திருவாய்மொழியின் பத்து பத்துக்கள் / Ten Tens of Thiruvaaimozhi

For English Version, please click here, thanks

தொடர்ச்சி

சென்ற பகுதியில் திருவாய்மொழியின் சிறப்புகளைப்பார்க்க ஆரம்பித்தோம்.  அதன் தொடர்ச்சியை இங்கே காண்போம்.

பத்து பத்துகள்

திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், பகவான் ஆழ்வாருக்கு பற்பல குணநலன்களைக் காட்டுகிறார்.

  1. அவன் மிக உயர்ந்தவன்,
  2. அவனே எல்லாவற்றுக்கும் காரணம்,
  3. நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான்,
  4. அவனே எல்லாற்றையும் நடத்திக் கொடுக்கிறான்,
  5. மிகவும் கருணை உடையவன்,
  6. நம் எல்லோருக்கும் சரணாகதி அளிக்க வல்லவன்,
  7. சக்தி உடையவன், 
  8. நாம் விரும்பியவைகளை அடையச் செய்பவன்,
  9. நம் இடர்களில் இருந்து காப்பாற்றுபவன், 
  10. நம் கவலைகளை தீர்க்க வல்லவன்.   

சற்று விரிவாக கீழே,

  • முதல் பத்து – பரத்துவம், அவன் பெரியவன், மிகவும் மேன்மையானவன், அவனைவிட மேன்மையானவனோ, மேன்மையான பொருளோ எதுவும் கிடையாது.   உயர்வற உயர்நலம் உடையவன் (1.1.1).
  • இரண்டாம் பத்து – காரணத்துவம் –  இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் அவனே காரணம். சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி (2.1.11)
  • மூன்றாம் பத்து – வியாபகத்துவம் – எங்கும் உளன் கண்ணன் – பரமாத்மா எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்து உள்ளான். “வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுது இயன்றாய்” (3.1.5) என்றும் “இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ  கண்ணனைக் கூவுமாறே(3.4.1) என்றும் சொல்வது .
  • நான்காம் பத்து – நியந்த்ருத்துவம்   – அவனன்றி ஓர் அணுவும் அசையாது – பரமாத்மாவே இந்த அண்டகடாகத்தில், அனைத்து நிகழ்வுகளையும் நிகழ்த்திவைப்பவன்.  “வீற்றிருந்து ஏழுலகும்  தனிக்கோல் செல்ல, வீவில்சீர், ஆற்றல்மிக்கு ஆளும்” (4.5.1)
  • ஐந்தாம் பத்து –  காருணிகத்துவம்   அல்லது சௌலப்பியம் – மிகவும் எளிமையானாவான் – அவனை அணுகுவது மிகவும் எளிது. அவனுடைய அளவற்ற கருணையினாலேயே  “பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி, மெய்யே பெற்றொழிந்தேன்” (5.1.1) என்கிறார், ஆழ்வார்.
  • ஆறாம் பத்து – சரண்யத்துவம் – பெருமையும், எளிமையும் ஒரே இடத்தில இருக்கிறபடியால், நாம் எல்லோரும் சரண் அடைய மிகவும் தகுதியானவன்.  ஐந்தாம் பத்திலேயே, ஆழ்வார் நான்கு சரணாகதிகளை கேட்டுள்ளார். அவையாவன,
    • சிரீவரமங்கலநகர் அல்லது வானமாமலை (நோற்ற நோன்பு 5.7),
    • திருக்குடந்தை அல்லது கும்பகோணம் (ஆராவமுதே 5.8),
    • திருவல்லவாழ் (மானை நோக்கு 5.9),
    • விபவாவதாரத்து கண்ணனிடம் (பிறந்தவாறும், 5.10).
  • ஆனால், ஆறாம் பத்தில், திருவேங்கடமுடையானிடம், பிராட்டியை முன்னிட்டு கேட்டுக்கொண்ட சரணாகதியே பலித்தது.   “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” (6.10.10).
  • ஏழாம் பத்து –  சக்தத்துவம் (சக்தி உள்ளவன்) – நம் எல்லோருக்கும் சரணாகதி கொடுத்து காப்பாற்றும் சக்தி படைத்தவன்.  இதனை பெருமாள், ஆழ்வாருக்கு “ஆழியெழ, சங்கும் வில்லும் எழ” (7.4) என்ற பதிகத்தில், தன்னுடைய வீர தீர பராக்கிரமங்களை காட்டுகிறார்.
  • எட்டாம் பத்து – சத்யகாமத்துவம் – விரும்பத்தக்க குணங்கள் எல்லாம் படைத்தவன் அவன்.  அவன் ஆசைப்பட்டு அடையவேண்டியது எதுவும் இல்லை, எல்லாவற்றையும் அடைந்தவன். தேவிமார்களோடு அவன் இருக்கின்றபடியாலும்,  தேவிமார்கள் அனைத்து ஜீவாத்மாக்களையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து நமக்காக அவனிடம் சிபாரிசு செய்வதாலும், அவன் நமக்கு வேண்டிய கருணையை காட்டி நாம் விரும்பியதை அடைய செய்பவன்; “நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்“, (8.6.1)
  • ஒன்பதாம் பத்து – ஆபத்சகத்துவம் – எல்லா இடர்களில் இருந்தும் நம் எல்லோரையும் காப்பாற்றும் வல்லமை பெற்றவன் ;   “காய்சின வேந்தே கதிர்முடியானே,  கலிவயல் திருப்புளிங்குடியாய் காய்சின ஆழி, சங்கு, வாள், வில், தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே”  (9.2.6) என்று புளிங்குடி பெருமானிடம் ஆழ்வார் சொன்னது போல், எல்லா இடங்களில் இருந்தும் காப்பாற்றுபவன் அவனே.   அதேபோல், “அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே” (9.3.3) சொன்னதிலும் ஹரியை நோய்கள் அறுக்கும் மருந்து என்று ஞானிகள் கண்டுகொண்டனர்.
  • பத்தாம் பத்து – ஆர்த்திஹரத்துவம் – நம்முடைய கவலைகளை எதிர்பார்ப்புகளை, துடிப்புகளை, தீர்க்கவல்லவன்.   வழித்துணை இல்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையும் என்பது  “மற்று இலன் அரண் ” (10.1.7) என்ற திருமோகூர் பதிகத்தில் உள்ள பாசுரத்தின்  வழியும், “தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச் சொன்னோம்” (10.2.3) என்ற திருவனந்தபுரம் பதிகத்தில் உள்ள பாசுரத்தின் வழியும், “சூழ்ந்ததனில் பெரிய  என் அவா  அறச் சூழ்ந்தாயே” (10.10.10) என்று தன்னை ஆட்க்கொண்டதை சொன்னதில் இருந்தும், இந்த இறுதி பத்து நம் கவலைகளை தீர்க்க வல்லது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பத்திலும் பத்து வகையான குணநலன்கள்.   ஒவ்வொரு பதிகத்திலும் பல வகையான குண நலன்கள். 1102 பாசுரங்களில் ஆயிரம் ஆயிரம் குணநலன்கள் என திருவாய்மொழி முழுவதும் அவனின் குணநலன்களே.   அந்த குண நலன்களை ஆழ்வாருக்குக் காட்டியவனும் அவனே.

இன்னொரு வகையில் பத்து பத்துகள்

ஆழ்வாரிடத்தில் ஏற்பட்ட நிலையின் மாற்றங்களைக்கொண்டு, கீழ்கண்ட வகையில் பத்து பத்துக்களையும் பார்க்கலாம் என்று நம்  ஆச்சாரியார்கள் சொல்வார்கள்.

முதலில் தனக்கு, பரமாத்மா பற்றிய அறிவை அளித்தான் என்கிறார். அதனால் தான் அடையவேண்டியது முக்தி அல்லது மோக்ஷம் என்று உணர்கிறார். அதற்காக பெருமாளுக்கு மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைகிறார். பரமாத்மா தவிர மற்ற விஷயங்களில் உள்ள ஆசைகளை குறைக்கிறார். பெருமாளின் மேல் உள்ள பக்தியை மேலும் வளர்க்கிறார். பக்தியால் அவனை அடைவது கடினம் என்று அவன் மூலமே அவனை அடைய அவனிடம் சரணாகதி கேட்டு அதனையும் பெற்றார். அதற்கு பிரதி உபகாரமாக தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகிறார். ஜீவாத்மாக்கள், பெருமாளுக்கு சேவை செய்து அடிமையாக இருப்பதே உகந்தது என்பதை உணர்கிறார்.   ஆழ்வார் தான் எப்போது முக்தி அடைவது என்று கவலை அடைந்ததற்கு, பெருமாள் அருளியதையும், தன்னுடைய கவலைகள் நீங்கி கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை சொல்லி முடிக்கிறார்.

அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற  ஆச்சாரியார் எழுதிய ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் இருந்தும், வாதிகேசரி அழகிய மணவாளப்பெருமாள் ஜீயர்    எழுதிய  த்ரவிடோபநிஷத் சங்கதி மற்றும் வேதாந்த தேசிகர் என்ற ஆச்சாரியார் எழுதிய த்ரவிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி,  என்ற இரண்டு நூல்களில் இருந்தும் இவைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

  • ஞப்தி – ஞப்தி என்றால் பகவத் ஞானம்.   முதல் பத்து, முதல் பதிகத்திலேயே பகவத் ஞானம் அடைந்ததை (மயர்வற மதி நலன் அருளினன் 1.1.1)  என்பதாலும், மற்ற பதிகங்களால் அதனை மறவாமல் இருந்தார் என்பதையும் அறியலாம்.
  • முக்தி – ஞானம் அடைந்ததால், அடையவேண்டியது எது என்பதை ஆழ்வார் உணர்ந்தார்.   அடைய வேண்டியது மோக்ஷம் அல்லது முக்தி என்பதை “நின்  செம்மா பாதபற்புத்  தலை சேர்த்து”  (2.9.1) என்பதன் மூலம் அவர் உணர்ந்ததை, நமக்கு கூறுகிறார்.
  • விருத்தி – முக்திக்கு பலன், மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைதல். “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்” என்று (3.3.1) பாசுரத்தில் கூறுவதில் தொடங்கி, விருத்தி பற்றி அந்த பதிகம் முழுவதும் ஆழ்வார் நமக்கு உரைக்கிறார்.
  • விரக்தி  – மேலும் மேலும்   பகவானுக்கு கைங்கர்யம் செய்ய விரும்புவதால், மற்ற விஷயங்களில் ஈடுபாடு குறைதல். இதை அந்நிய ருசி ஒழிதல் என்று கொள்ளலாம்.  இது நாலாம் பத்து முழுவதிலும் சொல்லப்படுகிறது. “ஒருநாயகமாய் ஓட, உலகுடன் ஆண்டவர்” (4.1.1) என்று தொடங்கும் நாலாம் பத்தில்,  மற்ற அனைத்து ஆசைகளும் ஒழிந்து விட வேண்டும் என்ற கருத்து மேலூங்குகிறது.
  • பக்தி (காதல் வளர்தல்) – மூன்றாம் பத்தில் பரமாத்மாவுக்கு செய்ய விழையும் கைங்கர்யம் விருத்தி அடைவதின் மூலமும் நான்காம் பத்தில் மற்ற விஷயங்களில் விரக்தி அடைவதின் மூலமும், ஐந்தாம் பத்தில் பெருமாள் மேல் உள்ள பக்தி மேலும் மேலும் வளர்கிறது.   இது மாசறு சோதி, ஊரெல்லாம் துஞ்சி, எங்ஙனேயோ  அன்னை மீர்காள், (5.3, 5.4, 5.5) என்கின்ற பதிகங்களின் வழியே காலம் போகப் போக காதல் மிகுவது தெரிகிறது.
  • பிரபத்தி – இரண்டாம் பத்தால் முக்தி அடைவது என்று உணர்ந்த பின், பெருமாளின் மேல் உள்ள பக்தியை அடுத்தடுத்த பத்துக்களில்  வளர்த்து, அவனை அடைய வழி கண்டு கொள்வதே ஆறாம் பத்தில் ஆழ்வார் உணர்வது.  பக்தி மார்க்கத்தை விட, அவனைக் கொண்டே அவனை அடைவது என்பதே சாத்தியம் என்பதைப் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு திருவேங்கடமுடையானிடம் சரணாகதி (புகலொன்றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே, 6.10.10)  கேட்டு ப்ரார்த்திபதின் மூலம், ஆழ்வார்  நமக்கு முக்திக்கு வழி அவன் திருவடிகளை அடைவதே என்று காட்டுகிறார்.
  • சக்தி – பெருமாள்  தன்னுடைய சக்தியை, “ஆழியெழ, சங்கும் வில்லும் எழ” (7.4) என்ற பதிகத்தில் ஆழ்வாருக்குக் காட்டினார். தன்னையே உபாயமாக கொடுத்து சரணாகதி அருளிய பெருமாளுக்கு தான் ஏதாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆழ்வார் நினைத்தபோது, ‘உதவிக்கு கைம்மாறு தனது உயிர் என்று கருதிய உடனே அதுவும் அவனதே, ஆகவே கைம்மாறு ஒன்றுமேயில்லை’ என்று உணர்ந்ததே  ஏழாம் பத்தின் சாராம்சம். இன்கவி பாடிய அப்பனுக்கு, எதுவுமொன்றுமில்லை செய்வது இங்கும் அங்குமே ,  7.9.10).
  • பிராப்தி – இந்த பத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு ஜீவாத்மாவைப் பற்றி விளக்குகிறார். ஜீவாத்மஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறார். பரமாத்மாவிடம் அடிமைத்தனம் செய்வதே ஜீவாதாமாவிற்கு உகந்தது என்று “கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து“,  (8.8), கருமாணிக்க (8.9) நெடுமாற்கு அடிமை, (8.10) என்ற பதிகங்களின் மூலம் ஆத்மா எப்படிப்பட்டது என்று பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டுகிறார்.
  • பூர்த்தி – ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை முழுமையாக உணர்ந்தபின், சுவாமி நம்மாழ்வார், தான் எப்போது அவனிடம் சென்று அவனுக்கு கைங்கர்யம் செய்வது என்று மிகவும் துடித்து  ஒன்பதாம் பத்தில் பாசுரங்கள் பாடினார்.
    • பதினான்கு வருஷம் என்று பரதனுக்கு சொன்னது,
    • சீதைக்கு பத்து மாதம் என்பது போல் ,
    • ஒரு நாள் என்று ஆயர் பெண்களுக்கு வாக்கு கொடுத்தது,
    • பத்து வருஷம் என்று யசோதைக்கு சொன்னது போல், தனக்கும் ஒரு நேரம் அல்லது காலம் கொடுக்க வேண்டும் என்று பெருமானை ஆழ்வார் கேட்டதற்கு,  “சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்  மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் ” (9.10.5) என்று பெருமான் தனது சரண்ய முகுந்தத்தை ஆழ்வாருக்குக் காட்டினான்.
  • ஆர்த்திஹரத்துவம் – ஆழ்வார் தன் வாழ்நாள் முடியம் போது தனக்கு வழித்துணையாக வருவதற்கு திருமோகூர்  ஆப்தனை பற்றுகிறார் (10.1).    பின்னர்  திருமாலிரின்சோலை அழகன், “கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே” (10.7.2), என்று  தன்னை முழுவதும் உண்டான் என்கிறார்.  இறுதியாக, திருப்பேர் நகர் பெருமானை அப்பகூடத்தான் , “இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்” (10.8.6) என்று கூறி தனது  கோரிக்கையை பெருமான் நிறைவேற்றியதை கூறுகிறார்.

இப்படியாக ஒவ்வொரு பத்திலும் ஆழ்வாருக்கு ஏற்பட்ட மாற்றங்களை அவரது பாசுரங்களை துணையாகக்கொண்டே நமக்கு காட்டியுள்ளார்கள். மேலே குறிப்பிட்டுள்ள பாசுரங்கள் ஒரு உதாரணத்திற்காக சொல்லப் பட்டவையே தவிர, அந்தந்த பதிகங்களில், பத்துக்களில், தொடர்புள்ள கருத்துக்கள் நிறையவே காணலாம்.

திருவாய்மொழி பற்றி, இன்னும் பற்பல ஆச்சர்யமான தகவல்கள் உள்ளன என்று உணர்கிறேன்.  அவைகளைப் பற்றி  பின்னர் வலைப்பதிவுகளில் பார்க்கலாம்.

====================================================

Introduction

We have started looking at the glories of Thiruvaimozhi in our previous weblog. We will continue the same in this weblog also.

Ten Tens

Paramathmaa has shown many of His glories to Swami Nammazhvaar in Thiruvaimozhi and they are as below.

  1. He is the Greatest, 
  2. He is the reason for everything,
  3. He proliferates everywhere,
  4. He is the person behind every action,
  5. He is very kind,
  6. He is capable of taking all of us abode,
  7. He is the strongest,
  8. He can fulfill all our desires,
  9. He saves us from our difficulties and
  10. He can resolve all our worries.   

Let us discuss them in a little bit more details.

  • First Ten (Muthal Pathu) –Parathuvam” – He is Great, He is Supreme, there is no other person or thing in this Universe or anywhere, which is superior to Him  “Uyarvara Uyar Nalam Udaiyavan(1.1.1)
  • Second Ten (Irandaam Pathu) – “Kaaranathuvam” – He is the reason for the existence of all living and non-living elements / things (Jeevathmaas, please note that all non-living things are also classified as Jeevathmaas in Vaishnavism). “Soraatha epporutkum aathiyaam sothi” (2.1.11)   
  • Third Ten (Moondraam Pathu) – “Vyapagathuvam” – He is everywhere. Paramathmaa spreads Himself in every part of this universe, not thinly, but densely occupying every bit completely. Varunthaatha gnanamaai varambu indri muzhuthu iyandraai” (3.1.5) and “igazhvil, ivvanaithum Kannanai Koovumaare (3.4.1)
  • Fourth Ten (Naangaam Pathu) – “Niyanthruthuvam”  – Nothing will move without His desire.  He is the one who makes things happen in this universe. “Veetru irunthu Ezhu ulagum thanikol sella veevilseer, aatral mikku aalum” – 4.5.1
  • Fifth Ten (Ainthaam Pathu) – Kaarunikathuvam or Sowlabhyam – He is very simple and very easy to approach.   Azhwaar in 5.1.1 says “Poiyee kaimai solli purame purame aadi, meiye petru ozhinthen”, meaning “I have told lies and acted very nicely in front of Him and He is so kind that Azhwaar got all true good things”.
  • Sixth Ten (Aaram Pathu) – Saranyathuvam – He is the most eligible person to whom we can surrender ourselves fully, as He is both great as well as simple. Azhwaar in the Fifth Ten (Ainthaam Pathu) has surrendered himself to the Chief Deities at various locations in four consecutive Pathigams, and they are
    • Sirivaramangala nagar or Vaanamaamalai, as it is called today (Notra Nonbu 5.7)
    • Thirukudanthai or Kumbakonam, as it called today (Aaraavamudey, 5.8)
    • Thiruvallavaazh, a divya desam in Kerala (Maanai Nokku 5.9)
    • Sri Krishna in Vibhavaavathaaram (One of the five states in which Paramathmaa  exsit) (Piranthaavaarum 5.10)
  • But Azhwaar did surrender one more final time, to the Chief Deity of Thiruvengadam, by aligning himself with Piratti (Sri Mahalakshmi) in this Sixth Ten, which became fruitful. Un adi keezh amarnthu pugunthene” (6.10.10) 
  • Seventh Ten (Ezhaam Pathu) – Sakthathuvam (Has Power) – He has the power and ability to give shelter to each and everyone of us and take us abode.   This He has shown to Azhwaar inaazhi ezha, sangum villum ezha” pathigam (7.4) by revealing the various heroic mighty activities that He had undertaken in the past and achieved them successfully.
  • Eight Ten (Ettam Pathu) – Satya Kamathuvam – He has all the desirable glories and there is nothing which He has not achieved or attained.  In short, He has everything. Since He is always with Thaayars (Pirattiars) and since the Piratiaars always want to support us, the Jeevathmaas, as we are their children, and they always recommend us to Him for all the good things. He shows utmost kindness and helps us to get whatever we want.  “Nalla arulgal namake thanthu arul cheyvaan” (8.6.1)
  • Ninth Ten (Onbathaam Pathu) – Abathsahathuvam – He can protect all of us from all difficulties.  “Kaichina Venthey, kathir mudiyaane, kalivayal Thirupulinkudiyaai, kaichina aazhi, sanghu, vaal, vil, thandu enthi em idar kadivaane” (9.2.6) meaning that He, who is giving us dharsan in Thirupulinkudi, a town near Tirunelveli,  can protect us with his Disc, Sword, Conch, Bow and Katha. In the same way, “Arinthanar ellam ariyai vanangi arinthanar noigal arukkum marunthey”, (9.3.3) meaning the knowledgeable people knew that Hari can cure all diseases.
  • Tenth Ten (Pathaam Pathu) – Arthi Harathuvam – He will be able to fulfill all our expectation and desires. He will be able to cure our difficulties.   When we feel that we do not have support on our way to the eternal world, He will come along with us, like what Thirumogur Aptan or Kalamega Perumal, the chief deity in Thriumogur did for Azhwaar.  This can be seen from the hymn in Thirumogur Pathigam (10.1.7) “matru ilan aran”. Azhwaar has also mentioned “Theerum Noi Vinaikal ellam thinna naam sonnom” in the hymn in Thiruvananthapuram (10.2.3).  Azhwaar has also narrated his own experience when he mentions “Soozhnthathanil periya en avaa ara soozhnthaaye”.  With these samples, we can understand that this final ten is about His abilities to heal our difficulties.

Thus Paramathmaa or Perumal has shown His glories in each and every hymn. Each hymn highlights one of the glories. Each subsection (Pathigam), demonstrates many of His glories Each Pathu has 100s of His glories.   The entire Thiruvaimozhi contains 1000s of His glories.  And it is only Him, who  showed all these glories of  Himself  to Azhwaar.

Ten Tens in another perspectiive

Our acharyaars used to describe the Tens (Pathukkal), based on the changes that had happened to Namazhwaar, while compiling Thiruvaimozhi.   This is based on the following titles by three different Acharyaars :

  • Azhagiya Manavaala Perumaal Nayanaar – Aacharya Hrudhayam
  • Vathikesari Azhagiya  Manavaala Perumaal Jeeyar – Dravidopanishad Sangathi
  • Vendantha Desikan – Dravidopanaishad Thaathparya Rathnaavalli  

First of all, Azhwaar got the knowledge about Paramathmaa.  Because of that knowledge, he understood that his goal should be to get Mukthi or Moksham.  So he wanted to do more and more service to Paramathmaa.  He reduced his interests and involvement in all other matters, other than Paramathmaa.  These had helped him to increase his love and affection (bakthi) towards Paramathmaa. He realised that it would be difficult to reach him by practising the above and hence he surrendered himself totally to Him and understood that He became the route to reach Him.   After that, Azhwaar felt that he did not have anything to return to him for the favour he received from Him.   Perumaal convinces Azhwaar that all Jeevathmaas should continuously keep doing service to Paramathmaa. Then Azhwaar got worried on when he would get mukthi and Perumaal answered his prayers and Azhwaar got rid of all his worries and all his requests were answered by Him.   We can see the above with little bit more details as below.

  • Gnapthi – Gnapthi means Knowledge – Knowledge about Paramathmaa. In the first hymn of the first Pathigam of the first Ten (Muthalaam pathu) Azhwaar got the Bhagwath  knowledge, (Knowledge about Paramathmaa) as per “Mayarvara Mathi nalan arulinan” (1.1.1). And in every other opportunity, Azhwaar made sure that he did not forget the Bhagavath  Knowledge and he had mentioned the same in many other subsequent hymns.
  • Mukthi – Since Azhwaar understood the Paramathmaa knowledge, he knew what he needed to achieve.  He knew that he should get mukthi or reaching abode by avoiding rebirth. This can be seen from “nin semma paadhaparpu thalai serthu” (2.9.1).
  • Viruthi – The benefit of achieving Mukthi is to increase our desire to do more and more service to Paramathmaa.   This can be seen from “Ozhivil kaalam ellam udanai manni, vazhuvilla adimai seiya vendum naam” in 3.3.1, where Azhwaar wishes to do more and more service to Thiruvengadamudaiyaan.
  • Virakthi – Once Azhwaar started to increase his desire to do more and more service to Paramathmaa, his desire for other worldly things get reduced.  This is called in our tradition as “Anniya Rusi Ozhithal”, meaning “Elimination of other interests from our mind”. This can be seen from “Oru Naayagamaai Oda, ulagudan aandavar” 4.1.1, where Azhwaar highlights the importance of eliminating all other interests other than the interests and involvement towards Paramathaa.
  • Bakthi – (Developing Affection) – While compiling the third ten (Moondraam Pathu), Azhwaar had started increasing his desire to do more and more service to Paramathmaa. Similarly, when he compiled the fourth ten (Naangaam Pathu), he had discontinued interests and involvement in all other worldly matter.  These result in increased love and affection towards Paramathmaa, when he was compiling fifth ten (Ainthaam Pathu). This can be seen from the following pathigams :
    • Maasaru Sothi (5.3) ; 
    • Oorellam Thunji (5.4) ; 
    • Enganeyo Annai Meergaal (5.5).  
  • Prapathi -Once Azhwaar started doing the second Ten (Irandaam pathu), he knew that he needed to achieve Moksham or Mukthi, he increased his efforts in terms of building his love and affection towards Paramathmaa in the subsequent pathigams, namely, the third, fourth and the fifth, in order to find the route to Moksham or Mukthi.  In this sixth ten (Aaraam Pathu), Azhwaar realised that Prapathi, is a more practical alternative to achieve Moksham or Mukthi, compared to practising Bakthi or love and affection towards Him.  Prapathi means, “He Himself is the route to achieving Him”, in other words, by surrendering ourselves to His Holy feet, that would take us to Him or Moksham or Mukthi. This can be seen from “Pugal Ondru Illa Adiyen, un adi keezh amarnthu pugunthene” (6.10.10), where Azhwaar surrendered totally to Thiruvengadamudaiyaan by inviting Mahalakshi (Piratti or Thayaar) to support him and thus showing us that His holy feet is the way to attain Mukthi or Moksham.
  • Sakthi – In this Seventh Ten, Azhwaar realised and felt that he has nothing to offer, in return to Paramathmaa for the great favour, He has done to Azhwaar. As we mentioned earlier, Paramathmaa had shown all his greatness, power and might in the “aazhi ezha, sangum villum ezha” (7.4) pathigam and Azhwaar wanted to offer Him a return gift. He realised that he did not have anything to offer, as everything including Azhwaar’s soul and body all belonged to Paramathmaa and it would not be fair to give Him back what He had already owned.  This can be seen from “in kavi paadiya appanuku, aethu ondrum illai seivathu ingum angum” (7.9.10).
  • Praapthi – In this ten, Paramathmaa or Perumal describes to Azhwaar what Jeevathmaas like him could do, by explaining the responsibilities and authorities given to Jeevathmaas in the Vedham,  when Azhwaar expressed his inability to do anything in the previous ten, for all the good things showered onto him by Paramathmaa. Jeevathmaas should always do services to Paramathmaa and live as slaves to Paramathmaa.  This can be seen from the pathigams, “Kanngal sivanthu, periya vaai, vaaiyum sivanthu” (8.8), “Karumanika” (8.9) and Nedumarku adimai (8.10) and hence in this ten, Azhwaar understands what is Jeevathmaa and what Jeevathmaas should do.
  • Poorthi –    Having understood his role as Jeevathmaa and his responsibilities, Azhwaar in this ten, wanted to do the service to Paramathaa and hence in this ten he is urging Paramathmaa to identify the time from when he could do the kainkariyam in Srivaikuntham, or in other words, when he would get his moksham or mukthi. Throughout this ten, Azhwaar was urging Paramathaa to set a date for him to attain Him. The examples where Paramathmaa had set dates for others :
    • Sri Rama had promised that he would return after 14 years to Bharathan, his brother in Ramayanam;
    • 10 months  for Sita  ;
    • Sri Krishna had promised to his girl friends in Ayar Padi, that he would return the next evening;
    • Sri Krishna had promised to his mother Yasoda that he would return after 10 years.

After understanding the concerns of Azhwaar, Paramathmaa or Perumal had promised Azhwaar that He would give Mukthi or Moksham or Srivaikuntham, to those who surrendered to him, (like Azhwaar) when they die.   This can be seen from “saranamaagum thanathaal adainthaarkellaam maranamaanaal vaikuntham kodukkum piran” (9.10.5).

  • Aarthiharathuvam  – In this ten, Azhwaar gets what he wanted from Him.  Azhwaar asked for support from the chief deity of Thirumoghur Aaptan or Kalamegha Perumal. (10.1), to accompany Azhwaar, when Azhwaar takes the final journey to Sri Vaikuntham.   Later Azhwaar found that the chief deity of Thirumaliruncholai Azhar had consumed him fully as it can be seen in “koneyaagi nindru ozhinthaan ennai mutrum uyir unde” (10.7.2). Finally Azhwaar said that Thirupernagar chief deity, Appakkudathaan, came into the heart of Azhwaar and occupied the full heart space, without having any space for others.  This can be seen as “indru vanthu iruppen endru en nenju niraya pugunthaan” (10.8.6).

From the above, we can see, how the Azhwaar’s state had changed from each ten. Whatever hymns, mentioned above, are only examples and there could be many more hymns that could reflect these points both within the hymns and in the respective tens.

We will try to see in our coming weblogs many more facts and other fascinating aspects of Thiruvaimozhi which we have not seen here.

2 Comments on “திருவாய்மொழியின் பத்து பத்துக்கள் / Ten Tens of Thiruvaaimozhi

  1. பத்துப் பத்து பற்றிய இரண்டு விதமான விளக்கங்கள் தந்த விதம் நன்று. ஒருமுறை படித்தால் நினைவில் நிற்பதில்லை. அடிக்கடி படிக்கவேண்டும். நன்றி…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading