A Simple Devotee's Views
For English version, please click here, thanks
இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் திருமொழியில், முதல் நான்கு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையே பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் பாடி உள்ளார். அடுத்த பதிகத்தை கீழே காண்போம்.
சென்ற பதிகத்தில், திருவேங்கடமுடையான் முன் ஒரு படியாகவோ அல்லது திருமலையில் ஏதேனுமாகவோ வேண்டி, நமக்கு அதனை படிப்படியாக புரிந்துகொள்ளும்படி சொன்ன ஆழ்வார் இந்த பதிகத்தில், நாம் என் பரமாத்மாவை விடாது பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை பற்பல உதாரணங்களால் விளக்குகிறார்.
இது நமது சம்பிரதாயத்தில் உள்ள இரண்டு முக்கிய கோட்பாடுகளை விளக்குகிறது. ஒன்று அநன்ய கதித்துவம், மற்றொன்று ஆகிஞ்சன்யம். அநன்ய கதித்துவம் என்றால் உன்னை அல்லால் எனக்கு வேறு ஒருவரும் இல்லை என்பது. ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது. இந்த இரண்டும் நமது முக்கிய கோட்பாடான சரணாகதியுடன் சேர்ந்தே இருப்பது. இந்த கருத்துக்களையே ஆழ்வார் இந்த பதிகத்தில் “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்ற சொற்தொடர்களோடு, நமக்கு மனதில் பதியவைக்க சொல்கிறார்.
கேரளத்தில் அமைந்துள்ள திருவித்துவக்கோடு, என்றும், இன்று திருமிற்றகோடு என்றும் கொண்டாப்படும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் உய்யவந்த பெருமாளை வாழ்த்தி பக்திச்சுவை மிக்க பாடல்களால் ஆழ்வார், வழிபடுவது இந்த பதிகத்தில் இடம் பெற்று உள்ளன.
இந்த பதிகத்தின் பாடல்களை கீழ்கண்ட முகவரிகளில் காணலாம். அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்களும் நன்றியும்.
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3769
Click to access taruduyaram.pdf
“அரி சினத்தால், ஈன்ற தாய் அகற்றிடினும், மற்று அவள் தன், அருள் நினைந்தே, அழும் குழவி; அது போன்று இருந்தேனே ”
கோபத்தில், தாய் தனது குழந்தையை தள்ளி வைத்தாலும், குழந்தைக்கு வேறு எங்கும் செல்ல தெரியாமல், அது அழுது கொண்டே தன்னுடைய தாயினிடத்திலேயே சென்று, தாயின் கருணையினையே வேண்டுவது போல், தானும் திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சரண் அடைந்து அவன் வேண்டாம் என்று சொன்னாலும் அவனை விட்டு அகலாமல் இருப்பேன் என்று ஆழ்வார் இந்த பதிகத்தின் முதல் பாட்டில் சொல்கிறார்.
“கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும், கொண்டானை அல்லால், அறியா குலமகள் போல் “
கணவன், மற்றவர்கள் குறை சொல்லும்படி நடந்துகொண்டாலும், நல்ல குணமுடைய மனைவி, தனது கணவனை விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வதுபோல், ஆழ்வாரும் திருவித்துவக்கோட்டு அம்மானை விட்டு பிரியாமல் இருக்கிறார்.
“எத்துயரம் தரிதிடினும், தார்வேந்தன், கோல் நோக்கி வாழும், குடி போன்று இருந்தேனே “
அரசாளும் மன்னன், பொதுவாக மக்களுக்கு செய்திடும் செய்கைகள் யாவும் தனி ஒரு பிரஜைக்கோ அல்லது எல்லாருக்குமோ துன்பம் தந்தாலும், குடிமக்கள் தொடர்ந்து அந்த மன்னனையே தங்களுக்கு நன்மை செய்வான் என்ற எதிர்பார்ப்போடு காத்து இருப்பதை போல், ஆழ்வாரும், வித்துவக்கோட்டு பெருமாள், ஆழ்வாரை கவனிக்காவிட்டாலும் பெருமாளை விடாமல் இருப்பேன் என்று இந்த மூன்றாம் பாட்டில் கூறுகிறார்.
“வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் பால் மாளாத காதல், நோயாளன் போல், “
நாம் ஒரு வியாதி என்று மருத்துவரிடம் செல்லும் போது, அவர் நம்மை கத்தி மற்றும் பிற உபகரணங்களை கொண்டு, கீறி, நம் உடம்புக்கு தற்காலிகமாக துன்பம் கொடுத்தாலும், நாம் அதை பொறுத்துக்கொண்டு, அந்த மருத்துவரிடம் தொடர்ந்து மரியாதையும், விருப்பதையும் கொண்டு உள்ளது போல், ஆழ்வார், வித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்வது என்ன வென்றால், அவர் தனக்கு தொடர்ந்து துன்பங்கள் தந்து கொண்டு இருந்தாலும், அவருடைய அருளையே எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் என்பதே. இது இந்த பதிகத்தின் மிக பிரசித்தி பெற்ற பாடலும், நான்காவது பாடலும் ஆகும்.
“எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும், வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே”
சுற்றும் அலைகளை தூக்கி எறிந்து கொண்டுஇருக்கிற கடலில் நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்து எங்கும் கரையை காண முடியாமல், தான் இருந்த இடமான கப்பலுக்கே, திரும்பி வரும் பெரிய பறவைப் போன்று, தானும் வித்துவக்கோட்டு அம்மானின் பாதங்களில் சரண் அடைவதாக ஆழ்வார் தனது அடுத்த பாசுரமான ஐந்தாவது பாசுரத்தில் தெரிவிக்கின்றார்.
“செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம், அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்“
இந்த பதிகத்தில் இது வரையில், நீ என்ன செய்தாலும் உன்னை விட்டு அகலமாட்டேன் என்று உரைத்த ஆழ்வார், இனி வேறு யார் எதைச்செய்தாலும், அவர்களிடம் செல்ல மாட்டேன் என்றும் சொல்வது போல் பாடல்களை அமைத்து உள்ளார்.
ஆறாவது பாசுரத்தில், தாமரை, சூரியனை பாரத்தால் மட்டுமே மலரும், தீயோ அல்லது மற்ற எந்த விதமான வெப்பத்தைத் தருகின்ற உபாயத்திலும் மலராது, அது போல் உன்னுடைய உயர்ந்த குணங்களுக்கு மட்டுமே நெஞ்சு உருகுவேனே தவிர, மற்றவைகளுக்கு நெஞ்சு உருக மாட்டேன் என்று வித்துவக்கோட்டு அம்மானிடம் தெரிவிக்கின்றார்.
ஏழாவது பாசுரத்தில், மேகம், தொடர்ந்து பலகாலம் மழையை தராவிட்டாலும், பசுமையான பயிர்கள், தனக்கு வேண்டிய நீருக்காக, அந்த மேகத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்குமே தவிர வேறொன்றையும் எதிர்பார்க்காது இருப்பது போல், ஆழ்வாரும், பரமாத்மாவாகிய வித்துவக்கோட்டு அம்மான், தன்னுடைய துன்பங்களை போக்காமல் விட்டாலும், தான் தொடர்ந்து அந்த பெருமானையே வேண்டி இருப்பேன் என்று கூறுகிறார்.
கரை புரண்டு ஓடுகின்ற நதியானது, கண்டவிடமெல்லாம் ஓடி, கடைசியில் அது ஆழமான கடலிடத்தில் சென்று அடையுமே தவிர வேறு எங்கும் சென்று முடியாது என்பது போல், தானும் வித்துவக்கோட்டு அம்மானின் திவ்யகுண நலன்களில் மூழ்கி இருப்பேனே தவிர வேறுஎங்கும் தனது கவனத்தை திருப்ப மாட்டேன் என்று இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் தெரிவிக்கின்றார்.
இந்த பாடலில் வரும் உதாரணம் சிறிது கடினமானது. உலகத்தில் உள்ள செல்வங்களை விரும்பாமல். பெருமானையே வேண்டி நிற்பவனை செல்வம் தானாக வந்தடையும் என்பது உலக நியதி. எவனொருவன் ஆண்டவனிடம் அன்பு கொண்டு அவனை மட்டுமே விரும்பி, இந்த உலக ஐஸ்வரியம் மற்றும் பிற பொருள்களை விரும்பாதவனுக்கு, பகவான் எப்படி தொடர்ந்து அன்பு காட்டி அவனுக்கு மேலும் மேலும் எல்லா செல்வங்களும் தருகிறார் என்பது உதாரணத்தின் ஒரு பகுதி. இது, ஆழ்வார் தன்னுடைய வாழ்க்கையே சொல்வது போல் உள்ளது. சிறந்த வீரரும், மன்னருமாய் விளங்கும் ஆழ்வார், இந்த உலக செல்வம் வேண்டாம், ராஜ்ஜியம் வேண்டாம் என்றும் மோட்சம் தான் வேண்டும் என்ற போதும், அவருடைய ராஜ்ஜியம் சேர நாட்டில் இருந்து மேலும் மேலும் சோழ, பாண்டிய நாடுகளாக விரிவு அடைந்து கொண்டே இருந்தது.
இறைவனையே வேண்டி செல்வத்தை வேண்டாதிருப்பவருக்கு செல்வம் தானாக வந்து சேரும் என்கிற கருத்து சிந்திக்கத்தக்கது. சில பெரியவர்கள், சென்ற வாக்கியத்தின் செல்வம் என்பது, மோட்சம் என்று பொருள் சொல்வதுண்டு. ‘அண்ட சராசரங்களை வைகுந்தத்திற்கு ஏற்றிய” ஸ்ரீ ராமர், அனுமனுக்கு மோட்ச பலன் கொடுத்தும், அனுமன் அதனை தவிர்த்து, இந்த உலகத்தில் எங்கெல்லாம் ஸ்ரீ ராமர் பூஜை செய்யப்படுகிறாரோ அங்கெல்லாம் இருக்கவே ஆசைப்பட்டார்.
அதே போல், நாம் பின்பு பார்க்கவேண்டிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் இருவரும் தம் பாசுரங்களில் திருவரங்கத்தில் இருப்பதையே வேண்டுகின்றனர். “அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதையும், “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று திருப்பாணாழ்வார் பாடியதையும் கருத்தில் கொண்டால், குலசேகர அழுவார் சொன்ன செல்வம் என்பது மோட்சத்தையே குறிக்கும். ஏனென்றால், அனுமனும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், மோட்சம் வேண்டாம் என்றாலும் அவர்களுக்கு பரமாத்மா மோட்சத்தைக் கொடுத்து இருக்க வேண்டும்.
அதே போல், பரமாத்மாவான வித்துவக்கோட்டு அம்மான், ஆழ்வாரை கவனிக்காமல், ஆழ்வாருக்கு அருளாமல் இருந்தாலும், ஆழ்வார் மீண்டும் மீண்டும் வித்துவக்கோட்டு அம்மானிடமே செல்வேன் என்று உறுதியாக சொல்கிறார்.
இந்தப் பத்துப் பாடல்களிலும் இதே தொனியில் எந்தத் துயரம் தந்தாலும் உன்னை விட மாட்டேன் என்பது பல வித படிமங்களில் விரிகிறது. மேலே சொன்ன பாசுரங்களை படிப்பவர்களுக்கான பலனை இறுதி பாசுரத்தில் வெளியிட்டு, இந்த பதிகத்தினை ஆழ்வார் முடிக்கிறார். வித்துவக்கோட்டு அம்மான் ஆழ்வாரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும் தான் வேறு யாரையும் சரண் அடைய மாட்டேன் என்றும், அந்த பெருமானின் திருவடிகளிலேயே பக்தி கொண்டு காத்துஇருப்பேன் என்றும் சொல்லும் ஆழ்வார் இந்த பதிகத்தைப் படிப்பவர்கள் எத்தனை கொடிய பாவங்கள் செய்து இருந்தாலும் நரகத்தை அடைய மாட்டார்கள் என்றும் சொல்லி முடிக்கிறார்.
ஆழ்வாரின் மற்ற பாடல்களை அடுத்த வலைப்பதிவில் தொடர்வோம்.
We have seen the first four out of the ten subsections of the Perumal Thirumozhi by Sri Kulasekara Azhwaar. His devotion towards Sri Ramachandra Murthy is phenomenal and in the first three subsections of the Perumal Thirumozhi, he has spoken on Srirangam and in the fourth subsection, he has spoken on Thiruvengadam. Let us try to understand the next one here.
In the fourth subsection, Azhwaar had explained his wish on what he wanted to be, like a foot step in front of the deity or anything in Thiruvengadam and he took pains to explain the same in a sequential manner so that we can understand the concept easily. In this fifth section, Azhwaar takes different examples to explain why should we have complele faith in Paramathma, in spite of all difficulties or inconveniences.
This subsection explains two of the important concepts in Vaishnavism. One is called Ananya gathithvam and the other is called Aakinchanyam. Ananya gathithvam means that there is no one else there for us other than Sriman Narayanan, who is the Paramathma. Similarly Akinchanyam means helplessness, as we do not know how to reach the eternal world. Both these concepts are closely linked to the Total Surrender, which is the ultimate aim for all jeevathmaas. Azhwaar has taken these topics in this subsection, with a special term “Un saran allaal saran illai” meaning, “I have no refuge, except yourself”.
In this subsection, Azhwaar offers his prayers through deeply involved devotional hymns, to Sri Uyyavantha Perumal, the chief deity in Thiruvithuvakode or Thirumittakode, as it is known today. .
The full set of hymns can be seen in the following web addresses and our sincere thanks to them.
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3769
Click to access taruduyaram.pdf
“ari sinathaal eendra thaai agatridinum, matru aval than, arul ninaithey azhum kuzhavi; athu pondru irunthene“
In the first hymn of this subsection, Azhwaar takes the example of a child, who keeeps coming back to the mother to get pacified, even after the child is pushed away and ignored initially by the mother out of anger. Azhwaar says that he would come back again and again to the chief deity of Thiruvithuvakodu.
“Kandaar igazhvanave Kaathalan thaan seithidinum, Kondaanai allaal, ariyaa kula magal pol”
Even when people can find fault with the activities and behaviour of the husband, a well groomed wife will never let her husband down. Azhwaar in his second hymn of this subsection, says that he would never leave the chief deity of Thiruvithuvakodu.
“ethuyaram seidinum, thaar vendhan, kol nokki vaazhum kudi pondru irunthene”
Even when all the deeds done by a king result in pain and problems for either the individuals or for all the people in the country, the citizens would always look forward to the king for future good things. In the same way, Azhwaar says that he would not leave the chief deity of Thiruvithuvakode and is expecting Him to take care of Azhwaar, even though Perumal has not blessed Azhwaar with His glance.
“Vaalaal aruthu chudinum, maruthuvan paal maalaatha kaadhal, noyaalan pol”
When a patient visits a doctor, the doctor uses sharp objects like knife etc. to do surgery to cure the diseases. Though the acts of the doctor will certainly be painful to the patient, the patient would still respect and appreciate the doctor’s deeds. Azhwaar, in this famous and the fourth hymn of this subsection, says that he would continue to expect His grace, even if the chief deity of Thiruvithuvakodu continues to give only pain to the Azhwaar.
“engum poi karai kaanaa theri kadal vaai meendeyum, vangathin koomberum maaparavai pondrene”
In his next hymn, Azhwaar says that he is like a big bird looking for shores in the middle of a rough sea throwing innumerable waves all around, but returned to the ship from where it started its journey, as the bird could not find the shore even after flying in all the four directions. Azhwaar says that he surrendered and came back like the big bird, to the holy feet of the chief deity of Thiruvithuvakodu.
“senthazhale vanthazhlaich seithidinum sengamalam, antharnser venkathirorkku allaal alaraavaal”
So far in this subsection, Azhwaar says that he would not leave the chief deity of Thiruvithuvakode, in spite of any actions by Him, whether they were bad or good. From now onwards, Azhwaar states that he would not go to others, in spite of their actions, whether they were good or bad.
In the sixth hymn of this subsection, Azhwaar states that a lotus would blossom only in the presence of sunlight and no other heat sources could help the lotus to blossom. In the same way, Azhwaar would surrender only to the glories of the chief deity of Thiruvithuvakode and would not turn to any other person or things.
In the seventh hymn of this subsection, Azhwaar takes the Cloud as an example. The crops would expect the clouds to shower the necessary water for them to grow and they would not expect the same from any other source. This would be, in spite of the fact the cloud would have failed to provide water for long periods of time. Azhwaar in this hymn says that even though, the chief deity of Thiruvithuvakode had not relieved him from the pains for a long time, he would expect the grace only from the chief deity of Thiruvithuvakode, and not from anyone else.
In his eight hymn of this subsection Azhwaar takes the example of the Sea and the river. He says that even when a river would overflow and run all over, it would reach the sea and it would not end anywhere else. In the same way, he would only surrender to the glories of the chief deity of Thiruvithuvakode and would not change his attention or focus away from Him.
The example used by Azhwaar in this hymn is relatively difficult to understand. It is common that when someone wants only the blessings from God, and is not interested in the material wealth, the person will get the material wealth, due to God showing His grace.
This part of the example reflects, in a way, Azhwaar’s personal life. Azhwaar was longing for the grace of Paramaathma, and he did not show much interest in managing his kingdom. Even though Azhwaar did not aspire for material wealth like his kingdom, his kingdom got expanded well beyond Chera Naadu.
The material wealth in this example can also be referred to the Eternal world, based on the examples given below.
In the epic Ramayana, Sri Rama offered the eternal world to Sri Hanuman. Hanuman politely refused the eternal world, as his devotion towards Sri Rama and Rama Namam was boundless. Hanuman wanted to be in this world with those who chant Sri Rama’s name and offer prayers to Sri Rama.
Similarly there are two other Azhwaars, whom we would go through in future, Thondaradipodi Azhwaar and Thirupaanazhwaar, who did not want the eternal world, but wanted to stay in Srirangam to have the dharsan of Sri Ranganatha Perumal. This can be seen from their hymns, namely, “Achuvai perinum venden, arangamaa nagarulaane” by Thondaradipodi Azhwaar and “En Amuthinai Kanda Kangal matru ondrinai kaanaave” by Thirupaanaazhwaar. Even though Sri Hanuman and the above Azhwaars did not want eternal world, they should have attained the eternal world due to the grace of Paramaathma. Based on the above, the word wealth mentioned in the hymn would refer to the Eternal World.
In the same way, even when the chief deity of Thiruvithuvakode keeps ignoring Azhwaar, Azhwaar strongly believes that he would get His blessings some time. Azhwaar says that he would go again and again to Him to get His blessings.
In all these ten hymns, Azhwaar goes through only one point, but with different examples in the sense that whatever pains he gets from Him, Azhwaar would look toward the chief deity of Thiruvithuvakode and would not go to anyone else. Even when the chief deity of Thiruvithuvakode ignores Azhwaar, Azhwaar says that he would not go to anyone else, but only surrender at the holy lotus feet of the chief deity of Thiruvithuvakode and wait for His blessings.
Azhwaar gives the benefits of understanding these ten hymns and concludes this subsection, by saying that those who recite these ten hymns would not reach hell, even if they had committed the most unwanted sins or multitude of sins.
Let us continue with the other hymns of Kulasekara Azhwaar in our next weblog.