A Simple Devotee's Views
For English version, please click here, thanks.
மதுரகவி ஆழ்வார், தமிழ் மாதமான சித்திரையில், சித்ரா நட்சத்திரத்தில், (சித்திரையில் சித்திரை என்று கூறுவார்கள், கார்த்திகையில் கார்த்திகை என்பது திருமங்கையாழ்வாருக்கு! ) பெருமாளின் வாகனமான கருடனின் அம்சமாக தென் தமிழ்நாட்டில் ஆழ்வார்திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்தில் அவதரித்தார்.
மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் பெருமாளை பாடாது, நம்மாழ்வாரையே தெய்வமாக கொண்டு “கண்ணிநுண் சிறு தாம்பு” என்ற பதினொன்று பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தந்தைப் பாடினார். இவரது பாசுரங்கள் ஆச்சார்ய பக்திக்கு எடுத்துக்காட்டாகும். வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியனுக்கே முதலிடம். அப்படி ஆச்சாரியனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர்.
ஆழ்வாரின் பாடல்களில் மிகுந்த பற்றுகொண்ட மதுரகவி ஆழ்வார், தம் ஆசார்யரான நம்மாழ்வாரை பற்றி, “மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்” என்று பாடி உள்ளார்.
மதுரகவி ஆழ்வார் வேத சாத்திரங்களை நன்குக் கற்றவர். இவர் வடநாட்டு யாத்திரை சென்ற போது, ஒருநாள் இரவு அயோத்தியாவில், வானத்தில் ஒரு பேரொளியைக் கண்டு வியப்படைந்தார். அவ்வொளியை மறுநாளும் அவர் கண்டபோது, அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக அந்த ஒளியைத் தொடர்ந்து தெற்கு நோக்கி நடந்தார். அஹோபிலம், திருவேங்கடம் திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருவில்லிபுத்தூர் ஆகிய தேசங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்தது. தெற்கு நோக்கி பயணத்தை தொடர்ந்தார். கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூர் வரை சென்று அதை தாண்டியபோது மறைந்தது. ஆழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் அதிசயம் உள்ளதா என்று வினவ, அவ்வூர் மக்களும் இங்கு ஒரு குழந்தை பதினாறு வருடங்களாக, ஒரு புளிய மரத்தடியில், யோக நிலையில் அசையாமல் இருப்பதாகக் கூறினர். மதுரகவி அங்கு சென்ற போது, அந்த குழந்தைக்கு உயிர் உள்ளதா என்று பார்க்க ஒரு சிறு கல்லை கீழே வீச, அந்த குழந்தையான காரி என்கின்ற சடகோபன் என்கின்ற நம்மாழ்வார், கண்திறந்து காட்டினார்.
அப்போது அந்த குழந்தைக்கு வயது பதினாறு, கையில் உபதேச முத்திரை. கண் திறந்த சடகோபனிடம், “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார். அதற்கு சடகோபன் முதன் முதலாக தனது வாயைத் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்றது. அந்த பதிலில் உள்ள தத்துவங்கள் என்ன என்றால்,
பதிலில் உள்ள தத்துவங்களை புரிந்துகொண்ட மதுரகவிகள், சடகோபனின் ஞானத்தை புரிந்துக்கொண்டு தன்னை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்ட, அப்பொழுதே நம்மாழ்வாரும் உயர்ந்த சீடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து மதுரகவியை சீடராக ஏற்றுக்கொண்டார். மதுரகவிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் கவித்துவத்திலும் பெரியவராகத் திகழ்ந்ததால் நம்மாழ்வாரையே குருவாகக் கொண்டார் மதுரகவி.
நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் தான் வடமொழி வேதத்தை தமிழில் செய்வதாகவும், அந்த பாடல்களை ஓலை படுத்தும்படி திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி மதுரகவிஆழ்வார், சடகோபனின் பாடல்களை பட்டோலை செய்தார்.
“பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும், இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா, மெய்நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே.” என்று தொடங்கி திருவிருத்தமும், “செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,” என்று திருவாசிரியமும், “உயர்வர உயர்நலம் உடையவன் எவன் அவன், மயர்வறும் மதிநலம் அருளினன் எவன் அவன்,” என்று திருவாய்மொழியையும் “முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,” என்று பெரிய திருவந்தாதியையும் சடகோபனான நம்மாழ்வார் சொல்லச்சொல்ல, மதுரகவி ஆழ்வாரும் அவைகளை செவ்வனே பதிவு செய்தார்.
வேதங்களில் சொன்னவற்றை மக்களுக்கு உபதேசிக்கவே, பரமாத்மா, ஆழ்வார்களைப் படைத்தார். வேதங்களை தமிழ்படுத்திய ஆழ்வார், அவைகளில் பெருமாளின் லீலைகளையும், அவருடைய குண நலன்களிலும் மோகித்து அவ்வபோது மூர்ச்சை ஆகி விடுவார். சிலசமயம் அவர்நினைவு திரும்புவதற்கு மாதங்கள்கூட ஆகிவிடும். அப்போதும், மதுரகவி கூடவே இருந்து ஆழ்வாருக்கு, சேவை செய்து ஆழ்வாரை மூர்ச்சையில் இருந்து எழுப்பி, மீண்டும் அவர் பாடும் பாடல்களை பதிவு செய்வார்.
பரமபதம் அடையப் போவதை முன்கூட்டியே அறிந்த நம்மாழ்வார், மதுரகவியிடம் அதை குறிப்பாக தெரிவிக்க, அவரும் ஆழ்வாருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். நம்மாழ்வார், தமிழ் வேதத்தை உலகுக்கு பரப்பி பின்னர், பரமபதம் அடையலாம் என்றுசொன்னார். மதுரகவியாழ்வாரும், ஆச்சாரியாரின் புகழை உலகுக்கு தெரிவிக்க தனக்கு ஆழ்வாரின் சிலை வேண்டும் என்று வேண்ட, நம்மாழ்வாரும் அதற்கு ஆசீர்வாதம் செய்தார். மதுரகவி முதல் சிலை செய்ய அது த்ரிதண்டத்தோடு வர அதனை ஆழ்வாரிடம் காண்பித்த மதுரகவி அது நம்மாழ்வார் போல் இல்லை என்று கூற, அதற்கு நம்மாழ்வார் அந்த உருவம் பின்னாளில் வைஷ்ணவத்தை வளர்க்கபோகும் ஒரு மகானுடையது என்றும், அந்த சிலையும் பாதுகாக்கும்படியும், இன்னுமொரு சிலை செய்யும்மாறு கேட்டுக்கொண்டார். அடுத்த சிலை செய்ய அது நம்மாழ்வாரைப் போலவே இருக்க அதனையும் தன்னுடன் வைத்துக்கொண்டு, தம் குருவான நம்மாழ்வாரின் பிரபந்தங்களையும் பெருமைகளையும் உலகெங்கும், மதுரகவி பரப்பினார். இதனாலேயே அவரும் ஆழ்வார்கள் பனிரெண்டு பேரில் ஒருவர் ஆனார்.
முதலாவதாக செய்த சிலை, யதிரஜார் என்றும், பாஷ்யக்காரர் என்றும், ராமானுஜர் என்றும் சொல்லபடுகின்ற வைஷ்ணவ ஆச்சர்யார் ஆவார். ஆக, இராமானுஜரை நமக்கு அறிமுகப்படுத்தியதும் நம்மாழ்வாரே. இரண்டாவதாக செய்த ஆழ்வாரின் அர்ச்சாவதார சிலை இன்றும் ஆழ்வார்திருநகரியில் உள்ளது.
மதுரகவி ஆழ்வார். ஆச்சாரியனைக் கொண்டாடும் விதமாக நம்மாழ்வாரை அர்ச்சா ரூபமாக எழுந்தருளச் செய்தார். அவர் அருளிய திவ்ய பிரபந்தங்களை உலகோருக்குக் கற்றுக் கொடுத்தார். இப்படி ஆழ்வார் பெருமைகளை ஊர்ஊராக சொல்லிகொண்டு செல்லும்போது, மதுரை தமிழ் சங்கத்தினர், ஆழ்வார் பாடல்கள் தமிழ் சங்கப் பலகையில் ஏற்றுக்கொண்டால் தான் மதிக்கப்படும் என்று சொல்ல, மதுரகவியும், திருவாய்மொழியில் ‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே‘ என்ற பாசுரத்தின் முதலடியை சங்கபலகையில் வைக்க, மற்ற எல்லாபுலவர்களின் பாடல்களையும் அது நிராகரித்து ஆழ்வாரின் இரண்டு வரி பாடலை மட்டும் ஏற்றுக்கொண்டது. அதைப்பார்த்த சங்கப் புலவர்கள் ஆழ்வாரின் மேல் அபரிமிதமான மரியாதை கொண்டு, அவர் ஆழ்வாரே அல்ல, அவர் பெருமாளே என்று போற்றினார்கள். அவர்கள் “சேமம் குருகையோ, செய்ய திருப்பாற்கடலோ ” என்று தொடங்கும் பாடலை ஆழ்வாருக்கு சமர்பித்தார்கள்.
இப்படி ஆழ்வாரின் தமிழ் வேதத்தை உலகுக்கு கொண்டு சென்ற மதுரகவி ஆழ்வார் தனக்குப் பிறகும் ஆழ்வாரின் பெருமைகளும், அவரின் அருளிச் செயல்களும் நிலைத்து நிற்கும்படி செய்து, பின் அவரும் பரமபதம் அடைந்தார். மேலும், திவ்யப்ரபந்தம் நாளைடைவில் வழக்கில் இருந்து படிப்படியாக மறைந்துவிடும் நிலை அடைந்தபோதும், மதுரகவி ஆழ்வாரின் கண்ணி நுண் சிறு தாம்பு என்ற பாடலே மொத்த நாலாயிர திவ்யப்ரப்ந்தங்களையும் திரும்பி நமக்கு கிடைப்பதற்கு வழி செய்தது. அதை பற்றி அடுத்த வலைப்பதிப்பில் பார்க்கலாம். இப்படியாக, மதுரகவி ஆழ்வாரின் வரலாறு முழுவதும் நம்மாழ்வாரோடேயே சொல்லப்படுகிறது.
========================================================================
Madhurakavi Azhwaar was born in a place called, Thirukkolur, near Azhwaar Thirunagari, in the southern part of Tamil Nadu, in the Tamil Month of Chithirai and on a day with the star, Chithirai, (People remember this as ‘Chithirayil Chithirai’ and “Karthigaiyil Karthigai will be for Thirumangai Azhwaar! ) and as a feature of Garudan, which is the flying vehicle for Mahavishnu.
Madhurakavi Azhwaar sang only on Namazhwaar as his Guru and God, in his hymns, which are called “Kanni Nun Siru Thambu”, meaning that a rope that tied Lord Krishna with a number of knots. This contains only 11 hymns and is also classified under Divya Prabandham and none of them spoke about the God, but only about his Acharya. All his hymns are very good examples of the respects that are shown by the disciple to his Guru. In vaishnavism, the respect or affection or love towards the Guru (Acharya) takes a higher priority, even over the respect or affection or love towards the God Himself. Madhurakavi was a perfect example to depict the respect for Aacharya.
Madhurakavi Azhwaar liked the hymns created by Sri Namazhwaar so much, he created a hymn, about Sri Namazhwaar, “mika vedhiyar vedhathin utporul, nirkap paadi en nenjul niruthinaan“, meaning “Namazhwaar, the person who knew the Vedas in and out, created the whole meanings of Veda, including the inner meanings, in his hymns and he taught my heart or made them stick to my heart”.
Madhurakavi Azhwaar was a very learned person and he knows the vedas very well. He went out for a northern India pilgrimage and one night, when he was in Ayodhya (the birthplace of Sri Rama), he saw a bright light in the sky. He saw the same bright light in the sky the very next day also. He was curious and started following the light, which took him towards south. He crossed Ahobilam, Thiruvengadam, Srirangam, Madurai (Thirumalirumsolai) and Srivilliputhur. He continued his journey and reached Thirukurukur or Alwarthirunagari. When he crossed Azhwarthirunagari, the light disappeared. So he suspected something big for him in Azhwaarthirunagari. He went back to Azhwaarthirunagari and checked with people, whether anything strange is happening in this town. The people in the town responded by saying that there was a child, which went into a hole in a tamarind tree and was there for the last sixteen years. They also said that the child was in a yoga position and never moved after reaching the tree. When Madhurakavi went there, he wanted to test whether the child was still alive, so he decided to throw a small stone around. The child, which is known as Karimaaran or Sadagopan and would be known as Namazhwaar later, opened his eyes and saw Madhurakavi.
Karimaaran or Sadagopan was sixteen when he opened the eyes for the first time. His hands were showing signs of preaching. (Upadesa Muthirai). Madhurakavi asked Sadagopan, “sethathin vayitril siriyathu piranthaal, ethai thindru endge kidakkum ?”, meaning “when the soul comes to this world, what it would eat and where it would stay”. Immediately Sadagopan answered by speaking for the first time, “Athai thindru, angey kidakkum” meaning that “it would inherit the results of the activities of the body in which the soul has gone and live within the body”. In addition, there are more inner meaning in the question and answer beyond what is mentioned earlier and they are :
Madhurakavi, after understanding the inner meanings of the response from Sadagopan, he requested Sadagopan to take him as his disciple. Namazhwaar was also very happy that he got a very good disciple and accepted him. Namazhwaar was much younger than Madhurakavi, but Madhurakavi wanted to be his disciple mainly because of Azhwaar’s intelligence and knowledge in vedas and in Tamil literature.
Namazhwaar informed Madhurakavi Azhwaar that he would be translating the vedas, which are in Sanskrit to Dravidian Language, namely, Tamil. He requested Madhurakavi Azhwaar to document the hymns produced by him. Madhurakavi Azhwaar agreed to write down the hymns and preserve them nicely.
Namazhwaar started Thiru Virutham with “Poi Nindra Gnanmum Polla Ozhukkum, azhukku udambum” , Thiruvaasiriyam with “sekkarmaa mukil uduththu, mikka senchudar parithi soodi”, Thiruvaai Mozhi with “Uyarvara uyarnalam udayavan yavan avan, Mayarvarum mathinalam arulinan yavan avan” and finally Periya Thiruvanthathi with “muyatri sumanthu ezhunthu munthutra nenjame“. Generally Namazhwaar was dictating the hymns and Madhurakavi Azwar was documenting the same carefully.
Paramathma has sent Azhwaars to this world only to preach the Vedas to the people. Namazhwaar while translating the vedas to Tamil, he would become unconscious or senseless due to the deep love for Perumaal’s qualities, His actions and His character. Sometimes, it would take months before Azhwaar could recover. During all these times, Madhurakavi Azhwaar would continue to be with Namazhwaar and would give him all the help and support to Namazhwaar so that Azhwaar would continue his work. Madhurakavi would also continue to document the hymns.
Namazhwaar after realising, that it was time for him to go back to Paramapadham or Sri Vaikuntham, he indicated the same to Madhurakavi. Madhurakavi Azhwaar was also interested to follow him to Paramabatham, for which Namazhwaar said that Madhurakavi would reach Paramapadham, but before that he should continue to spread the Tamil Vedas to this world. Madurakavi Azhwaar was happy to hear that and he said he would continue to spread the Tamil vedas and also the glories of Namazhwaar. He wanted permission from Namazhwaar to make a statue of Namazhwaar, which could help him to carry on with his mission. Namazhwaar agreed and asked him to make the statue. When Madhurakavi Azhwaar made the statue, which did not come alike Sri Namazhwaar, he took it to Namazhwaar and asked him why the statue did not come alike Sri Namazhwaar. Namazhwaar said that the statue he made which had a set of three poles (Tridhandam), would be a significant acharya of vaishnavites, in future, who could develop, promote and spread vaishnavism to a great extent. Namazhwaar asked Madhurakavi to preserve the first statue for reference and make another one. When Madhurakavi made the second statue, it came out very much like Namazhwaar. Madhurakavi carried the second statue along with him wherever he went and spread the Divya Prabanthams and the glories of Namazhwaar. This act of support to Namazhwaar from the beginning and even after Namazhwaar attaining Paramapadham, has made Madhurakavi as one of the twelve azhwaars in Vaishnavism.
The first statue was that of Sri Ramanujar, or Bhashyakkaarar, or Yathirajar, a significant acharya of vaishnavism. Thus Sri Ramanujar was introduced to us by Sri Namazhwaar. The second statue, which is that of Sri Namazhwaar is available even today at Azhwaarthirunagari.
In an effort to promote and make the deeds of his Guru or Acharyaa, known to this world, Madhurkavi Azhwaar made the Statue of Namazhwaar and took it along with him wherever he visited and offered tonnes of praise, in public, to Sri Namazhwaar and his works. Madhurakavi also taught the divyaprabandhams to the people. He was repeating the same in every other town and he kept doing this regularly. When he was in Madurai, which is famous for promoting Tamil Language and Literature, through a board, called Madurai Tamil Sangam, the poets of Madurai Tamil Sangam, did not recognise the work of Sri Namazhwaar. They wanted Madhurakavi to prove that the Divya Prabandham created by Sri Namazhwaar is in line with Tamil grammar and the norms used by the Tamil Sangam poets. Madhurakavi was ready for the challenge and he took two lines “Kannan Kazhalinai nannum manamudaiyeer, ennum thirunaamam naraname“, from one of the 1000+ hymns created by Sri Namazhwaar to prove the greatness of his work to the world. The Tamil Sangam, not only accepted Namazhwaar’s hymn, but also rejected all other competing poems and poets. After observing this, the poets of Madurai Tamil Sangam, had enormous appreciation for Sri Namazhwaar to the extent that they compared Namazhwaar with Sri Mahavishnu, by offering a small poem starting with “semam Kurukaiyo, seiya thirupparkadalo“.
Thus Madhurakavi Azhwaar spread the Tamil Vedam, namely the Divya Prabandham, created by Namazhwaar, to this world when he was alive and also made sure that Namazhwaar’s work is well-known even after Madhurakavi attaining Paramapadham or Srivaikuntham. After Madhurakavi Azhwaar attaining Paramapadham, when Divya Prabandham was slowly disappearing from the normal day-to-day usage or literature, it was only Madhurakavi Azhwaar’s Kannni Nun Siru Thambu, which helped to rediscover the whole Divyaprabandham and we will see this in our next weblog. Thus the whole life story of Madhurakavi Azhwaar is told always, in conjunction with Sri Namazhwaar.