகருக்கு திரும்பிய ஸ்ரீ ராமன் உலகம் எல்லாம் உகக்கும்படி, அரசாட்சியை நடத்தியதையும், தன் பிள்ளைகளான குச, லவர்கள் தங்களுடைய பவளம் போன்ற சிவந்த வாய்களால் தன்னுடைய சரிதையை சொல்லக் கேட்டதையும் இந்த பாசுரத்தில் ஆழ்வார் கூறுகிறார். தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள் வசிப்பவனுமான அந்த ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின், சரித்திரத்தை, காதினால் கேட்டு, கண்ணினால் பருகுவோம் என்றும் அந்த சரித்திரம், தேவர்கள் விரும்பி பருகும் அமிர்தத்தை விட இனிமையானவை என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
“உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்” – குச லவர்கள், இராம காதையை ஆங்காங்கே சொல்ல அதனைக் கேட்டு மக்கள் நல்வழியில் சென்றது, உலகில் உள்ள மக்கள் உய்ய உதவியது. இராமபிரான் காலத்திற்குப்பின் அவரைப் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை இனிதாக ஆட்சி செய்ததும் “உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்” என்பதில் பொருந்தும்.
“செவியால் கண்ணால் பருகுவோம்” – ஸ்ரீ ராம சரித்திரத்தை அன்று ஸ்ரீ ராமபிரானும் மற்ற மக்களும் கேட்டனர். இன்றும் நாம் ஸ்ரீ ராமனின் சரித்திரத்தை கேட்கலாம். ஆனால் விபாவாவதாரத்தின் ஸ்ரீ ராமனை இன்று நாம் காண முடியாது. ஆழ்வார், ஸ்ரீராமனை தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் நித்ய வாசம் செய்கின்ற நிலையில், அன்றும் இன்றும் கண்ணால் பருகலாம் அவனின் சரித்திரத்தை காதுகளால் கேட்கலாம் என்று மகிழ்கிறார்.
“இன்னமுதத்தை மதியோம் அன்றே” – ஆரா அமுதமாகவுள்ள எம்பெருமானுடைய சேவையின் இனிமைக்கும், அதேபோல் உள்ள அவரின் சரித்திரத்தின் இனிமைக்கும், தேவாமிர்தம் இணை ஆகாது என்பதால், இன்னமுதம் மதியோம் என்கிறார். தேவாமிர்தத்தை ஒரு பொருளாக மதிக்க மாட்டோம் என்றும் கொள்ளலாம்.
மிகச் சிறந்த தவங்களை செய்த சம்புகனை, அவன் இருக்கும் இடத்தில சென்று, அவனை கொன்று, பிராமணகுமாரனின் உயிரை மீட்டுக் கொடுத்தவனும், துர்வாச முனிவரின் சாபத்தால், திறமை மிகுந்த தனது மற்றொரு தம்பியான லட்சுமணனை பிரிந்தவனும், எப்போதும் தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் வசிக்கின்றவனுமான ராமச்சந்திர மூர்த்தியை நாம் தியானம் செய்வோம் என்றால் வேறு ஒரு துயரம் அடையோம் என்று ஆழ்வார் கூறுகிறார். இந்த பாடலில் ஆழ்வார் குறிப்பிடும் சில சரித்திரங்களில் நம்மை மிகவும் கலக்கமுறச்செய்யும் ஒன்று லக்ஷ்மணனைப் பற்றியது.
பகைவர்களை வெல்லுவதில் மிகவும் சாமர்த்தியனானவன் என்பதை “திறல் விளங்கும் இலக்குமனை” என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த ஸ்ரீராமனுக்கு, இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆயில்ய நட்சத்திரத்தில், ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்வதற்காகவே பிறந்த லக்ஷ்மணன், ஸ்ரீ ராமன் கூடவே இருந்து, வனவாசம் சென்ற போதும், தானும் தனியாகவே, கூடவே சென்று, யுத்தம் முடிந்து பட்டாபிஷேக காலத்தில் இராமனின் வில்லையும் சேர்ந்து சுமந்ததாக சொல்லப்படும் லக்ஷ்மணனை பிரிவது என்பது ஸ்ரீராமனுக்கு மட்டும் இல்லாமல் நம்மையும் கலக்கமுற செய்கின்ற ஒரு நிகழ்வு.
“சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள்கடலுள் என்றும் புணையாம்” – இந்த வார்த்தைகள் பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில் உள்ளவை. பொய்கை ஆழ்வார் எக்காலத்திலும், எல்லாவிதமான சேவைகளும் பெருமாளுக்கு செய்ய வேண்டும் என்பதற்கு அனந்தாழ்வானை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்கிறார். லக்ஷ்மணனும், அனந்தாழ்வானின் ஒரு அவதாரமே. அதன்படி, எப்போதும் ஸ்ரீ ராமன் கூடவே இருந்த லக்ஷ்மணனின் முடிவை சொல்லும் இந்த பாசுரம் நம்மால் மறக்கமுடியாத ஒன்று.
ஸ்ரீராமனுக்கு சேவை செய்த பரதனுக்கும் லக்ஷ்மணனுக்கும் உள்ள ஒரு வேறுபாடு, ஸ்ரீராமன் என்ன சொன்னானோ அதனை கேட்டு அதன்படி நடந்தான் பரதன்; ஆனால் லக்ஷ்மணனோ, ஸ்ரீராமனுக்கு என்ன தேவை என்பதை தானே முடிவு செய்து அதனை ஸ்ரீராமன் தடுத்தாலும் விடாது சேவைசெய்த லக்ஷ்மணனை வணங்குவோம்.
“மற்று உறு துயரம் அடையோம்” என்பதன் மூலம் தன்னை விபவாவதார காலத்தில் சேவிக்க முடியவில்லையே என்ற துயரம் தீர, பிற்காலத்தில் எல்லோரும் தரிசிக்கும்படி தில்லைநகர் திருச் சித்ரகூடத்தில் ஸ்ரீ ராமர் நித்யவாஸம் செய்வதை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
இளையபெருமாளான லக்ஷ்மணனைப் பிரிந்ததனால் மிகவும் துக்கம் அடைந்த இராமபிரான் தானும் பரமபதத்திற்கு எழுந்தருளத் தொடங்கியபோது, அனைத்து உயிர்களும் பெருமாளைச் சரணமடைந்து அவர் கூடவே செல்ல வேண்டும் என்று வேண்ட, அவரும் அதனை ஏற்றுக்கொண்டு அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு அருளினார். அப்பொழுது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கு பறவை முதலியவைகள், மகிழ்ந்து சரயு நதியில் பெருமாள் பின் சென்று வைகுந்தம் அடைந்தன என்பதை “அன்று சராசரங்களை வைகுந்தத் தேற்றி” என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சாதாரண மனிதனைப் போல் வாழ்ந்த ஸ்ரீ இராமபிரான், பரமபதத்திற்கு எழுந்து செல்லும்போது மட்டும் நான்கு தோள்களுடன் காட்சி அளித்ததை “அணிநெடுந்தோள் நான்கும் தோன்ற” என்று ஆழ்வார் கூறுகிறார்.
பரமபதத்தில் உள்ளோர் எதிர்கொண்டு வந்து உபசரித்ததை, குலசேகர ஆழ்வார் “விண் முழுதும் எதிர் வர” என்கிறார்.
தன்னுடைய மேன்மையெல்லாம் தோன்றும்படி இனிமையாக சிம்மாசனத்தில் வீற்றுஇருந்ததை, “தன் தாமம் மேவி சென்று, இனிது வீற்று இருந்த” என்கிறார்.
“அவன் இவன் என்று ஏத்தி ” – அதிக தூரத்தில் உள்ள ஸ்ரீவைகுந்தத்தில் இருப்பவனான ஸ்ரீமன் நாராயணனே, (அவன்), தில்லை நகர் திருசித்ர கூடத்தில் ஸ்ரீ ராமபிரானாக (இவன்), நமக்காக நித்யவாஸம் செய்கின்றான், என்றும் இவனை வணங்கி அருள் பெறுங்கள் என்றும் ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார், ‘இவன்’ என்று திருச்சித்ரகூட ஸ்ரீ ராமனை சொல்வதன் மூலம் ‘இவன்’ அருகாமையில் இருப்பதை நமக்கு உணர்த்துகிறார். “அவன்”, மற்றும் “இவன்” என்ற வார்த்தைகள் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வார்த்தைகள், ஏன் எனில், அவை ஒரு வார்த்தையில் ஒரு மனிதனையும் அவன் அருகில் இருக்கிறானா, இல்லையா என்பதை நமக்கு தெரிவிக்கும்.
அழிவில்லாத புகழையுடைய தசரதசக்ரவர்த்தியின் குமாரனாய் பிறந்தது முதல் பரமபதம் சென்றது வரையில் ஸ்ரீராமாயணம் முழுவதும் சுருக்கமாகச் சொல்லிய இந்த பத்து பாசுரங்களை படிக்கிறவர்கள், ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை அடைவார்கள் என்று ஆழ்வார்சொல்லி பிரபந்தத்தை முடிக்கிறார்.
“திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை ” – ‘திறல் விளங்கு’ என்பது, பல பராக்கிரமங்களை பெற்றவர் அனுமார் என்கிறது. சிறு வயதில் பிரம்மா அளித்த வரத்தினால், சிரஞ்சீவியானவர் அனுமார் என்பதை நினைவில் கொள்க.
ஸ்ரீ ராமனின் சரித்திரம் இந்த உலகத்தில் உள்ளவரை, அந்த சரித்திரத்தைப் படிக்கிறவர்களுக்கும், கேட்கிறவர்களுக்கும் உதவி செய்ய, தாம் இந்த உலகத்தில் இருக்கவேண்டும் என்று ஸ்ரீராமனிடம் வரம்வேண்டிப் பெற்றவர் அனுமார். இராமபிரான் பரமபதத்திற்கு எழுந்தருளிய பொழுது, அவர்கூட ஸ்ரீவைகுந்தம் செல்லாமல் இந்த உலகத்திலேயே வசிக்கும், அந்த உத்தம பக்தனான அனுமானை பிரிய மனம் இல்லாமல், ஸ்ரீராமனும், அனுமாருடனே சித்ரகூடத்தில் வந்து வீற்று இருக்கின்றான் என்று சொல்லி ஆழ்வார் முடிக்கிறார்.
பெருமாள் திருமொழி என்ற இந்த பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார், ஸ்ரீ ராமனிடத்தில் உள்ள பக்தியையும், அவரை வணங்கும் பாகவதர்களிடத்தில் உள்ள பக்தியையும் விபவ மற்றும் அர்ச்சை நிலையில் இருக்கும் பெருமானைக் கொண்டு நமக்கு விளக்குகிறார். இன்னும் கூர்ந்து கவனித்தால், ஸ்ரீ ராமனுடைய வீர தீர பராக்கிரமங்களை இந்த பதிகத்தில் பல பாடல்களில் காட்டியுள்ளார்.
பகைவர்களைக் கொல்வதற்கு உள்ள ஆயுதங்களுடன் உள்ள சேனையையும், ஒளியை உடைய வாளாயுதத்தை கொண்ட வீரரான, குலசேகராழ்வார், தாடகை வதத்தை இரண்டாம் பாசுரத்திலும், பரசுராம கர்வ பங்கத்தை மூன்றாம் பாசுரத்திலும், விராத வதத்தை ஐந்தாம் பாசுரத்திலும், வாலி வதத்தை ஆறாம் பாசுரத்திலும், ராவண வதத்தை ஏழாம் பாசுரத்திலும், சம்புக வதத்தை ஒன்பதாம் பாசுரத்திலும் சொல்லி, ஸ்ரீ ராமனின் ஜெய ஜெய மஹாவீர பராக்கிரமங்களுடன், இந்த பதிகத்தை அருளி செய்தது, மிகப்பொருத்தமே.
இராமனுக்காகவே பிறந்து, பாசுரங்கள் எழுதி நமக்கு பகவத் பக்தியையும், பாகவத பக்தியையும் அருளிய குலசேகர ஆழ்வாரைத் தொடர்ந்து நாம் பார்க்கப்போவது, இந்த உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் முக்தி அளிக்காமல் ஸ்ரீரங்கத்தை விட்டு நகர மாட்டேன் என்று பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கநாதனை மட்டுமே பாடிய இரண்டு ஆழ்வார்களில் ஒருவர்.
=========================================================
In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections. Azhwaar, whose birth and life are denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees, sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.
In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of Archai In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram. In the sixth subsection, Azhwaar takes the roles of the Gopikas, the women folk of Brindavan, who lived at the same time of Sri Krishna and loved Sri Krishna. In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar, (Holy Devaki), the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with Him and enjoy the playful acts of Sri Krishna at His young age.
In the next subsection, namely, the eighth, Azhwaar, enjoys the happy moments of Kowsalya with Sri Rama, at His young age. Kowsalya is the mother of Sri Rama. All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram, whom azhwaar calls as “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“. In the ninth subsection, Azhwaar brings out the sadness of Dasarathan, father of Sri Rama, after he was separated from Sri Rama, who went to the forest. Kulasekara Azhwaar takes the role of Dasarathan, and Azhwaar brings out the feelings of Dasarathan in the hymns as they melt our hearts and these are called as Dasarathan’s lamentations. In the final subsection of Perumal Thirumozhi, Azhwaar brings out the whole Ramayanam. Azhwaar takes the divya desam, Thillai Nagar Thiru Chitra Koodam (Now called as Chidambaram Govindaraja Perumal Koil) as the part of this subsection. After the first five hymns, let us proceed to discuss about the final six hymns to complete this section.
Having talked about the heroics of Sri Rama in the fifth hymn, Azhwaar, in the sixth hymn, brings out the grief of a human being, in Sri Rama when His wife Sita and Himself got separated. His sorrow increased when He had to carry out the final rites for Jatayu, an able bird, who fought valiantly with Ravana, but holding its last breathe to communicate to Sri Rama about Ravana’s misdeed of abducting Seetha. Jatayu was a close friend of Dasaratha, the father of Sri Rama and hence Sri Rama considered Jatayu as His paternal uncle. Sri Rama also sent Jatayu abode or Srivaikuntham. Sri Rama, with such glories, now graces in Thilainagar Thiruchithrakoodam along with Sri Sita Devi. Azhwaar says that he would laud the devotees who are praising Sri Rama.
Let us look into some of the special phrases coined by Azhwaar in this hymn, which are of interests to us.
“Dhana maruvu Vaidehi” – Vaidehi or Sita Piraati, the wife of Sri Rama, is the incarnation of Sri Mahalakshmi Thaayar, who owns all the wealth in this universe. Azhwaar says, that Sita Piraati is the wealth of Perumal.
“Jatayuvai Vaikunthathirku Aetri” – Paramathma, as incarnation of Sri Rama, was born, and lived as a human being. However these lines specify that Sri Rama had sent Jatayu abode or Moksham / Srivaikuntham. This obviously raises the question, how could Rama, a human being, has the power to send a bird to Moksham or Srivaikuntham. Azhwaar wants us to realise that even though Sri Rama, might be a human being, but He is Paramathma and in all the five states, He would never scale down His supremeness.
“Aethuvaar inai adiye aethinene” – Kulasekara Azhwaar is known for his devotion towards to Perumal’s devotees and he takes every opportunity to preach the same principle to us. Here is another such opportunity for Azhwaar.
In this hymn, Azhwaar talks about Sri Rama killing Ravana, the King of Lanka and giving the kingdom to his brother, Vibhishanan. Now, Sri Rama, after all the painful days of not being with Sri Sita Devi, is happily residing in Thilainagar Thiruchithrakoodam with Sri Sita Devi and Azhwaar says that keeping himself to His holy feet is the best kingdom he could get and he does not want any other kingdom.
In this hymn, Azhwaar combines the elimination of the bad and protection of the good by saying “Ilangai Venthan Innuyir kondu, avan thambiku arasum eenthu“, meaning that He killed Ravana, the king of Lanka and gave the kingdom to his brother Vibhishnan”. Since Rama could do both, Kulasekara Azhwaar advises us to fall to the Holy Feet of Sri Rama and They would be best kingdom, we could get.
Sri Rama went back to Ayodhya and ruled the kingdom keeping everyone happy. He heard His own life history and exploits sung by His sons, Kusa and Lava, through their beautiful coral-like mouth. That Rama is now in Thilainagar Thiruchithrakoodam and we should see and hear His history, which is sweeter than the nectar, usually taken by the Devas. Let us look into some of phrases used by Azhwaar, which are very interesting, in the following paragraphs.
“ulagu uyya thiru vayiru vaaitha makkal” meaning “the children born to Sri Rama and Sita, helped the people in the world to get abode”. Kusa and Lava, the sons of Sri Rama and Sita, went around, reciting the life history of Sri Rama, which helped the people to follow the right path in their lives and attained moksham. Similarly after Sri Rama, Lava and Kusa ruled the kingdom. Like Rama, they ensured good governance, which in turn ensured people live morally and peacefully.
“seviyaal, kannaal paruguvom” , meaning “we will consume with our ears and eyes”. During Rama’s days, people, including Sri Rama, heard the life history of Sri Rama. We can also hear the story of Sri Rama today. But we can not have the dharsan of the Vibhavavathara Rama today. So Azhwaar asks us to enjoy His beauty by having the dharsan of Sri Rama in Thilainagar Thiruchithrakoodam and also enjoy hearing His exploits with our ears .
“in amuthathai mathiyom andre“, meaning “we will not consider the nectar once we get the dharsan of Sri Rama”. Getting the dharsan of Sri Rama and / or listening to His exploits, are sweeter than the nectar and would never match the heavenly drink. Azhwaar says that we would not value the heavenly drink nectar.
This hymn has got few events of Sri Rama’s valour and the mention of Lakshmanan leaving Sri Rama, which is a very emotional and sorrowful event.
Sri Rama gave the life back to the son of a brahmin, by killing Champugan, who was doing a fearful penance, at his place. Sri Rama realised that His time has come to go back to Sri Vaikuntham and He sent Lakshmanan abode, making the curse of Sage Dhurvaasar, as the reason. Azhwaar concludes this hymn, by saying that if we pray to Sri Rama at Thilainagar Thiruchithrakoodam, then we would not have any grief or distress.
Azhwaar says “thiral vilanku ilakuvanai” meaning “Lakshmanan was very tactful, when came to winning the enemies. Sri Rama was born in the Tamil star “Punarpoosam” and Lakshmanan was born after two days in the star “Aayilyam”. Lakshmanan was born only to serve Sri Rama and hence he was there with Rama all the times and everywhere. When Sri Rama went to the forest, he accompanied Sri Rama and Sita, but alone, even though he was married , he left his wife back home. After the war with Ravana, when Rama returned to Ayodhya, Lakshmanan was with them. It is told that Lakshman took not only his bow, but also that of Sri Rama, when Rama was being crowned as the King of Ayodhya. (please refer to the picture above). It is really sad, not only for Rama, but also for us, when we read about Lakshmanan leaving this world and Rama getting separated from Lakshmanan .
“sendraal kudaiyaam, irunthaal singaathanamaam, nindraal maravadiyaam, neezh kadalul endrum punaiyaam” meaning “he would be the umbrella, when He walks; he would be throne, when He sits, he would be footwear, when He stands and he would be pillow when He sleeps in the sea”. These words are from one of the hymns of the Poigai Azhwaar when he wanted to serve Paramathma like Ananthazhwaan, the multi headed snake who is always with Paramathma and doing all the services to Him. Lakshmanan is an incarnation of Ananthazhwaan and it is very apt that he was there with Sri Rama from the beginning and till the very end. It is really difficult for us to come out of this hymn, which talks about Lakshmanan leaving this word.
Bharatha and Lakshmanan, brothers of Sri Rama, both served Sri Rama. But there is a basic difference between these two. Bharatha did exactly like what Rama asked him to do. Lakshmanan also did all the services to Sri Rama all the times, but at times, he did what he thought that Rama needed. Let us put our hands together and bow to Lakshmanan at this stage.
“matru uru thuyaram adaiyom” – meaning “we will not have any other distress”. Here Azhwaar says that people may have sadness of not being there and having the dharsan of Sri Rama during the vibhavaavathaaram. Azhwaar says that sadness would go away, when you have the dharsan of Sri Rama at Thilainagar Thiruchithrakoodam, where He stays for ever.
After leaving Ilayaperumal or Lakshmanan, Sri Rama decided to move on to Paramapadham or Srivaikuntham and at that time all the living creatures in Ayodhya made a request to Him that they also would like to accompany Him. Sri Rama agreed to that and asked them to follow Him. So when Sri Rama walked through the river Sarayu, all people, animal and birds also followed Him and reached Srivaikuntham. Azhwaar narrates this as “andru saraasarangalai Vaikunthathu aetri” meaning that Rama sent all the living things like people, animals, birds and also the plants to Srivaikuntham or abode.
Throughout the incarnation of Sri Rama, He lived like a normal human being and had only two hands. However, when He was going back to Paramapadham, He displayed all His four hands on His strong shoulders. This is narrated by Azhwaar as “ani nedum thol naangum thondra“.
Kulasekara Azhwaar says “vinn muzhuthm ethir vara” meaning that all those who were in Paramapadham came forward and gave a rousing reception to Sri Rama. He was sitting on His throne displaying His Supreme self all over and this is narrated by Azhwaar as “than dhaamam mevi sendru inithu veetru iruntha“
Kulasekara Azhwaar concludes this hymn by advising us to pray to Sri Ramachandra Moorthy daily at Thilainagar Chithrakoodam, as He, ivan, who is nearer to us is the same Paramathma, avan, who is there, far away, in Paramapadham . Azhwaar uses the special words in Tamil ‘avan’ and ‘ ivan ‘ to distinguish how far or nearby, a person is from us, , in his hymn as “Avan Ivan Endru Aethi Naalum“.
Azhwaar has given the complete, but the condensed version of Sri Ramayanam in the previous ten hymns, starting from Sri Rama’s birth to Dasaratha Chakravarthy, who had everlasting glories, and until Sri Rama went back to Paramapatham or Srivaikuntham. Azhwaar concludes by saying that those who read these ten hymns would reach the Holy feet of Sriman Narayanan or Paramathma.
Azhwaar has praised Sri Hanuman as “Thiral Vilanku Maaruthi” – meaning that Hanuman had done many heoric acts and His ability was demonstrated. We should also take note that Sri Hanuman had got a boon from Brahma and that gave Him eternal life.
Sri Hanuman had requested for a boon from Sri Rama, when He was going back to Paramapatham, that Hanuman could stay back in this world and help all the people, who read or hear the historic activities of Sri Rama and Ramayanam, as long as the epic Ramayana exists or as long the world exists and Sri Rama had blessed Hanuman with his wish. So when Sri Rama went back to Paramapadham, Hanuman did not accompany Him, but stayed back in this world. Azhwaar says that Sri Rama could not be without Hanuman in Paramapatham, and hence He came to Thialainagar Thiruchithrakoodam to be with Sri Hanuman.
Kulasekara Azhwaar, in this Prabandham, Perumal Thirumozhi, explains his devotion towards Sri Rama and the devotees of Sri Rama, by taking Paramathma in both Archai and Vibhava states. Azhwaar has also praised the heroics of Sri Rama in many hymns of this pathigam.
Kulasekara Azhwaar, in this final pathigam or subsection, mentioned about Sri Rama, killing of Thadakai in the second hymn, Viraadan in the fifth, Vaali in the sixth, Raavana in the seventh, Chambuga in the ninth hymn and taming Sri Parasuraama in the third hymn. It is very appropriate that Kulasekara Azhwaar, who was a great warrior by himself, talked about these gallant and daring deeds of Sri Rama. Azhwaar mentioned that he had a shining sword and an army of people carrying sharp weapons to kill enemies, when he was a king.
Kulasekara Azhwaar, whose birth and life were for Sri Rama and who had compiled hymns on Sri Rama, preached the devotion towards Sri Rama and the devotion towards the devotees of Sri Rama. After this, we will try to discuss about one of the two Azhwaars, who sang only on Sri Ranganaathar in Srirangam, Who has taken a vow to remain in Srirangam, until all the Jeevathmaas get Mukthi or go to Srivaikuntham. In other words, He is here at Srirangam to make sure that we all get His blessings to go abode.
For English Version, please click here, thanks
சென்ற பகுதியில் திருவாய்மொழியின் சிறப்புகளைப்பார்க்க ஆரம்பித்தோம். அதன் தொடர்ச்சியை இங்கே காண்போம்.
திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், பகவான் ஆழ்வாருக்கு பற்பல குணநலன்களைக் காட்டுகிறார்.
சற்று விரிவாக கீழே,
ஒவ்வொரு பத்திலும் பத்து வகையான குணநலன்கள். ஒவ்வொரு பதிகத்திலும் பல வகையான குண நலன்கள். 1102 பாசுரங்களில் ஆயிரம் ஆயிரம் குணநலன்கள் என திருவாய்மொழி முழுவதும் அவனின் குணநலன்களே. அந்த குண நலன்களை ஆழ்வாருக்குக் காட்டியவனும் அவனே.
ஆழ்வாரிடத்தில் ஏற்பட்ட நிலையின் மாற்றங்களைக்கொண்டு, கீழ்கண்ட வகையில் பத்து பத்துக்களையும் பார்க்கலாம் என்று நம் ஆச்சாரியார்கள் சொல்வார்கள்.
முதலில் தனக்கு, பரமாத்மா பற்றிய அறிவை அளித்தான் என்கிறார். அதனால் தான் அடையவேண்டியது முக்தி அல்லது மோக்ஷம் என்று உணர்கிறார். அதற்காக பெருமாளுக்கு மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைகிறார். பரமாத்மா தவிர மற்ற விஷயங்களில் உள்ள ஆசைகளை குறைக்கிறார். பெருமாளின் மேல் உள்ள பக்தியை மேலும் வளர்க்கிறார். பக்தியால் அவனை அடைவது கடினம் என்று அவன் மூலமே அவனை அடைய அவனிடம் சரணாகதி கேட்டு அதனையும் பெற்றார். அதற்கு பிரதி உபகாரமாக தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகிறார். ஜீவாத்மாக்கள், பெருமாளுக்கு சேவை செய்து அடிமையாக இருப்பதே உகந்தது என்பதை உணர்கிறார். ஆழ்வார் தான் எப்போது முக்தி அடைவது என்று கவலை அடைந்ததற்கு, பெருமாள் அருளியதையும், தன்னுடைய கவலைகள் நீங்கி கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை சொல்லி முடிக்கிறார்.
அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற ஆச்சாரியார் எழுதிய ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் இருந்தும், வாதிகேசரி அழகிய மணவாளப்பெருமாள் ஜீயர் எழுதிய த்ரவிடோபநிஷத் சங்கதி மற்றும் வேதாந்த தேசிகர் என்ற ஆச்சாரியார் எழுதிய த்ரவிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, என்ற இரண்டு நூல்களில் இருந்தும் இவைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
இப்படியாக ஒவ்வொரு பத்திலும் ஆழ்வாருக்கு ஏற்பட்ட மாற்றங்களை அவரது பாசுரங்களை துணையாகக்கொண்டே நமக்கு காட்டியுள்ளார்கள். மேலே குறிப்பிட்டுள்ள பாசுரங்கள் ஒரு உதாரணத்திற்காக சொல்லப் பட்டவையே தவிர, அந்தந்த பதிகங்களில், பத்துக்களில், தொடர்புள்ள கருத்துக்கள் நிறையவே காணலாம்.
திருவாய்மொழி பற்றி, இன்னும் பற்பல ஆச்சர்யமான தகவல்கள் உள்ளன என்று உணர்கிறேன். அவைகளைப் பற்றி பின்னர் வலைப்பதிவுகளில் பார்க்கலாம்.
====================================================
We have started looking at the glories of Thiruvaimozhi in our previous weblog. We will continue the same in this weblog also.
Paramathmaa has shown many of His glories to Swami Nammazhvaar in Thiruvaimozhi and they are as below.
Let us discuss them in a little bit more details.
Thus Paramathmaa or Perumal has shown His glories in each and every hymn. Each hymn highlights one of the glories. Each subsection (Pathigam), demonstrates many of His glories Each Pathu has 100s of His glories. The entire Thiruvaimozhi contains 1000s of His glories. And it is only Him, who showed all these glories of Himself to Azhwaar.
Our acharyaars used to describe the Tens (Pathukkal), based on the changes that had happened to Namazhwaar, while compiling Thiruvaimozhi. This is based on the following titles by three different Acharyaars :
First of all, Azhwaar got the knowledge about Paramathmaa. Because of that knowledge, he understood that his goal should be to get Mukthi or Moksham. So he wanted to do more and more service to Paramathmaa. He reduced his interests and involvement in all other matters, other than Paramathmaa. These had helped him to increase his love and affection (bakthi) towards Paramathmaa. He realised that it would be difficult to reach him by practising the above and hence he surrendered himself totally to Him and understood that He became the route to reach Him. After that, Azhwaar felt that he did not have anything to return to him for the favour he received from Him. Perumaal convinces Azhwaar that all Jeevathmaas should continuously keep doing service to Paramathmaa. Then Azhwaar got worried on when he would get mukthi and Perumaal answered his prayers and Azhwaar got rid of all his worries and all his requests were answered by Him. We can see the above with little bit more details as below.
After understanding the concerns of Azhwaar, Paramathmaa or Perumal had promised Azhwaar that He would give Mukthi or Moksham or Srivaikuntham, to those who surrendered to him, (like Azhwaar) when they die. This can be seen from “saranamaagum thanathaal adainthaarkellaam maranamaanaal vaikuntham kodukkum piran” (9.10.5).
From the above, we can see, how the Azhwaar’s state had changed from each ten. Whatever hymns, mentioned above, are only examples and there could be many more hymns that could reflect these points both within the hymns and in the respective tens.
We will try to see in our coming weblogs many more facts and other fascinating aspects of Thiruvaimozhi which we have not seen here.
For English Version, please click here, thanks
முன்பு சொன்னது போல், ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி. இவை, ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்கின்ற நான்கு வட மொழி வேதங்களுக்கு இணையான நான்கு தமிழ் மறைகள் என்பார்.
நம்மாழ்வாரின் பெருமையையும் அவரின் பாடல்களில் உள்ள பொருட்சுவையும் கண்டு, சங்கத் தலைவர் பாடியதென கோயிலொழுகு என்ற நூலில் இருந்து ஒரு பாடல்.
ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே, இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ, நாய் ஆடுவதோ உறுமிப்புலிக்கு முன், நரி கேசரி முன் நடை ஆடுவதோ, பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன், பெருமானடிசேர் வகுளாபரணன் ஞாயிறு மாமறையின் தமிழின் இன்னொரு சொல் பெறுமோ உலகிற் கவியே .
“அடியேன் செய்யும் விண்ணப்பம்” என்று திருவிருத்தத்தில் “பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்” என்ற பாசுரத்தில் தொடங்கி “செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,” என்று திருவாசிரியத்தில் தொடர்ந்து, “முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,” என்று பெரிய திருவந்தாதியில் சொல்லி, “உயர்வர உயர்நலம் உடையவன் எவன் அவன், மயர்வறும் மதிநலம் அருளினன் எவன் அவன்,” என்று திருவாய்மொழியில் சடகோபனான நம்மாழ்வார் அருளி, தனது பாசுரங்களை நிறைவு செய்தார்.
திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும் உள்ளன.
இந்த பதிவினில், ஒரு தொடக்கமாக திருவாய்மொழியின் அமைப்பினையும் பிறகு அதன் ஒரு சில சிறப்புக்களையும் பெருமைகளையும் பார்ப்போம். திருவாய்மொழி பற்றி எழுதுவது என்பது ஒரு பெரிய மஹாசமுத்திரத்தில் இறங்குவது போலவும், நான் கடற்கரையில் நிற்கும் ஒரு ஒரு சிறிய புழுவைப் போலவும் உணர்கிறேன். இந்த வலைபதிப்பின் மூலம் பார்க்கப்போவது, ஒரு புழு சிறிது சிறிதாக கரையில் இருந்து சமுத்திரத்தில் உள்ள நீரினை தொடுவது போல் தான் இருக்கும், ஆனால் இந்த திருவாய்மொழி என்ற சமுத்திரத்தில், பற்பல அருமையான விஷயங்கள் உள்ளன; இதற்கு பகவத்விஷயம் என்ற சிறப்பு அடைமொழியும் உள்ளது; ஆகவே திருவாய்மொழி பற்றி இந்த வலைப்பதிவில் இருந்தோ அல்லது மற்ற எந்த வகையிலோ யாவரும் மேலும் மேலும் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சியே.
திருவாய்மொழியில் உள்ள ஆயிரத்து நூற்றி இரண்டு (1102) பாசுரங்களும், பத்து பத்துக்களாக பிரிக்கப்பட்டு, இரண்டாம் பத்தில் மட்டும் நூற்று பன்னிரண்டு (112) பாசுரங்களும் மற்ற எல்லா பத்துக்களிலும், ஒவ்வொரு பத்திலும் நூற்றுப்பத்து (110) பாசுரங்கள் என்று, சேர்த்து மொத்தம் 1102 பாசுரங்கள்உள்ளன.
ஒவ்வொரு பத்திலும் உள்ள நூற்றுப்பத்து பாசுரங்களும் மீண்டும் பத்து பதிகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும், முதல் பத்து பாசுரங்கள் ஆழ்வார் சொல்ல வந்த கருத்தை ஒட்டியும், கடைசி பாசுரம் அந்த பதிகத்தைப் படிப்பதால் நமக்கு கிடைக்கும் பலன்களை ஆழ்வார் சொல்வது போலவும் அமைக்கப்பட்டு இருக்கும். ஆக ஒவ்வொரு பதிகத்திலும் மொத்தம் பதினொன்று பாசுரங்கள் (11) உள்ளன. இரண்டாம் பத்தில் உள்ள ஏழாம் பதிகத்தில் மட்டும், ஆழ்வார் தனது கருத்தை பன்னிரண்டு பாசுரங்களிலும், பதிமூன்றாவது பாசுரத்தில் பலன்களையும் சொல்லி உள்ளதால் 2ம் பத்து 7ம் பதிகத்தில் மட்டும் மட்டும் 2 பாசுரங்கள் அதிகம்.
இந்த இரண்டாம் பத்தில் உள்ள ஏழாம் பதிகத்தில் ஆழ்வார், பெருமாளுக்கு உரிய பன்னிரெண்டு திரு நாமங்களையும் அவற்றின் பெருமைகளையும் ஒவ்வொரு நாமத்திற்கு ஒரு பாசுரம் என்று விளக்குவதால் அந்த பதிகம் மட்டும். பலஸ்ருதியையும் சேர்த்து மொத்தம் பதின்மூன்று பாசுரங்கள். இந்த பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாசுரத்தில், பெருமாளின் ஒரு திருநாமம் பாசுரத்தின் முதலிலும், பெருமாளின் மற்றொரு திருநாமம் பாசுரத்தின் கடைசியில் வருவதும் ஒரு சிறப்பே. மற்ற எல்லா பதிகங்களும் 11 பாசுரங்கள்.
திருவாய்மொழி அந்தாதி வகையை சேர்ந்தது. ஒவ்வொரு பாட்டின் கடைசி பதமும் அடுத்த பாடலின் முதல் பதமும் ஒன்றாவே இருந்தால் அது அந்தாதி என்று பொதுவாகவும், சொல் தொடர்நிலை அந்தாதி என்று சிறப்பு பெயருடனும் சொல்லப்படும். அதேபோல் கடைசி பாட்டின் கடைசி பதமும், முதல் பாட்டின் முதல் பதமும் ஒன்றாக இருந்தால் அது மண்டல அந்தாதி என்று கூறப்படும்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் உள்ள பாடல்களுக்கு ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவை தமிழும், வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ளன. திருவாய்மொழி, வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன. இந்த உரைகள், பாசுரங்களுக்கு அர்த்தங்களை மட்டும் கூறாமல், நமக்காக பல கேள்விகளை கேட்டு அவைகளுக்கு விளக்கமும் தந்திருப்பதால், அந்த உரைகளை தெரிந்து கொள்வதன் மூலம், நாம் எண்ணிப்பார்க்க முடியாத பற்பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்றொரு சிறப்பு, ஒரு பதிகத்திற்கும் அடுத்த பதிகத்திற்கும் உள்ள தொடர்பு, மற்றும் ஆழ்வார் மனதில் ஓடிய காரணங்களையும் விளக்கி இருப்பது. இதுபோல் கருத்துக்களில் தொடர்ச்சி இருந்தால், அத்தகைய பாடல்களை, பொருள்தொடர்நிலை அந்தாதி என்று கூறுவர். இதனால் திருவாய்மொழி, சொல்தொடர் அந்தாதியாகவும், பொருள் தொடர்நிலை அந்தாதியாகவும், மண்டலாந்தாதியாகவும் திகழ்கிறது.
திருவாய்மொழியின் ஐந்து உரைகளாவன :
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை / எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.
கம்பர், சடகோபனாகிய நம்மாழ்வாரையும், அவர் இயற்றிய திருவாய்மொழியையும், “சடகோபரந்தாதி” என்ற நூலில் போற்றியிருக்கிறார். திருமகள் கேள்வனான திருமாலுக்கு உள்ள சிறப்புகள் அனைத்திலும், மிக உயரிய சிறப்பு, அவருக்கு கிடைத்த திருவாய்மொழியே ஆகும் என்கிறார். மேலும், திருவாய்மொழியை அவர், “ஆரா அமுதக் கவி ஆயிரம்” என்றும் கூறுகிறார்.
திருவாய்மொழியையே, திராவிட வேதம் என்று கூறுகிறார்கள். திருவாய்மொழியை திருவீதிகளில் வாசிக்காமல், பெருமாளின் ஆஸ்தானத்திலேயே சொல்லவேண்டும் என்ற மரபு இன்றும் உள்ளது. திருவாய்மொழிக்கு பெருமாள் கொடுக்கும் முக்கியத்துவமும் தனிசிறப்புமே இதற்கு காரணம்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்துகள் ஐந்து. அர்த்த பஞ்சகம் என்றால் ஐந்து உறுதிப் பொருள்கள், அறிய வேண்டிய புருஷார்த்தங்கள் என்று பொருள். அவை
இதனை பராசபட்டர் என்னும் ஆச்சாரியார், ரத்னசுருக்கமாக கீழ்கண்ட பாடலில் சொல்லி உள்ளார்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித்தொக்கியலும்
ஊழ்வினயும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்
சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி, இந்த அர்த்த பஞ்சகத்தை எடுத்து சொல்வதே என்று நம் ஆச்சார்யர்கள் தெரிவிக்கிறார்கள்.
வாதிகேசரி அழகியமணவாள ஜீயர் எழுதிய 12000 படி உரையின் முன்னுரையில், (அவதாரிகை) திருவாய்மொழியின் முதல் இரண்டு பத்துக்களில் ஜீவாத்மாவின் நிலையைப் பற்றியும், மூன்றாம், நான்காம் பத்துக்களில் பரமாத்மாவை அடையவேண்டிய வழியைப் பற்றியும், ஐந்தாம் ஆறாம் பத்துக்களில் பரமாத்மாவை அடைய முடியாமல் தடை செய்பவைகளைப் பற்றியும், ஏழாம் மற்றும் எட்டாம் பத்துக்களில் ஜீவாத்மாக்கள் அடைய வேண்டிய நிலையைப் பற்றியும், ஒன்பதாம், மற்றும் பத்தாம் பத்துக்களில் பரமாத்மாவின் நிலையைப் பற்றியும் சொல்வதாகக் கூறுகிறார்.
அழகிய மணவாள பெருமாள் நாயனார், 20 திருவாய்மொழி பதிகங்களை தேர்ந்து எடுத்து அவைகளின் மூலம் ஆழ்வார் அர்த்தபஞ்சகத்தை விவரிப்பதாகக் கூறுகிறார். அவையாவன :
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிகவும் முக்கியமான த்வய மஹா மந்திரத்தின் “ஸ்ரீமந் நாராயண சரணநௌ” என்று தொடங்கும் முதல் பகுதியையும், “ஸ்ரீமதே நாராயணாய நமஹ ” என்று முடியும் இறுதிப்பகுதியையும், திருவாய்மொழி விளக்குகிறது என்று அதன் உரைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
மேலே சொன்னவை, திருவாய்மொழி பற்றி ஒரு சில தகவல்களே. திருவாய்மொழியின் பத்து பத்துக்களைப் பற்றி அடுத்த வலைப்பதிவில் பார்க்கலாம்.
============================================
As we mentioned earlier, Swami Namazhwaar composed four Prabanthams, namely, Thiru Virutham, Thiruvaasiriyam, Thiruvaimozhi and Periya Thiruvandhaadhi. These are considered parallel to the four Vedhams, the rule book of life in Sanskrit, namely, Rig, Yajur, Saama and Atharvana.
In Kovilozhugu, a book containing historical and religious information on important temples, from very early days, there is a hymn highlighting the greatness of Namazhwaar and his compositions, as below.
EE aaduvatho garudarkku ethire, iraviku ethir minmini aaduvatho, Naai aduvatho urmipuliku mun, nari kesari mun nadai aaduvatho, pei aaduvatho azhghu Urvasiku mun, perumaanadi ser Vaghulaabharanan gyayiru maamarain thamazhin innoru sol perumo ulagil kaviye.
The meaning of the above hymn is talking about number of comparisons, like, Fly with Eagle, Fireflies with Sun, Dog with Tiger, the walk of Fox with that of a Lion, the dance of Devil with that of Urvasi, a beautiful dancer in heaven. Similarly it is impossible to compare any tamil word to the words used by Swami Namazhwaar, in his hymns.
Swami Namazhwaar started his request (“en vinnappame“) with “Poi Nindra Gnanamum, polla ozhukkum, azhuku udambum” in his Thiruvirutham. Then he moved on to Thiruvasiriyam with “Sekkar Maa mugiluduthu mikka senjudar parithi soodi, amchudar mathiyam poondu“. Then he proceeded as “muyatri sumanthu ezhunthu munthutra nenje” in Periya Thiruvandhaadhi. In Thiruvaimozhi, he started with “Uyarvara Uyar Nalam udaiyavan evan avan“.
There are totally 1102 hymns in Thiruvaimozhi, 100 hymns in Thiruvirutham, 7 hymns in Thiruvaasiriyam and 87 hymns in Periya Thiruvandhaadhi.
As a beginning, let us start with the structure of Thiruvaimozhi and some of the special glories that go with Thiruvaimozhi in this weblog. I feel like a very tiny insect trying to cross a great ocean, when I start writing about Thiruvaimozhi, as I can only attempt a very small portion of the very many interesting and important aspects of this great Thiruvaimozhi. It also has a special name called Bhagavath Vishayam. So if the readers are able to know more about Thiruvaimozhi either from this weblog or from other sources, it is my pleasure.
All the 1102 hymns of Thiruvaimozhi are divided into ten (10) Tens, called “Pathu” and each “Pathu” is further divided into 10 sub sections called “Pathigams”. All pathigams will have 11 hymns, except the 7th Pathigam in the 2nd Ten, where there are two additional hymns. Within each Pathigam, Swami Nammazhwaar has used the last hymn for explaining the benefits to us, the people who read, recite and understand the pathigam, generally called “phalasruthi” and the remaining initial paasurams are used to explain the concept of the pathigam. So all Pathigams will have 11 hymns, except for the 7th Pathigam of 2nd Pathu, which has 13 hymns.
On this special 7th Pathigam of 2nd Pathu, Azhvaar talks about the significant twelve names of Sri Vishnu and their glories. Azhwaar has allocated one hymn per name and hence there are thirteen hymns in this pathigam, Including the last hymn, which is the usual Phalasruthi, In this pathigam, another speciality is that each hymn will have two names of Sri Vishnu, once at the beginning and once at the end of the hymn.
As per Tamil language literature, Thiruvaimozhi is classified under a group called “Andhadhi”. If the last word of the hymn is same as the first word of the subsequent hymn, then it is called “Andhadhi”, in general, and more specifically it is called “Word-related-Andhathi”. Similarly if the last word of the last hymn is same as the first word of the first hymn, like completing a cycle, then it is called “Mandala Andhadhi”.
For Thiruvaimozhi, five renowned personalities have written traditional explanatory notes and even today they are used as reference material for Thiruvaimozhi. These notes are written in a special manner, called, Manipravalam, that is by combining both Tamil and Sanskrit words. Thiruvaimozhi can be seen as a summarised version of Vedham and as a repository of philosophical thoughts. The above explanatory notes bring out these philosophical thoughts in an explicit manner. The explanatory notes, not only give the exact meaning of the hymns, but also ask related questions and provide explanation for those questions. This gives an extraordinary opportunity for us to learn from multiple perspectives. Similarly these traditional notes also give the continuity in the meaning from one hymn to the other, one Pathigam to the next and from one Pathu to the next. This type of continuity helps us to classify Thiruvaimozhi as Meaning-related-Andhadhi.
Thus, Thiruvaimozhi can be classified as Word-related-Andhadhi, Meaning-related-Andhathi and also Mandala Anthadhi.
The 5 explanatory works on Thiruvaimozhi are as follows
The great Tamil poet, Kambar has also written about Swami Nammazhwaar, in his composition called “Sadagopar anthathi”. He praises both Nammazhwaar and his composition, namely, Thiruvaimozhi. He says that the best laurel, which Lord Sri Vishnu has got is Thiruvaimozhi itself from Swami Nammazhwaar. He has lauded Thiruvaimozhi as “Aaraa Amutha Kavi Aaayiram”, meaning 1000 hymns of tasteful hymns.
Thiruvaimozhi is called “The Dravida Vedham”. Even today there is a practice that Thiruvaimozhi is not recited in the streets, instead they are recited only in front Perumal inside the temple, so that He can enjoy Thiruvaimozhi. This is due to the importance and significance given to Thiruvaimozhi, by Perumal Himself.
Artha Panchakam, is five basic truths every Sri Vaishnava should know and they are
To attain moksha, we first need to know the nature of the Jeevathmaa, the nature of the Paramathmaa, what goal the Jeevathmaa should aspire for, how to attain this goal, and what keeps Jeevathmaas from attaining this goal. Sri Vaishnava philosophy refers to these five points as artha panchakam.
One of the Aacharyaars, Parasura Bhattar, had condensed this into a short hymn :
“Mikka irai nilaiyum, meiyaam uyir nilaiyum, thakka neriyum thadaiyaagi thokkiyalum, oozhvinaiyum, vazhvinaiyum odhum kurukaikone yazhin isai vethathu iyal“
Our aacharyaars strongly suggest that Swami Namazhwaar’s Thiruvaimozhi explains the above Artha Panchakam in great detail.
According to one of the aacharyaars, Vathikesari Azhagiya Manavaala Jeeyar, in the introduction of his explanatory notes for Thiruvaimozhi called Panneeraayirapadi (12000 word count) mentions that :
Another Achaaryaar, Azhagiya Manavaala Perumaal Nayanaar, takes 20 different pathigams from Thiruvaimozhi and explains how these 20 pathigams represent Artha Panchakam. Table given below are the pathigams for each of the elements of Artha Panchakam :
Another important element for Sri Vaishnavaas is the Dwaya Maha Manthiram. From the various Traditional Explanatory Notes, mentioned above, we can see that Thiruvaimozhi describes the Dwaya Maha Manthiram, which starts as “Sriman Narayana Saranam “ and ending with “Srimathe Naaryananaya Namaha”.
Please note that whatever given above are only a subset of many interesting facts about Thiruvaimozhi, which I could understand. We will look into the high level details on the Ten Tens in our next weblog.
For English version, kindly click here, thanks
நிற்பது, இருப்பது மற்றும் கிடப்பது என்று பரமாத்மா மூன்று முக்கிய உருவ வெளிப்பாடுகளில் அருள்கிறார். பரமாத்மாவின் ஐந்து நிலைகளில், பரமபதநாதன் வீற்றுஇருந்து நித்யஸூரிகளுக்கும் முக்தாத்மாக்களுக்கும் காட்சி அளிக்கிறார். க்ஷீராப்திநாதன், கிடந்து பிரம்மா, சிவன், இந்திரன், வருணன், குபேரன் போன்ற தேவாதிதேவர்களுக்கு சேவை சாதிக்கிறார். அந்தர்யாமி என்றும் மறைந்து இருக்கிறார், அதனால், அவரை எந்த பிரிவுக்குள் சேர்ப்பது என்பது கடினம். விபவத்திலும் அர்ச்சையிலும் பரமாத்மா எல்லா பிரிவுகளிலும் நமக்கு காட்சி தந்து நம்மை மகிழ்ச்சிப் படுத்துகிறார். “லோகோ பின்ன ருசிஹி“ என்பதின் படி, உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், ஏதாவது ஒன்றினை விரும்பிடக்கூடும் என்று தன்னை பற்பல அவதாரங்களில் பற்பல நிலைகளில் வேறுபடுத்திக் காட்டி, எல்லா ஜீவாத்மாக்களும் தன்னை அடைய அவரே முயற்சியும் வழியும் செய்கிறார்.
முதலில் நாம் அர்ச்சை என்ற நிலையில் பரமாத்மா, நின்றது, இருந்தது மற்றும் கிடந்ததைப் பற்றி ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களைப் பார்ப்போம்.
தொண்டை நாட்டில், நின்றது திருஊரகத்தில்; வீற்று இருந்தது திருபாடகத்தில்; கிடந்தது திருவெஃகாவில். “நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது” என்று பாடியவர் திருமழிசை ஆழ்வார் ஆவார்.
பாண்டிய நாட்டில், நின்றது நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டத்தில்; வீற்று இருந்தது திருவரகுணமங்கையில்; கிடந்தது திருப்புளிங்குடியில். “புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று” என்று பாடியவர் நம்மாழ்வார்.
சோழ தேசத்தில், வீற்று இருந்த திருக்கோலம் உள்ள திவ்யதேசங்கள், தஞ்சை மாமணிக்கோவில் உள்ள மூன்று கோவில்களிலும், திருவாலி திருநகரியில் உள்ள இரண்டு கோவில்களிலும், மணிமாடக்கோவிலிலும், திருவைகுந்தவிண்ணகரம், திருஅரிமேயவிண்ணகரம், மற்றும் நாதன் கோயில் எனப்படும் நந்திபுரவிண்ணகரம், ஆகும். நின்ற திருக்கோலம் சொல்வதற்குப் பல இருப்பினும், திருநாகை அழகியார், கிழக்கு வீடான திருக்கண்ணபுரம், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அப்பன் எனும் உப்பிலியப்பன், தேரழுந்தூர் ஆமருவியப்பன் என்பன சில. திவ்யதேசங்களில் முதன்மையான திருஅரங்கம், சோழ தேசத்தில் இருக்கும் கிடந்த திருக்கோலங்களில் ஒன்றாகும்.
ஒரே திவ்யதேசத்தில் நின்றதும், இருந்ததும் கிடந்ததும் உண்டோ என்றால், திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக நின்றும், தெளிசிங்கபெருமாளாக இருந்தும், ரங்கநாதனாக கிடந்தும் சேவை சாதிக்கின்றார்.
திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் கிடந்து, நின்று, இருந்து சேவை புரிகிறாரா என்றால், ஆம் என்றே சொல்ல வேண்டும். பெரிய பெருமாளாக கிடந்தும், நம்பெருமாளாக நின்றும் சேவை சாதிக்கும் பெருமாள், வருடத்தில் ஒரு முறை இராப்பத்து உற்சவத்தின் போது, தாயாராக காட்சி அளிக்கும் போது, பெருமாள் அமர்ந்து சேவை சாதிப்பதை இருந்தது என்று கூறலாம்.
பொதுவாக மத்ஸ்ய, கூர்ம, வராஹ, வாமன, பரசுராம, பலராம அவதாரங்களை, அர்ச்சையில் சேவிக்கும் போது, நின்ற நிலையிலேயே தரிசிக்கின்றோம். அதேபோல், பொதுவாக, நரசிம்ம, மற்றும் வரவிருக்கும் கல்கி அவதாரங்களை வீற்றுஇருந்த நிலையில் வழிபடுகின்றோம். இராமன், கிருஷ்ண அவதாரங்களை பற்றி திவ்யப்ரபந்தத்திலும், இதிகாச புராணங்களிலும் வரும் மேற்கோள்களை பார்க்கும் போது, அவர்களை நின்ற, இருந்த மற்றும் கிடந்த திருக்கோலங்களில் வரும் காட்சிகளை கீழே காணலாம்.
இராமன் மகிழ்ச்சியுடன் சித்திரகூடத்தில் சீதையுடன் இருந்த காலத்திலும், பின்பு பரதனுக்கு அரசும் பாதுகையும் ஈன்ற போதும் நமக்கு கண் முன் வருவது அவனது வீற்றுஇருந்த திருக்கோலம், ஆகும்.
இராமன், வாலியை கிஷ்கிந்தையில் வதம் செய்த போதும், லங்காபுரியில் இராவணனுடன் போர்புரிந்தபோதும், கையும் வில்லுமாய் நின்றது, இராமாயணத்தில் உள்ள முக்கிய நிகழ்வுகள்.
இராமன், இலங்கைக்கு போர் புரிய தனது வானரப்படை கடலைக் கடக்க சமுத்திர ராஜனுக்கு அறிவிப்பதற்கு முன் திருப்புல்லாணி கடற்கரையில் தர்ப்பசயன பெருமாளாக காட்சி அளித்தது இராமனின் கிடந்த திருகோலம்.
விபவத்தில், குட்டிக் கண்ணனாக வீற்று இருந்தது, மண்ணையுண்டு, ஈரேழு உலகங்களையும் தன் வாயில், யசோதைக்கு காட்டியதை விவரிக்கும் காட்சி.
கோவர்தனத்தில், குன்றம் ஏந்தி குளிர் மழை காத்த திருக்கோலமும், சிறு வயதில், தொட்டிலைப் பிடித்தபடி, திரும்பிய முகத்தோடு யசோதையைப் பார்த்த திருக்கோலமும் குட்டிக் கண்ணனின் நின்ற திருக்கோலம் ஆகும்.
அதேபோல், சிறு வயது கண்ணன், மாணிக்கமும் முத்துக்களும் பதித்த தொட்டிலில் கிடந்த திருக்கோலம், ஆழ்வார்களை அதிகமாக பாட வைத்தது.
மேலே சொன்னவை எல்லாம், சிறுவயது விளையாட்டு கண்ணனின் நின்ற, அமர்ந்த மற்றும் கிடந்த திருக்கோலங்கள். கண்ணன் வளர்ந்து, ஒரு அரசனான பிறகு நமக்கு காட்சி அளித்ததை கீழே காணலாம்.
பாண்டவர்களுக்காக கண்ணன் கழுத்திலே ஓலை கட்டிக்கொண்டு, தூதுவனாக நடந்தது, கண்ணனின் எளிமைக்கு உதாரணமான நின்ற திருக்கோலம். அன்று போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டிய காலத்தில் பீஷ்மரின் அம்புகளை தடுப்பதற்கு, சங்கு சக்கரத்துடன் தனது சபதத்தையும் மீறி பீஷ்மருடன் போரிட தேரில் இருந்து இறங்கி நின்றது, கண்ணபிரானின் இன்னொரு நின்ற திருக்கோலம். அதே போல், நின்று கொண்டு, அர்ஜுனனுக்கு கீதை சொன்ன கண்ணனையும் எல்லோரும் நினைவில் கொண்டு இருப்பார்கள்.
விபவத்தில் கண்ணபிரானாக, தூது போன இடத்தில, பாண்டவர்களுக்காக ராஜ சபையில் பேசியது வீற்று இருந்த திருக்கோலம்.
மஹாபாரதப் போருக்கு முன்னால், கண்ணனின் கருணை வேண்டி, துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணனின் கட்டிலிற்கு தலைப்பக்கமும், கால்பக்கமும் காத்து இருந்தது, கண்ணனின் பிரபலமான கிடந்த திருக்கோலம். அதே போல், அர்ஜுனன், தனக்கு வெகு நெருக்கம் என்பதை கௌரவர்களுக்கு தெரிவிப்பதற்கு, தானும், ருக்மணி மற்றும் சத்தியபாமாவும், அர்ஜுனனும் திரௌபதியும் ஒரே கட்டிலில், சஞ்சயனுக்கு சேவை சாதித்தது, கண்ணனின் மற்றொரு முக்கியமான கிடந்த திருக்கோலம். சஞ்சயன் இந்த நெருக்கத்தை கௌரவர்களுக்கு தெரிவித்து, அர்ஜுனன் தோற்பதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் விடமாட்டான் என்றும் அதனால் கௌரவர்கள் போர் செய்வதை கைவிடும் படியும் சஞ்சயன் அவர்களுக்கு போதனை செய்ய வேண்டும் என்பதே கிருஷ்ணனின் நோக்கம்.
இன்னும் ஆழ்ந்து பார்த்தால், இராமாயணத்திலும், மகாபாரதத்திலும், விஷ்ணு புராணத்திலும், பாகவதத்திலும், இராமனைப் பற்றியும், கண்ணனைப் பற்றியும் இன்னும் பற்பல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். நம்முடைய கிரகிக்கும் சக்தியும், நாம் செலவிடும் நேரமும் தான் நமக்கு தடைகளே தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பகவத் விஷயத்திற்கு அளவே இல்லை.
Standing, sitting and reclining are three important postures in which Paramaathma reveals Himself to the external world. Among the five states of Paramathma Paramapathanathan has taken the sitting posture to give dharsan to mukthatmas and nithyasooris. Similarly Ksheeraptinathan, has taken the reclining position to give dharsan to all the Devas, like Brahma, Sivan, Indran, Varunan and Kuberan. The Antharyaami state is difficult to classify as it is hidden all the times. Paramathma has occupied all the three postures in both Vibhavam and in Archai to give happiness to us. There is a saying “loko binna ruchihi” meaning “people’s taste will differ in this world”. Paramathma, in line with the above, has taken different postures in different incarnations to attract all the Jeevathmaas and He has shown the way to the Jeevathmaas to reach Him.
First, let us take the Archai State, in which Azhwaars composed hymns on Paramathma about His standing, sitting and reclining postures.
In the northern Tamil Nadu (Thondai Naadu, covering Chennai, Chingelpat and Kanjeepuram areas), we have the dharsan of standing posture in Thiruooragam. We have the sitting posture in Thirupaadagam. And we have the dharsan in the reclining posture in Thiruvekka. This is summarised beautifully by Thirumazhisai Azhwaar in his hymn, “nindrathu enthai Ooragathu, irunthathu enthai Paadagathu, andru Vekkanai kidanthathu“.
In the southern Tamil Nadu (Paandiya Naadu), Paramathma gives dharsan in the standing posture in Srivaikuntham, sitting posture in Thiruvaragunamangai (today’s name is Natham, near Tirunelveli) and reclining posture in Thirupulinkudi. Nammazhwaar sung the same thing in his hymn “Pulingudi kidanthu, Varagunamangai irunthu, Vaikunthatthul nindru”.
In the river Cauvery delta area, (Chola Desam or Thiruchi and Thanjavur, Thiruvaarur, Nagaipattinam areas), Paramathma gives dharsan in sitting, standing and reclining postures on many divyadesams. We have dharsan in sitting posture, at all the three deities / temples of Thanjai Mamani Kovil, of both the deities / temples of Thiruvaali Thirunagari, Manimaadakovil, Thiruvaikuntha vinnagaram, Thiruarimeya vinnagaram and Nandhipura vinnagaram or Nathan Kovil. Even though there are many divya desams where the Paramathma gives dharsan in standing posture, we can take a few like, ThiruNagai Azhagiyar in Nagaipattinam, the eastern palace of Paramathma, namely, Thirukannapuram, Thiru Uppiliappan, the deity who does not have anyone equivalent or superior, and Aamaruviappan in Therazhundoor. For reclining posture, the primary divyadesam Srirangam is in Chola Desam.
If we ask ourselves about having all the three postures in one divyadesam, Triplicane in Chennai, will provide us the answer. He gives dharsan in the standing posture as Parthasarathi, in sitting posture as Thelisinga Perumal and in the reclining posture as Ranganathan.
Again, if we ask whether the chief deity of the prime divya desam, Sri Ranganathar in Srirangam, gives dharsan in the three postures, the sitting, standing and reclining, the response would be affirmative. The moolavar, Periya Perumal is in the reclining position. The Utsava moorthy, Namperumal, is in the standing posture. Once a year, during the festival Irapathu (the ten nights festival), Namperumal gives dharsan as Thayar after decorating Himself as Goddess and at that time, He takes the sitting posture.
In general, Mastya, Koorma, Varaaha, Vaamana, Parasuraama and Balarama incarnations, when presented in Archai , take the posture of standing. In the same way, the other incarnations like Narasimha and Kalki, which is going to happen in the Kaliyugam, generally are presented in the sitting postures. Unlike the other incarnations, Sri Rama and Sri Krishna incarnations have taken Sitting, Standing and Reclining positions as per Divyaprabhandam, Ithihaasam and Puranams. Let us look at some of the incidents where Sri Rama and Sri Krishna were presented in the Standing, Sitting and Reclining postures.
In the epic Ramayana, we hear about Rama sitting and spending happy moments with Sita in Chitrakoodam. Later, when Rama gave away His holy Footware and His kingdom to Bharatha, Rama gives dharsan in Sitting posture.
Sri Rama gave dharsan with His bow and arrow in Standing Posture, when He killed Vaali in Kishkintha and when He killed Ravana in the battle in Sri Lanka.
Sri Rama, as Dharbha Sayana Perumal, was in reclining Posture on the sands of the beach in Thriupullaani, before the construction of the bridge across Bay of Bengal, in front of Samuthra Rajan (King of Seas).
As a child, Sri Krishna was in sitting posture when he exhibited the whole universe in His mouth, after eating a bit of sand to Yasoda, His mother.
Similarly Sri Krishna took the Govardana Hill and held it like an umbrella to protect the people and the herd. This is a significant standing posture of child Krishna. Another enjoyable standing posture of child Krishna, is as a small boy standing and holding the cradle with His face turning towards Yasoda.
Finally it is the acts of Child Krishna which made the Azhwaars sing hymns on Sri Krishna. Many of the hymns are on the reclining posture of child Krishna lying in the cradle which is fitted with diamonds and pearls.
All the above narrations about Sri Krishna, are when He was young and playful. We will also go through the incidents, where Krishna as a grown up and a king, was in sitting, standing and reclining postures.
Sri Krishna agreed to go as an envoy for Paandavaas and he took the message from them to Kaurava and that was one of the memorable events in Mahabharatha where Sri Krishna took the standing or walking posture. Similarly during the Mahabharatha war, Sri Krishna jumped out of his chariot and protected Arjunan by directly going for a fight with Bheeshmar, ignoring or breaking His own promise of not taking part in the war with weapons. This is another significant standing posture of Sri Krishna in Mahabharatha. All of us are also aware of Krishna’s preaching of Bhavath Geetha to Arjunan before the start of the war in the standing posture.
Sri Krishna, when he went as an official messenger for the Pandavaas and delivered the message to Kaurava in their Assembly or the King’s Advisory council, He was in the Sitting posture.
One of the significant events in Mahabharatha, both Dhuriyodhanan and Arjunan waited by the side of Sri Krishna’s bed, Arjunan by the side of His feet and the other at the side of His head, when He was sleeping (in Reclining) to ask for favours, before the war. Another incident to remember is about how Sri Krishna communicates to Sanjayan, a messenger from Dhuriyodhanan’s camp, about his closeness to Arjunan by having Rukmani and Satyabhama along with Arjunan and Draupadi in the same bed. It was the intention of Sri Krishna that Sanjayan should advise Dhuriyodhanan about the closeness of Arjunan to Sri Krishna and that Sri Krishna would not let Arjunan get defeated in the war; so Dhuriyodhanan should take steps towards withdrawing from the war.
When we go deeply into Ramayanam, Mahabharatham, Vishnu Puraanam and Bhagawatham, we can get many more interesting experiences on Sri Rama and Sri Krishna. The limitation is all about the amount of time what we have and our ability to understand, rather than the amount of available material on vaishnavism. With that we will conclude this discussion.
For English version, please click here, Thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.
முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் பரமாத்மாவின், மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம். ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன் தொகுத்து வழங்கினார்.
அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌசல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார். அப்பதிகம், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே“, என்ற திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளை போற்றி பாடுவதாக அமைந்து உள்ளது. ஒன்பதாவது பதிகத்தில் ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை, தசரதச் சக்கரவர்த்தியாகவே தன்னை ஆக்கிக் கொண்டு, இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கி, தசரதன் புலம்பல்களாக அருளிச் செய்கிறார்.
குலசேகர ஆழ்வார் இராமர் மேல் இருந்த பக்தியால் மூன்று பதிகங்களை ஸ்ரீ ராமருக்கும், இராமாயணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடி உள்ளார். முதலில் இராமனின் தாயான, கௌசல்யா ராமருக்கு பாடும் தாலாட்டு எட்டாம் பதிகத்தில் கண்டோம். ஒன்பதாம் பதிகத்தில், தசரதன் புலம்பலைப் பார்த்தோம். இனி இந்த கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரகூடம் (சிதம்பரம்) என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப் படுகிறது.
வடமொழியில் உள்ள வால்மீகி இராமாயணம், இருபத்தி நான்காயிரம் (24000) ஸ்லோகங்களைக் கொண்டது. அதை ஓட்டி தமிழில் கம்பர் பாடிய கம்பராமாயணம் பத்தாயிரம் (10000) பாடல்கள் கொண்டது. ஆழ்வார் இதனை அழகாக தொகுத்து பதினோரு (11) பாடல்களில் வழங்கி இருக்கிறார்.
ஸ்ரீ ராமரும், சீதையும் வடஇந்தியாவில் உள்ள சித்திரகூடம் என்ற இடத்தில, தங்களின் வனவாச காலமான பதினான்கு வருடங்களின் பெரும் பகுதியை, மிக மகிழ்ச்சியாகக் கழித்தார்கள். ஆழ்வார் சிதம்பரம் கோவிலில் ஸ்ரீ கோவிந்தராஜரை தரிசித்த போது, அவரை, சித்ரகூடத்தில் வசித்த ராமனாகவும், சீதையாகவும், லக்ஷ்மணனாகவும் கண்டார். அதனால் இதை தில்லைநகர் திருச்சித்ரகூடம் என்று பாடியுள்ளார்.
முதல் பாசுரத்தில் அயோத்தியின் அழகையும் இராமனின் அழகையும் வர்ணிக்கின்ற ஆழ்வார், சூரிய குலத்திற்கே ஒப்பற்ற விளக்காக தோன்றி, தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளி இருக்கும் இராமனை கண்குளிர தரிசிக்கும் நாள் என்று வருமோ என்று கலங்குகிறார்.
பெருமாள் திருமொழியின் முதல் பதிகத்தில், அரங்கனை, “கருமணியை, கோமளத்தைக் கண்டு கொண்டு, என் கண்ணிணை என்று கொலோ களிக்கும் நாளே” என்று தொடங்கியவர், இப்போது கடைசி பதிகத்திலும் தில்லைநகர் திருச்சித்ர கூடத்தில் கோவிந்தராஜ பெருமாளை, “எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை என்று கொலோ கண்குளிரக் காணு நாளே” என்று முடிக்கிறார்.
“விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை”, என்று ஆழ்வார் இராமனின் வீரத்தை மெச்சுகிறார்.
இரண்டாவது பாசுரத்தில்
மாரீசனை விரட்டியது, அவன் பின்னாளில் இராவணனிடம் இராம பிரானின் வீர தீர பராக்கிரமங்களை விளக்கிச் சொல்வதற்கு என்று வைத்துக் கொண்டாலும், மாரீச, சுபாகு மூலம், ராமபிரான் நமக்கு, உபநிஷத், ப்ரஹ்மஸூத்திரம் மற்றும் ஆண்டாளின் திருப்பாவையில் சொன்ன ஒரு முக்கிய கருத்தை, ஒரு நிகழ்ச்சியாக நடத்திக் காட்டி இருக்கிறார். அந்த கருத்தாவது, நாம் சரணாகதி பிரார்த்திக்கும் போது, பரமாத்மா, நாம் முன்பிறவிகளில் செய்த பாவங்களையும் (பிராரப்த கர்மா), மற்றும் இந்த பிறவியில் அதுவரை செய்த பாவங்களையும் (சம்சித்த கர்மா) அழித்தும், நாம் இனிமேல் இந்த பிறவியில் செய்யப்போகும் பாவங்களை (ஆகாமி கர்மா) தள்ளி விட்டும், நமக்கு செய்யும் க்ருபைக்கு உதாரணமாக சுபாகுவை முடித்ததையும், மாரீசனை விரட்டியதையும் நடத்திக் காட்டினார். ஆண்டாள் சொன்னது, “போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்” என்பதாகும்.
அத்தகைய இராமபிரானே, தில்லை நகர் திரு சித்ரகூடத்தில், மூவாயிரம் அந்தணர்கள் திரண்டு துதிக்க ரத்ன சிம்மாசனத்தில் வீற்று இருந்த பரமாத்மா ஆவார் என்று பாசுரத்தை முடிக்கிறார்.
மூன்றாவது பாசுரத்தில், ஆழ்வாரின் பாகவத பக்தி மிளிர்கின்றது. சிவனுடைய வில்லை வளைத்து, சீதா தேவியை மணம் புரிந்ததையும், பரசுராமனின் வில்லையும், அவரையும் வென்றதையம் சேர்த்து இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார். அதே போல், மற்ற யாராலும் அடக்க முடியாத வில்லினை கையில் ஏந்தி, தில்லை நகர் திருச்சித்ர கூடத்தில், அத்தகைய இராமன் காட்சி அளிப்பதாகவும், அந்த இராமனை வணங்கும் அடியார்களுடைய திருவடிகளை, தான் வணங்குவதாக ஆழ்வார் குறிப்பிடுகிறார். இதை ஆழ்வார், இராமனுக்கு அடியவனான பரதனுக்கு, எப்போதும் தொண்டு புரிகின்ற சத்ருக்னன் போல தானும், பாகவத தாஸனாக இருக்க வேண்டும் என்று வேண்டுவதாக கொள்ளலாம்.
நான்காவது பாசுரத்தில், ஆழ்வார்,
இந்த பாடலில் ஆழ்வார் உபயோகித்துள்ள சில சொற்தொடர்கள் மிகவும் நன்றாக அனுபவிக்க வேண்டியவை, அவைகளில் சிலவற்றை கீழே காண்போம்.
அடுத்த பாசுரத்தில், இராமன்
ஆழ்வார் குறிப்பிடுகிறார். சென்ற பாடலைப் போல், இந்த பாடலில் ஆழ்வார் உபயோகித்துள்ள சில சொற்தொடர்கள் மிகவும் நன்றாக அனுபவிக்க வேண்டியவை, அவைகளில் சிலவற்றை கீழே காண்போம்.
ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி; சேனை காவலர் ஆயிரம் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்; கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில்என்னும்; ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிதுஅன்றே – 9513
ஆயிரம் யானைகளும், பதினாயிரம் தேர்களும், ஒரு கோடி குதிரைகளும் ஆயிரம் சேனைத் தலைவர்களும் இறந்து விழுந்தால் ஒரு முண்டம் (தலை இல்லாத உடல்) எழுந்து கூத்தாடும்; அப்படி ஆயிரம் முண்டங்கள் ஆடினால் இராமன் வில்லில் கட்டிய அழகிய மணி, ஒரு தடவை கணின் என ஒலிக்கும்; போர் நடந்த அந்த நாளில்; அந்த வில் மணி ஏழரை நாழிகை நேரம் ஆடியது, ஆடியபோதெல்லாம் மணி ஒலித்தது.
இப்படியான இராமரின் வீர தீர பராக்ரமங்களுடன், இந்த வலைப் பதிவினை முடித்துக் கொண்டு, இந்த பதிகத்தின் மீதி உள்ள பாசுரங்களை நமது அடுத்த வலைப்பதிவினில் காணலாம்.
இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம், அவர்களுக்கு எங்கள் நன்றி.
http://www.tamilvu.org/ta/library-l4210-html-l4210in1-140090
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=133
இந்த பாசுரங்களை இங்கே கேட்டும் மகிழலாம், நன்றி STD Paadasala, Chennaii மற்றும் அதை தெரிவித்த whatsapp group friends
====================================================
In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections. Azhwaar, whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees, sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.
In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of Archai In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram. In the sixth subsection, Azhwaar takes the roles of the Gopikas, the women folk of Brindavan, who lived at the same time of Sri Krishna and loved Sri Krishna. In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar, (Holy Devaki), the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age.
In the next subsection, namely, the eighth, Azhwaar, enjoys the happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age. All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram, whom azhwaar calls as “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“. In the ninth subsection, Azhwaar brings out the sadness of Dasarathan, father of Sri Rama, after he was separated from Sri Rama, who went to the forest. Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, and Azhwaar brings out the feelings of Dasarathan in the hymns as they melt our hearts and these are called as Dasarathan’s lamentations.
Kulasekara Azhwaar through his deep love, affection and devotion to Sri Rama, has compiled three subsections on Sri Rama and Sri Ramayanam. Earlier, we had seen Rama’s mother, Kowsalya happily singing her lullaby on the young Rama, in the eighth subsection. In the ninth subsection, Azhwaar talks about the lamentations of Dasaratha, His father. In the next subsection, or the final subsection of Perumal Thirumozhi, Azhwaar brings out the whole Ramayanam. Azhwaar takes the divya desam, Thillai Nagar Thiru Chitra Koodam (Now called as Chidambaram Govindaraja Perumal Koil) as the part of this subsection.
After Darasaratha’s lamentations, Azhwaar decided to bring out the entire Ramayanam in the final subsection of Perumaal Thirumozhi. The entire Ramayanam, consisting of about 24000 slokas in Valmiki Ramayanam and 10,000 poems in Kamba Ramayanam, was beautifully narrated in just 11 verses by Azhwaar.
Sri Rama and Sita spent some wonderful years in Chitra Koodam, which is in Northern India, out of their fourteen years of forest life. When Azhwaar had dharsan of the deity, Sri Govindarajar in Chidambaram, Azhwaar experienced the presence of Sri Rama, Sita, Lakshmana of Chitra Koodam, but in Chidambaram. Hence he called this divya desam as Thillainagar Thiru Chitra Koodam.
In the first hymn, Azhwaar brings out the beauty of Ayodhya and Sri Rama. He has also showers all praises on Sri Rama, by calling Him as the Shining Light for the whole Soorya Clan . Azhwaar completes the hymn by expressing his desire to have the dharsan of Sri Rama, who is now present in Thillai Nagar Thiru Chitra Koodam, Chidambaram in Tamilnadu.
Azhwaar, in the first subsection of this Perumal Thirumozhi, longed when he would have the opportunity to have the dharsan of Ranganatha Perumal, by saying “Karumaniyai, Komalathai, kandu kondu, en kanninai endru kolo kallikum naale“. In the same manner he starts his last subsection of Perumal Thirumozhi by longing to have the dharsan of Sri Govindarajan Perumal, by saying “Engal thani Muthalvanai, em Peruman Thannai, endru kolo kann kulira kaannum naale“.
In this hymn, Azhwaar starts saluting the Lord for His prowess by mentioning “Vinn muzhthum uyyak konda veeran thanai“, meaning Lord Rama gave abode all in the celestial world.
In the second hymn, Azhwaar explains the prowess of Sri Rama, by highlighting
In the same hymn, Azhwaar also mentions another virtue of Sri Rama, that He always protects the people, by saying that by removing these demons from the scene, He had helped the Sage Vishwamithra to complete his yagya .
In one way, we can take the reason for Sri Rama to force Maareechan to run away , instead of killing him, could be because, then only, Maareechan would be able to explain the prowess of Sri Rama to Ravanan at a later date. Our acharyas also use the example of Subhaahu and Maareechan to explain an important fact that is given in Upanishadh, Brahmma Suthram and Aandaal’s Thiruppaavai. It is a favour, Paramathma does to us, when we pray for the total surrender. He removes all our sins of the past lives, (prarabdha karma) and all the sins we committed during this life (samchita karma), like the way He killed Subhaahu and He clears all the sins that we might be committing during the rest of our life, (Agami Karma), like how He drove away Maareechan. The same point is told by Aandal in her Thiruppavai, as “poya pizhaiyum pughu tharuvaan nindranavum, theeyinil thoosaagum” (5)
Azhwaar completes the hymn, by saying that the same Paramathma, adorning the gem-filled throne, is in Thillai Nagar Thiru Chitra Koodam, where 3000 Brahmins praised the glory of the deity.
Azhwaar’s devotion towards devotees comes out vividly in the Third Hymn of this subsection. In this hymn, Azhwaar talks about the marriage with Sita by breaking the the special bow from Siva (Siva Dhansu) and the subduing of Parasuraama by breaking his stronger bow. Azhwaar says that similar brave Rama, with strong arms and a heavy bow resides in Tillainagar Tiruchitrakutam. Azhwaar concludes the hymn by saying that he would for ever be a servant to those devotees of this Thillainagar Thiruchitrakooda Rama. In Ramayanam, Rama’s brother Bharathan had always served only Rama . Their brother Chathrugnan had only served Bharatha. Azhwaar winds up this hymn, by saying that he wished to be like Chathrugnan and serve all the devotees of Sri Rama.
Fourth hymn is a very interesting hymn, where Azhwaar talks about
In this fourth hymn, there are some interesting, beautiful and enjoyable words which are coined by Azhwaar, and let us see some of them.
In the next hymn, Azhwaar talks about the way Rama went about to do the following :
Like the previous hymn, there are some interesting, beautiful and enjoyable words which are coined by Azhwaar in this hymn also and let us see some of them.
Aanai Aayiram, Ther Pathinaayiram, adal pari oru kodi; senai kaavalar aayiram padin, kavantham ondru enzhunthu aadum; kaanam, aayiram kavanthu nindru aadidin, kavin mani kannil ennum; enai am mani ezharai nazhigai aadiyathu inithu andre – 9513
When Rama killed 1000 elephants, 10000 chariots and 10 million soldiers, one trunk (body without head) would stand up and dance. When 1000 such trunks danced, the bell in the bow of Sri Rama would strike once. On that day, when the war was going on, the bow was continuously ringing for hours.
With this prowess of Sri Rama, let us conclude this weblog and continue the remaining hymns in our next weblog.
They lyrics of the tenth subsection can be seen at the following web address and we take this opportunity to express our thanks to them.
http://www.tamilvu.org/ta/library-l4210-html-l4210in1-140090
===========================================================
For English version, please click here, Thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், முதல் எட்டு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.
முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் பரமாத்மாவின், மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம். ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன் தொகுத்து வழங்கினார். அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார். எட்டாவது பதிகம், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே“, என்ற திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளை போற்றி பாடுவதாக அமைந்து உள்ளது.
இனி அடுத்து, ஒன்பதாவது பதிகத்தில் ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை விவரிப்பதை கீழே பார்ப்போம். தசரதச் சக்கரவர்த்தி, இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கிப் பேச்சுகளின் வடிவமாக அருளிச் செய்யப் பெற்றிருப்பது ஒன்பதாந் திருமொழி. ஆழ்வார் தம்மை தசரதனாகவே ஆக்கிக் கொண்டு புலம்புகின்றார். இப்பதிகத்திலுள்ள ஒவ்வொரு பாசுரமும் நெஞ்சை உருக்கும் தன்மை உடையது.
சக்ரவர்த்தி திருமகனான ராமச்சந்திரமூர்த்தி, சீதா தேவியோடும், லக்ஷ்மணனோடும், யானை, தேர், குதிரைகள் போன்ற எல்லாவிதமான வாகனங்களையும் இழந்து, கானகம் செல்வதை, “நேரிழையும், இளங்கோவும் பின்பு போக, எவ்வாறு நடந்தனை யெம் இராமாவோ ” (பெருமாள் திருமொழி 9.2) என்று புலம்புகிறார்.
ராஜகுமாரராக சௌகர்யமாக வளர்ந்து வந்த ராமனுடைய திருமேனியை மனதில் கொள்ளாமல், பெரிய காட்டில், மர நிழலில் கருங்கற் பாறைகளையே படுக்கையாக கொள்ளும் காட்சியை நினைந்து தசரதன், “வியன்கான மரத்தின் நீழல், கல்லணைமேல் கண் துயிலக் கற்றனையோ” (9.3) என்று தன்னை தானே வெறுத்துக் கொள்ளுகிறார். சிறு வயது கிருஷ்ணருக்கு, “குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை, நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக் கடியவெங் கானிடைக் காலடிநோவக் கன்றின்பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன்; எல்லே பாவமே” (பெரியாழ்வார் திருமொழி 3.2.9) என்று பெரியாழ்வார் யசோதை நிலையில் நின்று பேசுவது போல, இந்த பாசுரத்தில் குலசேகர ஆழ்வார் தசரதன் நிலையில் இருந்து பேசுகிறார்.
“நீ வா, நீ போ” என்று சிறு வயது இராமனின் முன் அழகையும், பின் அழகையும், மாறி மாறி ரசித்த தசரதன், இராமனை கொடுமையான யானைகள் வாழும் காட்டுக்குப் போகச்சொல்லிய பின்பும், தன் நெஞ்சம் இன்னும் இரு பிளவாகவில்லையே என்று கதறுகிறார்.
கூர்மையான சிறு கற்கள் காலில் குத்தி அதனால் இரத்தம் பெருகவும், கடும் வெய்யிலில், நேரத்திற்கு உணவு கிடைக்காமல் பசி, இராமனை துன்பப்படவும், வருத்தப்படவும், செய்யும் சந்தர்ப்பங்களை உருவாக்கிய, தானும் கைகேயியும் பெரிய பாவிகளே என்று கண்ணீர் வடிக்கிறார்.
ஐயா என்று இராமன் அழைப்பதை கேட்காமல், அவனை இறுக அணைத்துக் கொள்ளாமல், உச்சி மோந்திடாமல், அவனது அழகிய நடையைப் பார்க்காமல், தாமரை மலர் போன்ற அவ்னது முக அழகைக் காணாமல், அவனைக் காட்டுக்கு அனுப்பிய தான் இன்னும் உயிர் வாழந்து இருப்பதை நினைந்து வருந்துகிறார்.
அறுபதினாயிரம் ஆண்டுகள் ராஜ சுகங்களை அனுபவித்து முதுமை அடைந்த, தான் காட்டுக்கு செல்ல வேண்டிய நேரத்தில், இராமன் காட்டுக்குச் செல்கின்றானே, இது நியாயமா என்று, வேதங்கள் நன்கு கற்றறிந்த வசிட்டரைப் பார்த்தும், ராஜதர்மங்கள் நன்கு அறிந்த சுமந்திரனைப் பார்த்தும், தசரதன் கதறி அழுகிறார்.
இராமனையும், சீதையும், லக்ஷுமணனையும் காட்டிற்கு போகச் சொல்லியதால், கைகேயின் மகனான பரதனுக்கு தீராத பழி உண்டாகும்படி, கைகேயி செய்துவிட்டதாகவும், தன்னையும் மேல் உலகத்திற்கு அனுப்பி, கைகேயி சுகமாக இந்த உலகத்தில் வாழட்டும் என்றும், இராமனைப் பிரிவதால் உலகமே வருந்திக் இருக்க, கைகேயி மட்டும் என்ன சுகத்தை அனுபவிக்கப் போகிறார் என்றும் மாறி மாறி சொல்லி, வருந்துகிறார்.
தந்தையாகிய தன்னுடைய வாக்கையே மெய்ப்பிக்கவேண்டும் என்று கானகம் சென்ற இராமனே, தனக்கு மீண்டும் மீண்டும் பல பிறவிகளில் மகனாகப் பிறக்க வேண்டும் என்று இராமனிடமே வேண்டுகிறார்.
மூன்று தாய்மார்களில், இருவர் (கௌசல்யா, மற்றும் சுமித்ரா), வருந்தவும், ஒருவர் (கைகேயி) மகிழவும், இராமன் இந்த நாட்டை விட்டு காட்டிற்கு செல்வதை போல், தானும் இந்த நாட்டை விட்டு மேலுலகம் செல்லப் போவதாக தசரதர் உரைக்கின்றார்.
இராமன் காட்டிற்கு சென்றதனைப் பொறுக்க மாட்டாமல், தசரத மஹா சக்ரவர்த்தி புலம்பிய இந்த புலம்பல்களை படிப்பவர்கள், தீய வழிகளில் செல்ல மாட்டார்கள் என்று சொல்லி குலசேகர பெருமாள் இந்த பதிகத்தை முடிக்கின்றார்.
குலசேகர ஆழ்வார் இராமர் மேல் இருந்த பக்தியால் மூன்று பதிகங்கள் இராமருக்கும் இராமாயணத்தைக் குறித்தும் பாடி உள்ளார். முதலில் இராமனின் தாயான, கௌசல்யா ராமருக்கு பாடும் தாலாட்டு எட்டாம் பதிகத்தில் கண்டோம். இந்த ஒன்பதாம் பதிகத்தில், தசரதன் புலம்பலைப் பார்த்தோம். இனி கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரக்கூடம் என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப் படுகிறது. அதனை அடுத்த வலைப்பதிவில் காணலாம்.
இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம், அவர்களுக்கு எங்கள் நன்றி.
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3773
====================================================
In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections. Azhwaar, whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees, sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.
In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of Archai In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram. In the sixth subsection, Azhwaar takes the roles of the Gopikas, the women folk of Brindavan, who lived at the same time of Sri Krishna and loved Sri Krishna. In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar, (Holy Devaki), the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age. In the next subsection, namely, the eighth, Azhwaar, enjoys the happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age. All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram, whom azhwaar calls as “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.
In the ninth subsection, Azhwaar brings out the sadness of Dasarathan, father of Sri Rama, after he was separated from Sri Rama, who went to the forest. Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, in this ninth subsection. The feelings of Dasarathan are brought out so clearly by Azhwaar in all these hymns of this subsection, the hymns melt our hearts.
Sri Rama set out for forest immediately, once he heard that he had to go out, without any desire for the kingdom. He sent back the elephants, horses and chariots. He went to the forest barefooted with Sita, His wife, and the younger brother Lakshmana. Dasarathan cried on thinking how Sri Rama would have walked under those tough conditions by stating “Nerizhaiyum, Elangovum pinbu poga, evvaaru nadanthanai emm iraamaavo?” (Perumaal Thirumozhi 9.2)
Rama had grown up as a Prince in Ayodhya with utmost comfort and used to sleep in soft beds. Dasarathan hated himself for having listened to Kaikeyi and sending Sri Rama to the forest, as Sri Rama, then, had to learn on how to sleep on bed of hard rocks, under the shadow of the trees in the forest, by saying “Viyan Kana Marathin Neezhal, kallanai mel kann thooyilak katranaiyo” (9.3). This is much similar to the hymn by Periazhwaar in his Periyazhwaar Thirumozhi, 3.2.9, where Azhwaar taking the role of Yasoda, and expressed concerns when she sent Sri Krishna (Damodaran) without footware and umbrella, to the blazing hot forest to supervise the grazing cows . Yasoda cursed herself for having done that by saying, “Kudaiyum Seruppum kodaathey Daamotharanai naan, udayium kadiyana oondru, vem parargal udai kadiya ven kaanidai, kaaladi nova kandrin pin kodiyen en pillai pokkinen, elle paavame”(Periyazhwaar thirumozhi 3.2.9).
When Rama was young, Dasarathan used to enjoy Rama’s style of walking by asking him to come forward and go back many times. Dasarathan asked his own heart, how it did not split into two, after having agreed to send Sri Rama to the forest, where wild elephants live.
Dasrathan worried about Sri Rama’s state in the forest, where sharp small stones could hurt His soft feet, which could result in bleeding. Similarly He might not get the food at the right time and that could cause pains to Sri Rama. Dasarathan concluded that Kaikeyi, his wife and himself were the greatest sinners in this world for having created such misfortunes for Sri Rama.
Dasarathan felt sorry that he would not hear Rama calling him as father affectionately; he would not get embraced by Sri Rama; he would not be able to kiss on His forehead; he would not be able to watch His stylish walking; he would not be able to see His lotus-like face; Having lost all these could mean that he lost Sr Rama and he wondered how he was still surviving. He cursed himself as the lowliest of men.
Dasarathan had spent about sixty thousand years ruling his kingdom and he had enjoyed sufficient power and comfort at the palace. He felt that it was time for him to hand over the kingdom to the next generation and move away to forest. In stead he had agreed to send Sri Rama to the forest, as per the wishes of Kaikeyi, his wife. He asked Vashittar, the person who mastered the Vedas and Sumandran, the person who mastered the state justice, whether it was fair to send Sri Rama to forest.
Dasarathan turned his attention to Kaikeyi and said that she earned an ever lasting blame for herself and her son Bharathan, for having sent Sri Rama, Sita and Lakshmana to the forest; Dasrathan knew that he would die soon and she would be the reason for that too; Dasarathan questioned whether it made any sense or happiness for Kaikeyi, when the whole world was going to feel sorry for missing Sri Rama in the country.
Dasarathan cried that Sri Rama had gone to the forest, to keep up Dasarathan’s promise or words to Kaikeyi, without any consideration for Himself or His grieving mother Kowsalya. Dasarathan pleaded to Sri Rama that He should be his son in many many lives of Dasarathan.
Dasarathan lamented that Sri Rama gladly went to the forest, after listening to Kaikeyi. The other two mothers, Kowsalya and Sumitra were in grief. Dasarathan said that he would also leave the kingdom, which Sri Rama renounced, and would go abode.
The final hymn in this subsection is about the benefits for the people. Kulasekara Azhwaar says that people who read or sing or master these hymns of this subsection, which express the anguish of King Dasarathan, lamenting over the unbearable loss of his affectionate son, would never go in the evil way.
Kulasekara Azhwaar through his deep love, affection and devotion to Sri Rama, has compiled three subsections on Sri Rama and Sri Ramayanam. Earlier, we had seen Rama’s mother, Kowsalya happily singing her lullaby on the young Rama, in the eighth subsection. In this ninth subsection, Azhwaar talks about the lamentations of Dasaratha, His father. In the next subsection, or the final subsection of Perumal Thirumozhi, Azhwaar brings out the whole Ramayanam. Azhwaar takes the divya desam, Thillai Nagar Thiru Chitra Koodam (Now called as Chidambaram Govindaraja Perumal Koil) as the part of this subsection, which we would try to cover in the next weblog.
They lyrics of the ninth subsection can be seen at the following web address and we take this opportunity to express our thanks to them.
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3773
==========================================================
For English version, please click here, Thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், முதல் ஏழு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.
முதல் மூன்றுபதிகங்களில், திருஅரங்கனைப் பற்றியும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று மகிழ்ச்சி அடைவது, என்பதை பற்றியும், அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது என்பதனையும் பாடினார் என்று பார்த்தோம். நான்காம் பதிகத்தில் திருவேங்கடமுடையானை அடைந்ததும், அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் செய்யவும் திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் அந்த பதிகத்தில் ஏங்குகிறார்.
ஐந்தாவது பதிகத்தில், “நீயே எனக்கு உபாயம், நான் வேறு யாரிடமும் செல்ல மாட்டேன்” என்பதை நமக்கு புரியும் வண்ணம் பற்பல உதாரணங்களால் விளக்கும் ஆழ்வார், “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்று திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்லும் சொற்தொடர்களால் நம் மனதினில் பதிய வைக்கிறார்.
முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம். ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன் தொகுத்து வழங்கினார்.
அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார். கர்நாடக இசை பிரியர்கள் இந்த பாடல்களை நீலாம்பரி இராகத்தில் பாடி, கேட்டு மகிழலாம். இந்த பதினோரு பாடல்களும் சோழ நாட்டில் உள்ள திவ்ய தேசமான, திருக்கண்ணபுரம் என்னும் ஸ்தலத்தில் உள்ள சௌரிராஜ பெருமாளை போற்றி பாடுவது. எட்டாம் பதிகம் பார்ப்பதற்கு முன்னால், “சரணமானால், தன் தாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (9.10.5) என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட திருக்கண்ணபுரம் பெருமாள் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்.
இந்த திவ்யதேச பெருமாள் கிருத, திரேத, துவாபர, கலியுகம் என்று நான்கு யுகங்களிலும் அருள் பாலிக்கும் பல சதுர்யுகங்கள், (64 சதுர் யுகங்கள் என்று சொல்வதும் உண்டு) கண்ட பெருமாள்.
திருக்கண்ணபுரம், பஞ்ச (ஐந்து) கிருஷ்ண க்ஷேத்ரங்களில், ஒன்றாகும். (மற்றவை, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம், திருக்கோவிலூர்). கண்ணன் க்ஷேத்ரமாக இருந்தாலும், ஆழ்வாருக்கு சிறுவயது ராமராகவே காட்சி அளித்துள்ளார் போலும். ஆகையினால் அவருக்கே இங்கு தாலாட்டு பாடுகிறார். அதே போல் ராவணனின் தம்பியாகிய விபீஷணனுக்கு இங்கு ஸ்ரீ ராமராக நடந்து காட்டியது விசேஷமாகும். இன்றும் ஒவ்வொரு அமாவாசையும் பெருமாள் விபிஷ்ணனுக்கு நடை அழகு காட்டுகிறார்.
பெரியாழ்வார் பாடிய “மாணிக்கம் கட்டி, வயிரம் இடை கட்டி” என்ற பாசுரங்கங்கள் குட்டிக் கண்ணனை (ஸ்ரீ கிருஷ்ணர்) உறங்கவைக்கும் பாடல்கள். பெருமாள் திருமொழியின் எட்டாம் பதிகம், குலசேகர ஆழ்வார், குட்டி ராமருக்கு சமர்ப்பித்த தாலாட்டு அல்லது உறங்க வைக்கும் பாடல்கள். தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழில் ஆழ்வார் இந்த பாடல்களை பாடி உள்ளார்.
வைஷ்ணவர்கள் திருக்கண்ணபுரத்தை கீழை (கிழக்கு) வீடு என்றே குறிப்பிடுகிறார்கள். மேலை வீடு (மேற்கு) திருஅரங்கம், தெற்கு வீடு திருமாலிரும் சோலை, மற்றும் வடக்கு வீடு, திருவேங்கடம் ஆகும்.
நாம் இனிமேல் பார்க்க வேண்டிய ஆழ்வார்களில் ஒருவரானவரும் ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆனவருமான திருமங்கை ஆழ்வாருக்கு, திருமந்திர அர்த்தத்தை விளக்கமாக உபதேசித்த பெருமாள், இந்த ஊரின் நீலமேக பெருமாள் ஆவார். இதற்காக, திருமங்கை ஆழ்வார் ஒரு திவ்யதேச பெருமாளுக்காக அதிகபட்சமாக 100 பாசுரங்கள் பாடிய திவ்யதேசங்களுள், திருக்கண்ணபுரமும் ஒன்று ஆகும்.
திருமங்கை ஆழ்வார் 100 பாசுரங்கள் பாடிய இன்னொரு பெருமாள், அவருக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்துவித்த அவரது ஆச்சார்யனான, திருநறையூர் பெருமாள் ஆவார்.
ஸ்ரீவைஷ்ணவத்தில், பஞ்ச சம்ஸ்காரம் என்பது, ஐந்து புனிதமாக்கும் வழிகள் பற்றிய முக்கிய சடங்கு. ஸ்ரீ வைஷ்ணவத்தை பின்பற்றி, திருமால் திருவடியை அடையவிரும்புவர்கள், ஆண், பெண், சாதி வேறுபாடு இன்றி, ஒவ்வொருவரும் நடைமுறை படுத்த வேண்டிய ஒன்று. அவைகளை அவரவர்களின் ஆச்சார்யர்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி சொல்லிக் கொடுப்பார்கள். அவையாவன
இப்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் போது திருமந்திரத்தை உபதேசித்த திருநறையூர் நம்பிக்கு 100 பாடல்களும், அந்த திருமந்திர அர்த்தத்தை விளக்கிய திருக்கண்ணபுரம் நீலமேக பெருமாளுக்கு 100 பாடல்களும் பாடிய திருமங்கை ஆழ்வார் பற்றி பின்னர் பார்க்கலாம். குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் தவிர ஆண்டாள், பெரியாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என்று ஐந்து ஆழ்வார்கள் இந்த திருக்கண்ணபுர திருத்தலத்திற்கு 128 பாடல்கள் சமர்பித்து உள்ளார்கள். இன்னும் பல பெருமைகள் திருக்கண்ணபுரத்திற்கு இருந்தாலும், நாம் இந்த வலைப்பதிவின் தலைப்பிற்கு திரும்புவோம்.
இராமாயணத்தில் மொத்தம் ஏழு காண்டங்கள் உள்ளன. அவையாவன :
எட்டாம் பதிகத்தில் வரும் பாசுரங்களை ஆழ்வார் இந்த வரிசையிலேயே அமைத்து பாடியுள்ளார்.
“மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே”, என்று, முதல் பாடல் முதல் வரியில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்ததை சொன்ன ஆழ்வார் இரண்டாம் வரியினில் “தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்” என்று இராவணணின் பத்து தலைகள் சிதறியதை, ஸ்ரீ ராமர் பிறப்பினால் ஏற்பட்ட நன்மை என்று விவரித்தார்.
இரண்டாம் பாடலில், ராட்சசியாகிய தாடகையின் மார்பினை துளைக்கும்படியாக அம்புகள் எய்தவன் என்று சொன்ன ஆழ்வார், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே” என்று ராமனின் அழகினை தரிசித்தவர்கள் தாங்களாகவே தங்கள் இதயங்களை ராமனின் திருவடிகளில் சமர்பித்து விடுவார்கள் என்று சொல்கிறார்.
மூன்றாம் பாசுரத்தில், கௌசல்யாவின் சிறந்த மகனே என்றும், ஜனக மஹாராஜாவின் மாப்பிள்ளை என்றும் பாடியவர் “எங்கள் குலத்தின் இன்னமுதே” என்று சொல்லும் போது ஸ்ரீ ராமரும், குலசேகர ஆழ்வாரும் ராஜ வம்சம் என்பதையும் ஸ்ரீவைஷ்ணவ குலம் என்பதையும் சேர்த்து குறிப்பிடுகின்றார்.
நான்காம் பாசுரத்தில், ” தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே, தசரதன் தன் மாமதலாய்” என்றும் சொல்லும் போது ஆழ்வார் தன்னுடைய நாபிக்கமலத்தில், படைக்கும் கடவுளாகிய பிரமனை படைத்தவனே என்று முதல் வரியில் சொல்லி, இருந்தாலும் நீ தசரதனுக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்து அவருக்கு தந்தை என்ற பெருமையைக் கொடுத்தாயே என்று இரண்டாவது வரியில் சொல்லி வியக்கிறார். இதே பாசுரத்தில் “ஏ மருவு சிலை வலவா ” என்று சொல்லும் போது பெரியாழ்வார் சொன்ன “சார்ங்கம் என்னும் வில் ஆண்டான்” என்ற பொருளிலேயே வில்லை அடக்கி ஆளுகின்றவன் என்றார்.
அடுத்த பாசுரத்தில் “ஆரா அன்பு இளையவனோடு அரு கானம் அடைந்தவனே ” என்று சொல்லும் போது ஆரா அன்பு என்பது கைங்கர்யம் செய்ய கூட வருவேன் என்று பிடிவாதமாக வந்த இலக்குவனைக் குறிக்கும். இங்கு நாம் நம்மாழ்வார் கைங்கர்யம் வேண்டும் என்ற “ஓழிவில் காலமெல்லாம்” (திருவாய்மொழி 3.3.1) என்ற பாசுரத்தை நினைவில் கொள்ளலாம். இதில் நம்மாழ்வார், பரதன் நாட்டிற்கு சென்று ராமனுக்காக செய்த கைங்கர்யங்களையும், இலக்குவன் ராமனுடன் காட்டிற்கு சென்று செய்த கைங்கர்யங்களையும் சேர்த்து, தான் ஒருவராக இனி வரும் காலங்களில் ஒரு நொடிகூட விடாமல் கைங்கர்யம் செய்ய வேண்டுகிறார்.
ஆறாம் பாசுரத்தில் “சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே” என்று ஆழ்வார் சொல்வதும் வால்மீகி இராமாயணத்தில் நாட்டின் குடிமக்கள் எல்லோரும் சென்றதாக சொல்வதும், சிறிது வேறுபட்டு இருப்பதை, நம் ஆச்சார்யர்கள், “எல்லோரும் செய்யும் தொண்டுகளை இலக்குவன் ஒருவனே செய்ததால் அதுவே சுற்றம் எல்லாம் சென்றார்கள் என்பதுபோல் ஆயிற்று என்பார்கள். அதே பாசுரத்தில் “அற்றவர்கட்கு அருமருந்தே! ” என்று சொன்னது, காட்டில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத இருந்த முனிவர்களை, இராமன் அரக்கர்களிடம் இருந்தும் விலங்குகளிடம் இருந்தும் காத்து அருளியதைக் குறிக்கும். அயோத்தி நகர்க்கதிபதியே என்றது அயோத்திக்கு மட்டும் மன்னராக இருந்ததை குறிப்பிடுவது அல்ல, அயோத்தி என்னும் பகுதியை வைகுந்தத்திலிருந்து கொடுத்தருளிய அதிபதி என்பது பொருளாகும்.
ஏழாம் பாசுரத்தில், இராமனுக்கு தாலாட்டு பாடும், குலசேகரப் பெருமாள், ஆல் இலையில் குழந்தையாய், உலகங்களை எல்லாம் வயிற்றில் அடக்கியவனே, வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை அரசைக் கொடுத்தவனே என்று பாடுகிறார். “ஆலிநகர்க் கதிபதியே” என்று சொல்லும்போது, ஒரு வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அரசை கொடுத்து சுக்ரீவனை, தனக்கு துணையாகக் கொண்டவனே என்று கூறுகிறார்.
எட்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும், யுத்த காண்டத்தை தொடுகின்றன. ஒன்பதாம் பாசுரத்தில், “இளையவர்க்கு அருள் உடையாய்” என்ற சொற்தொடர் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இராமன் இளையவர்களுக்கு கருணையுடன் இருந்ததை, இளையவனான சுக்ரீவனுக்கு, வாலியை கொன்று, அரசாட்சி கொடுத்து அருள் புரிந்ததையும், மூத்தவனான இராவணனைக் கொன்று, இளையவனான வீபீஷணருக்கு ஆட்சி கொடுத்தையும் ஆழ்வார் குறிப்பிடுகின்றார்.
பத்தாம் பாசுரத்தில் உள்ள, “அரங்க நகர் துயின்றவனே” என்பது அரங்கநாதனை குறிக்கும். “யாவரும் வந்து அடி வணங்க“, என்பது மீண்டும் அயோத்தி வந்து முடிசூட்டிக் கொண்ட பட்டாபிஷேக இராமரைக் குறிப்பிட்டது போல் உள்ளது. ஸ்ரீரங்கத்தில் உள்ள காவேரி நினைவிற்கு வர, “காவேரி நல் நதி பாயும் கண்ணபுரத்து என் கண்மணியே” என்று காவேரி நதியை, ஆழ்வார் திருக்கண்ணபுரத்திற்கே கொண்டு வந்து விட்டார்.
இந்த பதிகத்தின் இறுதி பாடல், இந்த பதிகத்தைப் படிப்பவர்களுக்கு வரும் பயன்களை கூறுகின்றது. இராமனின் திருத்தாயாரான கௌஸல்யா, இராமருடைய சிறு வயது அனுபவங்களை அனுபவித்து மகிழ்ந்ததை போல், குலசேகர ஆழ்வார் பக்தராய் இருந்து அனுபவித்தாற்போல், இந்த பதிகத்தைப் படிப்பவர்களும், கேட்பவர்களும், சிறந்த பக்திமான்களாக இருப்பார்கள் என்று கூறி ஆழ்வார் நிறைவு செய்கிறார்.
குட்டி ராமரை பற்றிய ஒரு சிறு குறிப்போடு இந்த வலைப்பதிவினை முடித்து பிறகு குலசேகர ஆழ்வாரின் ஒன்பதாம் பதிகத்தைப் பார்ப்போம்.
தசரதருக்கு ஸ்ரீ ராமன், பரதன், லஷ்மணன் மற்றும் சத்ருக்னன் என்ற நான்கு மகன்கள் பிறந்தனர். அந்த குழந்தைகளை தனித்தனி தொட்டில்களில் போட்டு தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள். அந்த குழந்தைகள் நன்றாக சப்தம் போட்டு அழுது கொண்டனவே தவிர தூங்கவோ விளையாடவோ இல்லை. அப்போது குல குருவான வசிட்டர் வந்து பார்த்து, சிறுது நேரம் யோசித்து, பின்னர், அந்த தொட்டில்களின் வரிசையை மற்றச் சொன்னார். முதலில் ஸ்ரீ ராமன், அடுத்தது லக்ஷ்மணன், மூன்றாவதாக பரதன், அதன் பிறகு கடைசியாக சத்ருக்னன் என்று தொட்டில்களை மாற்றிய பின் பாதி அழுகை சப்தம் குறைந்தது; ஆனால் குழந்தைகள் அழுவதை முழுவதுமாக நிறுத்தவில்லை. மீண்டும் வசிட்டர் யோசித்தார். பிறகு இரண்டு தொட்டில்களை எடுக்கச் சொன்னார். ராமனையும் லக்ஷ்மணனையும் ஒரு தொட்டிலிலும், பரத சத்ருகுணர்களை இன்னொரு தொட்டிலிலும் விடச் சொன்னார். அழுகை முற்றிலும் நின்றது.
அன்று முதல் ராமனுக்கு கைங்கர்யம் செய்ய லக்ஷ்மணன் என்றும், ராமனே எல்லாம் என்று இருந்த பரதனுக்கு கைங்கர்யம் செய்ய, சத்ருக்னன் என்றும் ஆயிற்று.
இராமனுக்கு இலட்சுமணன் செய்த கைங்கர்யம், இராமனுக்கு இதெல்லாம் தேவை, அவற்றை நாம் செய்வோம் என்று தானே முடிவு செய்து, இராமன் அந்த கைங்கர்யங்கள் வேண்டும் என்றாலும், வேண்டாம் என்றாலும் அவற்றை செய்து முடிப்பது ஒரு வகையான பகவத் பக்தி.
இராமனுக்கு, பரதன் செய்த கைங்கர்யம், இராமன் முடிவு செய்து பரதனிடம் செய் என்று சொன்னதை, பரதன் மிக சிரத்தையுடன் செய்வது. இது இன்னொரு வகையான பகவத் பக்தி. பரதன் சொன்னதை, மிக சிரத்தையுடன் செய்வது சத்ருக்னனின் கைங்கர்யம். அது பாகவத பக்திக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
ஒன்பதாவது பதிகம், ஆழ்வார், இராமபிரானின், தந்தையான தசரத மஹாசக்ரவர்த்தியாக, பாவித்து பாடிய அற்புத பாசுரங்கள். கௌசல்யாவின் மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களை முடித்தபிறகு, ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை கொடுக்கப் போகிறார். அதை நாம் அடுத்த பதிவினில் காணலாம்.
எட்டாம் பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம். அவர்களுக்கு எங்கள் நன்றி.
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=131
Click to access mannupugaz.pdf
============================================================
In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections. Azhwaar, whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees, sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.
in his first three subsections, Kulasekara Azhwar sings about Thiru Arangan, how Azhwaar yearned to have dharsan of Thiru Arangan, along with His thronging devotees and enjoy the glimpse of Thiru Arangan. Azhwaar also cautions us on how to face and avoid those people who are not devotees of Thiru Arangan. The fourth subsection is for Thiruvenkadamudaiyaan and Azhwaar narrates his wish on what he wants to be, like a foot step in front of the deity or in any form, but to be in Thiruvengadam, as his main objective and he explains the same in a logical sequence, so that we can understand the concept easily.
In his next subsection, Azhwaar explains two of the important concepts in Vaishnavism, namely, Ananya gathithvam and Aakinchanyam, which are closely related to Total Surrender or Saranagathi. Azhwaar has taken these topics with various examples, in this subsection, with a special request “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”, to the chief deity of Thiruvithuvakode.
In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of Archai In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram. In the sixth subsection, Azhwaar takes the roles of the Gopikas, the women folk of Brindavan, who lived at the same time of Sri Krishna and loved Sri Krishna. In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar, (Holy Devaki), the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age.
In the next subsection, Azhwaar, enjoys the happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age. Those who are familiar with the Indian classical music, may sing these hymns in the raag Neelambari. All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram. Before we go into the details of 8th Subsection, let us see a few interesting points about Thirukannapuram, who is regarded as the God who gives Sri Vaikuntham, the abode for all people who have surrendered to Him, by Swami Namazhwaar in his Thiruvaimozhi. (“Saranamaagum thana thaal adainthaarkellaam Maranamaanal vaikuntham kodukkum perumaal“) (9.10.5).
The Perumal in this Thirukannapuram Divya Desam, has been blessing devotees in all the four Yugams, namely, Krutha, Thretha, Dwapara and Kali. Hence He is aptly called as The Deity who has seen many Chathur Yugams. (people say 64 Chathur Yugams).
Thirukannapuram is also one of the five Krishna Holy Places or Pancha Krishana Kshetrams. The others are Thirukanna Mangai, Thirukannan Kudi, Thiru Kabithsthalam and Thiru Kovilur. Even though Thirukannapuram is one of the Krishna Kshetrams, the Chief Deity might have given His Dharsan to Kula Sekara Azhwaar as Rama and that could be the reason why Azhwaar sings the lullaby to Rama here. The deity here in Thirukannapuram had also performed a Walk for Sri Vibhishnan, the brother of Ravana. This nadai (walk) sevai is done in Thirukannapuram every New Moon day of the month even now.
Periyazhwaar has sung lullaby to the baby Krishna in his hymn “Maanikam Katti, Vaiyiram Idai Katti“. This 8th subsection of Perumal Thirumozhi, is the lullaby for the young Sri Rama. In Tamil there are 96 different types of poetry and Azhwaar has used Pillai Tamil as the base for the hymns in this subsection.
Sri Vaishnavaas call Thirukannapuram as the Eastern House of Perumaal. Similarly the western house is Sri Rangam, the Northern House is Thiruvenkadam and the Southern house is Thiru Maalirumcholai (Madurai).
Thirumangai Azhwaar, whom we have to see in our future weblogs, and who is the last in the list of Azhwaars, got the meaning of Thiru Manthiram, one of the key concepts of Sri Vaishnavam, from this Deity of Thirukannapuram, Sri Neela Megha Perumaal. Hence, as a mark of respect, Thirumangai Azhwaar compiled 100 hymns on this Perumaal, which is the maximum number of hymns Thirumangai Azhwaar has compiled for any divya desam deity.
The only other deity to whom 100 hymns were compiled by Thirumangai Azhwaar is for the perumaal in Thirunaraiyur, who did the Pancha Samskaram, a purification process for all Sri Vaishnavaas, to Thirumangai Azhwaar
Pancha Samskara (meaning Five Purifications) is a ritual practiced by all sri vaishnavaas, during Samasrayana. Samasrayana means ‘to approach with all sincerity and truthfulness to Acharya’. During this rite, the acharya initiates a person, irrespective of sex, caste, social status etc., as his Sishya. It is a commitment from the disciple that he or she will live as per the wishes of the acharya. Thus, the person gets the link to the Vaishnava tradition.
Samasrayana consists of the guru initiating or coaching the disciple through a five step process:
(1) For body purification, embossing the impression of Vishnu’s Sudharsana discus (chakra) on the right shoulder of the disciple and of Vishnu’s paanchasanyam or the conch (sanghu) on the left shoulder of the disciple.
(2) Teaching the disciple, the twelve places in the body where Vishnu resides and making them wear the Thiruman Kappu (Tilak) with appropriate Vishnu name for each location.
(3) Adding the suffix dasan to the name of the disciple (one is forever the slave of Sriman Narayana and Swami Ramanjua, one of the most important acharyas for srivaishnavaas).
(4) Teaching the most important manthirams for srivaishnavas, namely, (Rahasya traya mantras – 1.Ashatksharam, (8 syllable manthra), 2. Dwayam (Two lines manthra) & 3. Charama slokam)
(5) Teaching the disciple the proper way of Vishnu worship, including Bhagvath Thiru Aaraadhanam.
Let us see more about Thirumangai Azhwaar in our future weblogs, who has compiled 100 hymns on Thirunaraiyur Nambi for performing the panchasamskaram for him and 100 hymns on Thirukannapuram Neelamegha Perumaal, who has taught him the meaning of the Thirumanthiram. In addition to Thirumangai Azhwaar, Aandal, Periazhwaar and Namazhwaar have compiled 128 hymns on Thirukannapuram divya desam. We can keep on adding more and more glories on Thirukannapuram, but let us return to the topic of this weblog, namely, Perumaal Thirumozhi, 8th Subsection.
Ramayanam, one of the two important epics of Hinduism, has seven major sections and they are :
Kulasekara Azhwaar has compiled the 8th Subsection of Perumaal Thirumozhi in this sequence.
Azhwaar describes the birth of Sri Raman in the first sentence of the first hymn of this subsection by “Mannu Pughazh Kowsalai than mani vayiru vaaythavane” and in the second sentence, azhwaar tells the purpose of His birth, by “then ilangai kon mudigal sindhu vithaai“, meaning that the ten heads of Ravana were shattered.
In the second hymn, Azhwaar talks about Sri Raman, who pierced the chest of Thadagai, the woman demon, through His arrows and azhwaar also says that people would voluntarily surrender their hearts to the lotus feet of Sri Raman, once they see the beauty of Sri Raman by “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.
In the third hymn, Kulasekara Azhwaar mentions that Sri Raman was a good son of Kowsalya and a good son-in-law of Sri Janaka Maha Chakravarthy. Azhwaar also joins Sri Raman by calling Him as “Engal Kulathin Innamuthe”, meaning, the sweetest person in our tribe. Here azhwaar, refers to the tribe as Sri Vaishnava group as well as the group of Kings, as Kulasekara Azhwaar is also a king.
In the fourth hymn, Kulasekara Azhwaar brings out an interesting aspect, highlighting the contrasting glories of Paramathma. On one hand, He created Brahma, who is given the responsibility to create all the human beings and other living things in this universe and on the other hand, He became a child and made Dasarathan a proud father of Him, when Azhwaar mentioned, “Thamarai mel Ayanai padaithavane, Dasarathan than maamathalaai, Mythili than manavaala“. In the same hymn, Azhwaar also brings out a point that He can make the Bow and Arrow listen to Him and act according to His wishes, when he mentioned, “Ae maruvu silai valavaa“, which is much similar to what Periazhwaar said in his Palllanaadu “Saarngam ennum vil aandaan“.
In the next hymn, Azhwaar talks about the wishes of Lakshman, the younger brother of Sri Rama, when he mentioned “Aaraa Anbu Ilayavanodu arum kaanam adainthavane“. Lakshman insisted and forced his way to come along with Sri Rama to the forest to do all the services to Sri Rama and Sita. This is comparable to the request by Swami Nammazhwaar in his Thirvaimozhi (3.3.1), “Ozhivil Kaalamellam“, where he wants to do all the services in every second to Him, like what Bharathan, the other younger brother of Sri Rama did when he went back to Ayodhya to carry out the instructions of Sri Rama, as well as the services done by Lakshman in the forest, by staying with Sri Rama.
In the sixth hymn, Azhwaar mentions “Sutram elllam pin thodara thol kaanam adainthavane“, meaning that Sri Rama went to the forest along with all his relatives. But in Valmiki Ramayanam, it is mentioned that only the citizens of Ayodhya followed Sri Rama, Sita and Lakshman and not the relatives of Sri Rama. Our acharyaars explained this contradiction, beautifully, by saying that Lakshman who went along with Sri Rama represented all the relatives, as he did all the services, what could have been done by them and hence what Azhwaar said was true. In the same hymn, Azhwaar also mentioned about “Attravarku aru marunthey“, meaning He will be the source of strength for those who do not have any support. This is in line with the support which Sri Rama extended to the sages in the forest, who were facing challenges from both the wild animals and also from the demons. When Azhwaar mentioned “Ayothi nagarukku athipathiye” it just did not mean that He was the king of Ayodhya, but it was He who sent a part of Srivaikuntham to create this Aydodhya.
The seventh hymn, the lullaby to Sri Rama talks about Paramathma, who takes the form of a Child on a leaf of a banyan tree, after a Maha Pralayam during which He takes the entire universe into his stomach. Azhwaar also mentiones about Sri Rama killing Vaali, the king of Kishkinta and giving Kishkinta to Sukreevan, the brother of Vaali. Azhwaar mentions this as “Aalee nagarkku athipathiye” meaning that He killed Valli and He gave the Kingdom to his brother Sukreevan and made him His friend.
The eighth and ninth hymns of this subsection talks about the Yutha Kaandam, the part that explains the war between Sri Rama and Ravana. In the ninth hymn, there is a term, “illayavarkku arul udaiyaai“, mentioned, meaning, “helpful to the younger ones”, which is of special interest, as Sri Rama helped the younger brother Sukreevan to get the kingdom after Sri Rama killed Vallli, his elder brother. Similarly Sri Rama also killed Ravana and gave the kingdom to Ravana’s younger brother Vibishanan.
In the tenth hymn, Azhwaar mentions a term “Yaavarum vanthu adi vananga” referring to Sri Ranganathar. This reminds us about Chakravarthy Thirumagan, Sri Rama, after he was crowned as the King of Ayodhya, where everyone came to prostrate at His holy feet. Azhwaar also recollects about Srirangam and Cauvery, so he brought the river Cauvery to Thirukannapuram, when he mentioned “Kaveri nal nathi paayum kannapurathu en karumaniye“.
In the last hymn of this subsection, Azhwaar indicates the benefits to the people who sing or read or listen to this set of hymns. Azhwaar concludes by saying that the people who read or sing or listen to this set of hymns would be happy and would continue to be a very staunch devotees of Vishnu, like the happiness that Kausalya had, with the child Rama and the like the happiness that Azhwaar had, when he enjoyed listening to the details of Ramayana.
Let us conclude this weblog with a short incident about Sri Rama, when He was a child and then we go to the next weblog on Kula Sekara Azhwaar’s ninth Subsection. The king Dasarathan had four children, Sri Rama, Bharathan, Lakshmanan and Chathrugnan, born to him at the same time. The maids were trying to make the babies sleep by keeping them in four different cradles. The babies kept crying and they did not sleep. No one knew the reason. The Guru Vasishtar came to look at the children. After a brief thought, he asked the maids to change the order of the cradles, first is for Sri Rama, second is for Lakshmanan, the third one is for Bharathan and the fourth is for Chathrugnan. Now it was found that the noise level of the babies came down, but they did not stop crying or sleep. Again, the guru Vasishtar thought for a while and asked the maids to remove two cradles and asked them to place Sri Rama and Lakshman in one cradle and Bharathan and Chathrugnan in the other cradle. The babies stopped crying totally and they started playing.
From that day onwards, Lakshmanan dedicated himself to serve Sri Rama. Chathrugnan dedicated himself to serve Bharathan, to whom Sri Rama was everything.
The dedication of Lakshmanan was such that he served Sri Rama as per his own perception of whatever were needed for Him, whether the services were actually wanted by Sri Rama or not. It is one type of total dedication to Paramathma.
But Bharathan had also served Sri Rama in an utmost sincere manner, by carrying out all the services that were asked by Sri Rama and were delivered as per the wishes of Sri Rama. This is another type of dedication towards Paramathma. The services that were done by Chathrugnan for Bharathan were good examples of dedication towards devotees .
The total lyrics of the eighth subsection hymns are given under the following websites and we express our thanks to them.
Click to access mannupugaz.pdf
In the eighth subsection Azhwaar elaborates the happiness of Kowsalya, the mother of Sri Rama, but in the ninth subsection, Azhwaar would bring out the sadness of Dasarathan, the father of Sri Rama, after he was separated from Sri Rama, who went to the forest, which we would cover in our next weblog. Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, in the ninth subsection.
————————————————————-
For English version, please click here, Thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் திருமொழியில், முதல் ஐந்து பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.
முதல் மூன்றுபதிகங்களில், திருஅரங்கனைப் பற்றியும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று மகிழ்ச்சி அடைவது, என்பதை பற்றியும், அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது என்பதனையும் பாடினார் என்று பார்த்தோம். திருவேங்கடமுடையானை சரண் அடைந்ததும், அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் செய்யவும் திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் இந்த பதிகத்தில் ஏங்குகிறார். ஐந்தாவது பதிகத்தில், “நீயே எனக்கு உபாயம், நான் வேறு யாரிடமும் செல்ல மாட்டேன்” என்பதை நமக்கு புரியும் வண்ணம் பற்பல உதாரணங்களால் விளக்கும் ஆழ்வார், “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்று திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்லும் சொற்தொடர்களால் நம் மனதினில் பதிய வைக்கிறார்.
இது வரை பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், இனி வரும் பதிகங்களில் மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் அனுபவத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாகவும், ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாகவும், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாகவும், தந்தையான தசரத மஹாசக்ரவர்த்தி ஆகவும் பாவித்து பாடிய அற்புத பாசுரங்களை காண்போம்.
பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம், ஸ்ரீவைஷ்ணவத்தில் உள்ள ஒரு முக்கிய தத்துவமாகும். ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவும் ஒன்பது விதமான சம்பந்தங்கள் உள்ளதாக நம் ஆச்சார்யர்கள் எடுத்து உரைக்கின்றனர். அவற்றில். இப்பொழுது, சேஷ சேஷி சம்பந்தம் என்பதை மட்டும் பார்க்கலாம்.
பரமாத்மா, ஆண்டான் அல்லது எஜமானன் அல்லது சேஷி என்பதும், ஜீவாத்மா, அடிமை அல்லது சேவகன் அல்லது சேஷன் என்பதே இங்கு குறிப்பிடும் சம்பந்தம். ஜீவாத்மா, பரமாத்மாவிற்கு சேவை செய்வதேயே குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டும் என்றும், பரமாத்மாவையே சதா சர்வ காலமும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், உள்ள இந்த சம்பந்தத்தையே ஆழ்வார்கள் பாசுரங்களில் கொடுத்துள்ளார்கள். அதே அளவிற்கு பரமாத்மாவும், ஜீவாத்மாக்களிடம் அன்பும் ஆதரவும் கொண்டு உள்ளார் என்பதும் நம் சித்தாந்தத்தின் மற்றொரு பகுதி.
இந்த பதிகத்தில் ஆழ்வார், ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக நினைத்து பாடும் பாசுரங்களாக அமைத்துள்ளார். கண்ணனைப் பற்றிய பெரியாழ்வார் மற்றும் நம்மாழ்வார் பாசுரங்களில் கண்ணன்மேல் அக்கறையும், மகிழ்ச்சியும் துக்கமும் கலந்து பாடி உள்ளார்கள். ஆனால் குலசேகர ஆழ்வார், இவற்றுடன் கண்ணன் வரவில்லையே என்ற கோப உணர்ச்சியையும் சேர்த்து வெளிப்படுத்தி உள்ளார். இனி இந்த பதிகத்தின் சில பாடலைகளைப் பார்க்கலாம்.
‘யமுனை நதியில் உள்ள ஒரு மணல்திட்டில், பனியில் நடுங்கி, காலை வரை, உன் பொய்யான வார்த்தைகளைக் கேட்டும் “வாசுதேவா உன் வரவுபார்த்தே” காத்து இருந்தேன் என்று ஒரு கோபிகை கோபமும் வருத்தமும் கலந்து சொன்னாள்.
மற்றொரு கோபிகையின் வீட்டிற்கு கண்ணன் சென்று “நானும் உன்னுடன் சேர்ந்து தயிர் கடைவேன் என்று கள்ள விழி விழித்ததற்கு, ‘தாமோதரா மெய்யறிவன் நானே” என்று அந்த கோபிகை கோபத்துடன் சொன்னாள்.
ஒரு பெண்ணை கடைக்கண்ணால் பார்த்து, மற்றொரு பெண்ணிடம் வருவேன் என்று சொல்லி, இன்னொரு பெண்ணை அங்கே வா என்று கூப்பிடுவதை பார்த்த ஒரு கோபிகை, “கண்ணா, உன்னுடன் உன் சேட்டைகளும் வளர்கின்றனவே” என்பதை “உன் வளர்த்தியூடே வளர்கின்றதா உன் தன் மாயைதானே” என்று கூறினாள்.
இன்னொருத்தி, தன் தோழி மூலம் செய்தி அனுப்ப, கண்ணன் அந்த தோழியுடன் உல்லாசமாக இருந்ததாக குற்றம் கூறுகிறார்.
இன்னொரு கோபிகை கண்ணன் தன் வீட்டின் வீதி வழியே மற்றொரு பெண்ணை அழைத்துச்சென்றதை கவனித்ததாக கோபிக்கின்றாள்.
இன்னும் சில கோபிகைகளுடன் கண்ணன் மகிழ்ச்சியாக குழல் ஊதிக்கொண்டு இருந்ததை குறிப்பிட்ட கோபிகை, ஒரு நாள் தங்களுக்காக கண்ணன் வந்து குழல் ஊதுவான் என்பதை “எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத, உன்குழ லின்னிசை ” என்று நம்பிக்கையுடன் ஏங்குகிறாள்.
இதைத் தவிர இன்னொரு பெண் தன்னிடம் கண்ணன் வராததை குறிப்பிட்டு, என்றாவது ஒரு நாள் தன்னிடம் வரும் போது பார்த்துக் கொள்ளுகிறேன் என்பதை, “இங்கொருநாள் வருதியே, என் சினம் தீர்வன்நானே” என்று சொல்கிறார்.
மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம், ஜீவாத்மாவாகிய ஆழ்வார், பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணரை எப்படியாவது அடைய வேண்டும் என்ற கருத்தை நமக்கு தெளிவுபடுத்த, ஆழ்வார் தன்னை கோபிகையாக, உருவகப்படுத்திக் கொண்டு, கண்ணனுடன் எப்படியாவது சேர்ந்து விடவேண்டும் என்பதை விளக்கும் பாசுரங்களாக காணலாம். கண்ணன் மற்ற கோபிகைகளுடன் இருப்பதாக சொன்னது, பரமாத்மாவிற்கு, ஜீவாத்மாவின் மேல் கருணை உண்டு என்பதையும், என்றாவது ஒரு நாள் நமக்கும் அந்த நிலைமை கிட்டும் என்பதையும், நமக்கு புரியவைக்கவே.
இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம். (அவர்களுக்கு எங்கள் நன்றி).
இந்த பதிகத்தில், ஆழ்வார் விபவாவதாரத்து கிருஷ்ணனையும் அவரைப் பெற்ற தாயாரான தேவகியையும் எடுத்துக்கொள்ளுகிறார். குட்டி கிருஷ்ணனின் லீலைகளை மற்றைய ஆழ்வார்களும் இன்னும் பலரும் பாடி இருக்கக் கூடும். ஆனால் குலசேகர ஆழ்வார் எடுத்துக் கொண்ட இந்த கருத்தினை சொன்னவர்கள் ஓரு சிலரே இருக்கக் கூடும்.
இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம். (அவர்களுக்கு எங்கள் நன்றி).
கண்ணனை பெற்ற தாயான தேவகி, அவனை, அவனுடைய சிறு வயதில் பிரிந்ததனால், அந்த பால கிருஷ்ணனால், தனக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்களை இழந்தது பற்றி தேவகி பாடியதை போல் குலசேகர ஆழ்வார் பாடி நம்மை கலங்க வைக்கிறார். இதை நாம், கண்ணனை பிரிந்த தெய்வ தேவகியின் புலம்பல் என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல், பரமாத்மாவை சேர முடியாமல் தவிக்கும் ஜீவாத்மாவின் கவலையும் வருத்தமும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
தாலேலோ என்று குழந்தையை தொட்டில் இட்டு கொஞ்சும் பாக்கியத்தை இழந்ததாக பாடும் தேவகி, “திருவினை இல்லாத் தாயரில், கடை ஆயின தாயே” என்று தன்னை பற்றி சொல்கிறார்.
சிறு வயது கண்ணன், தொட்டிலில் சயனித்து இருக்கும் அழகை, வீட்டில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல், ஊர்ப்பெண்களெல்லாரும் திரண்டு வந்து கண்டு களித்துப் போவர்களே; அவர்களில் ஒருத்தியாக இருந்தாலும், தான் அந்த அழகை ரசித்து இருப்பேனே, அந்த பேறும் கூட தனக்கு கிடைக்கவில்லையே என்பதை “கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன்” என்கிறார்.
பிறந்த குழந்தையை பார்க்க வருபவர்கள், குழந்தையை கொஞ்சி மடியிலிட்டு, உன் தந்தை யார் என்று கேட்பவர்களிடம், குழந்தை, கைகளாலும், கண்களாலும் தந்தையை காட்டும், ஆனால் அந்த பாக்கியம் தன் கணவன் வசுதேவனுக்கு கிடைக்கவில்லையே, என்பதை தேவகி “நல்வினை யில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே” என்று பாடுகிறார்.
தாய் ஒருத்தியை தவிர வேறு ஒருவரையும் அறியாத இளம் பருவத்தில், தாயைக் கண்ட மகிழ்ச்சியை கண்ணன் முகத்தில் வெளிப்படுத்திய அழகை அநுபவிக்க பெறாமற்போனேனே என்பதை “பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் ” என்று கூறுகிறார்.
சிறு குழந்தையான கண்ணன் கொடுக்கும் முத்தத்தையும் அவன் பேசிய மழலைச் சொற்களையும் தான் இழந்ததாகவும், யசோதை பெற்றாள் என்பதை, “ஓன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்கிறார். ஒரு வித நோன்பும் நோற்காமல் கண்ணனுடைய சேட்டைகளைக் காணப் பெற்றதால், யசோதையை, தெய்வநங்கை என்று தன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தேவகி கூறுகிறார்.
புழுதி அளைந்த பொன்மேனியுடன் தன் மார்பினில் அணைக்கப் பெற்றிலேன் என்றும், குழந்தை அமுது செய்து மீதியை, (போனகம் செய்த சேடம் ) உண்ணப் பெறவில்லை எனவும் தேவகி சொல்வதாக, “வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன்” என்று ஆழ்வார் கூறுகிறார்.
கண்ணன், தன் அன்னையிடம் பால் குடித்துக்கொண்டு இருக்கும் போது, நடுநடுவே இனிதாக நோக்கும் பார்வையை அநியாயமாய் இழந்தேனே என்பதை “திருக்கண்ணிணை நோக்கந் தன்னையும் இழந்தேன்” என்கிறாள்.
வெண்ணையும் தயிரையும் எடுத்து உண்ட வாயுடனும், பிடிபட்டுவிட்டோமே என்ற பயத்தில் அழுகையும் கண்ணீரும் கொண்டு, கண்ணன் நிற்பதை பார்க்கும் யசோதை, “தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே”, தான் காணவில்லையே என்று தேவகி புலம்புவதா ஓர் பாசுரம்.
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தது, குரவை கூத்து ஆடியது, காளிங்க நர்த்தனம் ஆடியது போன்ற கண்ணனது சிறு வயது விளையாட்டுகளை யசோதைக்குக் காட்டியதை தான் “கண்டிடப் பெற்று இலேன்” என்றும் “தன் உள்ளம் குளிர” மறுபடியும் ஒருதடவை செய்து காட்ட வேண்டும் என்று அடுத்த பாசுரத்தில் வேண்டுகோள் விடுக்கிறாள்.
தாம் முக்கியமான சில அனுபவங்களை இழந்து விட்டோமே என்று தேவகி பாடுவதாக ஆழ்வார் சொல்வது, ஜீவாத்மாவாகிய ஆழ்வார், இப்படி ஒரு பரிமாணத்திலும் பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணரை அடைய பிரார்த்திக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படி தெய்வ தேவகி, கண்ணனின் இளம் பருவ விளையாட்டு அனுபவங்களை தான் இழந்தவைகளாகச் சொல்லும் ஆழ்வார், அடுத்த பதிகத்தில், ஸ்ரீ ராமாவதாரத்தில் கௌஸல்யை, அந்த இராம பிரானை தொட்டிலிட்டு தாலாட்டு பாடியதை அருளிச் செய்கிறார். அவற்றை அடுத்த வலைப்பதிவில் காண்போம். ===========================================================
We have seen the staunch devotion of Sri Kulasekara Azhwaar towards Sri Ramachandra Moorthy or Chakravarthi Thirumagan and his attraction towards His devotees. We have also seen the hymns composed by Sri Kulasekara Azhwaar is called Perumal Thirumozhi and we have seen the first five subsections of Perumal Thirumozhi. Kulasekara Azhwaar, covers Srirangam in the first three subsections of Perumal Thirumozhi, Thiruvengadam in the fourth subsection and Thiruvithuvakode in Kerala in the fifth subsection.
In those three pathigams, Azhwaar talks about Srirangam and how he is longing to have the dharsan of Sri Ranganatha, the chief deity of Srirangam, along with his ardent devotees. Azhwaar also talks about those who do not believe in God and how we should handle or avoid them in our life. After surrendering himself to Thiruvenkadamudaiyaan, Azhwaar narrates his wish on what he wanted to be, like a foot step in front of the deity or in any form , but to be in Thiruvengadam, as his main objective and he explains the same in a sequential manner so that we can understand the concept easily.
In his next subsection, Azhwaar explains two of the important concepts in Vaishnavism, namely, Ananya gathithvam and Aakinchanyam, which are closely related to Total Surrender. Azhwaar has taken these topics with various examples, in this subsection, with a special request “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”, to the chief deity of Thiruvithuvakode.
Till now, Azhwaar has talked about Sriman Narayanan in Archavathaaram, one of the five states of Paramathma. Azhwaar takes Vibavaavathaaram, one more state of Sri Paramathma in his subsequent subsections. He takes different roles of
Let us see some of those interesting hymns, which were composed beautifully by Azhwaar, reflecting the perspectives of those individuals in this weblog.
In Vaishnavism, the relationship between Paramathmaa and Jeevathmaa is important and our acharyaas have explained nine types of relationships that exist between Paramathmaa and Jeevaathmaa. One among them is Sesha- Seshi (Master and Servant) relationship and we will go through that a little more detailed here.
In the Sesha Seshi Relationship, Paramathmaa is considered as Master or Boss and Jeevathmaas are called slaves or servants to Paramathmaa. Jeevathmaa should always have the goal to serve Paramathmaa for ever and keep Paramathmaa in its mind. The same thing is being portrayed by Azhwaars in their hymns.
The other part is that Paramathmaa also loves and supports the Jeevathmaas
In this subsection Kulasekara Azhwaar , takes the roles of different Gopikas, the girls who lived in the same period of Sri Krishna and loved Sri Krishna. Both Swami Namazhwaar and Periazhwaar have composed hymns on Sri Krishna, expressing their care, happiness and sorrow. But Kulasekara Azhwaar expresses anger also along with his sadness, in the hymns of this subsection, when he, as gopikas could not get to be with Sri Krishna. Now let us get to go through some of the hymns of this subsection.
One gopika says with anger and sadness that she heard His lies and still was waiting for Sri Krishna (“Vasudeva un varavu paarthey“) on the sands of the river Yamunai, all night, shivering in the cold weather.
In the next hymn, Azhwaar in the role of a gopikas says angrily that she knew the truth (Damodara, Mei Ariven Naane“) and the clandestine purpose of Sri Krishna, when He offered to churn the curd along with another gopika
In the next hymn, Azhwaar says that “Un valarthioode valarkindrathaal unthan maayai thaane” meaning Sri Krishna’s tricks were also growing along with him, as He glanced a girl and at the same time, His heart wanders for another girl, and He gave word to yet another and finally misled an innocent girl.
Another Gopika complains that she sent a message through a girl, but Sri Krishna was happily spending time with the messenger girl.
Another Gopika says that she noticed that Krishna took a girl purposely through the street in which her house was located.
In one of the hymns Azhwaar, in the role of a Gopika, believed “engalukke oru naal vanthu ootha, un kuzhal innisai” meaning that one day Krishna would come and play flute only for her, as she saw Krishna delightfully playing his flute with a few gopikas.
Apart from these one gopika is so angry with Krishna for not visiting her and she said “ingu oru naal varuthiye, en sinam theervan naane” meaning that she would show her anger towards Him on that day, when He comes to her.
All the above examples are to demonstrate to us that all Jeevathmaas should reach the Paramathmaa somehow. So Azhwaar, as jeevathma, takes the role of gopika, and expressed their eagerness to be with Sri Krishna, the Paramathmaa, by composing these hymns, even if it meant to be offensive and with anger. In those hymns, when Azhwaar mentions that Sri Krishna was with other gopikas, that is to inspire us that Paramathmaa has got kindness towards Jeevathmaas and He would one day give the similar status to each and every one of us, the jeevathmaas.
You may be able to get the full text of the lyrics of these hymns in the following website and we take this opportunity to express our thanks to them.
This subsection is also the experience of Azhwaar with Sri Krishna of Vibhavaavathaaram and His mother Devaki. We all know that Sri Krishna was separated from His parents Vasudeva and Devaki, and moved to Brindavan, on the same night, he was born, and Nandagopan and Yasoda became His foster parents. There are many poets including Azhwaars, who have composed hymns and songs on the naughty or playful days of Sri Krishna. But Kulasekara Azhwaar has taken totally a different perspective, which may have been covered by only a very few.
You may be able to get the full text of the lyrics of these hymns in the following website and we take this opportunity to express our thanks to them.
In this subsection, Azhwaar takes the role of Devaki and lists the experiences that she should have got with young Sri Krishna and enumerates them painfully as the missed experiences. Azhwaar has given a great title to her, as Deiva Devaki, (Goddess Devaki). We can not only take these experiences as a set of griefs from Deiva Devaki, but also a set of concerns and griefs of a Jeevathmaa longing to attain the holy feet of Paramathmaa.
Devaki missed the opportunity to play with Sri Krishna, when He was in the cradle and sing the lullaby “Thalelo”. She said to herself that she was the last in the list of lowest mothers. (Thiruvinai illa thaayaril kadai yaayina thaaye“)
There were many people, those at home as well as people from outside, who had enjoyed the smile of Sri Krishna, as a young boy, when He was lying in the cradle. Devaki felt that she could have been one of those outsiders to have had a glimpse of Sri Krishna and enjoyed His beauty, but she missed that experience of Him, very badly by saying “kidantha kidakkaiyai kandida petrilaen”
Generally, the child would show, who his or her father is, by looking at the father or by pointing with the hand, when the people, who visit the child, ask for the same. Devaki moaned that such opportunity was not given to her husband Vasudevan, (“nal vinal illa nangal kon vasudevan petru ilane”), as she was unfortunate not to be with Sri Krishna at His young age.
Devaki cries that she missed the opportunity to have a glimpse of Sri Krishna’s smile on seeing his mother at the young age, when generally the child, does not know anyone else other than the mother. (pillaimai inbathai izhantha paaviyen”)
Again Devaki expresses her sorrow about what she missed and what Yasoda experienced when she feels for missing the kisses of young Krishna and His sweet infant words. Devaki takes this opportunity to compliment Yasoda at this time, by calling her as Deiva Mangai, (Holy Lady), as she got the innumerable experiences of being with the young Sri Krishna, even without performing any serious prayers like fasting etc.
Devaki says that she is a greater sinner that she missed the opportunities to watch the young Sri Krishna play on the mud and then slowly crawling to embrace her with dust all over. She also did not enjoy the remains of the food that was tasted by Sri Krishna. “vaai konda adisilin michil unnap petru ilayn“
Devaki talks about herself missing the sweet tender smile of young Sri Krishna, when He was being fed by His mother. “Thiru Kanninai Nokkam thannaiyum izhanthene”
In another hymn, Azhwaar in the role of Devaki said that Yasoda had seen and enjoyed with unlimited happiness, (“tholai inbathu iruthi kanndaale”) when Sri Krishna would have given a complex look, combining fear for getting caught after stealing the butter, which was visible on the lips and over His little mouth, but still pleading with hands. Devaki cried that she did not get such experience.
Devaki now started asking for a rerun of Sri Krishna’s early day acts such as holding the mountain Govardhan, (“Kundrinaal kudai kavithaathum“), dancing with multiple pots on hands and head, (“kola kuravai Kothathum ), dancing on the head of the snake, Kaalingan, (Kaaliyan thaalai mithithathu”) so that she could get satisfied as these were enjoyed by Yasoda.
What we should understand from the above is that Azhwaar takes this perspective of narrating these sad experiences of Deiva Devaki and use that as an opportunity to plead for the eternal world from Paramathmaa or Sri Krishna.
After these sad and missing experiences of Deiva Devaki with the young Sri Krishna, Azhwaar takes Kowsalya, the mother of Sri Rama and her experiences of grooming or growing Rama when He was young and in the cradle by singing the lullaby “Thalelo”. Let us see this in our next weblog.
For English version, please click here, thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் திருமொழியில், முதல் நான்கு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையே பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் பாடி உள்ளார். அடுத்த பதிகத்தை கீழே காண்போம்.
சென்ற பதிகத்தில், திருவேங்கடமுடையான் முன் ஒரு படியாகவோ அல்லது திருமலையில் ஏதேனுமாகவோ வேண்டி, நமக்கு அதனை படிப்படியாக புரிந்துகொள்ளும்படி சொன்ன ஆழ்வார் இந்த பதிகத்தில், நாம் என் பரமாத்மாவை விடாது பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை பற்பல உதாரணங்களால் விளக்குகிறார்.
இது நமது சம்பிரதாயத்தில் உள்ள இரண்டு முக்கிய கோட்பாடுகளை விளக்குகிறது. ஒன்று அநன்ய கதித்துவம், மற்றொன்று ஆகிஞ்சன்யம். அநன்ய கதித்துவம் என்றால் உன்னை அல்லால் எனக்கு வேறு ஒருவரும் இல்லை என்பது. ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது. இந்த இரண்டும் நமது முக்கிய கோட்பாடான சரணாகதியுடன் சேர்ந்தே இருப்பது. இந்த கருத்துக்களையே ஆழ்வார் இந்த பதிகத்தில் “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்ற சொற்தொடர்களோடு, நமக்கு மனதில் பதியவைக்க சொல்கிறார்.
கேரளத்தில் அமைந்துள்ள திருவித்துவக்கோடு, என்றும், இன்று திருமிற்றகோடு என்றும் கொண்டாப்படும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் உய்யவந்த பெருமாளை வாழ்த்தி பக்திச்சுவை மிக்க பாடல்களால் ஆழ்வார், வழிபடுவது இந்த பதிகத்தில் இடம் பெற்று உள்ளன.
இந்த பதிகத்தின் பாடல்களை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம். அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்களும் நன்றியும்.
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3769
Click to access taruduyaram.pdf
“அரி சினத்தால், ஈன்ற தாய் அகற்றிடினும், மற்று அவள் தன், அருள் நினைந்தே, அழும் குழவி; அது போன்று இருந்தேனே ”
கோபத்தில், தாய் தனது குழந்தையை தள்ளி வைத்தாலும், குழந்தைக்கு வேறு எங்கும் செல்ல தெரியாமல், அது அழுது கொண்டே தன்னுடைய தாயினிடத்திலேயே சென்று, தாயின் கருணையினையே வேண்டுவது போல், தானும் திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சரண் அடைந்து அவன் வேண்டாம் என்று சொன்னாலும் அவனை விட்டு அகலாமல் இருப்பேன் என்று ஆழ்வார் இந்த பதிகத்தின் முதல் பாட்டில் சொல்கிறார்.
“கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும், கொண்டானை அல்லால், அறியா குலமகள் போல் “
கணவன், மற்றவர்கள் குறை சொல்லும்படி நடந்துகொண்டாலும், நல்ல குணமுடைய மனைவி, தனது கணவனை விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வதுபோல், ஆழ்வாரும் திருவித்துவக்கோட்டு அம்மானை விட்டு பிரியாமல் இருக்கிறார்.
“எத்துயரம் தரிதிடினும், தார்வேந்தன், கோல் நோக்கி வாழும், குடி போன்று இருந்தேனே “
அரசாளும் மன்னன், பொதுவாக மக்களுக்கு செய்திடும் செய்கைகள் யாவும் தனி ஒரு பிரஜைக்கோ அல்லது எல்லாருக்குமோ துன்பம் தந்தாலும், குடிமக்கள் தொடர்ந்து அந்த மன்னனையே தங்களுக்கு நன்மை செய்வான் என்ற எதிர்பார்ப்போடு காத்து இருப்பதை போல், ஆழ்வாரும், வித்துவக்கோட்டு பெருமாள், ஆழ்வாரை கவனிக்காவிட்டாலும் பெருமாளை விடாமல் இருப்பேன் என்று இந்த மூன்றாம் பாட்டில் கூறுகிறார்.
“வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் பால் மாளாத காதல், நோயாளன் போல், “
நாம் ஒரு வியாதி என்று மருத்துவரிடம் செல்லும் போது, அவர் நம்மை கத்தி மற்றும் பிற உபகரணங்களை கொண்டு, கீறி, நம் உடம்புக்கு தற்காலிகமாக துன்பம் கொடுத்தாலும், நாம் அதை பொறுத்துக்கொண்டு, அந்த மருத்துவரிடம் தொடர்ந்து மரியாதையும், விருப்பதையும் கொண்டு உள்ளது போல், ஆழ்வார், வித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்வது என்ன வென்றால், அவர் தனக்கு தொடர்ந்து துன்பங்கள் தந்து கொண்டு இருந்தாலும், அவருடைய அருளையே எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் என்பதே. இது இந்த பதிகத்தின் மிக பிரசித்தி பெற்ற பாடலும், நான்காவது பாடலும் ஆகும்.
“எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும், வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே”
சுற்றும் அலைகளை தூக்கி எறிந்து கொண்டுஇருக்கிற கடலில் நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்து எங்கும் கரையை காண முடியாமல், தான் இருந்த இடமான கப்பலுக்கே, திரும்பி வரும் பெரிய பறவைப் போன்று, தானும் வித்துவக்கோட்டு அம்மானின் பாதங்களில் சரண் அடைவதாக ஆழ்வார் தனது அடுத்த பாசுரமான ஐந்தாவது பாசுரத்தில் தெரிவிக்கின்றார்.
“செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம், அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்“
இந்த பதிகத்தில் இது வரையில், நீ என்ன செய்தாலும் உன்னை விட்டு அகலமாட்டேன் என்று உரைத்த ஆழ்வார், இனி வேறு யார் எதைச்செய்தாலும், அவர்களிடம் செல்ல மாட்டேன் என்றும் சொல்வது போல் பாடல்களை அமைத்து உள்ளார்.
ஆறாவது பாசுரத்தில், தாமரை, சூரியனை பாரத்தால் மட்டுமே மலரும், தீயோ அல்லது மற்ற எந்த விதமான வெப்பத்தைத் தருகின்ற உபாயத்திலும் மலராது, அது போல் உன்னுடைய உயர்ந்த குணங்களுக்கு மட்டுமே நெஞ்சு உருகுவேனே தவிர, மற்றவைகளுக்கு நெஞ்சு உருக மாட்டேன் என்று வித்துவக்கோட்டு அம்மானிடம் தெரிவிக்கின்றார்.
ஏழாவது பாசுரத்தில், மேகம், தொடர்ந்து பலகாலம் மழையை தராவிட்டாலும், பசுமையான பயிர்கள், தனக்கு வேண்டிய நீருக்காக, அந்த மேகத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்குமே தவிர வேறொன்றையும் எதிர்பார்க்காது இருப்பது போல், ஆழ்வாரும், பரமாத்மாவாகிய வித்துவக்கோட்டு அம்மான், தன்னுடைய துன்பங்களை போக்காமல் விட்டாலும், தான் தொடர்ந்து அந்த பெருமானையே வேண்டி இருப்பேன் என்று கூறுகிறார்.
கரை புரண்டு ஓடுகின்ற நதியானது, கண்டவிடமெல்லாம் ஓடி, கடைசியில் அது ஆழமான கடலிடத்தில் சென்று அடையுமே தவிர வேறு எங்கும் சென்று முடியாது என்பது போல், தானும் வித்துவக்கோட்டு அம்மானின் திவ்யகுண நலன்களில் மூழ்கி இருப்பேனே தவிர வேறுஎங்கும் தனது கவனத்தை திருப்ப மாட்டேன் என்று இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் தெரிவிக்கின்றார்.
இந்த பாடலில் வரும் உதாரணம் சிறிது கடினமானது. உலகத்தில் உள்ள செல்வங்களை விரும்பாமல். பெருமானையே வேண்டி நிற்பவனை செல்வம் தானாக வந்தடையும் என்பது உலக நியதி. எவனொருவன் ஆண்டவனிடம் அன்பு கொண்டு அவனை மட்டுமே விரும்பி, இந்த உலக ஐஸ்வரியம் மற்றும் பிற பொருள்களை விரும்பாதவனுக்கு, பகவான் எப்படி தொடர்ந்து அன்பு காட்டி அவனுக்கு மேலும் மேலும் எல்லா செல்வங்களும் தருகிறார் என்பது உதாரணத்தின் ஒரு பகுதி. இது, ஆழ்வார் தன்னுடைய வாழ்க்கையே சொல்வது போல் உள்ளது. சிறந்த வீரரும், மன்னருமாய் விளங்கும் ஆழ்வார், இந்த உலக செல்வம் வேண்டாம், ராஜ்ஜியம் வேண்டாம் என்றும் மோட்சம் தான் வேண்டும் என்ற போதும், அவருடைய ராஜ்ஜியம் சேர நாட்டில் இருந்து மேலும் மேலும் சோழ, பாண்டிய நாடுகளாக விரிவு அடைந்து கொண்டே இருந்தது.
இறைவனையே வேண்டி செல்வத்தை வேண்டாதிருப்பவருக்கு செல்வம் தானாக வந்து சேரும் என்கிற கருத்து சிந்திக்கத்தக்கது. சில பெரியவர்கள், சென்ற வாக்கியத்தின் செல்வம் என்பது, மோட்சம் என்று பொருள் சொல்வதுண்டு. ‘அண்ட சராசரங்களை வைகுந்தத்திற்கு ஏற்றிய” ஸ்ரீ ராமர், அனுமனுக்கு மோட்ச பலன் கொடுத்தும், அனுமன் அதனை தவிர்த்து, இந்த உலகத்தில் எங்கெல்லாம் ஸ்ரீ ராமர் பூஜை செய்யப்படுகிறாரோ அங்கெல்லாம் இருக்கவே ஆசைப்பட்டார்.
அதே போல், நாம் பின்பு பார்க்கவேண்டிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் இருவரும் தம் பாசுரங்களில் திருவரங்கத்தில் இருப்பதையே வேண்டுகின்றனர். “அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதையும், “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று திருப்பாணாழ்வார் பாடியதையும் கருத்தில் கொண்டால், குலசேகர அழுவார் சொன்ன செல்வம் என்பது மோட்சத்தையே குறிக்கும். ஏனென்றால், அனுமனும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், மோட்சம் வேண்டாம் என்றாலும் அவர்களுக்கு பரமாத்மா மோட்சத்தைக் கொடுத்து இருக்க வேண்டும்.
அதே போல், பரமாத்மாவான வித்துவக்கோட்டு அம்மான், ஆழ்வாரை கவனிக்காமல், ஆழ்வாருக்கு அருளாமல் இருந்தாலும், ஆழ்வார் மீண்டும் மீண்டும் வித்துவக்கோட்டு அம்மானிடமே செல்வேன் என்று உறுதியாக சொல்கிறார்.
இந்தப் பத்துப் பாடல்களிலும் இதே தொனியில் எந்தத் துயரம் தந்தாலும் உன்னை விட மாட்டேன் என்பது பல வித படிமங்களில் விரிகிறது. மேலே சொன்ன பாசுரங்களை படிப்பவர்களுக்கான பலனை இறுதி பாசுரத்தில் வெளியிட்டு, இந்த பதிகத்தினை ஆழ்வார் முடிக்கிறார். வித்துவக்கோட்டு அம்மான் ஆழ்வாரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும் தான் வேறு யாரையும் சரண் அடைய மாட்டேன் என்றும், அந்த பெருமானின் திருவடிகளிலேயே பக்தி கொண்டு காத்துஇருப்பேன் என்றும் சொல்லும் ஆழ்வார் இந்த பதிகத்தைப் படிப்பவர்கள் எத்தனை கொடிய பாவங்கள் செய்து இருந்தாலும் நரகத்தை அடைய மாட்டார்கள் என்றும் சொல்லி முடிக்கிறார்.
ஆழ்வாரின் மற்ற பாடல்களை அடுத்த வலைப்பதிவில் தொடர்வோம்.
We have seen the first four out of the ten subsections of the Perumal Thirumozhi by Sri Kulasekara Azhwaar. His devotion towards Sri Ramachandra Murthy is phenomenal and in the first three subsections of the Perumal Thirumozhi, he has spoken on Srirangam and in the fourth subsection, he has spoken on Thiruvengadam. Let us try to understand the next one here.
In the fourth subsection, Azhwaar had explained his wish on what he wanted to be, like a foot step in front of the deity or anything in Thiruvengadam and he took pains to explain the same in a sequential manner so that we can understand the concept easily. In this fifth section, Azhwaar takes different examples to explain why should we have complele faith in Paramathma, in spite of all difficulties or inconveniences.
This subsection explains two of the important concepts in Vaishnavism. One is called Ananya gathithvam and the other is called Aakinchanyam. Ananya gathithvam means that there is no one else there for us other than Sriman Narayanan, who is the Paramathma. Similarly Akinchanyam means helplessness, as we do not know how to reach the eternal world. Both these concepts are closely linked to the Total Surrender, which is the ultimate aim for all jeevathmaas. Azhwaar has taken these topics in this subsection, with a special term “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”.
In this subsection, Azhwaar offers his prayers through deeply involved devotional hymns, to Sri Uyyavantha Perumal, the chief deity in Thiruvithuvakode or Thirumittakode, as it is known today. .
The full set of hymns can be seen in the following web addresses and our sincere thanks to them.
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3769
Click to access taruduyaram.pdf
“ari sinathaal eendra thaai agatridinum, matru aval than, arul ninaithey azhum kuzhavi; athu pondru irunthene“
In the first hymn of this subsection, Azhwaar takes the example of a child, who keeeps coming back to the mother to get pacified, even after the child is pushed away and ignored initially by the mother out of anger. Azhwaar says that he would come back again and again to the chief deity of Thiruvithuvakodu.
“Kandaar igazhvanave Kaathalan thaan seithidinum, Kondaanai allaal, ariyaa kula magal pol”
Even when people can find fault with the activities and behaviour of the husband, a well groomed wife will never let her husband down. Azhwaar in his second hymn of this subsection, says that he would never leave the chief deity of Thiruvithuvakodu.
“ethuyaram seidinum, thaar vendhan, kol nokki vaazhum kudi pondru irunthene”
Even when all the deeds done by a king result in pain and problems for either the individuals or for all the people in the country, the citizens would always look forward to the king for future good things. In the same way, Azhwaar says that he would not leave the chief deity of Thiruvithuvakode and is expecting Him to take care of Azhwaar, even though Perumal has not blessed Azhwaar with His glance.
“Vaalaal aruthu chudinum, maruthuvan paal maalaatha kaadhal, noyaalan pol”
When a patient visits a doctor, the doctor uses sharp objects like knife etc. to do surgery to cure the diseases. Though the acts of the doctor will certainly be painful to the patient, the patient would still respect and appreciate the doctor’s deeds. Azhwaar, in this famous and the fourth hymn of this subsection, says that he would continue to expect His grace, even if the chief deity of Thiruvithuvakodu continues to give only pain to the Azhwaar.
“engum poi karai kaanaa theri kadal vaai meendeyum, vangathin koomberum maaparavai pondrene”
In his next hymn, Azhwaar says that he is like a big bird looking for shores in the middle of a rough sea throwing innumerable waves all around, but returned to the ship from where it started its journey, as the bird could not find the shore even after flying in all the four directions. Azhwaar says that he surrendered and came back like the big bird, to the holy feet of the chief deity of Thiruvithuvakodu.
“senthazhale vanthazhlaich seithidinum sengamalam, antharnser venkathirorkku allaal alaraavaal”
So far in this subsection, Azhwaar says that he would not leave the chief deity of Thiruvithuvakode, in spite of any actions by Him, whether they were bad or good. From now onwards, Azhwaar states that he would not go to others, in spite of their actions, whether they were good or bad.
In the sixth hymn of this subsection, Azhwaar states that a lotus would blossom only in the presence of sunlight and no other heat sources could help the lotus to blossom. In the same way, Azhwaar would surrender only to the glories of the chief deity of Thiruvithuvakode and would not turn to any other person or things.
In the seventh hymn of this subsection, Azhwaar takes the Cloud as an example. The crops would expect the clouds to shower the necessary water for them to grow and they would not expect the same from any other source. This would be, in spite of the fact the cloud would have failed to provide water for long periods of time. Azhwaar in this hymn says that even though, the chief deity of Thiruvithuvakode had not relieved him from the pains for a long time, he would expect the grace only from the chief deity of Thiruvithuvakode, and not from anyone else.
In his eight hymn of this subsection Azhwaar takes the example of the Sea and the river. He says that even when a river would overflow and run all over, it would reach the sea and it would not end anywhere else. In the same way, he would only surrender to the glories of the chief deity of Thiruvithuvakode and would not change his attention or focus away from Him.
The example used by Azhwaar in this hymn is relatively difficult to understand. It is common that when someone wants only the blessings from God, and is not interested in the material wealth, the person will get the material wealth, due to God showing His grace.
This part of the example reflects, in a way, Azhwaar’s personal life. Azhwaar was longing for the grace of Paramaathma, and he did not show much interest in managing his kingdom. Even though Azhwaar did not aspire for material wealth like his kingdom, his kingdom got expanded well beyond Chera Naadu.
The material wealth in this example can also be referred to the Eternal world, based on the examples given below.
In the epic Ramayana, Sri Rama offered the eternal world to Sri Hanuman. Hanuman politely refused the eternal world, as his devotion towards Sri Rama and Rama Namam was boundless. Hanuman wanted to be in this world with those who chant Sri Rama’s name and offer prayers to Sri Rama.
Similarly there are two other Azhwaars, whom we would go through in future, Thondaradipodi Azhwaar and Thirupaanazhwaar, who did not want the eternal world, but wanted to stay in Srirangam to have the dharsan of Sri Ranganatha Perumal. This can be seen from their hymns, namely, “Achuvai perinum venden, arangamaa nagarulaane” by Thondaradipodi Azhwaar and “En Amuthinai Kanda Kangal matru ondrinai kaanaave” by Thirupaanaazhwaar. Even though Sri Hanuman and the above Azhwaars did not want eternal world, they should have attained the eternal world due to the grace of Paramaathma. Based on the above, the word wealth mentioned in the hymn would refer to the Eternal World.
In the same way, even when the chief deity of Thiruvithuvakode keeps ignoring Azhwaar, Azhwaar strongly believes that he would get His blessings some time. Azhwaar says that he would go again and again to Him to get His blessings.
In all these ten hymns, Azhwaar goes through only one point, but with different examples in the sense that whatever pains he gets from Him, Azhwaar would look toward the chief deity of Thiruvithuvakode and would not go to anyone else. Even when the chief deity of Thiruvithuvakode ignores Azhwaar, Azhwaar says that he would not go to anyone else, but only surrender at the holy lotus feet of the chief deity of Thiruvithuvakode and wait for His blessings.
Azhwaar gives the benefits of understanding these ten hymns and concludes this subsection, by saying that those who recite these ten hymns would not reach hell, even if they had committed the most unwanted sins or multitude of sins.
Let us continue with the other hymns of Kulasekara Azhwaar in our next weblog.