A Simple Devotee's Views
For English Version, kindly click here, thanks
திருமழிசை ஆழ்வார் அடுத்து வரும் ஆழ்வார். இவரை பற்றிய குறிப்புகள் அதிகம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
இவர் தை மதம், மஹ நட்சத்திரத்தில் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார்.
இந்த ஆழ்வார் 5000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
இவரின் பல பிரபந்தங்களில், நான்முகன் திருவந்தாதி 120 பாசுரங்களுடனும், திருச்சந்த விருத்தம் 96 பாசுரங்களுடனும் இன்று இரண்டு திவ்ய பிரபந்தங்கள் உள்ளன. திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்களை இங்கே காணலாம்.
ஆழ்வார் திருஅவதாரம் கிருஷ்ணாவதாரம் போல் கூறப்படும். கிருஷ்ணன், தேவகி வசுதேவருக்குப் பிறந்து நந்தகோபன், யசோதையிடம் வளர்ந்தான், அதேபோல் ஆழ்வார், பார்கவ மஹரிஷிக்கும் கனகாங்கிக்கும் பிறந்து மரம் வெட்டுபவரான திருவாளனுக்கும் அவர் பத்தினி பங்கயச்செல்விக்கும் மகனாக வளர்ந்தார். திருமழிசையில் அவதரித்த பொழுது கை, கால் தலை இல்லாமல் பிண்டமாக பிறந்ததனால் தாய் தந்தையாரால் பிரம்புதோட்டத்தில் விட்டு சென்றனர். திருமகளின் அருளால் எல்லாம் அவயங்களும் பெற்று குழந்தையாய் கிடந்த போது அங்கு வந்த திருவாளன் எடுத்து வளர்த்தார்.
சிறு வயதிலேயே தேஜசுடன் விளங்கிய இவரை தரிசிக்க வந்த நான்காம் வர்ண வயதான பெரியவர் அன்புடன் இவர்க்கு பால் அமுது படைக்க, அந்த பாலில் தாம் உண்ட பிறகு சிறிது அந்த பெரியவர்க்கும் கொடுத்து அதை பருகினால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்றார். பெரியவரும் அப்படியே செய்ய அவர்களுக்கு குழந்தை பிறந்து பின்னாளில் கணிகண்ணன் என்ற பெயருடன் ஆழ்வாரின் சீடர் ஆனார்.
இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார். இதை, இவரே “சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்”, என்று பாடினார். பேயாழ்வார் இவருக்கு ஆச்சர்யனாக இருந்து இவரை வைஷ்ணவதிற்கு மாற்றினார். இப்படி பல சமயங்களை கடந்து வைஷ்ணவத்திற்கு வந்து அங்கிருந்தே மோட்ஷம் பெற்றதால் இவரது வைஷ்ணவ வாதங்கள் சக்தி உடையவைகளாக உள்ளன.
இவர் ஸ்ரீமன் நாரயணன் ஒருவனே தொழத்தக்கவன் என்கிற ஞானம் பூரணமாகக் பெற்று, அவரைத்தவிர வேறு எவர்க்கும் பரத்வம் கிடையாது என்பதில் எள்ளளவும் ஐயமின்றி ஆழ்வார் தாமும் இருந்து, நமக்கும் தெளிவு ஏற்படுத்தியதைப் பல பாசுரங்கள் வாயிலாகக்காட்டுகிறார்.
“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” எனத் தொடங்கி யாதோர் ஐயமும் இன்றித் தெளிவாகப் பிரமனைப் பெருமான் படைத்தான், பிரமன் சிவனைப்படைத்தான் என்பதால் பரத்வம் எம்பெருமானுக்கே உள்ளது என அறுதியிட்டார்.
இவருக்கு பக்திசாரர் என்ற திருநாமம்.
ஒரு நாள் திருமழிசை ஆழ்வார், திருமண் இல்லாமல் தவித்தபோது, பெருமாள் அவர்க்கு காஞ்சிக்கு அருகில் உள்ள திருவெக்கா செல்ல ஆணையிட்டார். அவரும் திருவெக்கா செல்ல, அங்கு திருமண் கிடைக்க அங்கேயே தங்கி விட்டார். (இதே போல் பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர்க்கு மேல்கோட்டில் திருமண் இல்லாமல் போக, பெருமாள் கல்யாணி புஷ்கரணிக்கு செல்ல ஆணையிட அங்கு அவருக்கு திருமண் கிடைத்தது). கனிகண்ணனும் ஆழ்வாரை பின்தொடர்ந்தார்.
இவரும் கனிகண்ணனும் திருவேக்காவில் சேவை செய்து வந்தனர். ஒரு வயதான மூதாட்டி ஆழ்வார்க்கு சிறந்த சேவை செய்து வந்தார். கனிகண்ணனும் தன் ஆசார்யார்க்கு சேவை செய்ததை பாராட்டி அந்த மூதாட்டியின் முதுகை தடவிக்கொடுத்ததால் அவரும் இளமை அடைந்தார். அதை தெரிந்துகொண்ட காஞ்சியை ஆண்டு வந்த பல்லவராயன் கனிகன்னனை அணுகி தனக்கும் இளமையை வேண்டினார். கணிகண்ணன் மறுத்து ஆழ்வாரின் பெருமைகளை சொன்னார். அதற்கு அரசர் திருமழிசை ஆழ்வார் தன்னை பாடவேண்டும் என்று கேட்க அதற்கு தன் ஆச்சர்யார் பரம் பொருளான கடவுளைத் தவிர வேறு யாரையும் பாட மாட்டார் என்று சொன்னார். இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன், கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, அந்த ஊர் யதோத்தகாரி பெருமானிடம், கணிகண்ணன் இந்த ஊரை விட்டு போகின்றான், நானும் இந்த ஊரை விட்டு போகின்றேன், “நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டி” கொண்டு வா, என்று சொல்ல, பெருமாளும் புறப்பட்டார். அப்படி அவர்கள் ஒரு இரவு தங்கிய இடம் ஓர் இரவு இருக்கை, அது மழுவி இன்று ஓரிக்கை என்ற இடம் ஆயிற்று.
பெருமாள் ஊரை விட்டு கிளம்பியதால் அந்த ஊர் மக்களும் ஊரை விட்டு கிளம்ப, மன்னன் தன் தவறை உணர்ந்து ஆழ்வாரை வேண்ட அவரும் மன்னனை மன்னித்து ஊருக்கு திரும்பினார். அப்போது கணிகண்ணன் மற்றும் பெருமாளையும் அவசரமாக அழைத்துக்கொண்டு சென்றார். ஆழ்வார் சொன்னபடி பெருமாள் செய்தமையால், பெருமானுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர். ஆழ்வார் தம்மிடம் அவன் காட்டிய க்ருபையை “வெக்கணைக் கிடந்ததென்ன நீர்மையே!”…. என்று கொண்டாடினார். பெருமாள் அவசரமாக வந்து சயனித்த போது இடம் வலமாக மாறி சயனித்கொண்டு இருப்பார். இன்றும் திருவெக்கா திவ்ய தேசத்தில் இதை காணலாம்.
திருமழிசையாழ்வார் பெருமைகள் தொடரும்….ஆழ்வார் திருவடிகளே சரணம்
————————————————————————–
Thirumazhisai Azhwaar is the next Azhwaar. There are many incidents recorded about this Azhwaar. We will try to go through a few among them.
The Discus, Chakrathazhwaar, which acts as a weapon for Sri Narayanan, has come down as Thirumazhisai Azhwaar on the Tamil month of Thai (around Jan 15 to Feb 14) on star Maha.
It is told that this Azhwaar lived for more than 5000 years.
This Azhwaar has written many, but two Divya Prabhandams, Nanmughan Thiruvandathi with 120 Hymns and Thiruchantha Virutham with 96 Hymns are available today.
The birth of Azhwaar is on similar lines of Lord Sri Krishna. As Krishna was born to Vasudevar and Devaki, but grown up in Brindavan with Nandagoban and Yasoda, Thirumazhisai Azhwaar was born to Bhargawa Maharishi and Kanaghanki, but grown up with Thiruvalan and Pangayaselvi. When he was born in Thirumazhisai, he was without limbs and also without head, the rishi left the baby in a place where there are lots of cane, a kind of cane forest. With the abundant Grace of Sri Mahalakshmi, Azhwaar obtained all the features of a human being. Thiruvalan whose job is to cut the trees, came and saw the child. He took the child and nurtured him thereafter.
Azhwaar had all the brightness even when he was very young and on hearing about Azhwaar, a very old person came to visit him. He gave milk for Azhwaar with lots of love and respect. Azhwaar took some and gave him something back. He asked him to drink the milk and told him that he would get a son soon. The old person became young and gave birth to a child, who became the disciple of Azhwaar, Kanikannan.
Azhwaar has learnt many religions, like Sakiyam, Samanam, saivam and then turned to Vaishnavisam with the help of Sri PeriAzhwaar. In one of his Hymns, he has told “Sakkiyam Katrom, Samanam Katrom, Sankaranaar Aakiya Aagamanool Aaraainthom, bakkiyathaal Venkatkariyanai Sernthom“, meaning that he has learnt the other religions, but with God’s grace he arrived at Vaishnavisam. He remained with Vaishnavisam throughout and his ideology and principles on Vaishnavisam are much stronger, as he has gone through other religions.
He got a special name “bakthi saarar”, for his staunch and steadfast love and affection towards Sriman Narayanan.
Thirumazhisai Azhwaar has learnt without doubt that Sri Narayanan is theultimate God and no one else has such unlimited power and resources. He had not only followed that throughout, but also, he had made sure that he communicated the same in emphatic or assertive words in his Hymns to make people like us to understand the same clearly.
“Naanmughani Narayanan Padithaan, Naanmughanum thaanmugamaai sankaranai thaan padaithaan“, meaning that “Brahmah was created by Sri Narayanan and Brahmah has created Sankaran”. Sri Narayanan has given the responsibility of creation to Brahma and the responsibilityof annihilation to Lord Siva, or Sankaran. With the above, Azhwaar concludes that Sri Narayanan is the Ultimate God.
One day when Thirumazhisai Azhwaar did not have enough Thiruman (The white sand which Vaishnavites wear on their forehead), he was helpless, Sriman Narayanan informed him to go to Thiruvekka, where he can find Thiruman. (This is similar to Ramanujar wanting Thiruman and found the same in Kalyani pushkarani in Melkote through the blessings of Sriman Narayanan very much later).
Azhwaar and Kanikannan were offering prayers and services to the God at Thiruvekka, Yathothakari, the name of the Chief Deity in that temple. One old lady was doing services to Thirumazhi Azhwaar and Kanikannan was pleased with the services done by the old lady to his Acharyar. He affectionately patted her and she became young. The king of Kanchi, Pallavarayan, came to know about this and he also wanted to become young. He approached Kanikannan and Kanikannan refused to do that and talked about the greatness of Azhwaar. Pallavarayan asked Kanikannan to convey the message that he wanted Azhwaar to sing a song on him. Kanikannan said that Azhwaar will not sing on anybody, other than Sriman Narayanan. On hearing that the king became angry and ordered Kanikannan to go out of the town.
When Azhwaar heard this, he has also decided to go out of the town. Azhwaar immediately went to the temple and told the God, Yathothakaari, that Kanikannan was leaving the town, that he, Azhwaar, himself, would also be leaving the town, and he wanted the God also to move out of the town, by saying, “Kanikannan Poginraan, mannivanna nee kiddaka vendaa, pulavanum pogindren, neeyum unthan painaaga pai surutikkol”. Yathothkaari also listened Azhwaar and moved out of the town along with Kanikannan and Azhwaar. They stayed in a place overnight and that place is now called Orikkai, (Or Iravu Irukkai) meaning stayed one night.
Since Perumaal went out of the town, the people living in the town have also decided to move out of the town. The king realised his mistake and he requested Azhwaar to come back to the town. Azhwaar accepted his request and immediately chanted that Kanikannan would be going back, that he, Azhwaar, would also be going back, Manivanna, the God, you would also go back and lay down there. God listened again to Azhwaar. That is why the God at Thiruvekka is called “sonna vannam seitha perumaal“, meaning that the God acted as per the wishes of His bakthas. Azhwaar appreciated this act of Yathothkaari, by addressing him as Simple at Tiruvekka (Vekkanai kidantha enna neermayye). Similarly, the God when he came back, he put his bed urgently, The Five Headed Serpent, Ananthazhwaar, right to left instead of usual left to right. We can notice the same even today at Thiruvekka when we do prayers at Yathothkaari.
We will continue with Thirumazhisai Azhwaar in the next blog also. “Azhwaar Thiruvadekale Saranam” – meaning “we prostrate at Azhwaar’s holy feet wholeheartly”
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா துணிவுடைய
சென்னா புலவனும் போகின்றேன் நீயும் உந்தன்
பைநாக பாய் சுருட்டிகொள்
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.