Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்

For English version, kindly click here, Thanks

இதுவரையில்

இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம்.  சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.

முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் பரமாத்மாவின், மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம்.    ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன் தொகுத்து வழங்கினார்.

அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌசல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார்.  அப்பதிகம், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே“, என்ற திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளை போற்றி   பாடுவதாக அமைந்து உள்ளது.    ஒன்பதாவது பதிகத்தில் ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை, தசரதச் சக்கரவர்த்தியாகவே தன்னை ஆக்கிக் கொண்டு, இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கி, தசரதன் புலம்பல்களாக அருளிச் செய்கிறார். கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரகூடம்  என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப் படுகிறது. அதன் முதல் ஐந்து பாசுரங்களை தொடர்ந்து கடைசி ஆறு பாசுரங்களை இங்கே காண்போம்.

ஆறாம் பாசுரம்

இராமனின் வீர தீர பராக்கிரமங்களை ஐந்தாம் பாசுரத்தில்  சொன்ன ஆழ்வார், ஆறாம் பாசுரத்தில்,  தன்னுடைய ஒரே ஐஸ்வர்யமான சீதா பிராட்டியை பிரிந்ததையும்,  தம்மளவில் வாடிய நிலையில், ஜடாயு என்ற பறவையை வைகுந்தத்திற்கு அனுப்பி வைத்ததையும் சொல்கிறார். அந்த இராமன், தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் சீதா தேவியுடன், மிக இனிமையாக அமர்ந்துள்ளான் என்றும், அவரை வணங்கும் தொண்டர்களின் பாதங்களை தான் வணங்குவதாகவும் ஆழ்வார் அமைத்துள்ளார். இந்த பாடலில் ஆழ்வார் உபயோகித்துள்ள ஒரு சில சொற்தொடர்களை  கீழே காண்போம்.

தனமருவு வைதேஹி” –  உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களுக்கு எல்லாம் தலைவி, வைதேஹி  எனும் சீதாபிராட்டி.   அந்த பிராட்டியே பெருமாளுக்கு தனம் ஆனவர் என்கிறார்.

“சடாயுவை வைகுந்தத் தேற்றி” – இராமாவதாரத்தில் பரமாத்மா, மானுடனாகவே பிறந்து, சாதாரண மனிதனாகவே வாழ்ந்து வரும் காலத்தில், ஒரு பறவைக்கு எப்படி வைகுந்தப் பிராப்தி அளிக்கமுடியும் என்ற கேள்வி எழும்படி, இந்த சொற்றொடர் அமைந்து உள்ளது.   ஐந்து நிலைகளில் எந்த நிலையிலும் அவனுக்கு பரத்துவ தன்மை மாறுவது இல்லை என்பதை நமக்கு தெரிவிக்கவே ஆழ்வார் இப்படி ஒரு சொற்றொடரை உபயோகித்து இருக்கலாம்.

ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே” – பாகவத பக்தியின் மேன்மையை எந்த ஒரு சமயத்திலும் விடாத ஆழ்வார் இங்கும் அதனையே சொல்கிறார்.

ஏழாம் பாசுரம்

இந்த பாசுரத்தில், இலங்கை வேந்தனான இராவணன் என்ற ராக்ஷசனை கொன்று, அவனது தம்பியான விபீஷணனுக்கு அந்த அரசையும் கொடுத்து, பிராட்டியோடு பிரிந்த பிரிவு எல்லாம் மறக்கும்படி, இனிதாக தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் சீதா தேவியுடன் வாசம் செய்கின்ற இராமனின் திருவடிகளை சூடும் அரசைத் தவிர, மற்ற எந்த அரசும் வேண்டாம் என்கிறார் சேரகுல அரசரான குலசேகர ஆழ்வார்.

இந்த பாசுரத்தில், ஆழ்வார், பெருமாள் தீயவர்களை வீழ்த்தியதையும், நல்லவர்களை பாதுகாப்பதையும், “இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு,  அவன் தம்பிக்கு அரசும் ஈந்து“, என்று ஒருங்கே சொல்கிறார். அப்படிப்பட்ட ஸ்ரீ ராமனின் திருவடிகளை வணங்குவதே நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய சாம்ராஜ்யம் என்கிறார்.

எட்டாம் பாசுரம்

அயோத்தி நகருக்கு திரும்பிய ஸ்ரீ ராமன் உலகம் எல்லாம் உகக்கும்படி, அரசாட்சியை நடத்தியதையும், தன் பிள்ளைகளான குச, லவர்கள் தங்களுடைய பவளம் போன்ற சிவந்த வாய்களால் தன்னுடைய சரிதையை சொல்லக் கேட்டதையும் இந்த பாசுரத்தில் ஆழ்வார் கூறுகிறார். தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள் வசிப்பவனுமான அந்த ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின், சரித்திரத்தை, காதினால் கேட்டு, கண்ணினால் பருகுவோம் என்றும் அந்த சரித்திரம், தேவர்கள் விரும்பி பருகும் அமிர்தத்தை விட இனிமையானவை என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்” – குச லவர்கள், இராம காதையை ஆங்காங்கே சொல்ல அதனைக் கேட்டு மக்கள் நல்வழியில் சென்றது, உலகில் உள்ள மக்கள் உய்ய உதவியது.   இராமபிரான் காலத்திற்குப்பின் அவரைப் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை இனிதாக ஆட்சி செய்ததும் “உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்” என்பதில் பொருந்தும்.

செவியால் கண்ணால் பருகுவோம்” – ஸ்ரீ ராம சரித்திரத்தை அன்று ஸ்ரீ ராமபிரானும் மற்ற மக்களும் கேட்டனர்.  இன்றும் நாம் ஸ்ரீ ராமனின் சரித்திரத்தை கேட்கலாம்.   ஆனால் விபாவாவதாரத்தின் ஸ்ரீ ராமனை இன்று நாம் காண முடியாது.  ஆழ்வார்,   ஸ்ரீராமனை  தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் நித்ய வாசம் செய்கின்ற நிலையில், அன்றும் இன்றும் கண்ணால் பருகலாம் அவனின் சரித்திரத்தை காதுகளால் கேட்கலாம் என்று மகிழ்கிறார்.

இன்னமுதத்தை மதியோம் அன்றே” – ஆரா அமுதமாகவுள்ள எம்பெருமானுடைய சேவையின் இனிமைக்கும், அதேபோல் உள்ள அவரின் சரித்திரத்தின் இனிமைக்கும், தேவாமிர்தம் இணை ஆகாது என்பதால், இன்னமுதம் மதியோம் என்கிறார்.  தேவாமிர்தத்தை ஒரு பொருளாக மதிக்க மாட்டோம் என்றும் கொள்ளலாம்.

ஒன்பதாம் பாசுரம்

மிகச் சிறந்த தவங்களை செய்த சம்புகனை, அவன் இருக்கும் இடத்தில சென்று, அவனை கொன்று, பிராமணகுமாரனின் உயிரை மீட்டுக் கொடுத்தவனும், துர்வாச முனிவரின் சாபத்தால், திறமை மிகுந்த தனது மற்றொரு தம்பியான லட்சுமணனை பிரிந்தவனும், எப்போதும் தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் வசிக்கின்றவனுமான ராமச்சந்திர மூர்த்தியை நாம் தியானம் செய்வோம் என்றால் வேறு ஒரு துயரம் அடையோம் என்று ஆழ்வார் கூறுகிறார்.  இந்த பாடலில் ஆழ்வார் குறிப்பிடும் சில சரித்திரங்களில் நம்மை மிகவும் கலக்கமுறச்செய்யும் ஒன்று லக்ஷ்மணனைப் பற்றியது.

பகைவர்களை வெல்லுவதில் மிகவும் சாமர்த்தியனானவன் என்பதை “திறல் விளங்கும் இலக்குமனை” என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.   புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த ஸ்ரீராமனுக்கு, இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆயில்ய நட்சத்திரத்தில், ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்வதற்காகவே பிறந்த லக்ஷ்மணன், ஸ்ரீ ராமன் கூடவே இருந்து, வனவாசம் சென்ற போதும், தானும் தனியாகவே, கூடவே சென்று,  யுத்தம் முடிந்து பட்டாபிஷேக காலத்தில் இராமனின் வில்லையும் சேர்ந்து சுமந்ததாக சொல்லப்படும் லக்ஷ்மணனை பிரிவது என்பது ஸ்ரீராமனுக்கு மட்டும் இல்லாமல் நம்மையும் கலக்கமுற செய்கின்ற ஒரு நிகழ்வு. 

Lakshman vil 1
படத்திற்கு நன்றி…
http://tamilnadu-favtourism.blogspot.my/2016/01/ramaswamy-temple-kumbakonam.html  

“சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள்கடலுள் என்றும் புணையாம்” – இந்த வார்த்தைகள் பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில் உள்ளவை. பொய்கை ஆழ்வார் எக்காலத்திலும், எல்லாவிதமான சேவைகளும் பெருமாளுக்கு செய்ய வேண்டும் என்பதற்கு அனந்தாழ்வானை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்கிறார். லக்ஷ்மணனும், அனந்தாழ்வானின் ஒரு அவதாரமே.  அதன்படி, எப்போதும் ஸ்ரீ ராமன் கூடவே இருந்த லக்ஷ்மணனின் முடிவை சொல்லும் இந்த பாசுரம் நம்மால் மறக்கமுடியாத ஒன்று.

ஸ்ரீராமனுக்கு சேவை செய்த பரதனுக்கும் லக்ஷ்மணனுக்கும் உள்ள ஒரு வேறுபாடு, ஸ்ரீராமன் என்ன சொன்னானோ அதனை கேட்டு அதன்படி நடந்தான் பரதன்; ஆனால் லக்ஷ்மணனோ, ஸ்ரீராமனுக்கு என்ன தேவை என்பதை தானே முடிவு செய்து அதனை ஸ்ரீராமன் தடுத்தாலும் விடாது சேவைசெய்த லக்ஷ்மணனை வணங்குவோம்.

மற்று உறு துயரம் அடையோம்”  என்பதன் மூலம் தன்னை  விபவாவதார காலத்தில் சேவிக்க முடியவில்லையே என்ற துயரம் தீர, பிற்காலத்தில் எல்லோரும் தரிசிக்கும்படி தில்லைநகர் திருச் சித்ரகூடத்தில் ஸ்ரீ ராமர் நித்யவாஸம் செய்வதை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

பத்தாவது பாசுரம்

இளையபெருமாளான லக்ஷ்மணனைப் பிரிந்ததனால் மிகவும் துக்கம் அடைந்த  இராமபிரான் தானும்  பரமபதத்திற்கு எழுந்தருளத்  தொடங்கியபோது, அனைத்து உயிர்களும் பெருமாளைச் சரணமடைந்து அவர் கூடவே செல்ல வேண்டும் என்று வேண்ட, அவரும் அதனை ஏற்றுக்கொண்டு  அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு அருளினார்.   அப்பொழுது  மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கு பறவை முதலியவைகள், மகிழ்ந்து சரயு நதியில் பெருமாள் பின் சென்று வைகுந்தம் அடைந்தன என்பதை “அன்று சராசரங்களை வைகுந்தத் தேற்றி” என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சாதாரண மனிதனைப் போல் வாழ்ந்த ஸ்ரீ இராமபிரான், பரமபதத்திற்கு எழுந்து செல்லும்போது மட்டும் நான்கு தோள்களுடன் காட்சி அளித்ததை “ணிநெடுந்தோள் நான்கும் தோன்ற” என்று ஆழ்வார் கூறுகிறார்.

பரமபதத்தில் உள்ளோர் எதிர்கொண்டு வந்து உபசரித்ததை, குலசேகர ஆழ்வார் “விண் முழுதும் எதிர் வர” என்கிறார்.

தன்னுடைய மேன்மையெல்லாம் தோன்றும்படி இனிமையாக சிம்மாசனத்தில் வீற்றுஇருந்ததை, “தன் தாமம் மேவி சென்று, இனிது வீற்று இருந்த” என்கிறார்.

அவன் இவன் என்று ஏத்தி ”  –  அதிக தூரத்தில் உள்ள ஸ்ரீவைகுந்தத்தில் இருப்பவனான ஸ்ரீமன் நாராயணனே, (அவன்), தில்லை நகர் திருசித்ர கூடத்தில் ஸ்ரீ ராமபிரானாக (இவன்),  நமக்காக நித்யவாஸம் செய்கின்றான்,  என்றும் இவனை வணங்கி அருள் பெறுங்கள் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.   ஆழ்வார், ‘இவன்’ என்று திருச்சித்ரகூட ஸ்ரீ ராமனை சொல்வதன் மூலம்  ‘இவன்’ அருகாமையில் இருப்பதை நமக்கு உணர்த்துகிறார். “அவன்”, மற்றும் “இவன்” என்ற வார்த்தைகள் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வார்த்தைகள், ஏன் எனில், அவை ஒரு வார்த்தையில் ஒரு மனிதனையும் அவன் அருகில் இருக்கிறானா, இல்லையா என்பதை நமக்கு தெரிவிக்கும்.

பதினொன்றாம்/இறுதி பாசுரம்

அழிவில்லாத புகழையுடைய தசரதசக்ரவர்த்தியின் குமாரனாய் பிறந்தது முதல் பரமபதம் சென்றது வரையில் ஸ்ரீராமாயணம் முழுவதும் சுருக்கமாகச் சொல்லிய இந்த பத்து பாசுரங்களை படிக்கிறவர்கள், ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை அடைவார்கள் என்று ஆழ்வார்சொல்லி பிரபந்தத்தை முடிக்கிறார்.

திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை ” –  ‘திறல் விளங்கு’ என்பதுபல பராக்கிரமங்களை பெற்றவர் அனுமார் என்கிறது. சிறு வயதில் பிரம்மா அளித்த வரத்தினால்,  சிரஞ்சீவியானவர் அனுமார் என்பதை நினைவில் கொள்க.

ஸ்ரீ ராமனின் சரித்திரம் இந்த உலகத்தில் உள்ளவரை, அந்த சரித்திரத்தைப் படிக்கிறவர்களுக்கும், கேட்கிறவர்களுக்கும் உதவி செய்ய, தாம் இந்த உலகத்தில் இருக்கவேண்டும் என்று ஸ்ரீராமனிடம் வரம்வேண்டிப் பெற்றவர் அனுமார்.  இராமபிரான் பரமபதத்திற்கு எழுந்தருளிய பொழுது, அவர்கூட ஸ்ரீவைகுந்தம் செல்லாமல் இந்த உலகத்திலேயே வசிக்கும், அந்த உத்தம பக்தனான அனுமானை பிரிய மனம் இல்லாமல், ஸ்ரீராமனும், அனுமாருடனே சித்ரகூடத்தில் வந்து  வீற்று இருக்கின்றான் என்று சொல்லி ஆழ்வார் முடிக்கிறார்.

தொடர்வது

பெருமாள் திருமொழி என்ற இந்த பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார், ஸ்ரீ ராமனிடத்தில் உள்ள பக்தியையும், அவரை வணங்கும் பாகவதர்களிடத்தில் உள்ள பக்தியையும் விபவ மற்றும் அர்ச்சை நிலையில் இருக்கும் பெருமானைக் கொண்டு நமக்கு விளக்குகிறார்.  இன்னும் கூர்ந்து கவனித்தால், ஸ்ரீ ராமனுடைய வீர தீர பராக்கிரமங்களை இந்த பதிகத்தில் பல பாடல்களில் காட்டியுள்ளார்.

பகைவர்களைக் கொல்வதற்கு உள்ள ஆயுதங்களுடன் உள்ள சேனையையும், ஒளியை உடைய வாளாயுதத்தை கொண்ட வீரரான, குலசேகராழ்வார், தாடகை வதத்தை இரண்டாம் பாசுரத்திலும், பரசுராம கர்வ பங்கத்தை மூன்றாம் பாசுரத்திலும், விராத வதத்தை ஐந்தாம் பாசுரத்திலும், வாலி வதத்தை ஆறாம் பாசுரத்திலும், ராவண வதத்தை ஏழாம் பாசுரத்திலும்,   சம்புக வதத்தை ஒன்பதாம் பாசுரத்திலும் சொல்லி, ஸ்ரீ ராமனின் ஜெய ஜெய மஹாவீர பராக்கிரமங்களுடன்,  இந்த பதிகத்தை அருளி செய்தது, மிகப்பொருத்தமே.

இராமனுக்காகவே பிறந்து, பாசுரங்கள் எழுதி நமக்கு பகவத் பக்தியையும், பாகவத பக்தியையும் அருளிய  குலசேகர ஆழ்வாரைத்  தொடர்ந்து நாம் பார்க்கப்போவது, இந்த உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் முக்தி அளிக்காமல் ஸ்ரீரங்கத்தை விட்டு நகர மாட்டேன் என்று பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கநாதனை மட்டுமே பாடிய இரண்டு ஆழ்வார்களில் ஒருவர்.

=========================================================

Till Now

In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections.  Azhwaar,  whose birth and life are denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees,   sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.

In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of  Archai    In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram.   In the sixth subsection, Azhwaar takes the roles  of the Gopikas, the women folk of Brindavan,  who lived at the same time of Sri Krishna  and loved Sri Krishna.   In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar,  (Holy Devaki),  the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with Him and enjoy the playful acts of Sri Krishna at His young age.

In the next subsection, namely, the eighth,  Azhwaar, enjoys  the  happy moments of Kowsalya with Sri Rama, at His young age.  Kowsalya is the mother of Sri Rama.   All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram, whom azhwaar calls as “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.  In the ninth subsection, Azhwaar brings out the sadness of Dasarathan,  father of Sri Rama,  after he was separated from  Sri Rama, who went to the forest. Kulasekara Azhwaar takes the role of Dasarathan, and Azhwaar brings out the feelings of Dasarathan in the hymns as they melt our hearts and these are called as Dasarathan’s lamentations. In the final subsection of Perumal Thirumozhi, Azhwaar brings out the whole Ramayanam.  Azhwaar takes the divya desam, Thillai Nagar Thiru Chitra Koodam (Now called as Chidambaram Govindaraja Perumal Koil) as the part of this subsection. After the first five hymns, let us proceed to discuss about the final six hymns to complete this section.

Sixth Hymn

Having talked about the heroics of Sri Rama in the fifth hymn, Azhwaar, in the sixth hymn, brings out the grief of a human being, in Sri Rama when His wife Sita and Himself got separated.  His sorrow  increased when He had to carry out the final rites for Jatayu, an able bird, who fought valiantly with Ravana, but holding its last breathe to communicate to Sri Rama about Ravana’s misdeed of abducting Seetha.   Jatayu was a close friend of Dasaratha, the father of Sri Rama and hence Sri Rama considered Jatayu as His paternal uncle.  Sri Rama also sent Jatayu abode or Srivaikuntham. Sri Rama, with such glories, now graces  in Thilainagar Thiruchithrakoodam along with Sri Sita Devi. Azhwaar says that he would laud the devotees who  are praising Sri Rama.

Let us look into some of the special phrases coined by Azhwaar in this hymn, which  are of interests to us.

Dhana maruvu Vaidehi” –  Vaidehi or Sita Piraati, the wife of Sri Rama, is the incarnation of Sri Mahalakshmi Thaayar, who owns all the wealth in this universe. Azhwaar says,  that  Sita Piraati is the wealth of Perumal.

“Jatayuvai Vaikunthathirku Aetri” – Paramathma,  as incarnation of Sri Rama, was born, and lived  as a human being.  However these lines specify that Sri Rama had sent Jatayu  abode or Moksham / Srivaikuntham.   This obviously raises the question, how could Rama, a human being, has the power to send a bird to Moksham or Srivaikuntham.  Azhwaar wants us to realise that even though Sri Rama, might be a human being, but He is Paramathma and  in all the five states,  He would never scale down His supremeness.

Aethuvaar inai adiye aethinene” – Kulasekara Azhwaar is known for his devotion towards to Perumal’s devotees and he takes every opportunity to preach the same principle  to us.    Here is another such opportunity for Azhwaar.

Seventh Hymn

In this hymn, Azhwaar talks about Sri Rama killing Ravana, the King of Lanka and giving the kingdom to his brother, Vibhishanan.  Now, Sri Rama, after all the painful days of not being with Sri Sita Devi, is happily residing in Thilainagar Thiruchithrakoodam with Sri Sita Devi and Azhwaar says that keeping himself to His holy feet is the best kingdom he could get and he does not want any other kingdom.

In this hymn, Azhwaar combines the elimination of the bad and protection of the good by saying “Ilangai Venthan Innuyir kondu, avan thambiku arasum eenthu“, meaning that He killed Ravana, the king of Lanka and gave the kingdom to his brother Vibhishnan”. Since Rama could do both, Kulasekara Azhwaar advises us to fall to the Holy Feet of Sri Rama and They would be best kingdom, we could get.

Eighth Hymn

Sri Rama went back to Ayodhya and ruled the kingdom keeping everyone happy. He heard His own life history and  exploits sung by His sons, Kusa and Lava, through their beautiful coral-like  mouth.   That Rama is now in Thilainagar Thiruchithrakoodam and we should see and hear His history, which is sweeter than the nectar, usually taken by the Devas.   Let us look into some of phrases used by Azhwaar, which are very interesting, in the following paragraphs.

“ulagu uyya thiru vayiru vaaitha makkal” meaning “the children born to Sri Rama and Sita, helped the people in the world to get abode”.   Kusa and Lava, the sons of Sri Rama and Sita, went around, reciting the life history of Sri Rama, which  helped the people to follow the right path in their lives and attained moksham.   Similarly after Sri Rama, Lava and Kusa ruled the kingdom. Like Rama, they ensured good governance, which in turn  ensured  people live morally and peacefully.

seviyaal, kannaal paruguvom” , meaning “we will consume with our ears and eyes”. During Rama’s days, people, including Sri Rama, heard the life history of Sri Rama. We can also hear the story of Sri Rama today.   But we can not have the dharsan of the Vibhavavathara Rama today.  So Azhwaar asks us to enjoy His beauty by having the dharsan of Sri Rama in Thilainagar Thiruchithrakoodam and also enjoy hearing His exploits with our ears .

“in amuthathai mathiyom andre“, meaning “we will not consider the nectar once we get the dharsan of Sri Rama”.   Getting the dharsan of Sri Rama and / or listening to His exploits, are sweeter than the nectar and would never match the heavenly drink. Azhwaar says that we would not value the heavenly drink nectar.

Ninth Hymn

This hymn has got few events of Sri Rama’s valour and the mention of Lakshmanan leaving Sri Rama, which is a very emotional and sorrowful event.

Sri Rama gave the life back to the son of a brahmin, by killing Champugan, who was doing a fearful penance, at his place. Sri Rama realised that His time has come to go back to Sri Vaikuntham and He sent  Lakshmanan abode, making the curse of Sage Dhurvaasar, as the reason. Azhwaar concludes this hymn, by saying that if we pray to Sri Rama at Thilainagar Thiruchithrakoodam, then we would not have any grief or distress.

Azhwaar says “thiral vilanku ilakuvanai” meaning “Lakshmanan was very tactful, when came to winning the enemies.   Sri Rama was born in the Tamil star “Punarpoosam” and Lakshmanan was born after two days in the  star “Aayilyam”. Lakshmanan  was born only to serve Sri Rama and hence he was there with Rama all the times and everywhere.   When Sri Rama went to the forest, he  accompanied Sri Rama and Sita, but alone, even though he was married , he left his wife back  home. After the war with Ravana, when Rama returned to Ayodhya, Lakshmanan was  with them.   It is told that Lakshman took not only his bow, but also that of Sri Rama, when Rama was being crowned as the King of Ayodhya.  (please refer to the picture above).   It is really sad, not only for Rama, but also for us, when we read about Lakshmanan leaving this world and Rama getting separated from Lakshmanan .

sendraal kudaiyaam, irunthaal singaathanamaam, nindraal maravadiyaam, neezh kadalul endrum punaiyaam” meaning “he would be the umbrella, when He walks; he would be throne, when He sits, he would be footwear, when He stands and he would be pillow when He sleeps in the sea”.     These words  are from one of the hymns of the Poigai Azhwaar when he wanted to serve Paramathma like Ananthazhwaan, the multi headed snake who is always with Paramathma and doing all the services to Him. Lakshmanan is an incarnation of Ananthazhwaan and it is very apt that he was there with Sri Rama from the beginning and till the very end.  It is really difficult for us to come out of this  hymn, which talks about  Lakshmanan  leaving  this word.

Bharatha and Lakshmanan, brothers of Sri Rama, both served  Sri Rama.  But there is a basic difference between these two.  Bharatha did exactly like what Rama asked him to do.   Lakshmanan also did all the services to Sri Rama all the times, but at times, he did  what he thought that Rama needed.  Let us put our hands together and bow to Lakshmanan at this stage.

matru uru thuyaram adaiyom” – meaning “we will not have any other distress”.  Here Azhwaar says that people may have sadness of not being there and having the dharsan of Sri Rama during the vibhavaavathaaram.   Azhwaar says that sadness would go away, when you have the dharsan of Sri Rama at Thilainagar Thiruchithrakoodam, where He stays  for ever.

Tenth Hymn

After leaving Ilayaperumal or Lakshmanan, Sri Rama decided to move on to Paramapadham or Srivaikuntham and at that time all the living creatures in Ayodhya made a request to Him that they also would like to accompany Him.  Sri Rama agreed to that and asked them to follow Him.    So when Sri Rama walked through the river Sarayu, all people, animal and birds also followed Him and  reached Srivaikuntham.  Azhwaar narrates this as “andru saraasarangalai Vaikunthathu aetri”  meaning that Rama sent all the living things like people, animals, birds and also the plants to Srivaikuntham or abode.

Throughout the incarnation of Sri Rama, He lived like a normal human being and had only two hands.  However, when He was going back to Paramapadham, He displayed all His four hands  on  His strong  shoulders.  This is narrated by Azhwaar as “ani nedum thol naangum thondra“.

Kulasekara Azhwaar says “vinn muzhuthm ethir vara” meaning that all those who were in Paramapadham came forward and gave a rousing reception to Sri Rama.   He was sitting on His throne displaying His Supreme self all over  and this is narrated by Azhwaar as “than dhaamam mevi  sendru inithu veetru iruntha

Kulasekara Azhwaar concludes this hymn by advising us to pray to Sri Ramachandra Moorthy daily at Thilainagar Chithrakoodam, as He, ivan, who is nearer to us is the same Paramathma, avan, who is there,  far away,  in Paramapadham .  Azhwaar uses the special words in Tamil   ‘avan’   and  ‘ ivan ‘  to distinguish  how far or nearby, a person is from us,  , in his hymn as  “Avan Ivan Endru Aethi Naalum“.

Eleventh Hymn / Final Hymn in Perumal Thirumozhi

Azhwaar has given the complete, but the condensed version of Sri Ramayanam in the previous ten hymns, starting from Sri Rama’s birth to Dasaratha Chakravarthy, who had everlasting glories, and until Sri Rama went back to Paramapatham or Srivaikuntham.  Azhwaar concludes by saying that those who read these ten hymns would reach the Holy feet of Sriman Narayanan or Paramathma.

Azhwaar has praised Sri Hanuman as “Thiral Vilanku Maaruthi” – meaning that Hanuman had done many heoric acts and His ability was demonstrated.    We should also take note that Sri Hanuman had got a boon from Brahma and that gave Him  eternal life.

Sri Hanuman had requested for a boon from Sri Rama, when He was going back to Paramapatham, that Hanuman could stay back in this world and help all the people, who read or  hear the historic activities of Sri Rama and Ramayanam, as long as the epic Ramayana exists or as long the world exists and Sri Rama had blessed Hanuman with his wish.   So when Sri Rama went back to Paramapadham, Hanuman did not accompany Him, but stayed back in this world.  Azhwaar says that Sri Rama could not be without Hanuman in Paramapatham, and hence He came to Thialainagar Thiruchithrakoodam to be with Sri  Hanuman.

What is Next

Kulasekara Azhwaar, in this Prabandham, Perumal Thirumozhi, explains his devotion towards Sri Rama and the devotees of Sri Rama, by taking Paramathma in both Archai and Vibhava states.   Azhwaar has also praised the heroics of Sri Rama in many hymns of this pathigam.

Kulasekara Azhwaar, in this final pathigam or subsection, mentioned about Sri Rama, killing of Thadakai in the second hymn, Viraadan in the fifth, Vaali in the sixth, Raavana in the seventh, Chambuga in the ninth hymn and taming Sri Parasuraama in the third hymn.     It is very appropriate that Kulasekara Azhwaar, who was a great warrior by himself, talked about these gallant and daring deeds of Sri Rama.  Azhwaar mentioned that he had a shining sword and an army of people carrying sharp weapons to kill enemies, when he was a king.

Kulasekara Azhwaar,  whose birth and life were for  Sri Rama and who had compiled hymns on Sri Rama, preached the devotion towards Sri Rama and the devotion towards the devotees of Sri Rama. After this, we will try to discuss about one of the two Azhwaars, who sang only on Sri Ranganaathar in Srirangam, Who has taken a vow to remain in Srirangam, until all the Jeevathmaas get Mukthi  or go to Srivaikuntham.  In other words, He is here at Srirangam to make sure that we all get His blessings to go abode.

6 Comments on “Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்

  1. குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி தொகுப்பில் 647 தொடங்கி 750 வரை 105 பாடல்கள் உள்ளன. இது பற்றி மிக எளிமையான சொற்களில் விளக்கியுள்ள விதம் போற்றுதற்கு உரியது. ஆங்கிலத்திலும் இந்த விளக்கம் தொடர்கிறது. சிறப்பான பணி.

    • திரு முத்துசாமி அவர்களுக்கு, நன்றி. உங்களை போன்றோரின் கருத்துக்கள், மிகவும் ஊக்கி வைப்பதுடன், மேலும் பொறுப்புடன் செயல்பட தூண்டுகிறது. மீண்டும் நன்றி

  2. மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள். தெரியாத பல செய்திகளை தெரிந்து ஆழ்வார் பாசுரங்களை அனுபவித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி அய்யா.

  3. எனக்கு பெருமாள் மீதான பக்தி இப்போது கூடுதல் ஆகி காதலாகி விட்டது… பதிவிற்கு நன்றி….

    • திரு விக்னேஷ், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. அன்புடன் அடியேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: