திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan

For English version, please click here, thanks

முன்னுரை

திருவாய்மொழியில் ஆழ்வார் பாடிய திருத்தலங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில் திருவேங்கடமுடையானைப் பற்றி பார்த்தோம். அங்கு ஆழ்வாருக்கு பெருமாள் காட்டிய குணம், வாத்ஸல்யம், அதாவது, தாயை போல் அன்பு காட்டும் தன்மை.

முன்பு நம்மாழ்வாரும் திருஅரங்கனும் என்று ஒரு வலைப்பதிவு பார்த்தோம். அங்கே விக்கிரக வடிவில் நம்மாழ்வாருக்கும் திருஅரங்கனுக்கும் இடையே நடந்த சில நிகழ்வுகளைப் பார்த்தோம். இந்த பகுதியில் திருவாய்மொழியில் திருவரங்கன் என்பதை பற்றி பார்ப்போம். திருவரங்கத்தில் ஆழ்வாருக்கு பெருமாள் கட்டிய குணம், வியூஹ  சௌஹார்த்தம், அதாவது, கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரம். இதில் சௌஹார்த்தம் என்றால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தல்.

ஆயிரமும் அரங்கனுக்கே

பராசர பட்டர் என்னும் ஆச்சார்யர், நம்மாழ்வாரின்  திருவாய்மொழி ஆயிரம் பாடல்கள் அனைத்துமே  திருஅரங்கனுக்காகவே அருளிச் செய்தவை என்றும், அவற்றை அரங்கனுக்கு முன் சமர்பித்துவிட்டு அவற்றில் இருந்து இந்த பத்து திருவேங்கடமுடையானுக்கு, ஈந்த பத்து திருமோகூருக்கு என்று ஆயிரம் பாசுரங்களையும் பல திவ்யதேச பெருமான்களுக்கும் பிரித்து கொடுப்பதாக சொல்லுவார்கள்.

 “வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் 

திருவாய்மொழியின் ஒரு தனியன். தனியன் என்பது ஒரு நூல் மற்றும் நூல் ஆசிரியரின் பெருமைகளை கூறும் ஒரு தனிப்பாடல். இவை நம் ஆச்சார்யர்களால் ஒவ்வொரு திவ்யப்ரபந்தத்திற்கும் பாடப்பட்டவைகள் ஆகும்.

தனது யுவராஜா பட்டாபிஷேக விழாவிற்கு முதல் நாள் ராமன், சீதையுடன் இஷ்வாகு குல ஆராதனப் பெருமாளான நாராயணனின் சன்னதிக்கு சென்றதை வால்மீகி ராமாயணத்தில் உள்ள சுலோகம்,

“கதே புரோஹிதே ராமஃ ஸ்நாதோ நியதமாநஸஃ. – 
ஸஹ பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத்৷৷ 2.6.1৷৷” 

மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த நாராயண பெருமாளே விபீஷ்ணன் மூலமாக திருஅரங்கம் வந்து சேர்ந்ததும் ஸ்ரீரங்க கோவிலின் சரித்திரத்தில் இருந்து (கோவிலொழுகு) தெரிந்து கொள்ளலாம். நம்முடைய முந்தைய வலைப்பதிவில் பார்த்தது போல், திருவாய்மொழி முதலில், இடையில், இறுதியில் நாரணன் சொல்லப்பட்டதால், திருவாய்மொழி முழுவதுமே நாரணனுக்கு என்று உறுதிசெய்யப்பட்டது. எனவே, திருவாய்மொழி ஆயிரமும் அரங்கனுக்கே என்று கூறுவது மிகவும் பொருத்தமே.

ஏழாம் பத்தில் திருவேங்கடமுடையான்

மிக அதிகமான பத்துக்களில், (ஐந்து, ஏழாம் பத்துக்கள் தவிர மற்ற எல்லா பத்துகளிலும்), ஆழ்வார் ஒருதடவையாவது திருவேங்கடமுடையானை நேரிடையாகக்  குறிப்பிட்டு உள்ளார் என்று முன்பு பார்த்து உள்ளோம். ஏழாம் பத்தில் வேங்கடமுடையான் பிரஸ்தாபம் கிடையாது, ஆனால் ஏழாம் பத்தில் தான் திருவரங்கனை பாடிய கங்குலும் பகலும் பதிகம் உள்ளது.  ஸ்ரீ ரங்கநாதன், “மந்தி பாய் வடவேங்கடமாமலை சந்தி செய்ய நின்றான் அவனே அரங்கத்து அரவின் அணையான்” என்று நாம் இன்னும் பார்க்க வேண்டிய ஒரு ஆழ்வார், திருப்பாணாழ்வார், அமலனாதிபிரான் என்னும் திவ்யப்ரபந்தத்தில் சொல்லுகிறார்.  எனவே அவனே இவன், அதாவது திருவேங்கடமுடையானே திருவரங்கன். ஆக, ஏழாம் பத்திலும் திருவேங்கடமுடையான் சொல்லப்பட்டார்.

தென் திருவரங்கம்

ஆழ்வார் எந்த திவ்யதேசத்திற்கும் போகாமல், தான் இருந்த இடமான ஆழ்வார்திருநகரியில்  இருந்து கொண்டே தான்  பல திவ்யதேச பெருமான்களைப் பாடினார் என்று பார்த்து உள்ளோம். திருஅரங்கம், ஆழ்வார்திருநகரிக்கு வடக்கே உள்ளது.  ஆனால், ஆழ்வார் தென்திருவரங்கம் கோவில் கொண்டானே (7.2.9) என்று திருஅரங்கனைப் பாடுகிறார். வடதிருவரங்கம் என்று பாடாமல், தென்திருவரங்கம் என்று பாடுவதற்கு காரணம்,  முந்தைய பதிகமான (6.10) உலகமுண்ட பெருவாயா என்ற பதிகத்தில் திருவேங்கடமுடையானை பாடும் போது, உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே  (6.10.10) என்று பாடியதால், ஆறாம் பத்து முடிந்தபொழுதும்  இந்த ஏழாம் பத்து இரண்டாம் பதிகம் பாடும் பொழுதும் திருவேங்கடமுடையானின் அடிக்கீழ் இருந்து நகராமல் பாடுகிறார் போலும்.

கங்குலும் பகலும் – திருவாய்மொழி

சுவாமி நம்மாழ்வார், ‘கங்குலும் பகலும்’ (7.2) என்கிற திருப்பதிகத்தில், திருவாய்மொழியின் பத்து பத்துக்களின் அர்த்தங்களையும் அருளிச் செய்தார். இந்த பதிகம், திரு அரங்கனுக்காகப் பாடப்பட்டதால், முன்பு சொன்னது போல், ‘மதிள் அரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்’ என்கிறார்கள்.  அந்த பத்து பத்துகளின் அர்த்தங்களை சிறிது விரிவாக கீழே காண்போம்.

பத்து பத்துக்கள்

ஒவ்வொரு பத்திலும் பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய குணநலன்கள், என்று முன்பே பார்த்து உள்ளோம்.

பரத்வம்

பரத்வம் என்பது, தான் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த நிலையில் இருப்பது. முதலில் இந்த பதிகத்தின் ஆறாவது பாசுரத்தில் “விண்ணோர் முதல் என்னும் (7.2.6)” என்று சொல்லி பரத்துவத்தின் பெருமையை சொல்லத் தொடங்குகிறார். பின்னர், இந்த பதிகத்தின் பத்தாவது பாசுரத்தில், “மூவுலகு  ஆளியே என்னும், கடிகமழ் கொன்றைச் சடையனே என்னும், நான்முகக் கடவுளே என்னும்” (7.2.10) என்று தொடங்கி, “வடிவுடை வானவர் தலைவனே” என்று நிலைநிறுத்தி, “வண் திருவரங்கனே!” என்று முடிக்கிறார். மூவுலகு ஆளியே என்கின்ற இந்திரனுக்கும், கொன்றைப்பூவினை தலையில் வைத்துக் கொண்ட சிவனுக்கும், நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனுக்கும் அந்தர்யாமியாக இருந்து அவர்களின் நிர்வாகங்களையும் செலுத்துபவனே என்றும், எப்போதும் பெருமாளுக்கு சேவை செய்வதால் உண்டான மகிழ்ச்சியே அழகாக தோன்றும்படி இருக்கிற நித்தியசூரிகளான வானவர்களுக்கும் தலைவனே என்று கூறியதன் மூலம் பெருமாளின் உயர்ந்த நிலையினை நமக்கு தெரிவிக்கிறார்.  “வண் திருவரங்கனே!” என்று கூறியதன் மூலம், இவ்வுலகில் வாழும் நமக்கும் காட்சி அளிக்கிறார்.  ஆக, பக்த, முக்த, நித்யசூரிகளுடன், தேவர்களுக்கும், இந்திரனுக்கும், சிவனுக்கும், பிரம்மனுக்கும் தலைவன் என்று இந்த பாசுரத்தில் சொல்லி முதல் பத்துக்கு உரிய செய்தியான பரத்வம் சொல்லப்படுகிறது.

காரணத்வம்

காரணத்வம் என்பது, தானே  எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது.   இந்த உலகத்தைப் படைத்து அதில் உள்ள ஜீவராசிகளையும் படைத்து, மஹாபிரளயம் மற்றும் பிரளயம் வரும் போது அவற்றை உண்டு, தன் வயிற்றிலே வைத்து காத்து, பின் மீண்டும் அங்கங்கே கொண்டுவரச் செய்வதை, இந்த பதிகத்தின் இரண்டாவது பாசுரத்தில் “முன் செய்து, இவ்வுலகம் உண்டு, உமிழ்ந்து” (7.2.2) என்று சொல்லியதால் இரண்டாவது பத்துக்கு உரிய பொருளான “காரணத்வம்” சொல்லியதாயிற்று.

வியாபகத்துவம்

வியாபகத்வம் என்பது, பரமாத்மா எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பதை சொல்வது.  பரமாத்மா அளவிடமுடியாமல் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று சொல்வது அவருடைய உருவத்தின் (ரூபத்தின்) அளவினை மனதில் கொண்டா, அல்லது பரமாத்மாவின் மேன்மையான குணங்களைக் (ஸ்வரூபத்தின்) மனதில்கொண்டா என்று திருக்குருகைப்பிரான் என்னும் ஆச்சர்யனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது,  அவரின் பதில், சாதாரண மனிதர்களுக்கு பரமாத்மாவின் மேன்மையான குணங்களைக் கொண்டே அவர் எங்கும் நிறைந்து இருப்பதை சொல்ல முடியம். ஆனால் பெருமாள், அவரின் ரூபத்தின் அழகினால், ஆழ்வார்களின் இதயத்தில் ஒருதுளி இடம் விடாமல் எங்கும் வியாபிக்கிறார் என்று சொல்கிறார்.  இந்த பதிகத்தில் நம்மாழ்வார், ‘கட்கிலீ’ உன்னை காணுமாறு அருளாய்”  (7.2.3) என்று அந்தர்யாமியை சொல்வதாலும் மற்றும் “என்னுடைய ஆவியே என்னும்” (7.2.9) என்று சொல்வதாலும், பெருமாள் தனது உள்ளத்தில் எங்கும் நிறைந்து உள்ளதை சொல்லி மூன்றாவது பத்துக்கு விஷயமான “வியாபகத்துவதை” சொல்கிறார்.

நியந்த்ருத்வம்

நியந்த்ருத்வம் என்பது பரமாத்மா தானே எல்லாற்றையும் நடத்திக் கொடுப்பது என்பதை சொல்வது. இந்த பதிகத்தில், “பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்” (7.2.7) என்பதின் மூலம், அந்தந்த இடங்களுக்கு தகுந்தவாறு சுக துக்கங்களை படைக்கின்றாய் என்றும், “கால சக்கரத்தாய்” (7.2.7) என்பதின் மூலம் கால தத்துவதை இயக்குபவனே என்று சொல்வதாலும் பரமாத்மா, தானே முன்னின்று இருந்து இயக்கும் தன்மை சொல்லப்படுவதால், நான்காம் பத்தின் உள்ளுறைபொருளான நியந்த்ருத்வம் இந்த பதிகத்தில் சொல்லப்பட்டது.

காருணிகத்வம்

காருணிகத்வம் என்பது அவனுடைய எல்லையற்ற கருணையை காண்பிப்பது.  நம் ஸம்ப்ரதாயத்தில் சொல்லப்படும் மிக முக்கியமான காருணிகத்வம், பரமாத்மா மஹாபிரளயத்தின் போது எல்லா உயிர்களையும் தன்னுடைய வயிற்றில் வைத்து காப்பது ஆகும். வேறு எத்தனையோ இடங்களில் பெருமாளின்  அதீத கருணை வெளிப்பட்டாலும், கீழ்கண்ட மூன்று இடங்களை நம் ஆச்சார்யர்கள் விடாமல் எப்போதும் சொல்லி வருவார்கள். இந்த ஒவ்வொரு உதாரணமும் எல்லா உயிர்களுக்கும், அவை ஒன்றும் கேட்காமலேயே, பெருமாள் தன்னுடைய அளவிட முடியாத கருணையை காண்பித்த செயல்கள் ஆகும்.

  • திரிவிக்ரம அவதாரத்தின் போது, தாவி அன்று உலகம் அளந்து, (“தாவி அன்று உலகம் எல்லாம்  தலைவிளாக் கொண்ட எந்தாய்” –  திருமாலை 35) என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போலவும், “தாள் பரப்பி மண் தாவிய ஈசனை”  என்று நம்மாழ்வார் (3.3.10) திருவாய்மொழியில் சொன்னது போலவும், அப்போது இருந்த  எல்லோருடைய தலைகளிலும் யாரும் கேட்காமலேயே, தன்னுடைய திருபாதத்தினை வைத்து மோட்ஷம் அளித்தது
  • ஸ்ரீ ராமபிரான், தான் ஸ்ரீவைகுந்தத்திற்கு திரும்ப செல்லும் போது, அயோத்தியில் இருந்த தாவரங்கள், மிருகங்கள் மற்றும் எல்லா உயிர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றதை, “அன்று சாராசரங்களை வைகுந்தத்திற்கு ஏற்றி”  (பெருமாள் திருமொழி 10.10), என்று பெருமாள் திருமொழியில் குலசேகர ஆழ்வார் சொன்னது போலவும்,  “அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக்கு உய்த்தனன்” (7.5.1)   என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் சொன்னது போலவும் அந்த காலத்தின் போது இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் மோட்ஷம் அளித்தது
  • குன்றம் ஏந்தி குளிர் மழை காத்த பிரான்” (3.3.8) என்றும் “அப்பன் தீ மழை   காத்துக் குன்றம் எடுத்தானே” (7.4.10)  என்றும் திருவாய்மொழியில் நம்மாழ்வார் சொன்னது போலவும், “மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே” (திருமாலை 36) என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போலவும், பசி கோபத்தினால் இந்திரன் ஏழு நாட்கள் இடைவிடாது பெய்த மழை வருவதற்கு முன்பே கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து அங்கிருந்த மக்கள், ஆடு, மாடு மற்றும் எல்லா உயிரினங்களையும் அவர்கள் கேட்காமலேயே காப்பாற்றிய கண்ணபிரானைச் சொல்வது.

மேலே சொன்ன பாசுரங்கள் ஒரு சில உதாரணங்களே.  சொல்லப் போனால், எல்லா ஆழ்வார்களுமே இந்த சரித்திரங்களை பாடி இருப்பார்கள். இப்படி பெருமாளின் அருளை, கருணையை திருவாய்மொழியில் ஐந்தாம் பத்தில் ஆழ்வார் சொல்வதை முன்பு பார்த்தோம்.   இந்த கங்குலும் பகலும் (7.2) பதிகத்தில், “முன் செய்து, இவ்வுலகம் உண்டு, உமிழ்ந்து” (7.2.2) என்றும், இவள் திறத்து அருளாய் (7.2.6) என்றும் குன்று ஏந்தி கோ நிறை காத்தவன் (7.2.8) என்றும் சொன்னதால், இந்த பதிகத்தில், ஐந்தாம் பத்தின் பொருளான காருணிகத்வம் வெளிப்படுகிறது.

சரண்யத்வம்

சரண்யத்வம் என்பது தன்னால் எல்லோருக்கும் சரணாகதி அளிக்கக் கூடிய வல்லமை உண்டு என்பதை சொல்வதாகும்.    “பற்றிலார் பற்ற நின்றானே” (7.2.7) என்று  அவன் மேல் பற்று இல்லாதவர்களுக்கும் சரணாகதி அளித்து வருபவனே என்று ஆழ்வார் இந்த பதிகத்தில் பாடுவதால், பெருமாள் சரண்யம் அளிக்க கூடியவன் என்று சொல்லி ஆறாம் பத்தின் பொருளான சரண்யத்வம் இங்கே சொல்லப்பட்டது. 

சக்தத்வம்

சக்தத்வம் என்பது பெருமாள் தான் எல்லாவித வேண்டுகோள்களையும் நிறைவேற்றும் சக்தி உள்ளவன் என்பதை எல்லோரும் உணரும்படி செய்வது. இந்த பதிகத்தில் “அந்திப் போது  அவுணன் உடல் இடந்தானே” (7.2.5) என்று (நரசிம்மாவதாரத்தின்) பரமாத்மாவின் பெருமை சொல்லியும், “அலைகடல் கடைந்த ஆரமுதே” (7.2.5) என்று பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து (கூர்மாவதாரத்தின்) பரமாத்மாவின் பெருமையைச் சொல்லியும்,   “உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட ஒருவனே” (7.2.3) என்று வலிமையான அசுரர்களின் உயிரை எடுத்தவனே என்று சொல்லியும், அவனுடைய சக்திக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளை கூறி இந்த பதிகத்தில் ஏழாம் பத்தின் கருத்தான சக்தத்வம் சொல்லப்பட்டது.

சத்யகாமத்வம்

சத்யகாமத்வம் என்பது, விரும்பத்தக்க குணங்கள் எல்லாம் உடையவன்  அவன்; அவன் ஆசைப்பட்டு அடையவேண்டியது எதுவும் இல்லை; எல்லாவற்றையும் அடைந்தவன் அவன் என்பது. இது எட்டாவது பத்தில் ஆழ்வாருக்கு பகவான் காட்டிய அவனது குணம் அல்லது பெருமை ஆகும்.

எட்டாம் பத்தின் முதல் பதிகத்தின், முதல் பாசுரத்தில், முதல் வார்த்தைகளாக ஆழ்வார் சொல்வது, பெருமாளின் அழகுக்கும் பெருமைக்கும் திறமைக்கும் தகுதியான தேவிமார்கள் ஸ்ரீதேவியும், பூமாதேவியும் ஆவார்கள் என்பதை “தேவிமாராவார் திருமகள் பூமி” (8.1.1) என்று சொல்வதை, இந்த கங்குலும் பகலும் பதிகத்தில், “என் திருமகள் சேர் மார்வனே“(7.2.9) என்றும், “நிலமகள் கேள்வனே” (7.2.9) என்று சொல்லி, “ஆய்மகள் அன்பனே“(7.2.9) என்று நீளாதேவியையும் சேர்த்துள்ளார். நாம் முன்பே பார்த்தது போல், தேவிமார்களோடு அவன் இருக்கின்றபடியாலும்,  தேவிமார்கள் அனைத்து ஜீவாத்மாக்களையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து நமக்காக அவனிடம் சிபாரிசு செய்வதாலும், அவன் நமக்கு வேண்டிய கருணையை காட்டி நாம் விரும்பியதை அடைய செய்பவன்.  இப்படி எட்டாம் பத்தின் பொருளான சத்யகாமத்வம் இந்த கங்குலும் பகலும் பதிகத்தில் சொல்லப்பட்டது.

ஆபத்சகத்வம்

ஆபத்சகத்வம் என்பது நம் இடர்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்  சக்தி. நாம் முன்பே பார்த்து போல், பிரளய காலத்தில் நம்மை அவன் வயிற்றில் வைத்து காத்தது “முன் செய்து இவ்வுலகம் உண்டு” (7.2.2) என்று சொன்னதும், கண்ணபிரானாக கோவர்த்தன மலையைத் தூக்கி அங்குஇருந்த எல்லா உயிர்களையும் காப்பாற்றியதை “குன்றமேந்தி கோ நிறை காத்தவன்” (7.2.8) என்று சொன்னதும், இந்த கங்குலும் பகலும் பதிகத்தில் உள்ளதால், ஒன்பதாம் பத்தின் கருத்தான ஆபத்சகத்வமும் இங்கே உள்ளது.

ஆர்த்திஹரத்வம்

ஆர்த்திஹரத்வம் என்பது நம்முடைய கவலைகளை எதிர்பார்ப்புகளை, துடிப்புகளை, தீர்க்கவல்லவன் எனபது ஆகும்.  மோக்ஷம் கிடைக்க வில்லையே என்ற நம் துடிப்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த குணமும் பெருமையும், அவனிடம் இருப்பதை ஆழ்வாருக்கு உணர்த்தியது திருவாய்மொழியில் பத்தாம் பத்தில் ஆகும்.  இதனை, கங்குலும் பகலும் பதிகத்தில், ஆழ்வார் “அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே” (7.2.10) என்றும், “முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்” (7.2.11) என்றும் சொல்வதானால் பத்தாம் பத்தின் பொருளான ஆர்த்திஹரத்வமும் கங்குலும் பகலும் பதிகத்தில் உள்ளது.

இப்படி, பத்து பத்துகளின் பொருளும் இந்த பதிகத்தில் உள்ளதால், திருவாய்மொழி முழுவதுமே அரங்கனுக்கு என்று பட்டர் சொன்னது நமக்கு விளங்கும்.

thiruvaaimozhi Sep 11

இப்படி திருவாய்மொழி முழுவதும் அரங்கனுக்கு சமர்ப்பித்த சடகோபனுக்கு ‘நம் ஆழ்வார்’ என்று அரங்கன் பெயர் கொடுத்தது மிகவும் பொருத்தமே. அதேபோல் இந்த பதிகத்தின் பல பாசுரங்களில் ‘திருவரங்கத்தாய்’ என்று அழைப்பது திருவரங்கத்தில் உள்ளான் என்பதை குறிப்பதற்கே. இருப்பினும்,  “தாய்” என்ற ஆழ்வாரின் வார்த்தைக்கு ஏற்ப, உலகுக்கெல்லாம் தாயாகவும் இருக்கிறான் என்பதை உலகுக்கு உணர்த்த, மாயாவதாரமான மோஹினி அலங்காரத்தில்,  ஒவ்வொரு ஆண்டும் அரங்கன்  காட்சி அளிப்பதையும் நாம் இந்த சமயத்தில் நினைவில் கொள்ளலாம்.

இந்த பகுதியில் சில கருத்துக்களை உறுதி செய்ய உதவிய எங்கள் அண்ணா ஸ்ரீ ரங்கநாதனுக்கும்Dr. R.V. கமலக்கண்ணன் அவர்களின் புத்தக மேற்கோளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

முன்பு சொன்னது போல், திருவாய்மொழி ஒரு மிகப் பெரிய கடல். மேலும் திருவாய்மொழியைப் பற்றியே இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

=======================================================

Preface

Here we are discussing about the divya desams on which Swami Nammazhwaar had compiled hymns on.   We went through some interesting aspects of Thiruvenkatamudaiyaan in our previous weblog.  The glory that was demonstrated or shown to Azhwaar by Perumal in Thiruvengadam is Vaathsalyam, a virtue or glory that can be best described as the love , affection or care shown by a mother to her children.

Earlier, we have seen one weblog titled  “Namazhwaar and Thiruvarangan”  where the interactions between Swami Namazhwaar   in vigraham (idol) Archai State and Thiruvarangan.  In this weblog, the objective is to discuss about Thiruvarangan and Thiruvaaimozhi in particular.   The glory or virtue that was demonstrated to Azhwaar in this divya desam is called “Viyuha Sowhartham” which means, His desire in seeing all the beings in good welfare.

All Thousand for Arangan

Our Achaaryar Parasara Bhattar, used to state that all the thousand hymns of Thiruvaaimozhi are dedicated to Thiruvarangan and then they were distributed like, this  ten for Thiruvenkadamudiyaan and this ten for Thirumoghur and so on for other Divyadesa Emperumaans. This can be seen from one of the Thaniyans of Thiruvaaimozhi,

“Vaan thigazhum solai mathilarangar vanpugazh mel aandra tamil maraigal aayiramum eendra muthal thaai Sadagopan, moimpaal valartha ithathaai Iraamanusan”. 

 Thaniyan is a separate hymn sung on the individual prabantham and/or on the author of the prabantham.

Valmiki, the author of Ramayana, wrote a sloka, when Sri Rama with  Sita went to the  sanctum sanctorum of Sriman Narayana, the daily worshipped deity (Aaradhana Perumal)of His Dynasty (Ikshvaaku)  on the eve of His Yuvaraja Pattabishegam (coronating Rama as heir-apparent),

” gatē purōhitē rāmaḥ snātō niyatamānasaḥ – saha patnyā viśālākṣyā nārāyaṇamupāgamat 2.6.1″  

The meaning of the above is “After  the family priest (Vasishta) left,  Rama had his bath, and with his mind under control came to Lord Narayana along with his large-eyed consort, Sita. (with an intention to worship him)”.    The same  deity, Sriman Narayanan was given as a gift to Sri Vibishnan, the brother of Ravana, as a token of appreciation for his (Vibishnan) devotion towards Sri Rama, by Sri Rama after His Pattabhishegam and Vibishnan had agreed to leave the same at Srirangam, on his way to Srilanka, as per the temple history of Sri Rangam (Kovilozhgu).   We have seen in our earlier weblog that Azhwaar has made reference to Sriman Narayanan in the beginning,  middle and at  the end of Thiruvaaimozhi and hence all the thousand hymns of Thiruvaaimozhi is for Sriman Narayanan.  Since Srirangam perumal is Sriman Narayanan, as per above, the thousand hymns of Thiruvaaimozhi can be attributed to Thiruvarangan.

Thiruvenkadamudaiyaan in Seventh Pathu

We have seen earlier that Azhwaar has made reference to Thiruvenkadamudaiyaan, at least once, in all  the pathus (Tens), except  5th and 7th Pathus.    There is no reference about Thiruvenkadamudiyaan in 7th Pathu, where Azhwaar has compiled hymns on Thiruvarangan,  in Kangulum Pagalum Pathigam (7.2).    We are yet to discuss about the Azhwaar, by name, Thirupaanazhwaar, who has compiled a prabandham, known as Amalanaathipiraan, where he described Thiruvarangan and Thiruvenkadamudaiyaan are one and the same.   “Mandhi paai, vadavenkada maamalai vaanavar santhi seiya nindraan, avane Arangathu aravin annaiyaan“, meaning that the deity who is in standing posture in Thiruvenkadam, is the same deity, who is reclined on the snake in Thiruvarangam.    That is Thiruvenkadamudiayaan and Thiruvarangan are same, and azhwaar had compiled hymns on Thiruvarangan in the seventh pathu (Seventh Ten), we can conclude that Thiruvenkadamudaiyaan is referred  in the seventh  pathu also.

Thiruvarangam in the South

As seen by us in one of the earlier weblogs, Namazhwaar did not visit any of the divyadesams, but compiled hymns on the perumals of respective divya desams, by remaining only in Alwarthirunagari, his birthplace.  Azwaar says  ” Thenthiruvarangam kovil kondane”. Srirangam is situated north of Alwarthirunagari and Azhwaar should have compiled the hymn as Thiruarangam, which  is in North (from Alwarthirunagari), as against Thiruarangam, which is in South, in the hymn “Thenthiruvarangam kovil kondaane” (7.2.9).    This could be because of the previous hymn that he sung on Thiruvenkadamudaiyaan, (“un adi keezh amarnthu pugunthene – 6.10.10)” – which means that Azhwaar literally went, sat at  the Holy feet of Thiruvenkadamudaiyaan , and he remained there, even when he was compiling the hymns on Thiruvarangam.  And Thiruarangam is situated south of Thiruvenkadam and hence it is acceptable to  Azhwaar to call  Thiruvarangan, as the deity who has the temple in South.

Kangulum Pagalum – Thiruvaaimozhi

Kangulum Pagalum (7.2) is a very special pathigam, in the sense that Swami Namazhwaar had given the meaning of  each and every Pathu (Ten), in these eleven hymns of this pathigam.   Since this pathigam is for Thiruvarangan, it is very apt to call “mathil arangar vann pughazh mel aandra thamizh maraigal aayiramum“, meaning that all the one thousand tamil vedas (ThiruvaaimozhI in total) are for Thiruvarangan.   Let us see in little bit more details on the above in the following paragaraphs.

Ten Tens

We have seen earlier about the glories which were shown by Perumal in each of the Pathu (Ten) of Thiruvaaimozhi to Azhwaar.

Parathvam

Parathvam” means that He is the Greatest, He is the Suprememost, there is no other person or thing in this Universe or anywhere, who or  which is superior to Him. First Namazhwaar said in the sixth hymn of this pathigam, “Vinnor Muthal Ennum” (7.2.6) meaning that He is the Leader of the Nithyasooris and all others in the celestial world. And then in the tenth hymn of this pathigam, Azhwaar said

  • moovulagu aaliye (the leader to the king of the three worlds, that is Leader of Indran)
  • kadi kamazh kondrai sadayane (the Leader to the one, who wears the fragrant kondrai flower, that is Siva)
  • naanmugha kadavule” (the Leader to the one, who  has four faces, that is leader to Brahma)

to indicate that He is the one who is the leader and the one who supervises the activities of these important persons of the celestial worlds,  Indran, Siva and Brahma. Azhwaar continued by saying “vadivudai vaanavar thalaivane” and completed by saying “van thiruvarangane”.   Vadivudai here means, beautiful glow  . This glow comes from serving Perumal and hence is reflected on the faces of Nithyasooris.  The leader of those Nithyasooris is Perumal Himself.    The last part, namely, “vann Thiruavarangane”, states that He is here in this world to give His blessings to all of us. And thus azhwaar established Parathvam, which is the core for the first pathu, by stating that He is the leader for everyone like us, those in the celestial worlds, Indran, Siva, Brhmma and Nithyasooris.

Kaaranathvam

Kaaranathvam means that He is the reason for the existence of all living and non-living elements / things (Jeevathmaas, please note that all non-living things are also classified as Jeevathmaas in Vaishnavism).   He has created this world and all the living and non-living things in this world and during Pralayam and Mahapralayam ,He protects all the Jeevathmaas by taking them inside His stomach and after the Pralayam and Mahapralayam, He brings them back to existence.  This  is brought out by Azhwaar in the second hymn of this pathigam, “mun seithu ivvulagam undu, umizhnthu” (7.2.2) and with that Kaaranathvam, the meaning of the second Pathu (Ten) is covered in this pathigam.

Vyapakathvam

“Vyapakathvam” means that He is everywhere. Paramathmaa spreads Himself in every part of this universe, not thinly, but densely occupying every bit completely with ease and comfort. Once there was a question posed to an Acharyar by name, Thirukurugaipiraan.  The question was about the Vyapakathvam of Paramathmaa, whether the spreading is because of the physical shape and size or due to His glories.   Thirukurugaipiraan responded by saying that Paramathmaa’s Vyapakathvam can be understood by normal people only from His glories, but for Azhwaars, He demonstrates Vyapakathvam by shape and size.  By this he means that Perumal occupied the heart of azhwaars completely and without leaving any blank space.   In this pathigam, Namazhwaar highlighted “Katkili unnai kaanumaaru arulaai” (7.2.3) by referring to the Antharyami state of Paramathmaa and “ennudaiya Aaviye ennum” (7.2.9).  By this Azhwaar explained that Paramathmaa is occupying his heart fully and thereby explained the meaning of the third pathu (Ten), ie Vyapakathvam.

Niyanthruthvam

Niyanthruthvam means that everything will happen only as per His desire.  He is the one who makes things happen in this universe.  In this pathigam, Namazhwaar has told “paala thunbangal inbangal padaithaai” (7.2.7) which means that He is the one who creates or gives  sorrow and happiness depending on the places and “Kaala Chakarathaai” (7.2.7).   which means  that He is the one who controls and administers the Time element in this universe. From the above, we can understand that He is the one who leads in every action and thereby the meaning of the fourth pathu (Ten), namely Niyanthruthvam, is covered in this Kangulum Pagalum pathigam.

Kaarunikathvam

Kaarunikathvam means that He is very simple, very easy to approach and He shows extreme kindness to all. The most significant event that is described as the best Kaarunikathvam by Paramathmaa in our tradition is when He protects all the Jeevathmaas by consuming them and keeping them in his stomach during mahapralayam and returning them back after the mahapralayam. There are many other places where He has shown and demonstrated His Kaarunikathvam, the following three other events are described as examples of His kindness.   Each of these following events are examples, where He has shown his extreme kindness to one and all and also He has done that without anyone asking for His help.

  • During the incarnation of Trivikrama, He had given Mukthi / Moksham / Abode to all those of that time by placing His holy feet on all heads.   Thondaradipodi Azhwaar in his Thirumaalai (35) mentioned “Thaavi andru ulaga ellaam thalaivilaak konda enthaai” meaning that He leaped / jumped over the heads of all in the Universe.  Similarly Namazhwaar had also mentioned in his Thiruvaaimozhi (3.3.10), “Thaal parappi maan thaaviya easani”, meaning that he strode the whole earth.
  • During the incarnation of Sri Rama, Paramathmaa had given Mukthi / Moksham / Abode, to all those who followed Him in Ayodhya, when He went back to Sri Vaikuntham after the completion of His objectives of the incarnation.  This can be seen when Sri Kualsekara Azhwaar in his prabandham, Perumal Thirumozhi (10.10), where he mentioned “Andru saraasarangalai vaikunthatthu yetri,” meaning that He gave Mukthi / Moksham / Abode to all persons, animals, plants that were with Him when He moved back to Sri Vaikuntham.   In the same way, Namazhwaar had also mentioned in his Thiruvaaimozhi, “Ayodhyil vaazhum saraasaram mutravum narpaaluku uythanan” (7.5.1) meaning that He sent all the animals, plants and people abode.
  • Similarly during the incarnation of Sri Krishna, child Krishna lifted the Govardhana mountain to protect all people, goats, cows and all other living and non-living things from the severe rain caused by Indran for seven consecutive days, the  King of one of the celestial worlds.   Indran was angry with the people, as they refused to feed him and hence he became  hungry  and thirsty. This can be seen from Thirumaalai (36), by Thondaradipodi Azhwaar, when he mentioned “mazhaiku andru varai mun yaenthum mainthane” meaning that He lifted the mountain (Govardhana) to protect all, even before the arrival of rain or before the sufferings of all due to the rain.    Namazhwaar had mentioned in his Thiruvaaimozhi, “kundram  yenthi kulir mazhai kaatha piraan” (3.3.8) meaning that He lifted the mountain and protected from the very chill and cold rain. Similarly, Namazhwaar had also mentioned in Thiruvaaimozhi, 7.4.10, “appan thee mazhai kaathu kundram eduthaane” meaning, that He took the mountain and protected from the severe rain.
  • Whatever pasurams we mentioned above are all only examples,  almost all azhwaars would have compiled hymns on the above historical events.   In the same way, Azhwaar had compiled Perumaal’s kindness (karunai) and His blessings in the fifth pathu (Ainthaam pathu).   Azhwaar mentioned

    • “mun seidhu ivvulagam undu umizhnthu” (7.2.2),  meaning that He created this world and the inhabitants of this world, consumed them during the Mahapralayam and returned them back after the mahapralayam.
    • “ival thirathu arulaai”(7.2.6)  meaning that the mother was requesting Paramathmaa to bless her daughter and
    • kundru yenthi ko nirai kaathavan” (7.2.8), meaning that he lifted the Govardhana mountain and protected the goats , cows and all

    So in this pathigam, Azhwaar had covered the meaning of fifth pathu (Fifth ten), which is Kaarunigathvam.   

Saranyathvam

Saranyathvam means that He is the most eligible person to whom we can surrender ourselves fully, as He is both great as well as simple. So He is capable of giving abode to all.  Azhwaar had mentioned “patrilaar patra nindraane” (7.2.7) meaning that He is there for all including those who are not devoted to Him. In fact azhwaar mentioned that He had given abode to those who are not devoted Him.    Since azhwaar had mentioned about the total surrender in this Kangulum Pagalum pathigam, he has covered the meaning to sixth pathu (ten), which is Total Surrender (Saranyathvam).

Sakthathvam

Sakthathvam (Has Power) means that He has the power and ability to fulfill all our desires and give shelter to each and everyone of us to take us abode.  In this Kangulum Pagalum pathigam, Azhwaar, gave the following examples to show us the power He has.

  • anthi pothu avunan udal idanthaane” (7.2.5), means that during the evening time, He had split the body of evil Hiranya. Here Azhwaar  explains the power shown by Narasimha incarnation of Paramathma
  • alai kadal kadaintha aaramudhe” (7.2.6), means that He had churned the milky ocean . Here Azhwaar  explains  the power shown by Paramaathma during the Koorma incaranation
  • utkudai asurar uyirellaam unda oruvane” (7.2.3), means  that He had killed the strong and powerful demons of celestial world.

With these examples in the Kangulum Pagalum pathigam, Sakthathvam, the power  of Paramathmaa to grant anything and everything  is established to cover the meaning of the seventh pathu (ten).

Satya Kaamathvam

Satya Kaamathvam means that He has all the desirable glories and there is nothing which He has not achieved or attained.  In short, He has everything.  This is the glory that Paramathma had shown to Azhwaar and he had sung on this Satyakamathvam in  the eighth pathu (ten).

As the first few words of the first hymn of the first pathigam of the eighth pathu (ten), “Devimaar aavaar Thirumagal Boomi” (8.1.1), Azhwaar paid his respects to Perumal, by saying that Sridevi Thaayar and Boomaadevi Thaayaar are the most appropriate consorts for the handsomeness and glory of Perumaal.

In this Kangulum Pagalum pathigam, Azhwaar included Neelaa devi Thayaar also, by saying “Aaimagal Anbane” (7.2.9) in addition to referring Sridevi thayaar as “en Thirumagal ser maarbane“(7.2.9) and Boomadevi thaayar as “Nilamagal kelvane” (7.2.9).   As we said earlier, that He is with His Devimaars and Devimaars look after all the Jeevathmaas as their children and the Devimaars make recommendations for us to Paramathmaa, He gives His blessings by fulfilling our wishes.   Thus the primary objective of the eighth pathu (ten), namely, Satya Kaamathvam, is covered in this  pathigam.

Aabathsahathvam

Aabathsahathvam means that He can protect all of us from all difficulties.  As we had seen earlier, He protects us by keeping all Jeevathmaas in His stomach during the Mahapralayam period and this is mentioned in this pathigam as “mun seithu ivvulagam undu” (7.2.2).   Similarly during the incarnation of Sri Krishna, He had protected all by holding Govardhana mountain and this was mentioned in this pathigam, as “Kundram aaenthi, ko nirai kaathaavan” (7.2.8).  These lines  in kangulum pagalum   denote the meaning of ninth pathu, Aabathsahathvam.

Arthiharathvam

Arthiharathvam means that He  fulfills  all our expectation and desires. He eliminates all our difficulties, which might include our desire of not getting the mukthi yet.   Perumaal had shown the above glory and capability, namely the ability to cure our difficulties, to Azhwaar and this becomes the theme for the tenth pathu (Ten).  In this Kangulum pagalum pathigam, Azhwaar covered the meaning of the tenth pathu (Ten), namely, Arthi harathvam, by

  • adi adayaadhaal pol ival anugi adainthanal mugil vannan adiye” (7.2.10), meaning that she got the Holy feet of Paramaathma, even though it looked like she was  not getting the same and
  • mugil vannan adiyai adainthu arul soodi uythavan“, (7.2.11), meaning that Azhwaar had got the blessings of Paramaathma and attained the Holy feet of Him.

Thus, meanings of all the ten pathus (Tens) are covered in this Kangulum Pagalum pathigam, it is very appropriate for Parasara Bhattar, one of the acharyaas, to state that the whole Thiruvaaimozhi is for Thiruvarangan.

thiruvaaimozhi Sep 11 Eng

Similarly it is very appropriate for Thiruvarangan to give the name of “nam azhwaar” (our azhwaar), to Sadagopan, as the full Thiruvaaimozhi can be attributed to Him. Azhwaar had mentioned “Thiruvarangthaai” in some of the hymns of this pathigam, meaning that He is in Thiruvarangam.  However it can also mean that He is,  as the mother in Thiruvarangam. At this time, we can refresh our minds with the procession that Thiru Arangan undertakes once every year, where He comes out in a beautiful woman’s attire, called Mohini Alankaram, to illustrate that He is the Mother of all in this universe.

We would like to express our sincere thanks to Mr R Ranganathan, our elder brother and Dr R V Kamalakannan, whose books were referred while writing this weblog.

As we said earlier, there are lot more interesting aspects of Thiruvaaimozhi, as it is a big ocean.   We hope to do some more on Thiruvaaimozhi in our future weblogs.

==========================================================

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: