A Simple Devotee's Views
நேரொருவரில்லாவல்லி தாயார் ஸமேத நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருநிலாத்திங்கள் துண்டம் | |||
மூலவர் | நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் சந்திரசூடப்பெருமாள் | |||
உத்ஸவர் | ||||
தாயார் | நேரொருவரில்லாவல்லி தாயார் நிலாத்திங்கள் துண்டத்தாயார் | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | மேற்கு | |||
பாசுரங்கள் | 1 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 44 2722 2084 |
தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறிய முன்னுரையை இங்கே காணலாம். நன்றி
கோவில் பற்றி
இத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் உள்ளது. நிலா என்றாலும், திங்கள் என்றாலும் ஒன்று தான் என்று கொண்டு பார்ப்பதைவிட, நிலா என்றால் பூரணம், முழுமை என்று கொண்டு, முழுநிலவின் பெருமை உடையவர் என்று கொள்ளலாம்.
சைவக்கோவில்களுக்குள் மங்களாசாசனம்
செய்யப்பட்ட பெருமாள்கள் எழுந்தருளியிருக்கிறார்கள் என்றால் அது இங்கும் காமாட்சியம்மன் கோவிலுமே ஆகும். (திருநிலாத்திங்கள் துண்டம், திருக்கள்வனூர்). வைஷ்ணவ கோவில்களில் சைவ கடவுள்கள் இருப்பது சில பாண்டிய நாட்டு திவ்யதேசங்களில் பார்க்கலாம். இதேபோல் திருச்சித்திரகூடத்தில் சைவ வைணவ கடவுள் சேர்ந்து இருந்ததைப் பார்த்து உள்ளோம்.
பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜைகள் இங்கே நடக்கும்.
ஸ்தல வரலாறு
சிவபெருமானுடைய மனைவி பார்வதி தேவியை தனது தங்கையாக ஏற்றுக்கொண்ட திருமால், தங்கையின் யாகம் பூர்த்திசெய்ய உதவி செய்திருக்கிறார் என்பதை இந்த திருத்தல வரலாறு சொல்லும்.
ஒரு சமயம் பார்வதி இவ்விடத்தில் ஒரு மாமரத்தின் கீழ் தவம் செய்ய, சிவன் அத்தவத்தை சோதிக்க எண்ணி, மாமரத்தை நெற்றிக்கண் கொண்டு தீ ஜ்வாலைகளால்
எரிக்க, பார்வதி திருமாலைப் பிரார்த்தித்தாள். திருமால் அம்ருத கிரணங்களால் மாமரத்தைக் காத்து, பார்வதி தேவி தவம் தொடர உதவினார். எம்பெருமான் பார்வதியின் துயரம் தீர்த்ததால் இப்பெருமானுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற திருநாமம் உண்டானது என்று சொல்வர். எம்பெருமானுக்கு சூரியனும் சந்திரனும் இரண்டு கண்கள். எம்பெருமான் தன்னுடைய குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரனான திருக்கண்ணால் பார்வதியின் யாகத்தில் ஏற்பட்ட தடையைத் துண்டித்ததால் இப்பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் ஆயிற்று என்று சொல்வர். பார்வதியின் வேண்டுகோளின் படி எம்பெருமான் குளிர்ந்த கிரணங்களை இன்றும் இவ்விடத்தில் வழங்கிக் கொண்டே இருப்பதாக நம்பிக்கை.
ஆழ்வார்
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத் திங்கள் துண்டத்தாய் என்று திருநெடுந்தாண்டத்தில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்து உள்ளார்.
Google Map
திருநிலாத்திங்கள் துண்ட பெருமாள் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்