A Simple Devotee's Views
For English version, kindly click here, thanks
ஆழ்வாரைப் பற்றி ஒரு சில தலைப்புகளில், அவரின் பெருமைகள், அவதாரம், மதுரகவி ஆழ்வாருடன், நாதமுனி அவர்களுடன், ஸ்ரீரங்கநாதனுடன் என்று பார்த்தோம். இன்னும் இரண்டு முக்கியமான தலைப்புகள் உள்ளன, ஒன்று, அவரின் படைப்புகள் அல்லது அவர் அருளிய திவ்ய பிரபந்தங்கள் பற்றியவை; மற்றொன்று அவர் பாடிய திவ்ய தேசங்கள். அவைகளைப் பற்றி எழுத எனக்கு இன்னும் நிறைய ஞானமும் அனுபவமும் தேவை என்று உணர்வதால், அந்த தலைப்புகளை பின்பு ஒரு நாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி, இப்போது ஆழ்வாரின் மோட்சத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ஆழ்வார் இந்த பூவுலகில் முப்பத்திரண்டே ஆண்டுகள் இருந்தார் என்றும் அதிலும் பதினாறு ஆண்டுகள் அசையாமல் புளியமரத்தின் அடியில் இருந்தார் என்றும் பார்த்து உள்ளோம். மேலும் அவர் அந்த புளியமரத்தின் அடியில் இருந்து கொண்டே அங்கு வந்த திவ்ய தேச பெருமான்களுக்கு பாசுரங்களை சமர்ப்பித்து பாடினார் என்பதையும் நினைவில் கொள்க.
அதேபோல், ஆழ்வார்கள் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட காரணம், வடமொழி வேதங்களை திராவிட மொழியில் ஏற்படுத்தி அவற்றைக் கொண்டு, பரமாத்மாவின் பெருமைகளை இங்குள்ள ஜீவாத்மாக்களுக்கு உபதேசம் செய்வது ஆகும். ஆனால் எல்லா ஆழ்வார்களுமே பரமாத்மாவிடம் பக்தியில் மூழ்கி மோட்ஷம் பெறுவதையே பெருமாளிடம் வேண்டினர். அவைகள் அவர்கள் பாடிய பாசுரங்களில் பெருமாளிடம் பிரார்த்தனைகளாக வெளிப்பட்டது. பெருமாளும் ஆழ்வார்களின் பக்தியில் மகிழ்ந்து அவர்களுக்கு மோட்ஷம் கொடுத்து அருளினார்.
மோட்ஷத்திற்கு முதல்படி, பரமாத்மாவிடம் சரணாகதி வேண்டுவது. ஆழ்வார் 37 திவ்ய தேச பெருமாட்களுக்குப் பாசுரங்கள் பாடியிருக்கிறார். அவை 108 திவ்ய தேசங்களுக்குள் அடங்கும்.
இவைகளில் திருகுடந்தை, திருவேங்கடம், திருவல்லவாழ் மற்றும் திருசீரவர மங்கை என்னும் திவ்யதேச பெருமான்களிடம் சரணாகதி வேண்டுகிறார். இவர்களைத் தவிர, ஸ்ரீரங்கம் நம்பெருமாளும், திருக்குருகூர் பொலிந்துநின்றபிரானும், திருமோகூர் ஆப்தனும், திருமாலிருன்சோலை அழகரும், திருபேர் நகரில் அப்பக்குடத்தானும் ஆழ்வாரின் மோட்ஷ வைபவத்தில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். நம்பெருமாளைப் பற்றி அரங்கனுடன் என்ற வலைப்பதிவில் பார்த்தோம்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில, ஐந்து முறை மோட்ஷம், வேண்டி கேட்டு உள்ளார்.
இந்த ஐந்து சரணாகதிகளில், அகலகிலேன் என்ற கடைசி சரணாகதி ஒன்று மட்டுமே, பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு வேண்டியதால் பலன் கிடைத்ததாக நம் பெரியவர்கள் கூறுவார்கள். மற்ற பாசுரங்களில் பெருமானை மட்டுமே வேண்டுகிறார். ஆக, நம் சரணாகதி பலிக்க, நாம் தாயார் மூலம் செல்ல வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும்.
இதில் நான்காவது சரணாகதியில், கொஞ்சம் வேறுபாடு உள்ளது. இது மட்டும், விபவாவதரமான கண்ணனிடம் வேண்டியது, மற்றவை அர்ச்சாவதாரப் பெருமான்களிடம் வேண்டியவை. அதேபோல், மற்ற சரணாகதிகளில் மோட்ஷம் வேண்டுவார், ஆனால் இங்கே, பெருமானை விட்டு பிரிந்து வருந்தினாலும், அவன் குணங்களையே கூற சக்தி கேட்கிறார்.
தன்வாழ்நாளின் முடிவு நெருங்கிவிட்டது என்று தாமே முடிவு செய்து கொண்ட ஆழ்வார், திருநாட்டுப் பயணத்திற்கு தயாராக இருக்கவேண்டும் என்று திருமோகூர் காளமேகப் பெருமாளை வழித்துணையாகப் பற்றுகிறார்.
சொல்லி ஆப்தன் துணையைக் கொள்கிறார். அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளை அடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த பாசுரம்,
தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே
திருமோகூர் கோவிலில் மூலவர் காளமேகப் பெருமாள், உத்சவர் ஆப்தன் ஆவார்கள்.
வேரின் வாசம் அறிந்து வேரை சூடுபவர்கள், வேரோடு மண்ணையும் உடன் சூடுவர். அது போல் ஞானியர்களின், ஞானம் சுடர்விடும் மேனியையும், பரமாத்மாவான திருமாலிரும்சோலை எம்பெருமான் விடுவதில்லை. ஆழ்வாரை இந்தத் திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துசெல்ல ஆசை கொண்டான். (10 -7). ஆழ்வார் திருமாலிரின்சோலை எம்பெருமானான அழகரிடம் வேதத்தில் சொல்லப்பட்டதை எடுத்துச் சொல்கிறார். வேதமானது இந்த பூ உடலை இந்த உலகத்திலேயே விட்டு விட்டு ஜீவாத்மாவை மட்டுமே செல்லும்படி சொல்லி இருக்கிறது என்று சொல்லி அழகருடன் செல்ல மறுத்தார். அழகரும் ஆழ்வாரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு ஆழ்வாரை வேதத்தின் படியே நடக்க ஆசீர்வதித்தார்.
நம்மாழ்வார் இப்பெருமானைத் தான் கடைசியாகப் பாடிவிட்டு மோட்சத்திற்குச் சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.
அப்பக்குடத்தான் ஆழ்வாரின் கையைப் பிடித்து அவரை அழைத்துச் சென்றார். அதற்கு பிறகு நேரே “சூழ்விசும்பு அணி முகில்” என்று பரமபதத்தில் தனக்கு கிடைத்த நல்வரவேற்பை அனுபவித்து பாட ஆரம்பித்து விடுகிறார்.
சூழ்விசும்பு எனத்தொடங்கும் (10-9) தொகுதி, ஆழ்வாருக்குக் கிடைத்த நல்வரவேற்பைச் சொல்லுகிறது.
மேல் உலகத்தில் உள்ள எல்லோரும், “திருக்குடந்தை எம்பெருமானிடத்திலே குலங்குலங்களாக அடிமைப்பட்டவர்கள்” என்று சொல்லி ஆழ்வாரை ஆதரித்தார்கள். இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட (பரமபதத்திலும்) குடந்தை பெருமாளின் நினைவும் அனுபவமும் மறக்க முடியாதபடி இருந்தது என்று தெரிய வரும்.
இது ஆழ்வார்க்கு கிடைத்த வரவேற்பு என்றாலும், இது போல் தான் ஒவ்வொரு ஜீவாத்மாவும் முக்தி பெற்று பரமபதம் செல்லும் போது நடக்கும் என்பதை நாம் அறிய வேண்டும்.
ஆழ்வார் திருநகரி என்ற ஆழ்வார் அவதரித்த ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் சாற்றுமுறை விமர்சையாக நடக்கும். நம்மாழ்வார் விக்கிரகத்தை 24 போர்வைகளால் போர்த்தி பகவானுக்கு எதிரே கொண்டு வந்து நிறுத்துவார்கள். தூபதீபம் காட்டி ஒரு போர்வையை எடுப்பார்கள். இப்படியே தூபதீபம் காட்டி 24 போர்வைகளையும் எடுத்த பிறகு நம்மாழ்வார் விக்கிரகத்தை பெருமாளுக்கு முன் விழுந்து நமஸ்கரிப்பது போல படுக்க வைப்பார்கள். பிறகு தூபதீபம் காட்டி துளசிதளத்தால் அவர் விக்கிரகம் வெளியே தெரியாத அளவு மூடிவிட்டு கற்பூர தீபம் காட்டி நிறைவு செய்வார்கள்.
இருபத்தி நான்கு தத்துவங்களால் மூடப்பட்டிருந்த நம்மாழ்வார், ஒவ்வொரு தத்துவங்களையும் கடந்து இருபத்தி ஐந்தாவது தத்துவமாகிய ஜீவாத்மா தத்துவத்தை அடைந்து இருபத்தி ஆறாவது தத்துவமாகிய பரமாத்மாவோடு இணைந்து விட்டார் என்பதைக் குறிப்பதே அந்த உற்சவம். நம்முடைய விசிஷ்டாத்வைதத்தில் இந்த 26 தத்துவங்களும் சொல்லப்பட்டு உள்ளன. இதைப் போலவே மனிதர்களாகிய நாம் எல்லோரும் இந்த நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்தவே அந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.
ஆழ்வார் வைகுந்தம் அடைந்ததை தரிசித்த மக்கள் கதறி அழுகின்றனர். உலகில் உள்ளோர் எல்லோரும் பெருமாளிடம் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, அவ்வாறே பெருமாளும் விண்ணப்பத்தை ஏற்று அனுகிரகிக்க, நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித்தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார்.
மோட்சம் என்பதே மீட்சி இல்லா இடம் என்பதாகும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பாகவும், பிறகும் வைகுண்டத்துக்குச் சென்று திரும்பியவர் யாரும் இல்லை. கலியுகத்திற்கு முன்னால் உண்டோ ?தசரத சக்ரவர்த்தி, தன் பெயருக்கு ஏற்ப, தன்னுடைய தேரை பத்து திசைகளிலும் செலுத்தக் கூடிய திறமை பெற்றவர். நாம் சாதாரணமாக அறியும் கிழக்கு, மேற்கு போன்ற எட்டு திசைகளும், மேல் உலகம் நோக்கிய திசையும் கீழ் உலகம் உள்ள திசையும் மற்ற இரண்டு திசைகள் ஆகும். இந்த பத்து திசைகளிலும் தேரில் சென்று தேவர்களுக்கு போர்களில் உதவினார். இவருக்கு முன்னால், இவருடைய இஷ்வாகு குல வம்சத்தினர் பிரம்மாவின் உலகத்திற்கு சென்று வந்தனர். அவர்களில் ஒரு அரசர் பிரம்மாவின் ஆசீர்வாதத்தோடு அவர் ஆராதனை செய்த பெரிய பெருமாளை அயோத்திக்கு கொண்டு வந்ததாக குறிப்புகள் உள்ளன. அதேபோல் நசிகேதஸ் என்னும் சிறுவன் தன் தந்தையின் கோபத்திற்கும் சாபத்துக்கும் ஆளாகி எமப்பட்டிணம் சென்று எமனின் ஆசிகளோடு திரும்பி வந்ததாகவும் குறிப்புகள் உண்டு. இதனால் மேல்சொன்னவர்கள் பரமபதத்திற்கு சென்று திரும்பியவர்கள் என்று கொள்ளக்கூடாது. மேலே சொன்னது, கலியுகத்திற்கு முன்பு இந்த உலகத்தைதவிர மற்ற உலகங்களுக்கும் சென்ற வர முடிந்தது என்பதே.
நம் எல்லோருக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகள் தெரியும். வேதவியாசர், கிருஷ்ண த்வைபாயனர் என்று பெருமையுடன் அழைக்கப்படுவார். அவர், கடல்போல் கொட்டிக்கிடந்த வேதங்களை, நம்முடைய பயனுக்காக, ருக், யஜுர், சாம அதர்வண வேதங்கள் என்று நான்கு பகுதிகளாக பிரித்துக்கொடுத்தார். நூற்றுஇருபத்திஐந்து ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் என்ற இதிகாசத்தையும் நமக்கு கொடுத்தார். ஸ்ரீகிருஷ்ணனே எல்லாம் என்று வாழ்ந்தவர் நம்மாழ்வார் ஆவார். உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று வாழ்ந்தவர். அவரை கிருஷ்ண த்ருஷணா தத்துவம் என்றே பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
நம்மாழ்வார் என்றும் இங்கு உள்ளார் என்பதே பலரின் கருத்து. அவர் நமக்கு கொடுத்த அத்தனையும் மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும். அவரை பின் தொடர்ந்து செல்கின்ற மிக பெரிய கூட்டத்தினுள் நாமும் ஒருவராக இருந்து மோக்ஷம் அடைந்து பரமாத்மாவிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே நம் லட்சியமாக வேண்டும்.
இத்துடன், தற்காலிகமாக நாம் நம்மாழ்வாரை பற்றிய இந்த வலைப்பதிவினை நிறுத்திக்கொண்டு,கிருஷ்ணனையே தன் குழந்தையாகவே பார்த்த விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் பற்றிய சரித்திரத்தை அடுத்த பதிவினில் பார்ப்போம். அவரே தன்னுடைய மகளை திருஅரங்கனுக்கு மணம் முடித்துக்கொடுத்தவர்.
==================================================
We have seen a few notes about Swami Namazhwaar under different topics like His Glories, His Birth, With Madhurakavi Azhwaar, With Nathmunigal and with Sri Ranaganathan. There are two more interesting and important topics to be covered . One is his holy composition, under Divya Prabhandham. And the second topic is about the deities and their respective places, which are called Divya Desams, on whom he had composed hymns. Currently I think, I need more knowledge, exposure and experience before I can attempt on those and hence I defer those topics to the future. Meanwhile, we can now discuss about Azhwaar’s moksham or His Attaining the Eternal World.
Let us recall the following, which we had seen earlier. Azhwaar lived in this world only for 32 years. Out of which 16 years, he did not move and was under the tamarind tree in Azhwaar Thirunagari. More over, the deities from different temples or divya desams came to Azhwaar Thirunagari and visited the Azhwaar under the tree to get the hymns for themselves. And he did not move out of the tamarind tree for the whole 32 years.
Also please recall that Azhwaars were sent to this world to translate the Vedas into the Dravidian language, namely Tamil and also to preach the translated vedas to the people, in terms of teaching the glories of Paramathmaa, as specified in the Vedas. But all Azhwaars were immersed so much with the love and affection towards Paramathmaa and that love and affection made them beg the moksham with Paramathmaa. Paramathmaa was also extremely happy with the Azhwaars, and He gave away Moksham to them.
The first step towards Total Surrender (Saranaagathi) is to request for the same, from Paramathma. Azhwaar had composed hymns on the deities of 37 temples and they are part of the 108 Divya desams.
Of these 37 Divyadesams, Azhwaar had requested for total surrender (Moksham) with deities at Thirukudanthai, Thiruvengadam, Thiruvallavazh and Thiruseeravaramangai. In addition, Srirangam Namperumal, Thirumogur Apthan, Thirukurukur Polinthunindrapiraan, Thirumalirincholai Azhgar, Thirupernagar Appakkudathaan were also involved in the total surrender experience of Swami Namazhwaar. We have already seen this under the heading, the association with Srirangam Nam Perumal.
Namazhwaar had requested mukthi or moksham on five different occasions through his hymns to Paramathma and they are :
Of all these five surrender requests, the last one, namely, Agalahilen irayumendru, alone gave him the success. Our acharyaars used to point out that this request was successful, only because, Azhwaar had (invited) Thayaar or Piraati in his hymn, when he made the request. In the other requests, Azhwaar was referring only to Perumal. What we learn from here is that if our requests are to be successful, we need to go through Thyaar or Piraati.
There are some small differences in the fourth surrender request. The fourth alone was made to the Perumal in the Vibhava state, whereas all other hymns were addressed to the deities in Archai State. In the same way, all the other surrenders were purely requests for mukthi or moksham, whereas the fourth one alone was towards getting more strength to keep praising Him and His glories, even when Perumaal was away from Azhwaar.
Azhwaar realised that his end had come and he wanted to get himself prepared for the journey towards Paramapatham. So Azhwaar requested Kalamegha Perumal of Thirumogur to accompany him for the journey. In his hymns on Thirumogur, Azhwaar said that
The hymn that was composed by Azhwar to state that he reached out to Thirumogur Kalamega Perumal, who would support all those who approach Him, to obtain a place in the eternal world or moksham, is given below.
“Thaal thaamarai thada mani vayal thirumogur, naalum mevi nangu amarnthu, nindru asuraraith thagarkum, tholum nangudai suri kuzhal kamalakkan kanivaai, kalamegathaiyandri matrindrilam kathiye”.
In the temple of Thirumogur, the Moolvar is Kalamega Perumal and the Utsavar is Aptan.
People who like the aroma of the root, would take the root along with the soil. In the same way, the Paramathma, the chief deity in Thirumalirincholai, Azhgar, wanted to have the body of the extremely knowledgeable people along with their knowledge. So Thirumalirincholai Azhagar wanted to carry Namazhwaar along with his body. (10-7). But Azhwaar told Thirumalirincholai Azhagar what was told in the vedam or Body of Knowledge. He said to Azhgar that the vedam insisted that the body should be left over here in this world and only the soul or Jeevaathma should be carried forward or taken. On that premise, Azhwaar insisted that Azhagar should only take the soul or the Jeevathmaa of the Azhwaar and leave the body in this world. Azhagar appreciated the knowledge of Azhwaar and blessed him to go as per what is told in the vedas.
The last deity on whom Namazhwaar had composed the set of hymns in this world, was for Thirupernagar Appakkudaththaan. After completing the group of hymns on Thirupernagar, Azhwaar proceeded straight to Paramapatham.
In one of the hymns, he said that “pere uraikindra piraan, indru vanthu peren ena en nenju niraiya pugunthaan” (10-8-2), (meaning – The deity who resides in Thirupernagar, came to me today and entered into my heart and He said that He would not move out of Azhwaar). In another hymn, Azhwaar stated that Thiruperaan would give the Paramapatham, “Thiruperaan, thelithaagiya saenn visumbu tharuvaane”(10-8-4).
In 10-8-6, Azhwaar states that “Thiruper nagaran, Thirumaliruncholai poruppe uraikindra piraan, indru vanthu iruppen endru en nenju niraya puganthaan” – (meaning, the deities of such temples at Thiruper Nagar, Thirumalirincholai, came today and filled my heart fully, without giving space for anything else). Similarly in 10-8-8 Azhwaar says “kannil nindru agalaan” (He would not move away from my eyes), He was also keen to take him to Paramapatham, “Karuthin kaan periyan” and “mannathul pugunthaan serinthu indre” (Today He got into my mind predominantly). In the next hymn (10-8-9) Azhwaar states, “indru ennai porullaaki, thannai ennul vaithaan”, (Today Thiruper Nagar perumal made Azhwaar into an object and He moved Himself inside Azhwaar) and
finally in 10-8-10, Azhwaar confirmed “utren, uganthu pani seiya un paatham petren” (Got it, Happy to do service to Him, I got your sacred Lotus Feet). Appakkudaththaan held the hands of the Azhwaar and guided him. From the next hymn onward, Azhwaar started composing about Paramapatham “Soozh Vismbu Ani mugil” and the reception he got when he undertook the journey to Paramapatham or Moksham.
Azhwaar provided an account of the reception he received on his journey to Paramapatham or Srivaikuntham in the group of hymns under “Suzh Vismbu Ani Mugil” (10-9).
Even though Azhwaar stated his experience in this group of hymns about the reception he received on his way to Paramapatham, we should treat this as the potential experience for each and every Jeeathmaa who goes to Paramapatham.
The perumal temple in Azhwaar Thirunagari, the birthplace of Azhwaar, performs the Namazhwaar function in a very detailed manner every year. Before the start of the event, the metal statue (Vigragam) of Swami Namazhwaar would be covered with 24 small blankets and he would be brought in front of Polinthunindra Piraan. There would be an Arthi taken and one blanket would be removed from Azhwaar. Similarly each blanket would be removed after an Arthi. After removing all the 24 blankets, Azhwaar would be placed flat at the Lotus feet of Sri Polinthunindra Piraan, keeping his face on the feet of Sri Polinthunindra Piraan with the idol on the floor facing down. Then the priests would start covering the idol with Thulsi leaves and after covering the whole idol with Thulasi, the priests would take one more round of Arthi to complete the function.
The twenty four blankets stand for the twenty four out of the twenty six philosophies, in Vichishtathdvaitham. Each removal of the blanket indicates that Azhwaar had overcome each philosophy and finally when the 24th blanket is removed, it indicates that Azhwaar had overcome all the 24 philosophies. The 25th Philosophy is Jeevathma and the 26th philosophy is Paramathma. The whole function is to illustrate that Jeevathmaa of Namazhwaar reached the Paramathmaa and we all should get to that stage, which is the primary objective of the function.
After having the dharsan of Azhwaar reaching the paramapatham or Srivaikuntham, the people watching this function would start crying, as they realise that they do not have Azhwaar with them in this world. Then they will start praying to Sri Polinthunindra Piraan that they need Azhwaar to be back in this world, for them to get to Paramapatham. Then Perumal would also accept the request of the people and grant them Azhwaar back for them to be happy at the end of the function.
What is Paramapatham or Moksham ? It is a place where there is unlimited amount of happiness for unlimited amount of time and it is a road like an one-way street, where Jeevathmaas can enter, but would never get-out. In Kali Yugam, there is no Jeevathmaa, who visited Paramapatham and returned, before and after Swami Namazhwaar. Any one who could have that before Kaliyugam ?
According to his name, Dasaratha Chakravarthy, used to take his chariot in ten different directions to help the celestial good in their battles against the bad. In addition to the normal East, West, North, South, NE, SE, NW and SW, the other two directions are Up and Down, meaning that he could go to the planets available above the earth and the places available below the earth.
Before Dasaratha Chakravarthy, his forefathers in Ikshvaku Generation, also used to visit up and down. In one such visit, one of the kings, saw the periya perumal, who was Brahma’s daily prayer Deity. He requested Brahma to bless him with the perumal for his daily prayers in Ayodhya. He got periya perumal from Brahma, who is still today at Sri Rangam, as the presiding Deity.
Similarly there is a note about a boy Nachiketas who went to Yamadharman’s world and returned after getting the curse from his father.
All these do not mean that Jeevathmaas visited Paramapadham and returned before Kaliyugam. These are only to state that Jeevathmaas could travel beyond this world on the previous yugams.
We all know about the glories of Sri Krishna Paramathmaa. Veda Vyaasar is called Krishna Dwaipayanar. Veda Vyaasar segregated the vedas into four important parts like, Rig, Yajur, Atharvana and Saama for the benefit of people like us. He had also written the famous Mahabharatham, the epic with 125000 slokas. Namazhwaar lived as though Lord Krishna is everything, (Unnum Soru, Parugum Neer and Thinnum Vetrilai ellam Kannane – meaning, “All is Lord Krishna, whether it is the rice that is eaten, the water that is drunk and the betel that is chewed” ) and he is called as “Krishna – Thrishna Philosophy“. The word Thrishna means deep love and affection.
It is generally believed that Azhwaar, who came back because of Paramathmaa, is always with us. We should praise all the good work done by Swami Namazhwaar and we should be part of his large group of followers who wish to get to Paramapatham with his blessings.
With this, let us temporarily hold our discussions on Sri Namazhwaar and move on to the next weblog, where we will discuss about Sri Periyazhwaar or Vishnu Chitthar, who had assumed Sri Krishna to be his child and also who got his daughter married to Sri Rangan.
தங்களால் விரிவாக நம்மாழ்வார் வைபவம் அறிந்த பெரும் பேறு பெற்றேன் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி. தங்களின் கருத்துகள் அடியேனுக்கு பெரிதும் ஊக்கம் அளிப்பதுடன் இன்னும் நன்றாக செய்ய காரணமாக உள்ளது. மீண்டும் நன்றிகள் அடியேன்