நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam

For English Version, kindly click here, thanks.

முன்பு பார்த்தது 

சென்ற வலைப்பதிவினில், நாம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் மூன்று பதிகங்கள் பற்றி சுருக்கமாக பார்த்தோம்.  அவை திருவரங்கத்தை பற்றியது என்றும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று களிப்பது என்றும் அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது என்றும் பாடினார். அத்துடன், நாம் அடுத்த பதிகத்திற்கு செல்வோம்.

நான்காம் பதிகம் 

முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கநாதனைப் பாடிய ஆழ்வார், அடுத்த பதிகத்தில், திருவேங்கடமுடையானைப் பாடுகிறார்.  இந்த பதிகத்தின் பல சிறப்புகளில் ஒன்று, ஆழ்வாரின் எண்ண ஓட்டங்களும் அவரின் எண்ணங்களை நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர் நமக்கு அதை படிப்படியாக தருவதும் தான்.

பரமாத்மாவிடம் சரண் அடைந்ததும், அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் பிரார்த்திக்கவும்  திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும்  ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் இந்த பதிகத்தில் ஏங்குகிறார்.

“கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

ஆழ்வார், திருவேங்கடத்தில் வாழ்வு கிடைக்குமானால், மனிதப்பிறவிதான் என்று இல்லாமல், ஸ்வாமி புஷ்கரணியில், ஒரு நாரையாக பிறந்து, பகவானுக்கு சேவை செய்வது மகிழ்ச்சியே என்று  மூன்றாம் பதிகம், முதல் பாசுரத்தில் தொடங்குகிறார். கருடன், அனுமன், திருவனந்தாழ்வான், லட்சுமணன் முதலானவர்கள் போலப் பலபடிகளாலும் “ஒழிவில் காலமெல்லாம், உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய” (நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி, 3.3.1) குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார். ஸ்வாமி புஷ்கரணி என்பது பெருமாளுக்கு பிரியமான நீர்நிலை என்றும், வராஹ புராணம் போன்றவைகளில் குறிப்பிடப்பட்டது என்றும், திருமலை கோவிலுக்கு மிகவும் அருகிலேயே உள்ள திவ்யதீர்த்தம் என்பதும் மனதில் கொள்க.

திருவேங்கடச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே

நாரைகளுக்கு சிறகுகள் இருப்பதால், அவை திருவேங்கடத்தை விட்டு பறந்து செல்லக்கூடும். ஆதலால், திருவேங்கடத்தில் மீனாய்ப் பிறக்க, ஆழ்வார் அடுத்த பாசுரத்தில் (2) வேண்டுகிறார்.

பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேனாவேனே” 

மீனாய்ப் பிறக்கப் பிரார்த்தித்த ஆழ்வார்,  மீன் நீரிலே இருக்க வேண்டியது, அதனால் கோவிலுக்கு சென்று பகவானுக்கு சேவை செய்ய முடியாது என்றும், அதேபோல் நீர் வற்றிவிட்டாலும் திருமலையில் வாழ்வது முடியாது என்றும் உணர்ந்து, பெருமாள் வாய்நீர் உமிழும் பாத்திரத்தை  (பொற்காளாஞ்சி)  ஏந்திச் செல்லும் சாதாரணமான தொண்டனாக வேண்டும் என்று மூன்றாம் பாசுரத்தில் விரும்புகிறார்.

தான் பெருமானுக்கு பொற்காளாஞ்சியை ஏந்திக் கொண்டு அந்தரங்க சேவை செய்பவர்  என்று, கோயில்வாயிலில்  சொல்வதால்,  அனைவரும் விலகி, வழிவிடுவார்கள் என்றும், அர்ச்சர்களுடன், தானும் தடையின்றி எளிதில் உள்ளே சென்று கர்ப்பக்ருஹத்திற்குள் பெருமாளுக்கு அருகில் நின்று சேவை செய்ய முடியும் என்றும் ஆழ்வார் நினைத்து மகிழ்கிறார். திருவேங்கடமுடையானை சேவிக்க, மிக அதிகமாக கூடியுள்ள அடியார்களின் பெருங்கூட்டத்தின் நடுவில் சிக்கி, மற்றவர்கள் உள்ளே புக முடியாமல் தடுமாறுவதை ஆழ்வார் கவனித்து இருக்க வேண்டும்.

செண்பகமாய் நிற்கும் திருவுடையேனாவேனே”.

பொன் என்றால் கர்வம் வரலாம் என்பதாலும், சாதாரண தொண்டனாகிய தான் அந்த பொன்னில் ஆசைப்பட்டு அதை களவாடி சிறை செல்லக்கூடும் என்று அஞ்சியும், ஆழ்வார் தன்னுடைய அடுத்த பாசுரத்தில், (4) செண்பக மரமாக வேண்டுகிறார்.  மலர் வாடிவிடும் என்பதால், ஆழ்வார்,  தொடர்ந்து செண்பக மலர்களை பகவானுக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கும், செண்பக மரமாகவே திருமலையில் இருந்து, தொண்டு புரிய விழைகிறார்.

நம் சம்பிரதாயத்தில், முக்கிய ஸ்தலங்களான அல்லது திருக்கோவில்களான, ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சிபுரம் மற்றும் மேல்கோட்டை, என்பவைக்கு, முறையே, போக மண்டபம், புஷ்பமண்டபம், தியாகமண்டபம், ஞான மண்டபம் என்று கூறுவார்கள். திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும்.  சிந்துபூமகிழ் திருவேங்கடம் (திருவாய்மொழி 3.3.2) என்பது நம்மாழ்வார் வாக்கு.   தோள் மாலை (தோமாலை) சேவை, திருப்பதியில் இன்றும், என்றும் பிரசித்தம். திருமலையில் புஷ்பத்தொண்டு புரிவது மிகவும் சிறப்பு.  பெரியாழ்வார்  “தேனில் இனிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்”, என்று  சொல்வது போல் (பெரியாழ்வார் திருமொழி, 2.7.1) செண்பக மலர் பெருமாளுக்கு மிகவும் உகந்தது.

வேங்கடமலைமேல் தம்பமாய் நிற்கும் தவமுடையேனாவேனே”

கண்ணபிரானின் தேவியான, சத்யபாமாவின் விருப்பத்திற்கு ஏற்ப, கண்ணபிரான், ஸ்வர்க்கலோகத்தில் இந்திரனது நந்தவனத்திலிருந்த பாரிஜாத மலர் செடியினை, சத்யபாமாவின் மாளிகையிலே கொண்டு நட்டதைப்போல், யாரேனுமொருவர் செண்பக மரத்தின் மேல் ஆசை கொண்டு, அதையும்  பெயர்த்துக் கொண்டு போனால் திருமலையில் இருக்க முடியாது எனக் கருதி பூ, காய், பழம், நிழல் என்று ஒன்றுக்கும் உதவாத ஒரு ஸ்தம்பமாய் திருமலையில் பிறக்க ஆழ்வார், தன்னுடைய அடுத்த (5) பாசுரத்தில் வேண்டுகிறார்.

“அன்னனைய பொற்  குவடாம்  அருந்தவத்தன் ஆவேனே”

ஸ்தம்பமாய் இருந்தால், அதை அரசாங்கத்தார் வெட்டியோ, தீ வைத்து கொளுத்தியோ அழித்துவிடுவார்கள் என்று எண்ணி, ஆழ்வார், திருமலையில் ஓர் பொன்மயமான சிகரமாக வேண்டும் என்று தனது அடுத்த பாசுரத்தில் (6) கேட்டுக் கொள்ளுகிறார்.

கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே

தான் ஒரு சிகரமாக இருக்கும்போது, புதிய கோவில்கள் கட்டுவதற்காக அந்த சிகரத்தை உடைத்து அதன் கற்களை யாரேனும் எடுத்துச்செல்வர்,   ஆகையால் ஆழ்வார், தான் திருமலையில் ஒரு காட்டாறாக பிறக்க, அடுத்த பாசுரத்தில் (7)  வேண்டுகிறார்.

“திருவேங்கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேனாவேனே”

காட்டாற்றில் என்னேரமும் தண்ணீர் இருக்கும் என்று  சொல்ல முடியாது, சில சமயம் ஆறு வற்றி விடும், அதனால் தான் திருமலையில் வசிக்க முடியாமல் போய்விடும்,  ஆகையால், பக்தர்கள் செல்லும் வழியில், அவர்களின் பாத துகள்கள்  படும்படி, தான் திருவேங்கட மலையில் ஒரு படியாக வேண்டும் என்று தனது அடுத்த பாசுரத்தில் (8) வேண்டுகிறார்.

“படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே”

பக்தர்கள் செல்லும் வழியில் ஒரு படியாக இருந்தால், எல்லா பக்தர்களும் அந்த வழியே தான் செல்வார்கள் என்று சொல்ல முடியாது, ஆகையால் தான் எல்லா பக்தர்களுக்கும் சேவை செய்ய முடியாது.  எங்கேயோ ஒரு படியாக இருப்பதைக் காட்டிலும் அது பெருமாளின் வாசல் படியாக இருந்தால், அதற்கு பெருமாளின் தரிசனம் எப்போதும் கிடைக்கக்கூடும், எல்லா பக்தர்களின் பாதத்துளிகளும் படும்,  ஆதலால், தான் அங்கு ஒரு வாசற்படியாக வேண்டும் என்று அடுத்த (9) பாசுரத்தில் தனது விஷேச விருப்பத்தை வேண்டுகிறார்.

எம்பெருமானுக்கு சேவை செய்யும்போது, ஒரு  ஜீவாத்மா தன்னுடைய சரீரம், மற்றும் கை, கால்  போன்ற அவயங்கள் அனைத்தும் பரமாத்மாவின் அனுபவத்திற்கே என்று விட்டு விட வேண்டும்.  அதுபோல் தன்னைப் பற்றிய சுய அறிவோ, பகவானுக்கு சேவை செய்கிறோம் என்ற அகந்தையோ  இல்லாது இருக்க வேண்டும் எனபதை ஆழ்வார், இந்த ஒன்பதாம் பாசுரத்தில், தான் ஒரு உயிரற்ற படியாய், இருக்க வேண்டும் என்று சொல்லி,  நமக்கு  மிக அழகாக புரிய வைக்கிறார்.

இப்பாசுரத்தை அடியொற்றியே விஷ்ணுவாலயங்களில்,  பெருமாள் சந்நிதியின் வாசற்படி “குலசேகரப்படி” என்று, ஆழ்வார் பெயரையிட்டு வழங்கப்படுகிறது.

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே

திருப்பதி சன்னதியில் கருங்கற்படிகளை, ஒரு நாள், தங்கப்படிக்கட்டுகளாக மாற்றலாம், அதனால் தான் திருமலைவிட்டு செல்லநேரிடும், சுவாமியின் திருமுக மண்டல சேவையை இழப்போம் என்று கருதி, தாமாக ஒரு பிறவியும் வேண்டிக்கொள்ள விழையாதவராய், “எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே” என்கிறார்.

சுருக்கம்

திருவேங்கடத்தில் திருமாலுக்கும், அவனது அடியார்களுக்கும் ஏதாவது ஒருவகையில் பயன்பட வேண்டும் என்ற உணர்வில் நாரையாய், மீனாய், பணியாளாய், செண்பகமாய், கம்பமாய், சிகரமாய், கானாறாய், வழியாய், படியாய், திருமலையில், ஏதேனும் ஒரு பொருளாய் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆழ்வாரின் தனது விருப்பத்தினைக் கூறுகிறார் என்று சொல்லி, இந்த பதிவினை கீழ் கண்ட பாடலுடன் நிறைவு செய்வோம், அடுத்த வலைப்பதிவிலும் பெருமாள் திருமொழியை தொடர்வோம்.

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே, நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல், அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும், படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே” –  பெருமாள் திருமொழி 4-9

வல்வினைகள் என்ற, எத்தனையோ பிறவிகளாக தீர்க்க இயலாத பாவங்களை தன்னுடைய கருணையினால் தீர்க்கும் திருவேங்கடமுடையான். அவன் கோவில் வாசலில் படியாய் கிடந்தது, அவன் பவள வாயினை பார்த்துக்கொண்டே இருப்பேன் என்று குலசேகர ஆழ்வார் கூறும் பாசுரம்.


Preface

We have gone through a short description of the first three subsections (pathigams) of Perumal Thirumozhi by Sri Kulasekara Azhwaar in our previous weblog.    In those three pathigams, Azhwaar talked about Srirangam and how he longed to have the dharsan of Sri Ranganatha, the chief deity of Srirangam, along with his ardent devotees. Azhwaar also talked about those who did not believe in God and how we should handle or avoid those people in our life.  With that let us move to the fourth subsection of Perumal Thirumozhi.

Fourth Sub Section

Kulasekara Azhwaar, who sang about Srirangam in the first three subsections, took Thiruvengadam (Thirumalai / Thirupathi)  as his subject for the fourth subsection of Perumal Thirumozhi.   One of the important features of this subsection is the way Azhwaar articulates his thought process in a step by step manner, so that we can understand the devotion, (bakthi) and his desire to serve Him and His devotees.

After submitting himself totally to Paramathma, Azhwaar identifies Thiruvengadam as the place for him to render services to Him and to His devotees.  He is prepared to take birth as a human being or other form, so that he could continuously reside in Thiruvengadam and offer services to Him and to His devotees.

“Koneri Vazhum Kurugaai Pirapene”

Azhwaar starts the fourth subsection by saying that he would be happy to be born as a stork, in the temple tank, as long as he could serve Paramathma.  Azhwaar expresses his desire to serve Paramathma like, Garudan (the  bird, which carries Perumaal all the times), Hanuman (the monkey god, who serves Paramathma in vibhavaavathaaram), Thiruanathazhwaan (the snake, which serves Him as His bed) and Lakshmanan, who was born as His brother to serve Him throughout the incarnation of Rama.   These are examples of characters who have been serving  Paramathma all the times and hence Azhwaar wants to be like them serving Him all the time, like what Namazhwaar says in one of his hymns “ozhvil kaalamellam udanaai manni, vazhuvilaa adimai seiya vendum” (meaning, that at all times and forever, we must do service, to Lord of Venkateswara), in his Thiruvaimozhi 3.3.1. Kulasekara Azhwaar has coined the word “Swami Tank”, which means,

  • the tank, which is liked by Swami Venkateswara
  • the tank, which is mentioned in many puranams like Varaha Puranam and
  • the tank, which is the closest auspicious water storage near the Swami temple.

 “Thiruvengada sunaiyil meenai pirakum vidhi udaiyen aavene” 

Azhwaar reasons out that since the storks could use their wings and potentially fly out of Thiruvengadam which could prevent Azhwaar from staying in Thiruvengadam against his original desire of staying there for ever. Hence Azhwaar expresses his desire to be born as a fish in Thiruvengadam in the second hymn of this subsection.

“Pon vattil pidithu udane pugap peruven aavene”

In the earlier hymn, Azhwaar wants to be born as a fish, but then he reasons that the fish had to live in the water all the time, and  could not go into the temple to do service to the God and also if the water dried up, the fish could not continue to live in Thirumalai.   So Azhwaar   requests to be born as a full time staff, who would carry the Lord’s golden spittoon in Thirumalai, in the third hymn of this subsection.

Azhwaar must have seen the large crowd at Thirupathi to get the dharsan of Sri Venkatesawara Swami.   He believes that he could easily get through the crowd and reach the sanctum sanctorum, as the authorities manning the gate would identify him as a personal assistant to Perumal, carrying the golden spittoon and let him go without any hurdle.     And in this process Azhwaar could easily offer his services to Perumal, closely standing next to Him.

“Shenbagamai nirkum thiruvudaiyen avene”

In the previous hymn, Azhwaar wants to carry the golden vessel of Perumal to do service for Him.  However, he feels that he might take pride in holding the golden vessel or he might steal the golden vessel, get caught and could go to the prison.  So he   changes his mind and requests, in his next hymn (4th) that he should be born as a Shenbagam tree, a plant which gives the Shenbaga flower. Since the individual flowers could get dried and taken off from the Lord periodically, Azhwaar wants to be a Shenbaga plant, which can continuously supply the flowers to Perumal.

In vaishnavism, the four important temples or deities are Srirangam, Thirupathi, Kancheepuram and Melkote in Karanataka.   These are called as Boga Manadapam (Place of Joy), Pushpa Mandapam (Place for Flowers), Thyaga Mandapam (Place for Sacrifice) and Gnana Mandapam (Place for Wisdom) respectively.  So Thirumala or Thirupathi is associated with Flowers traditionally.  “Sindu poo mahizhum thirvengadam” is the phrase coined by Swami Namazhwaar, in his Thiruvaimozhi (3.3.2), meaning (the chief deity in Thiruvengadam is pleased with flowers).   There is a special dharsan in Thirupathi, called Thomala Sevai, meaning the string of flowers on the shoulders of the Lord.  It is really special in Thirupathi to deliver any services relating to flowers to the Lord. As Periyazhwaar says, “Thenil iniya piraane shenbaga poo soota vaaraai”, (meaning Lord, you are sweeter than the honey,  please come and wear shenbaga flower) in his Periyazhwaar Thirumozhi, 2.7.1, Perumal likes Shenbaga flower.

“Vengadamalai mel thambamaai nirkum thavamudaiyen avene”

Lord Krishna,  on the request from Satyabhama, His wife, had once taken the plant of Parijatha flower from the garden of Indran, the head of heaven, to the garden of Satybhama.   In the same way someone could take the Shenbagama plant in Thirumalai to their house and Azhwaar might lose the opportunity to live in Thirumalai.  So he wants to be born as a blank tree, which may not be useful to anyone, as it could not give any flower, fruit or vegetable or even shadow, but he could continue to stay in Thiruvengadam and serve Lord Venkateswara. This is Azhwaar’s request in fifth hymn of this subsection.

annanaiya porkuvadaam arunthavathan aavene”

Azhwaar thinks that if the government authorities found an useless plant, they could potentially cut or burn it with fire and destroy the plant, which could force Azhwaar to move away from Thiruvengadam.  Hence Azhwaar requests himself to be born as a golden peak in Thiruvengadam, in the sixth next hymn,  under this subsection.

“kaanaaraai paayum karuthudaiyen aavene”

Azhwaar feels that people could break the peak to get the stones for building newer temples and that could force him to go away from Thiruvengadam.   Hence Azhwaar in his next hymn (7th), wishes that he could become a wild stream or river in Thirumalai, which could help to grow plants carrying nectar-dripping flowers.

“thiruvenkagadamalai mel neriyai kiddakum nilai udayen aavene” 

Again Azhwaar thinks that the water in the stream might get dried once a while and hence he could not continue to live in Thiruvengadam.   Hence he changes his request in his next hymn, (8th), and wants to be born as a footstep in the hill, so that he can serve the devotees who walk along the path to have the dharsan of Sri Venkateswara Swami.

“padiyaai kidanthu un pavala vaai kaannbene”

Azhwaar takes his thought process further in the next hymn (9), by saying that since all devotees might not use the same path, he, as a footstep, could not be able to serve all devotees.   Similarly instead of being a step somewhere, he could as well be a step in front of the Lord in His Sanctum, where he could have the dharsan of the Lord all the times.   Moreover, all the devotees would pass through this step in front of the deity, so that he would serve all devotees.   So Azhwaar delivers his special desire to be born as a footstep in the sanctum in the ninth hymn.

Another point to remember here, is that whenever we want to do or offer our services to Paramathma, we should leave everything to Him, without having any of our preferences. In fact, what Azhwaar says, is that we should be like an inanimate object, without worrying about our limbs and body.  He goes on to say that we should not boast ourselves as though we are the only ones who are doing service to the Lord or we should not be too conscious about how we do the service.  We should leave everything to Him. This is what Azhwaar says in this hymn, by wanting himself to be stone, which does not have any feelings or life.

In all the Vishnu temples, the footstep infront of the Lord at the Sanctum is called Kulasekara padi (step), in recognition of this particular hymn by Azhwaar.

“emperuman ponmalai mel ethenum aavene”

Azhwaar takes his thought process further and concludes that one day someone could change the footstep in front of the Lord, which is made of granite, to a golden footstep. Then the granite footstep could be taken out of Thiruvengadam and Azhwaar may not be able to continue to have the dharsan of Lord at Thiruvengadam.     Azhwaar concludes his longing  by mentioning that he did not want to propose any specific birth, however he wants to specify one important criteria, which was, he could take any birth or any form as long as he would be able to be in Thiruvengadam.

Summary

Azhwaar wants to offer his service to Perumal and His devotees in Thirumala.  So he wants to be a stork, or a fish, or a staff, or the plant carrying shenbaga flowers, or an useless plant, or a hill top, or a river, or a footstep or  anything in Thiruvengadam in this set of hymns.   Let us conclude this weblog by mentioning the following hymn and continue with Perumal Thirumozhi in our next weblog.

Sediyaya valvinaigal theerkum thirumale, nediyaane venkadavaa nin kovilin vaasal, adiyaarum, vaanavarum arambaiyarum kidanthu iyangum, padiyaai kidanthu nin bavala vaai kaanbene ” – Perumal Thirumozhi 4-9  

“Lord Venkateswara, through His kindness, ends all our misery, which is accumulated birth after birth by us.   I wish to be a footstep, having the glimpse of your coral lips at all times, at the portals of your temple, where all devotees pass through” – Kulasekara Azhwaar.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: