108 Divya Desangal / 108 திவ்யதேசங்கள்

இது ஒரு அட்டவணை பகுதி ஆகும்.  இங்கு 108 திவ்யதேசங்களைப்பற்றி சில தகவல் சொல்ல ஆசை, நம் படித்த தெரிந்து கொண்ட, சென்று அருள் பெற்ற சில விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷப்படுகிறேன். வழக்கம் போல் உங்கள் கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

108 வைணவத் திருத்தலங்களில்

  • 84 தமிழ்நாட்டிலும்,
  • 11 கேரளாவிலும்,
  • 2 ஆந்திராவிலும்,
  • 4 உத்தரப் பிரதேசத்திலும்,
  • 3 உத்தரகாண்ட்டிலும்,
  • 1 குஜராத்திலும்,
  • 1 நேபாளத்திலும்,
  • 2 வானுலகிலும் உள்ளன.

இதையே

முக்கியமாக, தினம் ஒரு திவ்யதேசம் என்று முன்பு ஒரு வலைப்பதிவு இருந்தது, அதில் பல நல்ல தகவல்கள் இருந்தன. அங்கு இருந்து பதிவுஇறக்கம் செய்யப்பட்ட சில pdf ஆவணங்களையும் வெளியிடலாம் என்று இருக்கிறோம். அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்களின் ஆசியும், ஆதரவும் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதை வெளியிடுகிறோம். இவை எப்பொழுது முதலில் பதிவு செய்தது என்பது நமக்கு தெரியாது என்பதால், அந்த தகவல்களை, மறுமுறை உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி.

மீண்டும், அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

மேலும் சில வலைப்பதிவுகள்

http://www.divyadesam.org/travel.html

http://www.tamilvu.org/library/l4211/html/l4211cnt.htm

தினமலர் நாளேடு கோவில்களின் / கோபுரத்தின் 360 degree view என்று சில கோவில்களுக்கு கொடுத்துள்ளனர். https://www.dinamalar.com/360view_main.asp என்ற வலைத்தளத்தில் இவை பற்றி பார்க்கலாம்.

சோழ நாட்டுத் திருப்பதிகள்

திவ்யதேசம்மூலவர் /
உத்சவர் /
தாயார்
திருக்
கோலம்
திருமுக மண்டலம் பாடல்
1. திருவரங்கம் ரங்கநாதர் /
நம்பெருமாள் /
ரங்கநாயகி
கிடந்த தெற்கு 247
2. திருக்கோழி (உறையூர்)அழகியமணவாளன் /
சுந்தரவரையர் /
கமலவல்லி
நின்ற வடக்கு 2
3. திருக்கரம்பனூர்
(உத்தமர் கோயில்)(பிச்சாண்டார் கோவில்)
புருஷோத்தமன் /
புருஷோத்தமன் /
பூரணவல்லி தாயார் /
கிடந்த கிழக்கு 1
4. திருவெள்ளரை புண்டரீகாக்ஷன் /
செந்தாமரை கண்ணன் /
பங்கஜவல்லி
நின்ற கிழக்கு 24
5. திருஅன்பில் வடிவழகியநம்பி /
சுந்தரராஜன் /
அழகியவல்லி
கிடந்த கிழக்கு 1
6. திருப்பேர்நகர்
கோவிலடி
அப்பக்குடத்தான் /
அப்பாலரங்கன் /
இந்திராதேவி
கிடந்த மேற்கு 33
7. திருக்கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள்
கமலநாதன்
கமலவல்லி
நின்ற கிழக்கு 1
8. திருக்கூடலூர்
ஆடுதுறை
ஜெகத்ரக்ஷகன்
வையம்காத்தப்பெருமாள்
பத்மாஸனி தாயார்
நின்ற கிழக்கு 10
9. திருக்கவித்தலம்
கபிஸ்தலம்
கஜேந்திரவரதன்
கஜேந்திரவரதன்
ராமமணிவல்லி
கிடந்த கிழக்கு 1
10. திருப்புள்ளபூதங்குடி வல்வில்ராமன்
இராமன்
பொற்றாமரையாள் /
ஹேமாம்புஜவல்லி
கிடந்த கிழக்கு 10
11. திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்
ரங்கநாயகி
கிடந்த கிழக்கு 1
12. திருக்குடந்தை சாரங்கபாணி /
ஆராவமுதன் /
கோமளவல்லி நாச்சியார்
கிடந்த கிழக்கு 51
13. திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் /
பூமாதேவி தாயார்
நின்ற கிழக்கு 47
14. திருநறையூர் (நாச்சியார் கோவில்) திருநறையூர் நம்பி,
ஸ்ரீனிவாசன்,
வாசுதேவன் /
வஞ்சுளவல்லி,
நம்பிக்கை நாச்சியார்
நின்ற கிழக்கு 110
15. திருச்சேறை சாரநாதன் /
சாரநாச்சியார் /
மாமதலைப்பிரான்
நின்ற கிழக்கு 12
16. திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள்,
பத்தராவிப் பெருமாள்,
அபிஷேகவல்லி தாயார்
நின்ற கிழக்கு 14
17. திருக்கண்ணபுரம் நீளமேகப்பெருமாள் /
சௌரிராஜன் /
கண்ணபுர நாயகி,
பத்மினி
நின்ற கிழக்கு 128
18. திருக்கண்ணங்குடி லோகநாதன் /
தாமோதர நாராயணன் /
லோகநாயகி .
அரவிந்தவல்லி
நின்ற கிழக்கு 10
19. திருநாகை நீலமேக பெருமாள் /
சௌந்தர்ய ராஜன் /
ஸௌந்தர்யவல்லி /
கஜலக்ஷ்மி
நின்ற கிழக்கு 10
20. தஞ்சை மாமணிக்கோவில் (3 கோவில்கள்) நீலமேக பெருமாள் /
மணிக்குன்ற பெருமாள் /
தஞ்சையாளி பெருமாள் /
ஸ்ரீமன் நாராயணன் (உற்சவர்) / செங்கமலவல்லி /
அம்புஜவல்லி /
தஞ்சைநாயகி
வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு 5
21. திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)ஜகந்நாதன் /
செண்பகவல்லி தாயார் /
வீற்றிருந்த கிழக்கு 10
22. திருவெள்ளியங்குடி கோல வில் இராமன் /
சிருங்கார சுந்தரன் /
மரகவல்லி
கிடந்த கிழக்கு 10
23. தேரழுந்தூர் தேவாதிராஜன் /
ஆமருவியப்பன் /
செங்கமலவல்லி
நின்ற கிழக்கு 45
24. திருச்சிறுபுலியூர் அருள்மாகடல் பெருமாள் /
க்ருபாசமுத்திர பெருமாள் /
திருமாமகள் நாச்சியார்
கிடந்த தெற்கு 10
25. திருதலைச்சங்க நாண்மதியம் நாண்மதிய பெருமாள் /
வியோமஜோதிபிரான் /
தலைச்சங்க நாச்சியார்
நின்ற கிழக்கு 2
26. திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் /
பரிமள ரங்கநாதர் /
சுகந்தவல்லி தாயார்
கிடந்த (வீர சயனம்)கிழக்கு 11
27. திருக்காவளம்பாடி
( திருநாங்கூர் திவ்யதேசம் 1)
கோபாலகிருஷ்ணன் /
ராஜகோபாலன் /
மடவரல்மங்கை
நின்ற கிழக்கு 10
28. திருக்காழிசீராம விண்ணகரம்
(சீர்காழி)
த்ரிவிக்ரம நாராயணர் /
லோகநாதன் / தாடாளன்
லோகநாயகி தாயார்
நின்ற கிழக்கு 10
29. திருஅரிமேயவிண்ணகரம்
(திருநாங்கூர் 2)
குடமாடுகூத்தன் /
அமிர்தகடவல்லி
நின்ற கிழக்கு 10
30. திருவண்புருஷோத்தமம்
(திருநாங்கூர் 3)
புருஷோத்தமன் /
புருஷோத்தம நாயகி
நின்ற கிழக்கு 10
31. திருச்செம்பொன்செய் கோவில்
திருநாங்கூர் 4)
பேரருளாளன் /
ஹேமரங்கர் / செம்பொன்னரங்கர்
அல்லி மாமலர் நாச்சியார்
நின்ற கிழக்கு 10
32. திருமணிமாடக்கோவில்
(திருநாங்கூர் 5)
நாராயணன் / நந்தா விளக்கு
நாராயணன், அளதற்குஅரியான்
புண்டரீகவல்லித்தாயார்
வீற்றுஇருந்த கிழக்கு 12
33. திருவைகுந்தவிண்ணகரம் (திருநாங்கூர் 6)வைகுந்தநாதன், தாமரை கண்ணுடையபிரான்
வைகுந்தவல்லி தாயார்
வீற்று இருந்த கிழக்கு 10
34. திருவாலி திருநகரி லட்சுமி நரசிம்மர் / வேதராஜன்
வயலாளி மணவாளன் / கல்யாண ரங்கநாதன்
அம்ருதகடவல்லி / அம்ருதவல்லி
வீற்று இருந்த /
வீற்று இருந்த
மேற்கு
மேற்கு
41
35, திருத்தேவனார்தொகை (திருநாங்கூர் 7)தெய்வநாயப்பெருமாள் /
மாதவப்பெருமாள் /
கடல்மகள் நாச்சியார் / மாதவநாயகி
நின்ற திருக்கோலம் கிழக்கு 10
36. திருதெற்றியம்பலம்
(திருநாங்கூர் 8)
செங்கண்மால், ரங்கநாதன்
செங்கமலவல்லி
சயனத்திருக்கோலம்
புஜங்க சயனம்
கிழக்கு 10
37. திருமணிகூடம்
(திருநாங்கூர் 9)
வரதராஜபெருமாள்/மணிகூடநாயகன்
திருமாமகள் நாச்சியார்
நின்ற திருக்கோலம் கிழக்கு 10
38. திருவெள்ளக்குளம் (திருநாங்கூர் 10)ஸ்ரீநிவாசன் / அண்ணன் பெருமாள் / பத்மாவதித் தாயார் / அலர்மேல்மங்கை /நின்ற திருக்கோலம் கிழக்கு 10
39. திருப்பார்த்தன் பள்ளி (திருநாங்கூர் 11) தாமரையாள் கேள்வன் / பார்த்தசாரதி / தாமரை நாயகி தாயார் நின்ற திருக்கோலம் மேற்கு 10
40. திருச்சித்திரகூடம் (சிதம்பரம்) கோவிந்தராஜன் / தேவாதி தேவன் / பார்த்தசாரதி / புண்டரீகவல்லி சயன திருக்கோலம் (போக சயனம்)கிழக்கு 22
சோழ நாட்டு திவ்யதேசங்கள்

தொண்டை நாடு மற்றும் நடு நாட்டுத் திருப்பதிகள்

திவ்யதேசம் மூலவர் /
உத்சவர் /
தாயார்
திருக்
கோலம்
திருமுக மண்டலம்பாடல்
41. திருவஹீந்திரபுரம் தெய்வநாயகன்
தேவநாதன்
ஹேமாம்புஜவல்லி
நின்ற கிழக்கு 10
42. திருக்கோவலூர் த்ரிவிக்ரமன் /
ஆயனார் /
பூங்கோவல் நாச்சியார்
நின்ற கிழக்கு 21
43. திருக்கச்சி (காஞ்சீபுரம்)தேவப்பெருமாள் /
பேரருளாளன் /
பெருந்தேவித்தாயார்
நின்ற மேற்கு 7
44. திருஅஷ்டபுஜகரம் ஆதிகேசவப்பெருமாள் /
கஜேந்திர வரதன் /
அலர்மேல்மங்கை
நின்ற மேற்கு 12
45. திருத்தண்கா தீபப்பிரகாசர் /
விளக்கொளிபெருமாள் /
மரகதவல்லி
நின்ற மேற்கு 2
46. திருவேளுக்கை அழகியசிங்கர் /
முகுந்தநாயகன் /
வேளுக்கைவல்லி
அமர்ந்த மேற்கு 4
47. திருநீரகம் ஜெகதீஸ்வரர் /
நிலமங்கைவல்லி
நின்ற தெற்கு 1
48. திருப்பாடகம் பாண்டவதூதப்பெருமாள்
ருக்மணி சத்தியபாமா
வீற்று இருந்த திருக்கோலம் கிழக்கு 6
49. திருநிலாத்திங்கள் தூண்டம் நிலா திங்கள் துண்டத்தான் / நேர் ஒருவரில்லா வல்லி நின்ற
திருக்கோலம்
மேற்கு 1
50. திருஊரகம் உலகளந்த பெருமாள் /
பேரகத்தான் /
அமுதவல்லித் தாயார்
நின்ற
திருக்கோலம்
மேற்கு 6
51. திருவெஃகா சொன்னவண்ணம் செய்த பெருமாள் / யதோக்தகாரி /
கோமளவல்லி
புஜங்க சயனம் மேற்கு 15
52. திருக்காரகம் கருணாகரப்பெருமாள்
பத்மாமணி நாச்சியார்
நின்ற
திருக்கோலம்
தெற்கு 1
53, திருக்கார்வானம் கள்வர் /
கமலவல்லி / தாமரையாள்
நின்ற
திருக்கோலம்
மேற்கு 1
54. திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள்
அஞ்சிலை வல்லி நாச்சியார்
நின்ற
திருக்கோலம்
மேற்கு 1
55. திருப்பவளவண்ணம் திருப்பவளவண்ணன் /
பவளவல்லி
நின்ற
திருக்கோலம்
மேற்கு 1
56. திருப்பரமேச்சுர விண்ணகரம்பரமபத நாதன் /
வைகுந்தவல்லி
வீற்று இருந்த திருக்கோலம் மேற்கு 10
57. திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் /
மரகதவல்லித் தாயார்
வீற்று இருந்த திருக்கோலம் கிழக்கு 2
58. திருநின்றவூர் பக்தராவிப்பெருமாள் / பக்தவத்சலப்பெருமாள் /
என்னை பெற்ற தாய்
நின்ற
திருக்கோலம்
கிழக்கு 2
59. திருஎவ்வுள் (திருவள்ளூர்) வைத்யவீரராகவன் /
வீரராகவன் /
வசுமதி
புஜங்க
சயனம்
கிழக்கு 12
60. திருவல்லிக்கேணி வேங்கடகிருஷ்ணன் /
பார்த்தசாரதி /
ருக்மணி தாயார்
நின்ற
திருக்கோலம்
கிழக்கு 12
61. திருநீர்மலை நீர்வண்ணன் /
நீலவண்ணப்பெருமாள் /
அணிமாமலர் மங்கை
நின்ற
திருக்கோலம்
கிழக்கு 20
62. திருஇடவெந்தை வராகப்பெருமாள் /
நித்யகல்யாண பெருமாள்
அகிலவல்லிநாச்சியார்
நின்ற
திருக்கோலம்
கிழக்கு 13
63. திருக் கடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் /
உலகுய்ய நின்ற பெருமாள் /
நிலமங்கைத் தாயார்
கிடந்த திருக்கோலம் கிழக்கு 27
64. திருக்கடிகை யோகநரஸிம்ஹர் /
பக்தவத்சல பெருமாள்
அமிர்தவல்லி தாயார் /
அமர்ந்த திருக்கோலம் கிழக்கு 4

வடநாட்டு திருப்பதிகள்

Thanks to Google Map
திவ்யதேசம் மூலவர் /
உத்சவர் /
தாயார்
திருக்
கோலம்
திருமுக
மண்டலம்
பாடல்
65. திருஅயோத்தி ராமச்சந்திரமூர்த்தி,
சக்ரவர்த்தி திருமகன்
சீதா தேவி,
வீற்றுஇருந்த
திருக்கோலம்
வடக்கே
திருமுக
மண்டலம்
13
66 . திருநைமிசாரண்யம் ஸ்ரீதேவராஜன்
ஸ்ரீ ஹரி
ஸ்ரீ ஹரிலக்ஷ்மி
நின்ற
திருக்கோலம்
கிழக்கே
திருமுக
மண்டலம்
10
67. திருப்பிரிதி பரமபுருஷன்
பரிமளவள்ளி நாச்சியார்
சயனத்
திருக்கோலம்
கிழக்கே
திருமுக மண்டலம்
10
68. திருகண்டமெனும் கடிநகர் புருஷோத்தமன்
ரகுநாதஜீ
புண்டரீகவல்லி
நின்ற திருக்கோலம் கிழக்கே
திருமுக மண்டலம்
11
69. திருபதரிகாச்ரமம் பதரி நாராயணன்
அரவிந்தவல்லி
அமர்ந்த திருக்கோலம் கிழக்கே
திருமுக மண்டலம்
22
70. திருசாளக்ராமம் ஸ்ரீ மூர்த்தி
ஸ்ரீ தேவி நாச்சியார்
நின்ற திருக்கோலம் வடக்கே திருமுக மண்டலம் 12
71. திருவடமதுரா கோவர்தனேஸன் பாலகிருஷ்ணன்
சத்தியபாமா நாச்சியார்
நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் 50
72. திருவாய்ப்பாடி நவமோஹனகிருஷ்ணன்
ருக்மணி
சத்தியபாமா
நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் 22
73. திருத்துவாரகை கல்யாணநாராயண பெருமாள் –துவாரகாதீசன் – துவாரகாநாத்ஜீ
கல்யாண நாச்சியார் / ருக்மணி தேவி 
நின்ற திருக்கோலம்மேற்கே திருமுக மண்டலம் 13
74. திருஅஹோபிலம் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹர் / ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன் / அஹோபில நரசிம்மர்
மாலோல நரசிம்மர்
ஸ்ரீ செஞ்சு லட்சுமி / ஸ்ரீ அமிர்தவல்லி
அமர்ந்த திருக்கோலம் கிழக்கே திருமுகமாண்டலம் 10
75. திருவேங்கடம் திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான் கோவிந்தராஜன்நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் 202
75.1 திருவேங்கடம் 1முதல் பகுதி – திருத்தல பெயர்
திருத்தல பெருமைகள்
சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்
75.2 திருவேங்கடம் 2இரண்டாம் பகுதி – ஆதிவராக பெருமாள்
திருமலை நடைவழி, திருவேங்கடத்தின் ஏழு மலைகள், திருமலையின் ஐந்து மூர்த்திகள்
திருமலையின் தீர்த்தங்கள், கீழ் திருப்பதி,
திருமலை, அலர்மேல்மங்காபுரம்
75.3 திருவேங்கடம் 3மூன்றாம் பகுதி – திருமலை நிகழ்ச்சிகள்
திருவிழாக்கள், மற்ற திருக்கோவில்கள் மற்றும் ஸ்தல வரலாறு
75.4 திருவேங்கடம் 4நான்காம் பகுதி – ராமானுஜர் திருமலை விஜயங்கள்
ஆழ்வார்கள்
ஆச்சார்யர்கள்
RSS
Follow by Email
%d bloggers like this: