நின்றதும் இருந்ததும் கிடந்ததும் / Standing, Sitting and Reclining

For English version, kindly click here, thanks

நிற்பது, இருப்பது, மற்றும் கிடப்பது  

நிற்பது, இருப்பது மற்றும் கிடப்பது என்று  பரமாத்மா மூன்று முக்கிய உருவ வெளிப்பாடுகளில் அருள்கிறார்.  பரமாத்மாவின் ஐந்து நிலைகளில், பரமபதநாதன் வீற்றுஇருந்து நித்யஸூரிகளுக்கும் முக்தாத்மாக்களுக்கும் காட்சி அளிக்கிறார்.  க்ஷீராப்திநாதன், கிடந்து பிரம்மா, சிவன், இந்திரன், வருணன், குபேரன் போன்ற தேவாதிதேவர்களுக்கு  சேவை சாதிக்கிறார். அந்தர்யாமி என்றும் மறைந்து இருக்கிறார், அதனால், அவரை எந்த பிரிவுக்குள் சேர்ப்பது என்பது கடினம்.   விபவத்திலும் அர்ச்சையிலும் பரமாத்மா எல்லா பிரிவுகளிலும் நமக்கு காட்சி தந்து நம்மை மகிழ்ச்சிப் படுத்துகிறார்.   “லோகோ பின்ன ருசிஹி என்பதின் படி, உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், ஏதாவது ஒன்றினை விரும்பிடக்கூடும் என்று தன்னை பற்பல அவதாரங்களில் பற்பல நிலைகளில் வேறுபடுத்திக் காட்டி, எல்லா ஜீவாத்மாக்களும் தன்னை அடைய அவரே  முயற்சியும் வழியும் செய்கிறார்.

அர்ச்சையில்

முதலில் நாம் அர்ச்சை என்ற நிலையில் பரமாத்மா, நின்றது, இருந்தது மற்றும் கிடந்ததைப்  பற்றி ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களைப் பார்ப்போம்.

தொண்டை நாட்டில், நின்றது திருஊரகத்தில்;  வீற்று இருந்தது திருபாடகத்தில்; கிடந்தது திருவெஃகாவில்.  “நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது” என்று பாடியவர்  திருமழிசை ஆழ்வார் ஆவார்.

பாண்டிய நாட்டில், நின்றது நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டத்தில்; வீற்று இருந்தது திருவரகுணமங்கையில்; கிடந்தது திருப்புளிங்குடியில். “புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று” என்று பாடியவர்  நம்மாழ்வார்.

சோழ தேசத்தில், வீற்று இருந்த திருக்கோலம் உள்ள திவ்யதேசங்கள், தஞ்சை மாமணிக்கோவில் உள்ள மூன்று கோவில்களிலும், திருவாலி திருநகரியில் உள்ள இரண்டு கோவில்களிலும், மணிமாடக்கோவிலிலும், திருவைகுந்தவிண்ணகரம், திருஅரிமேயவிண்ணகரம்,  மற்றும் நாதன் கோயில் எனப்படும் நந்திபுரவிண்ணகரம்,  ஆகும்.   நின்ற திருக்கோலம் சொல்வதற்குப் பல இருப்பினும், திருநாகை அழகியார், கிழக்கு வீடான திருக்கண்ணபுரம், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அப்பன் எனும் உப்பிலியப்பன், தேரழுந்தூர் ஆமருவியப்பன் என்பன சில.   திவ்யதேசங்களில் முதன்மையான திருஅரங்கம், சோழ தேசத்தில் இருக்கும் கிடந்த திருக்கோலங்களில் ஒன்றாகும்.

ஒரே திவ்யதேசத்தில் நின்றதும், இருந்ததும் கிடந்ததும் உண்டோ என்றால், திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக நின்றும், தெளிசிங்கபெருமாளாக இருந்தும், ரங்கநாதனாக கிடந்தும் சேவை சாதிக்கின்றார்.

திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் கிடந்து, நின்று, இருந்து  சேவை புரிகிறாரா என்றால், ஆம் என்றே சொல்ல வேண்டும்.   பெரிய பெருமாளாக கிடந்தும், நம்பெருமாளாக நின்றும் சேவை சாதிக்கும் பெருமாள், வருடத்தில் ஒரு முறை இராப்பத்து உற்சவத்தின் போது, தாயாராக காட்சி அளிக்கும் போது, பெருமாள் அமர்ந்து சேவை சாதிப்பதை இருந்தது என்று கூறலாம்.

விபவத்தின் திருக்கோலங்கள்

பொதுவாக மத்ஸ்ய, கூர்ம, வராஹ, வாமன, பரசுராம, பலராம அவதாரங்களை, அர்ச்சையில் சேவிக்கும் போது, நின்ற நிலையிலேயே தரிசிக்கின்றோம்.   அதேபோல், பொதுவாக, நரசிம்ம,  மற்றும் வரவிருக்கும் கல்கி அவதாரங்களை வீற்றுஇருந்த நிலையில் வழிபடுகின்றோம்.  இராமன், கிருஷ்ண அவதாரங்களை பற்றி திவ்யப்ரபந்தத்திலும், இதிகாச புராணங்களிலும் வரும் மேற்கோள்களை பார்க்கும் போது, அவர்களை நின்ற, இருந்த மற்றும் கிடந்த திருக்கோலங்களில் வரும் காட்சிகளை கீழே காணலாம்.

ராமன் விபவத்தில்

இராமன் மகிழ்ச்சியுடன் சித்திரகூடத்தில் சீதையுடன் இருந்த காலத்திலும், பின்பு பரதனுக்கு அரசும் பாதுகையும் ஈன்ற போதும் நமக்கு கண் முன் வருவது அவனது வீற்றுஇருந்த திருக்கோலம், ஆகும்.

இராமன்,  வாலியை கிஷ்கிந்தையில் வதம் செய்த போதும், லங்காபுரியில் இராவணனுடன் போர்புரிந்தபோதும்,  கையும் வில்லுமாய் நின்றது, இராமாயணத்தில் உள்ள  முக்கிய நிகழ்வுகள்.

இராமன், இலங்கைக்கு போர் புரிய தனது வானரப்படை கடலைக் கடக்க சமுத்திர ராஜனுக்கு அறிவிப்பதற்கு முன் திருப்புல்லாணி கடற்கரையில் தர்ப்பசயன பெருமாளாக காட்சி அளித்தது  இராமனின் கிடந்த திருகோலம்.

குட்டிக்கண்ணன் விபவத்தில்

விபவத்தில், குட்டிக் கண்ணனாக வீற்று இருந்தது, மண்ணையுண்டு, ஈரேழு உலகங்களையும் தன்  வாயில், யசோதைக்கு  காட்டியதை விவரிக்கும் காட்சி.

கோவர்தனத்தில், குன்றம் ஏந்தி குளிர் மழை காத்த திருக்கோலமும், சிறு வயதில், தொட்டிலைப் பிடித்தபடி, திரும்பிய  முகத்தோடு யசோதையைப் பார்த்த திருக்கோலமும் குட்டிக் கண்ணனின்  நின்ற திருக்கோலம் ஆகும்.

அதேபோல், சிறு வயது கண்ணன், மாணிக்கமும் முத்துக்களும் பதித்த தொட்டிலில் கிடந்த திருக்கோலம், ஆழ்வார்களை அதிகமாக பாட வைத்தது.

மேலே சொன்னவை எல்லாம், சிறுவயது விளையாட்டு கண்ணனின் நின்ற, அமர்ந்த மற்றும் கிடந்த திருக்கோலங்கள்.  கண்ணன் வளர்ந்து, ஒரு அரசனான பிறகு நமக்கு காட்சி அளித்ததை கீழே காணலாம்.

கிருஷ்ணன் விபவத்தில்

பாண்டவர்களுக்காக கண்ணன் கழுத்திலே ஓலை கட்டிக்கொண்டு, தூதுவனாக நடந்தது, கண்ணனின் எளிமைக்கு உதாரணமான நின்ற திருக்கோலம்.  அன்று போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டிய காலத்தில் பீஷ்மரின் அம்புகளை தடுப்பதற்கு, சங்கு சக்கரத்துடன் தனது சபதத்தையும் மீறி பீஷ்மருடன் போரிட தேரில் இருந்து இறங்கி நின்றது, கண்ணபிரானின் இன்னொரு நின்ற திருக்கோலம்.    அதே போல், நின்று கொண்டு,  அர்ஜுனனுக்கு கீதை சொன்ன கண்ணனையும் எல்லோரும் நினைவில் கொண்டு இருப்பார்கள்.

விபவத்தில் கண்ணபிரானாக, தூது போன இடத்தில, பாண்டவர்களுக்காக ராஜ சபையில் பேசியது  வீற்று இருந்த திருக்கோலம்.

மஹாபாரதப் போருக்கு முன்னால், கண்ணனின் கருணை வேண்டி, துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணனின் கட்டிலிற்கு தலைப்பக்கமும், கால்பக்கமும் காத்து இருந்தது, கண்ணனின் பிரபலமான கிடந்த திருக்கோலம்.  அதே போல், அர்ஜுனன், தனக்கு வெகு நெருக்கம் என்பதை கௌரவர்களுக்கு தெரிவிப்பதற்கு, தானும், ருக்மணி மற்றும் சத்தியபாமாவும், அர்ஜுனனும் திரௌபதியும் ஒரே கட்டிலில், சஞ்சயனுக்கு சேவை சாதித்தது, கண்ணனின் மற்றொரு முக்கியமான கிடந்த திருக்கோலம்.  சஞ்சயன் இந்த நெருக்கத்தை  கௌரவர்களுக்கு தெரிவித்து, அர்ஜுனன் தோற்பதற்கு ஸ்ரீ கிருஷ்ணன்  விடமாட்டான் என்றும்  அதனால்  கௌரவர்கள் போர் செய்வதை கைவிடும் படியும் சஞ்சயன் அவர்களுக்கு போதனை செய்ய வேண்டும் என்பதே கிருஷ்ணனின் நோக்கம்.

முடிவுரை

இன்னும் ஆழ்ந்து பார்த்தால்,  இராமாயணத்திலும், மகாபாரதத்திலும், விஷ்ணு புராணத்திலும், பாகவதத்திலும்,   இராமனைப் பற்றியும், கண்ணனைப் பற்றியும்  இன்னும் பற்பல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும்.   நம்முடைய கிரகிக்கும் சக்தியும், நாம் செலவிடும் நேரமும் தான் நமக்கு தடைகளே தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பகவத்  விஷயத்திற்கு அளவே இல்லை.


Standing, Sitting and Reclining

Standing, sitting and reclining are three important postures in which Paramaathma reveals Himself to the external world.   Among the five states of Paramathma  Paramapathanathan has taken the sitting posture to give dharsan to mukthatmas and nithyasooris. Similarly Ksheeraptinathan, has taken the reclining position to give dharsan to all the Devas, like Brahma, Sivan, Indran, Varunan and Kuberan.  The Antharyaami state is difficult to classify as it is hidden all the times. Paramathma has occupied all the three postures in both Vibhavam and in Archai to give happiness to us.  There is a saying “loko binna ruchihi” meaning “people’s taste will differ in this world”.   Paramathma, in line with the above, has taken different postures in different incarnations to attract all the Jeevathmaas and He has shown the way to the Jeevathmaas to reach Him.

In Archai

First, let us take the Archai State, in which Azhwaars composed hymns on Paramathma about His standing, sitting and reclining postures.

In the northern Tamil Nadu (Thondai Naadu, covering Chennai, Chingelpat and Kanjeepuram areas), we have the dharsan of standing posture in Thiruooragam.   We have the sitting posture in Thirupaadagam.  And we have the dharsan in the reclining posture in Thiruvekka.  This is summarised beautifully by Thirumazhisai Azhwaar in his hymn, “nindrathu enthai Ooragathu, irunthathu enthai Paadagathu, andru Vekkanai kidanthathu“.

In the southern Tamil Nadu (Paandiya Naadu), Paramathma gives dharsan in the standing posture in Srivaikuntham, sitting posture in Thiruvaragunamangai (today’s name is Natham, near Tirunelveli) and reclining posture in Thirupulinkudi. Nammazhwaar sung the same thing in his hymn “Pulingudi kidanthu, Varagunamangai irunthu, Vaikunthatthul nindru”.   

In the river Cauvery delta area, (Chola Desam or Thiruchi and Thanjavur, Thiruvaarur, Nagaipattinam areas), Paramathma gives dharsan in sitting, standing and reclining postures on many divyadesams.   We have dharsan in sitting posture,  at all the three deities / temples of Thanjai Mamani Kovil, of both the deities / temples of Thiruvaali Thirunagari, Manimaadakovil, Thiruvaikuntha vinnagaram, Thiruarimeya vinnagaram and Nandhipura vinnagaram or Nathan Kovil. Even though there are many divya desams where the Paramathma gives dharsan in standing posture, we can take a few like, ThiruNagai Azhagiyar in Nagaipattinam, the eastern palace of Paramathma, namely, Thirukannapuram, Thiru Uppiliappan, the deity who does not have anyone equivalent or superior,  and Aamaruviappan in Therazhundoor.   For reclining posture, the primary divyadesam Srirangam is in Chola Desam.

If we ask ourselves about having all the three postures in one divyadesam, Triplicane in Chennai, will provide us the answer.    He gives dharsan in the standing posture as Parthasarathi, in sitting posture as Thelisinga Perumal and in the reclining posture as Ranganathan.

Again, if we ask whether the chief deity of the prime divya desam, Sri Ranganathar in Srirangam, gives  dharsan in the three postures, the sitting, standing and reclining, the response would be affirmative.  The moolavar, Periya Perumal is in the reclining position.  The Utsava moorthy, Namperumal, is in the standing posture.    Once a year, during the festival Irapathu (the  ten nights festival), Namperumal gives dharsan as Thayar after decorating Himself as Goddess and at that time, He takes the sitting posture.

Postures in Vibhavam

In general, Mastya, Koorma, Varaaha, Vaamana, Parasuraama and Balarama incarnations, when presented in Archai , take the posture of standing.    In the same way, the other incarnations like Narasimha and Kalki, which is going to happen in the Kaliyugam, generally are presented in the sitting postures.     Unlike the other incarnations, Sri Rama and Sri Krishna incarnations have taken Sitting, Standing and Reclining positions as per Divyaprabhandam, Ithihaasam and Puranams.   Let us look at some of the incidents where Sri Rama and Sri Krishna were presented in the Standing, Sitting and Reclining postures.

Vibhavathil Sri Raman

In the epic Ramayana, we hear about Rama sitting and spending happy moments with Sita in Chitrakoodam.  Later, when Rama gave away His holy Footware and His kingdom to Bharatha, Rama gives dharsan in Sitting posture.

Sri Rama gave dharsan with His bow and arrow in Standing Posture, when He killed Vaali in Kishkintha and when He killed Ravana in the battle in Sri Lanka.

Sri Rama, as Dharbha Sayana Perumal,  was in reclining Posture on the sands of the beach in Thriupullaani, before the construction of the bridge across Bay of Bengal, in front of Samuthra Rajan (King of Seas).

Sri Krishna as a Child

As a child, Sri Krishna was in sitting posture when he exhibited the whole universe in His mouth, after eating a bit of sand to Yasoda, His mother.

Similarly Sri Krishna took the Govardana Hill and held it like an umbrella to protect the people and the herd.   This is a significant standing posture of child Krishna.  Another enjoyable standing posture of child Krishna, is as a small boy standing and holding the cradle with His face turning towards Yasoda.

Finally it is the acts of Child Krishna which made the Azhwaars sing hymns on Sri Krishna.   Many of the hymns are on the reclining posture of child Krishna lying in the cradle  which is fitted with diamonds and pearls.

All the above narrations about Sri Krishna, are when He was young and playful.  We will also go through the incidents, where Krishna as a grown up and a king, was in sitting, standing and reclining postures.

Sri Krishna in Vibhavam

Sri Krishna agreed to go as an envoy for Paandavaas and he took the message from them to Kaurava and that was one of the memorable events in Mahabharatha where Sri Krishna took the standing or walking posture.  Similarly during the Mahabharatha war, Sri Krishna jumped out of his chariot and protected Arjunan by directly going for a fight with Bheeshmar,  ignoring or breaking His own promise of not taking part in the war with weapons.   This is another significant standing posture of Sri Krishna in Mahabharatha.   All of us are also aware of Krishna’s preaching of Bhavath Geetha to Arjunan before the start of the war in the standing posture.

Sri Krishna, when he went as an official messenger for the Pandavaas and delivered  the message to Kaurava in their Assembly or the King’s Advisory council, He was in the Sitting posture.

One of the significant events in Mahabharatha, both Dhuriyodhanan and Arjunan waited by the side of Sri Krishna’s bed, Arjunan by the side of His feet and the other at the side of His head, when He was sleeping (in Reclining) to ask for favours, before the war. Another incident to remember is about how Sri Krishna communicates to Sanjayan, a messenger from Dhuriyodhanan’s camp, about his closeness to Arjunan by having Rukmani and Satyabhama along with Arjunan and Draupadi in the same bed.  It was the intention of Sri Krishna that Sanjayan should advise Dhuriyodhanan about the closeness of Arjunan to Sri Krishna and that Sri Krishna would not let Arjunan get defeated in the war; so Dhuriyodhanan should take steps towards withdrawing from the war.

Conclusion

When we go deeply into Ramayanam, Mahabharatham, Vishnu Puraanam and Bhagawatham, we can get many more interesting experiences on Sri Rama and Sri Krishna.    The limitation is all about the amount of time what we have and our ability to  understand, rather than the amount of available material on vaishnavism.   With that we will conclude this discussion.

Tenth subsection – Thiruchithrakoodam – Part 1/ பத்தாம் பதிகம் – திருச் சித்ரகூடம் – முதல் பகுதி

For English version, please click here, Thanks 

இதுவரையில்

இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள்  திருமொழியில், ஒன்பது பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும்,  பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.

முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் பரமாத்மாவின், மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம்.    ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன்  தொகுத்து வழங்கினார்.

அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌசல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார்.  அப்பதிகம், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே“, என்ற திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளை போற்றி   பாடுவதாக அமைந்து உள்ளது.    ஒன்பதாவது பதிகத்தில் ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை, தசரதச் சக்கரவர்த்தியாகவே தன்னை ஆக்கிக் கொண்டு, இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கி, தசரதன் புலம்பல்களாக அருளிச் செய்கிறார்.

அடுத்தது

குலசேகர ஆழ்வார் இராமர் மேல் இருந்த பக்தியால் மூன்று பதிகங்களை ஸ்ரீ ராமருக்கும், இராமாயணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடி உள்ளார்.  முதலில் இராமனின் தாயான, கௌசல்யா ராமருக்கு பாடும் தாலாட்டு எட்டாம் பதிகத்தில் கண்டோம்.  ஒன்பதாம் பதிகத்தில், தசரதன் புலம்பலைப் பார்த்தோம்.   இனி இந்த கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரகூடம்  (சிதம்பரம்) என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப் படுகிறது.

வடமொழியில் உள்ள வால்மீகி இராமாயணம், இருபத்தி நான்காயிரம் (24000) ஸ்லோகங்களைக் கொண்டது.   அதை ஓட்டி தமிழில் கம்பர் பாடிய கம்பராமாயணம் பத்தாயிரம் (10000) பாடல்கள் கொண்டது.   ஆழ்வார் இதனை அழகாக தொகுத்து பதினோரு (11) பாடல்களில் வழங்கி இருக்கிறார்.

ஸ்ரீ ராமரும், சீதையும் வடஇந்தியாவில் உள்ள சித்திரகூடம் என்ற இடத்தில, தங்களின் வனவாச காலமான பதினான்கு வருடங்களின் பெரும் பகுதியை, மிக மகிழ்ச்சியாகக் கழித்தார்கள்.   ஆழ்வார் சிதம்பரம் கோவிலில் ஸ்ரீ கோவிந்தராஜரை தரிசித்த போது, அவரை, சித்ரகூடத்தில் வசித்த ராமனாகவும், சீதையாகவும், லக்ஷ்மணனாகவும் கண்டார்.  அதனால் இதை தில்லைநகர் திருச்சித்ரகூடம்  என்று பாடியுள்ளார்.

சம்பூர்ண இராமாயணம்

முதல் பாசுரத்தில் அயோத்தியின் அழகையும் இராமனின் அழகையும் வர்ணிக்கின்ற ஆழ்வார், சூரிய குலத்திற்கே ஒப்பற்ற விளக்காக தோன்றி, தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில்  எழுந்தருளி இருக்கும் இராமனை கண்குளிர தரிசிக்கும் நாள் என்று வருமோ என்று கலங்குகிறார்.

பெருமாள் திருமொழியின் முதல் பதிகத்தில், அரங்கனை, “கருமணியை,  கோமளத்தைக்  கண்டு கொண்டு, என் கண்ணிணை என்று கொலோ களிக்கும் நாளே” என்று தொடங்கியவர், இப்போது கடைசி பதிகத்திலும் தில்லைநகர் திருச்சித்ர கூடத்தில் கோவிந்தராஜ பெருமாளை, “எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை என்று கொலோ கண்குளிரக் காணு நாளே” என்று முடிக்கிறார்.      

விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை”, என்று ஆழ்வார் இராமனின் வீரத்தை மெச்சுகிறார்.

இரண்டாவது பாசுரத்தில்

  • தாடகை என்ற இராட்சசியை வீழ்த்தியதையும்,
  • அவளது மகனான சுபாகு என்ற அசுரனை கொன்று முடித்ததையும்,
  • அவளது மற்றொரு மகனான, மாரீசன் என்ற அரக்கனை விரட்டி அடித்ததையும் குறிப்பிட்டு,  இராமபிரானின் வீரத்தையும்,
  • விஸ்வமித்ரா முனிவரின் யாகத்தை காப்பாற்றியதால், அவரது இரட்சகத்தையும், ஒரே பாடலில் ஆழ்வார் சொல்கிறார்.

மாரீசனை விரட்டியது, அவன் பின்னாளில் இராவணனிடம் இராம பிரானின் வீர தீர பராக்கிரமங்களை விளக்கிச் சொல்வதற்கு என்று வைத்துக் கொண்டாலும், மாரீச, சுபாகு மூலம், ராமபிரான் நமக்கு, உபநிஷத், ப்ரஹ்மஸூத்திரம் மற்றும் ஆண்டாளின் திருப்பாவையில் சொன்ன ஒரு முக்கிய கருத்தை, ஒரு நிகழ்ச்சியாக நடத்திக் காட்டி இருக்கிறார். அந்த கருத்தாவது, நாம் சரணாகதி பிரார்த்திக்கும் போது, பரமாத்மா, நாம் முன்பிறவிகளில் செய்த பாவங்களையும்  (பிராரப்த கர்மா), மற்றும் இந்த பிறவியில் அதுவரை செய்த பாவங்களையும்  (சம்சித்த கர்மா) அழித்தும், நாம் இனிமேல் இந்த பிறவியில் செய்யப்போகும் பாவங்களை  (ஆகாமி கர்மா)   தள்ளி விட்டும், நமக்கு செய்யும் க்ருபைக்கு உதாரணமாக சுபாகுவை முடித்ததையும், மாரீசனை விரட்டியதையும் நடத்திக் காட்டினார்.   ஆண்டாள் சொன்னது, “போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்” என்பதாகும்.

அத்தகைய இராமபிரானே, தில்லை நகர் திரு சித்ரகூடத்தில், மூவாயிரம் அந்தணர்கள் திரண்டு துதிக்க ரத்ன சிம்மாசனத்தில் வீற்று இருந்த பரமாத்மா ஆவார் என்று பாசுரத்தை முடிக்கிறார். 

மூன்றாவது பாசுரத்தில், ஆழ்வாரின் பாகவத பக்தி மிளிர்கின்றது.  சிவனுடைய வில்லை வளைத்து, சீதா  தேவியை மணம் புரிந்ததையும், பரசுராமனின் வில்லையும், அவரையும் வென்றதையம் சேர்த்து இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார்.   அதே போல், மற்ற யாராலும் அடக்க முடியாத வில்லினை கையில் ஏந்தி, தில்லை நகர் திருச்சித்ர கூடத்தில், அத்தகைய இராமன் காட்சி அளிப்பதாகவும், அந்த இராமனை  வணங்கும் அடியார்களுடைய திருவடிகளை, தான் வணங்குவதாக ஆழ்வார் குறிப்பிடுகிறார். இதை ஆழ்வார், இராமனுக்கு அடியவனான பரதனுக்கு, எப்போதும் தொண்டு புரிகின்ற சத்ருக்னன் போல தானும், பாகவத தாஸனாக இருக்க வேண்டும் என்று வேண்டுவதாக கொள்ளலாம்.

நான்காவது பாசுரத்தில், ஆழ்வார்,

  • இராமர் கைகேயின் சொல்படி ராஜ்யத்தை துறந்துவிட்டதையும்,
  • மகாபக்தனான குகன் படகினை செலுத்த கங்கை நதியைக் கடந்ததையும்,
  • அங்கு வந்த பரதனுக்கு, அரசும், பாதுகையும் கொடுத்ததையும்,
  • வடநாட்டில் உள்ள சித்ரகூடத்தில் இருந்த இராமன், இன்று தில்லை நகர் திரு சித்ரகூடத்தில்  இருக்கிறார் என்றும்
  • அவரை தொழும் அடியவர்களுக்கு, மேல் உலகத்தில் உள்ள நித்யஸூரிகளும் சமமாக மாட்டார்கள் என்றும் சொல்கிறார்.

இந்த பாடலில் ஆழ்வார் உபயோகித்துள்ள சில சொற்தொடர்கள் மிகவும் நன்றாக அனுபவிக்க வேண்டியவை, அவைகளில் சிலவற்றை கீழே காண்போம்.

  •  கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து –  தசரதனுக்கு இராமனை காட்டுக்குப் போகச் சொல்லும் மனம் கிடையாது,  அதனால், யார் ராமனிடம் நேரிடையாகச் சொன்னார் என்பதை சொல்லாமல், கைகேயின் வார்த்தையினால் ராமன் அயோத்தியை துறந்தான் என்கிறார்.
  • பத்தியுடைக் குகன்கடத்த – இதற்கு விளக்கம் சொல்லும் ஆசார்யர்கள், தம்பிகளை காட்டிலும் இராமனிடம் அன்பு கொண்ட குகன் என்று கூறுகிறார்கள்.
    • ராமனும் சீதையும் உறங்கிக்கொண்டு இருக்கும் போது லக்ஷ்மணன்  பாதுகாப்பான். அப்போது குஹனும் உடன் இருப்பான், ஏன்  எனில் லக்ஷ்மணன், இராமருக்கு ஏதாவது தீமை செய்து விடுவானோ என்று பயம் அல்லது லக்ஷ்மணனை காட்டிலும் குஹனுக்கு இராமனிடம் அதிக பக்தி.
    • அதே போல், பரதனையும் குகன் ஒரு சமயம் சந்தேகிக்கின்றான்.  பரதன் கூட்டத்தோடு இராமனைத் தேடிக்கொண்டு வரும் போது, சரயு நதியின் மறுகரையில் பார்த்த குகன், பரதன், இராமனை கொல்ல வருகிறானோ, என்று தனது படையைக்  கூட்டினான். இது குகனுக்கு இராமனிடம் உள்ள அதீத பக்தியைக் காட்டுகிறது.
    • இதே குகன், லக்ஷ்மணனையும், பரதனையும் பற்றி நன்றாக தெரிந்து கொண்ட பின், அவர்களிடம் காட்டிய அன்புக்கும் மரியாதைக்கும் உதாரணமாக, கம்ப ராமாயணத்தின் இந்த பாடல் வரிகளை, நாம் எடுத்துக் கொள்ளலாம்.   இராமன் தந்தை மட்டும் தந்த ராஜ்ஜியம் வேண்டாம் என்று சொன்னான், பாரதனோ தாய் தந்தை இருவரும் தந்த ராஜ்யத்தை வேண்டாம் என்று சொன்னான். அந்த, பரதனைப் பார்த்து, “ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ? தெரியின் அம்மா“, (2357) அதாவது, ஒரு ஆயிரம் இராமர் பரதனுக்கு நிகர் ஆவரோ என்று குகன், பரதனின் மேன்மை புலப்பட்டு வியக்கிறார்.
  • பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – இதனை நம் ஆச்சார்யர், நாம் என்ன நினைத்தாலும், தெய்வ சங்கல்பமே நடக்கும் என்பதற்கு உதாரணமாக சொல்வார்கள்.  தசரதன், இராமனுக்கு பட்டம் கட்ட நினைத்தான். கைகேயி, பாரதனுக்குப் பட்டம் கட்ட நினைத்தாள்.  ஆனால் தெய்வ சங்கல்பம், பாதுகை இராஜ்யத்தை ஆள வேண்டும் என்பது, அதுவே நடந்தது.   (இது வேதாந்த தேசிகரின் பாதுகா சகஸ்ரம் என்ற நூலில் உள்ளது).
  • சித்திரகூ டத்திருந்தான்  – பாதுகையை எடுத்துக்கொண்டு செல்லும் பரதனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த இராமன், இன்று தில்லைநகர் திருச்சித்ர கூடத்தில், ஆழ்வார் வரவு பார்த்து வைத்த கண் வாங்காமல் காத்துக்கொண்டு இருந்தான் என்றால் மிகையாகாது.
  • கண்குளிரக் காணப் பெற்ற – அந்த காலத்தில், வடநாட்டில் இருந்த இராமனைப் பற்றி இன்று நாம் கேட்கத்தான் முடியும், அதை நாம் இப்போது பார்க்க முடியாது.  ஆனால், தில்லைநகர் திருச்சித்ர கூடத்தில் உள்ள கோவிந்தராஜனாகிய இராமனை இன்று நாம் கண் குளிர தரிசிக்கவும் முடியும் என்கிறார்.

அடுத்த பாசுரத்தில், இராமன்

  • விராதன் என்னும் அரக்கனைக் கொன்றதையும்
  • தமிழ் முனிவர் அகத்தியரிடம் விஷ்ணு தனுஸை  வாங்கியதையும்
  • இராவணனின் தங்கையான சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்ததையும்
  • கரண், தூஷணன் என்ற 14000 அரக்கர்களைக் கொண்ட சேனையை அழித்ததையும்
  • மாரிசன் என்ற மாய மான் அழியும்படி செய்ததையும்

ஆழ்வார் குறிப்பிடுகிறார்.   சென்ற பாடலைப் போல், இந்த பாடலில் ஆழ்வார் உபயோகித்துள்ள சில சொற்தொடர்கள் மிகவும் நன்றாக அனுபவிக்க வேண்டியவை, அவைகளில் சிலவற்றை கீழே காண்போம்.

  • வண் தமிழ் மாமுனி கொடுத்த வரி வில் வாங்கி” – இராமர், பரசுராமரை வென்ற போது, அவரிடம் இருந்து பெற்ற விஷ்ணு தனுஸை, அங்கு ராமரின் பெருமையை பாட வந்த வானவர்களில் ஒருவரான வருணனிடம் அதைக் கொடுத்து பாதுகாக்கும் படியும், தக்க சமயத்தில் பெற்றுக் கொள்வதாகவும் சொன்னார்.   அதேபோல் இராமர் வனவாச காலத்தில், அகத்திய முனிவரின் ஆஸ்ரமத்திற்கு விஜயம் செய்யும் போது, அவரிடம் இருந்து விஷ்ணு தனுஸை  பெற்றுக்கொண்டார்.
  • கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி“, சூர்ப்பனகை, இராம இலட்சுமணர்களை காண வந்த போது, அழகிய வடிவத்தில் வந்ததால், கலை வணக்கு  என்றார் ஆழ்வார்.   கம்பரும் மானின் விழிபெற்ற மயில் வந்தென வந்தாள் (2764) என்று கூறுகிறார்.
  • அரக்கி மூக்கை நீக்கி” – அரக்கியின் மூக்கை அறுத்தது இலட்சுமணன் என்றாலும், ஆழ்வார் இராமன் செய்ததாகக் கூறுவது, ஏனெனில், இலட்சுமணன், இராமனின் கருத்துக்கு ஏற்றாற்போல், அவன் கட்டளை படி செய்ததால் ஆகும்.  இன்னும், இலட்சுமணன் இராமபிரானுக்கு வலது திருக்கை போன்றவன் ஆகையால், இராமர் செய்ததாக சொன்னது அழகே.
  • போர்க்களத்தில் தன் வில்லாற்றலால் எதிரிகளை அழித்த ராமரின் வீரத்திற்கு கம்பர் சொல்லும் இந்த பாடலை நினைவு கூறலாம்

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி;  சேனை  காவலர் ஆயிரம் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்;  கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில்என்னும்; ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிதுஅன்றே – 9513 

ஆயிரம் யானைகளும், பதினாயிரம் தேர்களும்,  ஒரு கோடி குதிரைகளும் ஆயிரம்    சேனைத்     தலைவர்களும் இறந்து விழுந்தால்  ஒரு முண்டம் (தலை இல்லாத உடல்)  எழுந்து கூத்தாடும்;   அப்படி ஆயிரம் முண்டங்கள் ஆடினால்  இராமன் வில்லில் கட்டிய அழகிய மணி, ஒரு தடவை கணின் என ஒலிக்கும்; போர் நடந்த அந்த நாளில்; அந்த வில் மணி ஏழரை  நாழிகை   நேரம் ஆடியது, ஆடியபோதெல்லாம் மணி ஒலித்தது.

இப்படியான இராமரின் வீர தீர பராக்ரமங்களுடன், இந்த வலைப் பதிவினை முடித்துக் கொண்டு, இந்த பதிகத்தின் மீதி உள்ள பாசுரங்களை நமது அடுத்த வலைப்பதிவினில் காணலாம்.

இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம், அவர்களுக்கு எங்கள் நன்றி.

http://www.tamilvu.org/ta/library-l4210-html-l4210in1-140090

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=133

இந்த பாசுரங்களை இங்கே கேட்டும் மகிழலாம், நன்றி STD Paadasala, Chennaii மற்றும் அதை தெரிவித்த whatsapp group friends

====================================================

Till Now

In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections.  Azhwaar,  whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees,   sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.

In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of  Archai    In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram.   In the sixth subsection, Azhwaar takes the roles  of the Gopikas, the women folk of Brindavan,  who lived at the same time of Sri Krishna  and loved Sri Krishna.   In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar,  (Holy Devaki),  the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age.

In the next subsection, namely, the eighth,  Azhwaar, enjoys  the  happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age.   All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram, whom azhwaar calls as “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.  In the ninth subsection, Azhwaar brings out the sadness of Dasarathan,  father of Sri Rama,  after he was separated from  Sri Rama, who went to the forest. Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, and Azhwaar brings out the feelings of Dasarathan in the hymns as they melt our hearts and these are called as Dasarathan’s lamentations.

What is Next

Kulasekara Azhwaar through his deep love, affection and devotion to Sri Rama, has compiled three subsections on Sri Rama and Sri Ramayanam.    Earlier, we had seen Rama’s mother, Kowsalya happily singing her lullaby on the young Rama, in the eighth subsection.  In the ninth subsection, Azhwaar talks about the lamentations of Dasaratha,  His father.   In the next subsection, or the final subsection of Perumal Thirumozhi, Azhwaar brings out the whole Ramayanam.  Azhwaar takes the divya desam, Thillai Nagar Thiru Chitra Koodam (Now called as Chidambaram Govindaraja Perumal Koil) as the part of this subsection.

After Darasaratha’s lamentations, Azhwaar decided to bring out the entire Ramayanam in the final subsection of Perumaal Thirumozhi.  The entire Ramayanam, consisting of about 24000 slokas in Valmiki Ramayanam and 10,000 poems in Kamba Ramayanam, was beautifully narrated in just 11 verses by Azhwaar.   

Sri Rama and Sita spent some wonderful years in Chitra Koodam, which is in Northern India, out of their fourteen years of forest life.   When Azhwaar had dharsan of the deity, Sri Govindarajar in Chidambaram, Azhwaar experienced the presence of Sri Rama, Sita, Lakshmana of Chitra Koodam, but in Chidambaram.  Hence he called this divya desam as Thillainagar Thiru Chitra Koodam.   

Sampoorna Ramayanam

 In the first hymn, Azhwaar brings out the beauty of Ayodhya and Sri Rama.  He has also showers  all praises on  Sri Rama,   by calling Him as the Shining Light for the whole Soorya  Clan .   Azhwaar completes the hymn by expressing his desire to have the dharsan of Sri Rama, who is now present in Thillai Nagar Thiru Chitra Koodam, Chidambaram in Tamilnadu.       

Azhwaar, in the first subsection of this Perumal Thirumozhi, longed when he would have the opportunity to have the dharsan of Ranganatha Perumal, by saying “Karumaniyai, Komalathai, kandu kondu, en kanninai endru kolo  kallikum naale“.    In the same manner he starts his last subsection of Perumal Thirumozhi by longing to have the dharsan of Sri Govindarajan Perumal, by saying “Engal thani Muthalvanai, em Peruman Thannai, endru kolo  kann kulira kaannum naale“.

In this hymn, Azhwaar starts saluting the Lord for His prowess by mentioning “Vinn muzhthum uyyak konda veeran thanai“, meaning Lord Rama gave abode all in the celestial world.

In the second hymn, Azhwaar explains the prowess of Sri Rama, by highlighting

  • how He killed the demoness  Thaadakai
  • how He killed her son, the demon Subhaahu and
  • also how He forced her another demon son, Maareechan  to run away from the place  of  yagyam

In the same hymn, Azhwaar also mentions another virtue of Sri Rama, that He always protects the  people, by saying that by removing these demons from the scene, He had helped the Sage Vishwamithra to complete his yagya .

In one way, we can take the reason for Sri Rama to force Maareechan to run away   , instead of killing him, could be because, then only, Maareechan  would be able to explain the prowess of Sri Rama to Ravanan at a later date.    Our acharyas also  use the example of Subhaahu and Maareechan to explain an important fact that is given in Upanishadh, Brahmma Suthram and Aandaal’s Thiruppaavai.   It is a favour, Paramathma does to us, when we pray for the total surrender.  He removes all our sins of the past lives, (prarabdha karma) and all the sins we committed during this life (samchita karma), like the way He killed Subhaahu and He clears  all the sins that we might be committing during the rest of our life, (Agami Karma),  like how He drove away Maareechan.  The same point is told by Aandal in her Thiruppavai, as “poya pizhaiyum pughu tharuvaan nindranavum, theeyinil thoosaagum” (5)

Azhwaar completes the hymn, by saying that the same Paramathma, adorning  the gem-filled throne, is in Thillai Nagar Thiru Chitra Koodam, where 3000 Brahmins praised the glory of the deity.

Azhwaar’s devotion towards devotees comes  out vividly in the Third Hymn of this subsection.  In this hymn, Azhwaar talks about the marriage with Sita by breaking the the special bow from Siva (Siva Dhansu) and the subduing of Parasuraama by breaking his stronger bow.  Azhwaar says that similar brave Rama, with strong arms and a heavy bow resides in Tillainagar Tiruchitrakutam. Azhwaar concludes the hymn by saying that he would for ever be a servant to those devotees of this Thillainagar Thiruchitrakooda Rama.  In Ramayanam, Rama’s brother Bharathan had always served only  Rama . Their brother Chathrugnan had only served Bharatha.   Azhwaar winds up this hymn, by saying that he wished to be like Chathrugnan and serve all the devotees of Sri Rama.

Fourth hymn is a very interesting hymn, where Azhwaar talks about

  • Rama, leaving the kingdom of Ayodhya, based on the words of Kaikeyi
  • Rama, crossing the Ganges, with Guhan, a great devotee of Sri Rama, piloting or steering the boat
  • Rama giving away the Kingdom and His holy footwear to Bharathan, His brother, who visited him there
  • Rama who lived in Chithrakoodam of northern  India during that period, is now living in Thillainagar Thiru Chithrakoodam as Govindarajar and
  • the Nithyasoories, who live in celestial world and serve Paramathma eternally would  also be a  no match to those who offer prayers to Govindarajan in Thillainagar Thiru Chithrakoodam

In this fourth hymn, there are some interesting, beautiful and enjoyable words which are coined by Azhwaar, and let us see some of them.

  • “Kaikesi sollaal thonnagaram thuranthu” – Dasaratha, the father of Rama, did not have the heart to ask Rama to go to the forest. Hence Azhwaar did not want to use the words on who asked Rama to go to the forest, but carefully structured the sentence as “Rama went out of Ayodhya as per the words of Kaikeyi”.
  • “Bakthi yudai Guhan Kadatha” – the direct meaning is  the devotee Guhan steered the boat, but our Acharyars endorse Guhan as a more ardent devotee than Rama’s own brothers, Lakshmanan and Bharathan.
    • For example, when Sri Rama and Sita were sleeping, Lakshman would be their vigilance.   At that time Guhan would also be following Lakshman, as Guhan because of his extreme devotion towards Srirama suspected that Lakshman might  harm Sri Rama
    • Similarly, Guhan had also suspected Bharathan, as though he was coming there to kill Rama, when Bharathan actually came along with the battalion of people to request Rama to return to Ayodhya, .  Guhan immediately asked his army to be ready for the battle.
    • But once Guhan had understood Bharathan and Lakshmanan, he showed lot of respect, love and affection towards them. This can be seen from one of the hymns from Ramayanam in Tamil, by Kamban.   Rama had refused the kingdom offered by his father, Dasarathan, but Bharathan had refused the kingdom offered by both  his father and mother.  So Guhan felt Bharathan’s attitude was superior to that of Sri Rama and Guhan said “Aayiram Ramar nin kezh aavaro, theriyin amma” (2357), meaning, Guhan did not know, whether one thousand Ramas would be equivalent to Bharathan.
  • “bharathanuku  paathugamum arasum eenthu” – meaning that Sri Rama gave away His footwear and the Kingdom to Bharathan.    This situation is taken by our Acharyas as an example to illustrate  that whatever God thinks would alone happen irrespective of what we think, .   For example, Dasarathan wanted Rama to be the king.  Kaikeyi wanted Bharathan to be the King of Ayodhya.   But ultimately it was Rama’s footwear which ruled the kingdom for 14 years, which was the probably the desire of Paramathma.   (This has been mentioned in the Paduka Sahasram by Sri Vendantha Desigan).
  • Chithirakoodathu irunthaan” – Sri Rama was watching Bharathan walking away from Him, when Bharathan went back with His foot ware.  As per Azhwaar, the same Rama was looking forward to receiving Azhwaar at Thillainagar Thiru Chithra koodam.
  • “Kann Kulira Kaanap petru” – meaning that “the dharsan of Sri Rama is a good treat to the eyes”.   We can only hear about the Sri Rama, who lived in those days, but according to the Azhwaar, today, we can have a good dharsan of Sri Govindarajar, residing at Thillainagar Thiru Chithra Koodam, who is the same Rama.

In the next hymn, Azhwaar talks about the way Rama went about to do the following :

  • Killing of Virathan, a demon
  • Getting back the Vishnu Bow from the Tamil poet and sage Agasthiar
  • Removal of the nose of Soorpanagai, sister of Ravana
  • Killing of the army containing about 14000 demons, including  Karan and Thooshanan
  • Killing of Maareechan, who came in disguise of a mysterious deer

Like the previous hymn, there are some interesting, beautiful and enjoyable words which are coined by Azhwaar in this hymn also and let us see some of them.

  • Vann tamil maamuni kodutha vari vil vaangi” – Sri Rama when he won Parasuraam, he got the Vishnu Bow from Him.   At that time, there were many angels from the celestial world to praise the prowess of Rama. One of them was Varunan.  Rama gave the Vishnu Bow to him and asked him to keep it safely so that Rama could get it back at appropriate time.   When Rama was in forests, He visited the Tamil sage Agasthiar and He got the Vishnu Bow from him.
  • “Kalai vannakku nokku araki mookai neeki” –  When the demoness Soorpanagai came to see Sri Rama and Lakshmana, she came as a beautiful looking girl.  Hence Azhwaar used the term “Kalai Vannakku“, meaning beautiful art.   Kambar also in his Kambaramayanam, used the words “maanin vizhi petra mayil vantha ena vanthaal“,  (2764) meaning a lady with beautiful eyes of a deer and wonderful look of a peacock.
  • “araki mookai neeki” – Only Lakshmana removed the nose of Soorpanagai. However, Azhwaar states as though Rama did that.   This is because, Azhwaar felt that Lakshmana did that as per the wishes of Rama and also as per the instructions of Rama.   Moreover, Lakshman is considered as the right hand for Rama and hence it is appropriate for Azhwaar to say that it was done by Rama.
  • We can refer to this poem from Kambaramaayanam to see how Kambar had explained the prowess of Sri Rama and how He destroyed the opposition army with His bow.

Aanai Aayiram, Ther Pathinaayiram, adal pari oru kodi; senai kaavalar aayiram padin, kavantham ondru enzhunthu aadum; kaanam, aayiram kavanthu nindru aadidin, kavin mani kannil ennum; enai am mani ezharai nazhigai aadiyathu inithu andre – 9513 

When Rama killed 1000 elephants, 10000 chariots and 10 million soldiers, one trunk (body without head) would stand up and dance. When 1000 such trunks danced, the bell in the bow of Sri Rama would strike once.    On that day, when the war was going on, the bow was continuously ringing for hours.

With this prowess of Sri Rama, let us conclude this weblog and continue the remaining hymns in our next weblog.

They lyrics of the tenth subsection can be seen at the following web address and we take this opportunity to express our thanks to them.

http://www.tamilvu.org/ta/library-l4210-html-l4210in1-140090

===========================================================

Ninth Subsection – Dasarathan’s lamentations / ஒன்பதாம் பதிகம் – தசரதனின் புலம்பல்

For English version, please click here, Thanks 

இதுவரையில்

இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள்  திருமொழியில், முதல் எட்டு பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும்,  பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.

முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் பரமாத்மாவின், மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம்.    ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன்  தொகுத்து வழங்கினார்.  அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார்.  எட்டாவது பதிகம், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே“, என்ற திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளை போற்றி   பாடுவதாக அமைந்து உள்ளது.

தசரதன் புலம்பல்

இனி  அடுத்து, ஒன்பதாவது பதிகத்தில் ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை விவரிப்பதை கீழே பார்ப்போம்.  தசரதச் சக்கரவர்த்தி, இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கிப் பேச்சுகளின் வடிவமாக அருளிச் செய்யப் பெற்றிருப்பது ஒன்பதாந் திருமொழி. ஆழ்வார் தம்மை தசரதனாகவே ஆக்கிக் கொண்டு புலம்புகின்றார்.   இப்பதிகத்திலுள்ள ஒவ்வொரு பாசுரமும் நெஞ்சை உருக்கும் தன்மை உடையது.

சக்ரவர்த்தி திருமகனான ராமச்சந்திரமூர்த்தி, சீதா தேவியோடும், லக்ஷ்மணனோடும், யானை, தேர், குதிரைகள் போன்ற எல்லாவிதமான வாகனங்களையும் இழந்து, கானகம் செல்வதை, “நேரிழையும், இளங்கோவும் பின்பு போக, எவ்வாறு நடந்தனை யெம் இராமாவோ ” (பெருமாள் திருமொழி 9.2) என்று புலம்புகிறார்.

ராஜகுமாரராக சௌகர்யமாக வளர்ந்து வந்த ராமனுடைய திருமேனியை மனதில் கொள்ளாமல், பெரிய காட்டில், மர நிழலில் கருங்கற் பாறைகளையே படுக்கையாக கொள்ளும் காட்சியை நினைந்து தசரதன், “வியன்கான மரத்தின் நீழல், கல்லணைமேல் கண் துயிலக்  கற்றனையோ” (9.3) என்று தன்னை தானே வெறுத்துக் கொள்ளுகிறார். சிறு வயது கிருஷ்ணருக்கு,  “குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை, நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக் கடியவெங் கானிடைக் காலடிநோவக் கன்றின்பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன்; எல்லே பாவமே” (பெரியாழ்வார் திருமொழி 3.2.9) என்று பெரியாழ்வார் யசோதை நிலையில் நின்று பேசுவது போல, இந்த பாசுரத்தில் குலசேகர ஆழ்வார் தசரதன் நிலையில் இருந்து பேசுகிறார்.

“நீ வா, நீ போ” என்று சிறு வயது இராமனின் முன் அழகையும், பின் அழகையும், மாறி மாறி ரசித்த தசரதன், இராமனை கொடுமையான  யானைகள் வாழும் காட்டுக்குப் போகச்சொல்லிய பின்பும், தன் நெஞ்சம் இன்னும் இரு பிளவாகவில்லையே என்று கதறுகிறார்.

கூர்மையான சிறு கற்கள் காலில் குத்தி அதனால் இரத்தம் பெருகவும், கடும் வெய்யிலில், நேரத்திற்கு உணவு கிடைக்காமல் பசி, இராமனை துன்பப்படவும்,  வருத்தப்படவும், செய்யும் சந்தர்ப்பங்களை உருவாக்கிய, தானும் கைகேயியும் பெரிய பாவிகளே என்று கண்ணீர் வடிக்கிறார்.

ஐயா என்று இராமன் அழைப்பதை கேட்காமல், அவனை இறுக அணைத்துக் கொள்ளாமல், உச்சி மோந்திடாமல், அவனது அழகிய நடையைப் பார்க்காமல், தாமரை மலர் போன்ற அவ்னது முக அழகைக் காணாமல், அவனைக் காட்டுக்கு அனுப்பிய தான் இன்னும் உயிர் வாழந்து இருப்பதை நினைந்து வருந்துகிறார்.

அறுபதினாயிரம் ஆண்டுகள் ராஜ சுகங்களை அனுபவித்து முதுமை அடைந்த, தான் காட்டுக்கு செல்ல வேண்டிய நேரத்தில்,  இராமன் காட்டுக்குச் செல்கின்றானே, இது நியாயமா என்று, வேதங்கள் நன்கு கற்றறிந்த வசிட்டரைப் பார்த்தும், ராஜதர்மங்கள் நன்கு அறிந்த சுமந்திரனைப் பார்த்தும், தசரதன் கதறி அழுகிறார்.

இராமனையும், சீதையும், லக்ஷுமணனையும் காட்டிற்கு போகச் சொல்லியதால், கைகேயின் மகனான பரதனுக்கு தீராத பழி உண்டாகும்படி, கைகேயி செய்துவிட்டதாகவும், தன்னையும்  மேல் உலகத்திற்கு அனுப்பி, கைகேயி சுகமாக இந்த உலகத்தில் வாழட்டும் என்றும்,  இராமனைப் பிரிவதால் உலகமே வருந்திக் இருக்க, கைகேயி மட்டும் என்ன சுகத்தை அனுபவிக்கப் போகிறார் என்றும் மாறி மாறி சொல்லி, வருந்துகிறார்.

தந்தையாகிய தன்னுடைய வாக்கையே மெய்ப்பிக்கவேண்டும் என்று கானகம் சென்ற இராமனே, தனக்கு மீண்டும் மீண்டும் பல பிறவிகளில் மகனாகப் பிறக்க வேண்டும் என்று இராமனிடமே வேண்டுகிறார்.

மூன்று தாய்மார்களில், இருவர் (கௌசல்யா, மற்றும் சுமித்ரா), வருந்தவும், ஒருவர் (கைகேயி) மகிழவும், இராமன் இந்த நாட்டை விட்டு காட்டிற்கு செல்வதை போல், தானும் இந்த நாட்டை விட்டு மேலுலகம் செல்லப் போவதாக தசரதர் உரைக்கின்றார்.

இராமன் காட்டிற்கு சென்றதனைப் பொறுக்க மாட்டாமல், தசரத மஹா சக்ரவர்த்தி புலம்பிய இந்த புலம்பல்களை படிப்பவர்கள், தீய வழிகளில் செல்ல மாட்டார்கள் என்று சொல்லி குலசேகர பெருமாள் இந்த பதிகத்தை முடிக்கின்றார்.

அடுத்தது

குலசேகர ஆழ்வார் இராமர் மேல் இருந்த பக்தியால் மூன்று பதிகங்கள் இராமருக்கும் இராமாயணத்தைக் குறித்தும் பாடி உள்ளார்.  முதலில் இராமனின் தாயான, கௌசல்யா ராமருக்கு பாடும் தாலாட்டு எட்டாம் பதிகத்தில் கண்டோம்.  இந்த ஒன்பதாம் பதிகத்தில், தசரதன் புலம்பலைப் பார்த்தோம்.   இனி கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரக்கூடம் என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப் படுகிறது.  அதனை அடுத்த வலைப்பதிவில் காணலாம்.

இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம், அவர்களுக்கு எங்கள் நன்றி.

http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3773

====================================================

Till Now

In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections.  Azhwaar,  whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees,   sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.

In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of  Archai    In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram.   In the sixth subsection, Azhwaar takes the roles  of the Gopikas, the women folk of Brindavan,  who lived at the same time of Sri Krishna  and loved Sri Krishna.   In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar,  (Holy Devaki),  the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age.  In the next subsection, namely, the eighth,  Azhwaar, enjoys  the  happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age.   All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram, whom azhwaar calls as “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.

Dasarathan’s lamentations

In the ninth subsection, Azhwaar brings out the sadness of Dasarathan,  father of Sri Rama,  after he was separated from  Sri Rama, who went to the forest. Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, in this ninth subsection.  The feelings of Dasarathan are brought out so clearly by Azhwaar in all these hymns of this subsection, the hymns melt our hearts.

 Sri Rama set out for forest immediately, once he heard that he had to go out, without any desire for the kingdom. He sent back the elephants, horses and chariots.   He went to the forest barefooted with Sita, His wife, and the younger brother Lakshmana.  Dasarathan cried on thinking how Sri Rama would have walked under those tough conditions by stating “Nerizhaiyum, Elangovum pinbu poga, evvaaru nadanthanai emm iraamaavo?” (Perumaal Thirumozhi 9.2)

Rama had grown up as a Prince in Ayodhya with utmost comfort and used to sleep in soft beds.  Dasarathan hated himself for having listened to Kaikeyi and sending Sri Rama to the forest, as Sri Rama, then, had to learn on how to sleep on bed of hard rocks, under the shadow of the trees in the forest, by saying “Viyan Kana Marathin Neezhal, kallanai mel kann thooyilak katranaiyo” (9.3).    This is much similar to the hymn by Periazhwaar in his Periyazhwaar Thirumozhi, 3.2.9, where Azhwaar taking the role of Yasoda, and expressed concerns when she sent Sri Krishna (Damodaran) without footware and umbrella, to the blazing hot forest to supervise the grazing cows .  Yasoda cursed herself for having done that by saying, “Kudaiyum Seruppum kodaathey Daamotharanai naan, udayium kadiyana oondru, vem parargal udai kadiya ven kaanidai, kaaladi nova kandrin pin kodiyen en pillai pokkinen, elle paavame”(Periyazhwaar thirumozhi 3.2.9).   

When Rama was young, Dasarathan used to enjoy Rama’s style of walking by asking him to come forward and go back many times.   Dasarathan asked his own heart, how it did not split into two, after having agreed to send Sri Rama to the forest, where wild elephants live.

Dasrathan worried about Sri Rama’s state in the  forest, where sharp small stones could hurt His soft feet, which could result in bleeding.  Similarly He might not get the food at the right time and that could cause pains to Sri Rama.   Dasarathan concluded that Kaikeyi, his wife and himself were the greatest sinners in this world for having created such misfortunes for Sri Rama.

Dasarathan felt sorry that he would not hear Rama calling him as father affectionately; he would not get embraced by Sri Rama; he would not be able to kiss on His forehead; he would not be able to watch His stylish walking; he would not be able to see His lotus-like face;  Having lost all these could mean that he lost Sr Rama and he wondered how he was still surviving.  He cursed himself as the lowliest of men.

Dasarathan had spent about sixty thousand years ruling his kingdom and he had enjoyed sufficient power and comfort at the palace.   He felt that it was time for him to hand over the kingdom to the next generation and move away to forest.  In stead he had agreed to send Sri Rama to the forest, as per the wishes of Kaikeyi, his wife.   He asked Vashittar, the person who mastered the Vedas and Sumandran, the person who mastered the state justice, whether it was fair to send Sri Rama to forest.

Dasarathan turned his attention to Kaikeyi and said that she earned an ever lasting blame for herself and her son Bharathan, for having sent Sri Rama, Sita and Lakshmana to the forest; Dasrathan knew that he would die soon and she would be the reason for that too; Dasarathan questioned whether it made any sense or happiness for Kaikeyi, when the whole world was going to feel sorry for missing Sri Rama in the country.

Dasarathan cried that Sri Rama had gone to the forest, to keep up Dasarathan’s promise or words to Kaikeyi, without any consideration for Himself or His grieving mother Kowsalya. Dasarathan pleaded to Sri Rama that He should be his son in many many lives of Dasarathan.

Dasarathan lamented that Sri Rama gladly went to the forest, after listening to Kaikeyi. The other two mothers, Kowsalya and Sumitra were in grief.    Dasarathan said that he would also leave the kingdom, which Sri Rama renounced, and would go abode.

The final hymn in this subsection is about the benefits for the people.  Kulasekara Azhwaar says that people who read or sing or master these hymns of this subsection, which express the anguish of King Dasarathan, lamenting over the unbearable loss of his affectionate son, would never go in the evil way.

What is Next

Kulasekara Azhwaar through his deep love, affection and devotion to Sri Rama, has compiled three subsections on Sri Rama and Sri Ramayanam.    Earlier, we had seen Rama’s mother, Kowsalya happily singing her lullaby on the young Rama, in the eighth subsection.  In this ninth subsection, Azhwaar talks about the lamentations of Dasaratha,  His father.   In the next subsection, or the final subsection of Perumal Thirumozhi, Azhwaar brings out the whole Ramayanam.  Azhwaar takes the divya desam, Thillai Nagar Thiru Chitra Koodam (Now called as Chidambaram Govindaraja Perumal Koil) as the part of this subsection, which we would try to cover in the next weblog.

They lyrics of the ninth subsection can be seen at the following web address and we take this opportunity to express our thanks to them.

http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3773

==========================================================

Subsection 8 – Thirukannapuram / எட்டாம் பதிகம்-திருக்கண்ணபுரம்

For English version, please click here, Thanks 

இதுவரை

இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள்  திருமொழியில், முதல் ஏழு பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.

முதல் மூன்றுபதிகங்களில், திருஅரங்கனைப் பற்றியும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று மகிழ்ச்சி அடைவது, என்பதை பற்றியும், அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது என்பதனையும் பாடினார் என்று பார்த்தோம். நான்காம் பதிகத்தில் திருவேங்கடமுடையானை அடைந்ததும், அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் செய்யவும்  திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும்  ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் அந்த பதிகத்தில் ஏங்குகிறார்.

ஐந்தாவது பதிகத்தில், “நீயே எனக்கு உபாயம், நான் வேறு யாரிடமும் செல்ல மாட்டேன்” என்பதை நமக்கு புரியும் வண்ணம் பற்பல உதாரணங்களால் விளக்கும் ஆழ்வார், “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்று திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்லும்  சொற்தொடர்களால் நம் மனதினில் பதிய வைக்கிறார்.

முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில்  மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த  கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம்.    ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன் தொகுத்து வழங்கினார்.

திருக்கண்ணபுரம்

அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார். கர்நாடக இசை பிரியர்கள் இந்த பாடல்களை நீலாம்பரி இராகத்தில் பாடி, கேட்டு மகிழலாம். இந்த பதினோரு பாடல்களும்  சோழ நாட்டில் உள்ள திவ்ய  தேசமான,  திருக்கண்ணபுரம் என்னும் ஸ்தலத்தில் உள்ள  சௌரிராஜ பெருமாளை  போற்றி பாடுவது.  எட்டாம் பதிகம் பார்ப்பதற்கு முன்னால், “சரணமானால், தன் தாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (9.10.5) என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட  திருக்கண்ணபுரம் பெருமாள் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்.

இந்த திவ்யதேச பெருமாள் கிருத, திரேத, துவாபர, கலியுகம் என்று நான்கு யுகங்களிலும் அருள் பாலிக்கும் பல சதுர்யுகங்கள், (64 சதுர் யுகங்கள் என்று சொல்வதும் உண்டு) கண்ட பெருமாள்.

திருக்கண்ணபுரம், பஞ்ச (ஐந்து) கிருஷ்ண க்ஷேத்ரங்களில், ஒன்றாகும். (மற்றவை, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம், திருக்கோவிலூர்). கண்ணன் க்ஷேத்ரமாக இருந்தாலும், ஆழ்வாருக்கு சிறுவயது ராமராகவே காட்சி அளித்துள்ளார் போலும். ஆகையினால் அவருக்கே இங்கு தாலாட்டு பாடுகிறார். அதே போல் ராவணனின் தம்பியாகிய விபீஷணனுக்கு இங்கு ஸ்ரீ ராமராக நடந்து காட்டியது விசேஷமாகும்.  இன்றும் ஒவ்வொரு அமாவாசையும் பெருமாள் விபிஷ்ணனுக்கு நடை அழகு காட்டுகிறார்.

பெரியாழ்வார் பாடிய “மாணிக்கம் கட்டி, வயிரம் இடை கட்டி” என்ற பாசுரங்கங்கள் குட்டிக் கண்ணனை (ஸ்ரீ கிருஷ்ணர்) உறங்கவைக்கும் பாடல்கள்.  பெருமாள் திருமொழியின் எட்டாம் பதிகம்,  குலசேகர ஆழ்வார், குட்டி ராமருக்கு சமர்ப்பித்த தாலாட்டு அல்லது உறங்க வைக்கும் பாடல்கள். தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழில் ஆழ்வார் இந்த பாடல்களை பாடி உள்ளார்.

வைஷ்ணவர்கள் திருக்கண்ணபுரத்தை கீழை (கிழக்கு) வீடு என்றே குறிப்பிடுகிறார்கள். மேலை வீடு (மேற்கு) திருஅரங்கம், தெற்கு வீடு திருமாலிரும் சோலை, மற்றும் வடக்கு வீடு, திருவேங்கடம் ஆகும்.

நாம் இனிமேல் பார்க்க வேண்டிய ஆழ்வார்களில் ஒருவரானவரும் ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆனவருமான திருமங்கை ஆழ்வாருக்கு, திருமந்திர அர்த்தத்தை விளக்கமாக உபதேசித்த பெருமாள், இந்த ஊரின் நீலமேக பெருமாள் ஆவார். இதற்காக, திருமங்கை ஆழ்வார் ஒரு திவ்யதேச பெருமாளுக்காக அதிகபட்சமாக 100 பாசுரங்கள் பாடிய  திவ்யதேசங்களுள், திருக்கண்ணபுரமும் ஒன்று ஆகும்.

திருமங்கை ஆழ்வார் 100 பாசுரங்கள் பாடிய இன்னொரு பெருமாள், அவருக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்துவித்த அவரது ஆச்சார்யனான, திருநறையூர் பெருமாள் ஆவார்.    

ஸ்ரீவைஷ்ணவத்தில், பஞ்ச சம்ஸ்காரம் என்பது, ஐந்து புனிதமாக்கும் வழிகள் பற்றிய  முக்கிய சடங்கு.  ஸ்ரீ வைஷ்ணவத்தை பின்பற்றி, திருமால் திருவடியை அடையவிரும்புவர்கள்,  ஆண், பெண், சாதி வேறுபாடு இன்றி, ஒவ்வொருவரும் நடைமுறை படுத்த வேண்டிய ஒன்று. அவைகளை அவரவர்களின் ஆச்சார்யர்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி சொல்லிக் கொடுப்பார்கள்.   அவையாவன 

  1. சங்கு சக்கர முத்திரை பதித்தல் – பக்தர்களின் பக்தர்களின் வலது மற்றும் இடது தோள்பட்டையின் மேல் புறத்தில் பெருமாளின் சங்கு சக்கர முத்திரைகள் பதிக்கப்படுத்தல் 
  2. திருமண் காப்பிடுதல் – சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, தோள் பட்டை, வயிறு, முதுகு, ஆகிய ஆறு இடங்களில் விஷணுவின் 12 சிறப்பு நாமங்களை (பெயர்களை) சொல்லிக்கொடுத்து காப்பிடக் கற்றுக் கொடுத்தல்.
  3. தாஸ்ய நாமம் சூட்டுதல் – ஸ்ரீவைஷ்ண ஆச்சார்யார்களில் மிகவும் முக்கியமான ஆச்சார்யார்களில் ஒருவரான ஸ்ரீ ராமானுஜரின் சம்பந்தத்தை ஏற்படுத்தி, சீடர்களுக்கு, ராமானுஜதாசன் என்று பெயரிடுதல். 
  4. மந்திர தீட்சை அளித்தல் – ஸ்ரீவைஷ்ணவத்தின் மூன்று முக்கியமான மந்திரங்களான, துவயம், (இரண்டு வரி மந்திரம்), சரமஸ்லோகம், மற்றும் திருமந்திரம் (8 எழுத்து மந்திரம்) இவற்றை சொல்லிக்கொடுத்து அதன் அர்த்தங்களையும் தெரியப்படுத்துதல்.
  5. யக்ஞம்  – விஷ்ணுவை வழிபடும் திருஆராதனம் செய்யும் முறைகள், சீடர்கள் பின்பற்றவேண்டிய உணவு முறைகள் மற்றும் பிற பக்தர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி விளக்குதல் 

இப்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் போது திருமந்திரத்தை உபதேசித்த திருநறையூர் நம்பிக்கு 100 பாடல்களும், அந்த திருமந்திர அர்த்தத்தை விளக்கிய திருக்கண்ணபுரம் நீலமேக பெருமாளுக்கு 100 பாடல்களும்  பாடிய திருமங்கை ஆழ்வார் பற்றி பின்னர் பார்க்கலாம்.  குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் தவிர ஆண்டாள், பெரியாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என்று ஐந்து ஆழ்வார்கள் இந்த திருக்கண்ணபுர திருத்தலத்திற்கு 128 பாடல்கள் சமர்பித்து உள்ளார்கள்.     இன்னும் பல பெருமைகள் திருக்கண்ணபுரத்திற்கு இருந்தாலும், நாம் இந்த வலைப்பதிவின் தலைப்பிற்கு திரும்புவோம்.

இராமாயணம்

இராமாயணத்தில் மொத்தம் ஏழு காண்டங்கள் உள்ளன.  அவையாவன :

  • பாலகாண்டம்,  இராம, பரத, லக்ஷ்மண மற்றும் சத்ருக்கனன் இவர்களின் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய பகுதி.
  • அயோத்திய காண்டம், இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துப்  பகுதி.
  • ஆரண்ய காண்டம்,  இராமன் காட்டுக்குச் சென்றதும், அங்கு வாழ்ந்ததும்.
  • கிஷ்கிந்தா காண்டம், கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வாலி சுக்ரீவன் நாடான கிஷ்கிந்தையில் இராமனது வாழ்க்கை.
  • சுந்தர காண்டம்,  சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய  பகுதி.
  • யுத்த காண்டம், இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய பகுதி.
  • மற்றும் உத்தர காண்டம், இராமன் நாட்டுக்கு திரும்பியதும்,  அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய பகுதி.

எட்டாம் பதிகத்தில் வரும் பாசுரங்களை ஆழ்வார் இந்த வரிசையிலேயே அமைத்து பாடியுள்ளார்.

எட்டாம் பதிகம்

மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே”, என்றுமுதல் பாடல் முதல் வரியில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்ததை சொன்ன ஆழ்வார் இரண்டாம் வரியினில் “தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்” என்று இராவணணின்  பத்து தலைகள் சிதறியதை, ஸ்ரீ ராமர் பிறப்பினால் ஏற்பட்ட நன்மை என்று விவரித்தார்.  

இரண்டாம் பாடலில், ராட்சசியாகிய தாடகையின் மார்பினை துளைக்கும்படியாக  அம்புகள் எய்தவன் என்று சொன்ன ஆழ்வார், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே” என்று ராமனின் அழகினை தரிசித்தவர்கள் தாங்களாகவே தங்கள் இதயங்களை ராமனின் திருவடிகளில் சமர்பித்து விடுவார்கள் என்று சொல்கிறார்.

மூன்றாம் பாசுரத்தில், கௌசல்யாவின் சிறந்த மகனே என்றும், ஜனக மஹாராஜாவின் மாப்பிள்ளை என்றும் பாடியவர் “எங்கள் குலத்தின் இன்னமுதே” என்று சொல்லும் போது ஸ்ரீ ராமரும், குலசேகர ஆழ்வாரும் ராஜ வம்சம் என்பதையும் ஸ்ரீவைஷ்ணவ குலம் என்பதையும் சேர்த்து குறிப்பிடுகின்றார்.

நான்காம் பாசுரத்தில், ” தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே, தசரதன் தன் மாமதலாய்” என்றும் சொல்லும் போது ஆழ்வார் தன்னுடைய நாபிக்கமலத்தில், படைக்கும் கடவுளாகிய பிரமனை படைத்தவனே என்று முதல் வரியில் சொல்லி, இருந்தாலும் நீ தசரதனுக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்து அவருக்கு தந்தை என்ற பெருமையைக் கொடுத்தாயே என்று இரண்டாவது வரியில் சொல்லி வியக்கிறார்.   இதே பாசுரத்தில் “ஏ மருவு சிலை வலவா ” என்று சொல்லும் போது பெரியாழ்வார் சொன்ன “சார்ங்கம் என்னும் வில் ஆண்டான்” என்ற பொருளிலேயே வில்லை அடக்கி ஆளுகின்றவன் என்றார்.

அடுத்த பாசுரத்தில் “ஆரா அன்பு இளையவனோடு அரு கானம் அடைந்தவனே ”  என்று சொல்லும் போது  ஆரா அன்பு என்பது கைங்கர்யம் செய்ய கூட வருவேன் என்று பிடிவாதமாக வந்த இலக்குவனைக் குறிக்கும். இங்கு நாம் நம்மாழ்வார் கைங்கர்யம் வேண்டும் என்ற “ஓழிவில் காலமெல்லாம்” (திருவாய்மொழி 3.3.1) என்ற பாசுரத்தை நினைவில் கொள்ளலாம்.   இதில் நம்மாழ்வார், பரதன் நாட்டிற்கு சென்று ராமனுக்காக செய்த கைங்கர்யங்களையும், இலக்குவன் ராமனுடன் காட்டிற்கு சென்று செய்த கைங்கர்யங்களையும் சேர்த்து, தான் ஒருவராக இனி வரும் காலங்களில் ஒரு நொடிகூட விடாமல் கைங்கர்யம் செய்ய வேண்டுகிறார்.

ஆறாம் பாசுரத்தில் “சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே” என்று ஆழ்வார் சொல்வதும் வால்மீகி இராமாயணத்தில் நாட்டின் குடிமக்கள் எல்லோரும் சென்றதாக சொல்வதும், சிறிது வேறுபட்டு இருப்பதை, நம் ஆச்சார்யர்கள், “எல்லோரும் செய்யும் தொண்டுகளை இலக்குவன் ஒருவனே செய்ததால் அதுவே சுற்றம் எல்லாம் சென்றார்கள் என்பதுபோல் ஆயிற்று என்பார்கள்.    அதே பாசுரத்தில் “அற்றவர்கட்கு அருமருந்தே! ” என்று சொன்னது, காட்டில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத இருந்த முனிவர்களை, இராமன் அரக்கர்களிடம் இருந்தும் விலங்குகளிடம் இருந்தும் காத்து அருளியதைக் குறிக்கும்.  அயோத்தி நகர்க்கதிபதியே என்றது அயோத்திக்கு மட்டும் மன்னராக இருந்ததை குறிப்பிடுவது அல்ல, அயோத்தி என்னும் பகுதியை வைகுந்தத்திலிருந்து கொடுத்தருளிய அதிபதி என்பது பொருளாகும்.

ஏழாம் பாசுரத்தில், இராமனுக்கு தாலாட்டு பாடும்,  குலசேகரப் பெருமாள், ஆல் இலையில் குழந்தையாய், உலகங்களை எல்லாம் வயிற்றில் அடக்கியவனே, வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை அரசைக் கொடுத்தவனே என்று பாடுகிறார். “ஆலிநகர்க் கதிபதியே” என்று சொல்லும்போது, ஒரு வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அரசை கொடுத்து சுக்ரீவனை,  தனக்கு  துணையாகக் கொண்டவனே என்று கூறுகிறார்.

எட்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும், யுத்த காண்டத்தை தொடுகின்றன. ஒன்பதாம் பாசுரத்தில், “இளையவர்க்கு அருள் உடையாய்” என்ற சொற்தொடர் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இராமன் இளையவர்களுக்கு கருணையுடன் இருந்ததை, இளையவனான சுக்ரீவனுக்கு, வாலியை கொன்று, அரசாட்சி கொடுத்து அருள் புரிந்ததையும், மூத்தவனான இராவணனைக் கொன்று, இளையவனான வீபீஷணருக்கு ஆட்சி கொடுத்தையும் ஆழ்வார் குறிப்பிடுகின்றார். 

பத்தாம் பாசுரத்தில் உள்ள,  “அரங்க நகர் துயின்றவனே”  என்பது அரங்கநாதனை குறிக்கும்.  “யாவரும் வந்து அடி வணங்க“, என்பது மீண்டும் அயோத்தி வந்து முடிசூட்டிக் கொண்ட  பட்டாபிஷேக இராமரைக் குறிப்பிட்டது போல் உள்ளது.   ஸ்ரீரங்கத்தில் உள்ள காவேரி நினைவிற்கு வர,  “காவேரி நல் நதி பாயும் கண்ணபுரத்து என் கண்மணியே” என்று காவேரி நதியை, ஆழ்வார் திருக்கண்ணபுரத்திற்கே கொண்டு வந்து விட்டார்.  

இந்த பதிகத்தின் இறுதி பாடல், இந்த பதிகத்தைப் படிப்பவர்களுக்கு வரும் பயன்களை கூறுகின்றது.  இராமனின் திருத்தாயாரான கௌஸல்யா, இராமருடைய சிறு வயது அனுபவங்களை அனுபவித்து மகிழ்ந்ததை போல், குலசேகர ஆழ்வார் பக்தராய் இருந்து அனுபவித்தாற்போல், இந்த பதிகத்தைப் படிப்பவர்களும், கேட்பவர்களும், சிறந்த பக்திமான்களாக இருப்பார்கள் என்று கூறி ஆழ்வார் நிறைவு செய்கிறார்.

அடுத்தது

குட்டி ராமரை பற்றிய ஒரு சிறு குறிப்போடு இந்த வலைப்பதிவினை முடித்து பிறகு குலசேகர ஆழ்வாரின் ஒன்பதாம் பதிகத்தைப் பார்ப்போம்.

தசரதருக்கு  ஸ்ரீ ராமன், பரதன், லஷ்மணன் மற்றும் சத்ருக்னன் என்ற நான்கு மகன்கள் பிறந்தனர்.   அந்த குழந்தைகளை தனித்தனி தொட்டில்களில் போட்டு தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.   அந்த குழந்தைகள் நன்றாக சப்தம் போட்டு அழுது கொண்டனவே தவிர தூங்கவோ விளையாடவோ இல்லை.   அப்போது குல குருவான வசிட்டர் வந்து பார்த்து, சிறுது நேரம் யோசித்து, பின்னர், அந்த தொட்டில்களின் வரிசையை மற்றச் சொன்னார். முதலில் ஸ்ரீ ராமன், அடுத்தது லக்ஷ்மணன், மூன்றாவதாக பரதன், அதன் பிறகு கடைசியாக சத்ருக்னன் என்று தொட்டில்களை மாற்றிய பின் பாதி அழுகை சப்தம் குறைந்தது; ஆனால் குழந்தைகள் அழுவதை முழுவதுமாக நிறுத்தவில்லை.   மீண்டும் வசிட்டர் யோசித்தார்.  பிறகு இரண்டு தொட்டில்களை எடுக்கச் சொன்னார்.  ராமனையும் லக்ஷ்மணனையும் ஒரு தொட்டிலிலும், பரத  சத்ருகுணர்களை  இன்னொரு தொட்டிலிலும் விடச் சொன்னார்.   அழுகை முற்றிலும் நின்றது.

அன்று முதல் ராமனுக்கு கைங்கர்யம் செய்ய லக்ஷ்மணன் என்றும், ராமனே எல்லாம் என்று இருந்த பரதனுக்கு கைங்கர்யம் செய்ய, சத்ருக்னன் என்றும் ஆயிற்று.

இராமனுக்கு இலட்சுமணன் செய்த கைங்கர்யம், இராமனுக்கு இதெல்லாம் தேவை, அவற்றை நாம் செய்வோம் என்று தானே முடிவு செய்து, இராமன் அந்த கைங்கர்யங்கள் வேண்டும் என்றாலும், வேண்டாம் என்றாலும் அவற்றை செய்து முடிப்பது ஒரு வகையான பகவத் பக்தி.

இராமனுக்கு, பரதன் செய்த கைங்கர்யம், இராமன் முடிவு செய்து பரதனிடம் செய் என்று சொன்னதை, பரதன் மிக சிரத்தையுடன் செய்வது.   இது இன்னொரு வகையான பகவத் பக்தி.  பரதன் சொன்னதை, மிக சிரத்தையுடன் செய்வது சத்ருக்னனின் கைங்கர்யம். அது பாகவத பக்திக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஒன்பதாவது பதிகம், ஆழ்வார், இராமபிரானின்,  தந்தையான தசரத மஹாசக்ரவர்த்தியாக, பாவித்து பாடிய அற்புத பாசுரங்கள்.   கௌசல்யாவின் மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களை முடித்தபிறகு, ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை கொடுக்கப் போகிறார்.   அதை நாம் அடுத்த பதிவினில் காணலாம்.

எட்டாம் பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம்.  அவர்களுக்கு எங்கள் நன்றி.

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=131

Click to access mannupugaz.pdf

============================================================

Till Now

In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections.  Azhwaar,  whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees,   sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.

in his first three subsections, Kulasekara Azhwar sings about  Thiru Arangan,  how Azhwaar yearned to have dharsan of Thiru Arangan, along with His thronging devotees and   enjoy the glimpse of Thiru Arangan. Azhwaar also cautions us on how to face and avoid those people who are not devotees of Thiru Arangan. The fourth subsection is for Thiruvenkadamudaiyaan and Azhwaar narrates his wish on what he wants to be, like a foot step in front of the deity or in any form, but to be in Thiruvengadam, as his main objective and he explains the same in a logical sequence, so that we can understand the concept easily.

In his next subsection, Azhwaar explains two of the important concepts in Vaishnavism, namely,  Ananya gathithvam and Aakinchanyam, which are closely related to Total Surrender or Saranagathi.    Azhwaar has taken these topics with various examples, in this subsection, with a special request “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”, to the chief deity of Thiruvithuvakode.

In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of  Archai    In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram.   In the sixth subsection, Azhwaar takes the roles  of the Gopikas, the women folk of Brindavan,  who lived at the same time of Sri Krishna  and loved Sri Krishna.   In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar,  (Holy Devaki),  the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age.

Thirukannapuram

In the next subsection, Azhwaar, enjoys  the  happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age.   Those who are familiar with the Indian classical music, may sing these hymns in the raag Neelambari.     All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram.   Before we go into the details of 8th Subsection, let us see a few interesting points about Thirukannapuram, who is regarded as the God who  gives  Sri Vaikuntham, the abode for all people who have surrendered to Him, by Swami Namazhwaar in his Thiruvaimozhi.  (“Saranamaagum thana thaal adainthaarkellaam Maranamaanal vaikuntham kodukkum perumaal“) (9.10.5).   

The Perumal in this Thirukannapuram Divya Desam, has been blessing devotees in all the four Yugams, namely, Krutha, Thretha, Dwapara and Kali. Hence He  is aptly called as The Deity who has seen many Chathur Yugams. (people say  64 Chathur Yugams).

Thirukannapuram is also one of the five Krishna Holy Places or Pancha Krishana Kshetrams.  The others are Thirukanna Mangai, Thirukannan Kudi, Thiru Kabithsthalam and Thiru Kovilur.   Even though Thirukannapuram is one of the Krishna Kshetrams, the Chief Deity might have given His Dharsan to Kula Sekara Azhwaar as Rama and that could be the reason why Azhwaar sings the lullaby to Rama here. The deity here in Thirukannapuram had also performed a Walk  for Sri Vibhishnan, the brother of Ravana. This nadai (walk) sevai is done in Thirukannapuram every New Moon day of the month even now.

Periyazhwaar has sung lullaby to the baby Krishna in his hymn “Maanikam Katti, Vaiyiram Idai Katti“.   This  8th subsection of Perumal Thirumozhi,  is the lullaby for the young Sri Rama.   In Tamil there are 96 different types of poetry and Azhwaar has used Pillai Tamil as the base for the hymns in this subsection.

Sri Vaishnavaas call Thirukannapuram as the Eastern House of Perumaal.   Similarly the western house is Sri Rangam, the Northern House is Thiruvenkadam and the Southern house is Thiru Maalirumcholai (Madurai).

Thirumangai  Azhwaar, whom we have to see in our  future weblogs, and who is the last in the list of Azhwaars,   got the  meaning of Thiru Manthiram, one of the key concepts of Sri Vaishnavam, from this Deity of Thirukannapuram, Sri Neela Megha Perumaal. Hence, as a mark of respect,  Thirumangai Azhwaar compiled 100 hymns on this Perumaal, which is the maximum number of hymns  Thirumangai Azhwaar has compiled for any divya desam deity.

The only other deity to whom 100 hymns were compiled by  Thirumangai  Azhwaar is for the  perumaal in Thirunaraiyur, who did the Pancha Samskaram, a purification process for all Sri Vaishnavaas, to Thirumangai Azhwaar

Pancha Samskara (meaning Five Purifications) is a ritual practiced by all sri vaishnavaas, during  Samasrayana.  Samasrayana means ‘to approach with all sincerity and truthfulness to Acharya’.  During this rite, the acharya initiates a person, irrespective of sex, caste, social status etc., as his Sishya.  It is a commitment from the disciple that he or she will live as per the wishes of the acharya. Thus, the person gets the link to the Vaishnava tradition.

Samasrayana consists of the guru initiating or coaching the disciple through a five step process:

(1) For body purification, embossing the impression of Vishnu’s Sudharsana discus (chakra) on the right shoulder of the disciple and of Vishnu’s  paanchasanyam or the conch (sanghu) on the left shoulder of the disciple.

(2) Teaching the disciple,  the twelve places in the body where Vishnu resides and making them wear the Thiruman Kappu (Tilak) with appropriate Vishnu name for each location.

(3) Adding the suffix  dasan to the name of the disciple (one is forever the slave of Sriman Narayana and Swami Ramanjua, one of the most important acharyas for srivaishnavaas).

(4) Teaching the most important manthirams for srivaishnavas, namely, (Rahasya traya mantras – 1.Ashatksharam, (8 syllable manthra), 2. Dwayam (Two lines manthra) &            3. Charama slokam) 

(5) Teaching the disciple the proper way of Vishnu worship, including Bhagvath Thiru Aaraadhanam.

Let us see more about  Thirumangai Azhwaar in our future weblogs, who has compiled 100 hymns on Thirunaraiyur Nambi for performing the panchasamskaram for him and 100 hymns on Thirukannapuram Neelamegha Perumaal, who has taught him the meaning of the Thirumanthiram.     In addition to Thirumangai Azhwaar, Aandal, Periazhwaar and Namazhwaar have compiled 128 hymns on Thirukannapuram divya desam.   We can keep on adding more and more glories on Thirukannapuram, but let us return to the topic of this weblog, namely, Perumaal Thirumozhi, 8th Subsection.

Ramayanam

Ramayanam, one of the two important epics of Hinduism, has seven major sections and they are :

  • Bala Kaandam – describing the birth, education and marriage of the four brothers, namely, Sri Raman, Bharathan, Lakshmanan and Chathrugnan
  • Ayodhya Kaandam – describing the  life of Sri Raman, after His marriage with Sita and as a Prince of Ayodhya.
  • Aaranya Kaandam – describing the life of Sri Raman, after He leaves Ayodhya and His life in the forest with Sita
  • Kishkintha Kaandam – describing the life of Sri Raman, after Sita is taken by the evil Ravana and when He starts searching for Sita through the Kingdom of Vaali and Sugreeva.
  • Sundara Kaandam – describing the most beautiful part of Ramayana, in which Sri Hanuman goes to Sri Lanka in search of Sita and meets Her there.
  • Yudha Kaandam – describing the war between Sri Raman and Ravana and Sri Raman returnes to Ayodhya and being throned as the King of Ayodhya
  • Uthara Kaandam – describing the life of Sri Raman after  He becomes the King of Ayodhya.  This Kaandam also describes the part when Sita was sent back to the forest

Kulasekara Azhwaar has compiled the 8th Subsection of Perumaal Thirumozhi in this sequence.

Eighth Sub Section

Azhwaar describes the birth of Sri Raman in the first sentence of the first hymn of this subsection by “Mannu Pughazh Kowsalai than mani vayiru vaaythavane” and in the second sentence, azhwaar tells the purpose of His birth, by “then ilangai kon mudigal sindhu vithaai“, meaning that the ten heads of Ravana were shattered.

In the second hymn, Azhwaar talks about Sri Raman, who pierced the chest of Thadagai, the woman demon, through His arrows and azhwaar also says that people would voluntarily surrender their hearts to the lotus feet of Sri Raman, once they see the beauty of Sri Raman by “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.

In the third hymn, Kulasekara Azhwaar mentions that Sri Raman was a good son of Kowsalya and a good son-in-law of Sri Janaka Maha Chakravarthy.    Azhwaar also joins Sri Raman by calling Him as “Engal Kulathin Innamuthe”, meaning, the sweetest person in our tribe.   Here azhwaar, refers to the tribe as Sri Vaishnava group as well as the group of Kings, as Kulasekara Azhwaar is also a king.

In the fourth hymn, Kulasekara Azhwaar brings out an interesting aspect, highlighting the contrasting glories of Paramathma.   On one hand, He created Brahma, who is given the responsibility to create all the human beings and other living things in this universe and on the other hand, He became a child and made Dasarathan a proud father of Him, when Azhwaar mentioned, “Thamarai mel Ayanai padaithavane, Dasarathan than maamathalaai, Mythili than manavaala“.   In the same hymn, Azhwaar also brings out a point that He can make the Bow and Arrow listen to Him and act according to His wishes, when he mentioned, “Ae maruvu silai valavaa“, which is much similar to what Periazhwaar said in his Palllanaadu “Saarngam ennum vil aandaan“.

In the next hymn, Azhwaar talks about the wishes of Lakshman, the younger brother of Sri Rama, when he mentioned “Aaraa Anbu Ilayavanodu arum kaanam adainthavane“.   Lakshman insisted and forced his way to come along with Sri Rama to the forest to do all the services to Sri Rama and Sita.  This is comparable to the request by Swami Nammazhwaar in his Thirvaimozhi (3.3.1), “Ozhivil Kaalamellam“, where he wants to do all the services in every second to Him, like what Bharathan, the other younger brother of Sri Rama did when he went back to Ayodhya to carry out the instructions of Sri Rama, as well as the services done by Lakshman in the forest, by staying with Sri Rama.

In the sixth hymn, Azhwaar mentions “Sutram elllam pin thodara thol kaanam adainthavane“, meaning that Sri Rama went to the forest along with all his relatives. But in Valmiki Ramayanam, it is mentioned that only the citizens of Ayodhya followed Sri Rama, Sita and Lakshman and not the relatives of Sri Rama.  Our acharyaars explained this contradiction, beautifully, by saying that Lakshman who went along with Sri Rama represented all the relatives, as he did all the services, what could have been done by them and hence what Azhwaar said was true.     In the same hymn, Azhwaar also mentioned about “Attravarku aru marunthey“, meaning He will be the source of strength for those who do not have any support.   This is in line with the support which Sri Rama extended to the sages in the forest, who were facing challenges from both the wild animals and also from the demons. When Azhwaar mentioned “Ayothi nagarukku athipathiye” it just did not mean that He was the king of Ayodhya, but it was He who sent a part of Srivaikuntham to create this Aydodhya.

The seventh hymn, the lullaby to Sri Rama talks about Paramathma, who takes the form of a Child on a leaf of a banyan tree, after a Maha Pralayam during which He takes the entire universe into his stomach.    Azhwaar also  mentiones  about Sri Rama killing Vaali, the king of Kishkinta and giving   Kishkinta to Sukreevan, the brother of Vaali.  Azhwaar mentions this as “Aalee nagarkku athipathiye” meaning that He killed Valli and He gave the Kingdom to his brother Sukreevan and made him His friend.

The eighth and ninth hymns of this subsection talks about the Yutha Kaandam, the part that explains the war between Sri Rama and Ravana.  In the ninth hymn, there is a term, “illayavarkku arul udaiyaai“,  mentioned, meaning, “helpful to the younger ones”,  which is of special interest, as Sri Rama helped the younger brother Sukreevan to get the kingdom after Sri Rama killed Vallli, his elder brother.  Similarly Sri Rama also killed Ravana and gave the kingdom to Ravana’s younger brother Vibishanan.

In the tenth hymn, Azhwaar mentions a term “Yaavarum vanthu adi vananga” referring to Sri Ranganathar.   This reminds us about Chakravarthy Thirumagan, Sri Rama, after he was crowned as the King of Ayodhya, where everyone came to prostrate at His holy feet.   Azhwaar also recollects  about Srirangam and Cauvery, so he brought the river Cauvery to Thirukannapuram, when he mentioned “Kaveri nal nathi paayum kannapurathu en karumaniye“.

In the last hymn of this subsection, Azhwaar indicates the benefits to the people who sing or read or listen to this set of hymns.    Azhwaar concludes by saying that the people who read or sing or listen to this set of hymns would be happy and would continue to be a very staunch devotees of Vishnu, like the happiness that Kausalya had, with the child Rama and the like the happiness that Azhwaar had, when he enjoyed listening to the details of Ramayana.

What is next

Let us conclude this weblog with a short incident about Sri Rama, when He was a child and then we go to the next weblog on Kula Sekara Azhwaar’s ninth Subsection. The king Dasarathan had four children, Sri Rama, Bharathan, Lakshmanan and Chathrugnan, born to him at the same time.   The maids were trying to make the babies sleep by keeping them in four different cradles.   The babies kept crying and they did not sleep.   No one knew the reason.   The Guru Vasishtar came to look at the children.   After a brief thought, he asked the maids to change the order of the cradles, first is for Sri Rama, second is for Lakshmanan, the third one is for Bharathan and the fourth is for Chathrugnan.   Now it was found that the noise level of the babies came down, but they did not stop crying or sleep.  Again, the guru Vasishtar thought for a while and asked the maids to remove two cradles and asked them to place Sri Rama and Lakshman in one cradle and Bharathan and Chathrugnan in the other cradle.  The babies stopped crying totally and they started playing.

From that day onwards, Lakshmanan dedicated himself to serve Sri Rama.  Chathrugnan dedicated himself to serve Bharathan, to whom Sri Rama was everything.

The dedication of Lakshmanan was such that he served Sri Rama as per his own perception of whatever were needed for Him, whether the services were actually wanted by Sri Rama or not. It is one type of total dedication to Paramathma.

But Bharathan had also served Sri Rama in an utmost sincere manner, by carrying out all the services that were asked by Sri Rama and were delivered as per the wishes of Sri Rama.  This is another type of dedication towards Paramathma. The services that were done by Chathrugnan for Bharathan were good examples of dedication towards devotees .

The total lyrics of the eighth subsection hymns are given under the following websites and we express our thanks to them.

Click to access mannupugaz.pdf

In the eighth subsection Azhwaar elaborates the happiness of Kowsalya, the mother of Sri Rama, but in the ninth subsection, Azhwaar would bring out the sadness of Dasarathan, the father of Sri Rama,  after he was separated from  Sri Rama, who went to the forest, which we would cover in our next weblog.  Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, in the ninth subsection.

————————————————————-

Sixth and seventh subsections / ஆறாம் மற்றும் ஏழாம் பதிகங்கள்

For English version, please click here, Thanks 

இதுவரை

இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின்  திருமொழியில், முதல் ஐந்து பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.

முதல் மூன்றுபதிகங்களில், திருஅரங்கனைப் பற்றியும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று மகிழ்ச்சி அடைவது, என்பதை பற்றியும், அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது என்பதனையும் பாடினார் என்று பார்த்தோம். திருவேங்கடமுடையானை சரண் அடைந்ததும், அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் செய்யவும் திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும்  ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் இந்த பதிகத்தில் ஏங்குகிறார்.   ஐந்தாவது பதிகத்தில், “நீயே எனக்கு உபாயம், நான் வேறு யாரிடமும் செல்ல மாட்டேன்” என்பதை நமக்கு புரியும் வண்ணம் பற்பல உதாரணங்களால் விளக்கும் ஆழ்வார், “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்று திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்லும் சொற்தொடர்களால் நம் மனதினில் பதிய வைக்கிறார்.

இது வரை பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், இனி வரும் பதிகங்களில் மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் அனுபவத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார்.  ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாகவும், ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாகவும், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாகவும், தந்தையான தசரத மஹாசக்ரவர்த்தி ஆகவும்   பாவித்து பாடிய அற்புத பாசுரங்களை காண்போம்.

ஆறாம் பதிகம்

பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம், ஸ்ரீவைஷ்ணவத்தில் உள்ள ஒரு முக்கிய தத்துவமாகும்.  ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவும் ஒன்பது விதமான சம்பந்தங்கள் உள்ளதாக நம் ஆச்சார்யர்கள் எடுத்து உரைக்கின்றனர்.  அவற்றில். இப்பொழுது, சேஷ சேஷி சம்பந்தம் என்பதை மட்டும் பார்க்கலாம்.

பரமாத்மா, ஆண்டான் அல்லது எஜமானன் அல்லது சேஷி  என்பதும், ஜீவாத்மா, அடிமை அல்லது சேவகன் அல்லது சேஷன் என்பதே இங்கு குறிப்பிடும் சம்பந்தம்.   ஜீவாத்மா, பரமாத்மாவிற்கு சேவை செய்வதேயே குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டும் என்றும், பரமாத்மாவையே  சதா சர்வ காலமும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், உள்ள இந்த சம்பந்தத்தையே ஆழ்வார்கள் பாசுரங்களில் கொடுத்துள்ளார்கள்.   அதே அளவிற்கு பரமாத்மாவும், ஜீவாத்மாக்களிடம் அன்பும் ஆதரவும் கொண்டு உள்ளார் என்பதும் நம் சித்தாந்தத்தின் மற்றொரு பகுதி.

இந்த பதிகத்தில் ஆழ்வார், ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக நினைத்து பாடும் பாசுரங்களாக அமைத்துள்ளார்.  கண்ணனைப் பற்றிய பெரியாழ்வார் மற்றும் நம்மாழ்வார் பாசுரங்களில் கண்ணன்மேல் அக்கறையும், மகிழ்ச்சியும் துக்கமும் கலந்து பாடி உள்ளார்கள்.   ஆனால் குலசேகர ஆழ்வார், இவற்றுடன் கண்ணன் வரவில்லையே என்ற கோப உணர்ச்சியையும் சேர்த்து வெளிப்படுத்தி உள்ளார்.  இனி இந்த பதிகத்தின் சில பாடலைகளைப் பார்க்கலாம்.

‘யமுனை நதியில்  உள்ள ஒரு மணல்திட்டில்,  பனியில் நடுங்கி, காலை வரை, உன் பொய்யான வார்த்தைகளைக்  கேட்டும் “வாசுதேவா உன் வரவுபார்த்தே” காத்து இருந்தேன் என்று ஒரு கோபிகை கோபமும் வருத்தமும் கலந்து சொன்னாள்.

மற்றொரு  கோபிகையின் வீட்டிற்கு கண்ணன் சென்று “நானும் உன்னுடன் சேர்ந்து தயிர் கடைவேன் என்று கள்ள விழி விழித்ததற்கு,  ‘தாமோதரா மெய்யறிவன் நானே” என்று அந்த  கோபிகை கோபத்துடன் சொன்னாள்.

ஒரு பெண்ணை கடைக்கண்ணால் பார்த்து, மற்றொரு பெண்ணிடம் வருவேன் என்று சொல்லி, இன்னொரு பெண்ணை அங்கே வா என்று  கூப்பிடுவதை பார்த்த ஒரு கோபிகை, “கண்ணா, உன்னுடன் உன் சேட்டைகளும் வளர்கின்றனவே” என்பதை “உன் வளர்த்தியூடே வளர்கின்றதா உன் தன் மாயைதானே” என்று கூறினாள்.

இன்னொருத்தி, தன் தோழி மூலம் செய்தி அனுப்ப, கண்ணன் அந்த தோழியுடன் உல்லாசமாக இருந்ததாக குற்றம் கூறுகிறார்.

இன்னொரு கோபிகை கண்ணன் தன் வீட்டின் வீதி வழியே மற்றொரு பெண்ணை அழைத்துச்சென்றதை கவனித்ததாக கோபிக்கின்றாள்.

இன்னும் சில கோபிகைகளுடன் கண்ணன் மகிழ்ச்சியாக குழல் ஊதிக்கொண்டு இருந்ததை குறிப்பிட்ட கோபிகை, ஒரு நாள் தங்களுக்காக கண்ணன் வந்து குழல் ஊதுவான் என்பதை “எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத, உன்குழ லின்னிசை ” என்று நம்பிக்கையுடன் ஏங்குகிறாள்.

இதைத் தவிர இன்னொரு பெண் தன்னிடம் கண்ணன் வராததை குறிப்பிட்டு, என்றாவது ஒரு நாள் தன்னிடம் வரும் போது பார்த்துக் கொள்ளுகிறேன் என்பதை, “இங்கொருநாள் வருதியே, என் சினம் தீர்வன்நானே” என்று சொல்கிறார்.

மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம், ஜீவாத்மாவாகிய ஆழ்வார், பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணரை எப்படியாவது அடைய வேண்டும் என்ற கருத்தை நமக்கு தெளிவுபடுத்த, ஆழ்வார்  தன்னை கோபிகையாக, உருவகப்படுத்திக் கொண்டு, கண்ணனுடன் எப்படியாவது சேர்ந்து விடவேண்டும் என்பதை விளக்கும் பாசுரங்களாக காணலாம். கண்ணன் மற்ற கோபிகைகளுடன் இருப்பதாக சொன்னது, பரமாத்மாவிற்கு, ஜீவாத்மாவின் மேல் கருணை உண்டு என்பதையும், என்றாவது ஒரு நாள் நமக்கும் அந்த நிலைமை கிட்டும் என்பதையும்,  நமக்கு புரியவைக்கவே.

இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம்.  (அவர்களுக்கு எங்கள் நன்றி).

Click to access ermalar.pdf

ஏழாம் பதிகம்

இந்த பதிகத்தில், ஆழ்வார் விபவாவதாரத்து  கிருஷ்ணனையும் அவரைப் பெற்ற தாயாரான தேவகியையும் எடுத்துக்கொள்ளுகிறார்.  குட்டி கிருஷ்ணனின் லீலைகளை மற்றைய ஆழ்வார்களும் இன்னும் பலரும் பாடி இருக்கக் கூடும். ஆனால் குலசேகர ஆழ்வார் எடுத்துக் கொண்ட இந்த கருத்தினை சொன்னவர்கள் ஓரு சிலரே இருக்கக் கூடும்.

இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம்.  (அவர்களுக்கு எங்கள் நன்றி).

Click to access aalainiil.pdf

கண்ணனை பெற்ற தாயான தேவகி, அவனை, அவனுடைய சிறு வயதில் பிரிந்ததனால், அந்த பால கிருஷ்ணனால், தனக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்களை இழந்தது பற்றி தேவகி பாடியதை போல் குலசேகர ஆழ்வார் பாடி நம்மை கலங்க வைக்கிறார்.   இதை நாம், கண்ணனை பிரிந்த தெய்வ தேவகியின் புலம்பல்  என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல், பரமாத்மாவை சேர முடியாமல் தவிக்கும் ஜீவாத்மாவின் கவலையும் வருத்தமும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

தாலேலோ என்று குழந்தையை தொட்டில் இட்டு கொஞ்சும் பாக்கியத்தை இழந்ததாக பாடும் தேவகி, “திருவினை இல்லாத் தாயரில், கடை ஆயின தாயே” என்று தன்னை பற்றி சொல்கிறார்.

சிறு வயது கண்ணன், தொட்டிலில் சயனித்து இருக்கும் அழகை, வீட்டில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல், ஊர்ப்பெண்களெல்லாரும் திரண்டு வந்து கண்டு களித்துப் போவர்களே; அவர்களில் ஒருத்தியாக இருந்தாலும், தான் அந்த அழகை ரசித்து இருப்பேனே, அந்த பேறும் கூட தனக்கு கிடைக்கவில்லையே என்பதை “கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன்” என்கிறார்.

பிறந்த குழந்தையை பார்க்க வருபவர்கள், குழந்தையை கொஞ்சி மடியிலிட்டு, உன் தந்தை யார் என்று கேட்பவர்களிடம், குழந்தை, கைகளாலும், கண்களாலும் தந்தையை காட்டும், ஆனால் அந்த பாக்கியம் தன் கணவன் வசுதேவனுக்கு கிடைக்கவில்லையே, என்பதை தேவகி “நல்வினை யில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே” என்று பாடுகிறார்.

தாய் ஒருத்தியை தவிர வேறு ஒருவரையும் அறியாத இளம் பருவத்தில், தாயைக் கண்ட மகிழ்ச்சியை கண்ணன் முகத்தில் வெளிப்படுத்திய அழகை அநுபவிக்க பெறாமற்போனேனே என்பதை “பிள்ளைமை  இன்பத்தை இழந்த பாவியேன் ” என்று கூறுகிறார்.

சிறு குழந்தையான கண்ணன் கொடுக்கும் முத்தத்தையும் அவன் பேசிய மழலைச் சொற்களையும் தான் இழந்ததாகவும், யசோதை பெற்றாள் என்பதை, “ஓன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்கிறார்.  ஒரு வித நோன்பும் நோற்காமல் கண்ணனுடைய சேட்டைகளைக் காணப் பெற்றதால், யசோதையை, தெய்வநங்கை என்று தன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தேவகி கூறுகிறார்.

புழுதி அளைந்த பொன்மேனியுடன் தன் மார்பினில் அணைக்கப் பெற்றிலேன் என்றும், குழந்தை அமுது செய்து மீதியை,  (போனகம் செய்த சேடம் ) உண்ணப் பெறவில்லை எனவும் தேவகி சொல்வதாக, “வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன்” என்று ஆழ்வார் கூறுகிறார்.

கண்ணன், தன் அன்னையிடம் பால் குடித்துக்கொண்டு இருக்கும் போது, நடுநடுவே இனிதாக நோக்கும் பார்வையை அநியாயமாய் இழந்தேனே என்பதை “திருக்கண்ணிணை நோக்கந் தன்னையும் இழந்தேன்” என்கிறாள்.

வெண்ணையும் தயிரையும் எடுத்து உண்ட வாயுடனும், பிடிபட்டுவிட்டோமே என்ற பயத்தில் அழுகையும் கண்ணீரும் கொண்டு, கண்ணன் நிற்பதை பார்க்கும் யசோதை, “தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே”, தான் காணவில்லையே என்று தேவகி புலம்புவதா ஓர் பாசுரம்.

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தது,    குரவை கூத்து ஆடியது, காளிங்க நர்த்தனம் ஆடியது  போன்ற கண்ணனது சிறு வயது விளையாட்டுகளை யசோதைக்குக்  காட்டியதை தான் “கண்டிடப் பெற்று இலேன்”    என்றும்  “தன் உள்ளம் குளிர” மறுபடியும் ஒருதடவை செய்து காட்ட வேண்டும் என்று அடுத்த பாசுரத்தில் வேண்டுகோள் விடுக்கிறாள்.

தாம் முக்கியமான சில அனுபவங்களை இழந்து விட்டோமே என்று தேவகி பாடுவதாக ஆழ்வார் சொல்வது, ஜீவாத்மாவாகிய ஆழ்வார், இப்படி ஒரு பரிமாணத்திலும் பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணரை அடைய பிரார்த்திக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி தெய்வ தேவகி, கண்ணனின் இளம் பருவ விளையாட்டு அனுபவங்களை தான் இழந்தவைகளாகச் சொல்லும் ஆழ்வார், அடுத்த பதிகத்தில், ஸ்ரீ ராமாவதாரத்தில் கௌஸல்யை, அந்த இராம பிரானை தொட்டிலிட்டு தாலாட்டு பாடியதை அருளிச் செய்கிறார்.  அவற்றை அடுத்த வலைப்பதிவில் காண்போம்.  ===========================================================

Recap

We have seen the staunch devotion of Sri Kulasekara Azhwaar towards Sri Ramachandra Moorthy or Chakravarthi Thirumagan and his attraction towards His devotees.   We have also seen the hymns composed by Sri Kulasekara Azhwaar is called Perumal Thirumozhi and we have seen the first five subsections of Perumal Thirumozhi. Kulasekara Azhwaar, covers Srirangam in the first three subsections of Perumal Thirumozhi, Thiruvengadam in the fourth subsection and Thiruvithuvakode in Kerala in the fifth subsection.

In those three pathigams, Azhwaar talks about Srirangam and how he is longing to have the dharsan of Sri Ranganatha, the chief deity of Srirangam, along with his ardent devotees. Azhwaar also talks about those who do not believe in God and how we should handle or avoid them in our life. After surrendering himself to Thiruvenkadamudaiyaan, Azhwaar narrates his wish on what he wanted to be, like a foot step in front of the deity or in any form , but to be in Thiruvengadam, as his main objective and   he explains the same in a sequential manner so that we can understand the concept easily.

In his next subsection, Azhwaar explains two of the important concepts in Vaishnavism, namely,  Ananya gathithvam and Aakinchanyam, which are closely related to Total Surrender.    Azhwaar has taken these topics with various examples, in this subsection, with a special request “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”, to the chief deity of Thiruvithuvakode.

Till now, Azhwaar has talked about Sriman Narayanan in Archavathaaram, one of the five states of Paramathma.   Azhwaar takes Vibavaavathaaram, one more state of Sri Paramathma  in his subsequent subsections.   He takes different  roles of

  • Gopikas, the women folk of Brindavan,  who lived at the same time of Sri Krishna,
  • Devaki, the holy mother who gave birth to Sri Krishna, but did not raise Him
  • Kowsalya, the mother who gave birth to Sri Rama, and
  • Dasaratha Maha Chakravarthi, the father of Sri Rama.

Let us see some of those interesting hymns, which were composed beautifully by Azhwaar, reflecting the perspectives of those individuals in this weblog.

In Vaishnavism, the relationship between Paramathmaa and Jeevathmaa is important and our acharyaas have explained nine types of relationships that exist between Paramathmaa and Jeevaathmaa.   One among them is Sesha- Seshi (Master and Servant) relationship and we will go through that  a little  more detailed here.

In the Sesha Seshi Relationship, Paramathmaa is considered as Master or Boss and Jeevathmaas are called slaves or servants to Paramathmaa.  Jeevathmaa should always have the goal to serve Paramathmaa for ever and keep Paramathmaa in its mind.   The same thing is being portrayed by Azhwaars in their hymns.

The other part is that Paramathmaa also loves and supports the Jeevathmaas

In this subsection Kulasekara Azhwaar , takes the roles of different Gopikas, the girls who lived in the same period of Sri Krishna and loved Sri Krishna. Both Swami Namazhwaar and Periazhwaar have composed hymns on Sri Krishna, expressing their care, happiness and sorrow.   But Kulasekara Azhwaar  expresses anger also along with his sadness,  in the hymns of this subsection, when he, as gopikas could not get to be with Sri Krishna.   Now let us get to go through some of the hymns of this subsection.

One gopika says with anger and sadness that she heard His lies and still was waiting for Sri Krishna (“Vasudeva un varavu paarthey“)  on the sands of the river Yamunai, all night, shivering in the cold weather.

In the next hymn, Azhwaar in the role of a gopikas says angrily that she knew the truth (Damodara, Mei Ariven Naane“) and the clandestine purpose of Sri Krishna, when He offered to churn the curd along with another gopika

In the next hymn, Azhwaar says that “Un valarthioode valarkindrathaal unthan maayai thaane”  meaning Sri  Krishna’s tricks were also growing along with him, as He glanced a girl and at the same time, His heart wanders  for another girl, and He gave word to yet another and finally misled an innocent girl.

Another Gopika complains that she sent a message through a girl, but Sri Krishna was happily spending time with the messenger girl.

Another Gopika says that she noticed that Krishna took a girl purposely through the street in which her house was located.

In one of the hymns Azhwaar, in the role of a Gopika, believed  “engalukke oru naal vanthu ootha, un kuzhal innisai” meaning  that one day  Krishna would come and play flute only for her, as she saw  Krishna delightfully playing his flute with a few gopikas.

 Apart from these one gopika is so angry with Krishna for not visiting her and she said “ingu oru naal varuthiye, en sinam theervan naane” meaning that she would show her anger towards Him on that day, when He comes to her.

All the above examples are to demonstrate to us that all Jeevathmaas should reach the Paramathmaa somehow.    So Azhwaar, as jeevathma, takes the role of gopika, and expressed their eagerness to be with Sri Krishna, the Paramathmaa, by composing these hymns, even if it meant to be offensive and with anger.    In those hymns, when Azhwaar mentions that Sri Krishna was with other gopikas, that  is to inspire us that Paramathmaa has got kindness towards Jeevathmaas and He would one day give the similar status to each and every one of us, the jeevathmaas.

You may be able to get the full text of the lyrics of these hymns in the following website and we take this opportunity to express our thanks to them.

Click to access ermalar.pdf

Seventh Sub Section

This subsection is also the experience of Azhwaar with Sri Krishna of Vibhavaavathaaram and His mother Devaki.   We all know that Sri Krishna was separated from His parents Vasudeva and Devaki, and moved to Brindavan, on the same night,  he was born, and Nandagopan and Yasoda became His foster parents.  There are many poets including Azhwaars, who have composed hymns and songs on the naughty or playful days of Sri Krishna.  But Kulasekara Azhwaar has taken totally a different perspective, which may have been covered by only  a very few.

You may be able to get the full text of the lyrics of these hymns in the following website and we take this opportunity to express our thanks to them.

Click to access aalainiil.pdf

In this subsection, Azhwaar takes the role of Devaki and lists the experiences that she should have got with young Sri Krishna and enumerates them painfully as the missed experiences.   Azhwaar has given a great title to her, as Deiva Devaki, (Goddess Devaki). We can not only take these experiences as a set of griefs from Deiva Devaki, but also a set of concerns and griefs of a Jeevathmaa longing to attain the holy feet of Paramathmaa.

Devaki missed the opportunity to play with Sri Krishna, when He was in the cradle and sing the  lullaby “Thalelo”.    She said to herself that she was the last in the list of  lowest mothers. (Thiruvinai illa thaayaril kadai yaayina thaaye“)

There were many people,  those at home as well as people from outside, who had enjoyed the smile of Sri Krishna, as a young boy, when He was lying in the cradle. Devaki felt that she could have been one of those outsiders to have had a glimpse of Sri Krishna and enjoyed His beauty, but she missed that experience of Him, very badly by saying “kidantha kidakkaiyai kandida petrilaen”

Generally, the child would show, who his or her father is, by looking at the father or by pointing with the hand, when the people, who visit the child, ask for the same.   Devaki moaned that such opportunity was not given to her husband Vasudevan,  (“nal vinal illa nangal kon vasudevan petru ilane”), as she was unfortunate not to be with Sri Krishna at His young age.

Devaki cries that she missed the opportunity to have a glimpse of Sri Krishna’s smile on seeing his mother at the young age, when generally the child, does not know anyone else other than the mother. (pillaimai inbathai izhantha paaviyen”)

Again Devaki  expresses her sorrow about what she missed and what Yasoda experienced  when she feels for  missing the kisses of young Krishna and His sweet infant words.   Devaki takes this opportunity to compliment Yasoda at this time, by calling her as Deiva Mangai, (Holy Lady), as she got the innumerable experiences of being with the young Sri Krishna, even without performing any serious prayers like fasting etc.

Devaki says that she is a greater sinner that she missed the opportunities to watch the young Sri Krishna play on the mud and then slowly crawling to embrace her with dust all over.   She also did not enjoy the remains of the food that was tasted by Sri Krishna.  “vaai konda adisilin michil unnap petru ilayn

Devaki talks about herself missing the sweet tender smile of young Sri Krishna, when He was being fed by His mother. “Thiru Kanninai Nokkam thannaiyum izhanthene”

In another hymn, Azhwaar in the role of Devaki said that Yasoda had seen and enjoyed with unlimited happiness, (“tholai inbathu iruthi kanndaale”) when Sri Krishna would have given a complex look, combining  fear for getting caught after stealing the butter, which was visible on the lips and over His little mouth, but still pleading with hands.  Devaki cried that she did not get such experience.

Devaki now started asking for a rerun of Sri Krishna’s early day acts such as holding the mountain Govardhan,  (“Kundrinaal kudai kavithaathum“), dancing with multiple pots on hands and head, (“kola kuravai Kothathum ), dancing on the head of the snake, Kaalingan, (Kaaliyan thaalai mithithathu”) so that she could get satisfied as these were enjoyed by Yasoda.

What we should understand from the above is that Azhwaar takes this perspective of narrating these sad experiences of Deiva Devaki and use that as an opportunity to plead for the eternal world from Paramathmaa or Sri Krishna.

After these sad and missing experiences of Deiva Devaki with the young Sri Krishna, Azhwaar takes Kowsalya, the mother of Sri Rama and her experiences of grooming or growing Rama when He was young and in the cradle by singing the  lullaby “Thalelo”.   Let us see this in our next weblog.

ஐந்தாம் பதிகம் – திருவித்துவக்கோடு / Fifth Subsection – Thiruvithuvakode

For English version, please click here, thanks  

முன்பு பார்த்தது

இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின்  திருமொழியில், முதல் நான்கு பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையே பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் பாடி உள்ளார்.   அடுத்த பதிகத்தை கீழே காண்போம்.

ஐந்தாவது பதிகம்

சென்ற பதிகத்தில், திருவேங்கடமுடையான் முன் ஒரு  படியாகவோ அல்லது திருமலையில் ஏதேனுமாகவோ வேண்டி, நமக்கு அதனை படிப்படியாக  புரிந்துகொள்ளும்படி சொன்ன ஆழ்வார் இந்த பதிகத்தில், நாம் என் பரமாத்மாவை விடாது பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை பற்பல உதாரணங்களால் விளக்குகிறார்.

இது நமது சம்பிரதாயத்தில் உள்ள இரண்டு முக்கிய கோட்பாடுகளை விளக்குகிறது.  ஒன்று அநன்ய கதித்துவம், மற்றொன்று ஆகிஞ்சன்யம்.   அநன்ய கதித்துவம் என்றால் உன்னை அல்லால்  எனக்கு வேறு ஒருவரும் இல்லை என்பது. ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது. இந்த இரண்டும் நமது முக்கிய கோட்பாடான சரணாகதியுடன் சேர்ந்தே இருப்பது.   இந்த கருத்துக்களையே ஆழ்வார் இந்த பதிகத்தில் “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்ற சொற்தொடர்களோடு,  நமக்கு மனதில் பதியவைக்க சொல்கிறார்.

கேரளத்தில் அமைந்துள்ள திருவித்துவக்கோடு, என்றும், இன்று திருமிற்றகோடு என்றும் கொண்டாப்படும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் உய்யவந்த பெருமாளை வாழ்த்தி பக்திச்சுவை மிக்க பாடல்களால் ஆழ்வார், வழிபடுவது இந்த பதிகத்தில் இடம் பெற்று உள்ளன.

இந்த பதிகத்தின் பாடல்களை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம்.  அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்களும் நன்றியும்.

http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3769

Click to access taruduyaram.pdf

தாயும் குழந்தையும்

“அரி சினத்தால், ஈன்ற தாய் அகற்றிடினும், மற்று அவள் தன், அருள் நினைந்தே, அழும் குழவி; அது போன்று இருந்தேனே ” 

கோபத்தில், தாய் தனது குழந்தையை தள்ளி வைத்தாலும், குழந்தைக்கு வேறு எங்கும் செல்ல தெரியாமல், அது அழுது கொண்டே தன்னுடைய தாயினிடத்திலேயே சென்று, தாயின் கருணையினையே வேண்டுவது போல், தானும் திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சரண் அடைந்து அவன் வேண்டாம் என்று சொன்னாலும் அவனை விட்டு அகலாமல் இருப்பேன் என்று ஆழ்வார் இந்த பதிகத்தின் முதல் பாட்டில் சொல்கிறார்.

கணவனும் மனைவியும்

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும், கொண்டானை அல்லால், அறியா குலமகள் போல்

கணவன், மற்றவர்கள் குறை சொல்லும்படி நடந்துகொண்டாலும், நல்ல குணமுடைய மனைவி, தனது கணவனை விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வதுபோல், ஆழ்வாரும் திருவித்துவக்கோட்டு அம்மானை விட்டு பிரியாமல் இருக்கிறார்.

மன்னனும் மக்களும்

“எத்துயரம் தரிதிடினும், தார்வேந்தன், கோல் நோக்கி வாழும், குடி போன்று இருந்தேனே “

அரசாளும் மன்னன், பொதுவாக மக்களுக்கு செய்திடும் செய்கைகள் யாவும் தனி ஒரு பிரஜைக்கோ அல்லது எல்லாருக்குமோ துன்பம் தந்தாலும்,  குடிமக்கள் தொடர்ந்து அந்த மன்னனையே தங்களுக்கு நன்மை செய்வான் என்ற எதிர்பார்ப்போடு காத்து இருப்பதை போல், ஆழ்வாரும், வித்துவக்கோட்டு பெருமாள், ஆழ்வாரை கவனிக்காவிட்டாலும் பெருமாளை விடாமல் இருப்பேன் என்று இந்த மூன்றாம் பாட்டில் கூறுகிறார்.

மருத்துவனும்  நோயாளியும்

வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் பால் மாளாத காதல், நோயாளன் போல், “

நாம் ஒரு வியாதி என்று மருத்துவரிடம் செல்லும் போது, அவர் நம்மை கத்தி மற்றும் பிற உபகரணங்களை கொண்டு, கீறி, நம் உடம்புக்கு தற்காலிகமாக துன்பம் கொடுத்தாலும், நாம் அதை பொறுத்துக்கொண்டு, அந்த மருத்துவரிடம் தொடர்ந்து மரியாதையும், விருப்பதையும் கொண்டு உள்ளது போல், ஆழ்வார், வித்துவக்கோட்டு அம்மானிடம்  சொல்வது என்ன வென்றால், அவர் தனக்கு தொடர்ந்து துன்பங்கள் தந்து கொண்டு இருந்தாலும், அவருடைய அருளையே எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் என்பதே.   இது இந்த பதிகத்தின் மிக பிரசித்தி பெற்ற பாடலும்,  நான்காவது பாடலும்  ஆகும்.

கப்பலும் கடல்பறவையும்

எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும், வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே” 

சுற்றும் அலைகளை தூக்கி எறிந்து கொண்டுஇருக்கிற கடலில் நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்து எங்கும் கரையை காண முடியாமல்,  தான் இருந்த இடமான கப்பலுக்கே, திரும்பி வரும்   பெரிய பறவைப் போன்று, தானும் வித்துவக்கோட்டு அம்மானின் பாதங்களில் சரண் அடைவதாக ஆழ்வார் தனது அடுத்த பாசுரமான ஐந்தாவது பாசுரத்தில் தெரிவிக்கின்றார்.

சூரியனும் தாமரையும் 

செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம், அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்

இந்த பதிகத்தில் இது வரையில், நீ என்ன செய்தாலும் உன்னை விட்டு அகலமாட்டேன் என்று உரைத்த ஆழ்வார், இனி வேறு யார் எதைச்செய்தாலும், அவர்களிடம் செல்ல மாட்டேன் என்றும்  சொல்வது போல் பாடல்களை அமைத்து உள்ளார்.

ஆறாவது பாசுரத்தில், தாமரை, சூரியனை பாரத்தால் மட்டுமே மலரும், தீயோ அல்லது மற்ற எந்த விதமான வெப்பத்தைத் தருகின்ற உபாயத்திலும் மலராது, அது போல் உன்னுடைய உயர்ந்த குணங்களுக்கு மட்டுமே நெஞ்சு உருகுவேனே  தவிர, மற்றவைகளுக்கு நெஞ்சு உருக மாட்டேன் என்று வித்துவக்கோட்டு அம்மானிடம் தெரிவிக்கின்றார்.

மேகமும் பயிர்களும்

ஏழாவது பாசுரத்தில், மேகம், தொடர்ந்து பலகாலம் மழையை தராவிட்டாலும், பசுமையான பயிர்கள், தனக்கு வேண்டிய நீருக்காக, அந்த மேகத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்குமே தவிர வேறொன்றையும் எதிர்பார்க்காது இருப்பது போல், ஆழ்வாரும், பரமாத்மாவாகிய வித்துவக்கோட்டு அம்மான், தன்னுடைய துன்பங்களை போக்காமல் விட்டாலும், தான் தொடர்ந்து அந்த பெருமானையே வேண்டி இருப்பேன் என்று கூறுகிறார்.

கடலும் நதியும்

கரை புரண்டு ஓடுகின்ற நதியானது, கண்டவிடமெல்லாம் ஓடி, கடைசியில் அது ஆழமான கடலிடத்தில் சென்று அடையுமே தவிர வேறு எங்கும் சென்று முடியாது என்பது போல், தானும் வித்துவக்கோட்டு அம்மானின் திவ்யகுண நலன்களில் மூழ்கி இருப்பேனே  தவிர வேறுஎங்கும் தனது  கவனத்தை திருப்ப மாட்டேன் என்று இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் தெரிவிக்கின்றார்.

ஆண்டவனும் ஐஸ்வர்யமும்

இந்த பாடலில் வரும் உதாரணம் சிறிது கடினமானது. உலகத்தில் உள்ள செல்வங்களை விரும்பாமல். பெருமானையே வேண்டி நிற்பவனை செல்வம் தானாக வந்தடையும் என்பது உலக நியதி. எவனொருவன் ஆண்டவனிடம் அன்பு கொண்டு அவனை மட்டுமே விரும்பி, இந்த உலக ஐஸ்வரியம் மற்றும் பிற பொருள்களை விரும்பாதவனுக்கு, பகவான் எப்படி தொடர்ந்து அன்பு காட்டி அவனுக்கு மேலும் மேலும் எல்லா செல்வங்களும் தருகிறார் என்பது உதாரணத்தின் ஒரு பகுதி.    இது, ஆழ்வார் தன்னுடைய வாழ்க்கையே சொல்வது போல் உள்ளது.   சிறந்த வீரரும், மன்னருமாய் விளங்கும் ஆழ்வார், இந்த உலக செல்வம் வேண்டாம், ராஜ்ஜியம் வேண்டாம் என்றும் மோட்சம்  தான் வேண்டும் என்ற போதும், அவருடைய ராஜ்ஜியம் சேர நாட்டில் இருந்து மேலும் மேலும் சோழ, பாண்டிய நாடுகளாக விரிவு அடைந்து கொண்டே இருந்தது.

இறைவனையே வேண்டி செல்வத்தை வேண்டாதிருப்பவருக்கு செல்வம் தானாக வந்து சேரும் என்கிற கருத்து சிந்திக்கத்தக்கது.   சில பெரியவர்கள், சென்ற வாக்கியத்தின் செல்வம் என்பது, மோட்சம் என்று பொருள் சொல்வதுண்டு.  ‘அண்ட சராசரங்களை வைகுந்தத்திற்கு ஏற்றிய” ஸ்ரீ ராமர், அனுமனுக்கு மோட்ச பலன் கொடுத்தும், அனுமன் அதனை தவிர்த்து, இந்த உலகத்தில் எங்கெல்லாம் ஸ்ரீ ராமர் பூஜை செய்யப்படுகிறாரோ அங்கெல்லாம் இருக்கவே ஆசைப்பட்டார்.

அதே போல், நாம் பின்பு பார்க்கவேண்டிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் இருவரும் தம் பாசுரங்களில் திருவரங்கத்தில் இருப்பதையே வேண்டுகின்றனர்.   “அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதையும், “என் அமுதினைக் கண்ட கண்கள்   மற்றொன்றினைக் காணாவே” என்று திருப்பாணாழ்வார் பாடியதையும் கருத்தில் கொண்டால், குலசேகர அழுவார் சொன்ன செல்வம் என்பது மோட்சத்தையே குறிக்கும். ஏனென்றால், அனுமனும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், மோட்சம் வேண்டாம் என்றாலும் அவர்களுக்கு பரமாத்மா மோட்சத்தைக் கொடுத்து இருக்க வேண்டும்.

அதே போல், பரமாத்மாவான வித்துவக்கோட்டு அம்மான், ஆழ்வாரை கவனிக்காமல், ஆழ்வாருக்கு அருளாமல் இருந்தாலும், ஆழ்வார் மீண்டும் மீண்டும் வித்துவக்கோட்டு அம்மானிடமே செல்வேன் என்று உறுதியாக சொல்கிறார்.

பலன்

இந்தப் பத்துப் பாடல்களிலும் இதே தொனியில் எந்தத் துயரம் தந்தாலும் உன்னை விட மாட்டேன் என்பது பல வித படிமங்களில் விரிகிறது.  மேலே சொன்ன பாசுரங்களை படிப்பவர்களுக்கான பலனை இறுதி பாசுரத்தில் வெளியிட்டு, இந்த பதிகத்தினை ஆழ்வார் முடிக்கிறார்.  வித்துவக்கோட்டு அம்மான் ஆழ்வாரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும் தான் வேறு  யாரையும் சரண் அடைய மாட்டேன் என்றும்,  அந்த பெருமானின் திருவடிகளிலேயே பக்தி கொண்டு காத்துஇருப்பேன் என்றும் சொல்லும் ஆழ்வார் இந்த பதிகத்தைப் படிப்பவர்கள் எத்தனை கொடிய பாவங்கள் செய்து இருந்தாலும் நரகத்தை அடைய மாட்டார்கள் என்றும்  சொல்லி முடிக்கிறார்.

ஆழ்வாரின் மற்ற பாடல்களை அடுத்த வலைப்பதிவில் தொடர்வோம்.


Preface

We have seen the first four out of the ten subsections of the Perumal Thirumozhi by Sri Kulasekara Azhwaar.   His devotion towards Sri Ramachandra Murthy is phenomenal and in the first three subsections of the Perumal Thirumozhi, he has spoken on Srirangam and in the fourth subsection, he has spoken on Thiruvengadam.    Let us try to understand the next one here.

Fifth Subsection

In the fourth subsection, Azhwaar had explained his wish on what he wanted to be, like a foot step in front of the deity or anything in Thiruvengadam and he took pains to explain the same in a sequential manner so that we can understand the concept easily.   In this fifth section, Azhwaar takes different examples to explain why  should we have complele faith in Paramathma, in spite of all difficulties or inconveniences.

This subsection explains two of the important concepts in Vaishnavism.  One is called Ananya gathithvam and the other is called Aakinchanyam.   Ananya gathithvam means that there is no one else there for us other than Sriman Narayanan, who is the Paramathma.  Similarly Akinchanyam means helplessness, as we do not know how to reach the eternal world.   Both these concepts are closely linked to the Total Surrender, which is the ultimate aim for all jeevathmaas.   Azhwaar has taken these topics in this subsection, with a special term “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”.

In this subsection, Azhwaar offers his prayers through deeply involved devotional hymns, to Sri Uyyavantha Perumal, the chief deity in Thiruvithuvakode or Thirumittakode, as it is known today. .

The full set of hymns can be seen in the following web addresses and our sincere thanks to them.

http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3769

Click to access taruduyaram.pdf

Mother and the Child

ari sinathaal eendra thaai agatridinum, matru aval than, arul ninaithey azhum kuzhavi; athu pondru irunthene

In the first hymn of this subsection, Azhwaar takes the example of a child, who keeeps coming back to the mother to get pacified, even after the child is pushed away and ignored initially by the mother out of anger.   Azhwaar says that he would come back again and again to the chief deity of Thiruvithuvakodu.

Husband and Wife

Kandaar igazhvanave Kaathalan thaan seithidinum, Kondaanai allaal, ariyaa kula magal pol”

Even when people can find fault with the activities and behaviour of the husband, a well groomed wife will never let her husband down.   Azhwaar in his second hymn of this subsection, says that he would never leave the chief deity of Thiruvithuvakodu.

The King and the Citizens

ethuyaram seidinum, thaar vendhan, kol nokki vaazhum kudi pondru irunthene”

Even when all the deeds done by a king result in pain and problems for either the individuals or for all the people  in the country, the citizens would always look forward to the king for future good things.   In the same way, Azhwaar says that he would not leave the chief deity of Thiruvithuvakode and is expecting Him to take care of Azhwaar, even though Perumal has not blessed Azhwaar with His glance.

Doctor and the Patient

Vaalaal aruthu chudinum, maruthuvan paal maalaatha kaadhal, noyaalan pol”

When a patient visits a doctor, the doctor uses sharp objects like knife etc. to do surgery  to cure  the diseases.  Though the acts of the doctor will certainly be painful to the patient, the patient would still respect and appreciate the doctor’s deeds.  Azhwaar, in this famous and the fourth hymn of this subsection,  says that he would continue to expect His grace, even if the chief deity of Thiruvithuvakodu continues to give only pain to the Azhwaar.

Ship and the Sea Bird

engum poi karai kaanaa theri kadal vaai meendeyum, vangathin koomberum maaparavai pondrene”

In his next hymn, Azhwaar says that he is like a big bird  looking for shores in the middle of a rough sea throwing innumerable waves all around, but returned to the ship from where it started its journey,  as the bird could not find the shore even after flying in all the four directions.   Azhwaar says that he surrendered and came back like the big bird, to the holy feet of the chief deity of Thiruvithuvakodu.

Sun and Lotus

“senthazhale vanthazhlaich seithidinum sengamalam, antharnser venkathirorkku allaal alaraavaal”  

So far in this subsection, Azhwaar says that he would not leave the chief deity of Thiruvithuvakode, in spite of any actions by Him, whether they were bad or good.  From now onwards, Azhwaar states that he would not go to others, in spite of their actions, whether they were good or bad.

In the sixth hymn of this subsection, Azhwaar states that a lotus would blossom only in the presence of sunlight and no other heat sources could help the lotus  to blossom.   In the same way, Azhwaar would surrender only to the glories of the chief deity of Thiruvithuvakode and would not turn to any other person or things.

Cloud and Corps

In the seventh hymn of this subsection, Azhwaar takes the Cloud as an example.   The crops would expect the clouds to shower the necessary water for them to grow and they would not expect the same from any other source.    This would be, in spite of the fact the cloud would have failed to provide water for long periods of time.  Azhwaar in this hymn says that even though, the chief deity of Thiruvithuvakode had not relieved him from the pains for a long time, he would expect the grace only from the chief deity of Thiruvithuvakode, and not from anyone else.

Sea and River

In his eight hymn of this subsection Azhwaar takes the example of the Sea and the river. He says that even when a river would overflow and run all over,  it would reach the sea and it would not end anywhere else.   In the same way, he would only surrender to the glories of the chief deity of Thiruvithuvakode and would not change his attention or focus away from Him.

God and material wealth

The example used by Azhwaar in this hymn is relatively difficult to understand.   It is common that when someone wants only the blessings from God, and is not interested in the material wealth, the person will get the material wealth, due to God showing His grace.

This part of the example reflects, in a way, Azhwaar’s personal life.  Azhwaar was longing for the grace of Paramaathma, and he did not show much interest in managing his kingdom.  Even though Azhwaar did not aspire for material wealth like his kingdom, his kingdom  got expanded well beyond Chera Naadu.

The material wealth in this example can also be referred to the Eternal world, based on the  examples given below.

In the epic Ramayana, Sri Rama offered the eternal world to Sri Hanuman. Hanuman politely refused the eternal world,  as his devotion towards Sri Rama and Rama Namam was boundless. Hanuman wanted to be in this world with those who chant Sri Rama’s name and  offer prayers to Sri Rama.

Similarly there are two other Azhwaars, whom we would go through in future, Thondaradipodi Azhwaar and Thirupaanazhwaar, who did not want the eternal world, but wanted to stay in Srirangam to have the dharsan of Sri Ranganatha Perumal.   This can be seen from their hymns, namely, “Achuvai perinum venden, arangamaa nagarulaane” by Thondaradipodi Azhwaar and “En Amuthinai Kanda Kangal matru ondrinai kaanaave” by Thirupaanaazhwaar.   Even though Sri Hanuman and the above Azhwaars did not want eternal world, they should have attained the eternal world due to the grace of Paramaathma.   Based on the above, the word wealth mentioned in the hymn would refer to the Eternal World.

In the same way, even when the chief deity of Thiruvithuvakode keeps ignoring Azhwaar,   Azhwaar strongly believes that he would get His blessings some time.   Azhwaar says that he would go again and again to Him to get His blessings.

Benefits

In all these ten hymns, Azhwaar goes through only one point, but with different examples in the sense that whatever pains he gets from Him, Azhwaar would look toward the chief deity of Thiruvithuvakode and would not go to anyone else.   Even when the chief deity of Thiruvithuvakode ignores Azhwaar, Azhwaar says that he would not go to anyone else, but only surrender at the holy lotus feet of the chief deity of Thiruvithuvakode and wait for His blessings.

Azhwaar gives the benefits of understanding these ten hymns and concludes this subsection, by saying that those who recite these ten hymns would not reach hell, even if they had committed the most unwanted sins or multitude of sins.

Let us continue with the other hymns of Kulasekara Azhwaar in our next weblog.

நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam

For English Version, kindly click here, thanks.

முன்பு பார்த்தது 

சென்ற வலைப்பதிவினில், நாம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் மூன்று பதிகங்கள் பற்றி சுருக்கமாக பார்த்தோம்.  அவை திருவரங்கத்தை பற்றியது என்றும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று களிப்பது என்றும் அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது என்றும் பாடினார். அத்துடன், நாம் அடுத்த பதிகத்திற்கு செல்வோம்.

நான்காம் பதிகம் 

முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கநாதனைப் பாடிய ஆழ்வார், அடுத்த பதிகத்தில், திருவேங்கடமுடையானைப் பாடுகிறார்.  இந்த பதிகத்தின் பல சிறப்புகளில் ஒன்று, ஆழ்வாரின் எண்ண ஓட்டங்களும் அவரின் எண்ணங்களை நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர் நமக்கு அதை படிப்படியாக தருவதும் தான்.

பரமாத்மாவிடம் சரண் அடைந்ததும், அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் பிரார்த்திக்கவும்  திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும்  ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் இந்த பதிகத்தில் ஏங்குகிறார்.

“கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

ஆழ்வார், திருவேங்கடத்தில் வாழ்வு கிடைக்குமானால், மனிதப்பிறவிதான் என்று இல்லாமல், ஸ்வாமி புஷ்கரணியில், ஒரு நாரையாக பிறந்து, பகவானுக்கு சேவை செய்வது மகிழ்ச்சியே என்று  மூன்றாம் பதிகம், முதல் பாசுரத்தில் தொடங்குகிறார். கருடன், அனுமன், திருவனந்தாழ்வான், லட்சுமணன் முதலானவர்கள் போலப் பலபடிகளாலும் “ஒழிவில் காலமெல்லாம், உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய” (நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி, 3.3.1) குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார். ஸ்வாமி புஷ்கரணி என்பது பெருமாளுக்கு பிரியமான நீர்நிலை என்றும், வராஹ புராணம் போன்றவைகளில் குறிப்பிடப்பட்டது என்றும், திருமலை கோவிலுக்கு மிகவும் அருகிலேயே உள்ள திவ்யதீர்த்தம் என்பதும் மனதில் கொள்க.

திருவேங்கடச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே

நாரைகளுக்கு சிறகுகள் இருப்பதால், அவை திருவேங்கடத்தை விட்டு பறந்து செல்லக்கூடும். ஆதலால், திருவேங்கடத்தில் மீனாய்ப் பிறக்க, ஆழ்வார் அடுத்த பாசுரத்தில் (2) வேண்டுகிறார்.

பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேனாவேனே” 

மீனாய்ப் பிறக்கப் பிரார்த்தித்த ஆழ்வார்,  மீன் நீரிலே இருக்க வேண்டியது, அதனால் கோவிலுக்கு சென்று பகவானுக்கு சேவை செய்ய முடியாது என்றும், அதேபோல் நீர் வற்றிவிட்டாலும் திருமலையில் வாழ்வது முடியாது என்றும் உணர்ந்து, பெருமாள் வாய்நீர் உமிழும் பாத்திரத்தை  (பொற்காளாஞ்சி)  ஏந்திச் செல்லும் சாதாரணமான தொண்டனாக வேண்டும் என்று மூன்றாம் பாசுரத்தில் விரும்புகிறார்.

தான் பெருமானுக்கு பொற்காளாஞ்சியை ஏந்திக் கொண்டு அந்தரங்க சேவை செய்பவர்  என்று, கோயில்வாயிலில்  சொல்வதால்,  அனைவரும் விலகி, வழிவிடுவார்கள் என்றும், அர்ச்சர்களுடன், தானும் தடையின்றி எளிதில் உள்ளே சென்று கர்ப்பக்ருஹத்திற்குள் பெருமாளுக்கு அருகில் நின்று சேவை செய்ய முடியும் என்றும் ஆழ்வார் நினைத்து மகிழ்கிறார். திருவேங்கடமுடையானை சேவிக்க, மிக அதிகமாக கூடியுள்ள அடியார்களின் பெருங்கூட்டத்தின் நடுவில் சிக்கி, மற்றவர்கள் உள்ளே புக முடியாமல் தடுமாறுவதை ஆழ்வார் கவனித்து இருக்க வேண்டும்.

செண்பகமாய் நிற்கும் திருவுடையேனாவேனே”.

பொன் என்றால் கர்வம் வரலாம் என்பதாலும், சாதாரண தொண்டனாகிய தான் அந்த பொன்னில் ஆசைப்பட்டு அதை களவாடி சிறை செல்லக்கூடும் என்று அஞ்சியும், ஆழ்வார் தன்னுடைய அடுத்த பாசுரத்தில், (4) செண்பக மரமாக வேண்டுகிறார்.  மலர் வாடிவிடும் என்பதால், ஆழ்வார்,  தொடர்ந்து செண்பக மலர்களை பகவானுக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கும், செண்பக மரமாகவே திருமலையில் இருந்து, தொண்டு புரிய விழைகிறார்.

நம் சம்பிரதாயத்தில், முக்கிய ஸ்தலங்களான அல்லது திருக்கோவில்களான, ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சிபுரம் மற்றும் மேல்கோட்டை, என்பவைக்கு, முறையே, போக மண்டபம், புஷ்பமண்டபம், தியாகமண்டபம், ஞான மண்டபம் என்று கூறுவார்கள். திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும்.  சிந்துபூமகிழ் திருவேங்கடம் (திருவாய்மொழி 3.3.2) என்பது நம்மாழ்வார் வாக்கு.   தோள் மாலை (தோமாலை) சேவை, திருப்பதியில் இன்றும், என்றும் பிரசித்தம். திருமலையில் புஷ்பத்தொண்டு புரிவது மிகவும் சிறப்பு.  பெரியாழ்வார்  “தேனில் இனிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்”, என்று  சொல்வது போல் (பெரியாழ்வார் திருமொழி, 2.7.1) செண்பக மலர் பெருமாளுக்கு மிகவும் உகந்தது.

வேங்கடமலைமேல் தம்பமாய் நிற்கும் தவமுடையேனாவேனே”

கண்ணபிரானின் தேவியான, சத்யபாமாவின் விருப்பத்திற்கு ஏற்ப, கண்ணபிரான், ஸ்வர்க்கலோகத்தில் இந்திரனது நந்தவனத்திலிருந்த பாரிஜாத மலர் செடியினை, சத்யபாமாவின் மாளிகையிலே கொண்டு நட்டதைப்போல், யாரேனுமொருவர் செண்பக மரத்தின் மேல் ஆசை கொண்டு, அதையும்  பெயர்த்துக் கொண்டு போனால் திருமலையில் இருக்க முடியாது எனக் கருதி பூ, காய், பழம், நிழல் என்று ஒன்றுக்கும் உதவாத ஒரு ஸ்தம்பமாய் திருமலையில் பிறக்க ஆழ்வார், தன்னுடைய அடுத்த (5) பாசுரத்தில் வேண்டுகிறார்.

“அன்னனைய பொற்  குவடாம்  அருந்தவத்தன் ஆவேனே”

ஸ்தம்பமாய் இருந்தால், அதை அரசாங்கத்தார் வெட்டியோ, தீ வைத்து கொளுத்தியோ அழித்துவிடுவார்கள் என்று எண்ணி, ஆழ்வார், திருமலையில் ஓர் பொன்மயமான சிகரமாக வேண்டும் என்று தனது அடுத்த பாசுரத்தில் (6) கேட்டுக் கொள்ளுகிறார்.

கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே

தான் ஒரு சிகரமாக இருக்கும்போது, புதிய கோவில்கள் கட்டுவதற்காக அந்த சிகரத்தை உடைத்து அதன் கற்களை யாரேனும் எடுத்துச்செல்வர்,   ஆகையால் ஆழ்வார், தான் திருமலையில் ஒரு காட்டாறாக பிறக்க, அடுத்த பாசுரத்தில் (7)  வேண்டுகிறார்.

“திருவேங்கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேனாவேனே”

காட்டாற்றில் என்னேரமும் தண்ணீர் இருக்கும் என்று  சொல்ல முடியாது, சில சமயம் ஆறு வற்றி விடும், அதனால் தான் திருமலையில் வசிக்க முடியாமல் போய்விடும்,  ஆகையால், பக்தர்கள் செல்லும் வழியில், அவர்களின் பாத துகள்கள்  படும்படி, தான் திருவேங்கட மலையில் ஒரு படியாக வேண்டும் என்று தனது அடுத்த பாசுரத்தில் (8) வேண்டுகிறார்.

“படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே”

பக்தர்கள் செல்லும் வழியில் ஒரு படியாக இருந்தால், எல்லா பக்தர்களும் அந்த வழியே தான் செல்வார்கள் என்று சொல்ல முடியாது, ஆகையால் தான் எல்லா பக்தர்களுக்கும் சேவை செய்ய முடியாது.  எங்கேயோ ஒரு படியாக இருப்பதைக் காட்டிலும் அது பெருமாளின் வாசல் படியாக இருந்தால், அதற்கு பெருமாளின் தரிசனம் எப்போதும் கிடைக்கக்கூடும், எல்லா பக்தர்களின் பாதத்துளிகளும் படும்,  ஆதலால், தான் அங்கு ஒரு வாசற்படியாக வேண்டும் என்று அடுத்த (9) பாசுரத்தில் தனது விஷேச விருப்பத்தை வேண்டுகிறார்.

எம்பெருமானுக்கு சேவை செய்யும்போது, ஒரு  ஜீவாத்மா தன்னுடைய சரீரம், மற்றும் கை, கால்  போன்ற அவயங்கள் அனைத்தும் பரமாத்மாவின் அனுபவத்திற்கே என்று விட்டு விட வேண்டும்.  அதுபோல் தன்னைப் பற்றிய சுய அறிவோ, பகவானுக்கு சேவை செய்கிறோம் என்ற அகந்தையோ  இல்லாது இருக்க வேண்டும் எனபதை ஆழ்வார், இந்த ஒன்பதாம் பாசுரத்தில், தான் ஒரு உயிரற்ற படியாய், இருக்க வேண்டும் என்று சொல்லி,  நமக்கு  மிக அழகாக புரிய வைக்கிறார்.

இப்பாசுரத்தை அடியொற்றியே விஷ்ணுவாலயங்களில்,  பெருமாள் சந்நிதியின் வாசற்படி “குலசேகரப்படி” என்று, ஆழ்வார் பெயரையிட்டு வழங்கப்படுகிறது.

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே

திருப்பதி சன்னதியில் கருங்கற்படிகளை, ஒரு நாள், தங்கப்படிக்கட்டுகளாக மாற்றலாம், அதனால் தான் திருமலைவிட்டு செல்லநேரிடும், சுவாமியின் திருமுக மண்டல சேவையை இழப்போம் என்று கருதி, தாமாக ஒரு பிறவியும் வேண்டிக்கொள்ள விழையாதவராய், “எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே” என்கிறார்.

சுருக்கம்

திருவேங்கடத்தில் திருமாலுக்கும், அவனது அடியார்களுக்கும் ஏதாவது ஒருவகையில் பயன்பட வேண்டும் என்ற உணர்வில் நாரையாய், மீனாய், பணியாளாய், செண்பகமாய், கம்பமாய், சிகரமாய், கானாறாய், வழியாய், படியாய், திருமலையில், ஏதேனும் ஒரு பொருளாய் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆழ்வாரின் தனது விருப்பத்தினைக் கூறுகிறார் என்று சொல்லி, இந்த பதிவினை கீழ் கண்ட பாடலுடன் நிறைவு செய்வோம், அடுத்த வலைப்பதிவிலும் பெருமாள் திருமொழியை தொடர்வோம்.

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே, நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல், அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும், படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே” –  பெருமாள் திருமொழி 4-9

வல்வினைகள் என்ற, எத்தனையோ பிறவிகளாக தீர்க்க இயலாத பாவங்களை தன்னுடைய கருணையினால் தீர்க்கும் திருவேங்கடமுடையான். அவன் கோவில் வாசலில் படியாய் கிடந்தது, அவன் பவள வாயினை பார்த்துக்கொண்டே இருப்பேன் என்று குலசேகர ஆழ்வார் கூறும் பாசுரம்.


Preface

We have gone through a short description of the first three subsections (pathigams) of Perumal Thirumozhi by Sri Kulasekara Azhwaar in our previous weblog.    In those three pathigams, Azhwaar talked about Srirangam and how he longed to have the dharsan of Sri Ranganatha, the chief deity of Srirangam, along with his ardent devotees. Azhwaar also talked about those who did not believe in God and how we should handle or avoid those people in our life.  With that let us move to the fourth subsection of Perumal Thirumozhi.

Fourth Sub Section

Kulasekara Azhwaar, who sang about Srirangam in the first three subsections, took Thiruvengadam (Thirumalai / Thirupathi)  as his subject for the fourth subsection of Perumal Thirumozhi.   One of the important features of this subsection is the way Azhwaar articulates his thought process in a step by step manner, so that we can understand the devotion, (bakthi) and his desire to serve Him and His devotees.

After submitting himself totally to Paramathma, Azhwaar identifies Thiruvengadam as the place for him to render services to Him and to His devotees.  He is prepared to take birth as a human being or other form, so that he could continuously reside in Thiruvengadam and offer services to Him and to His devotees.

“Koneri Vazhum Kurugaai Pirapene”

Azhwaar starts the fourth subsection by saying that he would be happy to be born as a stork, in the temple tank, as long as he could serve Paramathma.  Azhwaar expresses his desire to serve Paramathma like, Garudan (the  bird, which carries Perumaal all the times), Hanuman (the monkey god, who serves Paramathma in vibhavaavathaaram), Thiruanathazhwaan (the snake, which serves Him as His bed) and Lakshmanan, who was born as His brother to serve Him throughout the incarnation of Rama.   These are examples of characters who have been serving  Paramathma all the times and hence Azhwaar wants to be like them serving Him all the time, like what Namazhwaar says in one of his hymns “ozhvil kaalamellam udanaai manni, vazhuvilaa adimai seiya vendum” (meaning, that at all times and forever, we must do service, to Lord of Venkateswara), in his Thiruvaimozhi 3.3.1. Kulasekara Azhwaar has coined the word “Swami Tank”, which means,

  • the tank, which is liked by Swami Venkateswara
  • the tank, which is mentioned in many puranams like Varaha Puranam and
  • the tank, which is the closest auspicious water storage near the Swami temple.

 “Thiruvengada sunaiyil meenai pirakum vidhi udaiyen aavene” 

Azhwaar reasons out that since the storks could use their wings and potentially fly out of Thiruvengadam which could prevent Azhwaar from staying in Thiruvengadam against his original desire of staying there for ever. Hence Azhwaar expresses his desire to be born as a fish in Thiruvengadam in the second hymn of this subsection.

“Pon vattil pidithu udane pugap peruven aavene”

In the earlier hymn, Azhwaar wants to be born as a fish, but then he reasons that the fish had to live in the water all the time, and  could not go into the temple to do service to the God and also if the water dried up, the fish could not continue to live in Thirumalai.   So Azhwaar   requests to be born as a full time staff, who would carry the Lord’s golden spittoon in Thirumalai, in the third hymn of this subsection.

Azhwaar must have seen the large crowd at Thirupathi to get the dharsan of Sri Venkatesawara Swami.   He believes that he could easily get through the crowd and reach the sanctum sanctorum, as the authorities manning the gate would identify him as a personal assistant to Perumal, carrying the golden spittoon and let him go without any hurdle.     And in this process Azhwaar could easily offer his services to Perumal, closely standing next to Him.

“Shenbagamai nirkum thiruvudaiyen avene”

In the previous hymn, Azhwaar wants to carry the golden vessel of Perumal to do service for Him.  However, he feels that he might take pride in holding the golden vessel or he might steal the golden vessel, get caught and could go to the prison.  So he   changes his mind and requests, in his next hymn (4th) that he should be born as a Shenbagam tree, a plant which gives the Shenbaga flower. Since the individual flowers could get dried and taken off from the Lord periodically, Azhwaar wants to be a Shenbaga plant, which can continuously supply the flowers to Perumal.

In vaishnavism, the four important temples or deities are Srirangam, Thirupathi, Kancheepuram and Melkote in Karanataka.   These are called as Boga Manadapam (Place of Joy), Pushpa Mandapam (Place for Flowers), Thyaga Mandapam (Place for Sacrifice) and Gnana Mandapam (Place for Wisdom) respectively.  So Thirumala or Thirupathi is associated with Flowers traditionally.  “Sindu poo mahizhum thirvengadam” is the phrase coined by Swami Namazhwaar, in his Thiruvaimozhi (3.3.2), meaning (the chief deity in Thiruvengadam is pleased with flowers).   There is a special dharsan in Thirupathi, called Thomala Sevai, meaning the string of flowers on the shoulders of the Lord.  It is really special in Thirupathi to deliver any services relating to flowers to the Lord. As Periyazhwaar says, “Thenil iniya piraane shenbaga poo soota vaaraai”, (meaning Lord, you are sweeter than the honey,  please come and wear shenbaga flower) in his Periyazhwaar Thirumozhi, 2.7.1, Perumal likes Shenbaga flower.

“Vengadamalai mel thambamaai nirkum thavamudaiyen avene”

Lord Krishna,  on the request from Satyabhama, His wife, had once taken the plant of Parijatha flower from the garden of Indran, the head of heaven, to the garden of Satybhama.   In the same way someone could take the Shenbagama plant in Thirumalai to their house and Azhwaar might lose the opportunity to live in Thirumalai.  So he wants to be born as a blank tree, which may not be useful to anyone, as it could not give any flower, fruit or vegetable or even shadow, but he could continue to stay in Thiruvengadam and serve Lord Venkateswara. This is Azhwaar’s request in fifth hymn of this subsection.

annanaiya porkuvadaam arunthavathan aavene”

Azhwaar thinks that if the government authorities found an useless plant, they could potentially cut or burn it with fire and destroy the plant, which could force Azhwaar to move away from Thiruvengadam.  Hence Azhwaar requests himself to be born as a golden peak in Thiruvengadam, in the sixth next hymn,  under this subsection.

“kaanaaraai paayum karuthudaiyen aavene”

Azhwaar feels that people could break the peak to get the stones for building newer temples and that could force him to go away from Thiruvengadam.   Hence Azhwaar in his next hymn (7th), wishes that he could become a wild stream or river in Thirumalai, which could help to grow plants carrying nectar-dripping flowers.

“thiruvenkagadamalai mel neriyai kiddakum nilai udayen aavene” 

Again Azhwaar thinks that the water in the stream might get dried once a while and hence he could not continue to live in Thiruvengadam.   Hence he changes his request in his next hymn, (8th), and wants to be born as a footstep in the hill, so that he can serve the devotees who walk along the path to have the dharsan of Sri Venkateswara Swami.

“padiyaai kidanthu un pavala vaai kaannbene”

Azhwaar takes his thought process further in the next hymn (9), by saying that since all devotees might not use the same path, he, as a footstep, could not be able to serve all devotees.   Similarly instead of being a step somewhere, he could as well be a step in front of the Lord in His Sanctum, where he could have the dharsan of the Lord all the times.   Moreover, all the devotees would pass through this step in front of the deity, so that he would serve all devotees.   So Azhwaar delivers his special desire to be born as a footstep in the sanctum in the ninth hymn.

Another point to remember here, is that whenever we want to do or offer our services to Paramathma, we should leave everything to Him, without having any of our preferences. In fact, what Azhwaar says, is that we should be like an inanimate object, without worrying about our limbs and body.  He goes on to say that we should not boast ourselves as though we are the only ones who are doing service to the Lord or we should not be too conscious about how we do the service.  We should leave everything to Him. This is what Azhwaar says in this hymn, by wanting himself to be stone, which does not have any feelings or life.

In all the Vishnu temples, the footstep infront of the Lord at the Sanctum is called Kulasekara padi (step), in recognition of this particular hymn by Azhwaar.

“emperuman ponmalai mel ethenum aavene”

Azhwaar takes his thought process further and concludes that one day someone could change the footstep in front of the Lord, which is made of granite, to a golden footstep. Then the granite footstep could be taken out of Thiruvengadam and Azhwaar may not be able to continue to have the dharsan of Lord at Thiruvengadam.     Azhwaar concludes his longing  by mentioning that he did not want to propose any specific birth, however he wants to specify one important criteria, which was, he could take any birth or any form as long as he would be able to be in Thiruvengadam.

Summary

Azhwaar wants to offer his service to Perumal and His devotees in Thirumala.  So he wants to be a stork, or a fish, or a staff, or the plant carrying shenbaga flowers, or an useless plant, or a hill top, or a river, or a footstep or  anything in Thiruvengadam in this set of hymns.   Let us conclude this weblog by mentioning the following hymn and continue with Perumal Thirumozhi in our next weblog.

Sediyaya valvinaigal theerkum thirumale, nediyaane venkadavaa nin kovilin vaasal, adiyaarum, vaanavarum arambaiyarum kidanthu iyangum, padiyaai kidanthu nin bavala vaai kaanbene ” – Perumal Thirumozhi 4-9  

“Lord Venkateswara, through His kindness, ends all our misery, which is accumulated birth after birth by us.   I wish to be a footstep, having the glimpse of your coral lips at all times, at the portals of your temple, where all devotees pass through” – Kulasekara Azhwaar.

Kulasekara Azhwaar /குலசேகர ஆழ்வார்

For English version, please click here, thanks 

முன்னுரை

இந்த வலைப்பதிவில் ஏழாவது ஆழ்வாரான குலசேகர ஆழ்வாரைப்பற்றி தெரிந்து கொள்வோம்.    மாசி மாதம், புனர்பூச நட்சத்திரம், ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அவதரித்த தினம்.   அன்று சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியையும் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரையும் சிறிது நேரம் தியானித்து, குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களில் சிலவற்றைப் பாடி, அதன் மூலம்,  அவர்களுக்குப் பல்லாண்டு பாடி அவர்களின் அனுகிரகத்தைப் பெறுவோமாக.  

இதற்கு முன்னால் முதல் ஆழ்வார்களான, பொய்கை, பூதம் மற்றும் பேய் ஆழ்வார்களை பற்றியும், நான்காவது ஆழ்வாரான திருமழிசைப்பிரானைப் பற்றியும், பின்னர் ஐந்தாவது ஆழ்வாரான நம்மாழ்வாரைப்பற்றியும் அவருடன், மதுரகவி ஆழ்வாரையும் சிறிது தெரிந்து கொண்டோம்.   அதேபோல் ஆறாவதாக பெரியாழ்வாரைப்பற்றி பார்த்தவுடன், ஆண்டாளின் பெருமைகளையும் பேசினோம். 

இவர்களைத்தவிர பின்னால் சொல்ல வேண்டிய மூன்று ஆழ்வார்கள் தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆவார்கள். 

அவதாரம்

குலசேகர ஆழ்வார் அவதரித்த இடம், தற்போது கேரளத்தில் உள்ள கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம்.   இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சமாக அவதரித்தவர்.    பிறந்த காலம் – கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 – 780). 

இதற்குமுன் நாம் ஆழ்வார்களின் காலகணக்குகளை விவரிக்கவில்லை.   அதில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.  பொதுவாக எல்லோரும் ஒத்துக்கொள்ளும் விஷயம், ஆழ்வார்கள் 6 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள் என்று. அதேபோல் ஆழ்வார்களை வரிசைப்படுத்தும் வகையிலும் நாம் சில வேறுபாடுகளைக் காண்கிறோம். இராமானுசநூற்றுஅந்தாதியை இயற்றிய திருவரங்கத்து அமுதனார் ஒரு வகையிலும், குருபரம்பரையில், பின்புஅழகியராம் பெருமாள் ஜீயர் மற்றொரு வகையிலும், வேதாந்த தேசிகர், என்ற ஆச்சாரியார், தன் ப்ரபந்தசாரத்தில் மூன்றாவது முறையிலும்,  மணவாளமாமுனிகள், தன்னுடைய உபதேசரத்தினமாலையில் நான்காவது வரிசையிலும் சொல்லி இருக்கிறார்கள். இதனால் அந்தந்த ஆழ்வார்களின் கால குறியீடுகளும் மாறுபட வாய்ப்பு உள்ளன. முக்கியமாக இந்த எல்லோருமே, எல்லா ஆழ்வார்களையும் சொல்லிஉள்ளார்கள். ஆகவே, பொதுவான 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு காலமே, ஆழ்வார்கள் காலம் என்று கருத்தில் கொண்டு தொடரலாம். 

ஆழ்வார்கள் என்றவுடன், நம் நினைவிற்கு வரவேண்டிய வார்த்தை, பக்தி என்பதாகும், ஏன் என்றால், பரமாத்மாவிடம், பக்தியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் ஆவார்கள்.  அவர்கள், பரமாத்மாவிடம் பேரன்பும், பக்தியும், மரியாதையும் கொண்டு இருந்தார்கள்.  அடுத்த சில வரிகளில், இந்த  வலைப்பதிவில், குலசேகர ஆழ்வாரின் பக்தியைப் பற்றி சொல்வோம்.   

ராமபக்தி

குலசேகராழ்வார் அவதரித்த நட்சத்திரம் மாசி மாதம், புனர்பூசம் ஆகும். சக்ரவர்த்தித்திருமகனான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த நட்சத்திரமும் புனர்பூசமும் ஆகும்.    

முதல் ஆழ்வார்களான பொய்கை, பூதம், பேய் என்பவர்கள், பெருமாளின், பரத்துவத்தை (பரவாஸுதேவன்) மிகவும் லயித்து அதிலேயே அதிகம் பாடி உள்ளார்கள். திருமழிசை ஆழ்வார், அந்தர்யாமியில் மூழ்கி அதிலேயே அதிகம் நாட்டம் உடையவராய் இருந்தார்.  நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் மூவரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் பக்தி பூண்டு இருந்தார்கள்.  நாம் பின்னால் பார்க்கப் போகின்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார், மற்றும் திருப்பாணாழ்வார் இருவரும், அர்ச்சாவதாரத்தின் பிரதிநிதியான ஸ்ரீரங்கநாதனையே பாடினார்கள்.  திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாவதாரத்தில் திளைத்து அதிகமான திவ்யதேசங்களைப் பாடி உள்ளார்.  இந்த வலைப்பதிவின் காரண கர்த்தாவான, குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்து விளங்கினார். 

இவர் ஒரு சிறந்த ராம பக்தர்.  இராமகதையின் மீது மிகுந்த பற்றுடையவராய், அதை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி கொண்டவராய் இருந்தார். ஒரு நாள் இராமன் தனியாய் பதினான்காயிரம் அரக்கர்களுடன் போரிட்ட சரித்திரத்தைக் கேட்க நேர்ந்தது. உடனே “இராமனுக்கு என்னாகுமோ? துணையாய்ச் செல்ல எவருமில்லையே?” என்று எண்ணி, தனது படைகளுடன் கடற்கரைக்குச் சென்று கடலில் இறங்கி எங்கே அந்த ராட்சதர்கள், எங்கே அந்த அரக்கர்கள், நாம், நம் ராமனின் சார்பில் போரிடுவோம்”, இராம பிரானுக்கு உதவி செய்யக் கிளம்பினார்.   அங்கே ஸ்ரீராமன், சீதா, லட்சுமண, ஆஞ்சனேயர் சகிதமாக, மன்னனுக்குக் காட்சி அளித்தார் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீ ராமனுக்கு நம் சம்பிரதாயத்தில் “பெருமாள்” என்று பெயர். ஸ்ரீரங்கத்தில் உத்ஸவருக்கு  நம்பெருமாள் என்றும், அவர் ஸ்ரீ ராமனின் பிரதிநிதி என்றும் சொல்வது வழக்கம். ஸ்ரீ ராமனிடம் அபரிமிதமான அன்பு கொண்டவரான, குலசேகராழ்வாரை, ஆழ்வார் என்று அழைப்பதைவிட,  குலசேகர பெருமாள் என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது ஆகும்.  

அவர் எழுதிய திவ்யப்ரபந்தத்திற்கு “பெருமாள் திருமொழி” என்று பெயர் இருப்பதும் மிகப்பொருத்தம்தானே.  எல்லா திவ்யபிரபந்த பாசுரங்களும் பெருமாளை பற்றியது தான். ஆகவே இந்த பெருமாள் திருமொழி என்பது பெருமாளை பற்றியது என்பது மட்டுமல்ல.  இது நாச்சியார் திரு மொழி, பெரிய ஆழ்வார் திருமொழி போல, குலசேகர பெருமாள் எழுதிய திருமொழி .   

பாகவத பக்தி

கர்வம் கொள்ள,  நிறைய வாய்ப்பும் அனுமதியுமுள்ள அரச குலத்தில் பிறந்தும் எம்பெருமானிடத்தும் அவன் அடியார்களிடமும் அளவிலாப் பணிவு காட்டியதே குலசேகரப் பெருமாளின் ஈடற்ற பெருமை.   

குலசேகர ஆழ்வார் சிறந்த ராம பக்தர் மட்டுமில்லாமல், சிறந்த அரசராகவும் தன்னுடைய ராஜ்ஜியத்தை தன்  முன்னோர்களைக் காட்டிலும் அதிகமாக விரிவு படுத்தியும் வந்தார். அதேபோல் விஷ்ணுபக்தர்களிடமும்  மரியாதையுடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருந்து அவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வந்தார்.  

மன்னனின் இந்த குணங்களை பார்த்த அமைச்சர்கள் சிலர், அரச நிர்வாகத்தை மனதில் கொண்டு, விஷ்ணு பக்தர்கள் மேல் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர்.  அதன்படி காணாமல் போன விலையுயர்ந்த மாலையை விஷ்ணு பக்தர் எடுத்துவிட்டார்கள் என்று அரசனிடம் உரைத்தார்கள்.

விஷ்ணு பக்தர்கள் மேல் மிகவும் நம்பிக்கை கொண்ட ஆழ்வார், கொடிய விடமுள்ள பாம்பு ஒன்றை ஒரு குடத்திலிடச்சொல்லினார். பின், “விஷ்ணு பக்தர்கள் அந்த மாலையை எடுத்திருந்தால், நானும் அப்பக்தர்களில் ஒருவன், ஆதலால் இக்குடத்திலுள்ள பாம்புத் தன்னைத் தீண்டட்டும்” என்று கூறிக் குடத்தினுள் தன் கையை விட்டார். ஆனால், அப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை.  அமைச்சர்கள்  தம் தவற்றிற்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டனர்.

இவர் தம் பெருமாள் திருமொழியில் முதல் பத்து பாடல்களில், பெரிய பெருமாளை பாடியவுடன்,  தேட்டறும் திறல் தேன் என்ற இரண்டாவது பத்து  பாடல்களில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் போற்றிப் பாடுகிறார்.   

குலசேகர ஆழ்வாரிடம் இருந்த பகவத் பக்தியுடன் கூடிய பாகவத பக்தியை தான் நாம் இவைகளில் இருந்து அறிய வேண்டிவை.   பாகவத பக்தி நம் சம்பிரதாயத்தின் ஒரு முக்கிய பகுதி அல்லது ஆணிவேர். 

திருவரங்க பக்தி

ஒவ்வொரு ஆழ்வார், மற்றும் ஆச்சார்யார்களுக்கும், நம் சம்பிரதாயத்தில், சில ஸ்லோகங்கள் இருக்கும்.   அவை அவர்களின் பெருமைகளையும், அவர்கள் எழுதிய பாசுரங்களை பற்றியும் சொல்லும்.   அவைகளை தனியன்கள் என்று சொல்கிறோம். அந்தந்த ஆழ்வார், ஆச்சாரியார் மேல் இருக்கும் நம்முடைய மரியாதையையும் பக்தியையும் தெரிவிக்கும் பொருட்டு, நாம், தனியங்களை, பாசுரங்கள் வாசிப்பதற்கு முன்பு சொல்வது வழக்கம்.  குலசேகர ஆழ்வாரைப் பற்றிய தனியனில், குலசேகரப் பெருமாள் அரசராக இருக்கும் தலைநகரில் எப்போதும் ஸ்ரீரங்க யாத்திரை  பற்றிய பேச்சே இருக்கும், அவருடைய திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகிறேன் என்று ஆழ்வாரின் ஸ்ரீரங்க பக்தியை குறிப்பிட்டு உள்ளார்கள்.  (குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே | தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்று குலசேகரன் சுற்று  என  இன்றும் வழங்கப்படுகிறது.   

குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோத்சவ   மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.

தன் மகளான சேரகுலவல்லி என்பவரை திரு அரங்கனுக்கு   மணம் முடித்து வைத்தவர் ஆவார்.   இன்றும் சேர குல வல்லி நாச்சியார் சேர்த்தி உத்சவம் என்று ஒவ்வொரு வருடமும், ஸ்ரீ ராம நவமி அன்று ஸ்ரீரங்கத்தில் நடை பெறுகிறது. 

திவ்யதேசங்கள்

மேலே குறிப்பிட்டதுபோல், ஆழ்வார் பாடிய திவ்யபிரபந்தம்   “பெருமாள் திருமொழி“.   அவற்றால் பாடப்பட்ட திவ்யதேசங்கள் 

  • திருஅரங்கம் (29)
  • திருப்பதி (11)
  • திருவித்துவக்கோடு (10)
  • திருக்கண்ணபுரம் (11)
  • தில்லை நகர் திருச்சித்திரக்கூடம் (11) – சிதம்பரம் கோவிந்தராஜர் 
  • அயோத்தி 

மீதியுள்ள பாசுரங்கள், விபவ அவதாரதங்களில் உள்ள கண்ணனையும், இராமனையும் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் பற்றிய பாடல்கள் ஆகும்.  பெருமாள் திருமொழி பற்றி அடுத்த வலைப்பதிவினில் தொடர்வோம். இருந்தாலும் உதாரணத்திற்கு ஒரே ஒரு பாடலை பற்றி சொல்லி இந்த பதிவினை முடிவுக்கு கொண்டு வருவோம். 

குலசேகர ஆழ்வார் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரவேண்டியது, எல்லா விஷ்ணு கோவில்களிலும்,  பெருமாள் முன்னால் உள்ள படிக்கட்டிற்கு  “குலசேகரன் படி ” என்று  பெயர்.   அது ஆழ்வாரின் அபரிமிதமான சிந்தனைகளால் அவர் திருவேங்கட மலையில் இருக்கும் எம்பெருமானுக்கு பாடிய “படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே” என்ற திவ்யபிரபந்த பாசுர தொகுப்பினாலேயே அமைந்தது.    

முக்தி

பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் என்ற திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

==================================

Preface

In this weblog, let us start discussing about Sri Kula Sekara Azhwar, the seventh Azhwar.  Azhwaar’s birthday is Tamil month of Masi and Tamil Star of Punarpoosam.   On that day, let us take some time to offer our respects and prayers to both Chakravarthy Thirumagan (Sri Ramachandra Murthy) and Sri Kualsekara Azhwar by reciting some hymns from his Pasurams, namely Perumal Thirumozhi and get their  blessings.  

Till now, we have seen the muthal azhwars, namely, Poigai, Bootham and Pei.  Later we have seen about Thirumazhisai Azhwar and the then about Namazhwar, who is considered as the Head of all Azhwars. Along with him, we have also seen about Sri Madurakavi Azhwar.  In the same way, we have seen the sixth Azhwar, Periyazhwar along with Aandal.

Apart from these azhwars, we need to see Thondaradipodi Azhwar, Thirupaanazhwar and Thirumangai Azhwar.

Birth

Kulasekara azhwar was born in Karuvur, Thiruvanchikalam, in Kerala.   It is also called as Kolli nagar.    He was born as a feature of the Kausthubam,  a gem  sitting on the chest of Sri Vishnu.   The timeline is 8th Century (750 – 780).

So for, we did not discuss any timeline for any of the azhwaars.   There are different opinions on the timeline and the general acceptance by all is that all azhwaars are in between 6th to 9th centuries.   In the same way, when we sequence the list of azhwars, there are at least four different ways seen in the documentation.   Thiruvarangathu Amuthanar, who wrote Ramanusa Nootru Andhaathi listed them in one order; Binbu Azhagiyaram  Perumal Jeeyar, the author of Guruparambarai listed them in another order; Vendantha Desikar in his Prabandha Saram listed them in a different sequence and finally Manavala Maa Munigal has given them in a different order, in his Upadesa Rathina Maalai.   Based on these sequence, the timeline for each Azhwaar could also differ.  But the point to note is that all these authors have included all azhwaars and we can take the generally accepted timeline of 6th to 9th Century as the timeline for Azhwaars.

Devotion

The moment we think about any Azhwar,  “devotion” or “Bakthi” is the word that should come to our mind, as they had always shown highest regard, devotion, love and affection towards Paramathma.   In this regard, let us discuss the devotion shown by Sri Kula Sekara Azhwar in the following paragraphs.

Devotion to Sri Rama

Kula Sekara Azhwaar was born in the Tamil Month of Masi and in the Tamil Star of Punarpoosam, which is also the birth star of Sri Ramachandra Moorthy, the Chakravarthy Thirumagan.

The first three Azhwars, namely, Poigai, Bootham and Pei, were involved so much with Para Vasudevan and their compositions were more on the Para state of Paramathma. Thirumazhisai Azhwar was involved so much with the Antharyami state of Paramathma. Namazhwar, Periyazhwar and Anadal were so much attracted towards Sri Krishna and their compositions were towards Sri Krishna.   Thondaradipodi Azhwar and Thirupaanazhwar, whom we would be discussing about in our future weblogs, were so much attracted towards Sri Ranganathan, they composed on Sriranganathan.    Similarly the last Azhwar, Thirumangai Azhwar, was all for the Archai state of Paramathma and he has composed more hymns on Archai state.     The main purpose of this weblog, Sri Kulasekara Azhwar, lived and breathed Sri Rama.

Kulasekara Azhwar was a great devotee of Sri Rama.  He was interested in listening to the life history of Rama and Azhwar enjoyed hearing the life history of Sri Rama.   One day Azhwar was listening to the incident where Sri Rama went alone to the battle to fight with 14000 Asuras or Rakshasas. Azhwar was so worried and he immediately ordered his army to get ready to fight on behalf of Sri Rama.  He took his army to the seashore, where Sri Rama, Seetha, Lakshmana and Anjaneya appeared on the sky and showered Their blessings to Azhwar.

In Vaishnavism, when someone refers “Perumal”, then it would generally be Sri Rama. The Utsavar (the metallic deity) of Sri Rangam temple is called Nam Perumal, who is often referred to as Sri Rama.   Kula Sekara Azhwar, who has shown so much of love, devotion and affection towards Sri Rama, can be called as Kuala Sekara Perumal.

The composition rendered by Sri Kula Sekara Azhwar, in Divya Prabhandham, is called Perumal Thirumozhi.   We know that all Divya Prabhandhams talk about Paramathma and Perumal Thirumozhi also talks about perumal, but the name Perumal Thirumozhi, was given mainly because, it was written by Kulasekara Perumal.  This is like Naachiyaar Thirumozhi, written by Aandal and Periyazhwar Thirumozhi,, written by Periyazhwar.  So the title Perumal is very appropriate for Sri Kulasekara Azhwar.

Devotion towards Devotees

The biggest plus point or the single most significant aspect for the glory of Sri Kula Sekara Azhwar, is that he was very simple and polite, even though he had many opportunities and reasons to be proud, as he was a king and Kings were naturally gifted to be proud, at least within their kingdom.  Kualasekara Azhwar was a good king and he had expanded his kingdom, beyond what his forefathers had.

As we said earlier, Kula Sekara Azhwar was not only a staunch devotee of Sri Rama, but also an able king.  He had expanded his kingdom beyond what his forefathers had given him.    In the same way, he was also showing lot of respects and devotion to Sri vaishnavites.  He had faith in them and he was helping and supporting them in many ways.

The administrators in the state had a concern that the king was spending too much time and money with Sri vaishnavites and according to them they felt that that may not be good in the long run for the kingdom.  So they decided to plot an incident by which, the king might lose faith with the Sri Vaishnavites and spend more time with the kingdom.  So they had hidden one of the expensive ornaments of Sri Rama and put the blame on the Sri vaishnavites, by complaining to the king that Sri vaishnavites had stolen the ornament.

Since Azhwar had lot of faith with the Sri Vaishnavites, he asked the administrators to get a venomous snake to be put in a pot.    He told all that he was also a Sri Vaishnavite and if the Vaishnavites had taken the ornament, let the snake bite him.  Then he closed his eyes and put his hand inside the pot, but the snake did not bite him.   Then the administrators realised it was their mistake and they asked for apology and revealed the truth to the king.

Azhwar, in his composition of Perumal Thirumozhi, the first ten hymns were on Sri Ranga Nathan and immediately he took the devotion to sri vaishnavites as the subject for the second set of ten hymns.     These start with ” Thetarum thiral theyninai“.

So we should learn that the devotion to Sri Vaishnavites, along with devotion to Sri Paramathma is important, from Azhwar.    Similarly in our Sri Vaishnava tradition, the devotion to Sri Vaishnavites is an important aspect and is given even a higher level of priority over even devotion to Paramathma.

Devotion towards Srirangam

In our tradition, Sri Vaishnavism, there are set of hymns on the Azhwars and Acharyaars, the gurus.  These hymns talk about the glories of them, as well as their composition.    These are called Thaniyans and the respective thaniyan(s) is/are read before reciting their composition, as a mark of paying our respect and showing our devotion towards them. The thaniyan about Sri Kula Sekara Azhwar says that “Every Day and every moment, there would be a talk about visiting the holy place of Srirangam, in the capital of the kingdom, which is ruled by Sri Kulasekara Azhwar, to whom, I pay respect by placing my head at his holy feet”, indicating the devotion, Azhwar has over the holy place of Sri Rangam.   (Kushyathey, yasya nagarey ranga yaatra thine, thine; thamagam sirasaa vanthey raajaanam kulasekaram)

Azhwar had built a hall called Senai Vendran Hall in the third outer passage around the shrine of Sri Ranganathar,  inside Sri Rangam temple.  He has also renovated the same outer passage and hence the third outer passage around the Shrine of Sri Ranganathar, is called Kulasekaran Sutru, even today.

Similarly Kulasekara Azhwar had constructed the hall called Pavithrosthava Mandapam inside Sri Rangam temple.   He had also renovated the same outer passage where this hall is situated.

Cherakulavalli was the daughter of Sri Kulasekara Azhwar and she was married to Sri Ranga Nathar by Kulasekara Azhwar.  There is a temple function called Cherakulavalli Nachiyaar Serthi Utsavam on the holy birthday of Sri Rama (Sri Rama Navami), in Srirangam every year.

Divya Desagangal

As mentioned earlier, the Divyaprabhadham composed Sri Kulasekara Azhwar is Perumal Thirumozhi.   Azhwar composed the hymns on the deities of the following divya desams.

  • Thiruvarangam (29)
  • Thirupathi (11)
  • Thiruvithuvakod (it is nowadays called as Thirumitacode) – (10)
  • Thirukannapuram – (11)
  • Thilainagar Thiruchithirakoodam  (Chidambaram) – (11)
  • Ayodya

The remaining hymns refer to Sri Krishna, Sri Rama and the characters around them of Vibhava Avatharm.  Let us see in more detail about Perumal Thirumozhi in the next weblog.   Before we complete this weblog, let us look into only one hymn.

In all the Vishnu Temples, the stairs in front of the primary deity is always called  as Kulasekaran Steps.   This is what comes to the mind, whenever Kulasekara Azhwar’s name is mentioned.     This is due to the hymns that Sri Kulasekara Azhwar composed on Sri Venkateswaraswami in Thirumala, and the progressive explanation or drill down details that he has given on his thought process to us in this section of the Divya Prabandham, where he has mentioned “Padiyaai kidanthu un pavala vaai combene” meaning “let myself be a step in front you, so that I can enjoy your holy coral coloured lips.  Let us see this in more detail in our next weblog.

Mukthi

After visiting, praying and offering his services to various temples, Azhwar finally reached Mannarkoil in Tirunelveli District, Southern Tamilnnadu, which is near Ambasamuthram. In this temple, the deity is in three states, namely, Standing, Sitting and Inclining positions.   Azhwar had many rounds of wonderful dharsan and he was happy.  He also reached the lotus feet of Paramathma from here.   There is a separate shrine in this temple for Azhwar.

முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam

For English version, please click here.  Thanks.

குலசேகர ஆழ்வார்

நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம்.  அவர் எழுதிய நூல்களை பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி என்பதாகும்.  முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு.

முகுந்த மாலை

மணவாள மாமுனிகள் என்ற ஆசார்யார், ஆழ்வார்களை பற்றி தான் தொகுத்து அளிக்கும் போது, தன்னுடைய உரையில், முகுந்த மாலை, இது பெருமாள் திருமொழி எழுதிய குலசேகர ஆழ்வார் எழுதியது, என்று குறிப்பிடவில்லை. அதே போல், ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலான “திவ்ய சூரி சரிதம்” முதலியவற்றில் முகுந்தமாலை பற்றி குறிப்பு எதுவும் இல்லை. ஆழ்வார்கள் இந்த மண்ணில் அவதரித்தற்கு முக்கிய காரணம், வடமொழி வேதத்தைத் தமிழில் அருளிச் செய்வதாகும். மற்ற எந்த ஆழ்வார்களும் தமிழைத் தவிர வேறு எந்த ஒரு மொழியிலும் எதையும் எழுதியதாக தெரியவில்லை. அதோடு ஐந்து அல்லது ஆறு குலசேகர மன்னர்களை பற்றி சரித்திரம் உள்ளது. குலசேகர என்றால் குலத்தில் சிறந்தவராக சிகரம் போல் விளங்கினார் என்று பொருள், அது மற்ற குலசேகரர்களுக்கும் பொருந்தும். அதனால் முகுந்த மாலையை வேறு ஒரு குலசேகர மன்னர்  எழுதியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

பெருமாள் திருமொழி

நாதமுனிகள் நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், பெருமாள் திருமொழியை முதல் ஆயிரத்தில் தொகுத்து கொடுத்துள்ளார். முதல் ஆயிரத்தில் உள்ள மற்ற பிரபந்தங்கள் :

மற்ற ஆயிரங்களில் உள்ள பிரபந்தங்களின்  தொகுப்புகள் :

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை, மற்றொரு ஆயிரத்திலும், ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியை இன்னொரு ஆயிரத்தில்  தொகுத்து உள்ளார். பின்னாளில் திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமானுச நூற்றுஅந்தாதியும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

தனியன்கள்

தனியன் என்பது ஆழ்வார்கள்-ஆசார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம். பெருமாள் திருமொழிக்கு இரண்டு தனியன்கள் உள்ளன. முதல் தனியனின் பெருமையே இது  சுவாமி இராமானுஜர்,  அருளிச் செய்த தனியன் என்பதாகும்.

இன்னமுத மூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள்
பொன்னஞ்சிலை சேர் சேரலர் கோன்
எங்கள் குலசேகரன் என்றே கூறு

இதன் பொருள், அழகான கிளியே இங்கே வா, உனக்கு சுவையான அமுது படைக்கிறேன், வில்போல் அழகிய புருவங்கள் கொண்டவரும், எல்லா மாதர்களாலும் வணங்கப்படுகின்றவராகிய,   எங்கள் சேர குல அரசரான, குலசேகரா என்று சொல்லிக்கொண்டே இரு. ஏனென்றால், அவர் திருஅரங்கத்தைப் பாடி ‘பெருமாள்’ என்று பெயர் பெற்றவர் ஆவார்.

மற்றொன்று,  மணக்கால் நம்பி என்ற ஆசார்யன் அருளிச் செய்த தனியன்

ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கை இட்டவன் -மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குல சேகரன் முடி வேந்தர் சிகா மணியே

இதன் பொருள், நவரத்ன மாலை ஒன்று கேட்டு போக, அதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருடியதாக, கள்ள மந்திரிகள் சொல்ல, “பாகவதர்களாகிய இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்ய மாட்டார்கள்” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு,  பாம்புக்கு குடத்தில் கைவிட்டு அருளியவரும், எதிரிகளை தனது  வில்வலிமையினால் வெல்பவரும், குலசேகர ஆழ்வார் ஆவார்.

பத்து பதிகங்கள்

பெருமாள் திருமொழியில் பத்து பதிகங்கள் உள்ளன. ஒன்பது பாசுரங்கள் கொண்ட ஒரு பதிகமும், பத்து பாசுரங்கள் கொண்ட மூன்று பதிகங்களும், பதினொன்று பாசுரங்கள் கொண்ட ஆறு பதிகங்களும் உள்ளடக்கிய பெருமாள் திருமொழியில், நூற்று ஐந்து பாசுரங்கள் உள்ளன.

அவற்றில், குலசேகர ஆழ்வார் முதல் மூன்று பதிகங்கள், திருஅரங்கனுக்கும், நான்காவது பதிகம், திருவேங்கடமுடையானுக்கும்,  ஐந்தாவது பதிகம், மலையாள திவ்யதேசமான, திருவித்துவக்கோடு பெருமானுக்கும்,  எட்டாவது பதிகம், திருக்கண்ணபுரம் பெருமானுக்கும், பத்தாவது பதிகம், தில்லைநகர் திருச்சித்திரகூடம் என்னும் சிதம்பரம் கோவிந்தராஜ பெருமானுக்கும் பாடி அர்ச்சாவதார திவ்ய தேசங்களை கொண்டாடினார்.

கண்ணபிரானிடம் ஊடல் கொண்ட இடைபெண்களின் தவிப்புகளை தனது ஆறாவது பதிகத்தில் சொன்ன, குலசேகர ஆழ்வார், ஏழாவது பதிகத்தில், கண்ணபிரானைப் பெற்று எடுத்த, தெய்வப்பெண்மணி, தேவகியின் புலம்பல்களைக் கூறுகிறார். அதேபோல், இராமபிரானின் தந்தையாகிய தசரத மகாசக்ரவர்த்தி, இராமபிரானைப் பிரிய நேரிடும் போது புலம்பிய சொற்களை தனது  ஒன்பதாவது பதிகத்தில் சொல்லி  விபவாவதாரத்தின் பெருமைகளை முற்றிலும் ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லி உள்ளார்.

இறுதி பதிகமான பத்தாவது பதிகத்தில், அர்ச்சையையும் விபவத்தையும் கலந்து, நமக்கு இவன் அவனே என்று புரியவைக்க,  தில்லைநகர் திருசித்திரக்கூடம், ராமாயணம்  என்று இரண்டையும் சேர்த்து தனது இறுதி பத்து பாடல்களில் தொகுத்து அருளினார்.  ஆழ்வாருக்கு, பள்ளிகொண்டுள்ள கோவிந்தராஜன், இராமராகவே, காட்சி அளித்து இருக்கலாம்.

முதல் பதிகம் – திருவரங்கம்

திருஅரங்கனைப் பற்றி பாடும் முதல் மூன்று பதிகங்களை பற்றி சிறிது காணலாம்.

முதல் பதிகத்தில், திருவரங்கம்  பெரியகோயிலில்  திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டுள்ள அழகிய மணவாளனை  கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார். அரவணையின் மீது பள்ளிகொண்டு அருளுகின்ற, பெரியபெருமாளை கண்டவுடன்,  “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” (நம்மாழ்வார்) என்ற நிலை ஏற்படும் தனக்கு, பெருமாள் சன்னதிக்கு எதிரே இருக்கின்ற, இரண்டு திருமணத்தூண்களை பற்றிக்கொண்டு பெருமாளை, ஸ்தோத்ரம் பண்ணும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ, என்கிறார். பெரியபெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூட அடியேனும் ஆராதிக்கும்படி சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ, என்கிறார். நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது என்பதுபோல், பகவத்குணங்களைத் தனியே அனுபவிக்காமல், அக்குணங்களை பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் வாயாரப்பாடி அதனால் ஆனந்தக்கண்ணீர் பெருகி,  தலைகால் தெரியாமல் துள்ளிக்கூத்தாடி, நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ, என்கிறார்.

இரண்டாம் பதிகம் – திருவரங்கம்

பகவத் விஷயத்தில் மையன்பு பூண்டவராயிருக்கும் ஆழ்வார், பாகவதர்களிடத்தில் பக்தி காண்பிக்கும் விஷயத்தில் தான் மிகவும் லயித்து பித்தேறிக் கிடப்பதை,  இரண்டாம் பதிகத்தில், விளக்குகிறார்.

‘அரங்கனாகிய நம்பெருமாளைக் காண்பதே கண்படைத்ததற்கான  பலன்’ என்பது முதல்படி என்றும்,  ‘பாகவதர்களுடைய கோஷ்டியை சேவிக்காமல் இருந்தால் கண்களுக்கு பலன் கிடைக்காமல் போகும் என்ற அடுத்த படியை நமக்கு விரிவாக சொல்கிறார். அதே போல், பகவானின் பல அவதாரங்களை பாடி, அதனால் கண்களில் நீர் பெருக, அந்த நீரினால் அரங்கனின் சந்நிதியை சேறாக்குகின்ற பக்தர்களின் பாதத்துளியை, தனது தலைக்கு அலங்காரம் ஆக்கிக் கொள்வேன் என்கிறார். அரங்கனின் நாமங்களை உரைக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் பாதத்துளிகள் கிடைக்கப்பெற்றால், கங்கையில் நீராடவேண்டிய அவசியம் இல்லை என்றும்  பாகவத பக்தியின் பெருமையை சொல்கிறார்.

எம்பெருமானிடத்து அன்பு இல்லாத மக்களுக்கும்,  அவ்வன்பைப் பெறுமாறு பல இடங்களுக்குச் சென்று, அங்கேயெல்லாம் ஸ்ரீவைஷ்ணவத்தை   உபதேசித்துவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே,   தான் எப்பிறப்பிலும் அன்பு பாராட்டுவேன் என்கிறார். “எப்பிறப்பிலும்” என்று சொல்வதால், ஆழ்வார், பாகவதர்களுக்கு அன்பு பாராட்டுவதற்க்காக  இன்னும் பல பிறவிகளை எடுப்பதற்கு தனக்கு  சம்மதம் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.    பொதுவாக எல்லா ஆழ்வார்களும், தாங்கள் உடனே மோட்ஷம் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை பரமாத்மாவின் முன் வைத்து சரணாகதி செய்வார்கள்.  இங்கே ஆழ்வார் நமக்காக பல பிறவிகள் எடுப்பேன் என்பது ஆழ்வாரின் அபரிமிதமான கருணையை காட்டுகிறது.

மூன்றாம் பதிகம் – திருவரங்கம்

முதல் பதிகத்தில், எம்பெருமானை எப்போது காண்போமோ (பகவத் பக்தி) என்று சொன்ன ஆழ்வார், இரண்டாம் பதிகத்தில் எம்பெருமானை நேசிக்கும் பக்தர்களை (பாகவத பக்தி) பற்றி சொன்ன ஆழ்வார், மூன்றாம் பதிகத்தில் இவ்வுலக இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தும், மற்ற மனிதர்களைப் பற்றி பாடுகிறார்.

இப்படிப்பட்ட மனிதர்களுடன் தான் சேர்வதில்லை, என்று கூறும் ஆழ்வார், ஸ்ரீ வைஷ்ணவர்கள், இவர்களுடன் சேர்த்து பேசப்படுவதைக் கூட, நினைத்து பார்க்க   பயப்படுவார்கள் என்றும் கூறுகிறார். குலசேகரஆழ்வார், பகவானுக்குப் பிடிக்காதவற்றை செய்யும் சாமானிய மக்களின் சகவாசத்தை, விலக்கிவிட சொல்கிறார்.

வைஷ்ணவ  சம்பிரதாயங்களின் ஆணிவேரான சரணாகதி, “ஆனுகூல்ய சங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜனம்” என்பதை உள்ளடக்கியதாகும். பரமாத்மாவிற்கு விருப்பமானவற்றை செய்வேன் என்பது முன் பகுதி, விருப்பம் இல்லாதவற்றை செய்ய மாட்டேன் என்பது பின்  பகுதி. இந்த பின் பகுதியின் விரிவாக்கமே, மூன்றாம் பதிகம் ஆகும். அப்படி சொல்லும் போது, முதல் பகுதியை, கடைபிடிப்பதற்கு கால தாமதம் ஆனாலும், பின் பகுதியை உடனே அனுசரிக்கவேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறார். நாமும் அது மாதிரி செய்வது ஆழ்வாருக்கும் பரமாத்மாவிற்கும் பிடித்ததாக அமையும்.

“வன்பெரு வானகம் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய, மண்ணுலகில் மனிசர் உய்ய, துன்பமிகு துயர் அகல, அயர்வொன்றில்லாச் சுகம்வளர, அகமகிழுந் தொண்டர் வாழ,  அன்பொடு தென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்,  இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே”   

என்று ஆழ்வாரின் ஒரு பாசுரத்தைச் சொல்லி, இந்த பதிவினை நிறைவு செய்து, மற்ற பதிகங்களை அடுத்த வலைப்பதிவில் தொடர்வோம்.

————————————————————–

Kulasekara Azhwaar

We have seen briefly about Kulasekara Azhwaar and his devotion in the previous weblog. Let us look into his compositions in this weblog.  Kulasekara Azhwaar has written Perumal Thirumozhi, a prabhantham in Tamil.   It is said that Azhwaar has written a composition called Mukuntha Maalai in Sanskrit.

Mukuntha Maalai

Manavaala Maa Munigal, an acharyaa, who has compiled the high level summary of all azhwaars and their compositions, did not mention that Mukuntha Maalai was written by Sri Kulasekara Azhwaar, who wrote Perumaal Thirumozhi. In the same way, “Divya Soori Saritham”, which describes about Azhwaars and their life history, did not mention about Mukuntha Maalai. The main purpose for Azhwaars to descend into this world is more towards translating the Vedas, which were available in Sanskrit to Tamil. It is also known that no other Azhwaar has written anything in other languages other than Tamil. Also Indian history talks about five or six Kulasekara Kings. The word Kulasekara means best in the tribe. This could be applicable to all other Kulasekaras, who were mentioned in Indian history. So there is a good possibility that Mukuntha maalai could have been written by any one of the Kulasekaras.

Perumal Thirumozhi

Nathamunigal has placed Perumal Thirmozhi in the first thousand, along with

Similarly, in another group containing about one thousand pasurams, Sri Natha Munigal has compiled the following Prabandhams  :

Similarly Nathamunigal had compiled Namazhwaar’s Thiruvaimozhi in one thousand and Periya Thirumozhi by Thirumangaiazhwaar in another thousand. Iraamanusa Nootranthaathi by Sri Thiruvarangathu Amuthanaar is also included into Naalayira divya prabandham in later years.

Thaniyangal

Thaniyan is a hymn, where the disciples praise their teacher or their guru. There are two Thaniyans for Perumal Thirumozhi. The first one has the distinction of being written by Swami Ramanujar.

“innamutham ootuken ingey vaa paingkiliye, thennarangam paada valla seer perumal, ponnanchilai ser seralar kon, engal kula sekaran endre kooru” meaning

“Come here O pretty parrot, I shall feed you with sweet morsel. Keep saying the name Kulasekhara, ‘our Chera king’ whose bow-shaped eyebrows are adored by women. He sang in praise of Arangam and earned the name ‘Perumal”.

The  next thaniyan was written by an Acharyar by name Manakkal Nambi.

“aaram kedap paran anbar kollar endru avargalukke, vaaram kodu kudap paambil kai ittavan, matralarai veeram kedutha sengol kolli kavalan villavar kon, seran kulasekaran mudivendhar sigaamaniye”

An expensive necklace was stolen from Kulasekara Azhwaar’s palace and the ministers tried to blame the Srivaishnavas, who were with Azhwaar. Azhwaar with his staunch belief that the Srivaishnavas would not have done such an act, put his hand inside a vessel containing snakes. The ministers admitted their mistakes. Sri Kulasekara Azhwaar would win all his enemies using his strengths of bow.

Ten Subdivisions

In Perumal Thirumozhi there are ten sub divisions, called Ten Pathigams. Perumal Thirumozhi contains one pathigam with nine hymns, three with ten hymns and six with eleven hymns, having a total of one hundred and five hymns.

In Perumal Thirumozhi, Kulasekara Azhwaar, has discussed about Thiruarangan in the first three pathigams, Thiruvenkatamudaiyaan in the fourth pathigam, the chief deity of Thiruvithuvakode, one of the divya desams in Kerala (Malayala Divya Desam) in the fifth pathigam, the chief deity of Thiru Kanna Puram in the eighth pathigam and Chidambaram Govindarajan (Thillainagar Thiru Chithra Koodam) in the tenth sub division. These are the  Archaavathaara Divya Desams and Deities on whom Kulasekara Azhwaar has composed the hymns on.

In the sixth sub division, Azhwaar highlights the pains undergone by the girls of Ayarpadi and Brindavan, who were in tiff with Sri Krishna. In the seventh pathigam, Azhwaar talks about the pains undergone by Devaki, who is the biological mother of Sri Krishna.  In the ninth pathigam, Azhwaar talks about the lamentations and pains expressed by the King Dasaratha, when he had to ask Rama to leave him. So in the sixth, seventh and ninth pathigams, Azhwaar, looked at vibhavaavathaaram in  a totally different perspective.

In the final sub division, that is the tenth pathigam, Azhwaar combines both Vibhavam and Archai together and demonstrates clearly to  us that the Archai that we pray today is same as the Vibhavavathaara Permual. He talks about the entire epic ramayanam in the last ten hymns of Perumal Thirumozhi and in each of these he relates them to Chidambaram Govindarajan. May be, the recling Govindarajan had given dharsan to Azhwaar as Sri Rama and  hence Azhwaar in his hymn says that IVAN AVANE, meaning that this Govindarajar is same as Sri Rama.

First pathigam – Thiruarangam

In this blog, let us start discussing about the first three sub divisions, where Azhwaar talks about Thiruarangan.

In the first pathigam, Azhwaar longed for having a dharsan of Srirangam perumal, who has been lying on Sri Thiruvanthazhvaan (The five headed snake) and wanted to know when he could have such a satisfying dharsan of Perumal.  In one of the hymns, swami Namazhwaar has told about the weakening of his legs, (kaalaazhum), breaking of this heart (nenju azhiyum) and spinning of his eyes (kan suzhalum) on having the dharsan of perumal.  Similarly Kulasekara Azhwaar was looking for the day, when he could have such feeling and hold the two pillars, called Thirumana Thoongal, which are in front of the chief deity at Srirangam (Periyaperumal), due to the extreme happiness of the dharsan. Azhwaar was looking for the day when he could pray along with the devotees of Periyaperumaal at Thiruarangam. It is generally said that people would like to enjoy the good things in good company and not alone. Similarly the devotees want to share the glories of Perumal with other devotees and sing loudly the greatness of perumal. The devotees would also get tears out of happiness and dance vigorously. Azhwaar wished to know the day when he could dance with such devotees.

Second Pathigam – Thiruarangam

While Azhwaar’s devotion towards perumal is very well known, his devotion towards the devotees is much more involved and to certain extent Azhwaar is mad about it. This devotion towards devotees is taken as the subject for the second pathigam.

The first step is about having the dharsan of Namperumal at Srirangam and this would give the real benefit of having the good eyesight. The next step is about having the dharsan of the devotees and Azhwaar says that when we do not have that dharsan of devotees, the benefits of having a good eyesight would be lost. Similarly Azhwaar would wear the muddy dust at the sanctum sanctorum of Periyaperumal created by the dust from the feet of the devotees, mixed with their tears, coming out of sheer happiness when they discuss elaborately, the different incarnations of Paramathma. Likewise, Azhwaar talks about the glories of devotion towards the devotees by saying that there is no need to take a holy dip at the Ganges, if we could get the dust from the feet of srivaishnava devotees who sing the different names of Thiruarangan.

Azhwaar says that he would extend his full support, in each and every of his birth, to those srivaishnavaas who travel to different places to preach srivaishnavam to all those who do not show their love and affection towards Periyaperumal so that they could get the blessings from Periyaperumal. Since Azhwaar had mentioned that he would do it in each and every birth, it indicates that he was prepared to even taking many births in this world to support these srivaishnanvas. Generally all Azhwaars would request Paramathma for immeidate Moksham (Saranagathi, to go abode). They never wanted to continue their life in this world. When Kulasekara Azhwaar says that he would take many lives in this world, it only shows the bounteous love and affection that Azhwaar has towards us.

Third pathigam – Thiruarangam

In all the hymns of the first pathigam, Azhwaar had been asking himself on when he would have the dharsan of Thiru Arangan (Devotion to Paramathma). In all the hymns of the second pathigam, Azhwaar had talked about the Srivaishnavas, who love Emperuman (the chief deity of Thiruarangam) and are staunch devotees of Emperuman. (Devotion to the devotees).  In the third pathigam, Azhwaar talks about the other set of people, who concentrate on the worldly pleasures.

Azhwaar declares that he would not join in the group of such people. He also says that srivaishnavas would be scared to be part of such group and cannot even think of themselves being associated with such group of people. Kulasekara Azhwaar requests all of us to disengage with those oridnary people, who carry out activities which are not liked by Paramathma.

The key principle in Srivaishnavam is Saranagathi or Total Surrender. Saranagathi includes two basic concepts. One is called “Aanukoolya Sankalpam” and the other is called “Prathikoolya varjanam”. The first part is about carrying out activities, which are liked by Paramathma and the second part is about not doing the activities, which are not liked by Paramathma. The third pathigam by Kulasekara Azhwaar is about the second part, which is “Prathikoolya varjanam”. Azhwaar pinpoints that it is very much acceptable, even if it takes more time to follow the first part (Aanukoolya Sankalpam), but he demands that we follow the second part immediately, or as soon as we come to know about it. So we should follow this piece of advice from Kulasekara Azhwaar, which is going to be liked by both Azhwaar and Paramathma.

We will bring an end to this weblog, by highlighting one of the pasurams of Azhwaar from the first three pathigams,  and continue with the rest in the coming weblogs.

van peru vaanagam uyya, amarar uyya, mann uyya, mann ulagil manisar uyya, thunbamigu thuyar akala, ayarvu ondru illaa sugam valara, agam mahizhum thondar vaazha, anbodu then thisai noki palli kollum ani arangan thiru mutrathu adiyaar thangal, inbam migu perum kuzhuvu kandu yaanum isainthu udane endru kolo irukkum naale ”

The Lord reclines in Thiru Arangam facing the direction of South and providing the elevation of spirit to the sky and to the earth, and to those who live in the celestial worlds as well as to those who live in this world, after removing all their pains and grief. He also increases the ultimate pleasure without fatigue and which increases the love and affection in the hearts of the devotees. Azhwaar wants to be part of such group of devotees and he would like to know when he could join those exuberant devotees, who throng in the courtyard of Srirangam.

Aandaal Avatharamum Aranganin Karunaiyum / ஆண்டாள் அவதாரமும் அரங்கனின் கருணையும்

For English, please click here, thanks  

இதுவரை

ஆழ்வார்களில், பொய்கை, பேய், பூதம், திருமழிசை, நம்மாழ்வார், மதுரகவி மற்றும் பெரியாழ்வார் பற்றி சில விவரங்களைப்  பார்த்து உள்ளோம்.  இவர்களைத் தொடர்ந்து, ஆண்டாளின் பெருமைகள் சிலவற்றைப் பார்த்தோம். நம் ஆச்சார்யர்களான, வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுனிகள், ஆண்டாள் பற்றி கூறிய சிலவற்றையும், ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில் கண்ணனை அடைய மேற்கொண்ட வழிகளையும் பார்த்தோம்.    ஆண்டாள், பாவை நோன்பு நோற்று, அதன் மூலம் நமக்கு சொன்ன கருத்துகளையும் திருப்பாவையில் பார்த்தோம்.

திருப்பாவை முதல் ஐந்து பாடல்களில், பர, வியூக, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை  நிலைகளில் உள்ள பரமனை வழிபட்டு, அடுத்த பத்து பாடல்களில், அங்குள்ள பத்து தோழிகளை அழைத்துக்  கொண்டு, பகவானை வழிபடவேண்டிய முறைகளை கூறினார்.  வாசல் காப்பவர்கள், பகவானின் உறவினர்கள், திருமகள் என்று வரிசையாக வணங்கி, இறுதியாக பெருமாளை வழிபட வேண்டும் என்றும், தனியே வழிபடுவதைவிட கூடி இருந்து வழிபட வேண்டும் என்றும், நமக்கு சொல்லிக் கொடுத்து, நாம் அவனிடம் பிரதிபலன் எதிர்பார்க்காத கைங்கர்யத்தையே கேட்க வேண்டும் என்று  சொல்லி முடிக்கும் அழகினை திருப்பாவையில் கண்டோம்.

எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும்.

மற்ற ஆழ்வார்கள், இந்த உலகத்தில் பிறந்த சம்சாரிகளை உறக்கத்தில் இருந்து எழுப்பி, இறைவன் அருளை பெற அறிவுரை சொன்னார்கள்.  ஆனால் ஆண்டாளோ, பரமாத்மாவை எழுப்பி, இந்த சம்சாரிகளை கரை ஏற்றச் சொன்னார் என்று  நம்பிள்ளை என்னும் ஆச்சாரியார் கூறுகிறார். 

அதே போல், மற்ற ஆழ்வார்கள் இப்பூவுலகில் பிறந்து, பரமாத்மாவினால் மதிநலம் அருளப் பெற்றவர்கள். ஆண்டாளோ பூமிப்பிராட்டியானபடியால் தானே, திவ்ய மகிஷிகளில் ஒருத்தி எனப் பெரியவாச்சான்பிள்ளை காட்டியருளினார்.

இப்படி பற்பல பெருமைகள் கொண்ட ஆண்டாளின் அவதார பெருமைகளை பற்றி சிறிது பார்ப்போம்.

அவதாரம்

ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணனிடம் பூமிதேவி, ‘‘இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்களில் தாங்கள்  யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துவீர்கள்?’’ என்று  கேட்டாள்.   ‘‘பூலோகத்தில் வாழ்ந்தும் இக சுகங்களில் பற்று வைக்காமல் என்னிடமே நித்தம் பக்தி செய்து என்னை நினைத்து எனக்குப் பாமாலையும், பூமாலையும்  தொடுத்துச் சாத்துகின்ற பாகவதர்களிடம் நான் அளவு கடந்த அன்பு செலுத்துவேன்,’’ என்றார் திருமால். உடனே பூமிதேவி, தான் அத்தகைய பக்தையாக  பிறவியெடுக்க அருளவேண்டினாள்.    மணவாளமாமுனிகள் என்ற ஆச்சாரியார் தனது உபதேச ரத்தின மாலை என்ற தொகுப்பில் 22 பாசுரத்தில், பிராட்டி பரமபதத்து இன்பம் அனைத்தும் துறந்து, ஆற்றில் வீழ்ந்த குழந்தையைத் தூக்கத் தானும் நீரில் குதிக்கும் தாய் போல, நமக்காக இங்கு ஆண்டாளாய் வந்து பிறந்தார் என்கிறார்.

அப்படியே, ஒரு நளவருடம் ஆடி மாதம் சுக்ல பட்சம். சதுர்த்தி செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அன்று,  நந்த வனத்தில் துளசி மாடத்துக்குக் கீழே, இப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் உள்ள, நாச்சியார் சந்நிதி உள்ள இடத்தில் பூமிப்பிராட்டி, சிறு குழந்தையாகத், ஆண்டாளாக அவதரித்தாள்.

வடபத்ரசாயி பெருமாளுக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு பூக்கள் பறிப்பதற்காக விடியற்காலையில் பூக்குடலையுடன் நந்தவனத்திற்குச் சென்ற பெரியாழ்வார், அந்த சிறு குழந்தையைப் பார்த்தார்.   அந்த குழந்தையை, சுரும்பார் குழற்கோதை அல்லது சுருக்கமாக கோதை என்று பெயரிட்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய், பக்தி மணத்தோடு வளர்த்து வந்தார் விஷ்ணு சித்தர்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். கன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு விஷ்ணு சித்தர் உயர்ந்த ஞானத்தைப் போதித்தார். கோதையும் கண்ணனையே சிந்திப்பதும் துதிப்பதும், மற்றும் அந்த கோவிந்தன் நினைவாகவே வளர்ந்து வந்தாள். அவள் ஆடலிலும் பாடலிலும் மழலைச் சொற்களிலும்  கண்ணனின் தொடர்பு  காணப்பட்டது. இளமை தொடங்கி எம்பெருமான் மீது பக்திப் பெருவேட்கை கொண்டு அவனையே தான் மணம் செய்துகொள்ள வேண்டும் என்றிருந்தாள் கோதை.

விஷ்ணு சித்தர் தினம் பூ  கொய்து வந்து அதை மாலையாகக் கட்டி வடபெருங்கோயிலானுக்கு சாற்றுவதற்கு பூக்குடலையில் வைப்பது வழக்கம். பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை, கோதை, ஒவ்வொரு நாளும், தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று தட்டொளியில் (கண்ணாடியில்) பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார்.   இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.  பெருமாளும் அதை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டார். இது விஷ்ணு சித்தருக்கு தெரியாது.

ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த மாலையைச் சூடி தட்டொளியில் (கண்ணாடியில்)   கோதை, தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்ததை விஷ்ணு சித்தர் கவனித்துவிட்டார். மனவருத்தத்தால் பகவானுக்கு அன்று அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.  அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பகவான் தோன்றினார். ‘கோதை சூடிக்கொடுத்த  மாலையே நறுமணம் மிக்கதும் எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும்; ஆதலின் அத்தன்மையான மாலையே கொண்டு வருவாய்’ எனச் சொன்னார்.

தனக்கு  மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் என விஷ்ணுசித்தர் தெரிந்துகொண்டார்.  தான் சூடிக் கொடுத்த மாலையை பகவான் ஏற்றுக்கொண்டதால், அன்று முதல் கோதை, “சூடிக்கொடுத்த நாச்சியார்” எனவும், “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் “ஆண்டாள்” என்றும் போற்றப்படுகிறார்.

அரங்கனின் கருணை

அரங்கநாதனின்  பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள். ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு வசமாகி  கோதையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி கோதையை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டான். பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினான்.

மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான்.

அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.  திருவரங்கத்தில் நுழைந்ததும் அரங்கனுக்காகவே  அலங்கரித்தால் போல் இருந்த  ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி, பெரிய பெருமாள், சந்நிதியில் சென்று, மறைந்து பரமபதம் அடைந்தனள் என்பது ஆண்டாள் வரலாறு.    இது கண்ட யாவரும் பெரியாழ்வாரைப்  பெரிய பெருமாளின் மாமனார் என்றும் சமுத்ரராஜன் போலே என்றும் போற்றினர். அவரோ முன்புபோன்றே, ஸ்ரீ வில்லிபுத்தூர் திரும்ப சென்று, வடபத்ரசாயிக்குக் கைங்கர்யம் செய்வாராயினர்.

திவ்யதேசங்கள்

ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என்கின்ற பிரபந்தங்களில்  குறிப்பிட்டுள்ள திவ்ய தேசங்கள்.

  1. ஸ்ரீவில்லிபுத்தூர் (அருள்மிகு வடபத்ரசாயி திருக்கோயில் (ஆண்டாள்), ஸ்ரீவில்லிபுத்தூர்
  2. திருஆய்ப்பாடி  (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.
  3. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்
  4. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.
  5. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்
  6. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
  7. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
  8. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா) – திருவேங்கடமுடையான் மேல் ஆண்டாள் பாடல்களை இங்கே காணலாம்.
  9. திருப்பாற்கடல்
  10. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி

ஆண்டாள் இன்று

திருமணமான பெண்கள் எல்லோருக்கும், பிறந்த வீடும், புகுந்த வீடும் மிகவும் முக்கியம்.  ஆண்டாளின் சீர்மையினால் அவள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஸ்ரீரங்கத்திலும் கொண்டாடப் படுகிறார்.  இவைகளை பார்த்து, மற்ற ஊர்களிலும் ஆண்டாளின் பெருமையும் புகழும் நன்றாகவே கொண்டாப்ப படுகின்றன.

ஸ்ரீ வில்லிபுத்தூரில்

ஆண்டாளின் இடது தோளில் இருக்கும் கிளி, ஆண்டாளின் விருப்பத்தை ரங்கநாதரிடம் தெரிவிக்க தூது சென்ற கிளியாகும். எனவே இந்த கிளி நமக்கும் நல் வழிகாட்டும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவது தனிச்சிறப்பு.

aandaal

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் சன்னதி விமானத்திற்கு திருப்பாவை விமானம் என்று பெயர்.  ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தையும் தரிசிக்கவேண்டும்.

மார்கழியின் முதல் பத்து முதல் திருநாள் அன்று ஆண்டாள் தன் பிறப்பு வழி வம்சாவர்த்தினார்களான வேதபிரான் பட்டர் வீட்டிற்கு செல்வாள். அவர்கள் வீட்டின் முன்பு பச்சை காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். இதனை பச்சைபரத்தல்  என்பர்.

அதே போல் ஆண்டாள் பிறந்த திருவாடி பூரத்தன்று,  தான் அவதரித்த நந்தவனத்திற்கு சென்று அருள் பாலிக்கிறார்.

தான் அரங்கனையே மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று திருமாலிரும்சோலை அழகர் மற்றும் திருவேங்கடமுடையான் இருவரிடமும் ஆண்டாள், வேண்டிக்கொண்டாள்.   அந்த பிரார்த்தனை நிறைவேறியதால் இன்றும் ஆண்டிற்கு ஒரு முறை இந்த இரண்டு பெருமான்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் அணிந்த  மாலை செல்கின்றன.  ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி அன்று அழகருக்கும், புரட்டாசி ஐந்தாம் திருநாள் கருடசேவை அன்று  திருப்பதிக்கும் அவள் சார்பாக, மாலையும், பட்டுபுடவையும் மற்றும் கிளியும் கொடுத்து அனுப்பப்படுகின்றன.

ஆண்டாளின் பிறந்த நாள் விழா ஸ்ரீவில்லிப்புத்தூர் நாச்சியார்(ஆண்டாள்) கோயிலில் 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு நாளும் காலை மாலை என்று இரண்டு வேளைகளிலும் ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் வீதிகளில் புறப்பாடு நடக்கின்றன.  அவைகளில் சில,

  • முதல் நாள் –  காலை கொடி ஏற்றம்.  இரவு  பதினாறு வண்டிச் சப்பரம்
  • நான்காம் நாள் – இரவு ஆண்டாள் சேஷ வாகனம்; ரங்கமன்னார் கோவர்த்தனகிரி வாகனம்.
  • ஐந்தாம் நாள் காலை பெரியாழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி சுந்தரராஜன், வெங்கடேச பெருமாள், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மங்களாசாசனம் நடைபெறும்.  அன்று இரவு ஐந்து கருட சேவை நிகழ்ச்சி. அப்போது ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் ரங்கமன்னார் பெரிய திருவடி வாகனத்திலும் சுந்தரராஜன், வெங்கடேச பெருமாள், திருத்தங்கால் அப்பன் பெரிய திருவடி வாகனங்களிலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் வீதியுலா வருவர்.
  • ஏழாம் நாள் இரவு ஆண்டாள்-ரங்கமன்னார் சேர்ந்து கண்ணாடி சப்பரம்,  இரவு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக்கோலம்..
  • ஒன்பதாம் நாள் காலை  ஆண்டாளும் ரங்கமன்னாரும் தேரில் எழுந்தருளுவர். தமிழகத்திலேயே திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தேர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவரங்கத்தில்

திருவரங்கம் கோவிலில் உள்ள 19 சன்னதிகளில் உள் ஆண்டாள் சன்னதி என்றும் வெளி ஆண்டாள் சன்னதி என்றும் 2 சன்னதிகள் உள்ளன. இதுதவிர பரமபதநாதன் ஸந்நிதியில் ஆழ்வார் ஆசார்யர்களுடன்  சூடிக்கொடுத்த நாச்சியாரும் எழுந்து அருளி உள்ளார்.

திருவரங்கத்தில், பெரிய பெருமாளுக்கு பல நூற்றாண்டுகளாக பல அரிய கைங்கர்யங் களை செய்து வரும் ‘உத்தமநம்பிகள்’ என்னும் வம்சத்தினர் இன்றும் உள்ளனர். இவர்கள் பெரியபெருமாளின் மாமனாரான ‘பெரியாழ்வார்’ வம்சத்தினர் ஆவர்.  புகுந்த வீட்டில் மருமகள் ஏற்றிவைக்க வேண்டிய விளக்கினை அவளுடைய உடன்பிறந்தோர் எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் அரங்கனை ஆட்கொண்ட ஆண்டாளின் சம்பந்தத்தினால், அரங்கனது மைத்துனராகிய உத்தம நம்பி வம்சத்தினைச் சார்ந்த குடும்பத்தினர், மேளதாளத்துடன் சகலவிதமான மரியாதைகளுடன் பெரிய பெருமாளுக்கு  ஒரு வெள்ளி விளக்கு உட்பட ஒன்பது விளக்குகளை ஏற்றுவர்.  உத்தம நம்பி எடுத்து வரும் வெள்ளி விளக்கு மட்டும் அர்ச்சகரால் வாங்கப்பெற்று நம்பெருமாள் திருமுன்பு நெல்லினால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் (இதனை ‘சேனைக்கால்’ என்பர்) எழுந்தருளச்செய்யப்படும். ஆண்டாளுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஏற்றம் தரும் ஒரு  உத்ஸவம்   இது.

ஆண்டாளுக்குப் பல்லாண்டு

ஸ்ரீ ரெங்கநாதருக்கு  திருமணம் செய்து கொடுத்த “பெரியாழ்வார்’ தன் மகளை பிரிந்த ஆற்றாமை மிகுதியால், “”ஒருமகள் தன்னையுடையேன், உலகம்நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டுபோனான்” என்று பாடினார். தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள்,  பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் பிறந்தகத்தில் இருந்தது போல சிறப்புடன் அங்கேயும் வாழ வேண்டுமே என்ற தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார். இந்த பாடலை ஆண்கள், பாடினாலோ, கேட்டாலோ, தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால் அந்த, கவலைகளுக்குச் சிறிதும் இடம் கொடாமல்,  ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில், தினமும், தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், மற்றும் உலகமெங்கும் உள்ள வைஷ்ணவ  கோவில்களிலும் மற்றும் பொது சபைகளிலும், திருப்பாவையின் 30 பாடல்களை பாடுவதிலும் அவைகளை பற்றி விளக்க உரைகளை சொல்வதிலும், கேட்பதிலும், மக்களின் ஆர்வத்தின் அளவு பன்மடங்காய் கூடுவதில்  இருந்து, ஆண்டாளின் சிறப்புகளும், புகழும், பெருமைகளும் பற்பலமடங்காய், வளர்ந்து கொண்டேதான் போகின்றது என்பது  நமக்கு கண் கூடாகத் தெரிகிறது.

இப்படி ஆண்டாளின் பெருமைகளுக்குப் பல்லாண்டு பாடி, அடுத்த வலைபதிப்பில் குலசேகராழ்வார் பற்றி காண்போம்.

==================================================================

A short recap

We have seen about Poigai Azhwar, Pei Azhwar, Boothath Azhwar, Thirumazhisai Azhwar, Nammazhwar, Madurakavi Azhwar and Periyaazhwar.  We have also had a small glimpse of the greatness of Aandal and seen what our acharyars Vendantha Desikar and Swami Manavala Maamunigal have written about Aandal.   Similarly we have seen what Aandal herself has told in her Naachiyaar Thirumozhi, on how to reach the lotus feet of Sri Krishna.   We  also had a brief account  about the salient points in Thiruppavai  and the key learnings for us, as given by Aandal in her Thiruppavai.

In the first five hymns of Thiruppavai, Aandal has prayed to all the five states of Brahmam, namely, Para, Viyuha, Vibhava, Antharyaami and Archai.   In the next 10 hymns, she invited 10 of her friends to pray along with her.   She then started telling us on how to do the prayers.   We need to offer our prayers first to the gatekeepers of Paramathma or Brahmam and then offer our prayers to the close relatives and people closer to Paramathma.   Then we need to offer the prayers to Sri Mahalakshmi or Thayaar, before offering the prayers to Paramathma.   She had also insisted on praying together, rather than doing the prayers alone.   She had also taught us on what to ask Paramathma in return for our prayers.   According to Anadal, we should ask Paramathma that we should be able to offer Him the services without expecting anything else in return.

Aandal has an unique distinction, which is not accorded to any other devotee of Vishnu, in terms of having special shrine in every Vishnu temple.

All other Azhwaars, through their preaching, wake up the people in this world and advise them to go towards Paramathma, whereas Aandal herself being Bhoomi Pirati, she wakes up Paramathma and requests Perumal to take care of the people, as per Nampillai, one of the Acharyaars. 

Similarly, Unlike all other Azhwaars, who had been divinely blessed by Paramathma and were given the wisdom about Paramathma by Him (Mayarvara mathinalam arulappetravargal), Aandal was an incarnation of Sri Bhooma Devi Thayaar Herself and one of the consorts or Nachiyaars of Perumal,  as per Periyavaachaanpillai,  one of renowned commentators of vaishnavism.

After hearing about the glories of Aandal, let us enjoy her Avatharam and how she attained what she wanted.

Avathaaram

Once Bhoomadevi asked Sriman Narayanan on whom in this world, He would shower His love and affection.   He replied that He would love those, who live in this world and who are not interested in the material gains or the worldly pleasures, but those who are staunch devotees of Him and who continuously offer prayers  with flowers and with hymns.   Without any hesitation, Bhoomadevi, immediately asked Him that She would like to take an incarnation on those lines.   Manavaala Maa Munigal, one of the acharyars, on the 22nd hymn of his Upadesa Rathina Maalai, states that Bhooma Devi sacrificed all Her pleasures of Srivaikuntham or Paramapadham, came down to this world as Aandal, to save us, like a mother who would dive into the river to save her child.

Bhoomadevi, came to this world as Aandal, on a Tuesday, in the Tamil Year of Nala, in the Tamil Month of Aadi, (July 15th to Aug 15th), and in the Tamil Star Pooram, and on the fourth day of the new moon, in the flower garden, near Thulasi Pot.  This place is now the Aandal Sanctum or Shrine in the Vatapathra Saayi temple in Srivilliputhur.

Vishnuchittar (Periyazhwaar) used to maintain a garden full of flowers for making the garland to Vishnu every day.  He found the girl child under a Thulasi plant in the garden. He named the child as Surumbaar Kuzhal Kothai or shortly Kothai.

Choodi Kodutha Sudar Kodi

In the younger age itself, Vishnuchithar or  Periyazhwaar  had brought up Kothai as a staunch devotee of sri krishna. He had taught all he knew about the Tamil language and the religion or vaishnavism.  When Kothai grew up, Periyazhwaar continued to teach her the higher level knowledge in Vaishnavism.  Kothai’s devotion to Sri Krishna kept increasing and it was only Sri Krishna or Govinda, who prevailed in her mind all the time.   She was able to make connections with Sri Krishna in all her activities, whether it was a discussion or a song or a dance.   Slowly she started developing a thought that occupied her mind fully, that she should marry only Sri Krishna or Govindan.

As a part of his regular daily activities, Vishnuchithar used to pluck fresh flowers and make them as garlands for Sri Vatapatra Saayi, the Deity in Srivilliputhur  temple and kept them on the basket.  Before he could take the garlands to the temple for offering it to the Vatapatrasaayi, Kothai used to wear the garlands and try to satisfy herself, whether she was a good match for Sri Krishna.   On those days, it was only a large plate, which was used as a mirror and Kothai used one of such plates to view herself. She later used the word “Thattolliym thanthu” in her hymns, where Thattolli means a mirror.  After that she would replace the garlands in the same place.   This was not known to Vishnuchithar and when he offered those garlands to Perumal, which were worn by Kothai, Perumal also had accepted them gleefully.

One day, Periazhwar found this, and he was very repentful and worried that he made the mistake of garlanding the deity with those which were worn by her daughter, Kothai. So on that day, he put aside the garland that was worn by Aandal and made a new one and offered it to the temple.   On that night, Vishnu appeared in his dream and asked him not to worry and to offer only the garland worn by Aandal to Him from the next day onward, as He liked those garlands and those carried a very special fragrance. Periyazhwaar was pleased to see that Lord Krishna had recognised the devotion of Kothai and accepted the garland worn by her.  The girl Kothai was now named Aandal, meaning, the girl who “ruled” over the Lord through her devotion and was referred as Choodikodutha Sudarkodi, meaning, “the lady who gave her garland to Vishnu”.

Greatness of Thiruarangan

As Kothai grew into a beautiful maiden, her fervor for the Lord Vishnu grew to the extent that she decided to marry only the Lord Himself. After hearing the glories of Sri Aranganathan more and more from Periyazhwaar,  Aandal was extremely happy and made up her mind to marry Sri Aranganathan , Lord Himself in Archai. As time passed, her resolve strengthened and she thought constantly about marrying Sri Ranganathar at Srirangam. Vishnuchittar (Periyazhwaar) understood the Divine Love that existed between the Thiru Arangan and his daughter. .

Thiru Arangan was also happy with the devotion of Aandal and decided to marry her. Arangan then instructed Periyazhwaar to bring  Aandal to Srirangam, in his dream.   Similarly Arangan also instructed Vallabhadevan, the King of Pandiyanadu, in his dream, to go to Srivilliputhur , to invite Periyazhwaar and Kothai to Srirangam and bring them to Srirangam along with the devotees.

The King, Vallabhadevan, organised a grand procession to bring Aandal and Periyazhwaar from Srivilliputhur to Srirangam.   He  made elaborate arrangements throughout the way with flowers, garlands and sprinkled water all along so that is cooling and refreshing for the  people  accompanying them.    Vallabadevan went and described his dream to Periyazahwaar  and  Azhwaar also accepted immediately as he was also told by Perumal.

The King, Periyazhwaar and Aandal  with  people who came along with them, reached Srirangam temple.   As soon as they entered the temple, Aandal, who was dressed beautifully and suitably for the primary deity of Srirangam, Sri Ranganathan, got down from her palanquin and  went to the sanctum, disappeared and reached abode or Paramapadham.     People who saw all these, started praising Sri Periyazhwaar as the Father-in-law of Periya Perumaal and as Samuthrarajan, (The King of all Seas, who also got his daughter, Sri Mahalakshmi married to Mahavishnu).   Periyazhwaar, went back to Srivilliputhur to continue his service to Sri Vatapatrasaayi.

Aandal, has mentioned about the following places, Divya Desangal, in her hymns, Thiruppavai and Nachiyaar Thirumozhi.

  1. Srivilliputhur – Sri Vatapatrasayi Temple
  2. Thiruaaipaadi – Sri Mohanakrishnan Temple, Gokulam, Uttar Pradesh.
  3. Dwarakai – Sri Kalyana Narayanan Temple, Dwaraka, Gujarat
  4. Thiruvada Mathurai – Sri Govarthanan Temple, Mathura, Uttar Pradesh
  5. Thirukkannapuram – Sri Neelamega Perumal temple, Thiruvarur.
  6. Thirumaaliruncholai – Sri Kallazhgar temple, Azhgar Kovil, Madurai, Tamilnadu
  7. Thirukudanthai – Sri Sarangapani Temple, Kumbakonam, Tamilnadu
  8. Thiruvengadam – Sri Venkateswara Swami Temple, Thirupathi, Andra Pradesh
  9. Thiruparkadal – One of the two Divya Desangal, away from this world
  10. Thiruvarangam – Sri Ranganatha Swami Temple, Srirangam, Tamilnadu

Aandal Today

For all married girls, both the families, the family from where they come and the family where they settle after the wedding, are important.   Aandal’s glories are such that she is held in extreme helms in both the families.  Let us see how the people celebrate Aandal in her birthplace, Srivilliputhur and her husband’s place, Srirangam.   Based on these, Aandal is placed at high esteem in all other parts of the world too.

In Srivilliputhur

The parrot which is sitting on the left shoulder of Aandal, is believed to be the messenger which conveyed the wishes of Aandal to Sri Ranganathar.   So people offer prayers to this parrot, believing that the parrot would show them the right path.

The reclining position which Sri Rangamannar Swami, takes every year, with His head on Aandal’s lap on the seventh day function of the Aadi Festival in Srivilliputhur Rangamannar Temple is a very special dharsan for devotees.   (Please refer to the picture above in Tamil section)

The golden casket on the top of the Aandal Shrine in Srivilliputhur temple is called Thiruppavai Vimanam, in recognition of Aandal’s work and everyone who offers their prayers to Aandal should also pay respect to this Vimanam.

On the first day of the Mudhal Pathu (First Ten days) of the Margazhi Festival (Margazhi is a Tamil calendar month, between Dec 15th and Jan 14th), every year, Aandal is taken in  a procession to her forefather Veda Piran Pattar’s house .  They  welcome and receive Aandal by having lots of Green Vegetables spread in front of their house. This is called “Pachai Parathal” or  the spread of the green. 

In the same way, on her birthday,  Thiru Aadi Pooram (Aadi is a Tamil calendar month, usually between Jul 15th to Aug 14th), Aandal is taken in a procession to the Tulsi plant where she was born or found out by Sri Periyazhwaar, and she blesses the devotees in that place on that day.

Aandal, in her early days, had prayed to Sri Kallazhagar in Thirumaliruncholai, Madurai and Sri Venkateswara Swami in Thirupathi so that she could marry Sri Ranganathar in Srirangam.   Her prayers were answered and in recognition of the support she received from these two perumals, the garlands that are worn by Sri Aandal are sent to these temples even today.  A garland of Aandal from Srivilliputhur Temple, a parrot and a silk saree are sent to Azhagar Kovil on the Pournami day of the Tamil month of Chithirai (April 15th to May 15th) and to Thirumala Venkateswara Perumal temple during the Garudasevai, the fifth day function  during the Tamil Month of Purattaasi (September 15th – October 15th).

Aandal’s birthday is celebrated as a 12 day festival in Srivillliputhur Aandal Temple, with special processions in the morning and evening for Aandal and Rangamannar. 

  • First Day – Kickoff of the festival through flag hoisting and in the night procession on a 16 wheel cart
  • Fourth night procession – Aandal on Serpent Vehicle and Rangamannar on Govardhana Giri Vahanam, representing Sri Krishna holding the hill on his finger to protect the people of Gokulam.
  • Fifth day is a special day for Periyazhwaar to offer his prayers to the chief deities from other nearby temples, namely, Sundara Raja Perumal, Venkatesa Perumal, Thirthangal Appan and the couple, Aandal and Rangamannar at the Function Hall specially created for the festival.    On that night, Aandal will come on a special swan as her vehicle and Periyazhwaar will come on a smaller swan, whereas all other deities will come on the individual garuda vahanam.
  • On the seventh day evening both Aandal and Rangamannar will come on a chariot decorated with mirrors.   Later in the night in the Krishnan temple, Rangamannar will take a reclining position with His head on the lap of Aandal.  This is a special dharsan.
  • On the ninth day morning, Aandal and Rangamannar will come on one of the big chariots.   This chariot is second biggest chariot in Tamil Nadu after Thiruvarur Chariot.

In Srirangam

Among the 19 shrines in the Srirangam Temple, there are two shrines, exclusively for Aandal ,the inside shrine is called Ul Aandal Sannadhi and the outer shrine called Veli Aandal Sannadhi.  In addition, one other Aandal  is also there as a part of all Azhwaars and Acharyars in the Paramapadhanathan Sannadhi.

The family called Uthama Nambigal family, descendants of Periyazhwaar  have been doing service to Sri Aranganathan for many many years through many generations.    In Tamil nadu there is a festival called Karthigai, which comes in the tamil month of Karthigai (Nov 15 to Dec 15) . During that festival people  light their homes with oil lamps.   As a practice, relatives of the girl (father or mother or brother) would bring a new set of lamps for the festival to the girl every year.   In the same way, since the Uthama nambi comes from Periyazhwar’s family, every year, they bring new silver lamp in addition to nine other lamps to Sri Ranaganathar.  The Silver lamp will be lit in front of Sri Ranganathar and then kept in a heap of paddy in front of Sri Ranganathar.   This is called “Senaikal”.  This is a way of showing Namperumal’s respect to Periyazhwaar and his family.

Prayers and best wishes to Aandal

After getting his daughter married to Sri Ranganathar, Periyazhwaar felt the loneliness of leaving her daughter, and he composed a hymn “oru magal thannai udaiyen, ulagam niraintha pugazhaal thirumagal pol valarthen, senganmaal thaan kondu ponaan“, meaning “I had only one daughter, she got all the fame in this world and I brought her up like Sri Mahalakshmi.   The perumal took her away”.     He had great concerns, like any other parent, that she was treated like a queen in his house, and she had to continue like that with Perumal.   It is believed that people who reads or sings this hymn will be more affectionate towards their children.

Unlike Periazhwaar’s undue concerns, Aandal’s glories keep increasing.  This is evident from the increased number of lectures on Thiruppavaai  during the tamil month of Marghazi in many temples and places within and outside  Tamil Nadu.   The involvement in singing and practising those 30 hymns of Thiruppavai by the number of people all over the world, only keeps increasing.

Learning and hearing the glories of Aandal give us more and more strength to continue, so with that respects, we move to our next weblog on Kula Sekara Azhwaar.

RSS
Follow by Email