A Simple Devotee's Views
For English version, kindly click here, thanks
நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம்.
முன்பு பார்த்த முன்னுரைகளில், பெருமாள் ஒவ்வொரு பத்திலும் ஆழ்வாருக்குக் காட்டிய குணநலன்களையும், அதேபோல் ஒவ்வொரு பத்து அருளியபோது ஆழ்வாருக்கு இருந்த மனநிலையும் பார்த்து உள்ளோம். திருவாய்மொழி அருளியபோது ஆழ்வாருக்கு இருந்த மனநிலையை, நம் ஆச்சார்யார்கள், இராமாயணத்தில் வரும் பரதனின் மனநிலையோடு ஒப்பிட்டு பார்ப்பதைக் இங்கே காண்போம். இதற்கு நாம் ஸ்வாமி நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்கள் பற்றியும், அவைகளை அருளியபோது அவரின் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் பார்க்கவேண்டும். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்பதை நினைவில் கொள்ளவும்.
இராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கு முதல் நாள், அவனது தந்தையாகிய தசரத சக்ரவர்த்தி, கைகேயிடம் தான் முன்பு கொடுத்த வரங்களை நிறைவேற்றுவதற்காக இராமபிரானின் தம்பியாகிய பரதனுக்கு பட்டாபிஷேகம் என்றும் இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டு மயங்கி கிடக்க, பரதன் அயோத்திக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த நேரம். இராமன் அயோத்தியின் அரசனான பின் அவனுக்கு இன்னும் நிறைய கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று நெஞ்சில் ஆசைகளை சுமந்துகொண்டு தனது மாளிகைக்குள் சென்றான். அப்போது அவனது தாயாகிய கைகேயி, அவனை “ராஜாவே” என்று அழைத்த போது அவன் மிகவும் வருந்தி, மனம் பட்டபாடு எப்படி இருந்ததோ அப்படிதான் திருவிருத்தம் என்ற பிரபந்தத்தை அருளிய போது நம்மாழ்வாரின் மனநிலை இருந்திருக்கும் என்று நம் ஆச்சார்யர் கூறுகிறார்கள்.
அதே பரதன், திருச்சித்திரகூட மலையிலே ஸ்ரீ ராமர் இருக்கிறார் என்று அறிந்து, அவரை நேரிடையாக பார்க்க தானும், தன்னைப் போல் ஸ்ரீ ராமபிரான் ஊரில் இல்லாததால் அவனை நினைந்து தவிப்பவர்களையும் கூட்டிக்கொண்டு போகும் போது, பரதனின் மனம், தன்னுடைய வருத்தத்தை பார்க்க மாட்டாத ஸ்ரீ ராமன், அயோத்திக்கு திரும்பி வந்து விடுவார் என்ற ஒரு நம்பிக்கையுடனும் ஒரு கணமும், அப்படி இல்லாமல், தன்னுடைய விருப்பத்தை மறுத்துவிடுவார் என்ற சந்தேகத்துடன் மற்றொரு கணமும், அப்படியும் இப்படியும் அலைபாய்ந்து கொண்டு இருக்கும் தவிப்பைப் போல் திருவாசிரியத்தை அருளிச் செய்யும் போது சுவாமி நம்மாழ்வாரின் மன நிலை இருந்திருக்கும் என்று நம் ஆச்சார்யர் கூறுகிறார்கள்.
பரதன், நந்திக்கிராமத்தில் ‘ஸ்ரீ ராமபிரான் வருவார்’ என்ற மிகப் பெரிய ஆவலோடு, அரசையும் நடத்திக்கொண்டு, பதினான்கு ஆண்டுகள் ஆசையையும் வளர்த்துக் கொண்டு இருந்தார் போலே பெரிய திருவந்தாதி அருளிச் செய்யும் போது நம்மாழ்வாரின் மனநிலை இருந்திருக்கலாம் என்று நம் ஆச்சார்யர் கூறுகிறார்கள்.
இறுதியாக ஸ்ரீராமன் மீண்டும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது, தன்னுடைய விருப்பத்தை ஸ்ரீ ராமன் நிறைவேற்றியதை உணர்ந்த பரதனின் மனம் மிக்க சந்தோசம் அடைந்ததைப் போல், திருவாய்மொழி அருளிச்செய்த காலத்தே நம்மாழ்வாரின் மனநிலை இருந்திருக்கலாம் என்று நம் ஆச்சார்யர்கள் சொல்வார்கள்.
இப்படியாக இந்த பிரபந்தங்களை அருளிச் செய்த காலத்தில் ஆழ்வாரின் மனநிலைகளை ஸ்ரீ பரதாழ்வானுக்குத் இருந்த மனநிலைகளோடு ஒப்பிட்டு சொல்வது சுவாரஸ்யமான ஒன்று.
பரமாத்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருப்பினும், (விஷ்ணு சஹஸ்ரநாமம்), துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு நாமங்கள் இருப்பினும், (கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப மற்றும் தாமோதர), வியாபக நாமங்களாக (வியாபகம் என்றால், விரிந்து பரந்து எங்கும் இருப்பது). மூன்று (விஷ்ணு, வாசுதேவ, நாராயண) சொல்லப்பட்டாலும், ஆழ்வார் நாராயணன் என்ற நாமத்தையே திருவாய்மொழியில் அறுதி இட்டு சொல்லி உள்ளார்.
“வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.” என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம் இங்கே குறிப்பிடலாம். இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும் வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார். ‘வனமாலி என்ற மாலையை அணிந்து கௌமோதகி என்னும் கதை, பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதர்சன என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள் ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.
கண்ணன், இராமன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் மற்றும் வராகன் போன்ற அவதார நாமங்களை ஆழ்வார் திருவாய்மொழியின் பல இடங்களில் உபயோகித்து இருந்தாலும், ‘நாராயணன்’ என்ற நாமமே பரமாத்மாவின் முக்கியமான விஷேச குணநலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நாமம் ஆகும். அதனால்தான், நாராயண நாம அர்த்தத்தை, நாம், நம் ஆச்சார்யனிடம் கேட்டு தெரிந்து .கொள்ள வேண்டும்.
திருவாய்மொழியின், முதல், இடை, முடிவு எல்லாம் பரமாத்மாவான நாராயணனையே சொல்லும்.
முதல் திருவாய்மொழியிலே ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று தொடங்கி, நாராயணனே பரம்பொருள் என்பதற்காக ‘நாராயண‘ சப்தத்தின் பொருளை முதல் பதிகத்திலேயே அருளிச் செய்தார். ‘நாராயணன்’ என்பதின் பொருள், தனக்கு நிகரோ, மேம்பட்டவர்களோ இல்லாதவன், எல்லா நல்ல குணங்களும் கொண்டவன், எல்லா உலகங்களுக்கும் தன்னிகரில்லாத தலைவன் என்பதாகும். ‘வண்புகழ் நாரணன்’ (1.2.10) என்று இரண்டாம் பதிகத்தில் தொடங்கி, பின் ‘செல்வ நாரணன்’(1.10.8), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(2.7.2), ‘திருநாரணன்’ தாள் காலம் (4.1.1) என்று ஆழ்வார் திருவாய்மொழி முதல் சில பத்துகளில் நாராயணன் பெயரைக் கூறி உள்ளார்.
திருவாய்மொழி திருமந்திரத்தின் அர்த்தத்தை சொல்கின்றன என்று நம் ஆச்சார்யர்கள் சொல்வார்கள். திருவாய்மொழியின் இடையில் வருகின்ற ஆறாம் பத்து (6.10) திருமந்திரத்தின் முதல் பதமான “ஓம்” என்பதனையும், மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் 7.1 இரண்டாம் பதமான “நம” என்பதனையும் மற்றும் 7.2 மூன்றாம் பதமான நாராயணாய என்பதனையும் குறிக்கும்.
கங்குலும் பகலும் (7.2) என்ற பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் மூலம், ஆழ்வார் தான் திருவாய்மொழியில், பத்து பத்துக்களால் என்ன சொல்லவந்தோம் என்பதை தேறிய பொருளாக தெரிவிப்பதாலும், முன்பு சொன்னதுபோல், திருவாய்மொழி நாரயணனுக்கே என்பதாலும், திருவாய்மொழி இடையிலும் நாராயணனே உள்ளதாக கூறப்படுகிறது.
‘காராயின காள நன்மேனியன் நாராயணன்’ (9.3.1), ‘திண்ணம் நாரணம்,’ (10.5.1) ‘வாழ் புகழ் நாரணம் (10.9.1) என்று திருவாய்மொழி இறுதியிலும் நாரணனையே கூறி ஆழ்வார் முடிக்கிறார்.
மேலே சொல்லியவை ஒரு சில உதாரணங்களே, இருப்பினும், ஆழ்வார் திருவாய்மொழி முழுவதும் நாராயணனைக் கொண்டே சுவாசித்து உள்ளார்.
முன்பு சொன்னது போல், திருவாய்மொழி ஒரு மிகப் பெரிய கடல். இன்னும் சிறிது காலம் அதன் சிறப்புகளிலேயே தொடரலாம் போலும்.
நன்றி : ஈட்டின் தமிழாக்கம், சென்னைப் பல்கலைக் கழகத்து ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் வித்துவான் பு.ரா.புருஷோத்தம நாயடு ஆக்கியது
We are learning or discussing about Namazhwaar’s Thiruvaaimozhi. As we saw earlier, among the many explanations available for Thiruvaaimozhi, Eedu Mupathaaraayirapadi, (Unparalleled Thirty Six thousand words) has three introductions to this prabantham, namely, Thiruvaaimozhi. We did see some of them in our earlier weblogs, 1 and 2. Let us try to discuss some more points from the introductory notes in this weblog.
We have seen in the previous introduction about the ten different characteristics or glories that were displayed by Paramathma to Azhwaar for each pathu or subsection. Similarly we have also seen the status of Azhwaar’s mind, when he compiled each subsection or pathu. Our acharayaars have also compared the state of mind of Swami Namazhwaar, when he compiled Thiruvaaimozhi with that of Sri Bharathan of Ramayanam. For that we need to take note of all the prabanthams that were compiled by Namazhwaar and what was the state of his mind when he delivered each prabantham. As we have seen earlier, Swami Namazhwaar has compiled four prabhandhams and they are Thiruvirutham, Thiruvaasiriyam, Periya Thiruvanthaadhi and Thiruvaaimozhi.
The day before the coronation of Sri Rama as the Crown Prince of Ayodhya, His brother Bharathan was coming towards Ayodhya and was thinking about doing more services to Sri Rama after He is crowned. Meanwhile, the king Dasaratha, had to fulfill two vows, which he had promised to Kaikeyi, Bharathan’s mother, earlier in their life. Kaikeyi used this opportunity and asked Dasaratha her wishes. One of which was to make Bharathan as the king of Ayodhya and the second one was to force Rama to go out of the country and live in the forest for 14 years. Dasaratha had to agree to these wishes and Kaikeyi on seeing Bharathan entering the palace, addressed him as the King. Bharathan was shocked and heart broken when he heard those words. Our acharyaars say that Swami Namazhwaar’s mind might also be in a similar state when he compiled the prabantham Thiruvirutham, to that of Bharathan when he was addressed as King by his mother.
When Sri Raman was stationing Himself in Chithrakoot, Bharathan took a trip to Chitrakoot along with those who could not tolerate the state of Ayodhya without Raman. Bharathan’s mind was thinking about couple of things. One Sri Rama would never allow anyone to suffer and if He came to know that Bharathan was suffering because of he was not with Sri Rama, He could change His mind and come back to Ayodhya. And at the same time, Bharathan was also thinking that Sri Rama would convince him that He should stay back in the forest and reject Bharathan’s request Thus Bharathan was in two extremes and was not sure at what Sri Raman would do. Our acharyaars say that Swami Namazhwaar might also be in a similar state, when he compiled Thiruvaasiryam.
Again we take Bharathan’s example. After agreeing with Sri Rama that he should return to Nandhigramam and rule Ayodhya from there, Bharathan for those fourteen years started nurturing his wishes to serve Sri Rama and hoping that day would come soon. Our acharyaars compare Bharthan’s mind at that time with that of Swami Namazhwaar, when he compiled the Periya Thiruvanthaadhi.
Finally, when Sri Rama returned to Ayodhya and crowned as the king and fulfilled the wishes of Bharatha, he was extremely happy and satisfied. Namazhwaar might be in a similar mindset, when he compiled Thiruvaaimozhi, as per our acharyaars.
Thus, Swami Namazhwaar’s state of mind is compared with that of Sri Bharatha at various stages of his life and this is a very interesting comparison.
There are thousands of names for the Paramathma (Vishnu Sahasara Naamam). Of which there are twelve names of Vishnu, which are called Dwadasa Namangal. (Kesava, Narayana, Madhava, Govinda, Vishnu, Madhusudhana, Thrivikrama, Vaamana, Sreedhara, Rishikesa, Padmanabha and Damodhara). Within those, there are three names, called Vyabaga Naamangal (Vyabagam means that He is present every where), and those names are Vishnu, Narayana and Vasudeva. Among all these, Azhwaar has chosen the name NARAYANA in his prabandham in most of the places.
“Vanamaali gathi saarngi sanki chakree cha nanthagi, Sreemaan Naarayano Vishnur Vasudevo abi rakshathu”, is a sloga by Sri Adhi Sankarar. Here Sri Adhi Sankarar uses all the vyabaga names of Vishnu. The meaning of the above sloka is that I request Paramathma
to protect me.
Namazhwaar had the used the names of the Avatars or incarnations like Rama, Krishna, Trivikrama, Narasimha and Varaha in many places of Thiruvaaimozhi, the name Narayana alone contains the meaning that reflects the important qualities or glories of Paramathma in the word itself. This is one of the reasons why we should learn the meaning of Narayana from our acharyan.
Swami Namazhwaar says the name Narayana to represent Paramathma in the beginning, middle and the ending parts of Thiruvaaimozhi and in that way communicates to the world that Thiruvaaimozhi is for and about Sriman Narayana.
In the first subsection or pathigam itself, he explains the meaning of Narayana to highlight that He is Paramathma, by saying that He has all extremely good qualities. (Uyarvara Uyarnalam Udaiyavan). The meaning of Narayana is that there is nothing or none equal or superior to Narayana; He is the leader for all. He continues in the second pathigam, by calling Him as “vannpugazh Naranan” (1.2.10), “Selva Naranan” in 1.10.8, “Naranan is the Leader for all the seven worlds” (Naranan muzhu ezh ulagukkum naathan) 2.7.2 and Thirunaranan in 4.1.1. These are some of the examples of using the name Narayanan within the first few pathus or subsections of his Thiruvaaimozhi.
Our Achaayaars say that Namazhwaar explains the meaning of Thirumanthiram in Thiruvaaimozhi. The first word of Thirumanthiram, OM is explained in the Sixth subsection or pathu (aaraampathu), 6.10, the second word “Nama” is explained in the Seventh subsection or Pathu 7.1 and the third word “Narayanaya” in 7.2. Since 7.2 explains Narayana, it can be concluded that Narayanan in the middle of Thiruvaaimozhi.
In the same way, our achaaryaars mention that the pathigam “Kangulum Pagalum” (7.2) is a summarised version of Thiruvaaimozhi itself, as each and every hymn of 7.2 summarises each pathu (subsection) in a nutshell. Since Thiruvaaimozhi itself is for Narayanan, and 7.2 summarises Thiruvaaimozhi, it can be comfortably concluded that Narayanan is present in the middle of Thiruvaaimozhi.
Even at the end of Thiruvaaimozhi, Azhwaar continues to specify the name Narayana. In 9.3.1 “Kaaraayina Kala nanmeniyan Naaranan“, in 10.5.1 “thinnam Naranam” and 10.9.1 “Vaazh Pugazh Naranam“, Azhwaar uses the name Narayanan to conclude Thiruvaaimozhi. Whatever we said earlier are all only examples, and there could be many more within Thiruvaaimozhi.
As we said earlier, there are lot more interesting aspects of Thiruvaaimozhi, as it is a big ocean. We hope to do some more around the introduction of Thiruvaaimozhi.
We would like to express our thanks to Mr Pu.Ra. Purushothama Naidu, for his work on Eetin Tamizhaakaam, Retired Professor and Consultant, Madras University, which helped me to understand some of these concepts.
மிகவும் அருமையான விளக்கம். இதை நீங்கள் நூலாகக் கொண்டு வரலாமே. நாலாயிர திவ்யப் பிரபந்தம் என் போன்ற முதலில் தொடங்குவோருக்கேற்ற பதிப்பு பற்றி சொல்ல முடியுமா? தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், பற்றிய தகவல் தேவை. நன்றி.
திரு முத்துசாமி அவர்களே, நன்றி. நான் அதிகம் விரும்பி கேட்பது காலக்ஷேபங்கள் ஆகும். திரு வேளுக்குடி ஸ்வாமிகள்,கருணாக்கராச்சார் மற்றும் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் சொல்வது எனக்கு கொஞ்சம் புரிகிறது. அதில் நான் ரசித்த பகுதிகளை கொஞ்சம் தொகுத்து கொடுக்கிறேன். சில வலைப்பதிவுகளும் நன்றாக உள்ளது, அவற்றையும் பார்க்கிறேன். 4000 திவ்யபிரபந்தங்கள் நூல் பல உள்ளன. புருஷோத்தம நாயுடு, கமலக்கண்ணன் போன்றவர்களும் நூல்கள் எழுதியுள்ளனர். நான் புத்தகம் போடுவதற்கு இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன, சில காலம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி.