Thiruaranganudan/திருஅரங்கனுடன்

For English version, please click here, thanks

நம்மாழ்வார் மிகவும் உகந்த பெருமாள் நம் அரங்கனே!  நம்மாழ்வாரும் அரங்கனும் சேர்ந்து வருகிற சில காட்சிகளை இங்கு காண்போம்.  நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்ன வென்றால், நம்மாழ்வார் முப்பத்திரண்டு வருடங்கள் தான் இப்பூவுலகில் இருந்தார், அதுவும் ஆழ்வார் திருநகரிலேயே புளிய மரத்தடியில்தான் வாழ்ந்தார். இந்த வலைப்பதிவில் ஆழ்வார் என்று சொல்வது எல்லாம் அவரது விக்கிரகமே.

மணவாளன்

திருவரங்கனைத் தன் மணாளனாக வரித்து, தானே அரங்கனின் நாயகியாகிப் பாடிய பாசுரங்கள் அநேகம். அவற்றில், அரங்கனையே நினைத்து உருகும் தன் மகளின் நிலையைக் கண்டு கண்ணீர் உகுத்து, அரங்கனிடம் ‘நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று நாயகியின் தாயார் கேட்கும் பாசுரம் “கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்” எனத் தொடங்கும் பத்து பாசுரங்கள்.

ஆயிரமும் அரங்கனுக்கே

பட்டர் என்னும் ஆசார்யர், நம்மாழ்வாரின்  திருவாய்மொழி ஆயிரம் பாடல்கள் அனைத்துமே  திருஅரங்கனுக்காகவே அருளிச்செய்தவை என்று கூறுகிறார்.

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன்” .

திருவத்யயனம்

ஸ்ரீபாஞ்சராத்ரம் எனும் ஆகமமானது, மார்கழி வளர்பிறை(சுக்லபக்ஷம்) ஏகாதசி(வைகுண்ட ஏகாதசி) திதியில் இருந்து, பகவானின் ஸந்நிதியில் வடமொழி வேதம் ஓதத் தொடங்கி, தேய்பிறை பஞ்சமி நாளில் பத்து நாட்கள், பூர்த்தி செய்து, இந்த உத்ஸவத்தைக் கொண்டாடச் சொல்கிறது.  இதற்கு ’மோக்ஷ உத்ஸவம்’ என்று பெயர்.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தன் பிறந்தநாளில், (கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில்) தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் அனுபவித்துப் பாட, கிறங்கிப்போன அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று அன்போடு வினவ, ஆழ்வார் அதற்கு, ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன் தமிழ்மறையான திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்” என வேண்டினார். அரங்கன் மகிழ்வுடன் இணங்கினான். அன்று முதல் இந்த உத்ஸவமானது தமிழ்மறை உத்ஸவமாக மாறி, படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்ற பல சிறப்பு அம்சங்களைச் சேர்த்து பிரமாண்ட விழாவாகவே நாதமுனிகள், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், மாற்றி அமைத்தனர்.

இந்த உத்ஸ்தவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்விப்பர்.  இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  இதுவே ’அத்யயனத் திருவிழா’ என்றும்  ‘திருவத்யயனம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அனத்யயன காலம்

நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரியில் இருந்து புறப்படும் நாள் முதல், அவர் திருவத்யயனம் முடிந்து ஆழ்வார்திருநகரி திரும்பும் வரை உள்ள நாட்களை அனத்யயன காலம் என்றும் கோவில்களிலும் வீடுகளிலும் திவ்யப்ரபந்தங்களை ஆழ்வாருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் சேவிக்க மாட்டார்கள்.   பெருமாள், ஆழ்வாருக்காகவே காத்திருந்து செவி சாய்த்தால், நாமும்   காத்திருப்போம். பொதுவாக ஒவ்வொரு வருடமும்கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் (திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்திரம்) தொடங்கி தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் (கூரத்தாழ்வான் திரு நட்சத்திரம்) வரை  இந்த அனத்யயன காலம்இருக்கும்.    கோவில்களில் காலையில் திருப்பள்ளியெழுச்சி மட்டும் எல்லா நாட்களும்சொல்லுவார்கள்.   மார்கழி மாதத்தில் காலையில் விரதம் இருக்கும் போது மட்டும் திருப்பாவை சொல்லுவார்கள்.  மற்ற எந்த நேரத்திலும், எந்த திவ்ய பிரபந்தங்களும் அனத்யயன காலத்தில் சேவிக்க மாட்டார்கள்.

பகல் பத்து

வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாட்கள் பகல் பத்து என்று  கொண்டாடப்படும்.  அப்போது நம்மாழ்வார் தவிர மற்ற ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களை பெருமாள் முன் சேவிப்பார்கள்.  பகல் பத்தின் பத்தாவது நாள் இரவு பெருமாளுக்கு மோகினி அலங்காரம் நடக்கும்.  அடுத்த நாள் விடியற்காலை வைகுண்ட ஏகாதசி.

வைகுண்ட ஏகாதசி

மனிதப் பிறவியின் பயனே, மறுமையில் மோட்சம் அடைவதுதான் என்ற தத்துவத்தின் ஒத்திகை வைகுண்ட ஏகாதசி நாளில் நடைபெறுகிறது.  வைணவ பக்தன்  எவ்விதம் வைகுந்தம் அடைகிறான் என்பது நம்பெருமாளாலேயே ஒவ்வொரு  ஆண்டும் நடத்திகாட்டப் படுகிறது.

நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விரஜாநதி மண்டபம்  வரை போர்வை சாற்றிக்கொண்டு புறப்பட்டு வந்து, சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்வார். வைகுண்டவாசல் திறக்கப்படும் முன்பு, போர்வை களையப்பட்டு நம்பெருமாள் அலங்காரங்கள் பளிச்சிட பிரகாசமாக ஸேவை தந்தருள்வார்.  நம்மாழ்வார் மற்றும் உள்ள ஆழ்வார்களும் ஆச்சர்யார்களும் வைகுண்ட வாசலுக்கு எதிர்புறம் இருந்து, வைகுண்ட வாசல் திறந்ததும், பெருமாளை அல்லது மோட்ஷத்திற்கு வரும் ஜீவாத்மாவை (முக்த்தாத்மாவை) வரவேற்பார்கள்.  விரஜா நதியில் நீராடிவிட்டுதான் வைகுந்தத்திற்குள் செல்ல வேண்டும்.   இங்கு சந்திர புஷ்கரணி தான் விரஜா நதி.   போர்வை தான் சரீரம்.வைகுண்ட வாசல் தாண்டி செல்வதுதான் வைகுந்ததிற்குள் நம் சரீரத்தை களைந்து அவனிடம் சேர்வது.

பரந்தாமனே தன் பக்தர்களுக்காக இதை நடத்திக்காட்டுவது, நம்மை அவனிடத்தே அதிக பந்தப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது!

அரங்கன் திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் புடைசூழ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாடல்களை அரையர்கள் அபிநயிக்கக் கேட்டும் கண்டும் இன்புறுவார்.   இங்குதான் திருக்கைத்தல ஸேவை, நம்மாழ்வார் மோட்சம் போன்ற வைபவங்கள் நடந்தேறுகின்றன.   திரு மாமணி மண்டபத்தில் திரு வந்திக்காப்பு நடைபெறும். இந்த மண்டபத்தில் வேதவிண்ணப்பங்கள் நடைபெறும்.

இராப்பத்து ஏழாம் நாள்

நம்மாழ்வார்,  நாச்சியார் திருக்கோலம் (நம்மாழ்வார் மோகினி அலங்காரம் என்று பெயர்)  கொண்டு ‘பராங்குச நாயகி’யாக, இறைவனிடம்  வேண்ட, அரங்கன் அர்ச்சகர்களின் கைத்தலங்களில் எழுந்தருளி நம்மாழ்வாரைக் கடாக்ஷிக்கிறார்.  திருக்கைத்தல ஸேவையின் போது அரங்கன் அதிக அலங்காரமில்லாமல் அடுக்கடுக்காக சில பீதாம்பரங்களை மட்டும் சாற்றிக்கொண்டு காட்சி தருவார்.  ஒவ்வொரு  திருநாளன்றும், நம்பெருமாள் ரங்கநாச்சியார் ஸந்நிதி அடைந்து, அங்கு தாயார் முன் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, பிறகு ஆஸ்தானம் திரும்புவது வழக்கம்.  ஆனால் இந்த ஒரு திருநாளில் மட்டும், இதற்கு விதிவிலக்கு.   ஆழ்வார் மீது உள்ள அளவற்ற காதலால், பராங்குசநாயகியாகக் காத்திருக்கும் நம்மாழ்வாருக்காக, தன் நாச்சியாரையும் மறந்து இங்கு எழுந்தருளுவது அவனது சௌலப்யத்தின் (சௌலப்யம் என்பது இறைவனின் எளிமை நிலையைக் குறிப்பது) எல்லை!

இராப்பத்து பத்தாம் நாள்

இந்தத் திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார். இராப்பத்துத் திருநாளில் (கடைசி நாளில்)   ஒவ்வொரு  ஆண்டும்,  நம்மாழ்வார் எப்படி மோட்சத்தை அடைந்தார் என்று  நடத்திகாட்டப் படுகிறது.

அன்று நம்மாழ்வார் பரமபதவாசலுக்குச் செல்லும் வழியில் முக்தன் வேடத்தில் இருப்பார்.கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல் வெள்ளையாடை உடுத்தி, பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சி அளிப்பார்.

11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங்களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணிமுகில்’ (10-9-1) எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக்கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். இந்த பத்து பாசுரங்களில் நம்மாழ்வார் மோட்சத்திற்கு  செல்லும் வழியில் என்ன நடக்கிறது என்றும், யார் யார் வந்து எதிர்கொள்ளுகிறார்கள் என்றும் சொல்லுகிறார். அப்போது, ‘முனியே..!  நான்முகனே..’ (10-10-1) என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.  நம்மாழ்வார் நம்பெருமாளுடன் கலந்து மோட்சத்தை அடையும் நிகழ்ச்சி இப்படி  நடத்திக் காட்டப்படுகிறது.

அவாவறச் சூழ்அரியை அயனை அரனை அலற்றி, அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன, அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும், முடிந்த அவாவிலந்தாதியிப் பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே..!’  (10-10-11)

என்று உணர்வெல்லாம் ஒன்று திரட்டி திருவாய்மொழியின் கடைசி பாசுரத்தை, அரையர்கள் தாளத்தோடு பாடுவார்கள். ரங்கன் தான் சாற்றிக் கொண்டிருந்த  மாலையைக் களைந்து ஆழ்வாருக்குச் சாற்றி,  தன் நெற்றியில் இருந்து கஸ்தூரியை, ஆழ்வாரின் நெற்றியில் திலகமிட்டு தன் பெருவீட்டுக்கு அந்தாதி பாடிய ஆழ்வாரை அனுப்புவார். இதன்மூலம், பரமபதத்துக்கு சென்ற முக்தனுக்கு பகவான் அருள்புரிவது காட்டப்படுகிறது.

பங்குனி உத்திரம்

திரு அரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் ஆழ்வாரின் பங்கு மிகப் பெரியது. பெருமாள், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுக்கும் போது, நம்மாழ்வார் தான் வந்து சமரசம் செய்து வைப்பார். பிராட்டியாரும் நம் பெரியன் சொல்படி கேட்டோம் என்று ஆழ்வாருக்கு உயர்ந்த மரியாதையை தருவார்.   ‘நம் பெரியன்’ என்று சொன்னதால் நம்மாழ்வார் என்ற பெயர் தாயார் கொடுத்ததாக கொள்ளலாம்.

சடகோபர் அந்தாதி  

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட ராமாயணத்தை, கம்பர் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது,‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடின நம் ஆழ்வானை பாடினாயோ?‘ என்று பெருமாள் கேட்டாராம்.  இப்படி கேட்டதால்,  நம் ஆழ்வார்  என்ற பெயர் கொடுத்தது  திரு அரங்கன் என்றும்  கொள்ளலாம்.   கம்பர் சடகோபர் அந்தாதி என்ற நூறு பாடல்கள் உள்ள தொகுப்பையும் பிறகு எழுது திரு அரங்கன் முன் சமர்ப்பித்தார்.

மலைநாட்டு பயணத்தின்போது

தென் இந்தியாவின் மீது முதல் முதலில் படையெடுத்து வந்தவன் மாலிக் காபூர் (1311-13) இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் உலுக்கன் எனப்பெயர் கொண்ட முகமது பின் துக்ளக். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாச்சாரியார் என்ற ஆச்சர்யார் மூலம் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது

இடைப்பட்ட காலத்தில்அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரை சென்றார். பிறகு அங்கிருந்து பாதுகாப்பு கருதி கோழிகோடு சென்றார்.   அப்போது தெற்கில் இருந்து நம்மாழ்வாரும் மற்றும் சில திவ்ய தேச பெருமான்களும் கோழிகோடுக்கு எடுத்து செல்லப் பட்டனர்.  இன்றும் அந்த பகுதி கோவிந்தபுரம் என்று உள்ளது. நம்பெருமான் தன திவ்ய சிம்மாசனமான வட்ட மனையும், முத்து சட்டையையும் நம்மாழ்வாருக்கு பிரசாதித்து அருளினார்.   ஆழ்வாரும் நம்பெருமாளும் ஒரே சிம்மாசனத்தில் ஒரு வருட காலம் திருக்கணாம்பியில் (தேனை கிடங்கை) எழுந்தருளி இருந்தனர்.  ஒருமுறை ஆழ்வாரும் ரங்கனும் படகில் பயணித்தபோது ஆழ்வார் தவறாக ஆற்றில் மூழ்க அவரை கருடாழ்வார் துணை கொண்டு ஆழ்வாரை மீட்டனர்.   பிறகு அரங்கன் ஆழ்வாரை அவருடைய பாதுகாப்பு கருதி, அவரது ஆஸ்தானத்திற்கு செல்ல கட்டளையிட்டான்.   பிறகு நம்பெருமாள் மட்டும் மேல்கோட் சென்றார்.

நம்பெருமாள் மேல்கோட் சென்ற பொது, நம்மாழ்வார் தெற்கு நோக்கி பயணிக்க அப்போது கள்வர்கள்  தொந்தரவால் ஒரு செங்குத்தான மலையில் பலகையின் மூலம் ஆழ்வாரை அவரது அபிமானிகள், கீழே இறக்கிவிட்டார்கள்.  கள்வர் பயம் சென்ற பிறகு ஆழ்வாரை மேலே எடுக்க முடியவில்லை.

தோழப்பர் என்ற ஆழ்வார் அபிமானி அவரை தேட முந்திருப்பு அல்லது முந்திரி கிராமம் என்ற ஊரில் இருந்து சில தொண்டர்களை அழைத்து சென்றார்.     உச்சியில் இருந்து பலகைகளில் சங்கலி கட்டி தோழப்பரை கீழே இறக்கினார்கள்.   ஆழ்வாரை காப்பாற்றிய தோழப்பரை மற்றவர்களால் காப்பாற்ற முடியவில்லை.   இன்றும் தோழப்பருக்கு ஆழ்வார் திருநகரியில் மரியாதை செய்யப்படுகிறது.   ஆழ்வார் தெற்கு நோக்கி சென்றார்.  சென்ற வழியில் உள்ள எல்லா இடங்களிலும் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

ஆழ்வார்

அனைவராலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர் நம்மாழ்வார் ஆவார். ஏன் என்றால்,  அவர், அனைவரும் பெரியபெருமாளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருவாய்மொழியை அருளிச் செய்தார். ஆயினும் அதனை அறிய இயலாதவர்களும் பகவானை அடைய ஏதுவாக, தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார் என்பது உறுதியே. (பாதுகா சஹஸ்ரகம் 22, ஸ்ரீ வேதாந்த தேசிகன்). இப்படி நாம் மோட்சம் அடைவதற்காக பற்பல க்ருபைகளை, அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஆழ்வாரின் மோட்சம் பற்றிய ஒரு சில விவரங்களை அடுத்த பகுதியில் காணலாம்.

====================================================================

Thiruarangan

The most adored perumaal for Namazhwaar is Thiru Arangan.   Let us see a few occasions where both Thiru Arangan and Swami Namazhwaar were jointly present or jointly involved in presenting a case to us.   What we need to remember is that Azhwaar lived in this world only for 32 years and that too under the Tamarind tree at Alwar Thirunagari.  So whenever we mention Azhwaar in this weblog, it refers to his Vikragam, (idol or metal statue).

Spouse

Namazhwaar had composed many hymns (Pasurams), where he had portrayed Thiru Arangan as his bridegroom and he became Parangusa  Nayagi.   In some cases, Azhwaar had also taken the role of the mother of the bridegroom and presented the picture of the sad daughter to Thiru Arangan.   One such important composition is called “Kangulum Pagalum Kann Thuyil Ariyaal” (Both in the night and in the daytime she did not know how to sleep or close her eyes), where the mother asked Thiru Aranagan what He would do or what He was thinking about when her daughter was crying with full of tears.  Or in other words, would He be willing to accept her daughter as a bride.

All the Thousand are for Arangan 

Bhattar, one of the renowned Acharyars,  said that all the Thousand Hymns rendered by Sri Namazhwaar are for Thiru Arangan, even though they refer many other deities of various other Vishnu Temples.    “Vaan Thigazhum Solai Mathil Arangar Vann Pugazh Mel Eendra Tamil Maraigal Aaayirammum endra muthal Thai Sadagopan” – meaning that “all the one thousand hymns of Tamil Vedam, Thirvaimozhi, are on Thiru Arangan and were composed by Sri Sadagopan”.

Thiruvadhyayanam

Sri Pancha Rathram is a ceremonial set of procedures for the operations of Hindu Temples. It specifies that from the 11th day  after the new moon in the Tamil month of Margazhi, (Vaikunta Ekadasi), Sanskrit vedas should be recited in front of the Deity and it should continue for about 10 days.   These ten days function is celebrated like a festival and it is called “Moksha Festival” (Reaching the eternal world whereby the Jeevathmaa wont return to this world).

Thirumangai Azhwaar, on one of his birthdays, recited his composition, Thiru Nedun Thandagam with proper music and tune in front of Thiru Arangan. Thiru Arangan was very impressed with the performance and He asked Azhwaar  with lots of affection on what were his wishes.     Azhwaar responded by making his request to Thiru Arangan, that He should listen to the Tamil Vedam, Thiruvaimozhi, along with the Sanskrit Vedas during Margazhi Moksha Utsavam and Thiru Arangan agreed promptly.

From that day onwards, the festival was developed into Tamil Vedam Festival and got restructured with additional functions like Mohini Alankaram, Thiru Kaithala Sevai (Taking Thiruarangan around on the hands of the Priests so that people can have a closer dharsan at Thiru Aranagan), vedupari uthsavam, (This is a function to recognise the efforts of Thiru Mangai Azhwaar, where Perumal or Paramathmaa intervened Thirumangai Azhwaar for the first time to bring him to His fold) and Namazhwaar Moksham.   With all these additional functions, this twenty or twenty one day function today takes a much larger scale, because of the ideas and suggestions of Sri Nathamunigal, Swami Ramanujar and Sri Manavala Maamunigal.  who are all our Acharyars, and who have significantly helped us to understand and follow Vaishnavism).

On those days, Swami Namazhwaar’s idol or metal statue (vikgragam) would be taken from Azhwar Thirunageri to Thiru  Arangam Temple every year for this festival.   These celebrations would happen for 10 days from Vaikuntha Ekadasi.  During these 10 days Namazhwaar’s Divya Prabhandham, namely Thiruvaimozhi would be recited in front of Thiru Arangan with proper music, tune and dance, every night.    The explanation for each of the hymns would also be delivered.  This set of celebrations are called Irapathu (Night time in 10 days) or “Adhyayana Festival” or “Thiruvadhyayanam“.

Anadhyayana Period

This  period, Anadhyayana Kaalam, was the time taken for Swami Namazhwaar to start from Azhwar Thirunagari to reach to Srirangam, participate in the Irappathu Utsavam and then return to Azhwar Thirunagari.   During this period, as a show of respect to both Swami Namazhwaar and Thiru Arangan, people would not recite any Divya Prabhandham at their houses or in the temple.     This was because, Perumaal wanted to hear from Azhwaar and hence people preferred to wait for Azhwaar to recite in front of Thiru Arangan, get His blessings and return to his home.

Generally the period starts from Thirumangai Azhwaar’s birth day (Karthigai Star, Nakshathiram in the Tamil month of Karthigai) and goes until Sri Koorthazhwaar’s (one more significant acharyar who was with Swami Ramanujar for most of the time or in other words, Swami Ramanjuar wanted to be with Sri Koorthazhwaar all the time) birth  day, (Hastam Star, Nakshathiram in the Tamil month of Thai).   The vishnu temples will offer only Thirupalli ezhutchi (wake up slokas for Perumal) in the mornings and during the month of Maargazhi, Thirupaavai will be recited and that too only during the morning, when people do the Viratham (Special prayers for Markazhi Month).  Apart from that no Divya Prabhandham will be recited anywhere during the Anadhyayana Period.

Pagal Pathu (10 days of daytime)

Most of us may be knowing about Vaikuntha Ekadasi ? It is a famous festival celebrated in Srirangam and other Vishnu temples.    Ten days before the Vaikuntha Ekadasi, the festival starts with reciting of Divya Prabhandams in front of Thiru Arangan.   During this first ten days, the hymns of all other azhwaars except Namazhwaar will be recited during the day time and hence it is called Pagal Pathu (10 days of day time reciting). The tenth day night, Perumal will have a special decoration, called Mohini Alankaram.  He will be dressed as a beautiful female.  Next day early morning is the Vaikuntha Ekadasi festival.

Vaikuntha Ekadasi 

The purpose of the human life is to reach the eternal world at the end of this life, and this philosophy is rehearsed on the Vaikuntha Ekadasi day by Thiru Arangan.   How a Vaishnavite reach the eternal world is demonstrated in Vaikuntha Ekadasi day  of every year by Sri Namperumal (Thiruarangan).

Namperumal (Thiruarangan) would start from his place with himself covered by a thin cloth and He would go upto Virajanadhi Hall.   In the temple tank, Chandra pushkarani, He would take a bath or dip.    And then His blanket would be removed and He would be decorated beautifully with bright ornaments and dressed up, before He enters the Gate that is called Vaikuntha Vaasal or Paramapada Vaasal.   Nammazhwaar and other azhwaars and Acharyars would be waiting on the other side of Vaikuntha Vaasal to receive Perumaal or Paramathmaa or the Jeevathama who would be joining them in the eternal world.    Before reaching the eternal world, all Jeevathmaas should take a dip in Virajaa River and then only they would get into the eternal world or Moksham.   Here Chandrapushkarani or the temple tank is the equivalent of Virajaa river.   The blanket is the body, which the Jeevathmaa would leave here before entering the Moksham.   Passing through the Gate, Vaikuntha Vaasal is similar to entering the eternal world after leaving the body.

The purpose of Paramathma Himself demonstrating this to people like us, is mainly because He wants to increase the bond between Him and us.

There is another Hall with Thousand Pillars in Srirangam temple from where Namperumal would give dharsan on selected occasions and this is called Thiru Ma Mani Mandapam. This is also where He would listen to Azhwaars and Acharyars when they recite Divya Prabhandam and also listen to those who chant Sanskrit Vedas.   This is the same place where events like Kaithalasevai, Namazhwaar Moksham would happen.

Seventh Day functions on Irappathu

Namazhwaar would be dressed up like a bride (Namazhwaar Mohini Alankaram).  He is called as Parankusa Nayaki whenever he takes the role of a female in his hymns.   (S)He would request Thiru Arangan and Thiru Arangan would concede to her request.  He comes closer to Parankusa Nayaki, when Priests would carry Thiru Arangan in their hands and He would give the Dharsan to all from the hand-carried posture.   (Kaithalasevai).   During this time, He would not have much decoration, but would have only a few beautiful coloured towels.   During Irappathu, every night He would go to Thayaar (Ranganayaki) temple and He would have a bath or shower in the front Hall.   But this seventh day alone is an exception.   He would skip going to His Thayaar’s Hall, due to the overwhelming love and affection He has for Parankusa Nayaki or Swami Namazhwaar. This shows His extreme simplicity, called Sowlabhyam, one of His virtues.

Tenth day functions on Irappathu 

This day’s functions are the most important among the ten days of Irappathu.   This is also celebrated as “Azhwaar Thiruvadi Thozhuthal”, meaning “Azhwaar worships His Feet”. Thiruarangan never stays back in the night in any open Hall and He would make a point to return to His home, whatever be the time.    Again the Tenth day is an exception.    On this day alone, He would stay back in the Thiru Ma Mani Mandapam to grant the Moksham to Swami Namazhwaar.   Namazhwaar Moksham is demonstrated on how Swami Namazhwaar attained Moksham on every year on this 10th day (night) function of Irappathu.

Namazhwaar on that day would be preparing himself to go to the eternal world, by keeping himself on the way to Paramapatha vaasal (Looks like same as Vaikuntha vaasal or Sworga Vaasal) in the role of a Mukthathmaa. (Jeevathmaa that is in the eternal world is called Mukthathmaa).   He would not have his usual Crown, ornaments or expensive silk attire, but with a simple white dress, a simple Thulasi garland and with twelve thirumans (Nammam that vaishnavites wear on their forehead).

In the early morning of the 11th day, two priests would hand carry Namazhwaar and the hymn composed by Swami Namazhwaar “Soozh visumbu ani mugil” (10-9-1) in his Thiruvaimozhi would be recited. (10-9 is a set of 10 hymns composed by Swami Namazhwaar to explain the path to the eternal world, what would happen when one Jeevathmaa takes that path, who all would come to invite the Jeevathmaa and how the Jeevathmaa would be treated along the way, etc.     Namazhwaar would be placed on the holy feet of Thiru Arangan in such a way that Namazhwaar’s face would be pressed against the lotus feet of Thiru Arangan.   Then the priests start reciting the final group of hymns from Thiruvaimozhi, namely, “Muniye, Naan Mugane, Mukkanappa….” (10-10-1), the priests and the crowd would be so much overwhelmed that Azhwaar was about to leave us and the priests continue to pour Thulasi leaves on top of Swami Namazhwaar.  The priests and the crowd would cry as Namazhwaar was leaving them. this is how Swami Namazhwaar’s Moksham is demonstrated in Srirangam every year during the Irapathu Utsavam.

When the priests recite the final hymn of Thiruvaimozhi (Avva vara suzh Ariyai Ayanai Aranai Allattri…” (10-10-11), by mobilising their energies in spite of all the difficulties and feelings for Swami Namazhwaar, the crowd would burst into tears.   Thiru Arangan would take his garland and wear it on Swami Namazhwaar, and He would also offer the tilak to Swami Namazhwaar.  Then He would finally send Swami Namazhwaar to the eternal world.    In this process a Jeeavathma would be shown the way it would be blessed when it reaches the eternal world.

Panguni Uthiram

Among the many functions that happen in Srirangam, important one is called Panguni Uthiram.   (Panguni is the name of a Tamil Month and Uthiram is the name of a Tamil Star).    And in that function, the role played by Swami Namazhwaar is very important. Since knowing that Thiru Arangan went to Uraiyur and spent the time with the consort there, Srirangam Nachiyar (or Thayaar) would not let Thiru Arangan into Her temple.    At that time, it was only Swami Namazhwaar, who would pacify both Nam Perumal and Nachiyaar.    After that Nachiyaar would be happy to accept Thiru Arangan, by saying that She listened to “Nam Periyan” showering enormous amount of respect to Swami Namazhwaar.   Since She used the words “Nam Perian”,  Azhwaar would have got the name “Nam azhwaar” from Srirangam Thayaar or Nachiyaar.

Sadagopar Anthaathi 

The Ramanayanam in Tamil is written by a poet called Kambar and it is called Kamba Ramayanam.   When Kambar launched Kamba Ramaayanam in Srirangam Temple, the temple priest in a superhuman state, made a very loud noise and asked Kambar, “karpar rama piranai allal matrum karparo, endru  paadina Nam Azhwaanai paadinaayo?”, meaning that “did Kambar sing about Namazhwaar, who has so much respect and devotion to Sri Ramaa, and who had  proclaimed, “will anyone learn, anything other than the glories of Ramaa“. People treated this voice of the priest as Perumaal’s direct instructions.  Since Thiruarangan had coined the words “Nam Azhwanai”, the name Nam Azhwaar would have been given by Thiru Arangan also.   On hearing this, Kambar, created a Tamil literature consisting of 100 verses called “Sadagopar Anthathi” later.

While Travelling in Western Ghats

Malikapur (1311-13) was the first to invade South India.  The second was Ulukkan, @ Mohamad bin Thuklak.   In both the invasions, all the Hindu temples were raided and looted.   Before the 1331 invasion, Pillai Lokachariyar, one of the Achariyars, took Nam Perumal (the moolavar, or the vikragam) away from Srirangam to a safer place.    He went towards Madurai and later towards Kozhikode, Melkote, Thiurpathi and finally reached back Srirangam, once when The Sultan of Madurai (1331-1371) lost power.

From Srirangam, Thiru Arangan went to Madurai and from there He went upto Kozhikodu. At that time, Namazhwaar from Alwar Thirunagari and some other deities were also carried to Kozhikode, as it was thought to be a safe place for the deities as well as the people who were following Him.   This place is called Govindapuram, today.   After receiving Namazhwaar, Thiru Arangan shared his platform with Swami Namazwaar. (The seat is called Vattamanai, circular seat; He has also handed over the pearl shirt for Azhwaar).  Both of them shared the same seat for about one year at Thirukanambi or Thenaikidangai.   Once when both Thiru Arangan and Namazhwaar were going in a boat, accidentally Azhwaar fell down into the waters.   With the help of Sri Garudan, Swami Namazhwaar was traced and taken out of the waters.   Then Thiru Arangan ordered that Namazhwaar should not be travelling with Him, but he had to return to his place in Alwar Thirunagari for his safety.    Then Thiruarangan or Namperumal went to Melkote.

When Namperumaal went towards Melkote, Namazhwaar started his journey towards Alwar Thirunagari.  Along the way, there were troubles from thieves and at some point in time, the people who were carrying the Azhwaar had to find a safe place to keep the Azhwaar.   They had no choice, but to shift him down through chains and boards in a steep hill.   After the thieves left, they could not retract or retrieve or lift the Azhwaar back from the bottom.

Thozhappar, a staunch follower of Namazhwaar, collected a few people and started his journey to retrieve Azhwaar through a place called Munthiruppu or Munthiri village. Thozhappar tied chains around him and asked the people to let him go down or climb down through the hill to search for the Azhwaar.  Thozhappar had also taken some tools and writing materials to keep communicating with the people at the top of the hill.   He located Azhwaar after a great search and wrote necessary notes.  He secured the Azhwaar safely on the board along with his notes and asked the people above to lift.  While they could save the Azhwaar, they could not bring back Thozhappar alive, as he injured himself very badly while climbing down and during the search.  Even today, Thozhappar is regarded and given respects in Azhwaar Thirunagari festivals.    Azhwaar was taken back from Munthiruppu to Azhwaar Thirunagari and all along the way, people paid their respects to Azhwaar.

Azhwaar

We all need to respect and celebrate Namazwaar, as he had good intentions that all of us should reach Namperumal, or ThiruArangan or the eternal world and hence he composed Thiruvaimozhi.   When we are not aware of Thiruvaimozhi or we could not understand Thiruvaimozhi, he still wanted to enable us to reach Namperumaal, by making himself as a link between Namperumaal and us by being the Satari or Crown with His lotus feet that is touched by the priests in the Vishnu temples.  This is what is told by Sri Desikan in his Paduga Sahasram (22).   Thus Azhwaar has been providing us with the very important help of ourselves attaining Moksham, in many different ways and let us see a few points regarding his Moksham, in our next weblog.

Govinda/கோவிந்த நாமம்

For English version, please click here, thanks

முன்பு அச்சுதன் என்ற திரு நாமத்தின் பெருமையைப்  பார்த்தோம்.  இங்கே கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.

 • மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் என்று சொல்லபடுகின்ற ஐந்து திருநாமங்கள்  புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் ஐந்தில் நடுநாயகமாக விளங்கும் கோவிந்த நாமமே இந்த வலைப்பதிவின் தலைப்பு.
 • திருமலை ஏறும் போது பக்தர்கள் பொதுவாக உச்சரிக்கும் திருநாமம் கோவிந்தா, கோவிந்தா.
 • திருப்பாவை என்ற திவ்யப்ரபந்ததில் ஆண்டாள் பெருமானின் பல திரு நாமங்களை சொல்லி இருக்கிறார்.   இருபத்தி ஏழு, இருபத்திஎட்டு மற்றும் இருபத்திஒன்பது பாடல்களில் ஆண்டாள், கோவிந்த என்ற திருநாமத்தினை மூன்று முறை, கூறுகிறார்.
  • கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
  • கறவைகள் பின் சென்று …… குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
  • சிற்றம் சிறு காலை…..   அன்று காண் கோவிந்தா
 • பாஞ்சாலி உதவி என்று கண்ணனிடம் சரணாகதி அடையும் போது உபயோகித்த திருநாமம் கோவிந்தா.  “திரௌபதிக்கு, ஆபத்திலே  புடவை சுரந்தது கோவிந்த நாமமிறே”..
 • ஆசமனம் என்ற ஒரு அரைநிமிட வைதிக சடங்கு எல்லா இந்துமத வைதிக கருமங்களிலும் பலமுறை திருப்பித் திருப்பிச் செய்யப்படும் ஒன்று. அதில் கோவிந்தா என்பது, விஷ்ணுவின் பன்னிரண்டு நாமங்களில் ஒரு முறையும், அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று முதலில் ஒரு முறையும் சொல்லவேண்டி வரும். இதில் விசேஷம் என்னவென்றால், பன்னிருநாமங்களிலும் ‘கோவிந்தா‘ ஒரு முறை வருவதால், இங்கு எல்லா நாமங்களிலும் கோவிந்தநாமம் ஒன்று மட்டுமே இரண்டு முறை வரும் நாமம் ஆகின்றது.
 • ஆன்மிக சொற்பொழிவுகளிலும்  தெய்வபஜனை  போதும் ஸர்வத்ர கோவிந்தநாமசங்கீர்த்தனம் கோவிந்தா, கோவிந்தா‘ என்று சொல்வது மிக பிரசித்திபெற்ற ஒன்றே.
 • ஆதி சங்கரர் என்ற மதாச்சாரியாரின் புகழ் பெற்ற ஓர் எளிய வேதாந்த ஸ்தோத்திரம் பஜ கோவிந்தம் என்பது. இதில் ஆண்டவன் பெயராக ‘கோவிந்த’நாமம் எடுத்தாளப்பட்டது. சங்கரரின் குருவின் பெயர் கோவிந்தர் என்று இருந்ததாலும், கோவிந்த நாமத்தின் பெருமை தான் அப்படி எடுக்க செய்தது என்று சொல்வதுண்டு.
 • விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 189 (கோவிந்தோ கோவிதாம் பதி) மற்றும் 543 (மகா வராஹா, கோவிந்தக) நாமங்களாக வருகின்றன.
 • கோவிந்த நாமத்தின் பல மகத்துவங்களில் முக்கியமான ஒன்று என்னவென்றால் கோவிந்தா என்ற நாமம் திருமாலின் தசாவதாரங்களையும் குறிக்க வல்லது.   கோவிந்தாவில் வரும், கோ என்ற சப்தத்திற்கு வடமொழியில் பற்பல பொருள்கள் உண்டு.
  • வாக்கு 
  • உயிர்கள் (கோ), காப்பாற்றுபவன் (விந்தன்)
  • பசு மாடு, கன்றுகுட்டிகள்  
  • பூமி 
  • மோட்ஷம்  அளிப்பவர்
  • நீர்
  • அஸ்திரம் அல்லது ஆயுதம்
  • பர்வதம் அல்லது  மலை
  • துதிக்கும் அல்லது துதிக்கப்படுவர் 
  • புலன்கள். புலன்களை அடக்கி ஆள்பவன்
  • வேதமோதுவதால் அடையக்கூடியவர்
  • கூப்பிடுதூரத்தில் இருப்பவர்.
 • மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். மச்ச அவதாரத்தில் நீரில் இருந்து வேதங்களை காப்பாற்றியதால் கோவிந்தா என்று அந்த அவதாரத்தை குறிப்பிடலாம்.  
 • தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம்.    கூர்ம அவதாரத்தில் மந்திர மலையை தாங்கியபடி பாற்கடலில் பள்ளி கொண்டதால் கோவிந்தா என்று கூறலாம். 
 • திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.    நீரில் இருந்து பூமியை காப்பாற்றியதால்  அந்த அவதாரத்தையும் கோவிந்தா என்றே அழைக்கலாம். 
 • பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.   பிரஹலாதனுக்கு மோட்ஷம் அளித்தார்.  அதே போல் சகல தேவதைகளும் நரசிம்ஹருக்கு கோபம் தணிய ஸ்தோத்திரம்   செய்தார்கள் அல்லது துதித்தார்கள்.   ஆகவே  அந்த அவதாரமும் கோவிந்தா  எனக்கொள்ளலாம்.
 • பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.   பூமியை அளந்ததால் கோவிந்தா என்பர்.
 • தந்தை வாக்கை சிரமேல் கொண்டு செயல் பட்ட பரசுராம அவதாரத்தையும் கோவிந்தா என்றே கூறலாம்.
 • ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும், விச்வாமிதிரரிடம் இருந்து ஐநூறுக்கும் மேலான ஆயுதங்களைப் பெற்றதாலும்,   அகத்திய முனிவரிடம் இருந்து பற்பல அஸ்திரங்களை பெற்றதால் ஸ்ரீ ராமனையும் கோவிந்தா என்றே கொள்ளலாம்.
 • கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள். பலராமரின் ஆயுதம் கலப்பை  – அதனை கொண்டு பூமியை தோண்டுவதால் பலராமரும் கோவிந்தரே.
 • வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம்.   மாடு கன்றுகளுடன் கூடிய ஸ்ரீ கிருஷ்ணரை கோவிந்தா என்றே கூப்பிடுவோம். கோவர்த்தன மலையை தாங்கி பசுக்களையும் மக்களையும் காப்பாற்றியதால்  கோவிந்தன் ஆகிறார்.
 • கலி  யுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி.  உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்ல வருவார் என்பது சனாதன தர்மத்தின் நம்பிக்கை.  முக்திக்கு அழைத்து செல்வதாலும், பூமியில் தர்மத்தை நிலை நிறுத்துவதாலும் கல்கி அவதாரமும் கோவிந்தனே.

இதே போல் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் முதல் திருநாமமான விஸ்வம் என்பதற்கும் திருமாலின் பத்து அவதாரங்களையும் பொருள் கூற முடியும்.

விஷ்ணுவின் திருநாமம்களின் பெருமைகளை போலவே அவரது திவ்ய ஆயுதங்களின் சிறப்புக்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

================================================================

Govinda Namam

In one of our previous weblogs, we have seen the glories of one of the names of Sri Maha Vishnu or Paramathma, namely, Achuthan.   In this weblog, we will try to go through the glories of another name of Sri Vishnu, called, Govinda.

 • Even though Sri Mahavishnu has more than one thousand names, Five Important names of Mahavishnu, called Panja Naamaakal are very significant.  They are Rama, Krishna, Govinda, Narayana and Narasimha.   In this group, Govinda stands in the middle, like a center piece of a garland.
 • When people climb the Hill, Thiruvengadam, they keep chanting the name of the God, as Govinda Govinda.
 • In the Holy Divya Prabantham, there is a section of Hymns called Thirupaavai, composed by Sri Aandal.   She refers Sri Vishnu in this composition many times using different names and in particular, Govinda name has been repeated three times in hymns 27, 28 and 29.
  • Koodaarai Vellum Seer Govinda   (Thirupaavai 27)
  • Karavaigal Pin Sendru ……Kurai Ondrum Illaatha Govinda (Thirupaavai 28)
  • Sitram Siru Kaalai …..andru kaan Govinda  (Thirupaavai 29)
 • In the epic, Mahabharatham, one of the important female characters, namely, Panchali or Draupadi, when she was in trouble, she asked for help from Sri Krishna or Vishnu, callingout the name “Govinda“.   So the name Govinda is used for totally surrendering herself to Sri Krishna and more importantly she got His blessings and help in the most difficult situation when she pleaded for help using Govinda.  Sri Vishnu or Sri Krishna had helped her by giving her a saree of infinite length.  “Aabathiley pudavai suranthathu Govinda Naamamere
 • Aachmanam is a short hindu ritual which is done in about 30 seconds, in almost all hindu functions and in many cases it is repeated more than once. In this Aachamanam, twelve names of Sri Mahavishnu are chanted once after starting with Achutha, Anantha and Govinda. Among the twelves names, the name Govinda also appears, which means that whenever we perform Aachmanam, the name Govinda is chanted twice and no other name takes that honour.
 • During many of the hindu religious discourses and bajans, people chant “Sarvathra Govinda naama sangeerthanam Govinda, Govinda” and this is quite popular.
 • Baja Govindham” is a popular composition by one of the most significant Acharyas in the Hindu Religion,  Sri Adi Sankarar.   The guru of  Adi Sankarar was also a person by name “Govindar”.   The glories associated with the name Govinda had made him use the Govinda Nama in his compositon as the name of the God.
 • Govinda Namam comes twice in Vishnu Sahasranamam, once as 189th Nama (Govindho Govithaam pathigi) and again at 543 (Mahaa varaaghaa, govindaga).
 • Among the many different salient points on the Govinda Naamam, the most significant one is that the name Govinda can be attributed to each and every Incarnation of the famous Dasaavathaaram (Ten Incarnations) of Sri Mahavishnu. Let us see how.  The word Govinda can be split as “Go” and “Vindhaa” in Sanskrit.   The word “GO”in sanskrit can mean many things and some of them are :
  • Promise
  • Lives (GO) and Protector (Vintha)
  • Cow and Baby Cows
  • Earth
  • Capable of giving Moksha
  • Water
  • Weapon
  • Mountain
  • can be praised
  • can control the limbs
  • can be reached by chanting veda
  • available in closer proximity
 • Machaavathaaram (Fish Incarnation) – This  is the first of the ten incarnations and in this incarnation, Mahavishnu had taken the shape of a fish.   Since He had saved the vedas from water, He can be referred to as Govinda in this incarnation.
 • In the second Incarnation, Koorma Avatar, Sri Mahavishnu took the form of a Tortoise to carry a mountain by name, Manthra, when the good and bad from the Celestial world, (Devas and Asuras) churned the  milky ocean to get the Amirtham, the antidote to live for ever.   Since He was the base or axis for the mountain, in this  incarnation, He can very well be called as Govinda.
 • Hiranyatchagan, a demon, took the world and hid it under the sea.   Paramathma or Perumaal appeared as White wild boar (Varahavathaarm), the third Incarnation, killed the demon and held the world (earth) using His horn.  Since Varahan, or Mahavishnu recovered the earth from the sea water, we can address Varahan as Govindan.
 • In the fourth incarnation, Paramathma or Perumal came out of a pillar to kill the demon for protecting Prahaladan.    He also gave Moksham or the eternal world to Prahaladan.    When He was angry after killing the demon, Hiranyakasipu, all the good from the celestial world, Brahma, Rudran, Indran and Sri Mahalakshmi came down and started pacifying Him by rendering prayers and praising Him.   Since He was praised by all and also He gave the eternal world to Prahaladan in this incarnation, He can be greeted as Govinda. 
 • The grandson of Prahaldan was Mahabali and to tame him, Perumal or Paramathma took the fifth incarnation, Vamana Avatharam.    The short Vamanan grew into huge Vikraman and He conquered not only this world, but also the whole universe, with two giant strides.    Since He conquered and measured this world using his first step, Vamanan or Thirivikraman can be hailed as Govindan.
 • In the sixth incarnation of Paramathma, Parasuraman, has taken each and every word of His father seriously and carried out the orders meticulously.   Since He has fulfilled all the promises made to His father, Parasurama can also be greeted as Govinda.
 • In the seventh incarnation, Sri Rama was born in Raghu Dynasty to the King Dasaratha .   Here also He fulfilled the promises given to Dasaratha.   In addition, He had obtained more than five hundred weapons from the saint Vishwamithrar. Similarly He had also obtained several weapons from the  saint Agathiyar.  For all these reasons, Rama can be complimented as Govinda.
 • Balaraman, the eight incarnation, is born to Vasudevar in Gokulam.  His weapon is Plough , which is used for cutting, lifting, turning over, and partly pulverizing soil in the earth. So He can also be admired as Govinda. 
 • The ninth incarnation, Sri Krishna, was born to Vasudevar and Devaki.  In His younger days, He had always been associated with cow and calf.   He had carried the mountain Govardana with His hand to protect the Cow, calf and the people of Brindavan and hence Sri Krishna can also celebrated as Govindan.
 • At the end of Kali Yugam, Paramathma will take an incarnation, called Kalki.   At that time, He will help in terms of establishing good governance in this world and He would help people to reach the eternal world.  Hence He will also be endorsed as Govinda.   

In the same way, the first name in Vishnu Sahasranaamam, namely, Vishwam, can be also be interpreted to stand for all the ten incarnations of Sri Maha Vishnu.

The special weapons carried by Sri Vishnu also have many glories, like the Names of Sri Vishnu, and we can see some of them here.

Divya Desams/திவ்யதேசங்கள்

திவ்யதேசங்கள் பலவகைகளில் பிரித்து பார்க்கலாம்.

108 திவ்யதேசங்கள்

அபிமான ஸ்தலங்கள்

ஆழ்வார் ஆச்சார்யர்கள் அவதார ஸ்தலங்கள்

நரசிம்ம க்ஷேத்ரங்கள்

ராமக்ஷேத்திரங்கள்

கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

Archai/அர்ச்சை

For English version, please click here, Thanks

ஐந்தாவது நிலை

எம்பெருமானின் ஐந்து நிலைகளை நம் பூர்வாச்சார்யர்கள் ஐந்து விதமான நீர் நிலைக்களுக்கு ஒப்பிடுவர். அவை,

 • பரத்துவம் – ஆவரணநீர், அண்டகடாகம் என்ற ஓட்டின் மேல் உள்ள நீர்
 • வியூகம் – திருப்பாற்கடல் – பாற்கடல்
 • விபவம் – அவதாரங்கள் – காட்டாறு வெள்ளம்
 • அர்ச்சை – திவ்யதேசங்கள் – காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால் மடுக்களில் சேர்ந்த நீர்
 • அந்தர்யாமி – பூமிக்குள் மறைந்து கிடைக்கும் நீர் – சரஸ்வதி நதி, அந்தர்வாகினி

இந்த நிலைகளை, ‘பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது; வியூஹம் என்பது சமுத்திர ஜலம் போன்றது; விபவம் என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது; அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது; அர்ச்சை என்பது கிணற்று நீர் போன்றது’ என்றும் சொல்வதுண்டு.

பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது. ஆவரண ஜலம் என்பது சத்ய லோகத்துக்கும் மேலே சூழ்ந்து இருப்பது. பூலோகத்தில் தாகம் எடுத்தவனுக்கு ஆவரண ஜலம் பயன்படாது. நமது அருகிலேயே சமுத்திரம் இருந்தாலும் அதிலிருந்து நீரை எடுத்துப் பருக முடியாது. அப்படி, வ்யூஹ மூர்த்தி நம்மால் சுலபமாக சேவிக்க முடியாத அளவுக்கு எங்கேயோ திருப்பாற்கடலில் இருக்கிறார்.   விபவ மூர்த்திகளோ காட்டாற்று வெள்ளம். மழை பெய்தால் ஏகமாக வெள்ளமாக நீர் போகும்; மழை நின்றால் ஒன்றும் இருக்காது. அந்த மாதிரி அவதாரங்கள் ஒரு காலத்தில் நடந்தவை. அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது. கீழே பூமியில் நீர் நரம்பு இருப்பதை வல்லுநர்கள்தான் சொல்ல முடியும். அப்படி சாதாரண உலகவாழ்கையில் இருக்கும் நமக்கு, ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமானை உணர்வது சுலபமான காரியம் இல்லை. அர்ச்சாவதாரம்  கிணற்று நீர் போன்றது.

கிணறு வெட்டி, தண்ணீரும் இருந்து, அதிலிருந்து ஒரு குடம் நீர் பருகக் கொடுத்தால் என்ன கஷ்டம்? அதேபோன்று கோயில் கட்டி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, அந்தக் கோயில் நம் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தால், நமக்கு அனுபவிக்க என்ன கஷ்டம்? அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் நம் பக்கத்திலேயே குடி கொண்டிருக்கிறான்.

பகவானின் ஐந்து நிலைகளில், அர்ச்சை என்பது பர, வியூக, விபவ மற்றும் அந்தர்யாமி நிலைகளுக்கு அடுத்த நிலை. நாம் இருப்பது கலி காலத்தில், இங்கு தர்மம் குறைந்து, கலி புருஷன் எல்லோருக்கும் எல்லாவித கஷ்டங்களையும் தாராளமாக கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, அவற்றில் இருந்து நம் எல்லோரையும் காப்பாற்றுவதற்காக, பரமாத்மா எடுத்த நிலையே அர்ச்சை ஆகும்.

முன்பே சொன்னது போல் எல்லா நிலைகளிலும் பரமாத்மா சமமாகவே உள்ளார்.

அர்ச்சை என்றால் என்ன ?

பர, வியூக, விபவ நிலைகளை நாம் பார்க்க முடியாமல் போனதால், அவைகளின் பிரதிநிதியாக வந்த நிலை தான் அர்ச்சை.     கோவில்களிலும், விடுகளிலும் உள்ள சிலைகள் மற்றும் படங்கள் அர்ச்சையில் அடங்கும்.  மேலும்,

 • சிலைகளாய் (எல்லா கோவில்களிலும்)
 • வன ரூபமாய், காடாய் (நைமிசாரண்யம்)
 • நீர் ரூபமாய் (புஷ்கரம்)
 • சித்திரங்களில்  (கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடிய நம் சடகோபனை பாடினையோ என்று கம்பரிடம் கேட்ட, ஸ்ரீரங்கம் மேட்டு அழகிய சிங்கர் போன்றவை )
 • நம் வீடுகளில் (சாளக்கிராமம் மற்றும் படங்கள்)

சிறப்புகள்

அர்ச்சையின் சிறப்புகள் சில :

 • பரமாத்மாவின் எளிமைக்கு சிறந்த நிலை அர்ச்சை ஆகும்.  கோவில்களில் உள்ள சிலைகளுக்காவது சில நியமங்கள் உண்டு ஆனால் வீடுகளில் வந்து நம்மோடு துணை இருக்கும் சாளக்கிராமங்களில் தன்னை இன்னும் தாழ்த்திக்கொண்டு நியமங்களை குறைத்துக்கொள்ளுகிறான்.
 • மற்ற எல்லா நிலைகளிலும் நாம் பகவானை பார்க்க முடியாது, அர்ச்சை ஒன்றில் மட்டும் தான் நாம் பகவானை தரிசிக்க முடியும்
  • பரவாசுதேவன் நித்யசூரிகளுக்கே சேவை சாதிக்கிறார்
  • வியூக வாசுதேவன், தேவாதி தேவர்களுக்கு காட்சி அளிக்கும் இடம்
  • திருமழிசை ஆழ்வார் தவிர வேறு யாரும் அந்தர்யாமியை தரிசித்ததாக சரித்திரம் இல்லை (“நின்றதும்,இருந்ததும், கிடந்ததும் என் நெஞ்சுளே“).
  • விபவ வாசுதேவனான, ராம, கிருஷ்ண, நரசிம்ஹ, வாமன, திருவிக்கிரம அவதாரங்கள் ஒரு குறிப்பிட்ட சில காலங்களுக்கே.  அந்த அந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் மட்டுமே பகவானை தர்சிக்க முடிந்தது
  • ராமர் வாழ்ந்து இந்த நாட்டை ஆண்டது சுமார் 11000 ஆண்டுகளாம். கிருஷ்ணர் இந்த பூமியில் அவதரித்து கடாச்ஷித்தது சுமார் 100 முதல் 120 ஆண்டுகள் வரை. நரசிம்ஹ அவதராம் சில மணித்துளிகளே (ஒன்றரை முஹுர்த்த நேரமே – 72 நிமிடம்).   வாமன அவதாரமும் மகாபலி சக்ரவர்த்திக்கு மோட்சம் அளிப்பது வரையில் தான். ஆக எல்லா அவதாரங்களுமே ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள்தான். ஆனால் அர்ச்சை ஆண்டாண்டு காலமாக, இங்கேயே இருந்து, நாம் எப்போது சென்றாலும், நான் இருக்கிறேன் என்று நமக்கு தைரியம் கொடுப்பது அர்ச்சை தான்.
  • மற்ற எல்லா அவதாரங்களின் காலத்தில் நாம் வாழவில்லை.  ஆகவே நமக்கு உள்ள ஒரே பாதுகாப்பு அர்ச்சைதான்.  அதைதான் ஆழ்வார்களும் ‘பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்‘ என்று பாடி மற்று எல்லா அர்ச்சை க்ஷேத்திரங்களையும் குறிக்கும் வகையில் திருமூழிக்களத்தை உதாரணமாக சொன்னார்கள்.
 • எவ்வாறு நடந்தனையோ எம்  இராமாவோ (பெருமாள் திருமொழி 9.2), என்று தானாகவே எழுந்து நடந்து செல்லக்கூடிய அவதாரம் போல் அன்று அர்ச்சை.
 • மற்ற எல்லா நிலைகளிலும் பெருமாள் தன் இச்சைப்படி நடந்துகொள்வார்.   அவரால் முடிந்தாலும், அர்ச்சகர்கள் சொற்படி மட்டுமே தன்னை மாற்றிக்கொள்ளும் அவதாரம் அர்ச்சை  (அர்ச்சக பராதினகா)
 • இராம, கிருஷ்ண அவதாரங்கள், பெரும்பாலாக மக்களை கைப்பற்றினாலும் அவ்வபோது பாவிகளுக்கு தண்டனயும் கொடுத்து விடும்.  ராவண, சிசுபால, ஹிரண்யகசிபு ஆகியவர்களை கொன்று தண்டனை கொடுத்தது போல் என்றும் திருவேங்கடமுடயானோ, ரங்கநாதனோ அர்ச்சையை விட்டு எழுந்து யாருக்கும் தண்டனை கொடுத்தது இல்லை.
 • அர்ச்சை என்பது பெருமாளின் ஒரு நிலை.   அந்த நிலையில் அவர் உள்ள இடம் க்ஷேத்திரங்கள் ஆகும்.  க்ஷேத்திரங்கள் உருவாகி பெருமாளுக்காக காத்துகொண்டு இருகின்றன.  ஆழ்வார்கள், பெருமாளை பாடியதோடு அல்லாமல் அந்த க்ஷேத்திரங்களையும் பாடி இருக்கிறார்கள். க்ஷேத்திரங்களுக்கே தனி பெருமை, அவைகளை சென்று அடைந்தாலே பலன் என்றும் கூறுவார்கள்.  (பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ, நம் வினை ஓயுமே).
 • ஆழ்வார்கள் பாடிய ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள் (108) ஆகும், மற்றவை ஸ்தலங்கள் அல்லது க்ஷேத்திரங்கள்.
 • அர்ச்சைதான்  நாம் சரணாகதி செய்வதற்கு இருக்கும் ஒரே வழி ஏன் என்றால் மற்ற நிலைகளை நாம் தரிசிக்க முடியாது. இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் நம் பெருமாள் முன்னே சரணாகதி கேட்டார்.
 • அர்ச்சை என்பது இப்போது நம் காலத்தில் உருவானது இல்லை.   ஆழ்வார்கள் ஆச்சார்யார்கள் காலத்தைத் தாண்டி புராண காலத்திலும் அர்ச்சை உண்டு.  பீஷ்மர் சொன்ன மகாபாரதத்தில் உள்ள விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அர்ச்சை பற்றி சுமார் 40 நாமங்கள் கொண்ட தொகுப்பு  உள்ளது.

பிரிவுகள்

கீழே கொடுக்கப்பட்ட க்ஷேத்திரங்கள் யாவும் உதாரணங்களே, முழு பட்டியல் அல்ல, அவை எந்த ஒரு வரிசையிலும் சொல்லப்படவில்லை.  இவை நாம் படிப்பதற்கும் ரசிப்பதற்குமே.

 • தோற்றப் பாங்கு – (“புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து, வைகுந்ததுள் நின்று” என்று நம்மாழ்வார் பாடியபடி அல்லது “நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெ கணை கிடந்தது ” என்று திருமழிசை ஆழ்வார் பாடியபடி )
  • நின்றான் – 60 (திருப்பதி, திருமாலிரும்சோலை)
  • நடந்தான் – 3 (திருக்கோவிலூர், சீர்காழி – காழிசீராம விண்ணகரம், உலகளந்தபெருமாள்)
  • கிடந்தான் – 24  (ஸ்ரீரங்கம், திரு இந்தளூர்)
  • இருந்தான் – 20  (திருவரகுணமங்கை – நத்தம், பரமேச்சுர விண்ணகரம்)
  • எங்கும் நிறைந்து இருப்பது- 1  (நைமிசாரண்யம்)
 • திவ்ய தேசங்களில் திருமுக திசைகள் 
  • கிழக்கு நோக்கிய திருமுகம் – 78 (தில்லைநகர் திருச்சித்ரகூடம், கூடலழகர்)
  • மேற்கு நோக்கிய திருமுகம்- 19  (திருநகரி, திருக்கச்சி/அத்திகிரி, முக்திநாத்)
  • வடக்கு நோக்கிய திருமுகம் – 3 (அயோத்தியா, உறையூர் ) 
  • தெற்கு நோக்கிய திருமுகம்  – 7 (ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருமெய்யம் )
  • எங்கும் நிறைந்து இருப்பது – 1 (நைமிசாரண்யம் )
 • திவ்யதேசங்கள் (108) உள்ள இடங்கள் 
  • சோழ நாடு -40
  • பாண்டிய நாடு – 20
  • தொண்டை நாடு – 22
  • மலை நாட்டு – 11 (மலையாள திவ்ய தேசங்கள்)
  • நடுநாடு – 2
  • வட நாடு – 11
  • விண்ணுலகம் – 2
 • விபவத்தின் உருவாய் 
  • கிருஷ்ண க்ஷேத்திரங்கள் (திருகண்ணன்குடி, திருகண்ணமங்கை, திருகண்ணபுரம், கபிஸ்தலம், திருகோவிலூர், துவரகா , மதுரா) (முதல் ஐந்தும் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் எனப்படும்)
  • நரசிம்ஹ க்ஷேத்திரங்கள் (அஹோபிலம், சோளிங்கர், காட்டு அழகியசிங்கர், பூவரசன்குப்பம், திருக்குறையலூர், ரேணிகுண்டா அருகில் மங்களகிரி)
  • இராம க்ஷேத்திரங்கள் (அயோத்யாவில் தசரதராமானாக, திருப்புட்குழியில் விஜயராகவனாக, திருப்புல்லாணியில் பட்டாபிராமானாக, திருவெள்ளியன்குடியில் கோலவில்லி இராமனாக, வடுவூரில் சக்ரவர்த்தி திருமகனாக, குடந்தையில் இராஜாராமனாக, தில்லைவிளாகத்தில் வீர கோதண்டராமனாக , மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமனாக)
  • வராக க்ஷேத்திரங்கள் (ஆழ்வார் திருநகரியில் ஆதிபிரானாக, இடது தொடையில் பூமாதேவியை கொண்ட திருஇடவெந்தை, வலது தொடையில் பூமாதேவியை கொண்ட திருவலவெந்தை அல்லது திருகடல்மல்லை, பூவராகவனாக ஸ்ரீமுஷ்ணம்)
  • ஸ்ரீகாகுளம் அருகே கூர்ம அவதாரத்திற்காக ஸ்ரீ கூர்மம் என்ற ஊரில்
  • திருவிக்கிரம க்ஷேத்ரங்கள் (திருகோவிலூர், காழிசீராம விண்ணகரம், காஞ்சி உலகளந்த பெருமாள்)
 • கோவில் கட்டமைப்பில்
  • கடற்கரை கோவில்களில் (பூரி ஜகந்நாதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மகாபலிபுரம் ஸ்தலசயன பெருமாள், திருநாகை சௌந்தரராஜ பெருமாள், திருப்புல்லாணி ஆதிஜகன்நாதன், வர்கலா ஜனார்த்தன பெருமாள், துவராகா ஸ்ரீ கிருஷ்ணர்)
  • மலையில் உள்ள  கோவில்களில் (பத்ரிநாத், முக்திநாத், ஜோஷிமட் எனப்படும் திருபிரிதி, கண்டம் என்னும் கடிநகர் எனப்படும் தேவப்பிரயாகை, அஹோபிலம், திருமலை, சோளிங்கர், திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி)
  • படி ஏறும் கோவில்களில் (காஞ்சிபுரம் தேவப்பெருமாள், திருநறையூர் ஸ்ரீனிவாசன், திருவெள்ளறை புண்டரிகாட்சன், திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள், மதுரை கூடலழகர், மலைநாட்டு திவ்ய தேசமான குட்டநாடு எனப்படும் திருப்புலியூர் மாயப்பிரான்  மற்றும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் )
 • அபிமான க்ஷேத்திரங்களில்
  • திவ்ய தேசம் இல்லாத மற்ற சிறப்பு கோவில்கள் (மேல்கோட், காட்டு மன்னார் கோயில், வடுவூர், மன்னார்குடி)
  • ஆழ்வார் அவதரித்த ஸ்தலங்களில்  (தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருமண்டங்குடி, திருமழிசை, குலசேகர் ஆழ்வாரின் திருவஞ்சிகளம்)
  • ஆசார்யர் அவதரித்த ஸ்தலங்களில் (ஸ்ரீ பெரும்புதூர், கூரத்தாழ்வான் அவதரித்த காஞ்சிக்கு அருகில் உள்ள கூரம், எம்பார் அவதரித்த மதுரமங்கலம்)
  • பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் (ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதன், திருவரங்கம் ரங்கநாதன், கோவிலடி அல்லது திருப்பேர்நகர் அப்பகுடத்தான் அல்லது அப்பாலரங்கன், குடந்தை சாரங்கபாணி, திரு இந்தளூர் பரிமளரங்கன் )
 • உருவாகிய பொருள்
  • தங்கம், வெள்ளி மற்றும் பிற உலோகங்கள்
  • பஞ்சலோகம் அல்லது உலோக கலவைகளில்
  • பாறை மற்றும் கல்சிலைகள்
  • மரம் (காஞ்சிபுரத்தில் அத்திவரதர், மாயவரம் அருகில் கோழிக்குத்தி என்ற ஊரில் உள்ள வானமுட்டி பெருமாள், உடுப்பி கிருஷ்ணன்)
  • சாளகிரமத்தால் (12000 சாளக்கிராமத்தினாலும் “கடுசர்க்கரா” என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது “அனந்தசயன மூர்த்தி” திருவனந்தபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது) (திருவட்டாறு, கடுசர்க்கர கலைவயால், 16008 சாளக்கிராமங்களை கொண்டது )
 • ஆழ்வார்களுக்கு காட்டிய குணாதிசயங்களால்
  • ஸ்ரீரங்கம் – வியூக சௌகார்த்தம் –  கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரமே – (சௌகார்த்தம் = எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தல்)
  • திருப்பதி – வாத்சல்யம் – தாயை போல் அன்பு காட்டும் தன்மை
  • வானமாமலை – ஔதார்யம்: கைமாறு கருதாது வேண்டியவை எல்லாம் தருவது.
  • ஆழ்வார் திருநகரி – பரத்துவம்
  • திருக்குறுங்குடி  – லாவண்யம் – மொத்த அழகு
  • நாகைபட்டினம் – சௌந்தர்யம் – அவயம் அவயமாக அழகு
  • கும்பகோணம் – மாதுர்யம் –  தன்னை கொல்ல வருபவனிடம் கூட அன்பாக,இனியனாக இருப்பது.
  • திருகாட்கரை – ஸௌசீல்யம் : பெரியவர், தாழ்ந்தவர்களிடம் அன்புடன் பேதமில்லாமல் கலப்பது
  • திருவனந்தபுரம் – ஸாம்யம்: ஜாதிகுண விஷயத்தில் ஏற்ற தாழ்வு பாராட்டாமல் எல்லோருக்கும்
 • வேறு பிரிவுகள் 
  • பித்ரு காரியங்கள் செய்ய வேண்டிய ஸ்தலங்கள் (கயா, பத்ரிநாத், நாவாய், வர்க்கலா, புஷ்கரம்)
  • ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் எட்டு – தானாகவே தோன்றிய க்ஷேத்திரங்கள் (வானமாமலை, ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, புஷ்கரம், நைமிசாரண்யம், சாளக்ராமம் மற்றும் பத்ரிகாச்ரமம்)
  • முக்தி தரும் க்ஷேத்திரங்கள் ஏழு ( அயோத்தி, மதுரா, மாயா எனப்படும் பூரி, அவந்திகா என்னும் உஜ்ஜைனி, காஞ்சி,துவாரகை, காசி)

ஏன் இந்த பிரிவுகள்

மக்களாகிய நமக்கு ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொன்று பிடிக்கின்றது.  நேரத்திற்கு தகுந்தார் போல் நம் சுவைகள் மாறுபடுகின்றன.  அதே போல் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு அவ்வளவாக பிடிக்குமா என்று தெரியாது.  இப்படி ஒவ்வொரு நேரத்திற்கும் மாறிக்கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்களுக்கு, எப்படியாவது தன் அழகையும், வீர தீர பராக்கிராமங்களையும் காட்டி தன்பக்கம் இழுக்கும் பரமாத்மாவின் நோக்கமே, இப்படி பற்பல ஊர்களில், பற்பல தோற்றங்களில், பற்பல விழாக்களில் அர்ச்சையாக காட்சி தருவதற்கு காரணம்.

ஏதாவது ஒரு வகையில் ஜீவாத்மாக்களுக்கு ருசி பிறப்பிக்க வேண்டும் அல்லது பிறந்த ருசியை வளர்க்க வேண்டும் என்பதே இதன் மற்றொரு முக்கிய காரணம்.

தனது ஊரில் பெருமாள் இல்லை, அதனால் தனக்கு முக்தி கிட்டாது என்று ஒரு ஜீவாத்மாவும் பயந்து விடக்கூடாது என்று பெருமாள் நினைப்பதால் அவர் எங்கும் அர்ச்சையில் காட்சி தருகிறார்.

பகவத் அபசாரம்

இப்படி எத்தனை பிரிவுகள் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும், எந்த இடத்தில இருந்தாலும், எந்த பொருளில் உருவானதாக இருந்தாலும் பரமாத்மாவான பெருமாள் ஒன்றே, ஆகவே எல்லோரும் சமம். தங்கத்தினால் செய்த பெருமாளும் சித்திரத்தில் வரைந்த பெருமாளும் ஒன்றாகும். இதில் தவறாக நாம் உயர்வு தாழ்வு பார்த்தால், அது பெரிய அபசாரமாகும். அதை நம் முன்னோர்கள் பகவத் அபசாரம் (நான்கு முக்கிய அபசாரங்களில் ஒன்று) என்று கூறுவார்கள், ஆகவே பெருமாள் அர்ச்சையில் நமக்காகவே  வந்து இருப்பதால், நாம் கவனமாக இருக்கவேண்டும்.

பேசியது உண்டோ ?

அர்ச்சையில், ஒரு சில நேரங்களில் ஒரு சிலரோடு மட்டும் பெருமாள் பேசி உள்ளார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

இவை என்ன என்பதை பின்பு மற்றொரு வலை பதிவில் காணலாம்.

================================================================

Fifth State

Our acharyaars have compared the five states of Paramathma to five different water sources, namely,

 • Parathvam – ambient water, the water over the galaxy
 • Vyuham – Thirupaarkadal the milky ocean
 • Vibhavam – Incarnations – wild seasonal floods
 • Archai – Divyadesangal or Holy temples – the ponds, where the water was filled by the wild floods
 • Antharyaami – Fountain water coming from underneath – the river Saraswathi, Antharvaagini

These five states are also called as follows with a slight variation for easier understanding :

 • Parthvam is like amibent water
 • Vyuham is like sea water
 • Vibhavam is like seasonal floods
 • Antharyaami is like the groundwater fountain and
 • Archai is like well water

Parathvam, is like ambient water, that is not accessible to us, who are in this world and thirsty. The sea is near, but we can not use the sea water for drinking purpose as it is. The Vyuha Moorthy in Thirupaarkadal, like sea water, and we are unable to have His dharsan from here. Vibhava Moorthis are like seasonal floods and the incarnations happened at some time back. Antharyaami is like groundwater and only experts can assess the avaiability of the water and a common man like us cannot understand and pray to Him.. Archai is like well water.

When a well is dug, there is no difficulty to draw and drink a pot of water from it. In the same way, if a temple is constructed and Consecrated, nearby our house, there should not be any difficulty in offering our prayers to Him. In Archai, Emperuman is very close and nearby to us.

After Para, Vyuha, Vibhava and Antharyaami, the fifth state is called Archai.  We are living in Kali Yugam.  The good things and kindness are getting reduced day by day. The ruler of Kaliyugam, namely, Kali Purshan, gives enormous amount of trouble to all of us and Paramathma has taken the Archai State to protect all of us.

As said earlier, Paramathma is same in all respects and equal in all the five states.

What is Archai ?

Since we could not have dharsan of Para, Viyuha and Vibha states, Archai represents those states to us.  All the statues and the pictures available at all the temples and in our homes constitute Archai.   In addition,

 • all statues in the temples
 • As forest, in a place called Namisaranyam, in the north eastern part of India.
 • As water, in a place called Pushkaram, in the north western part of India.
 • In all pictures. For example, Mettu Azhagiya Singar, who asked Kambar, whether he has written anything about Sri Namazhwaar, who had so much respect and devotion for Sri Rama, is in the form of a drawing on the wall, when Kambar launched Kamba Ramaayanam in Srirangam Temple.  Please recall “karpar rama piranai allal matrum karparo, endru  paadina Nam Sadagopanai (Namazhwaar) paadinaayo?”.
 • All pictures and Sallagramams in our houses

Glories of Archai

Some of the glories of Archai below :

 • Among the five states, Archai is the best state to represent His Simpleness.   Even among all Archais, there are at least some rules, norms and procedures set for the statues at the temple, but He lowers Himself further for those statues, Salagramams and pictures at our home and further minimises or reduces the rules and regulations.
 • We can not see the Paramathma or Perumal or God in all other four states, but we can have dharsan or see him only when He is in Archai state.
  • Paravasudevan, Paramatha in Vaikundham, provides His dharsan only for the Nithysoories, like Ananthan, the snake who serves primarily as His bed, Gaurdan, the bird that serves Him as the vehicle, Vishvaksena, the General who serves to carry out all His orders.
  • Viyuha Vasudevan, Paramathma on the Holy Sea, Thirupaarkadal, provides his Dharsan only for the the good and bad  (Devas and Asuras) from the Celestial world.
  • There is no record of having seen the Antharyami by anyone other than Sri Thirumazhisai Azhwaar.  (“Ninrathum, Irunthathum, Kidanthathum en nenjulle “)
  • All the incarnations (Avathaarms), like Rama, Krishna, Narasimha, Vamana, Thiruvikrama, had existed only for a specific amount of time and the people who lived during that time alone had the fortune of having the dharsan of those incarnations respectively.
  • Sri Rama ruled this country for about 11,000 years   Sri Krishna’s incarnation was for about 100 to 120 years.   Sri Narasimha had taken the incarnation and completed the purpose of his incarnation in about 72 minutes.   Vamana Avatharam completed His mission till He gave Mukthi to Sri Mahabali Chakravarthy.   From the above, we can understand that each incarnation was for a fixed time, whereas Archai exits for years.   Whenever we go and pray Archai in any form, in any temple or house, He, in Archai form, alone gives us the confidence that He is available along with us in this world to support us.
  • We did not live during the Vibhava incarnations.   Now our only hope is Archai. Azhwaar had also highlighted the same in one of his hymns “Pinnanar vanangum sothi Thirumoozhikkalathaanaai“, meaning that the Deity in Thirumoozhikalam would be for those who live, after the vibhava avatharams or incarnations. Thirumoozhikalam is only an example and it represents all other deities in other temples and other Archais.
 • Archai can not walk or move by itself like the Vibhava Incarnations as what is told by Azhwaar “evvaaru nadanthaniyo em Ramaavo” (Perumal Thirumozhi 9.2)
 • In all other states, Paramathma or Perumal will act according to His desire.   However in Archai, even though it is possible for Him, what He does depends on what the priest carries out.  (archaka paraathinagaa)
 • Whenever Paramathma takes an incarnation, He protects all, except the bad ones, for whom He hands over the punishment.   For example, Ravanaa, Sisupala, Hiranyakasipu got the punishment from Rama, Krishna and Narasimha respectively, and they got killed.  However the deities in Archai, like Sri Ranaganathar or Sri Venkatamudaiyan, never came out of their Archai state and gave any punishment to anyone.
 • Archai is one of the states of Paramathmaa, or perumal.   The places where Archai reside is called Kshetras.    Kshetras had existed even before the Perumal arrived in those places.   In other words, Kshetras wait for Paramathma to reach their places.   Azhwaars have created hymns not only about the Deity in the Kshetra, but also about the Kshetra itself.   In some cases, the places have their own glories, and the Jeevathmaas get the benefits even if they just reach the kshetras.   For example, “Paran Sendru Ser Thiru Venkatada MaMalai ondrume thozha nam vinai oyume“, meaning that “if we reach and pray the mountain of Thiruvenkadam, all our sins will vanish”.
 • When the Azhwaars have created Hymns about the Kshetras or about the Deity in the Kshetras, they are called Divya Desams, all other Kshetras are just called as Kshetras.
 • Archai is the only way we can surrender, because other four states of Embermaan or Paramatha is not reachable to us in this life. Ramanuja prayed for total surrender in front of Namperumal in Srirangam and he got His acceptance, as per Saranagathi Katyam.
 • Archai is not something that has evolved in our time. Archai had existed beyond the time of Azhwaars and Acharyas even in Puranic times. The Vishnu Sahasranama in the Mahabharata by Bhishma contains a collection of about 40 names about the archai.

Divisions

Given below are some of the examples of Kshetras.  They do not represent a complete list.   Also please note that they are not given in any specific sequence.   These are only for our own interests and reading pleasure.

 • Posture – (Like what is quoted by Sri Namazhwaar in “Pulingudi kidanthu, Varagunamangai irunthu, Vaikunthathul nindru“, meaning, the sleeping posture of Pulingudi, the sitting posture of Varagunamangai and the standing posture of Vaikuntham, all these three places are part of Divya Desams in Tirunelveli District; or as given by Thirumazhisai Azhwaar in “nindrathu entha Ooragaththu, irunthathu entha Paadagaththu, andru Vekkanai kidanthathu” standing posture of Ooragam, sitting posture of Padagam and Sleeping posture of Vekka, all these places are part of Divya desams in and around Kancheepuram)
  • Standing Posture –  60  (Thirupathi, Thirumalrincholai or Madurai Azhagar Koil)
  • Walking Posture  – 3 (Thirukovilur, Sirkazhi or Kazhicheerama Vinnagaram and Kancheepuram Ulagalantha Perumal)
  • Reclining Posture – 24 (Srirangam, Mayavaram – Thiruindalur)
  • Sitting Posture -20  (Thiruvaragunamangai or Natham, Paramechura  Vinnagarm)
  • Existing everywhere – 1 (Naimisaranyam)
 • Perumal facing directions in Divya Desams
  • East Facing – 78 (Examples – Thillainagar Thiruchitrakoodam, (Chidambaram), Koodalazhagar (Madurai)
  • West Facing – 19 (Thirunagari, Thirukachi/Athigiri, Mukthinath)
  • North Facing – 3 (Uraiyur near Tiruchi, Ayodhya)
  • South Facing – 7 (Srirangam, Thirumeyyam)
  • Facing all directions – 1 (Naimisaranyam)
 • Divya Desam (108)  Locations 
  • Chola Nadu (in and around Thanjavur) – 40
  • Pandiya Nadu (in and around Madurai) – 20
  • Thondai Nadu (In and around Kancheepuram) – 22
  • Malai Nadu (In and around Kerala) – 11
  • Nadu Nadu (In and around Centre of Tamil Nadu) – 2
  • Vada Nadu – (In and around North India)- 11
  • Vinnulagam – (In celestial world) – 2
 • Incarnations in Archai form
  • Krishna (Thirukannangudi, Thirukannapuram, Thirukannamangai, Thirukovilur, Thirukavithalam, Dwaraka and Madura in Northern India – the first five in the list together is called Pancha Krishna Kshetram)
  • Narasimha Kshetrams – (Ahobilam, Sholingar, Kattu Azhagiya Singar, Poovarsankuppam, Thirukuraiyaloor, Managalagiri near Renigunta)
  • Rama (Dasaratha Raman in Ayodya, Vijayaraghavan in Thiruputkuzhi, Pattabiraman in Thirupullani, Kolavilliraman in Thiruvelliangudi, Chakravarthy Thirumagan in Vaduvoor, Veera Kodathandaraman in Thillaivillagam, Eeri Katha Raman in Maduranthagam)
  • Varaagha (Aathipiran in Alwarthirunagari, Bhumadevi on the left thigh in Thiruidaventhai, Bhumadevi on the right  thigh in Thirukadalmallai or Thiruvalaventhai, Bhuvaraaghavan in Srimushnam)
  • Koorma representation in a place called Sri Koormam near Srikakulam in Andra Pradesh
  • Thiruvikarama representation in Thirukovilur, Kancheepuram Ulagalantha Perumal and Sirkazhi)
 • By Temple Structure
  • Sea Shore Temples – (Puri Jagannathan, Thiruvellikeni Parthasarathy, Mahaballipuram Sthalasayanapperumal, Nagapattinam Soundararaja Perumal, Thirupullani Adhi Jagannatha Perumal, Varkala Jagannatha Perumal and Dwaraka Sri Krishnar)
  • Temples on the Hill – Badrinath, Mukithinath, KandamEnumKadiNagar (Devaprayagai), Thirupirithi (Joshimatt), Ahobilam, Thirumalai, Sholingar, Thirumaliruncholai, Thirukurungudi Nambi)
  • Temples on Multi Storey – Kancheepuram Devapperumaal, Thirunaraiyur Srinivasan, Thiruvellari Pundarikakshan, Thirukoshityur Sowmiya Narayana Perumal, Madurai Koodalazhagar, Thirupuliyur or Kuttanadu Mayappiran and Thiruvattaru Adi Kesavan in Kerala)
 • Adorable Places
  • All special deities in temples which are not Divya Desams (Melkote, Kattu Mannar Koil, Vaduvoor, Mannargudi)
  • Birthplaces of Azhwaars (Thirumandangudi of Thondaradipodi Azhwaar, Thirumazhisai, Thiruvanchikalam of Kulasekara Azhwaar)
  • Birthplaces of Acharyars (Sriperumpudur – Swami Ramanujar, Kooram – Koorthazhwar, which is near Kancheepuram, Mathuramangalam – Embaar)
  • Five Important  Ranganathan temples (Srirangapattinam, Srirangam, Koviladi or Thirupernagar Appakkudathaan or Appala Rangan, Kudanthai Sarangapani and Thiruindalur Parimalarangan)
 • Made up of 
  • Gold, Silver and other metals
  • A special alloy consisting of five metals (gold, silver,  Brass, Copper and Lead) used for making statues or other alloys
  • Granite or other Stones
  • Wood (Athivaradhar in Kancheepuram, Vaanamuttiperumal in Kozhikutthi, which is near Mayavaram, Uduppi Krishnan)
  • Sallagramam (Thiruvananthapuram Padmanabhaswami was constructed using 12000 salagramams and an Ashtabanthana paste;  Adi Kesava Perumal in Thiruvattaru is also made up of 16008 salagramams and Ashtabanthana paste)
 • By the Glories shown to Azhwaars
  • Srirangam – Viyuha Sowgartham – meaning that He who helps all the time and generation after generation
  • Thirupathi – Vasthalyam – Motherly Affection
  • Vaanamaamalai – Outharyam – Giving away everything without expecting anything in return
  • Azhwaarthirunagari – Parathvam –  Extreme Superiority
  • Thirukurungudi – Lavanyam – Extraordinary total beauty or complete handsomeness
  • Nagaipattinam – Sowndharyam – Beauty in each and every part
  • Kumbakonam – Mathuryam – Showing kindness and affection to even those who come to kill Him
  • Thirukatkarai – Sowseelyam – collaborating with people without considering the differences among the superior and inferior
  • Thiruvananthapuram – Saamyam – Showing Equality without looking into caste or colour
 • Other Groups
  • Places where rituals or rites to be done for our forefathers – Gaya, Badrinath, Navaai, Varkala, Pushkaram
  • Swayam Vyaktha Kshetrams – Eight – Those places, temples and deities that came into existence on its own – Vaanamaamalai, Srirangam, Srimushnam, Thirupathi, Pushkaram, Naimisaranyam, Salagramam and Badrinath)
  • Mukthi tharum Kshetrams – The places which can give the eternal world – Seven – (Ayodhya, Mathura, Maaya or Puri, Ujjaini or Avanthikaa, Kancheepuram, Dwaraka and Kasi)

Why these Divisions

We may need to understand why there are so many perspectives and views on the deities and places for these Archai.

We like different things at different times. Our taste changes with time.  In the same way, what is liked by one person, may  or may not be liked by others and the extent to which we like or dislike may also differ from people to people.   Ultimately Paramatha wants to make sure that all Jeevathmaas reach him in one way or other.  So He takes different shapes, appears in different places, displays His Beauty and Handsomeness in different ways at different times to attract as many Jeevathmaas as possible.   As said earlier, this is one of the reasons for Him to be in Archai state.

His intention is to create some interest about Him, somewhere in all Jeevathmaas or if the interest is already there, He tries to improve or increase the same  by resorting to these very many different appearances.

In the same way, Paramathama appears in Archai form in every place, because He does not want even one Jeevathmaa to feel that since there is no deity or Paramathma in his or her town or village, he or she would not get the opportunity to reach paramapatham or eternal world.

Disrespect to Paramathmaa

Even though there are multiple ways in which we can see the Paramathma in Archai, we should never forget that all are Equal, whether they are present in Temple or at Home, whether they are made up of Gold or drawn in paper.   If we start seeing the differences and start considering the superior and inferior versions of Perumal, then we have not learnt or understood the kindness of Paramathmaa.  It is He who has come down on all these shapes and sizes to give us the comfort and confidence, we should be careful to treat them on par.  If we dont, then we end up doing what is called, “Baghawath Apacharam”, meaning that it is Disrespect to Paramathma, one of the four major possible apacharams or Disrespects.

Can Archai Talk ?

In the state of Archai, Paramathma has spoken to a few people a few times, as per the historical notes.

We will see these interesting details on another weblog.

With Nathamunigal/நாதமுநிகளுடன்

For English version, please click here, thanks.

நாதமுனிகள்

ஓராண் வழி ஆசார்யர்களில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஆசார்யன் நாதமுனிகள் ஆவார். ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் காட்டுமன்னர்கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாதமுனிகள் ஆவார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி என்ற திருநாமமும் உண்டு.

கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் காலத்திற்கு பிறகு சுமார் 300 அல்லது 400 வருடங்கள் ஆன பிறகு, ஆழ்வார்கள் பாடல்கள்  மெதுவாக வழக்கில் இருந்து விலகி அவை பலருக்கும் தெரியாமலே போனது. அதுதான் நாதமுனிகள் காலம்.

ஆராவமுதே

ஒரு நாள் நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலில் எம்பெருமான் மன்னாரை சேவித்துக் கொண்டு இருக்கும் போது மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் இருந்து வந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள், திருவாய்மொழியில் (5.8) உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். அந்த பாசுரத்தின் இனிமையில் முழ்கிய நாதமுனிகள் அந்த பாசுரங்களின் அர்த்தத்தை அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம் கேட்க, அவர்கள் அந்த 11 பாசுரத்தை தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டனர். அந்த பாடல்களை திரும்ப திரும்ப சேவித்த நாதமுனிகள்,  “கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன், குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற வரிகளை மனதில் கொண்ட போது, இதனை பாடியவர் சடகோபன் என்றும், அவர் குருகூர் என்ற ஊரில் இருந்தார் என்றும், இந்த பாடல் அவர் பாடிய ஆயிரம் பாடல்களில் ஒன்று என்றும் தெரிந்து கொண்டு அந்த ஆயிரம் பாடல்களையும்  பெற வழி என்ன என்று ஆராய ஆரம்பித்தார்.

கண்ணி நுண் சிறு தாம்பு

குருகூர் என்பது திருக்குருகூர் என்றும் திருக்குருகூருக்கு சென்றால் இந்த பாசுரங்களை பற்றி ஏதெனும் தெரிந்துகொள்ளலாம் என்றும்   நாதமுனிகள் தீர்மானம் செய்து கொண்டு, அந்த ஊர் பெருமாளான மன்னனாரிடம் அனுமதி பெற்று ஆழ்வார்திருநகரி எனப்படும் திருகுருகூர் சென்றார்.  அந்த ஊரில் சடகோபரைப் பற்றி விசாரித்த போது, தகவல் அதிகம் பெற முடியவில்லை.   தனது முயற்சியில் சிறிதும் தளராத நாதமுனிகள் மேலும் விசாரித்த போது, சடகோபரின் சிஷ்யரான மதுரகவிகள் பற்றியும் அவர் எழுதிய கண்ணிநுண்சிறுத்தாம்பு பற்றியும் அறிந்தார்.   மதுரகவி ஆழ்வார் வழி வந்தவரான பராங்குச தாசரை சந்தித்தபோது, அவர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம் முன்பு அனுசந்திக்க சொன்னார்.  நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே  நம்மாழ்வாரை மனதில் நிறுத்தி, கண்ணிநுண்சிறுத்தாம்பை 12,000 முறை  சொல்லி  முடித்தார்.

ஓராயிரத்தில் இருந்து நாலாயிரம்

நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு முன் தோன்றிய போது, நாதமுனிகள் ஆழ்வாரின் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களையும் கேட்க,  நம்மாழ்வார், தனக்கே உரித்தான கருணையின் வடிவால், திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களை மட்டுமின்றி, அதனுடைய சகல அர்த்த விஷேசங்களையும்  அருளினார். இதனால் மகிழ்சசி அடைந்த நாதமுனிகள், நம்மாழ்வாரை வணங்கி விடை பெற விழைந்தார்.

அப்போது நம்மாழ்வார், தான் எழுதிய மற்ற பாசுரங்களை பற்றிச்சொல்ல, நாதமுனிகள் அவைகளையும் வேண்டினார்.   நம்மாழ்வார், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, மற்றும் திருவிருத்தம் ஆகியவற்றையும் வழங்கினார்.    இவைகளையும் பெற்ற  நாதமுனிகள் மிகவும் மகிழ்சசி அடைந்து, தம் குருவான, நம்மாழ்வாரை வணங்கி இந்த பாசுரங்கள் சம்பந்தமாக தான் தெரிந்துகொள்ள வேண்டியது வேறு ஏதாவது  உள்ளதா என்று பணிவுடன் வினவினார்.

மறுபடியும் நம்மாழ்வார், தன்னை தவிர உள்ள மற்ற எல்லா ஆழ்வார்களும் பாடிய பாசுரங்களை நாதமுநிகளுக்கு சொல்ல, அவர் மிக மிக மகிழ்ந்து அவைகளையும் வேண்டினார்.   இப்படியாக எல்லாருடைய எல்லா பாசுரங்களையும் அவற்றின் விசேஷ அர்த்தங்களையும் நம்மாழ்வார், நாதமுநிகளுக்கு வழங்கினார்.    இதனால் நாதமுனிகள் எல்லை இல்லாத மகிழ்ச்சி அடைந்தார்.  தன் ஆச்சர்யாரான நம்மாழ்வாருக்கு தன்னால் முடிந்த வரையில் தன்னுடைய பக்தியையும் மரியாயாதைகளையும் சமர்ப்பித்தார்.   ஆழ்வாரும் எல்லா பிரபந்தங்களையும் பொறுப்பான, தமிழ் வேதத்தை மேலும் பரப்பக்கூடிய திறமை கொண்ட ஒரு சிஷ்யனிடம் தான் கொடுத்து உள்ளோம் என்ற மகிழ்ச்சியில் தனது ஆசிகளை நாதமுநிகளுக்கு வழங்கி மறைந்தார்.

நாதமுனிகளின் பங்கு

இப்பாடல்களை நாதமுனிகள் தொகுத்து நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வைணவ நூல் ஆக்கினார்.   3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவ்வாறு நாதமுனிகள் இசை அமைத்து மக்கள் மறக்காவண்ணம் இருக்க உதவிய திவ்ய பிரபந்தங்கள் இன்றும் உலகில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் பாடப்பட்டும் நடைமுறையிலும் இருந்து வருகிறது.

நாதமுனிகள் தொகுத்த இத்திவ்யப் பிரபந்தமே உலகின் அனைத்து மொழி பேசும் வைணவர்களுக்கும் ஆதாரமாகவும் தினப்படி வழிபாட்டிற்கும் விளங்குகிறது.

தனியன்கள் என்பவை ஒரு பாடல் தொகுப்பிற்கு முன்னோடி போல் ஆகும். அதாவது அந்த பாடல் தொகுப்பில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது, பாடியவரின் சீர்மைகள் என்ன என்பதை ஒரு பாடலாக தமிழிலோ அல்லது வடமொழியிலோ (சம்ஸ்கிருதம்) ஒரு முன்னுரையாக இருக்கும்.  நாதமுனிகள், பெரியாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் ஆகியோர் பாடல்களுக்கு தனியன்கள் பாடியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

நாலாயிரம் தந்தவர்கள்

இப்படியாக நமக்கு நாலாயிரமும் தந்தவர்கள் என்று கீழே சொன்ன யாரைச் சொன்னாலும் தகும்.

 • நம்மாழ்வார்
 • மற்ற ஆழ்வார்கள்
 • நாதமுனிகள்
 • குடந்தை ஆராவமுதப் பெருமாள்
 • காட்டு மன்னார் பெருமாள் (நாலாயிரத்தை காட்டிய மன்னார்) 

நமக்கு நாலாயிரமும் மறுபடி கிடைக்க உதவிசெய்த நாதமுனிகளுக்கு பல்லாண்டு பாடி, “நம் ஆழ்வார்” என ஆழ்வாருக்குப் பெயர் அருளிய ஸ்ரீ  ரங்கனுடன் நடந்த சில நிகழ்வுகளை அடுத்த பதிவினில் பார்க்கலாம்.

ஒரு சிறு விண்ணப்பம்.  வைகாசி விசாகம் அன்று தான் நம்மாழ்வார் அவதரித்த தினம்.   அந்த புனிதமான நாளில் நம்மாழ்வாரை மனதினால் நினைத்து, வாயினால் அவரின் சில பாசுரங்களைப் படித்து, கையினால் சில மலர்களை அவர் மீதோ அல்லது பெருமாளின் திருவடிகளிலோ தூவினால், நம்மாழ்வாரின் நல் ஆசிகள் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.

==========================================================================

Nathamunigal

Vaishnavism followed a model, what is called, Guru Parambarai.  In this model, they would have an Acharya or Guru, who would be the figure head for the followers.   Even though the Acharya would have many disciples, there would be one main disciple who would become the Guru or Acharya after the current Acharya.  In this process, they were trying to protect the religious practices, assets and resources and these were meticulously handed over from one generation to the next.   The Guru or Acharya made sure that the future Acharya or Guru would be a very capable person by himself and he would earn respect from the rest of the clan.  This is called as “Oraanvazhi Sampradhayam”, meaning that the responsibilities or heritage were handed over from one person to the next person.

In this sequence of Acharyas of Vaishnavites, Nathamunigal was the next Acharyar after Namazhwaar.   Nathamunigal was born in the Tamil month of Aani and in the star of Anusham in a place called Kattumannarkoil or Veera Narayanapuram.   He was also called as Sri Ranganatha Muni.

About 300 to 400 years after Thirumangai Azhwaar, the last of the azhwaars,  attained paramapadham, was the time, when the hymns of all azhwaars were slowly disappearing from usage and people started to forget the pasurams and in many places people were not even aware of azhwaars’ pasurams. That was the time of Sri Nathamunigal.

Aaraavamudhe

One day, when Nathamunigal was worshiping the God, Sri Manaar, in the Kaattu Manaar Koil, some vaishnavites from Melkote (Thiru Narayana Puram), were also praying by singing one set of hymns starting with “Aaravamudhe….”, which is in Thiruvaimozhi 5.8. Nathamunigal was so impressed with these 11 hymns, he asked the vaishnavites whether they know the  meaning of the songs or the source for these songs.   They politely said no and said they did not know anything more than these 11 hymns. Nathamunigal sang these hymns repeatedly and stopped at the last few lines, namely “kazhalgal avaye saranaaga konda kurugur Sadagopan, kuzhalil maliya chonna oraayirathul ippathum“.  He understood that these hymns were created by a person called Sadagopan, and he was from Kurugur and the set contained 1000 hymns.   Nathamuni’s mind started thinking about getting all these 1000 hymns and trying to find the ways of getting them.

Kanni Nun Siru Thambu

Nathamunigal found that there was a town called Thirukurugur in the southern part of Tamil Nadu, which  could have been termed as Kurugur in the hymn,  and he thought he would find more, if he goes there.   He sought blessings from Sri Mannar, the prime deity of Kattu Mannar Koil, and he started his journey towards Thirukurugur, which is same as Azhwaar Thirunagari.   After reaching Thirukurugur, he enquired about Sri Sadagopan, but he could not find more information.   But Nathamunigal did not give up, but after many attempts he found that there was a disciple called Madurakavi Azhwaar, who wrote a hymn called Kanni Nun Siru Thambu about Sri Namazhwaar.   After a few more attempts, Nathamunigal could find a disciple from the family of Madurakavi azhwaar, called Parankusa Daasar.  He suggested that if Nathamunigal could recite the hymns of Madurakavi Azhwaar, namely, Kanni Nun Siru Thambu, in front the Tamarind tree, where Sri Namazhwaar was residing for the major part of his life, then Nathamunigal may get a breakthrough.   Nathamunigal, who was an expert in Ashtonga Yogam, (a person who can do 8 different spiritual things simultaneously), immediately worshiped Namazhwaar and recited Kanni Nun Siru Thambu 12,000 tiimes.

One Thousand to Four Thousand

Namazhwaar appeared in front of Sri Nathamunigal.   Nathamunigal felt divinely or supremely favoured and requested Namazhwaar about the 1000 hymns that he heard when the vaishnavites from Melkote sang in front of the deity of Kattu Manaar Koil. Namazhwaar, owing to his kindness, not only taught him, the one thousand hymns of Thirvaaimozhi, but also explained the inner meanings of all the hymns or pasurams. Having received more than what he wanted, Nathamunigal was extremely happy, worshipped Namazhwaar again and was seeking his permission to go back.

Then, Namazhwaar informed Nathamunigal that there are three more collection of hymns wrote by him and whether Nathamunigal would be interested to learn them. Nathamunigal immediately pleaded his ignorance about not knowing them and requested Namazhwaar to educate him on those too.   Namazhwaar, as done previously, gave the hymns and their meanings of Thiruvaasiriyam, Peria Thiruvanthaathi and Thiruvirutham. Again, Nathamunigal was highly elated and worshipped Namazwaar.   He politely requested Namazhwaar about any other related things on these hymns that Nathamunigal needed to learn from his guru, namely, Namazhwaar.

Again, Namazhwaar, informed Nathamunigal that there are eleven other Azhwaars, in addition to himself, who wrote another 3000 more hymns on Sri Mahavishnu and on Vedas.   Nathamunigal requested Namazhwaar to teach him those hymns too.   As usual, Namazhwaar gave all the remaining pasurams or hymns of all other Azhwaars and their meanings to Nathamunigal.   Nathamunigal was delighted and offered all his prayers and worshiped Namazhwaar, his Acharya to whatever extent he could.  Namazhwaar was happy  that he handed over all the hymns to an able disciple who could further spread the Tamil Veda, blessed Nathamunigal and disappeared.

Nathamunigal’s Contribution

Nathamunigal, after getting all the hymns from Sri Namazhwaar, he grouped them and made them into a collection, called Naalayira Divya Prabandam, meaning, Four Thousand Holy Hymns on Vaishnavism.    Even though we call it as Four Thousand Hymns, actually there are only 3776 hymns and Nathamunigal grouped them into individual thousands or near about.   He grouped them in such a way that the three individual thousands could be composed and sung.   The remaining one thousand he made them as a separate volume.  In addition to the grouping and composing music to these hymns, Nathamunigal had also taken pains to teach them to two of his nephews, so that the these hymns were carried forward from generation to generation.    The names of the nephews were Melai Agathu Azhwaan and Keezhai Agathu Azhwaan.    His contribution was such that these hymns, tunes and composition are practiced even today in almost all Vishnu temples all over the world.

In addition, Divya Prabandam, compiled by Sri Nathamunigal is now the source and the material for day-to-day prayers for all vaishnavites in their homes, who speak different languages and who live in different parts of this world.

On those days, for every group of songs or hymns, they used to write an introductory song or hymn to briefly inform the audience what this group of songs is going to talk about and who has written these songs or hymns and what their capabilities or glories. These introductory hymns, called Thaniyans, could be in Tamil or in Sanskrit. It is told that Sri Nathamunigal has also composed such Thaniyans for group of hymns composed by Sri Periazhwaar and Madhurakavi Azhwaar.

Who gave us Divya Prabandam

After the above, we can understand that there are many, who had taken pains to ensure that we get the Naalayira Divya Prabandam (Four Thousand Holy Hymns).  Those include

 • Namazhwaar
 • Remaining 11 Azhwaars
 • Nathamunigal
 • Aaravamutha Perumaal in Kudanthai or Kumbakonam
 • Kattu Mannar Koil Perumaal (Kattu in Tamil means “show”, He who has shown us Divya Prabandam)

Let us thank Sri Nathamunigal for helping us to get back the 4000 Divya Prabhandham and move on to the next weblog, to know more about some of the interesting incidents that had happened with Sri Rangan who bestowed the name “Nam Azhwaar”, meaning that Azhwaar is Our Azhwar.

One Small Request.   Tamil month Vaikasi and Tamil star Visaagam is the day when Sri Namazhwaar was born.   On this holy day, let us think through our minds about Sri Namazhwaar (meditate),  read out some of his hymns, and offer some flowers on to his statue or pictures or the holy feet of Sri Mahavishnu, so that ourselves and our family members are blessed by Sri Namazhwaar.

With Madhurakavi Azhwaar/மதுரகவி ஆழ்வாருடன்

For English version, please click here, thanks.

மதுரகவி ஆழ்வார் அவதாரம்

மதுரகவி ஆழ்வார், தமிழ் மாதமான சித்திரையில், சித்ரா நட்சத்திரத்தில், (சித்திரையில் சித்திரை என்று கூறுவார்கள், கார்த்திகையில் கார்த்திகை என்பது திருமங்கையாழ்வாருக்கு! ) பெருமாளின் வாகனமான கருடனின் அம்சமாக  தென் தமிழ்நாட்டில் ஆழ்வார்திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

மதுரகவிஆழ்வார் பெருமை

மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் பெருமாளை பாடாது, நம்மாழ்வாரையே தெய்வமாக கொண்டு “கண்ணிநுண் சிறு தாம்பு” என்ற பதினொன்று பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தந்தைப் பாடினார். இவரது பாசுரங்கள் ஆச்சார்ய  பக்திக்கு எடுத்துக்காட்டாகும்.  வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியனுக்கே முதலிடம். அப்படி ஆச்சாரியனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர்.

ஆழ்வாரின் பாடல்களில் மிகுந்த பற்றுகொண்ட மதுரகவி ஆழ்வார், தம் ஆசார்யரான நம்மாழ்வாரை பற்றி,  “மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்” என்று பாடி உள்ளார்.

நம்மாழ்வாரை சந்தித்தது

மதுரகவி ஆழ்வார் வேத சாத்திரங்களை நன்குக் கற்றவர். இவர் வடநாட்டு யாத்திரை சென்ற போது, ஒருநாள் இரவு அயோத்தியாவில், வானத்தில் ஒரு பேரொளியைக் கண்டு வியப்படைந்தார். அவ்வொளியை மறுநாளும் அவர் கண்டபோது, அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக அந்த ஒளியைத் தொடர்ந்து தெற்கு நோக்கி நடந்தார். அஹோபிலம், திருவேங்கடம் திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருவில்லிபுத்தூர் ஆகிய தேசங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்தது. தெற்கு நோக்கி பயணத்தை தொடர்ந்தார். கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூர் வரை சென்று அதை தாண்டியபோது மறைந்தது. ஆழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் அதிசயம் உள்ளதா என்று வினவ, அவ்வூர் மக்களும் இங்கு ஒரு குழந்தை பதினாறு வருடங்களாக, ஒரு புளிய மரத்தடியில், யோக நிலையில் அசையாமல் இருப்பதாகக் கூறினர். மதுரகவி அங்கு சென்ற போது, அந்த குழந்தைக்கு உயிர் உள்ளதா என்று பார்க்க ஒரு சிறு கல்லை கீழே வீச, அந்த குழந்தையான காரி என்கின்ற சடகோபன் என்கின்ற நம்மாழ்வார், கண்திறந்து காட்டினார்.

நம்மாழ்வார் ஆச்சார்யராக

அப்போது அந்த குழந்தைக்கு வயது பதினாறு, கையில் உபதேச முத்திரை. கண் திறந்த சடகோபனிடம், “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்.  அதற்கு சடகோபன் முதன் முதலாக தனது வாயைத் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்றது.  அந்த பதிலில் உள்ள தத்துவங்கள் என்ன என்றால்,

 • உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.
 • அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதை பற்றிக் கொண்டே பக்தி வளரும்.

பதிலில் உள்ள தத்துவங்களை புரிந்துகொண்ட மதுரகவிகள், சடகோபனின் ஞானத்தை புரிந்துக்கொண்டு தன்னை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்ட, அப்பொழுதே நம்மாழ்வாரும் உயர்ந்த சீடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து மதுரகவியை சீடராக ஏற்றுக்கொண்டார்.  மதுரகவிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் கவித்துவத்திலும் பெரியவராகத் திகழ்ந்ததால் நம்மாழ்வாரையே குருவாகக் கொண்டார் மதுரகவி.

பட்டோலை கொள்ளல்

நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் தான் வடமொழி வேதத்தை தமிழில் செய்வதாகவும், அந்த பாடல்களை ஓலை படுத்தும்படி திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி மதுரகவிஆழ்வார், சடகோபனின் பாடல்களை பட்டோலை செய்தார்.

பொய் நின்ற  ஞானமும் பொல்லா  ஒழுக்கும் அழுக்கு உடம்பும், இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா, மெய்நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே.” என்று தொடங்கி திருவிருத்தமும், “செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,” என்று திருவாசிரியமும், “உயர்வர உயர்நலம் உடையவன் எவன் அவன், மயர்வறும் மதிநலம் அருளினன் எவன் அவன்,” என்று திருவாய்மொழியையும்  “முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,” என்று பெரிய திருவந்தாதியையும் சடகோபனான நம்மாழ்வார் சொல்லச்சொல்ல, மதுரகவி ஆழ்வாரும் அவைகளை செவ்வனே பதிவு செய்தார்.

வேதங்களில் சொன்னவற்றை மக்களுக்கு உபதேசிக்கவே, பரமாத்மா, ஆழ்வார்களைப் படைத்தார்.  வேதங்களை தமிழ்படுத்திய ஆழ்வார், அவைகளில் பெருமாளின் லீலைகளையும், அவருடைய குண நலன்களிலும் மோகித்து அவ்வபோது மூர்ச்சை ஆகி விடுவார்.   சிலசமயம் அவர்நினைவு திரும்புவதற்கு மாதங்கள்கூட ஆகிவிடும். அப்போதும், மதுரகவி கூடவே இருந்து ஆழ்வாருக்கு, சேவை செய்து ஆழ்வாரை மூர்ச்சையில் இருந்து எழுப்பி, மீண்டும் அவர் பாடும் பாடல்களை பதிவு செய்வார்.

அர்ச்சாவதார ஆழ்வார்

பரமபதம் அடையப் போவதை முன்கூட்டியே அறிந்த நம்மாழ்வார், மதுரகவியிடம் அதை குறிப்பாக தெரிவிக்க, அவரும் ஆழ்வாருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். நம்மாழ்வார், தமிழ் வேதத்தை உலகுக்கு பரப்பி பின்னர், பரமபதம் அடையலாம் என்றுசொன்னார். மதுரகவியாழ்வாரும், ஆச்சாரியாரின் புகழை உலகுக்கு தெரிவிக்க தனக்கு ஆழ்வாரின் சிலை வேண்டும் என்று வேண்ட, நம்மாழ்வாரும் அதற்கு ஆசீர்வாதம் செய்தார்.   மதுரகவி முதல் சிலை செய்ய அது த்ரிதண்டத்தோடு வர அதனை ஆழ்வாரிடம் காண்பித்த மதுரகவி அது நம்மாழ்வார் போல் இல்லை என்று கூற, அதற்கு நம்மாழ்வார் அந்த உருவம் பின்னாளில் வைஷ்ணவத்தை வளர்க்கபோகும் ஒரு மகானுடையது என்றும், அந்த சிலையும் பாதுகாக்கும்படியும், இன்னுமொரு சிலை செய்யும்மாறு கேட்டுக்கொண்டார். அடுத்த சிலை செய்ய அது நம்மாழ்வாரைப் போலவே இருக்க அதனையும் தன்னுடன் வைத்துக்கொண்டு,  தம் குருவான நம்மாழ்வாரின் பிரபந்தங்களையும் பெருமைகளையும் உலகெங்கும், மதுரகவி பரப்பினார்.  இதனாலேயே அவரும் ஆழ்வார்கள் பனிரெண்டு பேரில் ஒருவர் ஆனார்.

முதலாவதாக செய்த சிலை, யதிரஜார் என்றும், பாஷ்யக்காரர் என்றும், ராமானுஜர் என்றும் சொல்லபடுகின்ற வைஷ்ணவ ஆச்சர்யார் ஆவார். ஆக, இராமானுஜரை நமக்கு அறிமுகப்படுத்தியதும் நம்மாழ்வாரே.  இரண்டாவதாக செய்த ஆழ்வாரின் அர்ச்சாவதார சிலை இன்றும் ஆழ்வார்திருநகரியில் உள்ளது.

ஆச்சாரியார் புகழ் பரப்புதல்

மதுரகவி ஆழ்வார். ஆச்சாரியனைக் கொண்டாடும் விதமாக நம்மாழ்வாரை அர்ச்சா ரூபமாக எழுந்தருளச் செய்தார்.  அவர் அருளிய திவ்ய பிரபந்தங்களை உலகோருக்குக் கற்றுக் கொடுத்தார்.   இப்படி ஆழ்வார் பெருமைகளை ஊர்ஊராக சொல்லிகொண்டு செல்லும்போது, மதுரை தமிழ் சங்கத்தினர், ஆழ்வார் பாடல்கள் தமிழ் சங்கப் பலகையில் ஏற்றுக்கொண்டால் தான் மதிக்கப்படும் என்று சொல்ல, மதுரகவியும், திருவாய்மொழியில் ‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே‘ என்ற பாசுரத்தின் முதலடியை சங்கபலகையில் வைக்க, மற்ற எல்லாபுலவர்களின் பாடல்களையும் அது நிராகரித்து ஆழ்வாரின் இரண்டு வரி பாடலை மட்டும் ஏற்றுக்கொண்டது.   அதைப்பார்த்த சங்கப் புலவர்கள் ஆழ்வாரின் மேல் அபரிமிதமான மரியாதை கொண்டு, அவர் ஆழ்வாரே அல்ல, அவர் பெருமாளே என்று போற்றினார்கள்.    அவர்கள்  “சேமம் குருகையோ, செய்ய திருப்பாற்கடலோ ” என்று தொடங்கும் பாடலை ஆழ்வாருக்கு சமர்பித்தார்கள்.

இப்படி ஆழ்வாரின் தமிழ் வேதத்தை உலகுக்கு கொண்டு சென்ற மதுரகவி ஆழ்வார் தனக்குப் பிறகும் ஆழ்வாரின் பெருமைகளும், அவரின் அருளிச் செயல்களும் நிலைத்து நிற்கும்படி செய்து, பின் அவரும் பரமபதம் அடைந்தார்.  மேலும், திவ்யப்ரபந்தம் நாளைடைவில் வழக்கில் இருந்து படிப்படியாக மறைந்துவிடும் நிலை அடைந்தபோதும், மதுரகவி ஆழ்வாரின் கண்ணி நுண் சிறு தாம்பு என்ற பாடலே மொத்த நாலாயிர திவ்யப்ரப்ந்தங்களையும் திரும்பி நமக்கு கிடைப்பதற்கு வழி செய்தது. அதை பற்றி அடுத்த வலைப்பதிப்பில் பார்க்கலாம்.  இப்படியாக, மதுரகவி ஆழ்வாரின் வரலாறு முழுவதும் நம்மாழ்வாரோடேயே சொல்லப்படுகிறது.

========================================================================

Birth of Madhurakavi Azhwar

Madhurakavi Azhwaar was born in a place called, Thirukkolur, near Azhwaar Thirunagari, in the southern part of Tamil Nadu, in the Tamil Month of Chithirai and on a day with the star, Chithirai, (People remember this as ‘Chithirayil Chithirai’ and “Karthigaiyil Karthigai will be for Thirumangai Azhwaar! ) and as a feature of Garudan, which is the flying vehicle for Mahavishnu.

Glories of Madhurakavi Azhwaar

Madhurakavi Azhwaar sang only on Namazhwaar as his Guru and God, in his hymns, which are called “Kanni Nun Siru Thambu”, meaning that a rope that tied Lord Krishna with a number of knots.  This contains only 11 hymns and is also classified under Divya Prabandham  and none of them spoke about the God, but only about his Acharya.    All his hymns are very good examples of the respects that are shown by the disciple to his Guru. In vaishnavism, the respect or affection or love towards the Guru (Acharya) takes a higher priority, even over the respect or affection or love towards the God Himself. Madhurakavi was a perfect example to depict the respect for Aacharya.

Madhurakavi Azhwaar liked the hymns created by Sri Namazhwaar so much, he created a hymn, about Sri Namazhwaar, “mika vedhiyar vedhathin utporul, nirkap paadi en nenjul niruthinaan“, meaning “Namazhwaar, the person who knew the  Vedas in and out, created the whole meanings of Veda, including the inner meanings, in his hymns and he taught my heart or made them stick to my heart”.

Meeting with Sri Namazhwaar

Madhurakavi Azhwaar was a very learned person and he knows the vedas very well.   He went out for a northern India pilgrimage and one night, when he was in Ayodhya (the birthplace of Sri Rama), he saw a bright light in the sky.   He saw the same bright light in the sky the very next day also.  He was curious and started following the light, which took him towards south.    He crossed Ahobilam, Thiruvengadam, Srirangam, Madurai (Thirumalirumsolai) and Srivilliputhur. He continued his journey and reached Thirukurukur or Alwarthirunagari.   When he crossed Azhwarthirunagari, the light disappeared.  So he suspected something big for him in Azhwaarthirunagari.   He went back to Azhwaarthirunagari and checked with people, whether anything strange is happening in this town.   The people in the town responded by saying that there was a child, which went into a hole in a tamarind tree and was there for the last sixteen years.   They also said that the child was in a yoga position and never moved after reaching the tree.   When Madhurakavi went there, he wanted to test whether the child was still alive, so he decided to throw a small stone around.  The child, which is known as Karimaaran or Sadagopan and would be known as Namazhwaar later, opened his eyes and saw Madhurakavi.

Namazhwaar as Aacharyar

Karimaaran or Sadagopan was sixteen when he opened the eyes for the first time.   His hands were showing signs of preaching. (Upadesa Muthirai).   Madhurakavi asked Sadagopan, “sethathin vayitril siriyathu piranthaal, ethai thindru endge kidakkum ?”, meaning “when the soul comes to this world, what it would eat and where it would stay”. Immediately Sadagopan answered by speaking for the first time, “Athai thindru, angey kidakkum” meaning that “it would inherit the results of the activities of the body in which the soul has gone and live within the body”.   In addition, there are more inner meaning in the question and answer beyond what is mentioned earlier  and they are :

 • when the soul (jeevathma) gets inside a body, it will inherit the sins and goodness or virtues of the acts of the body
 • similarly the soul, which did not have any prior intelligence, starts realising the greatness of Paramathmaa or Sri Vishnu, then it would build on top, the respect, love and affection towards Paramathmaa and makes it keep growing.

Madhurakavi, after understanding the inner meanings of the response from Sadagopan, he requested Sadagopan to take him as his disciple.   Namazhwaar was also very  happy that he got a very good disciple and accepted him.   Namazhwaar was much younger than Madhurakavi, but Madhurakavi wanted to be his disciple mainly because of Azhwaar’s intelligence and knowledge in vedas and in Tamil literature.

Documenting the Hymns

Namazhwaar informed Madhurakavi Azhwaar that he would be translating the vedas, which are in Sanskrit to Dravidian Language, namely, Tamil.   He requested Madhurakavi Azhwaar to document the hymns produced by him.    Madhurakavi Azhwaar agreed to write down the hymns and preserve them nicely.

Namazhwaar started Thiru Virutham with  “Poi Nindra Gnanmum Polla Ozhukkum, azhukku udambum” , Thiruvaasiriyam with “sekkarmaa mukil uduththu, mikka senchudar parithi soodi”,  Thiruvaai Mozhi with “Uyarvara uyarnalam udayavan yavan avan, Mayarvarum mathinalam arulinan yavan avan” and finally Periya Thiruvanthathi with “muyatri sumanthu ezhunthu munthutra nenjame“.    Generally Namazhwaar was dictating the hymns and Madhurakavi Azwar was documenting the same carefully.

Paramathma has sent Azhwaars to this world only to preach the Vedas to the people. Namazhwaar while translating the vedas to Tamil, he would become unconscious or senseless due to the deep love for Perumaal’s qualities, His actions and His character. Sometimes, it would take months before Azhwaar could recover.   During all these times, Madhurakavi Azhwaar would continue to be with Namazhwaar and would give him all the help and support to Namazhwaar so that Azhwaar would continue his work.   Madhurakavi would also continue to document the hymns.

Azhwaar’s Statue

Namazhwaar after realising, that it was time for him to go back to Paramapadham or Sri Vaikuntham, he indicated the same to Madhurakavi.  Madhurakavi Azhwaar was also interested to follow him to Paramabatham, for which  Namazhwaar said that Madhurakavi would reach Paramapadham, but before that he should continue to spread the Tamil Vedas to this world.   Madurakavi Azhwaar was happy to hear that and he said he would continue to spread the Tamil vedas and also the glories of Namazhwaar.   He wanted permission from Namazhwaar to make a statue of Namazhwaar, which could help him to carry on with his mission.  Namazhwaar agreed and asked him to make the statue.    When Madhurakavi Azhwaar made the statue, which did not come alike Sri Namazhwaar, he took it to Namazhwaar and asked him why the statue did not come alike Sri Namazhwaar. Namazhwaar said that the statue he made which had a set of three poles (Tridhandam), would be a significant acharya of vaishnavites, in future, who could develop, promote and spread vaishnavism to a great extent.   Namazhwaar asked Madhurakavi to preserve the first statue for reference and make another one. When Madhurakavi made the second statue, it came out very much like Namazhwaar.   Madhurakavi carried the second statue along with him wherever he went and spread the Divya Prabanthams and the glories of Namazhwaar.   This act of support to Namazhwaar from the beginning and even after Namazhwaar attaining Paramapadham, has made Madhurakavi as one of the twelve azhwaars in Vaishnavism.

The first statue was that of Sri Ramanujar, or Bhashyakkaarar, or Yathirajar, a significant acharya of vaishnavism.    Thus Sri Ramanujar was introduced to us by Sri Namazhwaar. The second statue, which is that of Sri Namazhwaar is available even today at Azhwaarthirunagari.

In an effort to promote and make the deeds of his Guru or Acharyaa, known to this world, Madhurkavi Azhwaar made the Statue of Namazhwaar and took it along with him wherever he visited and offered tonnes of praise, in public, to Sri Namazhwaar and his works. Madhurakavi also taught the divyaprabandhams to the people.     He was repeating the same in every other town and he kept doing this regularly.   When he was in Madurai, which is famous for promoting Tamil Language and Literature, through a board, called Madurai Tamil Sangam, the poets of Madurai Tamil Sangam, did not recognise the work of Sri Namazhwaar.   They wanted Madhurakavi to prove that the Divya Prabandham created by Sri Namazhwaar is in line with Tamil grammar and the norms used by  the Tamil Sangam poets.    Madhurakavi was ready for the challenge and he took two lines “Kannan Kazhalinai nannum manamudaiyeer, ennum thirunaamam naraname“,  from one of the 1000+ hymns created by Sri Namazhwaar to prove the greatness of his work to the world.   The Tamil Sangam, not only accepted Namazhwaar’s hymn, but also rejected all other competing poems and poets. After observing this, the poets of Madurai Tamil Sangam, had enormous appreciation for Sri Namazhwaar to the extent that they compared Namazhwaar with Sri Mahavishnu, by offering a small poem starting with “semam Kurukaiyo, seiya thirupparkadalo“.

Thus Madhurakavi Azhwaar spread the Tamil Vedam, namely the Divya Prabandham, created by Namazhwaar, to this world when he was alive and also made sure that Namazhwaar’s work is well-known even after Madhurakavi attaining Paramapadham or Srivaikuntham.  After Madhurakavi Azhwaar attaining Paramapadham, when Divya Prabandham was slowly disappearing from the normal day-to-day usage or literature, it was only Madhurakavi Azhwaar’s Kannni Nun Siru Thambu, which helped to rediscover the whole Divyaprabandham and we will see this in our next weblog.   Thus the whole life story of Madhurakavi Azhwaar is told always, in conjunction with Sri Namazhwaar.

Vibavam-Kalki incarnation/விபவம்-கல்கி அவதாரம்

For English version, please click here, thanks :

கல்கி அவதாரம் – முன்னுரை

இதற்கு முன்பு தசாவதாரத்தில் பல அவதாரங்களையும், அவை இடம் பெற்ற யுகங்களையும் பார்த்து உள்ளோம்.  இதுவரை பார்த்த எல்லா அவதாரங்களுக்கும் கல்கி அவதாரத்துக்கும் உள்ள ஒரு வேறுபாடு, நாம் இப்போதுள்ள கலியுகத்தில் பிரம்மமான பகவான் எடுக்கப்போகும் அவதாரம் கல்கி அவதாரம் மட்டுமே என்று இந்த வலைபதிப்பை தொடங்குவோம்.

கலியுகத்தைப் பற்றி

கலியுகத்தில் உள்ள 432,000 ஆண்டுகளில் இப்போது சுமார் 5000 ஆண்டுகள் ஆகி உள்ளன. கலியுகத்தை வர்ணிக்கும் போது, சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் தர்மமானது ஒரு காலை இழந்து,  மூன்று கால்களுடன், 25. விழுக்காட்டை இழந்து தவிக்கும்.. த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் பசுமாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து கவலைப்படும் . கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் கொண்டு இருக்கும், கலியுக முடிவில் அந்தக் காலும் போய் விடும்.

பரமாத்மாவான கிருஷ்ண பகவான், எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம், நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன் என்று பகவத் கீதையில் அர்ச்சுனனுக்குச் சொல்கிறார்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)
பரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்|
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே|| (4-8)

  இது பாகவத்திலும் சொல்லப்படுகிறது

இத்தம் கலௌ கதப்ராயே ஜனே து கரதர்மினீ|
தர்மத்ராணாய ஸத்வேன பகவானவதரிஷ்யதி|| ((12-2-16)

இவ்வாறு கலியுகத்தில் மக்கள் அதர்மவாதிகளான பின் தர்மத்தை உறுதிபடுத்திட பகவான் அவதரிப்பார்.

கல்கி

கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்து, பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும்.  கல்கி அவதாரத்தில் பகவான் தானே குதிரை முகத்தோடு வெள்ளை குதிரையில் பளபளக்கும் நீண்ட கத்தியுடன் காட்சி அளிப்பார்.   கல்கி அவதாரத்தைப் பற்றி சொல்லும் போது, கல்கி இளமையுடனும், கல்வி, போர் மற்றும் விளையாட்டு துறைகளில் தேர்ச்சி பெற்றவராகவும்,மகா ஞானியாகவும், மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், பிராமண குல தாய் தந்தையை பெற்றவராகவும், சம்பல என்னும் ஊரில் பிறப்பவராகவும், தாமிரபரணி நதி பிரியும் இடத்தில இருப்பார் என்று கூறப்படுகிறது.

கல்கி அவதாரத்துடன் நாம் பர, வியூக நிலைகளுக்கு அடுத்ததான, மூன்றாவது நிலையான விபவத்திற்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து, அடுத்ததாக உள்ள அந்தர்யாமிக்குச் செல்வோம்.

அந்தர்யாமி

நம் அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக பகவான் விளங்குவதுதான் அந்தர்யாமி என்ற நிலை.  அவர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.   நம் உடலுக்குள் உயிர் இருக்கிறது. அதுபோல் உயிருக்கு உயிராக, அந்தராத்மாவாக இருப்பவர், பகவான் விஷ்ணுதான்.  வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்திலும் பகவான் கட்டைவிரல் அளவிற்கு வீற்றிருக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது.

இவ்வுடம்பினுள்ளும், உயிரினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள இறைவன், உடம்பின் விகாரங்களையும், (அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே), உயிரின் இன்ப-துன்பங்களையும் அடைவதில்லை. இறைவன் வினை காரணமின்றி தன் விருப்பினால் இவ்விரண்டினுள்ளும் குடியிருப்பதால் இவ்விரண்டின் தன்மைகளையும் அடைவதில்லை.

நமக்குள் அந்தர்யாமியாக பகவான் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டால், நம் வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக நாம் புரிந்துகொண்டு செயல்படுவோம். எல்லா ஜீவாத்மாக்களுக்குள்ளும்  பகவானான அந்தர்யாமி உள்ளார் என்ற உண்மையை நாம் அறிந்து கொண்டால், மற்றவரோடு தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு உள்ள எல்லோரும் சமம், என்ற உணர்வுடன் செயல்பட்டு தர்மத்திற்கு உகந்த சரியான வார்த்தைகளை பேசுவோம், நல்ல செயல்களை மட்டுமே செய்வோம். நம் மனதிலிருந்து கொண்டு அந்தர்யாமி பகவான் நம்மை கண்காணிக்கிறார் என்ற விழிப்புணர்வுடன் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.  இது, வயது, கல்வி, செல்வம், ஜாதி, மதம், மொழி, நாடு மற்றும் எந்த விதமான பிரிவுகளுக்கும் அப்பாற்பட்ட தத்துவம் ஆகும், எல்லோரும் சமம், எல்லோர் உள்ளும் பகவான் உள்ளார், எல்லோரையம் மதிக்க வேண்டும், என்று எல்லோரையும் தர்மத்தின் வழி அழைத்து செல்லும் அந்தர்யாமி பற்றி மேலும் சில வரிகள்.

அந்தர்யாமி பாசுரங்களில் சில

நம்மாழ்வார்,

“விண் மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண் மீது உழல்வாய்! இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்– (திருவாய்மொழி 6-9-5)

பொய்கையாழ்வார்,

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்துள்– உளன் கண்டாய்
வெள்ளத்திலுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்திலுள்ளான் என்றோர்’ (முதல் திருவந்தாதி- 99)

திருமழிசைபிரான் (அந்தர்யாமியிலேயே லயித்தவர்),

அக்கரங்கள் அக்கரங்கள்  என்றுமாவதென்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங் கொள் கையனே சடங்கர்வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே

தொண்டரடிப்பொடியாழ்வார்,

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவார் உணர்வு ஒன்றில்லா, கள்ளத்தேன் நானும் தொண்டாய், தொண்டுக்கே கோலம் பூண்டு, உள்ளுவார் உள்ளிற்றி எல்லாம் உடன் இருந்து அறிதி என்று, வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.     (திருமாலை 34)

ஆண்டாளின் சிறப்பு, ஐந்து இறை நிலைகளில்,

 • முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணனே நமக்கே பறை தருவான்),
 • இரண்டாவதில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்),
 • மூன்றாவதில் விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி),
 • நான்காவது பாடலில் அந்தர்யாமியாக எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் (ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து) கொண்டாடிய சூடிக் கொடுத்த நாச்சியார்
 • ஐந்தாவது பாசுரத்தில் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அர்ச்சாவதர கோலத்தை (மாயனை மன்னு வடமதுரை மைந்தனனை) வடமதுரை  மைந்தன் என்று பாடுகிறார்!

ஆக, ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடி நம்மையும் பிரம்மத்தின் நான்காவது நிலையான அந்தர்யாமியில் இருந்து அர்ச்சைக்கு  அழைத்துச் செல்கிறார்.

===============================================================

Kalki Incarnation – Introduction

In our previous weblogs, we have seen a few incarnations from Dasaavathaaram and in which yugams they had happened, like Krutha, Thretha, Dwapara and Kali. There is a basic difference between the  incarnations which we have seen earlier and the one which we are going to see, namely, Kalki Incarnation.   This  incarnation of Brahmam, Kalki, is expected to happen during this Kali Yugam, in which we are living, unlike the other incarnations which have happened in the other three yugams.

About Kali Yugam

Out of 432,00 years that Kali Yugam has got, about 5000 years have been already passed.   Before describing Kaliyugam, let us start with Dharma, which is about good conduct, honesty, being fair etc.    Dharma is described as a cow standing on four legs, when everyone follows all the right things.    In the Krutha Yugam, Dharma, the  cow, would stand on all four legs.    But during Tretha Yugam, Dharma, the cow would lose one of its legs, in other words, 25% of good things or honesty would have been lost.  In Dwapara yugam, another 25% would be lost, which means the cow would be standing with 2 legs.   In Kali Yugam, the cow would lose one more leg and will be struggling to stand.  By the end of Kali Yugam the cow would lose its fourth leg and all the dharma in this world would have been destroyed, which the Brahmam can not tolerate.

Whenever Dharamam loses its power and Adharama (the opposite of Dharma) takes control, Sri Krishna, in Bagawath Geethai tells Arjuna that He would come and takes an Incarnation to protect the good people and to destroy the bad.

A Sanskirt solga from Bagawat Geethai,

yathaa yathaa hi dharmasya  gllaaneerbhavathi bharatha| apyuthaanamadharmasya thathaathmaanam srujaamyagam|| (4-7)  and  

Parithraanaaya Saadunaam vinaashaaya  sathushkruthaam| dharma samsthaapanaarthaaya sambhavaami yuge yuge|| (4-8)

Similarly in Bagawatham,

ithaam kalow kathapraaye janethu karadharminee|  Dharmathraanaaya sathven bagawaan avatharishyathi || (12-2-16)

Thus in Kaliyugam, after the people turned fully into bad (in terms of not following the right things, being fair to others, etc), Paramathmaa will take another incarnation and protect Dharmam.

At the end of Kaliyugam, the word will get destroyed and the new cycle of yugams will start with Krutha Yugam.  Vishnu, the Paramathma, when He  takes the incarnation of Kalki, the world will change into the old Kritha Yugam, where all the powers of Dharmam will be restored. Kalki will have a horse face and He would ride on a glittering white horse with a long sword. Kalki will be young, a master in knowledge, a great warrior, a superior sports person, a very intelligent and the most powerful person.   He will be born in a Brahmin family and at a place called Sambala.   It is also stated that He will stay near the banks of the river Thamirabarani.

With this we will come to the temporary conclusion on our discussions about Vibavam, which is the Third state of Brahmam, after the first two states, namely, Para and Viyuha and we will move to the next state, namely, Antharyaami.

Antharyaami

The soul within each and everyone of us is generally, called as, Antharathmaa and it is the fourth state of Brahmam, Antharyaami.  It means that Brahmam resides in each and everyone of us.   Like the soul that is within us, Antharathma is the soul to our soul, in other words the soul within us is called as Jeevathmaa and the soul for the Jeevathmaa is the Paramathmaa.  So Paramathmaa, or Sri Vishnu or Sri Narayan resides within each and every one of us.   Vedas refer this as Paramathmaa  sits majestically within everyone’s heart with a size of his or her thumb.

Even though the Paramathmaa resides within our soul and body as Antharathmaa, He does not undergo any changes or does not get affected by the sorrows and happiness that we undergo.     We, or the Jeevathmaas, undergo happiness and/or sorrow due to our own actions, which are directly due to the Karmas, or our  actions that are based on the good and/or bad behaviour practised by us  in the past and/or in our previous births. Paramathmaa does not have any Karmas associated with Him and the Karmas do not come near Him.   Paramathmaa comes inside us or inside our Jeevathmaas on His own and not due to any Karmas.   And that is the reason why He never undergoes any change (avikaaraya sudhaaya nithyaaye paramathmane) or the happiness or sorrow does not affect Paramathmaa.

The moment, we start realising that Paramathaa stays within us as Antharathmaa all the times, then we have a better probability to understand the purpose of our life.  Similarly when we understand that Paramathmaa resides in all others inside them as their Antharathmaas, then whenever we interact with others, all our actions will be based on the fact that all of us are equal, in the sense that we, as well all others have Paramathma inside them as Antharathmaas.   The above two statements should drive us towards doing all the right things, all the time.   Whatever we speak or whatever we do, will reflect them and we end up doing all the right things.   Antharathmaas that are residing within us will become our consciousness  and we will realise that the Paramathmaa is watching us all the time.   This philosophy is universal and beyond age, education, wealth, caste, language, country and any other divisions.   The fact that we are all same and we all have Paramathmaa as Antharyaami, should take all of us towards the path of Dharma.

A Few Hymns on Antharyaami

Namazhwaar,

“vin meethu iruppaai, malai mel nirpaai, kadal serppai! mann meethu uzhalvaai, ivatrul engum marainthu uraivaai ! ” – Thiruvaaimozhi 6-9-5)  

Poigai Azhwaar,

“ulan kandaai nan nenje uthaman endrum, ulan kandaai ulluvaar ullaththul – ulan kandaai, vellathil ullaanum, venkadathu meyaanum, ullathil ullaan endroor” – (Muthal Thiruventhathi – 99)

Thirumazhisai piraan (who  has enjoyed Antharyaami, the most)

Akkarangal, akkarangal endrumaavathu enkolo? Ikkurmbai neeki, ennai eeasanaakaa vallayel, chakarang kol kaiyane, sadangarvaai adankida, utkidanthavanname puram posinthu kaatide 

Thondaradipodi Azhwaar,

ullathey uraiyum maalai, ulluvaar unarvu ondru illa, kallaththen naanum thondaai, thondukke kolam poondu, ulluvaar ullitri ellam udan irunthu arithi endru, velkip poi ennulley naan vilavarach sirithitene (Thirumaalai 34)

Like many specials, Aandaal in her work, Thiruppavai, covers each state sequentially in each of the first five hymns.

 • In the first hymn, she mentions Paravasudevan, as “Narayanane nammake parai tharvaan
 • In the second hymn, she describes,  Viyuha Vasudevan as “paar kadalul paiya thuyindra paraman
 • In the third hymn, she adores about  Thiruvikraman, who is a Vibhavamoorthi and the fifth incarnation in Dasavathaaram, (Ongi, ullakalantha uthaaman per paadi)
 • In the  fourth hymn, she worships the Antharyaami  (oozhi muthalvan urvam pol mei karuthu)  and
 • In the fifth hymn, she refers to the fifth state, Archai, (Maayanai, Vadamathurai Mainthanai).

Aandal has glorified all the five states of Paramathmaa, namely, Para, Viyuga, Vibhava, Antharyaami and Archai in her first five hymns of Thiruppaavai and thus, she has helped us to carry us from the fourth state of Antharyaami to the fifth state, namely, Archai, which we will discuss in our  future weblogs.

=========================================================================

Namazhwaar’s Birth /நம்மாழ்வாரின் அவதாரம்

For English version, kindly click here, thanks

இராமாயண முடிவில் ஒரு காட்சி

பகவானின் விபவ ரூபங்களில் வரும் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமன் நன்றாக ஆட்சி செய்து, பரமபதம் செல்ல முடிவுசெய்த பிறகு ஒரு நாள் யமதர்மன் ஸ்ரீ ராமரை தரிசித்து அவரிடம் பரமபதம் செல்வதைப் பற்றி பேச வந்தான். அப்போது ஸ்ரீ ராமன், லக்ஷ்மணனிடம் வெளியே காவல் காக்கும் படியும், யமதர்மனிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் சொன்னார்.   லக்ஷ்மணனும் சரியென்று சொல்லி கவனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தான்.   அப்போது துர்வாச முனிவர் வந்து ஸ்ரீ ராமனை உடனே பார்க்க வேண்டும் என்று சொல்ல, முனிவரின் சாபத்திற்கு அஞ்சி முனிவரை லக்ஷ்மணன் உள்ளே விட்டான்.

ஸ்ரீ ராமரும் முனிவரிடமும், பின் யமதர்மனிடமும் பேசியபிறகு லக்ஷ்மணனிடம் வந்து அரசனின் ஆணையை மீறியதாகச் சொல்லி அதற்கு தண்டனையாக  32 வருடம் ஒருவருடனும் பேசாமல் மரம் போல் இருக்க வேண்டும் என்றார்.   லக்ஷ்மணன் திகைத்தபோது, ஸ்ரீ ராமன், தானும் அவனுடன் இருப்பதாகக் கூற லக்ஷ்மணன் சமாதானம் அடைந்தான்.   இலக்குவனை பிரிந்ததை ஆறாவது ஆழ்வாரான குலசேகராழ்வார், “……..முனிவன் வேண்ட, திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத்……” என்று, தன்னுடைய பெருமாள் திருமொழி 10.9 பாடலில் கூறியுள்ளார்.

கிருஷ்ண சரித்திரத்தில் ஒரு காட்சி

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்தபோது, நான்கு வகையான மனிதர்களில், ஞானி என்பவன் பரப் பிரம்மமே எல்லாம் என்பதை உணர்ந்தவன்.  அப்படிப்பட்ட ஞானி பற்பல பிறவிகளுக்கு பிறகு ஒரு முறை தான் பிறக்கிறான். அப்படிப் பிறப்பது மிக அரிது.   “பரப்பிரம்மமே எல்லாம் என்று சொல்லும் ஒரு ஜீவாத்மாவை பார்க்கவில்லை” என்று சொல்லி, முடிவில் அப்படி ஒருவரையும் சந்திக்காமலே ஸ்ரீ கிருஷ்ணர், பரமபதம் அடைகிறார்.     அப்படி செல்லும் போது, “உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே” என்று சொல்லும் ஒரு ஜீவாத்மாவை படைத்தே தீர்வது என்ற எண்ணத்துடனே சென்றார்.

பரமபதத்தில் ஒரு காட்சி

ஸ்ரீ மகாவிஷ்ணு,  நித்யசூரிகளிடம் ஒரு நாள், பூலோகத்தில் சில வேலைகள் உள்ளன, அதற்காக அனந்தன், கருடன் மற்றும் விஷ்வக்சேனர் ஆகியோருக்கு சில கட்டளைகள் பிறப்பித்தான்.  அனந்தனிடம், லக்ஷமணனாக இருந்த காலத்தில் அடைந்த சாபத்தை அனுபவிக்கும் நேரம் இது, ஒரு புளிய மரமாக இருந்து தனக்கு சேவை செய்ய சொன்னார்.   விஷ்வக்சேனரிடம் வடமொழி வேதத்தின் சாரத்தை தமிழில் செய்ய ஆணை பிறப்பித்தார்.   கருடனிடம், விஷ்வக்சேனருக்கு உதவியாக இருந்து அவர் சொல்லும் தமிழ் வேதத்தை ஆவணப்படுத்தும் சேவையை அவருக்குக் கொடுத்தார்.

அடுத்தது தென்தமிழ் நாட்டில்

தாமிரபரணி என்ற ஆற்றின் கரையில் உள்ள, ஆழ்வார்திருநகரி எனப்படும், திருக்குருகூர் என்ற புண்ணிய ஸ்தலத்தில் காரி என்பவர் பரம்பரை பரம்பரையாக ஒரு விஷ்ணு பக்தர்.  காரியின் தகப்பனாரான பொற்காரியார், அவருக்கு திருவண்பரிசாரம் என்ற மற்றோரு புண்ணிய ஸ்தலத்தில் உள்ள உடையநங்கை  என்ற பரம வைஷ்ணவ மங்கையை திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு சில காலம் குழந்தைசெல்வம் இல்லை.  அதனால் அவர்கள் திருக்குறுங்குடி நம்பி என்ற விஷ்ணு கோவிலுக்குச் சென்ற போது, அங்கே நம்பியிடம் தங்களுக்கு பிள்ளை செல்வம் வேண்டும் என்று வேண்டினார்கள்.   அவர்கள் இருவரும் பல தலைமுறைகளுக்கும் மேலாக  மிகச் சிறந்த விஷ்ணு பக்தர்கள் ஆனபடியால், நம்பி அவர்களிடம் எந்த மாதிரி குழந்தை வேண்டும் என்ற கேட்க, அவர்களுக்கும், சிறிதும் யோசிக்காமல், நம்பி போலவே வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.

nambi

திருக்குறுங்குடி நம்பி மிகவும் அழகாகவும் வர்ணங்களுடனும் இருப்பார்.  நம்பியும் அப்படியே ஆகும் என்று அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்தார்.   அதன்படியே  உடைய நங்கையும், ஊருக்கு சென்ற சிறிது காலத்தில் கர்ப்பம் தரித்தாள்.

முதல் பதினாறு வருடம்

வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில், விஷ்வக்சேனரின் அம்சமாக, கலியுகம் தொடங்கி 43 நாளில் சடகோபன் என்ற நம்மாழ்வார், திருக்குருகூர் (இன்று ஆழ்வார் திருநகரி) என்ற ஊரில் உள்ள அப்பன்கோவில் என்ற இடத்தில அவதரித்தார். (கண்ணன் பரமபதம் சென்ற அடுத்த நாளில் இருந்து கலியுகம் தொடங்கியது). ஆழ்வார்கள் வரிசையில் இவர், முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை, பூதம், பேயாழ்வாருக்குப் பிறகும், நான்காவதான திருமழிசையாழ்வாருக்குப் பிறகும் உதித்த ஐந்தாவது ஆழ்வார் ஆவார்.

காரிக்கும், உடைய நங்கைக்கும் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்த, குழந்தை, நகரவில்லை, சப்தம்போடவில்லை, சிரிக்கவில்லை. தாயும் தந்தையும் பல திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டனர்.

திருதொலைவில்லிமங்கலம் என்ற ஊரில் உள்ள விஷ்ணுவை வழிபட செல்ல முற்படும் போது, பலர் அந்த கோவிலில் உள்ள தேவப்பிரான் மிகவும் அழகும் அதித கருணையும் கொண்டவர், அந்த கோவிலுக்கு குழந்தையை எடுத்துச் சென்றால் பகவானின் கருணையினால் குழந்தை, பகவானின் குழந்தை ஆகி விடும் என்று தடுத்தனர். இருந்தும் காரியும் உடையநங்கையும் பெருமாளின் மேல் உள்ள பக்தியாலும், பற்றுதலாலும்  திருத்தொலைவில்லிமங்கலம் சென்று வழி பட்டனர்.   மற்றவர்கள் சொன்னதுபோல், பெருமாள், ஆழ்வாருக்கு தாயும் தந்தையும் போல் ஆகிவிட்டார் போலும்.   இது பின்னாளில் நம்மழ்வார் திவ்ய பிரபந்தம் பாடும் போது தேவப்பிரானை, “சிந்தையாலும், சொல்லாலும், செய்கையினாலும் தேவ பிரானையே, தந்தை, தாய் என்று அடைந்த வண்குருகூர் சடகோபன்(6-5-10) என்றே பாடுகிறார்.   இதை இன்றும் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகம் ஐந்தாம் நாள் விடையேத்து உத்சவம் மற்றும் நவதிருப்பதி கருட சேவை அன்று காணலாம்.   மற்ற எல்லா பெருமாள் புறப்பாடு முடிந்தவுடன் ஆழ்வார் தன் இருக்கைக்கு சென்று விடுவார், ஆனால் தேவபிரான் புறப்பாடு நடக்கும் போது மட்டும், ஆழ்வார் அசையாமல் தான் இருந்த இடத்திலேயே, அதாவது, கோவில் வாசலிலேயே, தேவபிரான், அந்த வீதி முழுவதும் சென்று அடுத்த வீதிக்கு திரும்பும் வரை  இருப்பார்.   அதேபோல் தேவபிரானும், அந்த வீதி சென்று முடியும் வரை, ஆழ்வாரை திரும்பி திரும்பி பார்த்துச் செல்வார்.

ஒரு நாள் திடீரென்று சடகோபனான அந்த குழந்தை தவழ்ந்து பக்கத்தில் உள்ள புளியமரம் ஒன்றில் உள்ள பொந்தில் ஏறி படுத்தது.   அந்த புளியமரம் இன்றும் ஆழ்வார் திருநகரி கோவிலின் உள்ளே உள்ளது.  அந்த புளிய மரம், பெருமாளின் படுக்கையும் மற்றும் எல்லாவுமான அனந்தன் என்ற நித்யசூரியே.

இப்படியே நம்மாழ்வார் என்ற சடகோபனின் முதல் பதினாறு வருடங்கள் கடந்தன. அவர் பேச வில்லை, சப்தம் போடவில்லை, அசையவில்லை.   புளிய மரத்தின் பொந்துக்கு சென்ற பின் அங்கேயே இருந்தார்.   அதற்குப் பிறகு நடந்த எல்லாம் அற்புதம், அற்புதம், அற்புதம், அவற்றில் சிலவற்றை அடுத்த பதிப்பில் காணலாம்.

=====================================================================

During the final stages of Ramayana

Sri Rama, the seventh incarnation of Sri Vishnu, in Dasaavathaaram, as a part of Vibhava Vasudevan, ruled the Kingdom very well and He has decided to go back to His original place, namely, Sri Vaikuntham.  One day, Yamadharman, or the God responsible for final stages of every life, had visited Sri Rama to discuss about  His plans.   Sri Rama, before going to that meeting, called Lakshman, His brother and asked him that He would be in a serious meeting and not to let anyone to come and disturb Him.    Lakshman, as usual, took His commands seriously and carried out the duty meticulously.   Dhurvasa, a saint, who is known for his short tempered nature, tried to enter the palace where Rama and Yamadharman were discussing.   Lakshman tried to stop Dhurvasa, but after seeing his anger, he allowed Dhurvasa to enter the palace.     Sri Raman spoke to Dhurvasa and sent him.  He also completed His discussions with Yamadharman.

He came back to meet Lakshmana.  He told Lakshmana that Lakshman did not follow the orders of the King and he needs to go through a punishment of 32 years, when he will not be able to interact with  any human beings and he would stay like a tree.  Lakshmana was so stunned and before he could react, Rama consoled him by saying that He would also be with him during those years.   This is generally explained when people discuss the Kulasekaraazhwaar’s, the sixth Azhwaar, Perumal Thirumozhi Hymn, 10.9, containing lines “……munivan venda, thiral  vilangu ilakkuvanai pirinthan thannai…”   

In the life of Sri Krishna

Sri Krishna, the ninth incarnation of Sri Vishnu, preached the famous Bhagavath Geetha to Arjunan.   In that He talks about 4 different sets of people and among them one set is called Gnani.  (Knowledgeable or Learned Person).   Krishna says  that Gnani fully understands that Brahmam is the Ultimate and it is really rare to see such Gnani.   He also told Arjuna that He did not meet any Gnani during His current incarnation.   Finally He did not see any Gnani, before leaving to Sri Vaikuntham, His traditional place.    At that time, He decides that He would create a Jeevathama, who would say that Lord Krishna is everything, whether it is the food that he is eating, or the water he is drinking or the betel that he could chew after the meal, “unnum soru, parugum neer, thinnum vetrilai ellam kannane”.

In Sri Vaikuntham, the Traditional House of Sri Vishnu

One day, Sri Vishnu called his most important subordinates, Ananthan, (His Bed), Garudan (His Carrier) and Vishvaksenar (His General) and informed them that there are some important tasks to be be done in the world and they all need to play some important roles in that task.   He informed Ananthan, that it would be the time for him to serve the punishment that he took when he was Lakshmanan.     He would become a Tamarind tree and serve Him as His house.  He ordered Vishvaksenar to translate the veda, which is in Sanksrit to Tamil, so that many more people can benefit by learning vedas and follow what is told in the veda.   He also ordered Garudan that he should help Vishvaksenar, in documenting the tamil translation that would be created by Vishvaksenar.

Next in Southern Tamil Nadu

Kaari was from a clan, who were vaishnavites for generations, living in Thirukurukoor or Alwarthirunagari, which is on the banks of the holy river Thamirabarani, in southern Tamil Nadu.   His father, Porkaariyaar arranged the marriage for Kaari with a girl by name Udaya Nangai, another staunch vaishnavite, living in another pious town by name, Thiruvanparisaaram.   They did not have any child for a while.    Once when they went to Thirukurunkudi Temple, they prayed to Nambi, the presiding deity and requested His blessings for a child.  Since Kaari and Udaya Nangai were Vishnu’s devotees for a long time and for generations, Nambi decided to help them.  Nambi asked them what kind of a child that they would like to have.   Without hesitation, they responded to Nambi, that they  would like to have a child like Nambi Himself.

Nambi in Thirukurnkudi temple, is a very beautiful and colourful deity.  sundhara nambi thirukurungudi (1)

Nambi blessed them and after a few days Udaya Nambi became pregnant.

First Sixteen Years of Namazhwaar

Udayanangai gave birth a male child and named him as Sadagopan, who will later become Namazhwaar.   Sadagopan was born as a feature of Vishvaksenar, on the Tamil Star, Visakam, in the Tamil Month of Vaikasi, 43 days after the start of Kaliyugam.   He was born in a place called Appan Koil, in the town Thirukurukur and this is called as Azhwaar Thirunagari today.    Kaliyugam started immediately after Sri Krishna, the 9th incarnation of Mahavishnu in Dasaavathaarm, left this  world and reached Srivaikuntham.     We have seen the first three Azhwaars(muthal azhwaars), namely, Poigai, Bootham and Pei Azhwaars and the fourth Azhwaar, namely, Thirumazhisai Azhwaar.  Nammazhwaar is the Fifth Azhwaar.

Kaari and Udayanangai were extremely happy with the child.  But the child did not move, did not smile or did not even cry.   Both the parents were very worried and started visiting more temples for prayers.

Both Kaari and Udayanangai were planning to take Sadagopan to the temple in a place called Thiru Tholai Villi Mangalam.  The prime Deity there is called Devapiran and He is a very kind and beautiful deity.    People advised Kaari and Udayanangai against taking the child to the temple and cautioned them that the child would become the God’s child or in other words, the child would be totally associated with Devapiran and would serve only Him for ever.    In spite of all these, Kaari and Udayanangai took Sadagopan to the temple because of their devotion and respect for Devapiran.    Like what others said, Perumaal became both father and mother for Namazhwaar.    This became evident later, when Azhwaar composed the Divyaprabandam hymns on Devapiran.   In that he says that he got Devapiran as his father and mother through his thinking, words and actions. “Sindhaiyaalum, sollaalum, seigaiyinaallum devapiranaiye thandhai, thaai endru adaintha vankurukur sadagopan” (6-5-10).  We can see this even today during the fifth day celebrations in Azhwaar Thirunagari on the Vaikasi Visakam festival.   This is called Vidaiyethu Uthsavam (send-off festival) and the garuda sevai of all perumaals of Nava Thirupathi (nine temples around Alwarthirunagari) would be performed during that time.    As soon as each perumaal departs the temple, Azhwaar will return to his place, except for Devapiran.    When Devapiran is about to leave, Azhwaar will stand in his place and keep sending Devapiran off.   He would stay there in the same place, in front of the temple, till Devapiran goes through the entire street and till the time He turns to the next street. Similarly Devapiran also will keep turning his face towards Azhwaar to see and wish him, His son.

Back to the childhood of Azhwaar.   One day suddenly, Azhwaar crawled towards a tamarind tree and went inside a hole in the tree.   That tamarind tree is still there inside Azhwaar Thiru Nagari Temple.    That tamarind tree is the Ananthazhwaan, perumaal’s ever serving assistant, as Bed, and everything.

This is how the first sixteen years of Namazhwaar had passed.   He did not talk, move or cry.  He went inside the tree and was there without any movement.  After the sixteen years whatever happened were all wonder, wonder and wonder.   We will see some of them in the coming weblogs.

Namazhwaar’s Glories / நம்மாழ்வாரின் பெருமைகள்

For English Version, please click here, thanks

நம்மாழ்வார் பற்றிய இந்த வலைப்பதிவை பல பகுதிகளாகப் பிரிக்கலாம்.

அடையபோகும் பொருள் மிக உயர்ந்ததாக இருந்தால், அடையும் வழியும் சிரமானதாகவே இருக்கும்.   அந்த வழியைச் சொல்லி , அயர்ச்சி காரணமாக,  அதை பாதியிலேயே நிறுத்தாமல் இருக்க, நம் முன்னோர்கள், நமக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அந்த பொருளின் பெருமைகளை முதலில் சொல்லி பிறகு அதன் வழியை சொல்லுவார்கள்.  (போக்கியத்தை சொல்லி பின் போகும் வழியை சொல்வார்கள்).

அதே போல்,  இப்படி பல பகுதிகளை எழுத துவங்குவதற்கு முன்பு நம்மாழ்வாரின் வைபவங்களை சொல்லி ஆரம்பித்தால் அதுவே நமக்குத் துணையாக இருந்து நம்மை அழைத்துக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையில் சில வரிகள் :

 1. ஸ்ரீமந் நாராயணனின் அன்புக்குப் பாத்திரமான அவரது கட்டளைகளை ஸ்ரீ வைகுண்டத்தில்இருந்து நிறைவேற்றும் தலைமை தளபதியான விஷ்வக்சேனரின் அம்சம்நம்மாழ்வார்
 2. திருவரங்கனே, ஆழ்வாரான ஸ்ரீ சடகோபனை `நம்மாழ்வார்  என்று ஆசையுடன் பெயரிட்டு அழைத்ததார்
 3. நம்மாழ்வாரின் தாயும் தந்தையும் திருக்குறுங்குடி என்ற திவ்யதேசத்தில் எழுந்தருளி இருக்கும் நம்பியைச் சேவித்து வணங்கி, அவரை போலவே குழந்தை வேண்டும் என்ற கேட்க,  எம்பெருமான் தானே வந்து நம்மாழ்வாராக அவதரித்ததாக கூறுவர்.
 4. மற்ற ஆழ்வார்கள், அந்தந்த திவ்ய தேசங்களுக்குச் சென்று, அங்கே உள்ள மூர்த்திகளைப் பாடினார்கள். ஆனால் திவ்ய தேச பெருமான்கள், நம் ஆழ்வாரிடம் வந்து பாடல் பெற்றுக் கொண்டனர்.
 5. ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்கின்ற நான்கு வட மொழி வேதங்களுக்கு இணையாக திராவிட மொழியான தமிழில்திருவிருத்தம், திரு ஆசிரியம், திருவாய்மொழி , பெரிய திருவந்தாதி எனும் நான்கு தமிழ் மறைகளை வழங்கினார். அதனாலேயே அவர் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றழைக்கப்படுகிறார்
 6. நம்மாழ்வார் என்ற பெயரையும் சேர்த்து அவருக்கு மொத்தம் 35 திருநாமங்கள். பிரபன்ன ஜன கூடஸ்தர் என்று சரணாகதி வழியில் முக்தி அடைய நிற்கும் பக்த கூட்டத்தின் தலைவர்
 7. நம்மாழ்வார், ஆழ்வார்களுள் அவயவி எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.  மற்ற ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.  இதில்,
  • பூதத்தாழ்வாரை தலையாகவும்,
  • பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும்,
  • பெரியாழ்வாரை முகமாகவும்,
  • திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும்,
  • குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும்,
  • தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும்,
  • திருமங்கையாழ்வாரை வயிறாகவும்,
  • மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு இருக்கிறார்.
 8. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார், மற்ற எந்த ஸ்தலங்களில் உள்ள பெருமாளைப் பாடாமல்,”கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்கும், பதினொரு பாசுரங்களால் நம்மாழ்வாரைப் பாடியுள்ளார்.
 9. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட ராமாயணத்தை, கம்பர் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது,‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோஎன்று பாடின நம் சடகோபனைப் (நம்மாழ்வார்) பாடினாயோ?‘ என்று பெருமாள் கேட்டாராம். கம்பரும் நம்மாழ்வாரைப்  போற்றி, ‘சடகோபரந்தாதி‘ என்ற நூலை இயற்றினார்.
 10. நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் விளக்கத்தை (வியாக்கியானம்), அரங்கனே ஓர் ஆண்டு காலம், மற்ற எந்த விழாக்களும் இல்லாமல் தொடர்ந்து கேட்டார்.
 11. மோட்சம் செல்லும் யாரையும் இந்த உடம்புடன் எடுத்து செல்வதில்லை. ஆனால் திருமாலிருஞ்சோலை பெருமான், ஆழ்வாரை இந்த உடலுடன் உடனே மோட்சத்திற்கு எடுத்து செல்ல விழைந்தான்.
 12. அதேபோல், மோட்சம் சென்ற யாரும் பூவுலகிற்கு திருப்பி அனுப்பப் படுவதில்லை. ஆனால் மக்கள் கேட்டுகொண்டதற்காக, ஆழ்வாரை அரங்கன் திருப்பி அனுப்பினார்.
 13. இன்றும் திரு அரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் ஆழ்வாரின் பங்கு மிகப் பெரியது. பெருமாள், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுக்கும் போது, பெரியன் (நம்மாழ்வார்) தான் வந்து சமரசம் செய்து வைப்பார். அதனால் நமக்குக் கிடைப்பது யாதெனில் தாயாரும் பெருமாளும் சேர்ந்து இருந்து நம்மை ஆசீர்வதிப்பது.
 14. நம்மாழ்வாரின் பாடல்களை, மதுரை தமிழ் சங்கம் ஏற்றுக்கொள்ளாத போது, மதுர கவி ஆழ்வார், சங்கப் புலவர்களை, நம்மாழ்வாரின் ஒரு இரண்டே வரி உள்ள பாடலைக் கொண்டு, ஜெயித்து காட்டியபின் அவர்கள் பாடியது, நம்மாழ்வார்வாழ்வது திருக்குருகூரோ இல்லை, திருப்பாற்கடலா, அவர் பெயர்  பாராங்குசனோ இல்லை நாராயணனோ, அவரின் கழுத்தில் உள்ள மாலை துளசியா, அல்லது  வகுள மலர்களால் ஆனதா? உங்களுக்கு மனிதர்கள் போல் இரண்டு தோள்களா  இல்லை தேவர்கள் போல் நான்கோ? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப் போனால் திருமாலும் சடகோபனும் இருவர் அல்ல, ஒருவரே என்பது புரியும்.”சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?     நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம் துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?   உளவோ பெருமான் உனக்கு“.
 15. பன்னிரண்டு ஆழ்வார்களும் சேர்ந்து சுமார் நாலாயிரம் தமிழ் பாடல்கள் உள்ள திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்து இருந்தாலும், அவை கடைசி ஆழ்வாரான திருமங்கையாழ்வார் காலத்திற்கு பிறகு நடை முறையில் இல்லாமல் இருந்தது. பின்னர் நம்மாழ்வார் தான் தன்னுடைய ஆயிரம் பாடல்களுடன் மற்ற மூவாயிரம் பாடல்களையும் சேர்த்து நாதமுனிகள் மூலம் நமக்கு கொடுத்துள்ளார்.
 16. அதே போல், இன்று நாம் ‘காரே கருணை இராமானுஜ‘ என்று போற்றி புகழ் பாடும் சுவாமி இராமானுஜன் என்ற ஆச்சாரியாரை நம் வைணவத்திற்கு காட்டிக் கொடுத்ததும் நம்மாழ்வார் தான்.
 17. எப்பொழுதெல்லாம் நாம் ஆழ்வார் பிறந்த ஊரான குருகூர் என்றவார்த்தையைக் கேட்கிறோமோ, திருவாய்மொழி பாசுரங்களில் குருகூரை உச்சரிக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் தென்திசையில் உள்ள ஆழ்வார் திருநகரியை நோக்கி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நம் ஆசாரியர்கள் நமக்கு வழிகாட்டுகின்றனர்.
 18. வைஷ்ணவ குல அதிபதிஅதாவது வைஷ்ணவர்களுக்கு முதல்வர் என்று ஆளவந்தார் என்ற ஆச்சாரியார்  அவரை போற்றுகிறார். தன்னுடைய ஸ்தோத்ர ரத்னத்தின் 5-வது ஸ்லோகத்தில் தனக்கும் தன்னுடைய சிஷ்யர்களுக்கும், குலத்தவருக்கும் தந்தை, தாய், பிள்ளை, செல்வம் மற்றும் எல்லாம் வகுளாபரணனே என்று ஆளவந்தார் நம்மாழ்வாரின் புகழ் பாடுகிறார்.
 19. எல்லா வைணவ கோவில்களிலும் தீர்த்தத்திற்கு பிறகு நமக்கு சடாரியாக சாதிக்கப்படுவது  சடகோபன் என்ற நம்மாழ்வார் ஆகும்.
 20. வைஷ்ணவத்தில், குருபரம்பரை என்று சொல்லபடுகின்ற ஆச்சார்யர்கள் வரிசையில் கடைசி ஆசார்யாரான ஸ்ரீ மணவாளமாமுனிகளும், நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து, “உண்டோ வைகாசி விசாகத்துக் ஒப்பு ஒரு நாள், உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் ? உண்டோ, திருவாய்மொழிக்கு ஒப்பு ? தென்குருகைக்கு உண்டோ ஒருபார் தனில் ஒக்கும் ஊர் ?” என்று நம்மாழ்வார் பிறந்த நட்சத்திர தினமான வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும், அவர் கொடுத்த திருவாய்மொழியையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார்.
 21. இந்த ஆழ்வார் மட்டுமே, தலைவியாக (பராங்குச நாயகி), தோழியாக மற்றும் தலைவியின் தாயாக என்று மூன்று விதமான பெண்கள் பார்வைகளிலும் பாசுரங்களையும் பாடி உள்ளார். திருமங்கையாழ்வார் தலைவியாகவும், தாயாகவும் பாடியுள்ளார்; தோழிக்கு சொல்வது போல் கூட பாசுரம் உண்டு; ஆனால் தோழியும் பாடுவது போல் இந்த ஆழ்வார் ஒருவர் மட்டுமே பாடியுள்ளார்.

இப்படி நம்மாழ்வாரின் பெருமைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.  இருந்தாலும் இந்தக் குறிப்புகளுடன் நாம் அவரது அவதாரமான அடுத்த பகுதிக்குச் செல்வோம்.

====================================================================

Glories

We can divide this weblog about Sri Namazhwaar into many parts.

Superior things are not easy to achieve.   The steps, we need to take to attain those will be hard.   In order to motivate ourselves in not abandoning the mission half way through, our forefathers have always insisted on talking about the glories of the superior things first and keep refreshing our minds with those greatness of the end-result.

In the same way, before start writing the specific details of many aspects of Sri Namazhwaar’s life,  following few lines about the glories of Sri Namazhwaar will keep us motivated and guide us through in this pursuit.

 1. Sri Vishvaksenar is the Chief General for Paramathma, (same as Sri Narayana or Sri Vishnu), carrying out all the orders of Sriman Narayana from Sri Vaikuntham and he himself was born as Sri Namazhwaar
 2. The Perumal in Srirangam, Sri Nam Perumal, (Azhahiya Manavaalan), Himself has named, Sri Sadagopan, the original name of Namazhwaar, as Nam Azhwaar.
 3. The parents of Sri Namazhwaar went to Thirukurunkudi, a town in southern part of India and visited the temple and offered prayers to Sri Nambi, the Vishnu at the temple.   They prayed and requested Nambi to offer them a child, as they never had a child.   Since they are so pious and have been devotees of Sri Vishnu for many generations, Vishnu wanted to bless them with a child.   When He asked what kind of a child they are looking for, the parents were so thrilled and responded that they would like to have a child like Him.   Nambi could not imagine anyone like Him, so He decided that He would himself be born as their Child.  In all Vishnu temples, a crown with Sri Vishnu’s feet, is used to bless the devotees and it is called Sri Sadagopam or Sri Namazhwaar.
 4. All other Azhwaars have gone to the respective temples to praise and create hymns about the Vishnu Gods in those temples, whereas the respective Vishnu Gods have gone to the place where Sri Namazhwaar was residing to get the hymns on Them.
 5. In Vedas, which are in Sanskrit, there are four major sections called, Rig, Yajur, Saama and Atharvana.   Sri Namazhwaar produced the equivalents to those Vedas, in the Dravidan language Tamil, called Thiruvirutham, Thiru Asiriyam, Thiruvaaimozhi and Periya Thiruvandhaathi.    Just because of this, Azhwaar is also called as Vedam Tamil Seitha Maaran, as one of his names.
 6. He has 35 names including the name Namazhwaar.   He has a name called, “Prapanna Jana Koodasthar“, meaning that He is the Leader of the group of devotees, who are desirous to reach the Moksham through absolute surrender.
 7. Among the twelve Azhwaars, Namazhwaar is perceived as the head of all azhwaars.   In fact, Namazhwaar is called Avayavi (total body) and all other azhwaars are called Avayavagangal (parts of the body).    Following explains further on this:
  • Boothath azhwaar as Head
  • Pogai azhwaar and Pei azhwaar as the two Eyes
  • Periya azhwaar as the Face
  • Thirumazhisai azhwaar as the Neck
  • Kulasekara azhwaar and Thirupaanazhwaar as the two Hands
  • Thondarapodi azhwaar as the Chest
  • Thirumangai azhwaar as the Navel (thoppul) and
  • Madhurakavi azhwaar as his Feet
 8. One of the twelve azhwaars, is Madhurakavi Azhwaarand he is the disciple of Sri Namazhwaar.   While all azhwaars have created hymns about Vishnu, Madhurakavi Azhwaar has created hymn only about Namazhwaar, called “Kanninun siru thambu”, consisting of 11 hymns.
 9. The Ramanayanam in Tamil is written by a poet called Kambar and it is called Kamba Ramayanam.   When Kambar launched Kamba Ramaayanam in Srirangam Temple, the temple priest in a superhuman state, made a very loud noise and asked Kambar, “karpar rama piranai allal matrum karparo, endru  paadina Nam Sadagopanai (Namazhwaar) paadinaayo?”, meaning that “did Kambar sing about Namazhwaar, who has so much respect and devotion to Sri Ramaa, and who had  proclaimed, “will anyone learn, anything other than the glories of Ramaa“. People treated this voice of the priest as Perumaal’s direct instructions.  On hearing this, Kambar, created a Tamil literature consisting of 100 verses called “Sadagopar Anthathi”.
 10. Srirangam Perumaal, listened to the explanation of Thiruvaimozhi, written by Namazhwaar, for about a year continuously, without any break and without any other function in the temple.
 11. As per Vaishnavism, whoever who attains Moksham, or the eternal world, will not be allowed to go with this body, whereas the deity in Thirumalliruncholai (A hilly town near Madurai, called Azhgar Malai) wanted to carry Namazhwaar to the eternal world with his body.
 12. In the same way, whoever, who has attained Moksham, will never be returned to this world, whereas the exception is made in the case of Namazhwaar, in the sense, that the Vishnu in Srirangam, Thiru Arangan, returned Namazhwaar to this world on the persistent requests from the people in this world and they pleaded that they would not be able to live in this world without Azhwaar, out of sheer respect, love and affection towards Namazhwaar.
 13. Even today, the role, Namazhwaar, plays in one of the most important functions of Sri Rangam temple, namely, Panguni Uthiram, is very significant.  After being with Nachiyaar (Goddess) in Uraiyur, the Perumal comes back to Srirangam, and the Srirangam Thayaar (Goddess) refused to let the Perumal in.   At that time, it is only Namazhwaar, who mediates between Perumaal and Thayaar and brings them together, so that people like us are able to get the blessings of the Perumal and Thayaar together.
 14. When Madurai Tamil Sangam, did not accept the hymns of Sri Namazhwaar, Madhurakavi Azhwaar won them using one hymn of two lines of Sri Namazhwaar. After that, the sangam recognised Namazhwaar by comparing him with Sri Mahavishnu.   They were asking whether Namazhwaar lives in Thirukurukur or Thiruparkadal.  Is his name Parangusan or Narayanan ?  Does he wear the flower Vagula or Thulasi? Does he have two or four shoulders?  “semam kurugaiyo? seiya thirupaarkadalo? Namam Paragunsano, Narayanano? – Thamam thulavo, vagulamo? Thol irando, nango? ulavo perumaan unakku?”
 15. Divya Prabandam is set of about 4000 hymns on Sri Mahavishnu and Sri Mahalakshmi, the Divya Thambathiigal.   Twelve Azhwaars including Namazhwaar, have contributed to create this Divya Prabandam.  Divya Prabhandam was not in use after the last Azhwaar, Thirumangai Azhwaar, attained Moksham.  It is only Namazhwaar, who brought them back to this world, by giving not his 1000 plus hymns, but also the other 3000 hymns of other Azhwaars to us through Sri
 16. In the same way, Sri Namazhwaar is the one, who proposed Swami Ramanujar, a great achaaryar, whom we often refer to as “kaare karunai Ramnuja“, meaning “Ramanuja, the swami with abundant and unlimited kindness“, to our Vaishnavism.
 17. It has been recommended to us by our acharyaars, that whenever we hear “Thirukurukur“, the name of the birthplace of Sri Namazhwaar, or when we mention “Thirukurukur“, while reciting Thiruvaimozhi, the hymn created by Namazhwaar, we should turn towards the direction (South) of Thirukurukur, and pay our tributes to Sri Namazhwaar.
 18. Sri Alavandar, one of the reputed Acharyars of our Vaishnavism, the grandson of Sri Nathamunigal, praised Namazhwaar as the “Vaishnava kula Athipathi“, meaning “the Chief of Vaishnavaas”, as the fifth sloga in his creation, Stotra Rathnam.   In that Slokam, he says that Namazhwaar is the father, mother, child and all the wealth for him, his disciples and his tribe or in other words he praises that Namazhwaar is everything to him, his disciple and tribe.
 19. In all vishnu temples, we get a spoon of holy water (Theertham), a touch by the crown on our head, which has the lotus feet of Sri Vishnu (Satari) and that Crown is known as Sri Sadakopan or Sri Namazhwaar.
 20. Guruparamparai in Vaishnavism talks about the list of Acharyaars and their disciples in a circular fashion.  The so-called last acharyaar, in the list is Sri Manavaala Maamunigal.  (the next one in the list is Sri Mahavishnu, who starts the cycle).    He praises Sri Namazhwaar  as “uNDO VaikAsi VisAhatthukku oppu oru nALL, uNDO SatakOparkku oppu oruvar ?, uNDO ThiruvAimozhikku oppu ?, thennkuruhaikku uNDO oru paar tanil okkumUr ?”meaning, “is there a day matching the glory of vaikAsi VisAkam ? Is there an Azhwaar, whose glory matches that of Swamy Namazhwaar ? Is there a Prabhandham that comes close to Thiruvaamozhi? Is there a Divya Desam that can match the greatness of Alwarthirunagari ?
 21. Namazhwaar alone had written hymns, where he had assumed himself as three different types of women when he wrote some of his hymns.  One is the sweetheart  or partner of Perumal, called Parangusanayaki,  the second is the mother of the sweetheart and the third as the friend of the sweetheart. Thirumangai Azhwaar had also written hymns as His sweetheart or partner and the mother’; he had also written hymns, where the information is shared with the friend, but there is no direct hymn as sung by the friend. This azhwaar alone has done for all the three types of women.

Thus we can keep on listing the glories of Sri Namazhwaar.  However, let us continue with the next weblog about his birth.

Vishnu’s Five Weapons / விஷ்ணுவின் பஞ்சாயுதங்கள்

For English Version, please click here, thanks

ஆயுதங்கள்

  ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆயுதங்கள்  பற்பல. அவைகளில் முக்கிய ஆயுதங்கள், பாஞ்சசன்னியம் என்ற சங்கு, சுதர்சனன் என்ற சக்கரம், கௌமோதகீம் என்ற கதை, சார்ங்கம் எனும் வில், மற்றும் கட்கம் அவரது வாள் .  

ஸ்ரீ மகா விஷ்ணு விற்கு  எல்லா ஆயுதங்களுமே 

 • ஆயுதங்கள் ஆகவும்
 • ஆபரணங்கள் ஆகவும்
 • அடையாளமாகவும் உள்ளன.  

கதை,  வில், மற்றும்  வாள், ஆயுதங்களாக பல கதைகளிலும், சரித்திரங்களிலும் கண்டுள்ளோம்.   சக்கரமும் சங்கும் ஆயதங்களாக உள்ள இடங்களை இந்த வலைபதிப்பில் பார்க்கலாம்.    

சங்கும் சக்கரமும் ஆயுதங்களாக இருந்து பெருமானை காப்பாற்ற வேண்டும் என்று பெரியாழ்வார்  பல்லாண்டு பாடுகிறார்.  ‘வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு” .     அதே போல், ஆயுதங்களே, நீங்கள் உறங்காமல் பெருமானை பார்த்துகொள்ளுங்கள் என்று பெரியாழ்வார் சொல்கிறார்.

“உறகல் உறகல்  உறகல் ஒண்சுடர் ஆழியே சங்கே, அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே, இறவு படாமலிருந்த எண்மர் உலோக பாலீர்காள், பறவை யரையா உறகல் பள்ளியறைக் குறிக் கொண்மின்”.

சக்ராயுதம்

 ஸ்ரீ விஷ்ணு  சக்ராயுதத்தை உபயோகித்த சில இடங்கள்.  

 • கஜேந்திர மோட்சத்தில் , யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன “சக்கரமே.வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டான் 2-10-8″
 • மஹாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்த போது கோரைப் பற்களாக அமைந்து தீயவர்களைக் கிழித்து, அந்தக் கோரைப் பற்களால் பூமியை கடலுக்கடியிலிருந்து தூக்கி வருவதற்கு துணையாக இருந்தது சுதர்சன சக்கரமே
 • வாமனா அவதாரத்தில், மாவலி சக்கரவர்த்தி வாமனனனுக்கு மூவுலகை தானம் செய்ய தாரை வார்க்க முயலும் போது தண்ணீர் விழும் துவாரத்தை ஒரு வண்டாக மாறி சுக்ராச்சாரியார், தடை செய்தபோது ஒரு தர்பை கொண்டு அதன் கண்ணினை குத்தியது சக்ரதாழ்வார்  – “சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையனே ! அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே ! அச்சோ அச்சோ (பெரியாழ்வார் திருமொழி 1-9-7)
 • ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் போது சுதர்சன ஆழ்வார்  கூர்மையான கை நகங்களாக அமைந்து இரணியன் வயிற்றைக் கிழித்து வதம் செய்தார்.
 • கிருஷ்ணாவதாரத்தின் போது சிசுபாலனை வதம் செய்ய உதவியதும் சுதர்சன் சக்கரமே.  ஜெயத்ரதனை வதம் செய்த போது, சூரியனை மறைத்து, உதவியது ஸ்ரீசுதர்ஸன சக்கரம்தான் – “தேவகி தன்  சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப 4-1-8
 • அம்பரிஷ மகாராஜாவிடம் கோபித்துக்கொண்ட துர்வாச முனிவரை துரத்தித் தாக்கியதும், அவரை திரும்ப அம்பரிஷ  மகாராஜாவிடம் சரண் அடைய செய்ததும் ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்சன சக்கரமே.

சங்கும் ஆயுதமே

ஸ்ரீ விஷ்ணு சங்கை ஆயுதமாக உபயோகித்த இடம்.

 • மகாபாரதத்தில், குருஷேத்ர யுத்தத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய பாஞ்சசன்னியத்தை எடுத்து ஊத, துரியோதனாதிகளுக்கு அது பெரிய ஒலியாக கேட்டு அவர்களின் இதயங்களை சிதறச் செய்தது.     பாண்டவர்களும் அங்கே இருந்தனர்.   ஆனால் அந்த ஒலியானது துரியோதனனுடைய சகோதர்களை மட்டுமே  வலுவிழக்கச் செய்தது.  (பகவத் கீதை அத்தியாயம் 1 ஸ்லோகம் 19).    “பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே ! 3-3-5 ”  இங்கே பாஞ்சசன்னியம் ஆயுதமாகத்தானே செயல் பட்டது.

ஆயுதங்கள் ஆபரணங்களே

ஸ்ரீ மகா விஷ்ணு  இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாத சமயங்களில் கூட  அவைகளை தன் மீது அணிந்துகொண்டு இருக்கிறார்.    தன் பக்தர்களைக் காப்பதற்கு  அவைகளை எப்போதும் தன்னுடனே வைத்துக்கொண்டு உள்ளார்.  அவைகளைப் பார்த்து ஆழ்வார்களும் ஆச்சர்யார்களும் வியந்து பகவானின் அணிகலங்களாகவே கொண்டு உள்ளனர். அணிகலன்கள் அழகாகவும் அபயம் அள்ளிப்பதாகவும் உள்ளன. பெருமாளின் பஞ்சாயுதங்களின் அழகைச் சொல்லும் பற்பல பாடல்களில் சில.

 • “நெய்ததலை  நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே” என்று பெரியாழ்வாரும்,  
 • சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்” என்று நம்மாழ்வாரும்
 • கையினார் சுரிசங்கனலாழியர் !” என்று திருபாணாழ்வாரும்
 • பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்” என்று ஆண்டாளும்
 • மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே” என்று குலசேகராழ்வாரும்
 • தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்கு” என்று திருமங்கை ஆழ்வாரும் பாடி உள்ளனர்.

ஆண்டாள் பாஞ்சசன்னியம் என்ற சங்குவின் பெருமை பற்றியே “கற்பூரம் நாறுமோ” என்று தொடங்கும் ஒரு பத்து பாடல்கள் தன்னுடைய நாச்சியார் திருமொழி என்ற பிரபந்தத்தில் வைத்துள்ளார்.  (ஏழாம் பத்து).  மற்ற ஆழ்வார்களின் படைப்புகளும், அவருடைய ஆயுதங்களின் அழகையும் அவைகளுடன் கூடிய அவரது அழகையும் பாடியுள்ளன.

அடையாளமாக ஆயுதங்கள்

ஒரு சமயம் சுவாமி ராமானுஜர் திருப்பதிக்கு சென்று இருந்த போது சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் ஒரு கருத்து வேறு பாடு வந்தது.    ஸ்ரீ வெங்கடாசலபதி சைவக் கடவுளா அல்லது வைணவக் கடவுளா என்பதில் இரு பிரிவும் கடுமையா வாக்கு வாதம் செய்தனர்.     சுவாமி ராமானுஜர் பல விஷயங்களை சொல்லியும், இது ஒரு முடிவுக்கு வராததால் சன்னதி மூடும் சமயத்தில், சுவாமி சங்கு சக்கரம் மற்றும் சிவனுடைய ஆயுதங்களான சூலம் ஆகியவற்றை பெருமாள் சன்னதியில் வைத்து அன்று இரவு அக்கடவுளையே ஒரு முடிவு சொல்லும்படி பிரார்த்தனை செய்து வந்தார்.  அடுத்த நாள் காலை ஸ்ரீ வெங்கடாசலபதி சங்கு சக்கரங்களை ஏந்திக் கொண்டு காட்சி அளித்தார்.   அது முதல் அவரது ஆயுதங்கள் திருமாலை அடையாளம் காணவும் உபயோகமாக உள்ளன.

பஞ்ச ஆயுதங்கள்

மஹாவிஷ்ணு, ராம அவதாரம் எடுத்தபோது சக்கரத்தாழ்வார், “பரதனாக அவதாரம் எடுத்தார்’ என்றும்  சங்கு, சத்ருக்னனாக அவதாரம் எடுத்ததாக  புராணம் சொல்கிறது.

அதேபோல் ஆழ்வார்களில், பொய்கை ஆழ்வார் பாஞ்சசன்னியம் என்ற சங்கின் அம்சமாகப் பிறந்தார் என்றும், பூதத்தாழ்வார் கதையின் அம்சமாகப் பிறந்தார் என்றும், பேயாழ்வார் நந்தகம் என்ற வாளின் அம்சமாகப் பிறந்தார் என்றும், திருமழிசை ஆழ்வார் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தார் என்றும், திருமங்கை ஆழ்வார் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாகப் பிறந்தார் என்றும் குறிப்புகள் கூறுகின்றன.

இராமானுஜரின் ஐந்து ஆசார்யார்களில் ஒருவரான திருவரங்கத்தமுதனார் என்ற ஆச்சார்யார், இராமனுஜன நூற்றுஅந்தாதியில், பஞ்சாயுதாழ்வார்களே இந்நிலவுலகைக் காக்க எம்பெருமானாராக வந்து அவதரித்தார் என்று இராமானுஜரைப் பற்றி சொல்கிறார்.  

 “அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும், படையொடு நாந்தகமும் படர் தண்டும், ஒண் சார்ங்கவில்லும், புடையார் புரிசங்கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று, இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே(ராமானுச நூற்றந்தாதி – 33)

இப்படியாக பகவானின் பஞ்சாயுதங்களும் அவருக்கு அழகு சேர்ப்பதாகவும் அவருடைய கட்டளைகளை ஏற்று கடமை செய்யும் ஆயுதங்களாகவும் இருக்கின்றன.

===================================================================

Weapons :

There are many weapons used by Sri Mahavishnu,  plough by  Balarama ,  axe by  Parasurama  and  among them five are the most prominent ones.    They are :

 • Conch by name Panjasaniyam
 • Discus by name Sudharsan
 • Mace by name Kowmothakeem
 • Bow by name Sarngam
 • Long sword by name Katkam

The weapons of Sri Maha Vishnu serve the following purposes for Him

 • Weapons
 • Ornaments to add beauty to Him and
 • identification

We have seen the weapons like Mace, Sword and Bow being used in many places in history. We will see the places where Sri Vishnu has used the Discus and Conch as weapons in the following instances.

Periazhwaar writes a hymn in which he wishes the Conch and the Discus to live many, many years, to support and protect Sri Vishnu.   “vaddivaar sothi valaththuraiyum sudar aazhiyum pallaandu, padaipor pukku muzhangum appaanchasaniyamum palllaandu“. Similarly, in another hymn, Periazhwaar says, 

uragal urgal urgal, onsudaraazhiye, sankey, araveri nandaga vaale, azhakiya Sarngame, thande, iravu padamaliruntha enmar ulogapaaleergaal, paravaiyaraiyaa urgal palliyaraikurik konmin“, 

meaning that he requests all the weapons, like discus, conch, sword, bow and mace not to sleep so that they can protect the Lord, Sri Mahavishnu, who is sleeping inside.

Weapon Discus

The following incidents show where Sri Mahavishnu has used the weapon Discus:

 • The Discus, Sudharsana, cut open the mouth of Mahendran, the Crocodile, which was holding the leg of Gajendra, an Elephant,  and saved the life of Gajendra when Gajendra surrendered itself to Sri Vishnu in the famous incident called Gajendra Moksham.  “Chakkarame, vezham thuyar keda vinnor perumaanai aazhi pani kondaan“, 2-10-8
 • Sudharsan Chakkaram took the form of Fangs and killed the bad, when Sri Mahavishnu took the Varaha incarnation.  The same fangs were used to lift the earth from the bottom of the sea
 • In Vaamana Incarnation, Sri Vishnu asked Mahavalli Chakravarthi, the emperor to give Him, a land of 3 steps, which He would use his feet to measure.   When Mahavalli agreed to give and started the hand over process by allowing the falling water to go to His hands through Mahavalli’s hands, Sukrachariar, the Guru for Bad Aliens, took the form of a bee and blocked the snout of container through which the water was about  to pour. At that time Vaamana, took a small piece of grass and punctured the snout of the container, which hurt the eyes of Sri Sukrachariar.  Azhwaar says that this piece of grass is the Sudharsana Chakkram for this Avatar.     “Sukiran kannai thurumbaal kilariya Chakkarak Kaiyane!  achcho, achcho, sangam idaththaane. achcho achchho” 1-9-7
 • Sudharsana chakram took the form of the sharp nails in both hands, in Narasimha Incarnation and helped to tear the stomach of Hiranyan, when Narasimha killed Hiranya.
 • When Sri Krishna killed Sisupalan, the discus, Sudharsan was with Him.  Similarly the discus Sudharsan helped to make the sun disappear, when Jayathrathan was killed in Mahabharath.   “Devakithan siruvan Aazhi kondu andru iravi maraippa” 4.1.8
 • When the saint, Dhurvasaa got angry with the  emperor Ambarisha, the discus Sudharsana chased him all over the place, and made Dhurvasa surrender to Ambarisha.

Conch, a Weapon

How and where did Mahavishnu could use the Panchasaniyam, the Conch as a weapon ?

 On those days, before beginning the war, the kings were allowed to blow their conchs  to announce the start of the war. In Mahabharatham, before the start of the Kurukshetra war, eminent kings and generals  were blowing their conchs before starting the war. Lord Krishna was given the honour to blow this conch first for the Pandavas. Hrishikesha (another name for Krishna) blew the Panchajanya, a conch capable of producing huge sound which would demoralise any enemy.  Krishna used his Panchasaniyam to make the big sound and that sound made shivering waves in the minds and hearts of all the Dhuriyodana brothers.  The Pandava brothers and other kings who were supporting the Pandava were also there, but the sound from Panchasaniyam  only disturbed the dhuriyodanas.   (Bhavagat Geethai Chapter 1 Sloga 19).  “Patraar nadunga mun Panchasanniyaththai vaai vaitha por erea” 3-3-5 this is by the PeiyaAzhwaar.   In the above case, Krishna used the Conch as a Weapon, isn’t?

Weapons as Ornaments

When the weapons are not used, He  still adorns them on His body, to protect His followers without any delay.   As the weapons appear on His body they appear more beautiful. Our Azhwars and Aacharyas have portrayed them as ornaments and they enjoyed Him and His beauty thoroughly along with these weapons as ornaments.   Some examples from Azhwaar’s hymns are given below :

 • Neithathalai nemiyum sangum, nilaaviya kaithalangal vanthu kaaneere – Periyazhwwar
 • sangu sakkarangal endre kaikoopum – Nammazhwaar
 • kaiyinaar surisank anal aazhiyaar – Thiruppaanaazhwaar
 • Padmanaban kaiyil aazhi pol minni valam puri pol nindru athirnthu thaazhaathey saarngam uthaitha sara mazhai pol – Aandal
 • minvatta chudaraazhi venkatakkon thannumizhum ponvattil pidithudane papaperuven aavene – Kulasekara azhwaar
 • Tholaar sudarthikiri sangudaiya sundaranukku – Thirumangai azhwaar

Aandal has created one group of 10 hymns in the  appreciation and glory of the Conch, Panchasanniyam, called “karpooram naarumo” (Seventh Section of 10 Hymns, in Nachiyaar Thirumozhi).   In addition, there are other Hymns by these Azhwaars and the rest of the Azhwaars in praising the beauty of these weapons and the additional beauty they gain, when they were on Sri  Mahavishnu.

The weapons as ornaments look beautiful in addition to protecting the devotees.

Weapons as Identification

We can refer to one incident when Swami Ramanujar, one of our Aacharyaas, was in Tirupathi.  At that time there was a dispute on whether Lord Venkateswara belonged to Vaishnavites or Saivites.    Vaishnavites are those who follow Sri Vishnu as their God and Saivites are those who follow Sri Siva as their God.    Swami Ramanuja tried to provide clarifications to both the groups, but no one wants to listen.    Swami Ramanuja then recommended that he would place the weapons of both Siva and Vishnu inside the sanctum sanctorum of the temple in front Lord Venkateswara before the doors were closed for the day and he would request that Lord Venkateswara to choose the weapons that are appropriate for Him.  All parties agreed to this suggestion of Sri Ramanuja and accordingly Sri Ramanuja placed Sanghu and Chakram along with the weapons of Shiva inside the temple and closed the doors after requesting the Lord to choose the appropriate ones and guide the people around.   Next day when the doors were opened, people found Lord Venkateswara took the Sanghu and Chakram and left the other weapons of Siva on the floor.   It clearly showed that Lord Venkateswara identified Himself as a Vaishnavite God using these Weapons. Since then the weapons served the purpose of Identification.

Five Weapons :

When Mahavishnu took Rama Incarnation, the discus, Sudharsan took the role of Bharathan, His brother and the Conch, as Satrugnan, the last brother of Sri Rama.

In the same way, Poigai Azhwwar was born as a feature of Panchasaniyam, the Conch, Booththazhwaar was born as a feature of Gowmothagi, His Mace, Peiazhwaar was born as a feature of Nandagam, the Long Sword, Thirumazhisai Azhwaar was born as a feature of the discus, Sudharsan and Thirumangai Azhwaar was born as a feature of Sarngam, the bow.

In one of the hymns in Ramanuja Nootru Anthaathi, created by Sri Thiruvarangathu Amuthannar, one of the five Gurus (aacharyaars) of Swami Ramanujar,  he says that all the five weapons came together as Ramanujar to protect this world or in other words, Swami Ramanujar is a feature of Panchayuthams.

 “aadayaar kamalathalar magal kelvan, kai aazhiyennum, padaiyoodu, nanthaagamum, padar thandum, onn saarnga villum, pudaiyaar puri sangamum, intha puthalam kaapaatharkendru, idaiye raamaanuja muni aaiyina innilathey“. (ramananuja nootru anthathathi – 33)

Thus all these five weapons, always take the order from Him and obey all His orders.   They are beautiful by themselves and look more beautiful when they are on Him as ornaments.They are also used as weapons by Him.

RSS
Follow by Email