A Simple Devotee's Views
பொற்றாமறையாள் ஸமேத வல்வில் ராமன் தாயார் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருப்புள்ளபூதங்குடி | |||
மூலவர் | வல்வில் இராமன், சக்ரவர்த்தித் திருமகன் | |||
உத்ஸவர் | வல்வில்ராமன் (நான்கு கரங்களுடன்) | |||
தாயார் | ஹேமாம்புஜவல்லி தாயார் / பொற்றாமரையாள் | |||
திருக்கோலம் | கிடந்த (புஜங்க சயனம்) | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 94435 25365 |
கோவில் பற்றி
பொதுவாக இராமர் நின்ற திருக்கோலத்தில் தான் சேவை சாதிப்பார். இந்த ஸ்தலத்திலும், பாண்டியநாட்டு திவ்யதேசமான திருப்புல்லாணியிலும் சயன (கிடந்த) திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இங்கே எழுந்தருளி இருக்கும் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொண்டால், உத்யோகம் கிடைப்பது, மற்றும் உத்யோக உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை. சோழ தேசத்தில் உள்ள வைணவ தலங்களில் இதுவும் ஒரு நவகிரஹ பரிகார ஸ்தலம். இது புதன் பரிகார ஸ்தலம்
கோவில் அஹோபில மடம் நிர்வாகத்தில் நடைபெறுகிறது. அஹோபில மடம் 19வது பட்டம் ஜீயர் (ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாச யதீந்த்ர மஹாதேசிகன்) அவர்களுக்கு பிருந்தாவனம் உள்ளது.
ஸ்தல வரலாறு
ஜடாயுவாகிய பறவைக்கு மோக்ஷம் அளித்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தேசம் ஆனதால் இது திருப்புள்ளபூதன்குடி என்று ஆனது. புள் என்றால் பறவை என்று பொருள். ஈமக்கிரியை செய்யும் போது மனைவி உடன் இருக்கவேண்டும் என்பது மரபு. அப்பொழுது சீதை இல்லாததால், இராமன் மனசார நினைத்தபோது, பூமிபிராட்டி வந்து அதனை நடத்தியதாக ஸ்தலவரலாறு கூறுகிறது. ஸ்ரீராமன் ஜடாயுவிற்கு மோக்ஷம் அளித்தபின் சிரமபரிகாரம் செய்து கொள்ளும் நிலையில் காட்சி அளிக்கும் திருத்தலம். சீதாதேவியை பிரிந்த சமயம் ஆனதால், பக்கத்தில் சீதாதேவி காட்சி அளிக்கவில்லை. பூமிபிராட்டி மட்டுமே அமர்ந்து இருக்கிறார். தனிக் கோவில் நாச்சியார்.
இந்த திவ்யதேசத்தின் ஸ்தல புராணத்தைப்போலவே, தொண்டைநாட்டு திவ்யதேசமான திருப்புட்குழி என்ற திவ்யதேசத்திற்கும் ஜடாயு ஈமக்கிரியை செய்ததாக ஸ்தல புராணம் உள்ளதாக சொல்வார்கள். இது தொண்டை நாட்டில் நடந்ததா, சோழ நாட்டில் நடந்ததா அல்லது மராட்டிய அல்லது கர்நாடக மாநிலங்களில் நடந்ததா என்று விவாதிப்பதைவிட, பல இடங்களில், பலருக்கு எம்பெருமான் காட்சி இவ்வாறாக அளித்திருக்க கூடும் என்று மனதில் கொண்டு அனுபவிக்கலாம்.
திருபுள்ளபூதங்குடி பற்றி தினம் ஒரு திவ்ய தேசம்
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் – பெரிய திருமொழி
அறிவது அரியான் அனனைத்துலகும் உடையான் என்னை ஆளுடையான், குறிய மாணி உருவாய கூத்தன் மன்னி அமரும் இடம், நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறிகொள் சிறை வண்டு இசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே! (1348)
முதலில் திருமங்கையாழ்வார் பெருமாள் என்று அறியாமல், பாடாமல் சென்று விட்டார் என்றும், பிறகு அவனே தன்னை காட்டிக்கொடுத்ததனால், ‘அறிவது அரியான்’ என்று ஆரம்பித்து நம் முயற்சியால் அவனை காண்பது அரிது என்று பாடுகிறார்.
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி அதனுள்போய், புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே! (1349)
‘பள்ளச் செறுவில் கயலுகளப் ‘ என்று சொல்லும்போது, வயல்களில் மீன்கள் அளவற்று உள்ளன என்று சொல்லி பிறகு ‘புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும்‘ என்று சொல்வது முரண்பாடாக தோன்றினாலும், உண்மையில், பறவையானது பிள்ளைக்கு தேவையான சிறிய மீன்களை தேடும் என்று பொருள் கொள்ளவேண்டும்.
மேவா அரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து, மாவாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம், காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும், பூவார் கழனி எழில் ஆரும் புள்ளம் பூதங் குடிதானே! (1350)
மீன்கள் துள்ளி குதிப்பதைப் பார்த்த பறவைகள் மருண்டு ஓடுகின்றன.
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன், வற்பார் திரள் தோளை ஐ நான்கும் துணித்த வல்வில் இராமனிடம், கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள், பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே! (1351)
மலையை தூக்கி மழையை தடுத்த கண்ணனும், இராவணனின் இருபது (5 x 4) தோள்களை அறுத்து ஒழித்த வல்வில்ராமன் இருக்கும் இடம்.
மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர், நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி அம் கை மாயனிடம், செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்றணையும், பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே! (1352)
சுதர்சன சக்கரத்தை ஏந்திய கண்ணன் என்னும் மாயன் இங்கு உள்ளான்.
மின்னின் அன்ன நுண்மருங்குல் வேய் ஏய் தடந்தோள் மெல்லியற்கா, மன்னு சினத்த மழவிடைகள் ஏழு அன்று அடர்த்த மாலது இடம், மன்னு முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசைபாட, புன்னை பொன் எய்து தாது உதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே. (1353)
நப்பின்னைக்காக கண்ணன் ஏழு எருதுகளை வென்றது இந்த பாடலில் சொல்லப் படுகிறது. நப்பின்னை பிராட்டியின் சிறப்பை இந்த பாடலின் விளக்கத்தில் குறிப்பிட்ட “கருமாறி பாய்ந்து அணைய வேண்டும் ‘ என்று சொன்னதை நன்றாக ரசிக்கலாம். இந்த பாடலில் குறிப்பிட்டுள்ள திருத்தல குளத்தில் உள்ள ஒற்றை பனைமரம் போல், திருக்குறுங்குடியில் உள்ள குளத்திலும் ஒற்றைப்பனைமரம் உள்ளதை, மற்றொரு ஆழ்வாரான திருமழிசையாழ்வார் சொல்வதையும் மனதில் கொள்ளலாம்.
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுது ஆ நிரை காத்து, சடையான் ஓட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம், குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டு உக்கும், புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே. (1354)
கோவர்தன மலையை கொண்டு பசுக்கூட்டங்களை காத்தவனும், பாணாசுரனின் தோள்களை அரித்து எறிந்தவனான கண்ணனை இங்கு காண்கிறேன்.
கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி, இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம், மறையால் மூத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால், பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே. (1355)
இந்த பாடலிலும் கண்ணன் வாழும் இடமாகவே ஆழ்வார் காண்கிறார்.
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடியநாள், அன்ன மாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம், மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும், பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே, (1356)
மூங்கிலில் வளர்கின்ற நவமணிகளில், முத்தையும், பொன்னையும் அதிகமாக கொண்டு வரும் என்று சொல்லி, அவற்றை சேர்கின்ற காவிரி ஆற்றினையும் சிறப்பிக்கும் பாடல். இந்த கருத்தையே ரங்கராஜஸ்தவம் என்ற நூலில் சொல்வதையும் காணலாம்.
கற்றாமறித்து காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற, பொற்றா மரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல், கற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி, சொல்தான் ஈரைந்து இவை பாடச் சோர நில்லா துயர்தாமே! (1357)
இது பலஸ்ருதி பாடல். இந்த பத்து பாடல்களை பாடினால், இவ்வாத்மா சோர்வு அடையும்படி துன்பங்கள் தங்கியிருக்கமாட்டாது என்று முடிக்கிறார்.
கம்ப ராமாயணத்தில் ஜடாயு
Mr, Swaminathan, one of the experts in both Valmiki and Kamba Ramayanam, has written about Kamba Ramayanam and we are happy to host his daily posts on Kamba Ramayanam. Kamban has written about Jatayu in two subsections, namely, சடாயு காண் படலம், ஜடாயு உயிர் நீத்த படலம் consisting of about 265 poems. He has taken some selective poems from Kamba Ramayanam on Jatayu and we are happy to share the same for you.
A Friend in the Forest, Jatayu – வனத்தில் ஓர் நண்பன், ஜடாயு | Kamban Suvai 058 |
Jatayu;s self introduction to Rama – இராமனுக்கு ஜடாயுவின் சுயஅறிமுகம் | Kamban Suvai 059 |
Jatayu accepts Rama’s request – இராமனின் வேண்டுகோளை சடாயு ஏற்றல் | Kamban Suvai 060 |
Jatayu takes on Ravana – சடாயு இராவணனை எதிர்கொள்ளல் | Kamban Suvai 061 |
Jatayu advises Ravana – சடாயு இராவணனுக்கு அறிவுரை கூறல் | Kamban Suvai 062 |
Jatayu’s heroic deed – சடாயுவின் வீரம் | Kamban Suvai 063 |
ராவணனின் வில்லும் வேலும் தோற்றல் – Ravana’s bow and trident failed | Kamban Suvai 064 |
The fall of Jatayu சடாயு வீழ்தல் | Kamban Suvai 065 |
சடாயுவை பார்த்த ராமனின் புலம்பல் – Rama’s Lamentations on seeing Jatayu | Kamban Suvai 066 |
Jatayu’s advices to Rama – இராமனுக்கு சடாயுவின் நல்வார்த்தைகள் | Kamban Suvai 067 |
ராமனின் கோப வார்த்தைகள் – Rama’s furious words | Kamban Suvai 068 |
Jatayu’s calms down Rama – சடாயு ராமனை சாந்தப்படுத்துதல் | Kamban Suvai 069 |
சடாயுவின் தெய்வ முக்தி / Divine Salvation of Jatayu | Kamban Suvai 070 |