Thiruvaaimozhi and Rahasya Thrayam /திருவாய்மொழியும் ரஹஸ்ய த்ரயமும்

For English, kindly please click here, thanks

நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு  ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல்  இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளில் பார்த்தோம்.    அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம்.

திருவாய்மொழி – ரஹஸ்ய த்ரயம்

ஸ்ரீவைஷ்ணவத்தில், சரணாகதி தத்துவத்தை மூன்று விதிமுறைகள் மூலம் விளக்கி சொல்லலாம். அவற்றை ரஹஸ்ய த்ரயம் என்றும் கூறுவோம். ஸ்ரீவைஷ்ணவ கருத்துக்களில் முக்கியமானவைகளை சுருக்கமாக சொல்லும் அந்த ரஹஸ்ய த்ரயம், திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகம்  என்பன ஆகும்.  இவை அனைத்தையும் சுவாமி நம்மாழ்வார் தன்னுடைய ப்ரபந்தங்களில்  நமக்கு அருளி உள்ளார்.

திருமந்திரம்

இறைவனது நாராயணன் என்னும் பெயரைக்கொண்ட எட்டெழுத்து மந்திரத்தைத் திருமந்திரம் எனச் சிறப்பாக கூறுவர். திருவாய்மொழியின் ஆறாம் பத்து (6.10) ஓம் என்ற பதத்தையும் மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் (7.1) நம என்ற பதத்தையும் மற்றும் 7.2, நாராயண என்ற பதத்தையும் சொல்லி, திருமந்திரத்தின் அர்த்தத்தை நமக்கு புரிய வைப்பதற்காக என்று நம்  ஆச்சார்யர்கள் சொல்வார்கள்.

‘அ’, ‘உ’ மற்றும் ‘ம’ என்ற எழுத்துக்களை சேர்க்கும் போது ‘ஓம்’ என்ற வார்த்தை  உருவாகும். ‘அ’ என்ற  ப்ரம்மத்திற்கு, ‘ம’ என்ற ஜீவாத்மாக்கள், ‘உ’  என்பதான அடிமை அல்லது தொண்டு செய்ய வேண்டும் என்ற உறவினை ‘ஓம்’ என்ற வார்த்தை விளக்குவதாக நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.  ஜீவாத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் உள்ள ஒன்பது விதமான உறவுகளை நம் ஆச்சார்யர்கள், ‘நவவிதசம்பந்தம்’ என்று  கூறுவார்கள், அதில் இதுவும் ஒன்று.   இதனையே நம்மாழ்வார்  உலகமுண்ட   பெருவாயா!’ (6.10) என்ற பதிகத்தில் ‘புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் ’  (6.10.10) என்று கூறுவதால், திருமந்திரத்தில் பிரணவத்தின் பொருள் (ஓம்) சொல்லப் பட்டதாக நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.

அடுத்த பதமான ‘நம‘ என்ற சொல்லுக்கு ‘உனக்கே நான் உரியவன்’ என்பது அர்த்தம்.  ஆழ்வார் ‘உண்ணிலாவிய’ (7.1)’ என்ற பதிகத்தில், “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்”(7.1.11)  என்பதால் அடுத்த பதமான ‘நம’   என்றதன் பொருள் சொல்லப் பட்டதாக நம் ஆச்சார்யர்கள் பொருள் உரைப்பார்கள்.

அடுத்த பதிகமான ‘கங்குலும் பகலும்‘ (7.2) என்னும் பதிகத்தில்  அடுத்த பதமான ‘நாராயணாய’ என்றதன் பொருள் விளக்கப்படுகிறது.  இது எப்படி எனில்,  இதில் உள்ள ‘ஆய’ என்னும்  வடமொழி விகுதிச் சொல்லின்  பொருள், கைங்கர்யம் ஆகும்.   அந்த கைங்கர்யம் செய்வதற்கு தேவை, இறைவன் மீது ஆசை.  அந்த ஆசை, ‘எல்லையற்ற ஆசை’ ஆவதற்கு,  பகவானின் மேல் உள்ள ஆசையே, மற்ற எல்லாவிதமான ஆசைகளை விட, மிக முக்கியமானதாக வேண்டும்.    அத்தகைய மிகப் பெரிய  ஆசையின் வெளிப்பாடே இந்த பதிகம் என்பதால், இந்த பதிகத்தை ‘நாராயணாய’ என்ற இறுதி பதத்திற்கு உரியதாக சொல்லப்பட்டது.

சரம ஸ்லோகம்

சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள்.  சரம ஸ்லோகங்கள் மூன்று முக்கியமானவை என்றும், அவை வராக, இராம மற்றும் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் என்றும் முன்பு பார்த்து உள்ளோம். வராக மற்றும் கிருஷ்ண சரம ஸ்லோகங்களை முன்பு பார்த்து விட்டதால், இராம சரம ஸ்லோகம் என்ன என்பதை கீழே பார்ப்போம்.

இராமாயணத்தில் வருவது விபீஷண சரணாகதி. ஸ்ரீராமபிரான், பகைவனுக்கும் அருளும் பண்பாளன். அந்த சரணாகதியின் உச்சத்தை கீழே உள்ள இந்த ஸ்லோகத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

ஸக்ருத்  ஏவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம, 

ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா,   விபிஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்

விபீஷணனை ஏற்றுக்கொள்ள அனுமனைத் தவிர, சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ஸ்ரீராமபிரான், “என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கு, தான் அபயம் அளிப்பதாகவும், அதுவே தன்னுடைய விரதம் என்றும் திருவாய் மலர்ந்து அருளுகிறார். சுக்ரீவனிடம், ஸ்ரீ ராமபிரான்,  அபயம் கேட்பவர் விபீஷணனாக இருந்தாலும், இராவணனாகவே இருந்தாலும் அழைத்து வர சொல்லி அவர்களுக்கு அபயம் கொடுப்பதாக உறுதி அளிப்பது ஸ்ரீ ராம சரணாகதியை குறிக்கும் சரம ஸ்லோகம் ஆகும்.

சுவாமி நம்மாழ்வாரின் சரணாகதி பற்றி நாம் முன்பே பார்த்து உள்ளோம். அவை யாவும் திருவாய்மொழியில் உள்ள ஐந்து சரணாகதிகள் ஆகும்.

த்வயம்

திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே த்வயத்தின் பொருளை நம்மாழ்வார் விவரிக்கிறார் என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவதை முன்பு பார்த்தோம். அதாவது திருவாய்மொழியின் ‘ஒழிவில் காலமெல்லாம்‘ என்ற 3.3 பதிகத்தின் மூலம், த்வயத்தின் முதல் வாக்கியத்தின் பொருளையும், “உலகமுண்ட பெருவாயா” என்ற 6.10 பதிகத்தின் மூலம் த்வயத்தின் இரண்டாவது வாக்கியத்தின் பொருளையும் விளக்குவதாக சொல்லப் படுகிறது.

இன்னொரு விதமாகவும் திருவாய்மொழி, த்வயத்தின் பொருளை சொல்வதை சற்று விரிவாக கீழே காண்போம்.

சுவாமி நம்மாழ்வார், முதல் மூன்று பத்துகளாலே த்வய மஹா மந்திரத்தின் இரண்டாம் வாக்கியமான “ஸ்ரீமதே நாராயணாய நம”  என்பதின் அர்த்தத்தையும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துகளாலே முதல் வாக்கியமான “ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே” என்பதின் அர்த்தத்தையும் விவரிக்கிறார்.

நாம் ஒரு பொருளை கற்றுக்கொள்ளும் போது, அதனை பற்றிய ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை கற்றுக் கொண்டு அதற்கு பின் பழகினால் நமக்கு அதன் மேல் ஒரு பற்று ஏற்பட்டு அதனை கடைபிடிப்பதற்கு சுலபமாகவும் நம்மை ஊக்கிவிப்பதாகவும் இருக்கும் என்பதால்,  ஆழ்வார் முதலில் இரண்டாவது வாக்கியத்தின் பொருளையும், பிறகு முதல் வாக்கியத்தின் பொருளையும் நமக்கு சொல்கிறார்.

இரண்டாம் வாக்கியம்

முதல் பதம் – ஸ்ரீமதே
  • 1.10.8 செல்வநாரணன் என்ற சொல் கேட்டலும், (ஸ்ரீதேவி தாயாருடன்  இணைந்த நாரணன் என்று உறுதி செய்கிறார்
இரண்டாம் பதம் – நாராயணாய

முதல் பத்தாலே, நாராயணனே இந்த ப்ரபந்தத்தின் தலைவன் என்றும் இந்த பத்தால் சொல்லிய பாடல்களின் பொருளுக்கும், இனிக்கூறப் புகும் பாடல்களின் பொருளுக்கும் அந்த பகவானே நாயகன் என்றும் ஆழ்வார் சொல்வதை கீழே குறிப்பிட்ட சில பாசுரங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆழ்வார் வேதங்களும் அதையே சொல்வதாகவும் அந்த பகவானுக்கு மட்டுமே நாம் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

  • 1.2.10 வண்புகழ் நாரணன் (பிரபந்தத்தின் தலைவன், நாம் வணங்க வேண்டியவன் நாராயணன்)
  • 1.1.1 உயர்வற உயர்நலமுடையவன் எவன் அவன்  (அவன் எல்லையற்ற உயர்ந்த குணங்கள் கொண்டவன் என்பதால், நாம் அவனை வணங்க வேண்டும்)
  • 1.1.7 உளன் சுடர்மிகு சுருதியுள் (வேதங்கள் சொல்வதால்)
  • 1.3.8 நாளும் நம் திருவுடையடிகள் தம் நலங் கழல் வணங்கி (அவன் திருவடிகளை வணங்கி நாம் தொழ வேண்டும்)
  • 1.10.11 சடகோபன் சொல் பணி செய் (அவனுக்கு சேவை செய்திடு என்று ஆழ்வார் சொல்கிறார்)

இரண்டாம் பத்தால், இந்தக் கைங்கரியத்துக்கு எதிரிகளான இவ்வுலக பந்தங்களை முற்றுமாக தொலைத்து, பெருமாளின் அடியவர்கள் கூட்டத்தில் கூடி, எப்போதும் பரமபதத்திலே குறிக்கோளாய் இருந்து, அதுவும்  அவனுக்காக மட்டுமே இருப்பதுதான், தான் வேண்டுவது என்று கூறி கீழே குறிப்பிட்ட சில பாசுரங்கள் மூலம் உறுதி செய்கிறார்.

  • 2.8.4 நலம் அந்தம் இலதோர் நாடுபுகுவீர் (பரமபதம் சேர்வதே குறிக்கோள்)
  • 2.9.1 செம்மா பாத பற்புத் தலை சேர்த்தொல்லை  (உங்களுடைய சிவந்த பாதங்களை அடியேனுடைய தலையில் சீக்கிரமாக சேர்க்கவேண்டும் என்பதே விண்ணப்பம்)
  • 2.9.4 எனக்கே ஆட் செய் எக்காலத்தும் என்று  …… தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே   (அவனுக்காக  மட்டுமே   இருப்பது)
மூன்றாம் பதம் – நம

மூன்றாம் பத்தால், ஆழ்வாருக்கு கைங்கரியத்தில் உண்டான விருப்பதைக் கண்ட பெருமாள், கைங்கரியத்துக்கு உகந்த திருவேங்கட மலையை காட்டிக் கொடுக்க, ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று ஆழ்வார் கூறி த்வயத்தின் பொருளை சொல்லி முடிப்பதை கீழே குறிப்பிட்ட சில பாசுரங்களில் நமக்கு தெரிவிக்கிறார்.

  • 3.3.1 வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம் – பதிகம் முழுவதும்  (திருவேங்கட மலையில் நாம் கைங்கர்யம் செய்ய வேண்டும்)
  • 3.7.பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை – பதிகம் முழுவதும்  (அடியார்க்கு அடிமை செய்வது சிறந்தது என்கிறார்)

ஆக, முதல் மூன்று பத்துகளால் த்வயத்தின் இரண்டாம் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.  “ஸ்ரீமதே நாராயணாய நம” என்னும் அந்த வாக்கியத்தின் முதல் இரண்டு பதங்களின் பொருளை முதல் பத்தாலும், ‘நம’ என்னும் மூன்றாம் பதத்தின் பொருளை, இறைவனுக்குச் செய்யும் கைங்கரியம், அவனுடைய ‘அடியார்கட்கு அடிமை’ செய்தல் என்பவைகளை மூன்றாம் பத்தாலும் அருளிச்செய்தார்.

முதல் வாக்கியம்

முதல் இரண்டு பதங்கள் –ஸ்ரீமன் நாராயணசரணௌ

பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து நாம் பாக்கியம் பெற, பெருமாளின் திருவடிகளே உதவி செய்யும் என்றும், இவ்வுலக பற்றுகளே (ஐஸ்வர்யம், கைவல்யம்) விரோதிகள் என்றும் உபதேசிப்பதே நான்காம் பத்தில் ஆழ்வார் சொல்வது. நம் ஸம்பிரதாயத்தின் படி பரமாத்மாவிடம், ஜீவாத்மாக்கள் வேண்டுவதை மூன்றாகப் பிரிக்கலாம்.  ஒன்று இவ்வுலக செல்வங்கள், இவை ஐஸ்வர்யங்கள் எனப்படும்.  இரண்டாவது பகவானிடம் அவனையே வேண்டி மோக்ஷம் பெறுவது.  இவர்கள் பகவல்லாபார்த்திகள்  எனப்படுவார்கள்.  இந்த இரண்டு  பலன்களின் மேல் ஆசை வைக்காமல், தன்னுடைய ஆத்மாவையே கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்பும் கைவல்யார்த்திகள், மூன்றாவது வகை.  இந்த மூன்றாவது வகைக்கு சிறந்த உதாரணம் எதுவும் இல்லை, இது விரும்பத்தக்க பலனாக யாரும் சொல்லவில்லை. எல்லோரும், ஐஸ்வர்யத்தையும், கைவல்யத்தையும் விட்டுவிட்டு பகவல்லாபார்த்திகள் ஆகவேண்டும் என்பதே நம்  ஸம்ப்ரதாயத்தின் குறிக்கோள் ஆகும்.

கீழே சில உதாரணங்கள்.

  • 4.1.1 திருநாரணன்தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ  (பெருமாள் திருவடிகளே உதவும்)
  • 4.1.10 எல்லாம் விட்ட இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் (ஐஸ்வர்யம்  மற்றும் ஸ்ரீவைகுந்தம் இவைகளை கைவிட்ட ஞானிகள் கைவல்யத்தை விடமுடியாததால் அதை விரோதி என்கிறார்.)  
  • 4.9.10 கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி  கண்டஇன்பம்  (ஐஸ்வர்யத்தையும்).… தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’  (கைவல்யத்தையும் விடமுடியாததால் அவை இரண்டும் விரோதிகள்  என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்)
மூன்றாம் பதம் – சரணம்  ப்ரபத்யே

ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை விட்டு விலகுவதற்கும் பெருமாள் திருவடிகளே உபாயம் என்று ஆழ்வார் கூறுகிறார்.

  • 5.7.10 ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (பெருமாள் திருவடிகளே உபாயம் )

ஆறாம் பத்தால், அவன் தந்த உபாயத்தைக் கொண்டு, பெரிய பிராட்டியாரை முன்னிட்டு  அவன் திருவடிகளுக்கு கீழ் அமர்ந்து புகுந்தார்.   நாம் நம் ஆச்சார்யர்களை முன்னிட்டு சரணாகதி அனுஷ்டிக்க வேண்டும்.

  • 6.1 வைகல் பூங்கழிவாய் (தூது விடல் பதிகம் , ஆச்சார்யனைப் பற்றிக் கொள்வதை உபதேசிப்பது)
  • 6.8 பொன்னுலகு ஆளீரோ  (தூது விடல் பதிகம், ஆச்சார்யனை பற்றிக்கொள்வது )
  • 6.10.10 அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா…  உன் அடிகீழ் அமர்ந்து புகுந்தேன் (பெரிய பிராட்டியாரை முன்னிட்டு நம்மாழ்வார் சரணாகதி)

ஆக, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களால் த்வயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.

ஸ்ரீமந் ‘, ‘நாராயணசரணௌ’ என்னும் முதல் இரண்டு பதங்களின் பொருளை நாலாம் பத்தாலும், ‘சரணம்ப்ரபத்யே’ என்னும் மூன்றாம் பதத்தின் பொருளை ஐந்தாம் மற்றும் ஆறாம் பத்துக்களால்  அருளிச் செய்தார்.  ஆசாரியனை,  பெரிய பிராட்டியாரை முன்னிட்டு பெருமாளிடம் சரணாகதி அருளிச் செய்ததை ஆறாம் பத்தால் சொல்கிறார்.

தொடர்ச்சி

முன்பு சொன்னது போல், திருவாய்மொழி ஒரு மிகப் பெரிய கடல்.   மேலும் திருவாய்மொழியைப் பற்றியே இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

நன்றி : ஈட்டின் தமிழாக்கம், சென்னைப் பல்கலைக் கழகத்து ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் வித்துவான் பு.ரா.புருஷோத்தம நாயுடு உருவாக்கியது.  


Thiruvaaimozhi – Rahasya Thrayam

We are learning or discussing about Nammazhwaar’s Thiruvaaimozhi.   As we have seen earlier, among the many explanations available for Thiruvaaimozhi, Eedu Mupathaaraayirapadi, (Unparalleled Thirty Six thousands words) has three introductions to the prabhandham, namely, Thiruvaaimozhi.   We did see some of them in our earlier weblogs, 1, 2  and 3.   Let us try to discuss some more points from the introductory notes in this weblog.

In Sri Vaishnavam, the total surrender (Saranagathi) is explained by three important rules, collectively known as as Rahasya Thrayam.  (Three Secrets).   They are Thirumanthiram, Dhwayam and Charama Slokam and they explain the concepts of Srivaishnavam in a nutshell.    Swami Nammazhvaar had compiled hymns about  all these three concepts, in his prabhandhams.   They are covered in Thiruvaaimozhi itself and let us try to appreciate them  in the following sections.

Thirumanthiram

The manthra with eight letters and three words, containing the name Narayana, is called the Ashtaakshara Manthram or Thirumanthiram.  Thiruvaaimozhi covers all the three words through three consecutive pathigams, 6.10, 7.1 and 7.2. The first  word OM, of Thiru Manthiram is explained through the pathigam 6.10, the second word NAMA through pathigam 7.1 and the third word, NARAYANA through pathigam 7.2, according to our Achaaryas.  We have seen this in the last weblog as well.

The word OM consists of three syllables , ‘Aa”, “Vu” and “Ma”.    “Aa” represents or means Paramathma.   “Ma” represents us or Jeevathmaas and  “Vu” represents or means the relationship between Aa and Ma, ie between Paramathma and Jeevathmas or between Perumal and us.   There are nine different relationships explained in Vaishnavism, (Nava vitha sambantham), of which, the relationship explained here is the one by which we do service to Him. The same is explained by Namazhwaar as “pugal onru illaa adiyen, un adi keezh amarndhu pugundhene” (6.10.10), meaning  that he surrendered and remained on to His holy feet, as he had no other go, in 6.10 pathigam,  Ulagamunda Peruvaaya.   Hence this pathigam 6.10 explains the meaning of Om, as per our Acharyaas.

Similarly Azhwaar explained the meaning of the second word of Thirumanthiram, “Nama”, in the next pathigam,  “Ullnilaaviya 7.1, when he coined the word “Thondar, Thondar, Thondar, Thondan Thondan Sadagopan” (7.1.11), meaning that he was the servant’s servant’s servant’s servant’s servant.

In the next pathigam, “Kangulum Pagalum” (7.2), Azhwaar explained the next word “Narayanaaya“.   The Sanskrit word “Aaya” here means and denotes Service .    The basic need for doing a service, is to have a desire towards that element.    More importantly such desire should take priority over all other desires.    The whole pathigam of 7.2 was a reflection of Azhwaar’s such extreme desire towards Perumal and hence this pathigam is a representation of the final word “Narayana” of Thirumanthiram, according to our acharyaas.

Charama Slogam

The verse that explains total surrender (Saranagathi) is Charama Slokam.   There are three important Charama slokams and they are Varaha, Rama and Krishna charama slokams. We have seen Sri Varaha and Sri Krishna Charama slokams elsewhere in this weblog series and now let us look at Rama Charama Slokam.

Vibhishnan,  brother of Ravana asked for surrender to Sri Rama  in Sriramayanam.   Sri Rama’s glories can be seen from the following slokam that He was always ready to pardon even His enemies.

Sakrud eva prapannaaya thavaasmeeti cha yaachathe  abhayam sarva boothepyo; dadaami yethath vratham mama, aanaaya enam harisreshta thatham asya abhayam mayaa, Vibhishno va Sukreeva yathi vaa Raavanaa swayam.    —    Valmiki Ramayanam 6.18.33 and 34

Except Sri Hanuman, all  including  King Sukreevan showed resistance and recommended to Sri Rama that He should not accept the surrender of Vibishna, the brother of Ravana, the king who abducted Rama’s wife.   At that time, Sri Rama overruled their objections and said that whoever surrendered totally (prapannas) to Him, would never be abandoned for any reason and He had taken that as a vow to protect those prapannas or those who surrendered to Him. Then He asked Sukreevan to bring Vibishna or even Ravana, had he come there. The above sloka is called Sri Rama Charama Slokam.

We had already seen about Swami Namazhwaar’s saranagathi and the related hymns. They are the five saranagathi  pathigams in Thiruvaaimozhi.

Dhwayam

We have seen earlier that Swami Namazhwaar had explained the meaning of Dhwayam in Thiruvaaimozhi. He explained the meaning of the  first sentence of Dhwayam, “Sriman Narayana Sarnau Saranam Prapathye“, in “Ozhivil Kaalamellam” pathigam (3.3) and the second sentence,  “Sreemathe Narayanaya nama” in, “Ulagamunda Peruvaaya” pathigam (6.10).

The meaning of Dhwayam is also explained in another way in Thiruvaaimozhi, as below in more details.

Swami Namazhwaar explained the second sentence of Dhwaya Mahamanthram, “Sreemathe Narayanaya Nama” in his first three pathigams, (Muthal, irandaam and moondraam pathukkal) and explained the first sentence of Dhwaya Mahamanthram, “Sreeman Narayana Saranow Saranam Prabhathye” in his next three pathigams, namely, fourth, fifth and sixth. (Nangaam, Ainthaam and Aaraam pathukkal).

The reason why Namazhwaar explained the second sentence of Dhwayam initially and then the first sentence, is because it is important to know and understand the concepts and the associated benefits first so that we develop an interest towards it and that will motivate us.

Second Sentence – Sreemathe Narayanaya Nama

First Word – Sreemathe
  • 1.10.8 Selva Naaranan endra sol kettalum (Here Azhwaar confirmed that the saranagathi should be to Lord Narayanan who is with Sridevei Thaayaar).
Second word – Narayanaya

Azhwaar established that the main addressee of his Prabhandham is Sriman Narayanan in his first pathu itself (First Ten, containing 110 hymns) and he had also made sure that He be the addressee for the remaining nine pathus (From Second Ten till 10th Ten).  He also confirmed  that all had to do service to Paramathma or Sriman Narayanan, as what Vedas say.   Let us try to highlight some examples that are in line with the above.

  • 1.2.10 Vann Pughazh Naaranan (The person whom we need to respect and pray and who is the Addressee of this Prabhandham)
  • 1.1.1 Uyarvara Uyarnalam udayavan yavan avan (He is the one who has all the good qualities and glories and hence we need to pray to Him)
  • 1.1.7 ulan sudar migu suruthiyul (As vedas say that He is Paramathmaa)
  • 1.3.8 Naalum  nam Thiruvudai adigal tham nalam kazhal vanangi (We need to pray to His Holy feet)
  • 1.10.11 Sadgopan sol pani sei (Please do service to Him, as per advice from Azhwaar)

In the second ten, (Irandaam pathu), Azhwaar established that we need to identify and eliminate the enemies for doing kainkaryam to Perumal, keep our focus on Paramapadham, join hands with  other srivaishnava devotees in this process and keep ourselves only for Him.   The following are some of the hymns to highlight the above.

  • 2.8.4 Nalam antham illathor naadu puguveer (The goal is to reach Paramapatham)
  • 2.9.1 Semma Paatha Parpu thalai serthu ollai (Can you please put Your red Holy Feet on to our heads quickly)
  • 2.9.4 enake aat sei ekkaalathum endru…..thanakeyaaga enaik kollum eethey (We will live only for Him)
Third word – Nama

In the third ten (Moonraam Pathu), Azhwaar  showed his  desire to do service to Perumal and  Perumaal showed him, Thiruvengadam as the place for Azhwaar to do the service. Azhwaar gladly accepted the advice from Perumal and explained the meaning of Dhwayam to us by compiling the hymn “Vazhuvila Adimai Seiya Vendum Naam“.   We can see the above in the following hymns of Azhwaar.

  • 3.3.1 Vazhuvila admai seiya vendum naam – full pathigam – (We should do service in Thiruvengadam)
  • 3.7 Payilum sudar oli moorthiyai  pangayak Kannanai – full pathigam – (It is even better to do service to devotees of Vishnu)

Azhwaar explained the meaning of the second sentence, namely, “Sreemathe Narayanaaya Nama” of the Dhwaya Maha Manthram, in the first three pathigams, (Muthal Moonru Pathukkal). In extending the meaning of kainkaryam or service, Azhwaar highlighted  the service to the devotees in the third pathigam.

First Sentence – Sriman Narayana Sarnau Saranam Prapathye

First Two Words – Sreeman Narayana Saranau

Azhwaar advised in the fourth  pathigam that our attachment towards the material wealth in this world (Aiswaryam) and serving our own selves (kaivalyam) were the major impediments to attain Paramapadham and Azhwaar continued to say that His holy feet would help us to overcome the above and support us to do bhagawath kainkaryam or service to Him, which would get us the desired moksham or Srivaikuntham.

In our sampradhaayam or tradition, the requests made by Jeevaathmas to Paramathma are grouped into three categories.  The first category is the one who request for all the material interests of this world. They are called Aiswaryaarthigal.   The second group of people are called Bhagaval Laabharthigal, meaning, these jeevaathmas request for Moksham through Him.  The third category of jeevaathmas are called Kaivalyaarthigal. They do not opt for moksham or any of the worldly material wealth.  These jeevaathmas develop interest in their own selves, and never show interest in Moksham or in the material world.  There is no good example for this category of jeevathmaa, Kaivalyaarthigal.   No one has ever told that this category, Kaivalyaarthigal, is a better option compared to the other two categories of jeevathmaas. The primary objective of our sampradhaayam or tradition is for all jeevathmaas to leave both aiswaryam and kaivalyam and move towards Bhagaval Laabhaarthigal.

Given below are some of the examples from his hymns :

  • 4.1.1 Thirunaaranan Thal Kalam pera sinthithu uymino (His holy feet will help)
  • 4.1.10 Ellaam vitta irugal irappenum gnaanikum  (The person who dissociated with aiswaryam and moksham, which  means that the interest is only Kaivalyam)
  • 4.9.10 Kandu Kettu utru mondhu undu uzhalum ainkaruvi kanda inbam (Material interests or Aiswaryam) …. Therivu ariya allavu illaach chitrinbam (and Kaivalyam, which is mainly self-fulfillment of Jeevathmaa without showing interests towards Paramathmaa. So both Aiswarayma and Kaivalyam are enemies to attain Vaikuntham).
Third word – “Saranam Praphadhye”

The fifth pathigam (Ainthaam pathu) explains that His Holy feet are the tools of support  for us to achieve what we want to attain and They will help us to get rid off whatever we want to discontinue.

  • 5.7.10 Aar enaku nin paadhame saranaagath thanthu ozhinthaai  (His Holy feet are the supporting or helping tools)

In the sixth subsection or pathu (aaram pathu), Azhwaar demonstrated that he listened to His advice and held His Holy Feet, as the guiding principle and he literally sat on His feet. Azhwaar sought help from Periya Pirattiyaar to get his Moksham, and we should seek similar help from our Acharyaas to get moksham.

  • 6.1 Vaigal Poonkazhivaai (This pathigam is about holding on to an acharyan and requesting him to be the messenger on our behalf to Paramathma)
  • 6.8 Ponnulagu aaleero (This is another pathigam, where the importance of Acharyan for us is explained)
  • 6.10.10 Agalagilen iraiyun endru alarmel mangai urai maarbaa….un adi keezh amarnthu pugunthen (Here Azhwaar seeks  help from Periya Piraatiyaar and requests total surrender to Paramathma)

So, fourth, fifth and the sixth subsections or pathus explain the meaning of the first sentence of Dhwayam.

He brought out  the importance of Acharyan and Periyapirattiyar in the sixth subsection or pathu , as our surrender to Perumal is fruitful only through them.

As we said earlier, there are lot more interesting aspects of Thiruvaaimozhi, as it is a big ocean.   We hope to do some more on Thiruvaaimozhi in our future weblogs.

Thanks to Mr P R Purshothama Naidu, Retired Tamil Professor, Madras University, as we have used some of the references from his work on Eetin Thamizh Aakam.

=======================================================

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d