A Simple Devotee's Views
For English version, please click here, Thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், முதல் எட்டு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.
முதல் ஐந்து பதிகங்களில் பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், அடுத்த பதிகங்களில் பரமாத்மாவின், மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக பாவித்து பாடிய பாசுரங்களை ஆறாவது பதிகத்தில் கண்டோம். ஏழாவது பதிகத்தில், ஆழ்வார் ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாக, சிறுவயது கிருஷ்ணரிடம் தான் இழந்த அனுபவங்களை மிகவும் வருத்ததுடன் தொகுத்து வழங்கினார். அடுத்த பதிகமான எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார். எட்டாவது பதிகம், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே“, என்ற திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளை போற்றி பாடுவதாக அமைந்து உள்ளது.
இனி அடுத்து, ஒன்பதாவது பதிகத்தில் ஆழ்வார், ராமனை விட்டு பிரிந்த தந்தையின் சோகங்களை விவரிப்பதை கீழே பார்ப்போம். தசரதச் சக்கரவர்த்தி, இராமனைப் பிரிந்த அளவில் மனம் உருகி இரங்கிப் பேச்சுகளின் வடிவமாக அருளிச் செய்யப் பெற்றிருப்பது ஒன்பதாந் திருமொழி. ஆழ்வார் தம்மை தசரதனாகவே ஆக்கிக் கொண்டு புலம்புகின்றார். இப்பதிகத்திலுள்ள ஒவ்வொரு பாசுரமும் நெஞ்சை உருக்கும் தன்மை உடையது.
சக்ரவர்த்தி திருமகனான ராமச்சந்திரமூர்த்தி, சீதா தேவியோடும், லக்ஷ்மணனோடும், யானை, தேர், குதிரைகள் போன்ற எல்லாவிதமான வாகனங்களையும் இழந்து, கானகம் செல்வதை, “நேரிழையும், இளங்கோவும் பின்பு போக, எவ்வாறு நடந்தனை யெம் இராமாவோ ” (பெருமாள் திருமொழி 9.2) என்று புலம்புகிறார்.
ராஜகுமாரராக சௌகர்யமாக வளர்ந்து வந்த ராமனுடைய திருமேனியை மனதில் கொள்ளாமல், பெரிய காட்டில், மர நிழலில் கருங்கற் பாறைகளையே படுக்கையாக கொள்ளும் காட்சியை நினைந்து தசரதன், “வியன்கான மரத்தின் நீழல், கல்லணைமேல் கண் துயிலக் கற்றனையோ” (9.3) என்று தன்னை தானே வெறுத்துக் கொள்ளுகிறார். சிறு வயது கிருஷ்ணருக்கு, “குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை, நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக் கடியவெங் கானிடைக் காலடிநோவக் கன்றின்பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன்; எல்லே பாவமே” (பெரியாழ்வார் திருமொழி 3.2.9) என்று பெரியாழ்வார் யசோதை நிலையில் நின்று பேசுவது போல, இந்த பாசுரத்தில் குலசேகர ஆழ்வார் தசரதன் நிலையில் இருந்து பேசுகிறார்.
“நீ வா, நீ போ” என்று சிறு வயது இராமனின் முன் அழகையும், பின் அழகையும், மாறி மாறி ரசித்த தசரதன், இராமனை கொடுமையான யானைகள் வாழும் காட்டுக்குப் போகச்சொல்லிய பின்பும், தன் நெஞ்சம் இன்னும் இரு பிளவாகவில்லையே என்று கதறுகிறார்.
கூர்மையான சிறு கற்கள் காலில் குத்தி அதனால் இரத்தம் பெருகவும், கடும் வெய்யிலில், நேரத்திற்கு உணவு கிடைக்காமல் பசி, இராமனை துன்பப்படவும், வருத்தப்படவும், செய்யும் சந்தர்ப்பங்களை உருவாக்கிய, தானும் கைகேயியும் பெரிய பாவிகளே என்று கண்ணீர் வடிக்கிறார்.
ஐயா என்று இராமன் அழைப்பதை கேட்காமல், அவனை இறுக அணைத்துக் கொள்ளாமல், உச்சி மோந்திடாமல், அவனது அழகிய நடையைப் பார்க்காமல், தாமரை மலர் போன்ற அவ்னது முக அழகைக் காணாமல், அவனைக் காட்டுக்கு அனுப்பிய தான் இன்னும் உயிர் வாழந்து இருப்பதை நினைந்து வருந்துகிறார்.
அறுபதினாயிரம் ஆண்டுகள் ராஜ சுகங்களை அனுபவித்து முதுமை அடைந்த, தான் காட்டுக்கு செல்ல வேண்டிய நேரத்தில், இராமன் காட்டுக்குச் செல்கின்றானே, இது நியாயமா என்று, வேதங்கள் நன்கு கற்றறிந்த வசிட்டரைப் பார்த்தும், ராஜதர்மங்கள் நன்கு அறிந்த சுமந்திரனைப் பார்த்தும், தசரதன் கதறி அழுகிறார்.
இராமனையும், சீதையும், லக்ஷுமணனையும் காட்டிற்கு போகச் சொல்லியதால், கைகேயின் மகனான பரதனுக்கு தீராத பழி உண்டாகும்படி, கைகேயி செய்துவிட்டதாகவும், தன்னையும் மேல் உலகத்திற்கு அனுப்பி, கைகேயி சுகமாக இந்த உலகத்தில் வாழட்டும் என்றும், இராமனைப் பிரிவதால் உலகமே வருந்திக் இருக்க, கைகேயி மட்டும் என்ன சுகத்தை அனுபவிக்கப் போகிறார் என்றும் மாறி மாறி சொல்லி, வருந்துகிறார்.
தந்தையாகிய தன்னுடைய வாக்கையே மெய்ப்பிக்கவேண்டும் என்று கானகம் சென்ற இராமனே, தனக்கு மீண்டும் மீண்டும் பல பிறவிகளில் மகனாகப் பிறக்க வேண்டும் என்று இராமனிடமே வேண்டுகிறார்.
மூன்று தாய்மார்களில், இருவர் (கௌசல்யா, மற்றும் சுமித்ரா), வருந்தவும், ஒருவர் (கைகேயி) மகிழவும், இராமன் இந்த நாட்டை விட்டு காட்டிற்கு செல்வதை போல், தானும் இந்த நாட்டை விட்டு மேலுலகம் செல்லப் போவதாக தசரதர் உரைக்கின்றார்.
இராமன் காட்டிற்கு சென்றதனைப் பொறுக்க மாட்டாமல், தசரத மஹா சக்ரவர்த்தி புலம்பிய இந்த புலம்பல்களை படிப்பவர்கள், தீய வழிகளில் செல்ல மாட்டார்கள் என்று சொல்லி குலசேகர பெருமாள் இந்த பதிகத்தை முடிக்கின்றார்.
குலசேகர ஆழ்வார் இராமர் மேல் இருந்த பக்தியால் மூன்று பதிகங்கள் இராமருக்கும் இராமாயணத்தைக் குறித்தும் பாடி உள்ளார். முதலில் இராமனின் தாயான, கௌசல்யா ராமருக்கு பாடும் தாலாட்டு எட்டாம் பதிகத்தில் கண்டோம். இந்த ஒன்பதாம் பதிகத்தில், தசரதன் புலம்பலைப் பார்த்தோம். இனி கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரக்கூடம் என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப் படுகிறது. அதனை அடுத்த வலைப்பதிவில் காணலாம்.
இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம், அவர்களுக்கு எங்கள் நன்றி.
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3773
====================================================
In the previous posts on Kulasekara Azhwar’s Perumal Thirumozhi, we had a brief account of seven subsections. Azhwaar, whose birth is denoted by his immense devotion towards Sri Ramachandramoorthi and His devotees, sings about Srirangam, in his first three subsections, Thiruvengadam in his fourth subsection and Thiruvithuvakkodu, Malayala Divyadesam or the Divya Desam in Kerala in his fifth subsection.
In the first five subsections, Azhwaar experiences the glories of the Paramathmaa in the form of Archai In the subsequent subsections, Azhwaar talks, in his own style, about the glories of Paramathmaa in another form, namely, Vibhavaavathaaram. In the sixth subsection, Azhwaar takes the roles of the Gopikas, the women folk of Brindavan, who lived at the same time of Sri Krishna and loved Sri Krishna. In the seventh subsection, Azhwaar takes the role of Devaki, who is also accorded the title Deiva Devaki, by Kulasekara Azhwaar, (Holy Devaki), the mother who gave birth to Sri Krishna, who lost all the opportunities to be with and enjoy the playful acts of Sri Krishna at His young age. In the next subsection, namely, the eighth, Azhwaar, enjoys the happy moments of Kowsalya, mother of Sri Rama, at His young age. All the eleven hymns of this subsection are dedicated to Sri Sowri Raja Perumal, the chief deity of Thirukannapuram, whom azhwaar calls as “kandavar tham manam vazhangum kannapurathu en karu maniye“.
In the ninth subsection, Azhwaar brings out the sadness of Dasarathan, father of Sri Rama, after he was separated from Sri Rama, who went to the forest. Kula Sekara Azhwaar takes the role of Dasarathan, in this ninth subsection. The feelings of Dasarathan are brought out so clearly by Azhwaar in all these hymns of this subsection, the hymns melt our hearts.
Sri Rama set out for forest immediately, once he heard that he had to go out, without any desire for the kingdom. He sent back the elephants, horses and chariots. He went to the forest barefooted with Sita, His wife, and the younger brother Lakshmana. Dasarathan cried on thinking how Sri Rama would have walked under those tough conditions by stating “Nerizhaiyum, Elangovum pinbu poga, evvaaru nadanthanai emm iraamaavo?” (Perumaal Thirumozhi 9.2)
Rama had grown up as a Prince in Ayodhya with utmost comfort and used to sleep in soft beds. Dasarathan hated himself for having listened to Kaikeyi and sending Sri Rama to the forest, as Sri Rama, then, had to learn on how to sleep on bed of hard rocks, under the shadow of the trees in the forest, by saying “Viyan Kana Marathin Neezhal, kallanai mel kann thooyilak katranaiyo” (9.3). This is much similar to the hymn by Periazhwaar in his Periyazhwaar Thirumozhi, 3.2.9, where Azhwaar taking the role of Yasoda, and expressed concerns when she sent Sri Krishna (Damodaran) without footware and umbrella, to the blazing hot forest to supervise the grazing cows . Yasoda cursed herself for having done that by saying, “Kudaiyum Seruppum kodaathey Daamotharanai naan, udayium kadiyana oondru, vem parargal udai kadiya ven kaanidai, kaaladi nova kandrin pin kodiyen en pillai pokkinen, elle paavame”(Periyazhwaar thirumozhi 3.2.9).
When Rama was young, Dasarathan used to enjoy Rama’s style of walking by asking him to come forward and go back many times. Dasarathan asked his own heart, how it did not split into two, after having agreed to send Sri Rama to the forest, where wild elephants live.
Dasrathan worried about Sri Rama’s state in the forest, where sharp small stones could hurt His soft feet, which could result in bleeding. Similarly He might not get the food at the right time and that could cause pains to Sri Rama. Dasarathan concluded that Kaikeyi, his wife and himself were the greatest sinners in this world for having created such misfortunes for Sri Rama.
Dasarathan felt sorry that he would not hear Rama calling him as father affectionately; he would not get embraced by Sri Rama; he would not be able to kiss on His forehead; he would not be able to watch His stylish walking; he would not be able to see His lotus-like face; Having lost all these could mean that he lost Sr Rama and he wondered how he was still surviving. He cursed himself as the lowliest of men.
Dasarathan had spent about sixty thousand years ruling his kingdom and he had enjoyed sufficient power and comfort at the palace. He felt that it was time for him to hand over the kingdom to the next generation and move away to forest. In stead he had agreed to send Sri Rama to the forest, as per the wishes of Kaikeyi, his wife. He asked Vashittar, the person who mastered the Vedas and Sumandran, the person who mastered the state justice, whether it was fair to send Sri Rama to forest.
Dasarathan turned his attention to Kaikeyi and said that she earned an ever lasting blame for herself and her son Bharathan, for having sent Sri Rama, Sita and Lakshmana to the forest; Dasrathan knew that he would die soon and she would be the reason for that too; Dasarathan questioned whether it made any sense or happiness for Kaikeyi, when the whole world was going to feel sorry for missing Sri Rama in the country.
Dasarathan cried that Sri Rama had gone to the forest, to keep up Dasarathan’s promise or words to Kaikeyi, without any consideration for Himself or His grieving mother Kowsalya. Dasarathan pleaded to Sri Rama that He should be his son in many many lives of Dasarathan.
Dasarathan lamented that Sri Rama gladly went to the forest, after listening to Kaikeyi. The other two mothers, Kowsalya and Sumitra were in grief. Dasarathan said that he would also leave the kingdom, which Sri Rama renounced, and would go abode.
The final hymn in this subsection is about the benefits for the people. Kulasekara Azhwaar says that people who read or sing or master these hymns of this subsection, which express the anguish of King Dasarathan, lamenting over the unbearable loss of his affectionate son, would never go in the evil way.
Kulasekara Azhwaar through his deep love, affection and devotion to Sri Rama, has compiled three subsections on Sri Rama and Sri Ramayanam. Earlier, we had seen Rama’s mother, Kowsalya happily singing her lullaby on the young Rama, in the eighth subsection. In this ninth subsection, Azhwaar talks about the lamentations of Dasaratha, His father. In the next subsection, or the final subsection of Perumal Thirumozhi, Azhwaar brings out the whole Ramayanam. Azhwaar takes the divya desam, Thillai Nagar Thiru Chitra Koodam (Now called as Chidambaram Govindaraja Perumal Koil) as the part of this subsection, which we would try to cover in the next weblog.
They lyrics of the ninth subsection can be seen at the following web address and we take this opportunity to express our thanks to them.
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3773
==========================================================
Pingback: click here