திருவாய்மொழியும் திருவேங்கடமுடையானும் / Thiruvaaimozhi and Thiruvenkadamudaiyaan

For English Version, kindly click here, thanks

திருவாய்மொழி தொடர்ச்சி 

திருவாய்மொழி பற்றி ஒரு சிறிய முன்னுரையை நாம் முன்பு பார்த்தோம். அதனைத்தொடர்ந்து, பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டிய குணநலன்களையும், ஆழ்வாருக்கு தன்னுடைய நிலையில் ஏற்பட்ட மாற்றகளையும், திருவாய்மொழியில் அமைந்துள்ள பத்து பத்துக்களை கொண்டு விளக்க முயற்சித்தோம்.

பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய குணநலன்கள்,

 • தான் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த நிலையில் இருப்பது,
 • தானே  எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது,
 • தான் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது,
 • தானே எல்லாற்றையும் நடத்திக் கொடுப்பது,
 • தன்னுடைய எல்லையற்ற கருணை,
 • தன்னால் எல்லோருக்கும் சரணாகதி அளிக்கக் கூடிய  வல்லமை,
 • தன்னுடைய சக்தி,
 • நாம் விரும்பியவைகளை அடையச் செய்யக்கூடிய திறமை,
 • நம் இடர்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்  சக்தி, மற்றும்
 • மோக்ஷம் கிடைக்கவில்லையே என்ற நம் துடிப்பைத்  தீர்க்க வல்லமை.

அதேபோல், ஆழ்வாரின் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களாவன,

 • தனக்கு, பரமாத்மா பற்றிய அறிவை அளித்ததை உணர்தல்
 • தான் அடையவேண்டியது முக்தி அல்லது மோக்ஷம் என்று உணர்தல்
 • பெருமாளுக்கு மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைதல்
 • பரமாத்மா தவிர மற்ற விஷயங்களில் உள்ள ஆசைகளை குறைத்தல்
 • பெருமாளின் மேல் உள்ள பக்தியை மேலும் வளர்த்தல்
 • பக்தியால் அவனை அடைவது கடினம் என்று உணர்ந்து, அவன் மூலமே அவனை அடைய அவனிடம் சரணாகதி கேட்டு, அதனையும் பெறுதல்
 • அதற்கு பிரதி உபகாரமாக தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குதல்
 • ஜீவாத்மாக்கள், பெருமாளுக்கு சேவை செய்து அடிமையாக இருப்பதே உகந்தது என்பதை உணர்தல்
 • பெருமாள் தனக்கு சரணாகதி அளித்து இருந்தாலும், தான் எப்போது முக்தி அடைவது என்று ஆழ்வார் கவலை அடைதல்
 • பெருமாள் முக்தி அருளியதையும், அதனால் தன்னுடைய கவலைகள் நீங்கி பரமபதம் அடைந்து மகிழ்ச்சி அடைதல்

மேலும், அர்த்தபஞ்சகம் என்பதில் உள்ள ஐந்து தலைப்புகள்,

 • பரமாத்மா
 • ஜீவாத்மாக்கள்
 • பரமாத்மாவை அடையவேண்டிய  வழி
 • பரமாத்மாவை அடையமுடியாமல் தடை செய்பவை, மற்றும்
 • ஜீவாத்மாக்கள்  பரமாத்மாவை அடைந்தபின் செய்யவேண்டியவை

என்றும், திருவாய்மொழி, அர்த்த பஞ்சகத்தில் உள்ள இந்த ஐந்து தலைப்புகளையும் சொல்கின்றன என்றும் பார்த்தோம். எல்லா புராணங்களும், இதிகாசங்களும் மற்றும் ஸ்லோகங்களும் இந்த ஐந்தினில், ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டவைகளையோ தான் சொல்லுகின்றன என்பதால், இந்த ஐந்திணையும் சொல்லும் திருவாய்மொழி மிக முக்கியமான ஒன்று என்பது விளங்கும்.

அதேபோல், திருவாய்மொழி, மந்திரங்களில் முக்கியமான “த்வய மஹா மந்திரத்தையும்”  எடுத்து சொல்கிறது என்பதனையும் பார்த்தோம். 

அடுத்தாக, சில திவ்யதேசங்களைப்பற்றியும், அந்தந்த திவ்யதேசப் பெருமாள்களைப் பற்றியும், ஆழ்வார் பாடிய பாசுரங்களைக் கொண்டு பார்ப்போம்.

திருவேங்கடமுடையான்

சுவாமி நம்மாழ்வார் மொத்தம் 37 திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு.

ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும். அவர், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி எனும் நான்கு பிரபந்தங்களை வழங்கினார் என்று முன்பு பார்த்துள்ளோம்.   அதில் திருவேங்கடத்தையே,  திருவிருத்தம் என்ற முதல் பிரபந்தத்தில்,  முதல் பதிகத்தில், எட்டாவது பாசுரத்தில் “மாண் குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடம்” என்று ஆழ்வார் பாடியுள்ளார்.  திருவிருத்தத்தில் ஆழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாடல்களின் சிறு விளக்கத்தை இங்கே காணலாம்.

பொய் நின்ற ஞானமும்” என்று தொடங்கும் திருவிருத்த முதல் பாசுரத்தில் “இமையோர் தலைவா”  என்று ஆழ்வார் குறிப்பிட்டது காஞ்சி தேவப்பெருமாளையே என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள்.    இருந்தாலும் பாசுரத்தில் திவ்யதேச நாமம் வருவது திருமலையை பற்றிய எட்டாவது பாசுரத்திலேயே ஆகும்.

மிக அதிகமான பதிகங்களில், (ஐந்து, ஏழாம் பத்துக்கள் தவிர மற்ற எல்லா பத்துக்களிலும்), ஆழ்வார் ஒருதடவையாவது திருவேங்கடமுடையானை நேரிடையாகக் குறிப்பிட்டு உள்ளதை கீழே கொடுத்து உள்ளோம்.

முதல் பத்து

முதல் பத்தில் “கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்கு,  தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” (1.8.3), என்ற பாசுரத்தில், விண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கும், மண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கும் திருவேங்கடமுடையான் என்றும் கண் போல்  இருப்பான், என்றும் நித்யஸூரிகள் வந்து சேவை செய்யும் இடம் என்றும்  ஆழ்வார் கூறுகிறார்.

இரண்டாம் பத்து

இரண்டாம் பத்தில், “எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய்!” (2.6.9)  என்ற பாசுரத்தில் ‘குளிர்ந்த திருவேங்கடத்தில் நின்று உள்ளவனே, என்னோடு ஒன்றாக கலந்தவனே இனி வேறு எங்கு போகப் போகிறாய்’ என்று ஆழ்வார் வினவுகிறார்.

தண்வேங்கடமே என்கிறாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே” (2.6.10) என்ற பாசுரத்தில் ‘குளிர்ச்சியான திருவேங்கடமலையில் விரும்பி, கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களில் இருப்பவனே, நறுமணம் வீசும் துளசி மாலை அணிந்தவனே, இப்போது நான் உன்னை கண்டு கொண்ட பின், விட்டுவிடுவேனோ’ என்று திருவேங்கடமுடையானிடம் முறையிடுகிறார்.

மூன்றாம் பத்து

மூன்றாம் பத்து மிக விசேஷமானது.   இந்த பத்தில் 3.3.1 முதல் 3.3.10 வரை ஒவ்வொரு பாசுரத்திலும் திருவேங்கடமுடையான் நாமம் உள்ளது. உதாரணமாக, “ஒழிவில் காலமெல்லாம்”  (3.3.1) என்று தொடங்கும் பதிகம், முதல் “வைத்த நாள்வரை”  (3.3.10) என்பது வரை தொடர்கிறது. உதாரணமாக, “தெழி குரல் அருவி திருவேங்கடத்து” (3.3.1),   “பைத்த பாம்பணையான் திருவேங்கடம்” (3.3.10). முன்பு கூறியதைப்போல் இந்த பதிகத்தில் ஆழ்வார், துவய மந்திரத்தின் இறுதிப் பகுதியாகிய “ஸ்ரீமதே நாராயணாய நமஹ ” என்பதின் அர்த்தத்தை, நாம் தொடர்ந்து பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இந்த பத்து பாசுரங்களின் மூலம் விளக்குகிறார்.   

இவைகளைத்தவிர, “வார்ப்புனல் அந்தண் அருவி வட திருவேங்கடத் தெந்தை”  (3.5.8) என்று ஐந்தாவது பதிகத்திலும் “தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து” (3.9.1) என்று ஒன்பதாவது பதிகத்திலும் ‘திருவேங்கடம்’ இடம் பெறுகின்றது.

நான்காம் பத்து

நான்காம் பத்தில், ஐந்தாம் பதிகத்தைப் படிப்பதனால் கிடைக்கும் பலன் சொல்லும் இறுதி பாடலில் “மாரி மாறாத தண் அம்மலை, வேங்கடத் தண்ணலை”  (4.5.11) என்று  ஆழ்வார் திருவேங்கடமுடையானை துணைக்கு அழைத்து, இறுதியில் இந்த பதிகத்தை படிப்பவர்களுக்கு, மஹாலக்ஷ்மி தாயார் அருள்பாலித்து அவர்களுடைய பாவங்களை தீர்ப்பார் என்று கூறி இந்த பதிகத்தை முடிக்கிறார். இந்த பதிகத்தில் உள்ள வேறு எந்த பாசுரத்திலும் திருவேங்கடமுடையானைப் பற்றி விஷயம் எதுவும் இல்லை, இருந்தாலும் இந்த இறுதி பாசுரத்தில் ஆழ்வார் திருவேங்கடமுடையானை கூறுவதற்கு காரணம், பெருமாளின் உயர்ந்த குணங்களில் ஒன்றான, சீலகுணத்தை நமக்கு விளக்குவதற்கே என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.

 • ஆழ்வாருக்கும், திருவாய்மொழிக்கும் அர்ச்சாவதாரத்தில் அதிக ஈடுபாடு.
 • சீலம் அல்லது ஸௌசீல்யம் என்பது பெரியவர், தாழ்ந்தவர்களிடம் பேதமில்லாமல் அன்புடன்  பழகுவது.  அதை நமக்கு அர்ச்சாவதார திருவேங்கடவனின் மூலம் ஆழ்வார் புரிய வைக்கிறார். இந்த பதிகத்தில், எட்டாவது பாசுரத்தில், “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் அன்பினை” (4.5.8) என்று  ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். “நமக்கும்” என்று, நம்மை முன்னே சொல்லிவிட்டு, “பூவின்மிசை நங்கை” என்று, பிராட்டியாரை பின்னே சொல்வது, முதலில் நமக்கு தரிசனம் கொடுத்து பின்பு தாயாருக்கு என்று சொல்லி,  ஜீவாத்மாக்களுக்கு பெருமாள் முன்னுரிமை அளிப்பதை அவரின் சீல குணத்திற்கு எடுத்துக் காட்டாக ஆழ்வார் கூறுகிறார்.
 • திருவேங்கடத்தில் என்றும் மழை பொய்க்காது, அது போல் திருவேங்கடமுடையானும், நம்மைப் போல் தாழ்ந்தவர்களுக்கு எப்போதும்  தரிசனம் கொடுப்பதற்காகவே திருவேங்கடத்தில் உள்ளார் என்றும் கொள்ளலாம்.

ஆறாம் பத்து

ஆறாம் பத்தில், ஆறாவது பதிகத்தில், இந்த பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பலன் பற்றி சொல்லும் இறுதி பாசுரத்தில், “கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை” (6.6.11) என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். முன்பு சொன்ன நான்காம் பத்தினைப் போலவே, இந்த பதிகத்திலும் மற்ற எந்த பாசுரத்திலும் திருவேங்கடவனை நேரிடையாக குறிப்பிடவில்லை. கீழே மூன்றாம் பத்தில் ஒன்பதாவது பதிகத்தில் முதல் பாசுரத்தில் (3.9.1), தான் பாடும் பாடல் வேறு யாருக்கும் கிடையாது, திருவேங்கடத்தானுக்காகவே என்று பாடியவர் ஆழ்வார் ஆதலால், இங்கு (6.6ல்) வேங்கடவனை சொல்வதில்  குற்றம் ஒன்றும் இல்லை என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.

“சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ, என் நாவில் இன்கவி யான் ஓருவர்க்கும் கொடுக்கிலேன்,  தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து, என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே”  (3.9.1)  

ஆறாவது பத்தில், திருவேங்கடம் என்பது நேரிடையான வார்த்தையாக இல்லாவிட்டாலும், “மலைமேல் நிற்பாய்” (6.9.5), என்று சொன்னது, நாம் பின்னால் பார்க்கப்போகும் திருமங்கை ஆழ்வார் என்பவர் தனது திருநெடுந்தாண்டகம் என்ற திவ்யப்ரபந்தத்தில்,  “பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்” என்று திருமூழிக்களம் என்ற திவ்யதேசத்தை அர்ச்சாவதாரத்திற்கு உதாரணமாக சொல்வது போல், இங்கு நம்மாழ்வார் திருவேங்கட மலையை அர்ச்சாவதாரத்திற்கு உதாரணமாக எடுத்துக்கொண்டு உள்ளார்.

இந்த பாசுரத்தின் சிறப்பு, ஆழ்வார் பரமாத்மாவின் ஐந்து நிலைகளையும்,  விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய். கடல் சேர்ப்பாய்!,  மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்து உறைவாய்” என்று ஒரே பாடலில் சொல்வது ஆகும். மண் மீது உழல்வாய் என்றது, இந்த மண்ணில் வந்து பிறந்து உலாவிய ஸ்ரீ ராம,  கிருஷ்ண விபவ அவதாரங்களைச் சொல்வது.

மூன்றாம் பத்தின் மூன்றாவது பதிகத்தில், துவய மஹாமந்திரத்தின் இறுதிப் பகுதியை நமக்கு சொன்ன ஆழ்வார், அதன் முதல் பகுதியான, ‘ஸ்ரீமந் நாராயண சரணெள    சரணம்   ப்ரபத்யே‘ என்பதை  இங்கு “உலகம் உண்ட பெரு வாயா” (6.10) பதிகத்தில் விளக்குகிறார்.

ஆறாம் பத்தில் “உலகமுண்ட பெருவாயா” என்ற பத்தாவது பதிகத்தில் (6.10), ஸ்ரீ மஹாலக்ஷ்மியை முன்னிட்டு, திருவேங்கடமுடையானிடம், ஆழ்வார், சரணாகதி அனுஷ்டிக்கிறார். சரணாகதி என்பது எப்போதும் அவன் திருவடிகளிலேயே  என்பதால், இந்த பதிகத்தில் உள்ள  ஒவ்வொரு பாசுரத்திலும், திருவேங்கடத்தையும், அவனது திருவடிகளையும் நேரிடையாகவே  ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார்.  திருமலையில், திருவேங்கடமுடையானும் தனது வலது திருக்கரத்தால், நாம் எல்லோரும் அவனிடம் சரண் அடைய, தன் பாதங்களையே நமக்கு காண்பிக்கின்றார்.

TVM 3a

எட்டாம் பத்து

தலைவியின் உடல் ஏன் மெலிந்து இருக்கிறது என்று தோழிகள் கேட்க, திருவேங்கடமுடையானை காணச்செல்ல வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலே, இப்படி ஆகிவிட்டது என்பதை, எட்டாம் பத்தில் (8.2.1), ஆழ்வார், “எம் கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே” (8.2.1) என்று கூறுகிறார்.

ஒன்பதாம் பத்து

ஒன்பதாம் பத்தில், மூன்றாவது பதிகத்தில் மீண்டும் திருவேங்கடம் வருவது ஒரு சுவாரஸ்யமான பகுதி.   பெருமாள் ஆழ்வாரிடம், பரமபதம் வந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் என்றால், இந்த உடலை விட்டுவிட்டு மேலுலகம் செல்ல வேண்டும்.  அதற்கு இந்த உடலுடன், திருவேங்கடம் சென்று கைங்கர்யம் செய்யலாமே என்று வினவ, ஆழ்வார் அதற்கு திருவேங்கடம், தேவர்கள் தொழும் இடம் அல்லவோ என்று திருவேங்கடத்தின் பெருமையை குறிப்பிடுகிறார். “நின்றவேங்கடம் நீணிலத்துள்ளது, சென்று தேவர்கள் கைதொழுவார்களே” (9.3.8). 

பத்தாம் பத்து

மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன், பேயார் முலையுண்ட வாயான் மாதவனே”  (10.5.6) என்று பத்தாம் பத்தில் ஆழ்வார் திருவேங்கடமுடையானை குறிப்பிட்டுள்ளார்.   இதற்கு முன் பாசுரத்தில், “நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம், வீடே பெறலாமே“(10.5.5), அவனை தேடி, மலர் சூடி, அவன் நாமம் நாள்தோறும் பாடினால், வீடு பெறலாம் என்று சொல்லிவிட்டு, தேடும் இடத்தை இந்த பாசுரத்தில் (10.5.6)ல் சொல்கிறார். சாஸ்திரங்கள், அவன் கண்ணுக்குப் புலப்படாதவன் என்றும், பற்பல உருவங்கள் உடையவன் என்றும் சொல்கின்றன.  இருந்தாலும்,  ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சி போன்ற திவ்யதேசங்களிலும் மேல்கோட்டை போன்ற அபிமான ஸ்தலங்களிலும்  அர்ச்சாவதார பெருமாள் பேசியதாக சரித்திரம் உண்டு. அவனுடைய திருவடிகளை பற்றுவதற்காகவே திருமலையில் நித்யவாஸம் செய்பவனான திருவேங்கடமுடையானின் திருமேனியை நாம் இப்போது சேவித்து மகிழலாமே என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஆழ்வார் திருவாய்மொழியில் 10.7.8ல் இறுதியாக, திருவேங்கடமுடையானை அழைப்பது ஒரு சிறந்த அனுபவம்.  திருமாலிருஞ்சோலை பெருமாள், ஆழ்வாரை, அவருடைய திருமேனியுடன், ஸ்ரீவைகுந்தம் அழைத்துச் செல்ல விரும்புவதாக அமையும் பதிகம்.

“திருமாலிருஞ்சோலைமலையே, திருப்பாற் கடலே, என்தலையே,  திருமால் வைகுந்தமே, தண் திருவேங்கடமே, எனதுடலே, அருமா மாயத்து எனது உயிரே, மனமே வாக்கே கருமமே, ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே” (10.7.8).     

ஆழ்வார், தன்னுடைய தலையையும், திருமாலிருஞ்சோலையையும், திருபாற்கடலையும் சமமாக பாவிக்கிறார்.   அதேபோல் தன்னுடைய உடலையும், திருவேங்கடத்தையும், வைகுந்ததையும், ஒன்றாக பாவிக்கிறார். திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுந்தமும், வானுலகத்தில் உள்ள திவ்யதேசங்கள். அவற்றை இந்த உலகத்தில் உள்ள திவ்யதேசங்களுடன் சேர்த்து  சொல்வது ஒரு பக்கம் இருந்தாலும், அவைகள் எல்லாவற்றையும் சேர்த்து தன்னுடைய மேனியோடும், தலையோடும் சேர்த்து சொல்வது அதி அற்புதமான இன்னொரு பகுதி.

பெருமாள் உறையும் இடங்களை நம் பெரியோர், உகந்து அருளிய நிலங்கள் என்பார்கள். அப்படி பார்க்கும் போது, ஆழ்வாரின் திருமேனியும் தலையும் பெருமாள் உகந்து அருளின நிலங்களாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஆழ்வார் இந்த பாசுரத்தில், திருமாலிருஞ்சோலையையும், திருப்பாற்கடலையும், தன் தலையையும், திருவைகுந்ததையும், திருவேங்கடத்தையும், உடலையும், என்று எல்லாவற்றிலும் ‘உம்’ என்ற விகுதியை சேர்த்து இருக்கலாம்; ஆனால் அவர் திருமாலிருஞ்சோலை மலையே, திருப்பாற்கடலே, என்தலையே, ஸ்ரீவைகுந்தமே, திருவேங்கடமே,  உடலே, என்று ஒவ்வொன்றிலும் ஏகாரம் சேர்த்து இருப்பதன் காரணம், பரமாத்மா, தான் உகந்து அருளிய நிலங்கள் எல்லா இடத்திலும், ஒரே சமயத்தில் தன்னுடைய பெருமைகள் சிறிதும் குறையாமல் இருக்க கூடியவன் என்பதையும், ஒரு இடத்தில உள்ளவர்களுக்கு அங்கேயே முழுமையாக இருப்பது போலும், மற்று எங்கும் இல்லாதது போலும் தோன்றுவதையும் நமக்கு புரிய வைக்கவே.   

விண்ணவரும் மண்ணவரும்

பரமாத்மா, வானுலகத்தில் உள்ள தேவர்களும், நித்யஸூரி முதலானவர்களும் வந்து தொழும் வண்ணமும், இந்த உலகத்தில் உள்ளவர்கள் வந்து தரிசனம் செய்யும் வண்ணமும் திருவேங்கடமலையில், திருவேங்கடமுடையனாக காட்சி அளிக்கிறான் என்று பல ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் கூறி உள்ளார்கள்.  அவற்றில் சில உதாரணங்களை கீழே கொடுத்து உள்ளோம்.  இவற்றில் நம்மாழ்வார் பாடிய சில பாசுரங்களும் அடக்கம்.

thiruvaaimozhi 3

இதேபோல், ஐந்தாம் பத்தில் நம்மாழ்வார் ஒரு இடத்தில், திருவேங்கமுடையானை குறிப்பிடாமல், “மேலாத்தேவர்களும், நிலத்தேவர்களும், மேவித் தொழும்” என்று சொல்வதை மேல உள்ள அட்டவணையில் சேர்க்கவில்லை, ஏனென்றால், திருவேங்கடமுடையானைப் பற்றி இந்த பாசுரத்திலும் அதன் விளக்கங்களிலும் அடியேனால் இது வரை காண இயலவில்லை.

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும், மாலார் வந்து  நினநாள் அடியேன் மனத்தே மன்னினார், சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரே இனி யாவாரே. (5.1.8)

தொடர்வது

முன்பே சொன்னது போல், ஐந்தாம் பத்திலும், ஏழாம் பத்திலும் திருவேங்கடமுடையானை பற்றி விவரம் எதுவும் நேரிடையாக இல்லை. ஏழாம் பத்தில் திருஅரங்கனைப் பற்றிய பதிகம் வருவதால், அதை பற்றி அடுத்த வலைப்பதிவில் பார்க்கலாம்.

இது தவிர, ‘வேங்கடம்’ என்று நேரிடையாக சொல்லாத சில பாசுரங்களும், நம் பெரியோர்கள், திருவேங்கடவனுக்காக என்று கூறியுள்ளார்கள்.  உதாரணமாக, 6.6ல் உள்ள எல்லா பாசுரங்களும், 3.3.11, 2.7.12.  இவைகளை பற்றியும் அடியேனுக்கு இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது அதிகம் உள்ளது.

ஆழ்வார் பிரபந்தம் முழுவதும் ஆங்காங்கே வேங்கடமுடையானை விடாது சொல்லிவரும் போது, ஐந்தாம் பத்திலும் எங்காவது சொல்லி இருக்க கூடும். அது அடியேனுக்கு தெரியாததே இங்கு அதைப்பற்றி எழுத முடியாத காரணம்.   பின்பு ஒரு வேளை  ஆழ்வார்  அனுக்கிரகம் கிடைக்கப் பெற்று அடியேனுக்கு தெரிய வந்தால், மீண்டும் இங்கு வந்து அதனைப் பதிவு செய்வோம்.  நன்றி.

ஐந்தாம் பத்து

ஆழ்வார் கருணைக்கு மிக்க நன்றி, ஐந்தாம் பத்து பற்றி ஒரு சிறு குறிப்பு (14 2 2022)

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன ஒன்றலா வுருவாய் அருவாய நின் மாயங்கள், நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு ஒன்று நன் குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே. 5.10.6

இந்த பாசுரத்தில் திருவேங்கடம் என்ற சொல் எங்கும் வரவில்லை. ஆனால் நம் பெரியவர்கள், இந்த பாசுரமும் திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்வார்கள், ஏனென்றால், பெரியவாச்சான்பிள்ளை மற்றும் நம்பிள்ளை வியாக்யானங்களில் நின்றாவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் என்பதற்கு இராம, கிருஷ்ண அவதாரங்களில் இருந்து மேற்கோள் காட்டி, பின்னர், தொண்டைநாட்டு பாண்டியநாட்டு அர்ச்சாவதாரங்களில் மேற்கோள்காட்டி, திருவரங்கத்தில் எம்பெருமானிடத்திலும் மேற்கோள் காட்டி , இறுதியாக, ஆழ்வார் திருவுள்ளக் கருத்தாக நின்றது, திருவேங்கடம் என்றும், இருந்தது பரமபதம் என்றும், கிடந்தது திருப்பாற்கடல் என்றும் நிறைவு செய்கின்றனர். இப்படியாக ஆழ்வார் திருவுள்ளத்தில் ஐந்தாம் பத்திலும் திருவேங்கடமுடையானை குறிப்பிட்டு உள்ளார்.

=======================================================

Thiruvaaimozhi Continuation

We have seen an introduction about Thiruvaaimozhi previously.   Followed up by that, we have also tried to explain the glories of Paramathma, which were demonstrated to Azhwaar and also the changes that had happened to Azhwaar subsequently, by highlighting the features of each Pathu in Thiruvaaimozhi.

The glories of Paramathma, which were demonstrated to Namazhwaar.

 • He is supreme
 • He is the reason for everything
 • He is everywhere
 • He is the one who makes things happen in this universe.
 • He is very simple and very kind
 • He is great as well as simple and hence the most eligible for us to surrender
 • He has the power to give us the shelter and  to take us abode
 • He has all the desirable glories and there is nothing left for Him to achieve
 • He can protect all of us from all difficulties
 • He  fulfills all our wishes with regard to ourselves attaining Moksham

The changes that happened to Azhwaar subsequently :

 • Azhwaar got the Bhagavath  gnaanam, (Knowledge about Paramathma)
 • Azhwaar understood what he needed to achieve, that is mukthi or reaching abode
 • Azhwaar tried to increase his desire to do more and more service to Paramathma
 • Azhwaar tried to reduce his desire on other worldly things
 • Azhwaar felt his increased love and affection towards Paramathma
 • Azhwaar realised Prapathi, or His holy feet is the way to attain Mukthi or Moksham.
 • Azhwaar felt that he has nothing to offer, to Paramathma in return for the great favour, He has done to him.
 • Azhwaar understood the responsibilities of Jeevathmas that they should always do service to Paramathma and be slaves to Paramathma.
 • Azhwaar wanted to do the service to Paramatha  in Srivaikuntham and he is requesting Him to identify the time when he would get his moksham or mukthi
 • Azhwaar got Moksham which is what he wanted from Him

Furthermore, we talked about, the five topics in Artha Panchagam and they are

 • On Paramathma
 • On Jeevathmas
 • The way to reach Paramathma
 • The obstacles that prevent the Jeevathmas from reaching Paramathma
 • The activities that Jeevathmas should do after reaching Paramathma

We also explained that Thiruvaaimozhi covers all these five topics.   All Puraanams, Ithihaasams (Ramayana and Mahabharatha), and other slokas,  talk about either one or more from the above five topics.    So when Thiruvaaimozhi talks about all these five topics,  we should understand the importance and significance of Thiruvaaimozhi.

We also saw that Thiruvaaimozhi explains the most important mantra, namely, “Dhwaya Maha Mantra”.   Let us now go through some divya desams on which Azhwaar has composed his pasuraams / hymns in Thiruvaaimozhi.

Thiruvenkadamudaiyaan

Swami Nammazhwaar has compiled hymns on 37 divyadesams. Of these, Azhwaar has shown more involvement with Thiruvenkadamudaiyaan.

Thiruvenkadam is the first Divyadesam, among the many divyadesams on which Azhwaar has compiled hymns on. As we have seen earlier, Nammazhwaar has compiled four prabandhams.  They are Thiruvirutham, Thiruvasiriyam, Periya Thiruvandadhi and Thiruvaaimozhi.  He refers to Thiruvenkadam in the first Prabandham, Thiruvirtutham, on the 8th Hymn, “maan kundram yaenthi thann maamalai Venkadam“.  A short description of the pasurams on Thiruvenkadamudaiyaan from Thiruviruttham  is given here in Tamil.

Even though our acharyaars comment that the first hymn of Thiruvirutham, in which, Azhwaar says  “Imayor Thalaivaa“, (meaning that He is the leader of the devas  living in the celestial world), is for Devaraja perumal of Kancheepuram, Thiruvenkadam is the name of the Divyadesam, first coined by Swami Nammazhwaar in the eighth hymn.

Azhwaar has referred to Thiruvenkadam in Thiruvaaimozhi, in most of the Pathus or subsections. Except for the fifth and seventh Pathus or Subsections, Azhwaar has called Thiruvenkadamudaiyaan in all other Pathus or subsections and let us discuss the same in the following paragraphs.

Muthal Pathu (First Subsection)

Thiruvenkadamudaiyaan is always dear-as-eyes for all, who live in this world as well as those who live in the celestial world, for ever, and it is where the people of celestial world vie to serve Him, as per Azhwaar’s hymn in Thiruvaaimozhi, (1.8.3).  The referenced hymn starts with “Kannaavaan endrum, mannor vinnorku, thannaar Venkada vinnor verpane” (1.8.3).

Irandaam Pathu (Second Subsection)

In the second, there are two places, where Azhwaar refers Thiruvenkadamudaiyaan.  The first one is on 2.6.9, where he says “endhaai, Thiruvenkadathul Nindraai“, the meaning of the whole hymn is that “He stands in the cool Thiruvenkadam and He has merged inside me and there is no other place He can go other than myself”.    The second one is on 2.6.10, “Thann Venkadame enkinraai thann thuzhaai virai naaru kanniyane”, the meaning of the whole hymn is that “Perumal likes and lives in the cool Thiruvenkadam through past, present and future, He wears the fragrant Tulasi leaves, He is the Lord for the Universe, now that Azhhwaar had found Him, he would not leave Him”.

Moondraam Pathu (Third Subsection)

The third Pathu or subsection in Thiruvaaimozhi is very special.  In this pathu, ten hymns, starting from “ozhivil kaalam ellaam” (3.3.1) to “vaitha naal varai” (3.3.10) have references to Thiruvenkadamudaiyaan.   As we said earlier, Azhwaar explains the meaning of the final part of the Dhwaya Maha Manthiram, namely “Sreemathe Narayanaaya Namaha” in this pathigam, 3.3. Basically we should continue to do service to Paramathma and this is what is reiterated in the ten hymns of this pathigam, 3.3.  Examples are “thezhi kural aruvi Thiruvenkadathu” in 3.3.1 or  “Paitha Paambanaaiyaan Thiruvenkadam” (3.3.10).

In addition to this pathigam, namely, 3.3, there are two other hymns in which Thiruvenkadam is referred to by Azhwaar in Moondraam Pathu (Third Subsection). “vaarpunal anthann aruvi vada Thiruvenkadathu enthai” (3.5.8) and “thennaa thenaa endru vandu mural Thiruvenkadathu” (3.9.1) are the other two places, where Thiruvenkadam is referred to by Azhwaar in Moondram Pathu, ie Third Subsection.

Naangaam Pathu or Fourth Subsection

In this subsection, in the last hymn, where Azhwaar explains the benefits for the people who recite / read or hear this Pathigam, refers to Thiruvenkadamudaiyaan, as “Maari Maaratha thann ammalai Venkadathu Annalai“, meaning “The rain never fails in Thiruvenkadam and hence it is very cool”.  The hymn continues to say that Mahalakshmi, would grace those who read these ten hymns of this pathigam and would cure all their sins.   Interestingly, there is no reference to Thiruvenkadamudaiyaan in all the other 10 hymns of this pathigam.  However, Azhwaar has referred to Thiruvenkadamudaiyaan in the last hymn of this pathigam, mainly because, he wanted to highlight one of the important glories of Paramathma, Sowseelyam, which can be explained as the way in which a superior person would interact kindly and passionately and move freely with the lowliest without any inhibition or complex.

 • Azhwaar as well as Thiruvaaimozhi have great involvement in Archavathaarm, one of the five states of Paramathma.
 • Azhwaar wants to explain Sowseelyam keeping Thiruvenkadamudaiyaan, as his reference and who is in Archai state.   In eighth hymn of this pathigam, Azhwaar uses “namakkum, poovin misai nangaikkum anbinai” to highlight the priority, that Paramathma would give, when it comes to His devotees.   The sequence in which Paramathma would go first  would be, to His devotees and then only to Thayar or Periya Piraatiyaar.  So the preference for Paramathma is always His devotees.
 • Azhwaar also uses Thiruvenkadam to say that the rain never fails there and similarly Thiruvenkadamudaiyaan, the Supreme, never fails to bestow  His grace and dharsan to all of us, the lowliest, for ever.

Aaraam Pathu or Sixth Subsection

In the sixth subsection, Azhwaar mentions Thiruvenkadamudaiyaan in the last hymn of the sixth pathigam, which talks about the benefits to those, who read/recite the pathigam. Here Azhwaar says “Suttu ezhil solai nal Venkatavaananai”   meaning “Thiruvenkadanathan, who is in Thiruvenkadam, a place with lots of garden with aroma or fragrance “.   Similar to 4.5, all other hymns in this pathigam, 6.6 also do not have any reference to Thiruvenkadam or Thiruvenkadamudaiyaan.   The reason for mentioning Thiruvenkadamudaiyaan in the last hymn of this pathigam, is that Azhwaar had mentioned in one of the previous hymns (3.9.1) that he would compile his songs only for Thiruvenkadamudiyaan and not for anyone else.  So our Acharyaars says that there is nothing wrong in Azhwaar mentioning Thiruvenkadamudaiyaan in this pathigam.   For your reference, 3.9.1 is given below :

“sonnaal virodham idhu, aagilum soluvan kenmino, en naavil inkavi yaan orvarukum kodukkilen, thennaa, thenaa endru vandu mural Thiruvenkadathu, ennaanai ennappan emperumaan ulanaagave”

(This is hard to say and you may not like it;  but I will still say, so listen. Since Thiruvenkadamudaiyaan is my Lord, my father and my mother, I will not compile any hymns for anyone else. )

In the hymn “vinnmeethu iruppaai“, (6.9.5), the name of Thiruvenkadamudaiyaan does not appear directly.  However our acharyaars say that the phrase “Malai Mel Nirpaai” (6.9.5) refers to Thiruvenkadamudaiyaan” as the representative deity of all Archavathaara perumals.   Thirumangai Azhwaar, about whom, we have not yet discussed, has mentioned a similar phrase “pin aanaar vanangum  sothi Thirumoozhi kalathaanaai“, for the deity at Thirumoozhikalam to represent  all archavathara perumals, in one of his Prabandhams, namely, Thiru Nedunthaandagam.

The beauty of this hymn is that Azhwaar had covered all the five states of Paramathma in one hymn of four lines.  “vinn meethu iruppaai, malai mel nirpaai kadal serppaai, mann meethu uzhalvaai, iavtrul engum marainthu uraivaai”  meaning,

 • vinn meethu iruppaai – Para Vasudevanin Vaikuntham
 • malai mel nirpaai – Thiruvenkadamudaiyaan, who stands on the hill, representing all Archaavathaaram
 • kadal serppai – Viyuha Vasudevanin Thirupaarkadal
 • mann meethu uzhalvaai – Vibhavavathaarathu perumals, like Rama, Krishna, who came down to this world and placed His holy feet on this earth
 • marainthu uraivaai – Antharyaami, the inner soul in everyone

As mentioned earlier, Swami Nammazhwaar, described the meaning of the final part of Dhwaya Maha Mantra in 3.3 and now he explains the meaning of the first part of Dhwaya Maha Mantra,  Sreeman Narayana charanau saranam prapatye in “Ulagam Unda Peruvaayaa” pathigam (6.10).

In this sixth subsection (Aaraam pathu), Swami Nammazhwaar surrenders himself totally to Thiruvenkadamudaiyaan,  by aligning himself with Piratti (Sri Mahalakshmi), which became fruitful.  Since the total surrender is always explained everywhere with His holy feet, Azhwaar mentions His holy feet and “Thiruvenkadam” explicitly in each and every pasuram of this pathigam, namely 6.10.

tvm 2 eng

Also in Thirvenkadam, Perumal shows us His holy feet with His right hand to remind us about Total Surrender.

Ettam Pathu or Eighth Subsection

In the second pathigam of the eighth subsection, Azhwaar takes the role of a female longing for Perumal and the hymn is structured as a clarification by the lady to her friends, who ask her on why she looked so thin and sad.    Azhwaar says that she became like that, as soon as she thought of visiting Thiruvenkadam.   “Em kon Venkadavaanaanai vendi sendre” (8.2.1). 

Onbathaam Pathu (Ninth Subsection)

It is an interesting part in the ninth subsection, where Azhwaar has referred Thiruvenkadam.  When Azhwaar requested Perumal to take him to Paramapadham so that he can do service to Perumal there, Perumal responded by saying that Azhwaar should give up his body, if he had to go to Paramapadham, instead Azhwaar could do the service at Thiruvenkadam, with this body.  By this Perumal meant that Azhwaar could feel and enjoy the service with his body, which would not be there in Paramapatham and hence he may not be able to feel the performed services. For that Azhwaar highlights the glory of Thiruvenkadam, as the place where celestial people would go and do the prayers.    “Nindra Venkadam Neenilathil ullathu; sendru devargal kai thozhuvaargale” (9.3.8).

Pathaam Pathu or Tenth Subsection

Azhwaar refers to Thiruvenkadamudaiyaan as “Meyaan Venkadam Kaayaa malarvannan, peyaar mulaiunda vaayaan Madavane” (10.5.6) in the tenth subsection. Previously in 10.5.5, he said “Naadeer, Naal thorum vaadaa malar kondu paadeer avan naamam, veeday peralaame” meaning “We can seek for Him, the Paramathma, garland Him with flowers, recite His names everyday and get the ultimate reward, namely, Srivaikuntham, The abode.   So Azhwaar informs us the benefit of praising Him after looking for Him in 10.5.5 and  he says where to look for Him, in 10.5.6.

Vedas, say that Paramathma is beyond our physical vision as well as He has many shapes, sizes and structures.   In spite of the above, there were occasions, where the chief deity in divyadesams, like Srirangam, Thiruvenkadam and Kanchi and the chief deity in Abimaanasthalams like Melkote had spoken to human beings.

Azhwaar says in 10.6.6, Thiruvenkadamudaiyaan stays in Thiruvenkadam, mainly for us to have the dharsan of His holy feet and obtain Moksham by surrendering ourselves to His holy feet; so, now when He is there in Thiruvenkadam, we can have the dharsan of His entire body and benefit / enjoy ourselves with His grace.

The final time, in which Azhwaar refers to Thiruvenkadamudaiyaan in Thiruvaaimozhi is in 10.7.8 and in that pathigam, the chief deity of Thirumalrincholai, wants to take Azhwaar with his physical state to Srivaikuntham, which was against what is stated in Vedas.

Thirumalrincholai malaye, Thirupaarkadale, en thalaiye, Thirumaal Vaikunthame, thann Thiruvenkadame, enadhu udale, arumaa maayathu enadhu uyrie, maname, vaake karumame, oru maa nodiyum, piriyaan en oozhi muthalvan oruvane” (10.7.8)

Azhwaar equates his head along with Thirumalrincholai  and Thirupaarkadal.  Similarly he equates his body to Thiruvenkadam and Sri Vaikuntham.  While Thiruparkadal and Srivaikuntham are not in this world and the divyadesams like Thirumalrincholai and Thiruvenkadam are here.  It is really interesting to see how Azhwaar equates his body and head along with these divyadesams which are here in this world as well as in the celestial world.

Our acharyaars  call the places where Perumal is present for us to have a dharsan, as “uganthu aruliya nilangal“, meaning that these places are gifted with His grace and joy.   If we take this along with the hymn of  Azhwaar, then we should understand that Azhwaar’s head and body are Perumal’s  “uganthu aruliya nilangal“.

Azhwaar could have used the conjunction “and” when he referred Thirumalrincholai, Thirupaarkadal, his head, Srivaikuntham, Thiruvenkadam and his body.   (in Tamil it is called ‘um’ viguthi).   But in stead, Azhwaar preferred to use the words to address them directly as in first person. (in Tamil it is called “aekaaram”).  Our acharyaars explain this as follows, so that we can understand Him or His Maayai.

 • Paramathma exist in all the places simultaneously and without reducing any of His glories
 • Also when people have dharsan of Perumal in one place, they feel as though He is only  there completely  and He is not available anywhere else.

People in Celestial world and in this world

Many azhwaars have highlighted in their hymns that Paramathma has come down to Thiruvenkadam and give dharsan as Thiruvenkadamudaiyaan to both people of this world as well as to those in the celestial world, like Nithyasooris and other devas.   Given below are some of the examples, including those from Swami Namazhwaar.

tvm 3 Eng

Similarly in the fifth subsection (Ainthaam pathu), Swami Namazhwaar has coined the words “melaa thevargalum, nilathevargalum mevi thozhum“, without referencing Thiruvenkadamudaiyaan.   This hymn is not added to the above table, as we could not find any reference about Thiruvenkadamudaiyaan either in the hymn or in the notes so for.    The hymn is in Ainthaam pathu (Fifth subsection) and given below for your reference. Melaa thevargal means the people who are living in the celestial world and nila thevargal means the srivaishnavaas living in this world.

Melaa thevargalum, nilathevarum mevi thozhum, maalaar vanthu ninna naal adiyen manathey manninaar, selai kanniyarum, perum selvamum, nan makkalum, melaath thaai thanthaiyum averey ini aavaare (5.1.8) 

What is next

As we said earlier, we could not locate any direct reference on Thiruvenkadamudaiyaan or Thiruvenkadam in the fifth and the seventh subsections (Ainthaam pathu and Ezhaam pathu).   Since the pathigam on Thiruarangan is coming in the Seventh subsection, let us try to take that as our next weblog.

In addition, we should also learn more on hymns where there is no direct reference on Thiruvenkadamudaiyaan or Thiruvenkadam, but they are dedicated to Thiruvenkadamudaiyaan, as per our Achayaars.   For example, all the hymns in 6.6, 3.3.11 and 2.7.12.   Personally, I also would like to know more about these.

Since Azhwaar has referred to Thiruvenkadamudaiyaan every now and then and in almost all the subsections, (except for fifth and seventh), he might have told or referred to Thiruvenkadamudaiyaan in the fifth subsection.  I could not write about that here, mainly because of my ignorance on Azhwaar and Azhwaar’s Thiruvaaimozhi.  In case, on a later date, Azhwaar gives his blessings to me and shows me the  details, I will happily share it here.   Thanks.

Fifth Subsection

We are very thankful to the extreme kindness of Azhwaar. Here is a small note on the fifth subsection. (14/2/2022)

Nindravaarum, Irunthavaarum, Kidanthavaarum, Ninaipuariyana ondralaa uruvaai, aruvaaya nin maayangal, nindru nindru ninaikindren unnai engnam ninaikirpan, paaviyerku ondru nankuraiyaai, ulagam unda onn sudare 5.10.6

The word Thiruvenkadam does not appear anywhere in this verse. But our acharyaars will take this hymn for Thiruvenkadamudaiyan, because Periyavachanpillai and Nampillai had given explanations for this hymn, from the incarnations of Rama and Krishna for sitting, standing and reclining postures of emperumaan, and then they had taken examples from the archavathaaram (temples) of Thondai Naadu (Pallava Nadu) and Pandiya Naadu. They had also given explanation of these postures for the emperumaan in Thiruvarangam. Finally they had expressed that standing posture is for Thiruvengadam, sitting posture is for Paramapatham and reclining posture is for Tiruparakkadal according to Azhwaar. In this way, this hymn is for Thiruvengadam and there is a mention about Thiruvenkadamudaiyaan by Azhwaar in fifth subsection .

One Comment on “திருவாய்மொழியும் திருவேங்கடமுடையானும் / Thiruvaaimozhi and Thiruvenkadamudaiyaan

 1. My friend, Venkatesa, I find your other side now on this Blog. What a lucid explanation of the abstract things you are providing here! In Shaivism, we call “Ulavaarap pani” (உழவாரப் பணி) to keep the temple clean. I find your blog does the same to keep the Man (a.k.a temple) clean. Please keep pouring….. by Lakshmanan Kasinathan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d