Namazhwaar’s Birth /நம்மாழ்வாரின் அவதாரம்

For English version, kindly click here, thanks

இராமாயண முடிவில் ஒரு காட்சி

பகவானின் விபவ ரூபங்களில் வரும் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமன் நன்றாக ஆட்சி செய்து, பரமபதம் செல்ல முடிவுசெய்த பிறகு ஒரு நாள் யமதர்மன் ஸ்ரீ ராமரை தரிசித்து அவரிடம் பரமபதம் செல்வதைப் பற்றி பேச வந்தான். அப்போது ஸ்ரீ ராமன், லக்ஷ்மணனிடம் வெளியே காவல் காக்கும் படியும், யமதர்மனிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் சொன்னார்.   லக்ஷ்மணனும் சரியென்று சொல்லி கவனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தான்.   அப்போது துர்வாச முனிவர் வந்து ஸ்ரீ ராமனை உடனே பார்க்க வேண்டும் என்று சொல்ல, முனிவரின் சாபத்திற்கு அஞ்சி முனிவரை லக்ஷ்மணன் உள்ளே விட்டான்.

ஸ்ரீ ராமரும் முனிவரிடமும், பின் யமதர்மனிடமும் பேசியபிறகு லக்ஷ்மணனிடம் வந்து அரசனின் ஆணையை மீறியதாகச் சொல்லி அதற்கு தண்டனையாக  32 வருடம் ஒருவருடனும் பேசாமல் மரம் போல் இருக்க வேண்டும் என்றார்.   லக்ஷ்மணன் திகைத்தபோது, ஸ்ரீ ராமன், தானும் அவனுடன் இருப்பதாகக் கூற லக்ஷ்மணன் சமாதானம் அடைந்தான்.   இலக்குவனை பிரிந்ததை ஆறாவது ஆழ்வாரான குலசேகராழ்வார், “……..முனிவன் வேண்ட, திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத்……” என்று, தன்னுடைய பெருமாள் திருமொழி 10.9 பாடலில் கூறியுள்ளார்.

கிருஷ்ண சரித்திரத்தில் ஒரு காட்சி

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்தபோது, நான்கு வகையான மனிதர்களில், ஞானி என்பவன் பரப் பிரம்மமே எல்லாம் என்பதை உணர்ந்தவன்.  அப்படிப்பட்ட ஞானி பற்பல பிறவிகளுக்கு பிறகு ஒரு முறை தான் பிறக்கிறான். அப்படிப் பிறப்பது மிக அரிது.   “பரப்பிரம்மமே எல்லாம் என்று சொல்லும் ஒரு ஜீவாத்மாவை பார்க்கவில்லை” என்று சொல்லி, முடிவில் அப்படி ஒருவரையும் சந்திக்காமலே ஸ்ரீ கிருஷ்ணர், பரமபதம் அடைகிறார்.     அப்படி செல்லும் போது, “உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே” என்று சொல்லும் ஒரு ஜீவாத்மாவை படைத்தே தீர்வது என்ற எண்ணத்துடனே சென்றார்.

பரமபதத்தில் ஒரு காட்சி

ஸ்ரீ மகாவிஷ்ணு,  நித்யசூரிகளிடம் ஒரு நாள், பூலோகத்தில் சில வேலைகள் உள்ளன, அதற்காக அனந்தன், கருடன் மற்றும் விஷ்வக்சேனர் ஆகியோருக்கு சில கட்டளைகள் பிறப்பித்தான்.  அனந்தனிடம், லக்ஷமணனாக இருந்த காலத்தில் அடைந்த சாபத்தை அனுபவிக்கும் நேரம் இது, ஒரு புளிய மரமாக இருந்து தனக்கு சேவை செய்ய சொன்னார்.   விஷ்வக்சேனரிடம் வடமொழி வேதத்தின் சாரத்தை தமிழில் செய்ய ஆணை பிறப்பித்தார்.   கருடனிடம், விஷ்வக்சேனருக்கு உதவியாக இருந்து அவர் சொல்லும் தமிழ் வேதத்தை ஆவணப்படுத்தும் சேவையை அவருக்குக் கொடுத்தார்.

அடுத்தது தென்தமிழ் நாட்டில்

தாமிரபரணி என்ற ஆற்றின் கரையில் உள்ள, ஆழ்வார்திருநகரி எனப்படும், திருக்குருகூர் என்ற புண்ணிய ஸ்தலத்தில் காரி என்பவர் பரம்பரை பரம்பரையாக ஒரு விஷ்ணு பக்தர்.  காரியின் தகப்பனாரான பொற்காரியார், அவருக்கு திருவண்பரிசாரம் என்ற மற்றோரு புண்ணிய ஸ்தலத்தில் உள்ள உடையநங்கை  என்ற பரம வைஷ்ணவ மங்கையை திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு சில காலம் குழந்தைசெல்வம் இல்லை.  அதனால் அவர்கள் திருக்குறுங்குடி நம்பி என்ற விஷ்ணு கோவிலுக்குச் சென்ற போது, அங்கே நம்பியிடம் தங்களுக்கு பிள்ளை செல்வம் வேண்டும் என்று வேண்டினார்கள்.   அவர்கள் இருவரும் பல தலைமுறைகளுக்கும் மேலாக  மிகச் சிறந்த விஷ்ணு பக்தர்கள் ஆனபடியால், நம்பி அவர்களிடம் எந்த மாதிரி குழந்தை வேண்டும் என்ற கேட்க, அவர்களுக்கும், சிறிதும் யோசிக்காமல், நம்பி போலவே வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.

nambi

திருக்குறுங்குடி நம்பி மிகவும் அழகாகவும் வர்ணங்களுடனும் இருப்பார்.  நம்பியும் அப்படியே ஆகும் என்று அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்தார்.   அதன்படியே  உடைய நங்கையும், ஊருக்கு சென்ற சிறிது காலத்தில் கர்ப்பம் தரித்தாள்.

முதல் பதினாறு வருடம்

வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில், விஷ்வக்சேனரின் அம்சமாக, கலியுகம் தொடங்கி 43 நாளில் சடகோபன் என்ற நம்மாழ்வார், திருக்குருகூர் (இன்று ஆழ்வார் திருநகரி) என்ற ஊரில் உள்ள அப்பன்கோவில் என்ற இடத்தில அவதரித்தார். (கண்ணன் பரமபதம் சென்ற அடுத்த நாளில் இருந்து கலியுகம் தொடங்கியது). ஆழ்வார்கள் வரிசையில் இவர், முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை, பூதம், பேயாழ்வாருக்குப் பிறகும், நான்காவதான திருமழிசையாழ்வாருக்குப் பிறகும் உதித்த ஐந்தாவது ஆழ்வார் ஆவார்.

காரிக்கும், உடைய நங்கைக்கும் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்த, குழந்தை, நகரவில்லை, சப்தம்போடவில்லை, சிரிக்கவில்லை. தாயும் தந்தையும் பல திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டனர்.

திருதொலைவில்லிமங்கலம் என்ற ஊரில் உள்ள விஷ்ணுவை வழிபட செல்ல முற்படும் போது, பலர் அந்த கோவிலில் உள்ள தேவப்பிரான் மிகவும் அழகும் அதித கருணையும் கொண்டவர், அந்த கோவிலுக்கு குழந்தையை எடுத்துச் சென்றால் பகவானின் கருணையினால் குழந்தை, பகவானின் குழந்தை ஆகி விடும் என்று தடுத்தனர். இருந்தும் காரியும் உடையநங்கையும் பெருமாளின் மேல் உள்ள பக்தியாலும், பற்றுதலாலும்  திருத்தொலைவில்லிமங்கலம் சென்று வழி பட்டனர்.   மற்றவர்கள் சொன்னதுபோல், பெருமாள், ஆழ்வாருக்கு தாயும் தந்தையும் போல் ஆகிவிட்டார் போலும்.   இது பின்னாளில் நம்மழ்வார் திவ்ய பிரபந்தம் பாடும் போது தேவப்பிரானை, “சிந்தையாலும், சொல்லாலும், செய்கையினாலும் தேவ பிரானையே, தந்தை, தாய் என்று அடைந்த வண்குருகூர் சடகோபன்(6-5-10) என்றே பாடுகிறார்.   இதை இன்றும் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகம் ஐந்தாம் நாள் விடையேத்து உத்சவம் மற்றும் நவதிருப்பதி கருட சேவை அன்று காணலாம்.   மற்ற எல்லா பெருமாள் புறப்பாடு முடிந்தவுடன் ஆழ்வார் தன் இருக்கைக்கு சென்று விடுவார், ஆனால் தேவபிரான் புறப்பாடு நடக்கும் போது மட்டும், ஆழ்வார் அசையாமல் தான் இருந்த இடத்திலேயே, அதாவது, கோவில் வாசலிலேயே, தேவபிரான், அந்த வீதி முழுவதும் சென்று அடுத்த வீதிக்கு திரும்பும் வரை  இருப்பார்.   அதேபோல் தேவபிரானும், அந்த வீதி சென்று முடியும் வரை, ஆழ்வாரை திரும்பி திரும்பி பார்த்துச் செல்வார்.

ஒரு நாள் திடீரென்று சடகோபனான அந்த குழந்தை தவழ்ந்து பக்கத்தில் உள்ள புளியமரம் ஒன்றில் உள்ள பொந்தில் ஏறி படுத்தது.   அந்த புளியமரம் இன்றும் ஆழ்வார் திருநகரி கோவிலின் உள்ளே உள்ளது.  அந்த புளிய மரம், பெருமாளின் படுக்கையும் மற்றும் எல்லாவுமான அனந்தன் என்ற நித்யசூரியே.

இப்படியே நம்மாழ்வார் என்ற சடகோபனின் முதல் பதினாறு வருடங்கள் கடந்தன. அவர் பேச வில்லை, சப்தம் போடவில்லை, அசையவில்லை.   புளிய மரத்தின் பொந்துக்கு சென்ற பின் அங்கேயே இருந்தார்.   அதற்குப் பிறகு நடந்த எல்லாம் அற்புதம், அற்புதம், அற்புதம், அவற்றில் சிலவற்றை அடுத்த பதிப்பில் காணலாம்.

=====================================================================

During the final stages of Ramayana

Sri Rama, the seventh incarnation of Sri Vishnu, in Dasaavathaaram, as a part of Vibhava Vasudevan, ruled the Kingdom very well and He has decided to go back to His original place, namely, Sri Vaikuntham.  One day, Yamadharman, or the God responsible for final stages of every life, had visited Sri Rama to discuss about  His plans.   Sri Rama, before going to that meeting, called Lakshman, His brother and asked him that He would be in a serious meeting and not to let anyone to come and disturb Him.    Lakshman, as usual, took His commands seriously and carried out the duty meticulously.   Dhurvasa, a saint, who is known for his short tempered nature, tried to enter the palace where Rama and Yamadharman were discussing.   Lakshman tried to stop Dhurvasa, but after seeing his anger, he allowed Dhurvasa to enter the palace.     Sri Raman spoke to Dhurvasa and sent him.  He also completed His discussions with Yamadharman.

He came back to meet Lakshmana.  He told Lakshmana that Lakshman did not follow the orders of the King and he needs to go through a punishment of 32 years, when he will not be able to interact with  any human beings and he would stay like a tree.  Lakshmana was so stunned and before he could react, Rama consoled him by saying that He would also be with him during those years.   This is generally explained when people discuss the Kulasekaraazhwaar’s, the sixth Azhwaar, Perumal Thirumozhi Hymn, 10.9, containing lines “……munivan venda, thiral  vilangu ilakkuvanai pirinthan thannai…”   

In the life of Sri Krishna

Sri Krishna, the ninth incarnation of Sri Vishnu, preached the famous Bhagavath Geetha to Arjunan.   In that He talks about 4 different sets of people and among them one set is called Gnani.  (Knowledgeable or Learned Person).   Krishna says  that Gnani fully understands that Brahmam is the Ultimate and it is really rare to see such Gnani.   He also told Arjuna that He did not meet any Gnani during His current incarnation.   Finally He did not see any Gnani, before leaving to Sri Vaikuntham, His traditional place.    At that time, He decides that He would create a Jeevathama, who would say that Lord Krishna is everything, whether it is the food that he is eating, or the water he is drinking or the betel that he could chew after the meal, “unnum soru, parugum neer, thinnum vetrilai ellam kannane”.

In Sri Vaikuntham, the Traditional House of Sri Vishnu

One day, Sri Vishnu called his most important subordinates, Ananthan, (His Bed), Garudan (His Carrier) and Vishvaksenar (His General) and informed them that there are some important tasks to be be done in the world and they all need to play some important roles in that task.   He informed Ananthan, that it would be the time for him to serve the punishment that he took when he was Lakshmanan.     He would become a Tamarind tree and serve Him as His house.  He ordered Vishvaksenar to translate the veda, which is in Sanksrit to Tamil, so that many more people can benefit by learning vedas and follow what is told in the veda.   He also ordered Garudan that he should help Vishvaksenar, in documenting the tamil translation that would be created by Vishvaksenar.

Next in Southern Tamil Nadu

Kaari was from a clan, who were vaishnavites for generations, living in Thirukurukoor or Alwarthirunagari, which is on the banks of the holy river Thamirabarani, in southern Tamil Nadu.   His father, Porkaariyaar arranged the marriage for Kaari with a girl by name Udaya Nangai, another staunch vaishnavite, living in another pious town by name, Thiruvanparisaaram.   They did not have any child for a while.    Once when they went to Thirukurunkudi Temple, they prayed to Nambi, the presiding deity and requested His blessings for a child.  Since Kaari and Udaya Nangai were Vishnu’s devotees for a long time and for generations, Nambi decided to help them.  Nambi asked them what kind of a child that they would like to have.   Without hesitation, they responded to Nambi, that they  would like to have a child like Nambi Himself.

Nambi in Thirukurnkudi temple, is a very beautiful and colourful deity.  sundhara nambi thirukurungudi (1)

Nambi blessed them and after a few days Udaya Nambi became pregnant.

First Sixteen Years of Namazhwaar

Udayanangai gave birth a male child and named him as Sadagopan, who will later become Namazhwaar.   Sadagopan was born as a feature of Vishvaksenar, on the Tamil Star, Visakam, in the Tamil Month of Vaikasi, 43 days after the start of Kaliyugam.   He was born in a place called Appan Koil, in the town Thirukurukur and this is called as Azhwaar Thirunagari today.    Kaliyugam started immediately after Sri Krishna, the 9th incarnation of Mahavishnu in Dasaavathaarm, left this  world and reached Srivaikuntham.     We have seen the first three Azhwaars(muthal azhwaars), namely, Poigai, Bootham and Pei Azhwaars and the fourth Azhwaar, namely, Thirumazhisai Azhwaar.  Nammazhwaar is the Fifth Azhwaar.

Kaari and Udayanangai were extremely happy with the child.  But the child did not move, did not smile or did not even cry.   Both the parents were very worried and started visiting more temples for prayers.

Both Kaari and Udayanangai were planning to take Sadagopan to the temple in a place called Thiru Tholai Villi Mangalam.  The prime Deity there is called Devapiran and He is a very kind and beautiful deity.    People advised Kaari and Udayanangai against taking the child to the temple and cautioned them that the child would become the God’s child or in other words, the child would be totally associated with Devapiran and would serve only Him for ever.    In spite of all these, Kaari and Udayanangai took Sadagopan to the temple because of their devotion and respect for Devapiran.    Like what others said, Perumaal became both father and mother for Namazhwaar.    This became evident later, when Azhwaar composed the Divyaprabandam hymns on Devapiran.   In that he says that he got Devapiran as his father and mother through his thinking, words and actions. “Sindhaiyaalum, sollaalum, seigaiyinaallum devapiranaiye thandhai, thaai endru adaintha vankurukur sadagopan” (6-5-10).  We can see this even today during the fifth day celebrations in Azhwaar Thirunagari on the Vaikasi Visakam festival.   This is called Vidaiyethu Uthsavam (send-off festival) and the garuda sevai of all perumaals of Nava Thirupathi (nine temples around Alwarthirunagari) would be performed during that time.    As soon as each perumaal departs the temple, Azhwaar will return to his place, except for Devapiran.    When Devapiran is about to leave, Azhwaar will stand in his place and keep sending Devapiran off.   He would stay there in the same place, in front of the temple, till Devapiran goes through the entire street and till the time He turns to the next street. Similarly Devapiran also will keep turning his face towards Azhwaar to see and wish him, His son.

Back to the childhood of Azhwaar.   One day suddenly, Azhwaar crawled towards a tamarind tree and went inside a hole in the tree.   That tamarind tree is still there inside Azhwaar Thiru Nagari Temple.    That tamarind tree is the Ananthazhwaan, perumaal’s ever serving assistant, as Bed, and everything.

This is how the first sixteen years of Namazhwaar had passed.   He did not talk, move or cry.  He went inside the tree and was there without any movement.  After the sixteen years whatever happened were all wonder, wonder and wonder.   We will see some of them in the coming weblogs.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d