Tenth subsection – Thiruchithrakoodam – Part 1/ பத்தாம் பதிகம் – திருச் சித்ரகூடம் – முதல் பகுதி

For English version, please click here, Thanks 

இதுவரையில்

இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள்  திருமொழியில், ஒன்பது பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும்,  பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.

முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் பரமாத்மாவின், மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம்.    ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன்  தொகுத்து வழங்கினார்.

அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌசல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார்.  அப்பதிகம், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே“, என்ற திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளை போற்றி   பாடுவதாக அமைந்து உள்ளது.    ஒன்பதாவது பதிகத்தில் ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை, தசரதச் சக்கரவர்த்தியாகவே தன்னை ஆக்கிக் கொண்டு, இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கி, தசரதன் புலம்பல்களாக அருளிச் செய்கிறார்.

அடுத்தது

குலசேகர ஆழ்வார் இராமர் மேல் இருந்த பக்தியால் மூன்று பதிகங்களை ஸ்ரீ ராமருக்கும், இராமாயணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடி உள்ளார்.  முதலில் இராமனின் தாயான, கௌசல்யா ராமருக்கு பாடும் தாலாட்டு எட்டாம் பதிகத்தில் கண்டோம்.  ஒன்பதாம் பதிகத்தில், தசரதன் புலம்பலைப் பார்த்தோம்.   இனி இந்த கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரகூடம்  (சிதம்பரம்) என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப் படுகிறது.

வடமொழியில் உள்ள வால்மீகி இராமாயணம், இருபத்தி நான்காயிரம் (24000) ஸ்லோகங்களைக் கொண்டது.   அதை ஓட்டி தமிழில் கம்பர் பாடிய கம்பராமாயணம் பத்தாயிரம் (10000) பாடல்கள் கொண்டது.   ஆழ்வார் இதனை அழகாக தொகுத்து பதினோரு (11) பாடல்களில் வழங்கி இருக்கிறார்.

ஸ்ரீ ராமரும், சீதையும் வடஇந்தியாவில் உள்ள சித்திரகூடம் என்ற இடத்தில, தங்களின் வனவாச காலமான பதினான்கு வருடங்களின் பெரும் பகுதியை, மிக மகிழ்ச்சியாகக் கழித்தார்கள்.   ஆழ்வார் சிதம்பரம் கோவிலில் ஸ்ரீ கோவிந்தராஜரை தரிசித்த போது, அவரை, சித்ரகூடத்தில் வசித்த ராமனாகவும், சீதையாகவும், லக்ஷ்மணனாகவும் கண்டார்.  அதனால் இதை தில்லைநகர் திருச்சித்ரகூடம்  என்று பாடியுள்ளார்.

சம்பூர்ண இராமாயணம்

முதல் பாசுரத்தில் அயோத்தியின் அழகையும் இராமனின் அழகையும் வர்ணிக்கின்ற ஆழ்வார், சூரிய குலத்திற்கே ஒப்பற்ற விளக்காக தோன்றி, தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில்  எழுந்தருளி இருக்கும் இராமனை கண்குளிர தரிசிக்கும் நாள் என்று வருமோ என்று கலங்குகிறார்.

பெருமாள் திருமொழியின் முதல் பதிகத்தில், அரங்கனை, “கருமணியை,  கோமளத்தைக்  கண்டு கொண்டு, என் கண்ணிணை என்று கொலோ களிக்கும் நாளே” என்று தொடங்கியவர், இப்போது கடைசி பதிகத்திலும் தில்லைநகர் திருச்சித்ர கூடத்தில் கோவிந்தராஜ பெருமாளை, “எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை என்று கொலோ கண்குளிரக் காணு நாளே” என்று முடிக்கிறார்.      

விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை”, என்று ஆழ்வார் இராமனின் வீரத்தை மெச்சுகிறார்.

இரண்டாவது பாசுரத்தில்

  • தாடகை என்ற இராட்சசியை வீழ்த்தியதையும்,
  • அவளது மகனான சுபாகு என்ற அசுரனை கொன்று முடித்ததையும்,
  • அவளது மற்றொரு மகனான, மாரீசன் என்ற அரக்கனை விரட்டி அடித்ததையும் குறிப்பிட்டு,  இராமபிரானின் வீரத்தையும்,
  • விஸ்வமித்ரா முனிவரின் யாகத்தை காப்பாற்றியதால், அவரது இரட்சகத்தையும், ஒரே பாடலில் ஆழ்வார் சொல்கிறார்.

மாரீசனை விரட்டியது, அவன் பின்னாளில் இராவணனிடம் இராம பிரானின் வீர தீர பராக்கிரமங்களை விளக்கிச் சொல்வதற்கு என்று வைத்துக் கொண்டாலும், மாரீச, சுபாகு மூலம், ராமபிரான் நமக்கு, உபநிஷத், ப்ரஹ்மஸூத்திரம் மற்றும் ஆண்டாளின் திருப்பாவையில் சொன்ன ஒரு முக்கிய கருத்தை, ஒரு நிகழ்ச்சியாக நடத்திக் காட்டி இருக்கிறார். அந்த கருத்தாவது, நாம் சரணாகதி பிரார்த்திக்கும் போது, பரமாத்மா, நாம் முன்பிறவிகளில் செய்த பாவங்களையும்  (பிராரப்த கர்மா), மற்றும் இந்த பிறவியில் அதுவரை செய்த பாவங்களையும்  (சம்சித்த கர்மா) அழித்தும், நாம் இனிமேல் இந்த பிறவியில் செய்யப்போகும் பாவங்களை  (ஆகாமி கர்மா)   தள்ளி விட்டும், நமக்கு செய்யும் க்ருபைக்கு உதாரணமாக சுபாகுவை முடித்ததையும், மாரீசனை விரட்டியதையும் நடத்திக் காட்டினார்.   ஆண்டாள் சொன்னது, “போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்” என்பதாகும்.

அத்தகைய இராமபிரானே, தில்லை நகர் திரு சித்ரகூடத்தில், மூவாயிரம் அந்தணர்கள் திரண்டு துதிக்க ரத்ன சிம்மாசனத்தில் வீற்று இருந்த பரமாத்மா ஆவார் என்று பாசுரத்தை முடிக்கிறார். 

மூன்றாவது பாசுரத்தில், ஆழ்வாரின் பாகவத பக்தி மிளிர்கின்றது.  சிவனுடைய வில்லை வளைத்து, சீதா  தேவியை மணம் புரிந்ததையும், பரசுராமனின் வில்லையும், அவரையும் வென்றதையம் சேர்த்து இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார்.   அதே போல், மற்ற யாராலும் அடக்க முடியாத வில்லினை கையில் ஏந்தி, தில்லை நகர் திருச்சித்ர கூடத்தில், அத்தகைய இராமன் காட்சி அளிப்பதாகவும், அந்த இராமனை  வணங்கும் அடியார்களுடைய திருவடிகளை, தான் வணங்குவதாக ஆழ்வார் குறிப்பிடுகிறார். இதை ஆழ்வார், இராமனுக்கு அடியவனான பரதனுக்கு, எப்போதும் தொண்டு புரிகின்ற சத்ருக்னன் போல தானும், பாகவத தாஸனாக இருக்க வேண்டும் என்று வேண்டுவதாக கொள்ளலாம்.

நான்காவது பாசுரத்தில், ஆழ்வார்,

  • இராமர் கைகேயின் சொல்படி ராஜ்யத்தை துறந்துவிட்டதையும்,
  • மகாபக்தனான குகன் படகினை செலுத்த கங்கை நதியைக் கடந்ததையும்,
  • அங்கு வந்த பரதனுக்கு, அரசும், பாதுகையும் கொடுத்ததையும்,
  • வடநாட்டில் உள்ள சித்ரகூடத்தில் இருந்த இராமன், இன்று தில்லை நகர் திரு சித்ரகூடத்தில்  இருக்கிறார் என்றும்
  • அவரை தொழும் அடியவர்களுக்கு, மேல் உலகத்தில் உள்ள நித்யஸூரிகளும் சமமாக மாட்டார்கள் என்றும் சொல்கிறார்.

இந்த பாடலில் ஆழ்வார் உபயோகித்துள்ள சில சொற்தொடர்கள் மிகவும் நன்றாக அனுபவிக்க வேண்டியவை, அவைகளில் சிலவற்றை கீழே காண்போம்.

  •  கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து –  தசரதனுக்கு இராமனை காட்டுக்குப் போகச் சொல்லும் மனம் கிடையாது,  அதனால், யார் ராமனிடம் நேரிடையாகச் சொன்னார் என்பதை சொல்லாமல், கைகேயின் வார்த்தையினால் ராமன் அயோத்தியை துறந்தான் என்கிறார்.
  • பத்தியுடைக் குகன்கடத்த – இதற்கு விளக்கம் சொல்லும் ஆசார்யர்கள், தம்பிகளை காட்டிலும் இராமனிடம் அன்பு கொண்ட குகன் என்று கூறுகிறார்கள்.
    • ராமனும் சீதையும் உறங்கிக்கொண்டு இருக்கும் போது லக்ஷ்மணன்  பாதுகாப்பான். அப்போது குஹனும் உடன் இருப்பான், ஏன்  எனில் லக்ஷ்மணன், இராமருக்கு ஏதாவது தீமை செய்து விடுவானோ என்று பயம் அல்லது லக்ஷ்மணனை காட்டிலும் குஹனுக்கு இராமனிடம் அதிக பக்தி.
    • அதே போல், பரதனையும் குகன் ஒரு சமயம் சந்தேகிக்கின்றான்.  பரதன் கூட்டத்தோடு இராமனைத் தேடிக்கொண்டு வரும் போது, சரயு நதியின் மறுகரையில் பார்த்த குகன், பரதன், இராமனை கொல்ல வருகிறானோ, என்று தனது படையைக்  கூட்டினான். இது குகனுக்கு இராமனிடம் உள்ள அதீத பக்தியைக் காட்டுகிறது.
    • இதே குகன், லக்ஷ்மணனையும், பரதனையும் பற்றி நன்றாக தெரிந்து கொண்ட பின், அவர்களிடம் காட்டிய அன்புக்கும் மரியாதைக்கும் உதாரணமாக, கம்ப ராமாயணத்தின் இந்த பாடல் வரிகளை, நாம் எடுத்துக் கொள்ளலாம்.   இராமன் தந்தை மட்டும் தந்த ராஜ்ஜியம் வேண்டாம் என்று சொன்னான், பாரதனோ தாய் தந்தை இருவரும் தந்த ராஜ்யத்தை வேண்டாம் என்று சொன்னான். அந்த, பரதனைப் பார்த்து, “ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ? தெரியின் அம்மா“, (2357) அதாவது, ஒரு ஆயிரம் இராமர் பரதனுக்கு நிகர் ஆவரோ என்று குகன், பரதனின் மேன்மை புலப்பட்டு வியக்கிறார்.
  • பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – இதனை நம் ஆச்சார்யர், நாம் என்ன நினைத்தாலும், தெய்வ சங்கல்பமே நடக்கும் என்பதற்கு உதாரணமாக சொல்வார்கள்.  தசரதன், இராமனுக்கு பட்டம் கட்ட நினைத்தான். கைகேயி, பாரதனுக்குப் பட்டம் கட்ட நினைத்தாள்.  ஆனால் தெய்வ சங்கல்பம், பாதுகை இராஜ்யத்தை ஆள வேண்டும் என்பது, அதுவே நடந்தது.   (இது வேதாந்த தேசிகரின் பாதுகா சகஸ்ரம் என்ற நூலில் உள்ளது).
  • சித்திரகூ டத்திருந்தான்  – பாதுகையை எடுத்துக்கொண்டு செல்லும் பரதனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த இராமன், இன்று தில்லைநகர் திருச்சித்ர கூடத்தில், ஆழ்வார் வரவு பார்த்து வைத்த கண் வாங்காமல் காத்துக்கொண்டு இருந்தான் என்றால் மிகையாகாது.
  • கண்குளிரக் காணப் பெற்ற – அந்த காலத்தில், வடநாட்டில் இருந்த இராமனைப் பற்றி இன்று நாம் கேட்கத்தான் முடியும், அதை நாம் இப்போது பார்க்க முடியாது.  ஆனால், தில்லைநகர் திருச்சித்ர கூடத்தில் உள்ள கோவிந்தராஜனாகிய இராமனை இன்று நாம் கண் குளிர தரிசிக்கவும் முடியும் என்கிறார்.

அடுத்த பாசுரத்தில், இராமன்

  • விராதன் என்னும் அரக்கனைக் கொன்றதையும்
  • தமிழ் முனிவர் அகத்தியரிடம் விஷ்ணு தனுஸை  வாங்கியதையும்
  • இராவணனின் தங்கையான சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்ததையும்
  • கரண், தூஷணன் என்ற 14000 அரக்கர்களைக் கொண்ட சேனையை அழித்ததையும்
  • மாரிசன் என்ற மாய மான் அழியும்படி செய்ததையும்

ஆழ்வார் குறிப்பிடுகிறார்.   சென்ற பாடலைப் போல், இந்த பாடலில் ஆழ்வார் உபயோகித்துள்ள சில சொற்தொடர்கள் மிகவும் நன்றாக அனுபவிக்க வேண்டியவை, அவைகளில் சிலவற்றை கீழே காண்போம்.

  • வண் தமிழ் மாமுனி கொடுத்த வரி வில் வாங்கி” – இராமர், பரசுராமரை வென்ற போது, அவரிடம் இருந்து பெற்ற விஷ்ணு தனுஸை, அங்கு ராமரின் பெருமையை பாட வந்த வானவர்களில் ஒருவரான வருணனிடம் அதைக் கொடுத்து பாதுகாக்கும் படியும், தக்க சமயத்தில் பெற்றுக் கொள்வதாகவும் சொன்னார்.   அதேபோல் இராமர் வனவாச காலத்தில், அகத்திய முனிவரின் ஆஸ்ரமத்திற்கு விஜயம் செய்யும் போது, அவரிடம் இருந்து விஷ்ணு தனுஸை  பெற்றுக்கொண்டார்.
  • கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி“, சூர்ப்பனகை, இராம இலட்சுமணர்களை காண வந்த போது, அழகிய வடிவத்தில் வந்ததால், கலை வணக்கு  என்றார் ஆழ்வார்.   கம்பரும் மானின் விழிபெற்ற மயில் வந்தென வந்தாள் (2764) என்று கூறுகிறார்.
  • அரக்கி மூக்கை நீக்கி” – அரக்கியின் மூக்கை அறுத்தது இலட்சுமணன் என்றாலும், ஆழ்வார் இராமன் செய்ததாகக் கூறுவது, ஏனெனில், இலட்சுமணன், இராமனின் கருத்துக்கு ஏற்றாற்போல், அவன் கட்டளை படி செய்ததால் ஆகும்.  இன்னும், இலட்சுமணன் இராமபிரானுக்கு வலது திருக்கை போன்றவன் ஆகையால், இராமர் செய்ததாக சொன்னது அழகே.
  • போர்க்களத்தில் தன் வில்லாற்றலால் எதிரிகளை அழித்த ராமரின் வீரத்திற்கு கம்பர் சொல்லும் இந்த பாடலை நினைவு கூறலாம்

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி;  சேனை  காவலர் ஆயிரம் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்;  கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில்என்னும்; ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிதுஅன்றே – 9513 

ஆயிரம் யானைகளும், பதினாயிரம் தேர்களும்,  ஒரு கோடி குதிரைகளும் ஆயிரம்    சேனைத்     தலைவர்களும் இறந்து விழுந்தால்  ஒரு முண்டம் (தலை இல்லாத உடல்)  எழுந்து கூத்தாடும்;   அப்படி ஆயிரம் முண்டங்கள் ஆடினால்  இராமன் வில்லில் கட்டிய அழகிய மணி, ஒரு தடவை கணின் என ஒலிக்கும்; போர் நடந்த அந்த நாளில்; அந்த வில் மணி ஏழரை  நாழிகை   நேரம் ஆடியது, ஆடியபோதெல்லாம் மணி ஒலித்தது.

இப்படியான இராமரின் வீர தீர பராக்ரமங்களுடன், இந்த வலைப் பதிவினை முடித்துக் கொண்டு, இந்த பதிகத்தின் மீதி உள்ள பாசுரங்களை நமது அடுத்த வலைப்பதிவினில் காணலாம்.

இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம், அவர்களுக்கு எங்கள் நன்றி.

http://www.tamilvu.org/ta/library-l4210-html-l4210in1-140090

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=133

இந்த பாசுரங்களை இங்கே கேட்டும் மகிழலாம், நன்றி STD Paadasala, Chennaii மற்றும் அதை தெரிவித்த whatsapp group friends

====================================================

Till Now

In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections.  Azhwaar,  whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees,   sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.

In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of  Archai    In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram.   In the sixth subsection, Azhwaar takes the roles  of the Gopikas, the women folk of Brindavan,  who lived at the same time of Sri Krishna  and loved Sri Krishna.   In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar,  (Holy Devaki),  the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age.

In the next subsection, namely, the eighth,  Azhwaar, enjoys  the  happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age.   All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram, whom azhwaar calls as “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.  In the ninth subsection, Azhwaar brings out the sadness of Dasarathan,  father of Sri Rama,  after he was separated from  Sri Rama, who went to the forest. Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, and Azhwaar brings out the feelings of Dasarathan in the hymns as they melt our hearts and these are called as Dasarathan’s lamentations.

What is Next

Kulasekara Azhwaar through his deep love, affection and devotion to Sri Rama, has compiled three subsections on Sri Rama and Sri Ramayanam.    Earlier, we had seen Rama’s mother, Kowsalya happily singing her lullaby on the young Rama, in the eighth subsection.  In the ninth subsection, Azhwaar talks about the lamentations of Dasaratha,  His father.   In the next subsection, or the final subsection of Perumal Thirumozhi, Azhwaar brings out the whole Ramayanam.  Azhwaar takes the divya desam, Thillai Nagar Thiru Chitra Koodam (Now called as Chidambaram Govindaraja Perumal Koil) as the part of this subsection.

After Darasaratha’s lamentations, Azhwaar decided to bring out the entire Ramayanam in the final subsection of Perumaal Thirumozhi.  The entire Ramayanam, consisting of about 24000 slokas in Valmiki Ramayanam and 10,000 poems in Kamba Ramayanam, was beautifully narrated in just 11 verses by Azhwaar.   

Sri Rama and Sita spent some wonderful years in Chitra Koodam, which is in Northern India, out of their fourteen years of forest life.   When Azhwaar had dharsan of the deity, Sri Govindarajar in Chidambaram, Azhwaar experienced the presence of Sri Rama, Sita, Lakshmana of Chitra Koodam, but in Chidambaram.  Hence he called this divya desam as Thillainagar Thiru Chitra Koodam.   

Sampoorna Ramayanam

 In the first hymn, Azhwaar brings out the beauty of Ayodhya and Sri Rama.  He has also showers  all praises on  Sri Rama,   by calling Him as the Shining Light for the whole Soorya  Clan .   Azhwaar completes the hymn by expressing his desire to have the dharsan of Sri Rama, who is now present in Thillai Nagar Thiru Chitra Koodam, Chidambaram in Tamilnadu.       

Azhwaar, in the first subsection of this Perumal Thirumozhi, longed when he would have the opportunity to have the dharsan of Ranganatha Perumal, by saying “Karumaniyai, Komalathai, kandu kondu, en kanninai endru kolo  kallikum naale“.    In the same manner he starts his last subsection of Perumal Thirumozhi by longing to have the dharsan of Sri Govindarajan Perumal, by saying “Engal thani Muthalvanai, em Peruman Thannai, endru kolo  kann kulira kaannum naale“.

In this hymn, Azhwaar starts saluting the Lord for His prowess by mentioning “Vinn muzhthum uyyak konda veeran thanai“, meaning Lord Rama gave abode all in the celestial world.

In the second hymn, Azhwaar explains the prowess of Sri Rama, by highlighting

  • how He killed the demoness  Thaadakai
  • how He killed her son, the demon Subhaahu and
  • also how He forced her another demon son, Maareechan  to run away from the place  of  yagyam

In the same hymn, Azhwaar also mentions another virtue of Sri Rama, that He always protects the  people, by saying that by removing these demons from the scene, He had helped the Sage Vishwamithra to complete his yagya .

In one way, we can take the reason for Sri Rama to force Maareechan to run away   , instead of killing him, could be because, then only, Maareechan  would be able to explain the prowess of Sri Rama to Ravanan at a later date.    Our acharyas also  use the example of Subhaahu and Maareechan to explain an important fact that is given in Upanishadh, Brahmma Suthram and Aandaal’s Thiruppaavai.   It is a favour, Paramathma does to us, when we pray for the total surrender.  He removes all our sins of the past lives, (prarabdha karma) and all the sins we committed during this life (samchita karma), like the way He killed Subhaahu and He clears  all the sins that we might be committing during the rest of our life, (Agami Karma),  like how He drove away Maareechan.  The same point is told by Aandal in her Thiruppavai, as “poya pizhaiyum pughu tharuvaan nindranavum, theeyinil thoosaagum” (5)

Azhwaar completes the hymn, by saying that the same Paramathma, adorning  the gem-filled throne, is in Thillai Nagar Thiru Chitra Koodam, where 3000 Brahmins praised the glory of the deity.

Azhwaar’s devotion towards devotees comes  out vividly in the Third Hymn of this subsection.  In this hymn, Azhwaar talks about the marriage with Sita by breaking the the special bow from Siva (Siva Dhansu) and the subduing of Parasuraama by breaking his stronger bow.  Azhwaar says that similar brave Rama, with strong arms and a heavy bow resides in Tillainagar Tiruchitrakutam. Azhwaar concludes the hymn by saying that he would for ever be a servant to those devotees of this Thillainagar Thiruchitrakooda Rama.  In Ramayanam, Rama’s brother Bharathan had always served only  Rama . Their brother Chathrugnan had only served Bharatha.   Azhwaar winds up this hymn, by saying that he wished to be like Chathrugnan and serve all the devotees of Sri Rama.

Fourth hymn is a very interesting hymn, where Azhwaar talks about

  • Rama, leaving the kingdom of Ayodhya, based on the words of Kaikeyi
  • Rama, crossing the Ganges, with Guhan, a great devotee of Sri Rama, piloting or steering the boat
  • Rama giving away the Kingdom and His holy footwear to Bharathan, His brother, who visited him there
  • Rama who lived in Chithrakoodam of northern  India during that period, is now living in Thillainagar Thiru Chithrakoodam as Govindarajar and
  • the Nithyasoories, who live in celestial world and serve Paramathma eternally would  also be a  no match to those who offer prayers to Govindarajan in Thillainagar Thiru Chithrakoodam

In this fourth hymn, there are some interesting, beautiful and enjoyable words which are coined by Azhwaar, and let us see some of them.

  • “Kaikesi sollaal thonnagaram thuranthu” – Dasaratha, the father of Rama, did not have the heart to ask Rama to go to the forest. Hence Azhwaar did not want to use the words on who asked Rama to go to the forest, but carefully structured the sentence as “Rama went out of Ayodhya as per the words of Kaikeyi”.
  • “Bakthi yudai Guhan Kadatha” – the direct meaning is  the devotee Guhan steered the boat, but our Acharyars endorse Guhan as a more ardent devotee than Rama’s own brothers, Lakshmanan and Bharathan.
    • For example, when Sri Rama and Sita were sleeping, Lakshman would be their vigilance.   At that time Guhan would also be following Lakshman, as Guhan because of his extreme devotion towards Srirama suspected that Lakshman might  harm Sri Rama
    • Similarly, Guhan had also suspected Bharathan, as though he was coming there to kill Rama, when Bharathan actually came along with the battalion of people to request Rama to return to Ayodhya, .  Guhan immediately asked his army to be ready for the battle.
    • But once Guhan had understood Bharathan and Lakshmanan, he showed lot of respect, love and affection towards them. This can be seen from one of the hymns from Ramayanam in Tamil, by Kamban.   Rama had refused the kingdom offered by his father, Dasarathan, but Bharathan had refused the kingdom offered by both  his father and mother.  So Guhan felt Bharathan’s attitude was superior to that of Sri Rama and Guhan said “Aayiram Ramar nin kezh aavaro, theriyin amma” (2357), meaning, Guhan did not know, whether one thousand Ramas would be equivalent to Bharathan.
  • “bharathanuku  paathugamum arasum eenthu” – meaning that Sri Rama gave away His footwear and the Kingdom to Bharathan.    This situation is taken by our Acharyas as an example to illustrate  that whatever God thinks would alone happen irrespective of what we think, .   For example, Dasarathan wanted Rama to be the king.  Kaikeyi wanted Bharathan to be the King of Ayodhya.   But ultimately it was Rama’s footwear which ruled the kingdom for 14 years, which was the probably the desire of Paramathma.   (This has been mentioned in the Paduka Sahasram by Sri Vendantha Desigan).
  • Chithirakoodathu irunthaan” – Sri Rama was watching Bharathan walking away from Him, when Bharathan went back with His foot ware.  As per Azhwaar, the same Rama was looking forward to receiving Azhwaar at Thillainagar Thiru Chithra koodam.
  • “Kann Kulira Kaanap petru” – meaning that “the dharsan of Sri Rama is a good treat to the eyes”.   We can only hear about the Sri Rama, who lived in those days, but according to the Azhwaar, today, we can have a good dharsan of Sri Govindarajar, residing at Thillainagar Thiru Chithra Koodam, who is the same Rama.

In the next hymn, Azhwaar talks about the way Rama went about to do the following :

  • Killing of Virathan, a demon
  • Getting back the Vishnu Bow from the Tamil poet and sage Agasthiar
  • Removal of the nose of Soorpanagai, sister of Ravana
  • Killing of the army containing about 14000 demons, including  Karan and Thooshanan
  • Killing of Maareechan, who came in disguise of a mysterious deer

Like the previous hymn, there are some interesting, beautiful and enjoyable words which are coined by Azhwaar in this hymn also and let us see some of them.

  • Vann tamil maamuni kodutha vari vil vaangi” – Sri Rama when he won Parasuraam, he got the Vishnu Bow from Him.   At that time, there were many angels from the celestial world to praise the prowess of Rama. One of them was Varunan.  Rama gave the Vishnu Bow to him and asked him to keep it safely so that Rama could get it back at appropriate time.   When Rama was in forests, He visited the Tamil sage Agasthiar and He got the Vishnu Bow from him.
  • “Kalai vannakku nokku araki mookai neeki” –  When the demoness Soorpanagai came to see Sri Rama and Lakshmana, she came as a beautiful looking girl.  Hence Azhwaar used the term “Kalai Vannakku“, meaning beautiful art.   Kambar also in his Kambaramayanam, used the words “maanin vizhi petra mayil vantha ena vanthaal“,  (2764) meaning a lady with beautiful eyes of a deer and wonderful look of a peacock.
  • “araki mookai neeki” – Only Lakshmana removed the nose of Soorpanagai. However, Azhwaar states as though Rama did that.   This is because, Azhwaar felt that Lakshmana did that as per the wishes of Rama and also as per the instructions of Rama.   Moreover, Lakshman is considered as the right hand for Rama and hence it is appropriate for Azhwaar to say that it was done by Rama.
  • We can refer to this poem from Kambaramaayanam to see how Kambar had explained the prowess of Sri Rama and how He destroyed the opposition army with His bow.

Aanai Aayiram, Ther Pathinaayiram, adal pari oru kodi; senai kaavalar aayiram padin, kavantham ondru enzhunthu aadum; kaanam, aayiram kavanthu nindru aadidin, kavin mani kannil ennum; enai am mani ezharai nazhigai aadiyathu inithu andre – 9513 

When Rama killed 1000 elephants, 10000 chariots and 10 million soldiers, one trunk (body without head) would stand up and dance. When 1000 such trunks danced, the bell in the bow of Sri Rama would strike once.    On that day, when the war was going on, the bow was continuously ringing for hours.

With this prowess of Sri Rama, let us conclude this weblog and continue the remaining hymns in our next weblog.

They lyrics of the tenth subsection can be seen at the following web address and we take this opportunity to express our thanks to them.

http://www.tamilvu.org/ta/library-l4210-html-l4210in1-140090

===========================================================

2 Comments on “Tenth subsection – Thiruchithrakoodam – Part 1/ பத்தாம் பதிகம் – திருச் சித்ரகூடம் – முதல் பகுதி

  1. Fantastic Venkatasan.
    Posting vandha soottileyE padthen – yes its equivalent to
    படிப்படியா தேன்

    I like the powerful simplicity which is your style.

    Udage of Kamban’s poem 9513 very appropriately reminds me of

    ஒரு சோறு பதம்

    வாழ்க வளமுடன்

    Swami

    On 23 Nov 2017 14:19, “Simple User’s view on Vaishnavism” wrote:

    > rvenkatesasn2307 posted: “For English, please refer below after the Tamil
    > Version, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின்
    > பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி
    > திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்த”
    >

    • Thank you very much Swami Sir. எல்லாம் உங்களை போன்ற பெரியவர்கள் ஆசீர்வாதம். நன்றி

Leave a Reply to rvenkatesasn2307Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading