Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்

For English, kindly click here , thanks

தொடக்கம் 

நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம்.  முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும் பார்த்தோம்.   இந்த வலைப்பதிவில் திருவாய்மொழியில் குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களைப் பார்ப்போம்.

திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பதினொன்று ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

குடந்தையில் பெருமாள் நம்மாழ்வாருக்குக் காட்டிய குணம் மாதுர்யம், மாதுர்யம் என்றால் அன்பு, கருணை, இனிமை. மாதுர்யம் என்றால் எல்லோருக்கும் இனியவனாக இருக்கின்ற குணம். தன்மீது அன்பு செலுத்துபவர்களுக்கு, இனியவனாக இருப்பது, மனிதனுக்கே இயல்பு. பரமாத்மா, தன்னுடன் அன்பு செலுத்துபவர்களுக்கும், தன்னை எதிர்க்கும் பீஷ்மர் போன்ற நல்லவர்களிடமும் கூட அன்பாக இருப்பான். தன்னை கொல்லவரும் சிசுபாலன் போன்ற பகைவர்களுக்கும் இனியனாக இருப்பவன். பகைவர்களையும் வசீகரிக்க வல்லது பெருமாளின்  மாதுர்யம். இதனை நமக்கு புரியவைக்கும் ஆழ்வார் பாசுரம்,

“கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ, கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே?” (7.5.2) 

திவ்யப்ரபந்தம்  தந்த பெருமாள்

திராவிட ஸ்ருதி தர்சகாய நம” என்பது திருக்குடந்தை ஆராவமுதன் நாமாவளிகளில் ஒன்று, அதாவது “திராவிட வேதம் காட்டிய பெருமாளே போற்றி” என்பதாகும். நாலாயிர திவ்யப்ரபந்தமே திராவிட வேதம் ஆகும். நம்மாழ்வார், திருக்குடந்தை ஆராவமுதன் மேல் இயற்றிய திருவாய்மொழி பாசுரங்களே,  நாதமுனிகள் மூலம் நாம் திவ்ய ப்ரபந்தங்கள் பெறுவதற்கு காரணமாக அமைந்ததால், மேலே சொன்ன நாமாவளி மிகப்பொருத்தமே. பன்னிரு ஆழ்வார்கள் பெருமாளையும், வேதங்களையும் போற்றி பாடிய பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இக்கோயில் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது.

மதுரகவி ஆழ்வார், தன்னுடைய குருவான நம்மாழ்வாரை பெருமைப்படுத்தும் வகையிலும், இந்த உலக மக்கள் எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த காரணத்தாலும், அவர் நம்மாழ்வாரின் பாடல்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று ஒரு பெரிய தொண்டு செய்தார். இருந்தாலும், ஆழ்வார்கள் காலத்தில் இயற்றப்பட்ட  இந்த ப்ரபந்தங்கள், மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்கு பிறகு, நாளடைவில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மறையத்தொடங்கின. இந்த பாடல்கள் மீண்டும் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் இத்தலத்து பெருமாளும், நம்மாழ்வார் இந்தப்பெருமாளுக்குப் பாடிய “ஆராவமுதே” (5.8) என்ற பதிகமும், மதுரகவி ஆழ்வாரின் “கண்ணி நுண் சிறுதாம்பு” என்ற ப்ரபந்தமும்  அடக்கம் ஆகும்.

வீரநாராயணபுரம் என்று அந்நாளிலும், இப்போது காட்டுமன்னார்குடி என்று கூறப்படும் ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற ஆசார்யன், ஒரு நாள் அந்த ஊரின் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு இருந்த போது, சில பக்தர்கள் பெருமாளின் பெருமையை நம்மாழ்வார் திருக்குடந்தை பெருமாளுக்குப் பாடிய பதிகமான “ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே” (5.8.1) என்று தொடங்கி,  “ஓராயிரத்துள் இப்பத்தும்‘ (5.8.11) என்று சொல்லி பாடி “காமர் மானேய் நோக்கியர்க்கே” (5.8.11) என்று முடித்தனர். இந்த பாடல்களின் இனிமையை கேட்ட, நாதமுனிகள், வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு அவை தெரியவில்லை.

அந்த பாடலின் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்ட நாதமுனிகள், அதில் இருந்த “குருகூர்ச் சடகோபன்” (5.8.11) என்பதிலிருந்து ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி – தூத்துக்குடி மாவட்டம்) சென்று, மதுரகவி ஆழ்வாரின் சீடர்கள் மூலம் அவர் இயற்றிய “கண்ணிநுண் சிறுதாம்பு” என்ற பிரபந்தத்தை பல ஆயிரம் முறை சொல்லி, மதுரகவி ஆழ்வார்  மற்றும் நம்மாழ்வாரின் ஆசீர்வாதங்களால் அந்த திவ்யப்ரபந்த பாடல்களை பெற்றார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. இவற்றை நாதமுனிகள் நாலாயிர திவ்யப்ரபந்தம் என்று தொகுத்தார்.  ஆக, வடமொழியின் வேதங்களுக்கு இணையான திராவிட  வேதமான திவ்யப்ரபந்தம் பாடல்கள் நமக்கு மீண்டும் கிடைக்க காரணமாக இருந்தவர்களில் சிலர்,

  • திருக்குடந்தை ஆராவமுத பெருமாளும்,
  • காட்டுமன்னார்கோவில் பெருமாளான வீரநாராயணப்பெருமாளும்,
  • நம்மாழ்வாரும்
  • நாதமுனிகள் என்ற ஆச்சார்யானும் மற்றும்
  • மதுரகவி ஆழ்வாரும் ஆவார்கள்.

ஐந்து சரணாகதிகளில் ஒன்று

ஆழ்வார்கள் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட காரணம், வடமொழி வேதங்களை திராவிட மொழியில் ஏற்படுத்தி அவற்றைக் கொண்டு, ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைந்து தங்களுது பிறவி பலனை எய்துவது என்று இங்குள்ள ஜீவாத்மாக்களுக்கு உபதேசம் செய்வது ஆகும். ஆனால் எல்லா ஆழ்வார்களுமே பரமாத்மாவிடம் பக்தியில் மூழ்கி மோக்ஷம் பெறுவதையே பெருமாளிடம் வேண்டினர். அவை, அவர்கள் பாடிய பாசுரங்களில், பெருமாளிடம் பிரார்த்தனைகளாக வெளிப்பட்டன.  நம்மாழ்வார் மோக்ஷம் வேண்டி வழிபட்ட  தலங்களில் திருகுடந்தையும் ஒன்று.

இன்று வானமாமலை என்று அழைக்கப்படுகின்ற, திருநெல்வேலி அருகில் உள்ள, திருசீரீவரமங்கை, திருகுடந்தை, கேரளாவில் உள்ள திருவல்லவாழ், நாம் முன்பு பார்த்த திருவேங்கடம் என்ற நான்கு திவ்யதேசங்களிலும் விபாவாவதார கண்ணனிடமும் சேர்த்து, நம்மாழ்வார் ஐந்து முறை சரணாகதி வேண்டியுள்ளார்.

அரியேறே! என் அம்பொற் சுடரே!” (6.8.7)  என்ற இந்த பாசுரத்தில், “தரியேன், இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே” என்று சரணாகதி கேட்டு இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

வானமாமலையில் இருந்து குடந்தை

இதற்கு முந்தைய பதிகத்தில், ஆழ்வார் வானமாமலை பெருமாளிடம் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவு இலேன்” (5.7.1) என்றும் “ஆறெனக்கு  நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” (5.7.10) என்றும் சரணாகதி வேண்டினார். அப்படி இருந்தும் பெருமாள் முகம் காட்டாமல் இருந்ததைக் கண்டு, ஆழ்வார், திருக்குடந்தை ஆராவமுதனை சேவிக்க சென்றார் ஏன் என்றால்,

  • மோக்ஷத்திற்கு அவன் பாதம் தவிர வேறு ஒன்றும் வழி கிடையாது (ஆகிஞ்சன்யம்) என்றும்,
  • வேறு யாரும் மோக்ஷம் அருள முடியாது (அநன்ய கதித்துவம்)  என்பதையும்
  • பெருமாள் ஸ்வதந்திரன்  என்பதையும்,
  • அவர் அடியார்களுக்காகவே உள்ளார் என்பதையும்
  • அவர் எந்த தேசத்தில், எந்த காலத்தில்  ஒரு ஜீவாத்மாவை அங்கீகரிக்க வேண்டும் என்பதை அறிவார் என்பதையும்,   ஆழ்வார் உணர்ந்தவர்.

இந்த பதிகத்தில்

இந்த பதிகத்தின் பாசுரங்களை கீழ்கண்ட வலைத்தளங்களில் காணலாம். அவர்களுக்கு எங்கள் நன்றி.

Click to access aaraavamude.pdf

உடலானது அன்பினால், நீராகி கரைந்து உருக்குகின்ற அழகுடன் விளங்கும்படியாக திருக்குடந்தை என்னும் திவ்ய தேசத்தில் சயனித்திருக்கின்ற பெருமாளை, “ஆராவமுதே”, “ஏரார்கோலம்” (5.8.1) என்பவைகளால் இனிமையும்,  “செந்தாமரைக்கண்ணா” (5.8.1) என்பதால் அழகையும்,  சேர்த்து வர்ணிக்கிறார்.

ஆராவமுதே என்பதன் மூலம் உண்ண உண்ணத் தெவிட்டாத திருப்தியும், பிறவாத வரம் தருவதுமான அமுதத்தைப் போன்றவனே என்று ஆராதிக்கிறார். இத்திருப்பெயரின் இனிமையின் மிகுதி அவனாலேயே தனியே அநுபவிக்கப் முடியாது என்பதை, இராமாயண காட்சியில் ராமன், சீதையோடு, பெரிய பெருமாளை ஆராதிக்கச் சென்றதை சொல்லி தன ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.  மால் என்றால் பெரியோன் என்றும், நெடுமால் (5.8.1) என்றால், “மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ!”  (8.4.5) என்பதுபோல் சொல்கிறார். 

ஆழ்வார் தன்னுடைய ஆத்மா இந்தச் சரீரத்தோடு சேர்ந்து வாழ்ந்திருக்கும் நாட்கள் எவ்வளவு உண்டோ,  அவ்வளவு நாட்களும் அவனுடைய திருவடிகளைப் பிடித்துக்கொண்டே நடக்கும்படி திருவருள் புரிய வேண்டும் என்று மூன்றாவது பாசுரத்தில் (5.8.3) வேண்டுகிறார்.  

ஆழ்வார், திருக்குடந்தை  பெருமாளை நோக்கி, “எல்லா உலகங்களையும் உடைய ஒப்பற்ற மூர்த்தியே! உன்னைக் காணும்பொருட்டு நான், மனம்  தடுமாறாமல் ஆகாசத்தை நோக்கி அழுவேன், தொழுவேன்”   என்று நான்காவது (5.8.4) பாசுரத்தில் சொல்கிறார். ஆகாசத்தை நோக்கி அழுவதற்கான  காரணங்கள் கீழ்கண்டவைகளாக  இருக்குமோ?

  • ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தமக்கும் வானில் வந்து தோன்றுவானோ என்று நினைத்திருக்கலாம்.
  • அசோகவனத்தில், அனுமானின் சப்தம் வரும் திசையை நோக்கி, சீதாபிராட்டி, வாயுபுத்திரனான அநுமானை மேலே உதிக்கின்ற சூரியனைப் பார்த்த மாதிரி, தமக்கும் ஒரு செய்தி வந்திடாதா என்று எதிர்பார்த்து இருக்கலாம்.
  • ஸ்ரீ ராமர் காட்டுக்கு செல்லவேண்டும் என்று கேட்ட போது,  வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சுவிட்டு, ஆகாசத்தை நோக்கிய கண்களை உடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறியதை போல், தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்தி இருக்கலாம்.
  • அநன்ய கதித்துவத்தை (வேறு யாரும் மோக்ஷம் அருள முடியாது) எண்ணியபடி, ஒரு பற்றுக்கோடு இல்லாதிருந்த தன்னுடைய  நிலையை நமக்கு சொல்லி இருக்கலாம்.

ஆழ்வார், பெருமாளுடைய இனிமையை அநுபவிக்கிற தனக்கு, ஒரு பிரிவு வாராதபடி அவனை அடைவதற்குத் தடையாகவுள்ள விரோதிகளையும் போக்கி,  அவனது திருவடிகளைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும் என்று ஆறாவது பாசுரத்தில் (5.8.6), அவனிடம் வேண்டிக்கொள்ளுகிறார்.    “வாழ் தொல் புகழார் குடந்தை” (5.8.6) என்பதன் மூலம், அவனை விட்டு “பிரிந்திருக்கும் நாள் எத்துணை” என்று கேட்க வேண்டாதவர்கள் வாழும் இடம் திருக்குடந்தை என்று இந்த தலத்தின் பெருமையை கூறுகிறார். ஏன் என்றால், அவர்களுக்கு சேவை சாதிக்க ஆராவமுதன் இங்கேயே இருக்கிறான்.

மேலே பார்த்து போல் ஏழாவது பாசுரத்தில் (5.8.7), ஆழ்வார் திருக்குடந்தை ஆராவமுதனிடம், சரணாகதி வேண்டுகிறார்.

சரீரம் தளர்ந்து தன் உயிரும் உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாகிறது என்றும், மனம் தளராமல் உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் மாறாமல் அவன் திருவடிகளை பிடித்துக்கொண்டு போவதற்கு அவன் சம்மதம் வேண்டும் என்றும் எட்டாவது (5.8.8) பாசுரத்தில் வேண்டுகிறார்.

தன்னை உடன்படச் செய்து அவனது திருவடிகளிலே சேரச்செய்த ஆராவமுதனை, தான் காணும்படி வர வேண்டும் என்று ஒன்பதாவது (5.8.9) பாசுரத்தில் வேண்டுகிறார். செழு மாமணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷ ரத்தினங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நம் ஆச்சார்யர்கள் திருகுடந்தையின் பெருமையை கூறுவார்கள்.

ஆழ்வார், பெருமாள் இன்னும் தரிசனம் தராததால், பெருமாளிடம் அவருக்கு அடிமைப்பட்டும் இன்னமும் எத்தனை திருப்பதிகள்  பலம் இல்லாதவனாக  இந்த உலகத்தில், அலைந்து திரிவேன் என்று தன்னுடைய ஆற்றாமையை பத்தாவது (5.8.10) பாசுரத்தில் தெரிவிக்கிறார்.

திருக்குடந்தையிலே சென்று தம் எண்ணம் நிறைவேறாமையாலே, அங்கிருந்து, திருவல்லவாழ் என்ற திவ்யதேசத்திற்கு ஆழ்வார் புறப்பட்டார்.

வைகுந்தம் செல்லும் வழியிலும் ஆராவமுதன்

நம்மாழ்வார் திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் என்ற பெருமாளைத்தான் கடைசியாகப் பாடிவிட்டு மோக்ஷத்திற்குச்(ஸ்ரீவைகுந்தம்) சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் திருப்பேர்நகர் தான். என்றாலும், நம்மாழ்வார் வைகுண்டம் செல்லும் பொழுது திருக்குடந்தை சாரங்கபாணி பெருமான் கோபாலனாக காட்சி தந்து அருளியதை கடைசி பத்தில் (பத்தாம் பத்து) ஒன்பதாவது பதிகத்தில் பாடி உள்ளார்.

வைகுண்டம் செல்லும் வழியில் ஒரு ஜீவாத்மாவின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை ஸ்வாமி நம்மாழ்வார் “சூழ்விசும்பு அணி முகில் (10.9) என்ற பதிகத்தில் நன்கு விளக்கி உள்ளார். வைகுண்டத்தை அடையும் புதிய ஜீவாத்மாவை மேகக்கூட்டங்களும், கடல் அலைகளும் ஆர்ப்பரித்து, சந்திர சூரியர்கள் ஒளி வெள்ளம் கொடுத்து, தேவலோக பெண்களும், தேவர்களும், முனிவர்களும், நித்யர்களும், முக்த ஆத்மாக்களும், பெருமாளின் வாயிற்காப்பாளர்களும், வரவேற்பதை சொல்லும் ஆழ்வார்,  ஸ்ரீ வைகுண்டம் செல்லும் வழியில் ராஜகோபாலனாக காட்சி தந்த ஸ்ரீ ஸாரங்கப்பாணி பற்றியும் சொல்கிறார்.

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும், தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல், கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி, குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே   (10.9.7)

“வைகுந்தத்திற்கு வரும் இந்த ஜீவாத்மா, குடந்தையில் ஒளி வீசும் கிரீடத்துடன் காட்சி தரும் கோபாலனும், பார்கடலுள் ஆதி சேஷன் படுக்கையில் பள்ளிக் கொண்டு இருப்பவனும் ஆகிய நமது கேசவனின் மற்றொரு உன்னதமான தொண்டன்” என இனிமையாக பாடி வரவேற்பார்கள் என்பது மேலே சொன்ன பாசுரத்தின் பொருள்.

இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட (ஸ்ரீவைகுந்தம்) திருக்குடந்தை ஆராவமுதன்  மறக்கமுடியாதபடி அநுபவம் கொடுத்தது தெரியவரும்.

நம்மாழ்வார் வழியில் திருமங்கையாழ்வார்

மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்த”வர் என்று சொல்லப்படுபவர் நாம் பின்னால் பார்க்கப்போகும் ஒரு ஆழ்வார் ஆன திருமங்கை ஆழ்வார் என்பவர் ஆவார்.  திருமங்கை ஆழ்வாரும், நம்மாழ்வாரைப் போல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திவ்யப்ரபந்த பாசுரங்கள் பாடி உள்ளார். நம்மாழ்வார், பெருமாள் மேல் நான்கு பிரபந்தங்கள் பாடியபடி, திருமங்கையாழ்வார்  ஆறு பிரபந்தங்கள் பாடி உள்ளார்.

திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவுள்ளத்தையே பின்பற்றிப் பேசுகிறவராதலால், நம்மாழ்வார்க்குத் திருக்குடந்தையில் அளவுகடந்த அபிமானம் உண்டு என்பதை அறிந்தே தன்னுடைய எல்லா (ஆறு) பிரபந்தங்களிலும் திருகுடந்தையைச் சொல்லி உள்ளார். அவற்றைப் பற்றி திருமங்கை ஆழ்வாரைப் பற்றி சொல்லும்போது பார்க்கலாம்.  நூற்றியெட்டு திவ்யதேசங்களில் எண்பதற்கும் மேற்பட்ட திவ்யதேச பெருமாள்களைப் பாடிய திருமங்கையாழ்வார், தனது இறுதி பிரபந்தத்தில், இறுதியாக சொல்லி முடித்த பெருமாள், திருக்குடந்தை ஆராவமுதனே ஆவார்.

திருகுடந்தை ஆராவமுதனின் பெருமைகளை ஒருவாறு இங்கே நிறுத்திக் கொண்டு, மேலும் சில திவ்யதேசங்களைப் பற்றி நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொல்வதை தொடர்ந்து வரும் வலைப்பதிவுகளில் காண்போம்.

————————————————————

Beginning

Now, we are trying to understand the experiences of Namazhwaar with some of the divya desams in his Thiruvaaimozhi.   First we talked about Thiruvenkadam, followed by Srirangam.  In this weblog, let us try to look into the experiences of Swami Namazhwaar with Thiru Aaravamudhan in Thiru Kudanthai, or now known as Kumbakonam.

Eleven out of twelve Azhwaars compiled hymns on Srirangam Ranganathar and ten Azhwaars compiled hymns on Thiruvenkadam Venkatachalapathi.   Next comes Thirukudanthani (Kumbakonam) Saarangapani temple, on which seven Azhwaars compiled hymns on. Peyazhwaar, Boothathazhwaar, Thirumazhisai Azhwaar, Namazhwaar, Periyazhwaar, Aandaal and Thirumangai Azhwaar are the seven Azhwaars who compiled hymns on this divya desam.

The glory that was demonstrated to Namazhwaar by Perumal in Thirukudanthai is called Maadhuryam, which means, love, affection and sweetness. Maadhuryam means that He has qualities which make Him lovable and likable by each and everyone. It is natural for anyone to reciprocate the love and affection, shown on him/her. Perumal is affectionate to those who show affection towards Him, and also who are good but fight against Him, like Beeshmar in Mahabharatham.   He is also good to even people like Sisupalan, in Mahabharatham, who was not only bad but also fought against Him with an intention to kill Him. So His Maadhuryam, will attract  even  His  enemies, towards Him.  This can be seen from the hymn by Namazhwaar (7.5.2)

“Ketpaar Kesavan keerthi allaal, matrum ketparo, ketpaar sevi sudu keezhmai vasuvagale vaiyum, setpaal pazham pagaivan Sisupalan, thiruvadi thaatpaal adaintha thanmai arivaarai arithinthume ? (7.5.2) 

The meaning of the above hymn is “Sisupalan, the arch-enemy of Krishna would utter lowly words of abuse, which would blister the ears, yet he attained the Lord’s feet. Knowing these, would anyone listen to anyone other than Kesava’s glories?”

The Perumal who gave us Divya Prabantham

Dravida Sruthi Dharsakaya namah” is one of the prayer lines for Thirukudanthai Aaaravamudha Perumal.    The meaning of the above  line is that it is He who showed us the Dravida Vedham.  Sri Nathamunigal was able to retrieve Divya Prabantham, because, Swami Namazhwaar’s “aaravamude” (5.8) pathigam on Sri Aaravamudhan. Divya Prabhandham is a compilation of about 4000 hymns compiled on Vishnu by the twelve Azhwaars.   So this temple, Thirukudanthai is often referred to as the rebirth place of Divya Prabhandham in our tradition.

Madhurakavi Azhwaar, wanted to spread the glories of his guru, Namazhwaar, and also wanted the whole world to get the benefits from the hymns sung by Swami Namazhwaar.   He did a great service by travelling from one town to another and tried to make Thiruvaaimozhi and Namazhawaar, known to more people.   In spite of his great efforts, over a period of time and after Madurakavi Azhwaar’s period, the hymns were slowly disappearing from usage, except in a few places. Thirukudanthai Aaravamudhan,  the hymns compiled by Namazhwaar on this Perumal, namely, Aaravamudhe pathigam or subsection (5.8) and Kanni Nunn Siru Thambu pathigam by Madhurakavi Azhwaar are the important reasons for us to get the Divyaprabandham back in usage.

Centuries later, from the period of Nammazhwar,  one day , one of our acharyaans, Sri Nathamuni, was in  Veeranarayana Perumal temple, in Kattumannaarkudi, formerly known as Veeranarayanapuram.   At that time, a few devotees, offered prayers to Perumal, by singing the hymns sung by Swami Namazhwaar on Thirukudanthai Aaravamudha Perumal.   These eleven hymns started as “Aaravamudhe adiyen udalam ninbal anbaaye” (5.8.1) and completed with “Oraayirathul ippathum, mazhalai theera vallaar kaamar maaney nokkiyarke” (5.8.11).  Nathamunigal was attracted by the sweetness of these hymns, requested them to sing the remaining songs, as they mentioned that these were ten out of the one thousand hymns. But they did not know any other hymns.

Nathamuni requested them to sing the same hymns again and got the clue from the words “Kurugoor Sadagopan” (5.8.11) in the last hymn.   Kurugoor is now known as Azhwaarthirunagari (Navathirupaathi – Thoothukudi district in Tamilnadu). Nathamunigal went to Kurugoor and got the blessings of Madhurakavi Azhwaar through some of his disciples, by reciting “kannni nun siru thaambu” prabhandham, sung by Madurakavi Azhwaar, several thousand times and got the prabandhams through the blessings of Swami Namazhwaar.  Nathamunigal was expecting to get one thousand hymns, but ended up with getting all the hymns by all Azhwaars, totaling close to four thousand hymns. Nadhamunigal then compiled them together and made it as “Nalaayira Divya Prabandham” , meaning Four Thousand hymns on Perumal and Thayaar. So we got back the hymns in Tamil, the dravida language, carrying the meaning equivalent to the vedas, which are  in Sanskrit and for that we have to thank the following :

One of the five surrenders

The primary  purpose of birth of Azhwaars when they were born in this word, was to translate the Vedas, that were created by Him in Sanskrit, into Tamil, the Dravidan language, so that many more people could understand and follow the Vedas, and by doing so,  help them to attain Moksham.  Divya Prabhandams were the result of the Azhwaars enjoying the God, His Beauty,  Actions and also brought the contents of  Vedas in Tamil. Azhwaars enjoyed Him so much, they requested Paramathmaa for abode (Moksham). Namazhwaar’s request for moksham or abode, was on five different occasions and one such was through a set of hymns  sung on Aaravamudha Perumal of Thirukudanthai.

Thiruseereevaramangai, known today as Vaanamaamalai in Thirunelveli district, Thirukudanthai, known today as Kumbakonam, Thiruvallavaazh in Kerala and Thiruvenkadam, which we have seen earlier, are the four divya desa Perumals on whom Namazhwaar compiled hymns on and requested for Moksham/Saranakathi.    Similarly Namazhwaar had compiled one more set of hymns, the fifth one, on Sri Krishna, in Vibhavaavathaaram, to request for Moksham or abode.

In his request for abode, Namazhwaar started the hymn with “ariyere! en am por sudare! “ (6.8.7) and completed with “thariyen, ini, un saranam thanthu en sanmam kalaiyaaye“, meaning that he could not bear the mortal life anymore, and requested Him to shower His blessings and get Azhwaar rid of his birth.

From Vaanamaamalai to Thirukudanthai

In the previous subsection, (Pathigam), Azhwaar had made total surrender to Vaanamaamalai Perumal, by compiling the hymns starting with “Notra Nonbu illen, nun arivu illen“(5.7.1) and continued as “aarenaku nin paathame saranaagath thanthozhinthaai” (5.7.10).   The meaning for the above is that Azhwaar did not do any special service to reach Him, and he neither had any special knowledge in the hymn 5.7.1.  In the hymn 5.7.10, Azhwaar says that He had given His feet to him as his sole refuge and path and he did not have anything to  give in return”.   Inspite of all these, Perumal did not show His face or agree to the request of Azhwaar. Still Azhwaar proceeded to Thirukudanthai. The following could be the reasons for the same, as Azhwaar understood :

  • To get abode, the only path is by getting through His holy feet, this is known as Aakinchanyam
  • No one else, other than Paramathmaa or Narayana could give abode (ananya gathithvam)
  • Perumal is swathanthran, meaning He is totally Independent
  • Perumal is there only for His devotees and He would do anything for His devotees
  • Paramathmaa or Perumal knows when and where to recognise a jeevathama

High level summary of this subsection (pathigam)

The complete listing of the hymns can be seen from any of the following websites and our thanks to them.

Click to access aaraavamude.pdf

In the first hymn, Azhwaar said that the divyadesa Perumal of Thirukudanthai, namely, Aaravamudan, in reclining position, was so handsome that He could melt his body through His love and affection.  He coined the phrases like “Aaraavmudhe” and “Yeraar Kolam” (5.8.1) to represent sweetness and “senthaamarai kanna” 5.8.1 to represent His beauty.

Azhwaar adored Him as Aaravamudhe, meaning He being a heavenly immortal delicacy, He would be still so sweet, in spite of consuming more and more of Him.  The sweetness of this name, Aaraavamudhe is so powerful that He Himself could not take it all alone. This can be seen from Ramayana situation, when He went along with Seetha  to offer His prayers to Sri Ranganatha Perumal.    Azhwaar used the word Nedumaal, (5.8.1),  where maal would mean that He being supreme and Nedumal could mean that He being supreme to even those in celestial world.   This can be seen from “Manisarku thevar pola, thevarkum thevavo” (8.4.5).

In the third hymn (5.8.3) of this subsection, Azhwaar requested Paramathmaa to bless him and allow Azhwaar to hold His feet and spend the entire time all along with Him, as long as He needed to stay in this world.

In the fourth  hymn, (5.8.4), Azhwaar addressed Thirukudanthai Aaraavamudhan, as an unparalleled Lord of all the worlds and expressed his extreme desire to see Him by looking at the sky, got disturbed, then wept and continued to offer his prayers.  The reasons for Azhwaar to look up at the sky may be one or combination of the following :

  • Azhwaar would have thought that Perumal would appear in the sky, like how He did for Sri Gajendran, the elephant who was caught by a crocodile.
  • Azhwaar would have expected a message from Perumal, like how Sri Seethadevi looked up at the top towards the rising sun, in Ashokavanam, the direction from which Hanuman was reciting the Rama Namam.
  • When the old Dasarathan, the father of Sri Rama, heard that Rama should be sent to the forest, he took a deep breathe and cried in sadness and sorrow by staring at the sky.  Azhwaar might have felt the same way, when he could not get the dharsan of Perumal.
  • Azhwaar might have expressed to us, his helplessness of having no one,   ananyagathithvam. 

In the sixth hymn (5.8.6), Azhwaar requested Perumal that He should give directions for Azhwaar to attain His holy feet, by removing the hurdles so that he could continue to enjoy the experience of having continuous dharsan of Paramathmaa. In this hymn, Azhwaar showered a great deal of praise to the citizens of Thirukudanthai, by addressing them as “vaazh thol pugazhaar kudanthai“, (5.8.6), meaning “men of everlasting glories live in Kudanthai”.   Since Aaravamudan is in Thirukudanthai, the people there do not need to keep asking Him, as  how long would it take for them to get abode or moksham.

As we saw earlier, in the seventh hymn (5.8.7), Azhwaar requested Aaraavamudha Perumal to accept his total surrender.

In the eighth hymn (5.8.8), Azhwaar requested Perumal for his concurrence to hold on to His holy feet  relentlessly so that he would be able to stick to his loyalty that His holy feet would provide shelter, as he was getting old and about to leave this world.

In the ninth hymn (5.8.9), Azhwaar requested Perumal to come and appear before him so that he could see Aaravamudhan, who made Azhwaar to hold on to His holy feet.   In this hymn, Azhwaar had used a phrase “Sezhu Maa manigal serum Thirukudanthai” to give credit to Kumbakonam, for which our acharyaars used to give the explanation that Thirukudanthai was a place where gems like Aaravamudan and Thirumazhisai Piran would meet.

In the tenth hymn (5.8.10), Azhwaar expressed his inability, that he could not get the dharsan of Perumal in spite of surrendering totally to Him.  He had concerns on the number of divya desams that he needed to go before he could get abode from Him.

Since he could not get what he wanted in Thirukudanthai, Azhwaar started off to a place called Thiruvallavaazh in Kerala.

Aaravamudan, on the way to Srivaikuntham

The last divya desam perumal on whom, Namazhwaar had compiled hymns on, in this world and went abode  is Thirupernagar Appakudathaan, now known as Koviladi near Tiruchirappalli, Tamil Nadu.  Even though this was the last divya desam perumal on whom Namazhwaar compiled hymns on, he had mentioned about Thirukudanthai Sarangapani perumal, who appeared as Gopalan on his way abode or Moksham. Azhwaar mentioned  this  in the final pathu (Tenth ten), ninth subsection (pathigam).

Swami Namazhwaar explained  the experience of the jeevathma’s travel from this world to Vaikuntham (abode or moksham) in a subsection (Pathigam) called “soozh vismbu ani mugil“(10.9).   The jeevathma, before reaching Vaikuntham, would be welcomed by bunch of clouds, the waves from the sea, the bright light from the Sun and the Moon, the celestial women, men, sages, nithyasoories, (those who render service to Perumal all times), the other jeevathmas that reached abode and the guards at the gates.   With all that swami Namazhwaar also mentioned about the appearance of Sri Sarangapani/Sri Aaravamudan, as Sri Rajagopalan.

madanthaiyar vaazhuthalum, marutharum vasukkalum, thodarnthu engum thothiram sollinar thodu kadal kidantha kesavan kilaroli manimudi, kundanthai en kovalan kudi adiyaarke (10.9.7)

The meaning of the above hymn is “the jeevathma that is coming to Srivaikuntham, is another excellent servant of our perumal, Sri Kesavan, who is reclining on Adiseshan,(the multi headed snake) as His bed in the milky ocean and who is in Thirukudanthai with a shining crown”.

From this we can understand that Thirukudanthai Aaravamudan had given an unforgettable experience to Swami Namazhwaar, even after he reached Srivaikuntham or abode.

Thirumangai Azhwaar on Namazhwaar’s footsteps

Thirumangai Azhwaar, the last in the list of Azhwaars, about whom we will discuss in one of our future weblogs, is known for following the footsteps of Swami Namazhwaar, as the saying goes “Maaran panitha tamil maraiku Mangaiyar kon aaru angam koora avatharithavar“, meaning that Thirumangai Azhwaar (Mangaiyar kon) was born to further describe the tamil vedas, given by Maaran, (Swami Namazhwaar), through his six prabandhams. Like Swami Namazhwaar, Thirumangai Azhwaar also compiled more than one thousand hymns in Divya Prabantham. While Namazhwaar has compiled four prabandhams, Thirumangai Azhwaar has compiled six prabandhams.

Since Thirumangai Azhwaar followed the concepts of Swami Namazhwaar very closely, he could understand and appreciate the love and affection Namazhwaar towards Thirukudanthai Aaravamudan.   So Thirumangai Azhwaar had mentioned about Thirukudanthai in all his six prabandhams. As we said earlier, we will cover them in our future weblogs when we talk about Thirumangai Azhwaar.  Thirumangai Azhwaar had compiled hymns on more than eighty divyadesa perumals out of the total of one hundred eight divya desams.   The last divya desam perumal mentioned by Thirumangai Azhwaar in his last prabantham is Thirukudanthai Aaraavamudan.

With this, let us try to put a hold on to the glories of Thirukudanthai Aaravamudan and move on to the other divyadesa perumals on whom Namazhwaar had compiled hymns in Thriuvaaimozhi in our coming weblogs.

2 Comments on “Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்

    • Dear Mr Pathy, thank you very much for your kind words; comments like these give us more motivation to keep going . Thanks once again with best regards adiyen

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading