Para and Viyuha Vasudevan/பர, வியுக வாசுதேவன்

For English version, please click here, thanks

ஐந்து நிலைகள்

பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணன் தன்னை ஐந்து நிலைகளாகக் கொண்டு தன்னுடைய கல்யாண குணாதிசயங்களை, பெருமைகளை, கீர்த்திகளை நமக்கு தெரிவிக்கின்றார். அந்த ஐந்து நிலைகளவான, பர, வியுக, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகும்.   இந்த நிலைகள் எல்லாமே பிரமம் தான், அவைகளுக்குள்  உயர்வு தாழ்வு கிடையாது.

இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் சகோம்

பரவாசுதேவன்

Sri_Maha_Vishnu

பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணன், பரவாசுதேவன், என்கின்ற திருநாமத்தோடு, வைகுந்தத்தில், பரமபதநாதனாக, ஸ்ரீ தேவி, பூ தேவி, மற்றும் நீளா தேவிமார்களோடு, நித்ய சூரிகளுடனும், முக்தாத்மாக்களோடும் தன் எல்லா கல்யாண குண நலன்களோடு பரிமளிக்கிறார்.   பகவான் என்றால், ஞான(எல்லாம் அறிபவர்), பல(வலிமை பெற்றவர்), ஐஸ்வர்ய(செல்வங்கள்), வீர்ய(சிறிதும் குறையாத தன்மை), சக்தி(ஆற்றல்), தேஜஸ்(தெய்வாம்சம்) என்ற ஆறு குணங்களை பூரணமாக கொண்டவன் என்று பொருள். பரவாசுதேவன் இந்த ஆறு குணங்களுடன் பகவானாக இங்கு காட்சி தந்து கொண்டு இருக்கிறான்.

நித்ய சூரிகளான, ஆதிசேஷன் என்கின்ற பெருமாளின் சிம்மாசனம் மற்றும் படுக்கை, கருடன் என்கின்ற பெருமாளின் வாஹனம், விஷ்வக்ஸேனன் என்கின்ற தளபதி, துவார பாலகர்கள் எப்பொழுதும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டு இருப்பார்கள். மண்ணுலக வாழ்கை முடிந்து, மோட்ஷம் அடைபவர்களான முக்தாத்மாக்கள் வந்து சேரும் இடமும் இதுதான்.

இதற்கு அந்தமில்பேரின்பம் (முடிவில்லாத பேரின்பம்), தெளிவிசும்புதிருநாடு (மிகப் பிரகாசமானதும் தெளிவும் உள்ள வானுலகம்), பரமபதம் (பரமபத நாதன் வசிக்கும் இடம்),  நித்யவிபூதி (என்றும் அழியாத சுத்த தத்வமயமான உலகம்) என்ற மற்ற பெயர்களும் உண்டு.   காலம், திசை என்பவை இங்கு கிடையாது. ஆனந்தத்திற்கு குறைவு கிடையாது.   இங்கு வந்தவர்கள் திரும்புவது இல்லை என்று வேதம் சொல்கிறது.  (ஒரே ஒரு விதி விலக்கு – அதை நம்மாழ்வார் பற்றிய குறிப்புகளில் காணலாம்).   இவ்வுலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளும் பரமபதத்தை அடைவார்கள் என்று நம்மாழ்வார் பாடி உள்ளார். (வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே ).

வியூக வாசுதேவன்

பரவாசுதேவன் வைகுந்தத்தில் இருப்பது போல்  திருப்பாற்கடலில் ஷீராப்திநாதனாக இருக்கிறார்.  ஆதிசேஷன் என்கிற பாம்பு படுக்கையில் ஷீராப்தினாதன் படுத்துக்கொண்டு இருக்க,  ஸ்ரீதேவி என்கிற மகாலக்ஷ்மி  அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

வியூக வாசுதேவன், தன்னை  வாசுதேவ, சங்கர்ஷன, ப்ரத்யும்ன, அநிருத்தனாக நான்காகப் பிரித்துக்கொள்கிறார்.  சங்கர்ஷணன் அழிக்கும் தொழிலையும், பிரத்யும்னன் படைக்கும் தொழிலையும், அநிருத்தன் காக்கும் தொழிலையும் செய்கிறார்கள்.   வாசுதேவனிடம் பகவானுக்கு உண்டான ஞான பல ஐஸ்வர்ய  வீர்ய சக்தி தேஜஸ் என்ற ஆறு கல்யாண குணங்களும் பூரணமாக  இருக்கும்.   மற்ற மூவருக்கும், இரண்டு இரண்டு குணங்கள் (சங்கர்ஷ்ணர் – ஞான பல; பிரத்யும்னர் – ஐஸ்வர்ய  வீர்ய; அநிருத்தர் – சக்தி தேஜஸ்) பூரணமாகவும், தங்கள் தொழிலுக்கு உதவியாகவும்  இருக்கும்.

இங்குதான் பிரம்மா, சிவன், இந்திரன், குபேரன் போன்ற தேவர்கள், மகாவிஷ்ணுவான வாசுதேவனை சந்திப்பார்கள்.   அவர்கள் குறைகளை கேட்கும் இடமும் இதுதான்.  இந்த பதவிகளில் அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு  ஸ்ரீ வைகுண்ட தரிசனம் கிடையாது.

இங்கு இருந்து தான் வியூகவசுதேவனான அநிருத்தன்  பற்பல அவதாரங்கள் எடுத்து விபவ நிலைக்கு செல்கிறார்.

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந நாகபர்யங்க முதஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்” – “திருப்பாற்கடல் நாதனான ஸ்ரீமந்நாராயணன் சேஷசயனத்தை விட்டிட்டு வடமதுரையில் வந்து பிறந்தான்“ என்றாற் போலே ராம க்ருஷ்ணாதி விபவாவதாரங்களும் மற்றும் அர்ச்சசாவதாரங்களுமெல்லாம் திருப்பாற்கடல் மூலமாகவே நிகழ்வதாக சொல்லப்படுகிறது. ஆக, திருப்பாற்கடலானது எல்லா அவதாரங்களுக்கும் மூலக்கிழங்கு எனப்படும்.

மற்ற நிலைகளை, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை, பின்பு ஒரு பதிப்பில் தொடரலாம்.

==============================================================

Five States

Paramathmaa, Sri Narayanan, displays His Glory, Character and Kudos to us in five different states.  They are called Para, Viyuga, Vibhava, Antharyaami and Archai.  All the five states are Brahmam.   There is no disparity or Highs or Lows among them.

Paravasudevan

Sri Narayanan, along with Sri Devi, Bhooma Devi and Neela Devi and Nithyasoories and Mukthathmaas,  presents Himself in Sri Vaikundam in the name of Sri Paravasudevan with all his Character, Glory and Kudos.     The word Bhagawan means a Superior Soul having full or complete or maximum capabilities in six characters, namely, Wisdom, Strength, Prosperity, Un-Diminishing power, Ability to do anything, Splendor. (Gnana Bala, Aiswarya Veerya, Sakthi ,Thejas).   Paravasudevan displays Himself as Bhagawan in Sri Vaikundam with all the above six characters in full.

The following are some of the Nithyasoories, who render services to Sri Paravasedevan all the times.

  • Aathhiseshan serves as His Bed, His Throne, His Shoe.
  • Garudan is His Carrier and he is His Vehicle.
  • Vishwaksenan is His General carrying out all His commands.
  • Dwara Palagargal are those who are protecting the gates of His entrances in all the eight directions

Mukthathmaas are people who lived in this world earlier and attained Moksham at the end of their lives.  Mukthathmaas reach Sri Vaikundam and start rendering services to Him in Sri Vaikundam.

Sri Vaikundam has got other names like Anthamil perinbam (Endless or Perpetual Happiness), Theli visumbu thirunaadu (The Bright and Clear State in Sri Vaikundam, Paramapadham  (The place where Paramapathanathan lives) and Nithyavibhuthi (Eternal, Transcendental spiritual universe as against the physical universe).   The concepts of Time and Direction are not applicable in Sri Vaikundam. There is no limit for happiness.   Those who come here will never return. (The only exception is Namazhwaar).   Namazhwaar in one of his Hymns has told that all the Jeevathmaas will reach Paramapatham.   (Vaikuntham puguvathu mannavar vidhiye).

Vyuga Vasudevan

thiruparkadal

Like Paravasudevan in Sri Vaikundam, Sriman  Narayanan reclines in Thiruparkadal (milky ocean) as KSheerapthi Nathan.   He is lying down on Aathiseshan, who serves as His bed.   Sri Mahalakshmi is also present, in sitting posture.

Vyugam is a form of organising and Viyuga Vasudevan organises himself into four different identities as Vasudevan, Sankarshanan, Prathyumnan and Anirudhan. Sankarshanan takes care of the job of Annihilation,  Prathyumnan takes care of the job of Creation, while Aniruthan takes care of the job of Protection.    Vasudevan is Bhagawan and has all the six characters, Gnana Bala, Aiswarya Veerya, Sakthi Thejas,  in full.  The other three takes two characters each in line with the requirements of their job responsibility.   Sankarshanan has Gnana Balam in full.  Prathyumnan has Aiswarya and Viryam in full. Anirudhan has Sakthi and Thejas in full.

Mahavishnu uses this place, namely, Thiruparkadal to meet all the Devas, like Brahma, Sivan, Indiran, Varunan and Kuberan.     He listens to their prayers and requests here.    As long as they hold their positions, they will not be able to reach or visit Sri Vaikundam.

Vyuga Vasudevan, in the form of Anirudhan, takes the very different Avathaars from here to the state of Vibhavam.

Let us see the other states, Vibhavam, Antharyaami and Archai in a future blog.

Thirumazhisai Alwar in Chola Naadu / திருமழிசையாழ்வார் சோழ நாட்டில்

For English Version, kindly click here, thanks

மூன்றாவது கண்

ஒரு நாள் சிவ பெருமான் தன் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் சென்ற போது, கீழே திருமழிசை ஆழ்வார் இருப்பதைப் பார்த்து அவரை சந்திக்க ஆசை பட்டார். சிவபெருமான், ஆழ்வார் விஷ்ணு பக்தர், நம்மை சந்திக்க மாட்டார் என்றுஅவர்  சொல்லியும் பார்வதி விரும்ப, சிவன் கீழே இறங்கினார்.  ஆழ்வாரிடம் சென்று தான் அவருக்கு வரம் கொடுக்க விரும்புவதாகவும் என்ன வரம் வேண்டும் என்றும் கேட்டார். ஆழ்வார் அவரிடம் இருந்து ஒன்றும் வேண்டாம் எனவும், சிவபெருமான் ஏதாவது கேளும் என்று தொடர்ந்து வலியுறுத்தவும்  ஆழ்வார் தனக்கு மோட்ஷம் வேண்டும் என்று பிரார்த்திக்க அது தன்னால் கொடுக்க இயலாது என்றார். ஆழ்வார் அதற்கு ஒரு ஊசியும் நூலும் கொடுத்து அந்த நூலை ஊசிக்குள் கோர்க்கச் சொல்லி அதுவே  அவர் போன்ற மற்ற தேவதைகளால் முடியும் என்றுசொன்னார்.   சிவபெருமான் கோபம் கொண்டு ஆழ்வாரை தனது மூன்றாவது கண்ணால் எரிப்பேன் என்று மூன்றாவது கண்ணை திறக்க, ஆழ்வாரும் தனக்கும் மூன்றாவது கண் உள்ளது என்று கூறி, தன வலது கால் பெருவிரலில் உள்ள கண்ணை திறக்கவும், அங்கே பெரிய தீக்கனல் உருவாக, பெருமாள் அருளால் வருண தேவனால் பெருமழை ஏற்பட்டு அந்த விபரீதம் தடுக்கப் பட்டது. சிவபெருமான் பார்வதியிடம், எம்பெருமான் பக்தர்களிடம்  நாம் அபசாரப் படலாகாது”என்று கூறிச் சென்றனன்.  இன்றும் சென்னைக்கு அருகில் உள்ள, திருமழிசை ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் ஆலயத்தில் ஆழ்வாரின் பெருவிரலில் மூன்றாவது கண்ணை தரிசிக்கலாம்.

வேத கோஷ்டி

திருமழிசை ஆழ்வார்  குடந்தை சென்று பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்ய எண்ணி அங்கு செல்கிறார்.    போகும் வழியில் ஒரு வைதீக கோஷ்டி, வேத பாராயணம் செய்து கொண்டு வருகிறது.    ஆழ்வாரைப் பார்த்ததும், அவரைப்பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டு, அவர் காதில் வேதம் விழக்கூடாது என்று எண்ணி,  வேதம் சொல்வதை நிறுத்தி விட்டது.  ஆழ்வாரைத் தாண்டி சென்றவுடன், பாராயண கோஷ்டி வேதம் சொல்ல தொடங்க வேண்டும், ஆனால் அவர்களுக்கு எங்கு விட்டோம், என்று நினைவு வரவில்லை.   ஆழ்வார், ஒரு நெல்லை எடுத்து இரண்டாக பிளந்து காட்டினார்.  அது சரியாக தங்கள் விட்ட இடத்தை அந்த வேத விற்பன்னர்களுக்குக் காட்டியது.    வேத கோஷ்டி, அப்படியே ஆச்சர்யத்தில் மூழ்கி ஆழ்வாரிடம் சென்று அவரின் பெருமையை உணர்ந்து, தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.

அந்தர்யாமி தரிசனம்

ஆழ்வார் கோவிலை சுற்றி போகும் போது ஒரு அதிசயம் நடந்தது.     அதாவது ஆழ்வார் போகும் திசையெல்லாம் கோவிலில்  இருக்கும் பெருமாளும் இவர் போகும் திசை பார்த்து திரும்பியபடி இருக்க, அதை கண்ட கோவில் பட்டாச்சார், அங்குள்ள மற்றவர்களுக்கு சொல்ல, அவர்கள் ஆழ்வாரின் பெருமையை அறிந்து அவருக்கு மரியாதை செய்தனர்.  இதை ஒரு சிலர் எதிர்க்க, ஆழ்வார் தன் மார்பில் பெருமாள், தாயாருடன்,  திருப்பாற்கடல் சேவையை காண்பிக்க, அனைவரும் அங்கேயே ஆழ்வாரிடம் சரண் அடைந்தனர்.

ஆராவமுத ஆழ்வான்

ஆழ்வார் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து குடந்தை நகர் சென்றார்.      ஆழ்வார் குடந்தை ஆராவமுதனுக்கு மங்களாசாசனம் செய்ய ஆரம்பித்தார்.

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே

குடந்தை கிடந்த பெருமாளையே, ஆழ்வார், தான் பெரியவன், உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன், நீ படுத்துக்கொண்டு உள்ளாயே, ”எழுந்திருந்து பேசு வாழி கேசனே ” என்று கூறுகிறார்.   திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், பக்திஸாரர் என்றும் போற்றப்படும் திருமழிசை ஆழ்வாரின், “எழுந்திருந்து பேசு ” என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க, பாதி எழுந்து  அத்திருக்கோலத்திலேயே (தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத்தில்) (உத்தான சயனம்) அருள் பாலிக்கிறான்.   ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.

kudanthai_moolavar   குடந்தை மூலவர்

ஆழ்வாரும் ஆராவமுதனும் பரஸ்பரம் அன்பு பாராட்டி தங்கள் பெயரின் கடைசி பகுதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.   அதாவது ஆராவமுத பிரான், திருமழிசையாழ்வார் என்று உள்ள தங்கள் பெயர்களை ஆராவமுத ஆழ்வார் என்றும் திருமழிசை பிரான் என்றும் மாற்றிக்கொண்டனர்.   பிரான் என்றால் அளப்பரிய உதவி செய்பவன் என்று பொருள்.

ஆழ்வாரின் அருளிசெயல்

திருக்குடந்தை சென்ற ஆழ்வார் தம் கிரந்தச் சுவடிகள் யாவற்றையும் காவிரியாற்றில் எறிய எம்பெருமானின் திருவுளப்படி, நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் எனும் ப்ரபந்தங்களைக் கொண்ட இரு ஓலைச்சுவடிகளும் நீரின் போக்கை எதிர்த்து வந்து நின்றன.  ஆகையால் இன்று அந்த இரண்டு பிரபந்தங்களே உள்ளன.  இவரது பல பாடல்கள் சந்தம் என்னும் வகையில் நல்ல இசையில் ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ளன.    அதேபோல் ஆழ்வாரின் பாடல்களில் ஒன்று இரண்டும் மூன்று என்று எண்ணிக்கைகள் அதிகம் இருக்கும்.    ஆழ்வார் பகவானின் ஐந்து நிலைகளில் (பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை) ஒன்றான அந்தர்யாமி என்ற நிலையைப் பற்றி அதிகம் பாடி உள்ளார்.

ஆழ்வார் பல காலம் வாழ்ந்து நமக்கு நல வழி காட்டிஉள்ளார்.  ஆழ்வார் திருவடிகளே சரணம்.

இனி ஆழ்வார்கள் கோஷ்டிக்கு தலைவர் எனப்படும் சடகோபன் என்கிற நம்மாழ்வார் அவர்களை பற்றி காண்போம்.

==========================================================================

Third Eye

One day, Lord Siva was flying with His wife Parvathi on his Taurus  vehicle passing by Thirumazhisai Azhwaar on the ground. Parvathi wanted to meet Azhwaar.   Lord Siva told Parvathi that Azhwaar being a Vishnu follower, he would not want to meet them. Parvathi insisted and Lord Siva decided to get down.   He came down and He told Azhwaar that He would want to give him His blessings and a boon to Azhwaar.   Azhwaar said that he did not want anything from Him.  Lord Siva insisted and Azhwaar asked for Motsham, the state of non-birth.  Lord Siva politely refused his request and told him that Motsham could only be given by Lord Vishnu and asked him to request for something else.   Azhwaar gave Him a needle and a thread and asked Him to insert the thread into the needle, meaning that all other Gods can only do such inconsequential jobs.   Lord Siva got angry and He opened His third eye and in return Azhwaar told Siva that Azhwaar also had a third eye in his right foot index finger.   When both the third eyes were opened, there was a big fire and with the Grace of Lord Vishnu, who asked Varunan to pore heavy rain to stop the fire.   Lord Siva told Parvathi that they should not disrespect Vishnu Bakthas and disappeared from the scene.     Even today, we can have the dharsan of the third eye of Azhwaar in Sri Jagannatha Perumal Temple in Thirumazhisai, the birthplace of Azhwaar, near Chennai.

Group Chanting Vedas

Thirumazhiazhwaar decided to go to Kumbakonam to have a dharsan and prayers of Aaravamutha perumal.   When he was on his way, one group of people who were chanting Vedas were going past him.   Suddenly they stopped the chanting, because, they were not having a good opinion on Azhwaar and they thought the holy chanting should not fall into the ears of Azhwaar.     After they passed Azhwaar, they wanted to restart from where they left.  They could not, as they have forgotten where they left the chanting.    Azhwaar took a raw rice grain and showed them by splitting the same into two to indicate where they left.   The group of people realised that Azhwaar knows Veda and he had listened to them.   They went back and requested Azhwaar to excuse them for their mistakes.

Display of Antharyaami

The priest in the temple noticed something strange,  that the Perumal was turning his face in almost all directions.   The priest called all others and others also saw this.  All found that Azhwaar was going around the temple and  Perumal was turning his face in the same direction in which Azhwaar was walking.   Many invited Azhwaar into the temple and offered him the respects.   Some people did not like this and they protested against offering respects to Azhwaar.   Azhwaar wanted to bless all of them, by demonstrating who is inside his heart, the show of Sri Mahavishnu with Sri Mahalakshmi , on Aathiseshan (the five headed serpent), on the Sea (Thiruparkadal).      All, including those who protested, fell in front of Azhwaar, as a mark of surrender.

Aaraavamuda Azhwaan

Azhwaar continued his journey to Kumbakonam and reached Kumbakonam.  He started his prayers with Sri Aaravamudan.    Suddenly he realised that he was so old and the Perumal looks so young, and why He was lying in front of him and asked Him to get up and talk  (kidanthavaaru ezhunthirunthu pesu), in one of his hymns.  Perumal started to get up and immediately Azhwaar realised and blessed him (vazhi kesane).   Even today, at Kumbakonam temple, the perumaal, Aaraavamudan is in a posture of about to be getting up with His hands folded to lift His head (UTHAANA SAYANAM).

Nadantha Kaalgal Nonthavo ? Nadunga Gnaalam enamaai, idantha mei kulungavo, ilangumal varai suram, kadal parantha kaverikarai kudanthaiul, kidanthavaaru ezhunthirunthu pesu, vazhi kesane

Aaravamudan and Azhwaar became very close and they went to the extent of exchanging their last part of the names.  Aaravamutha Piraan and Thirumazhisai Azhwaar exchanged their names as Aaravamutha Azhwaar and Thirumazhisai Piraan.   Piraan means a person who does lot of help to others.

Azhwaar’s Creations

When Azhwaar went to Kumbakonam, he threw all treatise, his many years of work, into Cauvery.    Against the flow of the water, two of his works or Prabhandams, Naanmugam Thiruvanthathi and Thiruchanthavirutham, came back and reached Azhwaar as per the wishes of Perumal.    Many of his hymns are built on a structure called “santham”, which reverberates with nicely placed  high and low notes.   Azhwaar has also used numbers like one, two, three etc in many of his hymns.   Finally many of Azhwaars hymns are towards The Inner Soul (Antharyaami), one of the five states of Mahavishnu (Paramapatham, Viyugam, Vibhavam, Antharyaami and Archai).

Azhwaar lived long and showed us the path of Sri Emperumaal.   Azhwaar Thiruvadegaley Saranam.

With this, let us proceed to learn about Sri Sadagopan or Nammazhwaar, who is regaded as the Chief for all Azhwaars.

Achuthan, Solid or unwavering support /அச்சுதன், நழுவுதல் இல்லாதவன்

For English Version, kindly click here, thanks

மகாலட்சுமி தான் அத்தனை ஜீவாத்மாக்களுடைய சரணாகதிகளையும் பெருமாளிடம் பரிந்துரை செய்கிறாள்.   அவள், சரணாகதி அடைந்தவர்களை, மகாவிஷ்ணு எப்படி விடாமல் காத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நம் போன்றவர்களுக்கு தெரியப்படுத்த ஒரு குறிப்பு.

ராமாயணம் முடிந்த பிறகு, ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ மகாலட்சுமி பிராட்டியும், பரமபதத்தில் (ஸ்ரீ வைகுண்டம்) பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.     பிராட்டி, நீங்கள் ஏன், ஸ்ரீரங்கத்தில் தெற்கு நோக்கி பள்ளிகொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க, பெருமாளும், நம் பிள்ளை விபிஷணன் அரசாண்டு வருகிற இலங்கையை கடாஷிக்கவே அப்படி சயனிதுள்ளேன் என்கிறார். விபிஷணன், ராமாயணத்தில் ஸ்ரீ சீதாதேவியை வஞ்சகமாக தூக்கிசென்ற இராவணனின் சகோதரன், நல்லவன்.

பிராட்டி, மேலும் விஷ்ணுவை சோதிக்க எண்ணி, தான் அசோகவனத்தில் இருந்த போது, விபிஷணன் பிராட்டியை பற்றி சொன்ன சொற்களை நினைவு கூறுகிறாள். பிராட்டி தரிசனம் வேண்டி கோடானுகோடி தேவர்களும், பிரமன், ருத்ரன், இந்திரன் போன்றவர்களும் கூட காத்துக்கொண்டு இருக்கும் போது, விபிஷணன் தன்னை துர்சகுனமாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, விபிஷ்ணனை தொடர்ந்து ரட்சிக்க வேண்டுமா என்று வினவுகிறாள்.

விபிஷணன், இராவணனிடத்தில், சீதாபிராட்டியை விட்டு விடும் படி கூற, அதற்கு இராவணன் மறுக்க, விபிஷ்ணனும் இந்த சீதாபிராட்டி இலங்கை  வந்ததில் இருந்து நாட்டிற்கு ஒரே அபசகுணங்களாகவே நிகழ்வதாகவும், அதனால் தான் சீதா பிராட்டியை கொண்டு விடும் படியும் சொல்லவதாக சொன்னான்.   இராவணன் அப்படி என்ன அபசகுணங்கள் என்று வினவ, விபிஷணன், அசோகவனத்தில் மரங்கள் துவம்சம் செய்யப்பட்டதையும் இலங்கை  முழுவதும் தீப்பற்றி எரிந்ததையும் உதாரணங்களாக சொன்னனான்.  அப்படியும் ராவணன் கேட்கவில்லை, தன் சகோதரனை விட்டு பிரிந்த விபிஷ்ணன்  ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைந்தது ஒரு சரித்திரம்.

மகாவிஷ்ணு, பிராட்டியிடம்,விபிஷணன் அப்படி சொல்லி இருக்க மாட்டான், அப்படி சொல்லி இருந்தாலும், ஆனால் அது நன்மை செய்வதற்கே இருக்கும்.    அப்படி சொன்னாலாவது, இராவணன் பிராட்டியை, பெருமாளுடன் சேர்த்து விடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கும் என்றார்.     பிராட்டி இதை கேட்டு ரசித்து, இவன் அச்சுதனே, இவனை அடைந்தவர்களை விட்டு விட மாட்டான் என்று பெருமை கொள்கிறாள்.

இதில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று,   அந்த ஜீவாத்மாகளை ஏற்றுக்கொண்ட பிறகு அவன், பிராட்டியே சொன்னாலும் கைவிடுவதில்லை என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.    இதை எங்கே கண்டோம் எனில், பெரியாழ்வாரின் பாடல் ஒன்றில்,

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைககுமேல், என்னடியார் அது செய்யார்; செய்தாறேல் நன்று செய்தார் என்பர் போலும், மன்னுடைய விபீடண ற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வாய்த்த, என்னுடைய திருவரங்கற்கன்றியும், மற்றொருவருக்கு ஆள் ஆவாரே (பெரியாழ்வார் திருமொழி, 4.9.2)

கூறுகிறார்.       இதில் இருந்தே அவன் அச்சுதன், நழுவதல் இல்லாதவன் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

”சரணாகதி”

( நன்றி whatsapp group நண்பர்கள்)

ஸ்ரீராமாநுஜரின் முதன்மைச் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வானின் திருமகன் பராசர பட்டர் ஆவார். ரங்கநாயகித் தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள். அவர் ஒருமுறை காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாமையால், அவரைத் தேடிச் சென்ற சீடர்கள் காட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரைத் தேற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மயக்கம் தெளிந்து பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? காட்டுவாசிகளால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டானதா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.

“ஒன்றுமே இல்லை! நான் ஒரு காட்சியைக் கண்டேன் அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்!” என்றார் பட்டர். “என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். “ஒரு வேடன் ஒரு முயல் குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப் பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றான். இதைக் கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச் சென்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன் முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான்.

இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன்!” என்றார் பட்டர். “இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டார்கள் சீடர்கள். “என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? அதற்கும் வாய்ப்பில்லை. ஆனாலும், அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து, அது கேட்டதைத் தந்து விட்டான் அல்லவா?

சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படிக் கருணை காட்டுகிறான் என்றால், சரணாகத வத்சலனான எம்பெருமான், அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்? அவனே கதி என்று அவனைப்பற்றிய நம்மைக் கைவிடுவானா? எம்பெருமானின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல் இத்தனை காலம் வீணாகக் கழித்து விட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி இன்னும் என் மனத்தில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்து விட்டேன்!” என்று விடையளித்தார் பட்டர். விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்.

வடமொழியில் ‘ச்யுத’ என்றால் நழுவ விடுதல் என்று பொருள். ‘அச்யுத:’ என்றால் நழுவ விடாதவன் என்று பொருள். சரணம் என்று தன்னை அண்டியவர்களை நழுவ விடாமல் கைவிடாமல் காத்தருளுவதால் திருமால் ‘அச்யுத:’ என்றழைக்கப்படுகிறார்.

இந்தத் திருநாமத்தின் பொருளை விளக்கும் விதமாகவே திருமலையப்பன் எழுந்தருளியுள்ளார். அவர் தனது வலது திருக்கையைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, அந்தத் திருவடிகளில் சரணாகதி செய்யச் சொல்கிறார். இடது திருக்கையைத் தொடையில் வைத்துக் கொண்டு, “நீ அவ்வாறு சரணாகதி செய்தால் பிறவிப் பெருங்கடலையே தொடையளவு வற்றச் செய்வேன். உன்னைக் கைவிடாமல் காப்பேன்!” என உறுதி அளிக்கிறார். அடியார்களை எந்நிலையிலும் திருமால் கைவிடாமல் காத்தருளுவார்.

இதேபோல் அவனது இன்னொரு பிரசித்திபெற்ற நாமமான கோவிந்தனைப் பற்றி இங்கே காணலாம்.

==========================================================================

Achuthan

Sri Mahalakshmi, recommends all Jeevathmaas who come to her for Saranagathi to Sri Mahavishnu.   Saranagathi is requesting moksham or a state where there is no re-birth.   She wanted us to know how Sri Mahavishnu holds the Jeevathmaas, like us, firmly after giving the Saranagathi, by the following script.

After the days of Ramayana, Sri Mahalakshmi and Sri Mahavishnu were having a conversation in Srivaikundam or paramapatham.    Mahalakshmi asked Sri Mahavishnu on why he was facing South, in reclining  posture in Srirangam, .     Mahavishnu, told her that He wanted to bless Vibhishnan and his country.  Vibhishnan, who was ruling Srilanka, a good brother of bad Ravana, who abducted Seetha, Rama’s wife.

Piratti or Mahalakshmi wanted to test Sri Mahavishnu further, by reminding him that Vibishnan spoke bad about Her to Ravanna, when She was abducted and in prison in a place called Ashokavanam, in Sri Lanka.    Actually Brammah, Siva, Indran and hundreds of thousands of devas were all waiting to get a glimpse, the dharsan of Sri Mahalakshmi, whereas Vibishnan had told Ravanna that Seetha devi brought all the bad luck to Sri Lanka.   Mahalakshmi asked Sri Vishnu, whether Vibishnan, who spoke badly about her needed to be supported any further.

Originally, Vibishnan, being a good person, asked Ravana to let Sri Seetha to go.  But Ravana refused and then Vibishnan started by saying that as soon as she came to the country, the country was undergoing lots of trouble.  When Ravanna asked him further, Vibishnan highlighted the damage that was caused to Ashokavanam and the big fire that engulfed Sri Lanka when Anjaneya flew to Sri Lanka in search of Seetha.   Inspite of all these Ravana did not  listen and thereafter Vibishnan left his brother and surrendered himself to Rama.

Mahavishnu continued, by saying that generally Vibishnan would never say such things, if he had told, then it should only be for the sake doing good.   He might have thought by saying this, Ravana might agree to let Seetha free and send Her back to Sri Rama.   On hearing this, Sri Mahalakshmi was very happy and ensured that He would not let the Jeevathmaas who surrendered to Him.

What we need to learn from this episode is that generally Mahalakshmi would never complain, even if She complains about a Jeevathmaa, who surrendered and reached Him, would never be let down by Him.

Where do we find this ? In Divya Prabhandam, Periazhwaar, highlights in the hymn

Thannaiyaar Thirathagathu thaamaraiaal ahilum sithaguraikumel, ennadiyaar athu seiyaar; seithaarel nandru seithaar enbar bolum; mannudaiya Vibshanarkka mathil illangai thisai nokki malar kannn vaitha, ennudaya Thiruvarangarkkandriyum, matroruvarkku aal avaarey. (Periyazhwaar Thirumozhi, 4.9.2)

to reiterate that He is Achuthan and He will never let His Jeevathmaas.

Saranagathi : (Thanks to friends from Whatsapp group)

Parasara Bhattar is the son of Sri Koorthazhwaan, the chief disciple of Swami Ramanujar. The deities of Thiruvarangam, Thiruvaranathan and Ranganayaki Thaayar had considered Parasaera Bhattar as their son and took care of him ever since he was born. Once he had travelled to another place through a forest. He fainted there after seeing an incident. His disciples started searching for him as he did not return even after a long time. They found him fainted in the forest and brought him back to his home. After he woke up, the disciples asked him on what happened, like whether any dangerous animals attacked him or any danger came from the people who were living in the forest or any other natural disaster happened.

Bhattar said that nothing of those sorts of things happened, but he saw an incident, which made him faint. He described the incident as follows : a hunter caught a rabbit and put it in a bag and walked away. This was seen by the mother of that rabbit and it followed the hunter and begged the hunter to let the rabbit, which was caught earlier. It repeated requested the hunter to let the rabbit. The hunter on seeing the plight of the mother rabbit, let the child rabbit go out of his bag.

When Bhattar said that he fainted after this incident, his disciples wondered what was in this incident to faint. Bhattar asked his disciples, whether any one had taught on how to do ‘saranagathi’ or total surrender to the mother rabbit. He continued to ask whether anyone had taught the hunter the rule that he should honour and protect those who asked saranagathi or total surrender. There was no possibility for an affirmative answer for both the above questions. Still the hunter approved the total surrender of the rabbit and gave what it asked. doesn’t he ?

When a hunter who did not even know the concepts of total surrender, took care of the request of the rabbit and let go the rabbits, which also incidentally did not know what was total surrender, Bhattar amazed at the quantum of the Kindness that Emperumaan would exercise towards His devotees who were dependent on Him one hundred percent, and surrendered to His holy feet, and He is known for graciously and benevolently taking care of His devotees (saranagatha vathsalan). Bhattar continued to state that Emperumaan would never let His devotees down. Bhattar felt bad for having spent so much of his lifetime in being unaware of Emperumaan’s such enormous Kindness. He felt sorry at himself for not having the firm belief in his mind till then, that Emperumaan would certainly protect His devotees and He would never let His devotees down. Bhattar said the above as the reason for him to faint. The disciples of Bhattar wondered at the above explanation.

In Sanskrit, the word “itchutha’ means let it go and the word “achutha” means to hold firmly without dropping. Emperumaan is called “Achutha” because, He will never let down His devotees who surrendered to Him totally.

Thiruvenkadamudaiyaan depicts the meaning of this Thirunamam or His name “Achutha”. He is pointing His holy right hand towards His holy feet and recommending His devotees to surrender There. He is also keeping His holy left hand at his holy Left thigh to inform His assurance to His devotees that He would make the water level in the sea of birth and death to the height of the thigh, so that the devotees would be able to cross that sea without any issues and He would be there to protect them. So with this Thirunaamam we should learn that He would always protect His devotees without letting them down.

We can see here about the glories of Govinda, the other popular name of Him.

Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்

For English Version, kindly click here, thanks

முகவுரை

திருமழிசை ஆழ்வார் அடுத்து வரும் ஆழ்வார்.   இவரை பற்றிய குறிப்புகள் அதிகம்.  அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

இவர்  தை மதம், மஹ நட்சத்திரத்தில் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார்.

இந்த ஆழ்வார் 5000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இவரின் பல பிரபந்தங்களில், நான்முகன் திருவந்தாதி 120 பாசுரங்களுடனும், திருச்சந்த விருத்தம் 96 பாசுரங்களுடனும் இன்று இரண்டு திவ்ய பிரபந்தங்கள் உள்ளன. திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்களை இங்கே காணலாம்.

ஆழ்வார் அவதாரம்

ஆழ்வார் திருஅவதாரம் கிருஷ்ணாவதாரம் போல் கூறப்படும்.  கிருஷ்ணன், தேவகி வசுதேவருக்குப் பிறந்து  நந்தகோபன், யசோதையிடம் வளர்ந்தான், அதேபோல் ஆழ்வார், பார்கவ மஹரிஷிக்கும் கனகாங்கிக்கும்  பிறந்து மரம் வெட்டுபவரான திருவாளனுக்கும் அவர் பத்தினி பங்கயச்செல்விக்கும் மகனாக வளர்ந்தார். திருமழிசையில் அவதரித்த பொழுது கை, கால் தலை இல்லாமல் பிண்டமாக பிறந்ததனால் தாய் தந்தையாரால் பிரம்புதோட்டத்தில் விட்டு சென்றனர்.  திருமகளின் அருளால் எல்லாம் அவயங்களும் பெற்று குழந்தையாய் கிடந்த போது அங்கு வந்த திருவாளன் எடுத்து வளர்த்தார்.  

கணிகண்ணன்

சிறு வயதிலேயே தேஜசுடன் விளங்கிய இவரை தரிசிக்க வந்த நான்காம் வர்ண வயதான பெரியவர்  அன்புடன் இவர்க்கு பால் அமுது படைக்க, அந்த பாலில் தாம் உண்ட பிறகு சிறிது அந்த பெரியவர்க்கும் கொடுத்து அதை பருகினால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்றார்.  பெரியவரும் அப்படியே செய்ய அவர்களுக்கு குழந்தை பிறந்து பின்னாளில் கணிகண்ணன் என்ற பெயருடன் ஆழ்வாரின் சீடர் ஆனார். 

சமயங்கள்

இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார்.   இதை, இவரே  “சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்”, என்று பாடினார்.   பேயாழ்வார் இவருக்கு ஆச்சர்யனாக இருந்து இவரை வைஷ்ணவதிற்கு மாற்றினார்.  இப்படி பல சமயங்களை கடந்து வைஷ்ணவத்திற்கு  வந்து அங்கிருந்தே மோட்ஷம் பெற்றதால் இவரது வைஷ்ணவ வாதங்கள் சக்தி உடையவைகளாக உள்ளன.

இவர் ஸ்ரீமன் நாரயணன் ஒருவனே தொழத்தக்கவன் என்கிற ஞானம் பூரணமாகக் பெற்று, அவரைத்தவிர வேறு எவர்க்கும் பரத்வம் கிடையாது என்பதில் எள்ளளவும் ஐயமின்றி ஆழ்வார் தாமும் இருந்து, நமக்கும் தெளிவு ஏற்படுத்தியதைப் பல பாசுரங்கள் வாயிலாகக்காட்டுகிறார்.

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” எனத் தொடங்கி யாதோர் ஐயமும் இன்றித் தெளிவாகப் பிரமனைப் பெருமான் படைத்தான், பிரமன் சிவனைப்படைத்தான் என்பதால் பரத்வம் எம்பெருமானுக்கே உள்ளது என அறுதியிட்டார்.

இவருக்கு பக்திசாரர் என்ற திருநாமம்.  

சொன்னவண்ணம் செய்த பெருமாள்

ஒரு நாள் திருமழிசை ஆழ்வார், திருமண் இல்லாமல் தவித்தபோது, பெருமாள் அவர்க்கு காஞ்சிக்கு அருகில் உள்ள திருவெக்கா செல்ல ஆணையிட்டார்.  அவரும் திருவெக்கா செல்ல, அங்கு திருமண் கிடைக்க அங்கேயே தங்கி விட்டார்.    (இதே போல் பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர்க்கு மேல்கோட்டில் திருமண் இல்லாமல் போக, பெருமாள் கல்யாணி புஷ்கரணிக்கு செல்ல ஆணையிட அங்கு அவருக்கு திருமண் கிடைத்தது).   கனிகண்ணனும் ஆழ்வாரை பின்தொடர்ந்தார்.

இவரும் கனிகண்ணனும்  திருவேக்காவில்  சேவை செய்து வந்தனர். ஒரு வயதான மூதாட்டி ஆழ்வார்க்கு சிறந்த சேவை செய்து வந்தார்.   கனிகண்ணனும் தன் ஆசார்யார்க்கு சேவை செய்ததை பாராட்டி அந்த மூதாட்டியின் முதுகை தடவிக்கொடுத்ததால் அவரும் இளமை அடைந்தார்.  அதை தெரிந்துகொண்ட காஞ்சியை ஆண்டு வந்த பல்லவராயன் கனிகன்னனை அணுகி தனக்கும் இளமையை வேண்டினார். கணிகண்ணன் மறுத்து ஆழ்வாரின் பெருமைகளை சொன்னார்.  அதற்கு அரசர் திருமழிசை ஆழ்வார் தன்னை பாடவேண்டும் என்று கேட்க அதற்கு தன் ஆச்சர்யார் பரம் பொருளான கடவுளைத் தவிர வேறு யாரையும் பாட மாட்டார் என்று சொன்னார்.  இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன், கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, அந்த ஊர் யதோத்தகாரி  பெருமானிடம், கணிகண்ணன் இந்த ஊரை விட்டு போகின்றான், நானும் இந்த ஊரை விட்டு போகின்றேன், “நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டி” கொண்டு வா, என்று சொல்ல, பெருமாளும் புறப்பட்டார்.  அப்படி அவர்கள் ஒரு இரவு தங்கிய இடம் ஓர் இரவு இருக்கை, அது மழுவி இன்று ஓரிக்கை என்ற இடம் ஆயிற்று.

பெருமாள் ஊரை விட்டு கிளம்பியதால் அந்த ஊர் மக்களும் ஊரை விட்டு  கிளம்ப, மன்னன் தன் தவறை உணர்ந்து ஆழ்வாரை வேண்ட அவரும் மன்னனை மன்னித்து ஊருக்கு திரும்பினார்.  அப்போது கணிகண்ணன் மற்றும் பெருமாளையும் அவசரமாக அழைத்துக்கொண்டு சென்றார். ஆழ்வார் சொன்னபடி பெருமாள் செய்தமையால், பெருமானுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர். ஆழ்வார் தம்மிடம் அவன் காட்டிய க்ருபையை “வெக்கணைக் கிடந்ததென்ன நீர்மையே!”…. என்று கொண்டாடினார்.  பெருமாள் அவசரமாக வந்து சயனித்த போது இடம் வலமாக மாறி சயனித்கொண்டு இருப்பார். இன்றும் திருவெக்கா திவ்ய தேசத்தில் இதை காணலாம்.

திருமழிசையாழ்வார் பெருமைகள் தொடரும்….ஆழ்வார் திருவடிகளே சரணம்

————————————————————————–

Introduction

Thirumazhisai Azhwaar is the next Azhwaar.  There are many incidents recorded about this Azhwaar.  We will try to go through a few among them.

The Discus, Chakrathazhwaar, which acts as a weapon for Sri Narayanan, has come down as Thirumazhisai Azhwaar on the Tamil month of Thai (around Jan 15 to Feb 14)  on star Maha.

It is told that this Azhwaar lived for more than 5000 years.

This Azhwaar has written many, but two Divya Prabhandams, Nanmughan Thiruvandathi with 120 Hymns and Thiruchantha Virutham with 96 Hymns are available today.

Azhwaar’s Birth

The birth of Azhwaar is on similar lines of Lord Sri Krishna.  As Krishna was born to Vasudevar and Devaki, but grown up in Brindavan with Nandagoban and Yasoda, Thirumazhisai Azhwaar was born to Bhargawa Maharishi and Kanaghanki, but grown up with Thiruvalan and Pangayaselvi.    When he was born in Thirumazhisai, he was without limbs and also without head, the rishi left the baby in a place where there are lots of cane, a kind of cane forest. With the abundant Grace of Sri Mahalakshmi, Azhwaar obtained all the features of a human being.  Thiruvalan whose job is to cut the trees, came and saw the child.  He took the child and nurtured him thereafter.

Kanikannan

Azhwaar had all the brightness even when he was very young and on hearing about Azhwaar, a very old person came to visit him.   He gave milk for Azhwaar with lots of love and respect.  Azhwaar took some and gave him something back. He asked him to drink the milk and told him that he would get a son soon.  The old person became young and gave birth to a child, who became the disciple of Azhwaar, Kanikannan.

Multiple Practices

Azhwaar has learnt many religions, like Sakiyam, Samanam, saivam and then turned to Vaishnavisam with the help of Sri PeriAzhwaar.  In one of his Hymns, he has told “Sakkiyam Katrom, Samanam Katrom, Sankaranaar Aakiya Aagamanool Aaraainthom, bakkiyathaal Venkatkariyanai Sernthom“, meaning that he has learnt the other religions, but with God’s grace he arrived at Vaishnavisam.   He remained with Vaishnavisam throughout and his ideology and principles on Vaishnavisam are much stronger, as he has gone through other religions.

He got a special name “bakthi saarar”, for his staunch and steadfast love and affection towards Sriman Narayanan.

Thirumazhisai Azhwaar has learnt without doubt that Sri Narayanan is theultimate God and no one else has such unlimited power and resources. He had not only followed that throughout, but also, he had made sure that he communicated the same in emphatic or assertive words in his Hymns to make people like us to understand the same clearly.

“Naanmughani Narayanan Padithaan, Naanmughanum thaanmugamaai sankaranai thaan padaithaan“, meaning that “Brahmah was created by Sri Narayanan and Brahmah has created Sankaran”. Sri Narayanan has given the responsibility of creation to Brahma and the responsibilityof annihilation to Lord Siva, or Sankaran. With the above, Azhwaar concludes that Sri Narayanan is the Ultimate God.

Sonna Vannam Seitha Perumal

One day when Thirumazhisai Azhwaar did not have enough Thiruman (The white sand which Vaishnavites wear on their forehead), he was helpless, Sriman Narayanan informed him to go to Thiruvekka, where he can find Thiruman.  (This is similar to Ramanujar wanting Thiruman and found the same in Kalyani pushkarani in Melkote through the blessings of Sriman Narayanan  very much later).

Azhwaar and Kanikannan were offering prayers and services to the God at Thiruvekka, Yathothakari, the name of the Chief Deity in that temple.    One old lady was doing services to Thirumazhi Azhwaar and Kanikannan was pleased with the services done by the old lady to his Acharyar.     He affectionately patted her and she became young.  The king of Kanchi, Pallavarayan, came to know about this and he also wanted to become young.  He approached Kanikannan and Kanikannan refused to do that and talked about the greatness of Azhwaar.  Pallavarayan asked Kanikannan to convey the message that he wanted Azhwaar to sing a song on him.  Kanikannan said that Azhwaar will not sing on anybody, other than Sriman Narayanan.   On hearing that the king became angry and ordered Kanikannan to go out of the town.

When Azhwaar heard this, he has also decided to go out of the town.   Azhwaar immediately went to the temple and told the God, Yathothakaari, that Kanikannan was leaving the town, that he, Azhwaar, himself, would also be leaving the town, and he wanted the God also to move out of the town, by saying,   “Kanikannan Poginraan, mannivanna nee kiddaka vendaa, pulavanum pogindren, neeyum unthan painaaga pai surutikkol”.    Yathothkaari also listened Azhwaar and moved out of the town along with Kanikannan and Azhwaar.    They stayed in a place overnight and that place is now called Orikkai, (Or Iravu Irukkai) meaning stayed one night.

Since Perumaal went out of the town, the people living in the town have also decided to move out of the town.   The king realised his mistake and he requested Azhwaar to come back to the town.   Azhwaar accepted his request and immediately chanted that Kanikannan would be going back, that he, Azhwaar, would also be going back, Manivanna, the God, you would also go back and lay down there.  God listened again to Azhwaar.  That is why the God at Thiruvekka is called “sonna vannam seitha perumaal“, meaning that the God acted as per the wishes of His bakthas.  Azhwaar appreciated this act of Yathothkaari, by addressing him as Simple at Tiruvekka (Vekkanai kidantha enna neermayye). Similarly, the God when he came back, he put his bed urgently, The Five Headed Serpent, Ananthazhwaar, right to left instead of usual left to right. We can notice the same even today at Thiruvekka when we do prayers at Yathothkaari.

We will continue with Thirumazhisai Azhwaar in the next blog also.  “Azhwaar Thiruvadekale Saranam” – meaning “we prostrate at Azhwaar’s holy feet wholeheartly”

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா துணிவுடைய
சென்னா புலவனும் போகின்றேன் நீயும் உந்தன்
பைநாக பாய் சுருட்டிகொள்

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.

Muthal Azhwaargal / முதல்ஆழ்வார்கள்

For English Version, kindly click here, thanks

ஆழ்வார்கள்  – வட மொழியில் உள்ள வேதங்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து, மக்களுக்கு உபதேசிப்பதற்காகவே இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள், பகவானிடம் பக்தியில் மூழ்கி, அவருடைய கருணையால் அந்த பகவானை அனுபவிப்பதையே முதன்மையாகக் கொண்டும்,  உபதேசிப்பதை ஆரம்பிப்பதற்கு முன்னால் மோட்சம் அடைவதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து, மோட்சமும் அடைந்தனர். இதனால் ஸ்ரீமன் நாராயணன் உலகத்திற்கு, நமக்கு உஜ்ஜிவனம் தர ஆசாரியார்களை இங்கு அனுப்பி வைத்தார்.   முன்பு சொன்னது போல் இது பகவான் நமக்கு செய்த மிகப் பெரிய உதவி (கிருபை) ஆகும்.   

ஆழ்வார்கள் பன்னிரண்டுபேர் ஆவார்கள்.   

அவர்களில் முதல் ஆழ்வார்கள் என்று சொல்லப்படுகின்ற மூவர், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். இவர்கள் சம காலத்தவர்கள்.  மூவரும் தொண்டை மண்டலத்தில், அதாவது, காஞ்சிபுரம், மற்றும் மகாபலிபுரம் மற்றும் சென்னை மயிலாப்பூரில்,  தமிழ் மாதமான ஐப்பசியில் அடுத்தடுத்த நட்சத்திரங்களான திருவோணம், அவிட்டம் மற்றும் சதய நட்சத்திரங்களில் அவதரித்தார்கள்.   மூவரும் திருக்கோவிலூரில் ஒரே சமயத்தில் ஸ்ரீமன் நாராயணனின் கடாக்ஷத்தை பெற்றனர்.  

அந்த கோவிலில் உள்ள  ஒரு இடைகழியில் உள்ள இடம், ஒருவர் படுக்கவும், அல்லது இருவர் உட்காரவும், அல்லது மூவர் நிற்கவும் போதுமானதாக உள்ளது.   ஒரு மழை நாளில் மூன்று ஆழ்வார்களும் ஒருவர் பின் ஒருவராக இருட்டிய நேரத்தில் வந்து சேர, அவர்கள் நான்காவதாக ஒருவர் இருப்பதை உணர ஆரம்பித்தனர்.  அந்த நான்காமவர் திருக்கோவிலில் உள்ள உலகளந்த திருவிக்ர பெருமாளே ஆவார்.    

வையம் தகளியா, வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக என்று ஒரு விளக்கை பொய்கை ஆழ்வாரும்,

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை  இடு திரியா” என்று மற்றொரு விளக்கை பூதத்தாழ்வாரும் , ஏற்ற 

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பேயாழ்வாரும் நமக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருவந்தாதிகளை, நூறு நூறு பாடல்களாக கொடுத்து அருளினார்கள்.    (திருக்கண்டேன் என்பது திருமாலின் மார்பில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியை கூறுகிறது, பொன்மேனி கண்டேன் என்பது மஹாவிஷ்ணுவை கூறுகிறது.   நம் சம்பிரதாயத்தில் மகாலக்ஷ்மியே நம்மை போன்ற ஜீவத்மாக்களை  மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்று மோட்சம் கிடைக்க பரிந்துரை செய்கிறாள். )

ஒரு பாடல் தொகுப்பில், ஒவ்வொரு பாடலின் கடைசி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாக  கொண்டு அமைத்தால் அது அந்தாதி என்று தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படுகிறது.  இப்படியான தொகுப்பில் கடைசி பாடலின் கடைசி வார்த்தை, முதல் பாடலின் முதல் வார்த்தையாக அமைந்து ஒரு மாலையாக அமையும்.   இந்த மூன்று ஆழ்வார்களும் முதல் ஆழ்வார்கள் ஆனதாலும், அவர்கள் பாடிய பாடல் தொகுப்பு அந்தாதி வடிவில் இருந்ததாலும் அவைகள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருவந்தாதிகள் ஆயின.

பொதுவாக முதலாழ்வார்களுக்கு பரத்துவத்திலும்(பரமபதநாதன்), திருவேங்கடத்திலும் (வேங்கடமுடையானிடம்)அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. பொய்கையாழ்வார் திருவேங்கடமுடையானைப் பற்றி பாசுரங்களை இங்கே காணலாம். பூதத்தாழ்வார் திருவேங்கடமுடையானைப் பற்றி பாசுரங்களை இங்கே காணலாம். பேய்ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடிய பாசுரங்களை இங்கே காணலாம்.

பெருமாளும் தாயாரும் திவ்ய தம்பதிகள் என்று கொண்டாடப் படுகிறார்கள்.  ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு அந்த பெருமாளையும் பிராட்டியையும் பற்றி இருப்பதால், திவ்யப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.  சுமார் நான்காயிரம் பாடல்கள் உள்ளதால் அவை நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்று கூறப்படுகிறது.

27 தமிழ் நட்சத்திரங்கள்  : அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகினி, மிருகசிரிடம், திருஆதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், சரவணம் அல்லது திருவோணம் அவிட்டம், சத்யம், பூரட்டாதி உத்திரட்டாதி மற்றும் ரேவதி.  (சில நட்சத்திரங்களை பெரிய எழுத்தில் கொடுத்ததற்கு காரணம், அவை பின் வரும் பதிப்புகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யார்கள் அவதரித்த தினங்களாக வரும். ஒவ்வொரு மாதமும் அந்த நட்சத்திர தினங்களில் ஆசார்யன், ஆழ்வார் மற்றும் திவ்ய தம்பதிகளை மனதில் கொண்டும் கோவில்களுக்கு சென்று வழிபட்டும் அவர்களின் கிருபைகளை பெறலாம்.  கோவில்களில் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறலாம்)

முதல் ஆழ்வார்கள் பற்றி சிறிது தெரிந்து கொண்டோம், தொடர்வது திருமழிசை ஆழ்வார் பற்றியது.


Muthal Azwaargal

The major objective for which the Azhwaars were sent to this world is to translate the Veda, from Sanskrit to Tamil and also preach such translated Veda to common man. However they had so much love and affection towards Paramathmaa, they were immersed in devotion.  They were enjoying the Paramatmaa through their experience from the translated Veda, they begged Him for moksham as the Top Priority.   Paramathmaa gave them the moksham and decided to send a different set of people, called Acharyaars, whose only job was to preach the Vedas to common man.   Acharyaars were born here and they preached the Vedas to us and this is another big favour done by Paramathmaa to us, as told earlier. 

There are twelve Azhwaars.

Poigai Azhwaar, Boothath Azhwaar and Peyazhwaar are called as Muthal Azhwaargal (First Azhwaars) and they lived  at the same time.   All of them were from the northern Tamil Nadu, namely, Kancheepuram, Mahaballipuram and Mylapore in Chennai.  They came to this world on the consecutive days of the Tamil month, Iypasi, with the stars or Natchathirams, Thiruvonam, Avittam and Sathayam.     (As per Tamil calendar, the first month of the year is Chithirai, starts around April 14th of English Calendar and subsequent months are called as Vaikasi, Aani, Aadi, Aavani, Puratasi, Iypasi, Karthigai, Margazhi, Thai, Masi and Panguni with each having around 30 days.   And generally the days in the Tamil months are referred to by a Tamil Natchathiram or Stars, which are 27 and they go in a separate cycle in Tamil calendar.   The same natchathiram or star may appear twice in a month. please see below for the full list of 27 stars).   The three muthal Azhwaars got the blessings from Sri Narayanan, the Pramathma, at the same time in Thirukovillur, a town in central Tamil Nadu.

In that temple in Thirukovillur, there is a small Aisle, where one person can comfortably sleep or two persons can sit or three persons can stand.   On a rainy day, Poigai Azhwar came to the temple first and requested a place to stay as it was raining outside.   The Rishi, who was at the temple allowed him and showed him the Aisle.   After some time on the same evening, Boothath Azhwaar came in and requested the same and Poigai Azhwar asked him to join.  Finally Pei Azhwaar also came to the temple and asked for place to stay, for which the same Aisle was shown.   All three got accommodated and were standing.  It was dark and they could not see anything.   But they felt that there was one more person in addition to themselves, moving around causing the Azhwaars to feel something great. They start realising that the fourth person is none other than ulagalantha Sri Thiruvikra Perumal, the chief Deity in the temple, or Sri Narayanan, wanting to be with the Azhwaars.

Poigai Azhwaar after realising Him starts to sing a hymn.  In the first one he is trying to light a lamp with the universe as the base, the ocean as the oil and the Sun as the thread for the Lamp.  (“vaiyam thakaliya, vaarkadaley neiyaga, veiya kathiron vilakkaka“)

Boothath Azhwaar continues with another hymn in which he is lighting another lamp with Love as the base, Enthusiasm as the  oil and the Mind as the thread for the Lamp. (Anbe thakaliya, Aarvamey neiyaaga, Inburugu sinthai idu thiriyaga)

When the two Azhwaars light two giant lamps, the third Azhwaar, namely, Peiazhwaar, saw Him and starts his hymn as “I have seen Her and I have seen His glittering golden body”.   (Thirukkanden, Ponmeni Kanden) (In vaishnavisam, She never leaves Him, not even a moment and She is the one who supports all Jeevathmaas by recommending them for motsham to Him).   Thus the three azhwaars gave us First, Second and Third Thiruvendathi, each consisting of 100 hymns each.

As per Tamil literature, if hymn starts with the last word of the previous hymn, then the whole group of songs are called Anthathi.  Incidentally the last word of the last hymn will end with the first word the first song, thus completing the whole cycle.   Since these three azhwaars happen to be the first azhwaars and all the three hymns happen to be in Anthathi format and they talk about Him,  these are called First, Second and Third Thiruvendaathi.

We can read about the hymns, where Poigai Azhwaar has sung about Thiruvenkadamudaiyaan here in Tamil.

He and She are called Divya Thambathigal in Vaishnavisam.   All the hymns of the Azhwaars sing about Him and Her, the hymns are called Divya Prabantham.   There are about 4000 songs, hence they are called as Naalaayira Divya Prabantham.

27 tamil stars : Aswini, Baranai, Karthigai, Rohini, Mirgashirsha, Thiruathirai, Punarpoosam, Pusam, Oilyam, Maham, Pooram, Uthiram, Hastam, Chithirai, Swathi, Vishagam, Anusham, Kettai, Moolam, Pooradam, Uthiraadam, Saravanam or Thiruvonam, Avittam, Sathyam, Poorathathi, Uthirattathi and Revathi.  (some of the stars are given in bold and these stars may be referred in future articles as important birthdays of Azhwaars and Acharyaars.  If we can start remembering these stars, then we can recall those acharyars, azhwaars and Divya Thambathigal on those days each month so that we get their Blessings.  We can also visit vishnu temples on those days and there could be ThiruManjanam or special pooja where we can participate and get their Blessings).

Now that we have seen about the Muthal Azhwaargal, let us try to know about the next azhwaar, namely, Thirumazhisai Azhwaar.

ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் / Aazhwaargals and Achaaryars

20130524_200409For English Version, kindly click here, thanks

(The above picture is Sri NamAzhwaar at Sri  Puchong Srinivasa Perumal Temple, Kuala Lumpur, Malaysia during Vaikasi Visaka Purappadu)

ஜீவாத்மாக்களை மூன்றாக பிரிக்கலாம், ஒன்று நித்யசூரிகள், இரண்டாவது முக்தாத்மாக்கள், மூன்றாவது பக்தர்கள். நித்யசூரிகள் என்றென்றும் பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவர்கள்; அவருக்கு படுக்கையாகவும், ஆசனமாகவும் பாதுகையாகவும்  எப்போதும் அவரை பிரியாதவருமான அனந்தாழ்வார், அவருக்கு வாகனமாக இருக்கும் கருடாழ்வார், மற்றும் அவருடைய எல்லா கட்டளைகளையும் நடத்தி கொண்டுவரும் தளபதியான விஷ்வக்ஸேனர் போன்றவர்கள் நித்யசூரிகள். முக்தாத்மாக்கள் என்பவர்கள் ஒரு காலத்தில் இந்த பூவுலகில் வாழ்ந்து, பிறகு வைகுந்தப் ப்ராப்தி அடைந்து (மோட்சம் அடைந்து) பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவர்கள்.   மற்ற எல்லா ஜீவாத்மாக்களும் நம்மைப் போன்று பக்தர்கள் ஆவார்கள்.

தானே இப்பூவுலகில் அவதரித்தும்,  நம்முடன் வாழ்ந்து காட்டியும் நம்மைப் போன்ற ஜீவாத்மாக்களால் பிரம்மத்தின் பரத்துவத்தையோ (உலகின் மிகப்  பெரும் பொருள், சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து ..என்ற  பாசுரத்தை .. நினைவில் கொள்க ) பிரம்மத்தை அடைவது எப்படி என்றோ சிந்திக்காமல் காலத்தை கழிக்கின்றார்கள். இப்படி இழந்து கொண்டு இருக்கிறோம் என்ற நினைவில்லாமல் ஜீவாத்மாக்கள் இருக்கும் போது, பரமாத்மாவோ வேறு என்ன செய்து இந்த ஜீவாத்மாக்களை தம்முடன் சேர்த்துக்கொள்ளுவது என்று எண்ணி தன்னுடன் இருக்கும் நித்யசூரிகளையும், தன்னுடைய அம்சங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.     அவர்களை ஆழ்வார்களாக பிறக்க வைத்தார்.

அவர்களுக்கு கொடுத்த முக்கிய பணி வட மொழியில் உள்ள வேதங்களை திராவிட மொழியான தமிழில் கொடுப்பது.    வட மொழி தெரியாதவர்களுக்கு திராவிட மொழியின் மூலம் வேதத்தின் பொருளினை அறிந்து பிரம்மத்தை அடைய  திராவிட வேதம் உறுதுணையாக இருக்க ஏற்பாடு செய்தார்.

ஆழ்வார்களும்  திவ்ய பிரபந்தங்களை பாடினார்கள்.   அந்த திவ்யப் பிரபந்தங்களே திராவிட வேதமாகக் கருதப் படுகிறது.    அந்த ஆழ்வார்கள் பக்தியில் மூழ்கி திளைத்தார்கள்.  அந்த பக்தியினால் பிறந்ததுவே திவ்யப்ரபந்தம்.    அதனால் அவர்களால் அந்த பிரபந்தங்களை பாடினாலும், அவர்கள் பக்தியில் மூழ்கியதால், அவர்களுக்கு அவற்றினை மக்களுக்கு போதிக்க இயலவில்லை.   அவர்கள் பக்தியில் மகிழ்ச்சி அடைந்த ஆண்டவனும் அவர்களுக்கு மோட்சம் அருளினான்.   முன்பு பார்த்தது போல் ஆழ்வார்களைப் படைத்ததும் அவர்களை பிரபந்தம் பாட வைத்ததும்,  பரமாத்மா, நமக்கு செய்த மற்றொரு உதவி ( கிருபை  ) ஆகும். 

தங்கள் மொழியில் வேதங்கள் கிடைத்தபின்னரும் மக்களால் அவைகளைப் புரிந்து கொண்டு அதன்படி நடக்க முடியவில்லை. அதனால் பிரம்மம் அந்த பிரபந்தங்களில் அர்த்தங்கள் இந்த ஜீவாத்மாக்களுக்கு புரிய தேவை ஆச்சார்யார்கள் என்பதை உணர்ந்து பரமாத்மா ஆசார்யர்களை படைத்தான்.  இது  பரமாத்மா, நமக்கு செய்த மற்றொரு பெரிய உதவி ( கிருபை  ) ஆகும். 

இங்கிருந்து நாம் நான்கு பிரிவுகளாய் பிரிந்து வைஷ்ணவத்தின் மேலும் சில பரிமாணங்களைப்  பார்க்கலாம்.


Azhwaars and Aacharyaars

Jeevathmaas are generally classified into three groups; First is Nithyasoories, the second is Mukthathmaakal, and the third is Bakthargal or Devotees. Nithyasooris are jeevathmaas, who have been delivering services to Him all the times or for ever. Ananthaazhwaan, the bed for Him whenever He sleeps, the throne for Him when he is sitting, Shoes for Him, when He walks is an example for Nithyasoori.  Similarly Garudaazhwar acts as His vehicle and Vishvaksenar, His deputy acts as a commandar  are some other examples for Nithyasoories.   Mukthamaakal are jeevathmaas, who were living in this world earlier and now attained motsham or reached Srivaikundam and offering prayers and services to Him all the times.   Other all Jeevathmaas are called Bakthas.

In spite of Paramathmaa, coming to this world and lived here along with us, Jeevathmaas could not understand the Greatness of Paramathmaa.   More importantly Jeevathmaas did not even realise that they were not thinking about the ways to attain Motsham or avoid the rebirth or simply were not thinking about Paramathmaa.

But Paramathmaa keeps thinking on how to make the Jeevathmaas get the Motsham.   He decides to use the parts of Himself and the Nithyasoories around him to get this done, by making them born in this world as Azhwaars.    The primary task assigned to these Azhwaars was to translate the Vedas, that were created by Him in Sanskrit, into Tamil, the Dravidan language, so that many more people could understand Veda and follow as per what was told in Veda, which could help them to attain Motsham.

These Azhwaars came down to the earth and started creating the hymns, called Divya Prabhandams.   Divya Prabhandams were the result of the Azhwars enjoying the God, His Beauty, His Activities and translated Vedas.    Azhwaars enjoyed Him so much, through their love and affection, they could not take up the activities of preaching the Divya Prabhandams and their meanings to common man or Jeevathmaas.  The creation of Azhwaars and the creation of the Divya Prabhandams are His Grace, great boon and help to the mankind by Him.

In spite of getting the Vedas in their own language (Tamil), common man could not understand fully and follow the Divya Prabhandams.    Brahmam or Paramathma realised that the Jeevathmaas need someone to preach them what is told in Divya Prabhandams and He then decided to create Acharyaas to preach the vedas to common man.  This is another big Help of His Grace to us.   

From here, let us take four different paths to understand more about Vaishnavism.

பரமாத்மா / Paramathmaa

For English Version, kindly click here, thanks

நாம் நம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டால் ஒன்று உயிராகவும், மற்றொன்று உடலாகவும் காணலாம். நம் உயிர் ஜீவாத்மா என்பதாகும்.    எல்லா ஜீவாத்மாக்களுக்கும் இயங்குகிற சக்தியை கொடுப்பது பிரம்மம் எனப்படுகின்ற பரமாத்மாவாகும்.   பரமாத்மாவே, ஸ்ரீமன் நாராயணன் என்றும், விஷ்ணு என்றும், ராம கிருஷ்ண அவதாரங்களாகவும், ரங்கநாத பெருமாள் போன்ற அர்ச்சவதாரங்கள்  என்றும், ப்ரமம் என்றும் தெரிந்துகொள்ளவேண்டும்.

நாம் உயிருடன் உள்ள போதும், நம் உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகும், எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவின் சொத்துக்களாகவே  உள்ளன.     அவர் எல்லா ஜீவாத்மாகளையும் தரிக்கிறார் அல்லது தாங்குகிறார்.   அதனால் அவரே எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தந்தை ஆகிறார்.   நம் உடம்பினுள்  ஜீவாத்மா இருப்பதால்,  நாம் எல்லோரும், அவருடைய சொத்துக்களாவோம்.   இன்னும் சொல்லப்போனால் நம் உடம்பினை நமக்குக் கொடுத்ததே பரமாத்மாதான்.   அது எதற்கு என்பதே பிறகு சொல்வோம்.   அவரே நம் எல்லோருக்கும் எஜமானர்.  நாம் அவருக்கு அடிமைகள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் மட்டுமே, நமக்கு எஜமானர் ஆவர்.   இப்படி உலகத்தில் உள்ள எல்லா சொத்துக்களுக்கும் அதிபதியாக பரமாத்மா உள்ளார்.     நம் எல்லோரிடமும் அவர் உள்ளார்.

ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஒரு உடலினை எடுத்துக்கொண்டு இருப்பதுபோல் பரமாத்மாவுக்கும் ஒரு உடல் உள்ளது.    எப்படி பரமாத்மாவிற்குள் எல்லா ஜீவாதமாக்களும் அடங்கி உள்ளதோ, அதேபோல், எல்லா ஜீவாத்மாக்களின் உடல்களையும் தாங்கி இருப்பதே பரமாத்மாவின் உடலாகலாம்.   இதை மகாபாரதத்தில் குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஸ்வரூப தரிசனத்தில் தன் உடலில் எல்லா உயிர்களின் உடல்களும் அடக்கம் என்பதைக் காண்பித்தார்.

இப்படிப்பட்ட பரமாத்மா செய்யும் கருணைகளைப் பற்றி அடுத்த வலைப்பதிவில் காணாலாம்.


Paramathmaa

We can divide ourselves into two parts, one as Body and the other as Soul.    The Soul is called as Jeevathmaa.   Jeevathmaa gets the power to ‘exist’ or ‘act’ from the God, Brahmmam, or Sriman Naraynan, which is also called as Pramathmaa.

Whether we are alive, or dead, all Jeevathmaas belong to the Pramathmaa.   He carries all the Jeevathmaas and hence He is the Father for all Jeevathmaas.    Since the Jeevathmaa is within our body, we are all owned by Him, the Paramathmaa. In other words, our body itself is given by Him.  Let us look into why He has given us the body later.   But for now, He is our Boss, and we are slaves to Him.   More precisely, He is the Only Boss for all of us. So he owns all of us and all property in this Universe.  He is Pramathamaa, Brahmam, Sriman Narayanan, Sri Vishnu, Sri Ramaa, or Sri Krishnaa or Sri Ranganatha.

From the above, we can see that the Paramathmaa contains all the Jeevathmaas (souls) in Himself.    Likewise, the Paramathmaa also has a so called, Body, which is consisting of all the bodies of all the Jeevathmaas.  This is seen from the explanation of the Viswaroopam, shown by Sri Krishna Paramathmaa during the Gurushetra War in Mahabharatham.

Let us discuss about the favours extended by Paramathmaa to each and every Jeeavahmaa here.

First Post / முதல் பதிவு

For English version, kindly click here, thanks

நான் கேட்டது கொஞ்சம், படித்தது அதைவிட கொஞ்சம், புரிந்து கொள்ள வேண்டியதோ ஏராளம் ஏராளம் !  இந்த வலைப்பதிவில் வைஷ்ணவிஸம் பற்றி நான் புரிந்து கொள்வதைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

முதலில் ஆசாரியார்களுக்கும் எனக்கு இவை பற்றி கற்றுக் கொள்ள உதவிய மற்று அனைவருக்கும் என் நன்றிகளும் வணக்கங்களும்.

இங்கு நான் எழுத ஆரம்பித்தது  இந்தத் தலைப்பில் அதிகம் தெரியாத என்னைப் போன்ற கடைநிலை மாணவர்களுக்காகவே.  மற்றவர்களுக்கு இந்த வலைத்தளங்களில் புதிதாகவோ அல்லது சுவாரஸ்யமானதாகவோ  விஷயங்கள் இல்லாமல் போகலாம்.  இதனை  அவர்களுக்கு இப்போதே சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.   அதே சமயம் எல்லோரும், இந்த  வலைபதிவுகளில் உலவி தங்களுடைய மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சொல்லி என்னை உற்சாகப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அப்படி உலவும் போது தங்களுக்கு புதியதாகவோ அல்லது சுவாரஸ்யமானவைகளோ கிடைக்காவிட்டால் அதற்கு முழுப்பொறுப்பும் நானே.

படித்ததும் கேட்டதும் மறக்காமல் இருக்க, மீண்டும் நம் உள்ளே புதுப்பித்துக் கொள்ள, தவறுகளை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் வேண்டும் என்கின்ற பல சுயநல காரணங்களுக்காக இந்த வலைபதிவினை ஆரம்பித்துள்ளேன்.

சில நல்ல கருத்துக்கள் இருந்தால், அவைகளை எங்கிருந்து பெற்றேனோ, அவர்களுக்கே அந்த பெருமைகள் சேரும்.   பிழைகள் இருந்தால் அதற்கு எல்லா காரணங்களும் நானே; சரியாக புரிந்து கொள்ளாததாலும் சரிவர சொல்ல முடியாததாலும் என் பிழைகளை பொறுத்து தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுகிறேன்.

இந்த கற்றலில் நான் சில அனுமானங்களை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தது ஒரு உற்சாகமான முயற்சியாய் அமைந்தது.    அவை இதைப் படிப்பவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1. விஞ்ஞானத்தில் கீழிருந்து படிப்படியாக தர்க்க ரீதியாக கற்றுக்கொள்வோம்.   மதத்துறை சம்பந்தப்பட்ட இந்த அறிதலில் சில சமயம் வேதங்களாலும் குருமார்களாலும் சொல்லப்பட்ட சில கருத்துக்களை உண்மைஎன்று ஏற்றுக்கொண்டு மேலே போனாலும், தொடரும் கற்றலில் அந்த கருத்துக்கள் தர்க்க ரீதியாக உண்மை என்று நிருப்பிக்கப் பட்டுள்ளது.   ஆகையால் விடுபட்ட முடிச்சுக்கள் பின்னால் அவிழ்க்கப்படும் என்ற நம்பிக்கையில் கற்றலை தொடருங்கள்.

2. நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொன்று, வேதம் மற்றும் உபநிஷத் இவைகளுக்கு ஆதி அந்தம் கிடையாது.    அதே போல் எதற்கு பின் எது என்பதும் சரிவர சொல்ல முடியாது.   இதுவும் மேலே சொன்னதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த வலைப்பதிவின் மேல் பகுதியில் ஒரு அட்டவணை (மெனு) உள்ளது அல்லது இங்கு உள்ளடக்கம் உள்ளது, இங்கு சொடுக்கவும்.   அது தொடர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.   நன்றி.

First Post

Trying to understand – Trying to express in simple language – Trying to learn from others; The Subject is Religion, Hindu, Vaishnavism.

First of all, Thanks and my respects to Aacharya (Guru) and all those who have helped me in the total learning process.

All that I am scribbling here is purely for the beginners in this subject and I want to give myself an opportunity to learn along with them.      So it it is my sincere attempt to inform upfront to all other knowledgeable persons on this subject, that they may not find anything new or interesting in this blog. Again, all are most welcome to browse and provide their advices, feedback and inputs, so that I can correct myself, if my understanding and interpretations were wrong.

My learning on this subject is through some reading and listening.   Now I realize that I need to understand much more on this subject.    In an effort to retain and refine what I learnt, I want to refresh myself by reproducing the same by publishing and allowing others to provide feedback to me on the contents/my learning.   So I have started this blog more for these selfish reasons!

If there are some good points to take, all the credit goes to those who provided me the knowledge.   Similarly all mistakes, are totally due to my lack of understanding or my inability to express precisely.    Kindly bear with my mistakes and continue to provide your feedback and give me opportunities to correct myself !

Some of the assumptions I made during my learning, which could be of some use to the readers :

a. Learning science may be a step by step progression of logic like a bottom up process, I found it easier, if we treat the learning of a religion, like a top-down process, making some assumptions whenever needed, or taking things, as they are, on what Vedas or Gurus say and keep going, we will find the solution to  the missing links along the way.  By the way, we make assumptions in science too.

b. there is no starting or ending for Vedas – in other words no one knows the sequence, beginning or end for vedas – there is also no reference on the timing on when the vedas where found or written.  In other words, it is difficult to ascertain the source or origin of this.  This could also be one of the reasons for the point stated above.

The site also has a Menu at the top section and it could serve as a link and continuation for your reading pleasure or click here to start reading about Brahmam.     Thanks

Favours from Paramathma / பரமாத்மாவின் க்ருபைகள்

For English version, kindly click here, thanks

இதற்கு முந்திய பதிவுகளில் இருந்து ஒரு சிறு நினைவு கூறுதல்

1. பிரம்மம் அல்லது பரமாத்மா தான் நமக்கு கை, கால் மற்றும் உடம்பினைக் கொடுத்தது. பிரம்மதிற்கே   நம்முடைய உயிர் அல்லது ஜீவன் உரித்தானது.

2. எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தம் தம் கர்மாக்களை ஒழித்து பரமாத்மாவை அடைவதேயே குறிக்கோளாக் கொண்டு தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.  இறைவனை அடைவதே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறப்படும்.

அப்படி என்றால் பரமாத்மாவின் குறிக்கோள் என்ன  என்பதைப் பார்ப்போம்.   பரமாத்மா எல்லா ஜீவாத்மாக்களும் தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்.   ஜீவாத்மாக்கள் எங்கு நிரந்தர சந்தோஷமாக இருக்க முடியும் ?  கர்மாக்களைத் தொலைத்து அவை தம்மிடம் வந்து சேர்ந்தால் தான் இந்த பூவுலக இன்ப துன்பங்களில் இருந்து விடுபடமுடியும்.  ஆக பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஒரே குறிக்கோள் தான்.

அப்படி ஜீவாத்மா பிரம்மத்தை அடையவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை சற்று பார்ப்போம்.   ஜீவாத்மாக்கள்  திரும்ப திரும்ப பிறவிகளை எடுத்துக் கொண்டே இருக்கும்.   இந்தப் பிறவியிலும் மற்றும் எந்தப் பிறவியிலும்  அடையும் இன்ப துன்பங்கள் அளவும், அவை  எப்போது ஏற்படும் என்றும் கணிக்க முடியாது.   எனவே ஒருவித நிச்சயமற்ற தன்மையோடு காலத்தைத் தள்ள வேண்டியிருக்கும்.  அது பயமாகவும், சோகமாகவும் இருக்கலாம்.   மேலும் அடுத்த பிறவியில் மனிதனா பிறப்போம் என்பதும் உறுதியாகச் சொல்ல முடியாது.   வேதங்களின்படி, மனிதனாகவோ, மிருகமாகவோ புழு பூச்சியாகவோ தாவரமாகவோ பிறக்கலாம். வேதத்தின் ஒரு கட்டத்தில் நாம் மனசார ஒருவருக்கு கெடுதல் செய்தால் மறுபடியும் மனிதனாகப் பிறக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஒருவருக்கு வார்த்தைகளால் கெடுதல் செய்தால் அவர்கள் புழு பூச்சியாகவோ, மிருகமாகவோ, பிறக்க வாய்ப்பு உள்ளதாகவும், நாம் ஒருவருக்கு உடலால் துன்பம் விளைவித்தோமானால் அது நம்மை தாவரமாக பிறக்கச் செய்யும் என்று கூறுகிறது.     மனிதனைத் தவிர மற்ற பிறவிகளால் இறைவனை அடைவது அவ்வளவு எளிது அல்ல.

ஜீவாத்மாக்களுக்கு சுகமும் துக்கமும் ஏன் ஏற்படுகிறது ?  அது அவரவர்களின் கர்மாகளின் படியே அமையும்.   ஜீவாத்மாகளின் செயல்கள், இந்தப் பிறவியிலும், இதற்கு முற்பட்ட பிறவிகளிலும்,  வேதம் சொன்ன படி இருந்ததா, இல்லையா என்பதைப் பொறுத்து  அவர்கள் கர்மாகள் அமையும்.  அதனால் ஜீவாத்மாக்கள் பாவ புண்ணியங்களை சம்பாதிக்கிறார்கள்.

அதனால் பரமாத்மா, ஜீவாத்மாக்களுக்கு கை, கால் மற்றும் மனம் புத்தி எல்லாம் கொடுத்து,  நம் பாவ புண்ணியங்களை ஒழிக்க எண்ணினார்.  இதுவே அவர் நமக்கு செய்த முதல் கிருபை (கருணை) ஆகும்.

ஆனால் ஜீவாத்மாக்களாகிய நாம் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றோம்.  அதனால் ஜீவாத்மாக்களுக்கு சரியான வழி சொல்லிக்கொடுக்க வேதங்களை அவர் படைத்தார்.     வேதங்களைப் படைத்தது அவர் நமக்கு செய்த அடுத்த கிருபை (கருணை) ஆகும். ஜீவாத்மாக்கள் வேதங்களைப் படித்து அதன்படி நடந்து, மோட்ஷம் அடைவார்கள் என்று பரமாத்மா எண்ணினார்.

வேதங்கள் வடமொழியில் உள்ளன.      ஆனால் ஒரு சிலரே வடமொழி வேதங்களைப் பின் பற்றி மோட்ஷம் அடைந்தனர்.   இதனால் ஜீவாத்மாக்களுக்கு மேலும் உதவ தானே சில அவதாரங்களை எடுத்து நமக்கு வாழ்ந்து காட்டினார். இதைப் பார்த்து ஜீவாத்மாக்கள் தன்னை வந்து அடைவார்கள் என்று நம்பினார்.  இது நமக்கு அவர்செய்த மற்றொரு கிருபை அல்லது கருணை ஆகும்.  அவர் எடுத்த எண்ணிறந்த அவதாரங்களில் முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரம் என்று பெருமையுடன் பேசப்படுகிறது.   ராம, கிருஷ்ண, நரசிம்ஹ, வாமன, பலராம, பரசுராம, மச்ச, கூர்ம, வராக அவதாரங்களுடன் கல்கியும் சேர்ந்து தசாவதாரம் ஆகிறது.     அவதாரங்கள் பத்து மட்டும் அல்ல அவைகள் பல, பாகவதத்தில் இருபத்தி ஏழு அவதாரங்கள் சொல்லப் பட்டு உள்ளன.

ஆனால் இப்போதும் ஒரு சிலரே புரிந்து கொண்டு மோட்ஷத்தை அடைந்தனர்.  மற்றவர்களால்  பின்பற்ற முடிய வில்லை.

பரமாத்மா இதற்கும் ஒரு வழி ஏற்படுத்தினார். அது என்ன என்பதை மீண்டும் தொடர்வோம் ..


Favours from Paramathmaa

A short recap from the previous posts…..

  1. our body is given to us only by Brahmam and our soul (Jeevathmaa) belongs to Him, the Pramathmaa
  2. the Primary objective of all Jeevathmaa is to get rid off their Karmas and reach Him. Reaching Him, is called Motsham or Mukthi.

So what is the primary objective of the Pramathmaa ?   He wants all the Jeevathmaas to get rid off their pain and wants them to be happy.  Where, in this Universe all Jeevathamaas can get happiness uninterruptedly ?  It is only when they join Him, and get Eternal peace and happiness, ie attain a state called Motsham, a point of relief from the worldly miseries.   So The Paramathma and Jeevathmaa, have the same goal and objective.

Let us see what will happen, if the Jeevathmaas do not attain Motsham.   Then they have to take birth and re-birth again and again.   If we think, that we are happy here in this world, the happiness does not last for ever; everything here is temporary in nature and the happiness and sorrow keep bombarding us every day or for that matter, every moment. Again the quantum varies for both happiness and sorrow and the changes, many times, are unpredictable.  Another factor is that after the current birth, we do not know what is going to be our next birth – as per vedas, we could be human beings, animals, insects or plants.    As per Vedas, the Jeevathma’s next birth could be a human being, in case the jeevathma thought of hurting someone – no deeds here, only the thought process; if the jeevathma hurts another person through words, then the likely re-birth would be either an animal or an insect; if the jeevathma has really hurt someone physically, then the rebirth would be a plant.  Attaining motsham or reaching Him, is very rare for all others, except the human beings.

So what drives the happiness or sorrow for the Jeevathmaas.   It is their Karmas, the results of the way they live, during the current life and in their previous births.   If they have followed the Rule book, the Vedas, good karmas (Punya) accumulate, otherwise bad karmas (Pavam or sin) accumulate.

How will Paramathmaa help the Jeevathmaas to get rid of their Karmas?   As a first step Paramathmaa gives a BODY with Limbs, mind and intelligence to the Jeevathmaas and He expects us, the Jeevathmaas, to use their body, mind and limbs to ‘do’ things as given in the Vedas to get rid of their Karmas.  This is the first big favour which Paramathma has done to the Jeevathmaas.  

Unfortunately, us, the Jeevathmas did not know what was right and what was wrong, what should do with our body, hands and legs, mind and heart.    So the Paramathma decided to create the Vedas to teach us what would be right and what would be wrong. So the act of creating the Vedas is the next big help rendered by Brahmam or Paramathma.   He thought that Jeevathmas would read the Vedas, understand them and live like what was given there and would reach Motsham.

The Vedas are in Sanskrit, which is not known to many people.     So only a few who knew Sanskrit, tried to follow and got the benefit of attaining Motsham.    Now He Himself took some Avathars and lived in this world to show the jeevathmas on how to live as per the Vedas.  He assumed that Jeevathmas would understand and reach Him or Motsham.   Among the many avathaars, the ten most important avathaars are often referred to as Dasaavathaaram.    Rama, Krishna, Vamana, Narasimha, Balarama, Parasurama, Macha, Koorma Varagha and Kalki are the Dasaavathaars.   The avathaars are not only ten, they are more.  In Bhagavatha Puranam, there are 27 avathaars mentioned.

Taking Multiple Avathars and demonstrating the way to live, is another big favour done by Brahamam or Paramathma to help the Jeevathmas.      Even then only a few followed and succeeded in the mission of reaching the Motsha.

Even for this, Paramathmaa extended His support in His own way and let us see what it is in the next weblog.

வேதம் / Vedam

For English version, please click here, thanks :

நம் சம்பிரதாயத்திற்கு வேதங்களே பிரதானமாக உள்ளது. வேதங்கள் பிரம்மத்தையும், பிரம்மம் வேதத்தையும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. வேதங்கள் நாம் பின்பற்ற வேண்டிய நியதிகளை கூறுகின்றன.

வேதங்கள் செய் என்று சொன்னவைகளை செய்வதும் செய்யாதே என்று சொன்னவைகளை செய்யாமல் இருப்பதும் புண்ணியம் எனப்படும். அதேபோல் வேதங்கள் செய் என்று சொன்னவைகளை செய்யாமல் இருப்பதும் செய்யாதே என்று சொன்னவைகளை செய்வதும் பாவம் எனப்படும்.

பாவங்களும் புண்ணியங்களும் கர்ம பலன்களாக நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்கிறன.     பாவ புண்ணியங்களை கர்மாக்கள் என்றும் கூறுவதுண்டு.  கர்மாக்கள் தொலைந்தால் நாம் முக்தி அடைகிறோம். அப்படி செய்யும் போது பாவ புண்ணியங்கள் இல்லாத நிலையை அடைந்து,  நாம் முக்தி அடைந்து, மறுபிறப்பு இல்லாமல், பிரம்மத்தை / பகவானை அடைகிறோம்.

நம் கர்ம பலன்களை துறந்து பிரம்மத்தை அடையவேண்டியதே ஒவ்வொரு உயிரின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று வேதங்கள் உரைக்கின்றன.

அடுத்தது என்ன ?


Vedam

Vedas are the main pillars for our belief systems (samprathaayam).    Vedas point to Brahmam as the God and the Brahmam says that we need to follow what Vedas instruct us.

So as human beings, we need to follow what Vedas instruct us to do and avoid doing things which are not permitted by vedas.  If we follow the above two, we ‘do’ things approved by both Vedas and Brahmam.  Those things get classified as Good Deeds or Punniyam.

Similarly if we attempt to do things which are not permitted by Vedas or avoid doing things that are required to be done by us as per Vedas, then we get into the wrong side of Vedas and Brahmam, or displease both of  them by disobeying what is said in Vedas.   These result in Bad deeds or Paavam.

Both Punniyam (Results from good deeds) and Paavam (Results from bad deeds) are called as our Karmas.   If we get rid of all Karmas (both Good and Bad) then we attain a state of non-birth.  At that state we reach brahmam and be with Him for ever.

This should be the only Goal for all, as per the Vedas.  So what is next ?

RSS
Follow by Email