A Simple Devotee's Views
கமலவல்லித் தாயார் ஸமேத ஹரசாபவிமோசனப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கண்டியூர் / த்ரிமூர்த்தி க்ஷேத்திரம் / பஞ்சகமல ஷேத்ரம் | |||
மூலவர் | ஹரசாபவிமோசன பெருமாள் | |||
உத்ஸவர் | கமலநாதன் | |||
தாயார் | கமலவல்லி தாயார் | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 1 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 93446 08150 |
ஸ்தல வரலாறு
சிவனுக்கு (ஹரன் ) சாபம் தீர்த்தத்தால் இந்த ஸ்தல எம்பெருமான், ஹரசாபவிமோசன பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். சிவன், ப்ரஹ்மாவின் ஐந்தாவது தலையை கொய்ததால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது, அந்த தோஷம் இங்கு நீங்கியது. சிவனுக்கே தோஷம் போக்கிய திவ்யதேசம் ஆகியதால், எல்லாவிதமான தோஷங்களும் நீங்கும் என்று ஐதீகம்.
கோவில் பற்றி
மும்மூர்த்திகளான, சிவா,விஷ்ணு மற்றும் ப்ரஹ்மா ஆகிய மூவரும் இந்த ஊரில் அருள்செய்கின்றனர். பிரம்மாவிற்கு தனி கோவில் கிடையாது என்பதால், சரஸ்வதி சமேதயாராக எழுந்தருளி உள்ளார். சிவனுக்கும், பெருமாளுக்கும் தனி கோவில்கள் 500 மீட்டர் தூரத்தினுள் உள்ளன.
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வடக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
கமலா ஷேத்ரம், கமலா புஷ்கரணி, கமல விமானம், கமலநாதன், கமலவல்லி நாச்சியார் என ஐந்து கமலங்கள் உள்ளதால், பஞ்ச கமல .க்ஷேத்திரம் என்றாயிற்று.
ஆழ்வார்கள்
திருமங்கை ஆழ்வார், திருகுறுந்தாண்டகம் என்ற பிரபந்தத்தில் “பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிந்து உண்ணும், உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும் கண்டியூர், (திரு)அரங்கம் (திரு)மெய்யம் (திரு)கச்சி, (திருப்) பேர்(நகர்) , (திருக்கடல்)மல்லை என்று” பல திவ்யதேசங்களை சேர்த்து பாடி, சிவனின் சாபத்தை தீர்த்த திருக்கண்டியூர் பெருமாள் பற்றி சொல்கிறார்.
Google Map
திருக்கண்டியூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருக்கண்டியூர் பற்றி சொல்வது