Yugam, Pralayam and Vibavam/யுகம், பிரளயம் மற்றும் விபவம்

For English Version, kindly click here, thanks

விபவ அனுபவத்திற்கு முன்னால் கால அளவுகள் சிலவற்றைப் பற்றியும் அத்துடன் தொடர்புள்ள யுகம், பிரளயம் போன்ற சில பதங்களையும்  விவாதிப்போம்.  அதே போல் நிமிடம், நாழிகை, பட்சம், ருது, அயனம் போன்றவற்றைப் பற்றி  இங்கு குறிப்பிடவில்லை, ஏனெனில் அவை இப்பொழுது நம் தலைப்பிற்கு தேவை படாது.

யுகங்கள்

கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்று நான்கு யுகங்கள். இப்பொழுது கலியுகம் தொடங்கி சுமார் 5000 ஆண்டுகள்  ஆகின்றது.  ஒவ்வொரு யுகமும் கால அளவில் மாறு பட்டவை. கலியுகத்தை விட, துவாபரயுகம் இரண்டு மடங்கும், திரேதாயுகம் மூன்று மடங்கும், கிருதாயுகம் நான்கு மடங்கும் பெரியது.

  • கிருத யுகம் – 1,728,000 வருடங்கள்
  • திரேதா யுகம் – 1,296,000 வருடங்கள்
  • துவாபர யுகம் – 864,000 வருடங்கள்
  • கலியுகம் – 432,000 வருடங்கள்

ஒரு சதுர்யுகம் என்பது இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது.   கிருத, திரேதா, துவாபர மற்றும் கலியுகம் என்ற இந்த நான்கு யுகங்களும் ஒரு சுழற்சியில் வந்து கொண்டு இருக்கும்.   இந்த சுழற்சியை பிரம்மம் அல்லது ஸ்ரீமன் நாராயணன் நடத்திக்கொண்டு இருக்கிறார்.   மேலும், ஸ்ரீ விஷ்ணு அல்லது பிரம்மம் ஆனவர், கிருத யுகத்தில் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் சிவப்பாகவும், துவாபர யுகத்தில் கருநீலமாகவும், கலியுகத்தில் கருப்பாகவும் காட்சி அளிக்கிறார்.

பிரளயங்கள்

இந்த பிரபஞ்சத்தை நம் முன்னோர்கள் பூமி, அதற்கு மேல் ஆறு உலகங்களும், பூமிக்கு கீழ் ஏழு உலகங்களும் ஆக மொத்தம் பதினான்கு உலகங்களாக பிரித்தார்கள். ஒரு கல்பம் என்பது 1000 சதுர்யுகங்களைக் கொண்டது.  இரண்டு கல்பம் சேர்ந்தது பிரம்மாவிற்கு ஒரு நாள்.   இந்த பிரம்மா என்பவர் வேறு, நாராயணன் அல்லது விஷ்ணு என்று சொல்லபடுகின்ற பிரம்மம் வேறு.  வியுக வாசுதேவனிடம் இருந்து வந்த அநிருத்தன், முக்கியமான சில கட்டமைப்புகளை ஏற்படுத்திய பின்பு, படைக்கும் பொறுப்பை  இந்த பிரம்மாவிடம் ஒப்படைத்து உள்ளார்.

பிரம்மாவின் பகல் பொழுது முடிந்தபின் பிரளயம் ஏற்படுகிறது.   பிரளயத்தின் பொழுது பூமியும் அதற்கு மேல் உள்ள இரண்டு உலகங்களும் அழிந்துவிடுகின்றன.   எல்லா ஜீவாத்மாக்களும், பரமாத்மாவை  வந்து அடைகின்றன.   அப்படி வரும் போது அவை தம்தம் கர்மாக்களுடன் வருகின்றன.  ஜீவாத்மாக்கள், பிரளயம் முடியும் வரை பரமாத்மாவுடனேயே இருக்கின்றன.   பிரம்மாவின் இரவுப் பொழுது முடிந்த பின் பிரளயம் முடிகிறது.   அதாவது பிரளய காலம் ஒரு கல்பம். பிறகு பிரம்மம் பூமியையும் மற்ற இரண்டு உலகங்களையும் படைத்த பிறகு, பிரம்மா தனது படைப்புத் தொழிலை ஆரம்பிக்கிறார்.

ஆக பிரம்மாவின் ஒரு நாள் என்பதில் பகல் பொழுது முடிந்தபின் பிரளயம் ஏற்பட்டு, மறுநாள் காலை மறுபடியும் ஸ்ருஷ்டி அல்லது உற்பத்தி தொடங்கும். பிரம்மாவின் இரவுப் பொழுதின் போது அல்லது பிரளயத்தின் போது, பரமாத்மா எல்லா ஜீவாத்மாக்களையும் தன்னிடம் வைத்து காப்பாற்றுகிறார். இப்படியாக நாள், வாரம், மாதம் மற்றும் வருடங்கள் கடக்கும்.   1000 ஆண்டுகளுக்கு பிறகு மகாப்பிரளயம் நடக்கும். அப்பொழுது 14 உலகங்களும் அழிந்து மீண்டும் படைப்பு தொடங்கும்.

இதைத்தவிர, இன்னும் இரண்டு பிரளயங்கள் உள்ளன.   ஒன்று தினம் தினம் நடக்கின்ற பிறப்பு, இறப்பு சம்பவங்கள் மூலம் ஒரு ஜீவாத்மா, தன் கர்மாக்களின் அடிப்படையில் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு சென்று, மீண்டும் இவ்வுலகத்திற்கு திரும்புவது.   மற்றொன்று, ஒரு ஜீவாத்மா, கர்ம யோகத்தின் மூலமாகவோ, பக்தி யோகத்தின் மூலமாகவோ, ஞான யோகத்தின் மூலமாகவோ, சரணாகதி மூலமாகவோ மோட்சம் அடைந்து பரமாத்மாவை அடைவது.

இங்கு பிரளயத்தைப் பற்றியும், மகா பிரளயதைப்பற்றியும் சொல்வதற்கு காரணம், அவை பிரம்மத்தின் அடுத்த நிலையான விபவ நிலையின் போது தேவைப்படும்.

விபவம்

அநிருத்தன், வியுக நிலையில் இருந்து அவ்வப்பொழுது நல்லவர்களை காப்பாற்றவும் தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை காக்கவும், பற்பல அவாதாரங்கள் எடுக்கிறார். இந்த அவதாரங்கள் விபவம் எனப்படும். மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்கின்ற பத்து அவதாரங்கள் மிகவும் பிரபலமானவை.   ஸ்ரீமத் பாகவதத்தில் சுமார் 27 அவதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மச்ய (மீன்), கூர்ம (ஆமை), வராக (பன்றி), நரசிம்ஹ (மனித உடலுடன், சிங்க தலை), வாமன (உயரம் குறைந்தவராக), பரசுராம, ஸ்ரீ ராம, பலராம, ஸ்ரீ கிருஷ்ண மற்றும் கல்கி ஆகியவை முக்ய அவதாரங்களான தசாவதாரங்கள் ஆகும்.   கபிலர், நரநாராயண, மோகன, ஹயக்ரீவ, புத்த, வியாச, கார்த்தவீரியன் என்ற சில அவதாரங்கள்  பாகவதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளன.

பர, வியுக நிலைகள் எப்பொழுதும், எல்லா காலங்களிலும் இருக்கும்.   ஆனால் அவதாரங்கள் அந்தந்த யுகங்களில் மட்டுமே நடைபெறும்.   மச்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ, வாமன அவதாரங்கள், கிருத யுகத்தில் நடைபெறும். கிருதயுகத்திலே அவதரித்த பெருமாள், சங்குபோலே வெளுத்த நிறத்தையுடையவனாக விளங்கினானென்று திருமங்கை ஆழ்வார் தன்னுடைய திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தத்தில் மூன்றாவது பாசுரத்தில் சொல்லியுள்ளார். மகாபிரளயத்தின் முடிவில், மகாவிஷ்ணு அல்லது பிரம்மம், வராக அவதாரம் எடுத்தருளி, பாதாள லோகத்தில் நீரில் அமிழ்ந்து இருந்த பூமியை எடுத்து, மீண்டும் அதன் ஸ்தானத்தில் வைத்தருளினார்.

 பரசுராம மற்றும் ஸ்ரீ ராம அவதாரங்கள் திரேதா யுகத்தில் நடைபெறும். த்ரேதாயுகத்திலே அவதரித்த பெருமாள், சிவந்த நிறத்தையுடையவனாக விளங்கினானென்று அதே பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். பலராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் துவாபர யுகத்தில் நடைபெறும். த்வாபரயுகத்தில் பசுமைநிறத்தைக் கொள்வன்; இது ஸ்ரீபாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தில் இருபதாவது ச்லோகம் முதல் விளக்கமாக சொல்லப்படுகிறது. கல்கி அவதாரம் கலி யுகத்தில் நடைபெறும். கலியுகத்தில், நீல நிறத்தை உடையவனாய் விளங்குகிறான் என்று திருமங்கை ஆழ்வார் மேற்சொன்ன அதே பாசுரத்தில் கூறுகிறார். யுகங்கள் ஒரு சுழற்சியில் வருவது போல் அவதாரங்களும் திரும்ப திரும்ப வருகின்றன.

பர வியுக நிலைகளை நம் போன்ற பக்தாத்மாகள் இந்த வாழ்க்கையில் இந்த உடலுடன், அடையமுடியாது.  பரமாத்மா நமக்கு உதவி செய்யும் பொருட்டு நம்முடனே இருக்க விரும்புகிறார். அதனால் தான் பற்பல அவதாரங்கள் எடுக்கிறார். அவர் நம்முடன் இருந்து நமக்கு மோட்சத்திற்கு வழி காட்டுகிறார்.  இதுவும் அவர் நமக்கு செய்கின்ற பெரிய உதவியாகும்.

நாம் இருப்பது கலியுகத்தில்.  ராம கிருஷ்ணா அவதாரங்கள் நடப்பதும் கலியுகத்திற்கு அருகிலேயே.  ஆகையால் அந்த அவதாரங்கள் நமக்கு மிகவும் நெருக்கமானவை. ஆழ்வார்களின் பாடல்களிலும் இந்த அவதாரங்கள் அடிக்கடி வருகின்றன. மேலும், வேதங்கள் சொன்னபடி மனிதனால் வாழமுடியும் என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே, ராம கிருஷ்ண அவதாரங்களை மனித ரூபத்தில் பிரம்மம் படைத்தது.   அவர் முதலில் வேதங்கள் சொன்னபடி ராம அவதாரத்தில் வாழ்ந்து காட்டினார்.   பிறகே, பகவத் கீதையில், தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் உலகிற்கு போதித்தார்.

விபவம் பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த பதிப்பிலும் தொடர்வோம்.

========================================================================

Preface

Before we start on Vibhavam, us go through  one measurement type of Time and a few terms around Time, like Pralayam and Yugam, which may be referred in our discussions. There are also smaller unit of measurements for Time, like, nimidam, nazhigai, patcham, ruthu, ayanam etc, which will not discuss here, as they may not be used for the time being.

Yugam

There are 4 yugams, Krutha, Thretha, Dwapara and Kali.  Each one is measured in terms of number of years and Kali yugam, the present one, is the shortest with about 432,000 years.  The next bigger one is Dwapara yugam, which is twice as long as Kaliyugam, that is 864,000 years.  Thretha yugam is next longer with 1,296,000 years and three times of Kaliyugam.    Finally Kritha yugam has 17,280,000 years and four times, the duration of Kaliyugam.

All the four yugams put together is called Chathur Yugam.  The order in which the yugas cycle happens, is Krutha, Thretha, Dwapara and Kali and currently we are about 5000 years into Kaliyugam.   The cycle of Yugams are controlled and driven by Brammam or Sri Narayanan or Maha Vishnu.  Also Mahavishnu has different colours in each of the yugams, He was white in colour during Kritha yugam, red in Thretha yugam, blue-black in Dwapara yugam and black in Kali yugam. .

Pralayam

The universe is divided into 14 separate spaces including this world or Earth, and they are positioned as 6 above the earth and 7 below this world.   Continuing from the above, 1000 Chathur Yugams are called one Kalpam and two Kalpams are one day for Brahma. Brahma is different from Brahmam or Vishnu or Narayanan.  Brahma is assigned the job of creation by Prathyumnan after the early creation of the basic infrastructure.

At the end of the Day time for Brahma, Pralayam happens.   When Pralayam takes place, the three worlds, namely this world and the two spaces above the earth, will be fully consumed or destroyed.   All the Jeevathmaas or the souls go back to Paramathma along with the respective Karmas during Pralayam and stay with Paramathma till the creation of these spaces by Brahmam, which  happens after the night time of Brahma, that is after one Kalpam.

In summary, this is one day for Brahma, where after the daytime Pralayam happens and during night time all Jeevathmas are protected by Paramathma and again the creation starts on the next day.   After each day, the week, the month and the year goes by.   After 100 years of Brahma a Big Pralayam happens, called Maha Pralayam, during which all the fourteen worlds will be destroyed and the recreation happens.

There are two other prayalams, one when a Mukthathma leaves this world and reaches Paramathmaa in Srivaikuntham through Karma yogam, Bakthi Yogam, Gnana Yogam or through Saranaagath.   and does services to Paramathma for ever without returning to this world. The last pralayam is one where the Jeevathma comes back after spending their Karma either in Heaven or Hell and return to this world.

Why do we need to know about Pralayam and MahaPralayam ?    This will be referred in the next State of Brahmam, namely, the Vibavam.

Vibhavam

From Vyuham, Aniruthan assumes various manifestations, from time to time, to protect the good , to punish the wicked and to re-establish Dharma. These manifestations are called Vibhavas, more popularly known as Avataras in this world. More popular Avatharams are the Dasavatharams (Ten Avatharms) of Mahavishnu.  Like yugams come in a cycle, these Avatharms are also repeated.   In Srimad Bhagavatham there are about 27 avathars mentioned.

The ten major or mukiya (important) avathars are Mathsya(Fish), Kurma(Tortise), Varaha(Boar), Narasimha(Man-Lion), Vamana(Dwarf), Parasurama, Sri Rama and Balarama , Sri Krishna and Kalki.   Bhagavatham mentions avathars like Kapila, Nara-Narayana, Mohana, Hayagriva, Butha, Vyasa , Karthaveeryan etc.

While Para and Vyuga exist all the times, the avathars happen during specific yugas. Mathsya, Kurma, Varaha, Narasimha and Vamana avathars happen during Krutha yugam.  Those incarnations in Krutha Yugam will be white in colour, like conch and it was stated by Thirumangai Azhwaar in his Prabantham Thirunedunthandagam , hymn 3. After the Mahapralayam, Mahavishnu takes the Varaha Avathar and retrieves the Earth and keeps in the proper place.    Mathsya and Kurma avatharangal might have happened after the Mahapralayam, but before the re-position of Earth by Varaha Avathar.

Parasurama and Sri Rama avathaars happen during Thretha yugam. The incarnations in Thretha Yugam will be red in colour and is also stated by Thirumangai Azhwaar in the same hymn. Balarama and Krishna Avathars happen in Dwapara yugam.  The incarnations of Dwapara Yugam will be Green in colour and it is stated in details in Sri Bhagavatham, in the 11th Section, 5th Subsection and in hymn 20. Kalki avathar happens in Kaliyugam.  The incarnations in Kali yugam will be blue in colour and it is stated by Thirumangai Azhwaar in the same above mentioned hymn. Since Yugams happen in cycle continuously, the avathars also get repeated in the respective yugams.

The first two states,Para and Vyuham, are not approachable by us in this life.   He wants to be with us and hence He took various avatharms  to make Himself closer to us.   By being closer to us, He can guide us to attain Moksham and that is a favour He does for us.

Since we are in Kaliyugam and Rama Krishna avatharams happen closer to Kaliyugam, Those avathaarams are closer to us and thus get mentioned in Azhwaar’s hymns more often. Rama, Krishna Avatharams are also taken by Brahmmam in the form of human beings to demonstrate to us that the rules set in Vedhas can be practiced by people like us, the human beings.   In fact, as Rama, He practically lived as per what are told in Vedham and then only preached in Bhagavat Gita in His next Avathaar, namely, Krishna Avathar.

Let us discuss some more things about Vibhavam in the next blog.

=========================================================================

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: