Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்

For English Version, please click here, thanks

நம்மாழ்வாரின் படைப்புக்கள்

முன்பு சொன்னது போல், ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம்,  திருவாய்மொழி  மற்றும் பெரிய திருவந்தாதி.   இவை,  ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்கின்ற நான்கு வட மொழி வேதங்களுக்கு இணையான நான்கு தமிழ் மறைகள் என்பார்.

நம்மாழ்வாரின் பெருமையையும் அவரின் பாடல்களில் உள்ள பொருட்சுவையும் கண்டு,    சங்கத் தலைவர் பாடியதென கோயிலொழுகு என்ற நூலில் இருந்து ஒரு பாடல்.   

ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே, இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ, நாய் ஆடுவதோ உறுமிப்புலிக்கு முன், நரி  கேசரி முன் நடை ஆடுவதோ, பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன், பெருமானடிசேர் வகுளாபரணன் ஞாயிறு மாமறையின் தமிழின் இன்னொரு சொல் பெறுமோ உலகிற் கவியே .   

அடியேன் செய்யும் விண்ணப்பம்” என்று திருவிருத்தத்தில் “பொய் நின்ற ஞானமும் பொல்லா  ஒழுக்கும் அழுக்கு உடம்பும்”  என்ற பாசுரத்தில்  தொடங்கி  “செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,” என்று திருவாசிரியத்தில் தொடர்ந்து, “முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,” என்று பெரிய திருவந்தாதியில் சொல்லி,  “உயர்வர உயர்நலம் உடையவன் எவன் அவன், மயர்வறும் மதிநலம் அருளினன் எவன் அவன்,” என்று திருவாய்மொழியில் சடகோபனான நம்மாழ்வார்  அருளி, தனது  பாசுரங்களை நிறைவு செய்தார். 

திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும் உள்ளன.

இந்த பதிவினில், ஒரு தொடக்கமாக திருவாய்மொழியின் அமைப்பினையும் பிறகு அதன் ஒரு சில சிறப்புக்களையும் பெருமைகளையும்  பார்ப்போம்.  திருவாய்மொழி பற்றி எழுதுவது என்பது ஒரு பெரிய மஹாசமுத்திரத்தில் இறங்குவது போலவும், நான் கடற்கரையில் நிற்கும் ஒரு ஒரு சிறிய புழுவைப் போலவும் உணர்கிறேன்.   இந்த வலைபதிப்பின் மூலம் பார்க்கப்போவது, ஒரு புழு சிறிது சிறிதாக கரையில் இருந்து சமுத்திரத்தில் உள்ள நீரினை தொடுவது போல் தான் இருக்கும், ஆனால் இந்த திருவாய்மொழி என்ற சமுத்திரத்தில், பற்பல அருமையான விஷயங்கள் உள்ளன; இதற்கு பகவத்விஷயம் என்ற சிறப்பு அடைமொழியும் உள்ளது; ஆகவே திருவாய்மொழி பற்றி இந்த வலைப்பதிவில் இருந்தோ அல்லது மற்ற எந்த வகையிலோ யாவரும் மேலும் மேலும் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சியே.

அமைப்பு

Thiruvaaimozhi1 v2

திருவாய்மொழியில் உள்ள ஆயிரத்து நூற்றி இரண்டு (1102) பாசுரங்களும், பத்து பத்துக்களாக பிரிக்கப்பட்டு, இரண்டாம் பத்தில் மட்டும் நூற்று பன்னிரண்டு (112)  பாசுரங்களும் மற்ற எல்லா பத்துக்களிலும், ஒவ்வொரு பத்திலும் நூற்றுப்பத்து (110) பாசுரங்கள் என்று,  சேர்த்து மொத்தம் 1102 பாசுரங்கள்உள்ளன.

ஒவ்வொரு பத்திலும் உள்ள நூற்றுப்பத்து பாசுரங்களும் மீண்டும் பத்து பதிகங்களாகப்  பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும், முதல் பத்து பாசுரங்கள் ஆழ்வார் சொல்ல வந்த கருத்தை ஒட்டியும், கடைசி பாசுரம் அந்த பதிகத்தைப் படிப்பதால் நமக்கு கிடைக்கும் பலன்களை ஆழ்வார் சொல்வது போலவும் அமைக்கப்பட்டு இருக்கும்.    ஆக ஒவ்வொரு பதிகத்திலும் மொத்தம் பதினொன்று பாசுரங்கள் (11) உள்ளன.  இரண்டாம் பத்தில் உள்ள ஏழாம் பதிகத்தில் மட்டும், ஆழ்வார் தனது கருத்தை பன்னிரண்டு பாசுரங்களிலும், பதிமூன்றாவது பாசுரத்தில் பலன்களையும் சொல்லி உள்ளதால் 2ம் பத்து 7ம் பதிகத்தில் மட்டும்  மட்டும் 2 பாசுரங்கள் அதிகம்.

இந்த இரண்டாம் பத்தில் உள்ள ஏழாம் பதிகத்தில் ஆழ்வார், பெருமாளுக்கு உரிய பன்னிரெண்டு திரு நாமங்களையும் அவற்றின் பெருமைகளையும் ஒவ்வொரு நாமத்திற்கு ஒரு பாசுரம் என்று விளக்குவதால் அந்த பதிகம் மட்டும். பலஸ்ருதியையும் சேர்த்து மொத்தம் பதின்மூன்று பாசுரங்கள். இந்த பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாசுரத்தில், பெருமாளின் ஒரு திருநாமம் பாசுரத்தின் முதலிலும், பெருமாளின் மற்றொரு திருநாமம் பாசுரத்தின் கடைசியில் வருவதும் ஒரு சிறப்பே.   மற்ற எல்லா பதிகங்களும் 11 பாசுரங்கள்.

பெருமைகள்

திருவாய்மொழி அந்தாதி வகையை சேர்ந்தது. ஒவ்வொரு பாட்டின் கடைசி பதமும் அடுத்த பாடலின் முதல் பதமும் ஒன்றாவே இருந்தால் அது அந்தாதி என்று பொதுவாகவும், சொல் தொடர்நிலை அந்தாதி என்று சிறப்பு பெயருடனும் சொல்லப்படும்.   அதேபோல் கடைசி பாட்டின் கடைசி பதமும், முதல் பாட்டின் முதல் பதமும் ஒன்றாக  இருந்தால் அது மண்டல  அந்தாதி என்று கூறப்படும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் உள்ள பாடல்களுக்கு  ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன.   அவை தமிழும், வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ளன.   திருவாய்மொழி, வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.    இந்த உரைகள், பாசுரங்களுக்கு அர்த்தங்களை மட்டும் கூறாமல், நமக்காக பல கேள்விகளை கேட்டு அவைகளுக்கு விளக்கமும் தந்திருப்பதால், அந்த உரைகளை தெரிந்து கொள்வதன் மூலம், நாம் எண்ணிப்பார்க்க முடியாத பற்பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்றொரு சிறப்பு, ஒரு பதிகத்திற்கும் அடுத்த பதிகத்திற்கும் உள்ள தொடர்பு, மற்றும் ஆழ்வார் மனதில் ஓடிய காரணங்களையும் விளக்கி இருப்பது.   இதுபோல் கருத்துக்களில் தொடர்ச்சி இருந்தால், அத்தகைய பாடல்களை, பொருள்தொடர்நிலை அந்தாதி என்று கூறுவர். இதனால் திருவாய்மொழி, சொல்தொடர் அந்தாதியாகவும், பொருள் தொடர்நிலை அந்தாதியாகவும், மண்டலாந்தாதியாகவும் திகழ்கிறது.

திருவாய்மொழியின் ஐந்து உரைகளாவன :

  1. திருக்குருகைப்பிரான் பிள்ளான்  எழுதிய ஆறாயிரப்படி.
  2. நஞ்சீயர்   என்ற  ஆசார்யன்   ஒன்பதினாயிரப்படி
  3. வாதிகேசரி  அழகிய  மணவாளப்பெருமாள்  ஜீயர்  எழுதிய  பன்னிரண்டாயிரப்படி
  4. பெரியவாச்சான்பிள்ளை   இருபத்தி நாலாயிரப்படி
  5. நம்பிள்ளை காலட்சேபமாகச் சொல்ல வடக்கு திருவீதிப்பிள்ளை  பட்டோலை கொண்டு அருளியது ஈடு முப்பத்தாறாயிரப்படி.   (இந்த உரை,  திருவாய்மொழிக்கு ஈடாக உள்ளதால், ஈடு என்று அழைக்கப் படுகிறது)

இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை /  எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.

கம்பர், சடகோபனாகிய நம்மாழ்வாரையும், அவர் இயற்றிய திருவாய்மொழியையும்,  “சடகோபரந்தாதி” என்ற நூலில் போற்றியிருக்கிறார்.  திருமகள் கேள்வனான திருமாலுக்கு உள்ள சிறப்புகள் அனைத்திலும், மிக உயரிய  சிறப்பு, அவருக்கு கிடைத்த திருவாய்மொழியே  ஆகும் என்கிறார். மேலும், திருவாய்மொழியை அவர், “ஆரா அமுதக் கவி ஆயிரம்” என்றும் கூறுகிறார்.

திருவாய்மொழியையே, திராவிட வேதம் என்று கூறுகிறார்கள். திருவாய்மொழியை திருவீதிகளில் வாசிக்காமல், பெருமாளின் ஆஸ்தானத்திலேயே சொல்லவேண்டும் என்ற மரபு இன்றும் உள்ளது. திருவாய்மொழிக்கு பெருமாள் கொடுக்கும் முக்கியத்துவமும் தனிசிறப்புமே இதற்கு காரணம்.

அர்த்த பஞ்சகம்

ஸ்ரீ வைஷ்ணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்துகள் ஐந்து. அர்த்த பஞ்சகம் என்றால் ஐந்து உறுதிப் பொருள்கள், அறிய வேண்டிய புருஷார்த்தங்கள் என்று பொருள்.  அவை

  1. ஜீவாத்மாக்களின் நிலை (ஜீவாத்ம  ஸ்வரூபம்)
  2. பரமாத்மாவின் நிலை (பரமாத்ம  ஸ்வரூபம்)
  3. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடையமுடியாமல் தடை செய்பவை (விரோதி ஸ்வரூபம்)
  4. ஜீவாத்மாக்கள்  அடைய வேண்டியநிலை (புருஷார்த்த ஸ்வரூபம்)
  5. பரமாத்மாவை அடையவேண்டிய  வழி (உபாய ஸ்வரூபம்)

இதனை பராசபட்டர் என்னும் ஆச்சாரியார், ரத்னசுருக்கமாக கீழ்கண்ட பாடலில் சொல்லி உள்ளார்.

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித்தொக்கியலும்
ஊழ்வினயும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்

சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி, இந்த அர்த்த பஞ்சகத்தை எடுத்து சொல்வதே என்று நம் ஆச்சார்யர்கள் தெரிவிக்கிறார்கள்.

வாதிகேசரி அழகியமணவாள ஜீயர் எழுதிய 12000 படி உரையின் முன்னுரையில், (அவதாரிகை) திருவாய்மொழியின் முதல் இரண்டு பத்துக்களில் ஜீவாத்மாவின் நிலையைப் பற்றியும், மூன்றாம், நான்காம் பத்துக்களில் பரமாத்மாவை அடையவேண்டிய வழியைப் பற்றியும், ஐந்தாம் ஆறாம் பத்துக்களில் பரமாத்மாவை அடைய முடியாமல் தடை செய்பவைகளைப்  பற்றியும்,  ஏழாம் மற்றும் எட்டாம் பத்துக்களில் ஜீவாத்மாக்கள் அடைய வேண்டிய நிலையைப் பற்றியும், ஒன்பதாம், மற்றும் பத்தாம் பத்துக்களில் பரமாத்மாவின் நிலையைப் பற்றியும் சொல்வதாகக் கூறுகிறார்.

அழகிய மணவாள பெருமாள் நாயனார்,  20 திருவாய்மொழி பதிகங்களை தேர்ந்து எடுத்து அவைகளின் மூலம் ஆழ்வார் அர்த்தபஞ்சகத்தை விவரிப்பதாகக் கூறுகிறார்.  அவையாவன :

Thirvaimozhi 2 tamil

த்வய மஹா மந்திரம்

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிகவும் முக்கியமான த்வய மஹா மந்திரத்தின் “ஸ்ரீமந் நாராயண சரணநௌ” என்று தொடங்கும் முதல் பகுதியையும், “ஸ்ரீமதே நாராயணாய நமஹ ” என்று முடியும் இறுதிப்பகுதியையும், திருவாய்மொழி விளக்குகிறது என்று அதன் உரைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலே சொன்னவை, திருவாய்மொழி பற்றி ஒரு சில தகவல்களே. திருவாய்மொழியின் பத்து பத்துக்களைப்  பற்றி அடுத்த வலைப்பதிவில் பார்க்கலாம்.

============================================

Namazhwaar’s Compositions

As we mentioned earlier, Swami Namazhwaar composed four Prabanthams, namely, Thiru Virutham, Thiruvaasiriyam, Thiruvaimozhi and Periya Thiruvandhaadhi.   These are considered parallel to the four Vedhams, the rule book of life in Sanskrit, namely, Rig, Yajur, Saama and Atharvana.

In Kovilozhugu, a book containing historical and religious information on important temples, from very early days, there is a hymn highlighting the greatness of Namazhwaar and his compositions, as  below.

EE aaduvatho garudarkku ethire, iraviku ethir minmini aaduvatho, Naai aduvatho urmipuliku mun, nari kesari mun nadai aaduvatho, pei aaduvatho azhghu Urvasiku mun, perumaanadi ser Vaghulaabharanan  gyayiru maamarain thamazhin innoru sol perumo ulagil kaviye.   

The meaning of the above hymn is talking about number of comparisons, like, Fly with Eagle, Fireflies with Sun, Dog with Tiger, the walk of Fox with that of a Lion, the dance of Devil with that of Urvasi, a beautiful dancer in heaven.   Similarly it is impossible to compare any tamil word to the  words used by Swami Namazhwaar, in his hymns.

Swami Namazhwaar started his request (“en vinnappame“) with “Poi Nindra Gnanamum, polla ozhukkum, azhuku udambum” in his Thiruvirutham.  Then he moved on to Thiruvasiriyam with  “Sekkar Maa mugiluduthu mikka senjudar parithi soodi, amchudar mathiyam poondu“.   Then he proceeded as “muyatri sumanthu ezhunthu munthutra nenje”  in Periya Thiruvandhaadhi.    In Thiruvaimozhi, he started with “Uyarvara Uyar Nalam udaiyavan evan avan“.     

There are totally 1102 hymns in Thiruvaimozhi, 100 hymns in Thiruvirutham, 7 hymns in Thiruvaasiriyam and 87 hymns in Periya Thiruvandhaadhi.

As a beginning, let us start with the structure of Thiruvaimozhi and some of the special glories that go with Thiruvaimozhi in this weblog.    I feel like a very tiny insect trying to cross a great ocean, when I start writing about Thiruvaimozhi, as I can only attempt a very small portion of the very many interesting and important aspects of this great Thiruvaimozhi.    It also has a special name called Bhagavath Vishayam.   So if the readers are able to know more about Thiruvaimozhi either from this weblog or from other sources, it is my pleasure.

Structure

Thiruvaaimozhi1 Eng v2
All the 1102 hymns of Thiruvaimozhi are divided into ten (10) Tens, called “Pathu” and each “Pathu” is further divided into 10 sub sections called “Pathigams”.   All pathigams will have 11 hymns, except the 7th Pathigam in the 2nd Ten, where there are two additional hymns. Within each Pathigam, Swami Nammazhwaar has used the last hymn for explaining the benefits to us, the people who read, recite and understand the pathigam, generally called “phalasruthi” and the remaining initial paasurams are used to explain the concept of the pathigam.  So all Pathigams will have 11 hymns, except for the 7th Pathigam of 2nd Pathu, which has 13 hymns.

On this special 7th Pathigam of 2nd Pathu, Azhvaar talks about the significant twelve names of Sri Vishnu and their glories.   Azhwaar has allocated one hymn per name and hence there are thirteen hymns in this pathigam, Including the last hymn, which is the usual Phalasruthi, In this pathigam, another speciality is that each hymn will have two names of Sri Vishnu, once at the beginning and once at the end of the hymn.

Glories

As per Tamil language literature, Thiruvaimozhi is classified under a group called “Andhadhi”. If the last word of the hymn is same as the first word of the subsequent hymn, then it is called “Andhadhi”, in general, and more specifically it is called “Word-related-Andhathi”.    Similarly if the last word of the last hymn is same as the first word of the first hymn, like completing a cycle, then it is called “Mandala Andhadhi”.

For Thiruvaimozhi, five renowned personalities have written traditional explanatory notes and even today they are used as reference material for Thiruvaimozhi.   These notes are written in a special manner, called, Manipravalam, that is by combining both Tamil and Sanskrit words. Thiruvaimozhi can be seen as a summarised version of Vedham and  as a repository of philosophical thoughts. The above explanatory notes bring out these philosophical thoughts in an explicit manner. The explanatory notes, not only give the exact meaning of the hymns, but also ask related questions and provide explanation for those questions.   This gives an extraordinary opportunity for us to learn from multiple perspectives. Similarly these traditional notes also give the continuity in the meaning from one hymn to the other, one Pathigam to the next and from one Pathu to the next. This type of continuity helps us to classify Thiruvaimozhi as Meaning-related-Andhadhi.  

Thus, Thiruvaimozhi can be classified as Word-related-Andhadhi, Meaning-related-Andhathi and also Mandala Anthadhi.   

The 5 explanatory works on Thiruvaimozhi are as follows

  1. The first one is called “Aaraayirappadi”, meaning 6000 word count, by Thirukurugaipiraan pilaan
  2. The second one “Onbathinaayirapadi”, meaning 9000 word count, by an Aacharyaar called Nanjeeyar.   
  3. The next one  “Pannirendaayirappadi”, meaning 12000 word count, by Vaathikesari Azhagiya Manavala Perumal Jeeyar
  4. The next one is called “Irupathinaalaayirappadi”, meaning 24000 word count, by Periyavaachaan Pillai
  5. The next one is called “Eedu Muppathiaaraayirappadi”, meaning 36000 word count, by Vadakku Thiruveethi Pillai, as presented by an Aacharyar called Nampillai.  This has got the special title, EEDU, meaning Equal, as this is equivalent to Thiruvaimozhi itself.

The great Tamil poet, Kambar has also written about Swami Nammazhwaar, in his composition called “Sadagopar anthathi”.    He  praises both Nammazhwaar and his composition, namely, Thiruvaimozhi. He says that the best laurel, which Lord Sri Vishnu has got is Thiruvaimozhi itself from Swami Nammazhwaar. He has lauded Thiruvaimozhi as “Aaraa Amutha Kavi Aaayiram”, meaning 1000 hymns of tasteful hymns.   

Thiruvaimozhi is called “The Dravida Vedham”.   Even today there is a practice that Thiruvaimozhi is not recited in the streets, instead they are recited only in front Perumal inside the temple, so that He can enjoy Thiruvaimozhi.  This is due to the importance and significance given to Thiruvaimozhi, by Perumal Himself.

Artha Panchakam  

Artha Panchakam, is five basic truths every Sri Vaishnava should know and they are

  1. Who are we / Jeevathmaas ?
  2. Who is the Lord / Paramathmaa ?
  3. What’s our goal / Purushaartham ?
  4. The ways to attain the goal.
  5. The hindrances in attaining our Goal.  

To attain moksha, we first need to know the nature of the Jeevathmaa, the nature of the Paramathmaa, what goal the Jeevathmaa should aspire for, how to attain this goal, and what keeps Jeevathmaas from attaining this goal. Sri Vaishnava philosophy refers to these five points as artha panchakam.

One of the Aacharyaars,  Parasura Bhattar, had condensed this into a short hymn :

Mikka irai nilaiyum, meiyaam uyir nilaiyum, thakka neriyum thadaiyaagi thokkiyalum, oozhvinaiyum, vazhvinaiyum odhum kurukaikone yazhin isai vethathu iyal

Our aacharyaars strongly suggest that Swami Namazhwaar’s Thiruvaimozhi explains the above Artha Panchakam in great detail.   

According to one of the aacharyaars, Vathikesari Azhagiya Manavaala Jeeyar, in the introduction of his explanatory notes for Thiruvaimozhi called Panneeraayirapadi (12000 word count) mentions that :

  • The first two tens (Pathukkal) of Thiruvaimozhi talks about Jeevathmaas, their responsibilities (Jeevathmaa swaroopam)
  • The third and fourth tens (Pathukkal) of Thiruvaimozhi explains the routes to be taken to reach Paramathmaa
  • The fifth and sixth tens (Pathukkal) of Thiruvaimozhi describes the hindrances that prevent us from reaching our goal or Paramathmaa
  • The seventh and eight tens (Pathukkal) of Thiruvaimozhi highlights the destination or state where the Jeevathmaas should reach finally
  • The ninth and tenth tens (Pathukka) of Thiruvaimozhi conculdes by explaining the state of Paramathmaa.

Another Achaaryaar, Azhagiya Manavaala Perumaal Nayanaar, takes 20 different pathigams from Thiruvaimozhi and explains how these 20 pathigams represent Artha Panchakam.     Table given below are the pathigams for each of the elements of Artha Panchakam :

Thirvaimozhi 2 eng v2
Dwaya Maha Manthiram

Another important element for Sri Vaishnavaas is the Dwaya Maha Manthiram.  From the various Traditional Explanatory Notes, mentioned above, we can see that Thiruvaimozhi describes the Dwaya Maha Manthiram, which starts as “Sriman Narayana Saranam “ and ending with “Srimathe Naaryananaya Namaha”.

Please note that whatever given above are only a subset of many interesting facts about Thiruvaimozhi, which I could understand.  We will look into the high level details on the Ten Tens in our next weblog.   

3 Comments on “Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்

  1. நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றிய மிகச்சிறந்த விளக்கம். மிக எளிமையான நடை பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். நன்றி ஐயா..

Leave a Reply to rvenkatesasn2307Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading