A Simple Devotee's Views
சமுத்ரதனயா தாயார் ஸமேத தேவநாயகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருத்தேவனார்தொகை | |||
மூலவர் | தெய்வநாயகப் பெருமாள் | |||
உத்ஸவர் | மாதவப்பெருமாள் | |||
தாயார் | தெய்வநாயகி தாயார். மாதவநாயகி , சமுத்ரதனயாத் தாயார் | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 4364 – 266542 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
கோவில் பற்றி
திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென் கரையில் உள்ளது. இதனை கீழ்ச்சாலை என்றும் கூறுவார்.
தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் சபை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.
திருநாங்கூர் 11 திவ்யதேச பெருமாளாக வந்தவர்களில் இவர் திருவிடவெந்தை (திருவடந்தை) எம்பெருமான் ஆவார்.
உற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப்பெருமாள் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. மூலவருக்கு உண்டான தெய்வநாயகன் என்னும் திருநாமம் 108 திவ்யதேச எம்பெருமான்களில் நடுநாட்டுத் திருப்பதியான திருவஹிந்திரபுரத்துக்கும் பாண்டிநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான
வானமாமலைக்கும் (திருச்சீரவரமங்கை) உண்டு.
ஸ்தல வரலாறு
வைகுந்தத்தில், தனக்கு கிடைத்த மஹாலக்ஷ்மி மாலையை, துர்வாசர், இந்திரனுக்கு ஸ்ரீதேவி நாச்சியாரின் பிரசாதமாகக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக தன்னுடைய யானையான ஐராவதத்தின் மேல் வீசி எறிந்தான். மஹாலக்ஷ்மி திருமாலின் திருமார்பில் வாழ்பவள், அவளிடம் இருந்த வந்த பிரசாதத்தை இந்திரன் இகழ்ந்ததாகவும், அதனால் அவனுடைய செல்வம் எல்லாம் வற்றி விடவும் துர்வாசர் சாபம் இட்டார். உடனே ஐராவதம் மறைந்தது, அவன் செல்வமும் அழிந்தது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்ட இந்திரனிடம், துர்வாசர், எம்பெருமான் ப்ரஸாதமும் எம்பெருமானும் ஒன்று தான், ஆகவே அவன் இந்த சாபம் தீர எம்பெருமானிடம் தான் செல்லவேண்டும் என்று கூறி மறைந்தார்.
இந்திரன் மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்க, அவரும் அவனிடம் தன் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் செயல் படும் எவர் வீட்டிலும் தானும் மகாலட்சுமியும் தங்க மாட்டோம் என்றும், அவனை திருப்பாற்கடலில் அமிர்தம் கடையும் வரை காத்திருக்க சொல்லி, அப்பொழுது அவன் சாபம் தீரும் என்று, கூடவே, மஹாலக்ஷ்மியுடன் தன்னுடைய திருமண வைபவத்தையும் தரிசிக்கலாம் என்றும் கூறினார். திருப்பாற்கடலைக் கடையும் நேரமும் வந்தது, ஐராவதம் வெளியே வந்தது, மஹாலக்ஷ்மி தாயார் வந்தார். அவளை இந்திரன் போற்ற, அவனுக்கு மறுபடியும் ஒரு மாலை கொடுக்க அவன் அதையும் போற்றி வைத்துக் கொண்டான். அவன் செல்வம் எல்லாம் மீண்டது.
திருப்பாற்கடலில் இருந்த வந்த திருமகளை, திருமால் திருமணம் செய்து கொண்டான். இந்த வைபவத்தை தரிசிப்பதற்கு தேவர்கள் கூட்டம் கூட்டமாக இந்த திருத்தலத்திற்கு வந்ததால், இது திருத்தேவனார் தொகை ஆயிற்று.
இதே போல், திருகோஷிட்டியூர் (104வது திவ்யதேசம் ) என்ற திவ்யதேசத்திலும், தேவர்கள் கூடி பேசி, எம்பெருமானை கிருஷ்ணாவதாரம் எடுக்க எப்படி வேண்டுகோள் விடுப்பது என்பது பற்றி திட்டம்தீட்டினார்கள் என்பதை நினைவில் கொள்ளலாம்.
ஆழ்வார்
திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசத்திற்கு 10 பாசுரங்கள் பாடி உள்ளார். (பெரிய திருமொழி 4.1).
Google Map
திருத்தேவனார்தொகை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம், திருத்தேவனார்தொகை பற்றி