A Simple Devotee's Views
For English version, please click here, thanks
ஆழ்வார்கள் பாடிய பெருமாள் இருந்து அருள் பாலிக்கும் ஸ்தலங்கள் திவ்ய தேசங்கள் எனப்படும். அவை 108 என்றும் அவற்றில் திருபாற்கடலும், பரமபதம் என்ற ஸ்ரீவைகுந்தமும் இப்பூவுலகில் இல்லை என்றும் மற்ற 106 திவ்ய தேசங்களும் நாம் இந்த சரீரத்தோடு தரிசிக்கலாம் என்றும் பார்த்தோம். திவ்ய தேசங்களுக்குள்ளும், விக்கிரகங்களுக்குள்ளும் வேறுபாடு கூடாது என்றும், அப்படி பார்த்தால் அது பகவத் அபசாரம் என்றும் நினைவில் கொள்க.
இருந்தாலும், நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பலமுறை, ஒரு சில திவ்ய தேச மூர்த்திகளுடன் அதிகமாக ஈடுபட்டு இருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவைகளில் சில, திருஅரங்கம், திருப்பதி மற்றும் காஞ்சி தேவப்பெருமாள். ஆழ்வார்களால் பாடப்படாவிட்டாலும், மேல்கோட் என்ற திருநாரயணபுரமும் அந்த மூன்றுடன் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. இவைகளின் பெருமையாக ஸ்வாமி ராமானுஜர் இயற்றிய ”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம், ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம், ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்”. என்ற ஸ்லோகம் சான்று. ஸயனகோலத்தில் இருக்கும் ரங்கனாதன்வாழும் திருவரங்கம் ”போகமண்டபம் என்றும் நின்றசேவையாய் திருமலையில்”புஷ்ப மண்டபமாகவும்”, காஞ்சியில் “தியாகமண்டபமாகவும்”, திருநாரணபுரத்தில் பெருமாள் ”ஞானமண்டபமாகவும்” காட்சி அளிக்கிறார்.
இதில் முதல் மூன்று அர்ச்சா மூர்த்திக்களுக்குள்ளும் ஒரு அதிசயமான ஒற்றுமை கூறப்படுகிறது. அந்த அதிசயமானது, அந்த மூர்த்திகள் தன் அர்ச்சையில் இருந்து வந்து சாமானிய மனிதர்களிடம் பேசியதுதான். அதேபோல் நான்காவது மூர்த்தியான இராமப்ப்ரியன், ஸ்வாமி இராமானுசரின் சொல் கேட்டு, நடந்து வந்து, அவரின் செல்லபிள்ளையாக அவரிடம் வந்து சேர்ந்தார்.
இந்த வலைப்பதிவில் அந்த மூர்த்திகள் யார் யாரிடம் என்ன பேசினார் என்பதை காண்போம்.
தொண்டமான் சக்ரவர்த்தி என்பவர் திருப்பதி வேங்கடாசலபதிக்கு மிகவும் பக்தி உடையவராகவும், சில நூறு வருடங்களுக்கு முன் திருப்பதியும் சேர்த்து தொண்டைநாட்டை ஆண்டு வந்தார். அவர் திருப்பதி கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள், இரண்டு கோபுரங்கள், யாகசாலை, மடப்பள்ளி, கோசாலை மற்றும் கற்பகிரகம் எல்லாம் படிப்படியாக செய்து கொடுத்தவர். மேலும் பல பொன்னும் மணியும் கொடுத்தவர். அவரின் பக்தி மேலீட்டால் வெங்கடாசலபதி தொண்டைமானுடன் பேசுவார். அப்படி பேசிய இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.
வெங்கடேச பெருமாளின் மேல் இருந்த பக்தியால், நாட்டை, மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள், எதிரி நாட்டு மன்னன் போர் தொடுத்து வருவதால், தொண்டைமான் சக்ரவர்த்தியின் நாட்டுக்கு ஆபத்து வருவதாகவும், அவனை திரும்பிச் செல்லுமாறும் மன்னனுக்கு கூறுகிறார். அதற்கு மன்னன், சீனிவாச பெருமாளின் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை கேட்க பெருமாளும் சங்கு சக்கரங்களைக் கொடுத்து, தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார்.
அந்த சங்கு சக்கரங்கள், இன்றும் செங்கல்பட்டு அருகில் உள்ள திருமுக்கூடல் என்ற அப்பன் வெங்கடேச சுவாமி கோவிலில் உள்ளதாகவும், அவை தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
அதேபோல், இது நடந்து முடிந்தபின், திருப்தி வெங்கடேச பெருமாளுக்கு, சங்கு சக்கரங்கள் இடைப்பட்ட காலத்தில் இல்லாததால், சைவர்கள், பெருமாளை சிவன் என்று வாதிட, இராமானுஜர், திருமலை அப்பனுக்கு, சங்கு, ஆழி கொடுத்து பரம்பொருள் என்றும், பெருமாள் என்றும் நிலை நாட்டினார் என்பதும் இன்னொரு வரலாறு.
இப்போதும் நாம் திருமலைக்கு நடந்து போகும் போது, பக்த ஆஞ்சநேயர் சிலையை தாண்டியவுடன் உள்ள சிதைந்துள்ள மண்டபம் கும்மர மண்டபம். அதற்கு, குயவன் மண்டபம் என்று பொருள்.
தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீநிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்களைத் தயார் செய்து அனுப்புவான். தினமும் மீதி இருக்கும் மண்ணில், மண் புஷ்பம் செய்து, தான் மண்ணால் செய்து தன் குடிசையில் உள்ள திருமலையப்பனுக்கு சமர்ப்பித்து வந்தான். திருமலையப்பனும் அவன் கொடுத்த புஷ்பத்தை உகந்து தன் தலையில் சூட்டிக் கொண்டான். அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் உள்ள திருமலையப்பரின் தலையில் மண் புஷ்பமாக காணப்பட்டன.
அந்த சமயம் அந்த ஊரை ஆண்டு வந்த தொண்டமான் சக்ரவர்த்தி தினமும் திருமையப்பனை தரிசனம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டிருந்தான். சில நாட்களாக திருமலையப்பரிடம், அவரின் தலையில் மண் புஷ்பத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, அதை யார் சூட்டுகிறார்கள் என்று கண்டுபிடிக்க தொடங்கினான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. குயவன், பெருமாளிடம், தான் தான் புஷ்பம் சூட்டுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம், தான் செய்வது சாதாரண தொண்டு, ஒரு புஷ்பம் கைங்கர்யம் யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி. அப்படி தாங்கள் தெரியப் படுத்த வேண்டும் என்றால் தனக்கு முக்தி கொடுத்த பின் தெரிவித்தால் நலம்” என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு இருந்தான் இந்த குயவன்.
தொண்டமான் தன் சந்தேகத்தை திருமலைஅப்பனிடமே கேட்டு விட்டான். “ஸ்வாமி, தங்கள் சிரசிலே புதிதாக மண் புஷ்பம் காணப்படுகிறதே? அதுவும் அழகாகத் தெரிகிறதே? எனக்குத் தெரியாமல் தங்களுக்கு அணிவிப்பது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”. அதற்கு பெருமாள், “அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான். அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்லகூடாது, நாளை வா சொல்கிறேன்” என்றார்.
திருமலையப்பனும் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார். பெருமாள் அந்த குயவனிடம் கொண்ட அதீத அன்பின் அடையாளமாக அவனின் எதையும் எதிர்பார்க்காத சேவையை பற்றியும், அழகான மண் மலர்களைப் பற்றியும் அரசனிடம் கூறினார். அந்த மண் மலர்கள் மற்ற எல்லா மலர்களையும் விட வாசனையாகவும் அன்புடன் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சொன்னார். எல்லா மலர்களையும் என்று சொன்னது அரசன் சமர்ப்பிய தங்க மலர்களையும் சேர்த்துத்தான். தொண்டமான் சக்ரவர்த்தி உடனே சென்று குயவனை பார்க்க சென்றான். பெருமாளின் திருவுள்ளப்படி, குயவன் முக்தி அடைகிறான். தொண்டமான் சக்ரவர்த்தி, குயவன் நிலையைப் பார்த்ததும், அப்படியே உருகி, வசதிகள் இல்லாவிட்டாலும், ஏழை ஆனாலும், பெருமாளுக்கு தொண்டு செய்யலாம் என்றும், இப்படியெல்லாம் கூட பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் குயவனைப்பற்றி, ஊர் முழுதும்அறியும்படி செய்தான்.
இத்துடன், தொண்டமான் சக்ரவர்த்தியும், வெங்கடேச பெருமாளும் பேசிய நிகழ்வுகள் முடிந்தன. நாம் மேலும் பார்க்க வேண்டியவை, அரங்கனை பற்றியும், தேவபெருமாளை பற்றியும் தான். அவற்றை இன்னொரு வலைப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு சிறிய சுவாரஸ்யமான தகவலுடன், குயவனுக்கு ஏன் குரும்பருத்த நம்பி என்று பெயர், என்பதை சொல்லி இந்த வலைப்பதிவை நிறைவு செய்கிறேன்.
ராமானுஜ நூற்று அந்தாதியில் ஒரு பாசுரம், (7)
“மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம், குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் …..” என்று மூன்று குறும்புகளை குறிப்பிடுவார்கள். கல்வி, பணம், அழகு மூன்றும் ஒருவருக்குத் “தான்” என்ற பெருமையை அதிகப்படுத்தி அவரை ஆணவத்தின் பக்கம் செலுத்தக் கூடும். அந்த மூன்றையும் தாண்டி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் கூரத்தாழ்வான் என்பதும் அழகு, கல்வி, எல்லா சொத்துக்களையும் உதறி விட்டு, சுவாமி ராமானுஜருடன் நம் சம்பிரதாயதிற்கு சேவை செய்ய வந்தவர் என்பதையும் சொன்னது மேற்சொன்ன பாசுரம். அத்துடன் நான்காவது ஒன்றும் உள்ளது, அது குலப்பெருமை. இந்த குயவன் ஏழை; படிப்பறிவு, அழகு மற்றும் குலப்பெருமையும் இல்லாதவன், இருந்தும், அவன் பெருமாளுக்கு சேவை செய்து அவரிடம் இருந்து மோக்ஷமும் பெற முடிந்தது.
கூரத்தாழ்வானிடம் எல்லாம் இருந்தும், அவற்றைத் துறந்து அவர் மோட்சம் பெற்றார், இந்த குயவனிடம் இவை ஒன்றும் இல்லை, இருந்தும் பெருமாளிடம் கொண்ட பக்தியால் மோட்ஷம் பெற்றான், இதனால், அவனை குரும்பருத்த நம்பி என்று கூறுகிறார்கள்.
இனி நாம் பார்க்க வேண்டியவை,
அதேபோல், நாம் பகவானின் எண்ணரிய குணவிஷேசங்களில் சிலவற்றையும் இங்கே காணலாம்.
===================================================================
The places or the towns of the deities on whom the Azhwaars have composed the hymns are called Divya Desams. There are 108 Divya Desams of which Thirupaarkadal and Paramapadam or Sri Vaikundam are not part of this world. So we should be able to have dharsan of the remaining 106 divyadesams with this body. Please note that we have also seen that we should not discriminate between the deities or perumals of different temples, or perumals of different divya desams. If we fail to follow this, then it could be seen as Bhagawath Apacharam or Disrespect to Paramathma.
In spite of the above, our Azhwaars and Acharyars had repeatedly referred or engaged with a few Deities like Srirangam, Thirupathi and Kanchi Deva Perumal. Even though there is no direct Azhwaar hymn on Melkot, alias, Thiru Narayanapuram, it is also to be taken along with the other three mentioned above. To substantiate this, we can take the sloka, written by Swami Ramanujar, “Sri Ranga Mangala Nidhim Karunaa Nivaasam, Sri Vengadaadri sikaraalaya Kaalamegam, Sri Hasthisaila sikarojvala Paarijaatham, Srisam Namaami Sirasaa Yathu Saila Deepam ” – meaning “I bow unto the abode of mercy, the auspicious jewel of Srirangam, Sri Ranganatha, the dark rain-laden cloud of Daya on the top of the Hill known as Vengadaadri Sri Venkatesa, the wish-granting Paarijaatham tree shining on the top of the Hasthi Sailam, (Kanchi) Varadharaaja or Devapperumaal and to Sri Thirunarayanan of Melkote, who illuminates the world as the lamp on the top of Yathusailam. Thiruarangam is called “Boga Mandapam”, Thirupathi is called “Pushpa Manadapam”, Kanchi is called “Thyaga Mandapam” and Thiru Narayanapuram is called “Gnana Mandapam”.
The first three deities have something in common, that is, they had come out of their Archai or Vikragam or statue and spoken to common man. The fourth one, the vikragam or the statue in Thirunarayanapuram, namely the Ramapriyan, had listened to the words of Swami Ramanuja and walked towards him. He sat on Swami Ramanuja’s lap as his “favorite child” (Chella Pillai).
In this weblog we will try to bring out what are the occasions in which the three perumaals had spoken to the individuals or their ardent devotees.
Thondaman Chakravarthy was a King a few hundred years ago, in a place called Thondainadu, which included Thirupathi. Thondaman Chakravarthy was a staunch devotee and a close follower of Lord Sri Venkatesa in Thirupathi. He had donated gold, gemstones and lot of money to construct the temple, its walkways surrounding the main deity’s holy place, the housing area for the cows, the kitchen for the temple and the place where priests can do special poojas. The King used to speak to Lord and by the mercy of LORD. We give below a couple of incidents involving his interactions with Lord Venkatesa.
Due to his overwhelming affection towards Lord Venkatesa, King Thondaman Chakravarthy handed over the kingdom to his son and he was living in Thirupathi to have his dharsan all the time. One day, Perumaal spoke to him and asked him to go back to his kingdom, as enemies were planning to attack his country and he needed to be there to support his son so that they can protect their citizens. Thondaman chakravarthy did not want to leave Thirupathi or Lord Venkatesa, but perumal insisted that he go. Then Thondaman chakravarthy politely requested Lord Venkatesa to help him with His Conch and Discus in the war. Being his great devotee, Lord Venkatesa handed over His Conch and Discus to the king and promised that they would help him in the war with the enemies. King and his son won the battle and the Chakravarthy returned to Thirupathi. But he forgot to bring the Conch and Discus and left them back in Thondainaadu.
Even today these, Conch and Discus, can be seen in a temple called Thiru Mukoodal near Chengalpattu. It would also be very visible in the temple that the Conch and the Discus were installed separately after the inception of the chief deity and the temple.
In the same way, when Lord Venkatesa did not have the Conch and the Discus, after the above incident involving Thondamaan Chakravarthy, the Saivaites, (those who follow Siva), argued that the God in the temple belonged to them and He was only Siva, as He did not have the Conch and Discus, which are the essential or primary identification marks for Lord Venkatesa or Sri Mahavishnu. Swami Ramanuja made the Saivites accept that the deity was Vishnu and Venkatesa, as He took the Conch and Discus left by Swami Ramanuja. That is why Swami Ramanuja is called “appanuku sangu azhi koduthavan”, meaning that “conch and discus were given to Him by Swami”.
When we go to Thirumalai, by walking, we come across the big Baktha Anjeneya Statue, near Alipiri. After the Anjeneya Statue, there is a small broken/mutilated hall,called Kummara Mandapam, meaning that this is a Kuyavan Mandapam or the Potter Hall.
When Thondaman Chakravarthy was ruling, there was a potter by name Kurava Nambi, making and supplying necessary clay pots for the kitchen in Thirumala for Lord Srinivasa / Venkatesa. At the end of each day, after finishing his job, using the left over clay, he made clay flowers and offered them to the Venkatesa Perumal at his house, which was also made by him in clay. Thirumalaiappan / Srinivasa perumal / Venkatesan perumal was happy to accept the clay flowers, which were offered to him with full respect and love by the poor potter. Such offered clay flowers started appearing on His head at the Thirumala Temple.
Thondaman Chakravarthy had been visiting the temple on a daily basis and he found the clay flower on His head for the last few days. He was surprised and he wanted to find out who was offering such beautiful clay flowers. But he could not find it. The potter had earlier made a request to Thirumalaiappan that he was doing only a small offering like clay flowers and he did not want him to be made known to others. And if Swami, still wanted to disclose the potter to anyone, he requested Lord Venkatesa to give him Moksham first (the eternal world) before letting others know about the potter.
Since Thondaman Chakravarthy could not find out, who was offering the clay flowers, he decided to check with Lord Venkatesa directly. He politely asked Lord Venkatesa about the beautiful clay flowers that were appearing on His head. Lord Venkatesa told him that it was one of the devotees who offered Him these flowers on a daily basis. The king requested that he wanted to know who was offering those flowers. Lord Venkatesa replied that the devotee had made a request earlier, that his identity would not be revealed to others by Him. In any case, Lord Srinivasa asked the king to come next day to find out more.
Lord Thirumalaiappan decided to give moksham to the potter and He decided to let the King know about the potter. Lord out of abundant mercy spoke to the King about the poor potter, his dear devoted service to Him in offering the beautifully crafted mud flowers, without expecting anything in return. The LORD said that the mud flowers offered by Nambi contained rich fragrance of love and affection than the other flowers offered to Him, including the golden flowers that were offered by the King Thondaman Chakravarthy. The king immediately went to see the potter. But by the time the king arrived, the potter had already left this world and on seeing his conditions, the king was totally moved. He made it known to the world that even if people are poor, and even if they did not have much facilities, they could still do and offer wonderful services to God. It was Thondaman Chakravarthy who made the potter known to the kingdom as a great devotee of Lord Thirumalaiappan.
With this, the episode of Lord Thirupathi Venkatesa speaking to the King, Thondaman Chakravarthy is over. We will continue on what Srirangam Ranganathan spoke to Thiruvillakku pitchan and what Devapperumal of Kancheepuram spoken to Thirukkachi Nambi later in another weblog.
We will complete this weblog with a short interesting piece of information on why the potter has got the name Kurumbarutha Nambi.
The hymn 7 (Pasuram 7) of Ramanuja Nootru Anthathi, starts like “mozhiyai kadakkum perum puhazhaan, vanja mukkurumbaam, kuzhiyai kaddakkum nam KoorthAzhwaan charan koodiya pin….”. This talks about the potential 3 mischiefs which could get into ourselves. These three factors are, Education, Wealth and Beauty. While any one of these factors, could increase our pride and make us do wrong things, this hymn talks about KoorthAzhwaan, who had possessed all the three elements, had overcome all the three, namely, education, handsomeness and wealth to serve the society along with Swami Ramanujar. Apart from these three, there is one more which could make us feel more proud and that is the caste or tribe from where we come from by birth. Taking the clue from the Mukurumbu in this hymn, the potter can be called Kurumbarutha nambi, (Meaning that he had dissociated from all the four mischief) mainly because, he had also no education, no wealth, no beauty and he did not come from a so-called high-end caste, but he could still offer his service to Lord and got the moksham without having to worry about any of these.
Koorthazhwaan had all, and he gave up on all and obtained motsham, whereas this potter did not have any, but he also got motsham, due to his deep love and affection towards Perumaal. Since both of them did not have any of the above to get the motsham, both can have the title “kurumbu aruthavar”.
With this, we need to move on to see the other two incidents, namely,
In addition, we can also start looking a few of His glories, which are countless.
==================================================================