Vibavam-Kalki incarnation/விபவம்-கல்கி அவதாரம்

For English version, please click here, thanks :

கல்கி அவதாரம் – முன்னுரை

இதற்கு முன்பு தசாவதாரத்தில் பல அவதாரங்களையும், அவை இடம் பெற்ற யுகங்களையும் பார்த்து உள்ளோம்.  இதுவரை பார்த்த எல்லா அவதாரங்களுக்கும் கல்கி அவதாரத்துக்கும் உள்ள ஒரு வேறுபாடு, நாம் இப்போதுள்ள கலியுகத்தில் பிரம்மமான பகவான் எடுக்கப்போகும் அவதாரம் கல்கி அவதாரம் மட்டுமே என்று இந்த வலைபதிப்பை தொடங்குவோம்.

கலியுகத்தைப் பற்றி

கலியுகத்தில் உள்ள 432,000 ஆண்டுகளில் இப்போது சுமார் 5000 ஆண்டுகள் ஆகி உள்ளன. கலியுகத்தை வர்ணிக்கும் போது, சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் தர்மமானது ஒரு காலை இழந்து,  மூன்று கால்களுடன், 25. விழுக்காட்டை இழந்து தவிக்கும்.. த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் பசுமாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து கவலைப்படும் . கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் கொண்டு இருக்கும், கலியுக முடிவில் அந்தக் காலும் போய் விடும்.

பரமாத்மாவான கிருஷ்ண பகவான், எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம், நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன் என்று பகவத் கீதையில் அர்ச்சுனனுக்குச் சொல்கிறார்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)
பரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்|
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே|| (4-8)

  இது பாகவத்திலும் சொல்லப்படுகிறது

இத்தம் கலௌ கதப்ராயே ஜனே து கரதர்மினீ|
தர்மத்ராணாய ஸத்வேன பகவானவதரிஷ்யதி|| ((12-2-16)

இவ்வாறு கலியுகத்தில் மக்கள் அதர்மவாதிகளான பின் தர்மத்தை உறுதிபடுத்திட பகவான் அவதரிப்பார்.

கல்கி

கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்து, பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும்.  கல்கி அவதாரத்தில் பகவான் தானே குதிரை முகத்தோடு வெள்ளை குதிரையில் பளபளக்கும் நீண்ட கத்தியுடன் காட்சி அளிப்பார்.   கல்கி அவதாரத்தைப் பற்றி சொல்லும் போது, கல்கி இளமையுடனும், கல்வி, போர் மற்றும் விளையாட்டு துறைகளில் தேர்ச்சி பெற்றவராகவும்,மகா ஞானியாகவும், மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், பிராமண குல தாய் தந்தையை பெற்றவராகவும், சம்பல என்னும் ஊரில் பிறப்பவராகவும், தாமிரபரணி நதி பிரியும் இடத்தில இருப்பார் என்று கூறப்படுகிறது.

கல்கி அவதாரத்துடன் நாம் பர, வியூக நிலைகளுக்கு அடுத்ததான, மூன்றாவது நிலையான விபவத்திற்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து, அடுத்ததாக உள்ள அந்தர்யாமிக்குச் செல்வோம்.

அந்தர்யாமி

நம் அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக இருந்து நியமிக்கும் (நியந்திரத்வம்) எம்பெருமானின் இன்னொரு நிலை தான் அந்தர்யாமி என்பது.  அவர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.   நம் உடலுக்குள் உயிர் இருக்கிறது. அதுபோல் உயிருக்கு உயிராக, அந்தராத்மாவாக இருப்பவர், பகவான் விஷ்ணுதான்.  வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்திலும் கட்டைவிரல் அளவுள்ள இதயக்கமலத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமான் முழுவதும் வியாபித்து கம்பீரமாக வீற்றிருக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆக எம்பெருமான் தன்னுடைய ஐந்து நிலைகளிலும், ஸ்ரீமன் நாராயணன், எப்போதும் மஹாலக்ஷ்மியுடன் தான் வாசம் செய்கிறார். (எம்பெருமான் அந்தராத்மாவாக கட்டைவிரல் அளவிற்கு இருக்கிறார் என்று சொல்வது தவறு. எம்பெருமான் தன்னை சுருக்கி கொண்டு இருக்கும் தன்மை இன்னொரு நிலையான அர்ச்சைக்கு மட்டுமே பொருந்தும் என்பது நம் முன்னவர்கள் கருத்து.)

இவ்வுடம்பினுள்ளும், உயிரினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள இறைவன், உடம்பின் விகாரங்களையும், (அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே), உயிரின் இன்ப-துன்பங்களையும் அடைவதில்லை. இறைவன் வினை காரணமின்றி தன் விருப்பினால் இவ்விரண்டினுள்ளும் குடியிருப்பதால் இவ்விரண்டின் தன்மைகளையும் அடைவதில்லை.

நமக்குள் அந்தராத்மாக பகவான் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டால், நம் வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக நாம் புரிந்துகொண்டு செயல்படுவோம். எல்லா ஜீவாத்மாக்களுக்குள்ளும்  பகவானான அந்தராத்மாவாக உள்ளார் என்ற உண்மையை நாம் அறிந்து கொண்டால், மற்றவரோடு தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு உள்ள எல்லோரும் சமம், என்ற உணர்வுடன் செயல்பட்டு தர்மத்திற்கு உகந்த சரியான வார்த்தைகளை பேசுவோம், நல்ல செயல்களை மட்டுமே செய்வோம். நம் மனதிலிருந்து கொண்டு அந்தர்யாமி பகவான் நம்முடைய ஒவ்வொரு செயலையும் நியமிக்கிறார் / கண்காணிக்கிறார் என்ற விழிப்புணர்வுடன் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.  இது, வயது, கல்வி, செல்வம், ஜாதி, மதம், மொழி, நாடு மற்றும் எந்த விதமான பிரிவுகளுக்கும் அப்பாற்பட்ட தத்துவம் ஆகும், எல்லோரும் சமம், எல்லோர் உள்ளும் பகவான் உள்ளார், எல்லோரையம் மதிக்க வேண்டும், என்று எல்லோரையும் தர்மத்தின் வழி அழைத்து செல்லும் அந்தர்யாமி பற்றி மேலும் சில வரிகள்.

உருவம்

அந்தராத்மா உருவம் உள்ளதா அல்லது அருவமா (உருவம் இல்லாததா) என்று கேட்டால் ஒரு சிலருக்கு உருவத்தோடும் மற்றவர்களுக்கு அருவத்தோடும் காட்சி அளிப்பதாக பிள்ளை லோகாச்சாரியார் கூறுவார். திருமழிசையாழ்வார் “நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள், சென்றிருந்து தீவினைகள் தீர்த்த தேவ தேவனே” , திருச்சந்தவிருத்தம் (63) பாடலில் கூறியது போல், யோக சாஸ்திரம் தெரிந்தவர்களுக்கு மஹாலக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமான் திருவுருவதோடு காட்சி அளிப்பதும் மற்றவர்களுக்கு அருவத்தோடு இருப்பதும் தெரிய வரும் என்றும் பிள்ளை லோகாச்சாரியார் கூறுகிறார்.

அந்தர்யாமி பாசுரங்களில் சில

நம்மாழ்வார்,

“விண் மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண் மீது உழல்வாய்! இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்– (திருவாய்மொழி 6-9-5)

பொய்கையாழ்வார்,

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்துள்– உளன் கண்டாய்
வெள்ளத்திலுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்திலுள்ளான் என்றோர்’ (முதல் திருவந்தாதி- 99)

திருமழிசைபிரான் (அந்தர்யாமியிலேயே லயித்தவர்),

அக்கரங்கள் அக்கரங்கள்  என்றுமாவதென்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங் கொள் கையனே சடங்கர்வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே

தொண்டரடிப்பொடியாழ்வார்,

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவார் உணர்வு ஒன்றில்லா, கள்ளத்தேன் நானும் தொண்டாய், தொண்டுக்கே கோலம் பூண்டு, உள்ளுவார் உள்ளிற்றி எல்லாம் உடன் இருந்து அறிதி என்று, வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.     (திருமாலை 34)

ஆண்டாளின் சிறப்பு, ஐந்து இறை நிலைகளில்,

  • முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணனே நமக்கே பறை தருவான்),
  • இரண்டாவதில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்),
  • மூன்றாவதில் விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி),
  • நான்காவது பாடலில் அந்தர்யாமியாக எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் (ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து) கொண்டாடிய சூடிக் கொடுத்த நாச்சியார்
  • ஐந்தாவது பாசுரத்தில் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அர்ச்சாவதர கோலத்தை (மாயனை மன்னு வடமதுரை மைந்தனனை) வடமதுரை  மைந்தன் என்று பாடுகிறார்!

ஆக, ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடி நம்மையும் பிரம்மத்தின் நான்காவது நிலையான அந்தர்யாமியில் இருந்து அர்ச்சைக்கு  அழைத்துச் செல்கிறார்.

===============================================================

Kalki Incarnation – Introduction

In our previous weblogs, we have seen a few incarnations from Dasaavathaaram and in which yugams they had happened, like Krutha, Thretha, Dwapara and Kali. There is a basic difference between the  incarnations which we have seen earlier and the one which we are going to see, namely, Kalki Incarnation.   This  incarnation of Brahmam, Kalki, is expected to happen during this Kali Yugam, in which we are living, unlike the other incarnations which have happened in the other three yugams.

About Kali Yugam

Out of 432,00 years that Kali Yugam has got, about 5000 years have been already passed.   Before describing Kaliyugam, let us start with Dharma, which is about good conduct, honesty, being fair etc.    Dharma is described as a cow standing on four legs, when everyone follows all the right things.    In the Krutha Yugam, Dharma, the  cow, would stand on all four legs.    But during Tretha Yugam, Dharma, the cow would lose one of its legs, in other words, 25% of good things or honesty would have been lost.  In Dwapara yugam, another 25% would be lost, which means the cow would be standing with 2 legs.   In Kali Yugam, the cow would lose one more leg and will be struggling to stand.  By the end of Kali Yugam the cow would lose its fourth leg and all the dharma in this world would have been destroyed, which the Brahmam can not tolerate.

Whenever Dharamam loses its power and Adharama (the opposite of Dharma) takes control, Sri Krishna, in Bagawath Geethai tells Arjuna that He would come and takes an Incarnation to protect the good people and to destroy the bad.

A Sanskirt solga from Bagawat Geethai,

yathaa yathaa hi dharmasya  gllaaneerbhavathi bharatha| apyuthaanamadharmasya thathaathmaanam srujaamyagam|| (4-7)  and  

Parithraanaaya Saadunaam vinaashaaya  sathushkruthaam| dharma samsthaapanaarthaaya sambhavaami yuge yuge|| (4-8)

Similarly in Bagawatham,

ithaam kalow kathapraaye janethu karadharminee|  Dharmathraanaaya sathven bagawaan avatharishyathi || (12-2-16)

Thus in Kaliyugam, after the people turned fully into bad (in terms of not following the right things, being fair to others, etc), Paramathmaa will take another incarnation and protect Dharmam.

At the end of Kaliyugam, the word will get destroyed and the new cycle of yugams will start with Krutha Yugam.  Vishnu, the Paramathma, when He  takes the incarnation of Kalki, the world will change into the old Kritha Yugam, where all the powers of Dharmam will be restored. Kalki will have a horse face and He would ride on a glittering white horse with a long sword. Kalki will be young, a master in knowledge, a great warrior, a superior sports person, a very intelligent and the most powerful person.   He will be born in a Brahmin family and at a place called Sambala.   It is also stated that He will stay near the banks of the river Thamirabarani.

With this we will come to the temporary conclusion on our discussions about Vibavam, which is the Third state of Brahmam, after the first two states, namely, Para and Viyuha and we will move to the next state, namely, Antharyaami.

Antharyaami

The soul within each and everyone of us is generally, called as, Antharathmaa and it is the fourth state of Brahmam. Antharyaami is the characteristics of the antharathmaa which drives or which is instrumental in every action of the Jeevathmaa.  It means that Brahmam resides in each and everyone of us.   Like the soul that is within us, Antharathma is the soul to our soul, in other words the soul within us is called as Jeevathmaa and the soul for the Jeevathmaa is the Paramathmaa.  So Paramathmaa, or Sri Vishnu or Sri Narayan resides within each and every one of us.   Vedas refer this as Paramathmaa, sitting majestically along with Sri Mahalakshmi, in a place within every individual’s heart, called ‘hrthyakamalam’ which is of the size equivalent to his or her thumb, where He spreads Himself occupying the entire place. So in all the five states of Brahmam, Sriman Narayanan is always with Mahalakshmi.

Even though the Paramathmaa resides within our soul and body as Antharathmaa, He does not undergo any changes or does not get affected by the sorrows and happiness that we undergo.     We, or the Jeevathmaas, undergo happiness and/or sorrow due to our own actions, which are directly due to the Karmas, or our  actions that are based on the good and/or bad behaviour practised by us  in the past and/or in our previous births. Paramathmaa does not have any Karmas associated with Him and the Karmas do not come near Him.   Paramathmaa comes inside us or inside our Jeevathmaas on His own and not due to any Karmas.   And that is the reason why He never undergoes any change (avikaaraya sudhaaya nithyaaye paramathmane) or the happiness or sorrow does not affect Paramathmaa.

The moment, we start realising that Paramathaa stays within us as Antharathmaa all the times, then we have a better probability to understand the purpose of our life.  Similarly when we understand that Paramathmaa resides in all others inside them as their Antharathmaas, then whenever we interact with others, all our actions will be based on the fact that all of us are equal, in the sense that we, as well all others have Paramathma inside them as Antharathmaas.   The above two statements should drive us towards doing all the right things, all the time.   Whatever we speak or whatever we do, will reflect them and we end up doing all the right things.   Antharathmaas that are residing within us will become our consciousness  and we will realise that the Paramathmaa is watching us all the time.   This philosophy is universal and beyond age, education, wealth, caste, language, country and any other divisions.   The fact that we are all same and we all have Paramathmaa as Antharatmai, should take all of us towards the path of Dharma.

Form

Pillai Logachariyaar explained whether Antharatmaa has any specific form or it does not have any form. He says that Emperumaan in His Antharatmaa state will have specific form for some people and will not have any form for all others. Thirumazhisai azhwaar sang, “nandrirunthu yoga neethi nannuvaarkal sinthayul, sendru irunthu thee vinaikal theertha Deva Deavane ” (Thiruchantha virutham 63), meaning ‘You reside in thoughts of all to take the Yoga path to You, O Lord of Gods, You go to them and clear their path by removing the results of their sinful activities of the past” and this was taken as a quote to explain that Antharatmaa for those who mastered the Yoga Sasthram (Techniques) will have the specific form Emperumaan with Mahalakshmi as their Antharatma, whereas for all others, Antharatma will be without any form.

A Few Hymns on Antharyaami

Namazhwaar,

“vin meethu iruppaai, malai mel nirpaai, kadal serppai! mann meethu uzhalvaai, ivatrul engum marainthu uraivaai ! ” – Thiruvaaimozhi 6-9-5)  

Poigai Azhwaar,

“ulan kandaai nan nenje uthaman endrum, ulan kandaai ulluvaar ullaththul – ulan kandaai, vellathil ullaanum, venkadathu meyaanum, ullathil ullaan endroor” – (Muthal Thiruventhathi – 99)

Thirumazhisai piraan (who  has enjoyed Antharyaami, the most)

Akkarangal, akkarangal endrumaavathu enkolo? Ikkurmbai neeki, ennai eeasanaakaa vallayel, chakarang kol kaiyane, sadangarvaai adankida, utkidanthavanname puram posinthu kaatide 

Thondaradipodi Azhwaar,

ullathey uraiyum maalai, ulluvaar unarvu ondru illa, kallaththen naanum thondaai, thondukke kolam poondu, ulluvaar ullitri ellam udan irunthu arithi endru, velkip poi ennulley naan vilavarach sirithitene (Thirumaalai 34)

Like many specials, Aandaal in her work, Thiruppavai, covers each state sequentially in each of the first five hymns.

  • In the first hymn, she mentions Paravasudevan, as “Narayanane nammake parai tharvaan
  • In the second hymn, she describes,  Viyuha Vasudevan as “paar kadalul paiya thuyindra paraman
  • In the third hymn, she adores about  Thiruvikraman, who is a Vibhavamoorthi and the fifth incarnation in Dasavathaaram, (Ongi, ullakalantha uthaaman per paadi)
  • In the  fourth hymn, she worships the Antharyaami  (oozhi muthalvan urvam pol mei karuthu)  and
  • In the fifth hymn, she refers to the fifth state, Archai, (Maayanai, Vadamathurai Mainthanai).

Aandal has glorified all the five states of Paramathmaa, namely, Para, Viyuga, Vibhava, Antharyaami and Archai in her first five hymns of Thiruppaavai and thus, she has helped us to carry us from the fourth state of Antharyaami to the fifth state, namely, Archai, which we will discuss in our  future weblogs.

=========================================================================

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: