Thirupaavai / திருப்பாவை

For English version, please click here, thanks  

திருப்பாவை

பெரியாழ்வாரைப்பற்றி சிறிது பார்த்த பின், ஆண்டாளின் பெருமைகளை சொல்லத் தொடங்கினோம்.  நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பிருந்தாவனத்தில் பரமாத்மாவை தரிசித்தது வரை பார்த்தோம்.  ஆண்டாளின் பெருமைகளையோ, திருப்பாவையின் பெருமைகளையோ சொல்லும் திறனோ, அறிவோ, சக்தியோ எனக்குக் கிடையாது.  இருப்பினும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல முயற்சிக்கிறேன்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்ற பிரபந்ததிற்கு ஐந்து விளக்க உரைகள் (ஈடு) உள்ளன.  அதே போல் திருப்பாவைக்கும் அதிக அளவில் விளக்கங்கள் உள்ளன.

ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை பெரியாழ்வார் பாடிய திருமொழிக்கு அடுத்தாக வைத்துத் தொகுக்கப் பெற்றிருக்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது.

ஆண்டாள், தன்  தந்தையான பெரிய ஆழ்வாரிடம் கண்ணனைப் பற்றி கேட்ட சரித்திரங்களில் ஒன்றானது, திருஆய்ப்பாடி மகளிர், ஸ்ரீ கிருஷ்ணரை அடைய நோன்பு நோற்றார்கள் என்பதாகும். அதற்கு கார்த்யாயனி விரதம் என்று பெயர். அதனை பின்பற்றி, ஆண்டாள், கண்ணனையே அடைய வேண்டும் என்பதற்காக பாவை நோன்பு நோற்கின்ற படி அமைந்தது தான் திருப்பாவை.

திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து  திருப்பாவையில்  இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.

திருப்பாவையில் எளிதாக விளங்கும் பொருள் ஒன்று உண்டு. சற்று ஆழ்ந்து நோக்கிக்காணும் உள்ளுறைப் பொருளும் உண்டு. திருப்பாவையின் எளிதில் விளங்கும் பொருளாக, துயில் எழுப்புதல், மார்கழி நீராட அழைத்தல், மழை வேண்டியும், நல்ல மணாளன் வேண்டியும் பாவை நோன்பு நோற்றல், திருமாலைச் சிறப்பித்தல் என அமைகிறது.  உட்பொருளாக, வைணவத்தின் துவயம் எனப்படும் திரு மந்திரத்தின் கருத்துக்களையும் அமைத்துள்ளார்.

ஆண்டாள் பாடல்கள் பலவும் வினைச் சொல் கொண்டு, நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று,  தெளிவாகவும் நேரடியாகவும் உணர்த்தும்படி உள்ளன . இதனால் திருப்பாவை நமக்கு அர்த்தம் புரிவதற்கும் அதன் படி நடப்பதற்கும் எளிமையாக உள்ளது. சில உதாரணங்கள், 

 • பரமனடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம்
 • மைஇட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம்
 • தீக் குறளை சென்று ஓதோம்
 • தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி தொழுது வாயினால் பாடி
 • மனதினால் சிந்திக்க
 • தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
 • மாமீர் அவளை எழுப்பீ ரோ
 • மனதுக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்
 • பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம்
 • உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம்

திருப்பாவையில் பகவத் பக்தி, பாகவத பக்தி, மந்திர பக்தி, பெருமாளின் இரட்சிக்கும் தன்மை, சரணாகதி ஆகியவற்றின் அர்த்தங்களை ஆண்டாள் நமக்குத் தெளிவாகக் காட்டித் தந்திருக்கிறாள்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும், வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு” என்று திருப்பாவையை அறியாதவர்களைப் பற்றி ஒரு ஆச்சாரியார் (வேத பிரான் பட்டர் ?) கூறுகிறார்.  இதில் ஐயைந்தும் என்பது (5 x 5) முதல் இருபத்தி ஐந்து பாடல்களையும், ஐந்தும் என்பது கடைசி ஐந்து பாடல்களையும் குறிக்கும். இதையே ‘வாரணமாயிரம்” என்ற நாச்சியார் திருமொழி ஆறாவது பதிகத்தில் உள்ள பத்து பாடல்களை குறிப்பதாகவும் சொல்வார்கள்; அந்த பதிகத்தில், முதல் ஐந்து பாசுரத்தில், எம்பெருமான் கண்ணனுடன் திருமணம் செய்வதற்கு முந்திய நிகழ்ச்சிகளையும், இறுதி ஐந்து பாசுரத்தில் திருமணம் நடந்து அதற்கு பின் உள்ள நிகழ்ச்சிகளையும் கூறுவதாகவும் சொல்வதுண்டு.

இறுதி ஐந்து பாடல்கள் தனிசிறப்புப் பெற்றவைகள், இந்த ஐந்து பாசுரங்களில், ஆண்டாள் பகவானை நேரில் தரிசித்த பரவசத்தை வர்ணிக்கிறார்.

ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை  நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடி உள்ளார். (“நாராயணனே நமக்கே பறை தருவான், பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், ஊழிமுதல்வன், வடமதுரை மைந்தனை” )

ஆண்டாள் பாடல்களில் குறிப்பாகப் ‘பறை’ என்ற சொல், அறம், பொருள், இன்பம் இவற்றைத் தாண்டி உள்ள,  வீடுபேற்றைக் குறிப்பதாகவே அமைகிறது.

நீராடப் போதுவீர் என்று முதல் பாடலிலும், நெய் உண்ணோம், பால் உண்ணோம்   மைய்யிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம் என்று இரண்டாவது பாடலிலும் சொல்கிறார்.  இங்கு,    “மலரிட்டு நாம் முடியோம்” என்பதில் மட்டும், “நாம்” வருவது ஒரு சுவை.  ‘நாங்களாக மலர் சூடிக்கொள்ள மாட்டோம், ஆனால் நீ சூடிவிட்டால், அதைத்தடுக்க மாட்டோம்’ என்று ஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் சொல்வது போல் அமைந்து உள்ளது.   இதற்கு காரணம்,  ஆண்டாள், ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளுக்கு, பிருந்தாவனத்தில், திரு ஆய்ப்பாடியில்,  பூ சூட்டிய படலங்களை நினைவு கூறுகிறார்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற ஐந்தாவது பாடலில் சொல்லும், “தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க” என்பது பக்தி செய்யும் முறையை அறிவுரையாய் சொன்னதாயிற்று.

புள்ளும் சிலம்பின” என்று வரும் அடுத்த பாடலில், “உள்ளத்துக்கொண்டு முனிவர்களும், யோகிகளும், மெல்ல எழுந்து” என்பதில், உள்ளத்தில்உள்ள அந்தர்யாமியான பரமனை, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து பத்திரமாகப் பாதுகாப்பது போல் நாமும் நம்மிடம் உள்ள அந்தர்யாமியை பார்த்துக் கொள்ளவேண்டிய கடமையை சொல்வதாகும். முனிவர்கள் யோகிகள் என்று இரண்டு பதங்களை உபயோகிக்க காரணம், முனிவர்கள் என்பவர்கள் பகவானின் குணநலன்களை அறிந்து கொண்டு பரம்பொருளை உணர்ந்தவர்கள்; யோகிகள் பகவானுக்கு கைங்கர்யம் செய்யும் அடியார்கள்.

முதல் ஐந்து பாடல்களில் பொதுவாக எல்லோரையும் பாவை நோன்பு நோற்க கூப்பிட்ட ஆண்டாள், அடுத்த பத்து பாடல்களில் ஒருவர் ஒருவராக (பிள்ளாய், பேய்பெண்ணே, கோதுகலமுடைய பாவை, மாமான் மகளே, ஆற்றல் அனந்தல் உடையாய் , பொற்கொடியே, நற்செல்வன் நங்காய், போதரிக்கண்ணினாய், நங்காய், எல்லே இளம் கிளியே)  அழைக்கிறார்.

பதினைந்தாவது பாசுரமாகிய “எல்லே இளங்கிளியே” என்ற பாடலில்  ‘நீங்களே நானே தான் ஆகிடுக” என்று சொல்லும் போது, வைணவ சம்பரதாயத்தின் படி, இவர் குற்றம் ஒன்றும் செய்யாதபோதும், மற்றவர்கள் குற்றங்களையும், தன்மேல் ஏற்றுக்கொள்கிறார்.  இதனை மேலும் விளக்க ராமாயணத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்லலாம்.   ஸ்ரீ ராமன் காட்டுக்கு சென்றதற்கான காரணமாக, கூனி, கைகேயி, தசரதன் மற்றும் ஸ்ரீ ராமன் ஆகிய மற்றவர்கள் இருந்தும், பரதன்,  தன்னுடைய கர்மாக்களின் பலனே என்று தன் மீதே எல்லா குற்றங்களையும் ஏற்றுக் கொள்ளுகிறான்.

பதினாறாவது பாசுரமான, நாயகனாய் நின்ற பாடல் முதல் நாம் எப்படி கோவிலில் இறைவனை வழிபட வேண்டும் என்பதை சொல்கிறார்.   நேரிடியாக பகவானை சென்று சேவிக்காமல், முதலில் துவாரபாலகர்களை வழிபட வேண்டும் என்றும் அவர்களிடம் அனுமதி பெற்று அதன் பிறகே உள்ள செல்ல வேண்டும் என்றும் சொல்கிறார்.

அடுத்த பாசுரத்தில், (அம்பரமே தண்ணீரே) ஸ்ரீ கிருஷ்ணரின் உறவினர்களான நந்தகோபாலன், யசோதை, பலராமன் என்று பகவானை சுற்றி உள்ளவர்களை எழுப்புகிறார். இங்கேயும் நேரடியாக பகவானிடம் செல்லாமல் அவனுக்கு உகந்தவர்களை ஸ்தோத்திரம் செய்து பிறகே பகவானிடம் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். (ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், நித்யசூரிகள், சுதர்சனாழ்வார்  என்பதைப் போன்றவர்கள் இதில் அடங்குவார்கள்).

அடுத்த பாசுரமான “உந்து மத களிற்றன் , 18வது பாடல், தாயாருக்கான பாசுரம். இது போல இன்னும் ஒரே ஒரு  பாடல் மட்டும்  தான் ஆண்டாள், பெருமாளின்  பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால் நந்தகோபாலன் மருமகளே  நப்பின்னாய் என்று தாயாரை மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுகிறார், ஆகையால் இது தாயார் பாசுரம் எனப்படுகிறது.   (அங்கண் மாஞாலத்து மற்ற  பாடல்).  மற்ற எல்லா பாடல்களிலும், நாராயணனே, பரமன், உத்தமன், பத்மநாபன், மாயன், ஹரி, கேசவனை, தேவாதி தேவன், மாதவன், வைகுந்தன், முகில் வண்ணன், மனதிற்கு இனியான் (ஸ்ரீ ராமர்), கிள்ளிக்களைந்தானை,  பங்கய கண்ணானை, மணிவண்ணன், உம்பர் கோமானே, மலர் மார்பா, விமலா, ஊற்றமுடையாய், பூவை பூவண்ணா, நெடுமாலே, மணிவண்ணா, கோவிந்தா என்ற நேரிடையான நாமங்களாலும் மற்றும் வடமதுரை மைந்தன், ஆயர் குலத்தில் பிறந்த அணிவிளக்கு போன்ற பல நாமங்களாலும் அவன் புகழ் பாடுகிறார்.   சில நாமங்கள் ஒரு முறைக்கு மேல் வருகின்றன. அவையாவன,

 • நாராயணனையும் (1,7,1௦),
 • திருவிக்ரமனையும் (3,17,24),
 • மாயனையும் (5,15,16),
 • மனத்திற்கு இனியவனான இராமனையும் (12,13,24)
 • கோவிந்தனையும் (27,28,29)

மூன்று மூன்று முறை அழைக்கிறார். இதிலும், திருவிக்ரமனை முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பத்து என முதல், நடுவே மற்றும் முடிவில் அமைத்து உள்ளார். கோவிந்தனை தொடர்ச்சியாக, (27,28,29), கூப்பிட்டு உள்ளார். கேசவனையும் (7,30) மணிவண்ணனையும் (16,26) இரண்டு முறை கூப்பிடுகிறார்.

அடுத்த பாசுரமான குத்து விளக்கு எரிய  பாடலில், ஆண்டாள், பெருமாளை பாட ஆரம்பித்து, பாதியில் திரும்ப தாயார் பக்கமே சென்று விடுகிறார்.  அடுத்த பாசுரத்திலும் பெருமாளிடம் ஆரம்பித்து, முக்கால் பாசுரம் முடிந்தபின்பு தாயாரிடம் வந்து, தன் கோரிக்கையை வைக்கிறார். ஆகவே நாம் பக்தி செய்யும் போது, முதலில், பின்பு பெருமாளின் நெருங்கிய பந்துக்களையும், தாயாரையும் வழிபட்ட பின்பே, அவனிடம் செல்ல வேண்டும் என்பதை 16 பாடல் முதல் 20 பாடல் வரை தெரிவிக்கிறார்.

அடுத்த மூன்று பாடல்களிலும் பெருமாளை பொதுவாக வாழ்த்தி உள்ளார். ஆனால் பெருமாளிடம் எதுவும் கேட்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க.

திருப்பாவையில் ஆண்டாள், விபவத்தின் அவதாரங்களில் திருவிக்கிரமனையும், ஸ்ரீ ராமரையும், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரையும் மட்டுமே நேரடியாக சொல்லி உள்ளார். அடுத்த பாடலான, “மாரி மலை முழைஞ்சில் ” என்ற பாசுரத்தில், நரசிம்ம அவதாரத்தை  மறை முகமாக சொல்லி உள்ளார்.

பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாள், “அன்று இவ்வுலகம் அளந்தாய்” என்ற அடுத்த பாசுரத்தில் ஆறு முறை பல்லாண்டு பாடுகிறார். திருவிக்ரமனையும் இராமனையும் ஒரு முறை பல்லாண்டு கூறியவர், தனக்கும் தனது தந்தையான பெரியாழ்வாருக்கும்,  மிகவும் உகந்தவரான கண்ணனை மட்டும் நான்கு  முறை பல்லாண்டு பாடுகிறார்.

அடுத்த பாடலான “ஒருத்தி மகனாய் பிறந்து” என்ற பாடலில்  ‘கண்ணா. உன்னை காணத் துடிக்கிறோம், ஆகையால் நோன்பு நோற்றதில் ஒரு வருத்தமும் இல்லை’ என்கிறார்.   இந்தப் பாடலில் வரும் “வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து என்று சொன்னதில், ஆண்டாள் தாங்கள், பரமனையே வேண்டும் பகவன்லாபார்திகள் என்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். “வருத்தம் தீர்ந்து” என்றால், தாங்கள், இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள் அல்ல என்று சொன்னதாகும்.  “வருத்தமும்”     தீர்ந்து என்பதால், தாங்கள், மற்றொரு வகையான, கைவல்யார்திகள் என்ற ஜீவாத்மாக்களும் அல்ல என்றார்.  “மகிழ்ந்து” என்று சொன்னது   தாங்கள் பகவன்லாபார்திகள் என்று சொல்வதாயிற்று.  

அடுத்த பாசுரமான மாலே மணிவண்ணா என்றதில், ஈரேழுலோகங்களையும் உண்டு ஓர் ஆலிலையில் படுத்த அவனுக்கு  ஒன்றும் கடினம் இல்லை, அது போல் தங்களுக்கு அருளுவதிலும் அவனுக்கு ஒன்றும் சிரமம் இல்லை  என்று போற்றுகிறார்.

கூடாரை வெல்லும் கோவிந்தா என்ற 27வது பாசுரத்தின்  வார்த்தைகள், கூடியவர்களிடம் தோற்றுப்போகும் கோவிந்தா எனபதையும் உட்படுத்தியதே. நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று நோன்பு ஆரம்பிக்கும் போது (பாடல் 2) கூறியவர், இந்தப் பாடலில் நோன்பு முடிக்கும் நேரம் வந்துவிட்டதைக் குறிக்கும் பொருளில் கண்ணனிடம் உணவு கேட்கிறார்கள்.   விரும்பிக்கேட்ட இந்த உணவு சாதாரண பசி தீர அல்ல,  கண்ணனைப் பிரிந்து பட்ட துயர் தீர கூடி இருந்து களித்திருக்கையை கூறுகிறது.  அதுபோல் கூடி இருந்து என்பது, தான் மட்டும் அல்லாமல் எல்லோருடன் சேர்ந்து பகவானை தரிசிக்க வேண்டும் என்ற கருத்தை நமக்கு சொல்வதாகும்.

ண்ணனே புண்ணியம், குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் என்று அவனை மிக உயர்ந்த இடத்தில் நிறுத்தி, தாங்கள் ஒன்றும்  அறியாத பிள்ளைகள் என்று தங்களைத் மிகவும்  தாழ்த்திக்கொண்டும், தங்கள்  குற்றங்களை மன்னித்து, தங்களுக்கு மோட்ஷம் தர பிரார்த்திக்கும் பாடல், அடுத்த பாசுரமான, “கறவைகள் பின்சென்று”.   கண்ணனே புண்ணியம், குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன், “இறைவா நீ தாராய் பறை”  என்ற இந்த சொற்தொடர்களும் இந்த பாசுரத்தின் மிக குறிப்பிடத்தக்கவை.  

இதுவரை, பறை, பறை என்று சொல்லிவந்த ஆச்சிமார்கள், அதன் பயனை அடுத்த பாசுரமான “சிற்றஞ்சிறு காலை” என்ற பாடலில் சொல்கிறார்கள். “பகவானான உன்னை அடையவேண்டும், உங்களுக்கே தொண்டு செய்ய வேண்டும், மற்ற எந்த நினைவும் தங்களுக்கு வராமல் இருக்க வேண்டும்”, என்று வேண்டுகிறார்கள். இங்கே “உமக்கே நாம் ஆட் செய்வோம்” என்று சொன்னதில் பரமாத்மாவாகிய அவனைத் தவிர மற்ற யாருக்கும் சேவை செய்ய மாட்டோம் என்பதில் உள்ள  தீர்மானமான ஒரு கருத்தும்  வெளிப்படுகிறது.   இது வைஷ்ணவ சித்தாந்தத்தின் மிக முக்கியமான கருத்தாகும், ஏன் எனில், கிருஷ்ண பரமாத்மா, தான் சொன்ன கீதையின் ஒரு ஸ்லோகத்தில்  “மாம் ஏகம் சரணம் வ்ரஜ“,  அதாவது, “என்னொருவனையே சரணம் புகுந்தவனைக் காத்து, வீடும் அளிப்பேன்” என்று சொன்னார். ஏகம் என்பதைக் கருத்தில் கொண்டு ஆண்டாள் உமக்கே என்றார். 

இது கண்ணனின் சரம சுலோகம் ஆகும்.  “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”  – “எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்” என்பதையே தன்னை அடையும் வழியாகச் சொல்கிறார். .

இந்த பாடலே திருப்பாவையின் முக்கிய பாடலாக கருதப்படுகிறது.  நம் ஆச்சார்யார்கள், திருப்பாவை முப்பது பாடல்களையும் தினமும் சேவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  அப்படி முடியாமல் போனால் இந்த ஒரு பாடலையாவது சேவிக்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

இறுதிப் பாசுரமான “வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை” என்ற பாடல், திருப்பாவை படித்தால் நமக்கு கிடைக்கும் பலன்களை சொல்லும் பாடல் ஆகிறது. கிடைக்கும் பலன், “செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால், எங்கும் திருவருள் பெற்று இன்புறுவதே“.  மாதவனை, கேசவனை என்று அடுத்தடுத்து சொல்வது, திருபாற்கடலில், தேவர்களும், அசுரர்களும்,  கடைய முடியாமல் திணறிய போது, தானே பாற்கடலை கடைந்ததால், அழகிய நீண்ட கூந்தல் அங்கும் இங்கும் அலைபாய்ந்ததைப் பார்த்து கேசவன் என்றும்,  ஸ்ரீதேவியான மகாலக்ஷ்மியை பாற்கடலில் இருந்து பெற்றதால்  மாதவன் என்றும்  கூறுகிறார்.

ஆக, இந்த 30 பாடல்களில், ஆண்டாள், நாம் பரமாத்மாவை எப்படி வழி பட வேண்டும், (“தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவி தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க”), அவனிடம் என்ன கேட்க வேண்டும், (“இறைவா நீ தாராய் பறை”),  என்றும் அந்த வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலன்களையும் (“செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால், எங்கும் திருவருள் பெற்று இன்புறுவதே“), கூறி நம்மை நல்வழிப்படுத்தும் ஆண்டாளுக்கு நாம் செய்யும் மரியாதையாவது, அவர் சொல்படி நடப்பதே ஆகும். 

ஆண்டாளின் சரிதை

இவ்வளவு பெருமைகளும் புகழும் உடைய திருப்பாவையை இயற்றிய ஆண்டாளின் ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில் நமக்கு நிறைய ஆர்வம் இருக்கும்.   அவைகளை அடுத்த வலைபதிப்பில் பார்க்கலாம்.

============================================================

Thirupaavai

After enjoying a brief  history about Periyazhwaar, we started discussing about the glories of Aandal. We have seen that Aandal had a good dharsan of Sri Krishna in  Naachiyaar thirumozhi at Brindavan.    I do not have any ability or wisdom or power to speak about the glories of Aandal or her famous compilation, namely, Thirupaavai.  Still I am trying to mention a few words on those.

Thiruvaimozhi, the prabhandham, by Swami Namazhwaar has got 5 different commentaries, the detailed explanations, by our Acharyars.    Similarly Thirupaavai, the prabandham, composed by Aandal has also got  as many different commentaries.

Naalaayira Divya Prabandham, the hymns composed by Azhwaars is arranged in such a way that Aandal’s Thirupaavai is placed next only to Periazhwaar Thirumozhi, which is the first in the list.

Aandal, wants to attain Lord Krishna (Kannan) by observing a serious set of prayers called Paavai Nonbu, (Nonbu means austerities that are observed for a specific purpose) and that is the basic objective in Thirupaavai.   Aandal is inspired by the life history of Sri Krishna, as told by Sri Periyazhwaar on Sri Krishna and one such instance is  the nonbu or viratham undertaken by the young girls in Thiruaaipaadi to attain Sri Krishna, called Karthyayani viratham. 

Aandal, in her Thirupaavai, considers Srivilliputhur as Thiruvaaipaadi, the temple in Srivilliputhur,  Vadaperunkoil, as the palace of Sri Nanthgopar, the adopted father of Sri Krishna, her friends or counterparts as the shepherdess, to observe the prayers or nonbu towards Lord Sri Krishna.

Thirupaavai has got a direct simple meaning.  At the same time, it has also a deep, inner meaning.    The simple meaning could be taken as waking up people, asking them to get together for the holy bath in the Tamil month of Margazhi (usually comes from 15th Dec to 14th Jan), praying for rain, praying for good bridegroom, preparing for the  prayers and offering  prayers to Sri Mahavishnu.     The deep inner meaning includes the explanation for “Dwayam”, one of the most important mantras (enchantment) of Vaishnavam.

The hymns of Aandal, has direct verbs and they direct us on what we should do and what we should not do very clearly.   In this way, Thirupaavai, is simple to understand and easy to follow.  Some examples are :

 • Paramanadi Paadi,
 • Nei Unnom, Paal Unnom
 • Mai Ittu Ezhuthom, Malarittu Naam Mudiyom, seiyaathana Seiyom
 • Theek kuralai sendru Othom, 
 • Thooyomaai vanthu naam, thoo malar, thoovi thozhuthu, vaayinaal paadi
 • manthinaal sinthikka, 
 • Devaathi devanai sendru naam sevithaal
 • Maameer, avalai ezhupeero
 • Manathukku iniyaanai, paadavum nee vaai thiravaai
 • Palkalanum Yaam anivom, aadai uduppom
 • utrome aavom umakke naam aatcheyvom

Aandal has given in Thirupaavai the meaning of

 • devotion towards Paramathma, 
 • devotion towards His devotees,
 • devotion towards the mantras,
 • the glories of Paramathma in terms of His care and concern to protect us and the
 • the absolute surrender, as per the philosophies of vaishnavism.

One of the acharyars (most probably Vedappiran Bhattar), has composed Paathagangal Theerkum, Paramanadi kaattum, vedham anaithukkum vithaagum, kodhai Tamil IyIynthum Iynthum ariyaatha maanidarai vaiyam sumappathuvum vambu” to single out those who do not know about Thirupaavai.   Here the phrase “Iyiythnum” means the first 25 hymns, namely,  5 multiplied by 5 (5 x 5 =25), and the phrase “iynthum” refers to the last 5 hymns.  The meaning of the above is “Thirupaavai will nullify the disadvantages, will show us the lotus feet of Paramathma, and it is the core  for all the Vedhams.  It will be a great burden to the Earth to bear the people who do not know the Thirupaavai, which contains twenty five plus five hymns”. The last five hymns are special in the sense, that they are composed after  Aandal had the dharsan of Sri Krishna and they contain her ecstatic joy on her direct dharsan of Sri Krishna.  

The same thing is explained as a reference to “varanamaayiram’, which is the sixth subsection of Nachiyaar Thirumozhi, another prabantham sung by Aandal. In that subsection, Aandal has sung about all the activities before the wedding with Emperumaan Kannan in the first five hymns and sung about the activities of wedding and the following activities in the next five hymns.

Aandal has composed hymns on Paramathma in each of his five states sequentially, namely, Para, Viyuha, Vibhava, Antharyaami and Archai, in the first five hymns of Thirupaavai. (“Naaryanane namake parai tharuvaan, paarkadalul paiya thuyinra paraman, Ongi ulagalantha uthaman, oozhi muthalvan, vadamadurai mainthan“)

The word “Parai” used by Aandal in her hymns refers to Moksham, which is beyond the materialistic value in life and the worldly pleasures , and which we pray to attain.

In the first hymn , Aandal invites her friends for taking bath as a part of Paavai Nonbu, a serious set of prayers to attain Sri Krishna,  by “neeraada pothuveer”, and then in the second hymn she gives a list of dos and don’ts, namely, nei unnom, pal unnom, maiyittu ezhuthom, malarittu naam mudiyom, meaning “will not eat ghee, will not drink milk, will not beautify our eyes with eyeliners, and WE will not wear flowers on our head.    While for ghee, milk and for the eyeliner, she did not use the word WE, but for the flowers alone she used the word “WE”.   It has an interesting reference to Sri Krishna’s younger days.  Aandal says that they (“WE”) would not wear the flowers by themselves, however, if Sri Krishna would come and help to wear the flowers on them, they would NOT stop it.  For this Aandal refers from the epic named Bhagawatham, where Sri Krishna in his early days, in Aaipaadi and Brindavan while playing with the Gopikasthrees helps them  to wear the flowers .

The dos and don’ts continue in the fifth hymn, namely, “Maayanai, mannu vada Madurai mainthanai” in terms of “Thoomalar Thoovith Thozhuthu, vaayinaal paadi, manathinaal sinthikka“, meaning “we pray God by sprinkling fresh flowers from our hands,  by praising Him through our mouth and we think about Him by our mind and heart”.   This is how Aandal asks us to do the prayers to Paramathma.

In the next hymn, “Pullum Silambina Kaan“, there is a sentence “Ullathuk kondu munivargalum, Yogikalum, mella ezhunthu“.   Here we are going to see two points.  First point is about the Antharyaami, who is residing  in our heart.  Aandal says that we should take care of the Antharyaami like how the saints and yogis would slowly get up and would carefully walk around.    The second point is that Aandal refers to two sets of people, Saints and Yogis.  Saints are those who learnt, understood and appreciated the greatness of Paramathma through the tough knowledge acquisition process.  Yogis were those who learnt, understood and appreciated the greatness of Paramathma through the actual service to Him.

In the first five hymns of Thiruppavai, Aandal invites the people for the “Pavai Nonbu”, serious set of prayers,  in general.  But in the next set of ten hymns, she addresses ten different individual girls, “Pillaai, Peipenne, Kodhu Kalamudaiya Paavaai, Maamaan Magale , Aatral Ananthal udayaai, porkodiye, narchelvan nangaai,  potharik kanninaai,  nangaai,   elle ilam kiliye” one after another.

In the 15th hymn of Thirupaavai, Aandal takes such a stand, when she mentions “Neengale naanee thaan aayiduga” in the hymn starting with “Elle ilamkiliye“.  According to Vaishnavam, a Vaishnavan has a mindset to take the blame of other’s misdeeds as their own and take the blame on themselves. This can further be explained with an important reference, like Bharathan in Ramayanam, the brother of Rama, who took all the blame on himself for Rama leaving the country to go to the forest, even though there were many others like, Kooni, Kaikeyi, Dasarathan or even Sri Rama Himself who could have been responsible for Rama being sent to forest.

Aandal  in the 16th hymn  Naayaganaai nindra shows us the procedure  in which we need to offer the prayers for Paramathma when we go to temples for dharsan .   We should first do the prayers to the Dwarapalagargal, those who do the service of manning the gates for Paramathma and get their permission before entering the temple.

In the  next hymn, (Ambarame Thanneere), Andaal tries to wake up the relatives of Sri Krishnar, like Nandagopalan and Yasodha (His adopted parents), Balaraaman (His brother).  Even here you may notice that Andaal does not recommend us to go to Sri Krishna directly, but she is trying to engage with His relatives and people who are closer to Him, telling us indirectly that we should only to go to those who are nearer to Him first, before approaching Him in the temples. Azhwaars, Acharyaars, Nithya Soories and Sudharsanaazhwaar are some examples who are always near to Sri Krishna or Paramathma.

The 18th hymn in Thirupaavai is “Unthu Matha Kalitran” and this hymn is totally dedicated to Sri Mahalakshmi or Thaayar as per our tradition.    The reason why we call this as Totally Dedicated, is because there is only one other hymn within Thiruppavai, where Aandaal does not address directly Sri Krishna or Paramathma. The other hymn is “angan Maa gnaalathu“.  But Aandal addresses Thaayaar directly as “Nandagopalan marumagale Nappinnaai” in this hymn.    In all other hymns, Aandal has used direct names like, Naarayanane, Paraman, Uthaman, Padmanaabhan, Maayan, Hari, Kesavan, Devaathi Devan, Maadhavan, Vaikunthan, Mugil Vannan, Manathirku Iniyaan (Sri Raman), Killikkalainthaan, Pankaya Kannaalan, Mani vannan, Umbar Komaan, Malar Maarban, Vimalaa, Ootramudaiyaai, Poovai Poovanna, Nedumaal, Manivanna, Govindaa    and indirect names like “vada madurai mainthan, Aayar kulathil thonrum anivillaku” to offer prayers to Paramathma.  Some of the Thiru Naamams (names) have been referred to more than once and they are,

 • Naaraayanan on three different occasions (1,7 and 10),
 • Thrivikraman on three different occassions (3,17 and 24),
 • Maayan on three different occassions (5, 15 and 16),
 • Sri Ramar (as Manthirku Iniyaan), on three different occasions in 12,13 and 24) and
 • Govindan on three different occasions in 27, 28 and 29.

Aandal has sung the name Thrivikraman  once in the first ten, once in the middle ten(11 to 20) and once in the last ten hymns (21 to 30) of Thiruppavai.   Similarly  Andal has sung the name Govindan in all the three  hymns, namely 27,28 and 29.     In addition she has sung the name Madhavan  on two different occassions, namely 7 and 30, whereas Manivannan  on hymns 16 and 26.

In the next hymn, “Kuthu Vilakku Eriya” Aandal starts praising Perumal, but somehow goes back to Thaayaar till the end of that hymn .    In the same way, in the next hymn too, she starts praising Perumal, but turns back to Thaayaar, pleading Her to listen to her prayers.    So whenever we do prayers, we should start with the relatives and people who are closer to Perumal, and then  Thaayaar, and  finally offering our prayers to Perumal, as  Aandal indicates in her hymns 16 to 20 in Thiruppavai.

In the subsequent three hymns, Aandal has just offered prayers to Perumal, but please keep in mind that she has not asked anything specific in her prayers in those hymns.

Aandal mentions only three of the ten incarnations of Perumal in her Thiruppavai.  Those are Thrivikraman, Sri Raman and Sri Krishnan.    However in the next hymn “Maari Malai Muzhanchil” she  indirectly mentions about Narasimha incarnation.

Aandal, daughter of Sri Periyazhwaar, composed the next hymn in line which is much similar to the “Pallaandu” on Paramathma, by Sri Periyazhwaar.  Pallaandu is a set of prayers through which Periyazhwaar wished Paramathma to live long to protect us.   In the next hymn, namely “Andru ivvulagam alanthaai adi potri“, Aandal wishes the Paramathma six times, of which she wishes Sri Krishnan, who is hailed so much by Sri Periyazhwaar,  four times and   Thrivikraman and Sri Raman two times each.

In the next hymn, “Oruthi Maganaai Piranthu“, Aandal feels that they do not have any pains or worries, due to the nonbu or the serious prayers, as their primary wish was to have a dharsan of Sri Krishna.In this hymn another important phrase is “varuthamum theernthu, magizhnthu“. Aandal clearly states that she and her friends were Bhagawanlaabarthigal in these three words.   If she has used only “varutham Theernthu” then it would have meant that she and her friends were not Aiswaryarthigal.   Since she stresses “varuthamum“, it clearly states that sadness of being Aiswaryarthigal as well as Kaivalyarthigal had gone.  The last word “magizhnthu” establishes that they are Bhagawanlaabarthigal.  

In the next hymn, “Maale Manivanna” Aandal praises the Paramathma to whom nothing is impossible , as He is the one who lies on the small banyan leaf  after  integrating and consuming the whole universe consisting of 14 worlds into Himself.   Likewise  it should be easy for Him to give whatever she yearns for.  

The 27th hymn starting “Koodaarai vellum seer Govinda“, is another interesting and significant one.  “Koodaarai Vellum Govinda” means, Govinda, the Paramathma could win over all including those who go against Him.   Interestingly the statement also means that the Paramathma would lose to those who would go with  Him. Aandal, in the hymn 2,  she says that they would not eat ghee, would not drink milk, and makes it clear that they have started the nonbu .  Similarly in this 27th hymn, she declares the ending of the  prayers or ending of the fasting by asking Krishna to bless her food.  Whatever Aandal has asked for, is not the normal food to satisfy the hunger. The food she asks for is to unite with Sri Krishna and enjoy that happiness, so that the previous sadness of not being with him is gone.  Also Aandal uses the word “koodi irunthu”, meaning “together”,  indicating that we should go together to do the prayers.

Aandal places Paramathma, Sri Govindan at a very high level and at the same time ,places all of us at a very low level, since we do not know anything.  In that process she wants Paramathma to excuse all our mistakes and give us abode the moksham, in the next hymn, namely, “Karavaigal Pin sendru“.    There are three other significant phrases in this hymn and they are “kurai ondrum illaatha Govinda“, meaning that Paramathma, Sri Govinda does not have even a single shortcoming.   Another one is “Punniyam Yaam Udaiyom“, meaning that Sri Kannan Himself is Auspicious and thinking about Him, Talking about Him and Looking at Him are all auspicious deeds. The last one is “Iraivaa nee thaaraai Parai“, meaning that “Almighty, please give me a place in Your world, or take us Abode”.  

Aandal has used the word “Parai” in many of the hymns so for, to indicate Moksham and in the  next hymn “Sitram Siru Kaalai vanthu unnai sevithu” she gives the benefits of reaching Moksham.   She requests that she wants to reach Him, Serve Him and she should not develop any other thoughts.  Aandal has mentioned another important aspect of Vaishnavism in this hymn, when she talks about “Umakke Naam Aatcheivom“, meaning “We will do service only to Yourself”, which also means that they would not offer service to anyone else, other than Paramathmaa or Sri Vishnu or Sri Krishna.   This is an important aspect of Vaishnavism, because, Sri Krishna, in Bhagawath Geetha, has told, “maam ekam sharaNam vraja“, meaning that all devotees should seek  only Him.    

This is part of the Krishna Charama Slogam, which reads as Sarva dharmaan parityajya maam ekam sharaNam vraja;  Aham tvaa sarva paapebhyo mokshayishyaami maa chucahaa” – meaning “The devotees should give up everything and seek only Him.  He would absolve the devotees of all sins and liberate them”.   

 This song is considered as the most important Hymn of Thiruppavai.   Our Acharyars have recommended that we should sing and pray  all the 30 hymns of Thiruppavai every day.  When that is not possible, the recommendation is that we should at least recite this hymn every day.

The last hymn in Thiruppavai “Vanga kadal kadaintha Maadhavanai Kesavanai“, gives us the benefits we get, when we recite Thiruppavai. The benefit is getting His Blessings to make us happy, as given by “Senkan Thirumugathu Selvath Thirumaalal, engum Thiru Arul Petru Inburvar“.  The word “Madhavanai” means that He got Sri Mahalakshmi.  One of the meanings for the word “Kesavan” is the person with lock of hair.   When the good and bad of celestial  world (Devas and Asuras), churned the milky ocean, they got tired and could not churn any further.  Then Paramathma Himself took both sides and continued to churn the ocean.    At that time He got Sri Mahalakshmi, as one of the outcomes of the churning of the ocean.   So Aandal called Him Maadhavan and immediately she called Him as Kesavan,  because His hair flowed here and there during the churning of the ocean.    And hence she used these two names, Madhavan and Kesavan, instead of using any other Thirunaamams.

To summarise, in these 30 hymns, Aandal has taught us on how to do the prayers for Paramathma, (Thooyomaai vanthu naam, thoo malar, thoovi thozhuthu, vaayinaal paadi, manthinaal sinthikka”), what to ask Him, (“Iraivaa nee thaaraai Parai”) and what is the benefit we get when do the prayers, (“Senkan Thirumugathu Selvath Thirumaalal, engum Thiru Arul Petru Inburvar”) and guide us in the right direction.  What we can do for Aandal in return, after learning about Thiruppavai, is that we should try to follow what she taught us.   

Aandal’s  Life

We started talking about the glories of Aandal and it kept growing and somehow we had a short glimpse of what she has told in Thiruppavai.   All of us should be equally interested in knowing the details of her birth and how she attained what she wanted.  Let us try to see those details in our next blog.

Aandal /ஆண்டாள்

For English version, please click here, thanks  

ஏழாவது ஆழ்வார்

பெரியாழ்வாருக்குப் பிறகு நாம் பார்க்க வேண்டிய ஆழ்வார், சேர குல திலகமான குலசேகராழ்வார் ஆவார்.  நாம் அவரைப் பற்றி பின்னொரு வலைப்பதிப்பில் பார்க்கிறோம் என்று சொல்லி அவரிடம், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, ஆண்டாள் என்றும், கோதை என்றும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரும், பெரியாழ்வாரின் புதல்வியுமானவரை தொடர்ச்சிக்காக பார்த்து விடுவோம்.

இதிகாச புராணங்கள்

வேதங்களை எளிதில் புரிந்து கொள்ள இதிகாச புராணங்கள் எழுதப்பட்டன. இதிகாசம் இரண்டு, இராமாயணமும் மகாபாரதமும்.   முக்கிய புராணங்கள் (மகா புராணங்கள்) பதினெட்டு  ஆகும்.  அவைகளில் விஷ்ணு பற்றிய புராணங்கள்,

 • விஷ்ணு புராணம்,
 • வாமன புராணம்,
 • வராக புராணம்,
 • மத்ஸ்ய புராணம்,
 • கூர்ம புராணம்,
 • கருட புராணம்,
 • நாரத புராணம்,
 • பாகவத புராணம் மற்றும்
 • பத்மபுராணம்.

மற்றவை சிவனையும் பிரம்மாவையும் பற்றியவை.

வராக புராணம்

வராக புராணம் என்பது மகாபுராணங்களில் திருமாலின் வராக அவதாரத்தைப் விளக்கும் 24,000 ஸ்லோகங்களை கொண்ட சாத்விக புராண வகையைச் சார்ந்தது ஆகும்.  புராணங்களை சாத்விக, தாமச மற்றும் ராஜச என்று மூன்றாகப் பிரிக்கலாம். இவை மூன்றும் நம் மனம் பல சமயங்களில் எடுக்கும் நிலையைப் பற்றியது.   ராஜச என்றால் கோபம் என்றும், தாமச என்றால் ஒன்றும் செய்யாமல் இருக்கும் மந்த நிலைமை என்றும் சாத்விக என்றால் ஒரு சமநிலைப் பட்ட நிலை என்றும் பொருள் கொள்ளலாம். நம் வைஷ்ணவம் எல்லோரும், எப்போதும் சாத்விக நிலையில் இருக்கவே முயற்சி செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் எல்லோரும் எல்லா ஜீவராசிகளுடன் அன்போடும் மரியாதையோடும் இருக்கவே நமக்கு போதிக்கிறது.

பாதாளத்திற்கு எடுத்து செல்லப்பட்ட பூமாதேவியை மீட்கபட்ட பின்பு பூமாதேவியின் கேள்விகளுக்கு வராக அவதாரக் கோலத்திலேயே திருமால் அளித்த பதில்களின் தொகுப்பும் இப்புராணத்தில் உள்ளது. இவைகளை மனதில் வாங்கிக்கொண்ட பூமாதேவி, தான் பரமாத்மாவின் ஆணையின் பேரில் இந்த பூவுலகில் அவதரித்த போது அவைகளின் சாரத்தேயே நமக்கு திருப்பாவை என்னும் நூலாகத் தந்தாள். ஆக, பூமாதேவியின் அம்சமாகவே, ஆண்டாள் இப்பூவுலகில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வாரின் குமாரத்தியாகவே அவதரித்தாள்.

ஆண்டாள் பெருமைகள்

ஐந்து குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், பிஞ்சாய்ப் பழுத்தாளை, ஆண்டாளை, பக்தியுடன் நாளும் வாழ்த்தாய் மனமே! மகிழ்ந்து” (மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலை 22–24) என்ற பாடலைச் சொல்லாமல் ஆண்டாளின் பெருமைகளை ஆரம்பிக்க முடியாது.

இதில் வரும் பிஞ்சைப் பழுத்தாளை என்பதற்கு, எவரும் எட்டிப் பார்க்க முடியாத அளவு , சிறு வயதிலேயே பக்தியில் உச்சம் அடைந்தவள் என்று பொருள்.

ஐந்து குடி என்பது,

 • முதலாழ்வார்கள் மூவரும் சேர்ந்து முதல்,
 • திருமழிசையாழ்வார், இரண்டாம்,
 • நம்மாழ்வார் மூன்றாம்,
 • பெரியாழ்வார் நான்காம், மற்றும்
 • குலசேகராழ்வார் ஐந்தாம் வம்சங்களுக்கு வாரிசாக வந்து அவரித்த ஆண்டாள்.

நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்கள், இயற்கையிலேயே ஆண்களாகப் பிறந்து, எம்பெருமானிடம் கொண்ட பக்தி, காதலாய் ஊற்றெடுக்க, தங்களைப் பெண்ணாய்ப் பாவித்து, அவனை மோகித்து, பெண்ணான தன்மையில் சில பாசுரங்களைப் பாடி உள்ளார்கள்.  அப்படியல்லாமல் இயற்கையிலேயே பெண்ணாகப் பிறந்ததனால், புருஷோத்தமனை அனுபவிக்கும் திறத்தில் சிறந்த உரிமை உடையவள் ஆண்டாள் ஒருவர் மட்டும் தான்.   ஆகையால் அவர் பாடல்கள் இயற்கையாகவே பெண்ணான தன்மையில்  அமைந்துள்ளதால், அதுவே தனிச் சிறப்பாக “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்” என்று மணவாள மாமுனிகளை  சொல்லவைக்கிறது .

கோதாஸ்துதி

வேதாந்த தேசிகன் என்னும் நமது ஆச்சாரியார்  ஆண்டாளின் பெருமைகளைக் கூற 29 ஸ்லோகங்களை கொண்ட கோதாஸ்துதி என்ற நூலை இயற்றினார்.

ஆண்டாளை நோக்கி, அவளின் குணங்களும் பெருமைகளும் வாரத்தைகளுக்கு எட்டாதவை என்று தாம் அறிந்து இருப்பினும், அவளின் குணாதிசயங்களும் பெருமைகளும் தன் மௌனத்தைக் கலைத்து பேச வைத்து விட்டன என்றும் கூறுகிறார்.

மண்ணில் உள்ள புற்றுகளுக்கு பூமியின் காதுகள் என்று பெயர்.  ‘வல்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்படும். வால்மீகி என்னும் முனிவர், புற்றில் இருந்து பல காலம் தவம் செய்ததால் அவருக்கு இப்பெயர் வந்தது. வால்மீகி, 24000 சுலோகங்களுடன் உள்ள இராமாயணம் என்னும் இதிகாச புராணத்தைப் பாடி, ஆதிகவி என்று பெயர் பெற்றார்.   பூமியின் காதுகளாகிய, புற்றிலிருந்து வந்தவரான, வால்மீகிக்கு இவ்வளவு வைபவம் ஆனால்,  பூமியின் அம்சமாகவேப் பிறந்த ஆண்டாள், பாடிய திருப்பாவைக்கும், நாச்சியார் திருமொழிக்கும் எவ்வளவு வைபவம் இருக்கும் என்று வேதாந்த தேசிகன்   கோதாஸ்துதியில்  கூறுகிறார்.

இராமாயண காவியத்தில், சீதா தேவியை, இராவணன் தூக்கிச் சென்ற போது, சீதை தன்னிடம் உள்ள ஆபரணங்களை ஆங்காங்கே எறிந்துவிட்டு, இராமனாகிய தன் கணவனிடம் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே போனாள்.  கோதாவரி, இராவணனுக்கு பயந்து, இராமனிடம் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு தன் பாவத்தை ஏற்றிக்கொண்டாள்.   ஆண்டாள் பிறந்த பிறகு, கோதை என்ற ஆண்டாளின் பெயரை தன்னுள் கொண்டதால்தான், கோதாவரி  தன் பாவத்தைப் போக்கிகொண்டதாக வேதாந்த தேசிகன், கோதாஸ்துதியில் கூறுகிறார். மகாவிஷ்ணுவிற்குத் தான், மங்களமான பொருள்களுக்கெல்லாம் மங்களம் தருபவர் என்று பெயர்.  இங்கே ஆண்டாளும் கோதாவரி என்னும் நதிக்கு மங்களத்தைத் தருகிறார். (பவித்ராணம், பவித்ரம்யோ மங்களா நாம்   ச  மங்களம் ).

இதையே, ‘யமுனா நதி பெற்றதை, கோதாவரி இழந்ததாகவும்’ கூறுவார்கள்; யமுனா நதி, கண்ணன் பிறந்தபோது, கம்சனுக்குப் பயப்படாமல், வசுதேவருக்கு உதவி செய்தாள் என்றும்,  கோதாவரி இராமனுக்கு உதவி செய்ய ஒரு சந்தர்ப்பம் இருந்தும், உதவி செய்யாமல் விட்டு விட்டு அதனால் பாவம் அடைந்தாள் என்றும், பிறகு ஆண்டாளின் நாமத்தை ஏற்றதனால், பாவம் போனது என்றும் கூறுவார்கள்.

சில திவ்யதேசங்களில் ஆண்டாள்
பல்வேறு திவ்யதேசங்களில் ஆண்டாள் – நன்றி whatsapp group நண்பர்கள்

நாச்சியார் திருமொழி

ஒரு நூற்று நாற்பத்திமூன்று உரைத்தாள் வாழியே ” என்று வாழிதிருநாமம் சொல்லக்  காரணமானது  ஆண்டாள் இயற்றிய 143 பாசுரங்களைக் கொண்ட நாச்சியார் திருமொழி என்ற திவ்யப்ரபந்தம்.  இது  பக்திமயமாய், தமிழ் மணமும் இலக்கியச் சுவையும் ஒன்றாகக் கூடி உள்ளது.

திருப்பாவை போல், இந்த பாசுரங்களிலும், எப்படியாவது கண்ணனை அடையவேண்டும் என்று முதலில், பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் மன்மதனை, ஒரு பத்து பாடல்களில் வேண்டுகிறார்.   மனக்கவலை கொண்டவர்கள், தங்கள் காரியம் நிறைவேறுமா என்பதற்கு குறி பார்ப்பது ஒரு வழக்கம்.  அதே போல் ஆண்டாளுக்கும் உள்ள அனுபவத்தை இன்னொரு பத்து பாடல்களில்சொல்கிறார். “மன்னு பெரும்புகழ், மாதவன் மாமணி வண்ணன்” என்று தொடங்கும் அடுத்த பத்து பாடல்களில், குயில்களைக்  கூப்பிட்டு, கண்ணன் பேரை கூவி அழைக்கச்சொல்லுகிறார்.  இந்த பத்து பாடல்களைப் படித்தாலோ, கேட்டாலோ, திருமந்திரத்தை சொன்ன பலனை அடைவர்.

மிகவும் பிரசத்தி பெற்றதானதும், பொதுவாக எல்லா திருமணங்களிலும் பாடப்படுவதானதும், ஆன “வாரணம் ஆயிரம் ” என்ற அடுத்த பத்து பாடல்கள், ஆண்டாள் கண்ணனை திருமணம் செய்வது போல், அம்மி மிதிப்பதுபோல், தீவலம் செய்வது போல்,  தான் கண்ட கானாவினைப் பற்றியதாகும்.  இந்த பத்து பாடல்களைப் படிப்பதாலோ, கேட்பதாலோ, ஞானமும் பக்தியும் உடைய நன்மக்களைப் பெறுவார்கள்.

கற்பூரம் நாறுமோ என்ற அடுத்த பத்து பாடல்களில், ஆண்டாள், பாஞ்சசன்னியம் எனப்படும் சங்கினை, கண்ணனின் வாயமுதினை பருகும் பாக்கியம் பெற்றது என்று கொண்டாடுகிறார். அதே சமயம், கோபிமார் பலருக்கும் உரித்தான கண்ணனின் வாயமுதினை, சங்கு மட்டுமே பருகுவது நியாயம் இல்லை என்றும் கூறுகிறார்.

பிரிவாற்றாமையால் வாடும் ஆண்டாள் அடுத்த பத்து பச்சுரங்களில், நீல நிறமான பகவானின் மேல் உள்ள ஆசையால், நீல நிறமான மேகங்களைத் தூது விடுகிறார். திருமாலிருஞ்சோலை அழகனைப் பாடும் அடுத்த பத்து பாடல்களில் ஒன்றான “நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு, நான் நூறு தடாவில் வெண்ணை வாய் நேர்ந்து பராவி வைத்தேன், நூறு தடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன், ஏறு திரு உடையான், இன்று வந்திவை கொள்ளுங்கொல்லோ” என்ற பாசுரத்தை திருவாராதன காலத்தில் பெருமாளுக்கு பிரசாதம் அமுது செய்விக்கும் போது மிகவும் பக்தியுடன் அனுசந்திப்பது வழக்கம்.

திருவரங்கத்து செல்வனை நினைத்து உருகும் பாசுரங்களில், மூவடி பெற மாவலியிடம் நடந்து சென்ற கண்ணன், அவனையே விரும்பும் தனக்கு அவன் நடையழகைக் காட்ட வேண்டுகிறார்.   பெண்ணின் வருத்தம் அறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்ட பெருமாள் தன் விஷயத்தில் வேறுபடுகிறாரே என்றும், தம்மை விரும்புவரை தான் விரும்புவேன் என்று வராக அவதாரத்தில் சரமச்லோகத்தில் சொன்ன வார்த்தைகள் பொய்யாகாமல் இருக்க வேண்டுமே என்றும் கவலைபடும் பாசுரங்கள் தொடர்கின்றன.

varahar

வராஹ சரமச்லோகத்தில், “உடல், மனது முதலியவை நன்றாக இருக்கும் போது, என்னை ஒருவன் நினைப்பானாகில், பின்பு அவன் மூச்சடங்கி முடியாதபோது, அவனை நான் நினைத்து நற்கதியை பண்ணுவிப்பேன்” என்று பூமிதேவியிடம் வராகப்பெருமாள், கூறுகிறார்.  இதே போல், இராம, கிருஷ்ண சரமச்லோகங்கள் உள்ளன. அவைகளை பின் வரும் வலைப்பதிவுகளில் பார்க்கலாம்.

இறுதியாக, ஆண்டாள் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம், அவர்கள் ஆண்டாளை, தனது விரக நோயில் இருந்து காப்பாற்ற நினைத்தால், திருஆய்ப்பாடிக்கு அழைத்துச் செல்லச் வேண்டுகிறார்.  கண்ணனின் அணிகலன்களைக் கொண்டு தனது நோயினைக் குறைக்கவும் வேண்டுகிறார்.

கண்ணன் தன்னைச் சேர்ந்தவர்கள் துன்புற்றால் அதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்.   ஆண்டாள் துன்புற்று இருப்பதை தெரிந்து அவள் துன்பம் தீர அவள் எதிரில் நின்று சேவை தருகிறார்.   கண்ணன் பசுக்களை மேய்த்து விளையாடுவதையும், அவன் மேல் வெயில் படாமல் இருக்க, கருடன் தன் சிறகுகளை விரித்துப் பறப்பதையும் பிருந்தாவனத்தில் கண்டதாக ஆண்டாள் பாடுகிறார். முதலை வாய்ப்பட்ட யானை பகவான் அருளால் மீட்கப்பட்டு துயர் தீர்ந்தது போல் தானும் பிரிவுத் துன்பத்தில் இருந்து மீண்டு பெருவாழ்வு பெற்றதாகக் கூறி ஆண்டாள் முடிக்கிறார்.

ஆண்டாள், கண்ணனைக் கண்டு பிருந்தாவனத்தில் இன்புற்று இருக்கும் இந்த சமயத்தில் நாம் இப்பதிவினை நிறுத்தி கொண்டு, அடுத்த பதிப்பினில் மீண்டும் ஆண்டாள் பற்றியும் அவரின் இன்னொரு சிறந்த படைப்பான திருப்பாவை பற்றியும்  தொடர்வோம்.

=====================================================================

Seventh Azhwaar

The next Azhwaar after Periazhwaar, is Sri Kulasekara Azhwaar, a king from Chera  Naadu, which is in the western part of Tamilnadu.     For the sake of continuity, we will seek apologies from Sri Kula Sekara Azhwaar, with a promise that we would discuss about Sri Kula Sekara Azhwaar in our future weblogs and now start talking about Aandal, alias Kothai, alias Soodi Kodutha Sudar Kodi.   Aandal is the only female in the group of Azhwaars.  She is the daughter of Sri Periazhwaar.

Ithikaasa Puraanangal

In order for the common man to understand the Vedas, Ithihaaasam and Puraanams, a set of religious literature were written.   Ramaayanam and Mahabharatham are the only two Ithihaasams and there are 18 important puraanams.    Of these, the following are the puraanams about Sri Maha Vishnu.

 • Vishnu Puraanam
 • Vaamana Puraanam
 • Varaaha Puraanam
 • Mathsya Puraanam
 • Koorma Puraanam
 • Garuda Puraanam
 • Naaradha Puraanam
 • Bahavatha Puraanam and
 • Padma Puraanam

The rest are about Siva and Brahma.

Varaaha Puraanam

Varaaha Puraanam, one of the important puraanams, talks about the Varaaha Incarnation of Sri Mahavishnu.  It contains 24000 verses and it is part of Sathvika Puranaams.  Puraanams are divided into three types, namely, Sathvika, Thaamasa and Rajasa, based on the three important states our mind takes at different times.     Rajas means Anger, Thaamasa means Inaction and Sathvika means  a balanced mind or balanced attitude. The objective of Vaishnavism is for all of us to get into a state of Sathvik at all times, so that we show kindness and respect to all human beings, animals, creatures in this world.

In Varaaha Incarnation, Bhoomadevi, was taken underwaters and hidden by Hiranyaaktshan a demon, and She was rescued by Mahavishnu. After She was saved, Boomadevi had asked a set of questions on our behalf to Mahavishnu , to protect all the living things in this world , and in Varaaha incarnation itself, He had answered all Her questions.  The compilation of the above questions and answers constitute Varaaha Puraanam.   Bhoomadevi, when She was born in this world as per the wishes of Sri Mahavishnu, reproduced the summary of what She heard from Varaaha Incarnation, in Tamil and in simple terms for the benefits of us, as Thirupaavai.    Yes, Aandal is incarnation of Bhoomadevi and she was born in the Tamil month of Aadi, and in the Tamil star of Pooram, as the daughter of Sri Periyazhwaar.

We have to start talking about Aandal only with what Swami Manavaala Maamunigal, said in his Upadesa Rathna Maalai, 22-24), “ainthu kudikku oru santhathiyai, aazhwargal tham seyalai vinchi nirkum thanmayalaai, pinjaai pazhuthaalai, aandalai, bakthiyudan naalum vaazhthaai maname, mahizhnthu“.   The meaning is, “Aandal was born as a heir to five important clans.  She did more than azhwaars. She achieved greater heights at a much younger age.   Keep this in mind, be happy and praise her.”   She achieved greater heights in devotion, which no one had ever achieved, and that too at a much  younger age of about 5 years.

The five famous clans as mentioned in the above hymn

 • First three azhwaars, Poigai Azhwaar, Boothath Azhwaar and Peyaazhwaar as one family
 • Thirumazhisai Azhwaar as the second clan
 • Nammazhwaar as the the third family
 • Periyazhwaar as the fourth family and
 • Kula Sekara Azhwaar as the fifth clan.

Azhwaars like, Nammazhwaar, Thirumangai Azhwaar, had composed hymns on Perumal, longing him to be with Him, out of extreme devotion and love towards Paramathmaa, assuming that they were women. But unlike them, since Aandal was already born as a female, it was natural for her to express  her love and her yearning to get united with Him, and at the same time appreciate and praise His greatness and compose songs that could articulate more precisely than a male assuming the role of a female.   This kind of a natural instinct made Aandal’s songs to be more special and hence Manavaala Maamunigal described her as “aazhwaargal tham seyalai vinchi nirgum thanmayalai“, meaning, “She had outperformed the Azhwaars”.

Gothasthuthi

Vedantha Desikan, another acharyar, had written a book called Gothasthuthi, containing 29 hymns to appreciate the glories of Aandal.    He said that Aandal’s glories are beyond words and he was trying to keep quiet.  But more and more he thought about them, the same glories had broken his silence and made him do this work.

Termite-mounds on the ground, are called the Ears of the Earth.  The name Valmiikam carries the meaning of those termite mounds.   The sage Valmiki, got his name, because he carried his yoga in one of the mounds, or when he practiced yoga for many years on Paramathma, termites grew the mounds around him.   Valmiki wrote one of the two hindu epics,namely, Ramayanam, consisting of 24000 verses, which is known almost to everyone in India and many in other parts of the world.  Valmiki was honoured with the title of Adi Kavi, meaning that “Poet of early ages”.    When the person born out of the Ears of the Earth could get such a great recognition, the amount of recognition that could come to the Azhwaar, Aandal,  who was born as the feature of this earth, namely, Bhoomadevi, could not be measured at all, as per Vedantha Desikar, in his Gothastuthi.

In the Ramayana, when Ravanan abducted Sita Devi, she threw away her ornaments one after the other along the way, so that Rama could be informed of the route that was taken by Ravanan.   The river Gothavari, which saw and heard the crying of Sita, could have informed Rama, but she (Gothavari) kept quiet, as she was afraid of Ravanan.   Since she did not speak truth, she accumulated sin.     Only after Aandal was born and got the name Gotha, the river Gothavari got cleansed from the sin, which got during the period of Rama, as per Vedantha Desikan, in his Gothastuthi     We all know that Mahavishnu provides the purity to all the pure things in this world, like what is told in Vishnu Sahasranaamam, “pavithraanam, pavithramyo, mangalaanaam cha mangalam“.  Similarly, Aandal had also given Purity to the river Gothavari.

Based on the above, what Gothavari had lost, was gained by another river Yamuna.   In other words, the  river Yamuna, had helped Sri Krishna, in the other epic, namely, Mahabharatham, when Sri Krishna was to be carried away from Mathura to Gokulam on the day of His birth.  The river Yamuna, had helped by giving way to Sri Krishna’s father, Vasudevar  to  carry Sri Krishna across the river.   So when there was an opportunity to help Sri Rama, the river Gothavari did not extend the help out of fear for Ravanan, the bad, whereas the river Yamuna, was not scared about Kamsan, the bad and helped Sri Krishna. In fact, the river Yamuna got the blessings from Sri Krishna, when the waves of the river touched the lotus feet of Sri Krishna.   The river Gothavari got back her sanctity only after Aandal was born and got part of her name, namely, Gotha.

We are happy to share a video from our friends in whatapp group on Aandaal at some of the divyadesams, here, thanks.

Nachiyaar Thirumozhi

Naachiyaar Thirumozhi is a prabhandham composed by Aandal, containing 143 hymns. Based on the above, she is appreciated as “Oru Nootru naarpathu moondru uraithaal vaazhiye“.    Naachiyaar Thirumozhi is perceived as an excellent literature, describing in detail, the devotion to Paramathma along with the sweetness and beauty of the Tamil language .

Like Thirupaavai, in Naachiyar Thirumozhi also, Aandal wanted to attain Lord Krishna. She started this composition with prayers to Manmathan, whose primary responsibility was to unite the lovers who got separated.  Similarly, people who are disturbed over certain things, used to seek support from fortune teller or go through the acts of an augur to find out whether they can overcome those things that are disturbing them in their mind. Aandal shared her experience with such fortune teller in one of the 10 hymns in Naachiyaar Thirumozhi.    In the next 10 hymns, starting with “Mannu perum pugazh, madhavan maamani vannan“, she called the cuckoos and asked them to shout the name of Sri Krishna.  It is recognised that those who read or sing or listen to those ten hymns, would get benefits similar to the ones, people would get when offering prayers through Thiru Manthiram.

The next 10 hymns starting with “Vaaranaam Aayiram” (meaning thousands of elephants) are more popular and they are sung in almost all the Hindu weddings. In those 10 hymns, Aandal, describes the dreams she had about getting married with Sri Krishna and the other rituals conducted in Hindu weddings, like taking a gentle step on the grindstone and coming around the fire during the marriage, etc.    Those who read, or sing or listen to these 10 hymns would be blessed with children who would have great wisdom and devotion to Paramathma.

The next ten hymns starting with “Karpooram Naarumo” talks about the special Conch, called Panchasanniyam, which is held by Sri Krishna.   She appreciates the Conch and says that the Conch had the special privilege of tasting the sweet lips of Sri Krishna.   At the same time she also makes a point to state that the sweet lips of Sri Krishna belonged to all His girl friends of Gokulam (Gopiyargal) and it was unfair for the Conch alone to have that special privilege.

Aandal in her next 10 hymns, used the clouds as her messenger to convey her wishes to Sri Krishna, when she was suffering on the separation from Sri Krishna.  In the next 10 hymns, she praises the presiding deity at Thirumalirincholai.  One of those hymns “Naaru Narum Pozhil Maaliruncholai Nambikku, Naan nooru thadaavil vennai vaai nerunthu paraavi vaithen, nooru thadaa niraintha akkaara adicil sonnen, eru thiruvudaiyaan, indru vanthu ivai kollunkollo ” is sung with lot of devotion during the Thiru Aaraadhanam (time when we offer food to Perumal), as a practice.   (The meaning of the hymn is that Aandal offered 100 large buckets of butter and 100 large buckets of Sweetened Rice to the presiding God at Thirumalrincholai and she invited the Deity to come on that day and consume the same).

Similarly in another 10 hymns that are sung on the presiding deity of Thiruvarangam, she praises the style with which He, as Vamanan, walked towards Maavali, in one of His 10 incarnations.   She asked for similar approach from Him towards her.    Similarly in another incarnation, namely, as Sri Rama, He had shown great concern towards women. Aandal uses that in one of her hymns and asks why He behaved indifferently with her now. In the same way in another incarnation, as Sri Varahan, He has told that He would like those who like Him, in the Charama Slokam.  Aandal, in subsequent hymns, prays that those words spoken by Him in His Varaha Charama Slokam should not go untrue.

Lord Varaha addresses Mother Earth or Bhoodevi in Varaha Charama Slokam, that if anyone thinks of Him, when the mind is sound (sthite manasi), with  the body in good health (suswasthe shareere), and with all mental and physical faculties working perfectly and intact (dhaatusaamye sthite), then He would remember this devotee, when he/she is on his/her deathbed lying helplessly, and personally take him/her to the Supreme Abode.

There are two other Charama Slokams, one each by Sri Rama and Sri Krishna.   We will discuss about them, when there is an opportunity in future in one of weblogs.

Finally, Aandal informed the people around her that in case they wanted to help her in terms of curing her from her disease of not being with Sri Krishna, they could take her to Thiru Aipaadi and give her Sri Krishna’s clothes and other ornaments, which could potentially reduce her pains.

Sri Krishna would not tolerate when His devotees are suffering.   When Aandal was suffering, He decided to give her, His Dharshan to relieve her of her pains.    The special dharsan to Aandal included the scenes where Sri Krishna was with the cows and another scene in which Sri Garudan, (the bird, which serves as His vehicle) spread his wings to protect Him from the hot sun in Brindavan.   She concluded her hymns by stating that she got moksham and she was happy, like the elephant, whose feet were caught by a crocodile and got relieved by the grace of Perumal.

Now that Aandal was happy after having had the dharsan of Sri Krishna in Brindavan, at this stage, we will take a break and continue talking about Aandal and her another famous work, namely, Thirupaavai in the next weblog.

The Birth of Thirupallandu / திருப்பல்லாண்டு பிறந்த வரலாறு

For English version, please click here, thanks 

பெரியாழ்வாரின் பிறப்பு

பெரியாழ்வார் மதுரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில், ஆனி மாதத்தில், சுவாதி நட்சத்திரத்தில், பெருமாளின் நித்யசூரிகளில் அவருக்கு எப்போதும் வாகனமாக சேவை செய்யும் ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தார்.

முப்புரியுட்டிய நட்சத்திரங்கள்

சில தமிழ் நட்சத்திரங்கள், அவைகளில் யார் யார் பிறந்தார்களோ, அவற்றைப் பொறுத்து சில பெருமைகளை அடைகின்றன.   பரமாத்மாவின் அவதாரங்கள் தோன்றிய நட்சத்திரங்கள் சில, ஆழ்வார்கள் அவதரித்த நட்சத்திரங்கள் சில, அதே போல், ஆச்சாரியார்கள் பிறந்த நட்சத்திரங்கள் சில.   ஆனால் ஒரே நட்சத்திரத்தில் பரமாத்மாவின் அவதாரமும், ஆழ்வார் அவதாரமும், ஆச்சாரியாரின் பிறந்த நாளும் இருந்தால்,  அந்த நட்சத்திரத்தை முப்புரியூட்டிய நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

natchathiram

இப்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் ஆழ்வாரான பெரியாழ்வாரும்,  நரசிம்ஹ அவதாரம் தோன்றிய சுவாதி நட்சத்திரத்தில், தான் அவதரித்தார்.  அதே போல் வடக்குத்திருவீதி பிள்ளை என்கின்ற ஆச்சாரியாரும் சுவாதி நட்சத்திரத்திலே பிறந்தார் .  ஆக சுவாதி ஒரு முப்புரியூட்டிய நட்சத்திரம். அதே போல் ஸ்ரீகிருஷ்ணர், திருப்பாணழ்வார் என்ற ஆழ்வார், பெரியவாச்சான்பிள்ளை என்கின்ற ஆச்சாரியார் அவதரித்த ரோஹிணியும் இந்த வகையே.   ஸ்ரீ ராமர், குலசேகர ஆழ்வார், மற்றும் எம்பார், முதலியாண்டான் என்கின்ற இரு ஆச்சாரியர்களும் தோன்றிய புனர்பூசமும் இந்த வகையே. இறுதியாக, திருப்பதி வெங்கடேச பெருமாள் அவதரித்த ஸ்ரவண (திருவோணம்) நட்சத்திரத்திரமும் இந்த வகையே, ஏன் எனில், பொய்கை ஆழ்வாரும், வேதாந்த தேசிகர், மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் என்கின்ற இரு ஆச்சர்யார்கள் அவதரித்தும்  ஸ்ரவண நட்சத்திரத்திலேயே.

இளமைக் காலம்

பெரியாழ்வாரின் இயற் பெயர் விஷ்ணுசித்தர் என்பதாகும்.  இளவயது முதல் ஆழ்வார் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள விஷ்ணு கோவிலில் உள்ள வடபத்ர சாயிடம் பக்தி கொண்டு இருந்தார்.   அவருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஆழ்வார்க்கு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.    பெருமாளுக்கு புதிய பூக்களைப் எடுத்து மாலை கட்டி சூடி பார்த்து மகிழ்வுற வேண்டும் என்று ஆழ்வார் முடிவு செய்து ஓர் பெரிய இடத்தில நந்தவனம் அமைத்தார்.  அதில் இருந்து பூக்களைப் பறித்து மாலைகளை  கட்டி அவைகளை வடபத்ர சாயிக்கு அர்ப்பணம் செய்து வந்தார்.

அரசரின் சந்தேகங்கள்

அப்போது வல்லபதேவன் என்ற அரசர் தென் மதுரை பகுதியில் நல் ஆட்சி புரிந்து வந்தார். அந்த அரசர் ஒரு சிறந்த நிர்வாகியும், மிகச் சிறந்த விஷ்ணு பக்தரும் ஆவார். அவர் ஒருமுறை இரவு சோதனைக்காக சென்ற போது வடதேசத்தில் இருந்து வந்த ஒரு அறிவாளியை சந்தித்தார்.  அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர் சொன்ன சில வார்த்தைகள், அரசரை சிந்திக்க வைத்தன. அவையாவன,

 • ஒரு மனிதன்  பகல் நேரத்தில் உழைத்தால் தான்,  மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இரவில் வாழ முடியும்.
 • ஒரு மனிதன் வருடத்தில் எட்டு மாதங்கள் உழைத்து சேமித்தால் தான், மழை காலமாகிய நான்கு மாதங்களுக்கு மகிழ்ச்சியாக வாழ முடியும்.
 •  ஒரு மனிதன் தனது இளமைப் பருவத்தில் உழைத்து சேமித்தால் தான், அவன் தன்னுடைய முதுமை காலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
 • அவைகளைப் போல், ஒரு மனிதன் இந்தப் பிறவியில், கடவுளைப் பற்றி அறிந்து கொண்டும், அவரை நினைத்துக்கொண்டும் வாழ்ந்தால் தான், அவனால் இந்தப் பிறவிக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

அடுத்தநாள் காலை, அரசன் தனது குருவான, செல்வநம்பியைக் கூப்பிட்டு மேலே சொன்ன பகுதியில் குறிப்பிட்ட அந்த கடவுள் யார் என்பதைப் பற்றியும், தான் என்ன செய்தால் இந்தப் பிறவிக்குபின் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதைப் பற்றியும், அவை எப்படி எங்கே  வேதங்களில் சொல்லப் பட்டு உள்ளன என்பதைப் பற்றியும் அறிய வேண்டும் என்று கேட்டார்.  செல்வநம்பி, இதை தெரிந்துகொள்ள நாட்டில் உள்ள சிறந்த அறிவாளிகளையும், வேதங்களை கற்று தேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு விவாதம் செய்வதால் நாம் அறிந்து கொள்வதுடன், நாட்டில் உள்ள மக்களுக்கும் பலன் இருக்கும் என்று சொன்னார்.  அரசரும் அதற்கு சந்தோஷமாக சம்மதம் தெரிவித்து, ஒரு பொற்கிழி பரிசும் கொடுப்பதாக அறிவித்தார்.  யார் தன்னுடைய சந்தேகங்களை களைகிறார்களோ அவர்களிடம் மேலே கட்டிய அந்த பொற்கிழி, தானாகவே தாழ்ந்து வரும் என்றும் அறிவித்தார்.   பற்பல வித்தகர்கள் வந்தார்கள், முயற்சி செய்தார்கள், ஆனால் பொற்கிழி மட்டும் கீழே இறங்க வில்லை, மன்னரின் சந்தேகங்களும் தீர வில்லை.

பரமாத்மாவின் ஆசை

பரமாத்மாவான வடபத்ரசாயி, விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி அவரை மறுநாள் அரசசபைக்குச் சென்று, தான் வேதங்களில் சொன்ன பர தத்துவத்தை அரசருக்கு எடுத்துச்சொல்லி, பரிசை பெற்று வரும் படி சொன்னார்.  விஷ்ணு சித்தர், தான் வேதம் எதுவும் கற்கவில்லை என்றும், அரச சபைக்குச் செல்லும் தைரியமும் நம்பிக்கையும் தனக்கு இல்லை என்றும் வடபத்ர சாயியிடம் மன்றாடினார். பெருமாள் சிரித்துக்கொண்டே, ஆழ்வார் ஒரு கருவியே என்றும், தான் அவருக்காக பேசுவோம் என்றும் கூறினார்.   இது பெருமாள் தன் பக்தனின் மேல் காண்பிக்கும்  வாத்சல்யம் ஆகும். தன் பக்தனை முன்னிலைப் படுத்த எந்த ஒரு சந்தர்ப்பதையும் அவன் விடுவதேயில்லை.   இது பசு தன் கன்றுவிடம் காட்டும் அன்பைப் போன்றது. விஷ்ணுசித்தர், இது பெருமாளின் கட்டளை போலும் என்று எண்ணி, மதுரையில் உள்ள அரச சபைக்குப்  புறப்பட்டார்.

ஆழ்வாருக்கு அங்கீகாரம்

அரசரும் செல்வநம்பியும், ஆழ்வாரை வரவேற்றனர்.  ஆனாலும் சபையில் உள்ள மற்றவர்கள், ஆழ்வார் வேதம் கற்காதவர் என்றும், வேதம் பற்றி அதிகம் தெரியாதவர் என்றும் அரசர் தவறான ஒருவரை வரவேற்கிறார் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.  அரசரும் செல்வ நம்பியும் தங்கள் சந்தேகங்களைக் கேட்க, ஆழ்வார், வால்மீகி, துருவன் போன்றவர்கள் போல், பரமாத்மாவின் அருள் பெற்று, வேதம், இதிகாச புராணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மேற்கோட்கள் எடுத்துக் காட்டி மிகத் தெளிவாக பற்பல வகைகளில், ஸ்ரீமன் நாராயணனே  ஒரே தெய்வம் என்றும், அவரே பரதத்துவம் என்றும் நிரூபித்தார்.   பொற்கிழி மெதுவாக ஆழ்வார் பக்கம் சாயத் தொடங்கியது.  சபையில் உள்ள அறிஞர்கள் ஆழ்வாரைப் பார்த்து மகிழ்ச்சியுடன்  ஆராவாரம் செய்தனர்.   அரசரும் செல்வநம்பியும் ஆழ்வார் சொன்னவைகளை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு தங்கள் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கம் கிடைக்கப்பெற்றனர்.

வல்லபதேவனான அரசனும் தனக்கு கிடைத்த விளக்கங்களால் மகிழ்ச்சியடைந்து ஆழ்வாரை தகுந்த முறையில் மரியாதை செய்ய எண்ணினான்.  வல்லபதேவன், தனது பட்டத்து யானையில் ஆழ்வாரை அமரச்செய்து, ஒரு பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்தான்.  அதையும் அவனே முன்னின்று நடத்திச் சென்றான்.  அவனுடன் வேதம் கற்ற பண்டிதர்களும் மற்றவர்களும் மிக கோலாகலமாக, “வேதத்தின் சாரங்களை தெளிவாக எடுத்துச் சொன்ன, எங்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஆழ்வார் வந்து விட்டார், அவருக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்”  என்று சொல்லிக்கொண்டே வந்தனர்.         வல்லபதேவனும் ஆழ்வாருக்கு “பட்டர் பிரான்” என்று ஒரு பட்டம் கொடுத்து சிறப்பித்தான்.  எங்கும் விழாக் காலகொண்டாட்டமும் கோலாகலமும் தான்.

தனது குழந்தையான ஆழ்வாருக்கு சிறப்பு கிடைத்ததை காண எண்ணிய பரமாத்மாவும், தனது தேவிமார்களுடனும், பஞ்சாயுதங்களுடனும், கருடாழ்வாரின் மேல் ஊர்வலம் நடக்கும் இடத்தில வானத்தில் கோடி சூர்ய ஒளியுடன் தோன்றினார் . அதைப் பார்த்த பிரம்மா, சிவன், இந்திரன் போன்ற மற்ற தெய்வங்களும்   வானில் தோன்றி பரமாத்மாவான மகாவிஷ்ணுவிற்கு தங்கள் மரியாதைகளையும் பிரார்த்தனைகளையும் செலுத்தினர்.

(படங்கள் http://www.anudinam.org -கிற்கு நன்றி, திருக்கூடல் பெரியாழ்வார் திருநட்சத்திரம் –  Thanks to http://www.Anudinam.org  for the pictures, Thirukoodal Periyazhwaar Thirunakshathiram)

திருப்பல்லாண்டு

ஆழ்வார் வானில் தோன்றிய ஸ்ரீமன் நாராயணனை நன்றாக தரிசித்தார்.  உடனே அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ, இங்கு யாராவது அசுரர்கள் வந்து தொந்தரவு கொடுப்பார்களோ என்றெல்லாம் பயந்து போனார்.  யானையின் மேல் அழகிற்காக போட்டு இருந்த மணிகளை கைகளில் எடுத்துக்கொண்டு அவைகளால் தாளம் போட்டு, பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பெருமாளை வாழ்த்திப் பாடினார்.   இந்த பாடலை பாடும்போது ஆழ்வார், மிகுந்த ஆனந்தத்தில் மூழ்கி மகிழ்ந்து இருந்தார் போலும்,  எந்த ஒரு வினைச் சொல்லையும் பயன் படுத்தவில்லை, ஆனால் தான் சொல்லவந்த எந்த கருத்தையும் விடாமல், பாசுரத்தின் முழு அர்த்தத்தையும்சொல்லி விட்டார்.   அதேபோல் அவர் தனக்கு சந்தர்ப்பம் கொடுத்த செல்வ நம்பியையும் மறக்காமல், இந்த பல்லாண்டு தொகுப்பில், பதினோராவது பாசுரத்தில், “அபிமான துங்கன் செல்வனைபோலே, நானும் உனக்கு பழவடியேன்” என்று சொல்லி தானும் செல்வ நம்பியை போல உண்மையும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருப்பேன் என்று செல்வ நம்பியை  குறிப்பிடுகிறார்.

ஆழ்வார் பொற்கிழியை பெற்றுக்கொண்டு அதன் உதவியோடு மேலும் பல சேவைகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் வடபத்ரசாயிக்கும் செய்து வந்தார். பெரியாழ்வார் பெற்ற பொற்கிழியைக் கொண்டு தற்போதுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மதுரையில் ஒவ்வொரு ஆண்டும், சுவாமி பெரியாழ்வாரின் திருநட்சத்திரம், திருக்கூடல் அழகர் கோவிலில்  வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை வீதிகளில், காலையில், ஸ்ரீ வியுக சுந்தரராஜ பெருமாள், தங்க கருட வாகனத்தில் புறப்பாடு கண்டு அருளுகிறார்.  பிறகு சுவாமி பெரியாழ்வார் யானை வாகனத்தில் புறப்பாடு காண்கிறார்.  அதன்போது பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பல்லாண்டு சேவித்தபடி  ஆழ்வாருடன் செல்கிறார்கள்.  இந்த விழாவை, பர தத்துவ நிர்ணய உத்சவம் என்று கொண்டாடுகிறார்கள்.

திருப்பல்லாண்டுதனில், ஆழ்வார் இந்த உலகில் உள்ள மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்களையும்  கருத்தில் கொண்டு பாடி உள்ளார்.

 • இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள்,
 • பரமனையே வேண்டும் பகவன்லாபார்திகள்,
 • இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கைவல்யார்திகள் என்று ஜீவாத்மாக்கள் மூன்று வகை படும்.

கைவல்யார்திகள் பற்றி அதிகம் தகவல் கிடையாது.  அது ஒரு விரும்புகிற நிலையும் இல்லை.  நாம் எல்லோரும் பரமனையே வேண்டும் பகவன்லாபார்திகள் ஆகவே ஆசைப் பட வேண்டும்.   திருபல்லாண்டில் ஆழ்வார், இந்த மூன்று வகையான ஜீவாத்மாக்களையும், பரமாத்மாவை வாழ்த்தி பாடி மோக்ஷம் பெற  அழைக்கிறார்.   இந்த விதத்தில், பெரியாழ்வார் மற்ற ஆழ்வார்களில் இருந்து சிறிது வேறு படுகிறார்.   மற்ற ஆழ்வார்கள், பரமாத்மாவின் பெருமைகளில் தங்கள் பக்தியால் மூழ்கி, தங்கள் மோக்ஷதிற்காகவே வேண்டுகோள் விடுத்தனர்.  பக்தர்கள் தங்களைப் பார்த்து தெரிந்து கொள்வார்கள் என்று நம்பி இருக்க வேண்டும்.  நேரடியாக பக்தர்களை மோக்ஷத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றதாகவோ, எல்லோருக்கும் மோக்ஷம் வேண்டும் என்று சொன்னதாகவோ தெரியவில்லை.  அதனால், பெரியாழ்வார், சுவாமி ராமானுஜர் என்னும் மிக முக்கியமான ஆச்சாரியாருக்கு ஒரு முன்மாதிரியாகவும், அகத்தூண்டுதலாகவும் இருந்திருக்கலாம், ஏனெனில் இராமானுஜர், ஆசை உள்ளவர் எல்லோருக்கும் மோக்ஷத்திற்கு வழி சொல்லித் தருகிறேன் என்று திருகோஷ்ட்டியூரில் சொன்னார்.

மணவாள மாமுனிகள் என்ற இன்னொரு ஆசார்யர் தன்னுடைய உபதேசரத்ன மாலை என்ற நூலில் 19 ஸ்லோகத்தில், “வேதத்துக்கு, ஓம் என்னும் அதுபோல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்” என்று திருபல்லாண்டை குறிப்பிடுகிறார்.  அதாவது வேதத்திற்கு ஓம் என்னும் வார்த்தை முதலாவதாகவும், வேதத்தின் அர்த்தங்களை சுருக்கி தன்னுள் கொண்டது போல், திருப்பல்லாண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு முதலாவதாகவும் அதன் அர்த்தங்களை சுருக்கி தன்னுள் கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

பெரியாழ்வார் திருமொழி

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், பெரியாழ்வார் திருமொழி என்பது 461 பாசுரங்களைக் கொண்ட, அவரின் மற்றோரு படைப்பாகும். இதைப் பற்றி நாம் சென்ற வலைபதிப்பில் பார்த்து உள்ளோம். பெரியாழ்வார் திருமொழியில் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் அதிகம் உள்ளது.  இந்த தொகுப்பில் ஆழ்வார் தன்னை ஸ்ரீ கிருஷ்ணனின் தாயான யசோதாவாகவே நினைத்துக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு வயது லீலைகளை பெரிதும் பாடி உள்ளார்.  ஸ்ரீ கிருஷ்ணர், பிருந்தாவன், ஆய்பாடி, மற்றும் கோகுலத்தில் வசித்த நாட்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.   அவரைப் பார்த்து அவனுடைய பக்தர்களும் மகிழ்வுடன் இருந்தனர்.    ஆழ்வார்களும், ஆச்சர்யார்களும் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைகால வாழ்க்கையையே அதிகம் ரசித்துள்ளனர், அதே அதிகம் பாடியும் உள்ளனர்.  ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் ஆட்சி செய்ததைப் பற்றியோ, பண்டவர்களுக்காக தூது சென்றதைப் பற்றியோ, அவருடைய மிகமுக்கியமான படைப்பான பகவத் கீதையைப் பற்றியோ அதிகம் பாடவில்லை. அவரிகளின் முன்னுரிமை இறைவனின் இளமைக் காலமே.

கண்ணனைப் பாடிய ஆழ்வார், ஒரு தொகுப்பில், அனுமான் தன்னை எப்படி, லங்காவில் உள்ள அசோக வனத்தில் இருந்த, சீதாபிராட்டியிடம் அடையாளம் காட்டிக் கொண்டார் (3.10) என்றும், ஸ்ரீ ராமபிரானின் உயர்ந்த குணநலன்களை மற்றொரு தொகுப்பிலும் (3.9) பாடி உள்ளார்.

பெரியாழ்வார், 19 திவ்ய தேசங்களில் உள்ள பெருமான்களுக்கு பாசுரங்கள் அமைத்துள்ளார்.   அவைகளில்,

 • ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, திருப்பேர்நகர் (அப்பக்குடத்தான்), திரு குடந்தை, திருக்கண்ணபுரம் என்ற 5 சோழ நாட்டு திவ்ய தேசங்களும்,
 • ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிருஞ்சோலை, திருக்கோஷிட்டியூர் மற்றும் திருக்குறுங்குடி என்ற 4 பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களுக்கும்,
 • திரு மதுரா (வடஇந்தியா), திருப்பதி, அயோத்யா, முக்திநாத், பத்ரிநாத், தேவப்ப்ரயாகை என்னும் கண்டமென்னும் கடி நகர், துவராகா மற்றும்  திருஆய்பாடி என்கிற 8 வடநாட்டு திவ்ய தேசங்களும்
 • இந்த உலகத்திற்கு அப்பால் பட்ட திருப்பாற்கடல்  மற்றும் திருவைகுந்தம் என்ற இரண்டு திவ்ய தேசங்களும் அடங்கும்.
 • ஆழ்வார் திருவேங்கடமுடையானைப்பற்றி பாடிய பாசுரங்களை இங்கே காணலாம்.

ஆண்டாள் அல்லது கோதை என்ற பெரியாழ்வாரின் மகளை பற்றிய ஒரே ஒரு முக்கிய தலைப்பை தவிர்த்து, அநேகமாக பெரியாழ்வார் பற்றிய நமது குறிப்புகள் இத்துடன் முடிவடைந்தன.   ஆண்டாள் பற்றி அடுத்த வலைப்பதிவில் தொடரலாம்.

===============================================================

Periyazhwaar’s Birth

Periyazhwaar was born in Srivilliputhur near Madurai in Tamil Nadu, in the Tamil month of Aani, usually from June 16th to July 15th, on the Tamil Star Swathi, as a feature of Sri Karuthman or Sri Garuda Azhwaar, the Nithyasoori, who serves as vehicle to Sri Mahavishnu.

Tamil Stars, Taking Glory for Three Reasons

Some of the Tamil Stars take higher level of importance based on who were born on those stars. There are some stars in which Paramathma’s incarnations have happened; there are some stars in which Azhwaars were born and there some stars in which Acharyaars were born.   If the birth star of Paramathma, Azhwaar and Acharya happened to be same, then that star is known as “Taking Glory for Three Reasons” (Mupuri oottiya Nakshathiram).   This star Swathi is one such, as Narasimha Avatharam, Periyaazhwaar, Vadakku Thiruveedhi Pillai, an acharyar, are having Swathi as their Birth Star.   Similarly, Sri Krishna, Thirupaanazhwaar and Periyavaachaan Pillai, an acharyar are having the same birthstar, namely, Rohini.  Another example is the tamil Star Punarpoosam, which is the birth star for Sri Rama, Kulasekara Azhwaar and Embaar and Muthali Aandan (Two Acharyars).   Finally Thiruvonam or Sravana is another significant tamil star, as Sri Venkatachalapathy, Poigai Azhwaar and Sri Vendantha Desikan and Pillai Logachariyar (Two Acharyars) have this as their birth star.

natchathiram

Early Days

Periyazhwaar’s original name was Vishnu Chitthar and right from his early days, he had been a staunch devotee of Vatapathrasayi, the Mahavishnu at Srivilliputhur.   After having decided to serve the God with flowers and garlands everyday, Vishnu Chitthar, raised a large garden with lots of flowers.  He was happy offering fresh flowers from his garden to Sri Mahavishnu on  a daily basis.

King’s Queries

“Vallabhadevan” was the king ruling that area. He was a good administrator (king) and was a great Vishnu bhakta.  In  one of his regular night visits to protect his citizens, he met with a scholar from north India and while they were talking, the King was impressed with a saying from the scholar,

 • one has to work hard during day time to live and sleep happily during the night
 • one has to work hard for eight months to live happily during the rainy season of four months
 • one has to work during his youthful days to live without trouble in old age
 • one has to perceive, know and understand about lord during the life time in this world, to be happy to be with Him after leaving this mortal body

The next day, the King called his Guru, Selvanambi, to know more about the last bullet, namely, who the ultimate god was and what he needed to do to be happy after leaving this mortal body and wished to know how they were substantiated in the Vedas, the book of spiritual knowledge. Selvanambi suggested that he would convene the scholars in the country and asked them to clarify the queries from the King.   King also announced a reward, bag of gold coins, tied and hanged from top, which would automatically fall, if the clarifications offered were genuine  and accepted by Lord.    Many scholars tried, but the hanging bag never came down.

Paramathma’s wishes

Paramathma, Sri Vatapatrasayee appeared in Vishnuchittha’ s dream and asked him to go to the palace the next day to speak on vedic principles and get the reward.  When Vishnuchitthar pleaded that he did not study vedas or did not believe that he would be able to speak in front of the knowledgeable section of people in the palace. The Lord smiled and told Vishnuchittar that he would only be an instrument and He would speak through him. This shows the bhagawan’s vatsalyam, to bring His bhakta to the limelight. Vatsalyam is like what a cow shows her deep love and affection towards its calf; Paramathmaa shows such love and affection towards His devotees.   Vishnu Chitthar took this as an instruction from Vatapatrasayee and he proceeded to the palace.

Recognition to Azhwaar

In the palace, even though the King and Selvanambi, welcomed Azhwaar, all others were unhappy that the King gave reception to a wrong person, who did not study Veda or who did not have enough knowledge in Vedas.  However as per the request of the King and Selvanambi, Azhwaar being blessed with the knowledge, like Vaalmiki and Dhruvan from Sri Mahavishnu, started explaining meticulously and established that Sriman Narayanan to be the Ultimate God with thousands of quotes from Vedas, Ithihaasams and Puraanams. The Gold bag leaned towards Azhwaar to indicate that he had clarified all doubts of the King.   The scholars who did not accept Azhwaar initially, were also pleased and agreed that Azhwaar had explained all their queries and established the para thathuvam in greater details and with distinct explanations.

The King was pleased with the explanations and he wanted to honour the Azhwaar, by arranging a grand procession in which he requested Azhwaar to take the honorable seat on his Royal Ceremonial Elephant.  He himself led the procession accompanied by the vedic Pandits. The scholars in the palace also proclaimed by saying that all appreciation and glories to the most trustworthy person who showed the essence of vedham had arrived. Vallabadevan also honoured Vishnu Chitthar with a special title “Pattar Piran”, meaning the “One who offers help to great scholars”.   There was grand celebration everywhere.

Paramathmaa, also wanted to enjoy the procession , as He would always treat all His devotees as His children and would be extremely pleased whenever His devotees were recognised and glorified.  So He appeared on the sky, where the procession was going, like the light from thousands of Sun,  with all His Five weapons and with Sridevi Thayar and Boomadevi Thayar on the ever-serving bird as His vehicle, Sri Garudan.  All other gods Brahma, Rudhran and  Indhran also appeared and offered their prayers to Sri Mahavishnu.

Thirupallandu

Azhwaar, upon having a dharsan of Sri Narayanan, got worried whether something bad could happen to Him    So Azhwaar took the bells which were hanging as ornaments on the top of the Royal elephant on which he was riding, as the supporting instrument and he started singing his hymns by praising the Lord, to live long, Pallanadu, Pallandu (Many years, Many years), Pallayirathaandu (Many thousand years).   While composing this particular hymn, Azhwaar was so excited and thrilled, he did not use even a single verb, even though he had conveyed the complete meaning without any compromise. Similarly he also did not forget to refer to Selvanambi in his Pallandu, who was responsible to convene the collection of scholars to get the point across that Sriman Narayanan is the ultimate God, in the eleventh hymn of Pallanadu, where he mentioned “abimaana thungan selvanai pol, Thirumaale, naanum unnaku pazavadiyen“, meaning “Paramathma, Like Your faultless, adorable Selvanambi, I am also a faithful servant”.   Azhwaar received the gold bag and he continued his great service to Srivilliputhur temple and to Sri Vadapatrasayi.

It is believed that the current gopuram of Srivilliputhur temple, was built by Periazhwar using the gold that was won from the palace.     Swami Periyazhwar Thirunakshatram Mahotsavam is celebrated every year in a very grand manner at  Thiru Koodal Azhagar Temple, Madurai. In the morning Sri Vyuga Sundararaja Perumal Purappadu takes place on Golden Garuda Vahanam (Bird vehicle) in the streets of Madurai. Later Swami Periyazhwar Purappadu takes place on Gaja Vahanam (elephant as vehicle) with the recital of Pallanadu. Usually lot of bakthas take part in this function to receive the blessings of azhwar and Perumal.  The function is also called as “Para Thathuva Nirnaya Utsavam”, meaning, “the celebration to decide who is the ultimate god”.

In Thirupaallaandu, Azhwaar also takes care of the three types of Jeevathmaas, people who seek this worldly wealth (Aiswaryarthigal), people who seek Paramathmaa (Bhagawanlaabaarthigal) and those who are in between these two categories (kaivalyarathigal). There are not (m)any examples for the Kaivalyarthigal in the history or in any documentation.  Certainly that is not a desired state to reach and hence we all should only seek the third stage, namely, Bhagawanlaabarthi.   In Thirupallanadu, Azhwaar invites and asks all the Jeevathmaas to take part in praising God and in that sense also Azhwaar is believed to be slightly different than all other Azhwaars.  (Other Azhwaars have praised Lord, and repeatedly requested for their individual Moksham and they might not have explicitly told about  the moksham for all other jeevathmas directly, believing that other Jeevathmaas would learn from them).    Again in this way Periyazhwaar might also been an inspiration to Swami Ramanujar, a very important Acharyar for us, who offered to show the ways to  Moksham for all those who are interested, in Thirukoshtiyur.

Sri Manavaala Maamuni, an acharyar, in his Upadesa Rathina Maalai, said that Thirupaalandu takes the first place in Naalaayira Divya Prabandham, because it contains all the meanings in the shortest  form, like the word OM, which is the is the starting word for all vedas and containing all the meaning. (meaning of Upadesa Rathina Mala 19).

Periyazhwaar Thirumozhi

Periyazhwaar Thirumozhi is another set of hymns with 461 verses within Naalaayira Divya Prabandham. As mentioned in our earlier weblog.  Periyazhwaar Thirumozhi is on Sri Krishna and His various activities.  In those hymns, Azhwaar assumed himself as Yasoda, the mother of Lord Krishna, and captured every stage of His early life.  When Sri Krishna lived in Brindavan, Thiruvaipaadi and Gokulam, He was very happy and His devotees were also very happy.  Azhwaars and Acharyars had also enjoyed this part of Sri Krishna’s life much more than His time as King in Dwaraka or when He acted as a messenger on behalf of Pandavaas or even on His great contribution, the Geetha. Azhwaars had always showed a priority and preference for His younger days and composed hymns mostly on this phase of Sri Krishna.

In addition to singing about Sri Krishna, Periyazhwaar also devoted a set of hymns to describe how Hanuman identified himself to Sita in Asoka vanam in Sri Lanka (3.10) and in another set of hymns Azhwaar had also portrayed the extreme high qualities of Rama(3.9).

Azhwaar dedicated his hymns to the presiding deities of the following divya desams (19):

 • 5 in Chola Desam, namely, Srirangam, Thiruvellarai, Thirupernagar (appakkudathaan), Thiru  Kudanthai, Thirukkannapuram
 • 4 in Pandiya Naadu, namely, Srivilliputtur, Thirumaliruncholai, Thirukoshtiyur,  Tirukkurungudi
 • 8 in vadanadu (North of Tamil Nadu) namely, Mathura (North India), Tiruppathi, Ayodhya, Mukthinath(Salagraamam), Badrinath, Kandamennumkadinagar (Devaprayagai), Dwaraka, Thiru Aipaadi
 • 2 in Celestial world, namely, Thiruparkadal and Sri Vaikundham

With this we have more or less completed the discussion on Periyazhwaar,  except for a new and important topic on his daughter, namely,  Aandal or Kothai, which we will try to discuss in the next weblog.

Periyazhwar / பெரியாழ்வார்

For English version, kindly click here, thanks

இதுவரை

இனி, இந்த வலைப்பதிவில், அடுத்து, ஆறாவது ஆழ்வாரான, பெரியாழ்வாரைப் பற்றி சொல்ல  முயற்சிக்கிறேன்.

பெரியாழ்வாரின் பெருமைகள்

ஸ்ரீவைஷ்ணவத்தில் இரண்டு முக்கிய அடைமொழிகள், ஒன்று “நம்” மற்றது “பெரிய”.    நம்பெருமாள், நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்ற சில   ‘நம்’ விசேஷங்கள்.  அதே போல், பெரிய கோவில், பெரிய பிராட்டியார், பெரியாழ்வார், பெரிய நம்பி, பெரிய ஜீயர் என்கின்ற பெருமையுடன் உள்ள சில ‘பெரிய’ விசேஷங்கள்.  இந்த பெருமைமிக்க பட்டியலில் உள்ள பெரியாழ்வாரைப் பற்றி கீழே காண்போம்.

கண்ணனே எல்லாம்

இதற்கு முன்பு, நாம், முதல் ஆழ்வார்களான பொய்கை, பூதம், பேய் ஆழ்வார்களைப் பற்றி பார்த்து உள்ளோம்.  இந்த மூன்று ஆழ்வார்களுமே, பரமபதத்தில் உள்ள பரவாசுதேவனைப் பற்றிய பக்தியில் ஆழ்ந்து பெருமாளின் ஐந்து நிலைகளில் ஒன்றான பரத்துவம் பற்றியே அதிகம் பாடி உள்ளார்கள்.   ஐந்து நிலைகளாவன, பர, வியூக, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை என்பவை.   நான்காவதான, திருமழிசையாழ்வார், அந்தர்யாமியில் ஆழ்ந்து அந்தர்யாமி பற்றியே அதிகம் பாடி உள்ளார்.     அடுத்து வந்த நம்மாழ்வார் கிருஷ்ண-திருஷ்ணா தத்துவம் என்றே பார்த்து உள்ளோம்.    அவர் விபவாவதரமான ஸ்ரீ கிருஷ்ணனையே அதிகம் பாடி உள்ளார்.   அதே போல், பெரியாழ்வாரும், விபவதில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனின் மேல் அதிக பிரேமையும், பக்தியும் கொண்டு அவரை பற்றியே அதிகம் பாடி உள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணனின் மேல், ஆழ்வாருக்கு இருந்த பக்தியும் அன்பும் காதலும், அவருடைய மகளான ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் மேல் அதீத பக்தி ஏற்பட ஒரு காரணமானது என்றால் அது மிகை இல்லை. ஆழ்வார்கள் வரிசையில், அடுத்து, ஏழாவது ஆழ்வாராக உள்ள ஆண்டாள் , அந்த கண்ணனையே மனதில் வரித்து, ஸ்ரீ ரங்கத்தில் இருந்து அருள் பாலிக்கும் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

திருப்பல்லாண்டு

எல்லா ஆழ்வார்களுமே பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் அதிக பிரேமையும், பக்தியும் காதலும் மரியாதையும்  கொண்டு உள்ளார்கள்.  பெரியாழ்வார், மற்ற எல்லா ஆழ்வார்களையும் விட, பெருமாளின் மேல், பக்தியும் காதலும் மரியாதையும் மட்டும் இல்லாமல், சிறிது அதிகமாகவே  பொறுப்பையும் அல்லது பரிவையும் கொண்டு  உள்ளார்.   இதனை நம் பெரியவர்கள், பொங்கும் பரிவு என்றும் ஒரு தாய், தன் குழந்தையிடம் காட்டுவதைவிட சற்று அதிகமான அன்பு என்றும் குறிப்பிடுகிறார்கள்.   இதுவே பெரியாழ்வாரை, “பல்லாண்டு பல்லாண்டு” என்று பாட வைத்தது.   இந்த பல்லாண்டு பாசுரமே உலகில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் காலையில் சொல்லும் முதல் ஸ்லோகம் ஆகும்.  அதே போல், பல்லாண்டு பாசுரமே, நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பின் முதல் பாடலும் ஆகும். 12 பாசுரங்கள் உள்ள இந்த பல்லாண்டு தொகுப்பில், பெரியாழ்வார் பெருமாளை பற்பல ஆண்டுகள் நன்றாக வாழ மனமார வாழ்த்துகிறார்.  அதற்கு காரணம், பெருமாள் நன்றாக இருப்பதால்தான்  நாம் எல்லோரும் நன்றாக இருக்க முடியம் என்று பெரியாழ்வார் நம்புகிறார்.   இதற்கு திருப்பல்லாண்டு என்று பெயரிட்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தின்  முதலில்  வைத்து உள்ளார்கள்.

ஹஸ்தமும் ரோஹிணியும்

பெரியாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றி அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதை, அவர் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரத்தை ஒரு பாடலில் சொல்வதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.   “தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள்” (பெரியாழ்வார் திருமொழி 1-3-6), என்று சொல்லும் ஆழ்வார், அது ஹஸ்தத்திற்கு முன்பா அல்லது பிறகா என்று கூறாமல் விட்டு விட்டார்.  இதனால், ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அவரது பிறந்த நாள் கொண்டாடத்தில், யாராவது  கேடு விளைவிக்க நினைக்கும் பட்சத்தில், எந்த நாள் என்பதில் தடுமாறி விடுவார்கள் என்று ஆழ்வார் எண்ணி ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நட்சத்திரமான ரோஹிணியை சொல்லாமல் விட்டுவிட்டார்.

உறகல் உறகல் உறகல்

அதே  போல், இன்னொரு பாடலில், (“உறகல், உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே, சங்கே” 5 – 2 – 9). ஆழ்வார், பெருமாளுக்கு எப்போதும் சேவை செய்து கொண்டு இருக்கும் நித்யசூரிகளிடம், தூங்காமல் இருக்கும் படியும், கிருஷ்ணனை நன்றாக பாதுகாக்கும்படியும், சொல்கிறார்.  ஆழ்வார் பிறந்தது இந்த கலியுகத்தில், கண்ணன் இருந்ததோ துவாபர யுகத்தில், இவை  எல்லோருக்கும் தெரிந்தது, இருந்தாலும் ஆழ்வார், ஸ்ரீ கிருஷ்ணன் அவர் கூடவே வாழ்கிறார் போல் பாடுகிறார் என்றால் அதற்குக் காரணம், அவர் ஸ்ரீ கிருஷ்ணனிடம் உள்ள அளவுக்கு அதிகமான பக்தியே.

கிருஷ்ணன் மேல் பாடல்கள்

பெரியாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் பற்பல பாடல்கள் பாடி உள்ளார். அதிலும் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவ பாடல்கள் அனைத்தும் மிக நன்றாக ரசித்து பாடி உள்ளார். இவை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், பெரியாழ்வார் திருமொழி என்ற 461 பாடல்களில் அடங்கும்.  அவைகளில் சில,

 • கண்ணனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தொடங்கும் “வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர், கண்ணன் கேசவன் வந்து பிறந்திடில்
 • ஆழ்வார் கண்ணனை நீராட “வெண்ணை அளைந்த குணுங்கும், விளையாடு புழுதியும் கொண்டு ”  என்ற பாடல் தொகுப்பில் அழைகிறார்.  இந்த பாடல்கள் இப்பவும், எல்லா வைணவக் கோவில்களிலும் பெருமாள்  திருமஞ்சன (நீராட்டு) வைபவத்திற்குப் பின் சேவிக்கப் படுகிறது.
 • அதே போல் ஆழ்வார்  “ஆநிரை மேய்க்க நீ போதி, அரு மருந்து ஆவது அறியாய்”  என்ற தொகுப்பில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பல மலர்கள் சூடிப் பார்த்து மகிழ்கிறார்.
 • மேலும், ஆழ்வார் கண்ணனின் மேல் கொண்ட பரிவால், குழந்தைக்கு கண் திருஷ்டி வராமல் இருக்க அவனுக்கு காப்பு கட்ட அழைக்கும் பாடல் தொகுப்பு, “இந்திரனோடு பிரமன், ஈசன் இமையவர் எல்லாம்“.  ஆழ்வார் திருவெள்ளறை பெருமாளையே இந்த பத்து பாடல்களிலும் ஸ்ரீ கிருஷ்ணராக கொண்டு உள்ளார். பெருமாளுக்கு மூன்று தேவிமார்கள்.  ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளா தேவி. இவர்கள் முறையே, திருவெள்ளறை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நாச்சியார்கோவில்  ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் பிரதானமாக இருக்கிறார்கள்.  ஸ்ரீதேவி தாயாரின் பிரதான தேசமான திருவெள்ளறையை ஆழ்வார் குழந்தைக்கு கண் திருஷ்டிப்  படாமல் இருக்க எடுத்துக்கொண்டது மிக உகந்ததுவே.
 • குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரின் அழகை அவர் உடம்பின் ஒவ்வொரு  இடமாக, பார்த்து அனுபவித்து, ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பு தான் “சீதக் கடலுள் அமுதன்ன தேவகி ” .   அவைகளில் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத கமலங்கள், கண் இமைகள், நெற்றி, திருமார்பு, வயிறு, முடி, தொடைகள்  மற்றும் கைகள் என்று எல்லா அவையவங்களையும் புகழ்ந்து பாடி உள்ளார்.
 • கண்ணனின் சிறு வயதில் தொட்டில் கட்டி மகிழ்ந்து விளையாடிய நாட்களை ஆழ்வார், “மாணிக்கம் கட்டி, வயிரம் இடை கட்டி” என்ற தொகுப்பின் மூலம் நமக்கு காட்டி உள்ளார்.
 • கண்ணனின் ஒவ்வொரு பருவத்தின் வளர்ச்சியையும் ஆழ்வார் பாடி உள்ளார்.
 • கண்ணன் விளையாடிய எல்லா விளையாட்டுகளையும் ஆழ்வார் தன் பாடல்களில் கொண்டு வந்துள்ளார்.  கண்ணன் குழல் ஊதியதையும் ஆழ்வார் விட வில்லை.
 • அதேபோல், ஆழ்வார், கண்ணன் சிறு வயதில் செய்த வீர சாஹசங்களையும் இன்னும் சில தொகுப்புகளாக கொடுத்துள்ளார். உதாரணமாக,  மாடுகளையும் குழந்தைகளையும் கோவர்தன கிரியை தூக்கி காப்பாற்றிய அதிசயத்தை சொல்லி உள்ளார்.

மோக்ஷம்

பெரியாழ்வார்  திருமொழி என்ற பிரபந்தத்தின் கடைசி பதிகமான, சென்னி ஓங்கு, 11 பாசுரங்கள் கொண்டவை.   அவைகளின் மூலம் பெரியாழ்வார், திருவேங்கடமுடையானிடம் சரணாகதி வேண்டி அதையும் பெற்று விட்டதாக தெரிவிக்கின்றார். “திருப்பொலிந்த உன் சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்”  (5.4.7)  என்ற போதும், அதே பாடலில் “என்னை உனக்கு உரித்தாகினையே” என்றும்,   “பறவை ஏறு பரம் புருடா, நீ என்னை கை கொண்ட பின் ” (5.4.1) என்ற போதும், சரணாகதி அடைந்ததைப் பற்றி மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.   இந்த 11  பாடலகளிலும், ஆழ்வார் தான் சரணாகதி அடைந்ததையும், அதற்காக பெருமாளுக்கு நன்றி தெரிவித்தும், அதன் மகிழ்வை கொண்டாடியும் மிக நிறைவாக சொல்லி முடிக்கிறார்.

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய சுவாமி புஷ்கரிணி தடே ! ரமயா ரமமாணாய  வேங்கடேசாய மங்களம் ” என்பது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ஸ்லோகம்.    இதன் படி, வெங்கடேச பெருமாள், தனது நிரந்தர வாசஸ்தலமான பரமபதம் அல்லது ஸ்ரீ வைகுந்ததில் இருந்து, மிக புனிதமானதும் வராக புஷ்கரணியும், உயர்ந்த மலைகளை உடையதுமான திருவேங்கடம் என்ற இந்த ஸ்தலம் வந்து, விண்ணோர்களுக்கும், இந்த மண்ணில் உள்ளவர்களுக்கும் அருள் பாலிக்கிறார்.   இப்படிப்பட்ட திருவேங்கடத்தை   விட்டு விலகி, ஆழ்வாரின் மனதிற்குள் வந்து விட்டார் என்று பெரியாழ்வார், தனது திருமொழியின்  (5.4.10) கடைசி பாடலில் “வடதடமும், வைகுந்தமும், மதிள் துவராபதியும், இட வகைகள் இகழிந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே” என்று முடிக்கிறார்.

பெரியாழ்வார் பற்றிய இந்த வலைபதிவில் அவரின் மோக்ஷம் பற்றி கூறி முடித்தாலும், அவரை பற்றிய மேலும் சில விவரங்களை அடுத்த வலைபதிவிலும் தொடருவோம்.

==============================================================

A Short Recap

We have seen so far,

 • what is Brahmam or who is Paramathma and what Brahmam has done as favours to us or the Jeevathmaas.
  • Brahmam has given the limbs and the knowledge through the Vedham or the Book of Knowledge,
  • Demonstrated the way of life through His Incarnations,
  • Created and deputed the
   • Azhwaars to re-create the Vedam into Dravidan Language and
   • Acharyars to preach us what is told by Azhwaars and in the Tamil Vedham.
 • We have also seen the five different states of Brahmam, like Para, Viyuga, Vibhava, Antharyami and Archai, and in more details about a few of the Ten Incarnations, known as Dasavatharam.
 • We have seen the different categories of Archai and
 • We have discussed on a few of the holy names of Paramathma, namely, Achuthan and Govinda.
 • We have also seen the weapons of Vishnu in a separate discussion.
 • We discussed about the first three azhwaars namely, Poigai Azhwaar, Pei Azhwaar and Boothath Azhwaar (Muthal Azhwaars), Thirumazhisai Azhwaar and Namazhwaar.
 • On Namazhwaar, we have gone through more details on his glories, his birth, his association with Madurakavi azhwaar, Nathamunigal, and with Namperumal.   Finally we had also discussed about his Moksham.

So in this weblog, we will start with the next  Azhwaar,  sixth Azhwaar in the list, namely Periazhwaar.

Glories of Periyazhwaar

In Vaishnavism, the two important adjectives are “Nam” and “Periya”.  (Ours and Big). Namperumal, Namazhwaar, Namjeeyar, Nampillai are some of the select “Nam” renowned figures.  Similarly  Periya Kovil, Periya Piraatiyaar, Periyazhwaar, Periya nambi, Periya Jeeyar are the select “Periya” figures.  Let us try to take one of the important figures in this list, namely, Periyazhwaar, in this weblog.

Krishna, his major focus

We have seen the Muthal Azhwaars, namely, Poigai Azhwaar, Boothathazhwaar and Pei Azhwaar.  These three azhwaars have immersed so much with Paravasudevar, the perumal in Sri Vaikuntham or Sri Mahavishnu in Paramapadham, the perumal of Para state, one among the five states, namely, Para, Viyuha, Vibhava, Antharyaami and Archai.   So the majority of the hymns composed by the first three azhwaars were on Para Vasudevan. The fourth Azhwaar, namely, Thirumazhisai Azhwaar, enjoyed the state Antharyaami so much that majority of his works were on Antharyaami.   We saw Namazhwaar, as Krishna – Thrishna Philosophy, and  Namazhwaar’s preference had always been to talk about Sri Krishna in Vibhava state.    In the same way, Periyazhwaar had also shown so much love and affection to Sri Krishna in Vibhava state.

Periyazhwaar’s love towards Krishna was so much, that it influenced his daughter, Andal, another Azhwaar, the seventh in list of azhwaars, to become deeply devoted towards Sri Krishna and got herself married to Sri Krishna in Srirangam, who is, Sri Ranganathar.

Thiruppallaandu

All azhwaars have shown lot of respect, love and affection towards Sri Mahavishnu or Paramathma.   Periyazhwaar had assumed a little higher level of affection and responsibility towards Paramathaa, in the sense that he is concerned a bit more about Perumaal’s safety and wellbeing. His care is considered as an “extremely affectionate love”, (in Tamil it is called “Pongum parivu”), a love which is much higher than what a mother would show towards her child. This alone made him compose the hymn, “pallaandu pallandu” which is recited in all Vishnu temples all over the world, as the first thing in morning prayers.  Incidentally this Pallandu happens to be the first hymn in the 4000 divya prabhandham.    In this “Pallandu Pallandu” hymn, Periyazhwaar assumes the role of a senior and he blesses Him for many many years of safe existence with a strong belief that He needs to be well, if all of us need to be taken care of.   These are called Thirupallandu, as the first Divya prabandham with 12 hymns, composed by Sri Periyazhwaar.

Hastham and Rohini

He cares for Sri Krishna so much, he does not want to even specify his birth star / birth day, directly to outsiders, as His enemies could plan and carry out some unpleasant activities against Sri Krishna during the birthday celebrations in the hymn “Devaki than vaitril aththathin paathaam naal” (Periyazhwaar Thirumozhi 1-3-6).   Hastam is a tamil star and Azhwaar said that He was born 10 days range of Hastam, without clearly mentioning whether it before Hastam or after Hastam.   Sri Krishna’s actual birthstar is Rohini.

Alerting

Similarly in another hymn, Azhwaar had asked the Nithyasoories, who are constantly in service of Sri Krishna or Paramathma, not to sleep or not to reduce any of the safety measures they undertake, to protect Sri Krishna.   “uragal, uragal, uragal, onn sudar aazhiye, sanke” (5-2-9).  We all know that Sri Krishna’s incarnation was in Dwapara Yugam and Azhwaar was in Kali Yugam and it is only due to the deep love and affection, Azhwaar assumed that Krishna Avathaaram was during his time.

Hymns on Krishna

Periyazhwaar had composed several hymns on Sri Krishna, especially for His younger days and these are part of the 4000 Divya prabandam.  This group containing 461 hymns is called Periyazhwaar Thirumozhi.  They include,

 • right from the day of His incarnation or birth, “vanna maadangal suzh Thirukottiyur, Kannan Kesavan vanthu piranthidil” ;
 • azhwaar invites Sri Krishna to take bath “vennnai alanitha kunnungum, vilaiyaadu puzhithiyum kondu“, which is recited in all vishnu temples whenever the priests conduct the bathing ceremony for God, which is called Thirumanjanam;
 • azhwaar invites Sri Krishna to have the garlands of different flowers, through his set of hymns, “aanirai meikaa nee pothi
 • azhwaar invites Sri Krishna to put the Kappu, a ring on His hands, to get rid of all the bad omen that could affect Sri Krishna, as He is so  handsome and naughty, through the set of hymns starting with, “indiranodu piraman, eesan imaiyavarellam”.   Azhwaar sings on the deity at Thiruvellarai, a town near Tiruchi, as Sri Krishna in this set of hymns. Perumal has three Devis, Sridevi, Bhoodevi and Neela Devi, and the divya desams, Thiruvellarai, Sri Villiputhur near Madurai and Naachiyaar kovil, near Kumbakonam are recognised  respectively, as their prominent place.  It is important for us to recognise that Azhwaar has taken Sri Devi Thaayar’s (Mother) prominent place of Thiruvellarai as the platform for Kappu, which would remove the bad omen on the Child.
 • azhwaar enjoys the beauty of Sri Krishna, step by step, by each part of His body, through the set of hymns “seetha kadalul amuthana Devaki”. In those hymns, azhwaar praises and enjoys all parts of His body, namely, His holy feet, His eyebrows, forehead, chest, stomach, hair, thighs and hands.  
 • azhwaar has also given a set of hymns for His enjoyment while He would be in the cradle, which starts with “manikkam katti, vairam idai katti
 • azhwaar has also given a set of hymns for each stage of the growth of a child, like infant or toddler, etc.
 • azhwaar has also given a set of hymns for different games that Sri Krishna would play during His younger days, including His playing of the flute
 • azhwaar has also not forgotten the various heroic activities which Sri Krishna did when He was young, such as, lifting and holding the Govardhana Hill as an umbrella to protect the children and the cows.

Moksham

Periyazhawar in his final set of hymns, called, “Senni Ongu”, surrendered himself to Thiruvenkatamudaiyaan and he explicitly stated that he got moksham when He put His Holy Feet on azhwaar’s head..   “Thiru polintha sevadi en sennniyin mel porithaai” (Periyazhwaar Thirumozhi (5.4.7) and in the same song “ennai unnaku urithaakinaiye”  and
paravai eerum param purudaa, nee ennai kai konda pin” (5.4.1) are some of the references, where Azhwaar states that he had got Moksham.    Azhwaar enjoyed, thanked and expressed how he felt after getting the moksham in each and every hymn in this group of 11 songs.

Sri Vaikunta virakthaaya swami pushkarini thade ! ramayaa ramamaanaaya venkatesaaya mangalam ” is the managala slogam in Sri Venkatesa Suprabhatham.  This states that Sri Venkatesa perumal, came out from His permanent residence of Sri Vaikutham or Paramapadham, to the holy place of Thiruvengadam, which has Varaaha Tank (Pushkarini) and huge hills,  to demonstrate that He is the God for both the celestial people and those who are living in this world.  Such is the fame for Thiruvengadam.    Periyazhwaar, concludes his Thirumozhi, by stating, that Perumaal preferred to move to Azhwaar’s heart to reside, over Thiruvengadam.  “vadathadamum vaikunthamum mathil thuvaraapathiyum, ida vagaigal igazhnthittu enpaal ida vagai kondanaiye” (Periyazhwaar Thirumozhi 5.4.10)

Even though we have started with Periyazhwaar and concluded this weblog with his Moksham, we will continue to discuss about his earlier days in our next weblog.

================================================================

Namazhwaar’s Moksham / நம்மாழ்வாரின் மோக்ஷம்

For English version, kindly click here, thanks

ஆழ்வாரைப் பற்றி ஒரு சில தலைப்புகளில், அவரின் பெருமைகள், அவதாரம், மதுரகவி ஆழ்வாருடன், நாதமுனி அவர்களுடன், ஸ்ரீரங்கநாதனுடன் என்று பார்த்தோம்.   இன்னும் இரண்டு முக்கியமான தலைப்புகள் உள்ளன, ஒன்று, அவரின் படைப்புகள் அல்லது அவர் அருளிய திவ்ய பிரபந்தங்கள் பற்றியவை; மற்றொன்று அவர் பாடிய திவ்ய தேசங்கள்.  அவைகளைப் பற்றி எழுத எனக்கு இன்னும் நிறைய ஞானமும் அனுபவமும் தேவை என்று உணர்வதால், அந்த தலைப்புகளை பின்பு ஒரு நாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி, இப்போது ஆழ்வாரின் மோட்சத்தைப் பற்றிப் பார்ப்போம்.

ஆழ்வார் இந்த பூவுலகில் முப்பத்திரண்டே ஆண்டுகள் இருந்தார் என்றும் அதிலும் பதினாறு ஆண்டுகள் அசையாமல் புளியமரத்தின் அடியில் இருந்தார் என்றும் பார்த்து உள்ளோம்.   மேலும் அவர் அந்த புளியமரத்தின் அடியில் இருந்து கொண்டே அங்கு வந்த திவ்ய தேச பெருமான்களுக்கு பாசுரங்களை சமர்ப்பித்து பாடினார் என்பதையும் நினைவில் கொள்க.

அதேபோல், ஆழ்வார்கள் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட காரணம், வடமொழி வேதங்களை திராவிட மொழியில் ஏற்படுத்தி அவற்றைக் கொண்டு, பரமாத்மாவின் பெருமைகளை   இங்குள்ள ஜீவாத்மாக்களுக்கு உபதேசம் செய்வது ஆகும்.   ஆனால் எல்லா ஆழ்வார்களுமே பரமாத்மாவிடம் பக்தியில் மூழ்கி மோட்ஷம் பெறுவதையே பெருமாளிடம் வேண்டினர்.   அவைகள் அவர்கள் பாடிய பாசுரங்களில் பெருமாளிடம் பிரார்த்தனைகளாக வெளிப்பட்டது.   பெருமாளும் ஆழ்வார்களின் பக்தியில் மகிழ்ந்து அவர்களுக்கு மோட்ஷம் கொடுத்து அருளினார்.

திவ்ய தேசங்கள்

மோட்ஷத்திற்கு முதல்படி, பரமாத்மாவிடம் சரணாகதி வேண்டுவது.  ஆழ்வார் 37 திவ்ய தேச பெருமாட்களுக்குப் பாசுரங்கள் பாடியிருக்கிறார். அவை 108 திவ்ய தேசங்களுக்குள் அடங்கும்.

 • திருவரங்கம், திருப்பேர் நகர் அல்லது கோவிலடி, திருகுடந்தை அல்லது கும்பகோணம், திருவிண்ணகர் அல்லது உப்பிலியப்பன் கோவில், திருக்கண்ணபுரம், தஞ்சை மாமணிக்கோவில் என்ற ஆறு சோழ நாட்டு திவ்ய தேசங்களையும்,
 • திருவெக்கா என்ற தொண்டைநாட்டு திவ்யதேசத்தையும்,
 • திரு அயோத்தி, திருவட மதுரை, திருத் துவாரகா, திருவேங்கடம் என்ற நான்கு வடநாட்டு திவ்ய தேசங்களையும்,
 • திருநாவாய், திருக்காட்கரை, திருமுழிக்குளம், திருவல்லவாழ், திருக்கடித்தளம், திருச்செங்குன்றூர், திருப்புலியூர், திருவாறன் விளை, திருவன்வண்டூர், திருவனந்தபுரம், திருவட்டாறு, திருவண்பரிசாரம் என்னும் பன்னிரண்டு மலை நாட்டு (மலையாள) திவ்யதேசங்களையும்,
 • திருக்குறுங்குடி, திருசீரவரமங்கை, திருவைகுந்தம், திருவரகுணமங்கை, திருபுளிங்குடி, திருத்தொலைவில்லிமங்கலம், திருக்குளந்தை, திருகோளூர், திருப்பேரை, திருக்குருகூர், திருமாலிருன்சோலை, திருமோகூர் என்கின்ற பன்னிரண்டு பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களையும்,
 • திருப்பாற்கடல் மற்றும் திருப்பரமபதம் என்கின்ற அவ்வுலக திவ்ய தேசங்கள் உட்பட 37 திவ்ய தேசங்களைப் பாடி உள்ளார்.

இவைகளில் திருகுடந்தை, திருவேங்கடம், திருவல்லவாழ் மற்றும் திருசீரவர மங்கை  என்னும்  திவ்யதேச பெருமான்களிடம் சரணாகதி வேண்டுகிறார். இவர்களைத் தவிர, ஸ்ரீரங்கம் நம்பெருமாளும், திருக்குருகூர் பொலிந்துநின்றபிரானும், திருமோகூர் ஆப்தனும், திருமாலிருன்சோலை அழகரும், திருபேர் நகரில் அப்பக்குடத்தானும் ஆழ்வாரின் மோட்ஷ வைபவத்தில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.   நம்பெருமாளைப் பற்றி அரங்கனுடன் என்ற வலைப்பதிவில் பார்த்தோம்.

மோட்ஷம் வேண்டியது

நம்மாழ்வார் திருவாய்மொழியில, ஐந்து முறை மோட்ஷம்,  வேண்டி கேட்டு உள்ளார்.

 • வானமாமலை அல்லது திருசீரவரமங்கை என்ற திவ்யதேசபெருமானான தெய்வ நாயக பெருமாளிடம், நோற்ற நோன்பிலேன்  (5-7) தொகுப்பில் “ஆறேனக்கு நின் பாதமே  சரணாக”   (5-7-10) என்று ஆழ்வார் முதல் முறையாக  சரண் புகுகிறார்.
 • திருக்குடந்தையில் ஆராவமுதப் பெருமாளிடம் (5-8) ஆராவமுதே அடியேன்  என்ற தொகுப்பில் அரிஏறே என்னம் பொற்சுடரே (5-8-7) என்ற பாசுரத்தின் மூலம் இரண்டாவது  முறை சரண் வேண்டுகிறார்.
 • திருவல்லவாழ் என்ற திவ்ய தேசப் பெருமானான திருக்குறள் கோலப்பிரானிடம், மானை நோக்கு நல்லீர்  (5-9) என்ற தொகுப்பில், காண்பதெஞ் ஞான்றுகொலோ  வினையேன்  (5-9-6) என்ற பாசுரம்  மூலம் மூன்றாவது முறையாக சரணாகதி பிரார்த்திக்கிறார்.
 • நான்காவது முறையாக, விபவாவதரமான வாசுதேவனிடம் / கண்ணனிடம் பிறந்தவாறும் வளர்ந்தவாரும் (5-10) என்ற தொகுப்பின் மூலம், நாகணைமிசை நம்பிரான் (5-10-11) என்று பாசுரம் பாடி சரணாகதி வேண்டுகிறார்.
 • பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு ஆழ்வார் திருவேங்கடமுடையானை சரண் அடைவது – உலகமுண்ட பெருவாயா – (6-10).தொகுதியில் அகலகில்லேன் இறையுமென்று  அலர்மேல் மங்கை உறை மார்பா” என்ற (6-10-10) என்ற பாசுரம் மூலம்.

இந்த ஐந்து சரணாகதிகளில், அகலகிலேன் என்ற கடைசி சரணாகதி ஒன்று மட்டுமே, பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு வேண்டியதால் பலன் கிடைத்ததாக நம் பெரியவர்கள் கூறுவார்கள்.    மற்ற பாசுரங்களில் பெருமானை மட்டுமே வேண்டுகிறார்.  ஆக, நம் சரணாகதி பலிக்க, நாம் தாயார் மூலம் செல்ல வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும்.

இதில் நான்காவது சரணாகதியில், கொஞ்சம் வேறுபாடு உள்ளது.   இது மட்டும், விபவாவதரமான கண்ணனிடம் வேண்டியது, மற்றவை அர்ச்சாவதாரப் பெருமான்களிடம்  வேண்டியவை.   அதேபோல், மற்ற சரணாகதிகளில் மோட்ஷம் வேண்டுவார், ஆனால் இங்கே, பெருமானை விட்டு பிரிந்து வருந்தினாலும், அவன் குணங்களையே கூற சக்தி கேட்கிறார்.

திருமோகூர் ஆப்தன்

தன்வாழ்நாளின் முடிவு நெருங்கிவிட்டது என்று தாமே முடிவு செய்து கொண்ட ஆழ்வார், திருநாட்டுப்  பயணத்திற்கு தயாராக இருக்கவேண்டும் என்று திருமோகூர் காளமேகப் பெருமாளை வழித்துணையாகப் பற்றுகிறார்.

 • காளமேகமே கதி என்றும்,
 • காளமேகத்தின் திருவடிகளே துணை என்றும்,
 • துன்பம் நீங்க மோகூர் சென்று அடைவோம் என்றும்,
 • திருமோகுரான் திருவடி துதிப்போம் என்றும்,
 • மோகூர் கோவிலை வலம் செய்து கூத்தாடுவோம் என்றும்,
 • திருமோகூரானை வலம் செய்தால் துயர் கெடும் என்றும்,
 • வழித்துணையில்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையும் என்றும்,
 • திருமோகுரை நெருங்கி விட்டோம் பாதுகாவல் கிடைத்து விட்டது என்றும்

சொல்லி ஆப்தன் துணையைக் கொள்கிறார்.  அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளை அடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த பாசுரம்,

தாள் தாமரைத்  தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காளமேகத்தையன்றி  மற்றின்றிலம் கதியே

திருமோகூர் கோவிலில் மூலவர் காளமேகப் பெருமாள், உத்சவர் ஆப்தன் ஆவார்கள்.

திருமாலிரும்சோலை அழகர்

வேரின் வாசம் அறிந்து வேரை சூடுபவர்கள், வேரோடு மண்ணையும்  உடன் சூடுவர். அது போல் ஞானியர்களின், ஞானம் சுடர்விடும் மேனியையும், பரமாத்மாவான திருமாலிரும்சோலை எம்பெருமான் விடுவதில்லை.   ஆழ்வாரை இந்தத் திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துசெல்ல ஆசை கொண்டான்.   (10 -7).   ஆழ்வார்  திருமாலிரின்சோலை எம்பெருமானான அழகரிடம் வேதத்தில் சொல்லப்பட்டதை எடுத்துச் சொல்கிறார்.   வேதமானது இந்த பூ உடலை இந்த உலகத்திலேயே விட்டு விட்டு ஜீவாத்மாவை மட்டுமே செல்லும்படி சொல்லி இருக்கிறது என்று சொல்லி அழகருடன் செல்ல மறுத்தார்.  அழகரும் ஆழ்வாரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு ஆழ்வாரை வேதத்தின் படியே நடக்க ஆசீர்வதித்தார்.

திருப்பேர்நகர் அப்பக்குடத்தான்

நம்மாழ்வார் இப்பெருமானைத் தான் கடைசியாகப் பாடிவிட்டு மோட்சத்திற்குச் சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.

 • பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (10-8-2)  என்றார்.
 • திருப்பேரான், தெளிதாகிய சேண் விசும்பு தருவானே” (10-8-4) என்றும்,
 • திருப்பேர் நகரான், திருமாலிருஞ்சோலை பொருப்பே உறைகின்ற பிரான், இன்று வந்து இருப்பேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்“, (10-8-6) என்றும்
 • கண்ணில் நின்று அகலான்”, என்றும், தன்னை திருநாடு கொண்டு செல்வதில் “கருத்தின் கண் பெரியன்”, என்றும், “மனத்துள் புகுந்தான் செறிந்து இன்றே” (10-8-8) என்றும்,
 • இன்று என்னை பொருளாக்கி, தன்னை என்னுள் வைத்தான் ” (10-8-9) என்றும்,
 • இறுதியாக  “உற்றேன் உகந்து பணிசெய,  உன பாதம்  பெற்றேன்” (10.8.10) என்று முடிக்கிறார்.

அப்பக்குடத்தான் ஆழ்வாரின் கையைப் பிடித்து அவரை அழைத்துச் சென்றார். அதற்கு பிறகு நேரே “சூழ்விசும்பு அணி முகில்” என்று பரமபதத்தில் தனக்கு கிடைத்த நல்வரவேற்பை அனுபவித்து பாட ஆரம்பித்து விடுகிறார்.

பரமபத வரவேற்பு

சூழ்விசும்பு எனத்தொடங்கும் (10-9) தொகுதி, ஆழ்வாருக்குக் கிடைத்த நல்வரவேற்பைச் சொல்லுகிறது.

 • மேகக்கூட்டம் வாத்தியம் வாசித்தது,
 • கடலலைகள் கைகளைத் தட்டிக்கொண்டு நடனம் ஆடின.
 • மேலுலகங்களில் மேகங்கள் பூர்ண பொற்குடங்கள்  கொண்டு வரவேற்றன.
 • அந்தந்த உலகங்களில் உள்ளோர் ஆழ்வார் அவர்களை கடந்து செல்லும் போது, தொழுதனர்;
 • முனிவர்கள் எதிர்கொண்டு வந்து வைகுந்தத்திற்கு செல்லும் வழி இதுதான், என்றும் எழுந்தருள வேண்டும்,  எழுந்தருள வேண்டும், என்றும் சொன்னார்கள்.
 • மேல் உலகத்தில் உள்ளார்கள்,  ஆழ்வார் தங்கிப் போக இடம் செய்து கொடுத்தும்,
 • சந்திர சூரியர்கள் ஒளி வெள்ளம் செய்து கொடுத்தும், ஆழ்வாரைத் தொழுதனர்.
 • ஒளிமிக்க கண்களையுடைய தேவலோக பெண்கள், ஆழ்வாரை, எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே,  என்று பிரியமுடன் வாழ்த்தினார்கள்.
 • தேவர்களும் வசுக்களும் வாழ்த்தினார்கள்.
 • நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுந்தத்திற்கு ஆழ்வாரை எதிர் கொண்டு அழைத்தனர்.
 • வாசல்காப்பாளர்கள், தங்கள் ஸ்வாமியான மாதவனுக்கு அடிமைப்பட்டவர்கள், தங்களுக்கு சுவாமி என்று கூறி வரவேற்றனர்.
 • பெருமாளும் பிராட்டியும் வந்து எதிர் கொள்ள, திருமாமணி மண்டபத்தில் முடிவில்லாத மகா ஆனந்தத்தை பரம பாகவதர்களோடு கூடி களிக்கின்ற பரமபதம் என்கிறார் ஆழ்வார்.

மேல் உலகத்தில் உள்ள எல்லோரும், “திருக்குடந்தை எம்பெருமானிடத்திலே   குலங்குலங்களாக அடிமைப்பட்டவர்கள்” என்று சொல்லி ஆழ்வாரை ஆதரித்தார்கள்.   இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட  (பரமபதத்திலும்)  குடந்தை பெருமாளின் நினைவும் அனுபவமும் மறக்க முடியாதபடி இருந்தது என்று தெரிய வரும்.

இது  ஆழ்வார்க்கு கிடைத்த வரவேற்பு என்றாலும், இது போல் தான் ஒவ்வொரு ஜீவாத்மாவும் முக்தி பெற்று பரமபதம் செல்லும் போது நடக்கும் என்பதை நாம் அறிய வேண்டும்.

திருக்குருகூர் ஆதிப்பிரான், பொலிந்துநின்றபிரான்

ஆழ்வார் திருநகரி என்ற ஆழ்வார் அவதரித்த ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் சாற்றுமுறை விமர்சையாக நடக்கும். நம்மாழ்வார் விக்கிரகத்தை 24 போர்வைகளால் போர்த்தி பகவானுக்கு எதிரே கொண்டு வந்து நிறுத்துவார்கள். தூபதீபம் காட்டி ஒரு போர்வையை எடுப்பார்கள். இப்படியே தூபதீபம் காட்டி 24 போர்வைகளையும் எடுத்த பிறகு நம்மாழ்வார் விக்கிரகத்தை பெருமாளுக்கு முன் விழுந்து நமஸ்கரிப்பது போல படுக்க வைப்பார்கள். பிறகு தூபதீபம் காட்டி துளசிதளத்தால் அவர் விக்கிரகம் வெளியே தெரியாத அளவு மூடிவிட்டு கற்பூர தீபம் காட்டி நிறைவு செய்வார்கள்.

இருபத்தி நான்கு தத்துவங்களால் மூடப்பட்டிருந்த நம்மாழ்வார், ஒவ்வொரு தத்துவங்களையும் கடந்து இருபத்தி ஐந்தாவது தத்துவமாகிய ஜீவாத்மா தத்துவத்தை அடைந்து இருபத்தி ஆறாவது தத்துவமாகிய பரமாத்மாவோடு இணைந்து விட்டார் என்பதைக் குறிப்பதே அந்த உற்சவம். நம்முடைய விசிஷ்டாத்வைதத்தில் இந்த 26 தத்துவங்களும் சொல்லப்பட்டு உள்ளன. இதைப் போலவே மனிதர்களாகிய நாம் எல்லோரும் இந்த நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்தவே அந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.

ஆழ்வார் வைகுந்தம் அடைந்ததை தரிசித்த மக்கள் கதறி அழுகின்றனர். உலகில் உள்ளோர் எல்லோரும் பெருமாளிடம்  தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, அவ்வாறே பெருமாளும் விண்ணப்பத்தை ஏற்று அனுகிரகிக்க,   நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித்தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார்.

என்றும் நம்முடன்

மோட்சம் என்பதே மீட்சி இல்லா இடம் என்பதாகும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பாகவும், பிறகும் வைகுண்டத்துக்குச் சென்று திரும்பியவர் யாரும் இல்லை. கலியுகத்திற்கு முன்னால் உண்டோ ?தசரத சக்ரவர்த்தி, தன் பெயருக்கு ஏற்ப, தன்னுடைய தேரை பத்து திசைகளிலும் செலுத்தக் கூடிய திறமை பெற்றவர். நாம் சாதாரணமாக அறியும் கிழக்கு, மேற்கு போன்ற எட்டு திசைகளும், மேல் உலகம் நோக்கிய திசையும் கீழ் உலகம் உள்ள திசையும் மற்ற இரண்டு திசைகள் ஆகும். இந்த பத்து திசைகளிலும் தேரில் சென்று தேவர்களுக்கு போர்களில் உதவினார். இவருக்கு முன்னால், இவருடைய இஷ்வாகு குல வம்சத்தினர் பிரம்மாவின் உலகத்திற்கு சென்று வந்தனர். அவர்களில் ஒரு அரசர் பிரம்மாவின் ஆசீர்வாதத்தோடு அவர் ஆராதனை செய்த பெரிய பெருமாளை அயோத்திக்கு கொண்டு வந்ததாக குறிப்புகள் உள்ளன. அதேபோல் நசிகேதஸ் என்னும் சிறுவன் தன் தந்தையின் கோபத்திற்கும் சாபத்துக்கும் ஆளாகி எமப்பட்டிணம் சென்று எமனின் ஆசிகளோடு திரும்பி வந்ததாகவும் குறிப்புகள் உண்டு. இதனால் மேல்சொன்னவர்கள் பரமபதத்திற்கு சென்று திரும்பியவர்கள் என்று கொள்ளக்கூடாது. மேலே சொன்னது, கலியுகத்திற்கு முன்பு இந்த உலகத்தைதவிர மற்ற உலகங்களுக்கும் சென்ற வர முடிந்தது என்பதே.

நம் எல்லோருக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகள் தெரியும். வேதவியாசர், கிருஷ்ண த்வைபாயனர் என்று பெருமையுடன் அழைக்கப்படுவார். அவர், கடல்போல் கொட்டிக்கிடந்த வேதங்களை, நம்முடைய பயனுக்காக, ருக், யஜுர், சாம அதர்வண வேதங்கள் என்று நான்கு பகுதிகளாக பிரித்துக்கொடுத்தார். நூற்றுஇருபத்திஐந்து ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் என்ற இதிகாசத்தையும் நமக்கு கொடுத்தார். ஸ்ரீகிருஷ்ணனே எல்லாம் என்று வாழ்ந்தவர் நம்மாழ்வார் ஆவார். உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று வாழ்ந்தவர். அவரை கிருஷ்ண த்ருஷணா தத்துவம் என்றே பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

நம்மாழ்வார் என்றும் இங்கு உள்ளார் என்பதே பலரின் கருத்து. அவர் நமக்கு கொடுத்த அத்தனையும் மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும். அவரை பின் தொடர்ந்து செல்கின்ற மிக பெரிய கூட்டத்தினுள் நாமும் ஒருவராக இருந்து மோக்ஷம் அடைந்து பரமாத்மாவிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே நம் லட்சியமாக வேண்டும்.

இத்துடன், தற்காலிகமாக நாம் நம்மாழ்வாரை பற்றிய இந்த வலைப்பதிவினை நிறுத்திக்கொண்டு,கிருஷ்ணனையே தன் குழந்தையாகவே பார்த்த விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் பற்றிய சரித்திரத்தை அடுத்த பதிவினில் பார்ப்போம். அவரே தன்னுடைய மகளை திருஅரங்கனுக்கு மணம் முடித்துக்கொடுத்தவர்.

==================================================

Swami Namazhwaar

We have seen a few notes about Swami Namazhwaar under different topics like His Glories, His Birth, With Madhurakavi Azhwaar, With Nathmunigal and with Sri Ranaganathan. There are two more interesting and important topics to be covered . One is his holy composition, under Divya Prabhandham. And the second topic is about the deities and their respective places, which are called Divya Desams, on whom he had composed hymns. Currently I think, I need more knowledge, exposure and experience before I can attempt on those and hence I defer those topics to the future. Meanwhile, we can now discuss about Azhwaar’s moksham or His Attaining the Eternal World.

Let us recall the following, which we had seen earlier. Azhwaar lived in this world only for 32 years. Out of which 16 years, he did not move and was under the tamarind tree in Azhwaar Thirunagari. More over, the deities from different temples or divya desams came to Azhwaar Thirunagari and visited the Azhwaar under the tree to get the hymns for themselves. And he did not move out of the tamarind tree for the whole 32 years.

Also please recall that Azhwaars were sent to this world to translate the Vedas into the Dravidian language, namely Tamil and also to preach the translated vedas to the people, in terms of teaching the glories of Paramathmaa, as specified in the Vedas. But all Azhwaars were immersed so much with the love and affection towards Paramathmaa and that love and affection made them beg the moksham with Paramathmaa. Paramathmaa was also extremely happy with the Azhwaars, and He gave away Moksham to them.

Divya Desangal

The first step towards Total Surrender (Saranaagathi) is to request for the same, from Paramathma. Azhwaar had composed hymns on the deities of 37 temples and they are part of the 108 Divya desams.

 • Six divyadesams from the Chola Naadu, namely, Srirangam, Thirupernagar (Koviladi), Thirukudanthai (Kumbakonam), Thiruvinnagar (Uppiliappan kovil), Thirukkannapuram, Thanjai Maamanikovil
 • Thiuvekka from Thondai Naadu
 • Four divya desams from North of Tamil Nadu, namely, Ayodya, Dwaraka, Mathura (near Delhi) and Thiruvengadam
 • Twelve divya desams from Malayala desam (or Malai Naadu), namely, Thiru Naavaai, Thirukatkarai, Thirumuzhikulam, Thiruvallavazh, Thirukkadithalam, Thiruchenkundrur, Thirupuliyur, Thiruvaaranvilai, Thiruvanvandoor, Thiruvananthapuram, Thiruvattaru, Thiruvanparisaaram
 • Twelve Divya desams from Pandiya Naadu, namely, Thirukurunkudi, Thiruseeravaramangai (Vaanamaamalai), Thriuvaikuntham, Thiruvaragunamangai, Thirupuliyangudi, Thirutholaivillimangalam, Thirukulanthai, Thirukolur, Thiruperai, Thirukurukoor (Alwar Thiru Nagari), Thirumalirincholiai (Madurai, Azhagar Malai) and Thirumogur
 • Two divya desams from the celestial world, namely, Thirupparkadal and Thiruparamapadham

Of these 37 Divyadesams, Azhwaar had requested for total surrender (Moksham) with deities at Thirukudanthai, Thiruvengadam, Thiruvallavazh and Thiruseeravaramangai. In addition, Srirangam Namperumal, Thirumogur Apthan, Thirukurukur Polinthunindrapiraan, Thirumalirincholai Azhgar, Thirupernagar Appakkudathaan were also involved in the total surrender experience of Swami Namazhwaar. We have already seen this under the heading, the association with Srirangam Nam Perumal.

Surrender Requests

Namazhwaar had requested mukthi or moksham on five different occasions through his hymns to Paramathma and they are :

 • First time, Azhwaar made his request to Sri Deivanayagapperumal at Vaanamaamalai (Thirusirivaramangai) through the hymn “Yaar Yennakku Nin Paathame Saranaaga ” (5-7-10) under the group “Notra Nonbilen” (5-7) of Thiruvaimozhi.
 • Second Time, Azhwaar made his request to Sri Aaravamuda Perumal at Kumbakonam, (Thirukudanthai) through the hymn “Ariyere, ennam Porsudare” (5-8-7), under the group “Aaravamudae adiyen“.
 • The Third time, Azhwaar made his request for total surrender with Sri Thirukural Kollappiraan, through his hymn “Kannbatheuen gnandru kola vineyen“(5-9-6) under the group, “maanai nokku nalleer” (5-9).
 • The fourth time, Azhwaar made his request to Vibhava Vasudevan / Kannan through his hymn, “Naaganamisai Embiraan“(5-10-11) under the group “Piranthavaarum, Valarthavaarum” (5-10)
 • And finally for the fifth time, Azhwaar made his request for total surrender, keeping Thayaar in front, through his hymn, “Agalahilen iraiyumendru alarmel mangai urai Marbaa”  to Thiruvengadamudaiyaan.

Of all these five surrender requests, the last one, namely, Agalahilen irayumendru, alone gave him the success. Our acharyaars used to point out that this request was successful, only because, Azhwaar had (invited) Thayaar or Piraati in his hymn, when he made the request. In the other requests, Azhwaar was referring only to Perumal. What we learn from here is that if our requests are to be successful, we need to go through Thyaar or Piraati.

There are some small differences in the fourth surrender request. The fourth alone was made to the Perumal in the Vibhava state, whereas all other hymns were addressed to the deities in Archai State. In the same way, all the other surrenders were purely requests for mukthi or moksham, whereas the fourth one alone was towards getting more strength to keep praising Him and His glories, even when Perumaal was away from Azhwaar.

Thirumogur Aptan

Azhwaar realised that his end had come and he wanted to get himself prepared for the journey towards Paramapatham. So Azhwaar requested Kalamegha Perumal of Thirumogur to accompany him for the journey. In his hymns on Thirumogur, Azhwaar said that

 • Kalamegam was his only support,
 • His sacred feet would help him,
 • He invited all the people to reach Thirumogur to get rid of all the sufferings.
 • Azhwaar added that all should go around the temple of Thirumogur,
 • All should praise the glories of all His sacred lotus feet to get relieved from their sufferings.
 • Azhwaar finally concluded by saying that all the sorrow would disappear for those, who felt that there was no support for them when they undertake the journey to paramapatham, if they approach Thirumogur and go around the temple of Thirumogur.
 • In fact the final statement of the hymn is that he got the support and care from Thirumogur Aptan.

The hymn that was composed by Azhwar to state that he reached out to Thirumogur Kalamega Perumal, who would support all those who approach Him, to obtain a place in the eternal world or moksham, is given below.

“Thaal thaamarai thada mani vayal thirumogur, naalum mevi nangu amarnthu, nindru asuraraith thagarkum, tholum nangudai suri kuzhal kamalakkan kanivaai, kalamegathaiyandri matrindrilam kathiye”.

In the temple of Thirumogur, the Moolvar is Kalamega Perumal and the Utsavar is Aptan.

Thirumalirincholai Azhagar

People who like the aroma of the root, would take the root along with the soil. In the same way, the Paramathma, the chief deity in Thirumalirincholai, Azhgar, wanted to have the body of the extremely knowledgeable people along with their knowledge. So Thirumalirincholai Azhagar wanted to carry Namazhwaar along with his body. (10-7). But Azhwaar told Thirumalirincholai Azhagar what was told in the vedam or Body of Knowledge. He said to Azhgar that the vedam insisted that the body should be left over here in this world and only the soul or Jeevaathma should be carried forward or taken. On that premise, Azhwaar insisted that Azhagar should only take the soul or the Jeevathmaa of the Azhwaar and leave the body in this world. Azhagar appreciated the knowledge of Azhwaar and blessed him to go as per what is told in the vedas.

Thirupernagar Appakudaththaan

The last deity on whom Namazhwaar had composed the set of hymns in this world, was for Thirupernagar Appakkudaththaan. After completing the group of hymns on Thirupernagar, Azhwaar proceeded straight to Paramapatham.

In one of the hymns, he said that “pere uraikindra piraan, indru vanthu peren ena en nenju niraiya pugunthaan” (10-8-2), (meaning – The deity who resides in Thirupernagar, came to me today and entered into my heart and He said that He would not move out of Azhwaar). In another hymn, Azhwaar stated that Thiruperaan would give the Paramapatham, “Thiruperaan, thelithaagiya saenn visumbu tharuvaane”(10-8-4).
In 10-8-6, Azhwaar states that “Thiruper nagaran, Thirumaliruncholai poruppe uraikindra piraan, indru vanthu iruppen endru en nenju niraya puganthaan” – (meaning, the deities of such temples at Thiruper Nagar, Thirumalirincholai, came today and filled my heart fully, without giving space for anything else). Similarly in 10-8-8 Azhwaar says “kannil nindru agalaan” (He would not move away from my eyes), He was also keen to take him to Paramapatham, “Karuthin kaan periyan” and “mannathul pugunthaan serinthu indre” (Today He got into my mind predominantly). In the next hymn (10-8-9) Azhwaar states, “indru ennai porullaaki, thannai ennul vaithaan”, (Today Thiruper Nagar perumal made Azhwaar into an object and He moved Himself inside Azhwaar) and
finally in 10-8-10, Azhwaar confirmed “utren, uganthu pani seiya un paatham petren” (Got it, Happy to do service to Him, I got your sacred Lotus Feet). Appakkudaththaan held the hands of the Azhwaar and guided him. From the next hymn onward, Azhwaar started composing about Paramapatham “Soozh Vismbu Ani mugil” and the reception he got when he undertook the journey to Paramapatham or Moksham.

Paramapatha Reception

Azhwaar provided an account of the reception he received on his journey to Paramapatham or Srivaikuntham in the group of hymns under “Suzh Vismbu Ani Mugil” (10-9).

 • It is all colourful, musical and very cordial.
 • The clouds played the drums;
 • the ocean clapped the hands and danced;
 • the cloud also held the golden pots in their hands to receive Azhwaar;
 • when Azhwaar was passing through many planets, those living in the planets wished Azhwaar;
 • the saints welcomed Azhwaar; prayed to him and informed him that Azhwaar was going in the right direction towards Paramapatham ;
 • They also offered Azhwaar places to stay and take rest.
 • Sun and Moon offered plenty of lights to Azhwaar and offered their prayers to Azhwaar, as Azhwaar was accepted by Paramathma and admitted into Srivaikuntham.
 • The ladies with powerful eyes in the celestial world welcomed Azhwaar, as the Mukthatma who was entering the Paramapatham (Srivaikuntham) to do service to Paramathma or Sri Mahavishnu.
 • Nithyasoorigal invited Azhwaar.
 • The gatekeepers at Sri Vaikuntham, welcomed Azhwaar and told Azhwaar that Azhwaar became their boss, as Azhwaar was going to serve their boss, namely, Sri Mahavishnu.
 • Finally Perumaal and Piraati appeared at the famous Thiru Ma Mani Mandapam, (Sacred Hall with huge Pearls) and
 • Azhwaar concluded by saying that at Srivaikuntham or Paramapatham, the happiness was never ending and he could enjoy the happiness with all other mukthatmaas.
 • One point which should be noted here is that even in the celestial world, those who welcomed Azhwaar, kept saying that Azhwaar and many generations of his forefathers were doing service to Thirukudanthai (Kumbakonam) perumaal. So what we understand is that Azhwaar had remembered and recollected the experience of Aaravamudan (Kundanthai Perumaal) even when he was in Paramapatham.

Even though Azhwaar stated his experience in this group of hymns about the reception he received on his way to Paramapatham, we should treat this as the potential experience for each and every Jeeathmaa who goes to Paramapatham.

Thirukurukoor Adipiraan, Polinthunindra Piraan

The perumal temple in Azhwaar Thirunagari, the birthplace of Azhwaar, performs the Namazhwaar function in a very detailed manner every year. Before the start of the event, the metal statue (Vigragam) of Swami Namazhwaar would be covered with 24 small blankets and he would be brought in front of Polinthunindra Piraan. There would be an Arthi taken and one blanket would be removed from Azhwaar. Similarly each blanket would be removed after an Arthi. After removing all the 24 blankets, Azhwaar would be placed flat at the Lotus feet of Sri Polinthunindra Piraan, keeping his face on the feet of Sri Polinthunindra Piraan with the idol on the floor facing down. Then the priests would start covering the idol with Thulsi leaves and after covering the whole idol with Thulasi, the priests would take one more round of Arthi to complete the function.

The twenty four blankets stand for the twenty four out of the twenty six philosophies, in Vichishtathdvaitham. Each removal of the blanket indicates that Azhwaar had overcome each philosophy and finally when the 24th blanket is removed, it indicates that Azhwaar had overcome all the 24 philosophies. The 25th Philosophy is Jeevathma and the 26th philosophy is Paramathma. The whole function is to illustrate that Jeevathmaa of Namazhwaar reached the Paramathmaa and we all should get to that stage, which is the primary objective of the function.

After having the dharsan of Azhwaar reaching the paramapatham or Srivaikuntham, the people watching this function would start crying, as they realise that they do not have Azhwaar with them in this world. Then they will start praying to Sri Polinthunindra Piraan that they need Azhwaar to be back in this world, for them to get to Paramapatham. Then Perumal would also accept the request of the people and grant them Azhwaar back for them to be happy at the end of the function.

Always with us

What is Paramapatham or Moksham ? It is a place where there is unlimited amount of happiness for unlimited amount of time and it is a road like an one-way street, where Jeevathmaas can enter, but would never get-out. In Kali Yugam, there is no Jeevathmaa, who visited Paramapatham and returned, before and after Swami Namazhwaar. Any one who could have that before Kaliyugam ?

According to his name, Dasaratha Chakravarthy, used to take his chariot in ten different directions to help the celestial good in their battles against the bad. In addition to the normal East, West, North, South, NE, SE, NW and SW, the other two directions are Up and Down, meaning that he could go to the planets available above the earth and the places available below the earth.

Before Dasaratha Chakravarthy, his forefathers in Ikshvaku Generation, also used to visit up and down. In one such visit, one of the kings, saw the periya perumal, who was Brahma’s daily prayer Deity. He requested Brahma to bless him with the perumal for his daily prayers in Ayodhya. He got periya perumal from Brahma, who is still today at Sri Rangam, as the presiding Deity.

Similarly there is a note about a boy Nachiketas who went to Yamadharman’s world and returned after getting the curse from his father.

All these do not mean that Jeevathmaas visited Paramapadham and returned before Kaliyugam. These are only to state that Jeevathmaas could travel beyond this world on the previous yugams.

We all know about the glories of Sri Krishna Paramathmaa. Veda Vyaasar is called Krishna Dwaipayanar. Veda Vyaasar segregated the vedas into four important parts like, Rig, Yajur, Atharvana and Saama for the benefit of people like us. He had also written the famous Mahabharatham, the epic with 125000 slokas. Namazhwaar lived as though Lord Krishna is everything, (Unnum Soru, Parugum Neer and Thinnum Vetrilai ellam Kannane – meaning, “All is Lord Krishna, whether it is the rice that is eaten, the water that is drunk and the betel that is chewed” ) and he is called as “Krishna – Thrishna Philosophy“. The word Thrishna means deep love and affection.

It is generally believed that Azhwaar, who came back because of Paramathmaa, is always with us. We should praise all the good work done by Swami Namazhwaar and we should be part of his large group of followers who wish to get to Paramapatham with his blessings.

With this, let us temporarily hold our discussions on Sri Namazhwaar and move on to the next weblog, where we will discuss about Sri Periyazhwaar or Vishnu Chitthar, who had assumed Sri Krishna to be his child and also who got his daughter married to Sri Rangan.

Thiruvengadamudaiyan peisiyathu / திருவேங்கடமுடையான் பேசியது

For English version, please click here, thanks 

திவ்ய தேசங்கள்

ஆழ்வார்கள் பாடிய பெருமாள் இருந்து அருள் பாலிக்கும் ஸ்தலங்கள் திவ்ய தேசங்கள் எனப்படும்.   அவை 108 என்றும் அவற்றில் திருபாற்கடலும், பரமபதம் என்ற ஸ்ரீவைகுந்தமும் இப்பூவுலகில் இல்லை என்றும் மற்ற 106 திவ்ய தேசங்களும் நாம் இந்த சரீரத்தோடு தரிசிக்கலாம் என்றும் பார்த்தோம்.  திவ்ய தேசங்களுக்குள்ளும், விக்கிரகங்களுக்குள்ளும் வேறுபாடு கூடாது என்றும், அப்படி பார்த்தால் அது பகவத் அபசாரம் என்றும்  நினைவில் கொள்க.

நான்கு திருத்தலங்கள்

இருந்தாலும், நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பலமுறை, ஒரு சில திவ்ய தேச மூர்த்திகளுடன் அதிகமாக ஈடுபட்டு இருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவைகளில் சில, திருஅரங்கம்,  திருப்பதி மற்றும் காஞ்சி தேவப்பெருமாள். ஆழ்வார்களால்  பாடப்படாவிட்டாலும், மேல்கோட் என்ற திருநாரயணபுரமும்  அந்த மூன்றுடன் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று.   இவைகளின் பெருமையாக ஸ்வாமி ராமானுஜர் இயற்றிய  ”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,  ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்,  ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்”. என்ற ஸ்லோகம் சான்று. ஸயனகோலத்தில் இருக்கும் ரங்கனாதன்வாழும் திருவரங்கம் ”போகமண்டபம் என்றும் நின்றசேவையாய் திருமலையில்”புஷ்ப மண்டபமாகவும்”, காஞ்சியில் “தியாகமண்டபமாகவும்”, திருநாரணபுரத்தில் பெருமாள் ”ஞானமண்டபமாகவும்” காட்சி  அளிக்கிறார்.

இதில் முதல் மூன்று அர்ச்சா மூர்த்திக்களுக்குள்ளும் ஒரு அதிசயமான ஒற்றுமை கூறப்படுகிறது.   அந்த அதிசயமானது, அந்த மூர்த்திகள் தன் அர்ச்சையில் இருந்து வந்து சாமானிய மனிதர்களிடம் பேசியதுதான்.  அதேபோல் நான்காவது மூர்த்தியான இராமப்ப்ரியன், ஸ்வாமி இராமானுசரின் சொல் கேட்டு, நடந்து வந்து, அவரின் செல்லபிள்ளையாக  அவரிடம் வந்து சேர்ந்தார்.

இந்த வலைப்பதிவில் அந்த மூர்த்திகள் யார் யாரிடம் என்ன பேசினார் என்பதை காண்போம்.

தொண்டமான் சக்கரவர்த்தி

தொண்டமான் சக்ரவர்த்தி என்பவர் திருப்பதி வேங்கடாசலபதிக்கு மிகவும் பக்தி உடையவராகவும்,  சில நூறு வருடங்களுக்கு முன் திருப்பதியும் சேர்த்து தொண்டைநாட்டை ஆண்டு வந்தார்.   அவர் திருப்பதி கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள், இரண்டு கோபுரங்கள், யாகசாலை, மடப்பள்ளி, கோசாலை மற்றும் கற்பகிரகம் எல்லாம் படிப்படியாக செய்து கொடுத்தவர். மேலும் பல பொன்னும் மணியும் கொடுத்தவர். அவரின் பக்தி மேலீட்டால் வெங்கடாசலபதி தொண்டைமானுடன் பேசுவார்.   அப்படி பேசிய இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

சங்கு சக்கரங்களை கொடுத்தது

வெங்கடேச பெருமாளின் மேல் இருந்த பக்தியால்,  நாட்டை, மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள்,  எதிரி நாட்டு மன்னன் போர் தொடுத்து வருவதால்,  தொண்டைமான் சக்ரவர்த்தியின் நாட்டுக்கு ஆபத்து வருவதாகவும், அவனை திரும்பிச்  செல்லுமாறும்  மன்னனுக்கு கூறுகிறார். அதற்கு  மன்னன், சீனிவாச பெருமாளின் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை கேட்க பெருமாளும் சங்கு சக்கரங்களைக் கொடுத்து,  தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார்.

அந்த சங்கு சக்கரங்கள், இன்றும் செங்கல்பட்டு அருகில் உள்ள திருமுக்கூடல் என்ற அப்பன் வெங்கடேச சுவாமி கோவிலில் உள்ளதாகவும், அவை தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதேபோல், இது நடந்து முடிந்தபின், திருப்தி வெங்கடேச பெருமாளுக்கு, சங்கு சக்கரங்கள் இடைப்பட்ட காலத்தில் இல்லாததால், சைவர்கள், பெருமாளை சிவன் என்று வாதிட, இராமானுஜர், திருமலை அப்பனுக்கு, சங்கு, ஆழி கொடுத்து பரம்பொருள் என்றும், பெருமாள் என்றும் நிலை நாட்டினார்  என்பதும் இன்னொரு வரலாறு.

குரும்பருத்த நம்பி

இப்போதும் நாம் திருமலைக்கு நடந்து போகும் போது, பக்த ஆஞ்சநேயர் சிலையை தாண்டியவுடன் உள்ள சிதைந்துள்ள மண்டபம் கும்மர மண்டபம்.   அதற்கு, குயவன் மண்டபம் என்று பொருள்.

தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீநிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்களைத் தயார் செய்து அனுப்புவான்.  தினமும் மீதி இருக்கும் மண்ணில், மண் புஷ்பம் செய்து, தான் மண்ணால் செய்து தன் குடிசையில் உள்ள திருமலையப்பனுக்கு சமர்ப்பித்து வந்தான்.  திருமலையப்பனும் அவன் கொடுத்த புஷ்பத்தை உகந்து தன் தலையில் சூட்டிக் கொண்டான்.    அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் உள்ள திருமலையப்பரின்  தலையில் மண் புஷ்பமாக காணப்பட்டன.

அந்த சமயம் அந்த ஊரை ஆண்டு வந்த தொண்டமான் சக்ரவர்த்தி தினமும் திருமையப்பனை தரிசனம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டிருந்தான். சில நாட்களாக திருமலையப்பரிடம், அவரின் தலையில் மண் புஷ்பத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, அதை யார் சூட்டுகிறார்கள் என்று கண்டுபிடிக்க தொடங்கினான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.   குயவன்,  பெருமாளிடம், தான் தான் புஷ்பம் சூட்டுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம், தான் செய்வது சாதாரண தொண்டு, ஒரு புஷ்பம் கைங்கர்யம் யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி. அப்படி தாங்கள் தெரியப் படுத்த வேண்டும் என்றால் தனக்கு முக்தி கொடுத்த பின் தெரிவித்தால் நலம்” என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு இருந்தான் இந்த குயவன்.

தொண்டமான் தன் சந்தேகத்தை திருமலைஅப்பனிடமே கேட்டு விட்டான்.  “ஸ்வாமி, தங்கள் சிரசிலே புதிதாக மண் புஷ்பம் காணப்படுகிறதே? அதுவும் அழகாகத் தெரிகிறதே? எனக்குத் தெரியாமல் தங்களுக்கு அணிவிப்பது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”. அதற்கு பெருமாள்,   “அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான்.  அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்லகூடாது, நாளை வா சொல்கிறேன்” என்றார்.

திருமலையப்பனும் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார். பெருமாள் அந்த குயவனிடம் கொண்ட அதீத அன்பின் அடையாளமாக அவனின் எதையும் எதிர்பார்க்காத சேவையை பற்றியும், அழகான மண் மலர்களைப் பற்றியும் அரசனிடம் கூறினார். அந்த மண் மலர்கள் மற்ற எல்லா மலர்களையும் விட வாசனையாகவும் அன்புடன் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சொன்னார். எல்லா மலர்களையும் என்று சொன்னது அரசன் சமர்ப்பிய தங்க மலர்களையும் சேர்த்துத்தான்.   தொண்டமான் சக்ரவர்த்தி உடனே சென்று குயவனை பார்க்க சென்றான். பெருமாளின் திருவுள்ளப்படி, குயவன் முக்தி அடைகிறான்.  தொண்டமான் சக்ரவர்த்தி, குயவன் நிலையைப் பார்த்ததும், அப்படியே உருகி, வசதிகள் இல்லாவிட்டாலும், ஏழை ஆனாலும், பெருமாளுக்கு தொண்டு செய்யலாம் என்றும், இப்படியெல்லாம் கூட  பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும்  குயவனைப்பற்றி,  ஊர் முழுதும்அறியும்படி செய்தான்.

இத்துடன், தொண்டமான் சக்ரவர்த்தியும், வெங்கடேச பெருமாளும் பேசிய நிகழ்வுகள் முடிந்தன.   நாம் மேலும் பார்க்க வேண்டியவை, அரங்கனை பற்றியும், தேவபெருமாளை பற்றியும் தான்.   அவற்றை இன்னொரு வலைப்பதிவில் பார்க்கலாம்.

ஒரு சிறிய சுவாரஸ்யமான தகவலுடன்,  குயவனுக்கு ஏன் குரும்பருத்த  நம்பி என்று பெயர், என்பதை சொல்லி இந்த வலைப்பதிவை நிறைவு செய்கிறேன்.

பெயர் காரணம்

ராமானுஜ நூற்று அந்தாதியில்  ஒரு பாசுரம், (7)

மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம், குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் …..” என்று மூன்று குறும்புகளை குறிப்பிடுவார்கள்.  கல்வி, பணம், அழகு மூன்றும் ஒருவருக்குத் “தான்” என்ற பெருமையை அதிகப்படுத்தி அவரை ஆணவத்தின் பக்கம் செலுத்தக் கூடும்.   அந்த மூன்றையும் தாண்டி அதற்கெல்லாம்  அப்பாற்பட்டவர் கூரத்தாழ்வான் என்பதும் அழகு, கல்வி, எல்லா சொத்துக்களையும் உதறி விட்டு, சுவாமி ராமானுஜருடன் நம் சம்பிரதாயதிற்கு சேவை செய்ய வந்தவர் என்பதையும் சொன்னது மேற்சொன்ன பாசுரம்.  அத்துடன் நான்காவது ஒன்றும் உள்ளது, அது குலப்பெருமை. இந்த குயவன் ஏழை; படிப்பறிவு, அழகு மற்றும் குலப்பெருமையும் இல்லாதவன், இருந்தும், அவன் பெருமாளுக்கு சேவை செய்து அவரிடம் இருந்து மோக்ஷமும் பெற முடிந்தது.

கூரத்தாழ்வானிடம் எல்லாம் இருந்தும், அவற்றைத் துறந்து அவர் மோட்சம் பெற்றார், இந்த குயவனிடம் இவை ஒன்றும் இல்லை, இருந்தும் பெருமாளிடம் கொண்ட பக்தியால் மோட்ஷம் பெற்றான், இதனால்,  அவனை குரும்பருத்த நம்பி என்று கூறுகிறார்கள்.

இனி நாம் பார்க்க வேண்டியவை,

 • திருக்கச்சி நம்பிகளுடன் காஞ்சி தேவப்பெருமாள் பேசியதும்,
 • திருவிளக்கு பிச்சனுடன் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் பேசியதும்  ஆகும்.

அதேபோல், நாம் பகவானின் எண்ணரிய குணவிஷேசங்களில் சிலவற்றையும் இங்கே காணலாம்.

===================================================================

Divya Desangal

The places or the towns of the deities on whom the Azhwaars have composed the hymns are called Divya Desams.   There are 108 Divya Desams of which Thirupaarkadal and Paramapadam or Sri Vaikundam are not part of this world.   So we should be able to have dharsan of the remaining 106 divyadesams with this body.   Please note that we have also seen that we should not discriminate between the deities or perumals of different temples, or perumals of different divya desams.  If we fail to follow this, then it could be seen as Bhagawath Apacharam or Disrespect to Paramathma.

Four Frequently Referred Destinations

In spite of the above, our Azhwaars and Acharyars had repeatedly referred or engaged with a few Deities like Srirangam, Thirupathi and Kanchi Deva Perumal.    Even though there is no direct Azhwaar hymn on Melkot, alias, Thiru Narayanapuram, it is also to be taken along with the other three mentioned above.   To substantiate this, we can take the sloka, written by Swami Ramanujar, “Sri Ranga Mangala Nidhim Karunaa Nivaasam, Sri Vengadaadri sikaraalaya Kaalamegam, Sri Hasthisaila sikarojvala Paarijaatham, Srisam Namaami Sirasaa Yathu Saila Deepam ” – meaning “I bow unto the abode of mercy, the auspicious jewel of Srirangam, Sri Ranganatha, the  dark rain-laden cloud of Daya on the top of the Hill known as Vengadaadri Sri Venkatesa, the wish-granting Paarijaatham tree shining on the top of the Hasthi Sailam, (Kanchi) Varadharaaja or Devapperumaal and to Sri Thirunarayanan of Melkote, who illuminates the world as the lamp on the top of Yathusailam.    Thiruarangam is called “Boga Mandapam”, Thirupathi is called “Pushpa Manadapam”, Kanchi is called “Thyaga Mandapam” and Thiru Narayanapuram is called “Gnana Mandapam”.

The first three deities have something in common, that is, they  had come out of their Archai or Vikragam or statue and spoken to common man.   The fourth one, the vikragam or the statue in Thirunarayanapuram, namely the Ramapriyan, had listened to the words of Swami Ramanuja and walked towards him.  He sat on Swami Ramanuja’s lap as his “favorite child” (Chella Pillai).

In this weblog we will try to bring out what are the occasions in which  the three perumaals had spoken to the individuals or their ardent devotees.

Thondaman Chakravarthy

Thondaman Chakravarthy was a King a few hundred years ago, in a place called Thondainadu, which included Thirupathi.    Thondaman Chakravarthy was a staunch devotee and a close follower of Lord Sri Venkatesa in Thirupathi.   He had donated gold, gemstones and lot of money to construct the temple, its walkways surrounding the main deity’s holy place, the housing area for the cows, the kitchen for the temple and the place where  priests can do special poojas.   The King   used to speak to Lord  and by the  mercy of LORD.  We give below a couple of incidents involving his interactions with Lord Venkatesa.

Gifting Sangu (Conch) and Chakaram (Discus)

Due to his overwhelming affection towards Lord Venkatesa, King Thondaman Chakravarthy handed over the kingdom to his son and he was living in Thirupathi to have his dharsan all the time.   One day, Perumaal spoke to him and asked him to go back to his kingdom, as enemies were planning to attack his country and he needed to be there to support his son so that they can protect their citizens.    Thondaman chakravarthy did not want to leave Thirupathi or Lord Venkatesa, but perumal insisted that he go.  Then Thondaman chakravarthy politely requested Lord Venkatesa to help him with His Conch and Discus in the war.   Being his great devotee, Lord Venkatesa handed over His Conch and Discus to the king and promised that they would help him in the war with the enemies.    King and his son won the battle and the Chakravarthy returned to Thirupathi. But he forgot to bring the Conch and Discus and left them back in Thondainaadu.

Even today these, Conch and Discus, can be seen in a temple called Thiru Mukoodal near Chengalpattu.   It would also be very visible in the temple that the Conch and the Discus were installed separately after the inception of the chief deity and the temple.

In the same way, when Lord Venkatesa did not have the Conch and the Discus, after the above incident involving Thondamaan Chakravarthy, the Saivaites, (those who follow Siva), argued that the God in the temple belonged to them and He was only Siva, as He did not have the Conch and Discus, which are the essential or primary identification marks for Lord Venkatesa or Sri Mahavishnu.    Swami Ramanuja made the Saivites accept that the deity was Vishnu and Venkatesa, as He took the Conch and Discus left by Swami Ramanuja.   That is why Swami Ramanuja is called “appanuku sangu azhi koduthavan”, meaning that “conch and discus were given to Him by Swami”.

Kurumbarutha Nambi

When we go to Thirumalai, by walking, we come across the big Baktha Anjeneya Statue, near Alipiri.  After the Anjeneya Statue, there is a small broken/mutilated hall,called Kummara Mandapam, meaning that this is a Kuyavan Mandapam or the Potter Hall.

 When Thondaman Chakravarthy was ruling, there was a potter by name Kurava Nambi, making and supplying necessary clay pots for the kitchen in Thirumala for Lord Srinivasa / Venkatesa.  At the end of each day, after finishing his job, using the left over clay, he made clay flowers and offered them to the Venkatesa Perumal at his house, which was also made by him in clay.   Thirumalaiappan / Srinivasa perumal / Venkatesan perumal was happy to accept the clay flowers, which were offered to him with full respect and love by the poor potter.   Such offered clay flowers started appearing on His head at the Thirumala Temple.

Thondaman Chakravarthy had been visiting the temple on a daily basis and he found the clay flower on His head for the last few days.    He was surprised and he wanted to find out who was offering such beautiful clay flowers.    But he could not find it.   The potter had earlier made a request to Thirumalaiappan that he was doing only a small offering like clay flowers and he did not want him to be made known to others.  And if Swami, still wanted to disclose the potter to anyone, he requested Lord Venkatesa to give him Moksham first (the eternal world) before letting others know about the potter.

 Since Thondaman Chakravarthy  could not find out, who was offering the clay flowers, he decided to check with Lord Venkatesa directly.   He politely asked Lord Venkatesa about the beautiful clay flowers that were appearing on His head. Lord Venkatesa told him that it was one of the devotees who offered Him these flowers on a daily basis.   The king requested that he wanted to know who was offering those flowers.   Lord Venkatesa replied that the devotee had made a request earlier, that his identity would not be revealed to others by Him.  In any case, Lord Srinivasa asked the king to come next day to find out more.

Lord Thirumalaiappan decided to give moksham to the potter and He decided to let the King know about the potter.   Lord out of abundant mercy spoke to the King about the poor potter,  his dear devoted  service to Him in offering the beautifully crafted  mud flowers, without expecting anything in return. The LORD said that the  mud flowers offered by Nambi contained  rich fragrance of love and affection than the other flowers offered to Him, including the golden flowers that were offered by the King Thondaman Chakravarthy.  The king immediately went to see the potter.  But by the time the king arrived, the potter had already left this world and on seeing his conditions, the king was totally moved.  He made it known to the world that even if people are poor, and even if they did not have much facilities, they could still do and offer wonderful services to God.   It was Thondaman Chakravarthy who made the potter known to the kingdom as a great devotee of Lord Thirumalaiappan.

With this, the episode of Lord Thirupathi Venkatesa speaking to the King, Thondaman Chakravarthy is over.  We will continue on what Srirangam Ranganathan spoke to Thiruvillakku pitchan and what Devapperumal of Kancheepuram spoken to Thirukkachi Nambi later in another weblog.

We will complete this weblog with a short interesting piece of information on why the potter has got the name Kurumbarutha Nambi.

The reason for the Name

The hymn 7 (Pasuram 7) of Ramanuja Nootru Anthathi, starts like “mozhiyai kadakkum perum puhazhaan, vanja mukkurumbaam, kuzhiyai kaddakkum nam KoorthAzhwaan charan koodiya pin….”.  This talks about the potential 3 mischiefs which could get into ourselves. These three factors are, Education, Wealth and Beauty.   While any one of these factors, could increase our pride and make us do wrong things, this hymn talks about KoorthAzhwaan, who had possessed all the three elements, had overcome all the three, namely, education, handsomeness and wealth to serve the society along with Swami Ramanujar.      Apart from these three, there is one more which could make us feel more proud and that is the caste or tribe from where we come from by birth. Taking the clue from the Mukurumbu  in this hymn, the potter can be called Kurumbarutha nambi, (Meaning that he had dissociated from all the four mischief) mainly because, he had also no education, no wealth, no beauty and he did not come from a so-called high-end caste, but he could still offer his service to Lord and got the moksham without having to worry about any of these.

Koorthazhwaan had all, and he gave up on all and obtained motsham, whereas this potter did not have any, but he also got motsham, due to his deep love and affection towards Perumaal.  Since both of them did not have any of the above to get the motsham, both can have the title “kurumbu aruthavar”.

With this, we need to move on to see the other two incidents, namely,

 • Kanchi Devapperumal with Thirukachi Nambi
 • Srirangam Ranganatha with Thiruvillaku pichan

In addition, we can also start looking a few of His glories, which are countless.

==================================================================

Thiruaranganudan/திருஅரங்கனுடன்

For English version, please click here, thanks

நம்மாழ்வார் மிகவும் உகந்த பெருமாள் நம் அரங்கனே!  நம்மாழ்வாரும் அரங்கனும் சேர்ந்து வருகிற சில காட்சிகளை இங்கு காண்போம்.  நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்ன வென்றால், நம்மாழ்வார் முப்பத்திரண்டு வருடங்கள் தான் இப்பூவுலகில் இருந்தார், அதுவும் ஆழ்வார் திருநகரிலேயே புளிய மரத்தடியில்தான் வாழ்ந்தார். இந்த வலைப்பதிவில் ஆழ்வார் என்று சொல்வது எல்லாம் அவரது விக்கிரகமே.

மணவாளன்

திருவரங்கனைத் தன் மணாளனாக வரித்து, தானே அரங்கனின் நாயகியாகிப் பாடிய பாசுரங்கள் அநேகம். அவற்றில், அரங்கனையே நினைத்து உருகும் தன் மகளின் நிலையைக் கண்டு கண்ணீர் உகுத்து, அரங்கனிடம் ‘நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று நாயகியின் தாயார் கேட்கும் பாசுரம் “கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்” எனத் தொடங்கும் பத்து பாசுரங்கள்.

ஆயிரமும் அரங்கனுக்கே

பட்டர் என்னும் ஆசார்யர், நம்மாழ்வாரின்  திருவாய்மொழி ஆயிரம் பாடல்கள் அனைத்துமே  திருஅரங்கனுக்காகவே அருளிச்செய்தவை என்று கூறுகிறார்.

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன்” .

திருவத்யயனம்

ஸ்ரீபாஞ்சராத்ரம் எனும் ஆகமமானது, மார்கழி வளர்பிறை(சுக்லபக்ஷம்) ஏகாதசி(வைகுண்ட ஏகாதசி) திதியில் இருந்து, பகவானின் ஸந்நிதியில் வடமொழி வேதம் ஓதத் தொடங்கி, தேய்பிறை பஞ்சமி நாளில் பத்து நாட்கள், பூர்த்தி செய்து, இந்த உத்ஸவத்தைக் கொண்டாடச் சொல்கிறது.  இதற்கு ’மோக்ஷ உத்ஸவம்’ என்று பெயர்.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தன் பிறந்தநாளில், (கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில்) தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் அனுபவித்துப் பாட, கிறங்கிப்போன அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று அன்போடு வினவ, ஆழ்வார் அதற்கு, ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன் தமிழ்மறையான திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்” என வேண்டினார். அரங்கன் மகிழ்வுடன் இணங்கினான். அன்று முதல் இந்த உத்ஸவமானது தமிழ்மறை உத்ஸவமாக மாறி, படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்ற பல சிறப்பு அம்சங்களைச் சேர்த்து பிரமாண்ட விழாவாகவே நாதமுனிகள், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், மாற்றி அமைத்தனர்.

இந்த உத்ஸ்தவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்விப்பர்.  இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  இதுவே ’அத்யயனத் திருவிழா’ என்றும்  ‘திருவத்யயனம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அனத்யயன காலம்

நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரியில் இருந்து புறப்படும் நாள் முதல், அவர் திருவத்யயனம் முடிந்து ஆழ்வார்திருநகரி திரும்பும் வரை உள்ள நாட்களை அனத்யயன காலம் என்றும் கோவில்களிலும் வீடுகளிலும் திவ்யப்ரபந்தங்களை ஆழ்வாருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் சேவிக்க மாட்டார்கள்.   பெருமாள், ஆழ்வாருக்காகவே காத்திருந்து செவி சாய்த்தால், நாமும்   காத்திருப்போம். பொதுவாக ஒவ்வொரு வருடமும்கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் (திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்திரம்) தொடங்கி தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் (கூரத்தாழ்வான் திரு நட்சத்திரம்) வரை  இந்த அனத்யயன காலம்இருக்கும்.    கோவில்களில் காலையில் திருப்பள்ளியெழுச்சி மட்டும் எல்லா நாட்களும்சொல்லுவார்கள்.   மார்கழி மாதத்தில் காலையில் விரதம் இருக்கும் போது மட்டும் திருப்பாவை சொல்லுவார்கள்.  மற்ற எந்த நேரத்திலும், எந்த திவ்ய பிரபந்தங்களும் அனத்யயன காலத்தில் சேவிக்க மாட்டார்கள்.

பகல் பத்து

வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாட்கள் பகல் பத்து என்று  கொண்டாடப்படும்.  அப்போது நம்மாழ்வார் தவிர மற்ற ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களை பெருமாள் முன் சேவிப்பார்கள்.  பகல் பத்தின் பத்தாவது நாள் இரவு பெருமாளுக்கு மோகினி அலங்காரம் நடக்கும்.  அடுத்த நாள் விடியற்காலை வைகுண்ட ஏகாதசி.

வைகுண்ட ஏகாதசி

மனிதப் பிறவியின் பயனே, மறுமையில் மோட்சம் அடைவதுதான் என்ற தத்துவத்தின் ஒத்திகை வைகுண்ட ஏகாதசி நாளில் நடைபெறுகிறது.  வைணவ பக்தன்  எவ்விதம் வைகுந்தம் அடைகிறான் என்பது நம்பெருமாளாலேயே ஒவ்வொரு  ஆண்டும் நடத்திகாட்டப் படுகிறது.

நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விரஜாநதி மண்டபம்  வரை போர்வை சாற்றிக்கொண்டு புறப்பட்டு வந்து, சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்வார். வைகுண்டவாசல் திறக்கப்படும் முன்பு, போர்வை களையப்பட்டு நம்பெருமாள் அலங்காரங்கள் பளிச்சிட பிரகாசமாக ஸேவை தந்தருள்வார்.  நம்மாழ்வார் மற்றும் உள்ள ஆழ்வார்களும் ஆச்சர்யார்களும் வைகுண்ட வாசலுக்கு எதிர்புறம் இருந்து, வைகுண்ட வாசல் திறந்ததும், பெருமாளை அல்லது மோட்ஷத்திற்கு வரும் ஜீவாத்மாவை (முக்த்தாத்மாவை) வரவேற்பார்கள்.  விரஜா நதியில் நீராடிவிட்டுதான் வைகுந்தத்திற்குள் செல்ல வேண்டும்.   இங்கு சந்திர புஷ்கரணி தான் விரஜா நதி.   போர்வை தான் சரீரம்.வைகுண்ட வாசல் தாண்டி செல்வதுதான் வைகுந்ததிற்குள் நம் சரீரத்தை களைந்து அவனிடம் சேர்வது.

பரந்தாமனே தன் பக்தர்களுக்காக இதை நடத்திக்காட்டுவது, நம்மை அவனிடத்தே அதிக பந்தப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது!

அரங்கன் திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் புடைசூழ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாடல்களை அரையர்கள் அபிநயிக்கக் கேட்டும் கண்டும் இன்புறுவார்.   இங்குதான் திருக்கைத்தல ஸேவை, நம்மாழ்வார் மோட்சம் போன்ற வைபவங்கள் நடந்தேறுகின்றன.   திரு மாமணி மண்டபத்தில் திரு வந்திக்காப்பு நடைபெறும். இந்த மண்டபத்தில் வேதவிண்ணப்பங்கள் நடைபெறும்.

இராப்பத்து ஏழாம் நாள்

நம்மாழ்வார்,  நாச்சியார் திருக்கோலம் (நம்மாழ்வார் மோகினி அலங்காரம் என்று பெயர்)  கொண்டு ‘பராங்குச நாயகி’யாக, இறைவனிடம்  வேண்ட, அரங்கன் அர்ச்சகர்களின் கைத்தலங்களில் எழுந்தருளி நம்மாழ்வாரைக் கடாக்ஷிக்கிறார்.  திருக்கைத்தல ஸேவையின் போது அரங்கன் அதிக அலங்காரமில்லாமல் அடுக்கடுக்காக சில பீதாம்பரங்களை மட்டும் சாற்றிக்கொண்டு காட்சி தருவார்.  ஒவ்வொரு  திருநாளன்றும், நம்பெருமாள் ரங்கநாச்சியார் ஸந்நிதி அடைந்து, அங்கு தாயார் முன் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, பிறகு ஆஸ்தானம் திரும்புவது வழக்கம்.  ஆனால் இந்த ஒரு திருநாளில் மட்டும், இதற்கு விதிவிலக்கு.   ஆழ்வார் மீது உள்ள அளவற்ற காதலால், பராங்குசநாயகியாகக் காத்திருக்கும் நம்மாழ்வாருக்காக, தன் நாச்சியாரையும் மறந்து இங்கு எழுந்தருளுவது அவனது சௌலப்யத்தின் (சௌலப்யம் என்பது இறைவனின் எளிமை நிலையைக் குறிப்பது) எல்லை!

இராப்பத்து பத்தாம் நாள்

இந்தத் திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார். இராப்பத்துத் திருநாளில் (கடைசி நாளில்)   ஒவ்வொரு  ஆண்டும்,  நம்மாழ்வார் எப்படி மோட்சத்தை அடைந்தார் என்று  நடத்திகாட்டப் படுகிறது.

அன்று நம்மாழ்வார் பரமபதவாசலுக்குச் செல்லும் வழியில் முக்தன் வேடத்தில் இருப்பார்.கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல் வெள்ளையாடை உடுத்தி, பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சி அளிப்பார்.

11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங்களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணிமுகில்’ (10-9-1) எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக்கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். இந்த பத்து பாசுரங்களில் நம்மாழ்வார் மோட்சத்திற்கு  செல்லும் வழியில் என்ன நடக்கிறது என்றும், யார் யார் வந்து எதிர்கொள்ளுகிறார்கள் என்றும் சொல்லுகிறார். அப்போது, ‘முனியே..!  நான்முகனே..’ (10-10-1) என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.  நம்மாழ்வார் நம்பெருமாளுடன் கலந்து மோட்சத்தை அடையும் நிகழ்ச்சி இப்படி  நடத்திக் காட்டப்படுகிறது.

அவாவறச் சூழ்அரியை அயனை அரனை அலற்றி, அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன, அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும், முடிந்த அவாவிலந்தாதியிப் பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே..!’  (10-10-11)

என்று உணர்வெல்லாம் ஒன்று திரட்டி திருவாய்மொழியின் கடைசி பாசுரத்தை, அரையர்கள் தாளத்தோடு பாடுவார்கள். ரங்கன் தான் சாற்றிக் கொண்டிருந்த  மாலையைக் களைந்து ஆழ்வாருக்குச் சாற்றி,  தன் நெற்றியில் இருந்து கஸ்தூரியை, ஆழ்வாரின் நெற்றியில் திலகமிட்டு தன் பெருவீட்டுக்கு அந்தாதி பாடிய ஆழ்வாரை அனுப்புவார். இதன்மூலம், பரமபதத்துக்கு சென்ற முக்தனுக்கு பகவான் அருள்புரிவது காட்டப்படுகிறது.

பங்குனி உத்திரம்

திரு அரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் ஆழ்வாரின் பங்கு மிகப் பெரியது. பெருமாள், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுக்கும் போது, நம்மாழ்வார் தான் வந்து சமரசம் செய்து வைப்பார். பிராட்டியாரும் நம் பெரியன் சொல்படி கேட்டோம் என்று ஆழ்வாருக்கு உயர்ந்த மரியாதையை தருவார்.   ‘நம் பெரியன்’ என்று சொன்னதால் நம்மாழ்வார் என்ற பெயர் தாயார் கொடுத்ததாக கொள்ளலாம்.

சடகோபர் அந்தாதி  

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட ராமாயணத்தை, கம்பர் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது,‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடின நம் ஆழ்வானை பாடினாயோ?‘ என்று பெருமாள் கேட்டாராம்.  இப்படி கேட்டதால்,  நம் ஆழ்வார்  என்ற பெயர் கொடுத்தது  திரு அரங்கன் என்றும்  கொள்ளலாம்.   கம்பர் சடகோபர் அந்தாதி என்ற நூறு பாடல்கள் உள்ள தொகுப்பையும் பிறகு எழுது திரு அரங்கன் முன் சமர்ப்பித்தார்.

மலைநாட்டு பயணத்தின்போது

தென் இந்தியாவின் மீது முதல் முதலில் படையெடுத்து வந்தவன் மாலிக் காபூர் (1311-13) இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் உலுக்கன் எனப்பெயர் கொண்ட முகமது பின் துக்ளக். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாச்சாரியார் என்ற ஆச்சர்யார் மூலம் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது

இடைப்பட்ட காலத்தில்அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரை சென்றார். பிறகு அங்கிருந்து பாதுகாப்பு கருதி கோழிகோடு சென்றார்.   அப்போது தெற்கில் இருந்து நம்மாழ்வாரும் மற்றும் சில திவ்ய தேச பெருமான்களும் கோழிகோடுக்கு எடுத்து செல்லப் பட்டனர்.  இன்றும் அந்த பகுதி கோவிந்தபுரம் என்று உள்ளது. நம்பெருமான் தன திவ்ய சிம்மாசனமான வட்ட மனையும், முத்து சட்டையையும் நம்மாழ்வாருக்கு பிரசாதித்து அருளினார்.   ஆழ்வாரும் நம்பெருமாளும் ஒரே சிம்மாசனத்தில் ஒரு வருட காலம் திருக்கணாம்பியில் (தேனை கிடங்கை) எழுந்தருளி இருந்தனர்.  ஒருமுறை ஆழ்வாரும் ரங்கனும் படகில் பயணித்தபோது ஆழ்வார் தவறாக ஆற்றில் மூழ்க அவரை கருடாழ்வார் துணை கொண்டு ஆழ்வாரை மீட்டனர்.   பிறகு அரங்கன் ஆழ்வாரை அவருடைய பாதுகாப்பு கருதி, அவரது ஆஸ்தானத்திற்கு செல்ல கட்டளையிட்டான்.   பிறகு நம்பெருமாள் மட்டும் மேல்கோட் சென்றார்.

நம்பெருமாள் மேல்கோட் சென்ற பொது, நம்மாழ்வார் தெற்கு நோக்கி பயணிக்க அப்போது கள்வர்கள்  தொந்தரவால் ஒரு செங்குத்தான மலையில் பலகையின் மூலம் ஆழ்வாரை அவரது அபிமானிகள், கீழே இறக்கிவிட்டார்கள்.  கள்வர் பயம் சென்ற பிறகு ஆழ்வாரை மேலே எடுக்க முடியவில்லை.

தோழப்பர் என்ற ஆழ்வார் அபிமானி அவரை தேட முந்திருப்பு அல்லது முந்திரி கிராமம் என்ற ஊரில் இருந்து சில தொண்டர்களை அழைத்து சென்றார்.     உச்சியில் இருந்து பலகைகளில் சங்கலி கட்டி தோழப்பரை கீழே இறக்கினார்கள்.   ஆழ்வாரை காப்பாற்றிய தோழப்பரை மற்றவர்களால் காப்பாற்ற முடியவில்லை.   இன்றும் தோழப்பருக்கு ஆழ்வார் திருநகரியில் மரியாதை செய்யப்படுகிறது.   ஆழ்வார் தெற்கு நோக்கி சென்றார்.  சென்ற வழியில் உள்ள எல்லா இடங்களிலும் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

ஆழ்வார்

அனைவராலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர் நம்மாழ்வார் ஆவார். ஏன் என்றால்,  அவர், அனைவரும் பெரியபெருமாளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருவாய்மொழியை அருளிச் செய்தார். ஆயினும் அதனை அறிய இயலாதவர்களும் பகவானை அடைய ஏதுவாக, தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார் என்பது உறுதியே. (பாதுகா சஹஸ்ரகம் 22, ஸ்ரீ வேதாந்த தேசிகன்). இப்படி நாம் மோட்சம் அடைவதற்காக பற்பல க்ருபைகளை, அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஆழ்வாரின் மோட்சம் பற்றிய ஒரு சில விவரங்களை அடுத்த பகுதியில் காணலாம்.

====================================================================

Thiruarangan

The most adored perumaal for Namazhwaar is Thiru Arangan.   Let us see a few occasions where both Thiru Arangan and Swami Namazhwaar were jointly present or jointly involved in presenting a case to us.   What we need to remember is that Azhwaar lived in this world only for 32 years and that too under the Tamarind tree at Alwar Thirunagari.  So whenever we mention Azhwaar in this weblog, it refers to his Vikragam, (idol or metal statue).

Spouse

Namazhwaar had composed many hymns (Pasurams), where he had portrayed Thiru Arangan as his bridegroom and he became Parangusa  Nayagi.   In some cases, Azhwaar had also taken the role of the mother of the bridegroom and presented the picture of the sad daughter to Thiru Arangan.   One such important composition is called “Kangulum Pagalum Kann Thuyil Ariyaal” (Both in the night and in the daytime she did not know how to sleep or close her eyes), where the mother asked Thiru Aranagan what He would do or what He was thinking about when her daughter was crying with full of tears.  Or in other words, would He be willing to accept her daughter as a bride.

All the Thousand are for Arangan 

Bhattar, one of the renowned Acharyars,  said that all the Thousand Hymns rendered by Sri Namazhwaar are for Thiru Arangan, even though they refer many other deities of various other Vishnu Temples.    “Vaan Thigazhum Solai Mathil Arangar Vann Pugazh Mel Eendra Tamil Maraigal Aaayirammum endra muthal Thai Sadagopan” – meaning that “all the one thousand hymns of Tamil Vedam, Thirvaimozhi, are on Thiru Arangan and were composed by Sri Sadagopan”.

Thiruvadhyayanam

Sri Pancha Rathram is a ceremonial set of procedures for the operations of Hindu Temples. It specifies that from the 11th day  after the new moon in the Tamil month of Margazhi, (Vaikunta Ekadasi), Sanskrit vedas should be recited in front of the Deity and it should continue for about 10 days.   These ten days function is celebrated like a festival and it is called “Moksha Festival” (Reaching the eternal world whereby the Jeevathmaa wont return to this world).

Thirumangai Azhwaar, on one of his birthdays, recited his composition, Thiru Nedun Thandagam with proper music and tune in front of Thiru Arangan. Thiru Arangan was very impressed with the performance and He asked Azhwaar  with lots of affection on what were his wishes.     Azhwaar responded by making his request to Thiru Arangan, that He should listen to the Tamil Vedam, Thiruvaimozhi, along with the Sanskrit Vedas during Margazhi Moksha Utsavam and Thiru Arangan agreed promptly.

From that day onwards, the festival was developed into Tamil Vedam Festival and got restructured with additional functions like Mohini Alankaram, Thiru Kaithala Sevai (Taking Thiruarangan around on the hands of the Priests so that people can have a closer dharsan at Thiru Aranagan), vedupari uthsavam, (This is a function to recognise the efforts of Thiru Mangai Azhwaar, where Perumal or Paramathmaa intervened Thirumangai Azhwaar for the first time to bring him to His fold) and Namazhwaar Moksham.   With all these additional functions, this twenty or twenty one day function today takes a much larger scale, because of the ideas and suggestions of Sri Nathamunigal, Swami Ramanujar and Sri Manavala Maamunigal.  who are all our Acharyars, and who have significantly helped us to understand and follow Vaishnavism).

On those days, Swami Namazhwaar’s idol or metal statue (vikgragam) would be taken from Azhwar Thirunageri to Thiru  Arangam Temple every year for this festival.   These celebrations would happen for 10 days from Vaikuntha Ekadasi.  During these 10 days Namazhwaar’s Divya Prabhandham, namely Thiruvaimozhi would be recited in front of Thiru Arangan with proper music, tune and dance, every night.    The explanation for each of the hymns would also be delivered.  This set of celebrations are called Irapathu (Night time in 10 days) or “Adhyayana Festival” or “Thiruvadhyayanam“.

Anadhyayana Period

This  period, Anadhyayana Kaalam, was the time taken for Swami Namazhwaar to start from Azhwar Thirunagari to reach to Srirangam, participate in the Irappathu Utsavam and then return to Azhwar Thirunagari.   During this period, as a show of respect to both Swami Namazhwaar and Thiru Arangan, people would not recite any Divya Prabhandham at their houses or in the temple.     This was because, Perumaal wanted to hear from Azhwaar and hence people preferred to wait for Azhwaar to recite in front of Thiru Arangan, get His blessings and return to his home.

Generally the period starts from Thirumangai Azhwaar’s birth day (Karthigai Star, Nakshathiram in the Tamil month of Karthigai) and goes until Sri Koorthazhwaar’s (one more significant acharyar who was with Swami Ramanujar for most of the time or in other words, Swami Ramanjuar wanted to be with Sri Koorthazhwaar all the time) birth  day, (Hastam Star, Nakshathiram in the Tamil month of Thai).   The vishnu temples will offer only Thirupalli ezhutchi (wake up slokas for Perumal) in the mornings and during the month of Maargazhi, Thirupaavai will be recited and that too only during the morning, when people do the Viratham (Special prayers for Markazhi Month).  Apart from that no Divya Prabhandham will be recited anywhere during the Anadhyayana Period.

Pagal Pathu (10 days of daytime)

Most of us may be knowing about Vaikuntha Ekadasi ? It is a famous festival celebrated in Srirangam and other Vishnu temples.    Ten days before the Vaikuntha Ekadasi, the festival starts with reciting of Divya Prabhandams in front of Thiru Arangan.   During this first ten days, the hymns of all other azhwaars except Namazhwaar will be recited during the day time and hence it is called Pagal Pathu (10 days of day time reciting). The tenth day night, Perumal will have a special decoration, called Mohini Alankaram.  He will be dressed as a beautiful female.  Next day early morning is the Vaikuntha Ekadasi festival.

Vaikuntha Ekadasi 

The purpose of the human life is to reach the eternal world at the end of this life, and this philosophy is rehearsed on the Vaikuntha Ekadasi day by Thiru Arangan.   How a Vaishnavite reach the eternal world is demonstrated in Vaikuntha Ekadasi day  of every year by Sri Namperumal (Thiruarangan).

Namperumal (Thiruarangan) would start from his place with himself covered by a thin cloth and He would go upto Virajanadhi Hall.   In the temple tank, Chandra pushkarani, He would take a bath or dip.    And then His blanket would be removed and He would be decorated beautifully with bright ornaments and dressed up, before He enters the Gate that is called Vaikuntha Vaasal or Paramapada Vaasal.   Nammazhwaar and other azhwaars and Acharyars would be waiting on the other side of Vaikuntha Vaasal to receive Perumaal or Paramathmaa or the Jeevathama who would be joining them in the eternal world.    Before reaching the eternal world, all Jeevathmaas should take a dip in Virajaa River and then only they would get into the eternal world or Moksham.   Here Chandrapushkarani or the temple tank is the equivalent of Virajaa river.   The blanket is the body, which the Jeevathmaa would leave here before entering the Moksham.   Passing through the Gate, Vaikuntha Vaasal is similar to entering the eternal world after leaving the body.

The purpose of Paramathma Himself demonstrating this to people like us, is mainly because He wants to increase the bond between Him and us.

There is another Hall with Thousand Pillars in Srirangam temple from where Namperumal would give dharsan on selected occasions and this is called Thiru Ma Mani Mandapam. This is also where He would listen to Azhwaars and Acharyars when they recite Divya Prabhandam and also listen to those who chant Sanskrit Vedas.   This is the same place where events like Kaithalasevai, Namazhwaar Moksham would happen.

Seventh Day functions on Irappathu

Namazhwaar would be dressed up like a bride (Namazhwaar Mohini Alankaram).  He is called as Parankusa Nayaki whenever he takes the role of a female in his hymns.   (S)He would request Thiru Arangan and Thiru Arangan would concede to her request.  He comes closer to Parankusa Nayaki, when Priests would carry Thiru Arangan in their hands and He would give the Dharsan to all from the hand-carried posture.   (Kaithalasevai).   During this time, He would not have much decoration, but would have only a few beautiful coloured towels.   During Irappathu, every night He would go to Thayaar (Ranganayaki) temple and He would have a bath or shower in the front Hall.   But this seventh day alone is an exception.   He would skip going to His Thayaar’s Hall, due to the overwhelming love and affection He has for Parankusa Nayaki or Swami Namazhwaar. This shows His extreme simplicity, called Sowlabhyam, one of His virtues.

Tenth day functions on Irappathu 

This day’s functions are the most important among the ten days of Irappathu.   This is also celebrated as “Azhwaar Thiruvadi Thozhuthal”, meaning “Azhwaar worships His Feet”. Thiruarangan never stays back in the night in any open Hall and He would make a point to return to His home, whatever be the time.    Again the Tenth day is an exception.    On this day alone, He would stay back in the Thiru Ma Mani Mandapam to grant the Moksham to Swami Namazhwaar.   Namazhwaar Moksham is demonstrated on how Swami Namazhwaar attained Moksham on every year on this 10th day (night) function of Irappathu.

Namazhwaar on that day would be preparing himself to go to the eternal world, by keeping himself on the way to Paramapatha vaasal (Looks like same as Vaikuntha vaasal or Sworga Vaasal) in the role of a Mukthathmaa. (Jeevathmaa that is in the eternal world is called Mukthathmaa).   He would not have his usual Crown, ornaments or expensive silk attire, but with a simple white dress, a simple Thulasi garland and with twelve thirumans (Nammam that vaishnavites wear on their forehead).

In the early morning of the 11th day, two priests would hand carry Namazhwaar and the hymn composed by Swami Namazhwaar “Soozh visumbu ani mugil” (10-9-1) in his Thiruvaimozhi would be recited. (10-9 is a set of 10 hymns composed by Swami Namazhwaar to explain the path to the eternal world, what would happen when one Jeevathmaa takes that path, who all would come to invite the Jeevathmaa and how the Jeevathmaa would be treated along the way, etc.     Namazhwaar would be placed on the holy feet of Thiru Arangan in such a way that Namazhwaar’s face would be pressed against the lotus feet of Thiru Arangan.   Then the priests start reciting the final group of hymns from Thiruvaimozhi, namely, “Muniye, Naan Mugane, Mukkanappa….” (10-10-1), the priests and the crowd would be so much overwhelmed that Azhwaar was about to leave us and the priests continue to pour Thulasi leaves on top of Swami Namazhwaar.  The priests and the crowd would cry as Namazhwaar was leaving them. this is how Swami Namazhwaar’s Moksham is demonstrated in Srirangam every year during the Irapathu Utsavam.

When the priests recite the final hymn of Thiruvaimozhi (Avva vara suzh Ariyai Ayanai Aranai Allattri…” (10-10-11), by mobilising their energies in spite of all the difficulties and feelings for Swami Namazhwaar, the crowd would burst into tears.   Thiru Arangan would take his garland and wear it on Swami Namazhwaar, and He would also offer the tilak to Swami Namazhwaar.  Then He would finally send Swami Namazhwaar to the eternal world.    In this process a Jeeavathma would be shown the way it would be blessed when it reaches the eternal world.

Panguni Uthiram

Among the many functions that happen in Srirangam, important one is called Panguni Uthiram.   (Panguni is the name of a Tamil Month and Uthiram is the name of a Tamil Star).    And in that function, the role played by Swami Namazhwaar is very important. Since knowing that Thiru Arangan went to Uraiyur and spent the time with the consort there, Srirangam Nachiyar (or Thayaar) would not let Thiru Arangan into Her temple.    At that time, it was only Swami Namazhwaar, who would pacify both Nam Perumal and Nachiyaar.    After that Nachiyaar would be happy to accept Thiru Arangan, by saying that She listened to “Nam Periyan” showering enormous amount of respect to Swami Namazhwaar.   Since She used the words “Nam Perian”,  Azhwaar would have got the name “Nam azhwaar” from Srirangam Thayaar or Nachiyaar.

Sadagopar Anthaathi 

The Ramanayanam in Tamil is written by a poet called Kambar and it is called Kamba Ramayanam.   When Kambar launched Kamba Ramaayanam in Srirangam Temple, the temple priest in a superhuman state, made a very loud noise and asked Kambar, “karpar rama piranai allal matrum karparo, endru  paadina Nam Azhwaanai paadinaayo?”, meaning that “did Kambar sing about Namazhwaar, who has so much respect and devotion to Sri Ramaa, and who had  proclaimed, “will anyone learn, anything other than the glories of Ramaa“. People treated this voice of the priest as Perumaal’s direct instructions.  Since Thiruarangan had coined the words “Nam Azhwanai”, the name Nam Azhwaar would have been given by Thiru Arangan also.   On hearing this, Kambar, created a Tamil literature consisting of 100 verses called “Sadagopar Anthathi” later.

While Travelling in Western Ghats

Malikapur (1311-13) was the first to invade South India.  The second was Ulukkan, @ Mohamad bin Thuklak.   In both the invasions, all the Hindu temples were raided and looted.   Before the 1331 invasion, Pillai Lokachariyar, one of the Achariyars, took Nam Perumal (the moolavar, or the vikragam) away from Srirangam to a safer place.    He went towards Madurai and later towards Kozhikode, Melkote, Thiurpathi and finally reached back Srirangam, once when The Sultan of Madurai (1331-1371) lost power.

From Srirangam, Thiru Arangan went to Madurai and from there He went upto Kozhikodu. At that time, Namazhwaar from Alwar Thirunagari and some other deities were also carried to Kozhikode, as it was thought to be a safe place for the deities as well as the people who were following Him.   This place is called Govindapuram, today.   After receiving Namazhwaar, Thiru Arangan shared his platform with Swami Namazwaar. (The seat is called Vattamanai, circular seat; He has also handed over the pearl shirt for Azhwaar).  Both of them shared the same seat for about one year at Thirukanambi or Thenaikidangai.   Once when both Thiru Arangan and Namazhwaar were going in a boat, accidentally Azhwaar fell down into the waters.   With the help of Sri Garudan, Swami Namazhwaar was traced and taken out of the waters.   Then Thiru Arangan ordered that Namazhwaar should not be travelling with Him, but he had to return to his place in Alwar Thirunagari for his safety.    Then Thiruarangan or Namperumal went to Melkote.

When Namperumaal went towards Melkote, Namazhwaar started his journey towards Alwar Thirunagari.  Along the way, there were troubles from thieves and at some point in time, the people who were carrying the Azhwaar had to find a safe place to keep the Azhwaar.   They had no choice, but to shift him down through chains and boards in a steep hill.   After the thieves left, they could not retract or retrieve or lift the Azhwaar back from the bottom.

Thozhappar, a staunch follower of Namazhwaar, collected a few people and started his journey to retrieve Azhwaar through a place called Munthiruppu or Munthiri village. Thozhappar tied chains around him and asked the people to let him go down or climb down through the hill to search for the Azhwaar.  Thozhappar had also taken some tools and writing materials to keep communicating with the people at the top of the hill.   He located Azhwaar after a great search and wrote necessary notes.  He secured the Azhwaar safely on the board along with his notes and asked the people above to lift.  While they could save the Azhwaar, they could not bring back Thozhappar alive, as he injured himself very badly while climbing down and during the search.  Even today, Thozhappar is regarded and given respects in Azhwaar Thirunagari festivals.    Azhwaar was taken back from Munthiruppu to Azhwaar Thirunagari and all along the way, people paid their respects to Azhwaar.

Azhwaar

We all need to respect and celebrate Namazwaar, as he had good intentions that all of us should reach Namperumal, or ThiruArangan or the eternal world and hence he composed Thiruvaimozhi.   When we are not aware of Thiruvaimozhi or we could not understand Thiruvaimozhi, he still wanted to enable us to reach Namperumaal, by making himself as a link between Namperumaal and us by being the Satari or Crown with His lotus feet that is touched by the priests in the Vishnu temples.  This is what is told by Sri Desikan in his Paduga Sahasram (22).   Thus Azhwaar has been providing us with the very important help of ourselves attaining Moksham, in many different ways and let us see a few points regarding his Moksham, in our next weblog.

Govinda/கோவிந்த நாமம்

For English version, please click here, thanks

முன்பு அச்சுதன் என்ற திரு நாமத்தின் பெருமையைப்  பார்த்தோம்.  இங்கே கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.

 • மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் என்று சொல்லபடுகின்ற ஐந்து திருநாமங்கள்  புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் ஐந்தில் நடுநாயகமாக விளங்கும் கோவிந்த நாமமே இந்த வலைப்பதிவின் தலைப்பு.
 • திருமலை ஏறும் போது பக்தர்கள் பொதுவாக உச்சரிக்கும் திருநாமம் கோவிந்தா, கோவிந்தா.
 • திருப்பாவை என்ற திவ்யப்ரபந்ததில் ஆண்டாள் பெருமானின் பல திரு நாமங்களை சொல்லி இருக்கிறார்.   இருபத்தி ஏழு, இருபத்திஎட்டு மற்றும் இருபத்திஒன்பது பாடல்களில் ஆண்டாள், கோவிந்த என்ற திருநாமத்தினை மூன்று முறை, கூறுகிறார்.
  • கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
  • கறவைகள் பின் சென்று …… குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
  • சிற்றம் சிறு காலை…..   அன்று காண் கோவிந்தா
 • பாஞ்சாலி உதவி என்று கண்ணனிடம் சரணாகதி அடையும் போது உபயோகித்த திருநாமம் கோவிந்தா.  “திரௌபதிக்கு, ஆபத்திலே  புடவை சுரந்தது கோவிந்த நாமமிறே”..
 • ஆசமனம் என்ற ஒரு அரைநிமிட வைதிக சடங்கு எல்லா இந்துமத வைதிக கருமங்களிலும் பலமுறை திருப்பித் திருப்பிச் செய்யப்படும் ஒன்று. அதில் கோவிந்தா என்பது, விஷ்ணுவின் பன்னிரண்டு நாமங்களில் ஒரு முறையும், அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று முதலில் ஒரு முறையும் சொல்லவேண்டி வரும். இதில் விசேஷம் என்னவென்றால், பன்னிருநாமங்களிலும் ‘கோவிந்தா‘ ஒரு முறை வருவதால், இங்கு எல்லா நாமங்களிலும் கோவிந்தநாமம் ஒன்று மட்டுமே இரண்டு முறை வரும் நாமம் ஆகின்றது.
 • ஆன்மிக சொற்பொழிவுகளிலும்  தெய்வபஜனை  போதும் ஸர்வத்ர கோவிந்தநாமசங்கீர்த்தனம் கோவிந்தா, கோவிந்தா‘ என்று சொல்வது மிக பிரசித்திபெற்ற ஒன்றே.
 • ஆதி சங்கரர் என்ற மதாச்சாரியாரின் புகழ் பெற்ற ஓர் எளிய வேதாந்த ஸ்தோத்திரம் பஜ கோவிந்தம் என்பது. இதில் ஆண்டவன் பெயராக ‘கோவிந்த’நாமம் எடுத்தாளப்பட்டது. சங்கரரின் குருவின் பெயர் கோவிந்தர் என்று இருந்ததாலும், கோவிந்த நாமத்தின் பெருமை தான் அப்படி எடுக்க செய்தது என்று சொல்வதுண்டு.
 • விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 189 (கோவிந்தோ கோவிதாம் பதி) மற்றும் 543 (மகா வராஹா, கோவிந்தக) நாமங்களாக வருகின்றன.
 • கோவிந்த நாமத்தின் பல மகத்துவங்களில் முக்கியமான ஒன்று என்னவென்றால் கோவிந்தா என்ற நாமம் திருமாலின் தசாவதாரங்களையும் குறிக்க வல்லது.   கோவிந்தாவில் வரும், கோ என்ற சப்தத்திற்கு வடமொழியில் பற்பல பொருள்கள் உண்டு.
  • வாக்கு 
  • உயிர்கள் (கோ), காப்பாற்றுபவன் (விந்தன்)
  • பசு மாடு, கன்றுகுட்டிகள்  
  • பூமி 
  • மோட்ஷம்  அளிப்பவர்
  • நீர்
  • அஸ்திரம் அல்லது ஆயுதம்
  • பர்வதம் அல்லது  மலை
  • துதிக்கும் அல்லது துதிக்கப்படுவர் 
  • புலன்கள். புலன்களை அடக்கி ஆள்பவன்
  • வேதமோதுவதால் அடையக்கூடியவர்
  • கூப்பிடுதூரத்தில் இருப்பவர்.
 • மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். மச்ச அவதாரத்தில் நீரில் இருந்து வேதங்களை காப்பாற்றியதால் கோவிந்தா என்று அந்த அவதாரத்தை குறிப்பிடலாம்.  
 • தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம்.    கூர்ம அவதாரத்தில் மந்திர மலையை தாங்கியபடி பாற்கடலில் பள்ளி கொண்டதால் கோவிந்தா என்று கூறலாம். 
 • திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.    நீரில் இருந்து பூமியை காப்பாற்றியதால்  அந்த அவதாரத்தையும் கோவிந்தா என்றே அழைக்கலாம். 
 • பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.   பிரஹலாதனுக்கு மோட்ஷம் அளித்தார்.  அதே போல் சகல தேவதைகளும் நரசிம்ஹருக்கு கோபம் தணிய ஸ்தோத்திரம்   செய்தார்கள் அல்லது துதித்தார்கள்.   ஆகவே  அந்த அவதாரமும் கோவிந்தா  எனக்கொள்ளலாம்.
 • பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.   பூமியை அளந்ததால் கோவிந்தா என்பர்.
 • தந்தை வாக்கை சிரமேல் கொண்டு செயல் பட்ட பரசுராம அவதாரத்தையும் கோவிந்தா என்றே கூறலாம்.
 • ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும், விச்வாமிதிரரிடம் இருந்து ஐநூறுக்கும் மேலான ஆயுதங்களைப் பெற்றதாலும்,   அகத்திய முனிவரிடம் இருந்து பற்பல அஸ்திரங்களை பெற்றதால் ஸ்ரீ ராமனையும் கோவிந்தா என்றே கொள்ளலாம்.
 • கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள். பலராமரின் ஆயுதம் கலப்பை  – அதனை கொண்டு பூமியை தோண்டுவதால் பலராமரும் கோவிந்தரே.
 • வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம்.   மாடு கன்றுகளுடன் கூடிய ஸ்ரீ கிருஷ்ணரை கோவிந்தா என்றே கூப்பிடுவோம். கோவர்த்தன மலையை தாங்கி பசுக்களையும் மக்களையும் காப்பாற்றியதால்  கோவிந்தன் ஆகிறார்.
 • கலி  யுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி.  உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்ல வருவார் என்பது சனாதன தர்மத்தின் நம்பிக்கை.  முக்திக்கு அழைத்து செல்வதாலும், பூமியில் தர்மத்தை நிலை நிறுத்துவதாலும் கல்கி அவதாரமும் கோவிந்தனே.

இதே போல் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் முதல் திருநாமமான விஸ்வம் என்பதற்கும் திருமாலின் பத்து அவதாரங்களையும் பொருள் கூற முடியும்.

விஷ்ணுவின் திருநாமம்களின் பெருமைகளை போலவே அவரது திவ்ய ஆயுதங்களின் சிறப்புக்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

================================================================

Govinda Namam

In one of our previous weblogs, we have seen the glories of one of the names of Sri Maha Vishnu or Paramathma, namely, Achuthan.   In this weblog, we will try to go through the glories of another name of Sri Vishnu, called, Govinda.

 • Even though Sri Mahavishnu has more than one thousand names, Five Important names of Mahavishnu, called Panja Naamaakal are very significant.  They are Rama, Krishna, Govinda, Narayana and Narasimha.   In this group, Govinda stands in the middle, like a center piece of a garland.
 • When people climb the Hill, Thiruvengadam, they keep chanting the name of the God, as Govinda Govinda.
 • In the Holy Divya Prabantham, there is a section of Hymns called Thirupaavai, composed by Sri Aandal.   She refers Sri Vishnu in this composition many times using different names and in particular, Govinda name has been repeated three times in hymns 27, 28 and 29.
  • Koodaarai Vellum Seer Govinda   (Thirupaavai 27)
  • Karavaigal Pin Sendru ……Kurai Ondrum Illaatha Govinda (Thirupaavai 28)
  • Sitram Siru Kaalai …..andru kaan Govinda  (Thirupaavai 29)
 • In the epic, Mahabharatham, one of the important female characters, namely, Panchali or Draupadi, when she was in trouble, she asked for help from Sri Krishna or Vishnu, callingout the name “Govinda“.   So the name Govinda is used for totally surrendering herself to Sri Krishna and more importantly she got His blessings and help in the most difficult situation when she pleaded for help using Govinda.  Sri Vishnu or Sri Krishna had helped her by giving her a saree of infinite length.  “Aabathiley pudavai suranthathu Govinda Naamamere
 • Aachmanam is a short hindu ritual which is done in about 30 seconds, in almost all hindu functions and in many cases it is repeated more than once. In this Aachamanam, twelve names of Sri Mahavishnu are chanted once after starting with Achutha, Anantha and Govinda. Among the twelves names, the name Govinda also appears, which means that whenever we perform Aachmanam, the name Govinda is chanted twice and no other name takes that honour.
 • During many of the hindu religious discourses and bajans, people chant “Sarvathra Govinda naama sangeerthanam Govinda, Govinda” and this is quite popular.
 • Baja Govindham” is a popular composition by one of the most significant Acharyas in the Hindu Religion,  Sri Adi Sankarar.   The guru of  Adi Sankarar was also a person by name “Govindar”.   The glories associated with the name Govinda had made him use the Govinda Nama in his compositon as the name of the God.
 • Govinda Namam comes twice in Vishnu Sahasranamam, once as 189th Nama (Govindho Govithaam pathigi) and again at 543 (Mahaa varaaghaa, govindaga).
 • Among the many different salient points on the Govinda Naamam, the most significant one is that the name Govinda can be attributed to each and every Incarnation of the famous Dasaavathaaram (Ten Incarnations) of Sri Mahavishnu. Let us see how.  The word Govinda can be split as “Go” and “Vindhaa” in Sanskrit.   The word “GO”in sanskrit can mean many things and some of them are :
  • Promise
  • Lives (GO) and Protector (Vintha)
  • Cow and Baby Cows
  • Earth
  • Capable of giving Moksha
  • Water
  • Weapon
  • Mountain
  • can be praised
  • can control the limbs
  • can be reached by chanting veda
  • available in closer proximity
 • Machaavathaaram (Fish Incarnation) – This  is the first of the ten incarnations and in this incarnation, Mahavishnu had taken the shape of a fish.   Since He had saved the vedas from water, He can be referred to as Govinda in this incarnation.
 • In the second Incarnation, Koorma Avatar, Sri Mahavishnu took the form of a Tortoise to carry a mountain by name, Manthra, when the good and bad from the Celestial world, (Devas and Asuras) churned the  milky ocean to get the Amirtham, the antidote to live for ever.   Since He was the base or axis for the mountain, in this  incarnation, He can very well be called as Govinda.
 • Hiranyatchagan, a demon, took the world and hid it under the sea.   Paramathma or Perumaal appeared as White wild boar (Varahavathaarm), the third Incarnation, killed the demon and held the world (earth) using His horn.  Since Varahan, or Mahavishnu recovered the earth from the sea water, we can address Varahan as Govindan.
 • In the fourth incarnation, Paramathma or Perumal came out of a pillar to kill the demon for protecting Prahaladan.    He also gave Moksham or the eternal world to Prahaladan.    When He was angry after killing the demon, Hiranyakasipu, all the good from the celestial world, Brahma, Rudran, Indran and Sri Mahalakshmi came down and started pacifying Him by rendering prayers and praising Him.   Since He was praised by all and also He gave the eternal world to Prahaladan in this incarnation, He can be greeted as Govinda. 
 • The grandson of Prahaldan was Mahabali and to tame him, Perumal or Paramathma took the fifth incarnation, Vamana Avatharam.    The short Vamanan grew into huge Vikraman and He conquered not only this world, but also the whole universe, with two giant strides.    Since He conquered and measured this world using his first step, Vamanan or Thirivikraman can be hailed as Govindan.
 • In the sixth incarnation of Paramathma, Parasuraman, has taken each and every word of His father seriously and carried out the orders meticulously.   Since He has fulfilled all the promises made to His father, Parasurama can also be greeted as Govinda.
 • In the seventh incarnation, Sri Rama was born in Raghu Dynasty to the King Dasaratha .   Here also He fulfilled the promises given to Dasaratha.   In addition, He had obtained more than five hundred weapons from the saint Vishwamithrar. Similarly He had also obtained several weapons from the  saint Agathiyar.  For all these reasons, Rama can be complimented as Govinda.
 • Balaraman, the eight incarnation, is born to Vasudevar in Gokulam.  His weapon is Plough , which is used for cutting, lifting, turning over, and partly pulverizing soil in the earth. So He can also be admired as Govinda. 
 • The ninth incarnation, Sri Krishna, was born to Vasudevar and Devaki.  In His younger days, He had always been associated with cow and calf.   He had carried the mountain Govardana with His hand to protect the Cow, calf and the people of Brindavan and hence Sri Krishna can also celebrated as Govindan.
 • At the end of Kali Yugam, Paramathma will take an incarnation, called Kalki.   At that time, He will help in terms of establishing good governance in this world and He would help people to reach the eternal world.  Hence He will also be endorsed as Govinda.   

In the same way, the first name in Vishnu Sahasranaamam, namely, Vishwam, can be also be interpreted to stand for all the ten incarnations of Sri Maha Vishnu.

The special weapons carried by Sri Vishnu also have many glories, like the Names of Sri Vishnu, and we can see some of them here.

Divya Desams/திவ்யதேசங்கள்

திவ்யதேசங்கள் பலவகைகளில் பிரித்து பார்க்கலாம்.

108 திவ்யதேசங்கள்

அபிமான ஸ்தலங்கள்

ஆழ்வார் ஆச்சார்யர்கள் அவதார ஸ்தலங்கள்

நரசிம்ம க்ஷேத்ரங்கள்

ராமக்ஷேத்திரங்கள்

கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

Archai/அர்ச்சை

For English version, please click here, Thanks

ஐந்தாவது நிலை

எம்பெருமானின் ஐந்து நிலைகளை நம் பூர்வாச்சார்யர்கள் ஐந்து விதமான நீர் நிலைக்களுக்கு ஒப்பிடுவர். அவை,

 • பரத்துவம் – ஆவரணநீர், அண்டகடாகம் என்ற ஓட்டின் மேல் உள்ள நீர்
 • வியூகம் – திருப்பாற்கடல் – பாற்கடல்
 • விபவம் – அவதாரங்கள் – காட்டாறு வெள்ளம்
 • அர்ச்சை – திவ்யதேசங்கள் – காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால் மடுக்களில் சேர்ந்த நீர்
 • அந்தர்யாமி – பூமிக்குள் மறைந்து கிடைக்கும் நீர் – சரஸ்வதி நதி, அந்தர்வாகினி

இந்த நிலைகளை, ‘பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது; வியூஹம் என்பது சமுத்திர ஜலம் போன்றது; விபவம் என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது; அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது; அர்ச்சை என்பது கிணற்று நீர் போன்றது’ என்றும் சொல்வதுண்டு.

பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது. ஆவரண ஜலம் என்பது சத்ய லோகத்துக்கும் மேலே சூழ்ந்து இருப்பது. பூலோகத்தில் தாகம் எடுத்தவனுக்கு ஆவரண ஜலம் பயன்படாது. நமது அருகிலேயே சமுத்திரம் இருந்தாலும் அதிலிருந்து நீரை எடுத்துப் பருக முடியாது. அப்படி, வ்யூஹ மூர்த்தி நம்மால் சுலபமாக சேவிக்க முடியாத அளவுக்கு எங்கேயோ திருப்பாற்கடலில் இருக்கிறார்.   விபவ மூர்த்திகளோ காட்டாற்று வெள்ளம். மழை பெய்தால் ஏகமாக வெள்ளமாக நீர் போகும்; மழை நின்றால் ஒன்றும் இருக்காது. அந்த மாதிரி அவதாரங்கள் ஒரு காலத்தில் நடந்தவை. அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது. கீழே பூமியில் நீர் நரம்பு இருப்பதை வல்லுநர்கள்தான் சொல்ல முடியும். அப்படி சாதாரண உலகவாழ்கையில் இருக்கும் நமக்கு, ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமானை உணர்வது சுலபமான காரியம் இல்லை. அர்ச்சாவதாரம்  கிணற்று நீர் போன்றது.

கிணறு வெட்டி, தண்ணீரும் இருந்து, அதிலிருந்து ஒரு குடம் நீர் பருகக் கொடுத்தால் என்ன கஷ்டம்? அதேபோன்று கோயில் கட்டி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, அந்தக் கோயில் நம் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தால், நமக்கு அனுபவிக்க என்ன கஷ்டம்? அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் நம் பக்கத்திலேயே குடி கொண்டிருக்கிறான்.

பகவானின் ஐந்து நிலைகளில், அர்ச்சை என்பது பர, வியூக, விபவ மற்றும் அந்தர்யாமி நிலைகளுக்கு அடுத்த நிலை. நாம் இருப்பது கலி காலத்தில், இங்கு தர்மம் குறைந்து, கலி புருஷன் எல்லோருக்கும் எல்லாவித கஷ்டங்களையும் தாராளமாக கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, அவற்றில் இருந்து நம் எல்லோரையும் காப்பாற்றுவதற்காக, பரமாத்மா எடுத்த நிலையே அர்ச்சை ஆகும்.

முன்பே சொன்னது போல் எல்லா நிலைகளிலும் பரமாத்மா சமமாகவே உள்ளார்.

அர்ச்சை என்றால் என்ன ?

பர, வியூக, விபவ நிலைகளை நாம் பார்க்க முடியாமல் போனதால், அவைகளின் பிரதிநிதியாக வந்த நிலை தான் அர்ச்சை.     கோவில்களிலும், விடுகளிலும் உள்ள சிலைகள் மற்றும் படங்கள் அர்ச்சையில் அடங்கும்.  மேலும்,

 • சிலைகளாய் (எல்லா கோவில்களிலும்)
 • வன ரூபமாய், காடாய் (நைமிசாரண்யம்)
 • நீர் ரூபமாய் (புஷ்கரம்)
 • சித்திரங்களில்  (கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடிய நம் சடகோபனை பாடினையோ என்று கம்பரிடம் கேட்ட, ஸ்ரீரங்கம் மேட்டு அழகிய சிங்கர் போன்றவை )
 • நம் வீடுகளில் (சாளக்கிராமம் மற்றும் படங்கள்)

சிறப்புகள்

அர்ச்சையின் சிறப்புகள் சில :

 • பரமாத்மாவின் எளிமைக்கு சிறந்த நிலை அர்ச்சை ஆகும்.  கோவில்களில் உள்ள சிலைகளுக்காவது சில நியமங்கள் உண்டு ஆனால் வீடுகளில் வந்து நம்மோடு துணை இருக்கும் சாளக்கிராமங்களில் தன்னை இன்னும் தாழ்த்திக்கொண்டு நியமங்களை குறைத்துக்கொள்ளுகிறான்.
 • மற்ற எல்லா நிலைகளிலும் நாம் பகவானை பார்க்க முடியாது, அர்ச்சை ஒன்றில் மட்டும் தான் நாம் பகவானை தரிசிக்க முடியும்
  • பரவாசுதேவன் நித்யசூரிகளுக்கே சேவை சாதிக்கிறார்
  • வியூக வாசுதேவன், தேவாதி தேவர்களுக்கு காட்சி அளிக்கும் இடம்
  • திருமழிசை ஆழ்வார் தவிர வேறு யாரும் அந்தர்யாமியை தரிசித்ததாக சரித்திரம் இல்லை (“நின்றதும்,இருந்ததும், கிடந்ததும் என் நெஞ்சுளே“).
  • விபவ வாசுதேவனான, ராம, கிருஷ்ண, நரசிம்ஹ, வாமன, திருவிக்கிரம அவதாரங்கள் ஒரு குறிப்பிட்ட சில காலங்களுக்கே.  அந்த அந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் மட்டுமே பகவானை தர்சிக்க முடிந்தது
  • ராமர் வாழ்ந்து இந்த நாட்டை ஆண்டது சுமார் 11000 ஆண்டுகளாம். கிருஷ்ணர் இந்த பூமியில் அவதரித்து கடாச்ஷித்தது சுமார் 100 முதல் 120 ஆண்டுகள் வரை. நரசிம்ஹ அவதராம் சில மணித்துளிகளே (ஒன்றரை முஹுர்த்த நேரமே – 72 நிமிடம்).   வாமன அவதாரமும் மகாபலி சக்ரவர்த்திக்கு மோட்சம் அளிப்பது வரையில் தான். ஆக எல்லா அவதாரங்களுமே ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள்தான். ஆனால் அர்ச்சை ஆண்டாண்டு காலமாக, இங்கேயே இருந்து, நாம் எப்போது சென்றாலும், நான் இருக்கிறேன் என்று நமக்கு தைரியம் கொடுப்பது அர்ச்சை தான்.
  • மற்ற எல்லா அவதாரங்களின் காலத்தில் நாம் வாழவில்லை.  ஆகவே நமக்கு உள்ள ஒரே பாதுகாப்பு அர்ச்சைதான்.  அதைதான் ஆழ்வார்களும் ‘பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்‘ என்று பாடி மற்று எல்லா அர்ச்சை க்ஷேத்திரங்களையும் குறிக்கும் வகையில் திருமூழிக்களத்தை உதாரணமாக சொன்னார்கள்.
 • எவ்வாறு நடந்தனையோ எம்  இராமாவோ (பெருமாள் திருமொழி 9.2), என்று தானாகவே எழுந்து நடந்து செல்லக்கூடிய அவதாரம் போல் அன்று அர்ச்சை.
 • மற்ற எல்லா நிலைகளிலும் பெருமாள் தன் இச்சைப்படி நடந்துகொள்வார்.   அவரால் முடிந்தாலும், அர்ச்சகர்கள் சொற்படி மட்டுமே தன்னை மாற்றிக்கொள்ளும் அவதாரம் அர்ச்சை  (அர்ச்சக பராதினகா)
 • இராம, கிருஷ்ண அவதாரங்கள், பெரும்பாலாக மக்களை கைப்பற்றினாலும் அவ்வபோது பாவிகளுக்கு தண்டனயும் கொடுத்து விடும்.  ராவண, சிசுபால, ஹிரண்யகசிபு ஆகியவர்களை கொன்று தண்டனை கொடுத்தது போல் என்றும் திருவேங்கடமுடயானோ, ரங்கநாதனோ அர்ச்சையை விட்டு எழுந்து யாருக்கும் தண்டனை கொடுத்தது இல்லை.
 • அர்ச்சை என்பது பெருமாளின் ஒரு நிலை.   அந்த நிலையில் அவர் உள்ள இடம் க்ஷேத்திரங்கள் ஆகும்.  க்ஷேத்திரங்கள் உருவாகி பெருமாளுக்காக காத்துகொண்டு இருகின்றன.  ஆழ்வார்கள், பெருமாளை பாடியதோடு அல்லாமல் அந்த க்ஷேத்திரங்களையும் பாடி இருக்கிறார்கள். க்ஷேத்திரங்களுக்கே தனி பெருமை, அவைகளை சென்று அடைந்தாலே பலன் என்றும் கூறுவார்கள்.  (பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ, நம் வினை ஓயுமே).
 • ஆழ்வார்கள் பாடிய ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள் (108) ஆகும், மற்றவை ஸ்தலங்கள் அல்லது க்ஷேத்திரங்கள்.
 • அர்ச்சைதான்  நாம் சரணாகதி செய்வதற்கு இருக்கும் ஒரே வழி ஏன் என்றால் மற்ற நிலைகளை நாம் தரிசிக்க முடியாது. இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் நம் பெருமாள் முன்னே சரணாகதி கேட்டார்.
 • அர்ச்சை என்பது இப்போது நம் காலத்தில் உருவானது இல்லை.   ஆழ்வார்கள் ஆச்சார்யார்கள் காலத்தைத் தாண்டி புராண காலத்திலும் அர்ச்சை உண்டு.  பீஷ்மர் சொன்ன மகாபாரதத்தில் உள்ள விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அர்ச்சை பற்றி சுமார் 40 நாமங்கள் கொண்ட தொகுப்பு  உள்ளது.

பிரிவுகள்

கீழே கொடுக்கப்பட்ட க்ஷேத்திரங்கள் யாவும் உதாரணங்களே, முழு பட்டியல் அல்ல, அவை எந்த ஒரு வரிசையிலும் சொல்லப்படவில்லை.  இவை நாம் படிப்பதற்கும் ரசிப்பதற்குமே.

 • தோற்றப் பாங்கு – (“புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து, வைகுந்ததுள் நின்று” என்று நம்மாழ்வார் பாடியபடி அல்லது “நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெ கணை கிடந்தது ” என்று திருமழிசை ஆழ்வார் பாடியபடி )
  • நின்றான் – 60 (திருப்பதி, திருமாலிரும்சோலை)
  • நடந்தான் – 3 (திருக்கோவிலூர், சீர்காழி – காழிசீராம விண்ணகரம், உலகளந்தபெருமாள்)
  • கிடந்தான் – 24  (ஸ்ரீரங்கம், திரு இந்தளூர்)
  • இருந்தான் – 20  (திருவரகுணமங்கை – நத்தம், பரமேச்சுர விண்ணகரம்)
  • எங்கும் நிறைந்து இருப்பது- 1  (நைமிசாரண்யம்)
 • திவ்ய தேசங்களில் திருமுக திசைகள் 
  • கிழக்கு நோக்கிய திருமுகம் – 78 (தில்லைநகர் திருச்சித்ரகூடம், கூடலழகர்)
  • மேற்கு நோக்கிய திருமுகம்- 19  (திருநகரி, திருக்கச்சி/அத்திகிரி, முக்திநாத்)
  • வடக்கு நோக்கிய திருமுகம் – 3 (அயோத்தியா, உறையூர் ) 
  • தெற்கு நோக்கிய திருமுகம்  – 7 (ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருமெய்யம் )
  • எங்கும் நிறைந்து இருப்பது – 1 (நைமிசாரண்யம் )
 • திவ்யதேசங்கள் (108) உள்ள இடங்கள் 
  • சோழ நாடு -40
  • பாண்டிய நாடு – 20
  • தொண்டை நாடு – 22
  • மலை நாட்டு – 11 (மலையாள திவ்ய தேசங்கள்)
  • நடுநாடு – 2
  • வட நாடு – 11
  • விண்ணுலகம் – 2
 • விபவத்தின் உருவாய் 
  • கிருஷ்ண க்ஷேத்திரங்கள் (திருகண்ணன்குடி, திருகண்ணமங்கை, திருகண்ணபுரம், கபிஸ்தலம், திருகோவிலூர், துவரகா , மதுரா) (முதல் ஐந்தும் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் எனப்படும்)
  • நரசிம்ஹ க்ஷேத்திரங்கள் (அஹோபிலம், சோளிங்கர், காட்டு அழகியசிங்கர், பூவரசன்குப்பம், திருக்குறையலூர், ரேணிகுண்டா அருகில் மங்களகிரி)
  • இராம க்ஷேத்திரங்கள் (அயோத்யாவில் தசரதராமானாக, திருப்புட்குழியில் விஜயராகவனாக, திருப்புல்லாணியில் பட்டாபிராமானாக, திருவெள்ளியன்குடியில் கோலவில்லி இராமனாக, வடுவூரில் சக்ரவர்த்தி திருமகனாக, குடந்தையில் இராஜாராமனாக, தில்லைவிளாகத்தில் வீர கோதண்டராமனாக , மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமனாக)
  • வராக க்ஷேத்திரங்கள் (ஆழ்வார் திருநகரியில் ஆதிபிரானாக, இடது தொடையில் பூமாதேவியை கொண்ட திருஇடவெந்தை, வலது தொடையில் பூமாதேவியை கொண்ட திருவலவெந்தை அல்லது திருகடல்மல்லை, பூவராகவனாக ஸ்ரீமுஷ்ணம்)
  • ஸ்ரீகாகுளம் அருகே கூர்ம அவதாரத்திற்காக ஸ்ரீ கூர்மம் என்ற ஊரில்
  • திருவிக்கிரம க்ஷேத்ரங்கள் (திருகோவிலூர், காழிசீராம விண்ணகரம், காஞ்சி உலகளந்த பெருமாள்)
 • கோவில் கட்டமைப்பில்
  • கடற்கரை கோவில்களில் (பூரி ஜகந்நாதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மகாபலிபுரம் ஸ்தலசயன பெருமாள், திருநாகை சௌந்தரராஜ பெருமாள், திருப்புல்லாணி ஆதிஜகன்நாதன், வர்கலா ஜனார்த்தன பெருமாள், துவராகா ஸ்ரீ கிருஷ்ணர்)
  • மலையில் உள்ள  கோவில்களில் (பத்ரிநாத், முக்திநாத், ஜோஷிமட் எனப்படும் திருபிரிதி, கண்டம் என்னும் கடிநகர் எனப்படும் தேவப்பிரயாகை, அஹோபிலம், திருமலை, சோளிங்கர், திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி)
  • படி ஏறும் கோவில்களில் (காஞ்சிபுரம் தேவப்பெருமாள், திருநறையூர் ஸ்ரீனிவாசன், திருவெள்ளறை புண்டரிகாட்சன், திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள், மதுரை கூடலழகர், மலைநாட்டு திவ்ய தேசமான குட்டநாடு எனப்படும் திருப்புலியூர் மாயப்பிரான்  மற்றும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் )
 • அபிமான க்ஷேத்திரங்களில்
  • திவ்ய தேசம் இல்லாத மற்ற சிறப்பு கோவில்கள் (மேல்கோட், காட்டு மன்னார் கோயில், வடுவூர், மன்னார்குடி)
  • ஆழ்வார் அவதரித்த ஸ்தலங்களில்  (தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருமண்டங்குடி, திருமழிசை, குலசேகர் ஆழ்வாரின் திருவஞ்சிகளம்)
  • ஆசார்யர் அவதரித்த ஸ்தலங்களில் (ஸ்ரீ பெரும்புதூர், கூரத்தாழ்வான் அவதரித்த காஞ்சிக்கு அருகில் உள்ள கூரம், எம்பார் அவதரித்த மதுரமங்கலம்)
  • பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் (ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதன், திருவரங்கம் ரங்கநாதன், கோவிலடி அல்லது திருப்பேர்நகர் அப்பகுடத்தான் அல்லது அப்பாலரங்கன், குடந்தை சாரங்கபாணி, திரு இந்தளூர் பரிமளரங்கன் )
 • உருவாகிய பொருள்
  • தங்கம், வெள்ளி மற்றும் பிற உலோகங்கள்
  • பஞ்சலோகம் அல்லது உலோக கலவைகளில்
  • பாறை மற்றும் கல்சிலைகள்
  • மரம் (காஞ்சிபுரத்தில் அத்திவரதர், மாயவரம் அருகில் கோழிக்குத்தி என்ற ஊரில் உள்ள வானமுட்டி பெருமாள், உடுப்பி கிருஷ்ணன்)
  • சாளகிரமத்தால் (12000 சாளக்கிராமத்தினாலும் “கடுசர்க்கரா” என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது “அனந்தசயன மூர்த்தி” திருவனந்தபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது) (திருவட்டாறு, கடுசர்க்கர கலைவயால், 16008 சாளக்கிராமங்களை கொண்டது )
 • ஆழ்வார்களுக்கு காட்டிய குணாதிசயங்களால்
  • ஸ்ரீரங்கம் – வியூக சௌகார்த்தம் –  கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரமே – (சௌகார்த்தம் = எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தல்)
  • திருப்பதி – வாத்சல்யம் – தாயை போல் அன்பு காட்டும் தன்மை
  • வானமாமலை – ஔதார்யம்: கைமாறு கருதாது வேண்டியவை எல்லாம் தருவது.
  • ஆழ்வார் திருநகரி – பரத்துவம்
  • திருக்குறுங்குடி  – லாவண்யம் – மொத்த அழகு
  • நாகைபட்டினம் – சௌந்தர்யம் – அவயம் அவயமாக அழகு
  • கும்பகோணம் – மாதுர்யம் –  தன்னை கொல்ல வருபவனிடம் கூட அன்பாக,இனியனாக இருப்பது.
  • திருகாட்கரை – ஸௌசீல்யம் : பெரியவர், தாழ்ந்தவர்களிடம் அன்புடன் பேதமில்லாமல் கலப்பது
  • திருவனந்தபுரம் – ஸாம்யம்: ஜாதிகுண விஷயத்தில் ஏற்ற தாழ்வு பாராட்டாமல் எல்லோருக்கும்
 • வேறு பிரிவுகள் 
  • பித்ரு காரியங்கள் செய்ய வேண்டிய ஸ்தலங்கள் (கயா, பத்ரிநாத், நாவாய், வர்க்கலா, புஷ்கரம்)
  • ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் எட்டு – தானாகவே தோன்றிய க்ஷேத்திரங்கள் (வானமாமலை, ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, புஷ்கரம், நைமிசாரண்யம், சாளக்ராமம் மற்றும் பத்ரிகாச்ரமம்)
  • முக்தி தரும் க்ஷேத்திரங்கள் ஏழு ( அயோத்தி, மதுரா, மாயா எனப்படும் பூரி, அவந்திகா என்னும் உஜ்ஜைனி, காஞ்சி,துவாரகை, காசி)

ஏன் இந்த பிரிவுகள்

மக்களாகிய நமக்கு ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொன்று பிடிக்கின்றது.  நேரத்திற்கு தகுந்தார் போல் நம் சுவைகள் மாறுபடுகின்றன.  அதே போல் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு அவ்வளவாக பிடிக்குமா என்று தெரியாது.  இப்படி ஒவ்வொரு நேரத்திற்கும் மாறிக்கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்களுக்கு, எப்படியாவது தன் அழகையும், வீர தீர பராக்கிராமங்களையும் காட்டி தன்பக்கம் இழுக்கும் பரமாத்மாவின் நோக்கமே, இப்படி பற்பல ஊர்களில், பற்பல தோற்றங்களில், பற்பல விழாக்களில் அர்ச்சையாக காட்சி தருவதற்கு காரணம்.

ஏதாவது ஒரு வகையில் ஜீவாத்மாக்களுக்கு ருசி பிறப்பிக்க வேண்டும் அல்லது பிறந்த ருசியை வளர்க்க வேண்டும் என்பதே இதன் மற்றொரு முக்கிய காரணம்.

தனது ஊரில் பெருமாள் இல்லை, அதனால் தனக்கு முக்தி கிட்டாது என்று ஒரு ஜீவாத்மாவும் பயந்து விடக்கூடாது என்று பெருமாள் நினைப்பதால் அவர் எங்கும் அர்ச்சையில் காட்சி தருகிறார்.

பகவத் அபசாரம்

இப்படி எத்தனை பிரிவுகள் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும், எந்த இடத்தில இருந்தாலும், எந்த பொருளில் உருவானதாக இருந்தாலும் பரமாத்மாவான பெருமாள் ஒன்றே, ஆகவே எல்லோரும் சமம். தங்கத்தினால் செய்த பெருமாளும் சித்திரத்தில் வரைந்த பெருமாளும் ஒன்றாகும். இதில் தவறாக நாம் உயர்வு தாழ்வு பார்த்தால், அது பெரிய அபசாரமாகும். அதை நம் முன்னோர்கள் பகவத் அபசாரம் (நான்கு முக்கிய அபசாரங்களில் ஒன்று) என்று கூறுவார்கள், ஆகவே பெருமாள் அர்ச்சையில் நமக்காகவே  வந்து இருப்பதால், நாம் கவனமாக இருக்கவேண்டும்.

பேசியது உண்டோ ?

அர்ச்சையில், ஒரு சில நேரங்களில் ஒரு சிலரோடு மட்டும் பெருமாள் பேசி உள்ளார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

இவை என்ன என்பதை பின்பு மற்றொரு வலை பதிவில் காணலாம்.

================================================================

Fifth State

Our acharyaars have compared the five states of Paramathma to five different water sources, namely,

 • Parathvam – ambient water, the water over the galaxy
 • Vyuham – Thirupaarkadal the milky ocean
 • Vibhavam – Incarnations – wild seasonal floods
 • Archai – Divyadesangal or Holy temples – the ponds, where the water was filled by the wild floods
 • Antharyaami – Fountain water coming from underneath – the river Saraswathi, Antharvaagini

These five states are also called as follows with a slight variation for easier understanding :

 • Parthvam is like amibent water
 • Vyuham is like sea water
 • Vibhavam is like seasonal floods
 • Antharyaami is like the groundwater fountain and
 • Archai is like well water

Parathvam, is like ambient water, that is not accessible to us, who are in this world and thirsty. The sea is near, but we can not use the sea water for drinking purpose as it is. The Vyuha Moorthy in Thirupaarkadal, like sea water, and we are unable to have His dharsan from here. Vibhava Moorthis are like seasonal floods and the incarnations happened at some time back. Antharyaami is like groundwater and only experts can assess the avaiability of the water and a common man like us cannot understand and pray to Him.. Archai is like well water.

When a well is dug, there is no difficulty to draw and drink a pot of water from it. In the same way, if a temple is constructed and Consecrated, nearby our house, there should not be any difficulty in offering our prayers to Him. In Archai, Emperuman is very close and nearby to us.

After Para, Vyuha, Vibhava and Antharyaami, the fifth state is called Archai.  We are living in Kali Yugam.  The good things and kindness are getting reduced day by day. The ruler of Kaliyugam, namely, Kali Purshan, gives enormous amount of trouble to all of us and Paramathma has taken the Archai State to protect all of us.

As said earlier, Paramathma is same in all respects and equal in all the five states.

What is Archai ?

Since we could not have dharsan of Para, Viyuha and Vibha states, Archai represents those states to us.  All the statues and the pictures available at all the temples and in our homes constitute Archai.   In addition,

 • all statues in the temples
 • As forest, in a place called Namisaranyam, in the north eastern part of India.
 • As water, in a place called Pushkaram, in the north western part of India.
 • In all pictures. For example, Mettu Azhagiya Singar, who asked Kambar, whether he has written anything about Sri Namazhwaar, who had so much respect and devotion for Sri Rama, is in the form of a drawing on the wall, when Kambar launched Kamba Ramaayanam in Srirangam Temple.  Please recall “karpar rama piranai allal matrum karparo, endru  paadina Nam Sadagopanai (Namazhwaar) paadinaayo?”.
 • All pictures and Sallagramams in our houses

Glories of Archai

Some of the glories of Archai below :

 • Among the five states, Archai is the best state to represent His Simpleness.   Even among all Archais, there are at least some rules, norms and procedures set for the statues at the temple, but He lowers Himself further for those statues, Salagramams and pictures at our home and further minimises or reduces the rules and regulations.
 • We can not see the Paramathma or Perumal or God in all other four states, but we can have dharsan or see him only when He is in Archai state.
  • Paravasudevan, Paramatha in Vaikundham, provides His dharsan only for the Nithysoories, like Ananthan, the snake who serves primarily as His bed, Gaurdan, the bird that serves Him as the vehicle, Vishvaksena, the General who serves to carry out all His orders.
  • Viyuha Vasudevan, Paramathma on the Holy Sea, Thirupaarkadal, provides his Dharsan only for the the good and bad  (Devas and Asuras) from the Celestial world.
  • There is no record of having seen the Antharyami by anyone other than Sri Thirumazhisai Azhwaar.  (“Ninrathum, Irunthathum, Kidanthathum en nenjulle “)
  • All the incarnations (Avathaarms), like Rama, Krishna, Narasimha, Vamana, Thiruvikrama, had existed only for a specific amount of time and the people who lived during that time alone had the fortune of having the dharsan of those incarnations respectively.
  • Sri Rama ruled this country for about 11,000 years   Sri Krishna’s incarnation was for about 100 to 120 years.   Sri Narasimha had taken the incarnation and completed the purpose of his incarnation in about 72 minutes.   Vamana Avatharam completed His mission till He gave Mukthi to Sri Mahabali Chakravarthy.   From the above, we can understand that each incarnation was for a fixed time, whereas Archai exits for years.   Whenever we go and pray Archai in any form, in any temple or house, He, in Archai form, alone gives us the confidence that He is available along with us in this world to support us.
  • We did not live during the Vibhava incarnations.   Now our only hope is Archai. Azhwaar had also highlighted the same in one of his hymns “Pinnanar vanangum sothi Thirumoozhikkalathaanaai“, meaning that the Deity in Thirumoozhikalam would be for those who live, after the vibhava avatharams or incarnations. Thirumoozhikalam is only an example and it represents all other deities in other temples and other Archais.
 • Archai can not walk or move by itself like the Vibhava Incarnations as what is told by Azhwaar “evvaaru nadanthaniyo em Ramaavo” (Perumal Thirumozhi 9.2)
 • In all other states, Paramathma or Perumal will act according to His desire.   However in Archai, even though it is possible for Him, what He does depends on what the priest carries out.  (archaka paraathinagaa)
 • Whenever Paramathma takes an incarnation, He protects all, except the bad ones, for whom He hands over the punishment.   For example, Ravanaa, Sisupala, Hiranyakasipu got the punishment from Rama, Krishna and Narasimha respectively, and they got killed.  However the deities in Archai, like Sri Ranaganathar or Sri Venkatamudaiyan, never came out of their Archai state and gave any punishment to anyone.
 • Archai is one of the states of Paramathmaa, or perumal.   The places where Archai reside is called Kshetras.    Kshetras had existed even before the Perumal arrived in those places.   In other words, Kshetras wait for Paramathma to reach their places.   Azhwaars have created hymns not only about the Deity in the Kshetra, but also about the Kshetra itself.   In some cases, the places have their own glories, and the Jeevathmaas get the benefits even if they just reach the kshetras.   For example, “Paran Sendru Ser Thiru Venkatada MaMalai ondrume thozha nam vinai oyume“, meaning that “if we reach and pray the mountain of Thiruvenkadam, all our sins will vanish”.
 • When the Azhwaars have created Hymns about the Kshetras or about the Deity in the Kshetras, they are called Divya Desams, all other Kshetras are just called as Kshetras.
 • Archai is the only way we can surrender, because other four states of Embermaan or Paramatha is not reachable to us in this life. Ramanuja prayed for total surrender in front of Namperumal in Srirangam and he got His acceptance, as per Saranagathi Katyam.
 • Archai is not something that has evolved in our time. Archai had existed beyond the time of Azhwaars and Acharyas even in Puranic times. The Vishnu Sahasranama in the Mahabharata by Bhishma contains a collection of about 40 names about the archai.

Divisions

Given below are some of the examples of Kshetras.  They do not represent a complete list.   Also please note that they are not given in any specific sequence.   These are only for our own interests and reading pleasure.

 • Posture – (Like what is quoted by Sri Namazhwaar in “Pulingudi kidanthu, Varagunamangai irunthu, Vaikunthathul nindru“, meaning, the sleeping posture of Pulingudi, the sitting posture of Varagunamangai and the standing posture of Vaikuntham, all these three places are part of Divya Desams in Tirunelveli District; or as given by Thirumazhisai Azhwaar in “nindrathu entha Ooragaththu, irunthathu entha Paadagaththu, andru Vekkanai kidanthathu” standing posture of Ooragam, sitting posture of Padagam and Sleeping posture of Vekka, all these places are part of Divya desams in and around Kancheepuram)
  • Standing Posture –  60  (Thirupathi, Thirumalrincholai or Madurai Azhagar Koil)
  • Walking Posture  – 3 (Thirukovilur, Sirkazhi or Kazhicheerama Vinnagaram and Kancheepuram Ulagalantha Perumal)
  • Reclining Posture – 24 (Srirangam, Mayavaram – Thiruindalur)
  • Sitting Posture -20  (Thiruvaragunamangai or Natham, Paramechura  Vinnagarm)
  • Existing everywhere – 1 (Naimisaranyam)
 • Perumal facing directions in Divya Desams
  • East Facing – 78 (Examples – Thillainagar Thiruchitrakoodam, (Chidambaram), Koodalazhagar (Madurai)
  • West Facing – 19 (Thirunagari, Thirukachi/Athigiri, Mukthinath)
  • North Facing – 3 (Uraiyur near Tiruchi, Ayodhya)
  • South Facing – 7 (Srirangam, Thirumeyyam)
  • Facing all directions – 1 (Naimisaranyam)
 • Divya Desam (108)  Locations 
  • Chola Nadu (in and around Thanjavur) – 40
  • Pandiya Nadu (in and around Madurai) – 20
  • Thondai Nadu (In and around Kancheepuram) – 22
  • Malai Nadu (In and around Kerala) – 11
  • Nadu Nadu (In and around Centre of Tamil Nadu) – 2
  • Vada Nadu – (In and around North India)- 11
  • Vinnulagam – (In celestial world) – 2
 • Incarnations in Archai form
  • Krishna (Thirukannangudi, Thirukannapuram, Thirukannamangai, Thirukovilur, Thirukavithalam, Dwaraka and Madura in Northern India – the first five in the list together is called Pancha Krishna Kshetram)
  • Narasimha Kshetrams – (Ahobilam, Sholingar, Kattu Azhagiya Singar, Poovarsankuppam, Thirukuraiyaloor, Managalagiri near Renigunta)
  • Rama (Dasaratha Raman in Ayodya, Vijayaraghavan in Thiruputkuzhi, Pattabiraman in Thirupullani, Kolavilliraman in Thiruvelliangudi, Chakravarthy Thirumagan in Vaduvoor, Veera Kodathandaraman in Thillaivillagam, Eeri Katha Raman in Maduranthagam)
  • Varaagha (Aathipiran in Alwarthirunagari, Bhumadevi on the left thigh in Thiruidaventhai, Bhumadevi on the right  thigh in Thirukadalmallai or Thiruvalaventhai, Bhuvaraaghavan in Srimushnam)
  • Koorma representation in a place called Sri Koormam near Srikakulam in Andra Pradesh
  • Thiruvikarama representation in Thirukovilur, Kancheepuram Ulagalantha Perumal and Sirkazhi)
 • By Temple Structure
  • Sea Shore Temples – (Puri Jagannathan, Thiruvellikeni Parthasarathy, Mahaballipuram Sthalasayanapperumal, Nagapattinam Soundararaja Perumal, Thirupullani Adhi Jagannatha Perumal, Varkala Jagannatha Perumal and Dwaraka Sri Krishnar)
  • Temples on the Hill – Badrinath, Mukithinath, KandamEnumKadiNagar (Devaprayagai), Thirupirithi (Joshimatt), Ahobilam, Thirumalai, Sholingar, Thirumaliruncholai, Thirukurungudi Nambi)
  • Temples on Multi Storey – Kancheepuram Devapperumaal, Thirunaraiyur Srinivasan, Thiruvellari Pundarikakshan, Thirukoshityur Sowmiya Narayana Perumal, Madurai Koodalazhagar, Thirupuliyur or Kuttanadu Mayappiran and Thiruvattaru Adi Kesavan in Kerala)
 • Adorable Places
  • All special deities in temples which are not Divya Desams (Melkote, Kattu Mannar Koil, Vaduvoor, Mannargudi)
  • Birthplaces of Azhwaars (Thirumandangudi of Thondaradipodi Azhwaar, Thirumazhisai, Thiruvanchikalam of Kulasekara Azhwaar)
  • Birthplaces of Acharyars (Sriperumpudur – Swami Ramanujar, Kooram – Koorthazhwar, which is near Kancheepuram, Mathuramangalam – Embaar)
  • Five Important  Ranganathan temples (Srirangapattinam, Srirangam, Koviladi or Thirupernagar Appakkudathaan or Appala Rangan, Kudanthai Sarangapani and Thiruindalur Parimalarangan)
 • Made up of 
  • Gold, Silver and other metals
  • A special alloy consisting of five metals (gold, silver,  Brass, Copper and Lead) used for making statues or other alloys
  • Granite or other Stones
  • Wood (Athivaradhar in Kancheepuram, Vaanamuttiperumal in Kozhikutthi, which is near Mayavaram, Uduppi Krishnan)
  • Sallagramam (Thiruvananthapuram Padmanabhaswami was constructed using 12000 salagramams and an Ashtabanthana paste;  Adi Kesava Perumal in Thiruvattaru is also made up of 16008 salagramams and Ashtabanthana paste)
 • By the Glories shown to Azhwaars
  • Srirangam – Viyuha Sowgartham – meaning that He who helps all the time and generation after generation
  • Thirupathi – Vasthalyam – Motherly Affection
  • Vaanamaamalai – Outharyam – Giving away everything without expecting anything in return
  • Azhwaarthirunagari – Parathvam –  Extreme Superiority
  • Thirukurungudi – Lavanyam – Extraordinary total beauty or complete handsomeness
  • Nagaipattinam – Sowndharyam – Beauty in each and every part
  • Kumbakonam – Mathuryam – Showing kindness and affection to even those who come to kill Him
  • Thirukatkarai – Sowseelyam – collaborating with people without considering the differences among the superior and inferior
  • Thiruvananthapuram – Saamyam – Showing Equality without looking into caste or colour
 • Other Groups
  • Places where rituals or rites to be done for our forefathers – Gaya, Badrinath, Navaai, Varkala, Pushkaram
  • Swayam Vyaktha Kshetrams – Eight – Those places, temples and deities that came into existence on its own – Vaanamaamalai, Srirangam, Srimushnam, Thirupathi, Pushkaram, Naimisaranyam, Salagramam and Badrinath)
  • Mukthi tharum Kshetrams – The places which can give the eternal world – Seven – (Ayodhya, Mathura, Maaya or Puri, Ujjaini or Avanthikaa, Kancheepuram, Dwaraka and Kasi)

Why these Divisions

We may need to understand why there are so many perspectives and views on the deities and places for these Archai.

We like different things at different times. Our taste changes with time.  In the same way, what is liked by one person, may  or may not be liked by others and the extent to which we like or dislike may also differ from people to people.   Ultimately Paramatha wants to make sure that all Jeevathmaas reach him in one way or other.  So He takes different shapes, appears in different places, displays His Beauty and Handsomeness in different ways at different times to attract as many Jeevathmaas as possible.   As said earlier, this is one of the reasons for Him to be in Archai state.

His intention is to create some interest about Him, somewhere in all Jeevathmaas or if the interest is already there, He tries to improve or increase the same  by resorting to these very many different appearances.

In the same way, Paramathama appears in Archai form in every place, because He does not want even one Jeevathmaa to feel that since there is no deity or Paramathma in his or her town or village, he or she would not get the opportunity to reach paramapatham or eternal world.

Disrespect to Paramathmaa

Even though there are multiple ways in which we can see the Paramathma in Archai, we should never forget that all are Equal, whether they are present in Temple or at Home, whether they are made up of Gold or drawn in paper.   If we start seeing the differences and start considering the superior and inferior versions of Perumal, then we have not learnt or understood the kindness of Paramathmaa.  It is He who has come down on all these shapes and sizes to give us the comfort and confidence, we should be careful to treat them on par.  If we dont, then we end up doing what is called, “Baghawath Apacharam”, meaning that it is Disrespect to Paramathma, one of the four major possible apacharams or Disrespects.

Can Archai Talk ?

In the state of Archai, Paramathma has spoken to a few people a few times, as per the historical notes.

We will see these interesting details on another weblog.

RSS
Follow by Email