Aandal /ஆண்டாள்

For English version, please click here, thanks  

ஏழாவது ஆழ்வார்

பெரியாழ்வாருக்குப் பிறகு நாம் பார்க்க வேண்டிய ஆழ்வார், சேர குல திலகமான குலசேகராழ்வார் ஆவார்.  நாம் அவரைப் பற்றி பின்னொரு வலைப்பதிப்பில் பார்க்கிறோம் என்று சொல்லி அவரிடம், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, ஆண்டாள் என்றும், கோதை என்றும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரும், பெரியாழ்வாரின் புதல்வியுமானவரை தொடர்ச்சிக்காக பார்த்து விடுவோம்.

இதிகாச புராணங்கள்

வேதங்களை எளிதில் புரிந்து கொள்ள இதிகாச புராணங்கள் எழுதப்பட்டன. இதிகாசம் இரண்டு, இராமாயணமும் மகாபாரதமும்.   முக்கிய புராணங்கள் (மகா புராணங்கள்) பதினெட்டு  ஆகும்.  அவைகளில் விஷ்ணு பற்றிய புராணங்கள்,

  • விஷ்ணு புராணம்,
  • வாமன புராணம்,
  • வராக புராணம்,
  • மத்ஸ்ய புராணம்,
  • கூர்ம புராணம்,
  • கருட புராணம்,
  • நாரத புராணம்,
  • பாகவத புராணம் மற்றும்
  • பத்மபுராணம்.

மற்றவை சிவனையும் பிரம்மாவையும் பற்றியவை.

வராக புராணம்

வராக புராணம் என்பது மகாபுராணங்களில் திருமாலின் வராக அவதாரத்தைப் விளக்கும் 24,000 ஸ்லோகங்களை கொண்ட சாத்விக புராண வகையைச் சார்ந்தது ஆகும்.  புராணங்களை சாத்விக, தாமச மற்றும் ராஜச என்று மூன்றாகப் பிரிக்கலாம். இவை மூன்றும் நம் மனம் பல சமயங்களில் எடுக்கும் நிலையைப் பற்றியது.   ராஜச என்றால் கோபம் என்றும், தாமச என்றால் ஒன்றும் செய்யாமல் இருக்கும் மந்த நிலைமை என்றும் சாத்விக என்றால் ஒரு சமநிலைப் பட்ட நிலை என்றும் பொருள் கொள்ளலாம். நம் வைஷ்ணவம் எல்லோரும், எப்போதும் சாத்விக நிலையில் இருக்கவே முயற்சி செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் எல்லோரும் எல்லா ஜீவராசிகளுடன் அன்போடும் மரியாதையோடும் இருக்கவே நமக்கு போதிக்கிறது.

பாதாளத்திற்கு எடுத்து செல்லப்பட்ட பூமாதேவியை மீட்கபட்ட பின்பு பூமாதேவியின் கேள்விகளுக்கு வராக அவதாரக் கோலத்திலேயே திருமால் அளித்த பதில்களின் தொகுப்பும் இப்புராணத்தில் உள்ளது. இவைகளை மனதில் வாங்கிக்கொண்ட பூமாதேவி, தான் பரமாத்மாவின் ஆணையின் பேரில் இந்த பூவுலகில் அவதரித்த போது அவைகளின் சாரத்தேயே நமக்கு திருப்பாவை என்னும் நூலாகத் தந்தாள். ஆக, பூமாதேவியின் அம்சமாகவே, ஆண்டாள் இப்பூவுலகில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வாரின் குமாரத்தியாகவே அவதரித்தாள்.

ஆண்டாள் பெருமைகள்

ஐந்து குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், பிஞ்சாய்ப் பழுத்தாளை, ஆண்டாளை, பக்தியுடன் நாளும் வாழ்த்தாய் மனமே! மகிழ்ந்து” (மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலை 22–24) என்ற பாடலைச் சொல்லாமல் ஆண்டாளின் பெருமைகளை ஆரம்பிக்க முடியாது.

இதில் வரும் பிஞ்சைப் பழுத்தாளை என்பதற்கு, எவரும் எட்டிப் பார்க்க முடியாத அளவு , சிறு வயதிலேயே பக்தியில் உச்சம் அடைந்தவள் என்று பொருள்.

ஐந்து குடி என்பது,

  • முதலாழ்வார்கள் மூவரும் சேர்ந்து முதல்,
  • திருமழிசையாழ்வார், இரண்டாம்,
  • நம்மாழ்வார் மூன்றாம்,
  • பெரியாழ்வார் நான்காம், மற்றும்
  • குலசேகராழ்வார் ஐந்தாம் வம்சங்களுக்கு வாரிசாக வந்து அவரித்த ஆண்டாள்.

நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்கள், இயற்கையிலேயே ஆண்களாகப் பிறந்து, எம்பெருமானிடம் கொண்ட பக்தி, காதலாய் ஊற்றெடுக்க, தங்களைப் பெண்ணாய்ப் பாவித்து, அவனை மோகித்து, பெண்ணான தன்மையில் சில பாசுரங்களைப் பாடி உள்ளார்கள்.  அப்படியல்லாமல் இயற்கையிலேயே பெண்ணாகப் பிறந்ததனால், புருஷோத்தமனை அனுபவிக்கும் திறத்தில் சிறந்த உரிமை உடையவள் ஆண்டாள் ஒருவர் மட்டும் தான்.   ஆகையால் அவர் பாடல்கள் இயற்கையாகவே பெண்ணான தன்மையில்  அமைந்துள்ளதால், அதுவே தனிச் சிறப்பாக “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்” என்று மணவாள மாமுனிகளை  சொல்லவைக்கிறது .

கோதாஸ்துதி

வேதாந்த தேசிகன் என்னும் நமது ஆச்சாரியார்  ஆண்டாளின் பெருமைகளைக் கூற 29 ஸ்லோகங்களை கொண்ட கோதாஸ்துதி என்ற நூலை இயற்றினார்.

ஆண்டாளை நோக்கி, அவளின் குணங்களும் பெருமைகளும் வாரத்தைகளுக்கு எட்டாதவை என்று தாம் அறிந்து இருப்பினும், அவளின் குணாதிசயங்களும் பெருமைகளும் தன் மௌனத்தைக் கலைத்து பேச வைத்து விட்டன என்றும் கூறுகிறார்.

மண்ணில் உள்ள புற்றுகளுக்கு பூமியின் காதுகள் என்று பெயர்.  ‘வல்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்படும். வால்மீகி என்னும் முனிவர், புற்றில் இருந்து பல காலம் தவம் செய்ததால் அவருக்கு இப்பெயர் வந்தது. வால்மீகி, 24000 சுலோகங்களுடன் உள்ள இராமாயணம் என்னும் இதிகாச புராணத்தைப் பாடி, ஆதிகவி என்று பெயர் பெற்றார்.   பூமியின் காதுகளாகிய, புற்றிலிருந்து வந்தவரான, வால்மீகிக்கு இவ்வளவு வைபவம் ஆனால்,  பூமியின் அம்சமாகவேப் பிறந்த ஆண்டாள், பாடிய திருப்பாவைக்கும், நாச்சியார் திருமொழிக்கும் எவ்வளவு வைபவம் இருக்கும் என்று வேதாந்த தேசிகன்   கோதாஸ்துதியில்  கூறுகிறார்.

இராமாயண காவியத்தில், சீதா தேவியை, இராவணன் தூக்கிச் சென்ற போது, சீதை தன்னிடம் உள்ள ஆபரணங்களை ஆங்காங்கே எறிந்துவிட்டு, இராமனாகிய தன் கணவனிடம் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே போனாள்.  கோதாவரி, இராவணனுக்கு பயந்து, இராமனிடம் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு தன் பாவத்தை ஏற்றிக்கொண்டாள்.   ஆண்டாள் பிறந்த பிறகு, கோதை என்ற ஆண்டாளின் பெயரை தன்னுள் கொண்டதால்தான், கோதாவரி  தன் பாவத்தைப் போக்கிகொண்டதாக வேதாந்த தேசிகன், கோதாஸ்துதியில் கூறுகிறார். மகாவிஷ்ணுவிற்குத் தான், மங்களமான பொருள்களுக்கெல்லாம் மங்களம் தருபவர் என்று பெயர்.  இங்கே ஆண்டாளும் கோதாவரி என்னும் நதிக்கு மங்களத்தைத் தருகிறார். (பவித்ராணம், பவித்ரம்யோ மங்களா நாம்   ச  மங்களம் ).

இதையே, ‘யமுனா நதி பெற்றதை, கோதாவரி இழந்ததாகவும்’ கூறுவார்கள்; யமுனா நதி, கண்ணன் பிறந்தபோது, கம்சனுக்குப் பயப்படாமல், வசுதேவருக்கு உதவி செய்தாள் என்றும்,  கோதாவரி இராமனுக்கு உதவி செய்ய ஒரு சந்தர்ப்பம் இருந்தும், உதவி செய்யாமல் விட்டு விட்டு அதனால் பாவம் அடைந்தாள் என்றும், பிறகு ஆண்டாளின் நாமத்தை ஏற்றதனால், பாவம் போனது என்றும் கூறுவார்கள்.

சில திவ்யதேசங்களில் ஆண்டாள்
பல்வேறு திவ்யதேசங்களில் ஆண்டாள் – நன்றி whatsapp group நண்பர்கள்

நாச்சியார் திருமொழி

ஒரு நூற்று நாற்பத்திமூன்று உரைத்தாள் வாழியே ” என்று வாழிதிருநாமம் சொல்லக்  காரணமானது  ஆண்டாள் இயற்றிய 143 பாசுரங்களைக் கொண்ட நாச்சியார் திருமொழி என்ற திவ்யப்ரபந்தம்.  இது  பக்திமயமாய், தமிழ் மணமும் இலக்கியச் சுவையும் ஒன்றாகக் கூடி உள்ளது.

திருப்பாவை போல், இந்த பாசுரங்களிலும், எப்படியாவது கண்ணனை அடையவேண்டும் என்று முதலில், பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் மன்மதனை, ஒரு பத்து பாடல்களில் வேண்டுகிறார்.   மனக்கவலை கொண்டவர்கள், தங்கள் காரியம் நிறைவேறுமா என்பதற்கு குறி பார்ப்பது ஒரு வழக்கம்.  அதே போல் ஆண்டாளுக்கும் உள்ள அனுபவத்தை இன்னொரு பத்து பாடல்களில்சொல்கிறார். “மன்னு பெரும்புகழ், மாதவன் மாமணி வண்ணன்” என்று தொடங்கும் அடுத்த பத்து பாடல்களில், குயில்களைக்  கூப்பிட்டு, கண்ணன் பேரை கூவி அழைக்கச்சொல்லுகிறார்.  இந்த பத்து பாடல்களைப் படித்தாலோ, கேட்டாலோ, திருமந்திரத்தை சொன்ன பலனை அடைவர்.

மிகவும் பிரசத்தி பெற்றதானதும், பொதுவாக எல்லா திருமணங்களிலும் பாடப்படுவதானதும், ஆன “வாரணம் ஆயிரம் ” என்ற அடுத்த பத்து பாடல்கள், ஆண்டாள் கண்ணனை திருமணம் செய்வது போல், அம்மி மிதிப்பதுபோல், தீவலம் செய்வது போல்,  தான் கண்ட கானாவினைப் பற்றியதாகும்.  இந்த பத்து பாடல்களைப் படிப்பதாலோ, கேட்பதாலோ, ஞானமும் பக்தியும் உடைய நன்மக்களைப் பெறுவார்கள்.

கற்பூரம் நாறுமோ என்ற அடுத்த பத்து பாடல்களில், ஆண்டாள், பாஞ்சசன்னியம் எனப்படும் சங்கினை, கண்ணனின் வாயமுதினை பருகும் பாக்கியம் பெற்றது என்று கொண்டாடுகிறார். அதே சமயம், கோபிமார் பலருக்கும் உரித்தான கண்ணனின் வாயமுதினை, சங்கு மட்டுமே பருகுவது நியாயம் இல்லை என்றும் கூறுகிறார்.

பிரிவாற்றாமையால் வாடும் ஆண்டாள் அடுத்த பத்து பச்சுரங்களில், நீல நிறமான பகவானின் மேல் உள்ள ஆசையால், நீல நிறமான மேகங்களைத் தூது விடுகிறார். திருமாலிருஞ்சோலை அழகனைப் பாடும் அடுத்த பத்து பாடல்களில் ஒன்றான “நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு, நான் நூறு தடாவில் வெண்ணை வாய் நேர்ந்து பராவி வைத்தேன், நூறு தடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன், ஏறு திரு உடையான், இன்று வந்திவை கொள்ளுங்கொல்லோ” என்ற பாசுரத்தை திருவாராதன காலத்தில் பெருமாளுக்கு பிரசாதம் அமுது செய்விக்கும் போது மிகவும் பக்தியுடன் அனுசந்திப்பது வழக்கம்.

திருவரங்கத்து செல்வனை நினைத்து உருகும் பாசுரங்களில், மூவடி பெற மாவலியிடம் நடந்து சென்ற கண்ணன், அவனையே விரும்பும் தனக்கு அவன் நடையழகைக் காட்ட வேண்டுகிறார்.   பெண்ணின் வருத்தம் அறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்ட பெருமாள் தன் விஷயத்தில் வேறுபடுகிறாரே என்றும், தம்மை விரும்புவரை தான் விரும்புவேன் என்று வராக அவதாரத்தில் சரமச்லோகத்தில் சொன்ன வார்த்தைகள் பொய்யாகாமல் இருக்க வேண்டுமே என்றும் கவலைபடும் பாசுரங்கள் தொடர்கின்றன.

varahar

வராஹ சரமச்லோகத்தில், “உடல், மனது முதலியவை நன்றாக இருக்கும் போது, என்னை ஒருவன் நினைப்பானாகில், பின்பு அவன் மூச்சடங்கி முடியாதபோது, அவனை நான் நினைத்து நற்கதியை பண்ணுவிப்பேன்” என்று பூமிதேவியிடம் வராகப்பெருமாள், கூறுகிறார்.  இதே போல், இராம, கிருஷ்ண சரமச்லோகங்கள் உள்ளன. அவைகளை பின் வரும் வலைப்பதிவுகளில் பார்க்கலாம்.

இறுதியாக, ஆண்டாள் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம், அவர்கள் ஆண்டாளை, தனது விரக நோயில் இருந்து காப்பாற்ற நினைத்தால், திருஆய்ப்பாடிக்கு அழைத்துச் செல்லச் வேண்டுகிறார்.  கண்ணனின் அணிகலன்களைக் கொண்டு தனது நோயினைக் குறைக்கவும் வேண்டுகிறார்.

கண்ணன் தன்னைச் சேர்ந்தவர்கள் துன்புற்றால் அதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்.   ஆண்டாள் துன்புற்று இருப்பதை தெரிந்து அவள் துன்பம் தீர அவள் எதிரில் நின்று சேவை தருகிறார்.   கண்ணன் பசுக்களை மேய்த்து விளையாடுவதையும், அவன் மேல் வெயில் படாமல் இருக்க, கருடன் தன் சிறகுகளை விரித்துப் பறப்பதையும் பிருந்தாவனத்தில் கண்டதாக ஆண்டாள் பாடுகிறார். முதலை வாய்ப்பட்ட யானை பகவான் அருளால் மீட்கப்பட்டு துயர் தீர்ந்தது போல் தானும் பிரிவுத் துன்பத்தில் இருந்து மீண்டு பெருவாழ்வு பெற்றதாகக் கூறி ஆண்டாள் முடிக்கிறார்.

ஆண்டாள், கண்ணனைக் கண்டு பிருந்தாவனத்தில் இன்புற்று இருக்கும் இந்த சமயத்தில் நாம் இப்பதிவினை நிறுத்தி கொண்டு, அடுத்த பதிப்பினில் மீண்டும் ஆண்டாள் பற்றியும் அவரின் இன்னொரு சிறந்த படைப்பான திருப்பாவை பற்றியும்  தொடர்வோம்.

=====================================================================

Seventh Azhwaar

The next Azhwaar after Periazhwaar, is Sri Kulasekara Azhwaar, a king from Chera  Naadu, which is in the western part of Tamilnadu.     For the sake of continuity, we will seek apologies from Sri Kula Sekara Azhwaar, with a promise that we would discuss about Sri Kula Sekara Azhwaar in our future weblogs and now start talking about Aandal, alias Kothai, alias Soodi Kodutha Sudar Kodi.   Aandal is the only female in the group of Azhwaars.  She is the daughter of Sri Periazhwaar.

Ithikaasa Puraanangal

In order for the common man to understand the Vedas, Ithihaaasam and Puraanams, a set of religious literature were written.   Ramaayanam and Mahabharatham are the only two Ithihaasams and there are 18 important puraanams.    Of these, the following are the puraanams about Sri Maha Vishnu.

  • Vishnu Puraanam
  • Vaamana Puraanam
  • Varaaha Puraanam
  • Mathsya Puraanam
  • Koorma Puraanam
  • Garuda Puraanam
  • Naaradha Puraanam
  • Bahavatha Puraanam and
  • Padma Puraanam

The rest are about Siva and Brahma.

Varaaha Puraanam

Varaaha Puraanam, one of the important puraanams, talks about the Varaaha Incarnation of Sri Mahavishnu.  It contains 24000 verses and it is part of Sathvika Puranaams.  Puraanams are divided into three types, namely, Sathvika, Thaamasa and Rajasa, based on the three important states our mind takes at different times.     Rajas means Anger, Thaamasa means Inaction and Sathvika means  a balanced mind or balanced attitude. The objective of Vaishnavism is for all of us to get into a state of Sathvik at all times, so that we show kindness and respect to all human beings, animals, creatures in this world.

In Varaaha Incarnation, Bhoomadevi, was taken underwaters and hidden by Hiranyaaktshan a demon, and She was rescued by Mahavishnu. After She was saved, Boomadevi had asked a set of questions on our behalf to Mahavishnu , to protect all the living things in this world , and in Varaaha incarnation itself, He had answered all Her questions.  The compilation of the above questions and answers constitute Varaaha Puraanam.   Bhoomadevi, when She was born in this world as per the wishes of Sri Mahavishnu, reproduced the summary of what She heard from Varaaha Incarnation, in Tamil and in simple terms for the benefits of us, as Thirupaavai.    Yes, Aandal is incarnation of Bhoomadevi and she was born in the Tamil month of Aadi, and in the Tamil star of Pooram, as the daughter of Sri Periyazhwaar.

We have to start talking about Aandal only with what Swami Manavaala Maamunigal, said in his Upadesa Rathna Maalai, 22-24), “ainthu kudikku oru santhathiyai, aazhwargal tham seyalai vinchi nirkum thanmayalaai, pinjaai pazhuthaalai, aandalai, bakthiyudan naalum vaazhthaai maname, mahizhnthu“.   The meaning is, “Aandal was born as a heir to five important clans.  She did more than azhwaars. She achieved greater heights at a much younger age.   Keep this in mind, be happy and praise her.”   She achieved greater heights in devotion, which no one had ever achieved, and that too at a much  younger age of about 5 years.

The five famous clans as mentioned in the above hymn

  • First three azhwaars, Poigai Azhwaar, Boothath Azhwaar and Peyaazhwaar as one family
  • Thirumazhisai Azhwaar as the second clan
  • Nammazhwaar as the the third family
  • Periyazhwaar as the fourth family and
  • Kula Sekara Azhwaar as the fifth clan.

Azhwaars like, Nammazhwaar, Thirumangai Azhwaar, had composed hymns on Perumal, longing him to be with Him, out of extreme devotion and love towards Paramathmaa, assuming that they were women. But unlike them, since Aandal was already born as a female, it was natural for her to express  her love and her yearning to get united with Him, and at the same time appreciate and praise His greatness and compose songs that could articulate more precisely than a male assuming the role of a female.   This kind of a natural instinct made Aandal’s songs to be more special and hence Manavaala Maamunigal described her as “aazhwaargal tham seyalai vinchi nirgum thanmayalai“, meaning, “She had outperformed the Azhwaars”.

Gothasthuthi

Vedantha Desikan, another acharyar, had written a book called Gothasthuthi, containing 29 hymns to appreciate the glories of Aandal.    He said that Aandal’s glories are beyond words and he was trying to keep quiet.  But more and more he thought about them, the same glories had broken his silence and made him do this work.

Termite-mounds on the ground, are called the Ears of the Earth.  The name Valmiikam carries the meaning of those termite mounds.   The sage Valmiki, got his name, because he carried his yoga in one of the mounds, or when he practiced yoga for many years on Paramathma, termites grew the mounds around him.   Valmiki wrote one of the two hindu epics,namely, Ramayanam, consisting of 24000 verses, which is known almost to everyone in India and many in other parts of the world.  Valmiki was honoured with the title of Adi Kavi, meaning that “Poet of early ages”.    When the person born out of the Ears of the Earth could get such a great recognition, the amount of recognition that could come to the Azhwaar, Aandal,  who was born as the feature of this earth, namely, Bhoomadevi, could not be measured at all, as per Vedantha Desikar, in his Gothastuthi.

In the Ramayana, when Ravanan abducted Sita Devi, she threw away her ornaments one after the other along the way, so that Rama could be informed of the route that was taken by Ravanan.   The river Gothavari, which saw and heard the crying of Sita, could have informed Rama, but she (Gothavari) kept quiet, as she was afraid of Ravanan.   Since she did not speak truth, she accumulated sin.     Only after Aandal was born and got the name Gotha, the river Gothavari got cleansed from the sin, which got during the period of Rama, as per Vedantha Desikan, in his Gothastuthi     We all know that Mahavishnu provides the purity to all the pure things in this world, like what is told in Vishnu Sahasranaamam, “pavithraanam, pavithramyo, mangalaanaam cha mangalam“.  Similarly, Aandal had also given Purity to the river Gothavari.

Based on the above, what Gothavari had lost, was gained by another river Yamuna.   In other words, the  river Yamuna, had helped Sri Krishna, in the other epic, namely, Mahabharatham, when Sri Krishna was to be carried away from Mathura to Gokulam on the day of His birth.  The river Yamuna, had helped by giving way to Sri Krishna’s father, Vasudevar  to  carry Sri Krishna across the river.   So when there was an opportunity to help Sri Rama, the river Gothavari did not extend the help out of fear for Ravanan, the bad, whereas the river Yamuna, was not scared about Kamsan, the bad and helped Sri Krishna. In fact, the river Yamuna got the blessings from Sri Krishna, when the waves of the river touched the lotus feet of Sri Krishna.   The river Gothavari got back her sanctity only after Aandal was born and got part of her name, namely, Gotha.

We are happy to share a video from our friends in whatapp group on Aandaal at some of the divyadesams, here, thanks.

Nachiyaar Thirumozhi

Naachiyaar Thirumozhi is a prabhandham composed by Aandal, containing 143 hymns. Based on the above, she is appreciated as “Oru Nootru naarpathu moondru uraithaal vaazhiye“.    Naachiyaar Thirumozhi is perceived as an excellent literature, describing in detail, the devotion to Paramathma along with the sweetness and beauty of the Tamil language .

Like Thirupaavai, in Naachiyar Thirumozhi also, Aandal wanted to attain Lord Krishna. She started this composition with prayers to Manmathan, whose primary responsibility was to unite the lovers who got separated.  Similarly, people who are disturbed over certain things, used to seek support from fortune teller or go through the acts of an augur to find out whether they can overcome those things that are disturbing them in their mind. Aandal shared her experience with such fortune teller in one of the 10 hymns in Naachiyaar Thirumozhi.    In the next 10 hymns, starting with “Mannu perum pugazh, madhavan maamani vannan“, she called the cuckoos and asked them to shout the name of Sri Krishna.  It is recognised that those who read or sing or listen to those ten hymns, would get benefits similar to the ones, people would get when offering prayers through Thiru Manthiram.

The next 10 hymns starting with “Vaaranaam Aayiram” (meaning thousands of elephants) are more popular and they are sung in almost all the Hindu weddings. In those 10 hymns, Aandal, describes the dreams she had about getting married with Sri Krishna and the other rituals conducted in Hindu weddings, like taking a gentle step on the grindstone and coming around the fire during the marriage, etc.    Those who read, or sing or listen to these 10 hymns would be blessed with children who would have great wisdom and devotion to Paramathma.

The next ten hymns starting with “Karpooram Naarumo” talks about the special Conch, called Panchasanniyam, which is held by Sri Krishna.   She appreciates the Conch and says that the Conch had the special privilege of tasting the sweet lips of Sri Krishna.   At the same time she also makes a point to state that the sweet lips of Sri Krishna belonged to all His girl friends of Gokulam (Gopiyargal) and it was unfair for the Conch alone to have that special privilege.

Aandal in her next 10 hymns, used the clouds as her messenger to convey her wishes to Sri Krishna, when she was suffering on the separation from Sri Krishna.  In the next 10 hymns, she praises the presiding deity at Thirumalirincholai.  One of those hymns “Naaru Narum Pozhil Maaliruncholai Nambikku, Naan nooru thadaavil vennai vaai nerunthu paraavi vaithen, nooru thadaa niraintha akkaara adicil sonnen, eru thiruvudaiyaan, indru vanthu ivai kollunkollo ” is sung with lot of devotion during the Thiru Aaraadhanam (time when we offer food to Perumal), as a practice.   (The meaning of the hymn is that Aandal offered 100 large buckets of butter and 100 large buckets of Sweetened Rice to the presiding God at Thirumalrincholai and she invited the Deity to come on that day and consume the same).

Similarly in another 10 hymns that are sung on the presiding deity of Thiruvarangam, she praises the style with which He, as Vamanan, walked towards Maavali, in one of His 10 incarnations.   She asked for similar approach from Him towards her.    Similarly in another incarnation, namely, as Sri Rama, He had shown great concern towards women. Aandal uses that in one of her hymns and asks why He behaved indifferently with her now. In the same way in another incarnation, as Sri Varahan, He has told that He would like those who like Him, in the Charama Slokam.  Aandal, in subsequent hymns, prays that those words spoken by Him in His Varaha Charama Slokam should not go untrue.

Lord Varaha addresses Mother Earth or Bhoodevi in Varaha Charama Slokam, that if anyone thinks of Him, when the mind is sound (sthite manasi), with  the body in good health (suswasthe shareere), and with all mental and physical faculties working perfectly and intact (dhaatusaamye sthite), then He would remember this devotee, when he/she is on his/her deathbed lying helplessly, and personally take him/her to the Supreme Abode.

There are two other Charama Slokams, one each by Sri Rama and Sri Krishna.   We will discuss about them, when there is an opportunity in future in one of weblogs.

Finally, Aandal informed the people around her that in case they wanted to help her in terms of curing her from her disease of not being with Sri Krishna, they could take her to Thiru Aipaadi and give her Sri Krishna’s clothes and other ornaments, which could potentially reduce her pains.

Sri Krishna would not tolerate when His devotees are suffering.   When Aandal was suffering, He decided to give her, His Dharshan to relieve her of her pains.    The special dharsan to Aandal included the scenes where Sri Krishna was with the cows and another scene in which Sri Garudan, (the bird, which serves as His vehicle) spread his wings to protect Him from the hot sun in Brindavan.   She concluded her hymns by stating that she got moksham and she was happy, like the elephant, whose feet were caught by a crocodile and got relieved by the grace of Perumal.

Now that Aandal was happy after having had the dharsan of Sri Krishna in Brindavan, at this stage, we will take a break and continue talking about Aandal and her another famous work, namely, Thirupaavai in the next weblog.

2 Comments on “Aandal /ஆண்டாள்

  1. Very good information about AndAL , well presented with simplicity.
    Thanks for the Posting. Vaazhga VaLamudan

Leave a Reply to swamilalliCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading