நின்றதும் இருந்ததும் கிடந்ததும் / Standing, Sitting and Reclining

For English version, kindly click here, thanks

நிற்பது, இருப்பது, மற்றும் கிடப்பது  

நிற்பது, இருப்பது மற்றும் கிடப்பது என்று  பரமாத்மா மூன்று முக்கிய உருவ வெளிப்பாடுகளில் அருள்கிறார்.  பரமாத்மாவின் ஐந்து நிலைகளில், பரமபதநாதன் வீற்றுஇருந்து நித்யஸூரிகளுக்கும் முக்தாத்மாக்களுக்கும் காட்சி அளிக்கிறார்.  க்ஷீராப்திநாதன், கிடந்து பிரம்மா, சிவன், இந்திரன், வருணன், குபேரன் போன்ற தேவாதிதேவர்களுக்கு  சேவை சாதிக்கிறார். அந்தர்யாமி என்றும் மறைந்து இருக்கிறார், அதனால், அவரை எந்த பிரிவுக்குள் சேர்ப்பது என்பது கடினம்.   விபவத்திலும் அர்ச்சையிலும் பரமாத்மா எல்லா பிரிவுகளிலும் நமக்கு காட்சி தந்து நம்மை மகிழ்ச்சிப் படுத்துகிறார்.   “லோகோ பின்ன ருசிஹி என்பதின் படி, உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், ஏதாவது ஒன்றினை விரும்பிடக்கூடும் என்று தன்னை பற்பல அவதாரங்களில் பற்பல நிலைகளில் வேறுபடுத்திக் காட்டி, எல்லா ஜீவாத்மாக்களும் தன்னை அடைய அவரே  முயற்சியும் வழியும் செய்கிறார்.

அர்ச்சையில்

முதலில் நாம் அர்ச்சை என்ற நிலையில் பரமாத்மா, நின்றது, இருந்தது மற்றும் கிடந்ததைப்  பற்றி ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களைப் பார்ப்போம்.

தொண்டை நாட்டில், நின்றது திருஊரகத்தில்;  வீற்று இருந்தது திருபாடகத்தில்; கிடந்தது திருவெஃகாவில்.  “நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது” என்று பாடியவர்  திருமழிசை ஆழ்வார் ஆவார்.

பாண்டிய நாட்டில், நின்றது நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டத்தில்; வீற்று இருந்தது திருவரகுணமங்கையில்; கிடந்தது திருப்புளிங்குடியில். “புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று” என்று பாடியவர்  நம்மாழ்வார்.

சோழ தேசத்தில், வீற்று இருந்த திருக்கோலம் உள்ள திவ்யதேசங்கள், தஞ்சை மாமணிக்கோவில் உள்ள மூன்று கோவில்களிலும், திருவாலி திருநகரியில் உள்ள இரண்டு கோவில்களிலும், மணிமாடக்கோவிலிலும், திருவைகுந்தவிண்ணகரம், திருஅரிமேயவிண்ணகரம்,  மற்றும் நாதன் கோயில் எனப்படும் நந்திபுரவிண்ணகரம்,  ஆகும்.   நின்ற திருக்கோலம் சொல்வதற்குப் பல இருப்பினும், திருநாகை அழகியார், கிழக்கு வீடான திருக்கண்ணபுரம், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அப்பன் எனும் உப்பிலியப்பன், தேரழுந்தூர் ஆமருவியப்பன் என்பன சில.   திவ்யதேசங்களில் முதன்மையான திருஅரங்கம், சோழ தேசத்தில் இருக்கும் கிடந்த திருக்கோலங்களில் ஒன்றாகும்.

ஒரே திவ்யதேசத்தில் நின்றதும், இருந்ததும் கிடந்ததும் உண்டோ என்றால், திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக நின்றும், தெளிசிங்கபெருமாளாக இருந்தும், ரங்கநாதனாக கிடந்தும் சேவை சாதிக்கின்றார்.

திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் கிடந்து, நின்று, இருந்து  சேவை புரிகிறாரா என்றால், ஆம் என்றே சொல்ல வேண்டும்.   பெரிய பெருமாளாக கிடந்தும், நம்பெருமாளாக நின்றும் சேவை சாதிக்கும் பெருமாள், வருடத்தில் ஒரு முறை இராப்பத்து உற்சவத்தின் போது, தாயாராக காட்சி அளிக்கும் போது, பெருமாள் அமர்ந்து சேவை சாதிப்பதை இருந்தது என்று கூறலாம்.

விபவத்தின் திருக்கோலங்கள்

பொதுவாக மத்ஸ்ய, கூர்ம, வராஹ, வாமன, பரசுராம, பலராம அவதாரங்களை, அர்ச்சையில் சேவிக்கும் போது, நின்ற நிலையிலேயே தரிசிக்கின்றோம்.   அதேபோல், பொதுவாக, நரசிம்ம,  மற்றும் வரவிருக்கும் கல்கி அவதாரங்களை வீற்றுஇருந்த நிலையில் வழிபடுகின்றோம்.  இராமன், கிருஷ்ண அவதாரங்களை பற்றி திவ்யப்ரபந்தத்திலும், இதிகாச புராணங்களிலும் வரும் மேற்கோள்களை பார்க்கும் போது, அவர்களை நின்ற, இருந்த மற்றும் கிடந்த திருக்கோலங்களில் வரும் காட்சிகளை கீழே காணலாம்.

ராமன் விபவத்தில்

இராமன் மகிழ்ச்சியுடன் சித்திரகூடத்தில் சீதையுடன் இருந்த காலத்திலும், பின்பு பரதனுக்கு அரசும் பாதுகையும் ஈன்ற போதும் நமக்கு கண் முன் வருவது அவனது வீற்றுஇருந்த திருக்கோலம், ஆகும்.

இராமன்,  வாலியை கிஷ்கிந்தையில் வதம் செய்த போதும், லங்காபுரியில் இராவணனுடன் போர்புரிந்தபோதும்,  கையும் வில்லுமாய் நின்றது, இராமாயணத்தில் உள்ள  முக்கிய நிகழ்வுகள்.

இராமன், இலங்கைக்கு போர் புரிய தனது வானரப்படை கடலைக் கடக்க சமுத்திர ராஜனுக்கு அறிவிப்பதற்கு முன் திருப்புல்லாணி கடற்கரையில் தர்ப்பசயன பெருமாளாக காட்சி அளித்தது  இராமனின் கிடந்த திருகோலம்.

குட்டிக்கண்ணன் விபவத்தில்

விபவத்தில், குட்டிக் கண்ணனாக வீற்று இருந்தது, மண்ணையுண்டு, ஈரேழு உலகங்களையும் தன்  வாயில், யசோதைக்கு  காட்டியதை விவரிக்கும் காட்சி.

கோவர்தனத்தில், குன்றம் ஏந்தி குளிர் மழை காத்த திருக்கோலமும், சிறு வயதில், தொட்டிலைப் பிடித்தபடி, திரும்பிய  முகத்தோடு யசோதையைப் பார்த்த திருக்கோலமும் குட்டிக் கண்ணனின்  நின்ற திருக்கோலம் ஆகும்.

அதேபோல், சிறு வயது கண்ணன், மாணிக்கமும் முத்துக்களும் பதித்த தொட்டிலில் கிடந்த திருக்கோலம், ஆழ்வார்களை அதிகமாக பாட வைத்தது.

மேலே சொன்னவை எல்லாம், சிறுவயது விளையாட்டு கண்ணனின் நின்ற, அமர்ந்த மற்றும் கிடந்த திருக்கோலங்கள்.  கண்ணன் வளர்ந்து, ஒரு அரசனான பிறகு நமக்கு காட்சி அளித்ததை கீழே காணலாம்.

கிருஷ்ணன் விபவத்தில்

பாண்டவர்களுக்காக கண்ணன் கழுத்திலே ஓலை கட்டிக்கொண்டு, தூதுவனாக நடந்தது, கண்ணனின் எளிமைக்கு உதாரணமான நின்ற திருக்கோலம்.  அன்று போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டிய காலத்தில் பீஷ்மரின் அம்புகளை தடுப்பதற்கு, சங்கு சக்கரத்துடன் தனது சபதத்தையும் மீறி பீஷ்மருடன் போரிட தேரில் இருந்து இறங்கி நின்றது, கண்ணபிரானின் இன்னொரு நின்ற திருக்கோலம்.    அதே போல், நின்று கொண்டு,  அர்ஜுனனுக்கு கீதை சொன்ன கண்ணனையும் எல்லோரும் நினைவில் கொண்டு இருப்பார்கள்.

விபவத்தில் கண்ணபிரானாக, தூது போன இடத்தில, பாண்டவர்களுக்காக ராஜ சபையில் பேசியது  வீற்று இருந்த திருக்கோலம்.

மஹாபாரதப் போருக்கு முன்னால், கண்ணனின் கருணை வேண்டி, துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணனின் கட்டிலிற்கு தலைப்பக்கமும், கால்பக்கமும் காத்து இருந்தது, கண்ணனின் பிரபலமான கிடந்த திருக்கோலம்.  அதே போல், அர்ஜுனன், தனக்கு வெகு நெருக்கம் என்பதை கௌரவர்களுக்கு தெரிவிப்பதற்கு, தானும், ருக்மணி மற்றும் சத்தியபாமாவும், அர்ஜுனனும் திரௌபதியும் ஒரே கட்டிலில், சஞ்சயனுக்கு சேவை சாதித்தது, கண்ணனின் மற்றொரு முக்கியமான கிடந்த திருக்கோலம்.  சஞ்சயன் இந்த நெருக்கத்தை  கௌரவர்களுக்கு தெரிவித்து, அர்ஜுனன் தோற்பதற்கு ஸ்ரீ கிருஷ்ணன்  விடமாட்டான் என்றும்  அதனால்  கௌரவர்கள் போர் செய்வதை கைவிடும் படியும் சஞ்சயன் அவர்களுக்கு போதனை செய்ய வேண்டும் என்பதே கிருஷ்ணனின் நோக்கம்.

முடிவுரை

இன்னும் ஆழ்ந்து பார்த்தால்,  இராமாயணத்திலும், மகாபாரதத்திலும், விஷ்ணு புராணத்திலும், பாகவதத்திலும்,   இராமனைப் பற்றியும், கண்ணனைப் பற்றியும்  இன்னும் பற்பல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும்.   நம்முடைய கிரகிக்கும் சக்தியும், நாம் செலவிடும் நேரமும் தான் நமக்கு தடைகளே தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பகவத்  விஷயத்திற்கு அளவே இல்லை.


Standing, Sitting and Reclining

Standing, sitting and reclining are three important postures in which Paramaathma reveals Himself to the external world.   Among the five states of Paramathma  Paramapathanathan has taken the sitting posture to give dharsan to mukthatmas and nithyasooris. Similarly Ksheeraptinathan, has taken the reclining position to give dharsan to all the Devas, like Brahma, Sivan, Indran, Varunan and Kuberan.  The Antharyaami state is difficult to classify as it is hidden all the times. Paramathma has occupied all the three postures in both Vibhavam and in Archai to give happiness to us.  There is a saying “loko binna ruchihi” meaning “people’s taste will differ in this world”.   Paramathma, in line with the above, has taken different postures in different incarnations to attract all the Jeevathmaas and He has shown the way to the Jeevathmaas to reach Him.

In Archai

First, let us take the Archai State, in which Azhwaars composed hymns on Paramathma about His standing, sitting and reclining postures.

In the northern Tamil Nadu (Thondai Naadu, covering Chennai, Chingelpat and Kanjeepuram areas), we have the dharsan of standing posture in Thiruooragam.   We have the sitting posture in Thirupaadagam.  And we have the dharsan in the reclining posture in Thiruvekka.  This is summarised beautifully by Thirumazhisai Azhwaar in his hymn, “nindrathu enthai Ooragathu, irunthathu enthai Paadagathu, andru Vekkanai kidanthathu“.

In the southern Tamil Nadu (Paandiya Naadu), Paramathma gives dharsan in the standing posture in Srivaikuntham, sitting posture in Thiruvaragunamangai (today’s name is Natham, near Tirunelveli) and reclining posture in Thirupulinkudi. Nammazhwaar sung the same thing in his hymn “Pulingudi kidanthu, Varagunamangai irunthu, Vaikunthatthul nindru”.   

In the river Cauvery delta area, (Chola Desam or Thiruchi and Thanjavur, Thiruvaarur, Nagaipattinam areas), Paramathma gives dharsan in sitting, standing and reclining postures on many divyadesams.   We have dharsan in sitting posture,  at all the three deities / temples of Thanjai Mamani Kovil, of both the deities / temples of Thiruvaali Thirunagari, Manimaadakovil, Thiruvaikuntha vinnagaram, Thiruarimeya vinnagaram and Nandhipura vinnagaram or Nathan Kovil. Even though there are many divya desams where the Paramathma gives dharsan in standing posture, we can take a few like, ThiruNagai Azhagiyar in Nagaipattinam, the eastern palace of Paramathma, namely, Thirukannapuram, Thiru Uppiliappan, the deity who does not have anyone equivalent or superior,  and Aamaruviappan in Therazhundoor.   For reclining posture, the primary divyadesam Srirangam is in Chola Desam.

If we ask ourselves about having all the three postures in one divyadesam, Triplicane in Chennai, will provide us the answer.    He gives dharsan in the standing posture as Parthasarathi, in sitting posture as Thelisinga Perumal and in the reclining posture as Ranganathan.

Again, if we ask whether the chief deity of the prime divya desam, Sri Ranganathar in Srirangam, gives  dharsan in the three postures, the sitting, standing and reclining, the response would be affirmative.  The moolavar, Periya Perumal is in the reclining position.  The Utsava moorthy, Namperumal, is in the standing posture.    Once a year, during the festival Irapathu (the  ten nights festival), Namperumal gives dharsan as Thayar after decorating Himself as Goddess and at that time, He takes the sitting posture.

Postures in Vibhavam

In general, Mastya, Koorma, Varaaha, Vaamana, Parasuraama and Balarama incarnations, when presented in Archai , take the posture of standing.    In the same way, the other incarnations like Narasimha and Kalki, which is going to happen in the Kaliyugam, generally are presented in the sitting postures.     Unlike the other incarnations, Sri Rama and Sri Krishna incarnations have taken Sitting, Standing and Reclining positions as per Divyaprabhandam, Ithihaasam and Puranams.   Let us look at some of the incidents where Sri Rama and Sri Krishna were presented in the Standing, Sitting and Reclining postures.

Vibhavathil Sri Raman

In the epic Ramayana, we hear about Rama sitting and spending happy moments with Sita in Chitrakoodam.  Later, when Rama gave away His holy Footware and His kingdom to Bharatha, Rama gives dharsan in Sitting posture.

Sri Rama gave dharsan with His bow and arrow in Standing Posture, when He killed Vaali in Kishkintha and when He killed Ravana in the battle in Sri Lanka.

Sri Rama, as Dharbha Sayana Perumal,  was in reclining Posture on the sands of the beach in Thriupullaani, before the construction of the bridge across Bay of Bengal, in front of Samuthra Rajan (King of Seas).

Sri Krishna as a Child

As a child, Sri Krishna was in sitting posture when he exhibited the whole universe in His mouth, after eating a bit of sand to Yasoda, His mother.

Similarly Sri Krishna took the Govardana Hill and held it like an umbrella to protect the people and the herd.   This is a significant standing posture of child Krishna.  Another enjoyable standing posture of child Krishna, is as a small boy standing and holding the cradle with His face turning towards Yasoda.

Finally it is the acts of Child Krishna which made the Azhwaars sing hymns on Sri Krishna.   Many of the hymns are on the reclining posture of child Krishna lying in the cradle  which is fitted with diamonds and pearls.

All the above narrations about Sri Krishna, are when He was young and playful.  We will also go through the incidents, where Krishna as a grown up and a king, was in sitting, standing and reclining postures.

Sri Krishna in Vibhavam

Sri Krishna agreed to go as an envoy for Paandavaas and he took the message from them to Kaurava and that was one of the memorable events in Mahabharatha where Sri Krishna took the standing or walking posture.  Similarly during the Mahabharatha war, Sri Krishna jumped out of his chariot and protected Arjunan by directly going for a fight with Bheeshmar,  ignoring or breaking His own promise of not taking part in the war with weapons.   This is another significant standing posture of Sri Krishna in Mahabharatha.   All of us are also aware of Krishna’s preaching of Bhavath Geetha to Arjunan before the start of the war in the standing posture.

Sri Krishna, when he went as an official messenger for the Pandavaas and delivered  the message to Kaurava in their Assembly or the King’s Advisory council, He was in the Sitting posture.

One of the significant events in Mahabharatha, both Dhuriyodhanan and Arjunan waited by the side of Sri Krishna’s bed, Arjunan by the side of His feet and the other at the side of His head, when He was sleeping (in Reclining) to ask for favours, before the war. Another incident to remember is about how Sri Krishna communicates to Sanjayan, a messenger from Dhuriyodhanan’s camp, about his closeness to Arjunan by having Rukmani and Satyabhama along with Arjunan and Draupadi in the same bed.  It was the intention of Sri Krishna that Sanjayan should advise Dhuriyodhanan about the closeness of Arjunan to Sri Krishna and that Sri Krishna would not let Arjunan get defeated in the war; so Dhuriyodhanan should take steps towards withdrawing from the war.

Conclusion

When we go deeply into Ramayanam, Mahabharatham, Vishnu Puraanam and Bhagawatham, we can get many more interesting experiences on Sri Rama and Sri Krishna.    The limitation is all about the amount of time what we have and our ability to  understand, rather than the amount of available material on vaishnavism.   With that we will conclude this discussion.

One Comment on “நின்றதும் இருந்ததும் கிடந்ததும் / Standing, Sitting and Reclining

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: