A Simple Devotee's Views
திருமகள் நாச்சியார் ஸமேத மணிக்கூடநாயகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி.
திவ்யதேசம் | திருமணிக்கூடம் | |||
மூலவர் | வரதராஜப்பெருமாள் / மணிக்கூடநாயகப் பெருமாள் | |||
உத்ஸவர் | கஜேந்திரவரதன் | |||
தாயார் | திருமாமகள் நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார் கிடையாது) | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 96554 65756 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
கோவில் பற்றி
இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப் பட்டுள்ளது. திருநாங்கூருக்கு வந்த 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப்
பெருமாள் ஆவார்.
தீராத நோய்கள் எல்லாம் கூட திருமணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை.
ஸ்தல வரலாறு
எம்பெருமான் கூர்ம அவதாரம் எடுத்தபோது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார்.
அமிர்த கலசத்தை அசுரர்கள் பிடுங்கி ஓட, எம்பெருமான் மிக அழகுடைய பெண் வடிவில் மோகனியாக அவதாரம் எடுத்து அசுரர்களிடம் இருந்து அமிர்தத்தைப்பெற்று, அதனை முதலில் தேவர்களுக்கு கொடுத்தார். ராகு என்ற அசுரன் சூரியன், சந்திரன் என்ற இரண்டு தேவர்களுக்கு நடுவில் வர, எம்பெருமானுக்கு அவர்கள் அவனை காட்டிக்கொடுக்க, மோகினி, அந்த அசுரனை தன் கையில் உள்ள அகப்பையால் தட்ட அந்த அசுரன் தலையில்லாத ராகு என்ற கிரகமாக மாறி, சூர்ய சந்திர கிரஹணங்கள் வர காரணமாக உள்ளார். அதனால் பயந்த சூரியன் திருத்தெற்றியம்பலம் திவ்யதேசத்தில் உள்ள சூரிய புஷ்கரணி என்ற திருக்குளத்திலும் சந்திரன், இந்த திவ்யதேசமான மணிமாடம் என்ற திவ்யதேசத்தில் உள்ள சந்திரபுஷ்கரணி என்ற திருக்குளத்திலும் மறைந்துகொண்டனர். அவர்களுக்கு எம்பெருமான் அருள் புரிந்தார்.
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் (பெரிய திருமொழி, 4.5) கொண்டு இந்த திவ்யதேச எம்பெருமானை மங்களாசாசனம் செய்து உள்ளார்.
திருமணிகூட எம்பெருமான் இராமரே என்று பாடும் போது, கரு மகள் இலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து தன்மேல், வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை, (பெரிய திருமொழி 4.5.5) என்று இராவணனின் தங்கையான சூர்ப்பனகையின் மூக்கு, காது இவற்றை அறுத்தவர் இராமர் என்று பாடுகிறார். இதற்கான விளக்கத்தில், “ராமஸ்ய தக்ஷிணோ பாஹு” என்றபடி இராமபிரானுக்கு லக்ஷ்மணன் வலக்கை என்ற படியால், கையாகிய லக்ஷ்மணனுடைய செயலை இராமன் செய்ததாகச் சொல்லுதல் தகுமே. பலராமன் செய்த ப்ரலம்பாஸுர வதத்தைக் கண்ணபிரான் செய்து அருளியதாக சொல்வதும், இதுபோன்றதே ஆகும்
நாம் ஸந்தேஹப்படுதல், நிச்சயித்தல் என்ற எல்லாவித ஞானத்திற்கும் காரணம் எம்பெருமானே. உலகத்திற்கு மெய்யும் பொய்யும் அவனே. கைம்மாறு கருதாமல் பூமிக்கு வழங்கும் மேகங்களும் மற்றும் மழை முதலியவைகளும் அவனாலேயே. இப்படி எல்லாவற்றையும் இயக்குபவன், எம்பெருமான் நாங்கூர்த் திருமணிக்கூடத்தான் என்று ஆழ்வார் பெரிய திருமொழி (4.5.8) பாசுரத்தில் கூறுகிறார்.
சாஸ்திரங்களில் செய்யக்கூடாதென்று மறுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதால் வரும் பாவங்களும், சாஸ்திரங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ள நற்காரியங்களைச் செய்கிறதால் வரும் புண்ணியங்களும் எம்பெருமான் அருள்வதே ஆகும். உலகில் உள்ள எல்லா சுகங்கள் தொடங்கி, மோக்ஷம் வரை எல்லா சுகங்களும் அவன் அருள்வதே ஆகும். மனங்கலங்கி இருப்பதால் வரும் கோபமும், தெளிந்து இருப்பதால் கிடைக்கும் அருளும் மற்றும் ஸத்வ ரஜோ தமோ குணங்களும் அவன் அளிப்பவையே. இப்படி எல்லாவற்றையும் இயக்குபவனாக எம்பெருமான் நாங்கூர்த் திருமணிக்கூடத்தில் உள்ளான். அரி, அயன், அரன் என மூன்று மூர்த்திகளிருந்தாலும் அடியவர்கள் அடையவேண்டிய மூர்த்தி விஷ்ணுவே என்று தெளிந்து மஹர்ஷிகளும் தேவர்களும் வந்து சேருமிடம் இது என்று ஆழ்வார் பாடுகிறார். (பெரிய திருமொழி, 4.5.9)
Google Map
திருமணிக்கூடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருமணிக்கூடம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்