A Simple Devotee's Views
For English version, please click here, Thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் திருமொழியில், முதல் ஐந்து பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி உள்ளார்.
முதல் மூன்றுபதிகங்களில், திருஅரங்கனைப் பற்றியும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று மகிழ்ச்சி அடைவது, என்பதை பற்றியும், அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது என்பதனையும் பாடினார் என்று பார்த்தோம். திருவேங்கடமுடையானை சரண் அடைந்ததும், அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் செய்யவும் திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் இந்த பதிகத்தில் ஏங்குகிறார். ஐந்தாவது பதிகத்தில், “நீயே எனக்கு உபாயம், நான் வேறு யாரிடமும் செல்ல மாட்டேன்” என்பதை நமக்கு புரியும் வண்ணம் பற்பல உதாரணங்களால் விளக்கும் ஆழ்வார், “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்று திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்லும் சொற்தொடர்களால் நம் மனதினில் பதிய வைக்கிறார்.
இது வரை பெருமாளின் அர்ச்சாவதார பெருமைகளை அனுபவித்த ஆழ்வார், இனி வரும் பதிகங்களில் மற்றொரு நிலையான விபவாவதாரத்தின் அனுபவத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். ஆழ்வார், தான் ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாகவும், ஸ்ரீகிருஷ்ணருடைய தாயாரான தெய்வ தேவகியாகவும், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாகவும், தந்தையான தசரத மஹாசக்ரவர்த்தி ஆகவும் பாவித்து பாடிய அற்புத பாசுரங்களை காண்போம்.
பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம், ஸ்ரீவைஷ்ணவத்தில் உள்ள ஒரு முக்கிய தத்துவமாகும். ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவும் ஒன்பது விதமான சம்பந்தங்கள் உள்ளதாக நம் ஆச்சார்யர்கள் எடுத்து உரைக்கின்றனர். அவற்றில். இப்பொழுது, சேஷ சேஷி சம்பந்தம் என்பதை மட்டும் பார்க்கலாம்.
பரமாத்மா, ஆண்டான் அல்லது எஜமானன் அல்லது சேஷி என்பதும், ஜீவாத்மா, அடிமை அல்லது சேவகன் அல்லது சேஷன் என்பதே இங்கு குறிப்பிடும் சம்பந்தம். ஜீவாத்மா, பரமாத்மாவிற்கு சேவை செய்வதேயே குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டும் என்றும், பரமாத்மாவையே சதா சர்வ காலமும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், உள்ள இந்த சம்பந்தத்தையே ஆழ்வார்கள் பாசுரங்களில் கொடுத்துள்ளார்கள். அதே அளவிற்கு பரமாத்மாவும், ஜீவாத்மாக்களிடம் அன்பும் ஆதரவும் கொண்டு உள்ளார் என்பதும் நம் சித்தாந்தத்தின் மற்றொரு பகுதி.
இந்த பதிகத்தில் ஆழ்வார், ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் வசித்த கோபிகைகளாக நினைத்து பாடும் பாசுரங்களாக அமைத்துள்ளார். கண்ணனைப் பற்றிய பெரியாழ்வார் மற்றும் நம்மாழ்வார் பாசுரங்களில் கண்ணன்மேல் அக்கறையும், மகிழ்ச்சியும் துக்கமும் கலந்து பாடி உள்ளார்கள். ஆனால் குலசேகர ஆழ்வார், இவற்றுடன் கண்ணன் வரவில்லையே என்ற கோப உணர்ச்சியையும் சேர்த்து வெளிப்படுத்தி உள்ளார். இனி இந்த பதிகத்தின் சில பாடலைகளைப் பார்க்கலாம்.
‘யமுனை நதியில் உள்ள ஒரு மணல்திட்டில், பனியில் நடுங்கி, காலை வரை, உன் பொய்யான வார்த்தைகளைக் கேட்டும் “வாசுதேவா உன் வரவுபார்த்தே” காத்து இருந்தேன் என்று ஒரு கோபிகை கோபமும் வருத்தமும் கலந்து சொன்னாள்.
மற்றொரு கோபிகையின் வீட்டிற்கு கண்ணன் சென்று “நானும் உன்னுடன் சேர்ந்து தயிர் கடைவேன் என்று கள்ள விழி விழித்ததற்கு, ‘தாமோதரா மெய்யறிவன் நானே” என்று அந்த கோபிகை கோபத்துடன் சொன்னாள்.
ஒரு பெண்ணை கடைக்கண்ணால் பார்த்து, மற்றொரு பெண்ணிடம் வருவேன் என்று சொல்லி, இன்னொரு பெண்ணை அங்கே வா என்று கூப்பிடுவதை பார்த்த ஒரு கோபிகை, “கண்ணா, உன்னுடன் உன் சேட்டைகளும் வளர்கின்றனவே” என்பதை “உன் வளர்த்தியூடே வளர்கின்றதா உன் தன் மாயைதானே” என்று கூறினாள்.
இன்னொருத்தி, தன் தோழி மூலம் செய்தி அனுப்ப, கண்ணன் அந்த தோழியுடன் உல்லாசமாக இருந்ததாக குற்றம் கூறுகிறார்.
இன்னொரு கோபிகை கண்ணன் தன் வீட்டின் வீதி வழியே மற்றொரு பெண்ணை அழைத்துச்சென்றதை கவனித்ததாக கோபிக்கின்றாள்.
இன்னும் சில கோபிகைகளுடன் கண்ணன் மகிழ்ச்சியாக குழல் ஊதிக்கொண்டு இருந்ததை குறிப்பிட்ட கோபிகை, ஒரு நாள் தங்களுக்காக கண்ணன் வந்து குழல் ஊதுவான் என்பதை “எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத, உன்குழ லின்னிசை ” என்று நம்பிக்கையுடன் ஏங்குகிறாள்.
இதைத் தவிர இன்னொரு பெண் தன்னிடம் கண்ணன் வராததை குறிப்பிட்டு, என்றாவது ஒரு நாள் தன்னிடம் வரும் போது பார்த்துக் கொள்ளுகிறேன் என்பதை, “இங்கொருநாள் வருதியே, என் சினம் தீர்வன்நானே” என்று சொல்கிறார்.
மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம், ஜீவாத்மாவாகிய ஆழ்வார், பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணரை எப்படியாவது அடைய வேண்டும் என்ற கருத்தை நமக்கு தெளிவுபடுத்த, ஆழ்வார் தன்னை கோபிகையாக, உருவகப்படுத்திக் கொண்டு, கண்ணனுடன் எப்படியாவது சேர்ந்து விடவேண்டும் என்பதை விளக்கும் பாசுரங்களாக காணலாம். கண்ணன் மற்ற கோபிகைகளுடன் இருப்பதாக சொன்னது, பரமாத்மாவிற்கு, ஜீவாத்மாவின் மேல் கருணை உண்டு என்பதையும், என்றாவது ஒரு நாள் நமக்கும் அந்த நிலைமை கிட்டும் என்பதையும், நமக்கு புரியவைக்கவே.
இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம். (அவர்களுக்கு எங்கள் நன்றி).
இந்த பதிகத்தில், ஆழ்வார் விபவாவதாரத்து கிருஷ்ணனையும் அவரைப் பெற்ற தாயாரான தேவகியையும் எடுத்துக்கொள்ளுகிறார். குட்டி கிருஷ்ணனின் லீலைகளை மற்றைய ஆழ்வார்களும் இன்னும் பலரும் பாடி இருக்கக் கூடும். ஆனால் குலசேகர ஆழ்வார் எடுத்துக் கொண்ட இந்த கருத்தினை சொன்னவர்கள் ஓரு சிலரே இருக்கக் கூடும்.
இந்த பதிகத்தின் பாடல் வரிகளை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம். (அவர்களுக்கு எங்கள் நன்றி).
கண்ணனை பெற்ற தாயான தேவகி, அவனை, அவனுடைய சிறு வயதில் பிரிந்ததனால், அந்த பால கிருஷ்ணனால், தனக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்களை இழந்தது பற்றி தேவகி பாடியதை போல் குலசேகர ஆழ்வார் பாடி நம்மை கலங்க வைக்கிறார். இதை நாம், கண்ணனை பிரிந்த தெய்வ தேவகியின் புலம்பல் என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல், பரமாத்மாவை சேர முடியாமல் தவிக்கும் ஜீவாத்மாவின் கவலையும் வருத்தமும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
தாலேலோ என்று குழந்தையை தொட்டில் இட்டு கொஞ்சும் பாக்கியத்தை இழந்ததாக பாடும் தேவகி, “திருவினை இல்லாத் தாயரில், கடை ஆயின தாயே” என்று தன்னை பற்றி சொல்கிறார்.
சிறு வயது கண்ணன், தொட்டிலில் சயனித்து இருக்கும் அழகை, வீட்டில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல், ஊர்ப்பெண்களெல்லாரும் திரண்டு வந்து கண்டு களித்துப் போவர்களே; அவர்களில் ஒருத்தியாக இருந்தாலும், தான் அந்த அழகை ரசித்து இருப்பேனே, அந்த பேறும் கூட தனக்கு கிடைக்கவில்லையே என்பதை “கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன்” என்கிறார்.
பிறந்த குழந்தையை பார்க்க வருபவர்கள், குழந்தையை கொஞ்சி மடியிலிட்டு, உன் தந்தை யார் என்று கேட்பவர்களிடம், குழந்தை, கைகளாலும், கண்களாலும் தந்தையை காட்டும், ஆனால் அந்த பாக்கியம் தன் கணவன் வசுதேவனுக்கு கிடைக்கவில்லையே, என்பதை தேவகி “நல்வினை யில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே” என்று பாடுகிறார்.
தாய் ஒருத்தியை தவிர வேறு ஒருவரையும் அறியாத இளம் பருவத்தில், தாயைக் கண்ட மகிழ்ச்சியை கண்ணன் முகத்தில் வெளிப்படுத்திய அழகை அநுபவிக்க பெறாமற்போனேனே என்பதை “பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் ” என்று கூறுகிறார்.
சிறு குழந்தையான கண்ணன் கொடுக்கும் முத்தத்தையும் அவன் பேசிய மழலைச் சொற்களையும் தான் இழந்ததாகவும், யசோதை பெற்றாள் என்பதை, “ஓன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்கிறார். ஒரு வித நோன்பும் நோற்காமல் கண்ணனுடைய சேட்டைகளைக் காணப் பெற்றதால், யசோதையை, தெய்வநங்கை என்று தன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தேவகி கூறுகிறார்.
புழுதி அளைந்த பொன்மேனியுடன் தன் மார்பினில் அணைக்கப் பெற்றிலேன் என்றும், குழந்தை அமுது செய்து மீதியை, (போனகம் செய்த சேடம் ) உண்ணப் பெறவில்லை எனவும் தேவகி சொல்வதாக, “வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன்” என்று ஆழ்வார் கூறுகிறார்.
கண்ணன், தன் அன்னையிடம் பால் குடித்துக்கொண்டு இருக்கும் போது, நடுநடுவே இனிதாக நோக்கும் பார்வையை அநியாயமாய் இழந்தேனே என்பதை “திருக்கண்ணிணை நோக்கந் தன்னையும் இழந்தேன்” என்கிறாள்.
வெண்ணையும் தயிரையும் எடுத்து உண்ட வாயுடனும், பிடிபட்டுவிட்டோமே என்ற பயத்தில் அழுகையும் கண்ணீரும் கொண்டு, கண்ணன் நிற்பதை பார்க்கும் யசோதை, “தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே”, தான் காணவில்லையே என்று தேவகி புலம்புவதா ஓர் பாசுரம்.
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தது, குரவை கூத்து ஆடியது, காளிங்க நர்த்தனம் ஆடியது போன்ற கண்ணனது சிறு வயது விளையாட்டுகளை யசோதைக்குக் காட்டியதை தான் “கண்டிடப் பெற்று இலேன்” என்றும் “தன் உள்ளம் குளிர” மறுபடியும் ஒருதடவை செய்து காட்ட வேண்டும் என்று அடுத்த பாசுரத்தில் வேண்டுகோள் விடுக்கிறாள்.
தாம் முக்கியமான சில அனுபவங்களை இழந்து விட்டோமே என்று தேவகி பாடுவதாக ஆழ்வார் சொல்வது, ஜீவாத்மாவாகிய ஆழ்வார், இப்படி ஒரு பரிமாணத்திலும் பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணரை அடைய பிரார்த்திக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படி தெய்வ தேவகி, கண்ணனின் இளம் பருவ விளையாட்டு அனுபவங்களை தான் இழந்தவைகளாகச் சொல்லும் ஆழ்வார், அடுத்த பதிகத்தில், ஸ்ரீ ராமாவதாரத்தில் கௌஸல்யை, அந்த இராம பிரானை தொட்டிலிட்டு தாலாட்டு பாடியதை அருளிச் செய்கிறார். அவற்றை அடுத்த வலைப்பதிவில் காண்போம். ===========================================================
We have seen the staunch devotion of Sri Kulasekara Azhwaar towards Sri Ramachandra Moorthy or Chakravarthi Thirumagan and his attraction towards His devotees. We have also seen the hymns composed by Sri Kulasekara Azhwaar is called Perumal Thirumozhi and we have seen the first five subsections of Perumal Thirumozhi. Kulasekara Azhwaar, covers Srirangam in the first three subsections of Perumal Thirumozhi, Thiruvengadam in the fourth subsection and Thiruvithuvakode in Kerala in the fifth subsection.
In those three pathigams, Azhwaar talks about Srirangam and how he is longing to have the dharsan of Sri Ranganatha, the chief deity of Srirangam, along with his ardent devotees. Azhwaar also talks about those who do not believe in God and how we should handle or avoid them in our life. After surrendering himself to Thiruvenkadamudaiyaan, Azhwaar narrates his wish on what he wanted to be, like a foot step in front of the deity or in any form , but to be in Thiruvengadam, as his main objective and he explains the same in a sequential manner so that we can understand the concept easily.
In his next subsection, Azhwaar explains two of the important concepts in Vaishnavism, namely, Ananya gathithvam and Aakinchanyam, which are closely related to Total Surrender. Azhwaar has taken these topics with various examples, in this subsection, with a special request “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”, to the chief deity of Thiruvithuvakode.
Till now, Azhwaar has talked about Sriman Narayanan in Archavathaaram, one of the five states of Paramathma. Azhwaar takes Vibavaavathaaram, one more state of Sri Paramathma in his subsequent subsections. He takes different roles of
Let us see some of those interesting hymns, which were composed beautifully by Azhwaar, reflecting the perspectives of those individuals in this weblog.
In Vaishnavism, the relationship between Paramathmaa and Jeevathmaa is important and our acharyaas have explained nine types of relationships that exist between Paramathmaa and Jeevaathmaa. One among them is Sesha- Seshi (Master and Servant) relationship and we will go through that a little more detailed here.
In the Sesha Seshi Relationship, Paramathmaa is considered as Master or Boss and Jeevathmaas are called slaves or servants to Paramathmaa. Jeevathmaa should always have the goal to serve Paramathmaa for ever and keep Paramathmaa in its mind. The same thing is being portrayed by Azhwaars in their hymns.
The other part is that Paramathmaa also loves and supports the Jeevathmaas
In this subsection Kulasekara Azhwaar , takes the roles of different Gopikas, the girls who lived in the same period of Sri Krishna and loved Sri Krishna. Both Swami Namazhwaar and Periazhwaar have composed hymns on Sri Krishna, expressing their care, happiness and sorrow. But Kulasekara Azhwaar expresses anger also along with his sadness, in the hymns of this subsection, when he, as gopikas could not get to be with Sri Krishna. Now let us get to go through some of the hymns of this subsection.
One gopika says with anger and sadness that she heard His lies and still was waiting for Sri Krishna (“Vasudeva un varavu paarthey“) on the sands of the river Yamunai, all night, shivering in the cold weather.
In the next hymn, Azhwaar in the role of a gopikas says angrily that she knew the truth (Damodara, Mei Ariven Naane“) and the clandestine purpose of Sri Krishna, when He offered to churn the curd along with another gopika
In the next hymn, Azhwaar says that “Un valarthioode valarkindrathaal unthan maayai thaane” meaning Sri Krishna’s tricks were also growing along with him, as He glanced a girl and at the same time, His heart wanders for another girl, and He gave word to yet another and finally misled an innocent girl.
Another Gopika complains that she sent a message through a girl, but Sri Krishna was happily spending time with the messenger girl.
Another Gopika says that she noticed that Krishna took a girl purposely through the street in which her house was located.
In one of the hymns Azhwaar, in the role of a Gopika, believed “engalukke oru naal vanthu ootha, un kuzhal innisai” meaning that one day Krishna would come and play flute only for her, as she saw Krishna delightfully playing his flute with a few gopikas.
Apart from these one gopika is so angry with Krishna for not visiting her and she said “ingu oru naal varuthiye, en sinam theervan naane” meaning that she would show her anger towards Him on that day, when He comes to her.
All the above examples are to demonstrate to us that all Jeevathmaas should reach the Paramathmaa somehow. So Azhwaar, as jeevathma, takes the role of gopika, and expressed their eagerness to be with Sri Krishna, the Paramathmaa, by composing these hymns, even if it meant to be offensive and with anger. In those hymns, when Azhwaar mentions that Sri Krishna was with other gopikas, that is to inspire us that Paramathmaa has got kindness towards Jeevathmaas and He would one day give the similar status to each and every one of us, the jeevathmaas.
You may be able to get the full text of the lyrics of these hymns in the following website and we take this opportunity to express our thanks to them.
This subsection is also the experience of Azhwaar with Sri Krishna of Vibhavaavathaaram and His mother Devaki. We all know that Sri Krishna was separated from His parents Vasudeva and Devaki, and moved to Brindavan, on the same night, he was born, and Nandagopan and Yasoda became His foster parents. There are many poets including Azhwaars, who have composed hymns and songs on the naughty or playful days of Sri Krishna. But Kulasekara Azhwaar has taken totally a different perspective, which may have been covered by only a very few.
You may be able to get the full text of the lyrics of these hymns in the following website and we take this opportunity to express our thanks to them.
In this subsection, Azhwaar takes the role of Devaki and lists the experiences that she should have got with young Sri Krishna and enumerates them painfully as the missed experiences. Azhwaar has given a great title to her, as Deiva Devaki, (Goddess Devaki). We can not only take these experiences as a set of griefs from Deiva Devaki, but also a set of concerns and griefs of a Jeevathmaa longing to attain the holy feet of Paramathmaa.
Devaki missed the opportunity to play with Sri Krishna, when He was in the cradle and sing the lullaby “Thalelo”. She said to herself that she was the last in the list of lowest mothers. (Thiruvinai illa thaayaril kadai yaayina thaaye“)
There were many people, those at home as well as people from outside, who had enjoyed the smile of Sri Krishna, as a young boy, when He was lying in the cradle. Devaki felt that she could have been one of those outsiders to have had a glimpse of Sri Krishna and enjoyed His beauty, but she missed that experience of Him, very badly by saying “kidantha kidakkaiyai kandida petrilaen”
Generally, the child would show, who his or her father is, by looking at the father or by pointing with the hand, when the people, who visit the child, ask for the same. Devaki moaned that such opportunity was not given to her husband Vasudevan, (“nal vinal illa nangal kon vasudevan petru ilane”), as she was unfortunate not to be with Sri Krishna at His young age.
Devaki cries that she missed the opportunity to have a glimpse of Sri Krishna’s smile on seeing his mother at the young age, when generally the child, does not know anyone else other than the mother. (pillaimai inbathai izhantha paaviyen”)
Again Devaki expresses her sorrow about what she missed and what Yasoda experienced when she feels for missing the kisses of young Krishna and His sweet infant words. Devaki takes this opportunity to compliment Yasoda at this time, by calling her as Deiva Mangai, (Holy Lady), as she got the innumerable experiences of being with the young Sri Krishna, even without performing any serious prayers like fasting etc.
Devaki says that she is a greater sinner that she missed the opportunities to watch the young Sri Krishna play on the mud and then slowly crawling to embrace her with dust all over. She also did not enjoy the remains of the food that was tasted by Sri Krishna. “vaai konda adisilin michil unnap petru ilayn“
Devaki talks about herself missing the sweet tender smile of young Sri Krishna, when He was being fed by His mother. “Thiru Kanninai Nokkam thannaiyum izhanthene”
In another hymn, Azhwaar in the role of Devaki said that Yasoda had seen and enjoyed with unlimited happiness, (“tholai inbathu iruthi kanndaale”) when Sri Krishna would have given a complex look, combining fear for getting caught after stealing the butter, which was visible on the lips and over His little mouth, but still pleading with hands. Devaki cried that she did not get such experience.
Devaki now started asking for a rerun of Sri Krishna’s early day acts such as holding the mountain Govardhan, (“Kundrinaal kudai kavithaathum“), dancing with multiple pots on hands and head, (“kola kuravai Kothathum ), dancing on the head of the snake, Kaalingan, (Kaaliyan thaalai mithithathu”) so that she could get satisfied as these were enjoyed by Yasoda.
What we should understand from the above is that Azhwaar takes this perspective of narrating these sad experiences of Deiva Devaki and use that as an opportunity to plead for the eternal world from Paramathmaa or Sri Krishna.
After these sad and missing experiences of Deiva Devaki with the young Sri Krishna, Azhwaar takes Kowsalya, the mother of Sri Rama and her experiences of grooming or growing Rama when He was young and in the cradle by singing the lullaby “Thalelo”. Let us see this in our next weblog.