059 திருஎவ்வுள் (திருவள்ளூர்) Thiruvallur

கனகவல்லி தாயார் ஸமேத வைத்ய வீரராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருஎவ்வுள்
திருவள்ளூர்
புண்ணியாவர்த்த க்ஷேத்திரம்
விஷாரண்யக்ஷேத்திரம்
மூலவர்வீரராகவ பெருமாள்,
வைத்யவீரராகவப்பெருமாள் ,
க்ரும்க்ருஹேசன்
உத்ஸவர் வீரராகவ பெருமாள்
தாயார்கனகவல்லி,
வஸுமதி (தனிக்கோயில் நாச்சியார்)
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 11
திருமழிசையாழ்வார் 1
தொலைபேசி+91 44-2766 0378, +91 97894 19330

கோவில் பற்றி

இந்த திவ்யதேசத்திற்கு திருவள்ளூர் என்பதே பிரசித்தமான பெயர். சென்னை திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 50 கீ மீ தூரத்தில் உள்ளது.

சாலிஹோத்திரர் முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி கிழக்கே திருமுகம் வைத்து காட்சி அளிக்கிறார். மூலவர் சுமார் 15 அடி நீளமும் 5 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக எழுந்து அருளி உள்ளார். மூலவருக்கு சந்தனத்தில் மட்டுமே திருமஞ்சனம். இந்த எம்பெருமானுக்கு திருக்கோவிலில் கிடைக்கும் பப்பிளி துப்பட்டி என்ற மேல் வஸ்திரம் வாங்கி சாத்தலாம்.

எம்பெருமானுக்கு வடமொழியில் கிங்க்ருஹேசன், என்னும் திருநாமம். அதுவே தமிழில் எவ்வுள் கிடந்தான் என்னும் திருநாமமாக மாறியது.

இந்த தாயாருக்கு வசுமதி என்றும், கனகவல்லித் தாயார் என்றும் திருநாமங்கள் உண்டு. அவருக்கு தனி சன்னதியும் உண்டு.

இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னதிகள் பிரசித்தி பெற்றவை.

இந்த திருத்தலத்தில் உள்ள விமானம், விஜயகோடி விமானம் ஆகும்.

இங்கு செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால் புண்யாவர்த்த க்ஷேத்ரம் என்று பெயர்.

அமாவாசை அன்று இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, குளத்தில் வெல்லம் கரைத்து, இந்த எம்பெருமானை சேவித்தால் எல்லா வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. வீரராகவன், வைத்ய வீரராகவனாக கருணை புரிவான் என்பது ஐதீகம். தை அமாவாசை அன்று இங்கு பக்தர்கள் பெருந்திரளாக கூடியிருந்து நீராடுவர்.

ஹ்ருதபாபநாசினி என்பது இங்குள்ள திருக்குளத்தின் பெயர். ஹ்ருதயத்தில் உள்ள பாபங்களை கூட நாசம் செய்யவல்ல இந்த திருக்குளம் கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படும்.

இத்தீர்த்தமும் திருக்கோவில் சன்னதியும் அஹோபில மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும்.

தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத்
தரிசித்தபடி சிவன் நின்றுள்ள காட்சியைக் காணலாம்.

தைமாத ப்ரமோத்ஸவம், சித்திரை மாதம் ப்ரமோத்ஸவம் பத்து நாட்கள் என்று சிறப்பாக கொண்டப்படுகின்றன. பவித்ரோத்ஸவம் 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Google Map

திருவள்ளூரைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

Thanks to friends from whatsapp group for all the images

ஸ்தல வரலாறு

இது பல சரித்திரங்கள் கொண்ட புண்ணியம் நிறைந்த திவ்யதேசம் ஆகும்.

க்ருதயுகத்தில் புரு புண்ணியர் என்பவர் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டி சாலி எனப்படும் நெல்மணிகளால் செய்யப்படும் சாலியக்ஞம் என்னும் யாகம் செய்தார். யாகத்தின் முடிவில் தோன்றின மகாவிஷ்ணு அவரின் யாகத்தை மெச்சி, அவரது விருப்பனான புத்திர பாக்கியத்தையும் அளித்தார். சாலி யக்ஞம் செய்து புத்திரப்பேறு பெற்றதால், சாலிஹோத்ரன் என்ற பெயருடன் பிரசித்தி பெற்று, தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இந்த திவ்யதேசத்தை அடைந்தார். இங்கு, பல ரிஷிகள், தவம் செய்வதும், இங்குள்ள ஹ்ருதபாபநாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடி செல்வத்தையும் பார்த்து, இங்கேயே தங்கி எம்பெருமானிடம் பக்தியுடன் தொண்டு செய்து வந்தார். அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு அமுது படைத்து அதனை அதிதிக்கு கொடுத்த பின்னே தான் உண்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான், தானே ஒரு முதியவர் ரூபத்தில் அதிதியாக வர, தாம் வைத்திருந்த மாவில் ஒரு பகுதியை சாலிஹோத்ரர் கொடுத்தார். அதை உண்ட பின்பும் தமது பசி அடங்கவில்லை என்று முதியவர் கேட்க தனக்கு வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் மிகவும் களைப்பாக உள்ளது என்றும், படுக்கச் சற்று இடம் வேண்டும் என்றும், எங்கு படுக்கலாம் என்றும் கேட்டது “எவ்வுள்” என்பதால், இந்த திருத்தலம் திரு எவ்வுள் என்று ஆனது.

சாலி ஹோத்ரர் அங்குள்ள ஒரு இடத்தைக் காட்டி, “இந்த அறையில் சயனிக்கலாம்” என்று சொல்ல, தனது முதிய சொரூபத்தை மாற்றி, எம்பெருமான் கிழக்கே திருமுகம் வைத்து சயனித்தார். சாலிஹோத்ரர் தாம் செய்த பாக்கியத்தை எண்ணி எம்பெருமானிடம் பணிந்து நிற்க அவரும், தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்து அருள்பாலித்து சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட, எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலட்சுமி வஸு மதி என்ற பெயரில், தர்மசேனபுரம் என்னும் நாட்டை ஆண்ட திலீப மகாராஜாவுக்குப் பெண்ணாக அவதரித்து, இந்த எம்பெருமானை மணம் முடித்ததாக வரலாறு.

ஒரு சமயம் சிவனை அழைக்காது அவரது மாமனார் தட்சன் யாகம் செய்ய, அவனுக்குப் புத்திமதி கூறி திருத்துவதற்காகச் சென்ற உமையவளின் பயணம் பயனில்லாது போயிற்று. இதனால் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரும் போராட்டம் உண்டாகி பின்பு சிவன் தனது நெற்றியின் வியர்வைத் துளிகளிலிருந்து தோன்றிய வீரபுத்திரனை ஏவி தட்சனை அழித்தான்.

பிரம்ம வித்தான தட்சனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் சிவனுக்கு ஏற்பட்டது. அதனில் இருந்து விடுபட, சிவன் இத்திருத்தலம் வந்து திருக்குளத்தில் நீராடி, எம்பெருமானை வணங்கியதால், சிவனுக்குப் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறும் உண்டு.

பயங்கர ரூபங்கொண்ட மது கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத் தொழில் ரகசியத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலிடம் வேண்டினார். திருமால், இவ்விருவரையும் போர் செய்து ஓட விட்டார். அவர்கள் சூர்ய சந்திரர்களின் ஒளியை மறைத்து இந்த உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ, இருவரும் ஓடி ஒழிந்தார்கள்.

அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் ஹ்ருதபாபநாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினம் தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர்.

இந்த மது கைடபர்கள் வரலாறு, ஸ்தல புராணமாக வானமாமலை திருமய்யம் போன்ற திவ்ய தேசங்களுக்கும் சொல்லப் பட்டுள்ளன. ஓடி ஒளிந்த மது, கைடபர் மீண்டும் மீண்டும் தவம் செய்து வலிமை பெற்று பல முயற்சி செய்தார்கள் என்றோ வேறு வேறு மது கைடபர்கள் என்றோ கொள்ளலாம்.

பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில் தேவ பாகர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை மார்க்கண்டேய முனிவரை சகல பாபங்களையும் போக்கவல்ல புண்ய தீர்த்தமும், மோக்ஷத்தைத் தரக் கூடிய எம்பெருமான் எழுந்து அருளியுள்ள திருத்தலம் எது என்று வினவ அவர் தேவபாகரிடம் இந்த திருத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறியதாக புராணம் கூறுகிறது.

கௌசிகன் தனது முதுமை பருவத்தில் இங்குள்ள ஹ்ருதபாபநாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தை அமாவாசை என்றும் இவனை யமலோகத்திற்கு எடுத்து சென்ற யமதூதர்கள் இவன் செய்த பாவங்களால் நரகத்திற்கு கொண்டு வந்ததாக சொல்ல, எமன் இவன் தை அமாவாசையன்று ஹ்ருதபாபநாசினி நீராடியதால் இவனுடைய பாவங்கள் தீர்க்கப்பட்டன என்றும் சொல்லி, கௌசிகனை மோக்ஷத்திற்குக் கொண்டு செல்லவும் உத்தரவு விட்டதாக புராணம் கூறும்.

ஆழ்வார்கள்

இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் இந்த திருத்தலத்தில் சயன திருக்கோலத்தில் (கிடக்கிறார்) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு உள்ளது. திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும் திருமங்கையாழ்வாரால் பத்து பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.

திருமழிசையாழ்வார், நான்முகன் திருவந்தாதி (3.6) என்ற பாசுரத்தில், ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே எம்பெருமான் திருஎவ்வுள் போன்ற ஏழு திவ்யதேசங்களில் சயனித்துள்ளான் என்று சொல்லி உள்ளார். அந்த ஏழு திவ்ய தேசங்களாவன, “திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுளுர், திருவரங்கம், திருப் பேர்நகர், அன்பில் மற்றும் திருப்பாற்கடல்.

நாகத் தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத்தணை அரங்கம் பேரன்பில், – நாகத் தணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால், அணைப்பார் கருத்தனாவான்.

ஸ்ரீகிங்கிருஹேச ஸ்துதி என்ற பெயரால் சுவாமி தேசிகன் இப்பெருமானுக்கு தனி ஸ்துதி நூல் ஒன்று எழுதி உள்ளார்.

058 திருநின்றவூர் Thirunindravoor

ஸ்ரீ ஸுதாவல்லித் தாயார் ஸமேத பக்தவத்ஸல பெருமாள் திருவடிகள் சரணம்

திவ்யதேசம்திருநின்றவூர்
மூலவர்பக்தவத்சலப் பெருமாள் / பத்தராவிப் பெருமாள்
உத்ஸவர் பத்தராவிப்பெருமாள்
தாயார்என்னைப்பெற்ற தாயார் / ஸுதா வல்லி
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்2
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2
தொலைபேசி+91 44 5517 3417

தொண்டைநாட்டைப் பற்றிய ஓர் முன்னுரையை இங்கே காணலாம், நன்றி.

கோவில் பற்றி

இத்தலம் சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாகத் திருவள்ளூர்ச் செல்லும் சாலையில் உள்ளது. திருநின்றவூர் என்பதை விட திண்ணனூர் என்று சொன்னாலே பலருக்கு தெரிகிறது.

திருவாகிய மஹாலக்ஷ்மி, திருப்பாற்கடலை விட்டு இங்கு வந்து நின்றதால் இந்த திருத்தலம் திரு நின்ற ஊர் ஆயிற்று.

பக்தர்க்கு இரங்கும் பண்பினானதால், பக்தவத்சல பெருமாள் என்றும் பக்தர்கள் அவனுக்கு உயிர் ஆனதால், பக்தராவி பெருமாள் என்றும் எம்பெருமானுக்கு திருநாமம். பக்தர்களின்
உயிருக்குயிராய் இருப்பதால் பக்தராவி பெருமாள் என்றும் கொள்ளலாம்.

ஸமுத்திரராஜன் வந்து மஹாலக்ஷ்மியிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டும் போது, “என்னை பெற்ற தாயே” என்று வேண்டியதால், தாயார் திருநாம என்னை பெற்ற தாய் என்று ஆயிற்று. தெலுங்கில் ‘நன்னு கன்ன தல்லி’ என்பர்.

ஸமுத்திர ராஜன் இங்கே வந்தபோது, மேகத்திற்கு எடுத்து செல்ல சமுத்திர நீர் இல்லாததால், மழை தேவதையான வருணனும் இங்கே வந்தபோது அவனுக்கும் இங்கு எம்பெருமானும் தாயாரும் காட்சி அளித்துள்ளனர்.

இக்கோவிலில், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்சேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் இராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.

இங்குள்ள ஆதிசேஷன் சந்நிதியில் பால்பாயசம் செய்து நிவேதனம் செய்வதன் மூலம் இராகு கேது தோஷங்கள் நீங்கும் என்று சொல்கிறார்கள்.

இராஜகோபுரம் பிரம்மாண்டமாக உள்ளது. கொடிமரம், பலிபீடம், கருடன் சன்னதி தாண்டி சென்றால் உள்மண்டபத்தில், எம்பெருமான் தாயாருடன் சுமார் 11 அடிஉயரத்தில் ஐந்து ஆயுதங்களுடன் சேவை சாதிக்கிறார்.

வருண தீர்த்தம் அருகில் (குளம்) ஏரி காத்த இராமர் சன்னதி உள்ளது ஆஞ்சநேயருக்கு சன்னதி உண்டு. மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரி காத்த ராமன் உள்ளார்.

ஸ்தல வரலாறு

மஹாலக்ஷ்மி ஆதிசேஷனைத் தாங்கியுள்ள தன்னுடைய தந்தையான ஸமுத்திர ராஜனுடன் கோபம் கொண்டு, இவ்விடத்து வந்து நின்றார். பிறகு ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும், மஹாலக்ஷ்மி மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் சென்று, எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும் என்றும், ஸ்ரீதேவித் தாயாரை மீண்டும் எழுந்தருளச் செய்ய அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டினான். பக்தர்க்கு இரங்கும் பண்பினான பரந்தாமன், ஸமுத்திர ராஜனை முதலில் பிராட்டியிடம் செல்லச் சொல்லியும், பிறகு தான் பின்னால் வருவதாகவும் சொல்லியனுப்ப, அப்படியே ஸமுத்திர ராஜன் பிராட்டியிடம் திரும்ப வந்து, “என்னை பெற்ற தாயே, என்னை மன்னிக்கவேண்டும்” என்று வேண்டியும் திருமகள் சமாதானம் அடையவில்லை. அப்பொழுது அங்கு எம்பெருமானும் எழுந்தருளி, சமாதானம் செய்ய மஹாலக்ஷ்மி மீண்டும் வைகுந்தம் எழுந்தருள சம்மதித்தார். எம்பெருமானும் பிராட்டியும் ஸமுத்திர ராஜனைக் நோக்கி, என்ன வேண்டும் என்று
கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து இங்கேயே நின்றிருக்க வேண்டும் என்று வேண்ட அப்படியே திருமகளும், திருமாலும் அருளினார்கள்.

குபேரன் தன் செல்வதை இழந்தபோது, இந்த திருத்தலத்தின் என்னை பெற்ற தாயாரை வணங்கி செல்வதை திரும்ப பெற்றான் என்று ஒரு வாய்வழி செய்தியும் உள்ளது.

இந்த எம்பெருமானிடம் உண்மையான பக்தியுடன் வேண்டிக்கொண்டவர்களுக்கு அவர்களது பிரார்த்தனை ஈடேறுகிறது என்பதற்கு உதாரணம் இராமானுஜரின் மூத்த சகோதரிக்கு ராமபிரானின் அம்சமாக முதலியாண்டான் என்ற ஆசார்யன், அவர்களின் தாய் தந்தை இந்த எம்பெருமானிடம் மனதார வேண்டிக் கொண்டதால், பிறந்து அந்த பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்தது.

Google Map

திருநின்றவூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருநின்றவூர் பற்றி தினம் ஓர் திவ்யதேசம்

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் வடக்கில் இருந்து தொடங்கி, திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது எம்பெருமான் மஹாலக்ஷ்மியையே பார்த்துக் கொண்டு இருந்து, ஆழ்வாரை பார்க்காமல் இருந்ததால், இத்தலத்தின் வழியாகச் சென்றும் ஆழ்வார் இதனைப் பாடாது சென்றார். இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை ஆழ்வாரிடம் உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கை ஆழ்வார் திருவள்ளூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் திருவிடந்தை சென்று அதையும் தாண்டி, திருக்கடல்மல்லைக்கு (மாமல்லபுரம்) சென்று விட்டார். திருக்கடல் மல்லை திவ்யதேசத்தை பாடும் போது, அங்கு திருநின்றவூர் எம்பெருமானைக் கண்ட திருமங்கையாழ்வார், “நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை, காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே” என்று பக்தராவிப்பெருமாள் வந்து நின்றதை நான் கண்டது திருக்கடல்மல்லையில் என்று (பெரிய திருமொழி 2.5.2) பாடி உள்ளார்.

பாடல் பெற்றுவந்த எம்பெருமானை நோக்கிய பிராட்டி, ஒன்று தானா என்று கேட்க எம்பெருமான் மீண்டும் பாடல் பெற திருமங்கை ஆழ்வாரை தேட, அதற்குள் அவர் திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். திருநின்றவூர் எம்பெருமான் அங்கு வர, திருக்கண்ணமங்கை எம்பெருமானை பாடும் போது, திருநின்றவூர் பெருமாள் நிற்பதைக் கண்ட ஆழ்வார் “நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை, காற்றி னைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே” என்று திருநின்றவூர் எம்பெருமானை, திருநின்றவூரிலே முத்துத் திரள்போலே தாபஹரமான வடிவு கொண்டு எழுந்து அருளி இருப்பவன் என்றும், அவன் காற்றினும் மேலாக வந்த வேகத்தைக் குறித்தும் பெரியதிருமொழியில் (7.10.5) திருக்கண்ணமங்கை எம்பெருமானுடன் சேர்த்து மங்களாசாசனம் செய்து உள்ளார்.

Thanks to friends from whatsapp group for all the images

057 திருப்புட்குழி Thiruputkuzhi

மரகதவல்லித் தாயார் ஸமேத விஜயராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்புட்குழி / க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம்
மூலவர்விஜயராகவப்பெருமாள், ஸமர புங்கவன், போரேற்று நாயனார்
உத்ஸவர்விஜயராகவன்
தாயார்மரகதவல்லித் தாயார்
திருக்கோலம்வீற்றுஇருந்த திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்2
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2
தொலைபேசி+91 44 2724 6501

தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

கோவில் பற்றி

திருப்புட்குழி என்னும் இந்த திருத்தலம் காஞ்சிக்கு மேற்கே சுமார் 10 கீ.மீ. தூரத்தில் உள்ள பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 400 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வேலூர் சாலையில் பாலுச்செட்டிசத்திரம் உள்ளது.

ஜடாயுவாகிய பறவைக்கு மோக்ஷம் அளித்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தேசம் ஆனதால் இது புள்ளுக்கு குழி எடுத்த இடம், திருப்புட்குழி என்று ஆனது. புள் என்றால் பறவை என்று பொருள்.

இந்த திருத்தல எம்பெருமானுக்கு விஜயராகவன் என்று திருநாமம்; ராகவம் என்பது இராமனையே குறிக்கும். விஜயராகவப் பெருமாள். நான்கு திருக்கரங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீராமன் ஜடாயுவை மடியில் கிடத்திக்கொண்டு இருக்கும் நிலையில் அமர்ந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கும் திருத்தலம்.

ஈமக்கிரியை செய்யும் போது மனைவி உடன் இருக்கவேண்டும் என்பது மரபு. அப்பொழுது இராமாயணத்தின்படி சீதை இராமருடன் இல்லை. இருந்தாலும், இந்த திருத்தலத்தில், ஸ்ரீதேவி, பூமிபிராட்டி என்று இரண்டு தாயார்களும் உள்ளனர்.

சீதாதேவி அக்னியின் தாக்கத்தை தாங்க முடியாததால் தன்னுடைய திருமுகத்தை சற்று தள்ளியும், எம்பெருமானுக்கு இடது புறத்திலும் மாறி அமர்ந்து உள்ளார். எப்போதும் இடது புறம் இருக்கும் பூமிபிராட்டி, இங்கு எம்பெருமானுக்கு வலது புறத்தில் அமர்ந்து உள்ளார். அதேபோல், தனிக்கோவில் நாச்சியார் மரகதவல்லி தாயார் சன்னதியும் எம்பெருமானுக்கு இடது புறத்திலும், ஆண்டாள் சந்நிதி வலது புறத்திலும் இருக்கும்.

ஸ்ரீதேவி தாயார் இங்கும் திருவிடவெந்தை என்ற திவ்ய தேசங்களில் மட்டுமே எம்பெருமானுக்கு இடப்பக்கத்தே இருப்பது.

தனிக் கோவில் நாச்சியார் மரகதவல்லி தாயார். வறுத்த பயிறு முளைக்க வைக்கும் தாயார் என்பது ஒரு நம்பிக்கை. பிள்ளைப்பேறு வேண்டுபவர் இங்குள்ள புஷ்கரணியில் சாயங்காலம் மடியில் பச்சைபயிற்றை கட்டிக்கொண்டு நீராடி, அதை திருமடப்பள்ளியில் கொடுத்து வறுத்து எடுத்தபின், மீண்டும் தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு இரவு தூங்கி எழுந்தால், மறுநாள் காலை, அந்த வறுத்த பயிறு முளை விட்டு இருக்கும் என்றும் இந்த மரகதவல்லி தாயாரின் கருணையினால் பிள்ளைப்பேறு உண்டாகும் என்றும், நம்பிக்கை. இதனால் இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்றும் பெயர்.

இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் குளத்திற்கு அருகே ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. இங்கு எம்பெருமான் வெளியே புறப்பாடு காணும் போது எல்லாம், ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் நடைபெறும்.

ஜடாயுவிற்கு இறுதிச்சடங்குகள் செய்த திருத்தலம் என்பதால் அதற்கு மரியாதை கொடுக்கும் வண்ணம், கொடிமரமும் பலிபீடமும் கோவிலுக்கு வெளியே அமைந்து உள்ளன.

க்ருத்ர புஷ்கரணி என்பது இங்குள்ள திருக்குளம். க்ருத்ர என்றால் பறவைகளின் ராஜாவான ஜடாயுவைக் குறிக்கும். இந்த புஷ்கரணியில் நீராடி மரகத்தவல்லி தாயாரையும், எம்பெருமானையும் சேவித்தால் எல்லா நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகள் இவர்களுக்கும் சன்னதி உண்டு.

இங்கு எம்பெருமான் புறப்பாடு காணும் குதிரை வாகனம் அதிசயமானதாகும். மரத்தினால் செய்யப்பட்ட குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதனை உருவாக்கிய கலைஞன் இது போல் இனி வேறு யாருக்கும் செய்வதில்லை என்று உறுதியோடு இருந்து இறந்தான். இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம் நாள் உற்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.

இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் சொல்லும், பாண்டிய, விஜயநகர பேரரசு காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.

இராமனே இங்கு ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்து இருப்பதால், அமாவாசை, மஹாளயம் போன்ற சமயங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பல மடங்கு பலன் கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.

எம்பெருமான், மோக்ஷம் அழிப்பார்; தாயார் பிள்ளைப் பேறு அளிப்பார்; புஷ்கரணி நோய்கொடிகளை நீக்கும்.

Google Map

திருப்புட்குழி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருப்புட்குழி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

Thanks to friends from whatsapp group for the picture

ஸ்தல வரலாறு

ஜடாயுவாகிய பறவைக்கு இராமபிரான் ஈமக்கிரியை செய்து மோக்ஷம் அளித்த திருத்தலம்.

இத்தலத்திற்கு கூறப்படும் அதே வரலாறு அப்படியே புள்ளம்பூதங்குடி ஸ்தலத்திற்கும் கூறப்படுகிறது. அங்கே சொன்னது போல், இது தொண்டை நாட்டில் நடந்ததா, சோழ நாட்டில் நடந்ததா அல்லது மராட்டிய அல்லது கர்நாடக மாநிலங்களில் நடந்ததா என்று விவாதிப்பதை விட, பல இடங்களில், பலருக்கு எம்பெருமான் காட்சி இவ்வாறாக அளித்திருக்க கூடும் என்று மனதில் கொண்டு எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்.

இராமாயணத்தில், சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனை எதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு இவ்விடத்தில் வீழ்ந்தார். பின்னர் சீதையைத் தேடி அவ்வழி வந்த இராமனிடம் இராவணன் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிட்டு ஜடாயு உயிர் நீத்தார். ராமன், தன் திருத்தகப்பனாரான தசரதனுக்கு செய்யாத அந்திமச் சடங்குகளை ஜடாயுவிற்கு தனது திருக்கரங்களால் செய்து, ஜடாயுவிற்கு மோட்சமும் அளித்து தன்னுடைய பெரிய தகப்பனார் என்று மரியாதையும் செய்தார்.  

ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு அவரது அம்பினால் ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது.

ஆழ்வார் ஆச்சாரியார்

இங்கு எழுந்தருளியுள்ள விஜயராகவப் பெருமாளுக்கு வடமொழியில் ஸமர புங்கவன், என்று பெயர். இதை புட்குழி எம் போர் எற்றை என்று ஆழ்வார் தமிழில் உரைத்தார்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் முதலில் வேத பாடங்களைப் பயின்றார். இராமானுஜரோடு எம்பார் என்ற ஆச்சார்யாரும் இங்கு தான் வேதபாடங்கள் கற்றார்.

நம்பிள்ளை என்ற ஆச்சாரியாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும்.

கம்ப ராமாயணத்தில் ஜடாயு

Mr, Swaminathan, one of the experts in both Valmiki and Kamba Ramayanam, has written about Kamba Ramayanam and we are happy to host his daily posts on Kamba Ramayanam. Kamban has written about Jatayu in two subsections, namely, சடாயு காண் படலம், ஜடாயு உயிர் நீத்த படலம் consisting of about 265 poems. He has taken some selective poems from Kamba Ramayanam on Jatayu and we are happy to share the same for you.

 Friend in the Forest, Jatayu – வனத்தில் ஓர் நண்பன்,  ஜடாயு
Jatayu;s self introduction to Rama – இராமனுக்கு ஜடாயுவின் சுயஅறிமுகம்
Jatayu accepts Rama’s request – இராமனின் வேண்டுகோளை சடாயு ஏற்றல்
Jatayu takes on Ravana – சடாயு இராவணனை எதிர்கொள்ளல்
Jatayu advises Ravana – சடாயு இராவணனுக்கு அறிவுரை கூறல்
Jatayu’s heroic deed – சடாயுவின் வீரம்
ராவணனின் வில்லும் வேலும் தோற்றல் – Ravana’s bow and trident failed
The fall of Jatayu சடாயு வீழ்தல்
சடாயுவை பார்த்த ராமனின் புலம்பல் – Rama’s Lamentations on seeing Jatayu
Jatayu’s advices to Rama – இராமனுக்கு சடாயுவின் நல்வார்த்தைகள்
ராமனின் கோப வார்த்தைகள் – Rama’s furious words
Jatayu’s calms down Rama – சடாயு ராமனை சாந்தப்படுத்துதல்
சடாயுவின் தெய்வ முக்தி / Divine Salvation of Jatayu 

திருமாலை போதெல்லாம்

To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார்  எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

 • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை திருஅரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
 • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
 • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
 • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
 • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
 • திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
 • திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவத்அனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
 • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
 • சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
 • சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.

இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி. இந்த பகுதியில் ஆழ்வார் நாத்திகம் பேசுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஆழ்வார் ஒரு நிலையை கடந்து மற்றொரு உயர்ந்த நிலையை பற்றி நமக்கு சொல்கிறார் என்றே எடுத்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஆழ்வார் கர்ம, ஞான பக்தி யோகங்கள் தன்னிடம் இல்லை என்றும், முக்கரணங்களால் தான் அர்ச்சித்தது இல்லை என்றும் சொல்வது எம்பெருமான் எல்லாம் தெரிந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அவன் செயல், சர்வ சுதந்திரமாக செயல்படுபவர் என்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக மனதில் கொண்டு, தான் அவனின் அடிமை என்றும், தன்னால் ஒன்றும் தனியாக இயங்க முடியாது என்றும், தன் முயற்சியால் ஒன்றும் நடக்கக்கூடாது என்றும், அவனே தனக்கு எல்லாம் அருள வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நிலையை மனதில் கொண்டு இந்த பகுதியில் உள்ள 10 பாசுரங்களை பாடுகிறார் என்று கொள்ளவேண்டும். ,

இந்த பகுதியின் முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலை (குளித்து மூன்று அனலை) சென்ற வலைப்பதிவினில், ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதை பார்த்தோம். இனி அடுத்த பாசுரம்.

பாசுரம் 26

போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன், தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன், காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே, ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 26

ப்ராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்கான கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம். பூக்களைக்கொண்டு அவனை அலங்கரிப்பது, வாக்கினால் அவனுடைய ஸ்தோத்திரங்களைச் சொல்வது, மனதினால் அவனை நினைப்பது என்று இந்த பாடலில் சொல்வது மூன்றும், எம்பெருமான் கேட்ட அர்ச்சனை, துதி ஆகும்.

எல்லாக்காலங்களிலும் பூக்களை கொண்டு, அவனுடைய அழகிய திருவடிகளில் சமர்பிக்க சக்தி அற்று இருப்பதாகவும், குற்றமற்ற வார்த்தைகளைக்கொண்டு அவனின் நற்குணங்களை சொல்ல முடியாதவனாக இருப்பதாகவும், உண்மையான காதலினால் அவன் மீது வரும் அன்பை தன் நெஞ்சத்தில் சேர்க்கவில்லை என்றும் ஆழ்வார் சொல்லி, தன்னுடைய ஒரு அவயத்தாலும் (உறுப்பினாலும்) திருவரங்கனை அனுபவிக்கவில்லை என்பதால், தான் ஏன் பிறந்தேன் என்று கதறுகிறார்.

இங்கு பூதத்தாழ்வார் பாடிய “போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த, போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது, மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல, அணிவேங்கடவன் பேர் ஆய்ந்து. (இரண்டாம் திருவந்தாதி 72) பாசுரத்தை நினைவில் கொள்ளலாம். திருமலையில் உள்ள குரங்குகள், திருவேங்கடமுடையானுக்கு அதிகாலையில். முக்கரணங்களாலும் சேவை செய்கின்றன என்றும் பூக்களை பறித்து சமர்பிக்கின்றன என்றும் ஆழ்வார் பாடுகிறார். பேர் ஆய்ந்து என்பது வாயினால் திருநாமங்களை சொல்வது. ஏத்தும் போது,உள்ளம் என்பது மனத்தினால் ஸ்தோத்திரம் செய்வதை சொல்வது. போது அரிந்து கொண்டு என்பது பூக்களை கைகளால் பறித்துக்கொண்டு வருவதை சொல்வது.

போதெல்லாம் போது கொண்டு

எல்லா காலத்திலும் சிவந்த பூக்களைக் கொண்டு பொன் போன்ற அவனுடைய திருவடிகளை அலங்கரிப்பதே சரியான ஒன்று, அப்படி செய்வதில் தனக்கு ஊற்றம் இல்லை என்றும் அதற்கான சக்தியும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார். அவனைத்தவிர மற்ற விஷயங்களில் சக்தியும் ஊக்கமும் உள்ளன என்று கூறுவதாக கொள்ளலாம். முன்பு சொன்னது போல் விஷ்ணுதர்மத்தில், எந்த நாக்கு விஷ்ணுவின் பெயரை சொல்கிறதோ அதுவே நாக்கு எந்த உடல் விஷ்ணுவைப் பணிகிறதோ அதுவே உடல், மற்றதெல்லாம் வீண் என்று சொன்னதை நினைவில் கொள்ளலாம்.

இந்த சொற்தொடரில், முதல் போது, என்பது காலத்தையும், இரண்டாவது போது என்பது பூக்களையும் குறிக்கின்றது.

போதெல்லாம் உன் பொன்னடி புனைய மாட்டேன்

எல்லா காலத்திலும் செய்ய முடியவில்லை, எப்போதாவது ஓரிரு முறை செய்ய முடியும் என்ற கருத்து இல்லை. எந்த காலத்திலும் (ஒரு முறை கூட) அர்ச்சிக்க முடியாதவனாக, சக்தி இல்லாவதவனாக உள்ளேன் என்றே ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.

ஹரி என்று இரண்டு எழுத்துகளை ஒரு முறை சொன்னாலே மோக்ஷம் செல்ல வேண்டிய அனைத்துக் காரியங்கள் செய்யப்பட்டன என்று விஷ்ணு தர்மத்தில் (70.84) சொல்லப்பட்டது. கோவிந்தா என்று ஒருமுறை நினைத்தால், நூற்றுக்கணக்கானப் பிறவிகளில் செய்த பாவக்கூட்டத்தை நெருப்பு பஞ்சுமூட்டையை எரிப்பது போல் எரித்து விடுகிறான். ஒரு தடவை சரணம் அடைந்தவன் பொருட்டும், அவனுக்கு அடியேன் ஆகிறேன் என்று சொல்பவன் பொருட்டும் அவர்களுக்கு முழுவதும் அபயமளிக்கிறேன் என்றும் அதுவே தன்னுடைய விரதம் எனறும் இராமபிரான்(இராமாயணம், யுத்த காண்டம், 18-33) சொன்னதை நினைவில் கொள்ளவேண்டும்.

இப்படி, ஒரு காலத்தில்/ஒரு முறை அவனிடம் ஈடுபாடு கொண்டாலே, பலன் கொடுக்கவல்ல பெருமை உடையவன் அவன். அப்படிப்பட்டவனை ஒரு காலத்திலும் அர்ச்சிக்க சக்தி இல்லாவதன் ஆகிவிட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

பூக்களைக் கொண்டு சேவை செய்தவர்கள்

எம்பெருமானுக்கு பூக்களைக்கொண்டு செய்கின்ற சேவை, அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, ஏனென்றால் விஷ்ணு அலங்காரப்ரியன், சிவன் அபிஷேகப்ரியன். கைங்கர்யத்தில் தவறு நிகழ வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. அதனை செய்வது எளிதாகிறது. நம் சம்பிரதாயத்தில், இந்த கைங்கர்யத்தைப் பலர் செய்து உள்ளனர்.

பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனம் அமைத்து மலர்கள் பயிரிட்டு அவற்றை கொண்டு வடபத்ரசாயிக்கு தொண்டு செய்து வந்தார் என்பது வரலாறு. அதே நந்தவனத்தில் தான் ஆண்டாளையும் கண்டெடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். பெரியாழ்வார் ‘ஆனிரை மேய்க்க‘ என்று யசோதை நிலையில் இருந்து எம்பெருமானுக்கு பலவிதமான மலர்களை சூட்டி அழகு பார்த்ததை, பெரியாழ்வார் திருமொழியில் (2.7) அனுபவித்து பாடி உள்ளார்.

ஆண்டாள், திருமாலுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆனாள். தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனதினால் சிந்திக்க (திருப்பாவை 5) என்பதால், எம்பெருமானை முக்கரணங்களால் அர்ச்சிக்க வேண்டும் என்பதை எளிதாக எடுத்து சொன்னவர்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார் என்பதும், திருமங்கையாழ்வார் கோவிலுக்கு திருமதில் கட்டும்போது இந்த நந்தவனத்தை விட்டு அதற்கு ஒரு தடையும் வராமல் காட்டினார் என்பதும் வரலாறு.

கண்ணன், கம்சனை அழிப்பதற்கு முன், மாலாக்காரன் என்ற அடியவன் கண்ணனுக்கு சிறந்த பூ மாலைகளை சூட்டி அழகு பார்த்து அனுப்பி வைத்தான் என்பது பாகவதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஸ்வாமி ராமானுஜரின் எண்ணத்திற்கு ஏற்ப திருமலையில் நந்தவனம் உருவாக்கி, அங்கே பூக்கும் பூக்களைக்கொண்டு ஏழுமலையானுக்கு பல ஆண்டுகள் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் அனந்தாழ்வான் என்னும் ஆச்சாரியர். அவர் உபயோகித்த கடப்பாரை இன்றும், திருமலையில் காட்சிக்கு உள்ளது.

நம்மாழ்வார் புஷ்பகைங்கர்யத்தைப் பற்றி பாடிய ‘மாலை நண்ணி தொழுது எழுமினோ‘ என்று பாடிய திருக்கண்ணபுர பாசுரங்களையும் (9.10) இங்கே நினைவில் கொள்ளலாம். காலை மாலை கமல மலர் இட்டு என்றும், கள் அவிழும் மலர் இட்டு என்றும், விண்டு வாடா மலர் இட்டு என்றும், தேனை (உடைய) வாடா மலர் இட்டு என்றும், பாடியதை நாமும் அனுபவிக்கலாம்.

தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்

இப்படி உடம்பினால் செய்யும் கைங்கர்யங்கள் செய்யாமல், மற்ற உலக விஷயங்களில் ஈடுபட்டாலும், குற்றமற்ற வாக்கினைக் கொண்டு எம்பெருமானின் திவ்ய குணங்களை சொல்வதே போதுமானது என்று பெரியபெருமாள் சொல்லியபோது, ஆழ்வார் தன்னுடய வார்த்தைகள் குற்றமற்றவைகளாக இருந்தபோதிலும், அவை அழகானவைகளாக இருந்தபோதிலும், எம்பெருமானுடைய திருக்குணங்களை பேச இயலாதவனாக இருக்கிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார் விஷ்ணுதர்மத்தில் கூறியபடி எம்பெருமானை பற்றி பேச வேண்டிய நாக்கு, மற்ற விஷயங்களை பேசும் போது நறுக்கு தெரித்தாற்போல் உள்ளது என்றும் எம்பெருமான் விஷயத்தில் அதனால் இயலவில்லை என்றும் கூறுகிறார்.

காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்

உடம்பினாலும் வாக்கினாலும் சேவை செய்யமுடியாவிட்டாலும், நெஞ்சத்தைக்கொண்டு எம்பெருமானிடம் அன்பு செல்லுத்தலாமே, என்று பெரியபெருமாள் வினவியபோது, ஆழ்வார், இந்த விஷயத்தில், காதலால் வரும் அன்பு வரவில்லை என்று கூறுகிறார். விஷயங்கள் சேரும் போது, காமம் வருகிறது என்றும், காமத்தினால் கோபம் வருகிறது என்றும் பகவத் கீதை (2.62) சொன்னபடி, ஆழ்வார் தான் இதுவரை அனுபவித்த காதலும் உண்மையானது அல்ல என்றும், அவர்களின் பொருள்களை கவர்வதற்கே அப்படி செய்ததாகவும் சொல்கிறார்.

இங்கு உரையாசிரியர், ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னத்தின் 62வது ஸ்லோகத்தை எடுத்து கொள்கிறார். அதில், தான்,

 • வேத வரம்புகளை மீறுபவன்
 • நீச விஷயங்களில் ஆசை உள்ளவன்
 • நிலையற்ற நெஞ்சத்தை உள்ளவன்
 • மற்றவர்கள் வாழ்வதை பொறுக்க மாட்டாதவன் (அசூயை)
 • நன்மை செய்பவர்களுக்கு தீமை செய்பவன்
 • கர்வத்தை உடையவன்
 • காமவசப்பட்டவன்
 • காமினிகளை வஞ்சிப்பவன்
 • கொடுமையான காரியங்களை செய்பவன்
 • பாவங்களிலே ஊறி இருப்பவன்

என்று சொல்லி, கரை காணா துன்பக்கடலைக் கடந்து, எப்படி அவனை அடைந்து அவனுக்கு அடிமை செய்வது என்று கூறுகிறார். அடுத்து, விஷ்ணு புராணத்தில் (3.7.30) இருந்து, எவன் ஒருவன் கெட்டபுத்தியுடன், தன் உயிர் நண்பனுக்கும், சொந்தங்களுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், தாய் தந்தையருக்கும், வேலைக்காரர்களுக்கும் கெடுதல் நினைத்து, அவர்களின் செல்வங்களை கவர நினைக்கிறானோ அவன் தன்னுடைய பக்தன் இல்லை என்று எம்பெருமான் சொல்வது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அது தன்னாலே, ஏதிலேன்

மனம், வாக்கு, உடல் என்ற இந்த முக்கரணங்களாலும் அவனிடம் ஈடுபாடு கொண்டு பயன் பெரும் பெரியவர்கள் போல் இல்லாமல் தன்னால், ஒரு கரணத்தால் கூட ஈடுபாடு கொள்ள முடியாதவானாக, ஓன்றும் இல்லாதவனாக, இருப்பதாக ஆழ்வார் கூறுகிறார்.

ஏதிலேன் அரங்கற்கு

இங்கு மறுபடியும், ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தின் 16வது பாடலை எடுத்துக்கொண்டு எம்பெருமான் எப்படி தன்னுடைய முக்கரணங்களால் அடியவர்கள் இடத்தில உண்மையாக உள்ளான் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார். இயற்கையாகவே எம்பெருமான் எல்லா கல்யாண குணங்களின் கடலாக இருப்பவன் என்பதை, கீழ்கண்டவாறு ஒரு பட்டியல் இடுகிறார்.

 • அடியார்களிடம் வசப்பட்டவன்
 • தன்னையே தமர்க்கு நல்கும் வள்ளல் ,
 • சௌசீல்ய குணத்தை உடையவன்
 • மனம், வாக்கு, உடல் மூன்றையும் ஒரு நிலைப்படுத்தியவன்
 • அடியார்க்கு உதவுவதில் தூய்மையான எண்ணத்தை கொண்டவன்
 • அடியவர்களின் பிரிவை பொறுக்க இயலாதவன்
 • அடியவர்களின் துக்கத்தை பொறுக்க மாட்டாதவன்
 • இனிமையானவன்
 • அடியவர்களை சமமாக பாவிப்பவன்
 • அடியவர்களின் காரியங்களை தன் காரியம் போல் நினைத்து செயல்படுபவன்
 • அடியவர்கள் செய்த சிறிய சேவைகளைக்கூட மிக பெரியவைகளாக நினைப்பவன்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்வது, இப்படி கஷ்டப்பட்டு சாஸ்திரங்களை படித்து தெரிய வேண்டாதபடி, நேரடியாகவே சுலபமாக தெரிந்துகொள்ள சயன திருக்கோலத்தில், பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இருக்கிறான் என்கிறார். இப்படிப்பட்ட பெரியபெருமாளுக்கு ஒரு கரணத்தினால் கூட அர்ச்சனம் ஏதும் செய்யாமல், ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டேன் என்று புலம்புகிறார்.

எல்லே

எம்பெருமான் தன்னை அவனிடம் சேர்க்காததற்கு தன்னுடைய எந்த ஒரு குற்றமும் காரணம் இல்லை என்றும், தான் செய்த பாவங்களே காரணம் என்றும் இந்த ஒரு ‘எல்லே‘ என்ற வார்த்தையினால் ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார், தான் அருகில் இல்லாததாலோ, தான் தகாதவராய் இருப்பதாலோ, தான் எம்பெருமானிடம் உள்ளவற்றை குறைகளாகப் பார்ப்பதாலோ, எம்பெருமானை இழக்கவில்லை என்றும், தன்னுடைய பாவங்களால் தான் இழந்தோம் என்றும் சொல்கிறார். எம்பெருமான், குற்றத்தை பாராமல் அதையே குணமாக கொள்ளும் இனியவன் என்பதையே காரணமாகச் சொல்கிறார். மேலும், எம்பெருமான் மிக விரும்பும் கௌஸ்துபமணி போல் உள்ள இந்த ஆத்மா வீணானதே என்று வருந்துகிறார். பெரியதிருமொழி (3.7.6), “அரங்கத்து உறையும் இன் துணைவன் ” என்ற பாசுரம் மேற்கோளாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட இனிமையான துணைவனை விட்டு வெகுதூரம் போய்விட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார். பால் மருந்தாகவும், அதுவே அனுபவிக்க கூடிய ஒரு பொருளுமாக இருப்பது போல் அழகுடன் கூடிய, மோக்ஷத்தை அளிக்கவல்ல எம்பெருமானை இழந்தோமே என்று கதறுகிறார்.

என் செய்வான் தோன்றினேனே

விஷ்ணுதத்வத்தில் சொன்னபடி, எம்பெருமான் தமக்கு அளித்த கை, உடல், மனம் போன்றவற்றை அவருக்குப் பயன் படுத்தாமல், வீணடித்த தாம் ஏன் தான் பிறந்தோமோ என்பதை, ஆழ்வார் தோன்றினோமோ என்று கூறுகிறார். தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம். அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், பிறருக்கு நன்மை செய்யாமல், தீயவை புரியவே என்று ஆழ்வார் தான் பிறந்ததும் தீங்கு விளைவிப்பதாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

056 திருப்பரமேச்சுர விண்ணகரம் Thiruparamechura vinnagaram

வைகுந்தவல்லி ஸமேத வைகுந்தநாதர் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்பரமேச்சுர விண்ணகரம் , ஸர்ப்ப க்ஷேத்ரம்
மூலவர்பரமபதநாதன், வைகுந்தநாதன்
உத்ஸவர்வரம்தரும் மாமணிவண்ணன்
தாயார்வைகுந்தவல்லி தாயார்
திருக்கோலம்வீற்றுஇருந்த திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 44 2723 5273

தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

கோவில் பற்றி

இந்த கோவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அதனால் இங்கு பூஜைகள் கிடையாது.

இத்திருத்தலம் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில் தான்
இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.

இந்த கோவிலின் விமானம், மூன்று அடுக்குகளாக, அஷ்டாங்க விமானமாக உள்ளது. கீழ் அடுக்கில், அமர்ந்த திருக்கோலத்திலும், நடுவில் ஸ்ரீதேவி, பூதேவி இவர்களுடன் ரங்கநாதனாக சயனத் திருக்கோலத்திலும், மேல் நிலையில், நின்ற திருக்கோலத்தில் உள்ளனர். ரங்கநாதருக்கு ஒரு உத்சவர் உள்ளார்.

ஸ்ரீவைகுந்ததில் உள்ள விரஜா நதி, இங்கே தீர்த்தமாக உள்ளது. இதுவும் ஆறு விண்ணகர திவ்யதேசங்களில் ஒன்று. இங்கு சொர்க்கவாசல் கிடையாது.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

பரமேஸ்வர பல்லவனுக்கு இந்த எம்பெருமான் 18 கலைகளை சொல்லி கொடுத்தார் என்றும், அவைகளைச் சொல்வதற்காக நின்ற திருக்கோலத்தில் இருந்தார் என்றும், சீடனுக்கு உபதேசிக்கும் போது குருவாக அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தார் என்றும், அவனுக்கு
சேவை சாதிக்க, கிடந்த திருக்கோலத்தில் இருந்ததாகவும் கூறுவர்.

மாமல்லபுரத்தைப் போன்று சிறந்த சிற்பங்கள் இக்கோவிலின் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டு உள்ளது. பல்லவ காலத்து குடவரைக் கோவில் அமைப்பின்படி இத்தலத்தின் மூலவரும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள் யாவும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டன.

பரமேசுவரவர்மனின் பிறப்பைச் சித்திகரிக்கும் சிற்பங்கள், அவனுக்கு எம்பெருமான் கலைகளை கற்றுக்கொடுத்த சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில் செதுக்கி வைக்க பட்டுள்ளன. 18 பல்லவ மன்னர் முடிசூடும் காட்சிகளும் சிற்பங்களாக உள்ளன.

இக்கோவிலின் மேல் மாடியில் இரண்யவதம் செய்த நரசிம்ம அவதாரம், நரஹாசுர வதம் செய்த கிருஷ்ணவதாரம், வாலி வதம் செய்த இராமவதாரம், போன்ற காட்சிகள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டு உள்ளன.

இந்த கோவிலில் இருந்து மாமல்லபுரத்திற்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும், பரமேஸ்வர வர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக சொல்வதுண்டு.

ஸ்தலவரலாறு

விதர்ப்ப நாட்டு மன்னன் சந்ததி வேண்டி காஞ்சியில் உள்ள கைலாச நாதனை வணங்க, விஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரும் பல்லவன், வில்லவன் என்ற பெயர் கொண்டு பிறந்ததாகவும், அவ்விருவரும் மஹா விஷ்ணுவைக் குறித்து இக்கோவிலின் வாயு மூலையில் அஸ்வமேத யாகம் செய்ய மஹாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்ட நாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுத்து அதே நிலையிலிருந்து இன்றும் பக்தர்கட்கு அருளுவதாக ஐதீஹம்.

பரத்வாஜ முனிவர் தவம் செய்து கொண்டிருக்கும்
போது அவரின் தவத்தைக் கெடுக்க வந்த காந்தர்வக் கன்னியின் மேல் மோகம் கொண்டு, ஒரு ஆண் மகவு உண்டாக அதற்கு மஹாவிஷ்ணுவும் சிவபெருமானும் இக்குழந்தையின் வளர்ச்சி குறித்து தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி, மஹாவிஷ்ணுவும் லட்சுமியும் வேடர் உருக்கொண்டு அக்குழந்தைக்கு
உயிர் கொடுத்து வளர்க்க தொடங்கினார்கள்.

அந்த சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் வம்ச வீழ்ச்சி
ஏற்படவே, தங்கள் குலம் தழைக்க நல்ல வாரிசு வேண்டுமென இந்த எம்பெருமானை வேண்ட, வேடன் வேடத்தில் வந்த எம்பெருமான் இந்த குழந்தையை அவர்களிடம் கொடுத்து மறைந்தார். சிவனும் விஷ்ணும் பொறுப்பு எடுத்து கொண்டு வளர்த்ததால், பரமேஸ்வரன் என்ற பெயர் வந்ததாக சொல்வார்கள். பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளை தானம் கொடுத்ததாகவும் சொல்வதுண்டு.

பல்லவர்களின் வம்ச வழியை அடையாளம் காணும் போது அந்த அரசர்கள் பரத்வாஜ கோத்ரம் என்று குறிப்பிட்டது இந்த சரித்திரத்தை மேலும் உறுதிப் படுத்துகிறது.

ஆழ்வார்கள்

பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் போர் மேற்கொள்வது போன்ற தனது அரசு சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களுக்கும், இந்த எம்பெருமானையே குருவாகக் கொண்டு வெற்றி பெற்றான் என்பதை திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழி (2.9.2) பாடலில், தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில் திறல் வாட்டிய திண் சிலையோன் பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் – பரமேச்சுர விண்ணக ரமதுவே என்று பாடுகிறார்.

திருமங்கையாழ்வார், எல்லா பாடல்களிலும் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் என்று அந்த மன்னனுக்கும் இந்த திவ்யதேசத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்து சொல்லி உள்ளார்.

Google Map

திருப் பரமேச்சுர விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருப் பரமேச்சுர விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

055 திருப்பவளவண்ணம் Thirupavalavannam

பவளவல்லி சமேத பவளவண்ணன் திருவடிகளே போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்பவளவண்ணன் – ப்ரவாளேச வண்ணன்
மூலவர்திருப்பவளவண்ணன்
உத்ஸவர்
தாயார்திருப்பவளவல்லி (தனிக்கோவில் நாச்சியார்)
திருக்கோலம்நின்ற
திசைமேற்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 98423 51931

தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம், நன்றி.

கோவில் பற்றி

எம்பெருமானுக்கு நான்கு யுகங்களிலும் நான்கு வெவேறு வர்ணங்கள். க்ரித யுகத்தில் வெண்ணிறம் ; திரேதா யுகத்தில் பவள நிறம் ; துவாபார யுகத்தில் பச்சை நிறம் ; கலியுகத்தில் கருநீலம் நிறம்.

எம்பெருமானின் நிறத்தைக்கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது ஒன்றுதான். 

இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது
அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார்.

ஸ்தல வரலாறு

பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி கொடிய அரக்கர் கூட்டத்தை அனுப்பிய போது, எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாகத் தோன்றி, அந்த அரக்கர்களை எல்லாம் கொன்று குவித்து ரத்தக்களரியாக நின்றாரே அந்த செம்மை சேர்ந்த பவள வண்ணத்தில் இந்த பவளவண்ணர் நின்று காட்சி அளிக்கிறார்.

ஆழ்வார்

 பணி வரையின் உச்சியாய் பவள வண்ணா என்று திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்து உள்ளார்.

Google Map

திருப்பவளவண்ணன் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம், திருப்பவளவண்ணன் பற்றி சொல்வது

Kulithu Moondru Analai

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama,by mentioning silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally to Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Still people did not follow Azhwaar, he decided to move on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns 15 to 24.

 • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma using the twenty six significant conceptual points in the hymn Meyyerke meyyanaagum .
 • Emperumaan occupied the heart of Azhwaar and made azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell in the next hymn Soodhanaai Kalvanaai .
 • Emperumaan melted Azhwaar’s hard heart and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not suited to receive any favours from Periyaperumal. (Virumbi nindru)
 • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy. (ini thirai thivalai modha)
 • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can worshipped to get abode / Moksham (Kuda Thisai mudiyai)
 • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are for the happiness of His devotees. (Paayum Neer Arangam)
 • Emperumaan made Azhwaar to realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar. (Panivinal manamadhu onri)
 • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas and our Acharyaas had already said about Him and we need not toil to speak anything new about Him. (Pesitre pesal allaal)
 • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan. (Gangaiyil punithamaaya)
 • Finally, Emperumaan made Azhwaar to realise and state that he did not have any pre-requisites for total surrender, and that helped azhwaar to get prepared for total surrender to Him. (Vella Neer parandhu paayum)

So for, we have seen the three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24).

Now Azhwaar sings that he did not have any good qualities but had only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichaanusanthaanam, in our tradition. Before going to this section, let us see some interesting points regarding Moksham (abode).

Moksham / Abode

The Primary objective of all Jeevathmaas is to get rid off their Karmas and reach/attain Him. Reaching Him, is called Moksham or Mukthi. All Jeevathmaas strive towards achieving this objective, by following one or more of the following routes / ways:

 • Karma Yogam (activities such as penances, activities which are assigned to us by vedas/Scripture)
 • Gnana Yogam (Knowing more and more about Paramathma by acquiring knowledge)
 • Bhakthi Yogam (Practising true and dedicated devotion, through love and affection towards Paramathma)

We can use any of the above routes to reach Him. Lord Krishna has told the same in Bhagawadh Geetha and let us see three slokas from there to support this. In 3.30, Krishna says that King Janaka (Seetha’s father in Ramayanam) attained moksham, by following Karama Yogam. In 4.33, Lord Krishna says that the knowledge part of the Karma Yogam takes priority and all activities of Karma Yoga leads to Gnana Yogam. Finally in 11.54, Lord Krishna states that only the dedicated and true devotion and love towards Him without any expectation (Bhakthi Yogam) would enable one to see, understand and get to Him. Thus, all the three Yogams could individually help us to attain moksham.

Moreover, in each of these yogams, the other two would be part of it and it is always a combination of them. Our acharyaas used to state that one of the yogams would be primary and the other two would be supportive of the primary in attaining moksham. Now let us see some examples of getting the moksham through each of the yogams as primary with the support of the other two.

 • King Janaka, Seetha’s father and Lord Rama’s father in law, got abode using Karma yogam (activities) as the primary route and the other two, namely, Gnana and Bhakthi yogams as support
 • Jadabharathar, a great rishi, got abode using knowledge (gnana) as the primary route to get his moksham, and the other two, namely, karma and bhakthi yogams as the support
 • Bhaktha Prahaldah, used bhakthi (devotion) as his primary route to get abode, with Karma (activities) and Knowledge (gnana) yogams as support.

After the Karma Yogam is started, the Gnana Yogam would automatically start from within. Similarly after the journey of Gnana Yogam is started, the Bhakthi Yogam would start from within. The fruits of doing the Karma Yogam would never get wasted. In other words, even if a jeevathma dies before completing the journey of Karma Yogam, the results of that Karma yogam would be passed on to the Jeevathma in its next life. Generally there is a very good possibility for a jeevathmaa to take on Bhakthi Yogam, as soon as Karma or Gnana Yogam is started.

The reason why the Bhakthi Yogam did not start in jeevathmaas, is because of the sins committed by the jeevathmaa, and those sin act as a deterrent. The fruits of Karma and Gnana yogams that were carried out by the jeevathmaa during many many lives, help the jeevathmaa to get rid of the sins accumulated in the past and make the Jeevathmaa move towards Lord Krishna with devotion. This is how it is described by our traditional doctrine.

We know that there are four yugams or time period, namely, Krutha, Thretha, Dhwapara and Kali. We also understand that the knowledge, skills, time (lifespan) and the environment that are needed to achieve moksham through Karma, Gnana and Bhakthi yogams are more probable in the first three yugams, Krutha, Thretha and Dwapara. And we also mightt have heard that these were almost impossible in this Kali Yuga. Here we should remember there is another route called Saranagathi, or Total Surrender to attain moksham, exclusively for us.

Total surrender can be explained further as, attaining Him through Him. We should surrender totally to His holy feet, meaning that all actions and the results are because of Him. And keep the Holy feet as the only route to attain Him. After attaining Him, we should ask for only serving Him and nothing else, as there are two other options, like getting the worldly material wealth and Kaivalyam, which is beyond this world’s material wealth, but not serving Paramathmaa, like moksham. Those who want to serve Paramathma, after attaining Him are called Bagawathlabarthis. Those who want this world’s material wealth are called Iswaryaarthis. Those who want Kaivalyam are called Kaivalyaarthis.

We have seen about Kaivalyaarthis earlier, those who do not want to serve Paramathma after leaving this world. As said earlier, this is not a desired state. Alavanthaar, one of our acharyaars, had mentioned that those who want to get Kaivalyam, could also use the three yogams, Karma, Gnana, Bakthi, as the route individually to reach their goal of Kaivalyam.

Alavanthaar, continued to state that Paramathma gives one more final opportunity to those who wanted Kaivalyam, to opt for serving Paramathma. At their last breath, if they desire to change their mind and want to serve Paramathma or want moksham, Paramathma grants them the moksham.

This is in line with Varaha Charama Slokam as “ Anyone who thinks of Me, when the mind and body are in good and stable health, – that I am indeed the very cause of this universe or the form of this universe, that I am without birth – I assure that I will remember this devotee of Mine when he/she is on his/her deathbed,  lying helplessly like a log of wood, and I myself will personally take him/her to the Supreme Abode”. So whatever route, we take, He should be remembered at the last minute to get moksham. Either we remember Him or He does it for us.

Keeping the above words about moksham as a background, let us go into the next hymn of Thondaradipodi azhwaar, namely, the 25th hymn starting with Kulithu moonru.

Thirumaalai Twenty Fifth Hymn

Kulithu moonru analai ombum kurikol anthanamai thannai, olithitten en kann illai, nin kanum pathan allen, kallipadhu en kondu Nambee, Kadalvanna, katharuginren, allithu ennaku arul sei kandaai, aranga maa nagar ullaane (Thirumalai 25).

Azhwaar wails that he did not even have the basic qualifications to perform Karma yoga, though he was a brahmin by birth. He continues that he did not have bhagwadh knowledge and was also not a true devotee of Paramathma. Hence he did not have any reason to feel happy. He pleaded to Lord Ranganatha that He should grace him with all His blessings, starting from the qualification so that Azhwaar could reach Him. This is the summary of the meaning of this hymn.

In the previous ten hymns, Azhwaar explained the great favours graced by Emperuman to him. In the last hymn, Azhwaar admitted that his devotion was also a deceitful one. He feared that he might miss the opportunity to leave this body and reach Paramapadham to have the continuous happiness through the experience of Paramathma, as he did not have any of the qualification to get abode.

Periyaperumal said that there are well defined means in Karma, gnana or bhakthi, for the brahmins, vaisya and kshatriya, in scriptures(saasthras) and total surrender (saranagathi) and Nama samkeerthanam (recital of holy names) for others and animals. Azhwaar replied that he did not have any of the qualification to follow any of the above routes. In this hymn, Azhwaar sang that he did not have any of karma, gnana, bhakthi yogams/options.

Periyaperumal referred to the previous 24 hymns where Azhwaar showed that he had devotion and knowledge about Him. Azhwaar responded by stating those were only for experiencing Him in this world and those could not be treated as the required qualification criteria to take him to paramapadham and experience Him there.

Kulithu Moonru Analai Ombum Kurikol Anthanamai

Kulithu

Vedas and Sasthraas insist that all brahmins should take three types of baths and up keep three types of fires for worshipping. Azhwaar laments that he had not performed any of those stated in the vedas (rulebook) right from his birth. The three types of baths that every brahmin should do are,

 • three times bath a day
 • the bath that should be taken after eclipse period
 • the bath that should be taken before performing any atonement (prayachitham) activity

It is also to be noted that any of these above baths shall not be left out in place of the other. All these mentioned above help in attaining the qualifications to get into Karma yogam, as taking the route to abode, through deeds (karma). Here Azhwaar stated that even to follow or do the basic things like taking three types of baths, that enable a person to do Karma yogam, was undoable for him, let alone the Karma yogam itself, as a mean to attain abode, Azhwaar did not use the more refined words like snanam in Sanskrit meaning holy bathing, in stead, used common word like ‘kulithu‘, to mean normal bathing.

Moonru Analai Ombum

Vedas and Sasthras state that three types of fire shall be worshipped. Here also Azhwaar did not use a refined word “agni” , instead, a common word ‘fire’. The reason for using the normal words like fire and bath, is to make it known to the Lord that he did not even have any knowledge on divine matters.

Analam’ in Sanskirit means ‘not enough” and to mean, that it will keep on asking for more and more without appease. So it is very difficult to do and complete prayers for fire. Saasthras stipulate that brahmins should offer prayers to three fires. Azhwaar sang that it was a near unattainable task even to worship one type of fire.

According to our acharyaas, brahmins should always carry the husk of paddy (umi) and holy twigs for the fire always and wherever they go, like how a mother carries the food and water for her young child to carry out their fire worshipping.

Kuri kol Anthanamai

Brahmanyam or Anthanamai is to be followed carefully, to realize the fruits of chanting Mantras. Any of the following will not give the desired results.

 • mistakes while pronouncing the mantras
 • mistakes in the actions which are to be done along with the mantras
 • shortcomings in both quality and quantity of the materials used
 • mistakes with the timings
 • mistakes in terms of worshipping different deities instead of the expected one

So Brahmanyam is not an easy like getting pardoned, by doing a surrender or an anjali sign which is much easier and that made Azhwaar to feel that it was very difficult for him to follow brahmanyam.

Thannai Olithitten

Azhwaar confessing that he did not possess that kind of a Brahmaniyam, by “olithitten“, added that he was getting a bad grace for the entire society, as he was not following the required norms of Brahmaniyam. By this was Azhwaar informs Periyaperumal that he did not have the requisite, such as Brahmaniyam, to perform Karma Yogam, so declared that there was no way that he would get Karma Yogam.

En Kan illai

Periyaperumal then suggested that Azhwaar might try to follow ‘gnana yogam’ as a mean to get abode, if Azhwaar could not try karma yogam as a way to get abode. To that Azhwaar answered that he did not possess the required true knowledge about jeevathma or Paramathma, which is the pre-requisite to know about ‘gnana yogam’. So he had no way to follow gnana yogam.

If there was no Karma yogam, the possibility of gnana yogam happening because of karma ypgam is nil. Then Azhwaar need not reiterate that he did not have Gnana yogam, as ‘en kann illai‘, but the reason for the same is explained by the commentator as per below.

If Azhwaar in his previous birth, had completed the karma yogam (actions) but passed away before getting the benefits of Karma yogam, such as getting the gnana and/or bakthi yogam, which Azhwaar would possess, instantly in his subsequent birth. Azhwaar denied such possibility also by saying, en kann illai.

So by saying this, azhwaar made sure that he communicated to Periyaperumal that he did not have the option of knowledge as the route (Gnana Yogam.) to reach Him, as he did not even have the qualification criteria for the same.

Nin Kanum pathan allen

Periyaperumal now asked Azhwaar, to follow Bhakthi yogam ( devotion ) as the means to reach Him, if Azhwaar did not have the qualifications to practice karma yogam and gnana yogam. Azhwaar answered that he did not have the slightest devotion or affection towards Paramatma, and hence the possibility of practising bhakthi yogam as a route to reach Him, was also ruled out as ‘ nin kanum pathan allen’.

Bhakthi yogam is attainable only after the initiation of karma (actions) and/or gnana (knowledge) yogams. If Azhwaar did not have the opportunity to go through karma and/or gnana yogams (activities and knowledge as routes) to reach Him, it is generally understood that Azhwaar would not have a chance to go through bakthi yogam. Then why should he sing that he did not have bakthi yogam (devotion as the route) to get abode, separately, like nin kanum pathan allen. This is explained by the commentator explained as follows

If a jeevathma, had performed activities (karma) and knowledge (gnana) in the previous births, the benefits for the same would remove the sins attached to the jeevathmaa, according to our Sastrams, which could make the jeevathma to devote themselves towards Lord Krishna. Azhwaar denied such possibility also in this hymn by saying nin kanum pathan allen.

Others on Karma, Gnana Bakthi Yogangal

Thondaradipodi Azhwaar sang in this hymn, in the first two lines that he did not have any connection to actions, knowledge or devotion (Karma, Gnana, Bakthi yogams) as the options to reach Him, by Kulithu moonru analai ombum kurikol anthanamai thannai, olithitten en kann illai, nin kanum pathan allen. Now let us look into what other Azhwaars and acharyars are talking about on the above three options / concept.

In Thiruvaaimozhi,(5.7.1), Swami Nammazhwaar sang ‘Notra nonbilen, nun arivu ilen“, to indicate that he did not have Karma Yogam (actions) and Gnana Yogam (knowledge on Paramatma). The commentator included the bakthi yogam also, as Namazhwaar claimed that he did not have the first two.

In Thirupaavai, (Karavaigal pin chendru, 28) Aandal said, “arivu onrum illaadha aaikulam“, meaning “she belonged to the clan of the ignorant cowherds . This is explained beautifully by our acharyars as,

 • arivu illaadha, meaning ‘no knowledge’ and explained as having no karma yogam
 • arivu ondru illaadha, meaning ‘ not having single knowledge’ and explained as having no gnana yogam &
 • arivu ondrum illadha meaning ‘ not even having a single knowledge” and is explained as having no bakthi yogam.

Again let us go back to Aalavandhar, in his Sthothra Rathnam, in hymn 22, “na dharma nishtosmi, nachaathmavedhi, na bhakthimaan“, meaning that he did not follow the actions (karma yogam), did not have the true knowledge about Paramathma (gnana yogam) and did not follow Him as a true devotee (bhakthi yogam) and did not follow or possess any route to reach Him. He emphasized that only His holy feet as the only way to reach Him at the end of the hymn. As Thondaradipodi Azhwaar sang in this hymn, Alavandhar also explained one of the important concept of Vaishnavam, Aakinchanyam, that he had nothing to offer Him, (kai mudhal onrum illai).

Kallipadhu en kondu

Thondaradipodi Azhwaar told Peryaperumal, that he had no means of doing Saranagathi, to which Periyaperumal responded that Azhwaar like many wise people, confessed his inability that he did not have any qualifications or ability follow any route, even to try to reach Him, (aakinchanyam) which was very rare, and Azhwaar could reach Him with that trait. To that Azhwaar said that he did not repent for not having the karma, gnana and bhakthi yogams. In Bhagavadh Gita 18.66, where Lord Krishna had told maam ekam charanam vraja , as to leave everything and hold on to Him. But Azhwaar was shaken and felt that he did not have anything to leave. Even his akinchanyam was without any empathy towards Perumal, and he did not find any reason to feel happy.

Nambi

Based on the above discussions with Azhwaar, Periyaperumal concluded that there was no option other than letting Azhwaar go. But Azhwaar pleaded that he might not have anything, but Periyaperumal has everything, and He was full of all Good qualities and attributes, which He could use to bless Azhwaar. In Thirupaavai, Aandal initially said ‘arivu onrum illaadha aaikulathil‘, and then followed it by saying ‘kurai onrum illadha Govinda” meaning that Aandal initially that she belonged to Aikulam, which does not know anything, followed by ‘Govinda, who does not have any shortcomings‘. In the same way, Azhwaar highlighted the greatness of having all the good qualities by Emperumaan, by calling Him, Nambi, after declaring that he does not have anything.

Kadal Vanna

Azhwwar said in this hymn, that he believed that His glories like being supreme or being simple were not required to bless him, but His Beauty alone was sufficient to grace him with Moksham or Paramapadham, by calling Him “kadal vanna” meaning His ocean coloured form. Kambar, in his Kamba Ramayanam, Yudha Kaantam, (6718) said that Rama, the sea of kindness lied down in front of a big sea, when he wrote “karunaiankadal, kidandhanan karun kadal nokki” as the two oceans were competing with each other and Lord Rama, the sea of mercy, was facing and lying down very much similar to the other sea, which was black in colour.

In the earlier fifteenth hymn, Azhwaar said, “aiyapaadu aruthu thonrum azhagan” and in the sixteenth hymn, “aatharam peruga vaitha azhagan”, meaning that Periyaperumal, had the beauty and all the glories. So the conclusion is that Azhwaar, would not lose anything, as Periyperumal had both beauty and glories, in plenty and Azhwaar would be bestowed with moksham.

Kadharuginren

Azhwaar used a single word “kadharuginren” meaning that he was wailing, to convey many things.

 • He did not posses any of the qualification criteria to go through activities (karma), knowledge (gnana) or devotion (bakthi) routes to reach Him
 • He knew that Periyaperumal was full of good glories and beauty
 • He was crying loudly and sounding horrible to others, like the wailing people who followed Karma, Gnana, Bakthi routes and had not got their moksham yet.
 • He brought a disgrace to Priyaperumal, by complaining that Emperumaan who usually showered His kindness on to those who showed even a tiny devotion, did not show that mercy to Azhwaar.
 • The loud noise he made would have made other people think that Periyaperumal did not show any kindness towards Azhwaar and would bring down His stature with those who listened to Azhwaar’s loud noise.
 • Azhwaar finally realised that he should have only wished Peiriyaperumal to live longer ! (Pallaanadu Pallaandu)

Allithu enaku arul sei kandaai

Azhwaar pleaded to Periyaperumal that He should grace him with everything, starting from creating sympathy towards Emperumaan, by “allithu‘, meaning to give or bestow. Azhwaar pleaded Him to grace him, since He possess the kindness to bless.

Aranga Maa Nagar ulaane

Periyaperumal was not convinced with all these discussions, and He continued to ask why He should grace Azhwaar by giving him all, starting from the qualification onwards. Azhwaar’s response to this was that if Periyaperumal had to grace only those who did not have any shortcomings, then He should only be in Paramapadham, where He could grace only Mukthars and Nithyars. If He has come down all the way to Thiruvarangam, and displayed His beauty of the reclining posture and the innumerable glories, the purpose of Him being in Thiruvarangam is only to grace people like Azhwaar. With this Azhwaar concluded this hymn.

Let us catch up again in the next hymn, thanks

054 திருக்கள்வனூர் Thirukalvanoor

அஞ்சிலைவல்லி நாச்சியார் ஸமேத ஆதிவராக பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கள்வனூர்
மூலவர் ஆதிவராகப்பெருமாள்
உத்ஸவர்
தாயார்அஞ்சிலைவல்லி நாச்சியார்
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 44 3723 1988 ; +91 93643 19545

தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி

கோவில் பற்றி

இந்த திருத்தலம், காஞ்சி காமாட்சி கோவிலுக்குள்
உள்ளது. காமாட்சியம்மன் கர்ப்பக் கிரஹத்திற்கு முன் மேற்கு நோக்கிய திருக்கோலத்தில் நான்கு திருத்தோள்களுடன் எழுந்தருளியிருக்கிறார்.

மூலவர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயார் அமர்ந்து வணங்கும் நிலையில் காட்சி அளிக்கிறார். காமாட்சியம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் நின்றான், இருந்தான், கிடந்தான் என்று மூன்று திருக்கோலங்களை மூன்று அடுக்குகளில் எம்பெருமான்கள் எழுந்து அருளி உள்ளனர்.

தனியாக சன்னதி, உற்சவர் மூர்த்தி போன்றவை இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. நித்தியபடி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது.

ஸ்தல வரலாறு

ஸ்தல வரலாறு என்பது செவி வழி செய்திகளாகவே உள்ளன. காமாட்சி அம்மன் கோவில் வரலாற்றில் சில தகவல் கிடைக்கலாம்.

பார்வதி தேவி சிவனின் கட்டளைக்கு இணங்கி இங்கு வாமனனை குறித்து தவம் செய்து காமாட்சி என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். ஆனால் இங்குள்ள எம்பெருமான் ஆதி வராக மூர்த்தி. ஆனால் அந்த காலங்களில் பல இடங்களில், வராக மூர்த்திதான் முதலில் வணங்கப்பட்டார், உதாரணம், திருமலை.

பார்வதி, எம்பெருமானின் அருளைப்பெற்று காமாட்சி என்று ஆனதால், இங்குள்ள காமாட்சி அம்மன் உள்ள காயத்ரி மண்டபம் எம்பெருமானின் சன்னதியை விட சற்று தாழ்ந்த இடத்தில உள்ளதாகவும் அது பார்வதி தேவி தன்னுடைய அண்ணனுக்கு தரும் மரியாதை என்று தானே ஏற்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது.

இவ்விடத்தில் ஒரு சமயம் லட்சுமி தேவியும் பார்வதியும் பேசிக்கொண்டு இருந்ததை, மஹாவிஷ்ணு மறைந்திருந்து கேட்டதாகவும், அதை அறிந்த காமாட்சி எம்பெருமானைக் கள்வன் என்று அழைத்ததால்
இந்த எம்பெருமானுக்கு கள்வன் என்று திருநாமம் ஏற்பட்டது என்று கூறுவார்கள்.

இவ்விடத்து எம்பெருமான் தனது நின்ற, வீற்று இருந்த, கிடந்த என்னும் மூன்று திருக்கோலங்களை பார்வதிக்கு காட்டி அருளியதாகவும் அவரின் வேண்டுகோளின்படி எம்பெருமான் இங்கேயே உறைவதாகவும் கூறுவார்கள்.

தசரதன், இராம அவதாரத்திற்கு முன் இங்குள்ள எம்பெருமானை வணங்கியதாகவும், பின் திருப்புல்லாணியில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து அவனை மகனாகப் பெற்றதாகவும், அவனை மகனாகப் பெற, அவனிடமே வேண்ட செய்த எம்பெருமான் என்ற பெருமையை பெற்றதாகவும் சொல்கிறார்கள்.

ஆழ்வார்

கள்வா என்னும் ஒரு சொல்லே இத்தலத்திற்கும் இந்த எம்பெருமானுக்கும் திருமங்கைஆழ்வார் இட்ட மங்களாசாசனம் ஆகும்.  கள்வன் என்ற அர்த்தத்துடன் கூடிய திருநாமங்களைக் கொண்டு பாண்டி நாட்டு ஸ்ரீ வைகுண்டம் திவ்யதேசத்தில் கள்ளப்பிரானும் திருமாலிருஞ்சோலையில் கள்ளழகரும் உண்டு.     

ஓர் சொல்லாலோ, சொற்தொடராலோ, ஆழ்வார்களால் திவ்யதேசங்கள் ஆனா வேறு சில திருத்தலங்களை கீழே காணலாம். திருமங்கையாழ்வார், கோழியும் கூடலும் கோயில் கொண்ட  என்பதில் கோழியும் என்ற ஒரு சொல்லால் உறையூர் திருத்தலத்தையும், கரம்பனூர் உத்தமனை என்பதில் கரம்பனூர் என்ற ஒரு சொல்லால், திருக்கரம்பனூர் திவ்யதேசத்தையும்,  உலகமேத்தும் கண்டியூர் என்பதில் கண்டியூர் திருத்தலத்தையும் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசையாழ்வார், ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற சொற்தொடரால், கபிஸ்தலம் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இவைகளைத் தவிர பேரன்பில் என்ற ஒரு வார்த்தையால், அன்பில் திவ்யதேசத்தை திருமழிசையாழ்வாரும், திருநீரகம், திரு நிலாத்திங்கள்துண்டம், திருக்காரகம், திருக்கார்வானம் என்ற திவ்யதேசங்களை திருமங்கையாழ்வாரும், ஒரு சொற்தொடரால் பாடி உள்ளனர் என்று பார்த்து உள்ளோம்.

Google Map

திருக்கள்வனூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்கள்வனூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

053 திருக்கார்வானம் Thirukarvaanam

கமலவல்லித் தாயார் ஸமேத கள்வர் திருவடிகளே போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கார்வானம்
மூலவர் கள்வர்
உத்ஸவர்
தாயார்கமலவல்லித் தாயார் / தாமரையாள்
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 94435 97107, +91-98943 88279

தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி

கோவில் பற்றி

கார் வானத்துள்ளாய் (திருநெடுந்தாண்டகம் 8) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்யதேசமும் உலகளந்த பெருமாள் கோவிலில் தான் உள்ளது.

காரகம், நீரகம், ஊரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச எம்பெருமான்களும் சேர்ந்து காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளி உள்ளனர். காரகம், நீரகம், கார்வானம் என்ற மூன்று திவ்யதேச பெருமான்களும் ஊரக திவ்யதேச எம்பெருமானான உலகளந்த பெருமாளின் பெருமை, திருகுணங்களுக்கு விளக்கமும் உருவமும் கொடுக்கிறார்கள்.

நீர்மை என்னும் எளிய திருக்குணத்தை திருநீரகப் பெருமாளிடம் காண்கிறோம். அதே எளிமை திருக்குணத்துடன் ஏழை அந்தணராக வாமனனாக அவதரித்து த்ரிவிக்ரமனாக உருவெடுத்த திருஊரகப் பெருமானிடம் சேவிக்கிறோம்.

நீரைக்கொடுக்கும் மேகத்தை போன்ற கருணையை, காரக பெருமானிடம் சேவிக்கின்றோம். மேகம், யாருக்கு, எப்பொழுது, எங்கே என்றல்லாம் கேட்காமல் மழை பொழிவதைப் போல், திருக்காரக எம்பெருமானான கருணாகர பெருமாள் கருணை மழையை எல்லோருக்கும் அளிக்கிறார். இதே போல் திருக்குணத்தை ஊரக எம்பெருமானான உலகளந்த பெருமாளிடம் நாம் பார்க்கிறோம். யார், எங்கே, சரணாகதி கேட்டாரா, இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோருடைய தலைகளிலும் த்ரிவிக்ரமனாக தன்னுடைய திருவடியைக்கொண்டு தீண்டி எல்லோருக்கும் மோக்ஷம் அளித்ததை, அந்த எம்பெருமானின் தனிப்பெருமையாக நமது ஆச்சாரியார்கள போற்றி உள்ளனர்.

கதாபுநச்சங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம்
மதீய மூர்த்தாநமலங்கரிஷ்யதி

இதன் அர்த்தம் “த்ரிவிக்ரமா! மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”. 

கார்வானம் என்பது மேகம் இருக்கும் வானத்தைக் குறிப்பது. எங்கும் பரந்து விரிந்து உள்ள திருமால், விஸ்வம், விஷ்ணு போன்ற திருநாமங்கள் மூலம் வானத்தை தன்னுள்ளே கொண்டுள்ளார். த்ரிவிக்ரமன் இந்த மண்ணுலகத்தை ஒரு திருவடியாலும், வானத்தை இன்னொரு திருவடி மூலம் அளந்ததையும் ஊரக எம்பெருமானிடம் பார்த்து உள்ளோம்.

ஆக நீரகம், காரகம், கார்வானம், ஊரகம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களும் சேர்ந்து இருப்பது நமக்கு எளிமை, கருணை, எங்கும், எல்லோருக்கும் என்று பாரபட்சம் இன்றி காக்கும் திருமாலின் திருக்குணங்களை நமக்கு தெரிவிக்கவே என்று கொள்ளலாம்.

கார்மேகம் சூழ்ந்த வானத்திற்குள் உள்ள எம்பெருமானே இங்கு எழுந்தருளியுள்ளான் என்று கொள்ளலாம்.

இந்த திருத்தலத்தைப் பற்றி வேறு அதிக தகவல்களோ, ஸ்தல வரலாறு என்றோ அதிகம் தெரியவில்லை.

ஆழ்வார்

நீரகத்தாய் என்றும், காரகத்தாய் என்றும் , ஊரகத்தாய் என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார், கார்வானத்துள்ளாய் கள்வா என்று, இத்தலத்து எம்பெருமானின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து இருப்பதாகக் கொண்டும் ரசிக்கலாம்.

ஆனால், திருக்கள்வனூர் என்ற ஒரு திவ்யதேசம் காஞ்சியில் உண்டு. ஆனால் அந்த திவ்ய தேச எம்பெருமானுக்கு ஆதிவராகன் என்பது திருநாமம். இருந்தாலும், கள்வா என்று இந்த திருநெடுந்தாண்டம் எட்டாவது பாசுரத்தில் சொல்வது திருக்கள்வனூருக்குத் தான் என்று நம் முன்னோர்கள் வகைப்படுத்தி உள்ளனர். அதனால் கார்வானத்துள்ளாய் என்பது மட்டுமே இந்தக் கார்வானத்து எம்பெருமானான கள்வர் என்ற திருநாமம் கொண்டவர்க்கும் கள்வா என்பது திருக்கள்வனூரில் உறையும் ஆதிவராகப்பெருமாளுக்கு என்றும் கொள்ளவேண்டும். கார்வானத்துள்ளாய் கள்வா என்ற சொற்தொடரை இரண்டு திவ்ய தேசங்களுக்கான மங்களாசாசனமாகக் கொண்டு இந்த பாடலில் மொத்தம் ஒன்பது திவ்யதேசங்களுடன், ஆழ்வாரின் நெஞ்சம், மற்றும் சிந்திப்பவர்களின் நெஞ்சம் என்று எம்பெருமான் உகந்து வாழும் திவ்யதேசங்களாக திருமங்கைஆழ்வார் சொல்கிறார் என்றும் ரசிக்கலாம்.

நீரகத்தாய் (1) நெடுவரையின் உச்சி மேலாய் (2) நிலாத்திங்கள் துண்டகத்தாய் (3) நிறைந்த கச்சி ஊரகத்தாய் (4), ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் (5), உள்ளுவார் உள்ளத்தாய்(A) , உலக மேத்தும் காரகத்தாய் (6) கார்வானத் துள்ளாய் (7) கள்வா (8), காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்,(9) பேராது என் நெஞ்சி னுள்ளாய் (B) பெருமான் உன் திருவடியே பேணினேனே (திருநெடுந்தாண்டகம், 8)

Google Map

திருக் கார்வானம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக் கார்வானம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

052 திருக்காரகம் Thirukaaragam

பத்மாமணி தாயார் ஸமேத கருணாகரப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்காரகம்
மூலவர்கருணாகரப்பெருமாள்
உத்ஸவர்
தாயார்பத்மாமணி நாச்சியார் / ரமாமணிநாச்சியார்
திருக்கோலம்நின்ற திருகோலம்
திசைதெற்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 94435 97107, +91 98943 88279

தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு முன்னுரைக்கு இங்கே செல்லவும், நன்றி

கோவில் பற்றி

காரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “காரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி நகரத்திற்குள்ளே ஊரகம் திவ்யதேசத்திற்குள்ளே இருக்கிறது.

காரகம், நீரகம், ஊரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச எம்பெருமான்களும் சேர்ந்து காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளி உள்ளனர். காரகம், நீரகம், கார்வானம் என்ற மூன்று திவ்யதேச பெருமான்களும் ஊரக திவ்யதேச எம்பெருமானான உலகளந்த பெருமாளின் பெருமை, திருகுணங்களுக்கு விளக்கமும் உருவமும் கொடுக்கிறார்கள்.

நீர்மை என்னும் எளிய திருக்குணத்தை திருநீரகப் பெருமாளிடம் காண்கிறோம். அதே எளிமை திருக்குணத்துடன் ஏழை அந்தணராக வாமனனாக அவதரித்து த்ரிவிக்ரமனாக உருவெடுத்த திருஊரகப் பெருமானிடம் சேவிக்கிறோம்.

நீரைக்கொடுக்கும் மேகத்தை போன்ற கருணையை, காரக பெருமானிடம் சேவிக்கின்றோம். மேகம், யாருக்கு, எப்பொழுது, எங்கே என்றல்லாம் கேட்காமல் மழை பொழிவதைப் போல், திருக்காரக எம்பெருமானான கருணாகர பெருமாள் கருணை மழையை எல்லோருக்கும் அளிக்கிறார். இதே போல் திருக்குணத்தை ஊரக எம்பெருமானான உலகளந்த பெருமாளிடம் நாம் பார்க்கிறோம். யார், எங்கே, சரணாகதி கேட்டாரா, இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோருடைய தலைகளிலும் த்ரிவிக்ரமனாக தன்னுடைய திருவடியைக்கொண்டு தீண்டி எல்லோருக்கும் மோக்ஷம் அளித்ததை, அந்த எம்பெருமானின் தனிப்பெருமையாக நமது ஆச்சாரியார்கள போற்றி உள்ளனர்.

கதாபுநச்சங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம்
மதீய மூர்த்தாநமலங்கரிஷ்யதி

இதன் அர்த்தம் “த்ரிவிக்ரமா! மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”. 

கார்வானம் என்பது மேகம் இருக்கும் வானத்தைக் குறிப்பது. எங்கும் பரந்து விரிந்து உள்ள திருமால், விஸ்வம், விஷ்ணு போன்ற திருநாமங்கள் மூலம் வானத்தை தன்னுள்ளே கொண்டுள்ளார். த்ரிவிக்ரமன் இந்த மண்ணுலகத்தை ஒரு திருவடியாலும், வானத்தை இன்னொரு திருவடி மூலம் அளந்ததையும் ஊரக எம்பெருமானிடம் பார்த்து உள்ளோம்.

ஆக நீரகம், காரகம், கார்வானம், ஊரகம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களும் சேர்ந்து இருப்பது நமக்கு எளிமை, கருணை, எங்கும், எல்லோருக்கும் என்று பாரபட்சம் இன்றி காக்கும் திருமாலின் திருக்குணங்களை நமக்கு தெரிவிக்கவே என்று கொள்ளலாம்.

கல்விக்கும். அறிவாற்றலுக்கும் இப்பெருமாள் வரப்பிரசாதி. கார்ஹ மஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்றுள்ளார்.

ஸ்தல வரலாறு

கார்ஹ மஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்று உய்ந்தார். அவரின் பொருட்டே இந்த திவ்ய தேசம் கார்ஹ அகம் என்று ஆகி பின்னர் காரகம் என்று மருவி இருக்கலாம் என்பர்.

ஆழ்வார்கள்

உலகமேத்தும் காரகத்தாய்  என்ற திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் பாசுரத்தினால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் ஆகும்.


Google Map

திருக்காரகம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்காரகம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

RSS
Follow by Email