011 திருஆதனூர் Thiruaadhanur

ரங்க நாயகித்தாயார் ஸமேத ஆண்டளக்குமய்யப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருஆதனூர்
மூலவர்ஆண்டளக்கும் ஐயன் / படியளக்கும் பரந்தாமன்
உத்ஸவர் ரங்கநாதர் (அழகிய மணவாளன்)
தாயார்ரங்கநாயகி தாயார் பார்கவி தாயார் கமலவாஸிநி
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 94435 25365

கோவில் பற்றி

இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில்  ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் என எம்பெருமான் புஜங்க சயனத்தில், கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் கொண்டு காட்சி அளிக்கிறார். கர்ப்பகிரகத்தில் எம்பெருமான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ காட்சி அளிக்கிறார்.

மரக்காலைத் தலைக்கு வைத்து இடதுகையில் எழுத்தாணியும் ஏடும் கொண்டுள்ளதால் எம்பெருமானின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் காமதேனுவுக்கும் காமதேனுவின் மகள் நந்தினிக்கும் பிருகு மகரிஷி, அக்னி பகவான், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் எம்பெருமான் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.

இத்தலத்தைக் காமதேனு தன் கன்றுடன் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளது. அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார்.  இது நவக்கிரக தலத்தில் குரு தலமாகவும் விளங்குகின்றது.

இந்த ஆலயம் அகோபில மடத்தின் மூலம் நிர்வஹிக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் அருகே நரசிங்கபுரம் தலத்தில் அகோபில மடத்தின் சார்பான நரசிம்மர் சன்னிதியும், அதன் வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து ஜீயர்களின் பிருந்தாவனங்களையும் அனுமதி பெற்று தரிசிக்கலாம்.

திருவரங்கம் போல், இங்கும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே எம்பெருமான் பள்ளிகொண்டு உள்ளான்.

திருமங்கையாழ்வாருக்கு வணிகனாக வந்து காட்சி கொடுத்தது அரங்கன் என்றும் அவன் மரக்கால், எழுத்தாணி, ஓலை இவற்றுடன் ஓடி வந்து புகுந்த இடம் ஆதனூர் என்றும் சொல்வதுண்டு. அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும் கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும், ஓடிவரும் போது திரும்பிப்பார்த்த ஊர் திரும்பூர் எனவும், திருமங்கையாழ்வார் விரட்டிக் கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர் (மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும், மரக்காலுக்குள் கை வைத்த ஊர் வைகாவூர், என்றும் புகுந்தது பூங்குடி என்றும், அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர். இந்த ஊர்கள் எல்லாம் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகின்றன. எனவே இந்நிகழ்ச்சியும் (அரங்கனே இங்கு வந்ததால்) திருவரங்கத்திற்கும் ஆதனூருக்கும் உள்ள ஒற்றுமையை புலப் படுத்துகிறது.

ஆழ்வார்

இத்தலத்திற்கெனத் தனிப்பாசுரம் இல்லை. திருமங்கையாழ்வார் பெரிய திருமடலில்

என்னை மனங் கவர்ந்த ஈசனை, – வானவர்தம்       (2780)

முன்னவனை – மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை
பெரிய திருமடல் 126 – 129 (2674)

என ஆண்டளக்கும் ஐயனை திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். திருமூழிக்களத்து எம்பெருமானும் இப்பெருமானும் ஒருவரே என்பது ஐதீஹம். என்னை மனங்கவர்ந்த என்று சொல்லி நம்மாழ்வார் திருமூழிக்களத்து எம்பெருமானுக்காக எடுத்தாண்ட மூழிக்களத்து வளத்தின் என்பதை இவர் மூழிக்களத்து விளக்கினையென்று மங்களாசாசனம்.

Google Map

திருஆதனூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருஆதனூர் பற்றி சொல்வது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: