Thirupaavai / திருப்பாவை

For English version, please click here, thanks  

திருப்பாவை

பெரியாழ்வாரைப்பற்றி சிறிது பார்த்த பின், ஆண்டாளின் பெருமைகளை சொல்லத் தொடங்கினோம்.  நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பிருந்தாவனத்தில் பரமாத்மாவை தரிசித்தது வரை பார்த்தோம்.  ஆண்டாளின் பெருமைகளையோ, திருப்பாவையின் பெருமைகளையோ சொல்லும் திறனோ, அறிவோ, சக்தியோ எனக்குக் கிடையாது.  இருப்பினும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல முயற்சிக்கிறேன்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்ற பிரபந்ததிற்கு ஐந்து விளக்க உரைகள் (ஈடு) உள்ளன.  அதே போல் திருப்பாவைக்கும் அதிக அளவில் விளக்கங்கள் உள்ளன.

ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை பெரியாழ்வார் பாடிய திருமொழிக்கு அடுத்தாக வைத்துத் தொகுக்கப் பெற்றிருக்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது.

ஆண்டாள், தன்  தந்தையான பெரிய ஆழ்வாரிடம் கண்ணனைப் பற்றி கேட்ட சரித்திரங்களில் ஒன்றானது, திருஆய்ப்பாடி மகளிர், ஸ்ரீ கிருஷ்ணரை அடைய நோன்பு நோற்றார்கள் என்பதாகும். அதற்கு கார்த்யாயனி விரதம் என்று பெயர். அதனை பின்பற்றி, ஆண்டாள், கண்ணனையே அடைய வேண்டும் என்பதற்காக பாவை நோன்பு நோற்கின்ற படி அமைந்தது தான் திருப்பாவை.

திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து  திருப்பாவையில்  இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.

திருப்பாவையில் எளிதாக விளங்கும் பொருள் ஒன்று உண்டு. சற்று ஆழ்ந்து நோக்கிக்காணும் உள்ளுறைப் பொருளும் உண்டு. திருப்பாவையின் எளிதில் விளங்கும் பொருளாக, துயில் எழுப்புதல், மார்கழி நீராட அழைத்தல், மழை வேண்டியும், நல்ல மணாளன் வேண்டியும் பாவை நோன்பு நோற்றல், திருமாலைச் சிறப்பித்தல் என அமைகிறது.  உட்பொருளாக, வைணவத்தின் துவயம் எனப்படும் திரு மந்திரத்தின் கருத்துக்களையும் அமைத்துள்ளார்.

ஆண்டாள் பாடல்கள் பலவும் வினைச் சொல் கொண்டு, நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று,  தெளிவாகவும் நேரடியாகவும் உணர்த்தும்படி உள்ளன . இதனால் திருப்பாவை நமக்கு அர்த்தம் புரிவதற்கும் அதன் படி நடப்பதற்கும் எளிமையாக உள்ளது. சில உதாரணங்கள், 

 • பரமனடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம்
 • மைஇட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம்
 • தீக் குறளை சென்று ஓதோம்
 • தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி தொழுது வாயினால் பாடி
 • மனதினால் சிந்திக்க
 • தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
 • மாமீர் அவளை எழுப்பீ ரோ
 • மனதுக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்
 • பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம்
 • உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம்

திருப்பாவையில் பகவத் பக்தி, பாகவத பக்தி, மந்திர பக்தி, பெருமாளின் இரட்சிக்கும் தன்மை, சரணாகதி ஆகியவற்றின் அர்த்தங்களை ஆண்டாள் நமக்குத் தெளிவாகக் காட்டித் தந்திருக்கிறாள்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும், வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு” என்று திருப்பாவையை அறியாதவர்களைப் பற்றி ஒரு ஆச்சாரியார் (வேத பிரான் பட்டர் ?) கூறுகிறார்.  இதில் ஐயைந்தும் என்பது (5 x 5) முதல் இருபத்தி ஐந்து பாடல்களையும், ஐந்தும் என்பது கடைசி ஐந்து பாடல்களையும் குறிக்கும். இதையே ‘வாரணமாயிரம்” என்ற நாச்சியார் திருமொழி ஆறாவது பதிகத்தில் உள்ள பத்து பாடல்களை குறிப்பதாகவும் சொல்வார்கள்; அந்த பதிகத்தில், முதல் ஐந்து பாசுரத்தில், எம்பெருமான் கண்ணனுடன் திருமணம் செய்வதற்கு முந்திய நிகழ்ச்சிகளையும், இறுதி ஐந்து பாசுரத்தில் திருமணம் நடந்து அதற்கு பின் உள்ள நிகழ்ச்சிகளையும் கூறுவதாகவும் சொல்வதுண்டு.

இறுதி ஐந்து பாடல்கள் தனிசிறப்புப் பெற்றவைகள், இந்த ஐந்து பாசுரங்களில், ஆண்டாள் பகவானை நேரில் தரிசித்த பரவசத்தை வர்ணிக்கிறார்.

ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை  நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடி உள்ளார். (“நாராயணனே நமக்கே பறை தருவான், பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், ஊழிமுதல்வன், வடமதுரை மைந்தனை” )

ஆண்டாள் பாடல்களில் குறிப்பாகப் ‘பறை’ என்ற சொல், அறம், பொருள், இன்பம் இவற்றைத் தாண்டி உள்ள,  வீடுபேற்றைக் குறிப்பதாகவே அமைகிறது.

நீராடப் போதுவீர் என்று முதல் பாடலிலும், நெய் உண்ணோம், பால் உண்ணோம்   மைய்யிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம் என்று இரண்டாவது பாடலிலும் சொல்கிறார்.  இங்கு,    “மலரிட்டு நாம் முடியோம்” என்பதில் மட்டும், “நாம்” வருவது ஒரு சுவை.  ‘நாங்களாக மலர் சூடிக்கொள்ள மாட்டோம், ஆனால் நீ சூடிவிட்டால், அதைத்தடுக்க மாட்டோம்’ என்று ஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் சொல்வது போல் அமைந்து உள்ளது.   இதற்கு காரணம்,  ஆண்டாள், ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளுக்கு, பிருந்தாவனத்தில், திரு ஆய்ப்பாடியில்,  பூ சூட்டிய படலங்களை நினைவு கூறுகிறார்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற ஐந்தாவது பாடலில் சொல்லும், “தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க” என்பது பக்தி செய்யும் முறையை அறிவுரையாய் சொன்னதாயிற்று.

புள்ளும் சிலம்பின” என்று வரும் அடுத்த பாடலில், “உள்ளத்துக்கொண்டு முனிவர்களும், யோகிகளும், மெல்ல எழுந்து” என்பதில், உள்ளத்தில்உள்ள அந்தர்யாமியான பரமனை, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து பத்திரமாகப் பாதுகாப்பது போல் நாமும் நம்மிடம் உள்ள அந்தர்யாமியை பார்த்துக் கொள்ளவேண்டிய கடமையை சொல்வதாகும். முனிவர்கள் யோகிகள் என்று இரண்டு பதங்களை உபயோகிக்க காரணம், முனிவர்கள் என்பவர்கள் பகவானின் குணநலன்களை அறிந்து கொண்டு பரம்பொருளை உணர்ந்தவர்கள்; யோகிகள் பகவானுக்கு கைங்கர்யம் செய்யும் அடியார்கள்.

முதல் ஐந்து பாடல்களில் பொதுவாக எல்லோரையும் பாவை நோன்பு நோற்க கூப்பிட்ட ஆண்டாள், அடுத்த பத்து பாடல்களில் ஒருவர் ஒருவராக (பிள்ளாய், பேய்பெண்ணே, கோதுகலமுடைய பாவை, மாமான் மகளே, ஆற்றல் அனந்தல் உடையாய் , பொற்கொடியே, நற்செல்வன் நங்காய், போதரிக்கண்ணினாய், நங்காய், எல்லே இளம் கிளியே)  அழைக்கிறார்.

பதினைந்தாவது பாசுரமாகிய “எல்லே இளங்கிளியே” என்ற பாடலில்  ‘நீங்களே நானே தான் ஆகிடுக” என்று சொல்லும் போது, வைணவ சம்பரதாயத்தின் படி, இவர் குற்றம் ஒன்றும் செய்யாதபோதும், மற்றவர்கள் குற்றங்களையும், தன்மேல் ஏற்றுக்கொள்கிறார்.  இதனை மேலும் விளக்க ராமாயணத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்லலாம்.   ஸ்ரீ ராமன் காட்டுக்கு சென்றதற்கான காரணமாக, கூனி, கைகேயி, தசரதன் மற்றும் ஸ்ரீ ராமன் ஆகிய மற்றவர்கள் இருந்தும், பரதன்,  தன்னுடைய கர்மாக்களின் பலனே என்று தன் மீதே எல்லா குற்றங்களையும் ஏற்றுக் கொள்ளுகிறான்.

பதினாறாவது பாசுரமான, நாயகனாய் நின்ற பாடல் முதல் நாம் எப்படி கோவிலில் இறைவனை வழிபட வேண்டும் என்பதை சொல்கிறார்.   நேரிடியாக பகவானை சென்று சேவிக்காமல், முதலில் துவாரபாலகர்களை வழிபட வேண்டும் என்றும் அவர்களிடம் அனுமதி பெற்று அதன் பிறகே உள்ள செல்ல வேண்டும் என்றும் சொல்கிறார்.

அடுத்த பாசுரத்தில், (அம்பரமே தண்ணீரே) ஸ்ரீ கிருஷ்ணரின் உறவினர்களான நந்தகோபாலன், யசோதை, பலராமன் என்று பகவானை சுற்றி உள்ளவர்களை எழுப்புகிறார். இங்கேயும் நேரடியாக பகவானிடம் செல்லாமல் அவனுக்கு உகந்தவர்களை ஸ்தோத்திரம் செய்து பிறகே பகவானிடம் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். (ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், நித்யசூரிகள், சுதர்சனாழ்வார்  என்பதைப் போன்றவர்கள் இதில் அடங்குவார்கள்).

அடுத்த பாசுரமான “உந்து மத களிற்றன் , 18வது பாடல், தாயாருக்கான பாசுரம். இது போல இன்னும் ஒரே ஒரு  பாடல் மட்டும்  தான் ஆண்டாள், பெருமாளின்  பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால் நந்தகோபாலன் மருமகளே  நப்பின்னாய் என்று தாயாரை மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுகிறார், ஆகையால் இது தாயார் பாசுரம் எனப்படுகிறது.   (அங்கண் மாஞாலத்து மற்ற  பாடல்).  மற்ற எல்லா பாடல்களிலும், நாராயணனே, பரமன், உத்தமன், பத்மநாபன், மாயன், ஹரி, கேசவனை, தேவாதி தேவன், மாதவன், வைகுந்தன், முகில் வண்ணன், மனதிற்கு இனியான் (ஸ்ரீ ராமர்), கிள்ளிக்களைந்தானை,  பங்கய கண்ணானை, மணிவண்ணன், உம்பர் கோமானே, மலர் மார்பா, விமலா, ஊற்றமுடையாய், பூவை பூவண்ணா, நெடுமாலே, மணிவண்ணா, கோவிந்தா என்ற நேரிடையான நாமங்களாலும் மற்றும் வடமதுரை மைந்தன், ஆயர் குலத்தில் பிறந்த அணிவிளக்கு போன்ற பல நாமங்களாலும் அவன் புகழ் பாடுகிறார்.   சில நாமங்கள் ஒரு முறைக்கு மேல் வருகின்றன. அவையாவன,

 • நாராயணனையும் (1,7,1௦),
 • திருவிக்ரமனையும் (3,17,24),
 • மாயனையும் (5,15,16),
 • மனத்திற்கு இனியவனான இராமனையும் (12,13,24)
 • கோவிந்தனையும் (27,28,29)

மூன்று மூன்று முறை அழைக்கிறார். இதிலும், திருவிக்ரமனை முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பத்து என முதல், நடுவே மற்றும் முடிவில் அமைத்து உள்ளார். கோவிந்தனை தொடர்ச்சியாக, (27,28,29), கூப்பிட்டு உள்ளார். கேசவனையும் (7,30) மணிவண்ணனையும் (16,26) இரண்டு முறை கூப்பிடுகிறார்.

அடுத்த பாசுரமான குத்து விளக்கு எரிய  பாடலில், ஆண்டாள், பெருமாளை பாட ஆரம்பித்து, பாதியில் திரும்ப தாயார் பக்கமே சென்று விடுகிறார்.  அடுத்த பாசுரத்திலும் பெருமாளிடம் ஆரம்பித்து, முக்கால் பாசுரம் முடிந்தபின்பு தாயாரிடம் வந்து, தன் கோரிக்கையை வைக்கிறார். ஆகவே நாம் பக்தி செய்யும் போது, முதலில், பின்பு பெருமாளின் நெருங்கிய பந்துக்களையும், தாயாரையும் வழிபட்ட பின்பே, அவனிடம் செல்ல வேண்டும் என்பதை 16 பாடல் முதல் 20 பாடல் வரை தெரிவிக்கிறார்.

அடுத்த மூன்று பாடல்களிலும் பெருமாளை பொதுவாக வாழ்த்தி உள்ளார். ஆனால் பெருமாளிடம் எதுவும் கேட்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க.

திருப்பாவையில் ஆண்டாள், விபவத்தின் அவதாரங்களில் திருவிக்கிரமனையும், ஸ்ரீ ராமரையும், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரையும் மட்டுமே நேரடியாக சொல்லி உள்ளார். அடுத்த பாடலான, “மாரி மலை முழைஞ்சில் ” என்ற பாசுரத்தில், நரசிம்ம அவதாரத்தை  மறை முகமாக சொல்லி உள்ளார்.

பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாள், “அன்று இவ்வுலகம் அளந்தாய்” என்ற அடுத்த பாசுரத்தில் ஆறு முறை பல்லாண்டு பாடுகிறார். திருவிக்ரமனையும் இராமனையும் ஒரு முறை பல்லாண்டு கூறியவர், தனக்கும் தனது தந்தையான பெரியாழ்வாருக்கும்,  மிகவும் உகந்தவரான கண்ணனை மட்டும் நான்கு  முறை பல்லாண்டு பாடுகிறார்.

அடுத்த பாடலான “ஒருத்தி மகனாய் பிறந்து” என்ற பாடலில்  ‘கண்ணா. உன்னை காணத் துடிக்கிறோம், ஆகையால் நோன்பு நோற்றதில் ஒரு வருத்தமும் இல்லை’ என்கிறார்.   இந்தப் பாடலில் வரும் “வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து என்று சொன்னதில், ஆண்டாள் தாங்கள், பரமனையே வேண்டும் பகவன்லாபார்திகள் என்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். “வருத்தம் தீர்ந்து” என்றால், தாங்கள், இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள் அல்ல என்று சொன்னதாகும்.  “வருத்தமும்”     தீர்ந்து என்பதால், தாங்கள், மற்றொரு வகையான, கைவல்யார்திகள் என்ற ஜீவாத்மாக்களும் அல்ல என்றார்.  “மகிழ்ந்து” என்று சொன்னது   தாங்கள் பகவன்லாபார்திகள் என்று சொல்வதாயிற்று.  

அடுத்த பாசுரமான மாலே மணிவண்ணா என்றதில், ஈரேழுலோகங்களையும் உண்டு ஓர் ஆலிலையில் படுத்த அவனுக்கு  ஒன்றும் கடினம் இல்லை, அது போல் தங்களுக்கு அருளுவதிலும் அவனுக்கு ஒன்றும் சிரமம் இல்லை  என்று போற்றுகிறார்.

கூடாரை வெல்லும் கோவிந்தா என்ற 27வது பாசுரத்தின்  வார்த்தைகள், கூடியவர்களிடம் தோற்றுப்போகும் கோவிந்தா எனபதையும் உட்படுத்தியதே. நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று நோன்பு ஆரம்பிக்கும் போது (பாடல் 2) கூறியவர், இந்தப் பாடலில் நோன்பு முடிக்கும் நேரம் வந்துவிட்டதைக் குறிக்கும் பொருளில் கண்ணனிடம் உணவு கேட்கிறார்கள்.   விரும்பிக்கேட்ட இந்த உணவு சாதாரண பசி தீர அல்ல,  கண்ணனைப் பிரிந்து பட்ட துயர் தீர கூடி இருந்து களித்திருக்கையை கூறுகிறது.  அதுபோல் கூடி இருந்து என்பது, தான் மட்டும் அல்லாமல் எல்லோருடன் சேர்ந்து பகவானை தரிசிக்க வேண்டும் என்ற கருத்தை நமக்கு சொல்வதாகும்.

ண்ணனே புண்ணியம், குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் என்று அவனை மிக உயர்ந்த இடத்தில் நிறுத்தி, தாங்கள் ஒன்றும்  அறியாத பிள்ளைகள் என்று தங்களைத் மிகவும்  தாழ்த்திக்கொண்டும், தங்கள்  குற்றங்களை மன்னித்து, தங்களுக்கு மோட்ஷம் தர பிரார்த்திக்கும் பாடல், அடுத்த பாசுரமான, “கறவைகள் பின்சென்று”.   கண்ணனே புண்ணியம், குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன், “இறைவா நீ தாராய் பறை”  என்ற இந்த சொற்தொடர்களும் இந்த பாசுரத்தின் மிக குறிப்பிடத்தக்கவை.  

இதுவரை, பறை, பறை என்று சொல்லிவந்த ஆச்சிமார்கள், அதன் பயனை அடுத்த பாசுரமான “சிற்றஞ்சிறு காலை” என்ற பாடலில் சொல்கிறார்கள். “பகவானான உன்னை அடையவேண்டும், உங்களுக்கே தொண்டு செய்ய வேண்டும், மற்ற எந்த நினைவும் தங்களுக்கு வராமல் இருக்க வேண்டும்”, என்று வேண்டுகிறார்கள். இங்கே “உமக்கே நாம் ஆட் செய்வோம்” என்று சொன்னதில் பரமாத்மாவாகிய அவனைத் தவிர மற்ற யாருக்கும் சேவை செய்ய மாட்டோம் என்பதில் உள்ள  தீர்மானமான ஒரு கருத்தும்  வெளிப்படுகிறது.   இது வைஷ்ணவ சித்தாந்தத்தின் மிக முக்கியமான கருத்தாகும், ஏன் எனில், கிருஷ்ண பரமாத்மா, தான் சொன்ன கீதையின் ஒரு ஸ்லோகத்தில்  “மாம் ஏகம் சரணம் வ்ரஜ“,  அதாவது, “என்னொருவனையே சரணம் புகுந்தவனைக் காத்து, வீடும் அளிப்பேன்” என்று சொன்னார். ஏகம் என்பதைக் கருத்தில் கொண்டு ஆண்டாள் உமக்கே என்றார். 

இது கண்ணனின் சரம சுலோகம் ஆகும்.  “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”  – “எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்” என்பதையே தன்னை அடையும் வழியாகச் சொல்கிறார். .

இந்த பாடலே திருப்பாவையின் முக்கிய பாடலாக கருதப்படுகிறது.  நம் ஆச்சார்யார்கள், திருப்பாவை முப்பது பாடல்களையும் தினமும் சேவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  அப்படி முடியாமல் போனால் இந்த ஒரு பாடலையாவது சேவிக்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

இறுதிப் பாசுரமான “வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை” என்ற பாடல், திருப்பாவை படித்தால் நமக்கு கிடைக்கும் பலன்களை சொல்லும் பாடல் ஆகிறது. கிடைக்கும் பலன், “செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால், எங்கும் திருவருள் பெற்று இன்புறுவதே“.  மாதவனை, கேசவனை என்று அடுத்தடுத்து சொல்வது, திருபாற்கடலில், தேவர்களும், அசுரர்களும்,  கடைய முடியாமல் திணறிய போது, தானே பாற்கடலை கடைந்ததால், அழகிய நீண்ட கூந்தல் அங்கும் இங்கும் அலைபாய்ந்ததைப் பார்த்து கேசவன் என்றும்,  ஸ்ரீதேவியான மகாலக்ஷ்மியை பாற்கடலில் இருந்து பெற்றதால்  மாதவன் என்றும்  கூறுகிறார்.

ஆக, இந்த 30 பாடல்களில், ஆண்டாள், நாம் பரமாத்மாவை எப்படி வழி பட வேண்டும், (“தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவி தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க”), அவனிடம் என்ன கேட்க வேண்டும், (“இறைவா நீ தாராய் பறை”),  என்றும் அந்த வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலன்களையும் (“செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால், எங்கும் திருவருள் பெற்று இன்புறுவதே“), கூறி நம்மை நல்வழிப்படுத்தும் ஆண்டாளுக்கு நாம் செய்யும் மரியாதையாவது, அவர் சொல்படி நடப்பதே ஆகும். 

திருப்பாவையில் திவ்யதேசங்கள்

(இந்த பகுதியை நமக்கு whatsapp இல் அளித்த நண்பருக்கு நன்றி)

எண் பாடல் பதம் திவ்யதேசம்
1மார்கழித் திங்கள்நாராயணனே நமக்கே பறை தருவான் பரமபதம்.
2வையத்து பாற்கடலில் பையத் துயின்ற க்ஷீராப்தி/திருப்பாற்கடல்
3ஓங்கி ஓங்கி உலகளந்த உத்தமன்திருக்கோவலூர்
4ஆழிமழை பாழியம் தோளுடை பத்மநாபன் திரு அனந்தபுரம்
5மாயனை வடமதுரை மைந்தன் மதுரா
6புள்ளும் வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து திருவண் வண்டூர்
7கீச்சு கீச்சுகேசவனைப் பாடவும்திருவாய்ப்பாடி
8கீழ்வானம் தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.
9தூமணி மாடம் குன்றின்மேல் விளக்குதிருக் கடிகை
10நோற்று சுவர்க்கம் நாற்றத் துழாய்முடி நாராயணன்திருக்காட்கரை
11கற்றுக் கறவை முகில் வண்ணன் பேர் பாடகாளமேகப் பெருமாள் திருமோகூர்
12கனைத்திளம்தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்தில்லை திரு சித்திர கூட்டம்
13புள்ளின்வாய் பள்ளிக் கிடத்தியோ திருக்குடந்தை
14உங்கள் புழக்கடை நாவுடையாய் செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் – தேரழுந்தூர்.
15எல்லே மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் திருவல்லிக்கேணி.
16நாயகனாய் மாயன் மணிவண்ணன்திருக்குறுங்குடி.
17அம்பரமேஅம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் சீர்காழி
18உந்து மத களிறு பந்தார் விரலி மைத்துனன்திருநறையூர்
19குத்து விளக்குமலர்மார்பா திருவிடவெந்தை
20முப்பத்து மூவர்செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் திருப்பாடகம்
21ஏற்ற கலங்கள்ஊற்றமுடையாய் பெரியாய்பெரும்புறக் கடல் – திருக்கண்ண மங்கை
22அங்கண்மா ஞாலம் அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து திருமாலிருஞ் சோலை
23மாரி மலை முழஞ்சில் பூவை பூ வண்ணா திருவரங்கம்
24அன்றிவ் உலகம் குன்று குடையாய் கோவர்த்தனம்
25ஒருத்தி கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் திருக்கண்ணபுரம்
26மாலே மணிவண்ணா ஆலின் இலையாய் பூரி ஜெகன்நாதர்
27கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா திருவேங்கடம்
28கற்றுக் கறவைகுறை ஒன்றுமில்லாத கோவிந்தா விருந்தாவனம்
29சிற்றம் சிறுகாலைபறை கொள்வான் கோவிந்தா துவாரகை
30வங்கக் கடல் அணிபுதுவை ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆண்டாளின் சரிதை

இவ்வளவு பெருமைகளும் புகழும் உடைய திருப்பாவையை இயற்றிய ஆண்டாளின் ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில் நமக்கு நிறைய ஆர்வம் இருக்கும்.   அவைகளை அடுத்த வலைபதிப்பில் பார்க்கலாம்.

============================================================

Thirupaavai

After enjoying a brief  history about Periyazhwaar, we started discussing about the glories of Aandal. We have seen that Aandal had a good dharsan of Sri Krishna in  Naachiyaar thirumozhi at Brindavan.    I do not have any ability or wisdom or power to speak about the glories of Aandal or her famous compilation, namely, Thirupaavai.  Still I am trying to mention a few words on those.

Thiruvaimozhi, the prabhandham, by Swami Namazhwaar has got 5 different commentaries, the detailed explanations, by our Acharyars.    Similarly Thirupaavai, the prabandham, composed by Aandal has also got  as many different commentaries.

Naalaayira Divya Prabandham, the hymns composed by Azhwaars is arranged in such a way that Aandal’s Thirupaavai is placed next only to Periazhwaar Thirumozhi, which is the first in the list.

Aandal, wants to attain Lord Krishna (Kannan) by observing a serious set of prayers called Paavai Nonbu, (Nonbu means austerities that are observed for a specific purpose) and that is the basic objective in Thirupaavai.   Aandal is inspired by the life history of Sri Krishna, as told by Sri Periyazhwaar on Sri Krishna and one such instance is  the nonbu or viratham undertaken by the young girls in Thiruaaipaadi to attain Sri Krishna, called Karthyayani viratham. 

Aandal, in her Thirupaavai, considers Srivilliputhur as Thiruvaaipaadi, the temple in Srivilliputhur,  Vadaperunkoil, as the palace of Sri Nanthgopar, the adopted father of Sri Krishna, her friends or counterparts as the shepherdess, to observe the prayers or nonbu towards Lord Sri Krishna.

Thirupaavai has got a direct simple meaning.  At the same time, it has also a deep, inner meaning.    The simple meaning could be taken as waking up people, asking them to get together for the holy bath in the Tamil month of Margazhi (usually comes from 15th Dec to 14th Jan), praying for rain, praying for good bridegroom, preparing for the  prayers and offering  prayers to Sri Mahavishnu.     The deep inner meaning includes the explanation for “Dwayam”, one of the most important mantras (enchantment) of Vaishnavam.

The hymns of Aandal, has direct verbs and they direct us on what we should do and what we should not do very clearly.   In this way, Thirupaavai, is simple to understand and easy to follow.  Some examples are :

 • Paramanadi Paadi,
 • Nei Unnom, Paal Unnom
 • Mai Ittu Ezhuthom, Malarittu Naam Mudiyom, seiyaathana Seiyom
 • Theek kuralai sendru Othom, 
 • Thooyomaai vanthu naam, thoo malar, thoovi thozhuthu, vaayinaal paadi
 • manthinaal sinthikka, 
 • Devaathi devanai sendru naam sevithaal
 • Maameer, avalai ezhupeero
 • Manathukku iniyaanai, paadavum nee vaai thiravaai
 • Palkalanum Yaam anivom, aadai uduppom
 • utrome aavom umakke naam aatcheyvom

Aandal has given in Thirupaavai the meaning of

 • devotion towards Paramathma, 
 • devotion towards His devotees,
 • devotion towards the mantras,
 • the glories of Paramathma in terms of His care and concern to protect us and the
 • the absolute surrender, as per the philosophies of vaishnavism.

One of the acharyars (most probably Vedappiran Bhattar), has composed Paathagangal Theerkum, Paramanadi kaattum, vedham anaithukkum vithaagum, kodhai Tamil IyIynthum Iynthum ariyaatha maanidarai vaiyam sumappathuvum vambu” to single out those who do not know about Thirupaavai.   Here the phrase “Iyiythnum” means the first 25 hymns, namely,  5 multiplied by 5 (5 x 5 =25), and the phrase “iynthum” refers to the last 5 hymns.  The meaning of the above is “Thirupaavai will nullify the disadvantages, will show us the lotus feet of Paramathma, and it is the core  for all the Vedhams.  It will be a great burden to the Earth to bear the people who do not know the Thirupaavai, which contains twenty five plus five hymns”. The last five hymns are special in the sense, that they are composed after  Aandal had the dharsan of Sri Krishna and they contain her ecstatic joy on her direct dharsan of Sri Krishna.  

The same thing is explained as a reference to “varanamaayiram’, which is the sixth subsection of Nachiyaar Thirumozhi, another prabantham sung by Aandal. In that subsection, Aandal has sung about all the activities before the wedding with Emperumaan Kannan in the first five hymns and sung about the activities of wedding and the following activities in the next five hymns.

Aandal has composed hymns on Paramathma in each of his five states sequentially, namely, Para, Viyuha, Vibhava, Antharyaami and Archai, in the first five hymns of Thirupaavai. (“Naaryanane namake parai tharuvaan, paarkadalul paiya thuyinra paraman, Ongi ulagalantha uthaman, oozhi muthalvan, vadamadurai mainthan“)

The word “Parai” used by Aandal in her hymns refers to Moksham, which is beyond the materialistic value in life and the worldly pleasures , and which we pray to attain.

In the first hymn , Aandal invites her friends for taking bath as a part of Paavai Nonbu, a serious set of prayers to attain Sri Krishna,  by “neeraada pothuveer”, and then in the second hymn she gives a list of dos and don’ts, namely, nei unnom, pal unnom, maiyittu ezhuthom, malarittu naam mudiyom, meaning “will not eat ghee, will not drink milk, will not beautify our eyes with eyeliners, and WE will not wear flowers on our head.    While for ghee, milk and for the eyeliner, she did not use the word WE, but for the flowers alone she used the word “WE”.   It has an interesting reference to Sri Krishna’s younger days.  Aandal says that they (“WE”) would not wear the flowers by themselves, however, if Sri Krishna would come and help to wear the flowers on them, they would NOT stop it.  For this Aandal refers from the epic named Bhagawatham, where Sri Krishna in his early days, in Aaipaadi and Brindavan while playing with the Gopikasthrees helps them  to wear the flowers .

The dos and don’ts continue in the fifth hymn, namely, “Maayanai, mannu vada Madurai mainthanai” in terms of “Thoomalar Thoovith Thozhuthu, vaayinaal paadi, manathinaal sinthikka“, meaning “we pray God by sprinkling fresh flowers from our hands,  by praising Him through our mouth and we think about Him by our mind and heart”.   This is how Aandal asks us to do the prayers to Paramathma.

In the next hymn, “Pullum Silambina Kaan“, there is a sentence “Ullathuk kondu munivargalum, Yogikalum, mella ezhunthu“.   Here we are going to see two points.  First point is about the Antharyaami, who is residing  in our heart.  Aandal says that we should take care of the Antharyaami like how the saints and yogis would slowly get up and would carefully walk around.    The second point is that Aandal refers to two sets of people, Saints and Yogis.  Saints are those who learnt, understood and appreciated the greatness of Paramathma through the tough knowledge acquisition process.  Yogis were those who learnt, understood and appreciated the greatness of Paramathma through the actual service to Him.

In the first five hymns of Thiruppavai, Aandal invites the people for the “Pavai Nonbu”, serious set of prayers,  in general.  But in the next set of ten hymns, she addresses ten different individual girls, “Pillaai, Peipenne, Kodhu Kalamudaiya Paavaai, Maamaan Magale , Aatral Ananthal udayaai, porkodiye, narchelvan nangaai,  potharik kanninaai,  nangaai,   elle ilam kiliye” one after another.

In the 15th hymn of Thirupaavai, Aandal takes such a stand, when she mentions “Neengale naanee thaan aayiduga” in the hymn starting with “Elle ilamkiliye“.  According to Vaishnavam, a Vaishnavan has a mindset to take the blame of other’s misdeeds as their own and take the blame on themselves. This can further be explained with an important reference, like Bharathan in Ramayanam, the brother of Rama, who took all the blame on himself for Rama leaving the country to go to the forest, even though there were many others like, Kooni, Kaikeyi, Dasarathan or even Sri Rama Himself who could have been responsible for Rama being sent to forest.

Aandal  in the 16th hymn  Naayaganaai nindra shows us the procedure  in which we need to offer the prayers for Paramathma when we go to temples for dharsan .   We should first do the prayers to the Dwarapalagargal, those who do the service of manning the gates for Paramathma and get their permission before entering the temple.

In the  next hymn, (Ambarame Thanneere), Andaal tries to wake up the relatives of Sri Krishnar, like Nandagopalan and Yasodha (His adopted parents), Balaraaman (His brother).  Even here you may notice that Andaal does not recommend us to go to Sri Krishna directly, but she is trying to engage with His relatives and people who are closer to Him, telling us indirectly that we should only to go to those who are nearer to Him first, before approaching Him in the temples. Azhwaars, Acharyaars, Nithya Soories and Sudharsanaazhwaar are some examples who are always near to Sri Krishna or Paramathma.

The 18th hymn in Thirupaavai is “Unthu Matha Kalitran” and this hymn is totally dedicated to Sri Mahalakshmi or Thaayar as per our tradition.    The reason why we call this as Totally Dedicated, is because there is only one other hymn within Thiruppavai, where Aandaal does not address directly Sri Krishna or Paramathma. The other hymn is “angan Maa gnaalathu“.  But Aandal addresses Thaayaar directly as “Nandagopalan marumagale Nappinnaai” in this hymn.    In all other hymns, Aandal has used direct names like, Naarayanane, Paraman, Uthaman, Padmanaabhan, Maayan, Hari, Kesavan, Devaathi Devan, Maadhavan, Vaikunthan, Mugil Vannan, Manathirku Iniyaan (Sri Raman), Killikkalainthaan, Pankaya Kannaalan, Mani vannan, Umbar Komaan, Malar Maarban, Vimalaa, Ootramudaiyaai, Poovai Poovanna, Nedumaal, Manivanna, Govindaa    and indirect names like “vada madurai mainthan, Aayar kulathil thonrum anivillaku” to offer prayers to Paramathma.  Some of the Thiru Naamams (names) have been referred to more than once and they are,

 • Naaraayanan on three different occasions (1,7 and 10),
 • Thrivikraman on three different occassions (3,17 and 24),
 • Maayan on three different occassions (5, 15 and 16),
 • Sri Ramar (as Manthirku Iniyaan), on three different occasions in 12,13 and 24) and
 • Govindan on three different occasions in 27, 28 and 29.

Aandal has sung the name Thrivikraman  once in the first ten, once in the middle ten(11 to 20) and once in the last ten hymns (21 to 30) of Thiruppavai.   Similarly  Andal has sung the name Govindan in all the three  hymns, namely 27,28 and 29.     In addition she has sung the name Madhavan  on two different occassions, namely 7 and 30, whereas Manivannan  on hymns 16 and 26.

In the next hymn, “Kuthu Vilakku Eriya” Aandal starts praising Perumal, but somehow goes back to Thaayaar till the end of that hymn .    In the same way, in the next hymn too, she starts praising Perumal, but turns back to Thaayaar, pleading Her to listen to her prayers.    So whenever we do prayers, we should start with the relatives and people who are closer to Perumal, and then  Thaayaar, and  finally offering our prayers to Perumal, as  Aandal indicates in her hymns 16 to 20 in Thiruppavai.

In the subsequent three hymns, Aandal has just offered prayers to Perumal, but please keep in mind that she has not asked anything specific in her prayers in those hymns.

Aandal mentions only three of the ten incarnations of Perumal in her Thiruppavai.  Those are Thrivikraman, Sri Raman and Sri Krishnan.    However in the next hymn “Maari Malai Muzhanchil” she  indirectly mentions about Narasimha incarnation.

Aandal, daughter of Sri Periyazhwaar, composed the next hymn in line which is much similar to the “Pallaandu” on Paramathma, by Sri Periyazhwaar.  Pallaandu is a set of prayers through which Periyazhwaar wished Paramathma to live long to protect us.   In the next hymn, namely “Andru ivvulagam alanthaai adi potri“, Aandal wishes the Paramathma six times, of which she wishes Sri Krishnan, who is hailed so much by Sri Periyazhwaar,  four times and   Thrivikraman and Sri Raman two times each.

In the next hymn, “Oruthi Maganaai Piranthu“, Aandal feels that they do not have any pains or worries, due to the nonbu or the serious prayers, as their primary wish was to have a dharsan of Sri Krishna.In this hymn another important phrase is “varuthamum theernthu, magizhnthu“. Aandal clearly states that she and her friends were Bhagawanlaabarthigal in these three words.   If she has used only “varutham Theernthu” then it would have meant that she and her friends were not Aiswaryarthigal.   Since she stresses “varuthamum“, it clearly states that sadness of being Aiswaryarthigal as well as Kaivalyarthigal had gone.  The last word “magizhnthu” establishes that they are Bhagawanlaabarthigal.  

In the next hymn, “Maale Manivanna” Aandal praises the Paramathma to whom nothing is impossible , as He is the one who lies on the small banyan leaf  after  integrating and consuming the whole universe consisting of 14 worlds into Himself.   Likewise  it should be easy for Him to give whatever she yearns for.  

The 27th hymn starting “Koodaarai vellum seer Govinda“, is another interesting and significant one.  “Koodaarai Vellum Govinda” means, Govinda, the Paramathma could win over all including those who go against Him.   Interestingly the statement also means that the Paramathma would lose to those who would go with  Him. Aandal, in the hymn 2,  she says that they would not eat ghee, would not drink milk, and makes it clear that they have started the nonbu .  Similarly in this 27th hymn, she declares the ending of the  prayers or ending of the fasting by asking Krishna to bless her food.  Whatever Aandal has asked for, is not the normal food to satisfy the hunger. The food she asks for is to unite with Sri Krishna and enjoy that happiness, so that the previous sadness of not being with him is gone.  Also Aandal uses the word “koodi irunthu”, meaning “together”,  indicating that we should go together to do the prayers.

Aandal places Paramathma, Sri Govindan at a very high level and at the same time ,places all of us at a very low level, since we do not know anything.  In that process she wants Paramathma to excuse all our mistakes and give us abode the moksham, in the next hymn, namely, “Karavaigal Pin sendru“.    There are three other significant phrases in this hymn and they are “kurai ondrum illaatha Govinda“, meaning that Paramathma, Sri Govinda does not have even a single shortcoming.   Another one is “Punniyam Yaam Udaiyom“, meaning that Sri Kannan Himself is Auspicious and thinking about Him, Talking about Him and Looking at Him are all auspicious deeds. The last one is “Iraivaa nee thaaraai Parai“, meaning that “Almighty, please give me a place in Your world, or take us Abode”.  

Aandal has used the word “Parai” in many of the hymns so for, to indicate Moksham and in the  next hymn “Sitram Siru Kaalai vanthu unnai sevithu” she gives the benefits of reaching Moksham.   She requests that she wants to reach Him, Serve Him and she should not develop any other thoughts.  Aandal has mentioned another important aspect of Vaishnavism in this hymn, when she talks about “Umakke Naam Aatcheivom“, meaning “We will do service only to Yourself”, which also means that they would not offer service to anyone else, other than Paramathmaa or Sri Vishnu or Sri Krishna.   This is an important aspect of Vaishnavism, because, Sri Krishna, in Bhagawath Geetha, has told, “maam ekam sharaNam vraja“, meaning that all devotees should seek  only Him.    

This is part of the Krishna Charama Slogam, which reads as Sarva dharmaan parityajya maam ekam sharaNam vraja;  Aham tvaa sarva paapebhyo mokshayishyaami maa chucahaa” – meaning “The devotees should give up everything and seek only Him.  He would absolve the devotees of all sins and liberate them”.   

 This song is considered as the most important Hymn of Thiruppavai.   Our Acharyars have recommended that we should sing and pray  all the 30 hymns of Thiruppavai every day.  When that is not possible, the recommendation is that we should at least recite this hymn every day.

The last hymn in Thiruppavai “Vanga kadal kadaintha Maadhavanai Kesavanai“, gives us the benefits we get, when we recite Thiruppavai. The benefit is getting His Blessings to make us happy, as given by “Senkan Thirumugathu Selvath Thirumaalal, engum Thiru Arul Petru Inburvar“.  The word “Madhavanai” means that He got Sri Mahalakshmi.  One of the meanings for the word “Kesavan” is the person with lock of hair.   When the good and bad of celestial  world (Devas and Asuras), churned the milky ocean, they got tired and could not churn any further.  Then Paramathma Himself took both sides and continued to churn the ocean.    At that time He got Sri Mahalakshmi, as one of the outcomes of the churning of the ocean.   So Aandal called Him Maadhavan and immediately she called Him as Kesavan,  because His hair flowed here and there during the churning of the ocean.    And hence she used these two names, Madhavan and Kesavan, instead of using any other Thirunaamams.

To summarise, in these 30 hymns, Aandal has taught us on how to do the prayers for Paramathma, (Thooyomaai vanthu naam, thoo malar, thoovi thozhuthu, vaayinaal paadi, manthinaal sinthikka”), what to ask Him, (“Iraivaa nee thaaraai Parai”) and what is the benefit we get when do the prayers, (“Senkan Thirumugathu Selvath Thirumaalal, engum Thiru Arul Petru Inburvar”) and guide us in the right direction.  What we can do for Aandal in return, after learning about Thiruppavai, is that we should try to follow what she taught us.   

Aandal’s  Life

We started talking about the glories of Aandal and it kept growing and somehow we had a short glimpse of what she has told in Thiruppavai.   All of us should be equally interested in knowing the details of her birth and how she attained what she wanted.  Let us try to see those details in our next blog.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: