A Simple Devotee's Views
For English version, please click here, thanks.
ஓராண் வழி ஆசார்யர்களில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஆசார்யன் நாதமுனிகள் ஆவார். ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் காட்டுமன்னர்கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாதமுனிகள் ஆவார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி என்ற திருநாமமும் உண்டு.
கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் காலத்திற்கு பிறகு சுமார் 300 அல்லது 400 வருடங்கள் ஆன பிறகு, ஆழ்வார்கள் பாடல்கள் மெதுவாக வழக்கில் இருந்து விலகி அவை பலருக்கும் தெரியாமலே போனது. அதுதான் நாதமுனிகள் காலம்.
ஒரு நாள் நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலில் எம்பெருமான் மன்னாரை சேவித்துக் கொண்டு இருக்கும் போது மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் இருந்து வந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள், திருவாய்மொழியில் (5.8) உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். அந்த பாசுரத்தின் இனிமையில் முழ்கிய நாதமுனிகள் அந்த பாசுரங்களின் அர்த்தத்தை அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம் கேட்க, அவர்கள் அந்த 11 பாசுரத்தை தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டனர். அந்த பாடல்களை திரும்ப திரும்ப சேவித்த நாதமுனிகள், “கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன், குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற வரிகளை மனதில் கொண்ட போது, இதனை பாடியவர் சடகோபன் என்றும், அவர் குருகூர் என்ற ஊரில் இருந்தார் என்றும், இந்த பாடல் அவர் பாடிய ஆயிரம் பாடல்களில் ஒன்று என்றும் தெரிந்து கொண்டு அந்த ஆயிரம் பாடல்களையும் பெற வழி என்ன என்று ஆராய ஆரம்பித்தார்.
குருகூர் என்பது திருக்குருகூர் என்றும் திருக்குருகூருக்கு சென்றால் இந்த பாசுரங்களை பற்றி ஏதெனும் தெரிந்துகொள்ளலாம் என்றும் நாதமுனிகள் தீர்மானம் செய்து கொண்டு, அந்த ஊர் பெருமாளான மன்னனாரிடம் அனுமதி பெற்று ஆழ்வார்திருநகரி எனப்படும் திருகுருகூர் சென்றார். அந்த ஊரில் சடகோபரைப் பற்றி விசாரித்த போது, தகவல் அதிகம் பெற முடியவில்லை. தனது முயற்சியில் சிறிதும் தளராத நாதமுனிகள் மேலும் விசாரித்த போது, சடகோபரின் சிஷ்யரான மதுரகவிகள் பற்றியும் அவர் எழுதிய கண்ணிநுண்சிறுத்தாம்பு பற்றியும் அறிந்தார். மதுரகவி ஆழ்வார் வழி வந்தவரான பராங்குச தாசரை சந்தித்தபோது, அவர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம் முன்பு அனுசந்திக்க சொன்னார். நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே நம்மாழ்வாரை மனதில் நிறுத்தி, கண்ணிநுண்சிறுத்தாம்பை 12,000 முறை சொல்லி முடித்தார்.
நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு முன் தோன்றிய போது, நாதமுனிகள் ஆழ்வாரின் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களையும் கேட்க, நம்மாழ்வார், தனக்கே உரித்தான கருணையின் வடிவால், திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களை மட்டுமின்றி, அதனுடைய சகல அர்த்த விஷேசங்களையும் அருளினார். இதனால் மகிழ்சசி அடைந்த நாதமுனிகள், நம்மாழ்வாரை வணங்கி விடை பெற விழைந்தார்.
அப்போது நம்மாழ்வார், தான் எழுதிய மற்ற பாசுரங்களை பற்றிச்சொல்ல, நாதமுனிகள் அவைகளையும் வேண்டினார். நம்மாழ்வார், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, மற்றும் திருவிருத்தம் ஆகியவற்றையும் வழங்கினார். இவைகளையும் பெற்ற நாதமுனிகள் மிகவும் மகிழ்சசி அடைந்து, தம் குருவான, நம்மாழ்வாரை வணங்கி இந்த பாசுரங்கள் சம்பந்தமாக தான் தெரிந்துகொள்ள வேண்டியது வேறு ஏதாவது உள்ளதா என்று பணிவுடன் வினவினார்.
மறுபடியும் நம்மாழ்வார், தன்னை தவிர உள்ள மற்ற எல்லா ஆழ்வார்களும் பாடிய பாசுரங்களை நாதமுநிகளுக்கு சொல்ல, அவர் மிக மிக மகிழ்ந்து அவைகளையும் வேண்டினார். இப்படியாக எல்லாருடைய எல்லா பாசுரங்களையும் அவற்றின் விசேஷ அர்த்தங்களையும் நம்மாழ்வார், நாதமுநிகளுக்கு வழங்கினார். இதனால் நாதமுனிகள் எல்லை இல்லாத மகிழ்ச்சி அடைந்தார். தன் ஆச்சர்யாரான நம்மாழ்வாருக்கு தன்னால் முடிந்த வரையில் தன்னுடைய பக்தியையும் மரியாயாதைகளையும் சமர்ப்பித்தார். ஆழ்வாரும் எல்லா பிரபந்தங்களையும் பொறுப்பான, தமிழ் வேதத்தை மேலும் பரப்பக்கூடிய திறமை கொண்ட ஒரு சிஷ்யனிடம் தான் கொடுத்து உள்ளோம் என்ற மகிழ்ச்சியில் தனது ஆசிகளை நாதமுநிகளுக்கு வழங்கி மறைந்தார்.
இப்பாடல்களை நாதமுனிகள் தொகுத்து நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வைணவ நூல் ஆக்கினார். 3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவ்வாறு நாதமுனிகள் இசை அமைத்து மக்கள் மறக்காவண்ணம் இருக்க உதவிய திவ்ய பிரபந்தங்கள் இன்றும் உலகில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் பாடப்பட்டும் நடைமுறையிலும் இருந்து வருகிறது.
நாதமுனிகள் தொகுத்த இத்திவ்யப் பிரபந்தமே உலகின் அனைத்து மொழி பேசும் வைணவர்களுக்கும் ஆதாரமாகவும் தினப்படி வழிபாட்டிற்கும் விளங்குகிறது.
தனியன்கள் என்பவை ஒரு பாடல் தொகுப்பிற்கு முன்னோடி போல் ஆகும். அதாவது அந்த பாடல் தொகுப்பில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது, பாடியவரின் சீர்மைகள் என்ன என்பதை ஒரு பாடலாக தமிழிலோ அல்லது வடமொழியிலோ (சம்ஸ்கிருதம்) ஒரு முன்னுரையாக இருக்கும். நாதமுனிகள், பெரியாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் ஆகியோர் பாடல்களுக்கு தனியன்கள் பாடியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படியாக நமக்கு நாலாயிரமும் தந்தவர்கள் என்று கீழே சொன்ன யாரைச் சொன்னாலும் தகும்.
நமக்கு நாலாயிரமும் மறுபடி கிடைக்க உதவிசெய்த நாதமுனிகளுக்கு பல்லாண்டு பாடி, “நம் ஆழ்வார்” என ஆழ்வாருக்குப் பெயர் அருளிய ஸ்ரீ ரங்கனுடன் நடந்த சில நிகழ்வுகளை அடுத்த பதிவினில் பார்க்கலாம்.
ஒரு சிறு விண்ணப்பம். வைகாசி விசாகம் அன்று தான் நம்மாழ்வார் அவதரித்த தினம். அந்த புனிதமான நாளில் நம்மாழ்வாரை மனதினால் நினைத்து, வாயினால் அவரின் சில பாசுரங்களைப் படித்து, கையினால் சில மலர்களை அவர் மீதோ அல்லது பெருமாளின் திருவடிகளிலோ தூவினால், நம்மாழ்வாரின் நல் ஆசிகள் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.
==========================================================================
Vaishnavism followed a model, what is called, Guru Parambarai. In this model, they would have an Acharya or Guru, who would be the figure head for the followers. Even though the Acharya would have many disciples, there would be one main disciple who would become the Guru or Acharya after the current Acharya. In this process, they were trying to protect the religious practices, assets and resources and these were meticulously handed over from one generation to the next. The Guru or Acharya made sure that the future Acharya or Guru would be a very capable person by himself and he would earn respect from the rest of the clan. This is called as “Oraanvazhi Sampradhayam”, meaning that the responsibilities or heritage were handed over from one person to the next person.
In this sequence of Acharyas of Vaishnavites, Nathamunigal was the next Acharyar after Namazhwaar. Nathamunigal was born in the Tamil month of Aani and in the star of Anusham in a place called Kattumannarkoil or Veera Narayanapuram. He was also called as Sri Ranganatha Muni.
About 300 to 400 years after Thirumangai Azhwaar, the last of the azhwaars, attained paramapadham, was the time, when the hymns of all azhwaars were slowly disappearing from usage and people started to forget the pasurams and in many places people were not even aware of azhwaars’ pasurams. That was the time of Sri Nathamunigal.
One day, when Nathamunigal was worshiping the God, Sri Manaar, in the Kaattu Manaar Koil, some vaishnavites from Melkote (Thiru Narayana Puram), were also praying by singing one set of hymns starting with “Aaravamudhe….”, which is in Thiruvaimozhi 5.8. Nathamunigal was so impressed with these 11 hymns, he asked the vaishnavites whether they know the meaning of the songs or the source for these songs. They politely said no and said they did not know anything more than these 11 hymns. Nathamunigal sang these hymns repeatedly and stopped at the last few lines, namely “kazhalgal avaye saranaaga konda kurugur Sadagopan, kuzhalil maliya chonna oraayirathul ippathum“. He understood that these hymns were created by a person called Sadagopan, and he was from Kurugur and the set contained 1000 hymns. Nathamuni’s mind started thinking about getting all these 1000 hymns and trying to find the ways of getting them.
Nathamunigal found that there was a town called Thirukurugur in the southern part of Tamil Nadu, which could have been termed as Kurugur in the hymn, and he thought he would find more, if he goes there. He sought blessings from Sri Mannar, the prime deity of Kattu Mannar Koil, and he started his journey towards Thirukurugur, which is same as Azhwaar Thirunagari. After reaching Thirukurugur, he enquired about Sri Sadagopan, but he could not find more information. But Nathamunigal did not give up, but after many attempts he found that there was a disciple called Madurakavi Azhwaar, who wrote a hymn called Kanni Nun Siru Thambu about Sri Namazhwaar. After a few more attempts, Nathamunigal could find a disciple from the family of Madurakavi azhwaar, called Parankusa Daasar. He suggested that if Nathamunigal could recite the hymns of Madurakavi Azhwaar, namely, Kanni Nun Siru Thambu, in front the Tamarind tree, where Sri Namazhwaar was residing for the major part of his life, then Nathamunigal may get a breakthrough. Nathamunigal, who was an expert in Ashtonga Yogam, (a person who can do 8 different spiritual things simultaneously), immediately worshiped Namazhwaar and recited Kanni Nun Siru Thambu 12,000 tiimes.
Namazhwaar appeared in front of Sri Nathamunigal. Nathamunigal felt divinely or supremely favoured and requested Namazhwaar about the 1000 hymns that he heard when the vaishnavites from Melkote sang in front of the deity of Kattu Manaar Koil. Namazhwaar, owing to his kindness, not only taught him, the one thousand hymns of Thirvaaimozhi, but also explained the inner meanings of all the hymns or pasurams. Having received more than what he wanted, Nathamunigal was extremely happy, worshipped Namazhwaar again and was seeking his permission to go back.
Then, Namazhwaar informed Nathamunigal that there are three more collection of hymns wrote by him and whether Nathamunigal would be interested to learn them. Nathamunigal immediately pleaded his ignorance about not knowing them and requested Namazhwaar to educate him on those too. Namazhwaar, as done previously, gave the hymns and their meanings of Thiruvaasiriyam, Peria Thiruvanthaathi and Thiruvirutham. Again, Nathamunigal was highly elated and worshipped Namazwaar. He politely requested Namazhwaar about any other related things on these hymns that Nathamunigal needed to learn from his guru, namely, Namazhwaar.
Again, Namazhwaar, informed Nathamunigal that there are eleven other Azhwaars, in addition to himself, who wrote another 3000 more hymns on Sri Mahavishnu and on Vedas. Nathamunigal requested Namazhwaar to teach him those hymns too. As usual, Namazhwaar gave all the remaining pasurams or hymns of all other Azhwaars and their meanings to Nathamunigal. Nathamunigal was delighted and offered all his prayers and worshiped Namazhwaar, his Acharya to whatever extent he could. Namazhwaar was happy that he handed over all the hymns to an able disciple who could further spread the Tamil Veda, blessed Nathamunigal and disappeared.
Nathamunigal, after getting all the hymns from Sri Namazhwaar, he grouped them and made them into a collection, called Naalayira Divya Prabandam, meaning, Four Thousand Holy Hymns on Vaishnavism. Even though we call it as Four Thousand Hymns, actually there are only 3776 hymns and Nathamunigal grouped them into individual thousands or near about. He grouped them in such a way that the three individual thousands could be composed and sung. The remaining one thousand he made them as a separate volume. In addition to the grouping and composing music to these hymns, Nathamunigal had also taken pains to teach them to two of his nephews, so that the these hymns were carried forward from generation to generation. The names of the nephews were Melai Agathu Azhwaan and Keezhai Agathu Azhwaan. His contribution was such that these hymns, tunes and composition are practiced even today in almost all Vishnu temples all over the world.
In addition, Divya Prabandam, compiled by Sri Nathamunigal is now the source and the material for day-to-day prayers for all vaishnavites in their homes, who speak different languages and who live in different parts of this world.
On those days, for every group of songs or hymns, they used to write an introductory song or hymn to briefly inform the audience what this group of songs is going to talk about and who has written these songs or hymns and what their capabilities or glories. These introductory hymns, called Thaniyans, could be in Tamil or in Sanskrit. It is told that Sri Nathamunigal has also composed such Thaniyans for group of hymns composed by Sri Periazhwaar and Madhurakavi Azhwaar.
After the above, we can understand that there are many, who had taken pains to ensure that we get the Naalayira Divya Prabandam (Four Thousand Holy Hymns). Those include
Let us thank Sri Nathamunigal for helping us to get back the 4000 Divya Prabhandham and move on to the next weblog, to know more about some of the interesting incidents that had happened with Sri Rangan who bestowed the name “Nam Azhwaar”, meaning that Azhwaar is Our Azhwar.
One Small Request. Tamil month Vaikasi and Tamil star Visaagam is the day when Sri Namazhwaar was born. On this holy day, let us think through our minds about Sri Namazhwaar (meditate), read out some of his hymns, and offer some flowers on to his statue or pictures or the holy feet of Sri Mahavishnu, so that ourselves and our family members are blessed by Sri Namazhwaar.