முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam

For English version, please click here.  Thanks.

குலசேகர ஆழ்வார்

நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம்.  அவர் எழுதிய நூல்களை பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி என்பதாகும்.  முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு.

முகுந்த மாலை

மணவாள மாமுனிகள் என்ற ஆசார்யார், ஆழ்வார்களை பற்றி தான் தொகுத்து அளிக்கும் போது, தன்னுடைய உரையில், முகுந்த மாலை, இது பெருமாள் திருமொழி எழுதிய குலசேகர ஆழ்வார் எழுதியது, என்று குறிப்பிடவில்லை. அதே போல், ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலான “திவ்ய சூரி சரிதம்” முதலியவற்றில் முகுந்தமாலை பற்றி குறிப்பு எதுவும் இல்லை. ஆழ்வார்கள் இந்த மண்ணில் அவதரித்தற்கு முக்கிய காரணம், வடமொழி வேதத்தைத் தமிழில் அருளிச் செய்வதாகும். மற்ற எந்த ஆழ்வார்களும் தமிழைத் தவிர வேறு எந்த ஒரு மொழியிலும் எதையும் எழுதியதாக தெரியவில்லை. அதோடு ஐந்து அல்லது ஆறு குலசேகர மன்னர்களை பற்றி சரித்திரம் உள்ளது. குலசேகர என்றால் குலத்தில் சிறந்தவராக சிகரம் போல் விளங்கினார் என்று பொருள், அது மற்ற குலசேகரர்களுக்கும் பொருந்தும். அதனால் முகுந்த மாலையை வேறு ஒரு குலசேகர மன்னர்  எழுதியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

பெருமாள் திருமொழி

நாதமுனிகள் நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், பெருமாள் திருமொழியை முதல் ஆயிரத்தில் தொகுத்து கொடுத்துள்ளார். முதல் ஆயிரத்தில் உள்ள மற்ற பிரபந்தங்கள் :

மற்ற ஆயிரங்களில் உள்ள பிரபந்தங்களின்  தொகுப்புகள் :

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை, மற்றொரு ஆயிரத்திலும், ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியை இன்னொரு ஆயிரத்தில்  தொகுத்து உள்ளார். பின்னாளில் திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமானுச நூற்றுஅந்தாதியும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

தனியன்கள்

தனியன் என்பது ஆழ்வார்கள்-ஆசார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம். பெருமாள் திருமொழிக்கு இரண்டு தனியன்கள் உள்ளன. முதல் தனியனின் பெருமையே இது  சுவாமி இராமானுஜர்,  அருளிச் செய்த தனியன் என்பதாகும்.

இன்னமுத மூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள்
பொன்னஞ்சிலை சேர் சேரலர் கோன்
எங்கள் குலசேகரன் என்றே கூறு

இதன் பொருள், அழகான கிளியே இங்கே வா, உனக்கு சுவையான அமுது படைக்கிறேன், வில்போல் அழகிய புருவங்கள் கொண்டவரும், எல்லா மாதர்களாலும் வணங்கப்படுகின்றவராகிய,   எங்கள் சேர குல அரசரான, குலசேகரா என்று சொல்லிக்கொண்டே இரு. ஏனென்றால், அவர் திருஅரங்கத்தைப் பாடி ‘பெருமாள்’ என்று பெயர் பெற்றவர் ஆவார்.

மற்றொன்று,  மணக்கால் நம்பி என்ற ஆசார்யன் அருளிச் செய்த தனியன்

ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கை இட்டவன் -மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குல சேகரன் முடி வேந்தர் சிகா மணியே

இதன் பொருள், நவரத்ன மாலை ஒன்று கேட்டு போக, அதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருடியதாக, கள்ள மந்திரிகள் சொல்ல, “பாகவதர்களாகிய இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்ய மாட்டார்கள்” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு,  பாம்புக்கு குடத்தில் கைவிட்டு அருளியவரும், எதிரிகளை தனது  வில்வலிமையினால் வெல்பவரும், குலசேகர ஆழ்வார் ஆவார்.

பத்து பதிகங்கள்

பெருமாள் திருமொழியில் பத்து பதிகங்கள் உள்ளன. ஒன்பது பாசுரங்கள் கொண்ட ஒரு பதிகமும், பத்து பாசுரங்கள் கொண்ட மூன்று பதிகங்களும், பதினொன்று பாசுரங்கள் கொண்ட ஆறு பதிகங்களும் உள்ளடக்கிய பெருமாள் திருமொழியில், நூற்று ஐந்து பாசுரங்கள் உள்ளன.

அவற்றில், குலசேகர ஆழ்வார் முதல் மூன்று பதிகங்கள், திருஅரங்கனுக்கும், நான்காவது பதிகம், திருவேங்கடமுடையானுக்கும்,  ஐந்தாவது பதிகம், மலையாள திவ்யதேசமான, திருவித்துவக்கோடு பெருமானுக்கும்,  எட்டாவது பதிகம், திருக்கண்ணபுரம் பெருமானுக்கும், பத்தாவது பதிகம், தில்லைநகர் திருச்சித்திரகூடம் என்னும் சிதம்பரம் கோவிந்தராஜ பெருமானுக்கும் பாடி அர்ச்சாவதார திவ்ய தேசங்களை கொண்டாடினார்.

கண்ணபிரானிடம் ஊடல் கொண்ட இடைபெண்களின் தவிப்புகளை தனது ஆறாவது பதிகத்தில் சொன்ன, குலசேகர ஆழ்வார், ஏழாவது பதிகத்தில், கண்ணபிரானைப் பெற்று எடுத்த, தெய்வப்பெண்மணி, தேவகியின் புலம்பல்களைக் கூறுகிறார். அதேபோல், இராமபிரானின் தந்தையாகிய தசரத மகாசக்ரவர்த்தி, இராமபிரானைப் பிரிய நேரிடும் போது புலம்பிய சொற்களை தனது  ஒன்பதாவது பதிகத்தில் சொல்லி  விபவாவதாரத்தின் பெருமைகளை முற்றிலும் ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லி உள்ளார்.

இறுதி பதிகமான பத்தாவது பதிகத்தில், அர்ச்சையையும் விபவத்தையும் கலந்து, நமக்கு இவன் அவனே என்று புரியவைக்க,  தில்லைநகர் திருசித்திரக்கூடம், ராமாயணம்  என்று இரண்டையும் சேர்த்து தனது இறுதி பத்து பாடல்களில் தொகுத்து அருளினார்.  ஆழ்வாருக்கு, பள்ளிகொண்டுள்ள கோவிந்தராஜன், இராமராகவே, காட்சி அளித்து இருக்கலாம்.

முதல் பதிகம் – திருவரங்கம்

திருஅரங்கனைப் பற்றி பாடும் முதல் மூன்று பதிகங்களை பற்றி சிறிது காணலாம்.

முதல் பதிகத்தில், திருவரங்கம்  பெரியகோயிலில்  திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டுள்ள அழகிய மணவாளனை  கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார். அரவணையின் மீது பள்ளிகொண்டு அருளுகின்ற, பெரியபெருமாளை கண்டவுடன்,  “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” (நம்மாழ்வார்) என்ற நிலை ஏற்படும் தனக்கு, பெருமாள் சன்னதிக்கு எதிரே இருக்கின்ற, இரண்டு திருமணத்தூண்களை பற்றிக்கொண்டு பெருமாளை, ஸ்தோத்ரம் பண்ணும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ, என்கிறார். பெரியபெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூட அடியேனும் ஆராதிக்கும்படி சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ, என்கிறார். நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது என்பதுபோல், பகவத்குணங்களைத் தனியே அனுபவிக்காமல், அக்குணங்களை பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் வாயாரப்பாடி அதனால் ஆனந்தக்கண்ணீர் பெருகி,  தலைகால் தெரியாமல் துள்ளிக்கூத்தாடி, நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ, என்கிறார்.

இரண்டாம் பதிகம் – திருவரங்கம்

பகவத் விஷயத்தில் மையன்பு பூண்டவராயிருக்கும் ஆழ்வார், பாகவதர்களிடத்தில் பக்தி காண்பிக்கும் விஷயத்தில் தான் மிகவும் லயித்து பித்தேறிக் கிடப்பதை,  இரண்டாம் பதிகத்தில், விளக்குகிறார்.

‘அரங்கனாகிய நம்பெருமாளைக் காண்பதே கண்படைத்ததற்கான  பலன்’ என்பது முதல்படி என்றும்,  ‘பாகவதர்களுடைய கோஷ்டியை சேவிக்காமல் இருந்தால் கண்களுக்கு பலன் கிடைக்காமல் போகும் என்ற அடுத்த படியை நமக்கு விரிவாக சொல்கிறார். அதே போல், பகவானின் பல அவதாரங்களை பாடி, அதனால் கண்களில் நீர் பெருக, அந்த நீரினால் அரங்கனின் சந்நிதியை சேறாக்குகின்ற பக்தர்களின் பாதத்துளியை, தனது தலைக்கு அலங்காரம் ஆக்கிக் கொள்வேன் என்கிறார். அரங்கனின் நாமங்களை உரைக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் பாதத்துளிகள் கிடைக்கப்பெற்றால், கங்கையில் நீராடவேண்டிய அவசியம் இல்லை என்றும்  பாகவத பக்தியின் பெருமையை சொல்கிறார்.

எம்பெருமானிடத்து அன்பு இல்லாத மக்களுக்கும்,  அவ்வன்பைப் பெறுமாறு பல இடங்களுக்குச் சென்று, அங்கேயெல்லாம் ஸ்ரீவைஷ்ணவத்தை   உபதேசித்துவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே,   தான் எப்பிறப்பிலும் அன்பு பாராட்டுவேன் என்கிறார். “எப்பிறப்பிலும்” என்று சொல்வதால், ஆழ்வார், பாகவதர்களுக்கு அன்பு பாராட்டுவதற்க்காக  இன்னும் பல பிறவிகளை எடுப்பதற்கு தனக்கு  சம்மதம் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.    பொதுவாக எல்லா ஆழ்வார்களும், தாங்கள் உடனே மோட்ஷம் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை பரமாத்மாவின் முன் வைத்து சரணாகதி செய்வார்கள்.  இங்கே ஆழ்வார் நமக்காக பல பிறவிகள் எடுப்பேன் என்பது ஆழ்வாரின் அபரிமிதமான கருணையை காட்டுகிறது.

மூன்றாம் பதிகம் – திருவரங்கம்

முதல் பதிகத்தில், எம்பெருமானை எப்போது காண்போமோ (பகவத் பக்தி) என்று சொன்ன ஆழ்வார், இரண்டாம் பதிகத்தில் எம்பெருமானை நேசிக்கும் பக்தர்களை (பாகவத பக்தி) பற்றி சொன்ன ஆழ்வார், மூன்றாம் பதிகத்தில் இவ்வுலக இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தும், மற்ற மனிதர்களைப் பற்றி பாடுகிறார்.

இப்படிப்பட்ட மனிதர்களுடன் தான் சேர்வதில்லை, என்று கூறும் ஆழ்வார், ஸ்ரீ வைஷ்ணவர்கள், இவர்களுடன் சேர்த்து பேசப்படுவதைக் கூட, நினைத்து பார்க்க   பயப்படுவார்கள் என்றும் கூறுகிறார். குலசேகரஆழ்வார், பகவானுக்குப் பிடிக்காதவற்றை செய்யும் சாமானிய மக்களின் சகவாசத்தை, விலக்கிவிட சொல்கிறார்.

வைஷ்ணவ  சம்பிரதாயங்களின் ஆணிவேரான சரணாகதி, “ஆனுகூல்ய சங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜனம்” என்பதை உள்ளடக்கியதாகும். பரமாத்மாவிற்கு விருப்பமானவற்றை செய்வேன் என்பது முன் பகுதி, விருப்பம் இல்லாதவற்றை செய்ய மாட்டேன் என்பது பின்  பகுதி. இந்த பின் பகுதியின் விரிவாக்கமே, மூன்றாம் பதிகம் ஆகும். அப்படி சொல்லும் போது, முதல் பகுதியை, கடைபிடிப்பதற்கு கால தாமதம் ஆனாலும், பின் பகுதியை உடனே அனுசரிக்கவேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறார். நாமும் அது மாதிரி செய்வது ஆழ்வாருக்கும் பரமாத்மாவிற்கும் பிடித்ததாக அமையும்.

“வன்பெரு வானகம் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய, மண்ணுலகில் மனிசர் உய்ய, துன்பமிகு துயர் அகல, அயர்வொன்றில்லாச் சுகம்வளர, அகமகிழுந் தொண்டர் வாழ,  அன்பொடு தென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்,  இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே”   

என்று ஆழ்வாரின் ஒரு பாசுரத்தைச் சொல்லி, இந்த பதிவினை நிறைவு செய்து, மற்ற பதிகங்களை அடுத்த வலைப்பதிவில் தொடர்வோம்.

————————————————————–

Kulasekara Azhwaar

We have seen briefly about Kulasekara Azhwaar and his devotion in the previous weblog. Let us look into his compositions in this weblog.  Kulasekara Azhwaar has written Perumal Thirumozhi, a prabhantham in Tamil.   It is said that Azhwaar has written a composition called Mukuntha Maalai in Sanskrit.

Mukuntha Maalai

Manavaala Maa Munigal, an acharyaa, who has compiled the high level summary of all azhwaars and their compositions, did not mention that Mukuntha Maalai was written by Sri Kulasekara Azhwaar, who wrote Perumaal Thirumozhi. In the same way, “Divya Soori Saritham”, which describes about Azhwaars and their life history, did not mention about Mukuntha Maalai. The main purpose for Azhwaars to descend into this world is more towards translating the Vedas, which were available in Sanskrit to Tamil. It is also known that no other Azhwaar has written anything in other languages other than Tamil. Also Indian history talks about five or six Kulasekara Kings. The word Kulasekara means best in the tribe. This could be applicable to all other Kulasekaras, who were mentioned in Indian history. So there is a good possibility that Mukuntha maalai could have been written by any one of the Kulasekaras.

Perumal Thirumozhi

Nathamunigal has placed Perumal Thirmozhi in the first thousand, along with

Similarly, in another group containing about one thousand pasurams, Sri Natha Munigal has compiled the following Prabandhams  :

Similarly Nathamunigal had compiled Namazhwaar’s Thiruvaimozhi in one thousand and Periya Thirumozhi by Thirumangaiazhwaar in another thousand. Iraamanusa Nootranthaathi by Sri Thiruvarangathu Amuthanaar is also included into Naalayira divya prabandham in later years.

Thaniyangal

Thaniyan is a hymn, where the disciples praise their teacher or their guru. There are two Thaniyans for Perumal Thirumozhi. The first one has the distinction of being written by Swami Ramanujar.

“innamutham ootuken ingey vaa paingkiliye, thennarangam paada valla seer perumal, ponnanchilai ser seralar kon, engal kula sekaran endre kooru” meaning

“Come here O pretty parrot, I shall feed you with sweet morsel. Keep saying the name Kulasekhara, ‘our Chera king’ whose bow-shaped eyebrows are adored by women. He sang in praise of Arangam and earned the name ‘Perumal”.

The  next thaniyan was written by an Acharyar by name Manakkal Nambi.

“aaram kedap paran anbar kollar endru avargalukke, vaaram kodu kudap paambil kai ittavan, matralarai veeram kedutha sengol kolli kavalan villavar kon, seran kulasekaran mudivendhar sigaamaniye”

An expensive necklace was stolen from Kulasekara Azhwaar’s palace and the ministers tried to blame the Srivaishnavas, who were with Azhwaar. Azhwaar with his staunch belief that the Srivaishnavas would not have done such an act, put his hand inside a vessel containing snakes. The ministers admitted their mistakes. Sri Kulasekara Azhwaar would win all his enemies using his strengths of bow.

Ten Subdivisions

In Perumal Thirumozhi there are ten sub divisions, called Ten Pathigams. Perumal Thirumozhi contains one pathigam with nine hymns, three with ten hymns and six with eleven hymns, having a total of one hundred and five hymns.

In Perumal Thirumozhi, Kulasekara Azhwaar, has discussed about Thiruarangan in the first three pathigams, Thiruvenkatamudaiyaan in the fourth pathigam, the chief deity of Thiruvithuvakode, one of the divya desams in Kerala (Malayala Divya Desam) in the fifth pathigam, the chief deity of Thiru Kanna Puram in the eighth pathigam and Chidambaram Govindarajan (Thillainagar Thiru Chithra Koodam) in the tenth sub division. These are the  Archaavathaara Divya Desams and Deities on whom Kulasekara Azhwaar has composed the hymns on.

In the sixth sub division, Azhwaar highlights the pains undergone by the girls of Ayarpadi and Brindavan, who were in tiff with Sri Krishna. In the seventh pathigam, Azhwaar talks about the pains undergone by Devaki, who is the biological mother of Sri Krishna.  In the ninth pathigam, Azhwaar talks about the lamentations and pains expressed by the King Dasaratha, when he had to ask Rama to leave him. So in the sixth, seventh and ninth pathigams, Azhwaar, looked at vibhavaavathaaram in  a totally different perspective.

In the final sub division, that is the tenth pathigam, Azhwaar combines both Vibhavam and Archai together and demonstrates clearly to  us that the Archai that we pray today is same as the Vibhavavathaara Permual. He talks about the entire epic ramayanam in the last ten hymns of Perumal Thirumozhi and in each of these he relates them to Chidambaram Govindarajan. May be, the recling Govindarajan had given dharsan to Azhwaar as Sri Rama and  hence Azhwaar in his hymn says that IVAN AVANE, meaning that this Govindarajar is same as Sri Rama.

First pathigam – Thiruarangam

In this blog, let us start discussing about the first three sub divisions, where Azhwaar talks about Thiruarangan.

In the first pathigam, Azhwaar longed for having a dharsan of Srirangam perumal, who has been lying on Sri Thiruvanthazhvaan (The five headed snake) and wanted to know when he could have such a satisfying dharsan of Perumal.  In one of the hymns, swami Namazhwaar has told about the weakening of his legs, (kaalaazhum), breaking of this heart (nenju azhiyum) and spinning of his eyes (kan suzhalum) on having the dharsan of perumal.  Similarly Kulasekara Azhwaar was looking for the day, when he could have such feeling and hold the two pillars, called Thirumana Thoongal, which are in front of the chief deity at Srirangam (Periyaperumal), due to the extreme happiness of the dharsan. Azhwaar was looking for the day when he could pray along with the devotees of Periyaperumaal at Thiruarangam. It is generally said that people would like to enjoy the good things in good company and not alone. Similarly the devotees want to share the glories of Perumal with other devotees and sing loudly the greatness of perumal. The devotees would also get tears out of happiness and dance vigorously. Azhwaar wished to know the day when he could dance with such devotees.

Second Pathigam – Thiruarangam

While Azhwaar’s devotion towards perumal is very well known, his devotion towards the devotees is much more involved and to certain extent Azhwaar is mad about it. This devotion towards devotees is taken as the subject for the second pathigam.

The first step is about having the dharsan of Namperumal at Srirangam and this would give the real benefit of having the good eyesight. The next step is about having the dharsan of the devotees and Azhwaar says that when we do not have that dharsan of devotees, the benefits of having a good eyesight would be lost. Similarly Azhwaar would wear the muddy dust at the sanctum sanctorum of Periyaperumal created by the dust from the feet of the devotees, mixed with their tears, coming out of sheer happiness when they discuss elaborately, the different incarnations of Paramathma. Likewise, Azhwaar talks about the glories of devotion towards the devotees by saying that there is no need to take a holy dip at the Ganges, if we could get the dust from the feet of srivaishnava devotees who sing the different names of Thiruarangan.

Azhwaar says that he would extend his full support, in each and every of his birth, to those srivaishnavaas who travel to different places to preach srivaishnavam to all those who do not show their love and affection towards Periyaperumal so that they could get the blessings from Periyaperumal. Since Azhwaar had mentioned that he would do it in each and every birth, it indicates that he was prepared to even taking many births in this world to support these srivaishnanvas. Generally all Azhwaars would request Paramathma for immeidate Moksham (Saranagathi, to go abode). They never wanted to continue their life in this world. When Kulasekara Azhwaar says that he would take many lives in this world, it only shows the bounteous love and affection that Azhwaar has towards us.

Third pathigam – Thiruarangam

In all the hymns of the first pathigam, Azhwaar had been asking himself on when he would have the dharsan of Thiru Arangan (Devotion to Paramathma). In all the hymns of the second pathigam, Azhwaar had talked about the Srivaishnavas, who love Emperuman (the chief deity of Thiruarangam) and are staunch devotees of Emperuman. (Devotion to the devotees).  In the third pathigam, Azhwaar talks about the other set of people, who concentrate on the worldly pleasures.

Azhwaar declares that he would not join in the group of such people. He also says that srivaishnavas would be scared to be part of such group and cannot even think of themselves being associated with such group of people. Kulasekara Azhwaar requests all of us to disengage with those oridnary people, who carry out activities which are not liked by Paramathma.

The key principle in Srivaishnavam is Saranagathi or Total Surrender. Saranagathi includes two basic concepts. One is called “Aanukoolya Sankalpam” and the other is called “Prathikoolya varjanam”. The first part is about carrying out activities, which are liked by Paramathma and the second part is about not doing the activities, which are not liked by Paramathma. The third pathigam by Kulasekara Azhwaar is about the second part, which is “Prathikoolya varjanam”. Azhwaar pinpoints that it is very much acceptable, even if it takes more time to follow the first part (Aanukoolya Sankalpam), but he demands that we follow the second part immediately, or as soon as we come to know about it. So we should follow this piece of advice from Kulasekara Azhwaar, which is going to be liked by both Azhwaar and Paramathma.

We will bring an end to this weblog, by highlighting one of the pasurams of Azhwaar from the first three pathigams,  and continue with the rest in the coming weblogs.

van peru vaanagam uyya, amarar uyya, mann uyya, mann ulagil manisar uyya, thunbamigu thuyar akala, ayarvu ondru illaa sugam valara, agam mahizhum thondar vaazha, anbodu then thisai noki palli kollum ani arangan thiru mutrathu adiyaar thangal, inbam migu perum kuzhuvu kandu yaanum isainthu udane endru kolo irukkum naale ”

The Lord reclines in Thiru Arangam facing the direction of South and providing the elevation of spirit to the sky and to the earth, and to those who live in the celestial worlds as well as to those who live in this world, after removing all their pains and grief. He also increases the ultimate pleasure without fatigue and which increases the love and affection in the hearts of the devotees. Azhwaar wants to be part of such group of devotees and he would like to know when he could join those exuberant devotees, who throng in the courtyard of Srirangam.

4 Comments on “முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam

  1. Dear RV,

    VaNakkam.

    Vazhakkam pola sirappana thoguppu with Simple and straight presentation.

    I follow regularly NaaLthirum Nalayiram by Prof Dr Venkatakrishnan
    (podhigai 06.00-06 15am).

    Reading your postings was like a Refresher course on Sri Kulasekaea Azhwar.

    Thanks
    Vaazhga VaLamudan
    Swami
    On 4 May 2017 10:22, “Simple User’s view on Vaishnavism” wrote:

    > rvenkatesasn2307 posted: “For English version, please read below the Tamil
    > version. Thanks. குலசேகர ஆழ்வார் நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார்
    > பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம். அவர் எழுதிய நூல்களை
    > பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ”
    >

    • Dear Swami Thank you very much sir, for your encouraging kind words. Appreciate the same and you continue to be one of the motivators for myself to keep going. With best regards Venkatesan

  2. வணக்கம்.
    குலசேகரரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக வலைப் பதிவில் தெரெடினேன். தங்கள் வலைப்பதிவு கிடைத்தது. மிகவும் சுருக்கமக்க ஆழ்வாரைப் பற்றி தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். எளியோனுக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது.தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
    விப்ரநாராயணன்

    • நன்றி திரு விப்ரநாராயணன் அவர்களே. உங்கள் கருத்துக்களும் வாழ்த்துக்களும் நாங்கள் மேலும் சிறப்பாக பணியாற்ற உதவுகின்றன. நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: