A Simple Devotee's Views
For English version, kindly click here, thanks
இதற்கு முந்திய பதிவுகளில் இருந்து ஒரு சிறு நினைவு கூறுதல்
1. பிரம்மம் அல்லது பரமாத்மா தான் நமக்கு கை, கால் மற்றும் உடம்பினைக் கொடுத்தது. பிரம்மதிற்கே நம்முடைய உயிர் அல்லது ஜீவன் உரித்தானது.
2. எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தம் தம் கர்மாக்களை ஒழித்து பரமாத்மாவை அடைவதேயே குறிக்கோளாக் கொண்டு தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இறைவனை அடைவதே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறப்படும்.
அப்படி என்றால் பரமாத்மாவின் குறிக்கோள் என்ன என்பதைப் பார்ப்போம். பரமாத்மா எல்லா ஜீவாத்மாக்களும் தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார். ஜீவாத்மாக்கள் எங்கு நிரந்தர சந்தோஷமாக இருக்க முடியும் ? கர்மாக்களைத் தொலைத்து அவை தம்மிடம் வந்து சேர்ந்தால் தான் இந்த பூவுலக இன்ப துன்பங்களில் இருந்து விடுபடமுடியும். ஆக பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஒரே குறிக்கோள் தான்.
அப்படி ஜீவாத்மா பிரம்மத்தை அடையவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை சற்று பார்ப்போம். ஜீவாத்மாக்கள் திரும்ப திரும்ப பிறவிகளை எடுத்துக் கொண்டே இருக்கும். இந்தப் பிறவியிலும் மற்றும் எந்தப் பிறவியிலும் அடையும் இன்ப துன்பங்கள் அளவும், அவை எப்போது ஏற்படும் என்றும் கணிக்க முடியாது. எனவே ஒருவித நிச்சயமற்ற தன்மையோடு காலத்தைத் தள்ள வேண்டியிருக்கும். அது பயமாகவும், சோகமாகவும் இருக்கலாம். மேலும் அடுத்த பிறவியில் மனிதனா பிறப்போம் என்பதும் உறுதியாகச் சொல்ல முடியாது. வேதங்களின்படி, மனிதனாகவோ, மிருகமாகவோ புழு பூச்சியாகவோ தாவரமாகவோ பிறக்கலாம். வேதத்தின் ஒரு கட்டத்தில் நாம் மனசார ஒருவருக்கு கெடுதல் செய்தால் மறுபடியும் மனிதனாகப் பிறக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஒருவருக்கு வார்த்தைகளால் கெடுதல் செய்தால் அவர்கள் புழு பூச்சியாகவோ, மிருகமாகவோ, பிறக்க வாய்ப்பு உள்ளதாகவும், நாம் ஒருவருக்கு உடலால் துன்பம் விளைவித்தோமானால் அது நம்மை தாவரமாக பிறக்கச் செய்யும் என்று கூறுகிறது. மனிதனைத் தவிர மற்ற பிறவிகளால் இறைவனை அடைவது அவ்வளவு எளிது அல்ல.
ஜீவாத்மாக்களுக்கு சுகமும் துக்கமும் ஏன் ஏற்படுகிறது ? அது அவரவர்களின் கர்மாகளின் படியே அமையும். ஜீவாத்மாகளின் செயல்கள், இந்தப் பிறவியிலும், இதற்கு முற்பட்ட பிறவிகளிலும், வேதம் சொன்ன படி இருந்ததா, இல்லையா என்பதைப் பொறுத்து அவர்கள் கர்மாகள் அமையும். அதனால் ஜீவாத்மாக்கள் பாவ புண்ணியங்களை சம்பாதிக்கிறார்கள்.
அதனால் பரமாத்மா, ஜீவாத்மாக்களுக்கு கை, கால் மற்றும் மனம் புத்தி எல்லாம் கொடுத்து, நம் பாவ புண்ணியங்களை ஒழிக்க எண்ணினார். இதுவே அவர் நமக்கு செய்த முதல் கிருபை (கருணை) ஆகும்.
ஆனால் ஜீவாத்மாக்களாகிய நாம் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றோம். அதனால் ஜீவாத்மாக்களுக்கு சரியான வழி சொல்லிக்கொடுக்க வேதங்களை அவர் படைத்தார். வேதங்களைப் படைத்தது அவர் நமக்கு செய்த அடுத்த கிருபை (கருணை) ஆகும். ஜீவாத்மாக்கள் வேதங்களைப் படித்து அதன்படி நடந்து, மோட்ஷம் அடைவார்கள் என்று பரமாத்மா எண்ணினார்.
வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆனால் ஒரு சிலரே வடமொழி வேதங்களைப் பின் பற்றி மோட்ஷம் அடைந்தனர். இதனால் ஜீவாத்மாக்களுக்கு மேலும் உதவ தானே சில அவதாரங்களை எடுத்து நமக்கு வாழ்ந்து காட்டினார். இதைப் பார்த்து ஜீவாத்மாக்கள் தன்னை வந்து அடைவார்கள் என்று நம்பினார். இது நமக்கு அவர்செய்த மற்றொரு கிருபை அல்லது கருணை ஆகும். அவர் எடுத்த எண்ணிறந்த அவதாரங்களில் முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரம் என்று பெருமையுடன் பேசப்படுகிறது. ராம, கிருஷ்ண, நரசிம்ஹ, வாமன, பலராம, பரசுராம, மச்ச, கூர்ம, வராக அவதாரங்களுடன் கல்கியும் சேர்ந்து தசாவதாரம் ஆகிறது. அவதாரங்கள் பத்து மட்டும் அல்ல அவைகள் பல, பாகவதத்தில் இருபத்தி ஏழு அவதாரங்கள் சொல்லப் பட்டு உள்ளன.
ஆனால் இப்போதும் ஒரு சிலரே புரிந்து கொண்டு மோட்ஷத்தை அடைந்தனர். மற்றவர்களால் பின்பற்ற முடிய வில்லை.
பரமாத்மா இதற்கும் ஒரு வழி ஏற்படுத்தினார். அது என்ன என்பதை மீண்டும் தொடர்வோம் ..
A short recap from the previous posts…..
So what is the primary objective of the Pramathmaa ? He wants all the Jeevathmaas to get rid off their pain and wants them to be happy. Where, in this Universe all Jeevathamaas can get happiness uninterruptedly ? It is only when they join Him, and get Eternal peace and happiness, ie attain a state called Motsham, a point of relief from the worldly miseries. So The Paramathma and Jeevathmaa, have the same goal and objective.
Let us see what will happen, if the Jeevathmaas do not attain Motsham. Then they have to take birth and re-birth again and again. If we think, that we are happy here in this world, the happiness does not last for ever; everything here is temporary in nature and the happiness and sorrow keep bombarding us every day or for that matter, every moment. Again the quantum varies for both happiness and sorrow and the changes, many times, are unpredictable. Another factor is that after the current birth, we do not know what is going to be our next birth – as per vedas, we could be human beings, animals, insects or plants. As per Vedas, the Jeevathma’s next birth could be a human being, in case the jeevathma thought of hurting someone – no deeds here, only the thought process; if the jeevathma hurts another person through words, then the likely re-birth would be either an animal or an insect; if the jeevathma has really hurt someone physically, then the rebirth would be a plant. Attaining motsham or reaching Him, is very rare for all others, except the human beings.
So what drives the happiness or sorrow for the Jeevathmaas. It is their Karmas, the results of the way they live, during the current life and in their previous births. If they have followed the Rule book, the Vedas, good karmas (Punya) accumulate, otherwise bad karmas (Pavam or sin) accumulate.
How will Paramathmaa help the Jeevathmaas to get rid of their Karmas? As a first step Paramathmaa gives a BODY with Limbs, mind and intelligence to the Jeevathmaas and He expects us, the Jeevathmaas, to use their body, mind and limbs to ‘do’ things as given in the Vedas to get rid of their Karmas. This is the first big favour which Paramathma has done to the Jeevathmaas.
Unfortunately, us, the Jeevathmas did not know what was right and what was wrong, what should do with our body, hands and legs, mind and heart. So the Paramathma decided to create the Vedas to teach us what would be right and what would be wrong. So the act of creating the Vedas is the next big help rendered by Brahmam or Paramathma. He thought that Jeevathmas would read the Vedas, understand them and live like what was given there and would reach Motsham.
The Vedas are in Sanskrit, which is not known to many people. So only a few who knew Sanskrit, tried to follow and got the benefit of attaining Motsham. Now He Himself took some Avathars and lived in this world to show the jeevathmas on how to live as per the Vedas. He assumed that Jeevathmas would understand and reach Him or Motsham. Among the many avathaars, the ten most important avathaars are often referred to as Dasaavathaaram. Rama, Krishna, Vamana, Narasimha, Balarama, Parasurama, Macha, Koorma Varagha and Kalki are the Dasaavathaars. The avathaars are not only ten, they are more. In Bhagavatha Puranam, there are 27 avathaars mentioned.
Taking Multiple Avathars and demonstrating the way to live, is another big favour done by Brahamam or Paramathma to help the Jeevathmas. Even then only a few followed and succeeded in the mission of reaching the Motsha.
Even for this, Paramathmaa extended His support in His own way and let us see what it is in the next weblog.