திவ்யப்ரபந்தம் / Divya Prabhantham

For English version, please click here, thanks :

இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். நாலாயிர திவ்யப்ரபந்தம் பன்னிரண்டு ஆழ்வார்களும் திருவரங்கத்து அமுதனாரும் எழுதிய இருபத்திநான்கு பிரபந்தங்களின் தொகுப்பே ஆகும்.

ஆழ்வார்கள் வேதங்களை தமிழில் கொடுக்க பரமாத்மாவால் இங்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் எழுதிய பிரபந்தங்கள் ஸ்ரீ விஷ்ணு / ஸ்ரீமன் நாராயணனை புகழ்ந்து எழுதப்பட்டவை. வேதங்கள் நமக்கு வாழ்க்கை முறையை சொல்லிக்கொடுக்கும் கோட்பாடுகளை கொண்டவை. அவை ஸ்ரீமன் நாராயணனை சார்ந்தும், ஸ்ரீமன் நாராயணன் வேதத்தினை சார்ந்தும் இருப்பது இயல்பே. வேதத்தின் கருத்துக்களை தமிழினில் சொன்ன திவ்யப்ரபந்தமும் ஸ்ரீமன் நாரயணனையும் அவனது ஐந்து நிலைகளையும், அவன் குடிகொண்டு இருக்கின்ற திவ்யதேசங்களையும் சொல்வதும் அது போல் இயல்பான ஒன்றே.

இடையில் சில காலம் உபயோகத்தில் இல்லாமல் இருந்த திவ்யப்ரபந்தங்களை இன்றைய வடிவில் தொகுத்து நமக்கு கொடுத்த பெருமை ஸ்ரீ நாதமுனிகள் என்ற ஆசார்யனையே சேரும்.

திவ்யப்ரபந்தங்களின் சிறப்பாக நாம் கருதுவது, மற்ற நூல்களுக்கு இல்லாத பெருமையாக நாம் நினைப்பது என்னவென்றால் ப்ரபந்தங்களுக்கு நம் முன்னோர்கள் எழுதி வைத்து இருக்கும் வியாக்கியானங்கள் என்று சொல்லப்படும் பாடல்கள் பற்றிய உரைநூல்கள். நம் சம்பிரதாயம் ஓராண்வழி வளர்ந்தது என்பர். அதாவது ஒரு ஆச்சாரியாரை பின்பற்றி எல்லோரும் நடப்பர், அவர் அடுத்த தலைமுறைக்கு வாய் மூலம், தங்களுடைய பிரபந்தம், இராமாயணம், மஹாபாரதம், மற்றும் வேதங்கள் மற்றும் உபநிஷத் முதலிய நூல்கள் போன்றவைகளுக்கு விளக்கங்களை சொல்லி கொடுப்பார்கள். இராமானுஜர் காலத்தில் அவர் இந்த விளக்கங்களை எழுத்து வடிவமாக்கி வரும் தலைமுறைகளுக்கு பயன் உள்ளதாக செய்தார். இந்த பழமையான உரைகள் தமிழும், வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ளன.  

உதாரணமாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஐந்து உரையாசிரியர்கள் எழுதிய விளக்கங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன.

திருவாய்மொழியின் ஐந்து உரைகளாவன :

  1. திருக்குருகைப்பிரான் பிள்ளான்  எழுதிய ஆறாயிரப்படி.
  2. நஞ்சீயர்   என்ற  ஆசார்யன்   ஒன்பதினாயிரப்படி
  3. வாதிகேசரி  அழகிய  மணவாளப்பெருமாள்  ஜீயர்  எழுதிய  பன்னிரண்டாயிரப்படி
  4. பெரியவாச்சான்பிள்ளை   இருபத்தி நாலாயிரப்படி
  5. நம்பிள்ளை காலட்சேபமாகச் சொல்ல வடக்கு திருவீதிப்பிள்ளை  பட்டோலை கொண்டு அருளியது ஈடு முப்பத்தாறாயிரப்படி.   (இந்த உரை,  திருவாய்மொழிக்கு ஈடாக உள்ளதால், ஈடு என்று அழைக்கப் படுகிறது)

இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை /  எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.

அதேபோல் திருப்பாவைக்கும் ஐந்து வியாக்கியானங்கள் உள்ளன. பெரியவாச்சான் பிள்ளை என்ற ஆச்சாரியாரின் வியாக்கியானங்கள் எல்லா ப்ரபந்தங்களுக்கும் உள்ளன. பெரியாழ்வார் திருமொழியின் இறுதியில் வரும் பாசுரங்கள் சிலவற்றிற்கு மணவாள மாமுனிகள் என்ற ஆச்சாரியார் எழுதி முடித்து இருந்தாலும், அவைகளையும் அவர் பெரியவாச்சான் பிள்ளை பெயரிலேயே வரவேண்டும் என்று விருப்பப்பட்டதால் இன்றும் அவை அப்படியே அழைக்கப்படுகின்றன.

இந்த வியாக்கியானங்கள் ஆழ்வாரின் எண்ண ஓட்டங்களை படம் பிடித்து காட்டுவது போல் அமைந்துள்ளன என்று சொன்னால் மிகை ஆகாது. பாடல்களுக்கு இடையே உள்ள தொடர்பு, பதிகங்களின் தொடர்ச்சிக்கான சம்பந்தம், பாடல்களின் பொழிப்புரை, உள்ளுறை பொருள், மற்றும் சில வார்த்தைகள், மற்றும் சொற்தொடர்களை ஆழ்வார்கள் கையாண்ட விதம் என்று நம்மை பிரமிக்க வைக்கும் அளவுக்கு, நம் மனதில் தோன்றாத கேள்விகளுக்கு கூட பதில் என்று ஆச்சர்யப்பட வைக்கும். இந்த வியாக்கியானங்களே பிரபந்தங்களில் உள்ள எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் இறுதி நூல்.

நம்முடைய வலைப்பதிவுகளில் பல இடங்களில் இந்த வியாக்கியானங்களை நாம் எடுத்துக்கொண்டு உள்ளோம். அவற்றை உரையாசிரியர் கூறுகிறார் என்று குறிப்பிட்டு இருப்போம். இந்த பக்கங்களின் நோக்கப்படி அவற்றை எளிமையாக கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் நாம் புரிந்து கொண்ட வரை எழுதி உள்ளோம். அவைகளில் பிழைகள் இருந்தால், அதற்கு முழு காரணம் அடியேனே. அவைகளில் சில கருத்துக்கள் விடுபட்டு இருக்கலாம். அதற்கு அடியேனே பொறுப்பு. ஆகையால் மேலும் விளக்கம் வேண்டுபவர்கள், இந்த வியாக்கியானங்களை தேடி அவற்றை நேரடியாக படித்து அனுபவிக்க வேண்டும் என்பது அடியேனுடைய விண்ணப்பம். பெரும்பாலான வியாக்கியானங்கள் இணையத்தில் உள்ளன. நன்றி.

ப்ரபந்தத்தின் தலைப்புபாடியவர்எண்ணிக்கைபாசுரங்களும் அர்த்தமும்
பெரியாழ்வார் திருமொழிபெரியாழ்வார்4731.1 (பல்லாண்டு) முதல் 5.4 (சென்னியோங்கு) வரை
திருப்பாவைஆண்டாள்301.1 (மார்கழி திங்கள்) முதல் 1.30 (வங்ககடல் கடந்த )
நாச்சியார் திருமொழிஆண்டாள்1431.1 (தை ஒரு திங்கள்) முதல் 1.14 (பட்டி மேய்ந்து )
பெருமாள் திருமொழிகுலசேகர ஆழ்வார்105
திருச்சந்த விருத்தம்திருமழிசை ஆழ்வார்120
திருமாலைதொண்டரடிப்பொடி ஆழ்வார்45
திருப்பள்ளியெழுச்சிதொண்டரடிப்பொடி ஆழ்வார்10
அமலனாதிபிரான்திருப்பாணாழ்வார்10
கண்ணிண்சிறுத்தாம்புமதுரகவி ஆழ்வார்11
பெரியதிருமொழிதிருமங்கை ஆழ்வார்1084
திருகுறுந்தாண்டகம்திருமங்கை ஆழ்வார்20
திருநெடுந்தாண்டகம்திருமங்கை ஆழ்வார்30
முதல் திருவந்தாதிபொய்கை ஆழ்வார்100
இரண்டாம் திருவந்தாதிபூதத்தாழ்வார்100
மூன்றாம் திருவந்தாதிபேய் ஆழ்வார்100
நான்முகன் திருவந்தாதிதிருமழிசை ஆழ்வார்96
திருவிருத்தம்ம்மாழ்வார்100
திருஆசிரியம்ம்மாழ்வார்7
பெரிய திருவந்தாதிம்மாழ்வார்87
திருவெழுக்கூற்றிருக்கை திருமங்கை ஆழ்வார்1
சிறிய திருமடல்திருமங்கை ஆழ்வார்40
பெரிய திருமடல்திருமங்கை ஆழ்வார்78
திருவாய்மொழிம்மாழ்வார்1102
ராமானுஜ நூற்றுஅந்தாதிதிருஅரங்கத்து அமுதனார்108
4000

Divya Prabantham

This is a menu page and the Nalayira Divya Prabandham is a collection of about four thousand hymns composed/written by the twelve Azhwaars and Thiruvarangathu Amudhanaar in twenty four Prabanthams.

Divya Prabhandham, the collection of hymns, that praise the Paramaathmaa is sung by the Azhwaars. they are also considered to be essence of Vedhas, given in simpler form in Tamil.

The Divya Prabandham is created by Azhwaars in an effort to translate the vedas in Tamil and it consists of hymns that praise the Paramathmaa or Sriman Narayanan or Mahavishnu.  As the vedas refer to Vishnu and Vishnu refers Vedas as the rule book for life, the divyaprabhantham also talks about the five states of Paramathmaa, and His presence as Archavathara perumals in many sacred places, called divya desams. The collection of these hymns, once thought to have been lost, was organized in the current form by an acharya called, Nathamuni.

The specialty and pride about Divyaprabandham, compared to other books, is that it has the written explanatory works called Vyagynams (வியாக்கியானங்கள்), which provide more details about the hymns in Divyaprabandham. Our tradition had originally been developed by a process called Öraanvazhi, meaning that all follow one Acharyar, who in turn teaches the tradition orally to the next generation. This would contain Divyaprabandham, Ramayanam, Mahabharatham, Vedas and Upanishads and the explanation for the above in a detailed manner. Ramanujar took the initiative to make these explanations in written form and set up the procedure to document these explanations in the form of Vyagyanams. In this process he made sure that the right and clear messages are documented and given in a useful manner to the future generations. These explanations are written in a mixture of Sanskrit and Tamil and this called as Manipravalam.

For example, for Thiruvaaimozhi, written by Swami Nammazhvaar has got five Vyagyanams by five different Acharyaas, which are valid and valued even today.

The five vyagyanams of Thiruvaaimozhi are

  1. The first one is called “Aaraayirappadi”, meaning 6000 word count, by Thirukurugaipiraan pilaan
  2. The second one “Onbathinaayirapadi”, meaning 9000 word count, by Namjeeyar , an Achaarya
  3. The next one  “Pannirendaayirappadi”, meaning 12000 word count, by Vaadhikesari Azhagiya Manavala Perumal Jeeyar
  4. The next one is called “Irupathinaalaayirappadi”, meaning 24000 word count, by Periyavaachaan Pillai
  5. The next one is called “Eedu Muppathiaaraayirappadi”, meaning 36000 word count, by Vadakku Thiruveedhi Pillai, as presented by an Aacharyar called Nampillai.  This has got the special title, EEDU, meaning Equal, as this is equivalent to Thiruvaimozhi itself.

In the same way, Thiruppavai has also got five Vyagyanams. Periyavaachaanpillai had written vygyanams for all prabandhams. The last few hymns of Periyaazhvaar Thirumozhi was actually written by Swami Manavaala Maa Munigal, to complete the vyagyanams left incomplete by Periyavaachaan pillai. Maa Munigal wrote the vyagyanams but taken as Periyavaachaan pillai’s. So today those are still called as vyagyanms of Periyavaachaan pillai.

The above explanatory notes bring out these philosophical thoughts of Azhwaars in an explicit manner. The explanatory notes, apart from giving the exact meaning of the hymns, also ask related questions and provide explanation for those questions, with connected continuity known as SANGATHIS, which might not have occurred to us at all. This gives an extraordinary opportunity for us to learn from multiple perspectives. These traditional notes give the continuity in the meaning from one hymn to the other, one Pathigam to the next and from one Pathu to the next. They also provide the reasonings of Azhwaars on why some of the specific words or specific phrases are coined by Azhwaars in specific places. In short, these vyagyanams are authoritative answers to any questions on any of the hymns in Divyaprabandham.

We have taken these explanations from these vyagyanams in many places in our website. Generally they are mentioned as what is told by Acharyaars or what is mentioned by other authors. As per our intention of our website, we tried to simplify these and we have given to the extent of our understanding. If there are any mistakes in the interpretation or explanation of the above, the entire fault is mine. Similarly we would have omitted some points in the interests of simplicity and we take the responsibility for the same as well. So in the general interest of learning more accurately, we request and recommend that the readers are advised to look for these vyagyanams and read and understand from them directly. For your information most of the vyagyanams are available in the web. Thanks.

The following table shows the details of the 4,000 pasurams (hymns).

Name of the prabhandhamSung byNumber of Hymns
Periyazhwaar ThirumozhiPeriyazhwaar473
ThiruppavaiAandaal30
Nachiar TirumozhiAandaal143
Perumal ThirumozhiKulasekara Azhwaar105
Thiruchchanda ViruththamThirumazhisai Azhwaar120
ThirumalaiThondaradipodi Azhwaar45
ThiruppalliyezhuchchiThondaradipodi Azhwaar10
Amalanadhi piranThiruppanazhwaar10
Kanni Nun SiruththambuMadhurakavi Azhwaar11
Peria ThirumozhiThirumangai Azhwaar1084
ThirukurunthaandagamThirumangai Azhwaar20
ThirunedunthaandagamThirumangai Azhwaar30
Mudhal ThiruvandhadhiPoigai Azhwaar100
Irandam ThiruvandhadhiBhoothathazhwaar100
Moonram ThiruvandhadhiPeyazhwaar100
Naanmugan ThiruvandhadhiThirumazhisai Azhwaar96
ThiruviruththamNammazhwaar 100
ThiruvasiriyamNammazhwaar7
Peria ThiruvandhadhiNammazhwaar87
ThiruvezhukkurrirukkaiThirumangai Azhwaar1
Siriya ThirumadalThirumangai Azhwaar40
Peria ThirumadalThirumangai Azhwaar78
Thiruvaaimozhi Nammazhwaar1102
Ramanuja NootrandhadiThiruvarangathu Amudhanaar108
4000

Image credit : Thanks to http://saranaagathi-margam.org/about-naalaayira-divya-prabandham.html

2 Comments on “திவ்யப்ரபந்தம் / Divya Prabhantham

  1. நல்ல முயற்சி. நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு எளிய உரை நூலைப் பரிந்துரைக்க முடியமா? உதவ வேண்டுகிறேன்.

    • நன்றி. நானும் அதைத்தான் முதலில் எதிர்பார்த்தேன். சரியாக ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை என்று சொல்லவேண்டும். ஆனால், படித்த சிலதும் ஒரு முழுமையை கொடுக்கவில்லை என்பதே உண்மை. http://dravidaveda.org/ நன்றாக உள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகம் Tamil Virtual Academy உள்ள சில நூல்கள் நன்றாக உள்ளது, எனக்கு கடினமாக உள்ளது. முயற்சி செய்யவும், நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d