Aandaal Avatharamum Aranganin Karunaiyum / ஆண்டாள் அவதாரமும் அரங்கனின் கருணையும்

For English, please click here, thanks  

இதுவரை

ஆழ்வார்களில், பொய்கை, பேய், பூதம், திருமழிசை, நம்மாழ்வார், மதுரகவி மற்றும் பெரியாழ்வார் பற்றி சில விவரங்களைப்  பார்த்து உள்ளோம்.  இவர்களைத் தொடர்ந்து, ஆண்டாளின் பெருமைகள் சிலவற்றைப் பார்த்தோம். நம் ஆச்சார்யர்களான, வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுனிகள், ஆண்டாள் பற்றி கூறிய சிலவற்றையும், ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில் கண்ணனை அடைய மேற்கொண்ட வழிகளையும் பார்த்தோம்.    ஆண்டாள், பாவை நோன்பு நோற்று, அதன் மூலம் நமக்கு சொன்ன கருத்துகளையும் திருப்பாவையில் பார்த்தோம்.

திருப்பாவை முதல் ஐந்து பாடல்களில், பர, வியூக, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை  நிலைகளில் உள்ள பரமனை வழிபட்டு, அடுத்த பத்து பாடல்களில், அங்குள்ள பத்து தோழிகளை அழைத்துக்  கொண்டு, பகவானை வழிபடவேண்டிய முறைகளை கூறினார்.  வாசல் காப்பவர்கள், பகவானின் உறவினர்கள், திருமகள் என்று வரிசையாக வணங்கி, இறுதியாக பெருமாளை வழிபட வேண்டும் என்றும், தனியே வழிபடுவதைவிட கூடி இருந்து வழிபட வேண்டும் என்றும், நமக்கு சொல்லிக் கொடுத்து, நாம் அவனிடம் பிரதிபலன் எதிர்பார்க்காத கைங்கர்யத்தையே கேட்க வேண்டும் என்று  சொல்லி முடிக்கும் அழகினை திருப்பாவையில் கண்டோம்.

எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும்.

மற்ற ஆழ்வார்கள், இந்த உலகத்தில் பிறந்த சம்சாரிகளை உறக்கத்தில் இருந்து எழுப்பி, இறைவன் அருளை பெற அறிவுரை சொன்னார்கள்.  ஆனால் ஆண்டாளோ, பரமாத்மாவை எழுப்பி, இந்த சம்சாரிகளை கரை ஏற்றச் சொன்னார் என்று  நம்பிள்ளை என்னும் ஆச்சாரியார் கூறுகிறார். 

அதே போல், மற்ற ஆழ்வார்கள் இப்பூவுலகில் பிறந்து, பரமாத்மாவினால் மதிநலம் அருளப் பெற்றவர்கள். ஆண்டாளோ பூமிப்பிராட்டியானபடியால் தானே, திவ்ய மகிஷிகளில் ஒருத்தி எனப் பெரியவாச்சான்பிள்ளை காட்டியருளினார்.

இப்படி பற்பல பெருமைகள் கொண்ட ஆண்டாளின் அவதார பெருமைகளை பற்றி சிறிது பார்ப்போம்.

அவதாரம்

ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணனிடம் பூமிதேவி, ‘‘இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்களில் தாங்கள்  யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துவீர்கள்?’’ என்று  கேட்டாள்.   ‘‘பூலோகத்தில் வாழ்ந்தும் இக சுகங்களில் பற்று வைக்காமல் என்னிடமே நித்தம் பக்தி செய்து என்னை நினைத்து எனக்குப் பாமாலையும், பூமாலையும்  தொடுத்துச் சாத்துகின்ற பாகவதர்களிடம் நான் அளவு கடந்த அன்பு செலுத்துவேன்,’’ என்றார் திருமால். உடனே பூமிதேவி, தான் அத்தகைய பக்தையாக  பிறவியெடுக்க அருளவேண்டினாள்.    மணவாளமாமுனிகள் என்ற ஆச்சாரியார் தனது உபதேச ரத்தின மாலை என்ற தொகுப்பில் 22 பாசுரத்தில், பிராட்டி பரமபதத்து இன்பம் அனைத்தும் துறந்து, ஆற்றில் வீழ்ந்த குழந்தையைத் தூக்கத் தானும் நீரில் குதிக்கும் தாய் போல, நமக்காக இங்கு ஆண்டாளாய் வந்து பிறந்தார் என்கிறார்.

அப்படியே, ஒரு நளவருடம் ஆடி மாதம் சுக்ல பட்சம். சதுர்த்தி செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அன்று,  நந்த வனத்தில் துளசி மாடத்துக்குக் கீழே, இப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் உள்ள, நாச்சியார் சந்நிதி உள்ள இடத்தில் பூமிப்பிராட்டி, சிறு குழந்தையாகத், ஆண்டாளாக அவதரித்தாள்.

வடபத்ரசாயி பெருமாளுக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு பூக்கள் பறிப்பதற்காக விடியற்காலையில் பூக்குடலையுடன் நந்தவனத்திற்குச் சென்ற பெரியாழ்வார், அந்த சிறு குழந்தையைப் பார்த்தார்.   அந்த குழந்தையை, சுரும்பார் குழற்கோதை அல்லது சுருக்கமாக கோதை என்று பெயரிட்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய், பக்தி மணத்தோடு வளர்த்து வந்தார் விஷ்ணு சித்தர்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். கன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு விஷ்ணு சித்தர் உயர்ந்த ஞானத்தைப் போதித்தார். கோதையும் கண்ணனையே சிந்திப்பதும் துதிப்பதும், மற்றும் அந்த கோவிந்தன் நினைவாகவே வளர்ந்து வந்தாள். அவள் ஆடலிலும் பாடலிலும் மழலைச் சொற்களிலும்  கண்ணனின் தொடர்பு  காணப்பட்டது. இளமை தொடங்கி எம்பெருமான் மீது பக்திப் பெருவேட்கை கொண்டு அவனையே தான் மணம் செய்துகொள்ள வேண்டும் என்றிருந்தாள் கோதை.

விஷ்ணு சித்தர் தினம் பூ  கொய்து வந்து அதை மாலையாகக் கட்டி வடபெருங்கோயிலானுக்கு சாற்றுவதற்கு பூக்குடலையில் வைப்பது வழக்கம். பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை, கோதை, ஒவ்வொரு நாளும், தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று தட்டொளியில் (கண்ணாடியில்) பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார்.   இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.  பெருமாளும் அதை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டார். இது விஷ்ணு சித்தருக்கு தெரியாது.

ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த மாலையைச் சூடி தட்டொளியில் (கண்ணாடியில்)   கோதை, தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்ததை விஷ்ணு சித்தர் கவனித்துவிட்டார். மனவருத்தத்தால் பகவானுக்கு அன்று அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.  அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பகவான் தோன்றினார். ‘கோதை சூடிக்கொடுத்த  மாலையே நறுமணம் மிக்கதும் எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும்; ஆதலின் அத்தன்மையான மாலையே கொண்டு வருவாய்’ எனச் சொன்னார்.

தனக்கு  மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் என விஷ்ணுசித்தர் தெரிந்துகொண்டார்.  தான் சூடிக் கொடுத்த மாலையை பகவான் ஏற்றுக்கொண்டதால், அன்று முதல் கோதை, “சூடிக்கொடுத்த நாச்சியார்” எனவும், “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் “ஆண்டாள்” என்றும் போற்றப்படுகிறார்.

அரங்கனின் கருணை

அரங்கநாதனின்  பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள். ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு வசமாகி  கோதையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி கோதையை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டான். பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினான்.

மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான்.

அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.  திருவரங்கத்தில் நுழைந்ததும் அரங்கனுக்காகவே  அலங்கரித்தால் போல் இருந்த  ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி, பெரிய பெருமாள், சந்நிதியில் சென்று, மறைந்து பரமபதம் அடைந்தனள் என்பது ஆண்டாள் வரலாறு.    இது கண்ட யாவரும் பெரியாழ்வாரைப்  பெரிய பெருமாளின் மாமனார் என்றும் சமுத்ரராஜன் போலே என்றும் போற்றினர். அவரோ முன்புபோன்றே, ஸ்ரீ வில்லிபுத்தூர் திரும்ப சென்று, வடபத்ரசாயிக்குக் கைங்கர்யம் செய்வாராயினர்.

திவ்யதேசங்கள்

ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என்கின்ற பிரபந்தங்களில்  குறிப்பிட்டுள்ள திவ்ய தேசங்கள்.

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் (அருள்மிகு வடபத்ரசாயி திருக்கோயில் (ஆண்டாள்), ஸ்ரீவில்லிபுத்தூர்
 2. திருஆய்ப்பாடி  (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.
 3. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்
 4. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.
 5. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்
 6. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
 7. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
 8. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா) – திருவேங்கடமுடையான் மேல் ஆண்டாள் பாடல்களை இங்கே காணலாம்.
 9. திருப்பாற்கடல்
 10. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி

ஆண்டாள் இன்று

திருமணமான பெண்கள் எல்லோருக்கும், பிறந்த வீடும், புகுந்த வீடும் மிகவும் முக்கியம்.  ஆண்டாளின் சீர்மையினால் அவள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஸ்ரீரங்கத்திலும் கொண்டாடப் படுகிறார்.  இவைகளை பார்த்து, மற்ற ஊர்களிலும் ஆண்டாளின் பெருமையும் புகழும் நன்றாகவே கொண்டாப்ப படுகின்றன.

ஸ்ரீ வில்லிபுத்தூரில்

ஆண்டாளின் இடது தோளில் இருக்கும் கிளி, ஆண்டாளின் விருப்பத்தை ரங்கநாதரிடம் தெரிவிக்க தூது சென்ற கிளியாகும். எனவே இந்த கிளி நமக்கும் நல் வழிகாட்டும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவது தனிச்சிறப்பு.

aandaal

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் சன்னதி விமானத்திற்கு திருப்பாவை விமானம் என்று பெயர்.  ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தையும் தரிசிக்கவேண்டும்.

மார்கழியின் முதல் பத்து முதல் திருநாள் அன்று ஆண்டாள் தன் பிறப்பு வழி வம்சாவர்த்தினார்களான வேதபிரான் பட்டர் வீட்டிற்கு செல்வாள். அவர்கள் வீட்டின் முன்பு பச்சை காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். இதனை பச்சைபரத்தல்  என்பர்.

அதே போல் ஆண்டாள் பிறந்த திருவாடி பூரத்தன்று,  தான் அவதரித்த நந்தவனத்திற்கு சென்று அருள் பாலிக்கிறார்.

தான் அரங்கனையே மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று திருமாலிரும்சோலை அழகர் மற்றும் திருவேங்கடமுடையான் இருவரிடமும் ஆண்டாள், வேண்டிக்கொண்டாள்.   அந்த பிரார்த்தனை நிறைவேறியதால் இன்றும் ஆண்டிற்கு ஒரு முறை இந்த இரண்டு பெருமான்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் அணிந்த  மாலை செல்கின்றன.  ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி அன்று அழகருக்கும், புரட்டாசி ஐந்தாம் திருநாள் கருடசேவை அன்று  திருப்பதிக்கும் அவள் சார்பாக, மாலையும், பட்டுபுடவையும் மற்றும் கிளியும் கொடுத்து அனுப்பப்படுகின்றன.

ஆண்டாளின் பிறந்த நாள் விழா ஸ்ரீவில்லிப்புத்தூர் நாச்சியார்(ஆண்டாள்) கோயிலில் 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு நாளும் காலை மாலை என்று இரண்டு வேளைகளிலும் ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் வீதிகளில் புறப்பாடு நடக்கின்றன.  அவைகளில் சில,

 • முதல் நாள் –  காலை கொடி ஏற்றம்.  இரவு  பதினாறு வண்டிச் சப்பரம்
 • நான்காம் நாள் – இரவு ஆண்டாள் சேஷ வாகனம்; ரங்கமன்னார் கோவர்த்தனகிரி வாகனம்.
 • ஐந்தாம் நாள் காலை பெரியாழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி சுந்தரராஜன், வெங்கடேச பெருமாள், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மங்களாசாசனம் நடைபெறும்.  அன்று இரவு ஐந்து கருட சேவை நிகழ்ச்சி. அப்போது ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் ரங்கமன்னார் பெரிய திருவடி வாகனத்திலும் சுந்தரராஜன், வெங்கடேச பெருமாள், திருத்தங்கால் அப்பன் பெரிய திருவடி வாகனங்களிலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் வீதியுலா வருவர்.
 • ஏழாம் நாள் இரவு ஆண்டாள்-ரங்கமன்னார் சேர்ந்து கண்ணாடி சப்பரம்,  இரவு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக்கோலம்..
 • ஒன்பதாம் நாள் காலை  ஆண்டாளும் ரங்கமன்னாரும் தேரில் எழுந்தருளுவர். தமிழகத்திலேயே திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தேர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவரங்கத்தில்

திருவரங்கம் கோவிலில் உள்ள 19 சன்னதிகளில் உள் ஆண்டாள் சன்னதி என்றும் வெளி ஆண்டாள் சன்னதி என்றும் 2 சன்னதிகள் உள்ளன. இதுதவிர பரமபதநாதன் ஸந்நிதியில் ஆழ்வார் ஆசார்யர்களுடன்  சூடிக்கொடுத்த நாச்சியாரும் எழுந்து அருளி உள்ளார்.

திருவரங்கத்தில், பெரிய பெருமாளுக்கு பல நூற்றாண்டுகளாக பல அரிய கைங்கர்யங் களை செய்து வரும் ‘உத்தமநம்பிகள்’ என்னும் வம்சத்தினர் இன்றும் உள்ளனர். இவர்கள் பெரியபெருமாளின் மாமனாரான ‘பெரியாழ்வார்’ வம்சத்தினர் ஆவர்.  புகுந்த வீட்டில் மருமகள் ஏற்றிவைக்க வேண்டிய விளக்கினை அவளுடைய உடன்பிறந்தோர் எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் அரங்கனை ஆட்கொண்ட ஆண்டாளின் சம்பந்தத்தினால், அரங்கனது மைத்துனராகிய உத்தம நம்பி வம்சத்தினைச் சார்ந்த குடும்பத்தினர், மேளதாளத்துடன் சகலவிதமான மரியாதைகளுடன் பெரிய பெருமாளுக்கு  ஒரு வெள்ளி விளக்கு உட்பட ஒன்பது விளக்குகளை ஏற்றுவர்.  உத்தம நம்பி எடுத்து வரும் வெள்ளி விளக்கு மட்டும் அர்ச்சகரால் வாங்கப்பெற்று நம்பெருமாள் திருமுன்பு நெல்லினால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் (இதனை ‘சேனைக்கால்’ என்பர்) எழுந்தருளச்செய்யப்படும். ஆண்டாளுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஏற்றம் தரும் ஒரு  உத்ஸவம்   இது.

ஆண்டாளுக்குப் பல்லாண்டு

ஸ்ரீ ரெங்கநாதருக்கு  திருமணம் செய்து கொடுத்த “பெரியாழ்வார்’ தன் மகளை பிரிந்த ஆற்றாமை மிகுதியால், “”ஒருமகள் தன்னையுடையேன், உலகம்நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டுபோனான்” என்று பாடினார். தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள்,  பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் பிறந்தகத்தில் இருந்தது போல சிறப்புடன் அங்கேயும் வாழ வேண்டுமே என்ற தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார். இந்த பாடலை ஆண்கள், பாடினாலோ, கேட்டாலோ, தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால் அந்த, கவலைகளுக்குச் சிறிதும் இடம் கொடாமல்,  ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில், தினமும், தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், மற்றும் உலகமெங்கும் உள்ள வைஷ்ணவ  கோவில்களிலும் மற்றும் பொது சபைகளிலும், திருப்பாவையின் 30 பாடல்களை பாடுவதிலும் அவைகளை பற்றி விளக்க உரைகளை சொல்வதிலும், கேட்பதிலும், மக்களின் ஆர்வத்தின் அளவு பன்மடங்காய் கூடுவதில்  இருந்து, ஆண்டாளின் சிறப்புகளும், புகழும், பெருமைகளும் பற்பலமடங்காய், வளர்ந்து கொண்டேதான் போகின்றது என்பது  நமக்கு கண் கூடாகத் தெரிகிறது.

இப்படி ஆண்டாளின் பெருமைகளுக்குப் பல்லாண்டு பாடி, அடுத்த வலைபதிப்பில் குலசேகராழ்வார் பற்றி காண்போம்.

==================================================================

A short recap

We have seen about Poigai Azhwar, Pei Azhwar, Boothath Azhwar, Thirumazhisai Azhwar, Nammazhwar, Madurakavi Azhwar and Periyaazhwar.  We have also had a small glimpse of the greatness of Aandal and seen what our acharyars Vendantha Desikar and Swami Manavala Maamunigal have written about Aandal.   Similarly we have seen what Aandal herself has told in her Naachiyaar Thirumozhi, on how to reach the lotus feet of Sri Krishna.   We  also had a brief account  about the salient points in Thiruppavai  and the key learnings for us, as given by Aandal in her Thiruppavai.

In the first five hymns of Thiruppavai, Aandal has prayed to all the five states of Brahmam, namely, Para, Viyuha, Vibhava, Antharyaami and Archai.   In the next 10 hymns, she invited 10 of her friends to pray along with her.   She then started telling us on how to do the prayers.   We need to offer our prayers first to the gatekeepers of Paramathma or Brahmam and then offer our prayers to the close relatives and people closer to Paramathma.   Then we need to offer the prayers to Sri Mahalakshmi or Thayaar, before offering the prayers to Paramathma.   She had also insisted on praying together, rather than doing the prayers alone.   She had also taught us on what to ask Paramathma in return for our prayers.   According to Anadal, we should ask Paramathma that we should be able to offer Him the services without expecting anything else in return.

Aandal has an unique distinction, which is not accorded to any other devotee of Vishnu, in terms of having special shrine in every Vishnu temple.

All other Azhwaars, through their preaching, wake up the people in this world and advise them to go towards Paramathma, whereas Aandal herself being Bhoomi Pirati, she wakes up Paramathma and requests Perumal to take care of the people, as per Nampillai, one of the Acharyaars. 

Similarly, Unlike all other Azhwaars, who had been divinely blessed by Paramathma and were given the wisdom about Paramathma by Him (Mayarvara mathinalam arulappetravargal), Aandal was an incarnation of Sri Bhooma Devi Thayaar Herself and one of the consorts or Nachiyaars of Perumal,  as per Periyavaachaanpillai,  one of renowned commentators of vaishnavism.

After hearing about the glories of Aandal, let us enjoy her Avatharam and how she attained what she wanted.

Avathaaram

Once Bhoomadevi asked Sriman Narayanan on whom in this world, He would shower His love and affection.   He replied that He would love those, who live in this world and who are not interested in the material gains or the worldly pleasures, but those who are staunch devotees of Him and who continuously offer prayers  with flowers and with hymns.   Without any hesitation, Bhoomadevi, immediately asked Him that She would like to take an incarnation on those lines.   Manavaala Maa Munigal, one of the acharyars, on the 22nd hymn of his Upadesa Rathina Maalai, states that Bhooma Devi sacrificed all Her pleasures of Srivaikuntham or Paramapadham, came down to this world as Aandal, to save us, like a mother who would dive into the river to save her child.

Bhoomadevi, came to this world as Aandal, on a Tuesday, in the Tamil Year of Nala, in the Tamil Month of Aadi, (July 15th to Aug 15th), and in the Tamil Star Pooram, and on the fourth day of the new moon, in the flower garden, near Thulasi Pot.  This place is now the Aandal Sanctum or Shrine in the Vatapathra Saayi temple in Srivilliputhur.

Vishnuchittar (Periyazhwaar) used to maintain a garden full of flowers for making the garland to Vishnu every day.  He found the girl child under a Thulasi plant in the garden. He named the child as Surumbaar Kuzhal Kothai or shortly Kothai.

Choodi Kodutha Sudar Kodi

In the younger age itself, Vishnuchithar or  Periyazhwaar  had brought up Kothai as a staunch devotee of sri krishna. He had taught all he knew about the Tamil language and the religion or vaishnavism.  When Kothai grew up, Periyazhwaar continued to teach her the higher level knowledge in Vaishnavism.  Kothai’s devotion to Sri Krishna kept increasing and it was only Sri Krishna or Govinda, who prevailed in her mind all the time.   She was able to make connections with Sri Krishna in all her activities, whether it was a discussion or a song or a dance.   Slowly she started developing a thought that occupied her mind fully, that she should marry only Sri Krishna or Govindan.

As a part of his regular daily activities, Vishnuchithar used to pluck fresh flowers and make them as garlands for Sri Vatapatra Saayi, the Deity in Srivilliputhur  temple and kept them on the basket.  Before he could take the garlands to the temple for offering it to the Vatapatrasaayi, Kothai used to wear the garlands and try to satisfy herself, whether she was a good match for Sri Krishna.   On those days, it was only a large plate, which was used as a mirror and Kothai used one of such plates to view herself. She later used the word “Thattolliym thanthu” in her hymns, where Thattolli means a mirror.  After that she would replace the garlands in the same place.   This was not known to Vishnuchithar and when he offered those garlands to Perumal, which were worn by Kothai, Perumal also had accepted them gleefully.

One day, Periazhwar found this, and he was very repentful and worried that he made the mistake of garlanding the deity with those which were worn by her daughter, Kothai. So on that day, he put aside the garland that was worn by Aandal and made a new one and offered it to the temple.   On that night, Vishnu appeared in his dream and asked him not to worry and to offer only the garland worn by Aandal to Him from the next day onward, as He liked those garlands and those carried a very special fragrance. Periyazhwaar was pleased to see that Lord Krishna had recognised the devotion of Kothai and accepted the garland worn by her.  The girl Kothai was now named Aandal, meaning, the girl who “ruled” over the Lord through her devotion and was referred as Choodikodutha Sudarkodi, meaning, “the lady who gave her garland to Vishnu”.

Greatness of Thiruarangan

As Kothai grew into a beautiful maiden, her fervor for the Lord Vishnu grew to the extent that she decided to marry only the Lord Himself. After hearing the glories of Sri Aranganathan more and more from Periyazhwaar,  Aandal was extremely happy and made up her mind to marry Sri Aranganathan , Lord Himself in Archai. As time passed, her resolve strengthened and she thought constantly about marrying Sri Ranganathar at Srirangam. Vishnuchittar (Periyazhwaar) understood the Divine Love that existed between the Thiru Arangan and his daughter. .

Thiru Arangan was also happy with the devotion of Aandal and decided to marry her. Arangan then instructed Periyazhwaar to bring  Aandal to Srirangam, in his dream.   Similarly Arangan also instructed Vallabhadevan, the King of Pandiyanadu, in his dream, to go to Srivilliputhur , to invite Periyazhwaar and Kothai to Srirangam and bring them to Srirangam along with the devotees.

The King, Vallabhadevan, organised a grand procession to bring Aandal and Periyazhwaar from Srivilliputhur to Srirangam.   He  made elaborate arrangements throughout the way with flowers, garlands and sprinkled water all along so that is cooling and refreshing for the  people  accompanying them.    Vallabadevan went and described his dream to Periyazahwaar  and  Azhwaar also accepted immediately as he was also told by Perumal.

The King, Periyazhwaar and Aandal  with  people who came along with them, reached Srirangam temple.   As soon as they entered the temple, Aandal, who was dressed beautifully and suitably for the primary deity of Srirangam, Sri Ranganathan, got down from her palanquin and  went to the sanctum, disappeared and reached abode or Paramapadham.     People who saw all these, started praising Sri Periyazhwaar as the Father-in-law of Periya Perumaal and as Samuthrarajan, (The King of all Seas, who also got his daughter, Sri Mahalakshmi married to Mahavishnu).   Periyazhwaar, went back to Srivilliputhur to continue his service to Sri Vatapatrasaayi.

Aandal, has mentioned about the following places, Divya Desangal, in her hymns, Thiruppavai and Nachiyaar Thirumozhi.

 1. Srivilliputhur – Sri Vatapatrasayi Temple
 2. Thiruaaipaadi – Sri Mohanakrishnan Temple, Gokulam, Uttar Pradesh.
 3. Dwarakai – Sri Kalyana Narayanan Temple, Dwaraka, Gujarat
 4. Thiruvada Mathurai – Sri Govarthanan Temple, Mathura, Uttar Pradesh
 5. Thirukkannapuram – Sri Neelamega Perumal temple, Thiruvarur.
 6. Thirumaaliruncholai – Sri Kallazhgar temple, Azhgar Kovil, Madurai, Tamilnadu
 7. Thirukudanthai – Sri Sarangapani Temple, Kumbakonam, Tamilnadu
 8. Thiruvengadam – Sri Venkateswara Swami Temple, Thirupathi, Andra Pradesh
 9. Thiruparkadal – One of the two Divya Desangal, away from this world
 10. Thiruvarangam – Sri Ranganatha Swami Temple, Srirangam, Tamilnadu

Aandal Today

For all married girls, both the families, the family from where they come and the family where they settle after the wedding, are important.   Aandal’s glories are such that she is held in extreme helms in both the families.  Let us see how the people celebrate Aandal in her birthplace, Srivilliputhur and her husband’s place, Srirangam.   Based on these, Aandal is placed at high esteem in all other parts of the world too.

In Srivilliputhur

The parrot which is sitting on the left shoulder of Aandal, is believed to be the messenger which conveyed the wishes of Aandal to Sri Ranganathar.   So people offer prayers to this parrot, believing that the parrot would show them the right path.

The reclining position which Sri Rangamannar Swami, takes every year, with His head on Aandal’s lap on the seventh day function of the Aadi Festival in Srivilliputhur Rangamannar Temple is a very special dharsan for devotees.   (Please refer to the picture above in Tamil section)

The golden casket on the top of the Aandal Shrine in Srivilliputhur temple is called Thiruppavai Vimanam, in recognition of Aandal’s work and everyone who offers their prayers to Aandal should also pay respect to this Vimanam.

On the first day of the Mudhal Pathu (First Ten days) of the Margazhi Festival (Margazhi is a Tamil calendar month, between Dec 15th and Jan 14th), every year, Aandal is taken in  a procession to her forefather Veda Piran Pattar’s house .  They  welcome and receive Aandal by having lots of Green Vegetables spread in front of their house. This is called “Pachai Parathal” or  the spread of the green. 

In the same way, on her birthday,  Thiru Aadi Pooram (Aadi is a Tamil calendar month, usually between Jul 15th to Aug 14th), Aandal is taken in a procession to the Tulsi plant where she was born or found out by Sri Periyazhwaar, and she blesses the devotees in that place on that day.

Aandal, in her early days, had prayed to Sri Kallazhagar in Thirumaliruncholai, Madurai and Sri Venkateswara Swami in Thirupathi so that she could marry Sri Ranganathar in Srirangam.   Her prayers were answered and in recognition of the support she received from these two perumals, the garlands that are worn by Sri Aandal are sent to these temples even today.  A garland of Aandal from Srivilliputhur Temple, a parrot and a silk saree are sent to Azhagar Kovil on the Pournami day of the Tamil month of Chithirai (April 15th to May 15th) and to Thirumala Venkateswara Perumal temple during the Garudasevai, the fifth day function  during the Tamil Month of Purattaasi (September 15th – October 15th).

Aandal’s birthday is celebrated as a 12 day festival in Srivillliputhur Aandal Temple, with special processions in the morning and evening for Aandal and Rangamannar. 

 • First Day – Kickoff of the festival through flag hoisting and in the night procession on a 16 wheel cart
 • Fourth night procession – Aandal on Serpent Vehicle and Rangamannar on Govardhana Giri Vahanam, representing Sri Krishna holding the hill on his finger to protect the people of Gokulam.
 • Fifth day is a special day for Periyazhwaar to offer his prayers to the chief deities from other nearby temples, namely, Sundara Raja Perumal, Venkatesa Perumal, Thirthangal Appan and the couple, Aandal and Rangamannar at the Function Hall specially created for the festival.    On that night, Aandal will come on a special swan as her vehicle and Periyazhwaar will come on a smaller swan, whereas all other deities will come on the individual garuda vahanam.
 • On the seventh day evening both Aandal and Rangamannar will come on a chariot decorated with mirrors.   Later in the night in the Krishnan temple, Rangamannar will take a reclining position with His head on the lap of Aandal.  This is a special dharsan.
 • On the ninth day morning, Aandal and Rangamannar will come on one of the big chariots.   This chariot is second biggest chariot in Tamil Nadu after Thiruvarur Chariot.

In Srirangam

Among the 19 shrines in the Srirangam Temple, there are two shrines, exclusively for Aandal ,the inside shrine is called Ul Aandal Sannadhi and the outer shrine called Veli Aandal Sannadhi.  In addition, one other Aandal  is also there as a part of all Azhwaars and Acharyars in the Paramapadhanathan Sannadhi.

The family called Uthama Nambigal family, descendants of Periyazhwaar  have been doing service to Sri Aranganathan for many many years through many generations.    In Tamil nadu there is a festival called Karthigai, which comes in the tamil month of Karthigai (Nov 15 to Dec 15) . During that festival people  light their homes with oil lamps.   As a practice, relatives of the girl (father or mother or brother) would bring a new set of lamps for the festival to the girl every year.   In the same way, since the Uthama nambi comes from Periyazhwar’s family, every year, they bring new silver lamp in addition to nine other lamps to Sri Ranaganathar.  The Silver lamp will be lit in front of Sri Ranganathar and then kept in a heap of paddy in front of Sri Ranganathar.   This is called “Senaikal”.  This is a way of showing Namperumal’s respect to Periyazhwaar and his family.

Prayers and best wishes to Aandal

After getting his daughter married to Sri Ranganathar, Periyazhwaar felt the loneliness of leaving her daughter, and he composed a hymn “oru magal thannai udaiyen, ulagam niraintha pugazhaal thirumagal pol valarthen, senganmaal thaan kondu ponaan“, meaning “I had only one daughter, she got all the fame in this world and I brought her up like Sri Mahalakshmi.   The perumal took her away”.     He had great concerns, like any other parent, that she was treated like a queen in his house, and she had to continue like that with Perumal.   It is believed that people who reads or sings this hymn will be more affectionate towards their children.

Unlike Periazhwaar’s undue concerns, Aandal’s glories keep increasing.  This is evident from the increased number of lectures on Thiruppavaai  during the tamil month of Marghazi in many temples and places within and outside  Tamil Nadu.   The involvement in singing and practising those 30 hymns of Thiruppavai by the number of people all over the world, only keeps increasing.

Learning and hearing the glories of Aandal give us more and more strength to continue, so with that respects, we move to our next weblog on Kula Sekara Azhwaar.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: