A Simple Devotee's Views
பத்மாசானவல்லித் தாயார் ஸமேத ஜகத்ரட்சகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கூடலூர், ஆடுதுறை, சங்கம க்ஷேத்திரம் | |||
மூலவர் | ஜெகத்ரக்ஷகன், வையம்காத்த பெருமாள், உய்யவந்தார், அம்பரீஷவரதர் | |||
உத்ஸவர் | ஜெகத்ரக்ஷகன் | |||
தாயார் | பத்மாஸனி தாயார், புஷ்பவல்லி தாயார் | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 93443 03803; 93452 67501 |
ஸ்தல வரலாறு
திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கைஆழ்வாரின் பாசுரத்தில் நாம் காணலாம். வராஹம் பூமியை இங்கே உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து ஸ்ரீதேவி தாயாரோடு அங்கு காட்சி அளிக்கிறார்.
அம்பரிஷன் என்னும் ஒரு மன்னன் மிகச்சிறந்த திருமால்
பக்தன். அவன் ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்து சிறந்தவனாக விளங்கினான். ஒருமுறை துருவாச முனிவர் வருகை புரிந்தார். துருவாசர் வந்திருப்பதையும் பொருட்படுத்தாது தனது விரதத்திலேயே அம்பரிஷி மூழ்கியிருந்தார். தன்னைச் சற்றும் மதிக்காத நிலையைக் கண்ட துர்வாசர் அம்பரிஷிக்கு சாபம் கொடுக்க அம்பரிஷி மகாவிஷ்ணுவை துதித்தார். மஹா விஷ்ணு துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார்.
சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண் அடைந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது
இத்தலத்தில்தான்.
புண்ணிய நதிகள் எல்லாம் நீராடி தான் பாவக்கறை மிகுந்து போயிருப்பதைப் கண்டு தனது பாவங்களை இந்த திருத்தல எம்பெருமானிடம் தவமிருந்து காவிரி
போக்கிக் கொண்டாள் என்பது ஐதீகம்.
இங்கே தேவர்கள், நந்தக முனிவரோடு சேர்ந்து வந்து எம்பெருமானை சேவித்ததால், கூடி வந்த ஊர், கூடலூர் ஆயிற்று. காவிரி இந்த ஸ்தலம் வந்து ஒளியை மீண்டும் பெற்ற ஊர் என்று சொல்வதுண்டு. காவிரி வெள்ளத்தில் இந்த ஊர் மண்மேடு ஆகிவிட்டது. ராணி மங்கம்மாளின் கனவில் தோன்றி கோவிலை புதுப்பிக்க சொன்னதால், அந்த அரசி புதுப்பித்த கோவில் இது.
கோவில் பற்றி
ஆடுதுறை திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
அனுமன், ஸ்ரீராமருக்கே மக்கள் இங்கு வழிபடுகிறார்கள் என்று தாமும் அவர்களோடு கலந்து ஆனந்தக் கூத்தாடி மயங்கி விழ, எம்பெருமான் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தாராம். இக்கோவிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்ச நேயருக்கு இன்றும் ஒரு சிறிய கோவில் உள்ளது.
தாயார் தெற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
கும்பகோணத்தை சுற்றி உள்ள சில விஷ்ணு கோவில்களை நவகிரஹ பரிகார க்ஷேத்திரங்களாக கொள்கிறார்கள். இந்த ஸ்தலம் கேது பரிகார ஸ்தலமாக கொள்கிறார்கள்.
ராணி மங்கம்மாளின் சிலை வடிவத்தில் ஒரு தூணில் உள்ளது.
ஆழ்வார்
திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கைஆழ்வாரின் பாசுரத்தில் நாம் காணலாம்.
Google Map
திருக்கூடலூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருகூடலூர் பற்றி சொல்வது