Thiruaranganudan/திருஅரங்கனுடன்

For English version, please click here, thanks

நம்மாழ்வார் மிகவும் உகந்த பெருமாள் நம் அரங்கனே!  நம்மாழ்வாரும் அரங்கனும் சேர்ந்து வருகிற சில காட்சிகளை இங்கு காண்போம்.  நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்ன வென்றால், நம்மாழ்வார் முப்பத்திரண்டு வருடங்கள் தான் இப்பூவுலகில் இருந்தார், அதுவும் ஆழ்வார் திருநகரிலேயே புளிய மரத்தடியில்தான் வாழ்ந்தார். இந்த வலைப்பதிவில் ஆழ்வார் என்று சொல்வது எல்லாம் அவரது விக்கிரகமே.

மணவாளன்

திருவரங்கனைத் தன் மணாளனாக வரித்து, தானே அரங்கனின் நாயகியாகிப் பாடிய பாசுரங்கள் அநேகம். அவற்றில், அரங்கனையே நினைத்து உருகும் தன் மகளின் நிலையைக் கண்டு கண்ணீர் உகுத்து, அரங்கனிடம் ‘நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று நாயகியின் தாயார் கேட்கும் பாசுரம் “கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்” எனத் தொடங்கும் பத்து பாசுரங்கள்.

ஆயிரமும் அரங்கனுக்கே

பட்டர் என்னும் ஆசார்யர், நம்மாழ்வாரின்  திருவாய்மொழி ஆயிரம் பாடல்கள் அனைத்துமே  திருஅரங்கனுக்காகவே அருளிச்செய்தவை என்று கூறுகிறார்.

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன்” .

திருவத்யயனம்

ஸ்ரீபாஞ்சராத்ரம் எனும் ஆகமமானது, மார்கழி வளர்பிறை(சுக்லபக்ஷம்) ஏகாதசி(வைகுண்ட ஏகாதசி) திதியில் இருந்து, பகவானின் ஸந்நிதியில் வடமொழி வேதம் ஓதத் தொடங்கி, தேய்பிறை பஞ்சமி நாளில் பத்து நாட்கள், பூர்த்தி செய்து, இந்த உத்ஸவத்தைக் கொண்டாடச் சொல்கிறது.  இதற்கு ’மோக்ஷ உத்ஸவம்’ என்று பெயர்.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தன் பிறந்தநாளில், (கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில்) தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் அனுபவித்துப் பாட, கிறங்கிப்போன அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று அன்போடு வினவ, ஆழ்வார் அதற்கு, ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன் தமிழ்மறையான திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்” என வேண்டினார். அரங்கன் மகிழ்வுடன் இணங்கினான். அன்று முதல் இந்த உத்ஸவமானது தமிழ்மறை உத்ஸவமாக மாறி, படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்ற பல சிறப்பு அம்சங்களைச் சேர்த்து பிரமாண்ட விழாவாகவே நாதமுனிகள், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், மாற்றி அமைத்தனர்.

இந்த உத்ஸ்தவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்விப்பர்.  இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  இதுவே ’அத்யயனத் திருவிழா’ என்றும்  ‘திருவத்யயனம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அனத்யயன காலம்

நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரியில் இருந்து புறப்படும் நாள் முதல், அவர் திருவத்யயனம் முடிந்து ஆழ்வார்திருநகரி திரும்பும் வரை உள்ள நாட்களை அனத்யயன காலம் என்றும் கோவில்களிலும் வீடுகளிலும் திவ்யப்ரபந்தங்களை ஆழ்வாருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் சேவிக்க மாட்டார்கள்.   பெருமாள், ஆழ்வாருக்காகவே காத்திருந்து செவி சாய்த்தால், நாமும்   காத்திருப்போம். பொதுவாக ஒவ்வொரு வருடமும்கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் (திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்திரம்) தொடங்கி தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் (கூரத்தாழ்வான் திரு நட்சத்திரம்) வரை  இந்த அனத்யயன காலம்இருக்கும்.    கோவில்களில் காலையில் திருப்பள்ளியெழுச்சி மட்டும் எல்லா நாட்களும்சொல்லுவார்கள்.   மார்கழி மாதத்தில் காலையில் விரதம் இருக்கும் போது மட்டும் திருப்பாவை சொல்லுவார்கள்.  மற்ற எந்த நேரத்திலும், எந்த திவ்ய பிரபந்தங்களும் அனத்யயன காலத்தில் சேவிக்க மாட்டார்கள்.

பகல் பத்து

வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாட்கள் பகல் பத்து என்று  கொண்டாடப்படும்.  அப்போது நம்மாழ்வார் தவிர மற்ற ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களை பெருமாள் முன் சேவிப்பார்கள்.  பகல் பத்தின் பத்தாவது நாள் இரவு பெருமாளுக்கு மோகினி அலங்காரம் நடக்கும்.  அடுத்த நாள் விடியற்காலை வைகுண்ட ஏகாதசி.

வைகுண்ட ஏகாதசி

மனிதப் பிறவியின் பயனே, மறுமையில் மோட்சம் அடைவதுதான் என்ற தத்துவத்தின் ஒத்திகை வைகுண்ட ஏகாதசி நாளில் நடைபெறுகிறது.  வைணவ பக்தன்  எவ்விதம் வைகுந்தம் அடைகிறான் என்பது நம்பெருமாளாலேயே ஒவ்வொரு  ஆண்டும் நடத்திகாட்டப் படுகிறது.

நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விரஜாநதி மண்டபம்  வரை போர்வை சாற்றிக்கொண்டு புறப்பட்டு வந்து, சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்வார். வைகுண்டவாசல் திறக்கப்படும் முன்பு, போர்வை களையப்பட்டு நம்பெருமாள் அலங்காரங்கள் பளிச்சிட பிரகாசமாக ஸேவை தந்தருள்வார்.  நம்மாழ்வார் மற்றும் உள்ள ஆழ்வார்களும் ஆச்சர்யார்களும் வைகுண்ட வாசலுக்கு எதிர்புறம் இருந்து, வைகுண்ட வாசல் திறந்ததும், பெருமாளை அல்லது மோட்ஷத்திற்கு வரும் ஜீவாத்மாவை (முக்த்தாத்மாவை) வரவேற்பார்கள்.  விரஜா நதியில் நீராடிவிட்டுதான் வைகுந்தத்திற்குள் செல்ல வேண்டும்.   இங்கு சந்திர புஷ்கரணி தான் விரஜா நதி.   போர்வை தான் சரீரம்.வைகுண்ட வாசல் தாண்டி செல்வதுதான் வைகுந்ததிற்குள் நம் சரீரத்தை களைந்து அவனிடம் சேர்வது.

பரந்தாமனே தன் பக்தர்களுக்காக இதை நடத்திக்காட்டுவது, நம்மை அவனிடத்தே அதிக பந்தப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது!

அரங்கன் திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் புடைசூழ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாடல்களை அரையர்கள் அபிநயிக்கக் கேட்டும் கண்டும் இன்புறுவார்.   இங்குதான் திருக்கைத்தல ஸேவை, நம்மாழ்வார் மோட்சம் போன்ற வைபவங்கள் நடந்தேறுகின்றன.   திரு மாமணி மண்டபத்தில் திரு வந்திக்காப்பு நடைபெறும். இந்த மண்டபத்தில் வேதவிண்ணப்பங்கள் நடைபெறும்.

இராப்பத்து ஏழாம் நாள்

நம்மாழ்வார்,  நாச்சியார் திருக்கோலம் (நம்மாழ்வார் மோகினி அலங்காரம் என்று பெயர்)  கொண்டு ‘பராங்குச நாயகி’யாக, இறைவனிடம்  வேண்ட, அரங்கன் அர்ச்சகர்களின் கைத்தலங்களில் எழுந்தருளி நம்மாழ்வாரைக் கடாக்ஷிக்கிறார்.  திருக்கைத்தல ஸேவையின் போது அரங்கன் அதிக அலங்காரமில்லாமல் அடுக்கடுக்காக சில பீதாம்பரங்களை மட்டும் சாற்றிக்கொண்டு காட்சி தருவார்.  ஒவ்வொரு  திருநாளன்றும், நம்பெருமாள் ரங்கநாச்சியார் ஸந்நிதி அடைந்து, அங்கு தாயார் முன் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, பிறகு ஆஸ்தானம் திரும்புவது வழக்கம்.  ஆனால் இந்த ஒரு திருநாளில் மட்டும், இதற்கு விதிவிலக்கு.   ஆழ்வார் மீது உள்ள அளவற்ற காதலால், பராங்குசநாயகியாகக் காத்திருக்கும் நம்மாழ்வாருக்காக, தன் நாச்சியாரையும் மறந்து இங்கு எழுந்தருளுவது அவனது சௌலப்யத்தின் (சௌலப்யம் என்பது இறைவனின் எளிமை நிலையைக் குறிப்பது) எல்லை!

இராப்பத்து பத்தாம் நாள்

இந்தத் திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார். இராப்பத்துத் திருநாளில் (கடைசி நாளில்)   ஒவ்வொரு  ஆண்டும்,  நம்மாழ்வார் எப்படி மோட்சத்தை அடைந்தார் என்று  நடத்திகாட்டப் படுகிறது.

அன்று நம்மாழ்வார் பரமபதவாசலுக்குச் செல்லும் வழியில் முக்தன் வேடத்தில் இருப்பார்.கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல் வெள்ளையாடை உடுத்தி, பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சி அளிப்பார்.

11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங்களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணிமுகில்’ (10-9-1) எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக்கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். இந்த பத்து பாசுரங்களில் நம்மாழ்வார் மோட்சத்திற்கு  செல்லும் வழியில் என்ன நடக்கிறது என்றும், யார் யார் வந்து எதிர்கொள்ளுகிறார்கள் என்றும் சொல்லுகிறார். அப்போது, ‘முனியே..!  நான்முகனே..’ (10-10-1) என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.  நம்மாழ்வார் நம்பெருமாளுடன் கலந்து மோட்சத்தை அடையும் நிகழ்ச்சி இப்படி  நடத்திக் காட்டப்படுகிறது.

அவாவறச் சூழ்அரியை அயனை அரனை அலற்றி, அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன, அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும், முடிந்த அவாவிலந்தாதியிப் பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே..!’  (10-10-11)

என்று உணர்வெல்லாம் ஒன்று திரட்டி திருவாய்மொழியின் கடைசி பாசுரத்தை, அரையர்கள் தாளத்தோடு பாடுவார்கள். ரங்கன் தான் சாற்றிக் கொண்டிருந்த  மாலையைக் களைந்து ஆழ்வாருக்குச் சாற்றி,  தன் நெற்றியில் இருந்து கஸ்தூரியை, ஆழ்வாரின் நெற்றியில் திலகமிட்டு தன் பெருவீட்டுக்கு அந்தாதி பாடிய ஆழ்வாரை அனுப்புவார். இதன்மூலம், பரமபதத்துக்கு சென்ற முக்தனுக்கு பகவான் அருள்புரிவது காட்டப்படுகிறது.

பங்குனி உத்திரம்

திரு அரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் ஆழ்வாரின் பங்கு மிகப் பெரியது. பெருமாள், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுக்கும் போது, நம்மாழ்வார் தான் வந்து சமரசம் செய்து வைப்பார். பிராட்டியாரும் நம் பெரியன் சொல்படி கேட்டோம் என்று ஆழ்வாருக்கு உயர்ந்த மரியாதையை தருவார்.   ‘நம் பெரியன்’ என்று சொன்னதால் நம்மாழ்வார் என்ற பெயர் தாயார் கொடுத்ததாக கொள்ளலாம்.

சடகோபர் அந்தாதி  

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட ராமாயணத்தை, கம்பர் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது,‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடின நம் ஆழ்வானை பாடினாயோ?‘ என்று பெருமாள் கேட்டாராம்.  இப்படி கேட்டதால்,  நம் ஆழ்வார்  என்ற பெயர் கொடுத்தது  திரு அரங்கன் என்றும்  கொள்ளலாம்.   கம்பர் சடகோபர் அந்தாதி என்ற நூறு பாடல்கள் உள்ள தொகுப்பையும் பிறகு எழுது திரு அரங்கன் முன் சமர்ப்பித்தார்.

மலைநாட்டு பயணத்தின்போது

தென் இந்தியாவின் மீது முதல் முதலில் படையெடுத்து வந்தவன் மாலிக் காபூர் (1311-13) இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் உலுக்கன் எனப்பெயர் கொண்ட முகமது பின் துக்ளக். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாச்சாரியார் என்ற ஆச்சர்யார் மூலம் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது

இடைப்பட்ட காலத்தில்அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரை சென்றார். பிறகு அங்கிருந்து பாதுகாப்பு கருதி கோழிகோடு சென்றார்.   அப்போது தெற்கில் இருந்து நம்மாழ்வாரும் மற்றும் சில திவ்ய தேச பெருமான்களும் கோழிகோடுக்கு எடுத்து செல்லப் பட்டனர்.  இன்றும் அந்த பகுதி கோவிந்தபுரம் என்று உள்ளது. நம்பெருமான் தன திவ்ய சிம்மாசனமான வட்ட மனையும், முத்து சட்டையையும் நம்மாழ்வாருக்கு பிரசாதித்து அருளினார்.   ஆழ்வாரும் நம்பெருமாளும் ஒரே சிம்மாசனத்தில் ஒரு வருட காலம் திருக்கணாம்பியில் (தேனை கிடங்கை) எழுந்தருளி இருந்தனர்.  ஒருமுறை ஆழ்வாரும் ரங்கனும் படகில் பயணித்தபோது ஆழ்வார் தவறாக ஆற்றில் மூழ்க அவரை கருடாழ்வார் துணை கொண்டு ஆழ்வாரை மீட்டனர்.   பிறகு அரங்கன் ஆழ்வாரை அவருடைய பாதுகாப்பு கருதி, அவரது ஆஸ்தானத்திற்கு செல்ல கட்டளையிட்டான்.   பிறகு நம்பெருமாள் மட்டும் மேல்கோட் சென்றார்.

நம்பெருமாள் மேல்கோட் சென்ற பொது, நம்மாழ்வார் தெற்கு நோக்கி பயணிக்க அப்போது கள்வர்கள்  தொந்தரவால் ஒரு செங்குத்தான மலையில் பலகையின் மூலம் ஆழ்வாரை அவரது அபிமானிகள், கீழே இறக்கிவிட்டார்கள்.  கள்வர் பயம் சென்ற பிறகு ஆழ்வாரை மேலே எடுக்க முடியவில்லை.

தோழப்பர் என்ற ஆழ்வார் அபிமானி அவரை தேட முந்திருப்பு அல்லது முந்திரி கிராமம் என்ற ஊரில் இருந்து சில தொண்டர்களை அழைத்து சென்றார்.     உச்சியில் இருந்து பலகைகளில் சங்கலி கட்டி தோழப்பரை கீழே இறக்கினார்கள்.   ஆழ்வாரை காப்பாற்றிய தோழப்பரை மற்றவர்களால் காப்பாற்ற முடியவில்லை.   இன்றும் தோழப்பருக்கு ஆழ்வார் திருநகரியில் மரியாதை செய்யப்படுகிறது.   ஆழ்வார் தெற்கு நோக்கி சென்றார்.  சென்ற வழியில் உள்ள எல்லா இடங்களிலும் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

ஆழ்வார்

அனைவராலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர் நம்மாழ்வார் ஆவார். ஏன் என்றால்,  அவர், அனைவரும் பெரியபெருமாளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருவாய்மொழியை அருளிச் செய்தார். ஆயினும் அதனை அறிய இயலாதவர்களும் பகவானை அடைய ஏதுவாக, தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார் என்பது உறுதியே. (பாதுகா சஹஸ்ரகம் 22, ஸ்ரீ வேதாந்த தேசிகன்). இப்படி நாம் மோட்சம் அடைவதற்காக பற்பல க்ருபைகளை, அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஆழ்வாரின் மோட்சம் பற்றிய ஒரு சில விவரங்களை அடுத்த பகுதியில் காணலாம்.

====================================================================

Thiruarangan

The most adored perumaal for Namazhwaar is Thiru Arangan.   Let us see a few occasions where both Thiru Arangan and Swami Namazhwaar were jointly present or jointly involved in presenting a case to us.   What we need to remember is that Azhwaar lived in this world only for 32 years and that too under the Tamarind tree at Alwar Thirunagari.  So whenever we mention Azhwaar in this weblog, it refers to his Vikragam, (idol or metal statue).

Spouse

Namazhwaar had composed many hymns (Pasurams), where he had portrayed Thiru Arangan as his bridegroom and he became Parangusa  Nayagi.   In some cases, Azhwaar had also taken the role of the mother of the bridegroom and presented the picture of the sad daughter to Thiru Arangan.   One such important composition is called “Kangulum Pagalum Kann Thuyil Ariyaal” (Both in the night and in the daytime she did not know how to sleep or close her eyes), where the mother asked Thiru Aranagan what He would do or what He was thinking about when her daughter was crying with full of tears.  Or in other words, would He be willing to accept her daughter as a bride.

All the Thousand are for Arangan 

Bhattar, one of the renowned Acharyars,  said that all the Thousand Hymns rendered by Sri Namazhwaar are for Thiru Arangan, even though they refer many other deities of various other Vishnu Temples.    “Vaan Thigazhum Solai Mathil Arangar Vann Pugazh Mel Eendra Tamil Maraigal Aaayirammum endra muthal Thai Sadagopan” – meaning that “all the one thousand hymns of Tamil Vedam, Thirvaimozhi, are on Thiru Arangan and were composed by Sri Sadagopan”.

Thiruvadhyayanam

Sri Pancha Rathram is a ceremonial set of procedures for the operations of Hindu Temples. It specifies that from the 11th day  after the new moon in the Tamil month of Margazhi, (Vaikunta Ekadasi), Sanskrit vedas should be recited in front of the Deity and it should continue for about 10 days.   These ten days function is celebrated like a festival and it is called “Moksha Festival” (Reaching the eternal world whereby the Jeevathmaa wont return to this world).

Thirumangai Azhwaar, on one of his birthdays, recited his composition, Thiru Nedun Thandagam with proper music and tune in front of Thiru Arangan. Thiru Arangan was very impressed with the performance and He asked Azhwaar  with lots of affection on what were his wishes.     Azhwaar responded by making his request to Thiru Arangan, that He should listen to the Tamil Vedam, Thiruvaimozhi, along with the Sanskrit Vedas during Margazhi Moksha Utsavam and Thiru Arangan agreed promptly.

From that day onwards, the festival was developed into Tamil Vedam Festival and got restructured with additional functions like Mohini Alankaram, Thiru Kaithala Sevai (Taking Thiruarangan around on the hands of the Priests so that people can have a closer dharsan at Thiru Aranagan), vedupari uthsavam, (This is a function to recognise the efforts of Thiru Mangai Azhwaar, where Perumal or Paramathmaa intervened Thirumangai Azhwaar for the first time to bring him to His fold) and Namazhwaar Moksham.   With all these additional functions, this twenty or twenty one day function today takes a much larger scale, because of the ideas and suggestions of Sri Nathamunigal, Swami Ramanujar and Sri Manavala Maamunigal.  who are all our Acharyars, and who have significantly helped us to understand and follow Vaishnavism).

On those days, Swami Namazhwaar’s idol or metal statue (vikgragam) would be taken from Azhwar Thirunageri to Thiru  Arangam Temple every year for this festival.   These celebrations would happen for 10 days from Vaikuntha Ekadasi.  During these 10 days Namazhwaar’s Divya Prabhandham, namely Thiruvaimozhi would be recited in front of Thiru Arangan with proper music, tune and dance, every night.    The explanation for each of the hymns would also be delivered.  This set of celebrations are called Irapathu (Night time in 10 days) or “Adhyayana Festival” or “Thiruvadhyayanam“.

Anadhyayana Period

This  period, Anadhyayana Kaalam, was the time taken for Swami Namazhwaar to start from Azhwar Thirunagari to reach to Srirangam, participate in the Irappathu Utsavam and then return to Azhwar Thirunagari.   During this period, as a show of respect to both Swami Namazhwaar and Thiru Arangan, people would not recite any Divya Prabhandham at their houses or in the temple.     This was because, Perumaal wanted to hear from Azhwaar and hence people preferred to wait for Azhwaar to recite in front of Thiru Arangan, get His blessings and return to his home.

Generally the period starts from Thirumangai Azhwaar’s birth day (Karthigai Star, Nakshathiram in the Tamil month of Karthigai) and goes until Sri Koorthazhwaar’s (one more significant acharyar who was with Swami Ramanujar for most of the time or in other words, Swami Ramanjuar wanted to be with Sri Koorthazhwaar all the time) birth  day, (Hastam Star, Nakshathiram in the Tamil month of Thai).   The vishnu temples will offer only Thirupalli ezhutchi (wake up slokas for Perumal) in the mornings and during the month of Maargazhi, Thirupaavai will be recited and that too only during the morning, when people do the Viratham (Special prayers for Markazhi Month).  Apart from that no Divya Prabhandham will be recited anywhere during the Anadhyayana Period.

Pagal Pathu (10 days of daytime)

Most of us may be knowing about Vaikuntha Ekadasi ? It is a famous festival celebrated in Srirangam and other Vishnu temples.    Ten days before the Vaikuntha Ekadasi, the festival starts with reciting of Divya Prabhandams in front of Thiru Arangan.   During this first ten days, the hymns of all other azhwaars except Namazhwaar will be recited during the day time and hence it is called Pagal Pathu (10 days of day time reciting). The tenth day night, Perumal will have a special decoration, called Mohini Alankaram.  He will be dressed as a beautiful female.  Next day early morning is the Vaikuntha Ekadasi festival.

Vaikuntha Ekadasi 

The purpose of the human life is to reach the eternal world at the end of this life, and this philosophy is rehearsed on the Vaikuntha Ekadasi day by Thiru Arangan.   How a Vaishnavite reach the eternal world is demonstrated in Vaikuntha Ekadasi day  of every year by Sri Namperumal (Thiruarangan).

Namperumal (Thiruarangan) would start from his place with himself covered by a thin cloth and He would go upto Virajanadhi Hall.   In the temple tank, Chandra pushkarani, He would take a bath or dip.    And then His blanket would be removed and He would be decorated beautifully with bright ornaments and dressed up, before He enters the Gate that is called Vaikuntha Vaasal or Paramapada Vaasal.   Nammazhwaar and other azhwaars and Acharyars would be waiting on the other side of Vaikuntha Vaasal to receive Perumaal or Paramathmaa or the Jeevathama who would be joining them in the eternal world.    Before reaching the eternal world, all Jeevathmaas should take a dip in Virajaa River and then only they would get into the eternal world or Moksham.   Here Chandrapushkarani or the temple tank is the equivalent of Virajaa river.   The blanket is the body, which the Jeevathmaa would leave here before entering the Moksham.   Passing through the Gate, Vaikuntha Vaasal is similar to entering the eternal world after leaving the body.

The purpose of Paramathma Himself demonstrating this to people like us, is mainly because He wants to increase the bond between Him and us.

There is another Hall with Thousand Pillars in Srirangam temple from where Namperumal would give dharsan on selected occasions and this is called Thiru Ma Mani Mandapam. This is also where He would listen to Azhwaars and Acharyars when they recite Divya Prabhandam and also listen to those who chant Sanskrit Vedas.   This is the same place where events like Kaithalasevai, Namazhwaar Moksham would happen.

Seventh Day functions on Irappathu

Namazhwaar would be dressed up like a bride (Namazhwaar Mohini Alankaram).  He is called as Parankusa Nayaki whenever he takes the role of a female in his hymns.   (S)He would request Thiru Arangan and Thiru Arangan would concede to her request.  He comes closer to Parankusa Nayaki, when Priests would carry Thiru Arangan in their hands and He would give the Dharsan to all from the hand-carried posture.   (Kaithalasevai).   During this time, He would not have much decoration, but would have only a few beautiful coloured towels.   During Irappathu, every night He would go to Thayaar (Ranganayaki) temple and He would have a bath or shower in the front Hall.   But this seventh day alone is an exception.   He would skip going to His Thayaar’s Hall, due to the overwhelming love and affection He has for Parankusa Nayaki or Swami Namazhwaar. This shows His extreme simplicity, called Sowlabhyam, one of His virtues.

Tenth day functions on Irappathu 

This day’s functions are the most important among the ten days of Irappathu.   This is also celebrated as “Azhwaar Thiruvadi Thozhuthal”, meaning “Azhwaar worships His Feet”. Thiruarangan never stays back in the night in any open Hall and He would make a point to return to His home, whatever be the time.    Again the Tenth day is an exception.    On this day alone, He would stay back in the Thiru Ma Mani Mandapam to grant the Moksham to Swami Namazhwaar.   Namazhwaar Moksham is demonstrated on how Swami Namazhwaar attained Moksham on every year on this 10th day (night) function of Irappathu.

Namazhwaar on that day would be preparing himself to go to the eternal world, by keeping himself on the way to Paramapatha vaasal (Looks like same as Vaikuntha vaasal or Sworga Vaasal) in the role of a Mukthathmaa. (Jeevathmaa that is in the eternal world is called Mukthathmaa).   He would not have his usual Crown, ornaments or expensive silk attire, but with a simple white dress, a simple Thulasi garland and with twelve thirumans (Nammam that vaishnavites wear on their forehead).

In the early morning of the 11th day, two priests would hand carry Namazhwaar and the hymn composed by Swami Namazhwaar “Soozh visumbu ani mugil” (10-9-1) in his Thiruvaimozhi would be recited. (10-9 is a set of 10 hymns composed by Swami Namazhwaar to explain the path to the eternal world, what would happen when one Jeevathmaa takes that path, who all would come to invite the Jeevathmaa and how the Jeevathmaa would be treated along the way, etc.     Namazhwaar would be placed on the holy feet of Thiru Arangan in such a way that Namazhwaar’s face would be pressed against the lotus feet of Thiru Arangan.   Then the priests start reciting the final group of hymns from Thiruvaimozhi, namely, “Muniye, Naan Mugane, Mukkanappa….” (10-10-1), the priests and the crowd would be so much overwhelmed that Azhwaar was about to leave us and the priests continue to pour Thulasi leaves on top of Swami Namazhwaar.  The priests and the crowd would cry as Namazhwaar was leaving them. this is how Swami Namazhwaar’s Moksham is demonstrated in Srirangam every year during the Irapathu Utsavam.

When the priests recite the final hymn of Thiruvaimozhi (Avva vara suzh Ariyai Ayanai Aranai Allattri…” (10-10-11), by mobilising their energies in spite of all the difficulties and feelings for Swami Namazhwaar, the crowd would burst into tears.   Thiru Arangan would take his garland and wear it on Swami Namazhwaar, and He would also offer the tilak to Swami Namazhwaar.  Then He would finally send Swami Namazhwaar to the eternal world.    In this process a Jeeavathma would be shown the way it would be blessed when it reaches the eternal world.

Panguni Uthiram

Among the many functions that happen in Srirangam, important one is called Panguni Uthiram.   (Panguni is the name of a Tamil Month and Uthiram is the name of a Tamil Star).    And in that function, the role played by Swami Namazhwaar is very important. Since knowing that Thiru Arangan went to Uraiyur and spent the time with the consort there, Srirangam Nachiyar (or Thayaar) would not let Thiru Arangan into Her temple.    At that time, it was only Swami Namazhwaar, who would pacify both Nam Perumal and Nachiyaar.    After that Nachiyaar would be happy to accept Thiru Arangan, by saying that She listened to “Nam Periyan” showering enormous amount of respect to Swami Namazhwaar.   Since She used the words “Nam Perian”,  Azhwaar would have got the name “Nam azhwaar” from Srirangam Thayaar or Nachiyaar.

Sadagopar Anthaathi 

The Ramanayanam in Tamil is written by a poet called Kambar and it is called Kamba Ramayanam.   When Kambar launched Kamba Ramaayanam in Srirangam Temple, the temple priest in a superhuman state, made a very loud noise and asked Kambar, “karpar rama piranai allal matrum karparo, endru  paadina Nam Azhwaanai paadinaayo?”, meaning that “did Kambar sing about Namazhwaar, who has so much respect and devotion to Sri Ramaa, and who had  proclaimed, “will anyone learn, anything other than the glories of Ramaa“. People treated this voice of the priest as Perumaal’s direct instructions.  Since Thiruarangan had coined the words “Nam Azhwanai”, the name Nam Azhwaar would have been given by Thiru Arangan also.   On hearing this, Kambar, created a Tamil literature consisting of 100 verses called “Sadagopar Anthathi” later.

While Travelling in Western Ghats

Malikapur (1311-13) was the first to invade South India.  The second was Ulukkan, @ Mohamad bin Thuklak.   In both the invasions, all the Hindu temples were raided and looted.   Before the 1331 invasion, Pillai Lokachariyar, one of the Achariyars, took Nam Perumal (the moolavar, or the vikragam) away from Srirangam to a safer place.    He went towards Madurai and later towards Kozhikode, Melkote, Thiurpathi and finally reached back Srirangam, once when The Sultan of Madurai (1331-1371) lost power.

From Srirangam, Thiru Arangan went to Madurai and from there He went upto Kozhikodu. At that time, Namazhwaar from Alwar Thirunagari and some other deities were also carried to Kozhikode, as it was thought to be a safe place for the deities as well as the people who were following Him.   This place is called Govindapuram, today.   After receiving Namazhwaar, Thiru Arangan shared his platform with Swami Namazwaar. (The seat is called Vattamanai, circular seat; He has also handed over the pearl shirt for Azhwaar).  Both of them shared the same seat for about one year at Thirukanambi or Thenaikidangai.   Once when both Thiru Arangan and Namazhwaar were going in a boat, accidentally Azhwaar fell down into the waters.   With the help of Sri Garudan, Swami Namazhwaar was traced and taken out of the waters.   Then Thiru Arangan ordered that Namazhwaar should not be travelling with Him, but he had to return to his place in Alwar Thirunagari for his safety.    Then Thiruarangan or Namperumal went to Melkote.

When Namperumaal went towards Melkote, Namazhwaar started his journey towards Alwar Thirunagari.  Along the way, there were troubles from thieves and at some point in time, the people who were carrying the Azhwaar had to find a safe place to keep the Azhwaar.   They had no choice, but to shift him down through chains and boards in a steep hill.   After the thieves left, they could not retract or retrieve or lift the Azhwaar back from the bottom.

Thozhappar, a staunch follower of Namazhwaar, collected a few people and started his journey to retrieve Azhwaar through a place called Munthiruppu or Munthiri village. Thozhappar tied chains around him and asked the people to let him go down or climb down through the hill to search for the Azhwaar.  Thozhappar had also taken some tools and writing materials to keep communicating with the people at the top of the hill.   He located Azhwaar after a great search and wrote necessary notes.  He secured the Azhwaar safely on the board along with his notes and asked the people above to lift.  While they could save the Azhwaar, they could not bring back Thozhappar alive, as he injured himself very badly while climbing down and during the search.  Even today, Thozhappar is regarded and given respects in Azhwaar Thirunagari festivals.    Azhwaar was taken back from Munthiruppu to Azhwaar Thirunagari and all along the way, people paid their respects to Azhwaar.

Azhwaar

We all need to respect and celebrate Namazwaar, as he had good intentions that all of us should reach Namperumal, or ThiruArangan or the eternal world and hence he composed Thiruvaimozhi.   When we are not aware of Thiruvaimozhi or we could not understand Thiruvaimozhi, he still wanted to enable us to reach Namperumaal, by making himself as a link between Namperumaal and us by being the Satari or Crown with His lotus feet that is touched by the priests in the Vishnu temples.  This is what is told by Sri Desikan in his Paduga Sahasram (22).   Thus Azhwaar has been providing us with the very important help of ourselves attaining Moksham, in many different ways and let us see a few points regarding his Moksham, in our next weblog.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: