A Simple Devotee's Views
ரமாமணிவல்லித்தாயார் ஸமேத கஜேந்திரவரதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கவித்தலம் / கபிஸ்தலம் / கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம் | |||
மூலவர் | கஜேந்திர வரதன் (புஜங்க சயனம்) / ஆதிமூல பெருமாள் / (ஆற்றங்கரை கிடக்கும்) கண்ணன் | |||
உத்ஸவர் | கஜேந்திர வரதன் | |||
தாயார் | ரமாமணிவல்லி / பொற்றாமரையாள் / செண்பகவல்லி | |||
திருக்கோலம் | கிடந்த | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 1 | |||
மங்களாசாசனம் | திருமழிசையாழ்வார் | |||
தொலைபேசி | +91 4374 223434 |
கோவில் பற்றி
ஆடி மாத பௌர்ணமி அன்று இங்கு நடக்கும் கஜேந்திர மோக்ஷம் ஒரு சிறப்பு.
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. (திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).
ஆஞ்சநேயர் இந்த தலத்தில் வழிபட்டதாக வரலாறு. கபி என்றால், குரங்கு என்று ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் இந்த ஊர் கபி ஸ்தலம் என்று ஆனது.
ஸ்தல வரலாறு
ஆதிமூலமே என்று கஜேந்திரன் என்ற யானை அழைத்தபோது, அதற்கு அபயம் அளித்த பெருமாள், கஜேந்திர வரதன்.
இந்திராஜு ம்னன் என்னும் மன்னன் மிகச் சிறந்த
விஷ்ணு பக்தனாக இருந்தான். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு அவன் பூஜையில் இருக்கும்போது இவ்வுலகம்
மறந்த நிலையில் இருப்பான். இவ்விதம் பக்தியில் ஈடுபட்டிருந்த ஒரு நாள் துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். இந்திராஜு ம்னன் தனது பக்திக் குடிலை விட்டு வெளிவராததால், துர்வாசர் இறுதியில் இந்திராஜும்னன் மீது மிகவும் சினங்கொண்ட முனிவர் அவனுக்கு விலங்குகளிலேயே மதம் பிடித்த யானையாக பிறக்க சாபமிட்டார். நிலையுணர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து முனிவரிடம் சாபவிமோசனம் வேண்டி நின்றான். சினந்தணிந்த முனிவர் நீ யானையாக இருந்தாலும் திருமால் மீது பக்திகொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு முதலை உன் காலை பிடிக்க நீ மஹாவிஷ்ணுவை கூவி அழைக்க உனக்கு மோட்சம் கிடைக்கும் என்றார்.
கூஹு என்னும் அரக்கன் ஒருவன் ஒரு நாள், அகத்தியர் தண்ணீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரின் காலை பிடித்து இழுத்தான். சினமுற்ற அகத்தியர் அவனை ஒரு முதலையாக பிறக்க சாபம் இட்டார். அவனும் விமோசனம் வேண்ட நீ கஜேந்திரன்
என்னும் யானையின் காலை பிடித்து இழுக்கும் போது திருமாலின் சக்ராயுதம் பட்டு சாபவிமோசனம் அடைவதாக கூறினார்.
கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு (கிழக்கு திசையில்) அமைந்துள்ள கபில தீர்த்தம் என்னும் குளத்தில் இது நடந்தாக நம்பிக்கை.
ஆழ்வார்
ஆழ்வாரால், ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்று மங்களாசாசனம் செய்யப்பெற்றார்.
Google Map
திருக்கபிஸ்தலம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருக்கபிஸ்தலம் பற்றி சொல்வது
தேவரீரின் திருத்தொண்டுக்கு அடியேனின் வணக்கங்கள்!🙏🏽🙏🏽
தொண்டு சிறக்க நல்வாழ்த்துக்கள்!
நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் அடியேனுக்கு ஊக்கம் கொடுக்கிறது. நன்றி