A Simple Devotee's Views
For English version, please click here, thanks
இந்த வலைப்பதிவில் ஏழாவது ஆழ்வாரான குலசேகர ஆழ்வாரைப்பற்றி தெரிந்து கொள்வோம். மாசி மாதம், புனர்பூச நட்சத்திரம், ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அவதரித்த தினம். அன்று சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியையும் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரையும் சிறிது நேரம் தியானித்து, குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களில் சிலவற்றைப் பாடி, அதன் மூலம், அவர்களுக்குப் பல்லாண்டு பாடி அவர்களின் அனுகிரகத்தைப் பெறுவோமாக.
இதற்கு முன்னால் முதல் ஆழ்வார்களான, பொய்கை, பூதம் மற்றும் பேய் ஆழ்வார்களை பற்றியும், நான்காவது ஆழ்வாரான திருமழிசைப்பிரானைப் பற்றியும், பின்னர் ஐந்தாவது ஆழ்வாரான நம்மாழ்வாரைப்பற்றியும் அவருடன், மதுரகவி ஆழ்வாரையும் சிறிது தெரிந்து கொண்டோம். அதேபோல் ஆறாவதாக பெரியாழ்வாரைப்பற்றி பார்த்தவுடன், ஆண்டாளின் பெருமைகளையும் பேசினோம்.
இவர்களைத்தவிர பின்னால் சொல்ல வேண்டிய மூன்று ஆழ்வார்கள் தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆவார்கள்.
குலசேகர ஆழ்வார் அவதரித்த இடம், தற்போது கேரளத்தில் உள்ள கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சமாக அவதரித்தவர். பிறந்த காலம் – கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 – 780).
இதற்குமுன் நாம் ஆழ்வார்களின் காலகணக்குகளை விவரிக்கவில்லை. அதில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பொதுவாக எல்லோரும் ஒத்துக்கொள்ளும் விஷயம், ஆழ்வார்கள் 6 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள் என்று. அதேபோல் ஆழ்வார்களை வரிசைப்படுத்தும் வகையிலும் நாம் சில வேறுபாடுகளைக் காண்கிறோம். இராமானுசநூற்றுஅந்தாதியை இயற்றிய திருவரங்கத்து அமுதனார் ஒரு வகையிலும், குருபரம்பரையில், பின்புஅழகியராம் பெருமாள் ஜீயர் மற்றொரு வகையிலும், வேதாந்த தேசிகர், என்ற ஆச்சாரியார், தன் ப்ரபந்தசாரத்தில் மூன்றாவது முறையிலும், மணவாளமாமுனிகள், தன்னுடைய உபதேசரத்தினமாலையில் நான்காவது வரிசையிலும் சொல்லி இருக்கிறார்கள். இதனால் அந்தந்த ஆழ்வார்களின் கால குறியீடுகளும் மாறுபட வாய்ப்பு உள்ளன. முக்கியமாக இந்த எல்லோருமே, எல்லா ஆழ்வார்களையும் சொல்லிஉள்ளார்கள். ஆகவே, பொதுவான 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு காலமே, ஆழ்வார்கள் காலம் என்று கருத்தில் கொண்டு தொடரலாம்.
ஆழ்வார்கள் என்றவுடன், நம் நினைவிற்கு வரவேண்டிய வார்த்தை, பக்தி என்பதாகும், ஏன் என்றால், பரமாத்மாவிடம், பக்தியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் ஆவார்கள். அவர்கள், பரமாத்மாவிடம் பேரன்பும், பக்தியும், மரியாதையும் கொண்டு இருந்தார்கள். அடுத்த சில வரிகளில், இந்த வலைப்பதிவில், குலசேகர ஆழ்வாரின் பக்தியைப் பற்றி சொல்வோம்.
குலசேகராழ்வார் அவதரித்த நட்சத்திரம் மாசி மாதம், புனர்பூசம் ஆகும். சக்ரவர்த்தித்திருமகனான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த நட்சத்திரமும் புனர்பூசமும் ஆகும்.
முதல் ஆழ்வார்களான பொய்கை, பூதம், பேய் என்பவர்கள், பெருமாளின், பரத்துவத்தை (பரவாஸுதேவன்) மிகவும் லயித்து அதிலேயே அதிகம் பாடி உள்ளார்கள். திருமழிசை ஆழ்வார், அந்தர்யாமியில் மூழ்கி அதிலேயே அதிகம் நாட்டம் உடையவராய் இருந்தார். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் மூவரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் பக்தி பூண்டு இருந்தார்கள். நாம் பின்னால் பார்க்கப் போகின்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார், மற்றும் திருப்பாணாழ்வார் இருவரும், அர்ச்சாவதாரத்தின் பிரதிநிதியான ஸ்ரீரங்கநாதனையே பாடினார்கள். திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாவதாரத்தில் திளைத்து அதிகமான திவ்யதேசங்களைப் பாடி உள்ளார். இந்த வலைப்பதிவின் காரண கர்த்தாவான, குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்து விளங்கினார்.
இவர் ஒரு சிறந்த ராம பக்தர். இராமகதையின் மீது மிகுந்த பற்றுடையவராய், அதை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி கொண்டவராய் இருந்தார். ஒரு நாள் இராமன் தனியாய் பதினான்காயிரம் அரக்கர்களுடன் போரிட்ட சரித்திரத்தைக் கேட்க நேர்ந்தது. உடனே “இராமனுக்கு என்னாகுமோ? துணையாய்ச் செல்ல எவருமில்லையே?” என்று எண்ணி, தனது படைகளுடன் கடற்கரைக்குச் சென்று கடலில் இறங்கி எங்கே அந்த ராட்சதர்கள், எங்கே அந்த அரக்கர்கள், நாம், நம் ராமனின் சார்பில் போரிடுவோம்”, இராம பிரானுக்கு உதவி செய்யக் கிளம்பினார். அங்கே ஸ்ரீராமன், சீதா, லட்சுமண, ஆஞ்சனேயர் சகிதமாக, மன்னனுக்குக் காட்சி அளித்தார் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீ ராமனுக்கு நம் சம்பிரதாயத்தில் “பெருமாள்” என்று பெயர். ஸ்ரீரங்கத்தில் உத்ஸவருக்கு நம்பெருமாள் என்றும், அவர் ஸ்ரீ ராமனின் பிரதிநிதி என்றும் சொல்வது வழக்கம். ஸ்ரீ ராமனிடம் அபரிமிதமான அன்பு கொண்டவரான, குலசேகராழ்வாரை, ஆழ்வார் என்று அழைப்பதைவிட, குலசேகர பெருமாள் என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது ஆகும்.
அவர் எழுதிய திவ்யப்ரபந்தத்திற்கு “பெருமாள் திருமொழி” என்று பெயர் இருப்பதும் மிகப்பொருத்தம்தானே. எல்லா திவ்யபிரபந்த பாசுரங்களும் பெருமாளை பற்றியது தான். ஆகவே இந்த பெருமாள் திருமொழி என்பது பெருமாளை பற்றியது என்பது மட்டுமல்ல. இது நாச்சியார் திரு மொழி, பெரிய ஆழ்வார் திருமொழி போல, குலசேகர பெருமாள் எழுதிய திருமொழி .
கர்வம் கொள்ள, நிறைய வாய்ப்பும் அனுமதியுமுள்ள அரச குலத்தில் பிறந்தும் எம்பெருமானிடத்தும் அவன் அடியார்களிடமும் அளவிலாப் பணிவு காட்டியதே குலசேகரப் பெருமாளின் ஈடற்ற பெருமை.
குலசேகர ஆழ்வார் சிறந்த ராம பக்தர் மட்டுமில்லாமல், சிறந்த அரசராகவும் தன்னுடைய ராஜ்ஜியத்தை தன் முன்னோர்களைக் காட்டிலும் அதிகமாக விரிவு படுத்தியும் வந்தார். அதேபோல் விஷ்ணுபக்தர்களிடமும் மரியாதையுடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருந்து அவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வந்தார்.
மன்னனின் இந்த குணங்களை பார்த்த அமைச்சர்கள் சிலர், அரச நிர்வாகத்தை மனதில் கொண்டு, விஷ்ணு பக்தர்கள் மேல் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர். அதன்படி காணாமல் போன விலையுயர்ந்த மாலையை விஷ்ணு பக்தர் எடுத்துவிட்டார்கள் என்று அரசனிடம் உரைத்தார்கள்.
விஷ்ணு பக்தர்கள் மேல் மிகவும் நம்பிக்கை கொண்ட ஆழ்வார், கொடிய விடமுள்ள பாம்பு ஒன்றை ஒரு குடத்திலிடச்சொல்லினார். பின், “விஷ்ணு பக்தர்கள் அந்த மாலையை எடுத்திருந்தால், நானும் அப்பக்தர்களில் ஒருவன், ஆதலால் இக்குடத்திலுள்ள பாம்புத் தன்னைத் தீண்டட்டும்” என்று கூறிக் குடத்தினுள் தன் கையை விட்டார். ஆனால், அப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை. அமைச்சர்கள் தம் தவற்றிற்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டனர்.
இவர் தம் பெருமாள் திருமொழியில் முதல் பத்து பாடல்களில், பெரிய பெருமாளை பாடியவுடன், தேட்டறும் திறல் தேன் என்ற இரண்டாவது பத்து பாடல்களில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் போற்றிப் பாடுகிறார்.
குலசேகர ஆழ்வாரிடம் இருந்த பகவத் பக்தியுடன் கூடிய பாகவத பக்தியை தான் நாம் இவைகளில் இருந்து அறிய வேண்டிவை. பாகவத பக்தி நம் சம்பிரதாயத்தின் ஒரு முக்கிய பகுதி அல்லது ஆணிவேர்.
ஒவ்வொரு ஆழ்வார், மற்றும் ஆச்சார்யார்களுக்கும், நம் சம்பிரதாயத்தில், சில ஸ்லோகங்கள் இருக்கும். அவை அவர்களின் பெருமைகளையும், அவர்கள் எழுதிய பாசுரங்களை பற்றியும் சொல்லும். அவைகளை தனியன்கள் என்று சொல்கிறோம். அந்தந்த ஆழ்வார், ஆச்சாரியார் மேல் இருக்கும் நம்முடைய மரியாதையையும் பக்தியையும் தெரிவிக்கும் பொருட்டு, நாம், தனியங்களை, பாசுரங்கள் வாசிப்பதற்கு முன்பு சொல்வது வழக்கம். குலசேகர ஆழ்வாரைப் பற்றிய தனியனில், குலசேகரப் பெருமாள் அரசராக இருக்கும் தலைநகரில் எப்போதும் ஸ்ரீரங்க யாத்திரை பற்றிய பேச்சே இருக்கும், அவருடைய திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகிறேன் என்று ஆழ்வாரின் ஸ்ரீரங்க பக்தியை குறிப்பிட்டு உள்ளார்கள். (குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே | தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||)
திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்று குலசேகரன் சுற்று என இன்றும் வழங்கப்படுகிறது.
குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோத்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.
தன் மகளான சேரகுலவல்லி என்பவரை திரு அரங்கனுக்கு மணம் முடித்து வைத்தவர் ஆவார். இன்றும் சேர குல வல்லி நாச்சியார் சேர்த்தி உத்சவம் என்று ஒவ்வொரு வருடமும், ஸ்ரீ ராம நவமி அன்று ஸ்ரீரங்கத்தில் நடை பெறுகிறது.
மேலே குறிப்பிட்டதுபோல், ஆழ்வார் பாடிய திவ்யபிரபந்தம் “பெருமாள் திருமொழி“. அவற்றால் பாடப்பட்ட திவ்யதேசங்கள்
மீதியுள்ள பாசுரங்கள், விபவ அவதாரதங்களில் உள்ள கண்ணனையும், இராமனையும் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் பற்றிய பாடல்கள் ஆகும். பெருமாள் திருமொழி பற்றி அடுத்த வலைப்பதிவினில் தொடர்வோம். இருந்தாலும் உதாரணத்திற்கு ஒரே ஒரு பாடலை பற்றி சொல்லி இந்த பதிவினை முடிவுக்கு கொண்டு வருவோம்.
குலசேகர ஆழ்வார் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரவேண்டியது, எல்லா விஷ்ணு கோவில்களிலும், பெருமாள் முன்னால் உள்ள படிக்கட்டிற்கு “குலசேகரன் படி ” என்று பெயர். அது ஆழ்வாரின் அபரிமிதமான சிந்தனைகளால் அவர் திருவேங்கட மலையில் இருக்கும் எம்பெருமானுக்கு பாடிய “படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே” என்ற திவ்யபிரபந்த பாசுர தொகுப்பினாலேயே அமைந்தது.
பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் என்ற திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
==================================
In this weblog, let us start discussing about Sri Kula Sekara Azhwar, the seventh Azhwar. Azhwaar’s birthday is Tamil month of Masi and Tamil Star of Punarpoosam. On that day, let us take some time to offer our respects and prayers to both Chakravarthy Thirumagan (Sri Ramachandra Murthy) and Sri Kualsekara Azhwar by reciting some hymns from his Pasurams, namely Perumal Thirumozhi and get their blessings.
Till now, we have seen the muthal azhwars, namely, Poigai, Bootham and Pei. Later we have seen about Thirumazhisai Azhwar and the then about Namazhwar, who is considered as the Head of all Azhwars. Along with him, we have also seen about Sri Madurakavi Azhwar. In the same way, we have seen the sixth Azhwar, Periyazhwar along with Aandal.
Apart from these azhwars, we need to see Thondaradipodi Azhwar, Thirupaanazhwar and Thirumangai Azhwar.
Kulasekara azhwar was born in Karuvur, Thiruvanchikalam, in Kerala. It is also called as Kolli nagar. He was born as a feature of the Kausthubam, a gem sitting on the chest of Sri Vishnu. The timeline is 8th Century (750 – 780).
So for, we did not discuss any timeline for any of the azhwaars. There are different opinions on the timeline and the general acceptance by all is that all azhwaars are in between 6th to 9th centuries. In the same way, when we sequence the list of azhwars, there are at least four different ways seen in the documentation. Thiruvarangathu Amuthanar, who wrote Ramanusa Nootru Andhaathi listed them in one order; Binbu Azhagiyaram Perumal Jeeyar, the author of Guruparambarai listed them in another order; Vendantha Desikar in his Prabandha Saram listed them in a different sequence and finally Manavala Maa Munigal has given them in a different order, in his Upadesa Rathina Maalai. Based on these sequence, the timeline for each Azhwaar could also differ. But the point to note is that all these authors have included all azhwaars and we can take the generally accepted timeline of 6th to 9th Century as the timeline for Azhwaars.
The moment we think about any Azhwar, “devotion” or “Bakthi” is the word that should come to our mind, as they had always shown highest regard, devotion, love and affection towards Paramathma. In this regard, let us discuss the devotion shown by Sri Kula Sekara Azhwar in the following paragraphs.
Kula Sekara Azhwaar was born in the Tamil Month of Masi and in the Tamil Star of Punarpoosam, which is also the birth star of Sri Ramachandra Moorthy, the Chakravarthy Thirumagan.
The first three Azhwars, namely, Poigai, Bootham and Pei, were involved so much with Para Vasudevan and their compositions were more on the Para state of Paramathma. Thirumazhisai Azhwar was involved so much with the Antharyami state of Paramathma. Namazhwar, Periyazhwar and Anadal were so much attracted towards Sri Krishna and their compositions were towards Sri Krishna. Thondaradipodi Azhwar and Thirupaanazhwar, whom we would be discussing about in our future weblogs, were so much attracted towards Sri Ranganathan, they composed on Sriranganathan. Similarly the last Azhwar, Thirumangai Azhwar, was all for the Archai state of Paramathma and he has composed more hymns on Archai state. The main purpose of this weblog, Sri Kulasekara Azhwar, lived and breathed Sri Rama.
Kulasekara Azhwar was a great devotee of Sri Rama. He was interested in listening to the life history of Rama and Azhwar enjoyed hearing the life history of Sri Rama. One day Azhwar was listening to the incident where Sri Rama went alone to the battle to fight with 14000 Asuras or Rakshasas. Azhwar was so worried and he immediately ordered his army to get ready to fight on behalf of Sri Rama. He took his army to the seashore, where Sri Rama, Seetha, Lakshmana and Anjaneya appeared on the sky and showered Their blessings to Azhwar.
In Vaishnavism, when someone refers “Perumal”, then it would generally be Sri Rama. The Utsavar (the metallic deity) of Sri Rangam temple is called Nam Perumal, who is often referred to as Sri Rama. Kula Sekara Azhwar, who has shown so much of love, devotion and affection towards Sri Rama, can be called as Kuala Sekara Perumal.
The composition rendered by Sri Kula Sekara Azhwar, in Divya Prabhandham, is called Perumal Thirumozhi. We know that all Divya Prabhandhams talk about Paramathma and Perumal Thirumozhi also talks about perumal, but the name Perumal Thirumozhi, was given mainly because, it was written by Kulasekara Perumal. This is like Naachiyaar Thirumozhi, written by Aandal and Periyazhwar Thirumozhi,, written by Periyazhwar. So the title Perumal is very appropriate for Sri Kulasekara Azhwar.
The biggest plus point or the single most significant aspect for the glory of Sri Kula Sekara Azhwar, is that he was very simple and polite, even though he had many opportunities and reasons to be proud, as he was a king and Kings were naturally gifted to be proud, at least within their kingdom. Kualasekara Azhwar was a good king and he had expanded his kingdom, beyond what his forefathers had.
As we said earlier, Kula Sekara Azhwar was not only a staunch devotee of Sri Rama, but also an able king. He had expanded his kingdom beyond what his forefathers had given him. In the same way, he was also showing lot of respects and devotion to Sri vaishnavites. He had faith in them and he was helping and supporting them in many ways.
The administrators in the state had a concern that the king was spending too much time and money with Sri vaishnavites and according to them they felt that that may not be good in the long run for the kingdom. So they decided to plot an incident by which, the king might lose faith with the Sri Vaishnavites and spend more time with the kingdom. So they had hidden one of the expensive ornaments of Sri Rama and put the blame on the Sri vaishnavites, by complaining to the king that Sri vaishnavites had stolen the ornament.
Since Azhwar had lot of faith with the Sri Vaishnavites, he asked the administrators to get a venomous snake to be put in a pot. He told all that he was also a Sri Vaishnavite and if the Vaishnavites had taken the ornament, let the snake bite him. Then he closed his eyes and put his hand inside the pot, but the snake did not bite him. Then the administrators realised it was their mistake and they asked for apology and revealed the truth to the king.
Azhwar, in his composition of Perumal Thirumozhi, the first ten hymns were on Sri Ranga Nathan and immediately he took the devotion to sri vaishnavites as the subject for the second set of ten hymns. These start with ” Thetarum thiral theyninai“.
So we should learn that the devotion to Sri Vaishnavites, along with devotion to Sri Paramathma is important, from Azhwar. Similarly in our Sri Vaishnava tradition, the devotion to Sri Vaishnavites is an important aspect and is given even a higher level of priority over even devotion to Paramathma.
In our tradition, Sri Vaishnavism, there are set of hymns on the Azhwars and Acharyaars, the gurus. These hymns talk about the glories of them, as well as their composition. These are called Thaniyans and the respective thaniyan(s) is/are read before reciting their composition, as a mark of paying our respect and showing our devotion towards them. The thaniyan about Sri Kula Sekara Azhwar says that “Every Day and every moment, there would be a talk about visiting the holy place of Srirangam, in the capital of the kingdom, which is ruled by Sri Kulasekara Azhwar, to whom, I pay respect by placing my head at his holy feet”, indicating the devotion, Azhwar has over the holy place of Sri Rangam. (Kushyathey, yasya nagarey ranga yaatra thine, thine; thamagam sirasaa vanthey raajaanam kulasekaram)
Azhwar had built a hall called Senai Vendran Hall in the third outer passage around the shrine of Sri Ranganathar, inside Sri Rangam temple. He has also renovated the same outer passage and hence the third outer passage around the Shrine of Sri Ranganathar, is called Kulasekaran Sutru, even today.
Similarly Kulasekara Azhwar had constructed the hall called Pavithrosthava Mandapam inside Sri Rangam temple. He had also renovated the same outer passage where this hall is situated.
Cherakulavalli was the daughter of Sri Kulasekara Azhwar and she was married to Sri Ranga Nathar by Kulasekara Azhwar. There is a temple function called Cherakulavalli Nachiyaar Serthi Utsavam on the holy birthday of Sri Rama (Sri Rama Navami), in Srirangam every year.
As mentioned earlier, the Divyaprabhadham composed Sri Kulasekara Azhwar is Perumal Thirumozhi. Azhwar composed the hymns on the deities of the following divya desams.
The remaining hymns refer to Sri Krishna, Sri Rama and the characters around them of Vibhava Avatharm. Let us see in more detail about Perumal Thirumozhi in the next weblog. Before we complete this weblog, let us look into only one hymn.
In all the Vishnu Temples, the stairs in front of the primary deity is always called as Kulasekaran Steps. This is what comes to the mind, whenever Kulasekara Azhwar’s name is mentioned. This is due to the hymns that Sri Kulasekara Azhwar composed on Sri Venkateswaraswami in Thirumala, and the progressive explanation or drill down details that he has given on his thought process to us in this section of the Divya Prabandham, where he has mentioned “Padiyaai kidanthu un pavala vaai combene” meaning “let myself be a step in front you, so that I can enjoy your holy coral coloured lips. Let us see this in more detail in our next weblog.
After visiting, praying and offering his services to various temples, Azhwar finally reached Mannarkoil in Tirunelveli District, Southern Tamilnnadu, which is near Ambasamuthram. In this temple, the deity is in three states, namely, Standing, Sitting and Inclining positions. Azhwar had many rounds of wonderful dharsan and he was happy. He also reached the lotus feet of Paramathma from here. There is a separate shrine in this temple for Azhwar.